Posts

Showing posts from August, 2020

பச்சைப்புடவைக்காரி -காக்கும் தெய்வம் (161)

Image
பச்சைப்புடவை க் காரி  என் எண்ணங்கள்  காக்கும் தெய்வம்  (161)  ரவி இன்றும் ஒரு முக்கியமான விஷயத்தை மீண்டும் உன்னிடம் சொல்லப்போகிறேன் -  ஏற்கனவே சொன்னதுதான் ...  இந்த கலியுகத்தில் நீங்கள் பெரிய பெரிய யாகங்கள் ஹோமங்கள் செய்யவேண்டிய அவசியம் இல்லை .. நாமாவளி ஒன்று போதும் --- மிகவும் சுலபமான வழி - உங்களுக்காக எங்களை இன்னும் கீழே கொண்டு வருகிறோம் -  அசுரர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்து எங்களை பார்த்திருக்கிறார்கள் -- அது வேறு யுகம் -  ஆனால் இன்று உங்கள் இயந்திரமான வாழ்க்கையில் இறைவனை 5 நிமிடங்களுக்கு மேல் கும்பிட உங்களுக்கு நேரமும் இல்லை ஆர்வமும் இல்லை - வாழ்க்கையே சுவிட்ச் தட்டினால் ஓடும் என்ற நிலைமைக்கு ஆளாக்கி விட்டீர்கள்  இருந்தாலும் பெற்ற வயிறு அல்லவா -  நீங்கள் சொல்லும் நாமாவளியில் மகிழ்ந்து போகிறேன் --- அதையாவது மனதார சொல்லுங்கள் ---  நாமாவளி சொல்லி தன கணவனை பெரும் ஆபத்தில் இருந்து மீட்டிய ஒரு பெண்னின் கதை இன்று சொல்லப்போகிறேன் - ஒரு சிறந்த படிப்பினையாக இருக்கும் - கேள் ....  பனிபடர்ந்த மலை ---- எங்கிருந்து வேண்டுமானாலும் குண்டுகள் பாயலாம் - மகேஷ் ராணுவத்தில் சேர்ந்து அன்றுடன் 6 வ

பச்சைப்புடவைக்காரி -கல்லெல்லாம் மாணிக்க கல் ஆகுமா ? (160)

Image
  பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  கல்லெல்லாம் மாணிக்க  கல் ஆகுமா ?   (160)  ரவி இன்றொரு உண்மை சம்பவத்தை உனக்கு சொல்லப்போகிறேன் ---கல் மூக்குத்தி மாணிக்க மூக்குத்தியாய் மாறிய சம்பவம்  சுவாமிநாதன் மிகவும் வருத்தமாக இருந்தார்.   இருக்காதா பின்னே -- ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடைவெளி இருக்கவேக்கூடாது என்று நினைப்பவர்களில் சுவாமிநாதனுக்கு முதல் பரிசு கிடைக்கலாம் - என்ஜின் ஓட பெட்டிகளை சேர்த்ததைப்போல் வரிசையாக 7 குழந்தைகள் - எழும் பெண்கள் -  வாக்தேவிகள் எல்லோரும் சேர்ந்து வந்து பிறந்ததைப்போல் அந்த ஏழ்வரும் இருந்தார்கள் .. தபால் அலுவலுகத்தில் தலைமை போஸ்ட் மேன் ஆக இருந்தார் - சொற்ப சம்பளம் ---  தபால் ஆபீஸ் தன்  அழகை இழந்து கொண்டிருக்கும் நேரம்.  கடிதங்கள் எழுதுவோரும் படிப்போருக்கு குறைந்து கொண்டு வரும் காலம் .. அந்த காலங்களில் அரசர்கள் இப்படி செய்தார் அப்படி செய்தார் என்று கல்வெட்டில் செதுக்கினார்கள் -  அதே மாதிரி தபால் நிலையத்தையும் கல்லில் செதுக்கவேண்டிய நேரம் வந்து விட்டது - தபால் ஆஃபீசில்  கடிதங்கள் தேங்கி இருந்தால் அவருக்கு பிடிக்காது -  வேலைக்கு யாரும் வராவிட்டாலும் அவரே

பச்சைப் புடவைக்காரி - முத்து முத்தான கோமேதகங்கள் ( 159)

Image
பச்சைப் புடவைக்காரி  என் எண்ணங்கள்  முத்து முத்தான கோமேதகங்கள் (159) ரவி  உனக்கு ஒரு சம்பவத்தைக் காட்டப்போகிறேன் --- இறைவன் நாமங்கள் என்றுமே கவசமாகத்தான் இருக்கும் -  ஆழமான நம்பிக்கை வேண்டும் - அவ நம்பிக்கையுடன் வேண்டக்கூடாது -- உன் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் " Trust deficit is more dangerous  than  Fund deficit".  காட்சி மாறுகிறது      கணபதி சாஸ்த்திரி என்றால் அந்த அக்ஹரகாரத்தில் தெரியாதவர்களே யாரும்  முடியாது --  அங்குள்ள சிவன் கோயிலில் அர்ச்சனை செய்வதுடன் கணீர் என்ற குரலில் , தேவாரமும், திருவாசகமும் சொல்ல ஆரம்பித்தால் அதை கேட்க ஈசன் மட்டும் அல்ல 63 நாயன்மார்களும் அந்த கோயிலுக்கு வந்துவிடுவார்கள் --  அவர் குரல்வளத்தைக்கண்டு பொறாமை படாதவர்களே யாரும் இல்லை ---  "என்ன ஓய் உமக்கு என்ன!! -- நீர்  பாட ஆரம்பித்தால் அந்த குரலில் கலைவாணீ மயங்கிப்போய் வேக வேகமாக தன் வீணைவாசிப்பதை நிறுத்திக்கொள்வாள் - என்ன சாரீரம் ஒய் உமக்கு -- போன பிறவியில் அம்பாளை நீர்  தேனால் அபிஷேகம் செய்தீரோ ? - இப்படித்தான் எல்லோரும் அவரை கேட்பார்கள் . அவருக்கு அதில் எல்லாம் கர்வமே இல்லை -- அவரைப்பொறுத்த

பச்சைப்புடவைக்காரி - திருவண்ணாமலையில் ஒரு மீனாக்ஷி - எச்சம்மா (158)

Image
பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  திருவண்ணாமலையில் ஒரு மீனாக்ஷி - எச்சம்மா  (158) ரவி உங்கள் குடும்பங்களில் சிலவற்றில் அல்ல பலவற்றில்  லக்ஷ்மி  என்கிறபெயர்  லஷ்மி, லெஷ்மி, லெச்சுமி, எச்சுமி,  லெச்சம்மா, எச்சம்மா என்றெல்லாம்  அபிமானத்தோடு அழைக்கப்படுபவை.   இப்போது நாகரிகமாக பெயர்கள் வைத்துக்கொள்ளும்  பெண்கள் இப்படி கூப்பிட்டால்  எப்படி ஏற்றுக்கொள்வார்கள்,  REACT பண்ணுவார்கள் என்று  எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.  என் பெயர் மீனாக்ஷி -- இப்பொழுதெல்லாம் இந்த பெயரை அதிகமாக யாருமே வைப்பதில்லை - நாகரிகத்திற்கு ஒத்து வராத பெயராகி விட்டது -  வாய் நிறைய என் அன்னை காஞ்சன மாலையும் என் தந்தை மலையத்துவஜனும் என்னை   தடாதகை என்றும் மீனாக்ஷி என்று கூப்பிடுவார்கள் .  இத்தனை ஏன்? என் சொக்கனும் அதிகமாய் சொக்கிப்போனது மீனாக்ஷி என்ற நாமத்தில் தான் .  இப்போது யாராவது தப்பித்தவறி மீனாட்சி பெயர் வைத்தால் கூப்பிடுவது மீனா அல்லது மீன் இப்படித்தான் அரையும் குறையுமாகத் தான்  இருக்கும் .  சரி அருமையான பெயர் - இப்பொழுது தொலைந்து போன பெயர் எச்சம்மா --- இவளைப்பற்றி நீங்கள் அவசியம், கண்டிப்பாக  தெரிந்துகொள்ளவேண்டும் .

பச்சைப்புடவைக்காரி - நா பேரு "ஞானப்ரஸன்னா..!! (156)

Image
பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  நா பேரு  "ஞானப்ரஸன்னா..!! (156) ரவி எவ்வளவோ மஹான்கள் பிறருக்கு தெரியாமல் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் .. அவர்களின் நோக்கம் தங்கள் புகழை வளர்த்து கொள்வதற்காக இல்லை --- என் பாதாரவிந்தங்களை இன்னொமொரு பிறவி எடுக்காமல் வந்து அடைய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் .. இன்று அப்படி ஒரு மஹானைப்பற்றி சொல்லப்போகிறேன்  பிரம்மஸ்ரீ  தாடப்பள்ளி  ராகவ நாராயண சாஸ்திரி என்கிற சந்தோளு  சாஸ்திரிகளை  - சக்தி உபாசகரை யாருக்காவது தெரியுமா?    நூற்றில் ஒருத்தருக்கு தெரிந்தால் அதிசயம்.  கேள்வி 2 :   சென்னைக்கு  அருகே  நெமிலி எனும் ஊரில்  (வேலூரில் இருந்து 55 கி. காஞ்சியிலிருந்து 25 கிமீ, அரக்கோணத்திலிருந்து 16 கிமீ.)  ஒரு அழகிய  சிறு  பாலா சுண்டுவிரல் உயரத்தில் தங்கத்தில்இருக்கிறாளே, அங்கே  சாக்லேட் நெய்வேத்யம் பண்ணி பிரசாதமாக தருவார்களே  அது   தெரியுமா? அவள் இருப்பது  பெரிய  ராஜகோபுர  ஆலயம் அல்ல. ஒரு வீட்டில்.   தரிசிக்காதவர்களே கொரோனா விடுதலை கிடைத்ததும் நெமிலிக்கு ஓடுங்கள். இப்போது  கேள்வி 1க்கும் 2க்கும் சம்பந்தமான விஷயம்.  அது தான்  தாடேப்பள்ளி ப்ரஹம்ம ஸ்ரீ  ராகவா நார