அம்பாளின் கடாக்ஷம்
ரகுவிற்கு தீராத காய்ச்சல் .. உடம்பெல்லாம் முத்து முத்தாய் அம்பாளின் புன்னைகை போல் பரவி இருந்தது முத்து மாரியம்மனின் கருணை ..
பிழைப்பது மிக கடினம் என்றே சொல்லி விட்டனர் எல்லா மருத்துவர்களும் ...
ரகுவின் தந்தை தன் மகன் எப்படியும் பிழைத்து விடுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கை .. லலிதா சஹஸ்ரநாமத்தில் மிக அதிக நம்பிக்கை உடையவர் ...
அம்மா .. மிகவும் சோதித்து விட்டாய் ... ரகு நீ கொடுத்த வரம் ... கொடுப்பதும் எடுப்பதும் உன் கையில் .. நான் தனியாக வேண்டி என்ன செய்யப்போகிறேன் ... உன் இஷ்ட்டம் எதுவோ அதை செய் ...
அவர் கண்கள் தாரை தாரையாக கண்ணீரை அவள் மீது தெளித்துக்கொண்டிருந்தது .. வாய் லலிதா சஸஷ்ரநாமத்தை சொல்லிக்கொண்டே இருந்தது ...
மருத்துவர்கள் ventilator வைத்து விட்டனர் ... எப்பொழுது வேண்டுமென்றால் செயற்கை குழாய்களை நீக்கிவிட்டு இயற்கையை ரகு தழுவிக்கொள்ளலாம் என்ற நிலைமை ....
விமர்சரூபிணீ வித்யா வியதாதி ஜகத்ப்ரஸூ: |
ஸர்வவ்யாதி ப்ரசமநீ ஸர்வம்ருத்யு நிவாரிணீ || 112
அவரின் உதடுகள் மட்டும் 112வது ஸ்லோகத்தை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தது .
மருத்துவர்கள் கேட்டனர் .. எல்லா உறவினர்களுக்கும் சொல்லி விட்டீர்களா .. பெரிய மருத்துவர் வந்தவுடன் ventilator ஐ எடுத்து விடலாம் ...
ரகுவின் தந்தை .... புலம்பினார்
அம்மா உன் கருணைக்கு அளவேது... கேட்டாமலேயே கருணை பொழிபவளே கேட்டும் இன்று மௌனமாக இருக்கிறாயே இது உனக்கு அழகா ... ??
அதி கர்விதா என்பது உண்மை தானோ .... விமர்சன ரூபிணி என்னை நீ ஒருவேளை ஏமாற்றி விட்டால் அந்த ஏமாற்றம் எனக்கல்ல என்னை போல் நீயே கதி என்று நம்பும் கோடான கோடி பகதர்களுக்கு சவுக்கடி ... பிறகு உன் இஷ்ட்டம் உன் விருப்பம் ..
பெரிய மருத்துவர் ஓரு பெண் ... அதிகமான சௌந்தர்யத்துடன் காணப்பட்டாள் ... வழக்கம் போல் வரும் குருபரன் அன்று வரவில்லை ...
பார்த்தவர்கள் பரவசம் ..இப்படி ஒரு காந்தி உள்ள பெண்ணை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் ...
பார்த்தவர்கள் பரவசம் ..இப்படி ஒரு காந்தி உள்ள பெண்ணை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் ...
முகத்தில் ஜொலி விடும் புன்னகை .. கண்களில் இருந்து கொட்டி விடும் கருணை ... கரங்கள் தாமரையின் மென்மையை தோற்கடித்துக் கொண்டிருந்தன .
ரகுவின் நெற்றியை தடவிக்கொடுத்தாள் .. ventilator க்கு இனி வேலை இல்லை .. ரகுவை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் .. அவருக்கு ஒரு குறையும் இல்லை ... வந்த மருத்துவர் மறைந்தும் போனார்
ரகுவிற்கு சுய நினைவு திரும்பியது .. அவரை காண வந்தவர்களுக்கு தான் வியாதி போல் தெரிந்தனர்
ரகுவின் தந்தையின் கால்களை யாரோ தொட்டனர் .. குனிந்து பார்க்க அங்கே தொட்டது ரகு ....
ஸர்வ வியாதி நிவாரிணீ அங்கே ரகுவாக தெரிந்தாள் ..
அவளை நம்பியவர்களை , லலிதா சஹஸ்ரநாமத்தை சொல்பவர்களை அவள் என்றுமே கை விட்டதில்லை

Comments