Posts

Showing posts from May, 2022

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 5. தேவகார்ய ஸமுத்யதா (2) பதிவு11

Image
  ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே       தேவகார்ய ஸமுத்யதா (2) பதிவு 11 ஸ்ரீ லலிதா பஞ்சரத்னம் ப்ராத:ஸ்மராமி லலிதா வதநாரவிந்தம் பிம்பாதரம் ப்ருதுல மௌக்திக சோபிநாஸம் ! ஆகர்ண தீர்க்க நயனம் மணி குண்டலாட்யம் மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வல பாலதேசம் || (1) 🛕காலை வேளையில் ஸ்ரீ லலிதாதேவியின் முகமாகிய தாமரையை ஸ்மரிக்கிறேன்.  அது கோவைப்பழமொத்த உதடுகளுடையதாயும்,  பெரிய முத்துக்களாலான மூக்குத்தியுடையதாயும்,  மாணிக்க குண்டங்களுடையதாயும்,  புன்முறுவல் உடையதாயும்,  கஸ்தூரி திலகத்தால் விளங்கும் நெற்றியுடையதாயுமுள்ளது. ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம் ரக்தாங்குலீய லஸதங்குளி பல்லவாட்யாம் ! மாணிக்ய ஹேமவல்யாங்கத சோபமானாம் புண்ட்ரேக்ஷுசாபகுஸுமேஷுஸ்ருணீர்ததானாம் !! (2) காலையில் ஸ்ரீலலிதாம்பிகையின் கல்பகக் கொடி போன்ற கைகளை சேவிக்கிறேன்.  அது சிவந்த மோதிரம் மிளிரும் துளிர் போன்ற விரல்களுடையதாயும்,  மாணிக்கம் பதிந்த தங்க வளையல்களும்,  தோள்வளையும் கொண்டு விளங்குகின்றன.  கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ரம்பமும் அவற்றில் உள்ளன. ப்ராதர் நமாமி லலிதா சரணாரவிந்தம் பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம் ! பத்மாஸனாதி ஸுரநா