Posts

Showing posts from March, 2021

பச்சைப்புடவைக்காரி -மலைய கோயில் - மிட்டாய் முருகன் 370 -52 வது படை

Image
                     ப ச்சைப்புடவைக்காரி                என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   52  வது  படை  மலைய கோயில் -மிட்டாய் முருகன்  370  👍👍👍💥💥 💥 1👍👍👍 புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது, மலையக்கோயில்.  பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும், கீர்த்தியில் மிகப்பெரியதாகவும் மிகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது  மலையக்கோயில் மலை.  மலையின் மீதுள்ள கோயில் *மேல்கோயில்* என்றும், மலையின் கீழுள்ள கோயில் *கீழ்க்கோயில்*’ என்றும் அழைக்கப்படுகிறது.  மலை மேல் முருகப் பெருமானும் மலையடிவாரத்தில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். 💐💐💐👌👌👌 2🙏🙏🙏 மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன.  கிழக்குக் குடவரைக் கோயில் ஒரே கருவறையையும் அந்தக் கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது.👏👏👏 3👍👍👍 மலையேறியதும் அர்த்தமண்டபத்தில் விநாயகர், உற்சவராக முருகப்பெருமான் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள்.  கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்

பச்சைப்புடவைக்காரி-உத்திரமேரூர் முருகன் 369 - 51வது படை

Image
                        ப ச்சைப்புடவைக்காரி                என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   51வது  படை  உத்திரமேரூர் முருகன் 3 69  👍👍👍💥💥💥 1🏆🏆🏆 இளையனார் வேலூரிலிருந்து உள்கிராமச் சாலையில் திரும்பிச் சென்றால் அங்கிருந்து உத்திரமேரூருக்கு எளிதாகச் செல்ல முடியும்.   உத்திரமேரூர் பஸ் ஸ்டாண்டை அடைந்ததுமே  ஸ்ரீ சுந்தர வரதராஜப் பெருமாளின் கோவில் கோபுரம் நம் கண்ணில் படுகிறது.  இக்கோவிலின் வலது புறத்தில் பாலசுப்ரமணிய சுவாமியின் கோவில் அமைந்துள்ளது. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் ஜெயம் கொண்ட சோழனால் கட்டப் பெற்றது.  மிகவும் பரந்த வெளியும், விசாலமான வெளிப் பிரகாரமும் கோவிலின் பழமைக்குச் சான்று. ஆஜானுபாகுவாக சுமார் 6 அடி உயரத்தில் பாலசுப்ரமணியர் காட்சி அளிக்கிறார்.  அவருக்கு ஐராவதம் வாகனமாக உள்ளது சிறப்பு.  வினாயகர், சிவன், ஸ்கந்தர் , நவக்கிரகங்களின் சன்னிதிகள் உள்ளன.👍👍👍 2 👌 👌👌 முனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் கொன்று, முனிவர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர்.  இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல்

பச்சைப்புடவைக்காரி - திருமலை முருகன் -4 - 368 -50 வது படை

Image
                    ப ச்சைப்புடவைக்காரி                என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   50 வது  படை  தீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருமலை முருகன் -4 3 68  👍👍👍💥💥💥 இதுதான் திருமலைக்காளி கோவில். இங்கு காளிதேவி மலைமேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக்கோயிலாகத் திருமலைக்காளி கோயில் அமைந்துள்ளது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி (கோட்டைத் திரடு) அமர்ந்து அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் முருகக் கடவுள் பிரதிஷ்டைக்கு முன்பே அமைந்தது என்பர். இந்த சந்நிதி இடும்பன் சன்னதி படிகள் செல்லுமிடத்தின் மேற்கே, தனிச்சன்னதியாக அமைந்துள்ளது.இந்த காளி  திருமலையின் காவல் தெய்வமாகும்.  திருமலைக்கோயிலின் உள்பிராகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஐந்தரை அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் இங்கு வீற்றிருக்கிறார். இங்க முருகன் சந்நிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால் விநாயகருக்கென தனி சன்னதி இருக்கு. அவர் உச்சிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகன

பச்சைப்புடவைக்காரி -திருமலை முருகன் -367 -50 வது படை

Image
              ப ச்சைப்புடவைக்காரி                என் எண்ணங்கள்        பகையை வெல்லும்   50 வது  படை  தீராத வினைகளை தீர்த்து வைக்கும் திருமலை முருகன் -3 3 67  👍👍👍💥💥💥 1👏👏👏 திருமலை கோவிலினருகே செல்லும் வகையில் பாதைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.  மலையேற முடியாதவர்கள், ,மலைக்கோவிலில் வாகனம் மூலமும் மேலே செல்லலாம்.  இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி உண்டு.  நல்ல கார் பார்க்கிங்க் வசதியும் இருக்கிறது. அந்த இடத்திலிருந்து குறைவான படிகள் ஏறினால் கோவிலுக்கு சென்றுவிடலாம்🦚🦚🦚 2🙏🙏🙏 இளைப்பாற படிக்கட்டுகளில் ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி வச்சிருக்காங்க.  கால்வலிச்சுதுன்னா இளைப்பாறிவிட்டு செல்லலாம்.  ஒரு வழியாக மலை கோவிலுக்கு மேலே வந்துவிட்டோம்.   இங்க ஒருவிஷயம் கவனிச்சோம்னா தெரியும்.  நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் நிறைய பேருக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள்ங்கிற பெயர்கள் இருக்கும்.  ஆண் பிள்ளைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தி ஒரு சிறிய வளையம் அணிந்திருப்பதை இப்பகுதியில் காணமுடியும்.  மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்துக்கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வ