ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 2 - ஸ்லோகம் - 1 to 10-திருமேனியின் சௌந்தர்யம்

தசகம் 2 - ஸ்லோகம் - 1 ஸூர்யஸ்பர்தி⁴கிரீடமூர்த்⁴வதிலகப்ரோத்³பா⁴ஸிபா²லான்தரம் காருண்யாகுலநேத்ரமார்த்³ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம் । க³ண்டோ³த்³யன்மகராப⁴குண்ட³லயுக³ம் கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம் த்வத்³ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ³ப்ரம் ப⁴ஜே ॥ 2-1॥ சூரியனை விடப் பிரகாசமான கீரிடம் ( பர்தி⁴ = போட்டிப்போடக்கூடிய ) ஊர்த்வ திலகம் விளங்கும் நெற்றிப்பிரதேசம் கருணை பெருகும் கண்கள் ( காருண்யாகுலநேத்ர) கசிவுடைய புன்னகையின் உல்லாசம் அழகிய நாசி ( ஸுநாஸாபுடம்) கன்னங்களில் பிரகாசிக்கும் மகர குண்டலங்கள் கழுத்தில் ஒளிரும் கௌஸ்துப மணி (( கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம்) வன மாலையும் ( வைஜயந்தி மாலை ) முத்துமாலையும் ஸ்ரீ வத்ஸமும் உடைய மார்பு ( மஹாலக்ஷ்மி உறையும் மார்பு ) இப்படி உமது ரூபம் விளங்க உனை தியானிக்கிறேன் உன் அருளால் குருவாயூரப்பா !! திருமேனியின் சௌந்தர்யம் ========================================================================= தசகம் 2 - ஸ்லோகம் - 2 கேயூராங்க³த³கங்கணோத்தமமஹா ரத்நாங்கு³லீயாங்கிதஶ்ரீமத்³பா³ஹுசதுஷ்கஸங்க³த க³தா³ ஶங்கா²ரிபங்கேருஹாம் । காஞ்சித்காஞ்சநகாஞ்சிலாஞ்சி²த...