Posts

Showing posts from December, 2019

அம்பாளின் கடாக்ஷம்

Image
அம்பாளின் கடாக்ஷம்  ரகுவிற்கு தீராத காய்ச்சல் .. உடம்பெல்லாம் முத்து முத்தாய் அம்பாளின் புன்னைகை போல் பரவி இருந்தது முத்து மாரியம்மனின் கருணை ..  பிழைப்பது மிக கடினம் என்றே சொல்லி விட்டனர் எல்லா மருத்துவர்களும் ...  ரகுவின் தந்தை தன் மகன் எப்படியும் பிழைத்து விடுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை .. லலிதா சஹஸ்ரநாமத்தில் மிக அதிக நம்பிக்கை உடையவர் ...  அம்மா .. மிகவும் சோதித்து விட்டாய் ... ரகு நீ கொடுத்த வரம் ... கொடுப்பதும் எடுப்பதும் உன் கையில் .. நான் தனியாக வேண்டி என்ன செய்யப்போகிறேன் ... உன் இஷ்ட்டம் எதுவோ அதை செய் ...  அவர் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை அவள் மீது தெளித்துக்கொண்டிருந்தது ..  வாய் லலிதா சஸஷ்ரநாமத்தை சொல்லிக்கொண்டே இருந்தது ...  மருத்துவர்கள் ventilator  வைத்து விட்டனர் ... எப்பொழுது வேண்டுமென்றால் செயற்கை குழாய்களை நீக்கிவிட்டு இயற்கையை ரகு தழுவிக்கொள்ளலாம் என்ற நிலைமை ....  விமர்சரூபிணீ  வித்யா  வியதாதி  ஜகத்ப்ரஸூ:  | ஸர்வவ்யாதி  ப்ரசமநீ ஸர்வம்ருத்யு  நிவாரிணீ || 112 அவரின் உதடுகள் மட்டும் 112வது ஸ்லோகத்தை திரும்ப திரும்

குருவின் கடாக்ஷம்

Image
குருவின் கடாக்ஷம்  சிருங்கேரியில் சங்கரர் தங்கியிருக்கும் இடத்திற்கு அநேக சீடர்கள் வந்தார்கள். அவர்களில் கிரி என்ற சீடரும் ஒருவர்.  இவர் சற்று மந்த புத்தி உடையவர். அதிகம் பேசமாட்டார்.  ஆனால் குரு சங்கரர் மீது மிக்க பக்தி கொண்டிருந்தார். எப்போதும் குரு சேவையிலேயே ஈடுபட்டிருப்பார்.  பாடங்களை கிரஹிக்கத் திறமையற்றவர்.  இதனால் மற்ற சீடர்கள் அவரை அலட்சியப்படுத்தினர். ஒருநாள் வகுப்பு ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆனால் கிரி வரவில்லை. அவர் குருவின் துணிகளைத் துவைப்பதற்காக துங்கபத்திரா நதிக்குச் சென்றிருந்தார்.  கிரி வந்தவுடன் பாடம் ஆரம்பிக்கலாம் என்று சங்கரர் கூறினார்.  கிரியோ மந்தமாக இருக்கிறார். அவருக்காக நாம் காத்திருப்பானேன்! என்று மற்ற சீடர்கள் கூறினர்.  தம் சீடர்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சங்கரர், மனதினாலேயே தியானம் செய்து கிரிக்கு எல்லா வித்யைகளும் தோன்றட்டும் என்று அருள்புரிந்தார்.  சிறிது நேரத்திற்கெல்லாம் கிரி உள்ளே நுழைந்தார்.  தம் குருவைப் பாராட்டி தோடகா என்னும் பண்ணில் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட ஒரு பாட்டைப் பாடிக்கொண்டு வந்தார்.