Posts

Showing posts from January, 2021

பச்சைப்புடவைக்காரி -பகையை வெல்லும் படை - 12 -விராலி மலை முருகன் -1 -310

Image
                                     பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும்  12  விராலி மலை முருகன் -1 (310) 👍👍👍💥💥💥 சுவாமி : சண்முக நாதன் (ஆறுமுகம் ) அம்பாள் : வள்ளிதேவசேன தீர்த்தம் : நாகதீர்த்தம் தலவிருட்சம் : விராலிச் செடி தலச்சிறப்பு : இங்கு வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும். மாயா சொரூப முழுச்ச மத்திகள்  ஓயா வுபாய மனப்ப சப்பிகள்  வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும்  மாலா கிவாட நகைத்து ருக்கிகள்  ஏகா சமீது தனத்தி றப்பிகள்  வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம்  ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்  ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்  ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம்  ஆமா றெணாத திருட்டு மட்டைகள்  கோமா ளமான குறிக்க ழுத்திகள்  ஆசா ரவீன விலைத்த னத்திய ருறவாமோ வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். வெகு நேரமாகியும் வேட்டைக்கு ஒரு விலங்கும் காணாமல் தவித்தபோது அந்தப் பக்கம் ஒரு வேங்கைப்புலி வந்தது.  அதை வேட்டையாட முயன்றால், அது இலேசில் அவன் கையில் கிட்டவில்லை. இங்கும் அங்

பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் படை - 11- வலிமை தரும் வயலூர் வள்ளல் -3 -309

Image
                                                                        பச்சைப்புடவைக்காரி பகையை வெல்லும்   படை - 11 வலிமை தரும் வயலூர் வள்ளல் -3 (309) 👍👍👍💥💥💥 (உபயம் சித்ரா மூர்த்தி ) முருகா! ரத்த பரிபுர இருகால் ஒருகால் மறவேனே! என்கிறார் ஒரு பாடலில்.  ரத்னச் சிலம்பணிந்த உனது இரண்டு திருவடிகளையும் ஒருகாலும் மறக்க மாட்டேன் என்பது பொருள். ‘‘நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவள்முன்’’ என்னும் நக்கீரர் வாக்கை இது நினைவுறுத்துகிறது. ‘வாளின் முனை’ எனத் துவங்கும் திருப்புகழில் ‘‘வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு சுந்த! நிரந்தர! மேலை வயலை உகந்துள நின்றருள் பெருமாளே’’ - எனும் அடிகள், வேலும் மயிலும் எனும் திருமந்திரத்தின் சக்தியைக் குறிக்கும் மகுடப்பகுதி ஆகையால் மனப்பாடத்திற்கும் ஜெபத்திற்கும் உரியன என்பார் செங்கல்வராயப்பிள்ளை அவர்கள்.  அமரர் குருஜி திரு. ஏ.எஸ். இராகவன் அவர்கள், தமது ஒவ்வொரு ‘திருப்புகழ் இசை வழிபாடு’ நிகழ்ச்சியின் இறுதியிலும் இவ்வரிகளைத் தவறாமல் பாடும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘பாத பங்கய முற்றிட

பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் படை - 11 வலிமை தரும் வயலூர் வள்ளல் -2 - 308

Image
                                                                பச்சைப்புடவைக்காரி பகையை வெல்லும்  பத்தாவது  படை - 11 வலிமை தரும் வயலூர் வள்ளல் -2 (308) 👍👍👍💥💥💥 (உபயம் சித்ரா மூர்த்தி ) பல வயல் நிலங்களையெல்லாம் கடந்து வயலூர் வந்தடைகிறார் அருணகிரியார். சக்தி தீர்த்தத்தில் நீராடி வன்னி மரத்தை வணங்கி கோயிலுள் நுழைகிறார். தம்மை ஆண்ட முருகப் பெருமானது புகழை நிரம்பப் பாடவேண்டும் என்ற ஆசை நிரம்பி வழிய கோயிலில் வீற்றிருக்கும் பொய்யாக் கணபதியைத் தரிசிக்கிறார்.  வள்ளியை மணம் செய்து கொள்ள விரும்பிய முருகப்பெருமானும் தனது சகோதரனை தானே துணைக்கு அழைத்தான் என்ற எண்ணம் தோன்ற, கைத்தல நிறை கனி எனத் துவங்கும் அற்புதப் பாடலை அங்கு சமர்ப்பித்தார். பாடலின் இறுதியில், ‘‘அத்துயரது கொடு சுப்பிரமணிபடும் அப்புனம் அதனிடை இபமாகி அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணமருள் பெருமாளே’’ என்று நிறைவு செய்தார். ‘‘தம்பி தனக்காக வனத்தணைவோனே தந்தை வலத்தால் அருள் கைக் கனியோனே அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமானே’’ என்று பாடி, ‘‘என்றனுயிர்க்கு ஆதரவுற்றருள்வாயே’’ என்று வேண்டினார். ‘‘உன் தம்பியைப