Posts

Showing posts from June, 2021

அபிராமி அந்தாதி - பாடல் 9 அம்மே வந்து என் முன் நிற்கவே !!

Image
                                   பச்சைப்புடவைக்காரி -450 அபிராமி அந்தாதி  பாடல் 9 அம்மே வந்து என் முன் நிற்கவே (அபிராமி அந்தாதி பாடல் 9) கருத்தன,எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும் முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன. வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன. பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன. பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும் ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும் செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும் முருத்தன மூரலும் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - த

அபிராமி அந்தாதி - பாடல் 8 சுந்தரி எந்தை துணைவி !!

Image
                                               பச்சைப்புடவைக்காரி -449 அபிராமி அந்தாதி - பதிவு 14 பாடல் 8 சுந்தரி எந்தை துணைவி  சுந்தரி எந்தை துணைவி  என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி  சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி  நீலி அழியாத கன்னிகை  ஆரணத்தோன்கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே சுந்தரி - அழகில் சிறந்தவளே எந்தை துணைவி -  என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய். சிந்துர வண்ணத்தினாள் -  சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே மகிடன் தலைமேல் அந்தரி -   அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே! நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே அழியாத கன்னிகை -  இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் -  வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே மலர்த்தாள் என் கரு

அபிராமி அந்தாதி .. பாடல் 7 ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி

Image
                                            பச்சைப்புடவைக்காரி -448 அபிராமி அந்தாதி  பாடல் 7 ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி (பாடல் 7) ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி -  தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது. தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் -  அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய். கமலாலயனும் -  தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் மதியுறு வேணி மகிழ்நனும் -  நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும் மாலும் - திருமாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் -  என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே சிந்துரானன சுந்தரியே -  சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியி

அபிராமி அந்தாதி - பாடல் 6 -சென்னியது உன் திருவடித்தாமரை!

Image
                                               பச்சைப்புடவைக்காரி -447 அபிராமி அந்தாதி  பாடல் 6 சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6) சென்னியது உன்  திருவடித்தாமரை  சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம்  சிந்துர வண்ணப் பெண்ணே! முன்னிய நின் அடியாருடன் கூடி  முறை முறையே பன்னியது  உந்தன் பரமாகமப் பத்ததியே! சென்னியது உன் திருவடித்தாமரை   - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள். சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம்  - என்றும்  என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம். சிந்துர வண்ணப் பெண்ணே!  - செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே! முன்னிய நின் அடியாருடன் கூடி  - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன். முறை முறையே பன்னியது  -  தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது உந்தன் பரமாகமப் பத்ததியே  - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன்.  உன் திருமந்திரமே எப்போ

அபிராமி அந்தாதி - பாடல் 5 (2) - வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை !!

Image
                                             பச்சைப்புடவைக்காரி -446 அபிராமி அந்தாதி  பாடல் 5 (2) 1. பொருந்திய முப்புரை அம்பாள் திரிபுர சுந்தரி ... *திரிபுரை* என்ற திருநாமம் அவளுக்கு உண்டு .  புரை என்றால் மூத்தவள் என்று ஒரு அர்த்தம் உண்டு . மும் மூர்த்திகளுக்கும்  மூத்தவள் ...  தன் 13வது பாடலில்  *கறைக் கண்டனுக்கு* *மூத்தவளே!* என்று பாடுகிறார் ..  திரிபுரங்களுக்கும் தலைவி அவள் .  திரிபுரை என்பதை முப்புரை என்று மாற்றி சொல்கிறார் பட்டர் இங்கே மூவகையான புரங்களில்  இணைந்து பொருந்தி இருப்பவள் அம்பாள் ..  நான் ஜாடி அதற்கு நீ மூடியாய் பொருந்த வேண்டும் ...  பொருத்தம் மிகவும் அவசியம் ... அம்பாள் நம் சிந்தையில் பொருந்தி விட்டால் பின் ஏது வருத்தம் . ??👌👌👌 செப்புரை செய்யும் புணர்முலையால்*    வருந்திய வஞ்சி இங்கே பட்டர் அம்பாளின் அங்கங்களை வர்ணிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது ஆதி சங்கரரும் அம்பாளை வர்ணித்துள்ளார் ஆனால் அவை உண்மையில் வர்ணனை அல்ல .. பின்னால் மறைந்திருக்கும் அதி உண்மைகள் ஞானம் ...  பட்டர் செப்பு பாத்திரத்தை கவுத்து வைத்தார்போல் இருக்கிறதாம் அவளுடைய நகில்கள் ..பெருத்த தனங்களினால் அவள்