Posts

Showing posts from November, 2020

பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 24 - 249

Image
                                                                   பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 24 (249) 👍👍👍💥💥💥 சீதையைக் காணல் இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந் திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கையைக் கண்டான்.  அதனைக் கண்டு தேவர் ஆரவாரித்தனர். வெற்றி வாசல் வழிதிறந்து காட்டியது. இராமன் அறிவித்த பேரழகு முழுவதும் எங்கும் பெயராது அங்குக் குடியிருந் தமையைக் கண்டான்.  சித்திரத்தில் தீட்டிய அழகு வடிவத்தைச் சிந்தனை முகத்தில் தேக்கிய வடிவத்தில்  கண்டான். புகையுண்ட ஒவியமாக அவள் காணப்பட்டாள். ‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்; தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்; தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த ஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்' அரக்கியர் மத்தியில் அவள் நொடிந்து இருந்தது, கற்களிடையே உணங்கிய மருந்துச்செடி போல இருந்தது. “ வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்; கல்மருங்கெழுந்து என்றும் ஒர்துளிவரக் காணா நன் மருந்துபோல் நலனற உணங்கிய நங்கை, மென்மருங்குல்போல்வேறுளஅங்கமும் மெலிந்தாள்”. புலிக்

பச்சைப்புடவைக்காரி -சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 23 - 248

Image
                                                         பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 23 (248) 👍👍👍💥💥💥 ரவி , அனுமன் சீதையை இலங்கையில் தேடிக்கொண்டிருக்கட்டும் -  உனக்கு இன்று அதிகம் தெரியாத ஒரு சம்பவத்தை சொல்லப்போகிறேன் --  அனுமன் ராமனின் நம்பிக்கையை எவ்வளவு தூரம்  பெற்றிருக்கிறான் என்பது தெரியவரும்  அனுமன் பராக்கிரமம் முழுவதையும் சொல்லவோ எழுதவோ முடியாது  அவனுடைய வால் போல் நீண்டுகொண்டே போகும். அவனாக நம் மீது இரக்கப்பட்டு போதுமே என்னைப்பற்றிப் பேசியது என்று சொன்னாலேத்  தவிர நம்மால் நிறுத்தவும் முடியாது ..  சொல்லுங்கள் தாயே - உங்களிடமிருந்து புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் .. இதுவரை இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான் தரிசித்திருப்பீர்கள்.  ஆனால், பத்து_கைகள், மூன்றுகண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும் இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்க

பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 21 -247

Image
                                                         பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 22 (247) 👍👍👍💥💥💥 ரவி  ராமன் மற்ற தெய்வங்களுக்கு சற்றே மாறுபட்டவர் என்றால் நீ நம்புவாயா ? இதை அனுமன் தான் உலகிற்கு எடுத்துக்காட்டினான் -- சொல்கிறேன் கேள்  மற்ற எல்லாத் தெய்வங்களும் கரங்களினால் அபய முத்திரைகளை காண்பிக்கும் - பாதங்களினால் அசுரர்களை எட்டி உதைக்கும் -- ஈசன் தன் திருக்களினால் காலனை எட்டி உதைத்தான் -  வாமனன் தன்  பாதத்தினால் அரக்க குணம் கொண்ட மகாபலி சக்கரவர்த்தியை பாதாள உலகிற்கு செல்லுமாறு அழுத்தினான் --  மகிஷாசுர மர்த்தினி மகிஷனை காலால் உதைத்தாள் -  இப்படி கால்களை ஒரு உதைக்கும் கருவிகளாவே மற்றது தெய்வங்கள் உபயோகிக்க ராமன் மட்டும் சற்றே மாறுபட்டு நிற்கிறான்  இங்கே அனுமன் ராமனை மாற்றிப்பாடுகிறான் - - எப்படி -- ராமா அபயம் தரக்கூடிய உன் கரங்களில் நீ  அழிக்கும் வில்லை ஏந்தியிருக்கிறாய் --  எட்டி உதைக்கவேண்டிய கால்களினால்  கருணை மழை பொழிகிறாய் ( அகல்யை சாப விமோசனம் )   ராமனைப்போலவே பரமேஸ்வரனும் தன் பாதங்களை மாணிக்க வாசகரின் சிரசில் வைத்து ஞானத்தை அ

பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 21 -(246)

Image
                                                              பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 21 (246) 👍👍👍💥💥💥 வாயு பகவான் தன்  மகனை தாலாட்டியதில்லை குழந்தையாக இருக்கும் போது - அவனுக்கு அந்த குறை அடிக்கடி எட்டிப்பார்க்கும் -  இன்று கொஞ்சமும் எதிர்பாராமல் அவனுக்கு அந்த அதிர்ஷ்ட்டம் அடித்தது --  தன்  கரங்களால் அவனை தூக்கிக்கொண்டான் - அவன் முதுகை  வருடிவிட்டான் ---  இதமான காற்றை சுகந்தம் நிறைந்த காற்றை அவனுடன் பறக்கவிட்டான் -  நதியில் விளையாடி கொடியில் தலை சீவிய தென்றல் அனுமனுடன் இலங்கைக்கு பயணமானது .. மலை குறுக்கிட்டது விண்ணில் பறந்தபோது எதுவும் கண்ணில் படவில்லை;  கொண்ட கொள்கை அண்ட முகட்டைத் தாவ உதவியது. கடலிலிருந்து மலை ஒன்று முளைத்தது; அது கண்டு அவன் மலைத்துப் போனான்;  அவனோடு போட்டி போட்டிக் கொண்டு அது உயர உயர நிமிர்ந்தது;  இவன் கால்பட்டு அதன் தலை சிதறியது; அது தலை கீழாய் உருண்டது;  அசுரன் தலையில் கால் வைக்கும் காளிபோல் அதன்மீது நின்று, காளிங்க நர்த்தனம் ஆடினான்;  அது தன் உச்சியை அடக்கிக் கொண்டது; மானுடவடிவம் கொண்டு அவனிடம் வந்து மண்டியிட்ட