Posts

Showing posts from November, 2019

ஒரு புன்னகையில் எரிந்த திரிபுரம்

Image
ஒரு புன்னகையில் எரிந்த திரிபுரம்   இறைவன் தன் பக்தர்களை மட்டுமின்றி தன்னை வழிபடும் தேவர்களையும் முனிவர்களையும் அவ்வப்போது சோதிப்பதுண்டு.  அவ்வாறு தேவர்களை சோதித்ததின் அடையாளமாகவும், வீரச்செயல் புரிந்ததின் ஆதாரமாகவும் திகழ்கிறது திருவதிகை திருக்கோவில்.  இது சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாகும். ஒரு புன்னகையை மட்டுமே ஆயுதமாக ஈசன் எடுத்துக்கொண்டான் ... பாதங்களில் பலர் குவித்த ஆயுதங்கள்... ரதம் , வில் , திரிசூலம் , ஈட்டிகள் .. எதுவுமே ஈசன் நாட வில்லை .. தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள் வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவர்.  இவர்கள் பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்.  தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “”நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும்.  நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.  வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள்.  வானவர்களைக் கடுந்

சிருங்கேரி சாரதா

Image
சிருங்கேரி சாரதா   துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார் சங்கரர் .   தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் இங்கு இருந்தது.  இங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய அற்புத காட்சியை சங்கரர் கண்டார்.  இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடம் என கருதினார்.  முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார். அம்மா சாரதே உன்னை சௌந்தர்ய லஹரியில் வர்ணித்தேன் ...  ... உன்னை பாதி தான் வர்ணிக்க முடிந்தது .. மீதி பாதியை வர்ணிக்க உன் அருள் வேண்டும் சாரதே !  அம்பாள் சிரித்தாள் .. நூறு ஸ்லோகங்கள் பாடி பூர்த்தி ச