பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப் புடவைக்காரி 

என் எண்ணங்கள் 

வெள்ளைக்கு உதவிய பச்சை 


அம்மா  உன் கருணை ஒரு வரைமுறைக்குள் கட்டுப்படாத ஒன்று ---அது கடல் கடந்தும் செல்லக்கூடியது - எப்படி வானத்தின் பரப்பளவை யாராலும் அளக்க முடியாதோ , எப்படி கடலின் ஆழத்தை இவ்வளவு என்று சொல்ல முடியாதோ , எப்படி வானில் உள்ள விண்மீன்களை எண்ண முடியாதோ அப்படித்தான் உன் கருணை .... 

அம்மா தாங்கள்  ஒரு ஆங்கிலேய கலெக்டருக்கு  அருள்புரிந்த அந்த உண்மை சம்பவத்தைப்பற்றி அடியேனுக்கு  கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா !! 

சொல்கிறேன் ரவி --- கேள் 




உங்கள் பாரத நாடுமன்னர் ஆட்சி மாறி ஆங்கிலேயரின் ஆட்சிக்குக் கீழ் வந்தது. 1812ஆம் ஆண்டு இரோஸ் பீட்டர் என்பவர் 
ஆட்சிப் பொறுப்பேற்று மதுரைக் கலெக்டராகப்பணிபுரிய வந்தார்.


அதிகாரியான பீட்டர் இளகிய மனம் கொண்டவர்மக்களை மிகவும் 
அன்புடன்  நேசித்தார்இவரது ஆட்சியில் தர்மம்,நியாயம்இருந்ததால் செல்வவளம்மிகுந்தது.  பழைய பாண்டிய மன்னர்களைப் போல் 
ஆட்சி செய்ததால் இவரை மக்கள் அன்புடன் பீட்டர் பாண்டியன் என 
அழைக்கலாயினர்.

மதுரையின் மண்அதன் மக்கள்குறிப்பாகவானத்தை எட்டும் கோபுரங்கள்வீதி உலா வரும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் பீட்டரின் மனத்தைக் 
கொள்ளை கொண்டனர்

வீதி உலா வரும் அன்னை மீனாக்ஷியின் அருள் பார்வையில் பீட்டரும் தப்பவில்லை

அவளது அருள் பார்வையும்அழகும் அன்னியனான ஆங்கிலேயர் பீட்டர் மனத்தில்பதிந்தன

இப் பதிவு நாளடைவில் பக்தியாக மலர்ந்ததுபீட்டர்,அலுவலகத்துக்குச் 
செல்லுமுன் ஒரு முறை ஆலயத்தை வலம் வந்து விட்டுத் தன் அலுவல்களைத் தொடருவது வழக்கம்.

மக்களின் மனத்தில் பீட்டர் குடி கொள்ள,அவர் மனத்தில் நான் குடி 
கொண்டேன் 

அன்பைப் பிறரிடம் காட்டும் அன்பருக்குஅடிபணிவான் இறைவன் என்னும் கூற்று உண்மையே நான் எவ்விதம் பீட்டருக்கு அருள் 
புரிந்தேன்  என்று பார்ப்போமா? .

ஒருநாள்பீட்டர் வழக்கம்போல் அன்றைய அலுவல்களை முடித்த பின்னர் 
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்

அன்று இரவு வானம் கறுத்து மழை பெய்து கொண்டிருந்ததுவானத்தைப் பிளப்பது போல் மின்னல் மின்னியதுபீட்டர்,அவரது படுக்கையில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்

அச்சமயம்ஒரு பிஞ்சுக் கரம் அவரைத் தொட்டு எழுப்பியது

பீட்டர் கண் திறக்கஅவர் முன் அழகே உருவெடுத்த ஒரு சிறுமிஅவரதுகையைப் பிடித்து இழுத்தாள்அறை முழுவதும் இருட்டதூக்கக் கலக்கம்இவள் யார்எப்படி வந்தாள்ஏன் வந்தாள்ஒன்றும் புரியவில்லை

ஆனால் சிறுமி பலவந்தமாக அவர் கையைப் பிடித்து இழுக்கஅவளது 
கட்டளையை ஏற்றுமாடியிலிருந்து இறங்கிவீட்டை விட்டு வெளியே 
வந்தார்

மறுகணம்ஒரு பேரிடிஅவர் வீட்டுக் கூரையில் விழுந்துவீடு பற்றி எரிந்ததுபீட்டரின்உடலும் உள்ளமும் பதறஅருகில் நிற்கும் 
சிறுமியை நோக்கினார்அவள் முகத்தில் சிறு புன்னகை..☺️ 

என் உயிரைக் காக்க வந்த நீ யார்?” என்று கேட்கசிறுமி அந்த 
மழையில் ஓடலானாள்

பீட்டரும் அவளைத் தொடர்ந்தார்எவ்வளவு வேகமாக ஓடினாலும் 
இருவருக்குமிடையில் அதே இடைவெளி இருந்தது

சிறுமியை எட்டிப் பிடிக்க இயலாமல் பீட்டர் ஓடினார்.ஓடிய சிறுமி கோவிலை அடைந்து உள்ளே சென்றாள்மீனாக்ஷீ கர்ப்பகிருகத்துள் சென்று மறைந்தாள்

பீட்டர் மெய் சிலிர்த்துகண்ணீர் மல்க சிலையாக நின்றார்இது கனவா நினைவா,அல்லது கற்பனையா

இல்லை இது நிஜம்

ஊர் உறங்கும் இவ்வேளையில் இடியிலிருந்துதன் உயிரைக்காப்பாற்றியது வேறு யாருமில்லைஇங்கு கோவில் கொண்டிருக்கும் அன்னைமீனாக்ஷீ 
எனப்புரிந்து கொண்டார்

அவளது கருணைஅவருள் இருந்த மாயக்கற்றைகளையும்
ஐயங்களையும் போக்கியது,

பீட்டரின் ஊனக் கண்களைத் திறந்து ஞானக் கண்களை வழங்கினாள் 
இதனால் பீட்டர் அடியாருள் ஒருவரானார்.



அவளை நினைத்து நெஞ்சம் கனிந்து குழைந்துதாயைப் பிரிந்த சேயாக 
வாழ்ந்தார்தன்னை ஆட்கொண்ட அன்னைக்கு பொன்னும் பொருளும் 
வழங்கினார்

மீனாக்ஷி குதிரை வாகனத்தில் பவனி வருவதைக் கண்டு பல முறைபக்திப்பரவசத்தில் கரைந்தார்

உலக நாயகிஉலகை வலம் வரும் தாயைநான் வலம் வருவது மட்டும் போதாதுஎன்னிடம் இருப்பது யாவும் அவள் கொடுத்த செல்வமே

குதிரையில் வரும் தன் தாய்க்கு அவளது திருவடிகளைத் தாங்க இரு மிதியடிகள்செய்வது என முடிவு எடுத்தார்

பத்தரை மாற்றுத் தங்கத்தில் 4-முத்து, 4நீலம்,4வைடூர்யம்மரகதக் கற்கள் 576 வைத்து இரு மிதியடிகளில் 
பதிக்கச்செய்தார்.அவற்றை அன்னை மீனாக்ஷிக்கு அர்ப்பணித்தார்.




குதிரை வாஹனத்தில் உலா வரும் தாயின் பாதங்களைத் தாங்கி 
இருக்கும் மிதியடிகளைக் காணும் போதெல்லாம் தானே அவளது 
காலடியில் கிடப்பதாக எண்ணி மகிழ்ந்தார்அந்த ஆங்கிலேயரான பீட்டர்

அவரது பதவிக் காலம் முடிவுற்றதுஎல்லாரையும் போல் அவரும் வேலை முடிந்ததும் தன் சொந்த நாட்டிற்குச் செல்ல வேண்டும் அல்லவா

ஆனால் இவருக்கோ தன் தாயை விட்டுப் பிரிய மனம் வரவில்லைஅன்புச்சேயாக மாறினார்

தினமும் அன்னை மீனாக்ஷியைக் காண வேண்டி மதுரையிலே இருப்பது என தீர்மானித்தார்

தன் ஆயுள் முடிவு வந்ததும்எப்பொழுதும்  மீனாக்ஷியைப் பார்க்கும் வண்ணம்,அடக்கம் செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் கூறிவிட்டார்

அவ்வாறேஅவரின் சடலம்நகைக் கடைகளுக்கு அருகில் இருக்கும் ஒரு 
கிறிஸ்தவ ஆலயவெளியில் ஆலயத்தைத் தரிசித்த படியே துயில் கொண்டுஇருப்பது போல அடக்கம் செய்யப்பட்டுள்ளது

மதுரை சென்றால்இன்னும் அவரின் கல்லறையைக் காணலாம்

அவர் அன்னைக்கு அளித்த மரகத மாலை  மியூசியத்தில் உள்ளது

என்கோயிலுக்கும் அழகர் கோவிலுக்கும் பல பொன் ஆபரணங்களை 
வழங்கியுள்ளார் பீட்டர்பாண்டியன்.

அம்மா --- கேட்கவே புல்லரிகின்றது - 

எங்களுக்குள் தான் எவ்வளவு வேறுபாடுகள் அவன் கிறிஸ்த்துவன் , இவன் முஸ்லீம் இப்படி 

எதனையும் காணாமல் மதங்களைப்படைத்தோம் , மதம் பிடித்து அலைகிறோம் -- 

இந்த சம்பவத்தை  படிக்கும் எவருமே தெய்வம் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை கருணை காட்டுவதில் என்று புரிகிறது ... 

ரவி நான் மட்டும் அல்ல ஈசனும் ஒரு ஆங்கிலேயரின் உயிரை காப்பாற்றினார் அவரின் மனைவியின் பக்தியினால் -- இதை நாளை சொல்கிறேன் ....

சிரித்துக்கொண்டே என் எண்ணங்களை கிளறிவிட்டு காற்றில் மறைந்தாள் காஞ்சனமாலையின் தவப்புதல்வி 





Comments

ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் சுலோகம் -11*
🌸🌸🌸🌸
நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ |
மந்தஸ்மிதப்ரபாபூர மஜ்ஜத்காமேஶ மானஸா || 11
🌸🌸🌸🌸
निजसल्लाप माधुर्य विनिर्भर्-त्सित कच्छपी ।
मन्दस्मित प्रभापूर मज्जत्-कामेश मानसा ॥ 11 ॥
🌸🌸🌸🌸
Nijasanlapa madhurya vinirbhastitakachapi
Mandasmita prabhapura majatkamesha manasa – 11
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஒம் நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபயை நம;
ஒம் மந்தஸ் மிதப்ரபாபூ ரமஜ்ஜத் காமேஶமானஸாயை நம;
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் // ஸஹஸ்ர நாமாவளி விளக்கம்*
🌸🌸🌸🌸
*நிஜஸல்லாப மாதுர்ய வினிர் பர்த்ஸித கச்சபீ* - அம்பாள் குரல் இனிமை சரஸ்வதி தேவியின் வீணை (கச்சபி என்று பெயர் அதற்கு) யிலிருந்து எழும் ஸ்வரங்களின் நாதம் தெரியவேண்டும்.
🌸🌸🌸🌸
*மந்தஸ்மிதப்ரபாபூர மஜ்ஜத் காமேஶ மானஸா* - அழகிய நெளிந்து ஓடும் காட்டாறு களை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள். மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது. அதே தான் அம்பாளின் புன்னகையின் அழகு.
🌸🌸🌸🌸
ravi said…
உடலெங்கும் திருநீறு ... உள்ளமெங்கும் அதன் வெண்மை

பாதங்களில் பாதத்துளிகள் அவை தருவதோ செழுமை

உதடுகளிலோ தேன் அருவி அவை தருவதோ தெய்வத்தின் குரல்

கண்களிலோ காமாக்ஷி .. பேசுவதிலோ கருப்பஞ்சாறு ...

நடப்பதிலோ மானின் மிரட்சி ... அன்னம் வந்து நடை பயின்றதோ எனும் அதிர்ச்சி

கூவும் குயிலும் ஆடும் மயிலும் துள்ளும் மானும் துவளும் மீனும் நடக்கும் அன்னமும் வாழ்வது உன் குரல் எனும் கடம்ப வனமோ

🦜🦜🦚🦚🍇🍇🍇🥇🥇🥇🥇
Very nice anecdote well explained.God bless
S G S Ramani said…
தகுதி உடைய நல்ல மனிதர்களுக்கு நிச்சயம் தெய்வத்தின் அருள் கிட்டும் என்பதை அறிய வைத்த பதிவு....👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏
Shivaji said…
Arumai 👌 Fantastic 👍👍👍 wonderful 👌👌👌
Savitha said…
அருமையான பக்தி
அன்னை மினாக்ஷி அருள் அற்புதம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
Moorthi said…
அருமை 👌👌🙏🙏🙏🙏
Moorthi said…
அழகான பதிவு. நான் கேட்டதில்லை 👌👌👏🙏🙏
ravi said…
நீ இருக்காய் என்றோ நினைவு இழந்தேன் ..

இழந்த நினைவுகளில் உன் நிழல் அன்றோ தெரிகிறது

தெரியும் நிழல் நான் இருக்கிறேன் அஞ்சேல் என்றே சொல்லும் அழகென்ன?

அழகெல்லாம் உன் அடி பணியும் போதினிலே .. போதி மரம் போல் நீ தரும் மருந்தென்ன

மருந்துக்கும் வேலை செய்யா வியாதி தனில் உன் கரங்கள் வேண்டுகிறோம் சாயி ...

உதவி செய்ய உனை விட்டால் ஒருவர் உண்டோ சாயி ? 💐💐💐
Neela G said…

பக்தர்களுக்கு என்றும் தெய்வம் நின்று அருள்புரியும்.

🙏🙏🙏🙏🙏
ravi said…
மீசை துடித்து சொன்னான் இராவணன் ...

பெண் என்றே பொறுமை காத்தேன் ...

நெய்யாக உருகுவாய் என் எழில் கண்டு என்றே நினைத்தேன் ... எரிமலையாய் நிற்கின்றாய் ...

நான் தேடும் பெண்கள் யாரும் இல்லை எனை நாடி அது வரும் கோடி ...

நான் தேடிய மான் நீ ... துள்ளுகிறாய் அதிகம் ....

இட்லி தோசை கொடுத்து வளர்க்கவில்லை இந்த அரக்கியர் கூட்டம் ...

நர மாமிசம் கொடுத்து வளர்த்தேன் ...

ஒரு விநாடி ஆகுமோ சரி என்றே சொல்ல நான் ...

கண்ணாடியில் பார்த்துக்கொள் உன் முகத்தை கடைசி தடவையாய் ...

2 மாதம் தவணை அவனை நினைக்க அல்ல , எமனை உன் பக்கம் அழைக்க , பவனை வணங்கி கேட்கிறேன் பணிந்து விடு ..

பட்டது மாராணியாய் பார் புகழ வாழலாம் .. 🌸🌸🌸
UK valli said…
Om Namasivaya, arumaiyana pathivu, the post has lovely photo of Goddess Meenakshi Padam.🙏🙏🙏
ravi said…
706 உமா ஸஹஸ்ரம்

விப்ராஜீநஸ தாபம் பிப்ராணம் ஸிரஸீந்தும்

ஸ்மர்தவ்யம் ஜகதம்பா ரூபம் வா தூத பாபம்

கோடிக்கணக்கான சூரியர்களின் ஒளிக்கும் ஈடு செய்ய முடியாத காந்தி அவள் .. அவளை நினைப்பத்தின் மூலம் எல்லாமே பிரகாசமாகவே அமையும்
ravi said…
2. பாதாரவிந்த சதகம்

ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...

தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
ravi said…
16

ஸராக ஸத்வேஷ ப்ரஸ் ருமர ஸரோஜே ப்ரதிதினம்

நிஸர்காதாக்ராமன் விபுதஜன மூர்த்தான மதிகம்

காதங்காரம் மாத கதய பதபத்மஸ்தவ ஸதாம்

நதானாம் காமாக்ஷி பரகடயதி கைவல்ய ஸரணிம்.

ஞானிகளும் ரிஷிகளும் த்வேஷத்தை விட்டவர்கள் .. ஆனால் தாயே உன் பாதங்களை தாமரையாக இருப்பதால் த்வேஷம் கொள்கிறார்கள் .. அவர்கள் மீது உன் பாதங்களை பதித்து அவர்களுக்கு
கைவல்யத்தை அளிக்கிறாய் .. இது விந்தை அல்லவா ?
ravi said…
மீனாக்ஷி பஞ்சரத்னத்துல கடைசி ரெண்டு ஸ்லோகங்கள், நாலாவது அஞ்சாவது ஸ்லோகங்கள் பார்ப்போம்.

श्रीमत्सुन्दरनायिकां भयहरां ज्ञानप्रदां निर्मलां
श्यामाभां कमलासनार्चितपदां नारायणस्यानुजाम् ।
वीणावेणुमृदङ्गवाद्यरसिकां नानाविधामम्बिकां ।
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥४॥

----1-----
ravi said…
ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம் ப⁴யஹராம் ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்

ஶ்யாமாபா⁴ம் கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம் ।

வீணாவேணும்ருʼத³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதா⁴டம்பி³காம் மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥ 4 ॥

“ஶ்ரீமத்ஸுந்த³ரநாயிகாம்” – கைலாசத்துல போய் அம்பாள் பரமேஸ்வரனைப் பார்த்து, கல்யாணசுந்தரரா வந்து, இங்க மீனாக்ஷி, மதுரைல மீனாக்ஷியை கல்யாணம் பண்ணிண்டார். அதுல இருந்து இங்க மதுரைல மீனாக்ஷி ஆறுமாசம் செங்கோல் வெச்சிண்டு ஆட்சி பண்ணுவா, சுந்தரேஸ்வரர் ஆறுமாசம் செங்கோல் வெச்சிண்டு ஆட்சி பண்ணுவாராம்.

----2----
ravi said…
அதுல ஆனா, மதுரைனாலே மீனாக்ஷிதான், மதுரை மீனாக்ஷியம்மன் கோவில்ன்னுதான் சொல்வாளே தவிர, யாரும் சுந்தரேஸ்வரர் கோவில்ன்னு சொல்றதில்ல! அங்கே மீனாக்ஷிக்கு தனி ஆதிக்கம். அம்பாளுக்குத் தான் பூஜை நிவேத்தியம் எல்லாம் கூட அதிகமா! அப்படி, விளையாட்டா கூட கேட்பா. உங்காத்துல மதுரையா? சிதம்பரமா? அப்படிம்பா. மதுரைன்னா ஆத்துக்காரி voice ஜாஸ்தி! சிதம்பரத்துல, நடராஜா காளியை நர்த்தனம் பண்ணி ஜெயிச்சார்! அதனால அங்க ஆத்துக்காரருக்கு வாய்ஸ் ஜாஸ்தி, அப்படிங்கறதை விளையாட்டா உங்காத்துல மதுரையா, சிதம்பரமா அப்படிம்பா. அந்த மாதிரி, மதுரைன்னா மீனாக்ஷிதான்.

---3-----
ravi said…
“ப⁴யஹராம்” – பயத்தைப் போக்குபவள், அம்மாதானே பயத்தைப் போக்கமுடியும் குழந்தைக்கு.

ஆனந்தஸாகரஸ்தவத்துல 59வது ஸ்லோகம்.

अप्राकृतं मृदुलतामविचिन्त्य किञ्चि–

दालम्बितासि पदयोः सुदृढं मया यत् ।

तन्मे भवार्णवनिमज्जनकातरस्य

मातः क्षमस्व मधुरेश्वरि बालकृत्यम् ॥ ५९ ॥

---4-----
ravi said…
அப்ராக்ருʼதம் ம்ருʼது³லதாமவிசிந்த்ய கிஞ்சி–

தா³லம்பி³தாஸி பத³யோ: ஸுத்³ருʼட⁴ம் மயா யத் ।

தந்மே ப⁴வார்ணவநிமஜ்ஜநகாதரஸ்ய

மாத: க்ஷமஸ்வ மது⁴ரேஶ்வரி பா³லக்ருʼத்யம் || 59 ||

----5-----
ravi said…
அப்படின்னு சொல்வார். எவ்ளோ, என்ன ஒரு அழகான பாவம். சொல்றார், உன்னோட பாதத்தோட ம்ருதுத்தன்மை ‘அப்ராக்ருʼதம்’. அது, பெண்களுடைய பாதம் ம்ருதுன்னு சொல்லலாம். இது தனியான ஒரு ம்ருதுத்தன்மை, அதை ‘அவிசிந்த்ய‘ – அதை ஞாபகம் இல்லாம, கொஞ்சம்கூட ஞாபகம் இல்லாம மறந்து போயிட்டு, ‘ஆலம்பி³தாஸி பத³யோ: ஸுத்³ருʼட⁴ம் மயா யத்‘ – நான் உன்னுடைய பாதங்களை ரொம்ப இறுக்க கெட்டியா பிடிச்சுண்டேன். அதை வந்து நீ மன்னிச்சுடு! ஏன் தெரியுமா? ‘தந்மே ப⁴வார்ணவநிமஜ்ஜநகாதரஸ்ய‘ – இந்த சம்ஸார ஸாகரத்தில் மூழ்கிப்போய் விடுவேனோ என்று பயந்து, ஸாகரத்துல மூழ்குபவன் எது கிடைச்சாலும் அதை கெட்டியா பிடிச்சுப்பான் இல்லையா, அந்த மாதிரி உன் பாதத்தை நான் வந்து கெட்டியா பிடிச்சேன்.

----6-----
ravi said…
‘மாத: க்ஷமஸ்வ மது⁴ரேஶ்வரி‘ – மதுராபுரநாயிகே! அப்படின்னு ஹே மீனாக்ஷி! ‘பா³லக்ருʼத்யம்‘ – இந்த சிறுபிள்ளைதனத்தை பொறுத்துக்கொள் அம்மா அப்படின்னு கேட்கறார். அப்படி அம்பாளுடைய சரணத்தை பிடிச்சுண்டாதான் நம்முடைய சம்ஸார பயம் போகும்.

----7------
ravi said…
“ஜ்ஞானப்ரதா³ம் நிர்மலாம்” – அம்பாள் நிர்மல வடிவம்! அந்த தூய்மையை நமக்கும் குடுத்து, ஞானத்தைக் குடுப்பா.

இந்த இடத்துல, மந்தஸ்மித சதகத்துல 80வது ஸ்லோகம். அழகான ஒரு ஸ்லோகம்.

जात्या शीतशीतलानि मधुराण्येतानि पूतानि ते
गाङ्गानीव पयांसि देवि पटलान्यल्पस्मितज्योतिषाम् ।
एनःपङ्कपरम्परामलिनितामेकाम्रनाथप्रिये
प्रज्ञानात्सुतरां मदीयधिषणां प्रक्षालयन्तु क्षणात् ॥80॥

----8----
ravi said…
ஜாத்யா ஶீதஶீதலாநி மது⁴ராண்யேதாநி பூதானி தே

கா³ங்கா³னீவ பயாம்ஸி தே³வி படலாந்யல்பஸ்மிதஜ்யோதிஷாம் ।

ஏன:பங்கபரம்பராமலினிதாமேகாம்ரநாத²ப்ரியே

ப்ரஜ்ஞானாத்ஸுதராம் மதீ³யதி⁴ஷணாம் ப்ரக்ஷாலயந்து க்ஷணாத் ॥ 80 ॥

--9---
ravi said…
ஹே காமாக்ஷி! ‘ஏகாம்ரநாத²ப்ரியே‘ – ஏகாம்ரநாதருடைய ப்ரிய மனைவியே!

‘ஶீதஶீதலாநி‘ – உன்னுடைய மந்தஸ்மிதம் எப்படி இருக்குன்னா, ரொம்ப ஶீதலமா இருக்கு மிகமிக குளிர்ந்திருக்கு.

‘மதுராணி‘ – ரொம்ப இனிமையாயிருக்கு.

‘பூதானி‘ – ரொம்ப தூய்மையா இருக்கு. இந்த கங்கா ஜலத்தைக் கொண்டு, இந்த மாதிரி ஸ்வபாவமாவே உன்னுடைய மந்தஸ்மிதம் கங்காஜலம் போல குளிர்ச்சியும், மதுரமும், தூய்மையும் நிறைஞ்சதாயிருக்கு.

-----10----
ravi said…
அந்த ‘அல்பஸ்மிதஜ்யோதிஷாம்‘ – உன்னுடைய மந்தஸ்மிதமுடைய ஜோதியைக்கொண்டு, ‘ஏன:பங்கபரம்பராமலினிதா மதீ³யதி⁴ஷணாம்‘ –என்னுடைய புத்தி பாபங்கள் என்ற சேறுனால ரொம்ப மலினமா ஆயிடுத்து. அதை ஸ்ரீகாமாக்ஷி, ‘ப்ரக்ஷாலயந்து க்ஷணாத்‘ – அதை நன்னா, புத்தியை நன்னா அலம்புமா, அப்படிங்கறார்.

----11-----
ravi said…
உன்னுடைய இந்த மந்தஸ்மிதம்ங்கற கங்கையைக் கொண்டு, அதுக்கு கூட என்னத்தை வெச்சுக்கணும்ன்னா, இப்ப ஒரு சோப்பு போட்டு அலம்பறாயில்லையா? அந்தமாதிரி, அந்த காலத்துல ஒண்ணொண்ணு வெச்சிருந்திருப்பா. அந்த மாதிரி, எந்த, எதைப் போட்டு அலம்பணும்ன்னா, ஞானத்தை போட்டு அலம்பு, அப்படிங்கறார்! அப்படின்னு அழகான ஒரு ஸ்லோகம், அந்த மாதிரி, அம்பாளே நிர்மலமா இருக்கறதுனால, அம்பாள்தான் ஞானத்தை குடுக்கமுடியும்.

---12----
ravi said…
“ஶ்யாமாபா⁴ம்” – கருப்புவர்ணமா இருக்கா. திரும்ப எனக்கு ஒரு மூகபஞ்சசதி ஸ்லோகம் ஞாபகம் வர்றது. (ஸ்துதி ஶதகம் 6)

श्यामा काचन चन्द्रिका त्रिभुवने पुण्यात्मनामानने
सीमाशून्यकवित्ववर्षजननी या कापि कादम्बिनी ।
मारारातिमनोविमोहनविधौ काचितत्तमःकन्दली
कामाक्ष्याः करुणाकटाक्षलहरी कामाय मे कल्पताम् ॥6॥

ஶ்யாமா காசன சந்த்³ரிகா த்ரிபு⁴வநே புண்யாத்மநாமானனே

ஸீமாஶூன்யகவித்வவர்ஷஜனனீ யா காபி காத³ம்பி³னீ ।

மாராராதிமனோவிமோஹனவிதௌ⁴ காசிதத்தம:கந்த³லீ

காமாக்ஷ்யா: கருணாகடாக்ஷலஹரீ காமாய மே கல்பதாம் ॥ 6 ॥

---13----
ravi said…
காமாக்ஷி கருப்பா இருக்காங்கறதை வெச்சிண்டு, பலவிதத்துல சொல்றார், இந்த மூககவி! இந்த காமக்ஷிங்கற தெய்வம், ‘ஶ்யாமா காசன சந்த்³ரிகா‘ – சந்திரன்னா வெள்ளைவெளேர்ன்னு இருக்கும், ஆனா இந்த காமாக்ஷிங்கற சந்திரிகை கருப்பா இருக்கு. மூவுலகத்துகும் ஆனா ஒளி குடுக்கறது.

---14---
ravi said…
புண்யாத்மநாமானனே‘ – புண்யசாலிகளுடைய வாக்கில்,

‘ஸீமாஶூந்ய‘ –எல்லையற்ற,

‘கவித்வவர்ஷஜனனீ‘ – கவிதை என்ற மழையை கொட்டச் செய்யும்,

‘யா காபி காத³ம்பி³னீ‘ – ஒரு மேகம்போல இருக்கா காமாக்ஷி அப்படின்னு. மேகமும் கருப்பா இருக்கும்.
ravi said…
மாராராதி‘ – மதனனை எரித்தவருடைய, மதனனுக்கு எதிரியான, பரமேஸ்வரனுடைய ‘மனோவிமோஹனவிதௌ⁴’ – மனத்தை மோகிக்க செய்யறவிதத்துல,

‘காசிதத்தம:கந்த³லீ‘ – ஏதோ ஒரு இருளைப்போல இருக்கு. இருட்டுதானே வந்து மோகிக்கப் பண்ணும்.

அந்த, ஹே காமாக்ஷி! உன்னுடைய ‘கருணாகடாக்ஷலஹரீ‘ – உன்னுடைய கருணா கடாக்ஷம்ங்கற அலை, அது ‘காமாய மே கல்பதாம்‘ – என்னுடைய ஆசைகளெல்லாம் பூர்த்தி பண்ணட்டும்.

அதுமாதிரி, “ஶ்யாமாபா⁴” அப்படிங்கறதுக்கு, கருப்பு வர்ணத்தின் ஒளி மிகுந்தவள்ன்னு அர்த்தம்.

---16---
ravi said…
“கமலாஸனார்சிதபதா³ம்” – ‘கமலாஸன:’ அப்படின்னா, தாமரைப்பூவில் அமர்ந்திருப்பவர். பிரம்மாதி தேவர்களெல்லாம் வணங்கும் திருவடித் தாமரைகளைக் கொண்ட மீனாக்ஷி.

ययोः पीठायन्ते विबुधमुकुटीनां पटलिका
ययोः सौधायन्ते स्वयमुदयभाजो भणितयः ।
ययोः दासायन्ते सरसिजभवाद्याश्चरणयोः
तयोर्मे कामाक्ष्या दिनमनु वरीवर्तु हृदयम् ॥6॥

--17----
ravi said…
யயோ: பீடா²யந்தே விபு³த⁴முகுடீநாம் படலிகா

யயோ: ஸௌதா⁴யந்தே ஸ்வயமுத³யபா⁴ஜோ ப⁴ணிதய: ।

‘யயோ: தா³ஸாயந்தே ஸரஸிஜப⁴வாத்³யா:’ – எந்த திருவடிகளுக்கு ‘ஸரஸிஜப⁴வாத்³யா:‘ பிரம்மாதி தேவர்களெல்லாம் ‘தா³ஸாயந்தே‘ அடிமைகளா இருக்காளோ,

‘தயோர்மே காமாக்ஷ்யா தி³னமனு வரீவர்து ஹ்ருʼத³யம்’ – அந்த இரு திருவடிகள்லேயும் என் மனம் தினமும் லயித்து இருக்கட்டும், அப்படின்னு பிரார்த்தனை பண்றார். (பாதாரவிந்த ஶதகம் 6).

----18-----
ravi said…
அந்த மாதிரி “கமலாஸனார்சிதபதா³ம் நாராயணஸ்யாநுஜாம்” – நாராயணனுடைய, விஷ்ணு பகவானுடைய தங்கை. அதனாலதான் விஷ்ணு தாரை வார்த்துக் குடுத்தார். அந்த சுந்தரேசர், விஷ்ணுபகவான், மீனாக்ஷி, இந்த காக்ஷி ரொம்ப அற்புதமான ஒரு சிலையா மதுரை கோவில்ல இருக்கும்! அதைத்தான் எல்லா கல்யாணப் பத்திரிக்கைள்லேயும் போடறா. எல்லா கல்யாண மண்டபங்கள்லேயும் அதை வெச்சிருக்கா. இதை பார்க்கறதுக்கு அவ்ளோ ஆனந்தமா இருக்கும்.

---19----
ravi said…
“வீணாவேணும்ருʼத³ங்க³வாத்³யரஸிகாம்” – “வீணா”ன்னா வீணை “வேணு”ன்னா புல்லாங்குழல், ம்ருதங்கம், இதெல்லாம் கொண்டு, அழகான சங்கீதத்தை ரசிப்பவள் மீனாக்ஷி. மீனாக்ஷிதேவியினுடைய, இந்த மலயத்வஜனுக்கு மகளா தடாதகைப்ராட்டியா பிறந்ததைப் பத்தி சொன்னேன்.

--20---
ravi said…
அதே மாதிரி இன்னொரு அவதாரம், ராஜமாதங்கி ஶ்யாமளாதேவின்னு சொல்வா. மதங்கர்ன்னு ஒரு முனிவர் இருந்தார். அவருக்கு பிள்ளை மாதங்கர்ன்னு ஒருத்தர் இருந்தார். அந்த மாதங்கரும் ஹிமவானும் நண்பர்களா இருந்தா. ஆனா ஒரு தடவை ஹிமவான் பேசும்போது, ‘எல்லாம் சரிதான். ஆனா கெளரியே எனக்கு குழந்தையா பிறந்தாளே! பர்வதராஜகுமாரி பார்வதின்னு அம்பாள் எனக்கு குழந்தையா பிறந்தா! அந்த பெருமை யாருக்கு உண்டு?’, அப்படின்னு சொன்னவுடனே, இவருக்கும் அதுல ஒரு ஆசை வந்துடுத்தாம்! அதனால இவர் அம்பாள்ட்ட தபஸ் பண்ணி, இந்த மாதங்கமுனிவர், ‘நீ எனக்கு பொண்ணா பொறக்கணும்’ன்னு வேண்டிக்கறார். அப்போ அம்பாள் அவருக்கு பொண்ணா மாதங்கின்னு பொறக்கறா!

--21----
ravi said…
அந்த ஶ்யாமளாநவரத்னமாலிகா,

ओङ्कारजरशुकीमुपनिषदुद्यानकेलिकलकण्ठीम् ।

आगमविपिनमयूरीमार्यामन्तर्विभावये गौरीम् ॥ १॥

दयमानदीर्घनयनां देशिकरूपेण दर्शिताभ्युदयाम् ।

वामकुचिनिहतवीणां वरदां संगीतमातृकां वन्दे ॥ २॥

ஓங்கார பஞ்ஜரஶுகீம் உபநிஷதுத்யானகேலிகலகண்டீம் |

ஆகமவிபினமயூரீம் ஆத்யாமந்தர்விபாவேய கௌரீம் ||1||

தயமானதீர்க்கநயனாம் தேஶிகரூபேண தர்ஶிதாப்யுதயாம் ।

வாமகுசநிஹிதவீணாம் வரதாம் ஸங்கீதமாத்ருகாம் வந்தே ||2||

அப்படின்னு அந்த ‘சங்கீதமாத்ருகா’ அப்படின்னு சொல்றது ஶ்யமளாதேவிதான்!


--22----
ravi said…
सरिगमपधनिरतां तां वीणासंक्रान्तकान्त हस्तान्ताम्

शांतां मृदुलस्वांतां कुचभरतान्तां नमामि शिवकांताम् ॥ ५॥

ஸரிகமபதநிரதாம் தாம் வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாந்தாம் ।

ஶாந்தாம் ம்ருதுலஸ்வாந்தாம் குசபரதாந்தாம் நமாமி ஶிவகாந்தாம் || 4 ||

அப்படின்னு சங்கீதத்துக்கு அதிதேவதை இந்த ஶ்யமளாதேவி. ஶ்யமளாதேவி மதுரை மீனாக்ஷி மந்த்ரிணி, அப்படின்னு சொல்றா. அந்த மாதிரி, அம்பாளுடைய மந்திரியா இருக்கா. சேனாதிபதியா இருக்கா. அந்த அம்பாளுக்கு அடுத்த இடம், காமாக்ஷிக்கு கூடயே நிக்கற இடம். அந்த நவாவர்ண பூஜைகள்ல, அந்த ஶ்யமளாதேவியுடைய சந்நிதி காமாக்ஷி கோவில்லையும் சுத்திவரும்போது பார்க்கலாம். அந்த ஶ்யமளாதேவியை உபாசனை பண்ணா எல்லா கலைகளும் வரும்! கலைகளில் சிறந்ததான சங்கீதமும் வரும் அப்படின்னு சொல்வா.

--23---
ravi said…
அந்த “வீணாவேணும்ருʼத³ங்க³வாத்³யரஸிகாம் நானாவிதா⁴டம்பி³காம்”

பலவிதமான அவசரங்கள்! அதுமாதிரி காமாக்ஷி, மீனாக்ஷி, மந்திரிணி, ஶ்யாமளா, பா³லை எல்லாம் மீனாக்ஷி தான்!

“மீனாக்ஷீம் ப்ரணதோ3ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம்”

--24--
ravi said…
இது நாலாவது ஸ்லோகம். அஞ்சாவது ஸ்லோகம்,

नानायोगिमुनीन्द्रहृन्निवसतीं नानार्थसिद्धिप्रदां
नानापुष्पविराजिताङ्घ्रियुगलां नारायणेनार्चिताम् ।
नादब्रह्ममयीं परात्परतरां नानार्थतत्त्वात्मिकां ।
मीनाक्षीं प्रणतोऽस्मि सन्ततमहं कारुण्यवारांनिधिम् ॥५॥

நானாயோகி³முனீந்த்³ரஹ்ருʼந்நிவஸதீம் நானார்த²ஸித்³தி⁴ப்ரதா³ம்

நானாபுஷ்பவிராஜிதாங்க்⁴ரியுக³ளாம் நாராயணேனார்சிதாம் ।

நாத³ப்³ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த²தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ³ஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம்நிதி⁴ம் ॥

--25--
ravi said…
“நானாயோகி³முனீந்த்³ரஹ்ருʼந்நிவஸதீம்” – எல்லா முனீந்த்ரர்களுடைய யோகிகளுடைய ஹ்ருதயத்தில் வசிப்பவள் மீனாக்ஷி. ஸ்ருங்கேரி சாரதாபீடத்துல இருந்த சந்திரசேகரபாரதி ஸ்வாமிகள், மீனாக்ஷி மேல ரெண்டு ஸ்தோத்ரம் பண்ணிருக்கார். ரமணபகவான் பண்ணிருக்கார். அப்படி, பெரியவாளுக்கு அவ்ளோ மீனாக்ஷிமேல பக்தி. அப்படி எல்லா யோகிகளும், முனிவர்களும் மீனாக்ஷியை த்யானம் பண்றா.

“நானார்த²ஸித்³தி⁴ப்ரதா³ம்” – எல்லாவித ஸித்திகளையும் குடுப்பா மீனாக்ஷி தன்னுடைய பக்தர்களுக்கு! இந்த உலகமே அம்பாளுடைய ஸ்ருஷ்டி. இதுல தன்னோட குழந்தை ஒண்ணு ஆசைப்பட்டா குடுக்கமாட்டாளா! ஆனா நம்ப வந்து, யோசிச்சுப் பார்த்தா அஞ்சு வயசு வரைக்கும் சின்ன குழந்தையா, அம்மா நமக்கு என்ன பண்ணாளோ, ‘அம்மா பாத்துப்பா!’ அப்படின்னு இருக்கறவரைக்கும், அது தான் ரொம்ப Happiest Period of life இல்லையா? அதுமாதிரி இருக்க தெரிஞ்சுடுத்துன்னா, எப்பவும் சந்தோஷமா இருக்கலாம். அந்த மாதிரி, இந்த வயசு வந்தாலும், சித்திகளெல்லாம் கிடைச்சு, அதைக்கொண்டு ஒண்ணு அனுபவிச்சு சந்தோஷப்படறதைவிட, ‘அம்மா! நீ விட்ட வழி’ அப்படின்னு இருந்தா, நமக்கு என்னென்ன வேண்டுமோ அதெல்லாம் அம்மா குடுப்பா.
Anonymous said…
பீட்டரின் பக்தி அபரீதமானது . உன் எழுத்துக்களைப்படிக்கும் போது மேனி உண்மையில் சிலிர்க்கின்றது -- பீட்டர் செய்த பாத் அணிகள் மிகவும் அற்புதம் 
அருமையான நெஞ்சை உருக்கும் பதிவு 

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை