Posts

Showing posts from April, 2021

பச்சைப்புடவைக்காரி-தோரணமலை முருகன் 399 -118

Image
                                              பச்சைப்புடவைக்காரி                                என் எண்ணங்கள் பகையை வெல்லும்   81   - 118         399👍👍👍👌👌👌 தோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி ரவி அருணகிரி கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும் .  இன்று ஒரு புதிய ஆலயத்தை பார்ப்போம்  அகத்தியர் , தேரையர் சித்தர் வழி பட்ட ஸ்தலம் ..  புண்ணியம் பூத்துக்குலுங்கும் மலை ... 🌸🌸🌸 அம்மா தங்கள் விருப்பமே அடியேனுடைய விருப்பம் ..  வாருங்கள் செல்வோம் .🙏🙏🙏 உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது. கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழி

பச்சைப்புடவைக்காரி - சிங்கை & ஊதிமலை 398 - 117- 80

Image
                                            பச்சைப்புடவைக்காரி                              என் எண்ணங்கள் பகையை வெல்லும்   80 திருப்புகழ் ஸ்தலங்கள்  திருப்புகழ்    16.திருப்புகழ் 119. சிங்கை (காங்கேயம்)         120.ஊதிமலை 398 இத்தலம்  ஈரோடு-திருப்பூர் ரயில் பாதையில் ஊத்துக்குழிக்கு அருகிலுள்ளது. அருணகிரிநாதர் தரிசித்த 119வது தலம். இதற்கான இரண்டு பாடல்கள் இருக்கின்றன. இரண்டிலும் வினைகள் அறவேண்டும் என வேண்டுகிறார். கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி      கந்திகமழ் கின்ற ...... கழலோனே கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்      கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை      திண்குயம ணைந்த ...... திருமார்பா செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த      சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.  யின்று நன்றில்வினை கொன்று      நன்றுமயில் துன்றி ...... வரவேணும் (சஞ்சரி யுகந்து) தாமரை,கொன்றை, தும்பை, மகிழம் ஆகிய மலர்கள்  நிறைந்து  மணம் கமழும் கழல்களை உடையவனே ! அழுகிய பிணங்களைத் தின்னும் பேய், நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின் கூட்டம் காணும்படி போர்க்களத்தில்  வீசும் ஒளியுடைய வேலை உ