Posts

Showing posts from April, 2022

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1. Foreword - பதிவு 1

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே       ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்    பதிவு 1     ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்  🌷🌷🌷 லலிதா ... என்ன சுகமான மயில் இறகால் வருடி விடும் நாமம் ..  அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் .. அவள் தங்கைக்கும் 1000 நாமங்கள்  ஓவ்வொன்றும் தேனில் ஊறிய பலா சுளைகள் ... இப்படியும் இனிக்குமா ?  ஓவ்வொரு நாமமும்  சொல்லும் கதைகள் அர்த்தங்கள் கோடி ..  ஓவ்வொன்றாய் சுவைப்போம் இன்று முதல் மீண்டும் அவள் அருளால் 🙌🙌🙌 நாமங்களுக்குள் செல்லும் முன் இந்த ஐந்து ஸ்லோகங்களை தந்த  ஆதி சங்கரருக்கு நன்றி சொல்லுவோம் ... प्रातः स्मरामि ललितावदनारविन्दं विम्बाधरं पृथुलमौक्तिकशोभिनासम् । आकर्णदीर्घनयनं मणिकुण्डलाढ्यं मन्दस्मितं मृगमदोज्ज्वलभालदेशम् ॥१॥ Praatah Smaraami Lalitaa-Vadana-Aravindam Vimba-Adharam Prthula-Mauktika-Shobhi-Naasam | Aakarnna-Diirgha-Nayanam Manni-Kunnddala-[A]addhyam Manda-Smitam Mrgamado[a-U]jjvala-Bhaala-Desham ||1|| அம்மா  லலிதே,  உன் தாமரை மலர் போன்ற அழகிய வதனத்தை காலை எழுந்ததும்  தரிசித்து வணங்குகிறேன் தாயே.   அன்றலர்ந்த தாமரைக்கு  இன்னொரு  பெயர்  தேவி லலிதா திரிபுர சுந்தரியா? ச

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 81 பதிவு 63

Image
                       அபிராமி பட்டரும்  அடியேனும்    கேள்வி பதில் 81                                          பதிவு 63👌👌👌 கேள்வி பதில் நேரம் பதிவு 63🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான்  .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்  .  கேள்வி 81 நான்  ..   ஐயனே வணக்கம் .. இன்று என் கேள்வி கொஞ்சம் இசுகு பிசகாக இருக்கலாம் .. கோபிக்காமல் தாங்கள் பதில் சொல்ல வேண்டும் ... பட்டர்  உன் கேள்விகள் எனக்கு பழக்கமாகி விட்டன .. தையிரமாய் கேள் .. கோபிக்க மாட்டேன்  நான்  ... ஐயனே ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் பல நாமங்கள் அவள்  மதுவை விரும்புபவள் ... மஞ்சள் சாதம் , வெல்லம் கலந்த சாதம் சாப்பிடுபவள் என்று வருகிறது ...  இவைகள் நாமங்களாக தெரியவில்லை  மேலும் அன்னையின் விருப்பங்களாக தெரிகின்றன ..  அவள் விருப்பு வெறுப்பு  இவைகளை கடந்தவள்  இப்படி பிரசாதம் அவளுக்கு படைப்பதால்  பீரிதி அடைபவளா ? பட்டர் இதன் தாத்பரியமே வேறு ...  கந்தர் சஷ்டி கவசம் தெரியுமா உனக்கு ...??  முருகனிடம் ஓவ்வொரு அங்கமாக சொல்லி உன் வேல் காக்கட்டும் என்று சொல்கிறோம் ...  அதுபோல் நம் உடலே 6  ஆதார சக்கரங்கள்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 75 to 80 பதிவு 62

Image
                                        அபிராமி பட்டரும்  அடியேனும்    கேள்வி பதில் 75 to 80                                          பதிவு 62👌👌👌 நான்  பட்டரே வணக்கம் ...  ஒரு சந்தேகம் .. வரக்கூடாதுதான் ஆனால் வந்து விட்டது .. தாங்கள் கொஞ்சம் விளக்கம் சொல்ல வேண்டும்...  பட்டர்  சொல் ... முடிந்தால் சொல்கிறேன்    நான் அம்பாளுக்கு பட்டுப்புடவை ஏன்?  பூஜைகள் செய்து இறைவனை ஏன் அலங்கரிக்கிறோம்? கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி  இறைவனின் சிலையை, படத்தை துடைத்து, அபிஷேகம் பண்ணி, பூவாலும், சந்தனத்தாலும், தங்க நகைகளாலும் ஏன் அலங்காரம் செய்கிறோம்?  அதுமட்டும் இல்லாமல்  பகவான் பவனி வரும் பல்லக்கு தேர் போன்றவற்றையும் நாம் பெரிய அளவில்  ஏன் அலங்காரம் செய்கிறோம்? இறைவன் நம்மை கேட்டானா ?  என்னை அலங்காரம் செய் என்று...  இறைவன் நம்மிடம் கோரிக்கை வைத்தானா இல்லையே...!  பின் எதற்கு இந்த அலங்காரம்? * பட்டர் * ஒரு கேள்வி என்று பல கேள்விகள் கேட்டுள்ளாய் .. சரி விடை ஒன்றுதான் .. 🙌🙌🙌 பட்டர் மனித மனம் அலைபாயக் கூடியது. ஒரு இடத்தில் நிலைத்து நில்லாதது.  அதை ஒரு இடத்தில் நிலைக்க வைக்க வேண்டும்.  ஆனால் மனக் கட்ட

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 74 & 75 பதிவு 61

Image
                                    அபிராமி பட்டரும்  அடியேனும்    கேள்வி பதில் 74 & 75                                         பதிவு 61👌👌👌 கேள்வி பதில் நேரம் பதிவு 61🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் . பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் . கேள்வி 74 & 75 பட்டரே வாருங்கள் ... அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்  பட்டர்  ... ரவி இன்று என்ன கேள்வி ?  நேற்று நாச்சியார் திருமொழி இன்று??  நான் ... ஐயனே இன்று திருக்கோளூர்ப் பெண் பிள்ளை ரகசியங்கள் ..  இதில் 22வது வாக்கியம்  தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே   உண்மையில் இங்கே யசோதை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். அவள் தானே கண்ணனை அணு அணுவாய் ரசித்தவள் .. தாங்கள் தான் எனக்கு விளக்க வேண்டும் ...💐💐💐 பட்டர்   நீ தேவகி வசுதேவர் தம்பதிகள் செய்த நல்வினையை பற்றி அறிய வில்லை ...  சாக்க்ஷாத் நாராயணனே இந்த தம்பதிகளுக்கு வேறு வேறு பிறவியில் மகனாக அவதரித்துள்ளார் ..  யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் .?.. யசோதைக்கு இப்படி சொல்லலாம் ...  ராம அவதாரத்தில் கௌசல்யாவாக ,  கிருஷ்ண அவதாரத்தில் யசோதையாக ,  க