அபிராமி அந்தாதி - பாடல் 5 (2) - வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை !!

                                      பச்சைப்புடவைக்காரி -446

அபிராமி அந்தாதி 

பாடல் 5 (2)


1. பொருந்திய முப்புரை

அம்பாள் திரிபுர சுந்தரி ... *திரிபுரை* என்ற திருநாமம் அவளுக்கு உண்டு . 

புரை என்றால் மூத்தவள் என்று ஒரு அர்த்தம் உண்டு .

மும் மூர்த்திகளுக்கும்  மூத்தவள் ... 

தன் 13வது பாடலில் 

*கறைக் கண்டனுக்கு*

*மூத்தவளே!* என்று பாடுகிறார் .. 

திரிபுரங்களுக்கும் தலைவி அவள் . 

திரிபுரை என்பதை முப்புரை என்று மாற்றி சொல்கிறார் பட்டர் இங்கே மூவகையான புரங்களில்  இணைந்து பொருந்தி இருப்பவள் அம்பாள் .. 

நான் ஜாடி அதற்கு நீ மூடியாய் பொருந்த வேண்டும் ... 

பொருத்தம் மிகவும் அவசியம் ... அம்பாள் நம் சிந்தையில் பொருந்தி விட்டால் பின் ஏது வருத்தம் . ??👌👌👌



செப்புரை செய்யும் புணர்முலையால்* 

 வருந்திய வஞ்சி

இங்கே பட்டர் அம்பாளின் அங்கங்களை வர்ணிப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது ஆதி சங்கரரும் அம்பாளை வர்ணித்துள்ளார் ஆனால் அவை உண்மையில் வர்ணனை அல்ல .. பின்னால் மறைந்திருக்கும் அதி உண்மைகள் ஞானம் ... 

பட்டர் செப்பு பாத்திரத்தை கவுத்து வைத்தார்போல் இருக்கிறதாம் அவளுடைய நகில்கள் ..பெருத்த தனங்களினால் அவள் இடையும் அதை தாங்காமல் துடிக்கிறதாம் ... 

அம்பாளின் நகில்களில் ஒன்று பர ஞானம் இன்னொன்று அபர ஞானம் ... அந்த ஞானப்பாலை அவளிடம் கேட்போர் இல்லை ... 

எப்பவோ சம்பந்தர் கேட்டதால் ஓடிப்போய் வாயில் பால்  வழிய வழிய ஞானப்பாலுடன் சிவானந்தத்தையும் கலந்து கொடுத்தவள் அம்பாள் ... 

நாம் அவளிடம் கார் , பொன் , பங்களா இப்படித்தான் வேண்டுகிறோம் .. 

ஞானம் கேட்பதில்லை .. 

ஆதி சங்கரர் அம்மா எனக்கு ஞான வைராக்கியத்தை பிக்ஷை போடு என்று வேண்டுகிறார்  . 

 *அன்னபூர்ணே* *ஸதாபூர்ணே* 

 *சங்கர ப்ராணவல்லபே* 

 *ஞானவைராக்கிய* *ஸித்யர்த்தம்* 

 *பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!*

அவளிடம் ஞானம் கேட்போர் யாருமே இல்லாததால் தனங்கள் பெரிதாகி பால் கட்டி தட்டிக்கொண்டது ... 

அதனால் வருந்தினாளாம் அந்த வஞ்சிக்கொடி👍👍👍



3 மருங்குல் மனோன்மணி

மனோன்மணி ... நல்ல பாம்பு பல நாட்கள் விஷத்தை கக்காமல் மாணிக்கத்தை உமிழ்வதைப்போல , மனதில் சேர்த்து அதை நீக்காமல் வளர்த்துக்கொண்டிருக்கிறோம் விஷத்தை விட தீய எண்ணங்களை ... 

அவளுடைய  திருவடிகளை  பற்றி விட்டால் விலை மதிக்க முடியாத மனோன்மணியாக அந்த எண்ணங்களை மாற்றி விடுவாள் . 

மனோன்மணி என்ற திருநாமம் அவளுக்கு சாலப்பொருந்தும் . 👏👏👏


4. *வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை* 👍👍👍

ஈசன் சொல்கிறார் சுந்தரரிடம் ... சுத்தரா அவ்விடத்தை இவ்விடம் கொண்டு வா என்றே ... நெல்லிக்கணியாய் அதை உருட்டி தன் வாயில் போட்டுக்கொள்கிறார் .. தேவர்களுக்கு இழந்த மூச்சு திரும்பி வருகிறது .. 

விஷம் உள்ளே சென்றால் உள்ளே இருக்கும் அண்ட சராசரங்களும் அழிந்து விடும் வெளியில் உமிழ்ந்தால் தேவர்கள் உட்பட எல்லோரும் அழிந்து விடுவார்கள் ... அம்பாளுக்கு ஒரே கவலை ...தொண்டையில் நின்ற நஞ்சை தன் விரல்களால் தடவி விடுகிறாள் .. உள்ளே இருந்த விஷம் அமுதமாகி விட்டது .... 

இதையே 28 வது ஸ்லோகத்தில் சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் இப்படி வர்ணிக்கிறார் 

28.     தேவியின் தாடங்க மஹிமை

விஷ பயம், அகாலம்ருத்யு நிவாரணம்

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்

விபத்யந்தே விஶ்வே விதி ஶதமகாத்யா திவிஷத:

கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: 

காலகலனா

ந ஶம்போஸ் தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா               28



பரமசிவனே, எந்தப் பராசக்தி உனது பாதி சரீரம் உடையவள் ஆகின்றாளோ 

அவள் உலகனைத்திற்கும் மருந்து. 

ருத்திரனாகிய உனக்கும் அவள்தான் மருந்து. 

விஷத்தை உண்டும் அவள் அருளால்தான் எங்களுக்காகப் பிழைத்து இருக்கிறாய்.          — ருத்ரம்

👏👏👏


6. *அந்தரி பாதம் சென்னியதே*

அந்தரி என்று மூன்று பாடல்களில் வரும் .. மூன்று அர்த்தங்கள் உண்டு 

 *அந்தரி 1* 

நம் மன அந்தரங்களை ஆள்பவள் ... மனசாட்சி என்றும் சொல்லலாம் .. இது தவறு இதை செய்யாதே இது பாவம் என்று உள்ளுக்குள் இருந்து சொல்லி நம்மை வழி நடுத்துபவள் 

 *அந்தரி 2 :

மகிடனுக்கு அந்தமாக வந்தவள் 

அந்தரி 3

விஷ்ணு துர்க்கை .. அந்தரத்தில் நின்று கம்சனை பார்த்து சிரித்தவள் ... என் பாதம் தெரிந்தோ தெரியாமலோ பற்றி விட்டாய் ... அதனால் நான் உன்னை அழிக்க வில்லை அந்த வேலை என் அண்ணன் கண்ணன் பார்த்துக்கொள்வான் என்று முழங்கியவள் 

 பாதம் சென்னியதே

முடிவாக அவள் பாதங்கள் என்றும் எப்பொழுதும் என் தலையில் பொருந்தட்டும் ... என்று பாடலை முடிக்கிறார் . 

👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣


பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! 

*வார்சடையோன்*

*அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை!* 

அம்புயமேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.



அபிராமி அந்தாதியில் இது 5வது பாடல் ... இதை படித்துக்கொண்டிருந்தேன் ...

ஆலகால விஷம் பெருகி பரவத் தொடங்கியது .. எல்லோரும் பயந்தனர் ... 

பரமேஸ்வரன் சிரித்தான் ... விஷத்தை ஒரு சிறிய கவளமாகி விழுங்கினான் ... 

தேவர்கள் காப்பாற்று என்று சொல்வதற்கு முன்பே ... 

கருணை கடல் அல்லவா அவன் ... 

அருகில் இருந்த உமை தன் பொன்னான கையினால் ஈசனின்  தொண்டையில் மெலிதாக விரல் பதிய தடவினாள் .. 

உண்ட விஷம் நின்றது ... அது மட்டுமா அது அமிர்தமாகவும்  மாறியும் விட்டது... 

இதைப்படிக்கும் போது நான் தேவர்களின் அறியாமையை எண்ணி சிரித்து விட்டேன் ... 

இப்படி மேருவையும் வாசுகியையும் தொந்தரவு பண்ணாமல் கொஞ்சம் விஷத்தை அம்பாளிடம் எடுத்து சென்றிருந்தால் அவள் அதை அமுதமாக்கி இருப்பாளே ... 

இப்படி 1000 வருடங்கள் போராடி இருக்கவே வேண்டாமே .... ... 

அபிராமி பட்டர் பாடல்கள்  எவ்வளவு அருளும் பொருளும் பதிந்தது என்று பார்த்தீர்களா ?

வார்சடையோன் அருந்திய நஞ்சமுதாக்கிய அம்பிகை

 👍👍👍👍👌👌👌💐💐💐🎂😊😊

Comments

ravi said…
நிர்ஜலா ஏகாதஶி 21-06-21

ज्येष्ठे मासि नृपश्रेष्ठ या शुक्लैकादशी शुभा ।
निर्जलं समुपोष्यात्र जलकुम्भान्सशर्करान् ।।
प्रदाय विप्रमुच्येभ्यः तापत्रय विवर्जितः।
विष्णुलोकमवाप्येह मोदते विष्णुसंनिधौ ।।

ஜ்யேஷ்டே மாஸி ந்ருபஶ்ரேஷ்ட யா ஶுக்லைகாதஶீ ஶுபா ।
நிர்ஜலம் ஸமுபோஷ்யாத்ர ஜலகும்பாந் ஸஶர்கராந் ।।
ப்ரதாய விப்ரமுச்யேப்ய: தாபத்ரய விவர்ஜித :।
விஷ்ணுலோகமவாப்யேஹ மோததே விஷ்ணு ஸந்நிதௌ ।।

ஸ்ரீவேதவ்யாஸரர் பீமஸேனனிடம் உனக்கு ஒரு ஏகாதஶி வ்ரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன் கேள்.
ஆனி மாஸ ஶுக்லபக்ஷத்தில் வரும் ஏகாதஶியை நிர்ஜலா ஏகாதஶி என கூறுவர்.

வ்யாஸர் பீமனிடம்
உன்னால் ஆண்டு முழுவதும் வரும் ஏகாதஶி வ்ரதங்களை அனுஷ்டிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை ஜேஷ்ட (ஆனி) ஶுக்ல ஏகாதஶியான நிர்ஜலா ஏகாதஶி அன்றாவது ஜலம் கூட அருந்தாமல் உபவாஸம் இரு அது ஆண்டு முழுவதும் அனைத்து ஏகாதஶிகளில் வ்ரதம் இருந்த பலனை தரும் என்று கூறி முடித்தார் அது போல நிர்ஜலா ஏகாதஶியை அனுஷ்டித்தார்
ஆகவே இன்று நாமும் ஜலம் கூட உட்கொள்ளாமல் இந்த ஏகாதஶி வ்ரதத்தை அனுஷ்டித்து இஹபர ஸௌக்யங்களை பெற்ற பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்

*ஸ்ம்ருதி கௌஸ்துபம்*
ravi said…
திருக்கடையூர் அபிராமி *69*

*பாடல் 67* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
இன்றைய பாடல் கொஞ்சம் கடுமையான பாடல் ...

அபிராமியை வணங்குபவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் ?

அவர்களின் சின்னங்கள் என்ன என்ன வென்று இது வரை சொல்லிக்கொண்டு வந்தவர்

இந்த பாடலில் எதிர்மறையான பாடல் ஒன்றை வைக்கிறார் ..

அம்பிகையை அந்த மின்னல் கொடியாளை ஒரு மாத்திரை ( வினாடி) கூட நினைக்காதவர்கள் எதையெல்லாம் வாழ்க்கையில் இழப்பார்கள் என்பதை கோபத்துடன் சொல்கிறார் 😡😡😡😡😡
ravi said…
பாடலுக்குள் போகும் முன் கொஞ்சம் துணைக்கு பட்டினத்தாரையும் , அருணகிரியையும் அழைப்போம் ...
ravi said…
*பட்டினத்தார்*

ஆற்றொடு தும்பை அணிந்தாடும் அம்பல வாணர் தம்மைப்
போற்றா தவர்க்கு அடையாளம் உண்டே

இந்தப் பூதலத்தில்
சோற்றாவி அற்றுச் சுகமற்றுச் சுற்றத் துணியும் அற்றே

ஏற்றாலும் பிச்சை கிடையாமல் ஏக்கற் றிருப்பர்களே.🔥🔥
ravi said…
*அருணகிரி*

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க ...... அறியாத

சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க ...... முறுவேனோ

கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற ...... குமரோனே

கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலே செச்சை
கமழுமண மார்க டப்ப ...... மணிவோனே

தருணமிதை யாமி குத்த கனமதுறு நீள்ச வுக்ய
சகலசெல்வ யோக மிக்க ...... பெருவாழ்வு

தகைமைசிவ ஞான முத்தி பரகதியு நீகொ டுத்து
தவிபுரிய வேணு நெய்த்த ...... வடிவேலா

அருணதள பாத பத்ம மதுநிதமு மேது திக்க
அரியதமிழ் தான ளித்த ...... மயில்வீரா

அதிசயம நேக முற்ற பழநிமலை மீது தித்த
அழகதிரு வேர கத்தின் ...... முருகோனே
ravi said…
*சரண கமலாலயத்தை ...* உனது தாமரை போன்ற திருவடிகளை

*அரை நிமிஷ நேர மட்டில் .* .. அரை நிமிஷ நேர அளவுக்காவது

*தவமுறை தியானம் வைக்க அறியாத ...* தவ நிலையில் தியானத்தில்
வைத்திட அறியாத

*ஜட கசட மூட மட்டி ...*

பொய்யும் குற்றமும் கொண்ட மூடனான
மட்டி யான்

*பவ வினையிலே சனித்த ...* பிறப்பதே தொழிலாகக் கொண்டு
பிறந்துள்ள

*தமியன்* ... தன்னம் தனியனான யான்

*மிடியால் மயக்கம் உறுவேனோ? ...*

வறுமையால் மயக்கத்தை
அடையலாமோ?

*கருணை புரியாதிருப்ப தென குறை* ... கருணை காட்டாமல்
இருப்பது என்ன குறையைக் கண்டு?

*இவேளை செப்பு ...* இப்பொழுதே சொல்லி அருளவேண்டும்

*கயிலைமலை நாதர்பெற்ற குமரோனே ...* கயிலாயமலை நாதராம்
சிவன் பெற்ற குமரனே

*கடக புயமீதி* ... வீரக் கடகம் அணிந்த புஜத்தின் மீது
ravi said…
*ரத்ன மணியணி பொன்மாலை செச்சை ...*

ரத்னாபரணம்,
தங்கமாலை, வெட்சிப் பூமாலை

*கமழு மணமார் கடப்பம் அணிவோனே ...*

வாசனை நிறைந்த
கடம்பமாலை இவைகளை அணிந்தவனே

*தருணம் இதையா ...* தக்க சமயம் இதுதான் ஐயா

*மிகுத்த கனமதுறு நீள்சவுக்ய ...*

மிக்க பெருமையைத் தரும்
நீடித்த சுகம்

*சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு ...*

எல்லாவித செல்வம்,
அதிர்ஷ்டம், நிறைந்த பெருவாழ்வு

*தகைமை சிவ ஞான முத்தி பரகதியு நீகொடுத்(து) ...*

நன்மதிப்பு, சிவஞானம், முக்தியாம் மேலான கதி இவையாவும் நீ
கொடுத்(து)

*(உ)தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா ...*

உதவி புரிய
வேண்டுகின்றேன், பளபளப்பும் கூர்மையும் உடைய வேலனே

*அருணதள பாத பத்மம் அதுநிதமுமே துதிக்க ...*

சிவந்த
தாமரையிதழ் போன்ற உன் பாதமதனை தினந்தோறும் நான் துதிப்பதற்கு

*அரிய தமிழ் தானளித்த மயில்வீரா ...*

அருமையான் தமிழ்
ஞானத்தை தந்த மயில்வீரனே

*அதிசயம் அனேகம் உற்ற பழனிமலை மீதுதித்த* ...

அதிசயக்
கோலங்கள் பல நிறைந்த பழனிமலை மீது விளங்கித் தோன்றும்

*அழக, திருவேரகத்தின் முருகோனே. ...*

அழகனே திருவேரகத்து
(சுவாமி மலையின்) முருகப்பெருமானே.🦚🦚🦚
ravi said…
என் பெயர் அருணகிரி அல்ல உன்னை வணங்காமல் இருக்கும் நான் மடையர்களுக்கெல்லாம் அடி மடையன் ... சொல்வது அருணகிரி
ravi said…
சரி இன்றைய பாடலை பார்ப்போம் .. கொஞ்சம் மனதில் தையிரியத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள் ....
ravi said…
*மின்னல் போலும் உன் திருவுருவம் (பாடல் 67)*🌹🌹🌹🌸🌸🌸
ravi said…
தோத்திரம் செய்து தொழுது
மின் போலும் நின் தோற்றம்

ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்

வண்மை
குலம்
கோத்திரம்
கல்வி
குணம்

குன்றி

நாளும் குடில்கள் தோறும்

பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே😡🔥😰
ravi said…
*தோத்திரம் செய்து தொழுது -*

உன் துதிகளைப் பாடி உன்னைத் தொழுது

பசுவை அதற்கு வாய் இருந்தும் வாயில்லா பிராணி என்று சொல்கிறோம்

ஏன் என்றால் அதனால் தோத்திரம் சொல்ல இயலாது அம்பாளை புகழ்ந்து பாடத் தெரியாது ...

நமக்கு வாய் இருந்தும் அவள் புகழைப் பாடாமலும் சொல்லாமலும் எண்ணாமலும் இருந்தால் நாமும் பசுவைப்போல ஒரு வாயில்லா பிராணி தானே ? 🐄🐄🐄

*மின் போலும் நின் தோற்றம் -*

மின்னலைப் போன்ற உன் திருவுருவத்தை

*ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் -*

ஒரு மாத்திரைப் பொழுதும் மனத்தில் வைத்து தியானிக்காதவர்கள்....
ravi said…
*வண்மை*

இருக்கும் வள்ளல் / கொடை த் தன்மை குறைந்து போகும் ... கர்ணன் பெரிய வீரன் இருந்தாலும் எல்லா போரிலும் அடி அதிகமாக வாங்கிக்கொண்டுதான் வந்தான் ..

அவன் தன் உள்ளத்தில் தெய்வத்தின் அருளை இறக்கிக் கொள்ளவே இல்லை ...

சில அடர்ந்த காடுகளில் குளிர் காய நெருப்பை ஏற்றுவார்கள் ...

அது காடே பத்தி எரிவது போல் தூரத்தில் பார்க்கும் போது தெரியும் ..

பனி சற்று விலகும் போது தீயும் சிறியதாய் தெரியும் ..

அதுபோல் அம்பாளின் அருள் எனும் பனி உள்ளத்தில் இறங்க இறங்க அவள் கருணை எனும் தீ காட்டு த் தீயைப்போல் சுடர் விட்டு எரியும்...

🔥🔥🔥
ravi said…
*குலம்*

அவர்கள் சேர்ந்த குலத்தின் பெருமை குன்றும் ..

*கோத்திரம்*

பிறந்த கோத்திரத்தின் அருமை மங்கிப்போகும்

*கல்வி* படித்த கல்வியினால் ஏற்றம் கிடைக்காது

*குணம்*

இவன் நேற்றுவரை நல்லவனாக இருந்தானே இப்படியா கெட்ட குணம் கொண்டவனாக மாறுவான் என்று எல்லோரும் கேட்கும் படி ஆகி விடுவான்

*குன்றி* - அவர்களின் வள்ளல் தன்மை, பிறந்த குலம் கோத்திரம், பெற்ற கல்வி, வளர்த்த நற்குணங்கள் எல்லாம் குறைவு பெற்று

*நாளும்* - தினந்தோறும்

*குடில்கள் தோறும்* -

வீடுகள் தோறும்

*பாத்திரம் கொண்டு* - பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொண்டு

*பலிக்கு உழலா நிற்பர்* - பிச்சைக்குத் திரிவார்கள்... அவர்கள் பிச்சைக்கு செல்லும் வீட்டிலும் எச்சை கையினால் காக்காவை விரட்டாதவர்களாய் இருப்பார்கள்

*பார் எங்குமே* - உலகமெங்குமே
ravi said…
வள்ளுவர் இப்படி சொல்கிறார் ... ஒருவன் தானம் செய்வதைக்கண்டு பொறாமை கொள்பவன் எந்த நிலைமைக்கு ஆளாவான் என்பதை

*கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்* -

ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வானது சுற்றம்;

*உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும் -*

உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இன்றிக் கெடும்.

(கொடுப்பதன்கண் அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல்.) 🌸🌸🌸
Savitha said…
அற்புதமான. பதிவு
எடுத்துகாட்டு பாடல்கள் அருமை
அபிராமி தாயே போற்றி
🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷
ravi said…
வேண்டும் வேண்டும் குருவின் அருள்

வெண்பனித் தென்றல் உள்ள வரையில்

தோன்றும் இளமை தொடர்ந்திட வேண்டும்

தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்

இரண்டு இதழ்கள் உன் புகழ் பேச வேண்டும்

நாளை என்பதே உன் அருள் கொண்டு வர வேண்டும்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்

நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் தமிழில் நான் உனை பாட வேண்டும்

உன் அருள் மழையில் நான் நனைந்திட வேண்டும்

உலகம் உனை நினைத்திட வேண்டும்

உங்கள் காலடி தொடர்ந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்

ஒவ்வொரு பிறப்பிலும் உன்னுடன் நான் இணைந்திட வேண்டும்

🌸🌸🌸🥇🥇🥇
ravi said…
மீனாட்சி தரும் பட்டுப்புடவை👌👌👌💐💐💐
ravi said…
மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களுள் ஒன்று செல்லத்தம்மன் திருக்கோயில். இது கண்ணகி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்ட இந்திரன் பல புண்ணிய நதிகள், தலங்கள் சென்றும் தன் பாவத்தை தீர்க்க முடியாமல் அலைந்து வந்தான். அந்த சமளயத்தில் ஒரு நாள் கடம்ப வனமாக இருந்த மதுரைக்கு வந்தான்.
ravi said…

மதுரையில் மிகப் பழமை வாய்ந்த கோயில்களுள் ஒன்று செல்லத்தம்மன் திருக்கோயில். இது கண்ணகி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்ட இந்திரன் பல புண்ணிய நதிகள், தலங்கள் சென்றும் தன் பாவத்தை தீர்க்க முடியாமல் அலைந்து வந்தான். அந்த சமளயத்தில் ஒரு நாள் கடம்ப வனமாக இருந்த மதுரைக்கு வந்தான்.

ravi said…
அங்கே ஒரு கடம்ப மரத்தின் நிழலில் சுயம்புவாக எழுந்தருளியிருந்த சிவலிங்கம் ஒன்றை கண்டு அதிசயித்தான்.

உடனே விஸ்வகர்மாவை அழைத்துஅதற்கு விமானங்கள் எழுப்பி கோயில் கட்டி வழிபாடுகள் செய்தான்.

வழிபாட்டுக்கு மலர்கள் இல்லாமல் இந்திரன் தவித்தபோது அங்கே இந்த தீர்த்தத்தில் சிவனருளால் பொன்னாலாகிய தாமரை மலர்கள் தோன்ற அந்த பொற்றாமரையால் வழிப்பட்டான்.
ravi said…
அக்காலத்தில் பாண்டிதய நாட்டை, மணவூரை தலைநகராய் கொண்டு மன்னன் குலசேகரபாண்டியன் ஆண்டு வந்தான்.

அவனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்த வியாபாரி ஒரு நாள். தன் வியாபார நிமித்தம் கடம்ப வனத்தின் வழியாய் சென்றான். மிகவும் இருட்டாகிவிட்டதால் இரவு அங்கே தங்கினான். அன்று இரவில் பேரொளியோடு கூடிய சிலர் வந்து அங்கேயிரந்த சிவலிங்கத்திற்கு வழிபாடுகள் நடத்துவதை கண்டவன் விடிந்ததும் விஷயத்தை ம்மனிடம் சென்று சொன்னான். வியப்பும் பெருமிதமும் அடைந்த அரசன் ஈசன் சித்தம் என்னவோ என சிந்தனையில் ஆழ்ந்தான்.
ravi said…
அன்றிரவு குலசேகர மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறினார். சிவபெருமானின் ஆணைப்படி கடம்பவன காட்டை திருத்தி புதிய மதுரை நகரை அமைத்தான். அரசன்.
ravi said…
நகரை காத்திட காவல்தெய்வமான காளிதேவிக்கு வடக்கு திசையில் தனியாக ஒரு கோயில் அமைத்தான். அதற்கு காரணம் வடக்கிலிருந்து தான் எல்லாப் படையெடுப்புகளும் மதுரை நோக்கி வந்ததாம். எனவே வடக்கு வாசலிலே மிக முக்கியமான வாசலாக கருதப்பட்டது.
ravi said…
சிவபெருமானின் ஆணைப்படி கடம்பவன காட்டை திருத்தி புதிய மதுரை நகரை அமைத்தான். அரசன். நகரை காத்திட காவல்தெய்வமான காளிதேவிக்கு வடக்கு திசையில் தனியாக ஒரு கோயில் அமைத்தான். அதற்கு காரணம் வடக்கிலிருந்து தான் எல்லாப் படையெடுப்புகளும் மதுரை நோக்கி வந்ததாம். எனவே வடக்கு வாசலிலே மிக முக்கியமான வாசலாக கருதப்பட்டது.
ravi said…
காவல்தெய்வமாக அவன் அமைத்த அந்த காளி தேவி பிற்காலத்தில் தன்னை வழிபடும் அடியவரின் துயரங்களை தீர்த்து இன்பம் நல்கியதோடு செயல்வ வளமும் அருளியதால் செல்வத்தம்மன் என்று அழைக்கபட்டாள். அந்த பெயரே பின்னர் மருவி செல்லத்தம்மன் என்று வழங்கப்படலாயிற்று.
ravi said…
சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது இந்தக் கோயில் என்கின்றனர். மதுரையில் வைகையின் தென் கரையில் அமைந்திருக்கிறது கோயில். அசுரனை வதம் செய்த கோலத்தில் செல்லத்தம்மன் காட்சி தருகிறாள்.
ravi said…
எட்டுத் திருக்கரங்களுடன் மணி, அரிவாள், கத்தி, சூலாயுதம், கபாலம், தவலாம், உடுக்கை ஆகிய ஆயுதங்களுடன் அபய வரத கரங்களுடன் அமர்ந்த நிலையில் தனது வலது காலை மடக்கி, இடது காலில் அரக்கனை தலையில் மிதித்த நிலையில் உள்ளாள்.
ravi said…
கையில் கொன்றை மலர் வைத்திருக்கிறாள், தேவி.
காவிரிப்பூம்பட்டனத்தில் வசித்த கண்ணகியும் கோவலனும் பிழைப்பு தேடி மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்தார் கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி. இந்தத் திருக்கோயில் அமைந்திருந்த பகுதியில் வசித்த ஆயர்குலத்தவரிடம் கண்ணகியை ஒப்படைத்தார். அதன் பின்னரே, மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் கோவலன் ஊருக்குள் சென்றான்.
ravi said…
அப்போதுதான் கோவலன் மீது வீண் பழி சுமத்தப்பட்டு, அவன் இறந்த சம்பவம் நிகழ்ந்தது. அதனால் கோபம் கொண்ட கண்ணகி, மதுரையை அழித்தது எல்லாம் நடந்தன.
ravi said…
மதுரையை அழித்த பின் கோபம் தணிந்த நிலையில், தனக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குல மக்களிடம், “என்னை வழிபடும் அடியவர்களின் இன்னல் தீரும்’ எனக் கூறிச் சென்றாளாம் கண்ணகி.
ravi said…
அதனை நினைவு கூரும் விதமாக இக்கோயிலில் கண்ணகிக்கும் தனிச்சந்நதி இருக்கிறது. இடது கையில் சிலம்பும் வலது கையில் செண்டும் ஏந்திய நிலையில் கோயில் கொண்டுள்ளாள். கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்த ஆயர் குலப்பெண்கள் இடைச்சி அம்மனும் வடக்கு நோக்கி கொண்டுள்ளாள்.
ravi said…
செல்லத்தம்மனுக்கு பூஜைகள் நடத்தி முடித்த பின், கண்ணகிக்கும் பூஜைகள் செய்யப்படுகின்றன.
ravi said…
ஐயனார், பைரவர், ஐயப்பன் ஆகியோர் பிராகாரத்தில் உள்ளனர். விநாயகர், மீனாட்சி - சுந்தரேசுவரர், மயில் மீது அமர்ந்த முருகபெருமான் ஆகியோர் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். முன் மண்டபத் தூண்களில் அஷ்ட காளி சிற்பங்கள் உள்ளன.
பேச்சியம்மன் தெற்கு திசை நோக்கி கோயில் கொண்டுள்ளாள். தடையில்லா பேச்சாற்றல்பெற இவளை வழிபடுகின்றனர்.
ravi said…
கருப்பசாமியும், துர்க்கையும் வடக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளனர். மீனாட்சி கோயிலுக்குள் மற்ற கோயிலிலிருந்து சுவாமியோ அம்மனோ உள்ளே செல்ல முடியாது. ஆனால் இந்தக் கோயில் அம்மன் மட்டும் கோயிலுக்குள் சென்று வரும் அனுமதி பெற்றிருப்பது சிறப்பு...
ravi said…
தல மரம் வில்வம், அரசு, தீர்த்தம் வைகை. கோப குணம் மறைய, கணவன் - மனைவியரிடையே ஒற்றுமை அதிகரிக்க, திருமண பாக்கியம் கிடைக்க இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
ravi said…
பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி குடும்பப் பிரச்னைகள் அகலவும் இங்கே வேண்டுதல் நடக்கிறது.
ravi said…
அம்மனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். கண்ணகிக்கு எலுமிச்சை மாலை, தாலிப்பொட்டு அணிவித்து பெண்கள் வழிபடுகிறார்கள்.
ravi said…
நாகதோஷம் மற்றும் ராகு, கேது தோஷம் புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜருக்கு பால், மஞ்சள் அபிஷேகம் செய்து குங்குமம் தடவிய பஞ்சுத்திரி மாலை அணிவிக்கிறார்கள்.
தை மாத பிரம்மோற்ஸவத்தின்போது, சிவன், அம்பாள், திருக்கல்யாண வைபவம் நடக்கும்.
ravi said…
திருக்கல்யாணத்தன்று அம்பை, மீனாட்சியம்மன் கோயில், சினவ் சன்னதி முன்புள்ள ஆறு கால் மண்டபத்தில் எழுந்தருளுவாள். சிவன் சன்னதியில் இருந்து பட்டுப்புடைவை எடுத்து வந்து அம்பாளுக்கு அணிப்பவர். பின்பு திருமாங்கல்யம் சூட்டப்படும். தை, ஆடி வெள்ளி, நவராத்திரி நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
ravi said…
தினமும் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும்; மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு கி.மீட்டர் தொலைவிலுள்ளது. கண்ணகி கோயில் எனும் செல்லத்தம்மன் ஆலயம்.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

சுத்த உபவாஸம் என்றால் முழுப் பட்டினி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ‘உபவாஸம்’ என்றால் ‘கூட வஸிப்பது’. பகவனோடுகூட, அவனுக்குப் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வஸிப்பதுதான் உபவாஸம். அன்றைக்கு வயிற்றில் ஒன்றையும் தள்ளாவிட்டால்தான் அப்படி அவனோடுகூட, கிட்டக்க வஸிக்க முடியும். மனஸ் அவன் கிட்டக்கவே கிடக்க வேண்டுமானால் அதற்கு முதலில் வயிறு வெறுமனே கிடக்கணும்.
ravi said…
சாப்பிட்டால் வயிற்றிலே ‘கடாபுடா’. வேலைசெய்ய முடிவதில்லை. மனஸையும் எதிலேயும் நிறுத்த முடிவதில்லை. வயிறு அடைசலில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம் பண்ணி, மனஸை சுத்தி செய்துகொண்டு ஒருமுகமாக நிறுத்த முடியும். பெரிசாக மூச்சடக்கிக் கும்பகம் பண்ணவேண்டுமென்றில்லா விட்டாலும், தடைப்படாமல் தீர்க்கமாக ச்வாஸம் விடும்படியிருந்தால்தான் மனஸ் தியானத்தில் நிற்கும்.
ravi said…
வயிற்றில் கனம் இருந்தால் இப்படி ஃப்ரீயாக ச்வாஸிக்க முடியவில்லை. இதற்காகத்தான் உடம்பை நெற்றுப்போல ஆக்கிக்கொண்டு அதனால் ச்வாஸத்தை ஃப்ரீயாகவும் மனஸை லைட்டாகவும் பண்ணிக் கொண்டு நன்றாக ஈச்வர தியானத்தில் ஈடுபடும் பொருட்டு எப்போதுமே ஆஹாரத்தை லகுவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தோபவாஸம் அநுஷ்டிக்க வேண்டுமென்றும் சாஸ்திரம் விதிக்கிறது.

ravi said…
இந்த உடம்புதான்  ‘நான்’ என்று நினைத்துக் கொண்டிருப்பதால்தான் ஸதா இதற்கு ஸவரக்ஷணை பண்ணுவதையே கார்யமாக வைத்துக்கொண்டு, ஆத்மாவைக் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த தேஹாத்ம புத்தி போகணும். இதற்காகத்தான் சரீரத்துக்கு சிரமத்தை தருகிற உபவாஸங்களை சாஸ்திரம் விதித்திருக்கிறது. உபவாஸங்களால் சரீரத்துக்கு ஏற்படுகிற சிரமங்களைச் சிரமமாகத் தெரியாமல் பழக்கிக் கொள்கிறோமென்றால், அப்போது தேஹத்தையே பிரதானமாக மதித்து அதன் ஸெளகர்யத்தையே கவனிக்கும் அபிமானத்தை விடுகிறோம் என்றுதானே அர்த்தம்?

ravi said…
பசி எடுத்தாலும் பட்டினி கிடந்து பழகு; வம்பும் வீணும் பேசுவதில் ஸுகமிருந்தாலும் மௌனம் அநுஷ்டி; கண்ணை இழுத்துக் கொண்டு போனாலும் தூங்குவதில்லை என்று ராத்திரி பூரா விழித்துக்கொண்டு ஈச்வர ஸம்பந்தமாக ஏதாவது பண்ணிக்கொண்டிரு. இப்படியெல்லாம் பழகப் பழக தேஹாத்ம புத்தி போகும். சரீரம் எப்படியானாலும் சித்தம் பரமாத்மாவிடம் நிற்கும். இப்போது பிடித்தே பழக்கிக் கொள்ளாவிட்டால் மரண யாதனை என்று சொல்லுகிறார்களே, அந்தப் பெரிய ஹிம்ஸை சரீரத்துக்கு வரும்போது மனஸை எப்படிப் பரமாத்மாவிடம் செலுத்த முடியும்?’ என்றுதான் சாஸ்த்ரங்கள் வ்ரத உபவாஸங்களை வைத்திருப்பது.

ravi said…
ஜீவிப்பதற்கு சாப்பாடு அவசியம்தான். இல்லாவிட்டால் உயிர் போய்விடும். ஆனால் சாப்பாடு கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டால்கூட உடம்புக்கு வியாதி வக்கைகள்தான். ஆரோக்கியத்துக்குக் காரணமான ஆஹாரமே லிமிட் தாண்டிவிட்டால் நோய்க்குக் காரணமாகிவிடும்.

ravi said…
மெஷின்கள்கூட விடாமல் வேலை செய்தால் கெட்டுப் போய் விடுகின்றன என்று அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கிறார்கள். இப்படி வயிற்றுக்கும் ரெஸ்ட் கொடுத்தால் ஆரோக்யத்துக்கு ரொம்ப நல்லது.

ravi said…
உடம்பு என்று முழுசாக ஒன்றை எடுத்துக் கொண்டால் அதற்கு ஆறு நாள் வேலை கொடுத்தால் ஒருநாள் லீவ் தருவது என்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த உடம்புக்கு உள்ளே வயிறு முதலான உறுப்புக்கள் தனியாக வேலை பண்ணிக்கொண்டேயிருக்கின்றனவே! இவற்றில் ஹ்ருதயத்தையும் லங்க்ஸையும் கொஞ்சங்கூட ‘ரெஸ்ட்’ கொடுத்து வைக்க முடியாது. வயிற்றுக்குக் கொடுக்க முடியும்; கொடுக்கவும் வேண்டும். ஏனென்றால் ஸ்தூலமாக வெளியிலிருந்து வஸ்துக்களை வாங்கிக் கொண்டு அரைத்துக் கரைத்து ரொம்பவும் உழைப்பது அதுதான்.
ravi said…
எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி அதுதான். எப்போது பார்த்தாலும் வேலை செய்யும் கருவி கெட்டு விடுவதுபோல் ஒரு வேளை மாற்றி இன்னொரு வேளை என்று ஓயாமல் வேலை பண்ணினால் ஜீர்ணக் கருவிகள் கெட்டுவிடும். ஆஹாரம்தான் ரத்தமாகி, பம்ப் ஆகும் போது மூளைக்குப் பாய்கிறது. அந்த மூளை ரொம்ப நுட்பமான அவயம். அதனால், அதற்கு இந்த ரத்த ஓட்ட ‘வெய்ட்’டை அவ்வப்போது குறைக்க வேண்டும். இதற்கெல்லாம் உபவாஸம் உறுதுணை செய்கிறது.

ravi said…
ஆகவே உபவாஸமிருந்தால் ஆரோக்யம் போய்விடும் என்று தோன்றினாலும் உண்மையில் இதுதான் இருக்கிற ரோகங்களையும் போக்கும் பெரிய மருந்து; லங்கனம் பரம ஒளஷதம் என்றே வைத்ய சாஸ்த்ர வசனம்.

ravi said…
லங்கனம் என்றால் பட்டினி என்று ஏன் அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம் தெரியுமா? அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் “தாண்டுவது” என்பதாகும். ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் அதைத் தாண்டிப் போய்விட்டால், skipping a meal என்று சொல்கிறது இதுதான், அதுவே லங்கனம்.

ravi said…
வைத்ய சாஸ்த்ரம் சொல்கிற லங்கனத்தையே மத நூல்களும் சொல்கின்றன திருவள்ளுவரும் இதைச் சொல்லியிருக்கிறார். அவ்வப்போது ஒரு வேளை, இரண்டு வேளை சாப்பிடாமலிருந்தால்தான் வயிற்றிலே ஏற்கனவே போட்டதில் துளிக்கூட ஜீரணமாகாமலில்லை என்று நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். இப்படி ஏற்கனவே சாப்பிட்டது முழுதும் ஜெரித்துப்போனதை (‘அற்றதை’) த் தெளிவாகத் தெரிந்துகொண்ட பிறகே ஒருவன் மறுபடி உண்பானானால் அப்படிப்பட்டவனுடைய உடம்புக்கு மருந்து எதுவும் வேண்டாம் என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

ravi said…
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

ravi said…
சாப்பாட்டினால்தான் ஆரோக்யம் என்று நாம் நினைத்தாலும் வியாதிக்கும் அதுதான் முதல் தோழன் என்பதற்கு ஒன்று சொல்கிறேன். ஜ்வரம் வந்தால் டாக்டர் முதல் கார்யமாக என்ன பண்ணச் சொல்கிறார்? ‘சாப்பாட்டை நிறுத்து; கஞ்சி குடி; இல்லாவிட்டால் இன்னபானம் சாப்பிடு’ என்றுதானே சொல்கிறார்? எந்த நோயானாலும் அதற்குப் பத்தியமாக என்னென்ன சாப்பிடக் கூடாது என்றுதான் முக்யமாகக் கண்டிப்புப் பண்ணுவதிலிருந்தே வியாதிக்கு ஆதாரம் ஆஹாரம்தானென்று தெரிகிறது.

ravi said…
இப்படி சரீர ரீதியில் ஆரோக்யத்துக்கு நன்மை செய்கிற பட்டினியே அதைவிட ஆத்ம ஸம்பந்தமாக நல்லது செய்கிறது.

ஆஹாரங்களில் பல வகைகள் உடம்புக்குப் புஷ்டி தந்தாலும் மனஸைக் கெடுப்பவையாயிருக்கின்றன. ஸத்வ பதார்த்தமே சாப்பிட்டு வந்தாலுங்கூட உடம்புக்குள்ளே கெட்டியான சாப்பாடு ஒன்று போய் விழுந்தால் அது மனசை லேசாக்கி மேலே கிளம்ப விடாமல் கனமாகக் கீழே இழுத்துக்கொண்டுதானிருக்கும். இதனால்தான் நடு நடுவே சுத்தப் பட்டினி விதித்திருக்கிறது.

ravi said…
பட்டினி கிடக்கிறபோது மனசுக்குப் பரமார்த்திகமாகவும், பகவத் விஷயமாகவும் போய்த் தோய்ந்து நிற்கிற தன்மை உண்டாகிறது. இதனால்தான் பகவத் ஸ்மரணம் விசேஷமாக இருக்கவேண்டிய தினங்களில் பூர்ண உபவாஸமோ, ஒருபொழுதோ வைத்திருக்கிறது.

ravi said…
காந்திகூட ஆத்ம சுத்திக்காகவேதான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லி அடிக்கடி பட்டினி கிடந்தார். அந்தச் சமயங்களில் தமக்குப் புத்தியிலே ஒரு தெளிவு ஏற்பட்டதாகவும் மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார்.

இப்படியாக உடல் நலத்தோடு உயிர் நலத்தையும் இம்மையோடு மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள்.

அதோடு இப்படிப்பட்ட உபவாஸங்கள் எல்லா ஜனங்களாலும் அநுஷ்டிக்கப்பட்டால் உணவுத் தட்டுப்பாடு என்ற பிரச்னையே வராது.

ravi said…
முதலில் கஷ்டமாயிருந்தாலும் அப்யாஸத்தினால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.

ravi said…
ஆரம்பத்தில் உடம்பை வாட்டுவது சிரமமாயிருந்தாலும் பிற்பாடு ஏற்படுகிற பெரிய இன்பத்துக்காக இதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதே |

இக்ஷு க்லேசாத் யதா (ஆ) நந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம் ||

ravi said…
அதாவது, கரும்பைக் கசக்கிக் கிலேசப்படுத்துவதால்தான் கருப்பஞ்சாற்றை எடுத்துப் பானம் பண்ணுகிற இன்பம் கிடைப்பது போல, உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரஸம் கிடைக்கிறது.

ravi said…
வியாபாரி முதலில் கையிலிருப்பதைச் செலவழித்துத்தான் பண்டங்கள் வாங்குகிறான். அப்புறம் அதை விற்று அதிகப் பொருள் சம்பாதிக்கிறான். அப்படியே உடம்பை முதலில் செலவழித்து, அப்புறம் அந்தச் செலவுக்கு மேல் பெரிய வரவு ஆத்மாவுக்கு சம்பாதித்துக் கொள்வதற்கே உபவாஸமிருப்பது.

ravi said…
சாப்பிடுகிற நாட்களிலும் பகவத் த்யானம் பண்ணுங்கள்; உபவாஸ நாளில் சாப்பிடாமலிருந்தும் த்யானம் பண்ணிப் பாருங்கள். தனக்கே வித்யாஸம் தெரியும். அந்த லாபத்துக்காக இந்த நஷ்டப் படலாம் என்று தெரிந்துகொள்வீர்கள். நான் நிறையச் சொல்வதைவிடப் பிரத்யக்ஷமாகப் பண்ணிப் பார்த்து விட்டாலே உபவாஸத்தின் அவச்யமும் பெருமையும் விளங்கிவிடும்.

ravi said…
வயிற்றை வற்றப் போடுகிற நாட்களில் மனசுக்கு த்யானாம்ருத போஜனத்தைக் கொடுத்துக் கொண்டால் எது பெரிய இன்பம் என்று தெரியும்.

ravi said…
சாப்பாடு இல்லாத வாய்க்கு அதைவிட ரஸம் சொட்டுகிற அவனுடைய நாமாமிருதத்தை, லீலாமிருதத்தை ஜபமாக, பஜனையாக, ஸ்தோத்ரமாக, பாராயணமாகக் கொடுத்துக் கொள்ள வேண்டும். காதுக்கு அம்ருத போஜனமாகக் கீர்த்தனையும், ஹரிகதையும் கிடைக்கப் பண்ணணும். ஏகாதசி புராண படநம்-ச்ரவணம் [படிப்பதும் கேட்பதும்] ரொம்ப விசேஷம்.

ravi said…
இதற்கெல்லாம் basic-ஆக, preliminary-யாகப் பண்ணவேண்டியது பட்டினி. அதைப் பண்ணினால்தான் இவற்றின் effect பூர்ணமாய்க் கிடைக்கும். அதனால்தான், ஆரம்பத்தில் சொன்ன ச்லோகத்தில் முதலில் ‘சுத்தோபவாஸ’த்தை ‘ப்ரதமம்’ என்று சொல்லிவிட்டு அதற்கப்புறமே ‘தத:’ என்று இரண்டாவதாக ‘ஸத்கதா ச்ரவண’த்தைச் சொல்லியிருக்கிறது.
(இன்று நிர்ஜல ஏகாதசி)
ravi said…
Periyava Sharanam🙏

Created a *playlist for Mahaperiyava songs, Daily Chanting and Akshara Paamalai* for easy access from album Guru Madhura Smaranam

Shri Mahaperiyava Songs - By New Jersey Swaminathan
https://www.youtube.com/playlist?list=PLHuDJolYMUWRDf7gfF33EOteIndHdA9Bq

Please share it with interested devotees

Ram Ram

#mahaperiyavasongs
#newjerseyswaminathan
#gurumadhurasmaranam
ravi said…
*கேள்வி பதில் நேரம்*

*பதிவு 11* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .

*கேள்வி 14*

*நான்* :

பட்டரே! காலை வணக்கம் ..

*பட்டர்*

என்றும் இளையவள் என் அபிராமி

என்றும் இருப்பவள் என் அபிராமி

என்றுமே புதிராய்ச் சிரிப்பவள் என் அபிராமி

ஏழ்கடல் அலைகள் போல்
எண்ண முடியாதவள் என் அபிராமி

என்னுள் தெரிபவள் என் அபிராமி ! அவள் உங்களை என்றும் காக்கட்டும்

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌
ravi said…
ஐயனே உங்கள் பாடல் 42 இல் *பனிமொழி வேதப்பரிபுரையே* என்று முடிக்கிறீர்கள் ...

வேதமாகிய சிலம்பை தன் பாதங்களில் அணிந்துள்ளதாள் என்ற அர்த்தத்தில் பாடல் முடிவடைகிறது ...

இதன் தாத்பரிய்யதை கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா அடியேன் அறிவிற்கு அளவாய் ?👌👌👌
ravi said…
*பட்டர்*

சொல்கிறேன் ரவி ... பரிபுரை என்பது சிலம்பை மட்டும் குறிக்காது கால்களில் அணிந்துள்ள எதையுமே அழகான தமிழில் பரிபுரை என்று சொல்லலாம் ..

இங்கே நான் மனதில் நினைத்தது அன்னை அணிந்துள்ள கொலுசுகள் ..

வேதமே அவளை பிண்ணி இருக்கின்றன ..

இந்த கொலுசு போடும் அல்லது எழுப்பும் சத்தத்தை நீ கேட்டிருக்கிறாயா ?

இப்படி ஒரு கேள்வி கேட்க வேண்டிய துர்பாக்கியத்தில் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்கள் ...

அந்த காலத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம் இருந்தது ..

குழந்தைகளுக்கு அதுவும் பெண் குழந்தைகளுக்கு வளையல் , கொலுசு போட்டு அழகு பார்ப்பார்கள் ...

ravi said…
தலை நிறைய கூந்தல் இருக்கும் அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து படியப் படிய வாரி பின்னல் இட்டு ரிப்பன் கட்டி, பூ வைத்து திலகம் இட்டு , கண்களுக்கு மையிட்டு பட்டு பாவாடையில் குழந்தைகள் ஓடி வரும் போது அக மகிழ்ந்து போவார்கள் பெற்றவர்களும் அவர்களை பெற்றவர்களும் .... 🌸🌸🌸👏👏👏
ravi said…
*நான்* ..

உண்மை இப்போது நாகரீகம் எனும் பெயரில் அக்னி வார்த்து மூன்று முறை வலம் வந்து போட்டுக்கொண்டு மாங்கல்யம் மற்றவர்கள் பார்த்துவிடக்கூடடாது என்பதில் தான் நவீன மங்கையர்கள் மிகவும் கவனமாக இருக்கின்றனர் ..

கூந்தலை பாதியாய் வெட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமம் இல்லாமல் தலையில் பூ இல்லாமல் பெண்கள் எனும் பெயரில் பலர் இருக்கின்றனர் ...

ravi said…
கொலுசு , சிலம்பு , வளையல் இவை எல்லாம் காட்சிப் பொருளாய் போய் விட்டன ...

சில பள்ளியில் நிபந்தனைகள் இன்னும் வேடிக்கை யாக இருக்கும் ..

நெற்றில் திலகமோ குங்குமமோ அணிந்து கொண்டு வரக்கூடாது

கண்களில் மை கண்டிப்பாக இருக்கக் கூடாது ..

எந்த நகையும் அணிந்து வரக்கூடாது ..

திருமணமான பெண் ஆசிரியர்கள் தங்கள் கணவரையும் அவர் போட்ட திரு மங்கல்யத்தையும் வீட்டிலேயே வைத்து விட்டு வரவேண்டும் ...

இப்படி வெட்கப்படும் படியான பல நிபந்தனைகள் ...

😰😰
ravi said…
*பட்டர்* நாகரீகத்தை வரவேற்கிறேன் ஆனால் நாகரீகம் எனும் பெயரில் அநாகரீகம் நல்ல பாம்பைப் போல் தலை எடுத்து ஆடுவதைத்தான் பொறுக்க முடியவில்லை ...

சரி உன் கேள்விக்கு வருகிறேன் ...

கொலுசு போடும் அல்லது எழுப்பும் ஒலி இவைகள் தான் ... கூர்ந்து கவனித்தால் புரியும்

*ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|*

இதில் சௌம் என்பதை “சௌஹ¨ம் “என்று சொல்லுவது சிறந்தது.

*ஐம்* - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.-

பிரம்மா, சரஸ்வதி இவர்களின் அம்சம்.

இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

*க்லீம்* - என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.

இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.

இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை தரும்.

*சௌஹம்* -

இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம்.

*சௌம்* என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.

இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும் ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அன்னை.

இன்னும் சொல்கிறேன் கேள் .
ravi said…
*ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி மந்திரம்:*

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||

*3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி மந்திரம்:*

ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம் க்லீம் சௌம்||

முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும் ஜெபிக்க உத்தமம்.

👏👏👏
ravi said…
*பட்டர்*

ஒரு குழந்தையோ அல்லது திருமணம் ஆன யவதியோ சிலம்போ கொலுசோ அணிந்து கொண்டும் இங்கும் அங்கும் ஓடினாலோ நடந்தாலோ அந்த வீட்டில் பாலாவின் மூல மந்திரங்கள் ஒலிக்கப்படுகின்றன என்று அர்த்தம்

இதற்கும் மேலே அவர்கள் என் அபிராமிக்கு தனியாக வேறு எந்த தோத்திரங்களும் சொல்லத் தேவையில்லை

அந்த வீட்டில் பாலா திரிபுர சுந்தரி என்றும் வசிக்கிறாள் ... 🥇🥇🥇
ravi said…
*பட்டர்* :

அது மட்டும் அல்ல வேதங்கள் அவர்கள் வீட்டில் தான் வாசம் செய்கின்றன ...

*நான்* ஆழ்ந்து அனுபவித்து பாடிய பாடல்கள் அபிராமி அந்தாதி.. கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் என்று சும்மாவா சொன்னீர்கள் ...

பட்டர் சிரித்துக்கொண்டே சிறகை விரித்தார் ...

என் மூடிக்கொண்டிருந்த மனமும் திறந்து கொண்டது அவர் அருளால் 🌸🌸🌸🤝🤝🤝
Savitha said…
அருமை🌷🌷🙏🏻🙏🏻
ravi said…
அருமையான செய்தி அழகான நடையில் 👌👏🏼👏🏼👏🏼
ravi said…
திருக்கடையூர் அபிராமி *70*

*பாடல் 68* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
இந்த பாடலில் மீண்டும் சாந்தமாக பட்டர் ஒரு நல்ல செய்தியை தெரிவிக்கிறார்...

நேற்றைய கோபம் இல்லை ..

இன்றைய பாடலும் நாளைய பாடலும் அபிராமி என்னவெல்லாம் தருவாள் என்பதை பற்றிய பாடல்கள் ...

இப்படி ஒரு கருணை தெய்வத்தை வணங்காமல் இருக்காதீர்கள் என்று ஒரு தாபத்துடன் சொல்கிறார் .
ravi said…
*சிவகாமசுந்தரி சீறடிக்கே சாரும் தவம் வேண்டும் (பாடல் 68)*
ravi said…
பாரும்
புனலும்
கனலும்
வெங்காலும் படர்விசும்பும்

ஊரும்
முருகுசுவை
ஒளி ஊறு
ஒலி ஒன்றுபடச்

சேரும் தலைவி
சிவகாம சுந்தரி சீறடிக்கே

சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே👏👏👏🤝🤝🤝
ravi said…
*அருஞ்சொற்பொருள்* :

*பார்* - உலகம்
*புனல்* - நீர்
*கனல்* - நெருப்பு
*கால்* - காற்று
*விசும்பு* - ஆகாயம்
*முருகு* - நறுமணம்
*ஊறு* - உணர்வு (தொடுதல், ஸ்பரிசம் , உணர்வு)
*சீறடி* - சிறிய அழகிய திருவடி
ravi said…
தமிழில் நாம் எப்பவோ மறந்து போன சொற்கள் 👆👆👆
ravi said…
பஞ்ச பூதங்கள் ஐந்து ..

ஒவ்வொன்றுக்கும் சில தன்மைகள் ( தன் முத்திரைகள் உண்டு )

முதலில் தோன்றியது *வானம்* .. ஒரே ஒரு தன்மை மட்டுமே .. ஒலி எழுப்புவது

பிறகு *காற்று* ... காற்றுக்கு ஒலியும் ஸ்பரிசமும் உண்டு .. இரண்டு முத்திரைகள்

பிறகு *நெருப்பு* ... மூன்று தன்மைகள் ... ஸ்பரிசம் , ஒலி , ஒளி

பிறகு *நீர்* ... 4 தன்மைகள் ... ஒலி ,சுவை , ஸ்பரிசம் , ஒளி

பிறகு *நிலம்* ... மணம் , ஒளி , ஓசை , ஸ்பரிசம் , ஒலி எல்லாம் சேர்ந்தது நம் உடலில் உள்ள ஐம்பொறிகளுக்கும் இந்த தன்மைகள் உண்டு .
ravi said…
இந்த ஐம் பூதங்கள் தனித்தனியாக இருக்கின்றன அத்துடன் அதற்கு ஏத்த தன்மாத்திரைகளை அபிராமி ஒன்று சேர்க்கிறாள்...

ஐம் பூதங்களாகவும் அவைகளின் தன்மைகளாகவும் இருப்பவள் அபிராமி ..

கொஞ்சம் நினைத்துப்பாருங்கள் நம் உடலில் உள்ள ஐம் பொறிகளில் ஒன்று வேலை செய்யாவிட்டாலும் , we will be handicapped . 👏👏👏
ravi said…
அவளை நினைப்பதே நாம் செய்யும் பெரும் தவம் ... எவ்வளவோ பிறவிகளில் அவளை நாம் தோத்திரம் செய்திருந்தால் மட்டுமே அவளைப்பற்றிய நினைவும் சிந்தனையும் இந்த பிறவியில் வரும் ... 🤝🤝🤝
ravi said…
சரி ஏன் சேரும் தவம் உடையார் என்று சொல்லாமல் சாரும் தவம் உடையார் என்கிறார் பட்டர் ?
ravi said…
சேருதல் என்பது சம அந்தஸ்து உடையவர்கள் ஒன்றாய் சேர்ந்து கூட்டணி வைத்துக்கொள்ளுதல் ... நாமும் அம்பிகையும் சமமா ... அவள் எங்கே ? நாம் எங்கே ? அதனால் தான் பட்டர் சாரும் என்கிறார் .. சாருதல் என்றால் சரணடைந்தல், பெரிய துணையை நாடுதல்....
ravi said…
அவளை சார்ந்தோம் என்றால் நாம் மிகவும் தவம் செய்தவர்களாகி விடுகிறோம் .. உடனே கிடைப்பது ஒரு பெரிய நினைத்துப்பார்க்க முடியாத jackpot ....நமக்கு இனி கிடைக்க முடியாதது என்று ஒன்றுமே இல்லை ... 🥇🥇🥇
ravi said…
இதையே மாணிக்க வாசகர் இப்படி பாடுகிறார்

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி

அளிபவ ருள்ளத் தமுதே போற்றி!

*பதப்பொருள்* :

*பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் -* பூமியில் ஐந்து தன்மைகளாய்ப் பரவியிருப்பவனே, *போற்றி* - வணக்கம்,

*நீரிடை நான்காய் நிகழ்ந்தாய்* - நீரில் நான்கு தன்மைகளாய் நிறைந்திருப்பவனே, போற்றி - வணக்கம்,

*தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் -*

நெருப்பில் மூன்று தன்மைகளாய்த் தெரிபவனே, போற்றி - வணக்கம்,

*வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் -*

காற்றில் இரண்டு தன்மைகளாய் மகிழ்ந்திருப்பவனே, போற்றி - வணக்கம்,

*வெளியிடை ஒன்றாய் விளைந்தாய்* - ஆகாயத்தில் ஒரு தன்மையாய்த் தோன்றியனனே, போற்றி - வணக்கம்,

*அளிபவர் உள்ளத்து அமுதே* - கனிபவருடைய மனத்தில் அமுதமாயிருப்பவனே, *போற்றி* - வணக்கம்.

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
ravi said…
*எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்*

அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு
என்ற இந்தப் பாடல்

1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293)

*ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....*

2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629)

*இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...*


3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387)

*உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்*.

4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124)


*நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.*

5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35)


*ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.*

6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (80)

7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு.(110)

8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு. (571)

*அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..*

கண்ணதாசன் திருக்குறளையும் விட்டு வைக்கவில்லை தனது பாடல்களில். இறைவன் அளித்த *ஈடிணையில்லாக் கவிஞன்.*
ravi said…
💓மலரும் நினைவுகள்💓

இன்றிலிருந்து 60 வருடங்களுக்கு முந்தைய காலம். பஸ்களுக்கும் லாரிகளுக்கும் மூக்கு இருந்த காலம்.

அது ஒரு சிறிய ஊர். ஊருக்கு வெளியே ஒரு டூரிங்க் டாக்கீஸ். ஓலை வேய்ந்த கொட்டாய். விவசாய நிலத்தில் இருக்கும் மோட்டார் ரூம் மாதிரி முன்னால் ஒரு தகர ஷெட். அதுதான் ப்ரொஜொக்டர் ரூம். மூனாங் க்ளாஸ் படித்த முனுசாமி தான் ஆப்பரேட்டர்.

ravi said…
காலையில் தெருவில் டம் டம் என்று அடித்துக் கொண்டு ஒரு மாட்டு வண்டி போகும். மாடு மகாதேவியை இழுத்துக் கொண்டு போகும். இரண்டு பக்கமும் படத்தின் பெயர் போட்டு தட்டி கட்டியிருக்கும்.

பஞ்சு மிட்டாய் கலரில் நோட்டீஸ் கொடுத்துக் கொண்டே போவார்கள். நோட்டீஸ் வாங்க பிஞ்சுகள் பின்னாலேயே ஓடும்.

ravi said…
நாராயண செட்டியார் கடையில் விளம்பர தட்டி வைத்திருப்பார்கள். அதற்காக தட்டி பாஸ் கொடுப்பார்கள். இரண்டு டிக்கெட். கடைசி நாள் போகலாம். இதற்காகவே செட்டியாரின் பையன் ஸ்ரீராமுலுவுடன் நிறைய பேர் சிநேகம் வைத்திருப்பார்கள்.

ravi said…
ஆனால் கடைசி வரை செட்டியார் அந்த தட்டி பாஸ்களை மற்றவர்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்ததே இல்லை.

என் அப்பா கடை வைக்காமல் ஏன் கவர்ன்மெண்ட் உத்தியோகத்துக்கு போகிறார் என்று எனக்கு கோபம் கோபமாக வரும்.

திடீரென்று ஒரு நாள் போஸ்டரின் மேல் 'இன்றே இப்படம் கடைசி' என்று ஒரு ஸ்டிக்கர் ஒட்டுவார்கள்.

ravi said…
இன்றைய கால கட்ட படங்களுக்கு ரிலீஸ் ஆன தேதியிலேயே இந்த ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறார்கள்.

மாலை ஆறு மணிக்கு தியேட்டரில் கூம்பு ஒலி பெருக்கியில் பாட்டு போடுவார்கள். அது ஊர் முழுக்க கேட்கும்.

ravi said…
சினிமா போக வேண்டியவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். பெண்கள் ரெமி பவுடர் எடுத்து அப்பிக் கொள்வார்கள். வீபூதிக் காப்பு செய்த முருகர் மாதிரி முகம் மாறிப் போயிருந்திருக்கும்.

ravi said…
தியேட்டரில் மொத்தம் பதினைந்து ரிகார்ட் தான் இருக்கும். அதே பாட்டை தான் தினமும் போடுவார்கள். வரிசை கூட மாறாது. ஆப்பரேட்டரின் play list ல் shuffle option கூட இருக்காது.

அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் போடப் போகின்றார்கள் என்பதற்கான சிக்னல் அது.

"
ravi said…
பாட்டு உள்ளே போடறாங்க..." என்று தியேட்டருக்கு ஓடுவார்கள். குழந்தையை தர தரவென இழுத்துக் கொண்டு ஓடுவார்கள்.

தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் கொண்டே வரும்.

தியேட்டர் வரைக்கும் தான் கணவன் மனைவி ஜோடி செல்லும். தியேட்டருக்குள் அவர்கள் ஆண் - பெண் என்று redefine செய்யப் படுவார்கள். ஆண்களுக்கு தனி இடம். பெண்களுக்கு தனி இடம். மூன்று மணி நேர legal separation.

ravi said…
தரை டிக்கெட் நாலணா. கீழே மணல் பரப்பியிருக்கும். அந்த மணலைக் குவித்து அதை high chair ஆக்குவார்கள்.

ஸ்க்ரீன் என்பது ஒரு பெரிய வெள்ளைத் துணி. அதற்கு திரை எல்லாம் கிடையாது.கவர் போடாத செல்போன் மாதிரி. நிறைய அடி வாங்கியிருக்கும். மட்டை உரிக்காத தேங்காய் சைஸுக்கு மஞ்சளாக ஒரு கறை இருக்கும்.

ravi said…
ஸ்க்ரீனில் அவ்வப்போது ஒரு பெரிய பல்லி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கும்.

ஏகப்பட்ட வேட்டிகளை பக்கம் பக்கமாக நிற்க வைத்து மேலிருந்து கீழாக தைத்திருப்பார்கள். அது தான் ஸ்க்ரீன்.

ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் ஸ்க்ரீனுக்கே போய் விட்டதால் ஆடியன்ஸில் நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள்.

'ட்ட்ட்ட்ட்ரிங்' என்று மணி அடிக்கும்.

ravi said…
நள்வரவு என்று ஸ்லைட் போடுவார்கள். மூனாங் க்ளாஸ் முனுசாமி இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்.

அடுத்து நியூஸ் ரீல் ஓடும். நேரு எகிப்துக்கு நல்லெண்ண விஜயம் போய் நாசருடன் கை குலுக்குவார். பீகாரில் வெள்ளம் வரும். ஏதோ ஒரு விவசாயி நாலு நிமிடம் ஹிந்தியில் பேசுவார். கேமரா தப்பித் தவறிக் கூட விந்திய மலைக்கு கீழே வந்து விடாது.

ravi said…
படம் போட ஆரம்பிப்பார்கள்.

முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று போட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம். கொடுத்த நாலணாவுக்கு நான்கு மணி நேரம் படம் பார்க்கலாம்.

அப்போதெல்லாம் பெரும்பாலும் சரித்திரக் கதைகள் தான்.

ravi said…
முதல் சீனிலேயே மகாராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் போதே பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டு பிறக்கும்.

டெலிவரிக்காக எம்.என்.நம்பியார் தயாராகக் காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் மாறி மாறி வில்லன்களாக வருவார்கள்.

நம்பியார் ஒரு படத்தில் நாகேந்திரனாக வந்தால் அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வருவார்.

ravi said…
இப்படியாக இருவரும் பிற்போக்கு கூட்டணி அமைத்து
கெட்ட செயல்கள் செய்து வருவார்கள்.

அந்த நேரம் பார்த்து பல்லி ஸ்க்ரீனில் ஓடும். கதாநாயகன் உடலெங்கும் படர்ந்து நுழையக் கூடாத இடத்தில் எல்லாம் நுழையும். கதாநாயகன் பாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பான்.

பாட்டு முடிந்தவுடன் பல்லி வட கிழக்கு திசையில் ஓடி மறைந்து விடும்.

படத்தில் மொத்தம் நான்கு இண்டர்வெல்.

ravi said…
டைரக்டர் தயவில் இரண்டு. ரீல் மாற்றுவதற்காக இரண்டு இண்டர்வெல்.

இண்டர்வெல் விட்டதும் " சோடாலேர்...வேகலே..." என்று பையன்கள் கத்திக் கொண்டு போவார்கள்.

சோடா கலர், வேர்க்கடலை என்பதின் திரிபுகள் அவை.

கோலி சோடாவை குடிப்பது தனி டெக்னிக். எல்லோராலும் குடித்து விட முடியாது. கவிழ்த்தால் கோலி வந்து மூடிக் கொள்ளும். அப்படியே குடித்தாலும் மீத்தேன் கேஸ் மூக்கு வழியாக ரெகுலேட்டர் இல்லாமல் வந்து கொண்டே இருக்கும்.

இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட் போடுவார்கள்.

சாந்தி சில்க் ஹவுஸ்
முத்து ஹேர் கட்டிங் சலூன்
ராஜா டெய்லரிங்
காமதேனு காபி ஒர்க்ஸ்

என்று வரிசையாக வரும்.

காமதேனு காபி பொடி விளம்பரத்தில் கவுன் போட்டுக் கொண்டு ஒரு லேடி வருவார்.

படம் ஆரம்பிக்கும்.கிர்ர்ர் என்ற சத்தத்துடன்
படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே,

திடீரென ஃபிலிம் கட் ஆகும்.

வெள்ளைத் திரை தெரியும். விசில் சத்தம் கேட்கும். ஸ்க்ரீன் மீது டார்ச் அடித்து ஹீரோயினை தேடுவார்கள்.

ஃபிலிம் ஒட்டியதும் படம் ஓடும்.

படம் முடியும் போது பதினோரு மணி ஆகியிருக்கும்.

பெண்கள் முகம் எல்லாம் அழுது அழுது உப்பி போயிருக்கும். அழுமூஞ்சி மனைவியை அரை இருட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள் கணவர்கள்.

படம் முடிந்து போகும் போது கும்பலாக போக வேண்டும். சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.

இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில் பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம். கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.

பெண்கள் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். பி.எஸ்.வீரப்பா பின்னால் வருவது போலவே ஒரு உள்ளுணர்வு இருக்கும்.

வீடு பக்கத்தில் வந்து விளக்கு வெளிச்சம் பார்த்தவுடன் தான் உயிர் வரும்.

அடுத்த நாள். பத்து பெண்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருப்பாள் மனைவி.

இனி அடுத்த படம் இரண்டு மாதம் கழித்தோ மூன்று மாதம் கழித்தோ தான்.

இதோ..இப்போது என் முன்னால் டி.வி ஓடிக் கொண்டிருக்கிறது. ரிமோட் ஒவ்வொரு சேனலாக நீந்துகிறது.

பதின்மூன்று படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. எதையும் பார்க்காமல் அணைக்கிறேன்.

வாட்ஸ் அப் போகிறேன். அந்த மகானுபாவன் தன் தலைவரின் ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். பார்க்கிறேன்.

என் சேனலில் சினிமா பாருங்கள் என்று டி.வியில் கூவுகிறார்கள். கெஞ்சுகிறார்கள். பிடிக்கவில்லை.

அந்தக்கால நினைவுகளே சுகங்கள்தான்..😍

படித்ததில் ரசித்தது
S G S Ramani said…
அபிராமி அன்னையை விட்டால், யாரால் நமக்கு வேண்டியவற்றை தர முடியும்?

அபிராமி பட்டர் பெற்ற அனுபவம், நமக்கும் கிடைக்க, அபிராமி அன்னை அருள் செய்யட்டும்.

🙏🙏🙏🙏🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை