Posts

Showing posts from March, 2022

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 71 ,72 & 73 பதிவு 60

Image
                      அபிராமி பட்டரும்   அடியேனும்    கேள்வி பதில் 71 , 72,73                                           பதிவு 60👌👌👌 கேள்வி பதில் நேரம்  பதிவு 60 🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான்  .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்  .  கேள்வி 71 நான்  :  ஐயனே .... நமஸ்காரம் . இறைவி அபிராமி எங்கும் வியாபித்தவள் என்று சொல்லுகிறீர்கள் .இதை தாங்கள் என்னைப்போன்ற அறிவிலிகளுக்கு புரியும் மாதிரி சொல்ல முடியுமா ?  பட்டர் ..   தகுதி இல்லாமல் இருப்பது தான் தகுதி என்று சொன்னேன் ஒருமுறை ... நீ அறிவிலி என்று நீயே ஒப்புக்கொண்டாய் ... பரவாயில்லை சொல்கிறேன் ...  🙌🙌🙌 பட்டர் பிரகஸ்பதி எனப்படும் தேவகுருவை மூன்று இளைஞர்கள் தேடிவந்தனர்.  முனிசிரேஷ்டரே! உம் சீடராக எங்களை ஏற்க வேண்டும், என்றனர்.  ஆளுக்கொரு கிளியைக் கொடுத்த குரு, யாரும் இல்லாத இடத்திற்குச் சென்று இந்த பறவையைக் கொன்று விட்டு வாருங்கள், என உத்தரவிட்டார்.  முதல் இளைஞன் கிளியை எடுத்துக் கொண்டு, காட்டுக்குச் சென்றான்.  ஆளே இல்லாத அந்த காட்டில், கிளியைக் கொன்று விட்டு குருவிடம் திரும்பினான்.  குரு

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 70 பதிவு 59

Image
                        அபிராமி  பட்டரும்  அடியேனும்    கேள்வி பதில் 70                                           பதிவு 59👌👌👌 கேள்வி பதில் நேரம் பதிவு 59 🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .  கேள்வி 71 நான்   மனதில் ஒரு பாட்டை அசை  போட்டுக்கொண்டிருந்தேன் ... பழைய பாடல் தான் .. PBS பாடியது .. யார் கேட்கிறார்கள் புது பாடல்கள் இப்பொழுது .. பாடலும் புரிவதில்லை பாடுபவரையும் தொடர்ந்து காண முடிவதில்லை ... ஆண்  : பால் வண்ணம் பருவம் கண்டு வேல் வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் பெண்  : கண் வண்ணம் அங்கே கண்டேன் கை வண்ணம் இங்கே கண்டேன் பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்...  கண்ணதாசன் வாழ்கிறான் .... கதவு தட்டும் சத்தம் .. ஓடி சென்று பட்டரை வரவேற்றேன் ... பட்டர்   என்னப்பா நான் வந்த உடன் நல்ல பாட்டை நிறுத்தி விட்டாய் .. இன்னும் கொஞ்சம் பாட விடு ... கேட்போம்   பெண்  : பருவம் வந்த காலம் தொட்டு பழகும் கண்கள் பார்வை கெட்டு என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா? ஆண்  : நாள் கண்டு மாலையிட்டு நான்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 69 பதிவு 58

Image
                      அபிராமி பட்டரும்     அடியேனும்    கேள்வி பதில் 69                                         பதிவு 58👌👌👌 கேள்வி பதில் நேரம்    பதிவு 58 🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான்  .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்  .  கேள்வி 69 நான்  ஐயனே சீதையின் அழகை கம்பன் மூலமாய் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் . இன்னும் தாங்கள் அதை  சொல்ல நாங்கள் அதை கேட்க ஆவலாக இருக்கிறோம் பட்டர் நம்புவதே வழி    என்ற  மறைதனை         நாமின்று  நம்பிவிட்டோம்  கும்பிட்டு  எந்நேரமும்  சக்தி  என்றால்       உனைக் கும்பிடுவேன் மனமே! கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள்.  ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள். ‘ சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள் ’ என்கிறார் கம்பர்.  நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘ மின்னல் அரசி’யாம் சீதை!⚡⚡⚡ பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம்.  அது பால் முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா?  அதுபோல, கண்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 68 பதிவு 57

Image
                        அபிராமி   பட்டரும்   அடியேனும்    கேள்வி பதில் 68                                        பதிவு 57👌👌👌 இன்று ஸ்ரீ லலிதாம்பிகையின் நினைவில் மூழ்கி போனேன் .. அன்னையே உனக்கு ஊடலும் உண்டோ ? ஊடலும் கூடலும் நம்மை காக்கவே ஈசனவன் பாசமுடன்  அம்பிகையை அணைக்க மாமுனிவன்  சாபத்தில் கதிரவன்  கதற ஒசைகேட்டு கூத்தபிரான் சற்றே விலக கோபம் கொண்ட கோமகளின்  முகமது சிவக்க அது குறைக்க அண்ணலும்  முகமதை வருட சினம் தனிந்து மனம் குளிர்ந்து சாபத்தை நீக்க வையகத்தை வாழவைத்தாள் லலிதாம்பிகை பட்டர்   பேஷ் பேஷ் .. ஸ்ரீ லலிதாவை நினைப்போர்க்கு நினைப்பதெல்லாம் நடக்கும் 💐💐💐 இன்று ஒரு கேள்வியும் இல்லையா நான் போகட்டுமா ?    நான்  .. ஐயனே .. போவதாவது ...  தாங்கள் அன்னையின் இடையை மின்கொடி என்று வர்ணீத்தீர்கள் ... கொஞ்சம் விளக்க முடியுமா ?  பட்டர்  ... கம்ப ராமாயணம் படித்தது உண்டா ?  நல்ல நூல்களை நீ எங்கே படித்திருக்க போகிறாய் ...??  அன்னையின் அழகை என்னைவிட அதிகமாக வர்ணித்துள்ளான் கம்பன்  அபிராமிக்கும் அப்படியே பொருந்தும்  பார்ப்போமா ? 👌 👌👌 விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமண