பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

                                               பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

கம்பனின் கவித்துவம் 

(261) 👍👍👍💥💥💥



கம்பராமாயணத்தின் எதிர்நிலைத் தலைவன் இராவணன்  -  இலங்கை அரசன்.  இராமனுக்கு இணையான வலிமையும் வீரமும் பொருந்திய இராவணனின் பெருமையையும் பெண்ணாசையால் அவன் அவற்றை இழந்த சிறுமையையும் ஒரே பாடலில் உணர்த்தி விடுகிறார் கம்பர்.

 வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்ததோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்
தார் அணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்தவாளும்
வீரமும் களத்தே போட்டு வெறுங் கையே மீண்டு போனான்.
 (கம்ப. 7272)

கம்பரின் காப்பியச் சிறப்பிற்கு ஒரு மிகச்சிறந்த அடிப்படை கம்பரின் பாத்திரப் படைப்பு ஆகும். நூற்றுக்கணக்கான பாத்திரங்கள், வெவ்வேறு பண்பியல்புகள், முரண்பட்ட மனநிலைகள், மானிடர், குரக்கினத்தார், அரக்கர், பறவை எனும் பல்வேறு வகையினர், 



அவர்களின் இன்ப, துன்பச் சூழல்கள், அச்சூழல்களால் தூண்டப்பட்டு அவர்கள் எதிர்வினை புரியும் முறைகள் என விரியும் ஒரு மிகப்பரந்த படைப்பு விரிவில் கம்பர் ஊடும் பாவுமாக இயங்கிப் பின்னிய மாபெரும் காப்பியமே கம்பராமாயணம். அவ்வளவு பாத்திரங்களோடும் உறவாடி,   அவர்களேயாகி,  

அவர்களுக்குள் நின்று அவர்களுக்கு எதிராகவும் ஆகிக் காப்பியத்தின் அடிப்படை நோக்கமாகிய 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' என்ற முடிப்பை நோக்கி அவர்களை நகர்த்திச் செல்லும் திறத்தினைக் காப்பியத்தினுள் நுழைந்து காண்போர் நன்குணரலாம்.  




மானுடப் பண்புகளையெல்லாம் நுணுகி நுணுகி ஆராய்ந்து எடுத்துக்காட்டிய மாட்சி கண்டுதான் பாரதி கம்பனைக் 'கம்பன் என்றொரு மானிடன்'  எனப் பாராட்டினார்;  மானுடத்தை முழுதறிந்த மானிடனாகக் கண்டார்.

தன்னலமற்ற தொண்டிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவன் அனுமன் என்றால் தன்னைத் தேடி வந்த அரச பதவியையும் துறந்த பண்பாளன் பரதன். அவனுடைய பற்றற்ற தன்மையை உணர்ந்த குகன், ஆயிரம் இராமர்கள் உனக்குச் சமமாக ஆவாரோ? எனப் புகழ்கின்றான். 

ஒரு பாத்திரத்தின் தன்மையை மற்றொரு பாத்திரம் வாயிலாக உணர்த்தும் காப்பிய உத்திக்குப் பின்வரும் பாடல் சான்றாகும்.

 தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
'தீவினை' என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!(கம்ப. 2337)



    
கம்பர் இராமாயணத்தை இயற்றுவதற்கு எடுத்துக்கொண்ட பாவகை விருத்தப்பாவாகும். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கையாளப்பட்ட விருத்தப்பா,     சீவகசிந்தாமணியில் திருத்தக்கதேவரால் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுச் சிறப்புப் பெற்றது.  

ஆனால் விருத்தப்பாவின் புகழை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர் கம்பர். 'கவிச் சக்ரவர்த்தி' எனப் போற்றப்படும் அளவிற்கு விருத்தப்பாவினைக் கையாண்ட கம்பருக்குப் பிறகு எழுந்த அனைத்துக் காப்பியங்களிலும் விருத்தாப்பாவையே கவிஞர்கள் பயன்படுத்தினர் எனலாம். 

'கம்பன் கவியே கவி' என அறிஞர் போற்றும் கவித்திறன் கம்பரின் தனித்திறன். கதை நிகழ்ச்சிக்கும், பாத்திரங்களின் சூழலுக்கும் ஏற்பச் சந்த நயத்தோடு அமைந்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம். அறுபதுக்கும் மேற்பட்ட ஒலி நயங்களை அமைத்துப் பாடிய கம்பர் 'சந்தவேந்தன்' எனப் புகழப்பட்டார்.




இலட்சிய நாடாகக் கோசல நாட்டைக் காட்டும் 'வண்மையில்லை ஓர் வறுமையின்மையால்' என்ற பாடலும் அழகிய பெண்ணுருவம் கொண்டு சூர்ப்பனகை அசைந்துவரும் அழகை மெல்லோசைகளால் எடுத்துரைக்கும் 'பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்'  எனும் பாடலும் குகன் சீற்றத்தை வெளிப்படுத்தும் 'ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ?' எனும் பாடலும், மருத நில மாட்சியைக் கூறும் 'தண்டலை மயில்களாடத் தாமரை விளக்கந்தாங்க'  எனும் பாடலும் சந்த நயம் மிகுந்த பாடல்களுக்குச் சான்று அளிக்கின்றன.

ஒரு நிகழ்வின் இயல்பு, அழகு, அது தரும் பாதிப்பு, நிகழ்த்தும் பாத்திரத்தின் சொல்லமுடியாத அழகு - இவை எல்லாவற்றையும் கம்பர் கருத்தமைவால் மட்டுமன்றிக் கவிதையின் ஓசை(சந்த) அமைவாலும் காட்டவல்லவர். 




அதாவது ஏட்டில் படிப்பவனுக்கும், அதைக் காதில் கேட்பவனுக்கும் அவர்கள் மனத்தில் ஒரேவிதமான வண்ணச் சித்திரம் உருவாகி,  அவர்கள் புது உலகுக்கு இடம்பெயர்வர்.  இத்தகைய உன்னத ஆற்றலைச் சீதை மணமண்டபத்துக்கு வரும் நிகழ்வைக் கூறும் கம்பர்கவியில் காணலாம்.

 பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதிசீதம்
மின்னின் எழில் அன்னவள்தன் மேனி ஒளிமான,
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்
 (கம்ப. 1144)



உவமைச் சிறப்பு

கம்பரின் உவமைகள் தனித்தன்மை வாய்ந்தவை.  கூர்மையானவை.  கவிதையின் உட்பொருளைக் கண்முன் காண்பதற்கும், மனத்தால் உணர்வதற்கும் ஏற்ற பல உவமைகளைக் கம்பராமாயணம் முழுவதும் காணமுடிகிறது.

 இன்னல் செய் இராவணன் இழைத்த தீமைபோல்
துன்ன அருங் கொடுமனக் கூனி தோன்றினாள்
 எனக் கூனியின் வருகையும்,
 கல் மருங்கு எழுந்து என்றும் ஓர்துளி வரக் காணா
நல் மருந்துபோல் நலன்உற உணங்கிய நங்கை

எனச் சீதையின் உடல், மனம் இரண்டும் வாடிய தன்மையும் உவமைகளால் உணர்த்தப்படுகின்றன. இங்கே கூனியின் வருகை ராமன் செய்த பாவம் என்று கம்பன் சொல்லவில்லை கைகேயின் பாவமோ அல்லது தசரதன் செய்த பாவமாகவோ கம்பன் சொல்ல வில்லை இராவணன் இழைத்த இன்னல்கள் மொத்தமாக மந்தரை எனும் கூனியின் ரூபத்தில் வெளிப்பட்டது என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.




விசுவாமித்திரர் இராமனைத் தன்னுடன் அனுப்புமாறு கேட்கும்போது மகனைப் பிரிய மனமில்லாத தயரதன் நிலைமையை எடுத்துரைக்கும் பாடல் உவமையின் உச்சம் என்றே போற்றப்படுகிறது. பிறவியிலேயே கண்ணில்லாத ஒருவன் திடீரென்று கண்ணைப் பெற்று,  உடனே மீண்டும் பார்வை இழந்தால் எவ்வாறு அதிர்ந்து துன்புறுவானோ அதைப்போலக் கடுந்துயரம் கொண்டான் தயரதன் என்பதைக் கம்பர் கூறும்விதம் காணுங்கள்.

 எண்ணிலா அருந்தவத்தோன் இயம்பியசொல் மருமத்தின்  எறிவேல் பாய்ந்த  புண்ணிலாம் பெரும்புழையில் கனல்நுழைந்தால் எனச்செவியில்  புகுத லோடும்  உண்ணிலா வியதுயரம் பிடித்துந்த ஆருயிர்நின்  நூசலாடக்  கண்ணிலான் பெற்றிழந்தான் எனவுழந்தான் கடுந்துயரம்  கால வேலான்.
 (கம்ப.328)

கண்ணிழந்தான் பெற்றிழந்தான் - என்பது மிக அரிய உவமை. 'துயரம் உந்த ஆருயிர்நின்று ஊசலாட' என்பதில் தசரதன் உள்ளத்துள் நிகழும் மன-உயிர்ப் போராட்டம் காட்சியாகவே விரியும் ஒரு புதுமையான படிமத்தைக் காண்கிறோம். 



காலத்தால் அழியாத காப்பியம் கம்பராமாயணம்,  ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுச்சுவை இன்பம் பயப்பது. 'கம்பன் பிறந்த தமிழ்நாடு' என, பாரதி பெருமையோடு கம்பரைப் புகழக் காரணமாக அமைந்த காப்பியமாகத் திகழ்கிறது.  

அம்மா கம்பன் மீது அலாதி அன்பை ஏற்படுத்திவிட்டீர்கள் - என்ன சொல்வதென்றே புரியவில்லை ---  புன்னகைத்தாள் பூவுக்கும் பூவானவள் அதிலே மாணிக்கம் தெறித்தன . 




ப்ரபாவதீ   --    ஸ்ரீ லலிதாம்பிகை  அதீத சக்தி அம்சம். ஞான ஒளி வீசுபவள்.   அஷ்ட மா  சித்தி எனும்  எட்டு தேவிகள் அவளை சூழ்ந்துள்ளார்கள்.  அஷ்ட சித்திகள் எவை தெரியுமோ?  அணிமா, லஹிமா, மஹிமா, ஈசித்வா,  வசித்வா, பிராகாம்யா, பிராப்தி, சர்வகாமா.  அவர்களை பிரபை என்று சொல்வது.  எனவே  அம்பாள் அவர்கள் சூழ்ந்த பிரபாவதி என்கிறது இந்த நாமம். '

ப்ரபாரூபா  --  விவரிக்கமுடியாத சக்திகளின்  ஒட்டுமொத்த ஸ்வரூபம் அம்பாள். இதை தான் சந்தோக்யோபநிஷத்  சொல்கிறது: (III.14.2) -  மனதை ஆளுமை புரிந்து, நுண்ணிய உருவம் படைத்த பரம சக்தி ஒளி.




ப்ரஸித்தா -  அம்பாள் ஸ்ரீ லலிதையின் புகழை பெருமையை சொல்ல  முடியுமா?  அவளை அறியாதார் யார் ?

பரமேஸ்வரி -  முடிவான தெய்வம். சர்வ வியாபியாக எல்லா உயிரிலும் இருந்து ரக்ஷிப்பவள்.  அவளை  பரம  ஈஸ்வரியாக வழிபடுவது ஒரு பக்கம்.  பரம ஈஸ்வரனான சிவனின் பாகமாக இருப்பதால் சிவனை வழிபடும்போது அவளையும் சேர்த்து வழிபடுவதால் இன்னொரு பெருமை.  மகா சக்தி அல்லவா அம்பாள்.?




மூலப்ரக்ருதி -  ஸ்ரீ அம்பாள்  சகலத்திற்கும் சர்வ ஆதாரமானவள். எல்லாவற்றிற்கும் காரணமானவள்.  

ப்ரக்ருதி  என்றால்  பிரபஞ்சம், இயற்கை என்று ஒரு அர்த்தம்.  மாயை என்று இன்னொரு பொருள்.  அவளே மாயை, இயற்கை எல்லாமே. மூன்று குணங்கள் வயப்பட்டது.   பஞ்சபூதங்களை கலந்து இயங்குவது. அம்பாள் இவற்றால் பாதிக்கப்படாதவள் என்றாலும்  இவை அனைத்துக்கும் ஆதாரமானவள். 

====================


Comments

ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 838*🥇🥇🥇

*US 830*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

34வது ஸ்தபகம்

*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍

இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
ravi said…
830

ஸூ விமலதி யஸ்தஸ்ய க்ரோதாத் த்ருகம்பு துத த்யுதீ

நிபுஜ நவதூ கண்டா போ கோ பவேது த பாண்டுர

ஸபதி புவ நவ் யாப்தம் சாப்தை ப்ரமாணபுரஸ் ஸரம்

பணித மஜரம் பத்ரம் ஜ்யோதி பரம் ஹ்ருதி பாஸதே🌷🌷🌷
ravi said…
சண்டி தேவியை வணங்குபவர்கள் எந்த குறையும் இல்லாமல் எந்த எதிரியும் இல்லாமல் வாழ்வார்கள் . இது சத்தியம் 🌷🌷🌷
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 258*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

33/
3
ravi said…
ஸமிதஐடி மாரம்பா கம்பாதடீ நிகடேசரீ

நிஹதது ரிதஸ்தோமா சோமார்த முத்ரி தகுந்தலா

பலி தஸூ மனோ வாஞ்சா பாஞ்சாயுதீ பரதேவதா

ஸபலயது மே னேத்ரே கோத்ரேஷ் வரப்ரிய நந்தினீ 💥💥💥
ravi said…
அம்மா நந்தினியே .. பர்வத ராஜனின் புத்தரியே , பஞ்சாயுதம் தரித்து பரதேவதையாய் விளங்குபவளே ! அக்ஞானத்தைப் போக்கி பாவங்களை நாசம் செய்கிறவளே , எங்கள் எல்லா மனோரதங்களையும் பூர்த்தி செய்பவளே , காமாக்ஷியே காப்பாற்று 🌷🌷🌷
ravi said…
🙏🌺🙏☘🙏🌹🙏🌸🙏💐🙏

*14. 12. 2020 - MONDAY*

*நாடும் நாமும் நலமாய் வாழ*
*நற் சிந்தனைகள்.*

ravi said…
இனிய திங்கள் காலை வணக்கம்.*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

*நல்லதையே நினைப்போம் ...*
*நல்லதே நடக்கும் ...*

*தெரியாத விஷயத்தை பற்றி பேசாதே ...*

*தெரியும் என்பதற்காக எல்லாவற்றையும் பேசி விடாதே ...!*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

ravi said…
*பிறருக்கு உதவி செய்யுங்கள்...*

*அவர்களால் திருப்பி உங்களுக்கு உதவ முடியாது*
*என்று தெரிந்த போதிலும் ..!*

*அதுவே தர்மம் ...*

💐💐💐💐💐💐💐💐💐💐💐

*பழகிய மனிதர்களிடம் வார்த்தைகளை விடும் முன் ...*

*அவர்களிடம் நடந்த நல்ல சம்பவங்களை கட்டாயம் நினைத்துப் பார்க்க வேண்டும் ...*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
The woman in the picture with a smile is Salwa Hussein! She is a woman without a heart 💔 in her body. She is a rare case in the world, as she carries her artificial heart in a bag.

The British newspaper "Daily Mail" reported that Salwa Hussein, aged 39, is the only one who lives like this way in Britain. She is married, is the mother of two children, and tries to live a normal life as much as she can, but with a twist!

Salwa's heart is placed in a bag which she always holds in her lap. The bag is always with her with a device with two batteries weighing 6.8 kg, which is an electric motor and a pump, The batteries push the air into a plastic bag in the patient's chest through attached tubes, for blood circulation in her body.

All our personal problems and worries are nothing infront of this woman. Yet she smiles. And we lose our peace of mind over rains, heat, birds chirping, birds not chirping, the tea having less sugar, the newspaper getting late......

Let us thank God every moment that we are in good health and wellness. Let us live in gratitude for the blessings bestowed. May we overcome our self centred lives and always be joyous.
ravi said…
It is said that the Ramayana is happening in Your Own Body.

Your Soul is Rama,
Your Mind is Sita,
Your Breath or Life-Force (Prana) is Hanuman,
Your Awareness is Laxmana and
Your Ego is Ravana..

When the Mind (Sita),is stolen by the Ego (Ravana), then the Soul (Rama) gets Restless..

Now the SOUL (Rama) cannot reach the Mind (Sita) on its own..
It has to take the help of the Breath – the Prana (Hanuman) by Being In Awareness(Laxmana)

With the help of the Prana (Hanuman), & Awareness(Laxmana),
The Mind (Sita) got reunited with The Soul (Rama) and The Ego (Ravana) died/ vanished..

In reality Ramayana is an eternal phenomenon happening all the time..
ravi said…
Ramayana - An interesting interpretation
... this is the best interpretation I have read about Ra ma and Ramayana

The Interpretation of Ramayana
As a Philosophy of Life..

‘Ra’ means light, ‘Ma’ means within me, in my heart. So,
Rama means the Light Within Me..

ravi said…
Rama was born to Dasharath & Kousalya.

Dasharath means ‘Ten Chariots’..
The ten chariots symbolize the five sense organs & five organs of action..

Kousalya means ‘Skill’..
The skillful rider of the ten chariots can give birth to Ram..

When the ten chariots are used skillfully,
Radiance is born within..

ravi said…
Rama was born in Ayodhya.
Ayodhya means ‘a place where no war can happen’..

When There Is No Conflict In Our Mind, Then The Radiance Can Dawn..

The Ramayana is not just a story which happened long ago..
It has a philosophical, spiritual significance and a deep truth in it..

It is said that the Ramayana is happening in Your Own Body.

ravi said…
Your Soul is Rama,
Your Mind is Sita,
Your Breath or Life-Force (Prana) is Hanuman,
Your Awareness is Laxmana and
Your Ego is Ravana..

When the Mind (Sita),is stolen by the Ego (Ravana), then the Soul (Rama) gets Restless..

Now the SOUL (Rama) cannot reach the Mind (Sita) on its own..
It has to take the help of the Breath – the Prana (Hanuman) by Being In Awareness(Laxmana)

With the help of the Prana (Hanuman), & Awareness(Laxmana),
The Mind (Sita) got reunited with The Soul (Rama) and The Ego (Ravana) died/ vanished..

In reality Ramayana is an eternal phenomenon happening all the time..
ravi said…
🕉️🌸🕉️🌸🕉️🌸🕉️🌸
*சூட்சும சக்தி வாய்ந்த அஷ்ட ந்ருஸிம்ஹ திருக்கோயில்கள்!*
🙏🙏🙏🙏🙏🙏

*🚩பூவரசங்குப்பம்*

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும், கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். தட்சிண அகோபிலம் என்ற புராணப்பெயரைக் கொண்டது.

ravi said…
தூணிலிருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் பல்லவ மன்னர்கள் காலத்தில் ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூலவர் லட்சுமிநரசிம்மர், உற்சவர் பிரகலாதவரதன், தாயார் அமிர்தவல்லி.

ravi said…
பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில், ஆணுக்குப் பெண் சரிசமம் என்பதை உணர்த்தும் விதமாக பெருமாளின் உருவத்திற்கு தகுந்தாற்போல, தாயாரின் திருஉருவமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

ravi said…
பண்ருட்டியிலிருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சின்னக்கள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் சிறுவந்தாடு என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் இருக்கிறது.

ravi said…
🚩சிங்கிரிக்குடி

பிரகலாதன் வேண்டுகோளுக்கு இணங்கி
16 கரங்களுடன் உக்கிரமூர்த்தியாக காட்சியளித்த தலம் இது. ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட இவ்வாலயம்,

5 நிலை ராஜ கோபுரத்துடன் மேற்கு நோக்கி உள்ளது.

ravi said…
இரண்யகசிபுவை நரசிம்மர் மேற்கு நோக்கி நின்று வதம் செய்ததால், இந்தக் கோவிலும் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளது. நரசிம்மரின் இடதுபுறம்

ravi said…
இரண்ய கசிபுவின் மனைவி நீலாவதி, வலதுபுறம் தரிசனம் வேண்டி 3 அசுரர்கள், பிரகலாதன், சுக்ரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். கருவறையின் உள்ளே வடக்கு நோக்கிய நிலையில் சிறுவடிவில் யோகநரசிம்மர், பால நரசிம்மர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஒரு கருவறையில் மூன்று நரசிம்மர்கள் அருள்பாலிப்பது அரிதான காட்சியாகும்.

ravi said…
கடலூர்–புதுச்சேரி சாலையில் தவளகுப்பத்தில் இருந்து அபிஷேகப்பாக்கம் செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தொலைவில் இந்தக் கோவில் இருக்கிறது.
ravi said…

🚩பரிக்கல்

இதுவும் பிரகலாதனுக்காக நரசிம்மர் காட்சி கொடுத்த தலம் தான். நரசிம்மர் மீது மாறாத பக்திக்கொண்ட விஜயராஜன் என்னும் மன்னன் இங்கு ஆலயம் எழுப்பியுள்ளான். மேலும் ஆலயத்தில் தன் குரு வாமதேவ மகரிஷி உதவியுடன் மூன்று நாட்கள் தொடர் வேள்வி நடத்த ஏற்பாடு செய்தான்.

ravi said…
யாகத்தில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு தேச அரசர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தான். இந்த நேரத்தில் பரிகாலன் என்னும் அசுரன், வேள்வியை தடுத்து நிறுத்த அங்கு வந்தான். அசுரன் வருவதை அறிந்த குலகுரு, மன்னனை அருகிலுள்ள புதரில் ஒளிந்துக் கொள்ளுமாறு கூறினார். இருப்பினும் அசுரன் கோடரியால் மன்னனின் தலையை தாக்கினான். இதையடுத்து நரசிம்மர், ‘உக்கிர நரசிம்மராக’ தோன்றி, பரிகாலனை அழித்து மன்னனுக்கு காட்சியளித்தார்.

ravi said…
சென்னை– திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டைக்கு வடக்கில் இருந்து இந்த ஆலயத்தை அடையலாம். விழுப்புரம் மாவட்ட எல்லைக்குள் இருக்கிறது இந்தக் கோவில்.

ravi said…
🚩சோளிங்கர்

சப்த ரிஷிகளின் வேண்டுகோளின்படி நரசிம்மர் யோக நிலையில் காட்சியளித்த தலம் இது. மூலவர் யோக நரசிம்மர், உற்சவர் பக்தவச்சலம் தாயார் அமிர்தவல்லி.

ravi said…
விசுவாமித்திரர் இங்குள்ள நரசிம்மரை வழிபட்டு பிரம்ம ரிஷி பட்டம் பெற்றார். கடிகாசலம் எனப்படும், 500 அடி உயரமும், 1305 படிக்கட்டுகளும் கொண்ட பெரிய மலையில் மூலவர் அருள்பாலிக்கிறார். உற்சவருக்கு மலையிலிருந்து நான்கு கிலோமீட்டர் தள்ளி ஊருக்குள் தனிக்கோவில் உள்ளது. தமிழ்நாட்டிலேயே மூலவருக்கு தனியாகவும், உற்சவருக்கு தனியாகவும் கோவில் இருப்பது இங்கு மட்டுமே. பெரிய மலைக்கு அருகில் 406 படிக்கற்களைக் கொண்ட சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணம்– சோளிங்கர் சாலையில் இந்த மலைக்கோவில் இருக்கிறது.

ravi said…
🚩சிங்கப்பெருமாள் கோவில்

ஜாபாலி என்னும் மகரிஷி, நரசிம்மரை வேண்டி தவம் செய்து, அவரது தரிசனம் பெற்ற தலம் இது. இவர் ‘பாடலாத்ரி நரசிம்மர்’ என்று அழைக்கப்படுகிறார். அபூர்வ நெற்றிக்கண்ணுடன் மலைமீது அமர்ந்திருப்பதால், இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ravi said…
பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில், அவர் இடதுகாலை மடித்துவைத்தும், வலதுகாலை தொங்கவிட்ட நிலையிலும் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் வலதுகாலை மடித்துவைத்தும், இடதுகாலை தொங்கவிட்ட நிலையில் மிகப்பெரிய மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.

காஞ்சீபுரம் மாவட்ட எல்லைக்குள், தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் சிங்கப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
ravi said…

🚩 நாமக்கல்

திருமகள், தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை காண வேண்டி, தவம் செய்து தரிசனம் பெற்ற தலம் இது. நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து சாளக்கிராம கல்லை (திருமாலின் அனுக்கிரகம் பெற்றது) எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார் அனுமன்.

ravi said…
கையிலிருந்த சாளக்கிராமத்தைக் கீழே வைக்கமுடியாத நிலையில், என்ன செய்வதென யோசித்தவருக்கு தீர்த்தக் கரையில் தவம் செய்த திருமகள் தெரிந்தார். மகிழ்ச்சியுடன் அவரிடம் அந்த சாளக்கிராமத்தைத் தந்து விட்டு நீராடச் சென்றார். அதை கையில் வாங்கிய திருமகள் குறித்த நேரத்திற்குள் வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன் என்று கூறினார்.

ravi said…
அதுபோலவே அனுமன் வராதிருக்க திருமகள் அக்கல்லை கீழே வைத்தார். அது பெரியதாக விசுவரூபம் பெற்று பெருமலையானது. அதிலிருந்து நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும் ஆஞ்சநேயருக்கும் காட்சியளித்தார். சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன் நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
ravi said…

🚩சிந்தலவாடி

ஒரு பக்தனின் கனவில் தோன்றிய நரசிம்மர், தனக்கு ஒரு ஆலயம் எழுப்புமாறு கூறி, அந்த பக்தனுக்கு காட்சியளித்த தலம் இது. ஹரியாச்சார் என்பவர் கரூர் மாவட்டம் திருக்காம்புலியூரில் வசித்துவந்தார். அவர் கனவில் ஒருநாள் நரசிம்மர் தோன்றி, தான் கருப்பத்தூர் காவிரிக்கரையில் ஒரு கல்லாக கவிழ்ந்து கிடப்பதாகவும், தன்மீது ஒரு சலவையாளர் அனுதினமும் துணி துவைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

ravi said…
இதுகேட்டு வேதனையுற்ற ஹரியாச்சார் கருப்பத்தூர் சென்றார். இதேபோல் சலவையாளரின் கனவிலும் தோன்றி சொல்லியிருக்கவே, இருவரும் சேர்ந்து நரசிம்மரை கண்டுபிடித்து, அதை தூக்கிக் கொண்டு திருக்காம்புலியூர் புறப்பட்டனர். பாரம் அதிகமாக இருக்கவே திருக்காம்புலியூருக்கும், கருப்பத்தூருக்கும் இடைபட்ட சிந்தலவாடியில் இருந்த வெங்கட்ரமண ஆலயத்தில் இறக்கி வைத்தனர். பகவான் அங்கேயே பிரதிஷ்டை ஆனதுடன், ஹரியாச்சாருக்கும், சலவையாளருக்கும் காட்சித் தந்தார்.
திருச்சி– கரூர் நெடுஞ்சாலையில் காட்டுப்புத்தூர் அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

ravi said…
🚩அந்திலி

நரசிம்மர், தன் வாகனமான கருடனுக்கு காட்சி தந்த திருத்தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில் தன்னிடம் சொல்லாமல் பகவான் புறப்பட்டுச் சென்றதை அறிந்த கருடன், மிகுந்த வேதனை அடைந்தார். பகவானைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.

ravi said…
எங்குச் சென்றாலும் தன்மீது ஏறிச்செல்லும் பகவான், தன்னை மறந்துவிட்டுப் போனதை எண்ணி வருந்தியவர் இந்த தலம் இருக்கும் இடத்திற்கு வந்து தவம் இருந்தார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். கருடனிடம் முன்பாக சென்றார் நாராயணர். அப்போது தனக்கும் நரசிம்மராக காட்சியளிக்க வேண்டும் என்று கருடன் வேண்ட, அவ்வாறே காட்சியளித்தார்.

ravi said…
திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூரை அடுத்திருக்கிறது அந்திலி திருத்தலம்.

உயிர்கள் அனைத்தும் வாழ்க வளமுடன்!
🔯🌷🔯🌷🔯🌷🔯🌷
Savitha said…
கம்பர் புகழ் எடுத்துகாட்டிய விதம் அருமை
வார்த்தை ஜாலம் மடை
திறந்த வெள்ளம்
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sujatha said…
👏👏👏👏👍🏻
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 74 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐


*11வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌
ravi said…
11. *பஞ்ச-தன்மாத்ர-ஸாயகா* 👌👌👌
ravi said…
பஞ்ச புஷ்ப பாணங்களுக்கு அதிபதி வாராஹி ...

இந்த ஒரு நாமம் போதும் 1000 நாமங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ..

மனதை அவளிடம் ஒப்படைத்து விட வேண்டும் ..

ஆதிசங்கரர் சிவானந்த லஹரியிலே மிகவும் நகைச்சுவையுடன் பரமேஸ்வரனிடம் வேண்டுகிறார் ...

ravi said…
ஏ சம்போ! உன்னிடம் இருக்கும் காளை மிகுவும் வயதானது ..

அதில் நீயும் உமையும் ஏறி செல்வது என்பது முடியாத காரியம் ..

ஒரு வயதான பிராணியை தொந்தரவு படுத்துவதாக உங்கள் மீது பலர் வழக்கை தொக்கலாம் ..

நீங்கள் இருவரும் சிறை சென்று விட்டால் இந்த உலக பரிபாலனம் யார் செய்வது ?

இதோ அதற்கு ஒரு வழி சொல்கிறேன் ...

ravi said…
என் மனம் ஒரு குதிரை .. இளமை கொண்டது .

மிகவும் வேகமாக ஓடக்கூடிய பஞ்ச கல்யாணியையும் தோற்கடிக்கக்கூடியது ..

இந்த குதிரையை உனக்குத் தருகிறேன் ...

இதில் இருவரும் ஏறி பயணம் செய்யுங்கள் ..

அந்த குதிரையின் ஓட்டத்தை உங்கள் இருவரினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் ... என்கிறார் ...

ravi said…
ரமணரும் அக்ஷ்ர மாலையில் ஐம்பெரும் கள்வர்கள் என் உள்ளமதில் நுழையும் போது நீ அங்கு இல்லையோ அருணாசலா என்று அப்பாவியாய் கேட்கிறார் ...

மாணிக்க வாசகர் .. உன்னை சிக்கென பிடித்துக்கொண்டேன் .. இனி என்னை விட்டு விட்டு எங்கு எழுந்தரள்வாய் ? என்று கேட்கிறார்.

எல்லோருமே மனதை கட்டுப்படுத்தத்தான் வேண்டுகிறார்கள்...

அம்பாளிடம் மனதை தந்து விடுங்கள் . பிறகு நடப்பவை எல்லாமே நல்ல படியாகவே அமையும் . 🙏🙏🙏
ravi said…
*Lalitha Trishati 291 - 300* 💐💐💐
ravi said…
*291. Hrīṁkāraśuktikāmuktāmaṇi ह्रींकारशुक्तिकामुक्तामणि*💐💐💐

She is compared to a pure pearl

*292. Hrīṁkārabodhitā ह्रींकारबोधिता*👌👌👌

She is made known or explained through hrīṁ (ह्रीं).

The nāma says that there is no difference between Her and hrīṁ and if one knows the significance of hrīṁ, it is equivalent to realizing Her.

*293. Hrīṁkāramayasauvarṇa-stambhavidrumaputrikā ह्रींकारमयसौवर्ण-स्तम्भविद्रुमपुत्रिका*💐💐💐 She is the self of the universe and she is also the self of a being 🏆🏆🏆

*294. Hrīṁkāravedopaniṣad ह्रींकारवेदोपनिषद्*👌👌👌

Hrīṁ itself is referred here as Veda. Thus, there is no difference between Her and Vedas.

🏆🏆🏆

*295. Hrīṁkāradhvaradakṣiṇā ह्रींकारध्वरदक्षिणा*💐💐💐 She is the destroyer of Ego . 👍👍👍

*296. Hrīṁkāranandanārāmanavakalpakavallarī ह्रींकारनन्दनारामनवकल्पकवल्लरी*💐💐💐 She is in the divine garden , pleasant and charming like a young creeper 🌸🌸👍

*297. Hrīmkārahimavadgaṅgā ह्रीम्कारहिमवद्गङ्गा*👌👌👌 She makes the soul to merge with Siva

*298. Hrīṁkārārṇavakaustubhā ह्रींकारार्णवकौस्तुभा*👌👌👌

Kaustubha ...One of the 14 precious and sacred things obtained while churning the ocean

*299. Hrīṁkāramantrasarvasvā ह्रींकारमन्त्रसर्वस्वा*👌👌👌

She is everything 🍇🍇🍇
ravi said…
All the Upaniṣad-s repeatedly stress the importance of knowledge to realise the Brahman, as the mind alone is capable of knowing the Brahman.

Saundaryalaharī (verse 98) prays, “Oh! Mother! Tell me when shall I, seeking knowledge, drink the water cleansing Your feet.”

The unique feature of the Divine Mother is Her holy feet.

She wipes out pains and miseries of Her worshippers by Her feet.

ravi said…
When She is worshipped through heart and mind, the worshipper is ‘endowed with long life with his association with the soul, and his ignorance cast away, he enjoys the sweetness of what is known as the Supreme Bliss’ (Saundarya Laharī verse 99).🌷🌷🌷
ravi said…
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய் தூயவனே !

துயரை துடைப்பாய் துன்பம் ஓடச்செவ்வாய் ஒப்பில்லாதவனே !

அன்பை தருவாய் அன்னையாய் என்னை பெற்றுடுப்பாய் அகிலம் போற்றும் ஆண்டவனே !

நட்பை தருவாய் .. நல்லதே செய்யும் மனம் தருவாய் நாடு போற்றும் நாயகனே .! 👏👏👏
ravi said…
உன் பார்வை ஒன்று போதும் உன் அருள் ஒன்று போதும் ..

உனையே நினைக்கும் மனம் ஒன்று போதும் ..

உதவும் கரம் கொண்ட வாழ்க்கை ஒன்று போதும் ...

எதுவும் போதும் என்று சொல்லும் குணம் ஒன்று போதும்

எது வந்தாலும் உன் துணை ஒன்று போதும் சாயி 💪💪💪
ravi said…
எளிமை கொண்டு உலகை வாங்கினாய் ...

ஏழ்மை கொண்டு செல்வம் அது பாதம் பணியக் கண்டாய் .

மௌனம் கொண்டு பலரை பேச வைத்தாய் ...

பிராணம் கொண்ட பிராணிகளையும் பெறாமல் பெற்றுடுத்தாய்

உன்னை போல் ஒருவர் உண்டு என்று சொன்னால் அந்த ஒருவரும் நீயன்றோ ரமணா ?
ravi said…
இளமை அது சென்று விட்டதோ?

முதுமை அது முந்திக்கொண்டதோ ... ?

நடந்த பாதங்கள் நலிந்து போனதோ? ...

கண்களும் நரை அதை சந்தித்ததோ ?

உடமெங்கும் தள்ளாமை தழுவிக்கொண்டதோ ...?

மனித அவதாரத்தில் மறதி வந்து மடி சுமந்ததோ ?

மாணிக்கமே .. உன் கண்கள் மட்டும் முதுமை காணா அதிசயம் என்ன ?

காரூண்யம் அங்கே சிம்மாசனம் போட்டு ஆட்சி செய்யும் அழகுக்கும் ஒப்பார் உண்டோ ? 👌👌👌
ravi said…
*புன்னகை ராமாயணம் 96/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
நீதஸ்ய அத நிஜாந்திகம் தவ விபோ வாதாத்மஜாதேன தம்
ஸுக்ரீவம் நயனாக்ரத: கலயதோ மித்ரம் ச மித்ராத்மஜம்
தத் ப்ரூதம் ச யதா ததம் ச்ருதவதோ யந்நாம மந்த ஸ்மிதம்
ஸஞ்ஜாதம் வதனாம்புஜே தத் இதம் இதி ஆனந்தவான் அஸ்மி அஹம்

नीतस्याथ निजान्तिकं तव विभो वातात्मजातेन तं
सुग्रीवं नयनाग्रतः कलयतो मित्रं च मित्रात्मजम्।
तद्ब्रूतं च यथातथं श्रुतवतो यन्नाम मन्दस्मितं
संजातं वदनाम्बुजे तदिदं इत्यानन्दवानस्म्यहम्॥
ravi said…
சொல்லின் செல்வன் பேசுவதில் தன் மனத்தை பறிக்கொடுத்த ராமன் பிறகு அவர் தன் சுய ரூபத்தை காட்ட அந்த சுந்தர வதனத்தைப்பார்த்து பிரமித்துப்போகிறான் ராமன் --

பிறகு அனுமன் அவர்களை தன் தலைவனான சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறான்

இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது அதனால் ஏற்பட்ட புன்னகை😊😊😊
ravi said…
*நீதஸ்ய அத நிஜாந்திகம் தவ விபோ வாதாத்மஜாதேன தம்*💐💐💐

*வாதாத்மஜாதேன* என்றால் வாயுவின் புத்திரன் -

அவன் சுக்ரீவனிடம் அழைத்து செல்கிறான்

ராமனும் சுக்கிரீவனை தனது நண்பனாக ஆக்கிக்கொண்டான்

*ஸுக்ரீவம் நயனாக்ரத: கலயதோ மித்ரம் ச மித்ராத்மஜம்*

சுக்ரீவன் ராமனிடம் தன் கதையை சொல்கிறான் வாலியினால் ஏற்பட்ட கொடுமைகளை சொல்கிறான் தன் மனைவியை அவன் அபகரித்ததை பற்றி சொல்கிறான்..

மித்திரன் என்றால் நண்பன் என்று ஒரு பொருள் .. இன்னொரு பொருள் சூரியன் .. சூரியனின் அம்சம் சுக்கிரீவன் ...

*ஒரு மித்திரனை மித்திரனாக்கிக் கொண்டுமே* என்ற மகிழ்ச்சியில் ராமன் மனம் பூரிப்பு அடைந்து புன்னகைக்கிறான் 💐💐💐
ravi said…
*தத் ப்ரூதம் ச யதா ததம் ச்ருதவதோ யந்நாம மந்த ஸ்மிதம்*👌👌👌

*ஸஞ்ஜாதம் வதனாம்புஜே தத் இதம் இதி ஆனந்தவான் அஸ்மி அஹம்*


ராமா உன்னை வடுவூரில் தரிசனம் செய்ய வருபவர்கள் எல்லோரையுமே நீ சுக்கீரவனைப் போல் மித்திரனாக்கி கொல்கிறாய் ...

யாருமே உனக்கு பகை இல்லை எல்லோரும் உன் நண்பர்களே என்று சொல்லவோ சுக்ரீவனைப் பார்த்து சிந்திய புன்னகையை வடூவூரிலும் சிந்துகிறாய் ?😊😊😊
ravi said…
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ravi said…
96 .. கிஷ்கிந்தா ஸ்பந்தம் --4 💐💐💐💐

🐒🐒🐒🐒🐻🐻🐻🐵🐵🐵🐵🐵🐵
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 839*🥇🥇🥇

*US 831*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

34வது ஸ்தபகம்

*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍

இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
ravi said…
அதய மரிபி க்ராந்தே ராஷ்ட்ரே த்வ மீஸ்வரி ரக்ஷிகா

ஸூமஸரமுகைர் தூதே சித்தே த்வமீஸ்வரி ரக்ஷிகா

ப்ரபலது ரிதைர்க்கரஸ்தே வம்ஸே த்வமீஸ்வரி ரக்ஷிகா

Sபயஸ்ருஜதி ஜலம் மேகே த்வமீஸ்வரி ரக்ஷிகா 🌷🌷🌷
ravi said…
அம்மா இந்த நாடு இன்னும் முழுமையாய் அடிமைத் தனத்தில் இருந்து விடை பெறவில்லை .. அப்படி சொல்ல முடியாமல் தவிக்கும் பல உயிர்களை நீ தான் காப்பாற்ற வேண்டும் . வேண்டாத காம உணர்ச்சிகளில் இருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும் . மனித சமுதாயம் மன சுத்தம் ... நீ தான் அருள் செய்ய வேண்டும் . எல்லோரும் உன் அருளால் நன்றாக இருக்க வேண்டும் தாயே !!💐💐💐
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 259*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

34/
3
ravi said…
மமது திஷனா பீட்யா ஜாட் யாதி ரேக கதம் த்வயா

குமுத ஸூஷமா மைத்ரீ பாத்ரீ வதம்ஸித குந்தலாம்

ஸமித துரிதஸ்தம்பாம் கம்பாநதீ நிலயாமசௌ

ஸ்ரயதி ஹி கலத்தந்த்ரா சந்த்ரா வதம்ஸ ஸதர்மிணீ ம்
ravi said…
அவள் கம்பானதீ தீரவாசினி

பாப சமுத்திரத்தை போக்குபவள்

சந்திரனை சிரோ பூஷணமாகக் கொண்டவள்

சந்திரசேகரின் பத்தினி

காமாக்ஷி என் மனதில் குடியிருப்பதால் என் மனதில் கெட்ட எண்ணங்கள் உதிப்பதே இல்லை 🌷🌷🌷
ravi said…
*ஐந்து மூலவர் ஸ்தலம்:*

கோயில்களில் பெரும்பாலும் ஒரு மூர்த்தி மட்டுமே பிரதான மூலவராக இருப்பார்.

ஆனால், இக்கோயிலில் ஐந்து மூர்த்திகள் மூலவர் அந்தஸ்தில் வணங்கப்படுகின்றனர்.

பிரதான மூலஸ்தானத்தில் வேங்கடகிருஷ்ணர்,

முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான்,

பிரகாரத்தில் கஜேந்திரவரதர் மற்றும் யோகநரசிம்மர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் இருக்கின்றனர்.

எனவே இத்தலம், *பஞ்சமூர்த்தி தலம்* என்றழைக்கப்படுகிறது.

ரங்க நாதர் சன்னதியில், சுவாமியின் தலைக்கு அருகில் வராகரும், கால் அருகில் நரசிம்மரும் இருக்கின்றனர்.

ரங்கநாதர், இங்கு தாயாரை திருமணம் செய்துகொள்ள வந்தபோது நரசிம்மரும், வராகமூர்த்தியும் உடன் வந்தனர் என்ற அடிப்படையில் இந்த அமைப்பு உள்ளது.👌👌👌

இவ்வாறு ஒரே சன்னதிக்குள் பெருமாளின் மூன்று கோலங்களையும் இங்கு தரிசிக்க முடியும்.

திருமணத்திற்கு வந்த ரங்கநாதரை, தாயார் “”என்னவரே!” என்ற பொருளில், *ஸ்ரீமன்நாதா!* என்றழைத்தார்.

எனவே இவருக்கு *ஸ்ரீமன்நாதர்* என்ற பெயரும் உண்டு.

கிழக்கு நோக்கிய மூலவர் வேங்கட கிருஷ்ணன், மேற்கு நோக்கிய யோக நரசிம்மர் என இருவருக்கும் இரு திசைகளிலும் இரண்டு கொடி மரங்களும், வாசல்களும் உள்ளன.💐💐💐
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

இதிலே இன்னொரு பெரிய தப்பு என்ன என்றால், நாம் எதுவோ ஒன்றில் ஆசைப்பட்டுவிட்டால், அதன் அநுபோகத்தில் நமக்குக் கிடைக்கும் ஸ்வய த்ருப்திக்காகப் பிறத்தியார் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிடுகிறது.
ravi said…
நமக்கு வாய்க்கு ருசியாக ஒன்று வேண்டுமென்பதற்காக வயஸான தாயார் கல்லுரலைக் கட்டிக்கொண்டு மன்றாடினாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இப்படி எத்தனையோ கஷ்டங்களுக்கு, கொடுமைகளுக்குப் பிறரை ஆட்படுத்தி நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கிறோம். இதெல்லாம் நம் பாபக்கணக்கில் ஏறி வருங்காலத்தில் நம்மை வட்டிபோட்டுத் தீட்டிவிடும்.

ravi said…
இந்த விஷயத்தை ஆலோசித்துப் பார்க்கும்போது பிறர் கஷ்டப்பட்டாவது நாம் த்ருப்திப்பட நினைக்கிறோம் என்பது நமக்கே தெரியாத விதத்தில், ரொம்பவும் நல்ல உத்தசேங்களில்கூட எத்தனை சூதாக (இதைத்தான் மாயை என்பது) வேலை செய்கிறது என்று தெரிகிறது. பொது ஜனஸேவை, பரோபகாரம் என்று செய்கிறோமே, தாத்பர்யம் என்ன?
ravi said…
நம்மைக் கஷ்டப்படுத்திக்கொண்டாவது பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்கவேண்டும் என்பதுதான். ஆனால், இந்த ஸேவையாலும் பிறத்தியாருக்கு த்ருப்தியைத் தருவதைவிட நமக்கே த்ருப்தி உண்டாக்கிக் கொள்கிறதுதான் உள்ளூர, நம்மை அறியாமலே, நமக்கு முக்யமாய்விடுகிறது.
ravi said…
எப்போது பார்த்தாலும் நாம் விரும்புவது போன்ற பரோபகாரப் பணி நமக்குக் கிடைக்கும் என்ற சொல்ல முடியாதல்லவா? அப்படி சரீரத்தாலோ, த்ரவய்தத்தாலோ உபகாரம் பண்ண முடியாமலிருக்கிற நாளில், தொண்டில் ரொம்பவும் ஈடுபட்டவர்களுக்கு, ‘ஐயோ, இன்றைக்கு தண்டத்துக்கு ஒரு தொண்டும், இல்லாமலிருக்கிறோமே’ என்று வருத்தமாய் இருக்கிறது.
ravi said…
அந்த மாதிரி ஸமயத்தில் எவனோ ஒருத்தன், ‘தரித்ரத்தில் திண்டாடறேன்; அஞ்சு, பத்து உதவி பண்ணுங்கோ’ என்று வந்தால் பரோபகாரிக்கு ஸந்தோஷமாயிருக்கிறது; ‘யாரோ கீழே விழுந்துவிட்டார்கள்; first-aid (முதலுதவி) தரவேண்டும், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போகவேண்டும்’ என்று ஸேவைக்கு டிமான்ட் வந்தால் உடனே ஸந்தோஷம் உண்டாகிறது.

ravi said…
அதாவது, ஒரு பரோபகாரி விண்டு பார்த்துக் கொண்டால், அவனுடைய உள்மனஸுக்கே அது ஸம்மதமாகத்தான் இருக்காது என்றாலும்கூட, அவனுக்கு ஸேவை செய்வதில் உள்ள ஆசையினால், அவனையும் அறியாமலே அந்த ஆசைப் பூர்த்தியை முன்னிட்டு வேறு எவனோ ஒருத்தன் தரித்திரத்திலோ ஆபத்திலோ கஷ்டப்பட்டாக வேண்டியிருக்கிறது.
ravi said…
அதவாது, தான் இன்னொருத்தன் கஷ்டத்தைத் தீர்க்கவேண்டும் என்ற ஆசைப் பூர்த்தியை முன்னிட்டு எவனாவது கஷ்டப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்! “எதிர்ப்பார்கிறான்” என்றால் மனஸ் அறிந்து இல்லை. “எனக்குத் தொண்டு வாய்ப்பு கிடைப்பதற்காக யாராவது கஷ்டப்படவேண்டும்” என்று மனஸறிந்து ஒரு உபகாரி நினைக்கமாட்டான். ஆனாலும் மனஸுக்குள்ளே சூதாக இப்படியும் ஒரு எண்ணம் பதுங்கி கொண்டு இருக்கிறாற் போலத்தான் இருக்கிறது.

ravi said…
வெள்ள நிவாரணம் என்று பெரிதாக ஒரு பணி செய்து முடித்துத் திரும்பும்போது, ‘நாளைக்கு இப்படி ஓடி ஆடி நூறு ஜனங்களுக்குச் செய்வதற்கில்லையே’ என்று ஒரு தாபம் பிறந்தால், அப்போது தனக்கு ஸேவா பாக்யம், அதிலே கிடைக்கும் ஆசைப்பூர்த்தி, ஆத்ம த்ருப்தி போய்விட்டதே என்ற அபிப்ராயம் துளியாவது இருக்கத்தான் செய்கிறது. ஸேவை மாதிரி உத்தம விஷயமாக இல்லாமல் கெடுதலானவற்றில் ஆசை உள்ளபோது இந்த அபிப்ராயமே நன்றாக பலமாக வெளிப்பட்டு, பிறரை மனஸறிந்து கஷ்டப்படுத்தியாவது ஸ்வய ஆசையைப் பூர்த்திப் பண்ணிக் கொள்ள வைக்கிறது.

ravi said…
எதுவோ ஒன்றில் நாம் ஆசை வைத்துவிட்டால் அது நம் கையை விட்டுப் போகிறபோது, நமக்கு அந்த ஒன்றில் ஏற்படும் மனத்ருப்தியையே நினைத்து பிறத்தியார் கஷ்டப்பட்டாவது நமக்கு அது மறுபடி கிட்டவைக்க வேண்டுமென்று நினைத்துவிடுகிறோம்.

ravi said…
இப்படி அநேகத் தப்பு எண்ணங்களை ஆசை உண்டாக்குகிறது.

ravi said…
இதுவரை ஆசைப்படுகிறவர் ஆளாகிற கஷ்டம், துக்கங்களையே பற்றி நிறையச் சொன்னேனே, ஆசைப்படுகிறவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்ட துக்கங்களைப் பார்க்கும்போது இது ரொம்ப அல்பமாகி விடுகிறது. ஆசையினால் எத்தனை கொலைகள்!
ravi said…
ஸாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கவேண்டுமென்று ராஜாக்கள், ராஜா மாதிரியான ஹிட்லர், முஸோலினி போன்வற்கள் ஆசைப்பட்டால் எத்தனை லக்ஷம் உயிர்கள் சாகவேண்டியிருக்கிறது? நடக்கின்ற அத்தனை கொலையும், கொள்ளையும், ஸ்த்ரீகளை பலாத்காரம் படுத்துவதும், மற்ற மோசடிகளும் ஆசையினால்தானே?

ravi said…
தன்னுடைய ஆசையினால் மற்றவருக்கு இழைக்கும் இந்தத் துன்பங்கள் ஒருவனைச் சும்மா விடுவதில்லை. அவை எல்லாம் அவனுடைய பாபக் கணக்கில் ஏறி ஒட்டிக்கு இரட்டியாக அவனை நரக லோகத்திலும் மறு ஜன்மாக்களிலும் பழி வாங்கத்தான் செய்யும்.
ravi said…
🌀 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை.
*அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.*

🌀 வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.
*யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.*
ravi said…

🌀 நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை.
*வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.*

🌀 பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்
குணம் இருந்தால் நீ *குப்பை.*
நடித்தால் நீ *நல்லவன்.*
உண்மை பேசினால் *பைத்தியக்காரன்.*
அன்பு காட்டினால் *ஏமாளி.*
எடுத்துச் சொன்னால் *கோமாளி.*
ravi said…

🌀 இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.
பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்

🌀 நிலவை... தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.

ravi said…
🌀 சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
*சில வலிகள் இல்லாமல் இருக்க.*

🌀 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் .
அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள்.
*அவர்களுக்கு புரியவைக்க.*
*வரும் காலம் ஒன்று உள்ளது.*
*சிந்தித்து செயல்படு இதுவும் கடந்து போகும்.*

🌀நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
*ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.*

ravi said…
🌀யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
*ஆனால் எல்லோரும் உன் தவறை மட்டும் பார்ப்பார்கள்.*

🌀மனிதனும் வாழை மரமும் ஒன்று தான்.
தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள்.
*தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*

🌀இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும்
Savitha said…
மித்திரனை
அதாவது சூரியனை
மித்திரன்
(நன்பன்) ஆக்கி கொள்வது
அருமையான சொல் வன்மை
ஜெய் ஸ்ரீராம்🌷🌷🙏🏻🙏🏻
ravi said…
வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்

பஞ்ச க்ருத்ய பராயணா

ஸ்ருஷ்டியிலும், ஸ்திதியிலும் நிறைவான, நிரந்தரமான ஆனந்தம் இல்லை. ஸம்ஹாரத்தில் எந்த அலைச்சலும் இல்லாத ஆனந்தம் இருந்தாலும், ‘ஆனந்தமாக இருக்கிறோம்’ என்ற பிரக்ஞை இல்லை – இதுவும் பிரயோஜனமில்லை.

ravi said…
துரீயத்தில்தான் இந்த மூன்றுமே அடிபட்டுப்போய் இவற்றுக்கு ஆதாரமான ஒரே சத்தியம் மட்டும் ஆனந்த ஸ்வரூபமாகப் பூர்ணப் ப்ரக்ஞையுடன் பிரகாசிக்கிறது. அந்த ஒன்றுதான் மாயையால் இந்த மூன்றாகவும் (ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற மூன்றாக) தெரிந்தது.

மாயை போனால், மூன்றும் போய்விடும். துரீயமான ஒன்று மட்டுமே நிற்கும். ஜீவனை இந்த மூன்றின் கட்டிலிருந்து, மாயா பந்தத்திலிருந்து அம்பாள் விடுவித்தால் அந்த ஆனந்தத்தை அநுபவிக்கலாம்.

ravi said…
இந்த உலக மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பரீட்சையில் பாஸ் பண்ணுவது, உத்தியோகத்தில் பிரமோஷன் பெறுவது, வியாதி வந்தால் குணமாவது இதற்கெல்லாம் பிரார்த்தனை செய்கிறோம். நம் பிரார்த்தனை நிறைவேறி விட்டால் “ஸ்வாமி அநுக்கிரஹம் செய்து விட்டார்” என்று சொல்கிறோம்.

ravi said…
ஆனால், பராசக்தியின் பஞ்ச கிருத்தியங்களை (ஐந்தொழில்கள்) எடுத்துக் கொள்ளும்போது ‘அநுக்கிரஹம்’ என்றால், அது மாயா லோகத்திலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆத்ம ஸ்வரூபமான மோக்ஷ நிலையில் சேர்ப்பிக்கிறதைத்தான் குறிக்கும்.

ravi said…
லலிதா ஸஹஸ்ரநாமமும் “பிரம்மாவாக உலகைப் படைக்கிறாய், விஷ்ணுவாகக் காக்கிறாய், ருத்திரனாக ஸம்ஹரிக்கிறாய், மஹேஸ்வர சக்தியாக மாயை ஆகிறாய், ஸதாசிவ ஸ்வரூபமாக அநுக்கிரஹத்தை செய்கிறாய்’ என்று ஐந்தொழில்களைச் சொல்கிறது:

ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரம்ஹரூபா; கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ;
ஸம்ஹாரிணி – ருத்ரரூபா; திரோதானகரி – ஈச்வரி;
ஸதாசிவா – அநுக்ரஹதா; பஞ்ச க்ருத்ய பராயணா

பெரியவா சரணம்!




ravi said…
__வெள்ளிக்கிழமை வைபவம் - அம்பாள் குறித்த ஸ்ரீ மஹா பெரியவா அருளமுதம்__

__சந்திர மண்டல மத்யகா__

பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் மணித்வீபம், ஸ்ரீபுரம் உள்பட சில வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது.

ravi said…
தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும் சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள்.

ravi said…
அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.

ravi said…
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலா வெளிச்சத்தில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை.

ravi said…
சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

ravi said…
பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது (சந்த்ரமா மனஸோ ஜாத:). இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

ravi said…
இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

ravi said…
சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். அவ்வாறு அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.

ravi said…
காளிதாஸர் ‘தேசிக ரூபேண தர்சிதாப்புதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும்.

__பெரியவா சரணம்!__

Popular posts from this blog

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை