ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 .. a flashback

ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 

A flashback 



ஒரு பின்னோட்டம் 12 to 15

12.ஒருவன் ஆம் உன்னை ஒளித்து எவர் வருவார் உன் சூதேயிது அருணாசலா

13.ஓங்காரப் பொருள் ஒப்பு உயர்வு இல்லோய் உனை யார் அறிவார் அருணாசலா

14.ஔவை போல் எனக்குன் அருளைத் தந்து எனை ஆளுவது உன் கடன் அருணாசலா

15.கண்ணுக்குக் கண்ணாய்க் கண் இன்றிக்காண் உனைக் காணுவது எவர் பார் அருணாசலா

12 வது பாடலில் நீ ஒருவனே பரமாத்மா, பிரம்மம் -- உன் கண்ணில் படாமல் எதையாவது யாராவது ஒளித்து வைக்க முடியுமா? அல்லது ஒளிந்து கொள்ளத்தான் முடியுமா? நீயாக சூது செய்தாலே ஒழிய இது நடக்கக்கூடிய காரியம் இல்லை அருணாசலா.

13 வது பாடலில் ஓம் எனும் சொல்லின் பொருளாக விளங்கும் உன்னை யார்தான் அறிய முடியும் அருணாசலா - ஹரியும் பிரம்மனும் கூட உன்னை முழுவதும் அறிந்துக்கொள்ள வில்லை -- நாங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது ...

14 வது பாடலில் ஔவையை போல் ஒரு சிறந்த சிவபக்தை இருக்க முடியாது - நீ ஒப்புக்கொண்டால் நானும் சிறந்த சிவ பக்தன்- அவளுக்கு அருள் செய்ததை போல், கருணைக்காட்டியதைப்போல் எனக்கும் காட்டு அருணாசலா என்கிறார்.

15வது பாடலில் கண்ணுக்கு கண்ணாக இருக்கிறாய் - கண்ணையே பார்க்கும் கண்ணாக இருக்கிறாய் -- கண்ணின்றி எல்லாவற்றையும் காண்கிற உன்னை யாரால் காண முடியும் - என்னை கொஞ்சம் பார் அருணாசலா என்கிறார் -- 

ஆண்டவனுக்கு கண்ணில்லை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது --- அவனே பார்வையாக இருக்கும் போது தனியாக அவனுக்கு கண் வேறு வேண்டாமே --- எல்லாவற்றிலும் இருப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டும் .




Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை