வியாசர் கொடுத்த ஆயுள்....
வியாசர் கொடுத்த ஆயுள்
சங்கரர் சிந்தனையில் அமர்ந்திருந்தார் ...
சிந்தனையும் சித்துமும், தான் வரையும் சௌந்தரிய லஹரியில் அதிகமாக இருந்தது ....
அம்பாளோ மிக அழகு ... தான் எழுதும் வரிகள் அவளை விட அழகாக வர வாய்ப்பே இல்லை ...
ஆனால் தவறாக வர்ணித்து விடக்கூடாது ... அம்மா ... ஏதோ கிருக்குகிறேன் ... அதில் நீ வந்து அமர வேண்டும் ...
எல்லோருக்கும் உன் சௌந்தரியத்தின் அருமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் ...
அமுதம் இனிக்கும் என்கிறார்கள் ... சோமபானம் சுவைக்கும் என்கிறார்கள் ... ஆனால் உன் பெருமைகளை சொல்லும் நா இதை விட சுவை ஆனதே அம்மா ....
அவர் எண்ணங்களை யாரோ களைத்தார்கள் ... எதிரே எதிர்பாராத இன்ப அதிர்ச்சி .....
எதிரே ஒரு வயது அதிகமான கிழவர் நின்று கொண்டிருந்தார் ...
அம்பாளின் நினைப்பில் இருந்த சங்கரர் வந்த மகான் யாரென்று உணர வில்லை ...
ஆனால் எல்லாம் குருவே என்றிருக்கும் பத்மபாதருக்கு வந்தவர் யாரென்று புரிந்து விட்டது ... வியாசர் ... விஷ்ணுவின் அவதாரம் ....

மஹா பாரதம் இவர் நாவிலிருந்து உதித்தது ... வேதங்கள் இவர் கண் பார்வையில் கர்ப்பம் தரித்தது பூமியை காக்க ..
கருணை தன் பிறந்த வீடாக இவரைத் தான் கறுதிக்கொண்டிருந்தது ... அன்பே உருவமாகி சங்கரரைப் பார்த்து சிரித்தது ...
"சங்கரா நீ பண்ணின பிரம்ம சூத்ர பாஷ்யத்துல எனக்கு பல சந்தேகங்கள் ..
உன்னை நேரில் பார்த்து விடை கிடைக்க வந்தேன் .. பதில் சொல் என் கேள்விகளுக்கு ... "
குரல் கொஞ்சம் தடித்து வந்தது .. சங்கரர் பணிவுடன் அவரை அமர்த்தி அவருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து கேள்விகளை கேட்க தயாரானார் ...
ஒரு வேதம் இன்னொரு வேதத்துடன் பேச ஆரம்பித்தது.

இந்த சங்கரரோ சாக்ஷாத் சிவபெருமான், வந்திருக்கிற வ்யாஸாச்சார்யாளோ விஷ்ணு ஸ்வரூபம்.
பத்மபாதர் தனக்குள் பேசிக்கொண்டார் ..
இவா ரெண்டு பேரும் விவாதம் பண்ணா, கிங்கரனான நான் என்ன பண்ண முடியும்?
‘கிங்கரஹ’ அப்படீங்கிறதுக்கு வேலைக்காரன் அப்படீன்னு ஒரு அர்த்தம்.
என்ன பண்ணனும், என்ன பண்ணனும் – அப்படீன்னு கேட்கறதுனால, ‘கிம் கரோமி’ அப்படீன்னு கேட்டுண்டே இருக்கறதுனால ‘கிங்கரஹ’ னா வேலைக்காரன் னு அர்த்தம்.
வேலைக்காரனான நான் என்ன பண்ண முடியும்?
இரண்டு பேருக்கும் நமஸ்காரம் தான் பண்ண முடியும், அப்படீன்னு நமஸ்காரம் பண்றார்.
சங்கர : சங்கர : ஸாக்ஷாத் வ்யாஸோ நாராயண : ஸ்வயம் |
தயோர்-விவாதே ஸம்ப்ராப்தே கிங்கர : கிங்கரோம்யஹம் ||

அப்போ சங்கரர் “நான் பண்ணின இந்த பாஷ்யத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஏதாவது தப்பு இருந்தா சொல்லுங்கோ” அப்படீன்ன உடனே,
வியாசர் சொல்றார். “ஒரு தப்பும் இல்லை. எப்படி மடக்கி கேட்டாலும், என்ன மாதிரி வாதம் பண்ணினாலும், இதுல பதில் இருக்கு” னு காண்பிக்கறதுக்குகாகத்தான் இவ்ளோ நேரம் நான் உங்களோட வாதம் பண்ணினேன்.
இந்த ப்ரம்ம சூத்ர பாஷ்யம் இந்த உலகத்துல மிகவும் சிறப்புடன் விளங்கும்”, மேலும் உன் மனதில் ஓடும் சௌந்தர்ய லஹரி எவ்வளவு யுகங்கள் ஆனாலும் வற்றாது ...

உனக்கு ஆசையுடன் ஒரு வரம் எனக்கு வேண்டித் தருகிறேன் ... அப்படீன்னு ஆசிர்வாதம் பண்ணி, இன்னும் ஒரு பதினாறு வருஷங்கள் ஆயுசு கொடுத்து, இப்படி 32 வருஷங்கள் ஆதி சங்கரருக்கு ஆயுசு கொடுக்கிறார்.
சங்கரர் வந்தவர் பாதங்களில் விழ கிழவர் மறைந்து வியாச பகவான் நிற்கிறார் ...
நீ என் பாதங்களில் விழுவது நானே என் பாதங்களில் விழுவதைப்போல் ...
சங்கரா நீ யே நான் ... நானே நீ ... வாழ்க உன் தொண்டு என்று சொல்லி மறைகிறார் ...

வானம் பெருமிதத்துடன் தான் சேமித்து வைத்த நீரையும் பூக்களையும் சங்கரர் மீது தெளித்துக்கொண்டிருந்தது ...
Comments