சிருங்கேரி சாரதா
சிருங்கேரி சாரதா
துங்கபத்திரை நதிக்கரையில் இருந்த சிருங்கேரிக்கு வந்து சேர்ந்தார் சங்கரர் .
தசரதர் புத்ரபாக்யம் வேண்டி செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்த ரிஷ்யசிருங்க மாமுனிவரின் ஆசிரமம் இங்கு இருந்தது.
இங்கு நிறைமாத கர்ப்பிணியான ஒரு தவளை வெயிலில் உஷ்ணம் தாங்காமல் தவிக்கும்போது ஒரு நாகப்பாம்பு படமெடுத்து தன் தலையால் குடைபிடித்து அத்தவளையைக் காப்பாற்றிய அற்புத காட்சியை சங்கரர் கண்டார்.
இயல்பாகவே, விரோதிகளான இவை இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்ட சங்கரர் இந்த இடம் மிகவும் சக்திவாய்ந்த இடம் என கருதினார்.
முன்பு உபயபாரதியை வனதுர்கா மந்திரத்தால் கட்டுப்படுத்தி தான் விரும்பும் இடத்தில் அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும் என்று செய்த வேண்டுகோள் நினைவுக்கு வர, அதன்படியே அவளுக்கு ஓர் ஆலயத்தை ஏற்படுத்தி பிரம்மஸ்வரூபிணியாக சாரதாபரமேஸ்வரியை பிரதிஷ்டை செய்தார்.
அம்மா சாரதே உன்னை சௌந்தர்ய லஹரியில் வர்ணித்தேன் ... ... உன்னை பாதி தான் வர்ணிக்க முடிந்தது .. மீதி பாதியை வர்ணிக்க உன் அருள் வேண்டும் சாரதே !
அம்பாள் சிரித்தாள் .. நூறு ஸ்லோகங்கள் பாடி பூர்த்தி செய்தாயே ஏன் பாதி தான் முடித்தேன் என்கிறாய் ?
அம்மா உன்னுள் பாதி ஈசன் .. அவனையும் வர்ணித்தால் தான் உன்னை வர்ணித்த முழுமை நிறைவு பெறுகிறது .. அது வரை அதற்கு பூரணத்துவம் இல்லையே தாயே ...
சங்கரா .. எப்படி ஈசனை வர்ணிக்கப் போகிறாய் ... ? திருமாலுக்கு 10 அவதாரங்கள் .. கண்ணன் லீலைகள் , பஜ கோவிந்தம் என்றெல்லாம் எளிமையாக சொல்ல பாட எழுத முடியும் .. ஆனால் ஈசனை வர்ணிப்பது சுலபமான காரியம் இல்லை ..
தாயே .. அது தான் புரிய வில்லை ... வர்ணனைக்கு அப்பார்ப்பட்டவன் அவன் .. எதை எப்படி வர்ணிப்பது தாயே ?
சங்கரா உனக்கு வார்த்தைகள் ஏன் வரவில்லை தெரியுமா ?
தாயே அது தான் புரியவில்லை .. உன்னைப் பற்றி எழுதும் போது அருவியாக கொட்டிய வார்த்தைகள் எங்கே போய் ஒளிந்து கொண்டன என்றே தெரியவில்லை ...
Comments