பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

                   ச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

       பகையை வெல்லும்   48வது  படை 

சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்

363 👍👍👍💥💥💥




கும்பகோணம் அருகாமையில் உள்ள அழகாபுத்தூர் சிவன் கோயிலில்  சக்கரம் ஏந்திய  கோவில் உள்ளது.

நாயன்மாரான புகழ்த்துணையார் என்பவர் அங்கு அன்னதானம் செய்து வந்துள்ளார்.  ஒருமுறை அவரை சோதிக்கவிரும்பிய சிவன், பஞ்சத்தை உருவாக்கியுள்ளார்.  

கோவிலில் தெய்வத்திற்கு நேவேத்யம் செய்ய அங்கு வழியில்லை.  இந்த நிலையில், ஒருநாள்அரசலாற்றில் ஊற்று தோண்டி அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்தார்.  மேலும்குடம் நழுவி சிவலிங்கத்தின் தலையில் விழவே சேதம் ஏற்பட்டது. 

இந்த குற்றத்திற்கு பரிகாரமாக மூச்சடக்கி அவர் உயிர் விடத்துணிந்தார் நாயனார். 




அப்போது அசரீரியாக, புகழ்த்துணையரோ!  இன்று முதல் தினமும்  பொற்காசு தருகிறேன்.  இங்குள்ள படியில் அந்த காசு இருக்கும்.   அதன் மூலமாக அடியாருக்கு அன்னதானம் செய்யுங்கள் என வாக்களித்தார் சிவன்.  இதனால் ஸ்வாமிக்கு படிக்காசுநாதர், வர்ணபுரீஸ்வரர் (சுவர்ணம் தங்கம்), குபேரலிங்கம் என பெயர் வந்தது.  அம்மனின் பெயர் அழகம்மை.
   
இக்கோயிலில் முருகனின் சன்னதி சிறப்புமிக்கது. இவர் தன் மாமாவான திருமாலுக்குரிய சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கிறார், 

வள்ளி, தெய்வானை அருகில் உள்ளார்.  மயில் இடது புறமாக திரும்பி நிற்பது மாறுபட்ட அமைப்பாகும்.  கார்த்திகை நட்சரத்தன்று, முருகனுக்கு துவரம்பருப்பு சாதம் படைத்தல் மாங்கல்ய  தோஷம், நாகா தோஷம் அகலும்.  மனைவியுடன் தனி சன்னதியில் புகழ்த்துணை நாயனார் இருக்கிறார்.




ஒருசமயம் பிரம்மா கைலாயத்திற்கு சென்றபோது, அங்கிருந்த முருகனை அவர் கவனிக்காமல் சென்றார். பிரம்மாவை அழைத்த முருகன், “நீங்கள் யார்?” எனக்கேட்டார். பிரம்மா அவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதோடு, தானே உலகை படைப்பவன் என்றும் கர்வத்துடன் கூறினார்.

முருகன் அவரிடம் “எந்த மந்திரத்தின் அடிப்படையில் படைக்கிறீர்கள்?” எனக்கேட்டார். “ஓம்” என்னும் பிரணவ மந்திர அடிப்படையில்தான் என்றார் பிரம்மா. முருகன், அம்மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். அவருக்கு தெரியவில்லை. எனவே அவரது தலையில் குட்டி, பதவியை பறித்தார்.



இதையறிந்த சிவன் முருகனிடம், பிரம்மாவிடம் பதவியை கொடுக்கும்படி கூறினார். முருகன் கேட்கவில்லை. சிவன், பிரணவத்தின் விளக்கம் சொல்லும்படி முருகனிடம் கேட்கவே, அவரும் விளக்கினார். பின்பு, சிவன் அவரை சமாதானம் செய்யவே, மீண்டும் பிரம்மாவிடம் பதவியை ஒப்படைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியாவிட்டாலும் வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்கு வருந்தினார் முருகன். எனவே தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு காட்சி தந்து “தவறை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம், தவறில்லை. ஆனால், தண்டிக்கத்தான் கூடாது” என்று அறிவுரை சொல்லினார். இவரே இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்

 





மூலவர்படிக்காசுநாதர் (சொர்ணபுரீஸ்வரர்)
உற்சவர்சோமாஸ்கந்தர்
அம்மன்அழகம்மை
தல விருட்சம்வில்வம்
தீர்த்தம்அமிர்தபுஷ்கரணி
ஆகமம்சிவாகமம்
பழமை1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்அரிசிற்கரைபுத்தூர்
ஊர்அழகாபுத்தூர்
மாவட்டம்தஞ்சாவூர்
மாநிலம்தமிழ்நாடு
பாடியவர்கள்அப்பர்சுந்தரர்சம்பந்தர்மாணிக்கவாசகர்



சங்கு சக்கர முருகன்

பொதுவாக சில திருக்கோவில்களில் முருகனை வேல் தாங்கிய வராகவும், தண்டாயுதம் தரிந்தவராகவும், சில கோவில்களில் வில் ஏந்தியவராகவும் தரிசித்திருக்கிறோம். ஆனால் இத்திருக் கோவிலின் வெளிச்சுற்றில் வடமேற்கில் தனிக்கோவிலில் ‘ஓம்’ என்ற பிரணவ எழுத்தில் ஆறு முகங்களுடன், முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார்.

அவர் கையில் மாமன் திருமாலைப் போல சங்கு சக்கரம் ஏந்தி தோன்றுவது எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். அங்கே வள்ளி- தெய்வானை இருபுறமும் இருக் கின்றனர். திருமணம் வரம் கேட்பவர்கள், குழந்தைப்பேறு வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் சங்கு சக்கர ஆறுமுகப்பெருமானை வழிபட்டால் காரியம் கைகூடும் என்பது அன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

பக்தனின் பசியை நீக்க படிக்காசு வழங்கிய சொர்ணபுரீஸ்வரர், தன்னை நம்பி வரும் அன்பர்களின் வறுமையைப் போக்கி வளமையைக் கூட்டுவார் என்பது திண்ணம். 





*619* *பாவனாக்ருதி* -  


பரிசுத்தத்தின்  உருவம். சிருஷ்டி ஸ்திதி லயம் காரிய கர்த்தா அம்பாள். மோக்ஷதாயினி.   சிவனை  உணர்வது அவள் மூலமாகத்தான் முடியும். 

தவம், த்யானம் அண்ட் ஞானம் மூலமே சிவனை அதாவது பிரம்மத்தை உணரமுடியும்.   

அம்பாளே அதற்கு வழி காட்டி.👍👍👍




*620 அனேககோடி ப்ரஹ்மாண்ட  ஜனனீ* -  

பெரிய நீளமான  நாமம் இது. 

அற்புதமான அர்த்தம் கொண்டது. 

எத்தனையோ கோடி மகா பெரிய மண்டலங்களின் தாய் அம்பாள் ஸ்ரீ லலிதை  என்கிறார்  ஹயக்ரீவர்.  

ப்ரம்மத்திற்கு நான்கு நிலைகள். 

அவ்யக்தம்  (பிரபஞ்சத்தின் வெளிப்படில்லாத  மூன்று குணங்களும் சமமாக  காணும் வெறுமை நிலை, துரியம் என்பது இதைத்தான். 

சர்வம் ப்ரம்மமயம்) , ஈஸ்வரா (கடவுள் என்று அறியும் நிலை,  

முத்தொழில்கள்  ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம்  துவக்கமாகி செயல்படும் நிலை.

மாயை தோன்றி ஆட்டுவிக்கும் நிலை. 

இதில் தான்  காரண சரீரம் புலப்படுகிறது), 

 ஹிரன்யகர்பா ( உலகம், பிரபஞ்சத்தையம்,  ஜீவனையும்  பிணைக்கும் நிலை, எல்லா உயிரும் சேரும் நிலை, 

ஒன்றையொன்று இணைவது. 

இந்த நிலையில் தான்  லிங்க சரீரம், சூக்ஷ்ம சரீரம் தெளிவாகிறது),

கடைசியாக  விராட் , 

இதை வைஸ்வாநரம் என்றும் சொல்வது.  

இதில் தான் நாம் காணும் அனைத்து உருவங்களும்  ஜீவன் பெறுகின்ற  நிலை. கண்ணால் பார்க்க முடிந்த நிலை. 

எல்லாமே பிரம்மத்தின் துக்கிணியூண்டு.  

ஸ்தூல சரீரம் இதில் தான் காணலாம். புருஷன் எனும் ஆத்மா ப்ரக்ரிதியோடு இணைந்தால் தான்  உலகில் ஜீவன் தோன்றுகிறது. 🦜🦜🦜🦚🦚🦚
--------–--------------------------++++++++++++++--------------


Comments

ravi said…
*Devarṣi-gaṇa- saṃghāta -stūyamānātma-vaibhavā देवर्षि-गण-संघात-स्तूयमानात्म-वैभवा (64)*👍👍👍
ravi said…
From this nāma, till nāma 84, Her slaying of demon Bhaṇḍāsura is described. Deva + rṣi + gaṇa.

Deva means gods and goddesses, rṣi means sage and gaṇa means demigods.

Agni purāṇa says that there are seven types of gaṇa-s.

For example Rudra gaṇa-s mean the assistants or helpers to Śiva.

There is a separate stanza (11) in Śrī Rudraṁ offering prayers to Rudra gaṇa-s. Rṣi-s mean great sages like Vasiṣṭha, Nārada, etc.

Nārada is also called Deva rṣi. She is worshipped by gods, goddesses, sages, demigods and goddesses. Stūyamānātma means worshipping. Vaibhavā means all pervading.

Only Brahman or Pramātman is all pervading. Deva-s and rṣi-s will not worship anybody below the grade of the Supreme Brahman.

So this indirectly implies Her status of nirguṇa Brahman.🙂🙂🙂
ravi said…
It is also said that sage Nārada (deva) approached Lalitai to slay demon Bhaṇḍāsura who was causing immense trouble to Deva-s and rṣi-s.

The deeper meaning of this nāma is - demons here mean the ego arising out of ignorance.

Lalitā is approached by them to absolve them of their ego, as She alone is capable of absolving them.

Sins are committed because of ego.🙏🙏🙏
ravi said…
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*காமேஷ்வர =* காமேஷ்வரன் - சிவன் - இறைவன்

*முகா* = முக

*ஆலோக* = பார்வை - பார்த்தல் -

*கல்பித* = உருவாக்குதல் - செய்தல்

*ஸ்ரீகணேஷ்வரா =* கணேஷ்வரர் - பிள்ளையார்

77
# *காமேஷ்வர முகாலோக கல்பித ஸ்ரீகணெஷ்வரா* =

இறைவன் காமேஷ்வரனின் முகலாவண்யத்தை காணுற்று அவ்வாறே கணேஶ்வரரை ஸ்ருஷ்டித்தவள்💐💐💐
ravi said…
வேழத்திற்கும் அன்னை வேதத்திற்கும் அன்னை

ஞானத்திற்கும் அன்னை ஞாலத்திற்கும் அன்னை

முகம் இல்லா ஆறுகளுக்கும் அன்னை

ஆறு முகம் கொண்டவனக்கும் அன்னை ..

பாசம் கையில் கொண்ட அன்னை மனதில் வாசம் செய்ய வரும் அன்னை

பத்து திங்கள் பெற்றவள் இல்லை அவள் ...

பல கோடி திங்கள் தரும் அமுதம் அவள்

பார்வை ஒன்றினால் பாரம் சுமக்கின்றாள் ...

நம் பாரம் இறக்கியே பார் போற்ற செய்கின்றாள் ...

பெரியவா எனும் கீதை தனை தந்தவள் ..

சீதையின் நாயகன் போல் மந்தஸ்மிதம் கொண்டவள் 🙂

நாமும் சிரித்து வாழும் சிங்காரம் தந்திடுவாள்..

சத்தியம் இது ... சங்கடம் இல்லை அவள் பாதம் தன்னை பற்றியவர்களுக்கே 🥇🥇🥇🏆🏆🏆
ravi said…
*ஸர்வ*= எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும்

*அருண* = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு

*49 ஸர்வாருணா*=

ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள்💐💐💐
ravi said…
குங்குமம் உன் மேனி நிழலோ ...

குங்கமப்பூ உன் இதழ்களின் சாயமோ ...

செம்பருத்தி கொடை கொடுக்கும் உனக்கு ஒரு குடையோ ?

காலை உதிக்கும் பால சூரியன் உன் நெற்றி தனில் தவழும் செந்தூர பொட்டோ ?

எங்கும் சிவப்பு அதுவே உன் வெற்றி சங்கோ ...

ரத்தம் தீர்ந்துவிட்டால் பிறவி முடிந்து போகும் ...

நீயும் என்னை விட்டு நீங்கி விட்டால் உயிர் வாழ்வதில் ஏதும் அர்த்தம் உண்டோ ?💐💐💐
ravi said…
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🏆
Savitha said…
அருமை பெருமை அற்புதம் முருகன் .. 👍👍👍👍👍
ravi said…
44. திருப்பாச்சிலாச்சிராமம் - தக்கராகம்

திருச்சிற்றம்பலம்

470. துணி வளர் திங்கள் துளங்கி விளங்க, சுடர்ச்சடை சுற்றி முடித்து,
பணி வளர் கொள்கையர், பாரிடம் சூழ, ஆர் இடமும் பலி தேர்வர்;
அணி வளர் கோலம் எலாம் செய்து, பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மணி வளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?

ravi said…
471. கலை புனை மானுரி-தோல் உடை ஆடை; கனல் சுடரால் இவர் கண்கள்;
தலை அணி சென்னியர்; தார் அணி மார்பர்; தம் அடிகள் இவர் என்ன,
அலை புனல் பூம் பொழில் சூழ்ந்து அமர் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
இலை புனை வேலரோ, ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

ravi said…
472. வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை வேண்டுவர்; பூண்பது வெண்நூல்;
நஞ்சு அடை கண்டர்; நெஞ்சு இடம் ஆக நண்ணுவர், நம்மை நயந்து;
மஞ்சு அடை மாளிகை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
செஞ்சுடர் வண்ணரோ, பைந்தொடி வாடச் சிதை செய்வதோ இவர் சீரே?
ravi said…

473. கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல் தரு தூமதிக்கண்ணி
புன மலர் மாலை அணிந்து, அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
அனம் மலி வண்பொழில் சூழ் தரு பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
மனம் மலி மைந்தரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே?
ravi said…

474. மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து ஆடி, வளர்சடை மேல் புனல் வைத்து,
மோந்தை, முழா, குழல், தாளம், ஒர் வீணை, முதிர ஓர் வாய் மூரி பாடி,
ஆந்தைவிழிச் சிறு தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ravi said…
சாந்து அணி மார்பரோ, தையலை வாடச் சதுர் செய்வதோ இவர் சார்வே?

475. நீறு மெய் பூசி, நிறை சடை தாழ, நெற்றிக்கண்ணால் உற்று நோக்கி,
ஆறுஅது சூடி, ஆடு அரவு ஆட்டி, ஐவிரல் கோவண ஆடை
பால் தரு மேனியர்; தத்தர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
ஏறு அது ஏறியர்; ஏழையை வாட இடர் செய்வதோ இவர் ஈடே?

ravi said…
476. பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு, ஆமை, வெண்நூல்,
புனை கொன்றை,
கொங்கு இள மாலை, புனைந்து அழகு ஆய குழகர்கொல் ஆம்
இவர் என்ன,
அங்கு இளமங்கை ஓர் பங்கினர்; பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
சங்கு ஒளி வண்ணரோ, தாழ்குழல் வாடச் சதிர் செய்வதோ
ravi said…
இவர் சார்வே?

477. ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை ஈடு அழித்து,
மூவரிலும் முதல் ஆய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள்;
யாவர்களும் பரவும் எழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
தேவர்கள் தேவரோ, சேயிழை வாடச் சிதைசெய்வதோ இவர் சேர்வே?
ravi said…

478. மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது சேவடி தன்னை
நீல் அது வண்ணனும் எய்தியது இல்லை, என இவர் நின்றதும் அல்லால்,
ஆல் அது மா மதி தோய் பொழில் பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பால் அது வண்ணரோ, பைந்தொடி வாடப் பழி செய்வதோ இவர் பண்பே?
ravi said…

479. நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர் இருபோதும்;
ஊணொடு கூடிய உட்கும் தகையார் உரைகள் அவை கொள வேண்டா;
ஆணொடு பெண்வடிவு ஆயினர், பாச்சிலாச்சிராமத்து உறைகின்ற
பூண் நெடு மார்பரோ, பூங்கொடி வாடப் புனை செய்வதோ இவர் பொற்பே?
ravi said…

480. அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க, ஆச்சிராமத்து உறைகின்ற
புகை மலி மாலை புனைந்து அழகு ஆய புனிதர் கொல் ஆம் இவர் என்ன,
நகை மலி தண்பொழில் சூழ்தரு காழி நல்-தமிழ் ஞானசம்பந்தன்
தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த, சாரகிலா, வினைதானே.

திருச்சிற்றம்பலம்
ravi said…
:தக்கேசி
பாடல் எண் : 6
மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங்
கொள்கையான் மிகைபல செய்தேன்
செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த
திருமுல்லை வாயிலாய் அடியேன்
பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே
ravi said…
பொழிப்புரை :

மாற்றாது வழங்கும் வள்ளலே , வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் பகைத்து எரித்தவனே , திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருப்பவனே , உயிர்களைக் காப்பவனே , மேலான ஒளியாய் உள்ளவனே , யான் பொய்யையே பேசி , குற்றங் களையே செய்தாலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேனாகலின் ,
ravi said…
யான் பெற்ற பேறு , மற்று யார் பெற வல்லார் ! அத்திருவருட் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் ; அது , தவறுடைத்தே . ஆயினும் , அது நோக்கி என்னை நீ கைவிடுவையாயின் , அடியேன் வேறொரு துணை இல்லேன் ; ஆதலின் , அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கியருளாய் .
ravi said…
இன்று காலையில் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் பிரம்மாண்ட தேர் வீதியுலா ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்...

காண கண் கோடி வேண்டும் நண்பர்களே..

ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ஓம் நமசிவாய வாழ்க
ravi said…
There was a Jewish man named Yankel, who had a bakery, in a town, Crown Heights, Germany. He always said, "You know why I’m alive today?"

He said "I was a kid, just a teenager at the time in Germany.

Nazis were killing Jews with no mercy.

ravi said…
We were on the train being taken to Auschwitz by Nazis. Night came and it was deathly cold in that compartment.

ravi said…
The Germans left us on the side of the tracks overnight, sometimes for days, without any food. There were no blankets to keep us warm. Snow was falling everywhere. Cold winds were hitting our cheeks, every second. We were hundreds of people in that terribly cold night. No food. No water. No shelter. No blankets ".

"
ravi said…
The blood in our bodies started freezing. It was becoming ice.

Beside me, there was a beloved elderly Jewish man from my hometown. He was shivering from head to toe, and looked

terrible. So I wrapped my arms around him to warm him up.

ravi said…
I hugged him tightly to give him some heat. I rubbed his arms, his legs, his face, his neck. I begged him to try to be alive.

I encouraged him.

All night long, I kept this man warm this way.

ravi said…
I was tired, and freezing cold myself. My fingers were numb, but I didn’t stop rubbing heat into that old man’s body.

Hours and hours went by. Finally, morning came and the sun began

to shine. I looked around to see the other people.

ravi said…
To my horror, all I could see were frozen bodies. All I could hear was deathly silence.

Nobody else in that cabin were alive. That freezing night killed them all.

They died from the cold. Only two people survived: the old man and me.

The old man survived because I kept him warm... and I survived because I was warming him.

May I tell you the secret to survival in this world?

When you warm other people’s hearts, you will remain warm yourself.

When you support, encourage and inspire others, then you will discover support, encouragement and inspiration in your own life as well.

That is the secret to a happy life.
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

🟩 உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தருபவர்களிடமும் உங்களிடம் அக்கறையோடு பழகுபவர்களிடமும் நீங்களும் அதிக அக்கறையாக இருங்கள்.

🟩 இல்லாததற்கு ஏங்குவதல்ல மகிழ்ச்சி. இருப்பதை உணர்தலே மகிழ்ச்சி.

🟩 நீங்கள் யார் என்பதில் பெருமிதம் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது பற்றி கவலைப் பட வேண்டாம்.

🟩 உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் உயர்வாகவே கருது.

🟩 பொறுமையோடு அமைதியாக நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்து வாழ்வது ஒரு மனிதன் தன் மீது கொண்ட நம்பிக்கைக்கும் கடவுள் மீது கொண்ட நம்பிக்கைக்கும் சான்றாகும்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
*"Success" 24/03/2021*

*Each day has lots of successes in it just waiting to be grabbed. So don’t waste any time in bed. Get up and go out there and grab your success before it gets dark again*

*Always Stay Strong with Positive thoughts* .

*Good morning, Make a Wonderful Wednesday* 🤝💥🌟💐🌸🌹👍👍

*Stay Positive, stay strong* 👆👆👆

*வெற்றி!!!👍👍👍*

*எந்த ஒரு செயலையும்..முழுமனதோடும், தன்னம்பிக்கையோடும், கவனமாக செய்தால் வெற்றி நிச்சயம்!!!*

*இனிய காலைவணக்கம்🙏🙏🙏*
ravi said…
#திருமயிலை_கபாலீச்சரத்தில் 2021 #பங்குனி_பெருவிழாவில் 5ஆம்_நாள் (23/03/2021)
இரவு #பஞ்சமூர்த்திகள் #வெள்ளிவிடை காட்சி!!

#சுவாமி பெரிய #வெள்ளி_ரிஷபம்!!
அம்பாள் #தங்க_ரிஷபம்!!!
முருகர் #மயில்_வாகனம்
விநாயகர் #மூஷிக_வாகனம்
சண்டிகேஸ்வரர் #சின்ன_ரிஷபம்!!!

🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

#மயிலையே_கயிலை!!!
#கயிலையே_மயிலை!!!
S G S Ramani said…
சங்கு சக்கர முருகன் பற்றிய பதிவு அருமை..

நாம் தரிசித்த முருகன் கோவில்களை விட கேட்டதும் பார்த்ததும் இல்லாத பல அரிய முருகன் திருத்தலங்களை பற்றி இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது..

ஓம் சரவணபவ..

🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
இதுவரை நாம் பார்த்த முருகன் ஆலயங்கள்*

🦚🦚🦚

1. *ஆறுபடை வீடுகள்*

2. 7 வது படையாக *மருதமலை - கோயம்பத்தூர்*

3. 8 வது படையாக *திருசெங்கோட்டு முருகன் - திருச்செங்கோடு*

4. 9 வது படையாக *செல்வமுத்து குமரன் - வைத்தீஸ்வரன் கோயில்*

3. 10 வது படையாக *வயலூர் - திருச்சி*

4. 11.வது படையாக விராலிமலை - *திருச்சி -மதுரை வழி*

5. 12 வது படையாக *குக்கே சுப்ரமணியசுவாமி - கர்நாடகா*

6. 13 வது படையாக - *மோபி சுப்பிரமணியர் கோயில் - ஆந்திரா*

ravi said…


7. 14 வது படையாக *கதிர்காமம் - ஸ்ரீலங்கா*

8. 15 வது படைவீடாக *மலேஷியா பத்துமலை குகை முருகன்* 🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

9. 16வது படை வீடாக *எட்டுக்குடி முருகன் - திருவாரூர்*

10. 17வது படை வீடாக *அனுவாவி சுப்ரமணிய சுவாமி - கோயம்புத்தூர்*

11. 18வது படை வீடாக *ஸ்கந்தாஸ்ரமம் சேலம்*

10. 19வது படை வீடாக *ஊத்து மலை முருகன் - சேலம்*

11. 20வது படை வீடாக - *சிங்கார வேலன் சிக்கல் நாகப்பட்டினம்*

12. 21வது படை வீடாக *திருமுருகன் பூண்டி*

ravi said…

13 . 22வது படை வீடாக - *சென்னி மலை முருகன் - ஈரோடு*

14. 23வது படை வீடாக *வள்ளி மலை முருகன்*

15. 24வது படை வீடாக *சிவன் மலை காங்கேயம்*

16. 25வது படை வீடாக நாளை பார்க்கப்போவது *கந்தன்குடி ..திருவாரூர்*

ravi said…

17. 26வது படை ... மன அமைதி தரும் மயிலம் முருகன் கோவில் 👍👍👍

18. 27வது படை .. நல்லூர் கந்தசுவாமி கோவில் - யாழ்ப்பாணம் 👍👍👍

19.28 வது படை .. வேலுடையான் பட்டு முருகன் கோவில்

20 . 29 , 30 , 31 வது படை- மூன்று படை வீடு
March 19, 2021 at 8:34 PM

ravi said…

21. 32வது படை ... குன்றத்தூர் முருகன் 💐💐💐💐

22. 33 வது படை - வடபழனி👍👍👍

23. 34 வது படை ...கந்தர் மலை முருகன்👍👍👍

ravi said…

24. 35-36 வது படை - பச்சை மலை , பவள மலை முருகன் 😊😊😊

25 . 37வது படை ... கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி 💐💐💐

26. 38 வது படை ... நங்கநல்லூர் சுப்ரமணிய சுவாமி 👍👍👍

ravi said…

27. 39வது படை .. கந்தசுவாமி திருக்கோயில் - திருப்போரூர்💐💐💐

28 40 வது படை வீடு ... பத்ரகிரி மலை சிவ சுப்ரமணியன்👍👍👍

29 41வது படை... திருமயிலாடி முருகன் 💐💐💐
March 19, 2021 at 8:56 PM

ravi said…

30. 42வது படை ஊத்துக்குளி முருகன்👌👌👌 👍👍👍

31. 43வது படை கழுகு மலை முருகன் 💐💐💐
March 19, 2021 at 9:00 PM
ravi said…
44 திருவிடைக்கழி தெய்வானை சமேத முகப்பெருமான் கோவில்-

45அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி -நாமக்கல்.

46. நீலகிரி ஜலகாம்பாறை முருகன்

47. சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் கும்பகோணம்
ravi said…
32. 44வது படை வீடு திருவிடைக்கழி தெய்வானை சமேத முருகப்பெருமான் கோவில்-

33. 45 வது படை வீடு அருள்மிகு பழனியப்பர் திருக்கோவில், பேளுக்குறிச்சி -நாமக்கல்.

34. 46 வது படை வீடு நீலகிரி ஜலகாம்பாறை முருகன்

35 47 வது படை வீடு ...சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் கும்பகோணம்
ravi said…
ஸ்ரீரங்கம் அருள்மிகு
அரங்கநாதஸ்வாமி திருக்கோயில்

ஆதிபிரம்மோத்ஸவம் பங்குனி திருவிழா
நம்பெருமாள் புறப்பாடு
ஐந்தாம் நாள் பகல்
சேஷ ராயர் மண்டபம் 24.03.2021

ravi said…
இன்று அரங்கன் வீதி உலா இல்லை :-

இன்று பங்குனி மாத கற்பக விருக்ஷ வாகனம் ... சேஷராயர் மண்டபம் - குதிரை சிலைகள் இருக்கும் - வெள்ளை கோபுரம் உட்புறம் இருக்கும் மண்டபத்தில் இருந்து புறப்பாடு ..

சற்று முன் - வடக்கு சித்தரை வீதியில் ஒரு வயதானவர் - திருநாட்டை அலங்கரித்து விட்டார் ... எனவே சித்திரை வீதி பெருமாள் வலம் வருவது சாத்தியமில்லை என தெரிகிறது ..

பக்தர்கள் - ரெங்க விலாச மண்டபத்தில் சென்று பெருமாளை சேவிக்கலாம் ....🙏💐
ravi said…

முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ மாவட்டம் ▾ படங்கள் அறிவியல் ஸ்பெஷல்

ravi said…
அழகன் திருமுருகப் பெருமானின் திருஉருவை வருணித்து ஆதிசங்கரர் தமது சுப்பிரமணிய புஜங்கத்திலும், அருணகிரிநாதர் தம் திருப்புகழிலும், குமரகுருபர சுவாமிகள் கந்தர் கலிவெண்பாவிலும், பாம்பன் சுவாமிகள் சண்முகக்கவச நூலிலும், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் திருப்போரூர் சந்நதி முறையிலும், அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் தம் திருவருட்பாவிலும், கந்த சஷ்டி கவசம் தந்தருளிய தேவராய சுவாமிகளும் அற்புதமாகப் பாடி அருளியுள்ளார்கள் !


ravi said…
எங்கும் நிறைந்தவன் முருகன்! இயற்கையின் எழில் வடிவம் எல்லாம் அவன் உருவமே! அழகுடன் விளங்குபவை எல்லாம் ஆறுமுகனின் தோற்றமே! ஆலயங்கள் தோறும் அருளாட்சி புரியும் அழகன் முருகனின் அபூர்வ வடிவங்களைக் கண்டு தரிசிப்போம் வாருங்கள்!பல நூற்றாண்டுகள் பழமையான சரித்திரப் பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு மலைமீது உள்ள செங்கோட்டு வேலவன் கையிலிருப்பது கல்லால் ஆன வேல் ஆகும்.
ravi said…
இது முருகப் பெருமானது தலைக்கு மேலே உள்ள கீரிடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கிற அற்புதத்தைக் காணலாம். இவ்வேல் முருகனின் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கும். எனவே இதைக் குறைக்கவும் முடியாது உடைக்கவும் முடியாது.

ravi said…
திருமுருகப் பெருமான் பஞ்சலிங்கங்களைப் பூஜித்த தலம் திருச்சீரலைவாய் எனும் திருச்செந்தூர் ஆகும். அருள்மிகு செந்தில் ஆண்டவருக்குப் பின்னால் ஐந்து சிவலிங்கத் திருமேனிகளைக் காணலாம். கருவறையில் முருகன் கைகளில் மலர், தண்டம் மற்றும் ஜெப மாலையுடன் காட்சி தருகிறார்.

ravi said…
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் வீடு திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன் தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இக்கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். இங்கு முருகனின் வேலுக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது மற்றொரு சிறப்பு.

ravi said…
திருச்செந்தூர் திருத்தலத்தில் முருகன் தனது திருக்கரத்தில் தாமரை மலரோடு சிவபெருமானைப் பூஜை செய்யும் வண்ணம், ஒரு கரத்தில் ஜெபமாலை, மற்றொரு கரத்தில் சக்தி ஹஸ்தம், இன்னொரு கரத்தில் தாமரை மலர் இவற்றுடன் தவக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

ravi said…
பழனி, திரு ஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோயில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இங்கே முருகன் குழந்தையாக மயில்மீது அமர்ந்து நெல்லிமர நிழலில் கோயில் கொண்டுள்ளார். மலை உச்சியில் முருகன் ராஜ அலங்காரத்தில் ஓர் அரசரைப் போல உயரமான கருவறையில் காட்சி தருகிறார்.

ravi said…
கும்பகோணம் - சுவாமிமலையில், சுவாமிநாத சுவாமியின் சந்நிதிக்கு எதிராக மயிலுக்கு பதிலாக யானை வாகனம் உள்ளது. இது தேவேந்திரன் அளித்தது என்பது ஐதீகம். கருவறையில் முருகன் வலக்கரத்தில் தண்டம் ஏந்தியபடி ஊறு முத்திரையில் நின்ற நிலையில் அருள்
பாலிக்கிறார்.

ravi said…
திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிதே வீற்றிருந்து அருள்கிறார். ‘குன்று தோறாடல்’ என்பது முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையும் குறிக்குமாயினும், அது திருத்தணிகைத் தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கிறது எனத் தமிழ் அறிஞர்கள் கருதுகின்றனர்.

ravi said…
சிலம்பாறு எனப்படும் நூபுர கங்கையில் பழந்தமிழர் முருகனை வேல் வடிவமாக வழிபட்ட தொன்மை வாய்ந்த திருத்தலம் பழமுதிர் சோலை. இங்குதான் முருகன் மாட்டுக்கார வேலனாக வந்து காட்சி தந்தாராம், அவ்வைப் பாட்டிக்கு!

ravi said…
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ‘இரண்டு அடுக்கு’ கோயில் ஆகும். மலையில் அடர் வனத்துக்கு மத்தியில் அமைந்த கோயிலில் காலப்போக்கில் மூலவர் சிலை சிதைவானது. கோயிலும் சேதமடைந்திருந்தது. வேறொரு சிலை செய்யப்பட்டது. ஆனால் பழைய சிலையை அகற்ற முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டு, அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலைக் கட்டி புதிய முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

ravi said…
இவ்வாறு கீழே ஒரு முருகன் மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோயில் அமைந்திருக்கிறது. பிரதான மூலஸ்தானத்தில் அற்புதக் கோலம் கொண்ட முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம் கீழ் அடுக்கில் உள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. இங்கே முருகன் பாலகனாக வலது கையில் தண்டம் ஏந்தி இடக்கையை இடுப்பில் வைத்தபடி காட்சி தருகிறார். இங்கே இவருக்கு எப்போதும் ராஜ அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.

ravi said…
சென்னை - கோடம்பாக்கம் வடபழனி யாண்டவர் கோயிலில் மூலவர் பாத காலணி
களுடன் அருள்புரிகிறார். பாத காலணிகள் அணிந்திருப்பது ஆணவத்தையும் அகங்காரத்தையும் அடியோடு நீக்குவதைக் குறிக்கிறது. மூலவரின் வலது காலானது சற்று முன் வந்ததுபோல் காணப்படுவது பக்தர்களின் குறைகளை விரைந்து வந்து நீக்குவதாக ஐதீகம். இத்தலத்தின் சிறப்பு வேறு எந்த படை வீட்டிலும் காண முடியாதது.

ravi said…
எட்டுக்குடி முருகன் கோயில் சிவனடியார்க்கும், முருகனடியார்க்கும் ஆரா இன்ப அருளமுது பாலிக்கும் அருந்தலம் ஆகும். கந்தபுராணத்தில் கூறியுள்ளபடி இங்கு முருகன் சூரபத்மனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில்மீது ஏறி அமர்ந்து. அம்பறாத்தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீர சௌந்தர்யம் உடையவராக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள்தான் இங்கு மூலவராக உள்ளார். இங்கு முருகன் மிகவும் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலாபிஷேகம் செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

ravi said…
சேலம் நகருக்கு அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உடையாபட்டி கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமானும் அன்னை பார்வதியும் எதிரெதிர் சந்நதியில் இருப்பதை இங்குத் தவிர வேறெங்கும் காணமுடியாது. அம்பாள் உயிராகவும், முருகன் அறிவாகவும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இங்கே மற்றொரு அதிசயமாக முருகனைச் சுற்றி மனைவியருடன் சேர்ந்த நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ravi said…
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற கந்தசாமி திருக்கோயில். இக்கோயிலில் கந்தசாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பிரதான பூஜைகள் செய்வதற்காக ‘சுப்பிரமணியர் யந்திரம்’ பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகனுக்கு பூஜை நடந்த பின், இந்த யந்திரத்திற்கு பூஜை நடக்கும். வாய்மீது கைவைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் முருகன் சிலையும், கையில் வில்லேந்தி, மயில் மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்கே உள்ளன.

ravi said…
தொண்டை நாட்டில் கமண்டல நதிக்கரையில் மிகவும் புகழ் பெற்ற தலம் குண்டலீபுரம். இங்குள்ள ரேணுகாதேவி ஆலயத்தில் வடக்குப்புறம் பார்த்து தோகை விரிக்காமல் நிற்கும் மயிலின் மீது வள்ளி நாயகன் முருகப் பெருமான் நின்றபடி காட்சியளிப்பது வியப்பானது. இங்கு போகர்
பிரதிஷ்டை செய்த வீரவேலுக்குத்தான் அபிஷேக, ஆராதனை, நைவேத்திய உபசாரங்கள் எல்லாம் நடைபெறுகிறது.ஈரோடு மாவட்டம் கோபிக்கு அருகில் உள்ள பச்சை மலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ravi said…
இங்கு 41 அடி உயரமும், 12 அடி அகலமும் கொண்ட மிகப் பிரமாண்டமான முருகன் சிலை உள்ளது. சுமார் 1600 அடி உயரம் கொண்ட மலையின் மீது இந்த முருகன் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே மிகப் பெரிய முருகன் சிலை இது என்று கூறப்படுகிறது.

ravi said…
திருச்சிக்கு அருகில் 30 கல் தொலைவில் உள்ளது. செட்டிக்குளம் முருகன் கோயில். வடபழனி என்று அழைக்கப்படும் சிறுகுன்றின் மீது கோவணாண்டியாகக் கரும்பினை வில்லாக ஏற்று நிற்கும் அழகன் முருகனை இங்கு தவிர வேறு எங்குமே காண முடியாது.

ravi said…
கழுகுமலையில் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானது. இங்குள்ள முருகப் பெருமான் இடப்பக்கமாக திரும்பி நிற்க, இடது பக்கமாகத் திரும்பி நின்ற நிலையில் இருக்கும் மயில் வாகனத்தில் கம்பீரமாக ஆறு கைகளுடன் மேற்கு முகமாகப் பக்தர்களுக்கு காட்சியளிப்பது அபூர்வமான திருக்கோலம்.
ravi said…
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள மணவாளநல்லூரில் கொளஞ்சியப்பர் ஆலயம் உள்ளது. இத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் மாறுபட்டு ‘பலி பீடம்’ ஒன்றின் வடிவில் முருகன் மூலவராக எழுந்தருளியுள்ளார். அவரே கொளஞ்சியப்பர் எனப்படுகிறார். மணிமுத்தா நதிக்கரையில், மணவாள நல்லூரில் பலிபீட வடிவிலே காட்சி தரும் இந்த பால முருகன் மிகுந்த வரப்பிரசாதி. தீராத வியாதிகளைத் தீர்த்து வைப்பவர் என்கின்றனர்.

ravi said…
ஈரோடு மாவட்டம் காங்கேயத்துக்கு அருகில் உள்ளது சிவன் மலை. இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகன் பெயர் ‘‘அன்னதான சிவாசல சுப்பிரமணிய சுவாமி’’ என்ற திருநாமம் கொண்டு எழில் வடிவில் உள்ள வள்ளியம்மையுடன் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறார்.
ravi said…
சிவவாக்கியருக்கு முருகன் அருள்பாலித்ததால் சிவன்மலை எனப் பெயர் பெற்றது.நெய்வேலி அருகே அமைந்துள்ளது, வேலுடையான்பட்டு முருகன் கோயில். இது கிழக்கு நோக்கி உள்ளது. கொடிமரத்துக்கு முன்பாக ஏழு வேல்கள் பெரிய அளவில் நடப்பட்டிருக்கின்றன. கருவறையின் இருபுறங்களிலும்
8 அடி உயரமுள்ள துவாரபாலகர்கள் உள்ளனர்.

ravi said…
மூலவர் சிவசுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் கையில் வில்லும் அம்பும் ஏந்த பாதங்கள் இறகு அணிந்து ஒரு வேடன் போல் அருள்பாலிக்கிறார். இந்த மூலஸ்தான சிற்பம் அற்புதமாக ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சமாகும். பக்தர்கள் கோயிலில் காணிக்கையாக பாதக்குறடுகள் செலுத்தும் பழக்கம் உள்ளது.

ravi said…
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள பொன்னூரில் ஆபத்சகாலேஸ்வரர் கோயிலில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக இரண்டு கரங்களுடன் அழகாகக் காட்சி தருகிறார். இவரது காதுகளில் வட்ட வடிவமான பெரிய அளவில் கம்மலுடன் (தோடு) தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம் கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் அதிசயமாக ஆறுமுகங்களுடன் ஆறு கரங்களுடன் அருளாட்சிபுரிகிறார்.

ravi said…
அரிசிக்கரைப்புதூரில் உள்ள சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன், மகாவிஷ்ணுவைப் போல கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார்.
ravi said…
திரும்பனையூர் என்ற திருக்கோயிலில் ஸ்ரீசௌந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. சிவபெருமானும், பார்வதியும் இருபுறமும் வீற்றிருக்க நடுவில் முருகப் பெருமான் தன் இடக்கையில் மாம்பழம் ஏந்திய வண்ணம் உள்ளார். இது சோமாஸ்கந்தர் வடிவம் எனப்படும்.கடம்பனூர், கடம்பர் வாழ்க்கை, ஆழியூர், இளம் கடம்பனூர், பெருங்கடம்பனூர், கீழ்வேளூர், பட்ட மங்களம், தேவூர் கோயில் ஆகிய திருத்தலங்களில் முருகன் நவலிங்க பூஜை செய்யும் கோலத்தில் இருக்கிறார்.

ravi said…
சுருளி மலையில் உள்ள இயற்கையான மலைக்குகையில் முருகன் உறைவதால் குகன் என்றும் சுருளி மலையில் இருந்து தரிசனம் தருவதால் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார்.
ravi said…
இங்கு ஆண்டிக்கோலத்தில் உள்ள முருகன் திருக்கோலம் எழில் நிறைந்தது.சிக்கல் சிங்கார வேலர் ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சியளிக்கிறார். உற்சவத்தின்போது, ஆலயத்தில் கட்டு மலையில் சோமாஸ்கந்தர் சந்நதியில் அமர்ந்து தரிசனம் தரும்போது பெருமானின் தேகத்திலிருந்தும், அவருடைய இரு தேவியரின் மேனியிலிருந்தும் வியர்வைத்துளிகள் அரும்பு வது காணக் கண் கொள்ளாக் காட்சியாகும்.

ravi said…
நாமக்கல் அருகில் உள்ள கபிலர் மலையில் முருகன், குழந்தைகுமார சுவாமியாகக் காட்சி தருகிறார். அவரது உருவம் ஞானவடிவானது. சந்தனக் கலவையும் புரிநூலும் மார்பில் எழில் சேர்க்கின்றன. வேற்படையே அவருக்குரிய ஆயுதமாகக் கரங்களில் மிளிர்கிறது. முண்டிதம் செய்த முடியுடனும், இடையில் கோவணத்துடனும் வேலாயுதத்துடனும் பெருமான் காட்சியளிக்கிறார்.
ravi said…
முருகனுக்கு அமைந்த வாகனம் பெரும்பாலோருக்குத் தெரிந்தது ‘மயில்’ ஒன்றுதான். ஆனால் அழகன் முருகனுக்கு மயில், ஆடு, யானை, குதிரை, சிம்மம், கிளி, நாகம், மீன் என்று பல வாகனங்கள் உண்டு.

ravi said…
திருத்தணி, திருப்பரங்குன்றம், செட்டி குளம், பிரான்மலை, சிதம்பரம், இரத்தினகிரி, மாகறல், வேலூர் - ஆகிய இடங்களில் உள்ள
ravi said…
திருக்கோயில்களில் முருகன் ‘யானை’ வாகனத்தில் வீற்றிருப்பதைக் காணலாம்.திருப்போரூர் சென்றால் கோயிலை வலம் வரும்போது ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனத்துடன் கூடிய அழகன் முருகனைக் காணலாம்.மருங்கூர் என்ற திருத்தலத்தில் ஆட்டு வாகனத்துடன் உள்ள முருகப் பெருமானைக் கண்டு சேவிக்கலாம்.

ravi said…
மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகன் தேவ சேனாபதிக்குக் கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய நான்கு வாகனங்கள் இருப்பதைக் காணலாம்.கோவைக்கு அருகில் உள்ள மருதமலையில் உள்ள சின்னப்ப தேவர் கட்டிய மண்டபம் ஒன்றில் சுமார் 5 அடி உயரமான குதிரையின் மேல் முருகன் வேலைப் பிடித்துக் கொண்டு வீற்றிருக்கிறார். குதிரைக்குக் கீழே மயில் ஆடிக்கொண்டும், அதற்குக் கீழே நாகம் இருப்பதையும் காணலாம். குதிரையின் தலைப்பக்கம் சிவபெருமானும் கால் பக்கம் பார்வதியும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

ravi said…
குன்றக்குடி திருத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியாக ஆளுக்கொரு மயில் மீது அமர்ந்திருக்கின்ற அழகிய அற்புதக் கோலத்தைக் காணலாம்.முருகன், மீனின் மீது நிற்கின்ற கோலத்தில் காங்கேயத்தில் உள்ள அய்யப்பன் திருக்கோயிலில் கண்டு மகிழலாம்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலுள்ள முருகனுக்குச் சிங்காரவேலன் என்று பெயர். இவர் நடுவில் மயில் மீது அமர்ந்திருக்க, வள்ளி, தெய்வானை இருவரும் ஆளுக்கொரு யானையின் மீது இருபுறமும் அமர்ந்திருக்கின்ற அபூர்வக் கோலத்தைக் காணலாம்.

ravi said…
ஆவூர் ஆலயத்தில் முருகன் கையில் தாமரை மலரை ஏந்தியுள்ள காட்சியைக் காணலாம். சிவனுக்கு பூஜை செய்த கோலம் இது.கோவை மாவட்டத்தில் உள்ள குருந்த மலையில் உள்ள முருகன் இரண்டு கண்களையும் அகலமாகத் திறந்து நம்மைப் பார்க்கும் கோலத்தில் அருள்மழை பொழிகிறார். கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டத்தில், கங்காவதி எனும் ஊருக்கு அருகேயுள்ள கனககிரி எனும் தலத்தில் உள்ள முருகன் கையில் அழகிய கிளியுடன் காட்சி தருகிறார்.

ravi said…
திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள முருகனுக்கு கல்யாண சுப்பிரமணியர் என்று பெயர். இவர் கையில் மாம்பழம் வைத்துள்ள அதிசயக் காட்சியைக் காணலாம்.திருவிடைக்கழி, திருவண்ணாமலை, சாயா வனம், வில்லுடையான் பட்டு ஆகிய திருத்தலங்களில் முருகப்பெருமான் கையில் வில்லும் அம்பும் ஏந்தியவராகக் காட்சி தருகிறார்.சென்னை அரசு அருங்காட்சியகத்தில் அபூர்வமாக ஐம்பொன்னால் உருவாக்கப்பட்ட நடனமாடும் சுப்பிரமணியனைக் காணலாம்.

ravi said…
கோடிக்கரை அழகர்கோயிலில் ஒரு முகத்துடன் ஆறு கரங்களுடன் கையில் அமுதகலசம் ஏந்திய முருகனைக் காணலாம்.முருகப் பெருமானைச் சாதாரணமாக ஒருதலையுடனோ, ஆறு முகத்துடனோ நாம் கண்டிருப்போம். ஆனால், இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, ஐந்து தலை, பத்து தலை, பதினொரு தலைகளையுடைய முருகனுடைய திருவடிவங்களை பல திருத்தலங்களில் கண்டு தரிசனம் செய்யலாம்.புகழ் பெற்ற ஈரோடு - சென்னிமலையில் முருகன் இரண்டு தலைகளுடன் காட்சி தருகிறான். இவருக்கு அக்னி ஜாதர் என்று பெயர்.

ravi said…
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காசி பாளையம் மலைக்குன்றின் ஆலயத்தில் முருகன் மூன்று தலைகளுடன் அருள்பாலிக்கிறான்.
திண்டுக்கல்லுக்கு அருகில் உள்ள சின்னாளப் பட்டியிலும், சென்னி மலையிலும் நான்கு தலைகளையும் எட்டு கரங்களையும் உடைய முருகன் மயில்மேல் அமர்ந்த வடிவில் காட்சி தருகிறார்.கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்திற்கு அருகிலுள்ள ஓதியமலையில் ஐந்து தலை
களும் எட்டுக்கரங்களும் உடைய முருகனைக் காணலாம்.

ravi said…
ஆறு தலைகளையும் பன்னிரண்டு கரங்களையும் உடைய ஆறுமுகனை மயில்மீது அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள அழகிய வடிவத்தைப் பல தலங்களில் காணலாம்.குற்றாலத்திற்கு அருகில் உள்ள இலஞ்சி என்ற திருத்தலத்தில் பத்து தலைகள் கொண்ட முருகனைக் கண்டு தரிசிக்கலாம்.
ravi said…
பழநிமலையில் வடக்குப் புறமுள்ள மண்டபத்தில் பதினொரு தலைகளையும் இருபத்து நான்கு திருக்கரங்களையும் உடைய விஸ்வரூப நிலை கொண்ட முருகனைக் காணலாம்.திருப்போரூர் திருக்கோயிலில் உள்ள முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் 6- அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். பெண் பனை மரத்தாலான இந்த மூவருக்கும் அபிஷேகம் எதுவும் கிடையாது. புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது.

ravi said…
பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு என்ற தலத்தில் உள்ள முருகன் 6½ அடி உயரம்; இடது புறம் உள்ள தெய்வானை
கீரிடத்துடன் இருக்கிறார்.
ravi said…
வலது புறம் உள்ள வள்ளிக் குறத்தி கொண்டையுடன் காட்சி தருகிறார். இது போன்ற அமைப்பு வேறு எந்தவொரு ஆலயத்திலும் இல்லை.ஆண்டார் குப்பத்தில் உள்ள முருகன் பிரம்மனிடம் பிரணவப்பொருளுக்கு விளக்கம் கோரும் கோலத்தில் உள்ளார். இங்கே முருகனுக்கு எதிரே மயில் இல்லை. பிரம்மனின் வடிவத்தைத்தான் காணலாம்.

ravi said…
வல்லக்கோட்டை திருக்கோயிலில் 7 அடி உயரமான வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமானை தரிசிக்கலாம்.எட்டு அடி உயரமுள்ள பிரம்ம சாஸ்தாவை, சென்னை வளசரவாக்கம் பகுதியில் காணலாம். இந்த முருகனின் வலது காலில் 6 விரல்கள் இருக்கின்றன.
பத்து அடி உயரமுள்ள முருகனை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேலி மலையில் கண்டு தரிசிக்கலாம்.

ravi said…
நாகத்தின் மீது நிற்கின்ற முருகப்பெருமானை சென்னை - மேற்கு மாம்பலத்தில் உள்ள முருகாஸ்ரமத்தில் காணலாம்.மதுராந்தகத்திற்கு அருகில் குமாரவாடி எனும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள திருக்கோயிலில் முருகன் யோக நிலையில் பத்மாசனமிட்டு கண் மூடிய வண்ணம் அமர்ந்த கோலத்தில் கந்தக் கடவுளாக சாந்தமாக காட்சி தருகிறார்.

ravi said…
பரமக்குடிக்கு அருகில் உள்ளது பார்த்திபனூர் என்னும் முருகன் கோயில். இங்கு முருகப் பெருமான் போர்க்கோலம் பூண்ட வீரனாக ஆயுதங்கள் தாங்கி நின்ற திருக்கோலத்தில் அருங்காட்சியளிக்கிறார்.திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி என்னும் திருத்தலத்தில் உள்ள சிவாலயத்தில் முருகப் பெருமான் முனிவர் போன்று ஜடாமுடியுடன் கூடிய திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ravi said…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள சங்கேந்தி என்ற திருக்கோயிலில் உள்ள திருமால் ஆலயத்தில் சுமார் 8 அடி உயரமுள்ள உருண்டை விழிகளும் மீசையும் கொண்டு, சூனிகள் அடித்த பாதக்குறடுகள் அணிந்து அசுரனாக காட்சி தரும் வடிவத்தை ‘அசுர முருகன்’ என்கிறார்கள்.

ravi said…
கேரளாவில் உள்ளது பெருன்னா முருகன் கோயில். இங்கே முருகப் பெருமான் 5 அடி உயரத்தில் தாமரைப் பூ பீடத்தில் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறான். இவனை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கிறார்கள். இத்திருத்தலம் கேரளத்தின் ‘பழனி’ என்று போற்றப்படுகிறது. மற்றொரு அதிசயம் என்னவென்றால் திருமுருகப் பெருமானின் நீண்ட கைவேல், எங்கும் இருப்பது போல் வேலின் கூரிய முனை மேல் நோக்கி இல்லாமல், சூரபத்மனை சம்ஹரிக்கும்போது எப்படி வேலின் கூரினைக் கீழ்நோக்கிக் குத்திட்ட நிலையில் உள்ளது. இத்தகைய கோலம் வேறு கண்டு தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து போகிறார்கள்.

ravi said…
கர்நாடகா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஒரே முருகன் கோயில் ‘ஸ்ரீசுப்பிரமணியா’. மங்களூருக்குத் தென் கிழக்கே 65-மைல் தொலைவில் உள்ளது. ஸ்ரீசுப்பிரமணியர் திருத்தலம் பழனியைப் போல புனிதம் மிக்க தாய் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் நாகசாந்தி, சர்ப்ப பூஜை மிகவும் விசேஷம் வாய்ந்தவை. இங்குள்ள குமார பர்வதத்தின் மலை உச்சியில் குமரனின் இரு பாதங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து குமாரதாரா நதியும் தர்ப்பண நதியும் உற்பத்தியாகின்றன. இவ்விரு நதிகளும் ஸ்ரீசுப்ரமண்யாவைச் சுற்றி ஓடுகின்றன. குமார பர்வத மலையில் அதிசயமாக சண்முக லிங்கம் கிடைக்கிறது.

ravi said…
அதிலுள்ள ஆறு பட்டைகள் முருகனின் ஆறு முகங்களாகக் கருதப்படுகின்றன. துவரம் பருப்பு அளவிலிருந்து முக்கால் அங்குல அளவு வரை கிடைக்கிறது. இவற்றை சாளக்கிராமம் போலவும், சிவலிங்கம் போலவும், முருகப் பெருமான் போலவும் கழுதி பூஜையில் வைத்துக் கொள்
கிறார்கள். ஸ்ரீசுப்ரமண்யா கோயில் கருவறையில் சண்முகர் மயிலின் மீது அமர்ந்திருக்கிறார்.

ravi said…
அவருக்கு கீழே வாசுகி நாகம் உள்ளது. அதுக்கும் கீழே சாளக்கிராமங்கள் இருக்கின்றன. ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. சுப்ரமணியரின் இடது கால் மடங்கியும், வலது கால் கீழ்நோக்கியும் உள்ளன. வழக்கமான ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகளுடன் அருள்பாலிக்கிறார்.கேரள மாநிலம் ஆல்வாய்க்கு மேற்குத் திசையில் பரூரிலிருந்து சுமார் 20.கி.மீ. தொலைவில் உள்ளது. ‘இளங்குன்னபுழா’ என்ற ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில், இதைக் கேரளத்தின் திருச்செந்தூர் என்கிறார்கள். 800 ஆண்டுகள் பழமையானது.

ravi said…
இங்குள்ள முருகனின் மூல விக்ரகம் திருச்செந்தூரில் இருந்தது என்றும், சிறிது பின்னமான போது அதைக்கடலில் போட்டு விட்டார்கள் என்பதும், அது அலைகளால் அடித்துக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள கடற்கரையில் ஒதுங்கியது என்பதும் வரலாறு. கொச்சி மகாராஜா முன்வந்து ஒரு கோயிலை உருவாக்கினார். முருகன் விக்ரகம் இடுப்புக்கு கீழே பின்னமாகி இருந்தது. அதை எப்படிப் பிரதிஷ்டை செய்வது என்று பிரச்னை வந்த போது பிரச்னம் வைத்துப் பார்த்ததில் இடுப்பு வரையில் கற்சிலையாகவும், அதற்குக் கீழ் பஞ்சலோகமாகவும் அமைத்துப் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவாயிற்று.

ravi said…
அப்படியே செய்தார்கள். அழகிய மூல விக்ரகம் பீடத்துடன் சேர்த்து 5½ அடி உயரம் இருக்கிறது. அதுர்புஜங்கள் மேலிரு கரங்களில் சக்தி ஆயுதமும், கீழ் வலது கரம் அபயஹஸ்தமாகவும் இடக்கையை இடுப்பில் ஊன்றியவாறும் அற்புத கோலம் காட்டி அழகு முருகன் காட்சியளிக்கிறார்.
பெங்களூரிலிருந்து ‘தொட்ட பல்லாபூர்’ போய் அங்கிருந்து 11 கி.மீ. தொலைவு போனால் ‘காட்டி சுப்ரமண்யா’ என்ற ஊர் வருகிறது.

ravi said…
இங்கு கோயில் கொண்டிருக்கும் மூலவருக்கும் ஊருக்கும் ஒரே பெயர் தான். கோயில் வாசலில் வேலியிட்ட மேடை மீது பெரிய நாகப் பாம்பின் சிலை படம் விரித்து குடைபோல் நிழல் தந்துகொண்டிருக்க அதன் அடியில் மயில் வாகனனாய் நிற்கும் சுப்பிரமணியரைக் காணலாம்.
ravi said…
மூலஸ்தான
விக்ரகத்தில் முன்புறம் சுப்பிரமணியரின் முகமும் பின்புறம் நரசிம்ம சுவாமியின் முகமும் அமைந்திருப்பதைக் கண்ணாடி மூலம் காணலாம். உற்சவரும் சர்ப்ப உருவம் கொண்ட சுப்பிரமணியர்தான். இங்கு பிரசாதமாக புற்றுமண் வழங்கப்படுகிறது. பாம்பு வடிவில் முருகன் அருள்பாலிக்கும் கோயில் இது ஒன்றுதான்.

ravi said…
இலங்கைத் தீவின் முக்கியமான முருகன் கோயில் கதிர்காமம். அடர்ந்த காட்டுப் பகுதியின் நடுவில் என்றும் வற்றாத மாணிக்க கங்கை என்ற நதிக்கரையில் இத்தலம் உள்ளது. இத்தலத்தில் விக்ரக ஆராதனை கிடையாது. மூல ஸ்தானத்திற்கு முன்னால் திரைகள் தொங்குகின்றன. திரைக்குத்தான் தீபாராதனை.
ravi said…
உள்ளே ஒரு வேல் இருக்கிறது. மரகத வேல் என்பது பெயர். அதற்குத்தான் அபிஷேகம். இதுவே முருகனாக வழிபடப்படுகிறது. இப்படி உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான ஆலயங்களில் அழகன் முருகன் அபூர்வ வடிவம் கொண்டு அருள்பாலிக்கிறார்.

ravi said…
*619* *பாவனாக்ருதி* -

பரிசுத்தத்தின் உருவம். சிருஷ்டி ஸ்திதி லயம் காரிய கர்த்தா அம்பாள். மோக்ஷதாயினி. சிவனை உணர்வது அவள் மூலமாகத்தான் முடியும்.

தவம், த்யானம் அண்ட் ஞானம் மூலமே சிவனை அதாவது பிரம்மத்தை உணரமுடியும்.

அம்பாளே அதற்கு வழி காட்டி.👍👍👍
ravi said…
*620 அனேககோடி ப்ரஹ்மாண்ட ஜனனீ* -

பெரிய நீளமான நாமம் இது.

அற்புதமான அர்த்தம் கொண்டது.

எத்தனையோ கோடி மகா பெரிய மண்டலங்களின் தாய் அம்பாள் ஸ்ரீ லலிதை என்கிறார் ஹயக்ரீவர்.

ப்ரம்மத்திற்கு நான்கு நிலைகள்.

அவ்யக்தம் (பிரபஞ்சத்தின் வெளிப்படில்லாத மூன்று குணங்களும் சமமாக காணும் வெறுமை நிலை, துரியம் என்பது இதைத்தான்.

சர்வம் ப்ரம்மமயம்) , ஈஸ்வரா (கடவுள் என்று அறியும் நிலை,

முத்தொழில்கள் ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் துவக்கமாகி செயல்படும் நிலை.

மாயை தோன்றி ஆட்டுவிக்கும் நிலை.

இதில் தான் காரண சரீரம் புலப்படுகிறது),

ஹிரன்யகர்பா ( உலகம், பிரபஞ்சத்தையம், ஜீவனையும் பிணைக்கும் நிலை, எல்லா உயிரும் சேரும் நிலை,

ஒன்றையொன்று இணைவது.

இந்த நிலையில் தான் லிங்க சரீரம், சூக்ஷ்ம சரீரம் தெளிவாகிறது),

கடைசியாக விராட் ,

இதை வைஸ்வாநரம் என்றும் சொல்வது.

இதில் தான் நாம் காணும் அனைத்து உருவங்களும் ஜீவன் பெறுகின்ற நிலை. கண்ணால் பார்க்க முடிந்த நிலை.

எல்லாமே பிரம்மத்தின் துக்கிணியூண்டு.

ஸ்தூல சரீரம் இதில் தான் காணலாம். புருஷன் எனும் ஆத்மா ப்ரக்ரிதியோடு இணைந்தால் தான் உலகில் ஜீவன் தோன்றுகிறது. 🦜🦜🦜🦚🦚🦚

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை