Posts

Showing posts from November, 2021

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 8- பதிவு 5

Image
         அபிராமி பட்டரும்                                அடியேனும்  கேள்வி பதில் 8 பதிவு 5 கேள்வி பதில் நேரம் பதிவு 5 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .    கேள்வி  8  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *  காலை வணக்கம் ...அலர் கதிர் ஞாயிறும் திங்களுமாய் அபிராமியை நினைப்பவர்கள் வாழ்க்கை அமையும் .. இன்று என்ன கேள்விகள் ?   * நான் *  ஐயனே .. மன்மதனின் கரும்பும் கனை அம்புகளும் அன்னை அபிராமியின் கரங்களுக்கு எப்படி வந்தன .. ?? மன்மதன் அம்பாளிடன் போர் செய்யவில்லையே தன் ஆயுதங்களை அவள் பாதங்களில் சரணடைய ...  ஈசன் கரங்களில் தானே கரும்பு வில்லும் கனை அம்புகளும் இருக்க வேண்டும் .... ??   🙏🙏🙏 * பட்டர் *  அருமையான கேள்வி ... தீவிரவாதிகள் தோற்றுப்போனால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை முதலில் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் .  உண்மையான இரண்டு தீவிர வாதிகள் இருக்கிறார்கள் . ஒன்று காமன் .. பிறவியை தருபவன் .. காமத்தீயை வளர்ப்பவன் . குண்டலியை மூலாதாரத்தில் இருந்து எழும்புவதை தன் மலர் கனைகளால் தடுப்பவன் ... இன்னொரு

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 6 & 7- பதிவு 4

Image
          அபிராமி பட்டரும்               அடியேனும்  கேள்வி பதில் 6 &7 பதிவு 4 கேள்வி பதில் நேரம் ( 6 & 7) கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .    கேள்வி 6  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *  காலை வணக்கம் ... உதிக்கின்ற  செங்கதிர் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும் 🌞 இன்று என்ன கேள்விகள் ?   * நான் *   நீங்கள் 78 பாடல் பாடும்  வரை அம்பாள் வரவேயில்லை ..  உங்கள் மன நிலை எப்படி இருந்தது ?  நாங்களாக இருந்திருந்தால் அபிராமியை திட்டி தீர்த்திருப்போம் ..  பட்டர் அவளை அரைகுறையாய் நம்பவில்லை முழுவதுமாக நம்பினேன் ..  அரைகுறையாக நம்பி இருந்தால்  அவளும் பிறைச் சந்திரனை மட்டுமே வானத்தில் காட்டி இருப்பாள் .  முழுமையாக நம்பியதால் அவள் பூர்ண சந்திரனை வானத்தில் கொண்டு வந்தாள் ..  யார் யாரையோ நம்புகிறீர்கள்   என் அபிராமியை முழுவதுமாக நம்பி பாருங்கள் ...  இதை நான் சொல்வதை விட நீங்களே அனுபவித்தால் மட்டுமே பரமானந்தம் காண முடியும் ..   🌷🌷🌷🌞🌞🌞 நான் உண்மை ... உங்கள் மாதிரி பக்தி எங்களுக்கு வருவது மிகக் கட

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 4 & 5 பதிவு 3

Image
          அபிராமி பட்டரும்               அடியேனும்  கேள்வி பதில் 4 & 5 பதிவு 3 கேள்வி பதில் நேரம் பதிவு 3 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி  4 & 5   நான் :  *பட்டரே* காலை வணக்கம் ..  இன்று சீக்கிரமாக வந்து விட்டீர்கள். சனிக்கிழமை என்பதாலா ?  பட்டர்   அப்படி ஒன்றும் இல்லை ... உன் கேள்விகளை அறிந்து கொள்ளும் ஆவல் . அதனால் சீக்கிரம் வந்தேன் .  சரி உன் அடுத்த கேள்வி என்ன சொல் ...  நான் :   இழைக்கும் வினை வழியே அடும் காலன் வந்து எனை அழைக்க வரும்  போது ...நீ ஓடி  வந்து அஞ்சேல் என்பாய் ... என்று சொன்னீர்கள் ..  அந்த சமயத்தில் அபிராமியின் நினைவு வராவிட்டால் என்ன செய்வது ..? மீண்டும் ஒரு தாயின் கருப்பையை தேட வேண்டுமா ?   * பட்டர் *   நல்ல கேள்வி ... அபிராமியை நன்றாக இருக்கும் போதே மனதில் கொண்டு வர வேண்டும் ...  தினம் நினைக்கும் அன்பர்கள்  கடைசி நேரத்தில் அவள் பெயரை சொல்ல மறக்க மாட்டார்கள் ..  நீங்கள் அவளை நினைத்து அழைக்க வேண்டும் என்பதில்லை அவளே ஓடி வருவாள் .  மறுபிறவி என்பதற்கு வாய்ப்பே

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதிவு 2 & 3 - பதிவு 2

Image
            அபிராமி பட்டரும்               அடியேனும்  கேள்வி பதில் 2 & 3 கேள்வி பதில் நேரம்   * பதிவு 2* 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 2*    நான்  :  பட்டரே காலை வணக்கம் ..    பட்டர்  ...  உன் அடுத்த கேள்வி என்ன சொல்    நான்  : ஐயனே  பயன் இல்லாதவைகள் ஏழு என்பார்கள் . அந்த ஏழும் என்ன என்ன என்று சொல்ல முடியுமா ?   பட்டர் : சொல்கிறேன் பல பாடல்களில் மறைமுகமாகவும் குறிப்பிட்டுள்ளேன்  1. ஆபத்துக்கு உதவாத பெற்ற  குழந்தைகள்  2. அரும்பசிக்கு உதவாத அன்னம் 3. தாபத்தைத் தீராத் தண்ணீர் 4. தரித்திரம் அறியாப் பெண்டிர் 5. கோபத்தை அடக்கா வேந்தன் 6. குருமொழி கொள்ளாச் சீடன் 7. பாவத்தை தீராத தீர்த்தம் பயன் இல்லை இவை ஏழும் .  இந்த ஏழையும் மனதில் வைத்து அபிராமி இனி வேண்டேன் ஒரு கருப்பை ..  கடையூர் வந்து விட்டேன் .  இதுவே இனி கடைசி பிறப்பாக இருக்கட்டும் என்று வேண்டினேன் .  💐💐💐🌸🌸🌹🌹 * நான் * : அருமை பட்டரே .. கடையூர் கருப்பையை அறுக்கும் ஊர் .  * கேள்வி 3*  நீங்கள் அதிகமாக விரும்பி நிறைய பாடல்கள

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 1 பதிவு 1

Image
          அபிராமி பட்டரும்               அடியேனும்  கேள்வி பதில் 1 பதிவு 1 கேள்வி பதில் நேரம் பதிவு 1🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்   பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்   கேள்வி 1    நான்  :  பட்டரே வணக்கம் .. தாங்கள் கூப்பிட்டவுடன் வந்ததற்கு மிக்க நன்றி  பட்டர்  ... அபிராமி அந்தாதியைப் பற்றிய கேள்விகள் என்று சொன்னதால் வந்தேன் ..  செவி வழியாக கேட்பதை விட அபிராமியின் அருளால் நானே பதில் சொல்வது சிறந்தது அல்லவா ?   * நான் * : உண்மை ... என் முதல் கேள்வி ... . உங்கள் பாட்டில் பதத்தைப் பிரித்தால் ஒரு அர்த்தம் பதத்தை பிரிக்காவிட்டாலும் ஓரு அர்த்தம் இப்படி வர வாய்ப்பு உள்ளதா ?   * பட்டர் * : அப்படித்தான் பெரும்பாலும் பாடல்கள் அமைய பட்டுள்ளன .  உதாரணம்  முதல் பாடல் முதல் வரிகள் ...   * உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் *  ....  இதை பிரிக்கா விட்டாலும்  ஒரு அர்த்தம் வரும் ...பிரித்தாலும் வேறு  அர்த்தம் வரும்   உதிக்கின்ற செங்கதிர் அன்னையின் உச்சித் திலகமாய் செக்க செவேல் என்று விளங்குகிறது என்று ஒரு அர்த்தம் ...  பதம் பிரித்தால் ...   * உதிக்கின்ற

அபிராமி அந்தாதி -A recap ..4 - நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்!

Image
                                                       அபிராமி அந்தாதி  A recap ..4 நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! 01  கலையாத கல்வியும் 02. குறையாத வயதும் 03. ஓர் கபடு வாராத நட்பும் 04. கன்றாத வளமையும் 05. குன்றாத இளமையும் 06. கழுபிணியிலாத உடலும் 07. சலியாத மனமும் 08. அன்பகலாத மனைவியும் 09. தவறாத சந்தானமும் 10. தாழாத கீர்த்தியும் 11. மாறாத வார்த்தையும் 12. தடைகள் வாராத கொடையும் 13. தொலையாத நிதியமும் 14. கோணாத கோலும் 15. ஒரு துன்பமில்லாத வாழ்வும் 16. துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!! அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே ஆதிகடவூரின் வாழ்வே! அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி! அபிராமியே!! அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ, தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி! அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே, திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே! இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!! அபிராமி அந்தாதி முற்று பெறுகிறது ... தவறு தவறு .. முற்றுப்பள்ளி வைக்கவே முடியாது .. மீண்டும் உதயம் ...  உதிக்க

அபிராமி அந்தாதி - நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! 3

Image
                                              அபிராமி அந்தாதி  A recap ..3 நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்!  நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள் ! வாருங்கள்... அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது!  கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்!  ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்! கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து,  பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்!  நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்! இதோ அப்பனின் சன்னிதி! அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்! வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்?  ஜாதி மல்லி தான் தல விருட்சம்! மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா?  மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன! தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்!  திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?🙌🙌🙌 இதோ வந்து விட்டோம்! அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி! சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை! சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்!  சாம்பிராணி