அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 6 & 7- பதிவு 4

         அபிராமி பட்டரும்               அடியேனும் 

கேள்வி பதில் 6 &7

பதிவு 4



கேள்வி பதில் நேரம் ( 6 & 7)

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 6

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  காலை வணக்கம் ... உதிக்கின்ற  செங்கதிர் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும் 🌞

இன்று என்ன கேள்விகள் ? 

 *நான்*   நீங்கள் 78 பாடல் பாடும்  வரை அம்பாள் வரவேயில்லை .. உங்கள் மன நிலை எப்படி இருந்தது ? 

நாங்களாக இருந்திருந்தால் அபிராமியை திட்டி தீர்த்திருப்போம் .. 




பட்டர்

அவளை அரைகுறையாய் நம்பவில்லை முழுவதுமாக நம்பினேன் .. 

அரைகுறையாக நம்பி இருந்தால்  அவளும் பிறைச் சந்திரனை மட்டுமே வானத்தில் காட்டி இருப்பாள் . 

முழுமையாக நம்பியதால் அவள் பூர்ண சந்திரனை வானத்தில் கொண்டு வந்தாள் .. 

யார் யாரையோ நம்புகிறீர்கள்  

என் அபிராமியை முழுவதுமாக நம்பி பாருங்கள் ... 

இதை நான் சொல்வதை விட நீங்களே அனுபவித்தால் மட்டுமே பரமானந்தம் காண முடியும் .. 

 🌷🌷🌷🌞🌞🌞

நான்

உண்மை ... உங்கள் மாதிரி பக்தி எங்களுக்கு வருவது மிகக் கடினம் .. 

மண்ணளிக்கும்  செல்வத்தில் தான் மனம் போகிறது ... 

அமையும் அமையொரு தோளினர் மேல் வைத்த ஆசை தான் எங்களை எல்லாம் மாயை என்பதை அறிய வைக்க மறுக்கிறது... 

பட்டர் அந்தாதி தினமும் சொல்வதால் மாயை சீக்கிரம் விலகும் .. அவள் வந்து பாசத்தொடரை எல்லாம் வலி தெரியாமல் வந்து அரிப்பாள்..




🔥🔥🔥

கேள்வி 7

நான் : 

பட்டரே ! உங்கள் அந்தாதி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் + சௌந்தர்ய லஹரியின் தமிழாக்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது 

பட்டர் ... அப்படி சொல்ல முடியாது அவைகளை படைத்தவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள் .. 

ஹயக்ரீவர் , வாக் தேவிகள் , அகஸ்தியர் , அவர் மனைவி லோபா முத்திரை  ... 

சௌந்தர்ய லஹரீ முதல் 40 பாடல்கள் ஈசனே இயற்றியது மீதி ஆதிசங்கரர் ... 

நானோ நாய்த்தலையன் .. பேயன் ... 

ஆனால் என் அறிவுக்கும் புரியும் வண்ணம் அவள் என் சொற்களில் வந்து தன்னை பொறுத்திக்கொண்டாள் என்று சொல்வதுதான் சரி .. 

நான் .. பட்டரே உங்கள் தன்னடக்கம் புல்லரிக்கின்றது ... 

பட்டர் .. சிரித்துக்கொண்டே என் சிந்தைக்குள் கரைந்து போனார்
👏👏👏🦜🦜🦜🌷🌷🌷




Comments

TV Ganesh said…
நமச்சிவாய வாழ்க.
நாதன் தாள் வாழ்க.

ஆகாச வடிவமாய், மிளிர்கின்றமெய்ச்சுடராய்,
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதநாய்
தில்லையுள் கூத்தனாய் , தேனாய், அமுதமுமாய், அடியார்களை ஆட்கொள்பவனாய் விளங்கும அம்பலவானன் எல்லோருக்கும் ஞானசெல்வத்தை கொடுத்து எல்லா நலன்களையும் அருளட்டும் என்று ஆருத்ரா தரிசன திருநாளான இன்று அந்த இறைவன் ஆனந்த நடராஜனை பிரார்த்திக்கிறேன்🙏🙏🙏
ravi said…
*இந்த நாள் ஆடல் அரசன் போல் ஆனந்தமாய் எல்லோரும் இருக்கும் படி அமையட்டும்* 🙏🙏🙏
ravi said…
ஆனந்த லஹரி - 16
ravi said…
கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப-ருசிம்

பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்

விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ

கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ👏👏👏
ravi said…
அன்னை சிறந்த கவிகளின் மனமாகிய தாமரை மலர்களை மலரச்செய்யும் இளம் வெய்யிலில் தோன்றும் சிவப்பு நிறத்தவள்.

அன்னையைப் பணியும்
எல்லோருக்கும் சரஸ்வதி தேவியின் யெளவன சிருங்கார ரஸத்தின் பிரவாகம் போன்ற சொல் வன்மை உண்டாகி அவர்கள் தம்மை சுற்றி உள்ளவர்களை மகிழ்விப்பார்கள்.🙏🙏🙏
ravi said…
முந்தைய ஸ்லோகத்தில் வெண்மை நிறத்தினளாக அன்னையை கூறிய ஆச்சார்யார், இங்கு சிவப்பு நிறத்தவள் என்கிறார்.

அதுவும் எப்படி அருணோதய சூர்யன் போன்ற, அதாவது சூரியன் உதிக்கும் போது வரும் சிவந்த நிறமாம். இதைத்தான் 'உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்' என்கிறார் அபிராமி பட்டர்.

வெண்மை எப்படி சத்வ குணமோ அது போல சிவப்பு ரஜோ குணத்தை குறிப்பது.

ஏன் சிவப்பு என்பது இங்கு ரஜோ குணத்தை குறிக்க வேண்டும்?.

ஏனென்றால் பின்வரும் வரியில் அன்னை சிருங்கார ரஸத்தை தருவதாக கூறுவதால். சிருங்கார ரஸம் என்பதும் ரஜோகுணத்தை குறிப்பதுதான். ' *அருணாம் கருணா-தரங்கிதாஷாம்* ' என்றுதான் அன்னையின் தியான ஸ்லோகமே ஆரம்பிக்கிறது.💐💐💐
ravi said…
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 73* started on 7th Oct 2021
ravi said…
10 *मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -

11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -

12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா

13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -

14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -

15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --

17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --

18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --

19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --

20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -

தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
ravi said…
இன்று நாம் காண இருப்பது 15வது திருநாமம்

*15 अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -*

ஆதி சங்கரர் இந்த சந்திரனை வைத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியில் ஒரு சரித்திரமே படைத்துள்ளார் ...

அம்மா உன் முகம் பூர்ண சந்திரன் ...

அந்த சந்திரன் தேயக்கூடியது

ஆனால் உன் முக சந்திரன் என்றுமே வளர் பிறை ...

அது என்றும் தேயாது ...

உன் நெற்றி சந்திர பிறை

ஆனால் அது பாதிதான் நீ சூடிய பிறையும் பாதிதான்

இவை இரண்டையும் மாற்றி அமைத்து ஒட்டி விட்டால் அதுவே பூர்ண சந்திரன் அன்றோ அந்த ஒட்டும் கயிறாக என் மனம் இருக்க அருள் செய் தாயே என்கிறார் ..

இதற்கு மேலும் யாராவது கூடுதலாக வர்ணிக்க முடியுமா ?? 🌕🌝🌝🌝🌝🌕🌕🌕🌝
ravi said…
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
ravi said…
[20/12, 11:01 am] Moorti Mumbai: இந்த நாளில் நடராஜரின் தரிசனம் 👌👌🙏🙏🙏🙏🙏🌹
[20/12, 11:01 am] Moorti Mumbai: 🙏
[20/12, 11:02 am] Moorti Mumbai: அருமை 👌🙏🙏
[20/12, 11:10 am] Shivaji L&T C: Sree Maathre Nama 🌹🌹🙏🙏
ravi said…
*ஆருத்ரா தரிசனம்*
ravi said…
பல்லாண்டு பல்லாண்டு ...

தேர் அசைய ஊர் அசைய
உள்ளம் அசைய

ஆடல் அரசன் பவனி வந்தான் பாரிலே சேந்தனாரின் உருக்கம் கண்டே ...

ஓடாத தேர் ஓட்டப்பந்தயம் தனில் கலந்தது போல் ஓடியதே

கலி தீர்க்க களி உண்டான் வினை தீர விஷம் உண்டவன் ..

மனம் லயிக்க மரகதமானான் ... மயில் வணங்கும் காபாலீஸ்வரன்

வயதோட உடல் ஆட வேண்டி நின்றேன் ...

என் ஆட்டம் நிற்கும் முன் உன் ஆட்டம் காண்பேனோ ...

உள்ளம் எல்லாம் பேதலித்து போவேனோ ...

பித்தன் உன் போல் பேர் எடுப்பேனோ ..

உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் போது என் முன்னே வருவாயோ ...

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,

இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெருவேனோ

சிரித்தான் அன்று முப்புரங்கள் சுடர் விட்டு எரிந்தது

சிரித்தான் இன்று நெஞ்சில் உள்ள அழுக்கெல்லாம் அவன் பூசும் சுடலை ஆனது ...

என் அந்தரங்கத்தில் அந்த ரங்கனையும் சேர்த்தே ஆடல் புரிந்தான் ..

களி உண்டே களித்துப்போனேன் ...

கண் திறந்து பார்த்தேன் தென்றல் அது பாதம் படிய பெரியவா புகைப்படம் தானாக ஆடியது ...

அதிலே களித்து கரைபுரண்டு அந்தகரணங்கள் விம்ம *தத்தரிகிடத்தோம்*
*தத்தரிகிடத்தோம்*
என்றே ஜதி போட்டு வியந்து நின்றேன் ..

விண்ணும் மண்ணும் விரல் நுனியை தொட்டதுவே 💐💐💐👍👍👍
ravi said…
[20/12, 11:02 am] Moorti Mumbai: 👌👏🙏🙏🙏🌹🌹
[20/12, 11:11 am] Shivaji L&T C: Beautiful and apt. 🌹🌹🙏🙏🙏
[20/12, 11:19 am] Metro Kowsalya: Arumai
ravi said…
[20/12, 8:11 am] Sib-Gopu: 🙏🌹
[20/12, 8:15 am] Chitra Sridhar: 🙏🙏
[20/12, 8:53 am] Krishnan Lalitha Athimber: 🙏🙏
[20/12, 8:58 am] Chellamma: 👌🙏🙏🙏
[20/12, 8:58 am] Chandra US: 🙏🙏
[20/12, 8:58 am] Chandra US: 🙏👍
ravi said…
அடடடா...!
இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!

*"வெந்த + அயம் : வெந்தயம்
அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து நமக்கு தேவை ஆனால் வெந்த இரும்பைதான் சாப்பிடமுடியும் அதான் பஸ்பம் செந்தூரம் அந்த சத்து முழுக்க வெந்தயத்தில் உள்ளது

*"வெப்பம் + இல்லை : வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"*

*"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"*

*"அகம் + தீ : அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"*

*"சீர் + அகம் : சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"*

*"காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.! காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"*

*"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"*

*"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"*

*"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!"*

*
ravi said…
இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!*

"செம்மொழி" தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!

நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்.!!

*"அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறக்காமல். பாட்டனையும் மறக்காமல். அவர்கள அறிவுரையை பின்பற்றலாமே"*.!"🌹
ravi said…
சித்ரா விஸ்வநாதன்
என்னைப் பற்றிய ஒரு (சற்றே பெரிய) அறிமுகம் !

என் சொந்த ஊர் மதுரையின் அருமையை என்னால் வார்த்தைகளால் சொல்லி மாளாது ! நான் ஊரைவிட்டு வந்து 60 +வருடங்கள் ஆகியும், நான் இன்னும் என்னை மதுரைக்காரி என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்ளுவதில் அலாதி இன்பம்.
ravi said…
எனக்கு தெரிந்தது '50களில் இருந்த மதுரை. இப்பொழுது, வளர்ச்சி நகராட்சிக்கு வெளியே மிகுந்திருக்கிறது.
என் மனதில் இன்றும் நிறைந்திருக்கும் மீனாட்சியம்மனுடன் தொடங்குகிறேன்.
விபூதி பிள்ளையார் அழகிய பொற்றாமரைக் குளத்தின் அருகில் உட்கார்ந்து நம்மை வரவேற்பார்.
ravi said…
மதுரைவாசிகளின் நாளே கோவிலுக்குப் போவதுடன் தான் துவங்கும்.எல்லா பிராகாரங்களையும் சுற்றி அனைத்து சன்னதிகளையும் தரிசனம் செய்து முடித்தால்,மனதுக்கு நாளை இனிதே தொடங்கின மகிழ்ச்சி, உடலுக்கு நல்லபயிற்சி. அனைவருமே நமச்சிவாய மந்திரத்தை ஓதிக்கொண்டே வலம்வருவது, நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும். நாம் தரிசனம் பண்ணிக் கொண்டிருக்கும் போது வேயுறு தோளி பங்கன், நாளென் செயும் கோளென் செயும் என்றெல்லாம் அனைவரும் சத்தமாக ஓதுவது நமக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுக்கும்.
ravi said…
கண்டதும் காப்பாள் மீனாக்ஷி
சொன்னால் செய்வான் சொக்கன் ....
இதில் எள்ளளவும் ஐயமில்லை!
கோவிலுக்கு உள்ளேயே இருக்கும் கோவில்கடைகள் மிகவும் பிரசித்தம்! வளைக் கடைகள், மற்றும் இமிடேஷன் நகைகள் கண்ணைப் பறிக்கும் . அக்கம் பக்க கிராமங்களில் இருந்து வரும் பாமர மக்களுக்கு, அதுவே சென்னையின்express mall, City centre, Phoenix mallமுதலியவற்றுக்கு சமானம். கடைக் காரர்கள் வாங்க அம்மணி, வாங்க ஆச்சி, வாங்க பெரியம்மா என்று அவரவர் கடைக்கு அழைப்பார்கள் என்றால் சென்னை வாசிகளுக்கு நம்ப முடிகிறதா ?
ravi said…
சுவாமி சன்னதியில், கலை நயம் மிகுந்த உலோகப் பொருட்கள் , சிறிய விளக்குகள் போன்றவற்றை வாங்கலாம்.
வெளியூரிலிருந்து வரும் விருந்தினருக்கு, ஆயிரங்கால் மண்டபத்தை பெருமையுடன் சுற்றிக் காண்பிப்போம்!
ஆடி வீதிகளையும் சுற்றி விட்டு, அடுத்து நாம் போவது பலகாரக் கடைகள்.
மதுரை மல்லிகைப் பூ இட்லிகள் மிகவும் பிரசித்தம்.
கோவிலைச் சுற்றிஉள்ள பலகாரக் கடைகளில், தூள் பகோடா, மசால் கிழங்கு விற்பனை தூள் கிளப்பும்.
ravi said…
மதுரை மசால் கிழங்கு சென்னையில் நான் பார்த்திராத ஒரு பதார்த்தம். கடைக்கு வந்த ஒரு மணி நேரத்தில் காலியாக விடும்.
ஒரிஜினல் நாகப்பட்டிணம் மிட்டாய்க் கடையில் எப்பொழுதும் கூட்டம் தான்.அல்வா, ஜாங்கிரி அங்கே வாங்க வேண்டும், சாப்பிட வேண்டும்!! ஆஹா என்ன ருசி!!
கோபு ஐயங்கார் கடையின் தவலை வடை, போண்டா, பஜ்ஜி முதலியவை பற்றி எழுதும் போதே நாவில்
ஜலம் ஊறுகிறது !
ravi said…
அடுத்தாற்போல் தளவாய் அக்ரகாரம். 50 + வருடங்களுக்கு முன்னாலேயே, பல பழச்சாறு வகைகளை கலந்து ஜில்லென்று விற்பார்கள். அதுவும் பெரிய கிளாசில்! இப்பொழுது நாம் நாகரீகமாக்க் குடிக்கும் ஸ்மூதி அன்று எங்கள் ஊரில் உருவானதோ??
எனக்கு தெரிகிறது, நீங்கள் ஜிகிர்தண்டா பற்றி என்ன எழுதப் போகிறேன் என்று காத்திருப்பது. அது உருவானது, பெரிய விளக்குத் தூண் பக்கத்தில் ஒரு ஜூஸ் கடையில்!! இன்று trifles, layered desserts, parfait என்றெல்லாம் முழங்கும், வகைகளுக்கு எங்கள் ஊர் தான் அடித்தளம் அமைத்தத்தோ???
ravi said…
மாடர்ன் ரெஸ்டாரண்டு அன்றும் சரி இன்றும் சரி மிகவும் பிரசித்தம் தான். அந்தக் கடை பட்டணம் பக்கோடாக்கு உயிரையே கொடுக்கலாம். விசாலம் காபி கோரிப் பாளையத்தில் சிறிய இடத்தில் அமைந்திருந்தாலும், அந்தக் கடை காபி பிளாஸ்குகளில் பெரிய இடங்களுக்குப் போகும்!
எங்கள் ஊரின் தெருக்களின் பெயர்கள் சுவாரசியமாக இருக்கும்.அவற்றில் சில - நெல்லுக்காரத்தெரு, கிளாஸ்காரத்தெரு, காக்காத் தோப்பு, கல்லறை சந்து, வைக்கோல்காரத்தெரு, மஞ்சணக்காரத் தெரு, வளையல்காரத் தெரு, ஐயர் பங்களா, கோபால் கொத்தன் தெரு.
எங்கள் வீட்டில் வேலை செய்த பல பெண்கள் காதில் பாம்படம் அணிந்து மேலே ரவிக்கை அணிந்திருக்க மாட்டார்கள். 50, 60 வருடங்களுக்கு முன்பு அது விகல்பமாக தோன்றியதே கிடையாது.
எங்கள் ஊர் பாஷையில் பேசிக் காண்பிக்கட்டுமா - எலே தங்கராசு, எங்ஙனடா போய்த் தொலஞ்சே என் ராசா. தம்பி, அங்கிட்டு இங்கிட்டு ஊரு சுத்திட்டு, குண்டக்க மண்டக்க எதினாச்சும் பண்ணிராதேப்பா.
ravi said…
அதைக் கேட்டுப் பழகின என் காதுகளுக்கு, ஏய் பெரிசு, குந்திக்கினு, சாவு கிராக்கி முதலிய வார்த்தைகள் எவ்வளவு நாராசமாக இருந்திருக்கும் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
மதுரையில் மல்லிகைப்பூ எண்ணிக்கையில் தான் விற்கப்படும் படும். 100, 200 என்று நொடியில் எண்ணி, சிறிய வாழை இலைத் துண்டில் சுற்றி, வாழை நீரால் கட்டிக் கொடுப்பார்கள்.நெருக்கமாகத் தொடுக்கப் பட்டு, அசல் செண்டு மாதிரியே இருக்கும்.
எங்கள் வீட்டுப் பூக்காரி, இரவு 9 மணிக்கு மேல் விற்காத மல்லியை எங்கள் வீட்டில் "பொம்பிளை பிள்ளைங்க" இருந்ததால், கொண்டு வந்து வைத்து விட்டுப் போய் விடுவாள். காலையில் செண்டு மல்லியில் கண் முழிப்பது எனக்குமிகவும் பிடித்த விஷயம்!
நான் அமெரிக்கன் கல்லூரி மாணவி. அப்பொழுது டி வி எஸ் பஸ்ஸில் கல்லூரிக்குப் போவேன். 8 மணி பஸ் ஒரு நிமிடம் முன்னோ பின்னோ வராது. காலம் தவறாமையில் அவர்களை யாரும் மிஞ்ச
முடியாது !
ravi said…
மதுரையைச் சுற்றி உள்ள வட்டாரங்களில் சிலவற்றின் பெயர்கள் - அச்சம்பத்து, உசிலம்பட்டி, வாடிப்பட்டி, செல்லம்பட்டி, முத்துப்பட்டி, குமுத்திரம்பட்டி, ராசினம்பட்டி, சேடப்பட்டி, சலுப்பப்பட்டி, அம்மாபட்டி ..... இன்னும் பல பல. தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் என்று முழங்கப் படுபவற்றில் இவை 0.1 சதவிகிதம் கூட இல்லை!
கோவிலைச் சுற்றி சதுர வடிவில் அமைந்த தெருக்கள் சில தமிழ் மாதங்களின் பெயர்களைக் கொண்டவை -
1-ஆடி வீதி, இது கோவிலைச் சேர்ந்தது
2- ஆனி வீதி
3- சித்திரை வீதி
4- ஆவணி மூல வீதி
5- மாசி வீதி
கடைசியில் வெளி வீதி.
சித்திரைத் திருவிழா நாட்களில், மதுரையே விழாக் கோலம் பூண்டிருக்கும்.மீனாட்சி கல்யாணத்தன்று
எல்லோர் வீட்டிலும் பாயசம் கட்டாயம் உண்டு. அழகர், மதுரை எல்லையைத் தொட்டதும், பிரமாதமான வாண வாடிக்கை நடக்கும். அதைக் காணக் கண் கோடி வேண்டும்.
புட்டுத் திருவிழாவன்று, எல்லோர் வீட்டிலும் புட்டு உண்டு. மீனுக் குட்டியும், சொக்கநாதரும் கண்கண்ட தெய்வங்கள்!
ravi said…
இன்னும் ஆயிரங்கால் மண்டபம், மங்கம்மா சத்திரம், வண்டியூர் தெப்பக்குளம், கடைத்தெரு, ஜவுளிக் கடல், யானைக்கல், சிம்மக்கல் என்று எழுதிக் கொண்டே போய் உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை!
ஹாஜி மூசா ஜவுளிக் கடை, 60 வருடங்களுக்கு முன்னாலேயே ஜவுளிக் கடல் என்று வர்ணிக்கப் படும்! தமிழ்ப்பற்றில் மதுரைக்காரர்களை யாரும் மிஞ்ச முடியாது. தமிழ்ச் சங்கம் கண்ட ஊர் அல்லவா, எங்கள் மதுரை!
என் சிறு வயது picnic spot வண்டியூர் தெப்பக்குளம். அந்த நாட்களில், பெரிய மகழ்ச்சிகளை சிறிய நிகழ்வுகளே கொடுத்தன!
ravi said…
ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.
“வைகுந்தம் அடைவது மன்னவர் விதி'
என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும்.
வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),
ஸ்ரீரங்கம்_பூலோக_வைகுந்தம். வைகுந்த_அனுபவம் இங்கேயே_கிடைக்கிறது என்றால் யாருக்குத்_தான் ஆசை இருக்காது?
ravi said…
ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
"”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.
ravi said…
ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு
உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர்..
பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.
ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்
அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்
தீராத வினையனைத்தும் திர்க்கும்கோயில்
திருவரங்க மெனத் திகழுங்கோயில் தானே!
என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.
ravi said…
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.
தெற்கே வானமாமலை, தொண்டை நாட்டிலே ஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம்,
ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம்,
நைமிசராண்யம், என்பவை தான் அவை.
ravi said…
வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.
பகவான் காடு ரூபமாக உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில்.
ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.
இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார்.
மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.
ravi said…
ஆக ஸ்ரீரங்கத்திற்கு
விசேஷம் சயனக் கோலம்,
பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், பேயாழவார் மயிலாபூரிலும், பூதத்தாழவார் திருக்கடல்மல்லை என்று ஆழ்வார்கள்
எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும் சேர்ந்த இடம் ஸ்ரீரங்கம்.
ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலே பிறந்தாலும்
“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்று அரங்கனைத்தான் வாழ்த்தினார்கள்
ravi said…
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது , சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பி விட்டீர்” என்று அடியவர் திருமாலிருஞ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.
“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார் மலை அழகன்.
அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
“எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.
“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.
“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறார், பெருமாள்.
விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர்.
இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம்.
ravi said…
நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில்,
“தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்டிட
கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே”
என்று எல்லா திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள்
என்று பாசுரத்தில் கூறுகிறார்.

எத்தனை_மகிமை ரங்கநாதனுக்கு!!

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !
ravi said…
இன்று *மார்கழி (தநுர்) மாத திருவாதிரை (ஆருத்ரா) நக்ஷத்திரம்*

திருவாதிரை நட்சத்திரமே சமஸ்கிருதத்தில் ஆருத்ரா என்று கூறப்படுகிறது.

இது உஷ்ணம் மிகுந்த நட்சத்திரமாகும். அதோடு வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை (சுடுகாட்டு சாம்பலை உடலில் பூசியிருப்பதால் சிவபெருமானை சுடலைமாடன் என்றும் அழைப்பதுண்டு) திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர் கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார்.

ravi said…
இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அதில் ஒன்றான மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலாக கொண்டாடப்படுகிறது.

சிதம்பரத்தில் தம் திருநடனக் காட்சியை சிவபெருமான், பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளிய தினமே ஆருத்ரா தரிசன நாள் என்று கொண்டாடப்படுகிறது.

உத்தரகோசமங்கை கோயிலில் இந்த ஒரு நாள் மட்டுமே பச்சை மரகத (green emerald) நடராஜர் மீது பூசப்பட்டிருக்கும் சந்தனத்தை அகற்றி விட்டு மரகத சிலைக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

சிதம்பரம் கோவிலில் அதிகாலை வேளையில் (2 மணி முதல் 6 மணி வரை) ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்று, 10 மணிக்கு மேல் இராஜசபையில் நடராஜர் பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

'திருவாதிரையில் ஒரு வாய் களி' என்பது சொல் வழக்கு. திருவாதிரை தினத்தன்று, தில்லை நடராஜரை நினைத்து விரதம் இருந்து களி செய்து சிறிதேனும் உண்பது நன்மை உண்டாக்கும்.
====
*ஓம் நமச்சிவாய*
ravi said…
*திருவாதிரைக் களி செய்வது எப்படி?*
*திருவாதிரை களி வரலாறு*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

சேந்தன் என்னும் எழை விறகு வெட்டி ஒரு பெரிய சிவபக்தன். சேந்தனார் சில சிவ பக்தர்களுக்கு உணவளித்த பின்னரே உணவு உண்பவர். ஒரு நாள் மோசமான வானிலை காரணமாக அவரால் சரியான உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேகரிக்க முடியவில்லை. அதனால் கேழ்வரகு களி தயாரிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. சிவனடியாருக்கு உணவு தயாரித்ததில் மகிழ்ச்சி அடைந்தார்.

ravi said…
சிவபெருமான் அவனுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டார். தன் பக்தன் தன்னிடம் எவ்வளவு நேர்மையானவன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனால் சிவபக்தர் போல் வேடமணிந்து செந்தனாரின் குடிலுக்குச் சென்று அவருக்கு உணவாகக் கொடுத்ததை உண்டு மகிழ்ந்தார். மறுநாள் காலை பிரமாண்டமான சிதம்பரம் நடராஜர் கோவில் திறக்கப்பட்டது. கோயில் பணியாளர்கள், களி வளாகம் எங்கும் சிதறியதைக் கண்டனர். இதுவரை இந்த உணவை இறைவனுக்கு படைத்ததே இல்லையே எப்படி இங்கு வந்தது என்று குழம்பிப்போனார். மன்னருக்கு செய்தி போனது, அன்று மன்னர் கனவில், நடராஜ பெருமான் சேந்தனின் பக்தியையும், களியின் ருசியையும் தெரிவித்தார். இவ்வாறு செந்தனாரின் பக்தியைப் புரிந்துகொள்ள வழிவகுத்தன, அதன்பிறகு அவருக்கு அனைத்து மரியாதையும் வழங்கப்பட்டது. சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். இந்த சம்பவம் மார்கழி திருவாதிரையில் நடந்துள்ளது. அதனால்தான் இந்த புனித நாளில் திருவாதிரை களி ஒரு முக்கியமான பிரசாதமாக அமைகிறது.

மேலும் அறிய: திருவாதிரை விரதம் இருக்கும் முறை

,🕉️🕉️
ravi said…
*திருவாதிரை களி*

திருடியாவது திருவாதிரை களி தின்ன வேண்டும் என்று கூறுவார், திருவாதிரை களிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. ஆருத்ரா தரிசனம் அன்று திருவாதிரை களி இல்லாமல் பூஜை நடக்காது. அந்த அளவுக்கு களி முக்கியத்துவம் வாய்ந்தது. இப்போது திருவாதிரை களி நமது வீட்டில் எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசிரவை – 1 கப் (அரிசியை களைந்து உலர்த்தி மிக்ஸியில் பொடிக்கவும்)
பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – 3 / 4 கப்
தேங்காய் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சிறிதளவு
Thiruvathirai Kali 2021 | திருவாதிரை களி 2021
செய்முறை:

பாசி பருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
பின்பு அரிசியும் நன்கு வறுக்கவும்.
மிக்ஸியில் பருப்பு, ஆரிசியை ரவை போல் பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 3 டம்ளர் தண்ணீர் வைத்து வெல்லத்தை கரைய விடவும்.
நன்கு கரைந்ததும் வடிகட்டி, கொதிக்க விடவும்.
பின்பு, 2 ஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ரவைகளை போடவும்.
தீயை குறைத்து கட்டி சேராமல் நன்கு கிளறவும். தேவைப்பட்டால் சுடு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து, நடுநடுவே கிளறி விடவும்.
ரவை வெந்ததும் தேங்காய் துருவல், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்கவும்.
இப்போது சுவையான திருவாதிரை களி தயார்.
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
ravi said…
வசிப்பது எங்காகினும்

வாசிப்பது ஆண்டவன் பெயரென்றால்

காடானாலும்
மேடானாலும்
நீரானாலும்
தீயானாலும்
வீடானாலும்

ஞானமெனும்
ஞாயிறு
நம்முள் உதிக்குமே
ravi said…
இலக்குவனை
கொன்றதும்
இலக்கடைந்தேன்
எனறான்
இலங்கை வேந்தன்

கலக்கமடைந்த
விபீஷணன்

இலக்குவனை
கொன்றுவிட்டாய்
போரில்
வென்றுவிட்டாய்
என
சென்றுவிடாதே

கன்றுதனை
தொட்டுவிட்டாய்

தாயான இராமனின்
சினத்தை
தட்டிவிட்டாய்

விதியின் தொட்டிலை
ஆட்டிவிட்டாய்
என்றான்

இராவணனோ
இராமன்
எனும்
ரகசியம்
தெரியாமல்

தேரிலேறி புறப்பட்டான்
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இவர் பேர் பாபவிநாசம். தான் பண்ணின பாபத்தால்தான் அவன் முடமாக ஆனதா என்று மேலே கேட்டார். அடுத்த சரண ஆரம்பத்தில் பாபம் விநாசமாவதைச் சொல்லி ஒரு கேள்வி கேட்கிறார். அதிலே நிந்தை, கேலி எதுவுமில்லை. பரமதத்வத்தையே பரம பக்தியோடு கேள்வி மாதிரி ஆக்கி – கேள்வியே அதற்குப் பதிலும் ஆகிவிடும் ‘leading question’ஆக்கி - கேட்கிறார்.
ravi said…
பின்னிட்டு அந்தச் சரணத்தில் வருகிற இரண்டு கேள்விகளும் அதே மாதிரியானவைதான். உசந்த விஷயத்தை நல்ல காவ்ய பாஷையில் கேள்வியாகக் கேட்கிறார்.

முதல் கேள்வி:
பக்திசெய்யும் பெரியோர்கள் பாபநாசனமாகும்
பரமபதம் இது என்று தூக்கி நின்றததுவோ?

மஹாபக்திமான்களாக இருக்கப்பட்டவர்களுக்கும் பூர்வ கர்மாவால் ஏற்பட்ட பாபம் என்பது இருந்து கொண்டு அவர்களைக் கொஞ்சமாவது பழிவாங்கிக் கொண்டுதான் இருக்கும். முடிவாக ஸ்வாமிதான் பரம கருணையினாலே அந்தப் பாபத்தை நாசம் செய்து அவர்களுக்கு மோக்ஷாநுக்ரஹம் கொடுப்பார்.
ravi said…
நடராஜா நடனத்தாலேயே ஐந்தொழிலும் புரிவதாகச் சொன்னேனே, அதில் முடிவாக இந்த மாய ப்ரபஞ்ச ஸ்ருஷ்டியையே பக்தர்கள் விஷயத்தில் இல்லாததாகப் பண்ணி, அதிலே அங்கமான அவர்களுடைய பூர்வ பாபத்தையும் நாசமாக்கி, மாயைக்கு அப்பாற்பட்ட தம்முடைய பரமபதமான மோக்ஷத்தில் சேர்த்துக் கொள்ளும் ‘அநுக்ரஹம்’ என்ற ஐந்தாவது தொழிலைச் செய்வது அந்தத் தூக்கிய திருவடி, இடது திருவடிதான். நாட்யமாடுகிற அழகில் வளைந்து இருக்கும் அதைத்தான் ‘குஞ்சிதபாதம்’ என்று சொல்லி ரொம்பவும் ஸ்தோத்ரிப்பது. ‘குஞ்சிதம்’ என்றால் ‘வளைந்திருப்பது’.
அந்தத் திருவடியின் இந்த நிஜமான மஹிமையைத் தான் – நையாண்டியாக இட்டுக் கட்டி உண்டாக்கின சிறுமையில்லை; நிஜமான தத்வத்தைத்தான் – சொல்லி இங்கே கேட்கிறார்
ravi said…
பாபநாசம் பண்ணும் பரமபதம் இதுதான்; பிடிச்சுங்கோங்கோ இதை!” என்றுதான் ஸ்வாமி அந்தக் காலைத் தூக்கி எடுத்துக் காட்டுகிறார் என்று கேட்கிறார். “இப்படிக் காட்டுவதைத்தான் முடமானதாக ‘மிஸ்டேக்’ பண்ணிக் கொண்டேனா?” என்று கேட்காமலே கேட்கிறார்!
காவ்ய அழகிலே இதையும் மிஞ்சுவதாக இன்னொரு தத்வ ஸத்யத்தை அடுத்த கேள்வியாகப் போடுகிறார்.
ravi said…
உன்னுடைய வாம (இடது) பாகம் பூராவும் அம்பாளுடையதாகையால் இந்தத் தூக்கிய திருவடியும் அவளைச் சேர்ந்ததுதான். அவள் யார்? உன்னிடம் பரம ப்ரேமை கொண்ட சிவ-காமி! பட்ட கட்டை மாதிரி இருந்த உன்னைத் தன்னிடம் ப்ரேமிக்கும் படிப் பண்ணுவதாலும் ‘சிவகாமி’!
ravi said…
நீ கட்டையாட்டம் இருந்தாலும் அவளோ கொடி மாதிரி இருக்கிற சிவகாமவல்லி. ‘வல்லி’ என்றால் கொடி. பார்வைக்கு இப்படி லலிதமாக, லேசாக இருந்தாலும் அவளுடைய சக்தி பெரிசாக இருக்கிறது. மரம் மாதிரி உள்ள உன்னையே அசைத்து ப்ரேமையை உண்டாக்கி விடுகிறாள்!”
“உங்கள் இரண்டுபேர் ப்ரேமையும் ஸங்கமித்து, ஜீவலோகம் முழுவதிடமும் பரம கருணை என்பதாகக் கொடி மாதிரிப் படர்ந்து கொண்டே போகும்படி அவள்தான் பண்ணுகிறாள்.
ravi said…
இருந்தாலும் அவள் பார்வைக்குக் கொடியாகத்தான் ஒரே துவளலாகத் துவண்டு இருக்கிறாள். உன்னுடைய ரூபத்தில் இடது காலாக இருந்து கொண்டு அங்கே துவண்டு வளைந்திருப்பதோடு, பக்கத்திலே தனி மூர்த்தியாக நிற்கிற போது இடுப்பை வளைத்துக் கொண்டு, உடம்பையே துவள விட்டுக் கொண்டும் இருக்கிறாள்! அப்படிப்பட்டவளின் அந்த ம்ருதுவான பாதத்தை நாட்யரங்கத்தின் கெட்டித் தரையில் வைத்தால் நொந்து போகுமே என்றுதான் கீழே வைக்காமல் தூக்கிக் கொண்டிருக்கிறாயோ?”
நாட்யமாடுகிறவர் ஜதிகளை நன்றாக, அழுத்தமாகப் போட வேண்டும் என்பதால் அதன் அடித்தரையைக் கெட்டிப் பண்ணித்தான் வைத்திருப்பார்கள்… “அந்த கெட்டித் தரையில் பூங்கொடிப் பாதத்தை வைக்கவாவது?” என்று தயக்கம் கொண்டே தூக்கி எடுத்திருக்கிறாயா?
சக்தி சிவகாமவல்லி தன் பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்கத் தயங்கி நின்றததுவோ?
(நடராஜர் பாடல் விளக்கம் தொடரும்)
ravi said…
அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்!
ravi said…
அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்’ என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா’ என்றிருந்தது கணபதிக்கு.
ravi said…
இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!’ என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி’ பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
ravi said…
பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மகா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா’தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர்.
ravi said…
கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா’ என்றாராம்.
ravi said…
கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை’ எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்’ இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது’ என்று அருளினாராம்.
மகா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி.
ravi said…
ஒரு சந்தர்ப்பத்தில், பெரியவா சரிதத்தைக் 'கல்கி’யில் எழுதத் தொடங்கினார். இரண்டு வாரம்தான் வந்திருக்கும். பெரியவா கணபதியைக் கூப்பிட்டனுப்பி, 'போறும் நிறுத்திடு’ன்னு சொல்லிட்டார். 'அதுக்குப் பதிலா, மடத்திலே எனக்காக எத்தனையோ பேர் இரவும் பகலும் உழைக்கறவா இருக்கா. அவாளைப் பத்தி எழுது!’ன்னார். 'அவர்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதே’ என கணபதி தயங்கவும், 'தெரிஞ்சதை எழுது; தெரியாததை நான் சொல்றேன். 1907-ல் பைங்காநாடு கணபதி சாஸ்திரி எனக்கு வித்யா குருவா இருந்திருக்கார். அவரைப் பற்றி எழுது. பெரிய புராணம் மாதிரி, இதைத் திருத்தொண்டர் புராணம்னு எழுது’ என்று சொன்னாராம் பெரியவா. ஆனால், கடைசியில், மடத்தைச் சேர்ந்த ஏ.குப்புசாமி ஐயர் என்பவர்தான் அதை எழுதினார்.
ravi said…
தெய்வத்தின் குரலை’ நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்’ ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!’ என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார்.
ravi said…
ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி’ எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!’ என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்’ என்றும் அறிவுறுத்தினாராம்.
ravi said…
ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர’, ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்’, மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்’, பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி’, ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே’ ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்’ ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா.
ravi said…
ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது.
ravi said…
வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன்.
ravi said…
அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜெயஜெய சங்கர’ தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்’ என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு’ நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி.

Jaya Jaya Shankara hare hare Shankara
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷post 36 👣👣
ravi said…
Thingat pagavin manam naarum seeradi senni vaikka

engatku oru thavam eydhiyavaa,

en irandha vinnor-
thangatkum indhath thavam eydhumo?-

tharangak kadalul
veng kan pani anaimel thuyilgoorum vizhupporule! 35🙏🙏🙏
ravi said…
In this song , abihiraami bhattar praises the glory of the Lotus Feet of the Devi and wonders how She has consented to place those Divine Feet on his head . 💐💐💐

The iridescent moon , when it rests on the matted locks of Your Consort , attains a rare fragrance which mysteriously is present in your feet upon my head and taken possession of my thoughts , my mind and my very existence , does it not reflect your utter generosity ? 💐💐💐
ravi said…
Does it also not demonstrate some unknown good which I hv done in my previous birth ?

Even the Devas have not attained such a blessing . Maybe i share this bounty ( that of having my head blessed by the touch of Your Feet ) only with my father , lord shiva - for if His Head were not at your Feet , why would the glowing Chandra on His Forehead take on an exceptional scent - that which is present only in your divine feet ?

Your mercy is boundless , Mother you who controls the destinies of the holy Trinity .

You are also one and the same as He who sleeps on the coiled serpent upon the flowing milk ocean . 🙏🙏🙏🌸🌸🌸👍👍👍🌻
ravi said…
Does it also not demonstrate some unknown good which I hv done in my previous birth ?

Even the Devas have not attained such a blessing . Maybe i share this bounty ( that of having my head blessed by the touch of Your Feet ) only with my father , lord shiva - for if His Head were not at your Feet , why would the glowing Chandra on His Forehead take on an exceptional scent - that which is present only in your divine feet ?

Your mercy is boundless , Mother you who controls the destinies of the holy Trinity .

You are also one and the same as He who sleeps on the coiled serpent upon the flowing milk ocean . 🙏🙏🙏🌸🌸🌸👍👍👍🌻
ravi said…
*Benefit of Chanting*

For marriage to get Solemnized 💐💐💐
ravi said…
ஆருத்ரா தரிசனம்
நடராசர் வரலாறு அறிவோம்...

🙏**திருச்சிற்றம்பலம்**🙏

அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு

🙏**சிவமே தவம்**
**தவமே சிவம்**🙏
ravi said…
ராமேஸ்வரம் போகும் வழியில் மண்டபம் என்று பகுதி உண்டு. அந்தப் பகுதியில் "மரைக்காயர்" என்ற மீனவர், வறுமையின் பிடியில் நம்பிக்கையுடன் மங்களேஸ்வரரை தினமும் வழிபட்டு வந்தார். பாய்மரப்படகில் சென்று மீன் பிடித்துவந்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி இருந்தார்.

ravi said…
ஒரு சமயம் அவர் கடலில் மீன் பிடிக்கும்போது சூறாவளிக் காற்று அடித்து அவருடைய படகு நிலை குலைந்து எங்கேயோ அடித்து சென்று விட்டது. அப்படியே வெகுதூரம் போனபிறகு ஒரு பாசிபடிந்த பாறையின் மேல் மோதி நின்று விட்டது. பாறை அப்படியே சரிந்து படகிலே விழுந்து விட்டது.
ravi said…
ரெண்டு சின்ன பாறைகளும் ஒரு பெரிய பாறையுமாக இருந்துள்ளது. அதுவரை அடித்துக் கொண்டிருந்த புயலும் மழையும் சற்றேன்று நின்று விட்டது. மரைக்காயர் அதிர்ச்சியில் இருந்து மீண்டதும், மண்டபம் நோக்கித் திரும்பி வருவதற்கு பார்த்தால் அந்த இடத்தில் இருந்து திக்கும் திசையும் தெரியலை.

ravi said…
மங்களேஸ்வரரை நினைத்து படகை செலுத்தி மிகவும் கஷ்டப்பட்டுப் பலநாள் கடலில் திரிஞ்சலைந்து ஒருவழியாக மண்டபம் வந்து சேர்ந்தார். கடலுக்குப் போன இவர் திரும்பிவர வில்லை என்று பலநாட்கள் கவலையோடு காத்திருந்த குடும்பத்திற்கு அப்போது தான் நிம்மதி கிடைத்தது.
ravi said…
படகில் கொண்டு வந்த பாசிபடிந்த கற்களை என்ன என்று தெரியாமல் வீட்டுப் படிக்கல்லாக போட்டு வைத்தார் மரைக்காயர். அந்த கல் மீது வீட்டுக்குள் போக வர்ற ஆட்கள் நடந்து நடந்து, மேலே ஒட்டி இருந்த பாசி கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் பளபள வென்று மின்னியது.

ravi said…
மங்களேஸ்வரர் மரைக்காயரின் வறுமையான காலக் கட்டத்தில் இருந்து விடுபட அளித்த பரிசு என்பதை உணர்ந்து, மின்னும் பச்சைப் பாறையை அரசருக்கு அன்பளிப்பாகத் தந்தால் வறுமை நீங்கும் என்ற எண்ணத்தால் பாண்டிய மன்னரின் அரண்மனைக்கு சென்றார்.
ravi said…
நடந்த அனைத்தையும் விவரித்து, தன் வீட்டில் ஒரு பெரிய பச்சைக் கல் உள்ளது என்று சொன்னார். அரண்மனை ஆட்கள் பச்சைப் பாறையை வீட்டில் இருந்து எடுத்து வந்து அரசரிடம் காட்டினார்கள். கற்களைப் பற்றி விவரம் உள்ள ஒருவர் பச்சைப் பாறையை சோதித்து பார்த்தார்...

ravi said…
சோதித்தவர் ஆச்சரியத்துடன் "இது விலை மதிக்கமுடியாத அபூர்வ மரகதக்கல், உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது" என்று சொன்னார். உடனே மன்னரும் மரைக்காயருக்கு பச்சைப் பாறைக்கு உரிய பொற்காசுகளை அளித்து வழி அனுப்பினார்.
ravi said…
இவ்வளவு அருமையான கல்லில் ஒரு நடராஜர் சிலை செதுக்க வேண்டும் என்பது அரசரின் ஆசை. இந்த வேலைக்கு உகந்த சிற்பியைப் பல இடங்களில் தேடிக் கடைசியில் இலங்கை அரசன் முதலாம் கயவாகுவின் அரண்மனையில் சிற்பியாக இருக்கும் சிவபக்தர் இரத்தின சபாபதியைப் பற்றிய விவரம் கிடைத்தது.

ravi said…
அவரை அனுப்பி வைக்கும்படி பாண்டியன் ஓலை அனுப்பினார். சிற்பியும் வந்து சேர்ந்தார். அவ்வளவு பெரிய மரகத கல்லை பார்த்த உடன் மயங்கியே விழுந்துவிட்டார், "என்னால் மரகத நடராஜர் வடிக்க இயலாது மன்னா" என்று கூறிவிட்டு இலங்கைக்கு சென்றார்.

மன்னன் மன வருத்தத்துடன் திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரர் சன்னதி முன் நின்று பிரத்தனை செய்துக் கொண்டிருந்தார் ,
ravi said…
அப்போது...

"நான் மரகத நடராஜர் வடித்து தருகிறேன் மன்னா" என்ற குரல் வந்தது ,

குரல் வந்த திசை நோக்கி மன்னர் மற்றும் பிரஜைகள் அனைவரும் திரும்பியதும் ஆச்சரியத்துடன் ஒரு மாமனிதரை கண்டனர். அவர் வேறு யாரும் இல்லை...

"சித்தர் சண்முக வடிவேலர்" தான்

மன்னனின் கவலையும் நீங்கியது. மரகத நடராஜரை வடிக்கும் முழு பொறுப்பையும் சித்தர் சண்முக வடிவேலரிடம் ஒப்படைத்தார். அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
ravi said…
அந்த பெரிய மரகத பாறையில் அஞ்சரை அடி உயர நடராஜரை ஒன்னரை அடி உயர பீடத்துடன் "ராஜ கோலத்தில்" மிகவும் நுணுக்கமாக மரகத நடராஜர் திருக்கரங்களில் உள்ள நரம்பு தெரியும் அளவிற்கு (பால் அபிஷேகத்தின் போது காணலாம்) வடித்தார் சித்தர் சண்முக வடிவேலர்.

பின்னர் மன்னரை அழைத்து முதலில் மூர்த்தியே (மரகத நடராஜரை) நிறுவி பின்னர் ஆலயம் அமைக்கும் படி அறிவுறை கூறினார். இதனால் அன்னியர்கள் படையெடுப்புகளை தாண்டி, இன்று மரகத நடராஜர் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் திருநடனம் புரிகிறார்...
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏**திருச்சிற்றம்பலம்**

இல்லந்தோறும் திருமுறைகள் பாடப்படட்டும்....

உலகெங்கும் சிவசிந்தனை பரவட்டும்....,

ஆலயந்தோறும்
சிவமந்திரங்கள் ஒலிக்கட்டும்.....

அடியேன்
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை...
🙏🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவசமயமும் சைவநெறியும் தழைத்தோங்க சிவவழிபாடு பின்பற்றுவோம்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்....
🙌🙌🙌🙌🙌🙌
🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
இராவனனின் மூலபலப் படையை இராமபிரான் தான் ஒருவனாகவே நின்று ஒழித்த பிறகு, சுக்ரீவன் இராமனிடம் சென்று வணங்கி, "அரக்கர்களுடைய இவ்வளவு பெரிய படையை வென்றது எவ்வாறு?" என்று கேட்கிறான்.

ravi said…
அதற்கு இராமன், போர்க்களத்திற்குப் போய் பார், எப்படி என்பது புரியும் என்றான்.

உடனே சுக்ரீவன், விபீஷணன் முதலியவர்களுடன் களம் சென்று பார்க்க, அங்கு வீழ்ந்து கிடக்கும் சேனைகளின் பெருக்கைக் கண்டு அஞ்சுகின்றனர்.

'ஆயிரம் பருவம் கண்டாலும் இந்தக் களக்காட்சிக்கு ஓர் எல்லை கான்பது அரிது'

இந்த சமுத்திரம் போன்ற படையை இராமன் வென்றது எவ்வாறு என்பதைப் புரிந்து கொள்வதும் அரிது என்று அனைவரும் திரும்பி இராமனிடம் வந்து சேர்கின்றனர்.

இதற்கிடையே, இலங்கை அரண்மனையில் .....🤔🤔🤔
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 73*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு சிவானந்த லஹரியில 11ஆவது ஸ்லோகம்🙏

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो

नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।

यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते

तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥

வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ

நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।

யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே

ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
ravi said…
*ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி சம்போ⁴ தவ பதே³*

– எவனுடைய அந்தக்கரணமானது ஒரு க்ஷணம் கூட உன்னுடைய பாதாரவிந்ததுல இருந்து விலகாம அங்கேயே இருக்கோ, மனசு பகவான் கிட்ட இருந்துதுன்னா, உடம்பு எங்க இருந்தா ஏன்னா?

எவனுடைய மனது இடையறாது பகவானது பாதாரவிந்தத்துல இருக்கோ *ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ²* – அவனே பரம யோகி.

அவன்தான் சிறந்த யோகி.

அவன்தான் ஸந்தோஷத்துல இருக்கான்னு சொல்றார்.👏👏👏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 90.. 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
```38 சம்பவே நம: (Shambavey namaha)```

ஸ்வயம்பூச் *ச’ம்பு* -ராதித்ய:

புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
அவர்கள் இருவரும் அங்கு சென்றபோது உறங்காவில்லியின் மனைவி பொன்னாச்சியார் ஒருக்களித்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

சீடர்கள் இருவரும் அவளது ஒரு பக்கத்து காது, மூக்கு, கைகளில் இருந்த நகைகளை மெதுவாக உருவினார்கள்.

அப்போது பொன்னாச்சியார் விழித்துக் கொண்டாள்.

வந்திருப்பவர்கள் வைணவர்களுக்குரிய அடையாளங்களோடு இருப்பதைக் கண்டாள்.

“பாவம், திருமால் அடியார்கள்! இல்லாமை காரணமாகவே திருடுகிறார்கள் போலும்!” என்று நினைத்து
மறுபக்கத்தில் இருக்கும் நகைகளையும் திருடிக்கொள்ளட்டுமே என்று மறுபக்கம் திரும்ப முயன்றாள்.
ravi said…
அவள் விழித்துக்கொண்டாளோ என்று அஞ்சிய சீடர்கள் துள்ளிக் குதித்து ஓடி வந்துவிட்டனர்.

ராமானுஜருடன் இருந்த உறங்காவில்லி
அதற்குப்பின் வீடு திரும்பினார்.

நடந்த கதையைப் பொன்னாச்சியாரிடமிருந்து அறிந்த உறங்காவில்லி வருத்தமடைந்தார்.

“கட்டைபோல் அசையாமல் படுத்திருந்தாயானால், அவர்களே உன்னைப் புரட்டிப் போட்டுமறுபக்கம் உள்ள நகைகளையும்
எடுத்துக்கொண்டிருப்பார்களே!

திருமால் அடியார்களுக்குப் பாதி நகைகள் கிடைக்காதபடி செய்துவிட்டாயே!” என்று குறை கூறினார் ..💐💐💐
ravi said…
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
ஆருத்ரா தரிசனம் 2020: உண்மையான பக்திக்கு இறைவனே நம் வீட்டிற்கு வருவார் - திருவாதிரை களியின் வரலாறு

மதுரை: ஏழை பக்தனான சேந்தனாரின் உண்மையான பக்தியை உலகுக்கு வெளிக்காட்டவே, சிவபெருமான் தரிசனம் தந்த மார்கழி திருவாதிரை நாளே ஆருத்ரா தரிசனம் எனக் கொண்டாடப்படுகிறது. சேந்தனாரின் வீட்டில் சிவபெருமான் அடியாராக வந்து களி அமுதை உண்டார். அன்று மார்கழி திருவாதிரை நாள். அன்று முதல் அந்த களி அமுதானது திருவாதிரை களி எனப்படுகிறது. அதனால் தான் ஆருத்ரா தரிசன நாளன்று சிவபெருமானுக்கு களி அமுது படைத்து உண்கிறோம்.

ravi said…
பக்தி என்பது அடிமனதின் ஆழத்திலிருந்து தானாக வெளிப்படுவது. அதை யாரும் கட்டாயப்படுத்தி வெளிக்கொண்டு வரமுடியாது. அது போலவே எளிமையான பக்திக்கு மட்டும் தான் இறைவன் முதலிடம் கொடுப்பான். பகட்டாக, உடல் முழுவதும் திருநீரு பூசிக்கொண்டோ, திருமண் இட்டுக்கொண்டோ, சதா சர்வகாலமும் நாவில் இறைவனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருந்தாலோ இறைவனின் தரிசனம் கிடைக்காது.
ravi said…
அதற்கு மாறாக, ஏழ்மை நிலையில் இருந்தாலும், ஒரு வேளை உணவிற்கே வழியில்லாவிட்டாலும் கூட, அது பற்றிய சிந்தனையே இல்லாமல், உழைப்பதையே கண்ணாக கருதிக்கொண்டு, எந்நேரமும் மனதில் இறைவனையே நினைத்து வாழ்ந்து வருவோர்க்கு தான் முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கே தரிசனம் தந்து தன்னோடு ஆட்கொள்வார். அதை உணர்த்த உருவானதே ஆருத்ரா தரிசனமும் திருவாதிரை களியும்.

ravi said…
தானாகவே திறந்த சிறைக்கதவுகள் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த பட்டினத்தாரிடம் கணக்கு பிள்ளையாக வேலை பார்த்து வந்தவர் சேந்தனார். பட்டினத்தார் துறவறம் மேற்கொண்ட உடன், அவரிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் சூறைவிட்டார். இதைக் கேள்விப்பட்ட சோழ மன்னர், சேந்தனாரை சிறையிலடைத்தார். அதையறிந்த பட்டினத்தார் சேந்தனாரை சிறையிலிருந்து விடுவிக்க சிவபெருமானிடம் வேண்டினார். உடனே சிறைக்கதவுகள் திறந்து சேந்தனார் விடுதலை பெற்றார்.
ravi said…
சேந்தனாரை சோதித்த நடராஜர் சிறையிலிருந்து வெளியில் வந்த சேந்தனார், சிதம்பரத்திற்கு வந்து அங்கு விறகு வெட்டி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். விறகுகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தினமும் ஒரு சிவனடியாருக்காவது ஒரு வேளை உணவளித்த பின்பே, தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்படி இருக்கையில், சேந்தனாரின் பக்தியை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். ஒரு நாள் அளவுக்கதிகமாக மழை பெய்து விறகுகளை அனைத்தும் ஈரமாகியது.
ravi said…
சிவனடியாருக்கு காத்திருந்த சேந்தனார் விறகுகள் ஈரமானதால், அதை வாங்குவதற்கும் யாரும் முன்வரவில்லை. இதனால் அன்றைய உணவுக்கு அரிசி வாங்குவதற்கு கூட கையில் காசில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார். இதனால், வீட்டிலிருந்த கேள்வரகில் களி செய்து சிவனடியாருக்காக காத்திருக்க தொடங்கினார். நேரம் சென்றதே தவிர, இவர் வீட்டுக்கு சிவனடியார் யாரும் வருவதாக தெரியவில்லை. இதனால் மனம் வருந்திய சேந்தனாரின் உண்மையான எளிமையான பக்தியை உலகிற்கு தெரியப்படுத்த திருவுளம் கொண்டார் தில்லை நடராஜர்.
ravi said…
பார்சல் வாங்கிய நடராஜர் ஒரு சிவனடியார் வேடத்தில் நள்ளிரவு வேளையில் சேந்தானரின் வீட்டுக்கதவை தட்டினார் நடராஜ பெருமான். கதவை திறந்த சேந்தனார், வந்திருப்பது சிவனடியார் என்பதை அறிந்து அகமகிழ்ந்து, அவருக்கு தன் கையாலேயே களியை விருந்தாக படைத்தார். சிவனடியாரும் அந்த களியை மிக்க மகிழ்ச்சியோடு உண்டதோடு, எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்கு தருமாறு கேட்டு வாங்கிச் சென்றார்.
ravi said…
கண்டராதித்தரின் சிவ வழிபாடு இந்நிலையில், சோழ மன்னர் கண்டராதித்தர் தினசரி செய்யும் சிவபூஜையில் சிவபெருமானின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்பது வழக்கம். ஆனால், அன்றிரவு, சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ணச் சென்றதால் கண்டராதித்த சோழரின் சிவபூஜையில் நடராஜரின் திருப்பாதச் சலங்கை ஒலி கேட்கவில்லை. இதனால் மனம் நொந்த மன்னர், தன்னுடைய சிவ வழிபாட்டில் ஏதேனும் குறை இருக்குமோ என்று கலங்கியவாரு தூங்கச் சென்றார்.
ravi said…
கண்டராதித்தரின் கனவில் நடராஜர் கண்டராதித்த சோழ மன்னரின் கனவில் வந்த நடராஜ பெருமான், சிவஞானச் செல்வரே வருந்த வேண்டாம், இன்றிரவு யாம் சேந்தனாரது இல்லத்திற்கு களி உண்ணச் சென்றொம், அதனால் தான் உங்களுடைய சிவபூஜையில் சிலம்பு ஒலிக்கவில்லை. நாளைய தேர்த் திருவிழாவில் அந்த சேந்தனாரை நீ காண்பாயாக, என்று சொல்லிவிட்டு சென்றார். அதை நினைத்து அகமகிழ்ந்த சோழ மன்னர், ஆஹா... ஆஹா... என்ன அற்புதம், சேந்தனாரின் அன்பே துய அன்பு என்று எண்ணியவாறே அயர்ந்து தூங்கிவிட்டார்.
ravi said…
கருவரையில களிச்சிதறல்கள் மறுநாள் காலையில் வழக்கம்போல், தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் கருவறையைத் திறந்தனர். அங்கு நடராஜப் பெருமானை சுற்றிலும் களிச் சிதறல்கள் இருந்தன. இந்த செய்தியை உடனடியாக அரசருக்கு தெரியப்படுத்தினர். அரசரும் முதல் நாளிரவு தான் கண்ட கனவை எண்ணி மகிழ்ந்தார். கனவில் நடராஜப் பெருமான் தான் சேந்தனாரின் வீட்டுக்கு களி உண்ண சென்றிருந்தை தெரிவித்திருந்தார்.
ravi said…
நகராமல் அடம்பிடித்த தேர் அதன்படியே, அரசரும் சேந்தனாரை கண்டுபிடிக்குமாரு அமைச்சருக்கு கட்டளையிட்டார். ஆனால், சேந்தனாரோ தில்லையில் நடைபெற்ற நடராஜப் பெருமானின் தேர்த் திருவிழாவிற்கு சென்றுவிட்டார். எம்பெருமான் நடராஜப் பெருமானை தேரில் அமர்த்திய உடன் அரசர் உள்பட அனைவரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆனால், மழையின் காரணமாக சேற்றில் தேர் சக்கரம் அழுந்தியதால், தேர் நகராமல் அடம் பிடித்தது.

ravi said…
அசைந்தோடிய தேர் அந்த சமயத்தில் அசரீரியாக ஒரு குரல் ஒலித்தது. உடனே சேந்தனாரோ, ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜரை துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிய சேந்தானர் இறைவன் அருளால், ‘மன்னுகதில்லை வளர்க் நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல‘ என்று தொடங்கி பல்லாண்டு கூறுதுமே என்று முடித்து 13 பாடல்களை இறைவனை நினைத்து பாடினார். உடனே, தேர் அசைந்தோடி தானாகவே சுற்றி வந்து நிலை பெற்று நின்றது.
ravi said…
திருவாதிரைக்களி இதைப் பார்த்த அரசரும், தில்லை வாழ் அந்தணர்களும் சேந்தனாரின் கால்களில் விழுந்து வணங்கினர். அரசரும் தன்னுடைய கனவில் இறைவன் வந்ததை சேந்தனாருக்கு தெரிவித்தார். சேந்தனார் வீட்டுக்கு நடராஜப் பெருமான் களி உண்ணச் சென்ற அந்த நாள் சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை நாள் என்றும், இன்றைக்கும் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப்படுவதால் திருவாதிரைக்களி சொல்லப்படுகிறது.
ravi said…
*படிங்க ரொம்ப பிடிக்கும்!...*

*அந்த வீட்டுப் பெண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....*

*
ravi said…
*ஒருநாள் அவரது கணவர், .... "நான் நண்பர்களோடு சேர்ந்து பியர் அருந்த போகிறேன்" .... என்று அந்த பெண்ணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....*

ravi said…
*மகன் தனது தாயாரிடம் தயங்கியவாறு, "அம்மா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த பெண்ணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....*

*.💓.
ravi said…
மகள் ஓடி வந்து, "அம்மா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு தாய், "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....*

*
ravi said…
குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்....*

*ஒருநாள் அந்த பெண்மணியே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:- ....*
👌🏾 ⬇️ 👌🏽
*
ravi said…
"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது..... அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு.... என்னுடைய கோபம், என்னுடைய பதற்றம், என்னுடைய பயம், என்னுடைய மன அழுத்தம், என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை.... அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.....*

*
ravi said…
என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும்.... உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன்....* *உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.....*

*
ravi said…
ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை..... உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும்.....* *உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். ஆகவே தான் நான் அமைதியாகி விட்டேன்."...*

*
ravi said…
குடும்பமே வாயடைத்துப் போனது!!!.....*

*அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்....*
*💓... இயற்கையின் நியதி..

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை