பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை - 2 - திருச்செந்தூர் 5 - 277

                                                    பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

பகையை வெல்லும் ஆறுபடை - 2

திருச்செந்தூர்  5

(277) 👍👍👍💥💥💥


திருச்செந்தூர் கோயிலில், விபூதிப் பிரசாதம் பிரசித்தம். இதிலென்ன ஆச்சரியம்.? 

எல்லா சிவாலயங்களிலும் முருகன் கோயில்களிலும் விபூதிதானே பிரசாதமாகத் தருவார்கள். அப்படியிருக்க, இங்கே, திருச்செந்தூர் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள விபூதிப் பிரசாதம், தனித்துவம் வாய்ந்ததாகுமா என்று கேள்வி வரலாம்.

ஆம்... தனித்துவமும் மகிமையும் மிக்கதுதான் இந்தக் கோயிலின் விபூதிப் பிரசாதம். சொல்லப்போனால்... இதை இலை விபூதிப் பிரசாதம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.




திருச்செந்தூர் திருத்தலத்தில்... ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடைபெறும் ஆறுமுக அர்ச்சனை ரொம்பவே சிறப்பானது. 

ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர், மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அந்த அர்ச்சனையைக் கேட்பதும் முருகப் பெருமானைத் தரிசிப்பதும் சிலிர்க்கச் செய்துவிடும்.

அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும். ஆறுமுகனுக்கு எல்லாமே ஆறு தான். 

முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது இன்னொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். 



இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

ஆவணி, மாசி விழாக்களில் ஏழாம் நாள் மட்டுமே திருவுலா வருவார் சண்முகர். மற்றபடி, ஜெயந்தி நாதரே உலா வருகிறார். அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் 'சேவல் விடும்' நேர்த்திக் கடன் வைபவம் இங்கும் நடைபெறுகிறது.

முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்குவதற்காக திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது என விவரிக்கிறது ஸ்தல புராணம். 

சூரபதுமன் வதம் முடிந்த பின், முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்கிறது ஸ்தல புராணம்!


இங்கே... ஜெயந்தி புரம் என்றும் திருச்செந்தூர் என்றும் சொல்லப்படும் புண்ணியத் தலத்தில், தினமும் காலையில் பக்தர்களுக்கு பன்னீர் இலையில் விபூதி வைத்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

நோய்வாய்ப்பட்டவர்கள், கல்யாணக் கவலையில் வாடுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே என்று கலங்குபவர்கள்... இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் செந்திலாண்டவரை மனதார வேண்டிக் கொண்டு, உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமாக இலைவிபூதிப் பிரசாதத்தைப் பெற்று, தினமும் இட்டுக் கொள்கின்றனர். அத்தனை சக்தியும் சாந்நித்தியமும் வாய்ந்தது இலை விபூதிப் பிரசாதம்!


தங்கமாக மாறிய விபூதி 

பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். 

பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.

என்னென்ன நோய்கள் தீரும் தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இலை விபூதி பிரசாதத்தை திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் இனி மறக்காம கேட்டு வாங்கிட்டு வாங்க.



ரவி திருச்செந்தூர் ஜெயந்திநாதனின் அருள் உங்கள் எல்லோருக்கும் உண்டு அவன் அருளால் எந்த நோய் நொடி இன்றி பலகாலம் சிறப்புடன் வாழ்வீர்கள் நாளை அடுத்த படைவீட்டைப்பார்ப்போம் . 

அம்மா மிக்க நன்றி தாயே -- தங்களுடன் திருச்செந்தூர் போய் வந்ததைப்போன்ற ஒரு உணர்வு 

சிங்கார வளையல்கள் சிரித்துக்கொண்டே புன்னகைக்க காதுகளில் தாடங்கங்கள் முருக முருக என்றே முழக்கம் இட கால்களில் கொஞ்சம் சலங்கை தில்லை நாயகனின் நடனத்தில் லயித்திருக்க அன்னை விடைபெற்றாள் - விடை வந்து அழைத்துச் சென்றது 




கானலோலுபா  गान-लोलुपा  -  

அம்பாளுக்கு  கீதம், கானம்  ரொம்ப பிடிக்கும்.  சியாமளா தண்டகத்தில் ''ஜெய  சங்கீத ப்ரியே''  என்று வருமே.  ஒருவிஷயம்  தெரியுமா?  அம்பாளுக்கு அற்புத குரலாம் !  சௌந்தர்ய லஹரி சொல்கிறது  (verse 66).  எப்படிப்பட்டதாம் தெரியுமா?  சரஸ்வதி  தேவியின் வீணை கம்பிகள் எழுப்பும் நாதத்தின் இனிமையை விட  அதிகமான  இனிமையாம்.

கல்பனாரஹிதா, कल्पना-रहिता  -    

சத்ய ஸ்வரூபி, ஸ்ரீ லலிதாம்பிகை கற்பனைகள் நிரம்பியவள்  அதே நேரம் அவை இல்லாதவளாகவும் தோன்றுபவள். சத்யம் நிரம்பிய இடத்தில் கற்பனைக்கு இடம் ஏது? கல்பனா ரஹிதா வை  பிரித்து அர்த்தம் சொல்வதுண்டு  கல்ப- நர-ஹிதா -  

கல்பம் என்றால்  ப்ரளயகாலம்,  அப்போது நரர்களுக்கு உதவிசெய்ய தனது கர்ப்பத்தில்  ஜீவன்களை பாதுகாத்து வளர்த்து அளித்தவள்  என்று பொருள் படும்.   ஸமஸ்க்ரிதம்  ஒரு  அளவற்ற சிறந்த மொழி என்பதற்கு இந்த சிறிய உதாரணமே போதும். 

பிரித்து பதம் சொல்லும்போது தனித்வம், மஹத்வம்,  விளங்கும்..




காஷ்டா   काष्ठा -  எது  வளர்ச்சியின் எல்லையோ,   அது வரை மனித முயற்சி தொடரும்.   பிரம்மத்தை தாண்டி எதுவும் இல்லை.  அதை நாடுவது தான் ரிஷிகளின் முயற்சி.  பெரிதிலிருந்து சிறியதற்கு  தேடல்.  அண்டத்திலிருந்து அணுவுக்கு  நாட்டம்.  காஷ்டா என்பது ஒரு அளவு.  1.60 வினாடி ஒரு காஷ்டா என்பார்கள்.  

ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்தை குறிக்கும்.  யோகிகளின் சக்தி காஷ்டாவில் கணக்கிடப்படும்.  அவ்வளவு சீக்கிரம்.  அவர்கள் அடையும் பாதை எளிதல்ல,  முள்ளும் கல்லும்  நிறைந்து கத்திமுனையில் நடப்பது போல  என்கிறது கடோபநிஷத் (I.iii.14).

=======================

Comments

ravi said…
தினம் ஒரு(தெயவத்தின்)குரல்

தாண்டவம் என்று பொதுவாகச் சொல்லப்படும் சிவ நடனத்திலே பல விதங்கள் உண்டு. சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம், திருவாலங்காட்டில் ஊர்த்வ தாண்டவம்,
ravi said…
இப்படி இது தவிர சோளஸீமையிலேயே ஏழு த்யகராஜாக்கள் ஈழுவிதமான தாண்டவங்களைச் செய்கிறார்கள்.
ravi said…
ஸப்தவிடங்க க்ஷேத்ரம் என்று அந்த ஏழு க்ஷேத்ரங்களுக்குப்பேர். அவற்றில் ப்ரதானமானது திருவாரூர். அங்கேயுள்ளவர்கள்தான் ஏழு பேரிலும் மூல த்யாகராஜா. அவர் ஆடும் நடனத்திற்கு ஹம்ஸ நடனம் என்று பெயர். அஜபா நடனம் என்றும் அதற்கு இன்னொரு பெயர்.

ravi said…
ஜபமாக இல்லாதது ‘அஜபா’. மற்ற எல்லா மந்த்ரங்களையும் நாம் புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு ஜபிக்கிறோம். அந்த மந்த்ர சப்தளங்கள் அதிர்வினால் நாடியில் ஏற்படும் சலனங்களிலிருந்து அபூர்வமான தர்சனம், சக்தி, ஸித்தி, மனத்தெளிவு ஆகியன உண்டாகின்றன. இவை பூர்ணமாக, ஏற்படுவதற்கு அந்த மந்தரங்களை பிரணாயாம பூர்வமாக, அதாவது தீர்க்கமாக மூச்சை இழுத்து, அடக்கி, வெளியிடுவதோடு சேர்த்துப் பண்ணவேண்டும்.
ravi said…
இப்படி மந்த்ரம் என்று நாம் உத்தேசித்து புத்தி பூர்வமாக அக்ஷரங்களைக் கொண்டு பன்னுவதேன்ரும், மூச்சையும் அவ்வாறே நாமாக உத்தேசித்து அளவாக ஒழுங்குபடுத்தி விடுவதென்றும் இல்லாமல், சித்தத்தை சாந்தமாக வைத்துக்கொண்டு, ச்வாஸமானது தானாக் எப்படி அமைகிறது என்று, விலகியிருந்தது, கவனித்துக் கொண்டிருந்தாள் உள்-வெளி மூச்சுக்கள் ரொம்ப ரொம்ப தீர்க்கமாகிக்கொண்டே போகும்;
ravi said…
மூச்சு அடங்கியிருக்கிற காலமும் ஜாஸ்தியாய்க் கொண்டே போகும். ஆரம்பத்தில் ஏதோ நமக்குத் தெரிந்த மட்டும் சித்தத்தைக் கொஞ்சம் சாந்தப்படுத்திக்கொண்டு பண்ணினாலும் போகப் போகத தானாக நிஜமான பரமசாந்தம் உண்டாகும். ப்ராணாயாமம் என்று அடக்கி, கிடக்கிச் செய்யும்போது இருக்கிற ‘ஸ்ட்ரெயின்’ கொஞ்சங்கூட இல்லாமல் அநாயாஸமாக இப்படி ஏற்பட்டுப் பரம சாந்தமாக மூச்சும், எண்ணமும் புறப்படுகிற ஆத்ம ஸ்தானத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
ravi said…
இதிலே ஒரு மந்த்ர ஜபமுமில்லையல்லவா? அதனால் ‘அஜபா’ என்று பெயர்.

ஔபசாரிகமாக (உபசாரமாக) இதையும் ஒரு ஜபம் என்று சொல்வதுண்டு. அதுதான் “ஹம்ஸ” மந்த்ர ஜபம் என்பது. மூச்சு உச்வாஸ நிச்வாஸமாக (உள்ளுக்கு இழுப்பது வெளியில் விடுவதும்) உள்ளபோது “ஹம்”, “ஸ்” என்ற ஒலிகளைப் போலவே சப்த சலனம் அமையும்.
ravi said…
அதனால்தான் “ஹம்ஸ” மந்த்ரம் என்பது. அதோடு “அஹம் ஸ:” என்பதற்கு “நான் அவன்”, அதாவது, “ஜீவாத்மாவான நானே ஈச்வரன், அதாவது பரமாத்மா” என்று அர்த்தம். ‘நானே அவன்’ என்று மாத்திரம் நிறுத்திவிட்டால் ஜீவாத்மாதான் ஈச்வரன் என்று குறுக்கிவிட்டதாக விபரீத அர்த்தமும் செய்துகொள்ளலாமல்லவா? அதனால், “(பரமாத்மாவான) அவனே நான்” என்று சேர்த்துச் சொன்னதால்தான் முழுசாகச் சொன்னதாகும். “
ravi said…
அவனே நான்” என்பது “ஸ: அஹம்”. ஸந்தியில் இது “ஸோஹம்” என்ரதாகும். “ஹம்ஸ:” என்பதோடு “ஸோஹம்” என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் ஹம்ஸ மந்த்ரம். நாம் புத்தி பூர்வமாக உத்தேசித்து மற்ற மந்த்ரங்களைப் போல இந்த ஹம்ஸ மந்தரத்தையும் சொல்லிக்கொண்டே போனால்கூட, அதாவது ஜபித்துக் கொண்டே போனால்கூட, அந்த சப்த சலனங்கள்தான் இயற்கையாகவும் சாந்த ஸமாதிக்கு அழைத்துப் போகும் ப்ராண ஸஞ்சாரத்திற்கு உரியதாக இருப்பதால், அந்த natural state-ல் சேர இதுவும் induce பண்ணும் (செயற்கையாகத் தூண்டிவிடும்).
ravi said…
ஜீவாத்மா பரமாத்மாவுடன் அபேதமாயிருக்கும் சாந்த நிலைக்கு இந்த ஸாதனை அழைத்துப் போகும்போது ஒரு கட்டத்தில் ஜபம் நின்று “அஜபா”வாகும்; ச்வாஸம் தன்னால் ஹம்ஸ மந்த்ரம் என்று ஔபசாரிகமாகச் சொல்வதுடன் நடக்க ஆரம்பிக்கும். ‘ஸோஹம்’ என்பதிலுள்ள ‘ஸ’வும் ‘ஹ’வும் தேய்ந்து தேய்ந்து ஒடுங்கிப்போய் ‘ஓம்’ என்ற பிரணவம் மட்டும் நிற்கும். அது அப்படியே போய் துரீயம் என்பதான உத்தம ஸ்திதியில், ஆத்மாவில் ஐக்யப்படுத்திவிடும்.
ravi said…

“யோக’ நித்ரை என்று மஹாவிஷ்ணு குண்டலினிப் பாம்பை வெளியில் ஆதிசேஷ பர்யங்கமாகக் காட்டிக்கொண்டு தூங்குவதுபோல த்யானிக்கும்போது இந்த அஜபா ஸாதனைதான் பண்ணிப் பரமாத்வான பரமேச்வர ஸ்வரூபத்தில் ஐக்யப்பட்டிருக்கிறார். அப்போது அவரது ப்ராண ஸஞ்சாரத்துக்குக்கேற்றபடி பரமேச்வரன் ஆடுவதுதான் த்யாகராஜாவின் அஜபா நடனம், அல்லதுஹம்ஸ நடனம்.

ravi said…
இதை ஒரு பிம்பமாக விஷ்ணுவின் ஹ்ருதயத்தின் மேலே ஈச்வரன் நாட்டியம் பண்ணுவதுபோலக் காட்டினால், ஜனங்களில் பெரும்பாலோராகவுள்ள விஷயம் தெரியாதவர்கள் தப்பாக நினைகும்படியாகும், முயலகனின் மீது நடராஜா ஆடுவது, பரமசிவனின் மார்மேலேயே காளி ஆடுவது ஆகியவை எப்படி சத்ரு ஸம்ஹாரமாகத் தெரிகின்றனவோ அப்படியே இதையும் நினைத்துவிடக்கூடும்! பேதமேயில்லை என்று ஒன்றாகப் போய்விடுகிற பரம மித்ரர்களான சிவா – விஷ்ணுக்களைப் பரம சத்ருக்களாக நினைப்பதாகிவிடும்!

இதனால்தான் திருவாரூர் பிம்பத்தில் எல்லாவற்றையும் நன்றாக மூடி, தியாகராஜாவின் முகத்தை மாத்திரம் காட்டுவது.
ravi said…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன - பஞ்ச சபைகளிலும் நடராஜரை தரிசித்தால் இவ்வளவு புண்ணியமா?
ravi said…
மார்கழி மாதத்தில் சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது. திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் நாளை மறுநாள் சிறப்பாக நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம்.
ravi said…
தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது. மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.
ravi said…
சிவபெருமானின் பஞ்ச சபைகளான திருவாலங்காடு இரத்தின சபை, சிதம்பரம் கனக சபை, மதுரை வெள்ளி சபை, திருநெல்வேலி தாமிர சபை, திருக்குற்றாலம் சித்திர சபையாக போற்றப்படகிறது. இந்த ஐந்து சபைகளிலும் ஆருத்ரா தரிசனம் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம், கிருஷ்ணருக்கு ரோகிணி, முருகனுக்கு விசாகம். இவை யாரும் இறைவன் இப்புவியில் அவதரித்த நட்சத்திரங்கள்.
ravi said…
அப்படி இருக்க பிறப்பே இல்லாத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே எப்படி என்று கேட்கிறீர்களா

'பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்' என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவபெருமானைக் குறிக்கிறது.

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது பற்றி புராணச் செய்திகள் உள்ளன
ravi said…
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சுவாமி தான் இப்பூமியில் தோற்றுவித்த ஆருத்ரா நன்னாள். சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ரா நாளில் தரிசித்தாலே பலன் ஆகும்.

வியாக்ரபாத முனிவர், பதஞ்சலி முனிவரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது
ravi said…
ஆனந்தத் தாண்டவமாடிய கனகசபை சிதம்பரம், திருஆலங்காடு திருத்தலத்தில் ஊர்த்துவத் தாண்டவமாடிய ரத்தினசபை, மதுரையில் பாண்டியனின் வேண்டுதலுக்காக இடக்கால் மாறி ஆடிய வெள்ளிசபை திருஆலவாய், நெல்லையில் தாமிர சபை , குற்றாலத்தில் சித்திர சபை ஆகிய பஞ்ச சபைகளிலும் ஆருத்ரா அபிஷேகம்,
ravi said…
தரிசனமும் வெகு சிறப்பாக நடைபெறும். ஈசனின் ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். திருவாதிரை திருநாளில் சிவ ஆலயம் சென்று எல்லாம் வல்ல நடராஜப்பெருமானை தரிசிப்போம் அளவில்லாத ஆனந்தம் அடைவோம்.
ravi said…
எந்த காரியமும் சிக்கலின்றி தொடர ஆருத்ரா வழிபாடே உதவும்... அதன் மகிமைகள் என்னென்ன?
ravi said…
தமிழ் மாத பௌர்ணமி தினங்கள் ஒவ்வொன்றும் ஒரு நட்சத்திரத்தோடுக் கூடி பண்டிகை நாளாகக் கொண்டாடப்படுவது விசேஷம். மார்கழி மாத பௌர்ணமி ஆருத்ரா விழாவாக வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மார்கழி மாத பெளர்ணமி நாள் ஆருத்ரா அபிஷேகத் திருநாளாகவும் (29-12-2020) மறுநாள் திருஆதிரை நட்சத்திர நாளில் (30-12-20202) ஆருத்ரா தரிசன நாளாகவும் கொண்டாடப்படுகின்றது.
ravi said…
ஆருத்ரம் என்றால் அக்னி மயமான ருத்ர சக்தியை குளிர்ந்த தெய்விக நிலைக்கு உருமாற்றி சகல ஜீவன்களும் தரிசிக்கும்படி செய்யும் புண்ணிய நாள் என்பர் பெரியோர்.
ravi said…
ஆருத்ரா நாளில்தான் வேத பீஜ மந்திர சக்திகள் ஈசனை வேண்டும் ஜீவன்களை வந்தடையும் என்றும் ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
ravi said…
ஆருத்ரா நாளில்தான் அழகே உருவான பிட்சாடன மூர்த்தி தாருகா வனத்து ரிஷிகளின் அஞ்ஞானம் அழிக்க ரௌத்திர பெருமானாக உருமாறி ருத்திர தாண்டவம் ஆடினார்.
ravi said…
மனம் திருந்திய அவர்களின் வேண்டுதலுக்காக மனமிரங்கி ஆனந்த தாண்டவமும் ஆடினார். அந்த நாளே ஆருத்ரா எனப்படுகிறது. சகல தேவர்களுக்காகவும் ஈசன் திருநடனம் புரிந்த தினம் ஆருத்ரா நன்னாள். இது நடந்த திருவழுவூர் எனப்படுகிறது. திருப்பராய்த் துறை என்னும் தாருகாவனம் என்றும் கூறப்படுகிறது.
ravi said…
அதுமட்டுமா? ஈசனின் திருநடனத்தை எல்லோரும் தரிசித்த வேளையில் சிவலோகத்தில் நிஷ்டையில் இருந்த வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலியும் மட்டும் காண முடியாமல் போனது.
ravi said…
இதனால் இவர்கள் தில்லை வனத்துக்கு வந்து ஈசனை வேண்டி நெடுங்காலம் தவமியற்றினார்கள். அப்போது அவர்களுக்கு அருள் காட்சி தந்த ஈசன் அவர்களுக்காகவே தில்லையில் ஆடல் கூத்தனாக பொன்னம்பலத்தில் காட்சி தந்து ஆனந்த நடனமாடினார். இந்த நாளும் ஆருத்ரா புண்ணிய தினம்தான்.
ravi said…
ஊழிக் காலம் முடிந்து மீண்டும் சிருஷ்டிக்கும் காலம் தொடங்கியதும் மகா சதாசிவனான ஈசன் இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து நின்று பேரொளியாகத் திகழும் நாளும் ஆருத்ரா நன்னாள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.
ravi said…
அன்றுதான் அண்ட சராசரங்கள் உருவாகின என்றும் கூறுகின்றன. ஆருத்ரா என்றால் தொடக்கம்; சலனம்; அதிர்ச்சி என்றெல்லாம் பொருள். சலனம் தொடங்கியதும் சிருஷ்டி தொடங்கும் என்பது வேத வாக்கு அல்லவா!
ravi said…
சிவ பக்தியால் சகல சொத்துக்களையும் இழந்து வறுமையில் வாடிய சேந்தனாருக்கு அருள் புரிய ஈசனார் அவரை நாடி வந்து களி உண்ட நாளும் திருவாதிரை விழா நாளில்தான்.
ravi said…
அடுத்த நாளான ஆருத்ரா தரிசன நாளில்தான் சேந்தனார் திருப்பல்லாண்டு பாட, தில்லை தேர் நகர்ந்து ஓடிய திருவிளையாடல் நடைபெற்றது.
ravi said…
இதனால் இன்றும்
ஆருத்ரா அபிஷேக நாளுக்கு அடுத்து வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருவாதிரைக் களியுடன் ஏழுக்கு மேலான காய்கறிகள் கலந்த கூட்டு இறைவனுக்குப் படைக்கும் வழக்கம் உள்ளது.

ravi said…
தில்லைக்கும் முன்பாக சிவனார் ஆடிய திருத்தலம் உத்தரகோச மங்கை என்றும், அங்கே தான் ஆருத்ர வடிவில் (கருணை வடிவில்) முதன்முதலில் ஈசன் அம்பிகைக்காக ஆனந்த நடம் புரிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
ravi said…
அதனாலேயே அங்கு இன்றும் மரகத நடராஜராக ஆடல் வல்லான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறான். 'மத்தளம் முழக்க மரகதம் உடைபடும்' என்பார்கள் பெரியோர். அதனால்தான் சிறிய சலனத்துக்கே பழுதாகும் தன்மை படைத்த மரகதக் கூத்தனின் திருமேனியில் சந்தனக் காப்பிட்டு பாதுகாக்கிறார்கள்.
ravi said…
திருவாதிரை நாளில் மட்டுமே திருக்காப்பு களையப்பட்டு கூத்தனின் திருமேனியை மரகத வடிவிலேயே தரிசிக்கலாம் என்பது சிறப்பான விஷயம்
ravi said…
பாம்பும் புலியும் போற்ற, பாரில் பொன்னம்பலத்தில், பாதம் தூக்கி ஆடும் அந்த பரமேஸ்வரனின் திருப்பாதங்களைப் பற்றிக்கொண்டு வாழ்வோம்.
ravi said…
ஆருத்ரா நாளில் தொடங்கப்படும் எந்த காரியமும் சிக்கலின்றி நடைபெறும் என்பார்கள். இந்த நாளில் சேரும் செல்வம் மேலும் மேலும் பெருகும் என்பார்கள். அழகியக் கூத்தனின் அருளால் எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ வேண்டுவோம். திருச்சிற்றம்பலம்!
ravi said…
ஆன்மிகம்ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன? களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?
ravi said…
மாதங்களில் சிரேஷ்டமான மார்கழி மாதத்தில், திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும் தான் திரு என்னும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது.

திருவாதிரையை வடமொழியில் ஆருத்ரா என்று கூறுவார்கள். ஆருத்ரா தரிசனத்திற்குக் காரணமான புராணக் கதை ஒன்றை இங்குப் பார்ப்போம்.
ravi said…
பஞ்ச பூதங்களின் இயக்கத்திற்கும் ஆதாரமாக இருக்கும் ஸ்ரீ சிவபெருமானை நிந்தித்து, ஒருமுறை தாருகாவனத்தில், முனிவர்கள் ஒன்று கூடி, முக்கண்ணனுக்கு எதிராக வேள்வி ஒன்றை நிகழ்த்தினார்கள்.
ravi said…
அதாவது, அவர்களின் கோட்பாட்டின்படி, கர்மத்தை மட்டும் செய்தால் போதுமானது. கடவுள் என்பவர் கிடையாது என்பதுதான். அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டி, கயிலைநாதன், பிட்சாடனர் ரூபமெடுத்து, பிட்சைக் கேட்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பிட்சாடனரைக் கண்ட முனி பத்தினிகள் அனைவரும், அவரின் பின்னால் போகத் தொடங்கினார்கள்.
ravi said…
இச்செயலைக் கண்ட முனிவர்கள், மிகுந்த கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தார்கள்.
ravi said…
வேள்வித்தீயினில், மத யானை, மான், உடுக்கை, முயலகன். தீப்பிழம்பு ஆகியவற்றைத் தருவித்து, அனைத்தையும், ஸ்ரீ சிவபெருமான் மேல் ஏவி விட்டார்கள். சர்வேசன் ஆனவர், மத யானையைக் கொன்று அதன் தோலைத் தரித்துக் கொண்டார்.
ravi said…
மான், உடுக்கை, அக்னி அனைத்தையும் தானே சுவீகரித்துக் கொண்டார். முயலகனின் மேல் வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியபடி நடனம் ஆடி, முனிவர்கள் உண்மையை அறியச் செய்தார். அதுவே ஆருத்ரா தரிசனம் என்று கூறப் படுகிறது.
ravi said…
ஸ்ரீ நடராஜப் பெருமாள் 108 நடனங்களை ஆடி இருக்கிறார். அவர் தனியாக ஆடியது 48. ஸ்ரீ உமா தேவியுடன் சேர்ந்து ஆடியது 36. தேவர்களுக்காக ஆடியது 12. ஸ்ரீ திருமாலுடன் ஆடியது 9. முருகனுடன் ஆடியது 3.

ravi said…
பஞ்ச பூதங்களான ஆகாயம் என்பதற்கு சிதம்பரம் என்றும். அக்னி என்பதற்கு திருவண்ணாமலை என்றும், நீர் என்பதற்கு திருவானைக்காவல் என்றும், காற்றுக்கு காளஹஸ்தி என்றும் , நிலத்திற்கு காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்றும் இவைகளின் பெருமைகளைக் கூறும் வண்ணம் இந்த புண்ணியத் தலங்கள் அமைந்திருக்கின்றன. இதில் சிதம்பரம் தான் முதன்மையாகச் சொல்லப்படுகிறது.
ravi said…
ஸ்ரீ முக்கண்ணனுக்கு வருடத்தில் ஆறு முறைகள் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூன்று முறைகள் திதியன்றும், மூன்று மறைகள் நட்சத்திரம் அன்றும் செய்யப்படும் அபிஷேகத்தில், திருவாதிரை அன்று செய்யப்படும் அபிஷேகமே விசேஷமாகச் சொல்லப்படுகிறது.
ravi said…
ஆருத்ரா தரிசனம் அன்று களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது?

முந்தைய காலத்தில் சேந்தனார் என்கிற பெயர் கொண்ட விறகு வெட்டி ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவ பக்தர். தினமும் ஒரு சிவ பக்தருக்கு ஆகாரம் அளித்துவிட்டுத் தான் உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ravi said…
ஒரு நாள் நல்ல மழை பெய்ததில், வெட்டிய விறகெல்லாம் ஈரமாகி விட்டது. அதை விற்க முடியாமல் போனதால், கையில் பணம் இல்லாமல் போனது. அதனால் மனைவிடம் வீட்டு சிலவிறகு பணம் கொடுக்க முடியாமல் போனது.
ravi said…
அன்றைய தினம் ஒரு சிவபக்தர், சேந்தனாரின் இல்லம் வந்து, பிட்சைக் கேட்டார். அவரின் மனைவி, வீட்டில் இருந்த அரிசி மாவையும் வெல்லத்தினையும் சேர்த்து களி செய்தார்.
ravi said…
வீட்டில் மிகுதியிருந்த ஏழு காய்களில் கூட்டு ஒன்றினைச் செய்து, சிவனடியாரின் பசியைப் போக்கினார். பிறகே இருவரும் உண்டார்கள்.
ravi said…
அடுத்த நாள் கோயிலை வழக்கம் போல் திறந்த அர்ச்சகர், பகவானின் கருவறையில் களியும் கூட்டும் சிதறி இருப்பதைப் பார்த்தார். பிறகு உண்மையை உணர்ந்தார். சேந்தனாரின் பக்தியை உலகுக்குத் தெரியப்படுத்த ஆண்டவனே பிட்சாடனர் ரூபத்தில் வந்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ?
ravi said…
பஞ்சபூத ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள், முதலில் சிதம்பரம், அடுத்து காளஹஸ்தி, அடுத்து திருவண்ணாமலை, அடுத்து திருவானைக்காவல், அடுத்து காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் என்கிற கிராமத்தில் முடிக்க வேண்டும். ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆடல் கலையைத் தரிசித்தாலே புண்ணியம் என்று கூறப்படுகிறது.

.
ravi said…
ஆருத்ரா தரிசனம் அன்று களி, கூட்டு செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நைவேத்தியம் செய்து சமர்ப்பித்து, முடிந்தவரை சிவ ஸ்தோத்திரங்களைக் கூற வேண்டும். நோன்பு மேற்கொள்கிறவர்கள் , மார்கழி திருவாதிரையில் நோன்பைத் தொடக்கி, ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் நோன்பு மேற்கொண்டு ஒரு வருட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.
ravi said…
எல்லாம்வல்ல ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் எல்லா வளங்களையும் அனைவருக்கும் அருளட்டும்
ravi said…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆடவல்லான் கோலத்தில் காட்சி தரும் சிவபெருமானை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்த கோவிலில் ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித்திருமஞ்சனமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சிவ பக்தர்களால் கருதப்படுகிறது.
ravi said…
இந்த ஆண்டிற்கான ஆருத்ரா தரிசன திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 1 ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்து சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. நேற்று திருக்கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் இன்று நடைபெற்றது. இதற்காக ஆயிரங்கால் மண்டபத்தில் ராஜ அலங்காரத்தில் நடராஜர் காட்சி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
ravi said…
சிதம்பரம் கோவிலில் இருக்கும் சித்திரசபையில் ரகசிய பூஜை ரகசிய பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு வாய்ந்த ஆருத்ரா மகா தரிசனம் நிகழ்ந்தது. நடராஜர் ஆடவல்லான் கோலத்தில் ஆனந்த தாண்டவமாடி கோவிலை வலம் வந்தார். அதை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
ravi said…
ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகப்பழமையான சிவாலயங்கள் உள்ளன. அதில் சமயக்குறவர்கள் என்றழைக்கப்படும் நால்வரால் பாடல் பெற்ற சிவாலயங்கள் 276 உள்ளன. இவற்றில் முதன் முதலில் பாடல் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரியது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் தான்.
ravi said…
அதனால் தான், எம்பெருமான் ஈசனும் உண்ணுவதும் உறங்குவதும் இந்த உத்தரகோசமங்கை கோவிலில் தான் என்பது ஐதீகம். ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்யலாம்.
ravi said…



ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகப்பழமையான சிவாலயங்கள் உள்ளன. அதில் சமயக்குறவர்கள் என்றழைக்கப்படும் நால்வரால் பாடல் பெற்ற சிவாலயங்கள் 276 உள்ளன. இவற்றில் முதன் முதலில் பாடல் பெற்ற சிவாலயம் என்ற பெருமைக்குரியது. உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் தான். அதனால் தான், எம்பெருமான் ஈசனும் உண்ணுவதும் உறங்குவதும் இந்த உத்தரகோசமங்கை கோவிலில் தான் என்பது ஐதீகம். ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்யலாம்.


திரு உத்தரகோசமங்கையில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது. நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி, ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை கொண்டது. "மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்" என்ற சொல்லிற்கு ஏற்ப, ஒலி ஒளி அதிர்வுகளில் இருந்து இந்த சிலையைப் பாதுகாக்கிறார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசுவது வழக்கமாக இருக்கிறது. உத்திரகோச மங்கை திருக்கோயிலில் இருக்கும் நடராஜருக்கு நாளை டிசம்பர் 29ஆம் தேதி சந்தன காப்பு களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மகா அபிஷேகமும், டிசம்பர் 30 காலை ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

மரகத நடராஜராக காட்சியளிக்கும், மரகதக் கல், முதலில் வீட்டுக்கு உபயோகப்படும் படிக்கட்டாகவே இருந்துள்ளது என்பது ஆச்சரியமான உண்மை. இந்த கல்லை பரிசோதித்த மன்னரின் ஆட்கள் அது அரிதான பச்சை மரகதக்கல் என்பதை அறிந்து, அதன்பின்பே மரகத நடராஜர் சிலையை உருவாக்கினர்.
ravi said…
மரகத நடராஜர் அபிஷேகம்
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு காலை 32 வகையான அபிஷேகங்கள் செய்யப்படும். 32 வகையான அபிஷேகம் முடிந்ததும் தீபாராதனை நடைபெறும். அதன் பின் வேறு எங்குமே நடைபெறாத வகையில் சிறப்பாக ஒன்று நடைபெறும். அது என்னவெனில்? 32 வகையான அபிஷேகம் செய்ததும் சுவாமிக்கு பசி எடுத்து விடுமாம். இதனால் சுவாமிக்கு முதலில் நைவேத்தியம் சமர்ப்பிக்கிறார்கள். அதன் பின்பு அலங்காரம் நடைபெறும்.
ravi said…
மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு
உத்தரகோசமங்கை கோவில் கருவரையில், முதலில் ஐந்தரை அடி உயரம் கொண்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்து அதன் பின்பே கருவறையை கட்டி முடித்துள்ளனர் என்பது தான் ஆச்சரியம்.
ravi said…
உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில் கருவறையில் இருக்கும் நடராஜர் சிலை வெறும் கருங்கல்லாலோ அல்லது தற்போது கோவில்களில் உருவாக்கப்படுவது போல் கிரானைட் கல்லாலோ உருவாக்கப்படவில்லை. விலை மதிக்கமுடியாத அரிதிலும் அரிதான பச்சை மரகதக் கல்லால் உருவாக்கப்பட்டது. நடராஜர் சிலை முழுவதுமே மரகத கல்லால் உருவாக்கப்பட்டுள்ளதால் ஆண்டு முழுவதும் சந்தனத்தால் பூசி காப்பிட்டு பாதுகாத்து வருகின்றனர்.
ravi said…
ஆருத்ரா தரிசனத்தில் அனுமதி
இந்த நடராஜர் சிலையை மாதிரியாக வைத்து தான் தில்லை நடராஜர் கோவிலில் நடராஜர் சிலையை உருவாக்கினார்கள்.

நடராஜர் சிலை மரகத கல்லால் உருவானது என்பதால், சிலையில் இருந்து வெப்பம் வெளிப்பட்டு சிலைக்கு சேதம் ஏற்படும் என்பதாலும், மரகதக் கல்லுக்கு அதிகமான சத்தத்தையும் அதிர்வுகளையும் தாங்கும் சக்தி கிடையாது என்பதாலும் தான், ஆண்டு முழுவதும் சந்தனத்தால் மூடி பாதுகாத்து வருகின்றனர்.
ravi said…
பிறவிப்பிணி தீரும்

ஆண்டுக்கு ஒரு முறை ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டுமே சந்தனத்தை களைந்து, பக்தர்களுக்கு மரகத நடராஜரை காண அனுமதிக்கின்றனர். இந்த கோவிலில் மேளம் அடிப்பது கிடையாது.
ravi said…
திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாளைய தினம் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்படுகிறது. பச்சை நிறத்தில் மின்னும் நடராஜரை பார்த்து தரிசனம் செய்தால் இம்மையிலும் நன்மை தருவார். பிறவிப்பிணி தீரும் என்பது நம்பிக்கை.
ravi said…


dinamalar telegram
Advertisement
Home


திருப்பூர்:நாளை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடக்கின்றன.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், சுமங்கலி நோன்பு கொண்டாடப்படும். சுமங்கலிப் பெண்கள் விரதம் இருந்து திருவாதிரை களி செய்து வழிபடுவர். அதன்படி, இன்று திருவாதிரையும், நாளை ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது.
ravi said…
இதையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு, நாளை அதிகாலை, 3:00 மணிக்கு மஹா அபிஷேக பூஜை மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது.கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. அதற்கு மாறாக, காலை 7:00 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.கொரோனா காரணமாக, நடராஜர் சிவகாமி அம்மன் திருவீதி உலா, பட்டி சுற்று நிகழ்ச்சிகள் நடக்காது. அதேநேரம், நாளை காலை, 6:00 முதல், மதியம்,ல 12:00 மணி வரையும், மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணியும், கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம், என அறநிலையத்துறையினர் அறிவித்துள்ளனர்.
ravi said…
திருப்பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள மஹாவிஷ்ணு தன்னை மறந்து ஆனந்தத்தில் திளைத்திருப்பதைக் கண்டார் ஆதிஷேசன். அதுபற்றி மஹாவிஷ்ணுவிடம் கேட்க, தாருகாவனத்தில் சிவபெருமான் ஆடிய அற்புத நடனம் பற்றி சொல்ல, ஆதிஷேசனுக்கு தானும் அந்த நடனத்தை பார்க்க ஆவல் ஏற்பட்டது. .
ravi said…
அதற்காக பாதி உடல் மனிதனாகவும் மீதி உடல் பாம்பாகவும் தோன்றி பூவுலகில் தவம் இருந்தார். அவருக்காக சிதம்பரத்தில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்தி நாளில் மீண்டும் அந்த ஆனந்த நடனத்தை சிவபெருமான் ஆடிக்காட்டினார். அந்த நாளே ஆருத்ரா தரிசன நாளாக கொண்டாடப்படுகிறது
ravi said…
எம்பெருமான் ஈசன் ஆடும் நடனத்திற்கு ஏற்பவே இப்பூவுலகம் அசைகிறது என்பது இறை நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். அதற்கேற்பவே, தில்லையில் நடராஜர் ஆடும் நடனமானது காஸ்மிக் நடனம் என்று மேலை நாட்டு விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகின்றனர். அணுவை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் கூட அணுவின் அசைவானது நடராஜர் ஆடும் நடனத்தைப் போலவே இருப்பதாக ஒப்புக்கொண்டனர்.

ravi said…
அதை உணர்ந்தோ என்னவோ, திருமந்திரம் அருளிய திருமூலர் கூட அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறியிருக்கிறார். பிரபஞ்சம் உருவாக காரணமான ஹிக்ஸ் போசான் என்னும் கடவுளின் துகள் பற்றிய ஆராய்ச்சி நடத்துவதற்கு பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி கடவுள் துகள் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் கூட முதலில் பயந்தனர்.
ravi said…
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத்தான் வருவார்கள்.. இந்நாளில் இத்தலத்தில் உள்ள நடராஜர் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். இந்நாளில் தான் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார்.
ravi said…
ஆருத்ரா தரிசனம் அனைத்து நடராஜர் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் ஆருத்ரா தரிசனம் செய்ய சிதம்பர நடராஜர் கோயிலுக்குத் தான் வருவார்கள். இந்நாளில் இத்தலத்தில் உள்ள நடராஜர் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷம். இந்நாளில் தான் சிவப்பெருமான் ருத்ரதாண்டவம் ஆடினார்.

ravi said…
தாருகாவனம் என்ற வனத்தில் தவ வலிமை கொண்ட முனிவர்கள் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள் கற்று அதன்படி தங்களுடைய பணிகளை செய்துவந்தார்கள். அவர்களுக்கு உலகைக் கட்டி ஆளும் ஈஸ்வரனைப் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்தது.அவர்களுக்கு ஈஸ்வரத் தியானத்தை உண்டாக்க வேண்டும் என்று நினைத்த சிவன்,திருமாலை அழைத்து அம்முனிவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.
ravi said…
திருமாலும் அதற்கு சம்மதித்து முனிவரை மயக்கும் வகையில் அழகிய பெண்ணாக உருவெடுத்து சென்றார். சிவப்பெருமானும் பிச்சை எடுப்பவராக வேடம் தரித்து நந்தியையும் உடனழைத்துக் கொண்டு சென்றார்.
ravi said…
வனத்துக்குள் வந்ததும் நந்தியை ஓரிடத்தில் அமரச் செய்து முனிவர்களின் குடில்களுக்குச் சென்று பிச்சை எடுப்பது போல் சுற்றிக்கொண்டிருந்தார். பரம் பொருள் எம்பெருமானாகிய சிவபெருமான் அந்த வேடத்திலும் அழகில் குறையின்றி இருந்தார்.
ravi said…
அவரைக் கண்ட முனிவர்களின் மனைவிகள் அவர் மேல் மோகம் கொண்டு அவரையே சுற்றி வந்தார்கள். மறுபுறம் திருமாலின் பெண் வேடத்தில் மயங்கிய இளம் முனிவர்கள் அவள் பின்னாலேயே சுற்றி வந்தனர்.
ravi said…
தங்களின் தவ நிலை கலையாத வயது முதிர்ந்த முனிவர்கள் கோபம் கொண்டு அப்பெண்ணையும் அவள் பின்னால் சுற்றிய இளம் முனிவர்களையும்,பிச்சை வேடம் தரித்தவரையும் அக்னியில் அழிக்க ஹோமத்தை வளர்த்தனர்.
ravi said…
ஹோமத்திலிருந்து முதலில் புலி ஒன்று பாய்ந்து வந்தது. பிச்சை வேடம் தரித்து வந்த சிவப்பெருமான் அப்புலியை தன் நகங்களாலேயே இரண்டாக பிளந்து ஆடையாக்கி கொண்டார். அடுத்ததாக விஷம் கொண்ட பாம்புகள் சீறிப் பாய்ந்தன.சிவப்பெருமானின் அக்னி பார்வையில் அவை சிவனுக்கு அணிகலனாகின.

ravi said…
இதைக் கண்ட முனிவர்கள் ஆக்ரோஷத்துடன் முன்னிலும் தீவிரமாக யாகம் செய்து அபஸ்மாரம் என்ற பூதத்தை ஏவினர். ஓடி வந்த பூதத்தை வலதுகாலுக்கு அடியில் வைத்து சிவபெருமான் ஏறி நின்றார். இனி எதுவும் ஏவுவதற்கு இல்லை என்ற முனிவர்கள் ஹோம அக்னியையே ஏவினார்கள். சிவபெருமானோ அதை இடக்கையில் ஏந்தினார். கடைசி ஆயுதமாக வேத மந்திரங்களை ஏவினர் முனிவர்கள்.
ravi said…
அவற்றை சிலம்பாக மாற்றி தன் பாதத்தில் அணிந்து கொண்டார். இனி எதைக் கொண்டு வெல்வது என்று திணறிய முனிவர்களின் முன் தன்னுடைய சடைமுடி எட்டுத்திக்கிலும் விரிந்தாட கோபாவேசத்துடன் அண்டங்கள் எல்லாம் குலுங்க குலுங்க தாண்டவமாடினார்
ravi said…
சிவப்பெருமான்.சர்வத்தையே காக்கும் சர்வேஸ்வரனிடமா போர்புரிகிறோம் என்று ஈசனின் காலில் விழுந்து மன்றாடினார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் ருத்ரதாண்டவத்தை ஆனந்த தாண்டவமாக மாற்றி அருள்புரிந்தார். திருவாதிரை நாளன்று சிவபெருமான் நடேசனாக மாறி திருத்தாண்டவம் ஆடியதால் மகிழ்ச்சியில் உலவினார்.
ravi said…
பாற்கடலில் மகாவிஷ்ணு மகிழ்ச்சியில் திளைக்க என்ன காரணம் என்று ஆதிசேஷன் கேட்டார். சிவபெருமானின் தாண்டவத்தைப் பற்றி பரந்தாமன் சொன்னதும் தானும் அதைக் காண வேண்டும் என்று ஆதிசேஷன் ஆவல் கொள்ள பெருமாளும் ஆசியளித்தார்.

ravi said…
பாதி முனிவராகவும், பாதி பாம்பாகவும் பதஞ்சலி முனிவராக உருக்கொண்டு பூலோகம் வந்து தவம்புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி,உம்மை போலவே வ்யாக்ரபாதரும் என் திருநடனம் காணவேண்டி விரும்புகிறார். நீங்கள் இருவரும் தில்லையில் என் நடனத்தைக் கண்டு மகிழ்வீராக என்று கூறி மறைந்தார். சிதம்பரம் திருத்தலத்தில் தில்லை அம்பல நடராஜரின் திருநடனத்தை திருவாதிரை திருநாளில் கண்டனர். அதனால் தான் மார்கழி திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவாலயம் சென்று நடராஜரைத் தரிசனம் செய்தால் நமது பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.
நடன நாயகன் நடராஜரை நாமும் தரிசித்து பாவங்களை போக்கிகொள்வோம். புண்ணியங்களைச் சேர்த்து கொள்வோம்.
ஓம் நமசிவாய....
ravi said…
*திருப்பாவை 15*👌👌👌
ravi said…
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
ravi said…

திருப்பாவை
திருப்பாவை பாடல் 15

இந்த பாடலை கேட்க
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே!
ravi said…
எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.
ravi said…
ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.
ravi said…
திருவெம்பாவை பாடல் 15
ravi said…
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
ravi said…
அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள்.
ravi said…
சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.
ravi said…
மாணிக்கவாசகர் சிவலோகத்துக்கே சென்று விட்டதாகவும், தன்னை நந்தியாகப் பாவித்து, அங்கேயே தங்கியிருந்ததாக கற்பனை செய்து பாடியது இப்பாடல்.
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 854*🥇🥇🥇

*US 846*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

34வது ஸ்தபகம்

*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍

இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
ravi said…
846👍👍👍

யதி தவ க்ருபா புத்ரே பக்தே பாதாம்புஜவந்திநி

வ்ரதஸதக்ருஸே ஸ்ரீர் ஷாம் போஜாம்ருதம் த்வயி
ஜுஹ்வதி

பரததரணீ ஸேவாலோலே பவப்ரிய பாமினி

ஸ்வய முபதிஸாமுஷ்மை யோக்யம் விதா நம நாவிலம்🌷🌷🌷
ravi said…
அம்மா என் மீது நீ ஸஹஸ்ரார அமிர்தத்தைப் பொழியும் போது எனக்கு என்ன மனக்கவலை இருக்க முடியும் ?
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 274*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

49/
3
ravi said…
க்ஷணாத்தே காமாக்ஷி
ப்ரமர ஸூ ஷமாசி க்ஷணகுரு

கடாக்ஷவ் யாக்ஷேபோ மம பவது மோக்ஷாய விபதாம்

நரீ நர்த்து ஸ்வைரம் வசனலஹரீ நிர்ஜரபுரீ

ஸரித் வீசீ நீசீகரணபடு ஆஸ்யே மம ஸதா🎉🎉
ravi said…
அம்மா உன் கருணை வெள்ளம் அதில் நான் அடித்து செல்ல வேண்டும் . கறை இல்லாதவளே கரை காட்டும் காமாக்ஷி உன் கருணை இருக்கும் போது எனக்கு என்ன மனக் கவலை இனி 👍👍👍
ravi said…
[94/108] – *அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்*🥇🥇🥇🏆🏆🏆
ravi said…
திருப்பதி லட்டு, உப்பிலியப்பன் கோயில் உப்பில்லா சாதம், மதுரை கள்ளழகர் கோயில் தோசை ஆகிய பிரசாதங்கள் பிரசித்தி பெற்றிருப்பதைபோல, இக்கோயிலில் சர்க்கரைப்பொங்கல் பிரசித்தி பெற்ற பிரசாதமாகும்.

2 கிலோ அரிசியில் இந்த பொங்கல் தயாரிக்கப்பட்டால், 1 கிலோ 400 கிராம் முந்திரிப்பருப்பும், 700 கிராம் நெய்யும் சேர்க்கப்பட்டு மிக சுவையாக தயாரிக்கப்படுகிறது.

பக்தர்களும் இந்த நைவேத்யத்தை கட்டணம் செலுத்தி சுவாமிக்கு படைக்கலாம்.

ஒரு காலத்தில் துளசிக் காடாக(பிருந்தா ஆரண்யம்) இருந்து பல்லவ மன்னர்கள் மற்றும் சோழ மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.

திருக்கோயிலுக்கு எதிரே *கைரவிணி* என்கிற திருக்குளம் காணப்படுகிறது.

இந்திர,சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆகிய ஐந்து புனித தீர்த்தங்கள் இந்தத் திருக்குளத்தில் அடங்கி உள்ளதாக ஐதீகம்.

கங்கையைவிட புனிதமானது இந்தத் திருக்குளம் என்கிறது ஸ்தல புராணம்.💐💐💐
ravi said…
*கம்பராமாயணம்* *602* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
ravi said…
வேதங்களையும், வேத முறைப்படி செய்யும் வேள்விகளையும் அழித்து, அந்தணர்களுக்குத் தீமை செய்து, தேவர்களுக்குத் துன்பம் இழைக்கும் மகா பாதகர்களாகிய இவர்கள் நம்மிடம் மட்டும் அன்பு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

நம்மிடம் அடைக்கலம் அடைய விரும்பும் இவர்கள், பிறகு மாறுபட்டு நமக்குத் தீமை இழைக்க முயலும் போது, உன்னால் இவர்களைத் துரத்த முடியாது.

ஏனென்றால் அடைக்கலம் என்று வந்தவர்களை இராமன் கைவிட்டான் என்கிற பழி வந்து சேரும்".

"இவனை நம்மோடு சேர்த்துக் கொள்வதால் நமக்குத் தீமைகளே வந்து சேரும் என்பதை நான் அதிகம் கூற வேண்டுமோ?

சுருங்கச் சொன்னால், இந்த விபீஷணன் வரவு, முன்பு பொன் மானாக வந்த மாரீசனின் வரவைப் போன்றே தீமை பயக்கக்கூடியதே" என்று சொல்லி முடித்தான் ஜாம்பவான்.🍁🍁🍁
ravi said…
*சிவானந்தலஹரி 78*
*வது ஸ்லோகம் பொருளுரை*👏👏👏
ravi said…
இந்த புத்தியானது என்னிடமே இருந்தால், எப்போது வேண்டுமானாலும் கெட்டுப் போகவும் பாபக் காரியங்களில் பிரவேசிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அதனால் என்னுடைய இந்த புத்தியை உத்தரணம் பண்ணி தாங்கள் மணந்துகொண்டால், எப்பொழுதும் மங்களமான தங்களின் சிந்தனையிலேயே இருக்கும்.

கெட்டதுகளில் பிரவேசிக்கவே முடியாது!” என்று ஆசார்யாள் இப்படி வேண்டுகிறார் போலும்.🙏🌸

ஸீதா கல்யாணத்தின் போது, ஜனகர், சீதையின் கைகளை எடுத்து, ராமரின் கைகளில் வைத்து,

இயம் ஸீதா மம ஸூதா ஸஹ தர்ம சரீ தவ |

ப்ரதீச்ச சைனாம் பத்ரம் தே பாணிம் க்ருண்ஹீஷ்வ பாணிநா ||

பதிவ்ரதா மஹாபாகா சாயேவானு கதா ஸதா|

“இந்த சீதை, என் மகள், பதிவ்ரதை, இவள் நிழல் போல உன்னை எங்கும் பின் தொடர்வாள், இவள் ரொம்ப பாக்யவதி, இவளை ஏற்றுக் கொள்” என்று சொல்வது நினைவு வருகிறது.🎉🎉🎉

🙏🙏🙏🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை