அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 69 பதிவு 58

 

                    அபிராமி பட்டரும்     அடியேனும் 

  கேள்வி பதில் 69

                                        பதிவு 58👌👌👌



கேள்வி பதில் நேரம் 

 பதிவு 58 🥇🥇🥇

கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான் . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் . 

கேள்வி 69

நான் ஐயனே சீதையின் அழகை கம்பன் மூலமாய் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் .

இன்னும் தாங்கள் அதை  சொல்ல நாங்கள் அதை கேட்க ஆவலாக இருக்கிறோம்



பட்டர்

நம்புவதே வழி    என்ற  மறைதனை 

       நாமின்று  நம்பிவிட்டோம் 

கும்பிட்டு  எந்நேரமும்  சக்தி  என்றால்

      உனைக் கும்பிடுவேன் மனமே!

கன்னிமாடத்தில் சீதையின் அருகே பல பெண்கள் இருக்கிறார்கள். 

ஆனால் அவர்கள் யாரும் சீதையுடைய அழகுக்கு இணையாகமாட்டார்கள்.

சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’ என்கிறார் கம்பர். 

நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவியாக நின்ற ‘மின்னல் அரசி’யாம் சீதை!⚡⚡⚡

பாலில் ஒரு துளி மோரைதான் பிரை ஊற்றுகிறோம். 

அது பால் முழுவதும் சென்று அதனைத் தயிராக மாற்றிவிடுகிறது அல்லவா? 

அதுபோல, கண்களின்வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. 

அவள் துடிதுடித்தாள்....

என்னை வருத்துவது எது? 

இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? 

நிலவைப் போன்ற முகமா? 

நீண்ட கைகளா?

அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

இங்கே ‘தாழ்ந்த கைகளும்’ என்ற பிரயோகத்தைக்கவனிக்கவேண்டும்.அதாவது, நீண்ட கைகள், அதனை ராஜ லட்சணம் என்று சொல்வார்கள்.

என்னதான் ராஜாவானாலும், காதல் வந்துவிட்டால் அவன் நிலைமையும் பரிதாபம்தான். 


சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.

பொருள் எலாம் அவள் பொன்னுருவாயவே’ என்கிறார் கம்பர்.

பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா’ என்று பாரதி பாடியதுபோல, 

ராமனுக்கு எதைப் பார்த்தாலும் சீதையின் பொன் வடிவம் மட்டுமே தெரிகிறதாம். 

அவளையே நினைத்துக்கொண்டு படுத்துக் கிடக்கிறான்.

அம்புக்கும்  தீக்கும்   விடத்துக்கும்  நோவுக்கும்  

                அச்சமில்லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு  தரும்  பதம்

                   சக்தி  ஓம். ஓம்  ஓம் 🙌🙌🙌


ரவி ஏதேது என்னை கம்பராக்கி விடுவாய் போலிருக்கே திருக்கடையூர் போகவேண்டும் நாளை பார்ப்போம் 

நான் ... 

ஐயனே கம்பர் வர்ணித்திருக்கலாம் ஆனால் நீங்கள் அதை எங்களுக்கு புரியும் மாதிரி எடுத்து சொல்வது மிகவும் அருமையாக இருக்கிறது .... 

பட்டர் சிரித்துக்கொண்டே பறந்து சென்றார் .. நானும் ஒரு பருந்தாய் மாறி விடக்கூடாதா என்றே ஏங்கினேன் 🦅🦅🦅

என்ன அழகான விளக்கம்... சபாஷ் 👌👌🙏

Comments

ரமணி said…
ரமணி

சீதையின் அழகிற்கு அழகு சேர்த்த பதிவு...

மொத்தத்தில் பேரழகு...

🙏🙏🙏🙏
ravi said…
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யக் கதை!!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். 🌿
ravi said…
திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.🌿
ravi said…
மதுரைக்கு வடக்கே சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி, எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுக்கிரகம் பண்ண வேண்டும்' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக, இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.🌿
ravi said…
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.🌿
ravi said…
மூலவருக்கு அடுத்தபடியாக அதிமுக்கியமானவர் சோலைமலைக்கரசராக விளங்கும் உற்சவர்தான். 'அபரஞ்சி' என்ற அரியவகை தங்கத்தாலானவர் சோலைமலைக்கரசர். 'அபரஞ்சி' என்பது தேவலோகத் தங்கம் என்பதால், இந்தப் பெருமாளையும் தேவலோகப் பெருமாளாக பூஜிக்கிறார்கள். உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று - அழகர் கோயிலில்! இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாபசுவாமி கோயிலில்.🌿
ravi said…
அழகர் ஆற்றில் ஏன் இறங்குகிறார் என்று பார்ப்போமா?
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாக போகக் கடவாய்!) என சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. 🌿
ravi said…
சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர். அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் விவரிக்கின்றன.🌿
ravi said…
சித்ரா பௌர்ணமிக்கு நான்கு நாள் முன்னதாகச் சித்திரைத் திருவிழா தொடங்கிவிடுகிறது. 🌿

முதல் இரண்டு நாட்கள் கோயிலில் இருப்பார் அழகர். 🌿

மூன்றாம் நாள் மாலை மதுரையை நோக்கிப் புறப்படுகிறார். ஆரம்ப காலத்தில் கோயிலைவிட்டு கிளம்பும் அழகர், அலங்காநல்லூர் போய்ச் சேருவார். அங்கு அழகரை குதிரை வாகனத்தில் தூக்கிவைத்து (ஆற்றில் இறங்குவதற்காக) அலங்காரம் செய்வார்கள். அழகருக்கு அலங்காரம் செய்யும் ஊர் என்பதால், அலங்காரநல்லூராக இருந்து, பின்பு அலங்காநல்லூராக மாறிப்போனதாகச் சொல்கிறார்கள். 🌿
ravi said…
அலங்காநல்லூரில் இருந்து தேனூருக்கு வந்து வைகை ஆற்றில் இறங்கும் அழகர், அதன் பிறகு வண்டியூருக்கு வந்து மண்டூக முனிவருக்கு (சுதபஸ்) சாபவிமோசனம் கொடுப்பார். இதனால் மண்டூர் என அழைக்கப்பட்டு அதுவே மண்டியூராகிப் பிறகு வண்டியூராகிப் போனதாம்.🌿
ravi said…
கள்ளர் கொண்டை, கொண்டையில் குத்தீட்டி, கையில் வலைதடி (பூமராங்), இடுப்பில் ஜமதாடு (ஒருவகை கத்தி) என விதவிதமான ஆயுதங்களுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறார் கள்ளழகர். அழகர் மலையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டுவரும் அவர், வழிநெடுக பக்தர்களால் ஏற்பாடு செய்யப்படுகிற ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் ஆசி வழங்கிவிட்டு, நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு வந்து சேருகிறார். 🌿
ravi said…
அதற்கு முன்னதாக மதுரை எல்லையான மூன்றுமாவடியில் அழகரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி களைகட்டுகிறது.🌿

நான்காம் நாள் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கள்ளழகருக்கு அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்துக்கும் நூபுரகங்கையிலிருந்து தீர்த்த நீர் தலைச்சுமையாகக் கொண்டு வரப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு அலங்காரம். இதிலும்கூட ஒரு நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். 🌿
ravi said…
இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா...என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது அன்றைய தினம் அழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும்.🌿
ravi said…
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.🌿
ravi said…
ஐந்தாம் நாள் பௌர்ணமியன்று, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். இதற்கு தல்லாகுளத்தை விட்டு கள்ளழகர் கிளம்பியதுமே தண்ணீர் பீய்ச்சும் வைபவம் தொடங்குகிறது. அந்தக் காலத்தில் அழகர் வருவதற்குப் புதிதாகப் பாதை அமைத்ததால் தூசி கிளம்பாமல் இருப்பதற்காகவும், வெப்பத்தைத் தணிப்பதற்காகவும் தண்ணீர் பீய்ச்சும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். காலப்போக்கில் தண்ணீர் பீய்ச்சுவது ஒரு முக்கிய வைபவமாக மாறிப்போனது. அழகர் ஆற்றில் இறங்கி வண்டியூர் போய்ச் சேரும் வரை இந்த வைபவம் கலகலப்பாக நடக்கிறது.🌿
ravi said…
ஆற்றிலிறங்கும் அழகரை மதுரையில் உள்ள வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு அழைப்பார். ஆற்றுக்குள் இருவரும் மாலை மாற்றி மரியாதை பண்ணிக் கொள்வார்கள். அதன்பிறகு மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். வழிநெடுக வரவேற்பு பெற்றுக்கொண்டு ஐந்தாம் நாள் இரவு வண்டியூர் போய்ச் சேருகிறார் அழகர். 🌿
ravi said…
ஆறாம் நாள் அதிகாலையில் அழகருக்கு ஏகாந்த சேவை. பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், வண்டியூர் பெருமாள் கோயிலை வலம் வருவார். அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் (இந்த மண்டபம் வைகை ஆற்றுக்குள் திருமலைநாயக்கரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே தேனூரில் நடந்து கொண்டிருந்த வைபவங்கள் இப்போது இந்த மண்டபத்தில் நடக்கிறது) வந்து சேருகிறார் அழகர்.🌿
ravi said…
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கிருந்து மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார். பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு ஆறாம்நாள் இரவு வந்து சேருகிறார். அன்றிரவு அங்கு தங்குகிறார். இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், 🌿
ravi said…
ஏழாம் நாள் காலையில் அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் (திருமலை நாயக்கரின் திவானால் செய்து கொடுக்கப்பட்ட இது முழுக்கத் தந்தத்தால் இழைக்கப்பட்டது) தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார். அன்றிரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும்.🌿
ravi said…
எட்டாம்நாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பூஜை புனஸ்காரங்களை ஏற்றுக்கொண்டு ஒன்பதாம் நாள் காலையில் அழகர் கோயிலைச் சென்றடைவார். 🌿

பத்தாம் நாள் பயணக்களைப்பு நீக்குவதற்காக உற்சவசாந்தி அபிஷேகம் நடக்கிறது. அத்துடன் சித்திரைத் திருவிழாவின் பத்து நாள் கொண்டாட்டங்கள் சுபமாக நிறைவுற்று மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது மதுரை.🌿
ravi said…
காவல் ஜமீன்
💐💐💐💐💐

அந்தக் காலத்தில் கள்ளழகரின் பாதுகாவலராக வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் நியமிக்கப்பட்டிருந்தார். இன்றுவரை அந்த ஜமீன் வாரிசுகள்தான் கள்ளழகருக்குப் பாதுகாப்பு. இன்றும் ஜமீன்தார் வந்து அவருக்குரிய மரியாதைகள் வழங்கப்பட்ட பிறகுதான் கோயிலைவிட்டு மதுரைக்குக் கிளம்புவார் அழகர். 🌿
ravi said…
அந்தக் காலத்தில் அழகருக்குப் பாதுகாவலாகக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழகரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டே இருப்பார் ஜமீன். இப்போது வண்டிதான் மாறியிருக்கிறது. பத்து நாட்களும் அவர் அழகருடன் இருப்பார். இப்போதும் அதே வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.🌿
ravi said…
ஸ்ரீ ராம ஜயம்*

*இன்று ஹனுமத் ஜயந்தி*

மாதவம் செய்த மாதவள் அஞ்சனை மடிதனில் மலர்ந்தவனாம்

மாதவன் ராமன் தூதுவன் என்றே மாகடல் கடந்தவனாம் ---(மாதவம்)

ராமனைப் போற்றிப் பாடிடும் நேரம்

ரகசியமாய் வருவான்
கைத் தாளங்கள் போட்டு ஆனந்தமாக மனங்குளிர்ந்தே மகிழ்வான்

கண் மடல் மூடிமெய் மலர் சூடி செவி மடல் திறந்திடுவான்

நாதனின் காதை யாவும் கேட்டு விழி மழை சொரிந்திடுவான் ---(மாதவம்)

ராமனை நெஞ்சில் மாமலை கையில் சுமந்திடும் ஜய ஹனுமான்

பீமனை அள்ளி மார்புடன் சேர்த்து அணைத்திடும் ஜய ஹனுமான்

சந்தன வாசம் வீசிட எங்கும் வலம் வருவான் ஹனுமான்

நித்திலம் தன்னில் நித்தியம் வாழ்ந்து ஜயம் தரும் ஜய ஹனுமான்.. மாதவம்)

கோமகனாக வாழ்ந்திடும் சீலன்
கோயில் நாம் அடைவோம்

கோசலை ராமன் நாமத்தைப்பாடி அவனருள் வேண்டிடுவோம்

வீழ்ச்சியை மாற்றி மீட்சிகள் சேர்க்கும் பாடிடு

அவன் மகிமை
வான் மழை போல பூமழை வார்க்கும் மாருதி அவன் கருணை ---(மாதவம்)

ravi said…
வீர பராக்கிரமம் இருப்பினும் அரசகுலத்து அந்தஸ்துகள் இருப்பினும், புத்தி விசாலம் இருப்பினும் ,ஒருபடையை நிகர்த்த பலமுள்ள உடன் பிறப்பு
கூடவெ இருப்பினும்,
விதியின் வலியால் மனைவியை ஸ்ரீ ராமன் பிரிய நேரிட்டது.
ravi said…
மாதர்களை மனதளவிலும் தீண்டாத பிரும்மச்சாரி,

கடும் ஒழுக்க சிந்தனை உடையவரும், புலன்களை அடக்கி ஆண்டு அதன் மீது ஆட்சி செலுத்த வல்லவரும்,

இணயில்லாத பலம் மிக்கவரும்,

அதே நேரம் பணிவும், பக்தியும் மிகுந்தவரும்,

இனிமையாக
பேசுபவரும்,பேச்சில் வல்லமை உடையவரும்,

சோர்வே இல்லாதவரும்,

தர்மத்தின் பக்கம் நிற்பவருமான ஸ்ரீஆஞ்சநேயரின் துணை தேவைப் பட்டது.

ஒழுக்கமும், தர்மமும்தான் பொய்மையை வெல்ல மிக உதவி செய்யும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

வெறும் புஜ வலிமை போதாது.
ravi said…
மனித மனம் ஒரு வானரம். 🐒

அதை அடக்கி ஆண்டு ஆட்சி செய்கிற விஷயம் ஹனுமான்.

அப்படி அடக்கி ஆண்டதை அலட்டாது மிக வினயமாக எங்கு பார்த்தாலும் கைகூப்பி அமைதியாக புன்சிரிப்போடு ஹனுமான்.

தன்னை பாராட்டிக் கொள்ளாமல் தன் பலம் எத்தகையது என்றுதானே ஆராய்ச்சி செய்யாமல் பலம் இருக்கிறதா, இருந்து விட்டு போகட்டுமே என்று மிக மிக வினயமாக நின்ற நிறைகுடம் ஸ்ரீஹனுமான்.

அலட்டலும், அஹம்பாவமும் வாழ்க்கையாகப்போன இந்தக் காலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தை படிக்கிறபொழுது நாம் ஒன்றுமே இல்லை என்ற எண்ணம் மிகுந்து வருகிறது.

சுந்தர காண்டம் ஒரு மனிதனுக்கு ஏற்பட்ட துக்கத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அதற்கு ஏற்பட்ட விடிவு நேரத்தையும் விவரிக்கிறது.

மிகப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது.

நீங்கள் வெற்றி பெற்றாலும் புன்சிரிப்போடு நன்றி என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்க உங்களுக்கு உதவும்.


ஜய ஜய ஹனுமான் கோஸாயி

கிருபா கரஹூ குருதேவெ கீ நாயீ
ravi said…
*கண்ணனும் சகாதேவனும்* 💐💐
ravi said…
போருக்கு நாள் குறிக்கவே புறப்பட்டான் துரியோதனன் ...

சாவுக்கும் நாள் குறிப்பவன் சிரித்தான் ..

சங்கடங்கள் பெறுகவே நாள் குறிப்பாரோ எவரும் ...

சகாதேவன் ஜாதக கலையில் கை தேர்ந்தவன்

வரவேற்றான் எதிரி தனை ...

வந்தவர் எவராயினும் உள்ளதை சொல்வதே உத்தமம் என்றே கொள்கை கொண்டவன் ...

கண்ணன் போல் பொய் சொல்லத் தெரியாது ...

அர்ச்சுனன் போல் சூது வாது புரியாது ...

பீமனைப்போல் கதை ஓங்காது

நகுலன் போல் பரி ஒட்டத் தெரியாது ...

தருமனின் தர்மம் ஒன்றே அறிவான் ...

பகை என்று அவன் எதுவும் கண்டதில்லை ...

வரும் அம்மாவாசை நல்ல நாள் நர பலி ஒன்று கொடுத்தே போர் செய்யும் நாள் என்றான் அவன்

துரியோதனன் கட்டிக்கொண்டான் ...

பரந்தாமன் இருக்கும் போதே பலி கவர் தெய்வங்கள் பாற் சென்றே மிக்க அன்பு பூண்டான் ...

கண்ணன் தான் சொன்ன கீதையை சகாதேவனிடம் இருந்தே பெற்றான்

தர்மம் சமநிலை .. எதிரி என்று யாரும் இல்லை ..

எண்ணங்கள் மாறலாம் ..

ஏழ் கடலும் பொங்கலாம் ...

உதவி கேட்போர் எவராயினும் உண்மை ஒன்றே சொல்ல வேண்டும்

கண்ணன் சொல்லாத கீதை சகாதேவன் சொன்னான் ...

மகா தேவன் சொன்ன வார்த்தை ஸ்ரீ சங்கர கீதை ஆனதே ...

காஞ்சியிலும் கலவையிலும் காலடியிலும் ஜய ஜய சங்கர என்றே சொல்லி வெற்றி பவனி வருகிறதே 💐💐💐
ravi said…
கள்ளழகர் புறப்பட்டு விட்டார் தங்கையின் திருமணம் காணவே ...

வைகை கை கொண்டு வரவேற்க அதிலே பாதம் வைத்தார் பரந்தாமன் ...

அடித்து செல்லும் கருணை ஆற்றில் நீந்தியே காஞ்சி சேர்ந்தான் அழகிய சிங்கன் ...

காமாக்ஷி ஏகாம்பரேஸ்வரர் திருமணம் ..
நடுத்தும் பெரியவாளை பார்த்தே பெருமை பட்டான் வரதன் ...

என் குறையும் தீர்க்கின்றாய் ..

தங்கை அவள் திருமணமும் என்னை காண வைத்தாய் ..

மூன்றடி எடுத்தேன் ஓங்கி உலகளந்த உத்தமன் என்றே புகழ்ந்தனர் ...

காஞ்சியில் கால் பதித்தாய் என்னிலும் பெரியவா என்றே பெயர் எடுத்தாயே ..
ravi said…
சங்கராம்ருதம் - 123

செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.
ஆந்திராவில் மஹா ஸ்வாமிகள் எங்கு முகாமிட்டிருந்தாலும் எந்த வேலை இருந்தாலும் அதை அந்த க்ஷணமே மூட்டை கட்டி வைத்து விட்டுப் புறப்பட்டு விடுவார்கள். அந்த மகானைக் கண் குளிரக் கண்டு தரிசிப்பதென்றால் இருவருக்கும் அவ்வளவு ப்ரியம்;
ravi said…
ஆனந்தம்; நெகிழ்ச்சி.
ஒருமுறை சதாராவில் (மகாராஷ்டிர மாநிலம்) பெரியவா
முகாமிட்டிருப்பதாக கோமதிக்கு தகவல் கிடைத்தது. கணவர் கிருஷ்ணமூர்த்தியிடம் விவரத்தை எடுத்துச் சொல்லி, சதாரா போய் பெரியவாளைத் தரிசனம் செய்து விட்டு வருவோமே என்று கேட்க ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று சந்தோஷப்பட்ட கணவர் கிருஷ்ணமூர்த்தியும் சரி என்று சொன்னார்.
ravi said…
அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே பயணத்துக்கு வேண்டிய துணிமணிகளுடன் இருவரும் சதாரா கிளம்ப ஆயத்தமானார்கள்.
சதாராவுக்கு இவர்கள் போய் சேர்ந்தபோது மாலை நேரம் ஆகிவிட்டது. ஆந்திராவில் பெரியவா தரிசனத்துக்காகப் பல பகுதிகளுக்கு இந்த இருவரும் போயிருந்தாலும், சதாரா விசிட் இது தான் அவர்களுக்கு முதல்முறை. எனவே முன்பின் அதிகம் பழக்கம் இல்லாத ஊரில் ஆட்டோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு சதாராவில் உள்ள சங்கரமடத்துக்குப் போனார்கள்.
நீண்ட தூரம் பயணித்து வந்திருந்ததால், மடத்துக்கு வெளியிலேயே உள்ள குழாயடியில் கை – கால்களைச் சுத்தம் செய்து கொண்டு
இருவரும் மடத்தின் உள்ளே நுழைந்தார்கள். மகானை தரிசித்து அவரின் ஆசியைப் பெற்றுவிட வேண்டும் என்றே இருவரின் மனமும் பரபரத்தது. பயணச் சலிப்பை எல்லாம் அந்த ஒரு தரிசனமே போக்கிவிடும் என்று விழைந்தார்கள்.
ravi said…
சதாரா சங்கரமடத்தின் உள்ளே காலடி எடுத்து வைத்ததுமே, கோமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் மனம் மிகவும் லேசானது. அவர்களது கண்களிலும் மனதிலும் பெரியவாளின் திருக்காட்சியே தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தது. கலியுகத்தின் கண் கண்ட தெய்வமான சாட்சாத் சிவ சொரூபமாக தரிசனம் தருகின்ற அந்த சங்கரனை தரிசிப்பதில் காலம் தாழ்த்தக் கூடாது என்பதாக மடத்தின் உட்புறம் பார்வையால் அங்குமிங்கும் தேடினார்கள் – மஹாபெரியவா எங்கே என்று.
மடத்தின் உள்ளே அவ்வளவாகக் கூட்டம் இல்லை. யாரோ ஒரு பாட்டி மடத்தின்
அமைதியான ஒரு மூலையில் அமர்ந்து ருத்திராட்சத்தை வைத்துக் கொண்டு ஜபம் செய்து கொண்டிருந்தார்
ravi said…
ஓரிரு மடத்துச் சிப்பந்திகள் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்தனர். புத்தம் புதிதாகவும், வண்ண மயமாகவும் பிரகாசிக்கின்ற பூக்களை ஒரு மூங்கில் கூடையில் வைத்து குறுக்கே கடந்து சென்றார் உள்ளூர் ஆசாமி ஒருவர். அநேகமாக மடத்து பூஜைக்காக இருக்கலாம்.
புதிதாக யாரோ இருவர் உள்ளே வருவதைப் பார்த்ததும் மடத்துச் சிப்பந்தி ஒருவர் விறுவிறுவென இவர்களிடம் வந்தார். ‘வாங்கோ வாங்கோ… எங்கேர்ந்து வர்றேள்? மெட்ராஸா? என்று அவராகவே ஊகம் செய்து கேட்டார்.
ravi said…
இவர்கள் செகந்திராபாத்தில் இருந்து வருவதாகவும் பெரியவாளின் தரிசனத்துக்காகப் புறப்பட்டு வந்ததாகவும் சொன்னார்கள்.
சிப்பந்தி உடனே. ‘அடடா…பெரியவா இப்ப மடத்துல இல்லியே..’ என்றார்.
கோமதியின் முகம் வாடிப் போனது.
‘பெரியவா காஞ்சிபுரம் கெளம்பிப் போயிட்டாளா? என்று கேட்டார் கோமதி.
‘இல்லை….சதாரா க்ஷேத்ராடனம் இன்னும் பூர்த்தி ஆகலை. இங்க தான் பக்கத்துல ‘பூசேகாள்வ்’ அப்படிங்கற ஒரு கிராமத்துக்குப் போயிருக்கார். அந்த கிராமத்துக்காரர் பெரியவா தங்களோட கிராமத்துக்கு அவசியம் வந்து அனுக்ரஹம் பண்ணனும்னு பிரயாசைப்பட்டா. அதான் அங்கே போயிருக்கார்’ என்றார் சிப்பந்தி.
ravi said…
அப்போது, யாரோ ஒருவர் இந்த சிப்பந்தியின் பெயரை சொல்லி உரத்த குரலில் அழைக்க…’ தோ வந்துட்டேன்’ என்று பதில் குரல் கொடுத்து விட்டு, கோமதி மற்றும் கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லிக்காமல் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார்.
ravi said…
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருவரும் சங்கரமடத்தின் உள்ளிருந்து வெளியே வந்தனர். மாலை நேரத்தில் அந்தச் சாலை பிஸியாக இருந்தது.
கோமதிக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை.
நேரமோ மெள்ள இருட்டிக் கொண்டு வருகிறது.
ravi said…
இனிமேல் ஏதாவது ஆட்டோ அல்லது டாக்ஸி பிடித்துக் கொண்டு ‘பூசேகாள்வ்’ போய்விடலாமா என்று யோசித்தார்கள். ‘பெரியவாளை எப்படியும் வந்த சூட்டில் இன்றே தரிசனம் செய்துவிடவேண்டும்’ என்கிற பரபரப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது.
மடத்தின் வாசலுக்கு அருகே நிற்கும் புதியவர்களைப் பார்த்து ஒரு சில ஆட்டோக்காரர்கள் அவர்களை நெருங்கினார்கள்.
ravi said…
வாங்க…பெரியவாளைத் தரிசிக்கத்தானே வந்திருக்கீங்க…. பூசேகாள்வ் கொண்டு போய் விட்டுடறோம். நீங்களா பார்த்து ஏதாவது கொடுங்க என்றனர் வழக்கமான பேர யுக்தியுடன்.
ஆனால் கோமதிக்கு மட்டும் அந்த இருட்டு வேளையில் – அதுவும் பழக்கமே இல்லாத புது இடத்தில் பயணப்படுவது சரி இல்லை என்று திடீரெனத் தோன்றியது. பேரம் பேசிய ஆட்டோக்காரர்களை
அங்கிருந்து அனுப்பிவிட்டார்கள். அதன் பிறகு இரவு வேளையில் பயணம் வேண்டாம். இன்று இரவுப் பொழுதை சங்கரமடத்திலேயே கழித்து விட்டு மறுநாள் காலை பூசேகாள்வ் புறப்படலாம் என்று இருவருமே தீர்மானித்தனர்.
ravi said…
இருவரும் சங்கரமடத்துக்குள் மீண்டும் நுழைவதைப் பார்த்த அந்த மடத்துச் சிப்பந்தி ‘ வாங்கோ….நானே சொல்லணும்னு நெனைச்சேன். அதுக்குள்ள யாரோ உள்ள கூப்டதனால போயிட்டேன். வந்து பார்த்தா உங்களைக் காணோம். இந்த அகால வேளையில நீங்க இரண்டு பேரும் தனியா அந்தக் கிராமத்துக்குப் போக வேண்டாம். பாதையும் கரடுமுரடா இருக்கும். ராத்திரி பொழுதுக்கு இங்கேயே தங்கிடுங்கோ. கார்த்தால எழுந்ததும், ஒரு ஸ்நானம் பண்ணிட்டு பஸ்ஸுல போங்கோ. நேரா பூசேகாள்வ் போயிடலாம்’ என்றவர், இருவரும் தங்குவதற்கு உண்டான இடத்தைக் காண்பித்தார். பிறகு ‘ஆசுவாசப்படுத்திண்டு வாங்கோ.. உங்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிப்பந்தி.
ravi said…
தங்குவதற்கு இடமும் கொடுத்த சிப்பந்தியிடம் நன்றி சொல்லிவிட்டு, பேருந்து நிலையத்துக்குப் புறப்படலாம் என்று இருவரும் அந்தச் சிப்பந்தியிடம் போனார்கள்.
‘ரொம்ப நன்றி… பெரியவா தரிசனத்துக்காக நாங்க பொறப்படறோம். நீங்க சொன்ன மாதிரியே பஸ்ஸுலயே பயணப்படறோம்’ என்றார் கோமதி.
ravi said…
அந்தச் சிப்பந்தி சட்டென்று அப்போது தான் நினைவுக்கு வந்தவர் போல ‘மாமி..உங்களோட நல்ல நேரம். இப்ப இங்கேர்ந்து ஒரு வேண் பூசேகாள்வ் போறது. அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் இதெல்லாத்தையும் ஏத்திண்டு அந்த வேன் பொறப்படப் போறது. மடத்துச் சிப்பந்திகள் சில பேரும் அதுல வருவா. வேன்ல இடமும் இருக்கு. நீங்களும் வேன்லயே போயிடுங்கோ. விசாரிச்சுண்டு போகணுமேங்கிற அவஸ்தை இருக்காது.’
கோமதியும் அவரது கணவரும் அடைந்த சந்தோஷத்துக்கு
அளவே இல்லை. ‘
ravi said…
பஸ்ல ஏறி நாங்க சிரமப்படவேண்டாம்னு பெரியவாளே எங்களுக்கு அனுக்ரஹம் பண்றதா நினைச்சு சந்தோஷப்படறோம். உங்களோட இந்த ஒத்தாசைக்கு ரொம்ப நன்றி’ என்ற கோமதி தன் கணவருடன் நடந்து வேன் இருக்கும் இடத்துக்குச் சென்றார்.
ravi said…
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ என்ற வாசகம் எழுதப்பட்ட அந்த வேனில் ஏற்கனவே சாமான்களை ஏற்றி முடித்திருந்தார்கள். சிப்பந்திகளும் தயாராக இருந்தார்கள். கோமதியும் அவரது கணவரும் வேனின் முன் இருக்கைப் பக்கம் ஏறி வசதியாக அமர்ந்து கொண்டார்கள்.
சமமான சாலையில் பயணித்த பின், கரடு முரடான சாலையில் குலுங்கலுடன் சென்ற அந்த வேன், சில நிமிடங்களுப் பிறகு பூசேகாள்வ் என்கிற கிராமத்தை அடைந்தது. அங்கே பெரியவா தங்கி இருப்பதாகச் சொல்லப்படும் ஒரு இடத்தின் முன் வேன் நின்றது.
‘இறங்கிக்குங்கோ…. இங்கதான் பெரியவா தங்கி இருக்கா’ என்றார் வேனில் வந்த மடத்துச் சிப்பந்தி ஒருவர். கோமதியும் அவரது கணவரும் தங்களது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு வேனில் இருந்து இறங்கினர். மஹாபெரியவா தங்கி இருந்ததாகச் சொல்லப்படும் இடத்தைச் சுற்றி அளவான ஒரு கும்பல்.
ravi said…
மனதுக்குள் சங்கர ஜபத்தை முணு முணுத்துக் கொண்டே கோமதியும் அவரது கணவரும் மெள்ள நடந்து சென்றனர். மனதுக்கு இதம் தரும் நந்தவனம். வண்ண மலர்களின் நறுமணத்தை அந்தப் பிராந்தியம் முழுதும் அள்ளி வீசித் தெளித்துக் கொண்டிருந்தன அந்த மலர்கள். அங்கே தான் பெரியவா – புன்னகை ததும்பும் முகத்துடன் மண்தரையில் அமர்ந்திருந்தார். ஒரு நந்தியாவட்டை பூச்செடியின் அருகே சிவ சொரூபமாக வீற்றிருந்தார். முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்.
மஹா பெரியவாளை – ஸ்ரீ சங்கரமடத்தின் ஆச்சார்ய புருஷரை – வெகு சிம்பிளான இடத்தில் பார்த்த மாத்திரத்திலேயே கோமதியின் கண்களில் நெகிழ்ச்சியின் காரணமாக நீர் திரையிட்டது. சங்கரநாமத்தைச் சொல்லிக் கன்னத்தில் மாறி மாறிப் போட்டுக் கொண்டார்.
ravi said…
ஸ்வாமிகள் இருக்கும் இடத்தில் இருந்து பல அடி தொலைவில் தாங்கள் நின்றிருந்தாலும்,
இருந்த இடத்திலேயே ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர் இருவரும்.
உள்ளூர் ஜனங்கள் சிலரும், தமிழ்நாடு மற்றும் அருகில் உள்ள சில நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் அங்கே – மண் தரையில் – பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர்.
ravi said…
அந்த வேளையில் மகாபெரியவா – முக்கியமாக உள்ளூர் ஜனங்களுக்காக இந்தியில் ஏதோ உபதேசம் செய்து கொண்டிருந்தார். கர்ம சிரத்தையாக அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் பாக்கியம் பெற்ற பூசேகாள்வ் வாசிகள். பிறகு அவர்களுக்கு பிரசாதத்தைத் தன் கையால் கொடுத்து அனுப்பினார்.
ravi said…
பிறகு ஒரு அன்பரிடம் தமிழில் எதோ பேச ஆரம்பித்து விட்டார் காஞ்சி மகான். கோமதியும் அவரது கணவரும் மெள்ள நடந்து போய் ஸ்வாமிகளை வணங்கி விட்டு தரையில் விழுந்து நமஸ்கரித்தனர். நிமிர்ந்து பார்த்து ஆசிர்வதித்த மகான் புன்னகைத்தார். பிறகு கோமதியைத் தன் அருகே வருமாறு சைகை காண்பித்தார்
அவர்களது பூர்வீகம், தற்போது வசித்து வரும் ஊர், உத்தியோகம் போன்ற எல்லாவற்றையும் நிதானமாக விசாரித்து அறிந்தார் மகா பெரியவா.
ravi said…
பெரியவாளிடம் பேசி முடித்த பின் மீண்டும் ஒருமுறை நமஸ்கரித்தனர் கோமதியும் அவரது கணவரும். இருவருக்கும் பிரசாதத்தைக் கொடுத்த பெரியவா ‘உள்ள போய் சாப்டுங்கோ’ என்று ஓர் இடத்தைக் கை நீட்டி காண்பித்தார். மனம் நிறைய சந்தோஷத்துடன் இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
ஆயிற்று. சாப்பாடும் முடித்தாயிற்று. இனி செகந்திராபாத் புறப்படவேண்டியது தான் பாக்கி. எனவே பெரியவாளிடம் வந்து ‘நாங்க பொறப்படறோம். பெரியவா உத்தரவு தரணும்’ என்றார் கோமதி. அருகே அவரது கணவரும் பவ்யமாக நின்றிருந்தார்.
ravi said…
ஊருக்கு எப்படி போகப் போறேள்?’
‘மத்தியானம் ரெண்டு மணிக்கு சதாரா ஸ்டேஷன்லேர்ந்து புனேவுக்கு ஒரு ரயில்
இருக்கு. அதுல புனே போயிட்டு அங்கிருந்து செகந்திராபாத் வண்டியைப் பிடிச்சுப் போயிடுவோம்’ என்றார் கோமதியின் கணவர்.
‘இப்ப பொறப்படவேண்டாம். சாயந்திரமா போங்கோ. இங்கேயே ஓரமா உக்காந்துக்கோங்கோ’ என்று சைகையும் வார்த்தைகளுமாகச் சேர்த்துச் சொன்னார் மஹாபெரியவா.
ravi said…
தேவ வாக்கு ஆயிற்றே! பெரியவா ஒன்று சொல்லிவிட்டால், யார்தான் அதை மீற முடியும். எனவே கோமதியும் அவரது கணவரும் அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து பெரியவாளைத் தரிசித்துக் கொண்டிருந்தனர். அங்கே வந்து போகும் பக்தர்களுடன் பெரியவா நிகழ்த்தும் சம்பாஷணைகளையும், பக்தர்களுக்கு பெரியவா ஆசி புரிவதையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தனர்.
மாலையில்
பெரியவாளிடம் தாங்கள் புறப்படுவதாகச் சொன்னார்கள். புன்னகையுடன் அவர்களை ஆசிர்வதித்து, மீண்டும் ஒருமுறை பிரசாதம் தந்து வழி அனுப்பினார் பெரியவா. பூசேகாள்வ் அனுபவங்களை மறக்க முடியாமல் அங்கிருந்து வெளியே வந்து ஒரு பஸ் பிடித்து நேராக சதாரா ரயில்வே நிலையத்தை அடைந்தனர்.
சதாரா ரயில்வே நிலையத்தை இவர்கள் அடைந்த போது ஸ்டேஷனே பரபரப்பாக இருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்கு முன் திரளான மக்கள் கூடி இருந்தனர். அவர்களில் பயணிகளும் அடக்கம். பயணிகள் அல்லாதவர்களும் அடக்கம்.
ravi said…
ஒவ்வொருவர் முகத்தையும், அந்தச் சூழ்நிலையையும் பார்த்தால் ஏதோ களேபரம் என்பது மட்டும் கோமதிக்குப் புரிந்தது.
ravi said…
இந்தக் களேபரம் காரணமாக, அடுத்து இவர்கள் செல்ல இருக்கும் புனே ரயில் குறிப்பிட்ட நேரத்துக்கு வருமா என்கிற கவலை வேறு. ‘சரி
என்னதான் களேபரம்…ஏன் இவ்வளவு கூட்டம்? என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளலாமே என்று கோமதியும், அவரது கணவரும் ஸ்டேஷன் ஊழியர் ஒருவரிடம், ‘என்ன விஷயம்…ஏன் இவ்வளவு கூட்டம்?’ என்று கேட்டனர்.
அதற்கு அந்த ஊழியர் சோகம் ததும்பக் கூறினார். ‘ரெண்டு மணிக்கு சதாராவில் இருந்து புனேக்குப் போன ரயில் இங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் ஒரு விபத்துக்கு உள்ளாகி விட்டது. சேத விவரம் என்ன என்று தெரியவில்லை. அதான், அந்த வண்டியில் பயணித்தவர்களின் உறவுக்காரர்கள் என்ன ஆச்சு? ஏதாச்சு என்று தெரிந்து கொள்வதற்காக இங்கே குழுமி இருக்கிறார்கள்.
கோமதிக்கும் அவரது கணவருக்கும் மயக்கம் வராத குறைதான்.
ravi said…
அந்த வண்டியில் தானே இருவரும் பயணிப்பதாக இருந்தார்கள். பெரியவா ‘இப்ப வேண்டாம்’ என்று உத்தரவு கொடுத்ததால் தானே தாமதமாகப் புறப்பட்டு இப்போது வந்திருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள்
இருவரும் அந்த ரயிலில் பயணித்திருந்தால்….?
‘பகவானே….சங்கரா’ என்று அந்த ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே மஹாபெரியாவாளை மனதுக்குள் தியானித்து விழுந்து வணங்கிய கோமதி ‘எங்களைக் காப்பாத்தின தெய்வமே’ என்று பெருங்குரல் எடுத்துக் கதறினார்.
ravi said…
ஸ்டேஷனில் இருந்த அனைவரும் அந்த அதிர்ச்சியான வேளையிலும் கோமதியையும், அவரது கணவரையும் வியப்பாகப் பார்த்தனர். அவர்களுக்குத் தெரியுமா மஹாபெரியவா இவர்களைக் காப்பாற்றிய விவரம்?
பெரியவா சரணம்🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
காமேச்வரனின் மடியான மெத்தை அம்பாளுக்குப் பர்யங்கம்.

ravi said…
அதில் உட்கார்ந்திருப்பவளை காமேச்வரி, ராஜேச்வரி என்று ச்ருங்கார ஸுந்தரியாகவோ, ராணியம்மாளாகவோ சொல்லாமல் ஞானத்தின் உச்சிக்குத் தூக்கி ”சிதாநந்த லஹரி” என்று பெயர் கொடுத்திருக்கிறார்!
ravi said…
அதுதான் ஆசார்யாள் வாக்கின் பெருமை! ச்ருங்கார ஸ்வரூபமாக அவள் ஸ்வாமியோடு இருக்கிறாளென்றாலும் அது ஆத்ம ச்ருங்காரம் அல்லவா? ஸத்தை விட்டுப் பிரியாத சித்தின் ஆனந்த வெள்ளமாக இருக்கும் ப்ரேமையல்லவா? .
ravi said…
அதனால்தான், இப்படியிப்படி ஆகப்பட்ட லோகத்தில், ஊரில், க்ருஹத்தில், இன்ன ஆஸனத்தில் உட்கார்ந்திருப்பது வாஸ்தவத்தில் சிதானந்த ப்ரவாஹமேயாக்கும் என்று முடித்திருக்கிறார்
ravi said…
இப்படியொரு வாஸ ஸ்தானத்தில் சிதாநந்த லஹரியாக உள்ள உன்னை யாரோ சில பாக்யசாலிகள் வழிபடுகிறார்கள் என்கிறார்: ”பஜந்தி த்வாம் தந்யா: கதிசந”. ஸரியாக ப்ரோஸ் ஆர்டர் பண்ணினால், ”கதிசந தந்யா: த்வாம் பஜந்தி” – என்பதற்கு ‘ஒரு சில பாக்யசாலிகள் உன்னைப் பூஜிக்கிறார்கள்’ என்று அர்த்தம்.

”ஏன் ‘ஒரு சில’? தேவீ பூஜை பண்ணுபவர்களாக ரொம்பப் பேர் இருக்காளே! அதுவும் இப்ப நாளுக்கு நாள் ஜாஸ்தியாயிண்டு வரதே!”

பூஜை என்று ரொம்பப் பேர் பண்ணலாம். ஆனால் சும்மா ‘மொண மொண’ பண்ணிவிட்டு ஒரு கல்பூரத்தைக் காட்டி விட்டால் அது நிஜமான பூஜையாகி விடுமா?

”அப்படியானா எது நிஜமான பூஜை?”
ravi said…
எதுவென்றால் — முன் ச்லோகத்திலே அவள் ரூபத்தை வர்ணித்ததோல்லியோ? அதை நன்றாக மனஸில் வாங்கிக்கொண்டு நிறுத்திக் கொள்ள வேண்டும். இப்போது வர்ணித்த அவளுடைய வாஸ ஸ்தானத்திலேயே நாம் இருப்பது போல நினைக்க வேண்டும். அவளுடைய அருளே அம்ருத ஸாகரமாகவும், கல்பகக் காடாகவும் நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருப்பதாகவும், அந்த அருளில் நாம் இருக்கும் பூமியே ரத்னமயமாகி விட்டதாகவும், நம்முடைய பூஜா க்ருஹம் இஷ்டமானதையெல்லாம் தரும் சிந்தாமணியாலேயே கட்டியதாகவும் பாவனை ஏற்பட வேண்டும். அதுதான் ஸாலோக்யமோக்ஷம் என்பது. இஷ்ட தெய்வத்தின் லோகத்திற்கு நாம் ஸாலோக்யமோக்ஷம் என்று பொதுவில் சொல்வது. நாம் எங்கேயிருந்தாலும் அதுவே அந்த லோகம் என்று ஆக்கிக் கொண்டால் இன்னும் விசேஷம் என்று தோன்றுகிறது.
ravi said…
ஸாலோக்யத்திற்கு அப்புறம் ஸாமீப்யம்: ஸமீபத்திற்குப் போவது. அம்ருத ஸாகரக் கரையிலிருந்து வனம், உபவனம், ஊர் எல்லாம் தாண்டி அரண்மனையில் அவளுடைய மஞ்சம் இருக்கிற இடத்திற்கே போய்விட்டால் ஸாமீப்யம். மானஸிகமாக அந்த ஸாமீப்யத்தை ஸாதிக்க வேண்டும்.
ravi said…
ஸாலோக்ய-ஸாமீப்யங்களுக்கு அப்புறம் ஸாரூப்யம். குளவி ரூபத்தை நினைத்து நினைத்துப் புழுவும் அப்படி ஆகிறது போல அம்பாள் ரூபத்தை நினைத்து நினைத்து நாமும் அப்படி ஆகிவிடுவது ஸாரூப்யம். முன் ச்லோகத்தில் சொன்ன ரூப வர்ணனையில் ஊறி ஊறி, அந்த ரூபத்தைப் பரமசிவ பர்யங்கத்தில் உட்கார்ந்திருப்பதாக அப்படியே த்யானித்தபடி இருந்தால் ஸாரூப்ய முக்தி உண்டாகும்.
ravi said…
ஸாலோக்ய-ஸாமீப்யங்களுக்கு அப்புறம் ஸாரூப்யம். குளவி ரூபத்தை நினைத்து நினைத்துப் புழுவும் அப்படி ஆகிறது போல அம்பாள் ரூபத்தை நினைத்து நினைத்து நாமும் அப்படி ஆகிவிடுவது ஸாரூப்யம். முன் ச்லோகத்தில் சொன்ன ரூப வர்ணனையில் ஊறி ஊறி, அந்த ரூபத்தைப் பரமசிவ பர்யங்கத்தில் உட்கார்ந்திருப்பதாக அப்படியே த்யானித்தபடி இருந்தால் ஸாரூப்ய முக்தி உண்டாகும்.
ravi said…
கரைந்த பிற்பாடு பூஜையே இல்லை. அதனால் பூஜை என்று பண்ணும் நிலை இருக்கிறவரையில் மானஸிகமாக அந்த பாவனை — கரைந்து போகிற அத்வைத பாவனை — இருக்க வேண்டுமென்று அர்த்தம்
ravi said…
வாஸ்தவமாக அவளுடைய லோகத்திற்குப் போவது, ஸ்வரூப தர்சனம் பண்ணுவது, தத்வத்தில் கரைவது எல்லாம் நடக்கிறபோது நடக்கட்டும். இப்போது மானஸிகமாக அதையெல்லாம் பாவனையில் பண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பூஜை என்று உட்கார்ந்தால் மனஸ் முழுக்க ஈடுபட்டிருக்க வேண்டும். ‘ஆபீஸுக்கு நாழியாச்சா? கான்டீனில் இன்னிக்குத் தவலை அடையா?’ என்ற ஞாபகம் எதுவும் வராமல் மனஸை அந்த அம்ருத ஸாகர அலையில் ஆரம்பித்து சிதாநந்த ஸாகர அலையாக இருக்கிற பரமதத்வம் வரையில் கொண்டு போய் அப்படியே முழுக்க வேண்டும்.
ravi said…
இப்படியா நாமெல்லாம் பூஜை பண்ணுகிறோம்? எவரோ சில பேர்தானே, பூர்வ புண்யசாலிகள்தானே அம்பாளின் ஸ்வரூபத்திலேயே சிதாநந்த ரஸத்தைத் தெரிந்து கொள்கிற அளவுக்கு மனஸொன்றிப் பூஜை செய்வது? அதனால்தான் ”கதிசந தந்யா:” என்றார்.
ravi said…
Air Polutionnங்கிறது மனுஷாளுக்கு மட்டுமில்லே, மரங்களுக்கும் உண்டு.
ஒரு சிவ பக்தர். நாள் தவறாமல் சிவ பூஜை செய்பவர். வீட்டுக் கொல்லையிலேயே வில்வமரம்.

பூச்சி அரிக்காத தளமாக சேகரித்து வைத்துக் கொண்டு ஆனந்தமாகப் பூஜை செய்வார்.

அந்த வில்வமரம் பட்டுப் போய்விட்டது.

லட்சம் ரூபாயை இழந்த சோகம் பக்தருக்கு.

ravi said…
வழக்கம்போல் பெரியவாள் தரிசனத்துக்கு வந்தபோது, துக்கம் தொண்டையை அடைக்க, வில்வமரம் பட்டுப் போய் விட்ட செய்தியைக் கூறினார்.

பெரியவாள், அவர் சொன்னதைச் செவியில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. வேறு யார் யாருடனோ பேசிக் கொண்டும், ஆசீர்வதித்துக் கொண்டும் இருந்தார்கள்.

ravi said…
பின்னர் பக்தரைப் பார்த்து, "இப்போ, Water Pollution, Air Pollution என்றெல்லாம் சொல்றாளே, உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள், பெரியவா

"ஆமாம்...குடிக்கத் தண்ணீர், சுவாசிக்கும் காற்று முதலியவற்றில் மாசு அதிகமாகிவிட்டதால், உடம்புக்குக் கெடுதல் என்கிறார்கள்..."--பக்தர்.

"
ravi said…
நம்ம சாஸ்திரங்களில்கூட, Pollution..பற்றிச் சொல்லியிருக்கு"----பெரியவா.

பக்தருக்குப் புரியவில்லை. .. பெரியவாள் எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள்?

"Air Pollutionங்கிறது, மனுஷாளுக்கு மட்டுமில்லே, மரங்களுக்கும் உண்டு. ஆசாரமில்லாமல், தீட்டுக் காலத்திலே, மரங்களுக்குப் பக்கமா போனால், மரத்துக்குக் கெடுதல். வில்வமரம் அதனால்தான் பட்டுப் போயிருக்கு.."---பெரியவா.
பக்தர் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"
ravi said…
வில்வமரத்தின் வேர்ப்பகுதியிலே நிறையப் பசுஞ்சாணம் போட்டு, தினமும் தீர்த்தம் விடு. அதுதான் பிராயச்சித்தம்..."---பெரியவா

சிவபக்தர் அவ்வாறே செய்தார். பதினந்து நாள்களில், துளிர்கள் தெரியத் தொடங்கின. இரண்டு மாதங்கள் கழித்து தரிசனத்துக்கு வந்த பக்தர், அதே வில்வமரத்திலிருந்து வில்வம் பறித்து, பெரியவாளுக்கு வில்வ மாலை சமர்ப்பித்தார்.

பசுஞ்சாணத்தில் உயிர்ச்சத்து - உயிர் தரும் சத்து - இருக்கிறது என்பதை எந்த பாஷ்ய பாடத்தில் படித்துத் தெரிந்து கொண்டார்கள், பெரியவாள்!.

இது என்ன சப்ஜெக்ட்? பயாலஜியா? பாஷ்யாலஜியா?

பசுபதியே அறிவார்!
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 32* 🌷🌷🌷🌷🌷
ravi said…
*பழு பதினாறும்* *பருவேல் காக்க!*

என் பதினாறு விலா எலும்புகளையும் பருவேல் காக்கட்டும்!

*வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!*

என் வயிறு நோயின்றி விளங்க வெற்றிவேல் காக்கட்டும்!

*சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!*

எனது சிறிய இடை அழகு பெறும்படி செவ்வேல் காக்கட்டும்!

*நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!*

என் இடுப்பில் அணியும் அரைஞான் கயிற்றை நல்வேல் காக்கட்டும்!

*ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!*

ஆண்குறிகள் இரண்டையும் அயில்வேல் காக்கட்டும்!

*பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!*

இரண்டு பிட்டங்களையும் பெருவேல் காக்கட்டும்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 195*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 26

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.

कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं

गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।

समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-

नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६

கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்

க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।

ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-

நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
அவா ‘ *ஸுக்ருʼதபரிபாகேந* ’ –

ஒரு மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், பகவானை சேவிக்கறது,

புண்ய தீர்த்தங்கள்ல ஸ்நானம் பண்றது, திருவண்ணாமலை போயி கிரிவலம் பண்றது… இந்த மாதிரி புண்ய காரியங்கள் பண்ணி பண்ணி, *‘ஸுக்ருʼதபரிபாகேந* ’ -நல்ல புண்யத்தினுடைய பலனாக, ‘ *ஸுஜநாஹா* ’… அவா என்ன பண்றான்னா.. ‘ *க்³ருʼஹீத்வா யாதா²ர்த்²யம் நிக³மவசஸாம்’ –*

வேத வாக்குகளையுடைய உண்மை பொருள், ‘ *யாதா²ர்த்²யம்* ’ என்ன? அப்படீன்னு ‘ *க்³ருʼஹீத்வா’* – சாஸ்திரங்கள்லாம் படிச்சு, அதுலேருந்து அந்த வாழ்க்கையினுடைய பயன் என்ன?

பண்ண வேண்டியது என்னன்னு படிக்கறா.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 196* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ *க்றுஷ்ணோ* லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
யமுனைக் கரையில் தன் முதல் குடத்தில் தண்ணீரை நிரப்பிய சந்திரமதி, அதைத் தரையில் வைத்துவிட்டு
அடுத்த குடத்தில் நீரை மொண்டாள்.

‘டங்’ என்ற ஒலி கேட்டது.

கண்ணனால் உதைபட்ட அவளது முதல் குடம் உருண்டு யமுனையில் போய் விழுந்தது.

“கண்ணா!” என்று கத்தினாள் சந்திரமதி.

அதற்குள் மீண்டும் ஒரு ‘டங்’. அவளது இரண்டாவது குடத்தையும் உதைத்து நதியில் தள்ளிவிட்டு “ஹா ஹா” என்று சிரித்தான் கண்ணன்.

அவனை அடிக்கப் போனாள் சந்திரமதி.

ஆனால் என்ன அதிசயம். யமுனையில் இருந்து இரண்டு தெய்வீக புருஷர்கள் கிளம்பி
விமானத்தில் வைகுந்தம் செல்வதைக் கண்டாள்.

“உன்னுடைய இரண்டு குடங்களும் முக்தியடைந்து விட்டன!” என்று கூறினான் கண்ணன்.💐💐💐
Raman said…
Wow Kamba Ramayanam explaining seethas beauty in detail. Today being Hanuman Jayanti this podcast is so beautiful. Jai shri Ram. 🙏🌹🙏
ravi said…
தந்தையாகவும் மகனாகவும் நடித்த மகா பெரியவா"

(ஸ்வபாவமான அமரிக்கையும் அமைதியும் கூடுதலாக

ஓசை செய்யாமல் கருணைக் கவிதை நடத்திய பாங்கும்)

கட்டுரை-ரா கணபதி.
கருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ravi said…
வேதபொறே ! வேதபொறே !" -வேதபுரி என்ற தம் புத்திரனின் பெயரை அப்படித்தான் ஓர் அவசரத்துடன் சொல்லிக் கூப்பிடுவார் தகப்பனார் ஸீதாராமய்யர். நாகரிகர்களின் ஒப்பனைகள்,வாயசைப்பு,நகாசு, ஒலி நயம் அறியாத எளியவர்.நல்ல மனுஷ்யர்.

தாயை இழந்து சிறு வயதிலேயே ஸ்ரீசரணரிடம் வந்த வேதபுரி,நீண்ட நெடுங்காலம் அவருக்கு அத்யந்த கைங்கர்யம் செய்து இன்று அடியார் வட்டம் வேதபுரி சாஸ்திரிகளாக அறிந்திருப்பவர்கள்தாம். ஸ்ரீசரணரே தமது அந்திம நாள்களில் அவரை "ப்ரஹ்மஸ்ரீ" என்று குறுநகை தவழ அழைப்பது வழக்கம்.
ravi said…
பெரியவாள் பணிக்கு அவர் வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பகற்பொழுதில் நெடுநேரமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்புவதற்காகத்தான் அந்த 'வேதபொறே!' மீண்டும் மீண்டும் ஒலித்தது.

"வேதபொறே ! பெரியவா உத்தரவாறதுடா ! தூங்கிண்டே இருக்கியே!"

வேதபுரி புரண்டார்.ஓயாப்பணியின் களைப்பு பட்டவருக்குத்தானே தெரியும் !

மீண்டும் தந்தையார் பெரியவா உத்திரவாறதைச் சொல்லி உசுப்ப, "என்னப்பா நீ !" என்று அலுத்துக் கொண்டு எழுந்தார் வேதபுரி.
ravi said…
அப்பாவா? "எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படி கால் தொடங்கி வந்து வழி வழியாட்செய்த" சாசுவத அப்பனாகப் . பெரியவாளல்லவா எதிர் நிற்கிறார்?

ஸீதாராமய்யரை அப்படியே 'மிமிக்' செய்த மாயக் குறும்பராகச் சீடர் முன் சிரித்து நின்றார் குரு. ஜகத்குருவின் ஸௌலப்யம் அப்படி !.

"வேதபொறே ! வேதபொறே !" - பல்லாண்டுகளுக்குப் பின் ஒரு நள்ளிரவில் குரல் எழுகிறது.

காலம் ஓடிவிட்டதில் குரலில் நடுக்கம் கண்டு விட்டது. அதைவிடக் கோளாறாக ஸீதாராமய்யரின் இரு கண்களும் பார்வை இழந்து விட்டன.
ravi said…
இரவு நடுவிலே அவருக்கு ஒரு முறை நீர் இறக்கிக் கொள்ள வேண்டும்.பிள்ளையை எழுப்புவார்.பிள்ளை அவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருகாக உடன் சென்று கொல்லைப்புறம் அழைத்துப் போய்த் திரும்ப கொண்டு வந்து விடுவார்.

"வேதபொறே ! வேதபொறே !"

வேதபுரி எழுந்து வரும் அரவம் மெலிதாகக் கேட்கிறது. பெரியவாள் வெகு அருகிலேயே நித்திரை கொண்டிருப்பதால் போலும். முடிந்தமட்டில் ஓசைப்படாமல் வருகிறார்.
ravi said…
ஸீதாராமய்யரைத் தொடுவது போல் பக்கத்தில் கைத்தடி நாட்டப்படுகிறது.

அதைப் பிடித்தபடி அவர் எழுந்திருக்க,அவரைப் பிடிக்காத குறையாக நெருங்கியிருந்து புத்திரர் கொல்லைப்புறம் அழைத்துப் போய் அமர்த்துகிறார்.

இயற்கையழைப்புக்குத் தகப்பனார் பதில் கொடுத்தபின் சுத்தி செய்து கொள்ள நீர் மொண்டு வந்து தருகிறார்.

புத்திரரின் எல்லாக் காரியத்திலும் இன்று ஓர் அலாதி,அமரிக்கை.அமைதி.

தந்தையாரைத் திரும்பவும் சப்தம் செய்யாது அழைத்து வந்து படுக்க வைத்து விட்டு மகனார் உறங்கப் போகிறார்.
ravi said…
மறுநாள் அப்பாவும் பிள்ளையும் பேசிக் கொண்டிருக்கும் போது பிள்ளை,"ஏம்பா நேத்து ராத்திரி நீ ஏந்திருக்கலியா என்ன?" என்று கேட்டார்.

"ஏந்திருந்தேனே! ..நீதானேடா கொண்டு விட்டு அழைச்சிண்டு வந்தே?"

"என்னப்பா சொல்றே? நான் எங்கே கொண்டு விட்டேன்?"

பின் யார் அவரைக் கொண்டு விட்டது?

அங்கு படுத்திருந்த ஒவ்வொருவரையும் விசாரித்துப் பார்த்ததில் எவருமே இல்லை என்று தெரிந்தது.

"ஆஹா,அப்படியா?"...பெரியவாளிடம் கேட்க, அவரது வாய் மௌனம் பூண்டது.ஆனால் கண்களும் இதழ்க் கடைகளும் பேசின.கருணைக் காப்பியமே பாடின!
ravi said…
வேதபுரியல்ல, வேதம் விளங்கவே வந்த அவதார புருஷர்தாம் நள்ளிரவில் தொண்டரின் தந்தைக்குத் தொண்டு செய்திருக்கிறார்! அதுவும் எப்படிப்பட்ட அசங்கியம் பர்க்காத குற்றவேல் தொண்டு.!

தமக்காகத் தொண்டு செய்த அந்தச் சீடரை, மடத் தொண்டர்கள் அனைவரையுமேதான்,தூக்கத்தில் சிரமப்படுத்தலாகாது என்ற அருட்பாங்கில் தமது ஸ்வபாவமான அமரிக்கையும் அமைதியும் கூடுதலாக ஓசை செய்யாமல் கருணைக் கவிதை நடத்தியிருக்கிறார்

அதிலேயே தொண்டரின் தந்தைக்கு தம்மைக் காட்டிக் கொள்ளாத மர்ம நாடகமும் நடித்திருக்கிறார். அன்றொரு நாள் தந்தையாக நடித்தவர்.இன்று மகனாக நடித்திருக்கிறார்
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 47*🐒🐒🐒
ravi said…
லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே ||

ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ ||
ravi said…
*லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |*

இங்கே சஞ்சிவினி மலையை அனுமன் கொண்டு வந்து எல்லோரையும் உயிர்ப்பித்ததுப் பற்றி சொல்லப்படுகிறது


இமயமலையில் பலவகை மூலிகைகள் இருக்கின்றன

அதில் முக்கியமானவை நான்கு

1. விசல்ய கரணீ

அம்போ கத்தியோ பாதி உடலில் குத்தி இருந்தால் இதன் சாறு அதை வெளி கொண்டு வந்து விடும்

2. சந்தான கரணீ

பிளவு பட்ட தோலை இதன் சாறு சேர்த்து தைத்து விடும்

3. சாவரண கரணீ

ஏற்பட்ட தழும்பை காணாமல் போக வைக்கும்

4. சஞ்சீவ கரணீ

எம லோகத்திற்கு சென்ற உயிரை மீண்டும் உடலுக்குள் கொண்டு வந்து விடும்

நமக்கெல்லாம் சந்தேகம் வரும் .. உண்மையில் இப்படிப்பட்ட மூலிகைகள் இருக்கிறதா என்று

இது சத்தியம் .. இவை தெய்வீக மூலிகைகள் கண்டிப்பாக இருக்கின்றன ..

சமீபத்தில் ... சமீபம் என்றால் ஒரு 50 அல்லது 60 வருடங்கள் முன்பு ஆந்திராவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது ...

ஒருவர் கறி வாங்க கசாப்புக்கடைக்கு சென்றார் ..

துண்டு துண்டாய் வெட்டிய இறைச்சியை ஓரு மூட்டையில் கட்டிக்கொண்டு வரும் வழியில் தன்னை சுமையை இறக்கி வைத்து கொஞ்சம் ஓய்வெடுக்க அமர்ந்தான் ..

பிறகு மூட்டை தூக்க முடியவில்லை கனமாக இருந்தது .. திறந்து பார்க்கும் போது துண்டங்கள் ஒன்றாய் சேர்ந்து இருந்தன ...

அவன் இருந்த இடத்தில் இருந்த மூலிகைகள் தான் காரணம் ...

பிறகு அதை பறித்து செடிகள் வளர்த்து உடைந்த எலும்புகளை ஒன்று சேர்த்து நிறைய பணம் சம்பாதித்தான் ..

🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

பாடல் எண் : 94

விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா
இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள்
மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க
அஞ்சுமோ சொல்லாய் அவள்.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏


ravi said…
குறிப்புரை :

`மஞ்சுபோல் மால் விடையாய்` என்பதை முதலிற்கொள்க. மஞ்சு - மேகம். மேகம் போலும் நிறத்தையுடைய மால், திருமால். விடை - இடபம், `திருமாலாகிய இடபம்` என்பதாம். `

சிவபெருமான் திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் அவருக்கு இடபவாகனமாய் இருந்தார்` என்பது புராண வரலாறு. தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.* என்னும் திருவாசகத்தைக் காண்க.

பொருப்பன் - மலையரையன். அவன் மகள் உமாதேவி. அவளை நீ வேறு வையாது உன் உடம்பில் ஒரு பாதியாக வைத்திருப்பதற்குக் காரணம் யாது? அவள்மீது நீ வைத் துள்ள பெருவிருப்பத்தால் அவளை விட்டு நீ வேறாய் இருக்க ஆற்றாயோ?

அவளுக்கு இருக்க வேறு இடம் இல்லையோ? உன்னை விட்டுப் பிரிந்து அவள் தனியேயிருக்க அஞ்சுகின்றாளோ? என் - யாது காரணம்? - என்க. `என்னோ` ஓகாரம் அசை. இவையெல்லாம் காரணங்களல்ல; இருவரும் இருவரல்லர்; ஓருவரே` என்பதைக் குறிப்பால் உணர்த்தியவாறு. `பொருப்பன்மகள்` என்னும் சீரை, னகர ஒற்றுத் தள்ளி அலகிடுக.
ravi said…
🌹🌺' *அய்யா..அழகரே.... ஆற்றில் இறங்க வரும்போது என்ன கலர் பட்டுடுத்தி வரப் போரிரோ?' எனப் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் - விளக்கும் எளிய கதை* 🌹🌺
ravi said…
---------------------------------------------------------
🌺🌹சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார்.

🌺பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்காமலிருக்கவே ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' என சாபமிட்டார்.

ravi said…
🌺உடனே தவளையாகிப் போன சுதபஸ், சாபவிமோசனத்துக்கு வழிகேட்டபோது, 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) நீ தவம் பண்ணிக்கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்கு சாபவிமோசனம் கொடுப்பார்' என சொல்லியிருக்கிறார் துர்வாசர்.
ravi said…

🌺அதன்படி வைகைக் கரையில் தவம் பண்ணிக் கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்கு, விமோசனம் கொடுக்க அழகர் மதுரைக்கு வந்து போனதாகப் புராணங்கள் கூறுகின்றன.

🌺மீனாக்ஷி சித்திரை திருவிழா- கள்ளழகர் சித்திரை திருவிழா என்று சைவ - வைணவ பிரிவாக இருந்த சித்திரை திருவிழாவை திருமலை நாயக்கர் தான் ஒன்றாக சேர்த்தார் என்று வரலாறு கூறுகிறது.

🌺அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ravi said…
🌺பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும்.
கள்ளழகர் எழுந்தருளும் மாபெரும் பெருவிழா
தன் தங்கை ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீஅழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபவத்தைப் பார்க்க அழகர் மலையில் இருந்து இறங்கி சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார்.
ravi said…

🌺வரும் வழி எங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் தங்கையின் திருமணத்தை காணமுடியாமல் போய்விடுகிறது. 420 மண்டகப்படியில் நின்று காட்சி தருகிறாராம் அந்த சோகத்துடன் வைகையில் எழுந்தருகிறார்

🌺அழகரின் ஆடையில் என்ன விஷேசம்
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும்.
ravi said…
🌺கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும்.

🌺பச்சைப் பட்டு
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ravi said…

🌺பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.

🌺வெண்பட்டு
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் 'அய்யா..அழகரே.... ஆற்றில் இறங்க வரும்போது என்ன கலர் பட்டுடுத்தி வரப் போரிரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

🌺பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார்.
ravi said…
🌺பெருமாள் கோயிலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் வைகையை நோக்கி புறப்படும் முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சூடிக் கொடுத்த நாச்சியராகிய ஸ்ரீ ஆண்டாளின் மாலையை சாற்றிக் கொள்கிறார்.

🌺 வைகையில் ஓடும் நீரில் நின்று கொண்டு தன்னை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களைக் காண ஆடி, அசைந்து வருவதைக் காண்பதே தனி அழகுதான்...🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌹🌺'Ayya..Alagare .... What color silk will you wear when you come down to the river? ' Devotees who are looking forward to - Simple story to explain🌹🌺 --------------------------------------------------- --------
ravi said…

🌺🌹 The sage Sudapas, who had settled at Nupuraganga, repented towards Perumala. At that time Durvasa Maharishi came with his entourage.

🌺 The sage, who was thinking of Perumala, cursed Durvasar as 'Manduko Pawa', enraged that he did not notice the Rishi coming.

🌺Sudhapas, who immediately became a frog, led the way to the curse, saying, 'You are penitent on the banks of the Vivekavati (Vaigai). The next day after Chitra Pournami, Alhagar will come there and curse you, 'said Durvasar.

🌺According to the legends, Alhagar came to Madurai to give liberation to Sage Sudapas who was doing penance on the banks of Vaigai.

🌺 History has it that Thirumalai Nayakkar co-founded the Meenakshi Chithirai Festival, also known as the Kallazhagar Chithirai Festival.
ravi said…
🌺What color sari the beauty wears and goes down to the river is accordingly good in that year - bad is the belief of the devotees that it will happen.

🌺The country will be prosperous if it is built green.
After hearing the news of the marriage of his younger sister Sree Meenakshi and Sreesundareswarar, Sree Alaghar descends from Alhagar Hill to Madurai with all the commotion to witness the festivities with Kallazhagar Tirukkolam.

🌺 The sister's wedding goes unnoticed because of the way the pilgrims show up everywhere. 420 He stands on the steps and wakes up with that sadness
ravi said…

🌺What's special about a beautiful dress
Elegant dresses and accessories will all be in one large wooden box. This box contains silks in many colors such as red, white, green, yellow, and purple.

🌺The head butter of the temple drops into the box and picks up any sari. Whichever colored sari he gets in his hand, it will be worn on the day of the descent into the Kallaghar River.

🌺 Green silk
Depending on what color sari the beauty wears and goes down into the river, the devotees believe that good and bad will happen in that year.
ravi said…
🌺The country will be prosperous if it is built green. If red silk is tied that year there will not be enough yield. There will be no peace in the country. They say disaster will occur.

🌺 white and purple are tied the country will be in the middle. If the yellow is tied, the mangalakara events will take place in that year. Because of such hope, 'Ayya..Alagare .... What color silk will you wear when you come down to the river?' Devotees are looking forward to.

🌺Before leaving for Vaigai in a golden chariot from the Perumal Temple, he recounts the evening of Sri Andal, the Nachiyar who gave Sudik from Srivilliputhur.

🌺It is a unique beauty to see the devotees standing in the running water of Vaigai and eagerly waiting to see themselves ... 🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ரமேஷ் said…
மீன் கொடிக்கு மதுரை மீனாட்சி..
மின்கொடிக்கு சீதை..
அருமையான கேள்விக்கு, அருமையான விளக்கம்..
விரசமில்லா ரசம்..தெளிவாக இருந்தது..🙏
Jingle US said…
நானும் ஒரு பருந்தாய் மாறி விடக்கூடாதா என்றே ஏங்கினேன் - நீங்கள் பருந்தாக மாறினால் அப்பறம் யார் எங்களுக்கு அபிரமியின் கடை கண்களால் கம்பரசம் தருவது
Jingle US said…
After reading this, i want to go and read kamba Ramayanam Athimber.
சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… 
This sums it up.
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 49*🐒🐒🐒
ravi said…
ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |

தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ ||
ravi said…
ராமன் வெறும் ஆலிங்கனம் எனும் பரிசை மட்டும் அனுமனுக்குத் தரவில்லை ..

நீ எனக்கு இன்னொரு பரதன் என்றான் ... எவ்வளவு பெரிய பரிசு இது ...

ஒரு வானர தளபதியை தன் சகோதரன் என்று சொல்லும் அளவிற்கு ஒரு நாட்டின் சக்கரவர்த்தி சொல்வதென்றால் ராமனின் பெருமையைவிட அனுமனின் அருமை ஓங்கி நிற்கிறது 👍
ravi said…
ஆமாம் ஏன் லக்ஷ்மணனை இங்கே ஓப்பிடவில்லை ? சதா சர்வகாலமும் அண்ணனுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன் ... லக்ஷ்மணன் மாதிரி நீ என்று ராமன் சொல்ல வில்லையே ...

இதன் காரணத்தை நாளை பார்ப்போம்
ravi said…
இயற்கை சொல்லும் சத்தியம்

உதிக்கின்ற செங்கதிர்கள் ஓவ்வொன்றும் உன் அணைக்கும் கரம் என்றே சொல்கிறதே

மறையும் கதிரவன் மாலை தனில் மதியாய் பிறக்கின்றதே ... அதுவும் நீயே கதி என்கின்றதே

கமலங்கள் மலர்வதும் குவலைகள் கண் திறப்பதும் விண் மீன்கள் கண் சிமிட்டுவதும் நீ நடமாடுவதினாலோ

பவன் இருக்க பவானி அருள் இருக்க பரமன் உன் குரல் அன்றோ நான் உணரும் கீதை
ravi said…
*கண்ணனும் விதுரனும்*🥇🥇🥇
ravi said…
தூது செல்ல ஒரு தோழன் இல்லை என்றே துயர் கொண்டான் கண்ணன் ... 👍

முடிவு தெரிந்தும் முரண் அறிந்தும் தூது சென்றான் ஏகன் அந்த அனேகன் ...

கண்ணனுக்கு வரவேற்பு ...

சிவப்பு கம்பளங்கள் .. அதிலே சிந்தி ஓடிய முத்துக்கள் ...

தெருவெல்லாம் கோபியர் கொடுத்த ஆவின் பால்

அதிலே அள்ளி த் தெளித்த தேனும் பாகும் யமனை மிஞ்சும் யமுனையாய் ஓடியதே

எங்கும் கண்ணா என் மாளிகை பாராயோ

என் வீடு வாராயோ என்றே அழைப்பிதழ் ...

உதடுகள் பேசியது உள்ளம் நினைக்க வில்லை ...

விதுரன் தன் வீட்டினிலே
கண்ணன் அவன் நெஞ்சினிலே ...

கற்பனையில் கண்ட கண்ணன் கண் எதிரே .....

கண்ணா உன் இல்லம் தேடி வந்தாயோ ...

நீ உன் வீடு வர உனை ஏன் அழைக்க வேண்டும் என்றே வெளி வந்து உனை பார்க்க வில்லை ...

கதறினான் விதுரன் ..

கற்பூரமாய் சிரித்தான் கண்ணன் ...

எல்லோரும்

என் வீடு என் மாளிகை

எனும் போது இது உன் வீடு என்றே நினைத்தாய் ...

எல்லாம் என்னுடையது

எதுவும் என் சொந்தம் என்றே நினைப்போர் இல்லம்

இறந்தோர் உறங்கும் பள்ளியறை அன்றோ ?

ஆடி முடிகையிலே அள்ளிச் சென்றோர் எவரும் உளரோ ..

அனைத்தும் அறிவாய் விதுரா நீ ...

உன் கீதை தான் நான் சொல்லப்போகும் வேதம் ...

உன் நீதி தான் மனுவின் சாரம் ...

உள்ளமெல்லாம் உணர்ச்சி கொட்ட

சரணாகதி எனும் வாழை பழத்தின் தோலை கண்ணனுக்கு தந்தே

அகம் எனும் பழத்தை வீசினான் விதுரன் குப்பைத் தொட்டியிலே ....

அதையும் சுவைத்தான் பாரத போரின் சூத்திரதாரி....

எதுவும் இல்லாமல் எல்லாம் கொண்டான் எங்கள் காஞ்சி வாழ் சூத்திரதாரி குருவெனும் போர்வையிலே ...

பாரதம் மீண்டும் புண்ணியம் கண்டது விதுரனாய் அவன் வீதி வலம் புரிகையிலே 🥇🥇🥇

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை