Posts

Showing posts from December, 2020

பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை -3- 16 பழனி 2 --279

Image
                                                       பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் ஆறுபடை - 3 பழனி 2 (279) 👍👍👍💥💥💥 Happy 2021 👌👌💐💐💐 பழனிக்குள் போவதற்கு முன் உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு ஆசிகள் ரவி!  இந்த புதிய வருடம் ஆனந்தமாக ஆரோக்கியமாக இருக்கும் கவலைப்படாதீர்கள்   கந்தனின் தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது. ஞானம் அவர் மூச்சாகியது. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன், தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகனை அழைத்தார். ''ஓம்காரப் பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா?' என்று கேட்டார். ''ஆம் தந்தையே!'' என்றார் ப்ரம்மண்யன். ''எங்கே கூறு பார்க்கலாம்...'' என்றார் ஈஸ்வரன். ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து 'பத்தும் இரண்டும் எத்தனை?’ என்று கேட்டால், அந்தக் கூட்டல் கணக்கு ஆசிரியருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்குத் தெரியுமா என்று சோதித்துப் பார்க்கத்தான் அந்தக் கேள்வி. இப்போது, அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் மு

பச்சைப்புடவைக்காரி பகையை வெல்லும் ஆறுபடை 3- 15 பழனி 1 278

Image
                                           பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் ஆறுபடை - 3 பழனி 1 (278) 👍👍👍💥💥💥 அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், பழனிபழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. கோவில் வரலாறு ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.  ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழ

பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை - 2 - திருச்செந்தூர் 5 - 277

Image
                                                                 பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் ஆறுபடை - 2 திருச்செந்தூர்  5 (277) 👍👍👍💥💥💥 திருச்செந்தூர் கோயிலில், விபூதிப் பிரசாதம் பிரசித்தம். இதிலென்ன ஆச்சரியம்.?  எல்லா சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் விபூதிதானே பிரசாதமாகத் தருவார்கள். அப்படியிருக்க, இங்கே, திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள விபூதிப் பிரசாதம், தனித்துவம் வாய்ந்ததாகுமா என்று கேள்வி வரலாம். ஆம்... தனித்துவமும் மகிமையும் மிக்கதுதான் இந்தக் கோயிலின் விபூதிப் பிரசாதம். சொல்லப்போனால்... இதை இலை விபூதிப் பிரசாதம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திருச்செந்தூர் திருத்தலத்தில்... ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை ரொம்பவே சிறப்பானது.  ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர், மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அந்த அர்ச்சனையைக் கேட்பதும் முருகப் பெருமானைத் தரிசிப்பதும் சிலிர்க்கச் செய்துவிடும். அப்போது ஆறு திருமுகங்களுக்கும்,

பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை - திருச்செந்தூர் 4- 2 - 276

Image
                                                              பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் ஆறுபடை - 2 திருச்செந்தூர்  4 (276) 👍👍👍💥💥💥 இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர். சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது. சித்திரை, ஐப்பசி, தை    - 3 ஆடி, தை அமாவாசை    - 2 ஆவணி, மாசித் திருவிழா    - 10 ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம்    - 2 மாத விசாகம்    - 12 ஆனி தை வருடாபிஷேகம்    - 3 தீபாவளி, மகாசிவராத்திரி    - 4 மொத்தம்         36 திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது. திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன. திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில்

பச்சைப்புடவைக்காரி -பகையை வெல்லும் ஆறுபடை - 2 திருச்செந்தூர் 3- 275

Image
                                                  பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் ஆறுபடை - 2 திருச்செந்தூர்  3 (275) 👍👍👍💥💥💥 முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை உள்ளன.இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும், திருச்செந்தூர் கோயில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது. அதுமட்டுமல்லாது திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் இங்கு பார்ப்போம். படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்திரனை வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். சூரபத்திரன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பெயர் காரணம் சூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் 'செயந்திநாதர்' என்று வி