Posts

Showing posts from July, 2019

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் .சுதாமா 7

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். பதிவு 7... சுதாமா மெதுவாக கண்களை திறந்தார் சுதாமர் ...  அங்கே அவர் பார்த்த காட்சி அவர் பல ஜென்மங்கள் செய்த பாவங்களை மூட்டை கட்டி பிரவாகம் எடுத்து ஓடும் யமுனையில் தூக்கி எறிந்ததைப்போல் இருந்தது .... பாற்கடலில் படுத்திருக்கும் பரந்தாமன்  பட்டு பீதாம்பரத்துடன் ,  கேசத்தில் விரிந்தாடும் மயில் பீலிகளுடன் ,  கரங்களில் அமுத கானம் தரும் குழலுடன்,  நவரத்தினங்கள் பதிந்த கீரிடம் ,  முத்துக்கள் புன்னகைக்க ,  வைடூரியம் பலபலக்க ,  கோமதகங்கள் கோவிந்தா சரணம் என்று முழக்கமிட , பவழம் கண்ணன் உதடுகளில் ஓடிப்போய் அமர்ந்து கொள்ள ,  மேனி எங்கும் தங்கம் ஜொலி ஜொலிக்க , எல்லா நகைகளும் வெட்கப்படும் படியான புன்னகையுடன் ,  தேன் சிந்தும் குரலில் , மதுரம் நிறைந்த விழிகளில் , கற்கண்டு எனும் பரிவை கலந்து ,  வாழ்க்கையில் சுதாமர் பார்த்திருக்காத முந்திரி , திராட்சை , பாதாம் ஏலக்காய் ,  துவாரகையில் விளைந்த கரும்புகளில் எடுத்த சர்க்கரை,  குங்கமப்பூ , பச்சை கற்பூரம் இவைகளை பொடி பண்ணி சரியான அளவில் கலந்து கண்ணன் வார்த்தைகளில் அங்கங

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். ...சுதாமா 6

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். பதிவு 6... சுதாமா தாழம்பூ கடம் வாசிக்க , மல்லிகை தன் மணத்திற்கு மணம் முடிக்க , பாரிஜாதம் ஸ்வாகதம் கிருஷ்ணா என்றே குரல் கொடுக்க , பவழமல்லி,  கண்ணன் நடந்து வரும் பாதை எங்கும் பரவி நின்றது ...  கண்ணனின் ஒரு பக்கம் தவிப்பு இன்னொரு பக்கம் சுதாமரை காக்க வைத்து விட்டோமே என்ற கோபம் ...  எப்பொழுது சுதாமர் துவாரகைக்கு வந்தார் ...?  எங்கே அமர்ந்திருக்கிறார் ?  ஏன் என்னை யாரும் கூப்பிடவில்லை ?  கண்ணனின் கோபம் கண்டதில்லை யாரும் அங்கே பார்த்ததில்லை அவன் பரிதவிப்பை .... கேட்டதில்லை அவன் பெரும் குரலை ...  அரண்மனைக்குள் தீ பரவியதைப்போல் செய்தி பரவியது ... நம் மன்னர்  கோபமாக இருக்கிறார் ...  அவர் நண்பர் சுதாமரை காக்க வைத்ததற்காக   ..... ராமன் தொடுத்த அம்பு போல் பாய்ந்து வருகிறார் .... தடை போட யாருக்கும் துணிவில்லை ... மடை திறந்த வெள்ளமென வருகிறார் .....  அவர் நடையில் கோபம் கொப்பளிக்க , வார்த்தைகளில் நெருப்பு அனல் வீச , கண்களில் யமுனை நடனம் ஆட , கண்ணனோ ஆடாமல் அசையாமல் வருகிறார்  .  ....  ஊர் மக்கள் பேசிக்கொண்டார்கள் ..

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்... சுதாமர் 5

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். பதிவு 5... சுதாமா விழுந்து அடித்துக்கொண்டு ஓடிய காவலாளிகள் கொஞ்சம் நின்றனர் ....  "அபரிஜிதா ... நாம் அரண்மனை காவலாளிகள் , அந்தபுரத்திற்கு அல்ல ... நம் மன்னனோ இப்பொழுது அந்தப்புரத்தில் இருக்கிறார் ... நாம் போய் அங்கே எப்படி சொல்வது ...? அங்கே கட்டுப்பாடுகள் அதிகம் ... " "ஆமாம் ஆமாம் வக்ரத்தூண்டா , ... சரி வந்து விட்டோம் அங்கே சொல்லி பார்ப்போம் ... இல்லை என்றால் விதி ... சுதாமர் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் ..... " அந்தப்புரம் .... கண்ணபுரம் ...  விஸ்வகர்மா பார்த்து பார்த்து கட்டிய புரம் ...  காதல் புறமுதுகை ஏற்றுக்கொள்ளும் இடம் ....  கண்ணன் புல்லாங்குழலில் புதுமை படைக்கும் இடம் ...  பூ பந்தல்கள் பொங்கி வழியும் புரம் .... உறவு எனும் தேனில் உல்லாசம் எனும் பால் பாயசம் அதை ஊற்றி இனிமை எனும் நாட்டு சர்க்கரையை கொட்டி , கனவுகள் எனும் ஏலக்காய் தெளித்து , உதடுகள் எனும் குங்கமப்பூவைக்கொண்டு எங்கும் ஒத்தடம் கொடுத்து இளமையை பரிமாறிக்கொள்ளும் புரம் ... அங்கே தனியாக காவலாளிகள் .... காற்றும் புகாமல் காவல் காத்

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். ... சுதாமர் ..4

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.   சுதாமா காவலாளிகள் கண்ணனிடம் சொல்ல ஓடும் போது ஒருவனுக்கு சந்தேகம் பிறந்தது  "அபரஜிதா ... நம் மன்னர் சொன்ன கட்டளையை மறந்து விட்டோமே .. அவர் இன்று ருக்மிணி அம்மையாருடன் ஏகாந்த நிலையில் இருக்கிறார் .. யாரும் எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய க்கூடாது என்றாரே ..  ஐயோ மறந்து போனோமே ... " "ஆமாம் நீ சொன்ன பிறகுதான் ஞாபகம் வருகிறது ... வக்கரத்துண்டா ... சுதாமரை பார்க்க பாவமாக இருக்கிறது ...  நம் மன்னரை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கா விடில் போய் விடும் அவர் உயிர் ... ஒரு பிராமணனை கொன்ற பாவம் நம் இருவருக்கும் வந்து விடும் ... எது தேவலை ? நம் மன்னர் நமக்கு தரப்போகும் தண்டனையா இல்லை சுதாமரை கொன்ற பாவமா ?? " "சரி நமக்குத் தண்டனை நிச்சயம் ... ஒரு உயிரை காப்பாற்றிய சந்தோஷத்தில் மன்னர் தண்டனை எதுவானாலும் ஏற்றுக்கொள்வோம் ... வா ஓடுவதை நிறுத்தாதே ... மன்னரை அடைய இன்னும் ஒரு மணி நேரம் ஓட வேண்டும் ... அரண்மனை அவ்வளவு பெரியது நம் மன்னரின் மனம் போல்.....  கண்ணன் அங்கே ருக்மணி தந்த தாம்பூலத்த்தில் திளைத்திருந்தான

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் ..சுதாமா 3

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். பதிவு 3 ... சுதாமா சரிந்து கீழே விழுந்தார் சுதாமர் ... கண்கள் சொருகிக்கொண்டன ... வாயில் ஊரும் நீரும் சுரக்காமல் நின்று போனது ... பலர் ஓடி வந்து தண்ணீர் கொடுத்து எழுப்பினர் ... முகத்தில் கண்ணனே யமுனை நீரை தெளித்தததைப்போல் உடனே முழித்துக்கொண்டார் சுதாமர் ...  எங்கிருக்கிறேன் ... என் கண்ணன் வந்து விட்டானா ... இப்படி கூட்டம் போட்டீர்கள் என்றால் என் கண்ணன் என்னை எப்படிப் பார்ப்பான் ..?. கொஞ்சம் விலகி நில்லுங்கள் ....  ஏ கிழவரே .. யார் நீர் ... துவாரகையை சேர்ந்தவராய் தெரியவில்லை ... கண்ணன் உங்கள் பேரனா .. இந்த ஊரில் வந்து தொலைத்து விட்டீரா ?  ரொம்ப நாள் சாப்பிடாதவர் போல் தெரிகிறது .. அதோ ஒரு சத்திரம் .. உங்களைப்போல ஏழைகளுக்கு அங்கே இலவச உணவு உண்டு ....வாருங்கள் அழைத்துச்செல்கிறேன்.... கூட்டத்தில் ஒருவன் உரக்க சொன்னான் ...  "கண்ணன் என் பேரன் இல்லை என் உயிர் ..." ஆமாம் கண்ணனை நான் தொலைத்துத்தான் விட்டேன் ..  ஒன்றாய் வளர்ந்தோம் ஒருவராய் உண்டோம் ,  என் முதுகு அவன் அமரும் பள்ளிக்கூடம் .. என் கரங்கள் அவன் திருடிக்க

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும். சுதாமர் 2

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.  சுதாமர்  2 சுதாமா இன்னும் பேசிக்கொண்டே நடந்தார் ..  கண்ணன் உதடுகளில் நர்த்தனம் ஆடும் போது கால்களில் வலி தெரியவில்லை  ...  கண்ணனை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம் அவருடைய தோஷங்களை அங்கே கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொண்டிருந்தது ...  கண்ணா கேட்க மறந்து விட்டேன் ... உன் சிங்கார சிகையில் மயிலின் பீலி இருக்குமே ... யாராவது குருகுலத்தில் தூங்கும் போது அவர்கள் காதில் அதில் நுழைத்து கேலி செய்வாயே ... இன்னும் அது உன் சிகையில் இருக்கிறதா கண்ணா ....  கண்ணா எல்லோரும் மயங்க புல்லாங்குழலில் உன் மதுர கானத்தை பிரசவிப்பாயே இப்பொழுது உனக்கு நேரம் கிடைக்கிறதா உன் குழல் எடுத்து வாசிக்க ?  மாடுகள் எல்லாம் கோகுலத்தில் அம்மா அம்மா என்று சொல்லாமல் கண்ணா கண்ணா என்றே அழைக்குமே ... துவாரகையில் பசுக்களை பார்க்க உனக்கு நேரம் இருக்கா ... கோபியர்களை சீண்டிவிட்டு வெண்ணெய் திருடுவாயே ... இன்றோ ஒரு தேசத்திற்கு ராஜா ... திருடுவதை விட்டு விட்டாயா ...  கண்ணா உன்னால் முடியாது .. நீ இன்றும் திருடன் தான் ... எல்லார் மனங்களையும் துவா

முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும் .. 1 சுதாமர்

Image
முக்தியை அளித்த பக்தியும்.. நட்பும்.  சுதாமர் சுசீலை உடல் சோர்ந்து போனாள் ... மனம் எப்பவோ நலிந்து போனது ... கண்கள் வற்றிப்போய் இனி அதில் மழை வர வாய்ப்பே இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தன ...  நெஞ்சம் உறுதி இழந்து பல வருடங்கள் ஓடிப்போயின ...  வயிற்றில் இன்னொமொறு உயிர் ...  பால் சுரக்க வில்லை .. ரத்தம் கசிந்தது ... பிறந்த உயிர்கள் கெஞ்சின ..   புதியதாய் பிறக்கும் உயிர் துடித்தது போதிய உணவு கிடைக்காமல் ...   வேதங்களை முழுமையாக கற்றறிந்திருந்தவர் சுதாமா.  அவரது வாழ்க்கை ஜீவிதம் உஞ்சவிருத்தி மூலம் நடந்து வந்தது.  அவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்க முடியாத  பிள்ளைச் செல்வங்கள் .  கிடைப்பதை உண்டு வாழும் வாழ்வில் செல்வ வளத்தை எப்படி அனுபவிக்க முடியும்.?  சுதாமாவின் இல்லறமும் கூட வறுமையிலேயே கழிந்தது. ...  வாழ்க்கையில் வறுமை கங்கை போல் பெருக்கெடுத்து ஓடினாலும் அவர்கள் நெஞ்சமெல்லாம் கண்ணன் எனும் திருடன் காளிங்க நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தான் ..   நெஞ்சத்தில் பக்தியை பாலாக்கி அதை சுண்டி காய்ச்சி அதில் கண்ணன் எனும் சர்க்க

வியாசர் கொடுத்த ஆயுள்....

Image
வியாசர் கொடுத்த ஆயுள் சங்கரர் சிந்தனையில் அமர்ந்திருந்தார் ...  சிந்தனையும் சித்துமும்,  தான் வரையும் சௌந்தரிய லஹரியில் அதிகமாக இருந்தது ....  அம்பாளோ மிக அழகு ... தான் எழுதும் வரிகள் அவளை விட அழகாக வர வாய்ப்பே இல்லை ...  ஆனால் தவறாக வர்ணித்து விடக்கூடாது ... அம்மா ... ஏதோ கிருக்குகிறேன் ... அதில் நீ வந்து அமர வேண்டும் ...  எல்லோருக்கும் உன் சௌந்தரியத்தின் அருமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் ...  அமுதம் இனிக்கும் என்கிறார்கள் ... சோமபானம் சுவைக்கும் என்கிறார்கள் ... ஆனால் உன் பெருமைகளை சொல்லும் நா இதை விட சுவை ஆனதே அம்மா ....  அவர் எண்ணங்களை யாரோ களைத்தார்கள் ... எதிரே எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ..... எதிரே ஒரு வயது அதிகமான கிழவர் நின்று கொண்டிருந்தார் ...  அம்பாளின் நினைப்பில் இருந்த சங்கரர் வந்த மகான் யாரென்று உணர வில்லை ... ஆனால் எல்லாம் குருவே என்றிருக்கும் பத்மபாதருக்கு வந்தவர் யாரென்று புரிந்து விட்டது ... வியாசர் ... விஷ்ணுவின் அவதாரம் ....  மஹா பாரதம் இவர் நாவிலிருந்து உதித்தது ... வேதங்கள் இவர் கண் பார்வையில் கர்ப்பம் தரித்தது பூம

கருணை மிகுந்த Lion King - part 2 பத்மபாதரும் ஆதி சங்கரரும்

Image
கருணை மிகுந்த Lion King - part 2  ஆதி சங்கர பகவத் பாதாள் கிட்ட,  பல மதஸ்தர்கள் வந்து வாதம் பண்றா, இந்த காபாலிக மதம்னு ஒண்ணு, நரபலி எல்லாம் கொடுக்கறவா. அவா வந்து வாதம் பண்றா.  சில பேர் கேட்டுக்குறா சங்கரர் சொல்றதை, அவா திருந்தறா. வாமாச்சாரங்கள்  எல்லாம் விட்டு, தக்ஷிண ஆசாரத்துக்கு வந்து, நல்ல வழியில பூஜை பண்றா.  ஆனா சில பேர் அவர் கிட்ட ரொம்ப வெறுப்பு வெச்சுண்டு, இவரை ஒழிச்சு கட்டணும்னு பேசிண்டு இருக்கா.  அதுல ஒரு காபலிக தலைவன் இருக்கான், அவன் என்ன பண்றதுன்னு பார்க்கிறான். இவரை நம்மால நேரடியா ஜெயிக்க முடியாது, இவர் பெரிய தபஸ்வியா இருக்கார்.  அதனால ஒரு சூழ்ச்சி பண்ணலாம்ன் னு, தனியா ஆதி சங்கரர் இருக்கும்போது அவர் பக்கத்துல வந்து “சாமி நான் இந்த காபாலியை குறித்து நான் ரொம்ப நாளா உபாசனை பண்றேன், எனக்கு தரிசனம் கிடைக்கலை.  ஒரு சாம்ராஜய பட்டாபிஷேகம் பண்ணிண்ட ராஜாவோ, இல்லை ஒரு சன்யாசியோ, அவா தலையை வெட்டி நெருப்புல பலி கொடுத்தா, எனக்கு சாமி தரிசனம் கிடைக்கும்னு சொல்றாங்க, எங்களுடைய மதத்துல.   அது தான் நம்பிக்கை. ராஜா கிட்ட போனா அவன் முதல்ல என்னை வெட்டிடுவான