Posts

Showing posts from July, 2020

பச்சைப்புடவைக்காரி - மூன்று திருடர்கள் - 3

Image
பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  மூ ன்று திருடர்கள் - 3 (132) ரவி இன்று மூன்றாவது திருடனை பார்க்கப்போகிறோம் ... மாணிக்க வாசகர் இறைவனை சிக்கென பிடித்துக்கொண்டவர்  அதனால் இவர் எழுதிய பாடல்கள்  ஓவ்வொன்றும் கற்கண்டு , தேனில் ஊறிய பலா சுளை ,  பச்சைக்கற்பூரம் தட்டிப்போட்டு முந்திரியும் சக்கரையும் அளவின்றி அள்ளிப்போட்டு அதில் வெல்ல பாகை ஓடவிட்டு முந்திரி பாதாம் மேரு மலை அளவு அள்ளிப்போட்டு அதில் காமதேனுவை நெய்யாக கறக்க வைத்து அதில் ஒரு கரண்டி எடுத்து சாப்பிட்டால் வரும் சுவையை விட கோடி மடங்கு அதிகம்  " வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என் ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!" "வாட்டமிலா மாணிக்க வாசக நின் வாசகத்தை கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவை சாதிகளும் வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டமுறும் என்னிலிங்கு நானடைதல் வியப்பன்றே!." ரவி இதை நான் சொல்ல வில்லை வள்ளலார் சொல்லியிருக்கிறார்  அம்மா தாங்கள் சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது தாயே .... சொல்லுங

பச்சைப்புடவைக்காரி - மூன்று திருடர்கள் - 2 ( 131)

Image
பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  மூ ன்று  திருடர்கள் - 2  (131) ரவி இன்று இரண்டாவது திருடனை பார்ப்போம் ---  இந்த மூன்று திருடர்களும் பொருளை மட்டும் திருடியவர்கள் அல்ல - இறைவன் நெஞ்சத்தையும் தான் - தங்கள் நெஞ்சத்தில் இறைவனை சிறை படுத்தி வேறு எங்கும் இறைவனை எழுந்தருளாமல் செய்து விட்டனர்  இன்று நாம் பார்க்கப்போகும்  இரண்டாவது திருடன் -திருமங்கையாழ்வார் திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக சோழ மன்னன் இவரைத் திருமங்கை என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார். ஆழ்வார்களிலேயே மிக அதிகம் அலைந்தவர் திருமங்கை மன்னன்தான். அவரால் பாடப்படவில்லையென்றால் அந்தக் கோயில் பிற்காலத்தது என்று சொல்லிவிடலாம். ஆழ்வார் பாடல்கள் நம் ஆலயங்களின் பழமையை நிரூபிக்கும் சரித்திரச் சான்றுகளாக உள்ளன. இவைகள் எல்லாம் இன்றும் உ