Posts

Showing posts from December, 2021

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 13 பதிவு 11

Image
                               அபிராமி பட்டரும்   அடியேனும்  கேள்வி பதில் 13 பதிவு 11 கேள்வி பதில் நேரம் பதிவு 6 🥇🥇🥇 கேள்வி கேட்பவர்  : ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான்.  பதில் சொல்பவர் : அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .   கேள்வி 9   நான் :   பட்டரே! காலை வணக்கம் ..      பட்டர் சகல கலா வல்லி  , களாப மயில் , மகுடன் தலைமேல் பாதம் பதித்த அந்தரி  உங்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய அபிராமியை வேண்டுகிறேன்  இன்று என்ன கேள்விகள் ?  நான்   தாங்கள் ஈன்று எடுப்பாள் ஒரு தாயும் இல்லை என்று சொன்னீர்கள் .  இதன் தாத்பபரியத்தை இன்னும் கொஞ்சம் அடியேனின் அறிவின் அளவிற்கு புரியும் படி விளக்கி சொல்ல முடியுமா ? 💐💐 பட்டர் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய சொல் இது ... புரியவில்லை என்கிறாய் ..இறைவனை உணர்வு பூரமாக வழிபட வேண்டும் ..  பாவம் ( bhavam) வேண்டும் ..  நம்மாழ்வார் கண்ணனுக்கு அமுதம் படைக்கும் போது தனது அங்கவஸ்த்திரத்தால்  கண்ணன் சாப்பிட்டவுடன் துடைத்து விடுவார். கண்ணன் உதடுகளில் இருந்து பால் வழிந்து கொண்டே இருக்குமாம் . இது தான் பாவம் ( bhavam) ..  இறைவன் உண்மையில் இருக்கிறான் என்ற நம்பி

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 13 பதிவு 10

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 13 பதிவு 10 கேள்வி பதில் நேரம் பதிவு 10 🥇🥇🥇 கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்  .  கேள்வி 13 நான் :  பட்டரே! காலை வணக்கம் ..    பட்டர்   அலரும்  ஞாயிறும் திங்களும் போல உங்கள் வாழ்வும் கனவுகளும் மலரட்டும் அபிராமியின் அருளால் ...  இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 ஐயனே ..  அபிராமியை வணங்குபவர்களுக்கு   16 பாக்கியங்கள் கிடைக்கும் என்று சொன்னீர்கள் அபிராமி பதிகத்தில் ...  அபிராமி அந்தாதியிலும் ஒரு தனிப்பாடலையே சொல்லியுள்ளீர்கள்  69 வது பாடலில்  தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும்  தெய்வ வடிவும் தரும்  நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும்  நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும்  பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...  பட்டரே .. ஒரு சின்ன சந்தேகம் . .  அன்பர் என்பவர்க் கே  கனம் தரும்  என்று சொல்கிறீர்கள்! எதற்கு இங்கு மட்டும் ஏகாரம்? அன்பை சதா சர்வ காலமும் வைக்காத பக்தர்களுக்கு மற்றதை எல்லாம் தருபவள் , பெருமையை (கன

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 12 பதிவு 9

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 12 பதிவு 9 கேள்வி பதில் நேரம்   பதிவு 9 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி 12  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளம்  இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் . இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜  * நான் *    ஐயனே ... தாங்கள் அம்பிகை உபாசகர் ...  அபிராமியைத் தவிர வேறு ஒருவரை வணங்காதவர் ...  ஆனால் 31வது  பாடலில்  * அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.* என்று பாடுகிறீர்கள் ..  அம்பாள் உபாசனை செய்பவர்களுக்கு பெண் ஆசை வரவே வாய்ப்பில்லையே பின் ஏன் அதுவும் தாங்கள்  குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை தருகிறது ... கொஞ்சம் விளக்க முடியுமா ? 👌👌👌 * பட்டர் *  ரவி இந்த கேள்வியை உன்னிடம் இருந்து எதிர்பார்த்தேன் ... நல்ல கேள்வி ...  உண்மை அபிராமியை  வணங்குபவர்களுக்கு  பெண் ஆசை  பொன்னாசை,  மண்ணாசை எதுவும் வராது  ஆசைக்கடலில் அகப்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 11 பதிவு 8

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 11 பதிவு 8 கேள்வி பதில் நேரம்  கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 10  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச் சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்! பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்!  பசும் பொற்கொடி இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் . இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜  * நான் *    ஐயனே ... உங்களிடம் பதில் நிறைய இருக்கிறது . என்னிடம் கேள்விகள் பஞ்சமாக இருக்கிறது ... பட்டர் : ( முதல் தடவையாக... சிரிக்கிறார் )  கேள்விகளையும் நானே கேட்டு பதில்களையும் நானே சொல்ல முடியாது .. நீ தான் கேட்க வேண்டும் .. இப்படி வைத்துக் கொள்வோம் .. நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்...  திருவிளையாடல் தருமி மாதிரி கதறினேன்..  பட்டரே!! எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் . பதில் சொல்லத் தெரியாது ..  சரி இன்று ஒரு கேள்வி க

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 10 பதிவு 7

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 10 பதிவு 7 கேள்வி பதில் நேரம் கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .    கேள்வி 10  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *  காலை வணக்கம் ... உதிக்கின்ற  செங்கதிர் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும் 🌞 இன்று என்ன கேள்விகள் ?  * நான் *   நீங்கள் 78 பாடல் பாடும்  வரை அம்பாள் வரவேயில்லை ..  உங்கள் மன நிலை எப்படி இருந்தது ?  நாங்களாக இருந்திருந்தால் அபிராமியை திட்டி தீர்த்திருப்போம் ..   🙏🙏🙏 * பட்டர் *   அவளை அரைகுறையாய் நம்பவில்லை முழுவதுமாக நம்பினேன் ..  அரைகுறையாக நம்பி இருந்தால்  அவளும் பிறைச் சந்திரனை மட்டுமே வானத்தில் காட்டி இருப்பாள் .  முழுமையாக நம்பியதால் அவள் பூர்ண சந்திரனை வானத்தில் கொண்டு வந்தாள்யார்  யாரையோ நம்புகிறீர்கள்   என் அபிராமியை முழுவதுமாக நம்பி பாருங்கள் ...  இதை நான் சொல்வதை விட நீங்களே அனுபவித்தால் மட்டுமே பரமானந்தம் காண முடியும் ..   🌷🌷🌷🌞🌞🌞 * நான் *    உண்மை ... உங்கள் மாதிரி பக்தி எங்களுக்

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 9 - பதிவு 6

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 9 பதிவு 6 கேள்வி பதில் நேரம்   பதிவு 6🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான் .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர்  .    கேள்வி 9  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் . இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜  * நான் *    ஐயனே ... ஒரு பாடலில் தாங்கள்  " பொருளே பொருள் தரும் போகமே பெரும் போகம் தரும் மருளே மருளில் வரும் தெளிரே!" என்று பாடினீர்கள் .  கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ..  எப்படி அம்பாள் நமக்கு மயக்கத்தையும் ( மருள்) தந்து அதை தெளியவும் வைப்பவளாக இருக்கிறாள்.. 🤔🤔 இது உண்மை என்றால் முதலில் ஏன் அவள் நமக்கு மயக்கம் தர வேண்டும்?  பின்பு அதையே தெளிய வைக்க வேண்டும் ..??  பிணியும் அவளே பிணிக்கு மருந்தும் அவளே என்பதைப்போலவும் , குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதைப்போலவும் இருக்கிறதே  !! பட்டர் நல்ல கேள்வி ... நீ ல