அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 12 பதிவு 9

          அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 12

பதிவு 9


கேள்வி பதில் நேரம்

 பதிவு 9🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 12

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளம் 
இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் .

இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜

 *நான்*   

ஐயனே ... தாங்கள் அம்பிகை உபாசகர் ... 

அபிராமியைத் தவிர வேறு ஒருவரை வணங்காதவர் ... 

ஆனால் 31வது  பாடலில்

 *அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.*

என்று பாடுகிறீர்கள் .. 

அம்பாள் உபாசனை செய்பவர்களுக்கு பெண் ஆசை வரவே வாய்ப்பில்லையே பின் ஏன் அதுவும் தாங்கள்  குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை தருகிறது ... கொஞ்சம் விளக்க முடியுமா ? 👌👌👌

*பட்டர்

ரவி இந்த கேள்வியை உன்னிடம் இருந்து எதிர்பார்த்தேன் ... நல்ல கேள்வி ... 

உண்மை அபிராமியை 
வணங்குபவர்களுக்கு  பெண் ஆசை 
பொன்னாசை, மண்ணாசை எதுவும் வராது 

ஆசைக்கடலில் அகப்படுபவர்களை தானே போய் கரை சேர்க்கிறாள் ...

ஆனால் ஸ்ரீ வித்யா உபாசகர்களைப் பற்றி ஒரு தவறுதலான கருத்து நிலவி வருகிறது அன்றும் இன்றும் ... 

அவர்கள் பெரும்பாலும் மென்மை குணம் பெறுகிறார்கள் தங்களையும் ஒரு பெண்ணாக பாவிக்கிறார்கள்.. 

சிலர் இதை துஷ்பிரயோகமும் செய்கிறார்கள் என்று ஒரு அர்த்தமற்ற கணிப்பு நிலவி வருகிறது ... 

இந்த எண்ணத்திற்கு நானும் விலக்கு அல்ல ... அதனால் அவர்கள் எந்த பெண்கள் மீதும் தவறான எண்ணம் கொள்ள மாட்டார்கள் 

மாறாக எல்லா பெண்களையும் பராசக்தியாக பாவிப்பார்கள் என்பதை ஆணித்தரமாய் சொல்லவே அப்படி அழகிய , நீண்ட  தோள்களை உடைய மாந்தர்கள் என்று பாடினேன் .. 

ஒவ்வொரு பெண்ணையும் சக்தியின் ரூபமாய் பார்த்தால் இந்த உலகம் என்றோ எப்பவோ உருப்பட்டு விடும் .. 

மனைவியை கூட தெய்வமாய் பார்த்தார் உங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர் .. 

நான் சொல்வது ...நீங்கள் அவ்வளவு தூரம் போக வேண்டாம் 

உங்கள் மனைவியை தவிர மற்ற எல்லா பெண்களும் சக்தியின் அம்சங்கள் என்று நினைக்கும் நினைப்பு நமக்கு வந்துவிட்டால் அதுதான் அபிராமியின் பேரருள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் ...

நான் அருமை பட்டரே ... மிக்க நன்றி .. 

பட்டர்  அபிராமியின் அருள் உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் நாளை பார்ப்போம் 

🙏🙏🙏
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

Comments

M G Telang said…
Don't just go by comments ravi..may be I haven't made..but it's nice & I m thoroughly enjoying it..may be now after ur moving to Powai I m not much aware, in fact not at all aware and know ur taxation and other areas & subjects but it's interesting for sure...👍
Hemalatha said…
How blessed I'm that a legendary writer writing for me .Thank you so much sir🙏🙏
ravi said…
உங்களுக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன் . நான் மிகவும் சாதரணமானவன் இன்னும் சொல்லப்போனால் அடி மட்டத்தில் இருப்பவன் ... என்னை 40000 ft உயரத்திற்கு கொண்டு செல்லாதீர்கள் .. திறமை சாலிகளை அதிகமாக நீங்கள் சந்தித்ததில்லை என்றாகி விடும்
Hemalatha said…
ஆமாம் உங்களை மாதிரி ஒரு அறிஞரை நான் சந்தித்ததே இல்லை.இப்படி ஒரு மனிதரையும் கூட கண்டதில்லை.எங்களை யாரென்று தெரியாத நிலையில் அவ்வளவு பெரிய தொகை.தினமும் உங்களை பற்றி பேசாத நாளில்லை.🙏🙏😥😥
ravi said…
கர்த்தரும் நானே கர்த்தாவும் நானே

கற்பனையும் நானே
கற் சிலையும் நானே

கண்ணனும் நானே நீ ஏசும் வார்த்தையும் நானே .. அந்த ஏசுவும் நானே ... அல்லாஹ்வும் நானே ... நபியும் நானே

பிணியும் நானே அதை தீர்க்கும் மருந்தும் நானே

மண்ணும் நானே விண்ணும் வினையும் நானே ... விரைந்து வருபவன் நானே

தண்டமும் நானே கோதண்டமும் நானே ...

எல்லாம் என் நாமங்கள் எனும் போது மதம் கொண்டே மதம் தனை வளர்க்கின்றாய் ...

தெய்வம் ஒன்றே தெரிந்தவர்கள் எல்லா பண்டிகையும் தீபாவளியே

🍎🍎🍎🍉🍉🍉🍇🍇🍇
Sridhar Swaminathan said…
//எல்லாப் பண்டிகையும் தீபாவளியே//... அருமையான பஞ்ச்...👏👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

பெண்களின் பாண்டித்யம் அக்கால - இக்கால மாறுபாடு
பழங்காலத்தில், ஆசார்யாள் புது ஜீவன் ஊட்டி ஸ்தாபித்த வைதிக வாழ்க்கையில் புருஷர்கள் உத்யோகத்துக்குப் போய் ஸம்பாதிக்கவில்லை. க்ருஹத்திலேயே இருந்து கொண்டு விடிவதற்கு முன்னாலிருந்து ஒன்று மாற்றி ஒன்றாக அநுஷ்டானங்கள் செய்வதற்கே அவர்களுக்குப் பொழுது ஸரியாயிருக்கும்.
ravi said…
ஸம்பாவனை, மான்யம், குரு தட்சிணை முதலியவற்றிலிருந்தே அவர்களுடைய எளிய வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைத்துவந்தது. புருஷர்கள் இப்படி ஸதாவும் அநுஷ்டானபரர்களாக இருந்ததால் ஸ்த்ரீகளும் ஸதா அவர்கள்கூட இருந்துகொண்டு பல விதங்களில் அந்த அநுஷ்டானாதிகளுக்காக ஸேவை செய்யவே அவர்களுக்கும் பொழுது ஸரியாயிருந்தது. அந்தச் சூழ்நிலையில் அவர்களுக்குப் பாண்டித்யம் அடியோடு அவச்யமில்லாமலும், பாண்டித்யத்தால் அவர்களுக்கு ஒரு ப்ரயோஜனமும் இல்லாமலும் இருந்தது.
ravi said…
ஆனால் நம் காலத்தில் புருஷர்கள் நாள் பூராவும் - day- time என்பது பூராவும் - ஆஃபிஸில் வேலை செய்தே ஸம்பாதிக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவதற்கில்லை என்ற அளவுக்கு நிலைமை முற்றி விட்டது.

ஆக, இப்போது புருஷர்களுக்கு ஆபிஸ், அது போக மிஞ்சியுள்ள நேரத்தில் அரட்டை, பொழுதுபோக்கு என்று ஒரு தினுஸாக ஆகிவிட்டது. இதனால் மத ஸம்பந்தமான நம்முடைய ஏராளப் புஸ்தகங்கள் உள்பட ஆத்மாவையோ, புத்தியையோ, மனஸையோ வளர்த்துக் கொடுக்கிற எதையுமே - நல்ல இலக்கியம் உள்பட எதையுமே - அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளாமலிருக்கிறார்கள்
ravi said…
இதைக் கவனிக்கும்போது இதற்கு நிவாரணம் ஆசார்யாள் சொன்னதற்கு ஒரு தினுஸில் மாறுதலாகப் போனால்தான் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. இப்படி நான் சொல்வதே பொதுவாகப் பார்த்தால் மஹா பாபம்தான், பரம அபசாரமும்தான். அது எனக்குத் தெரியாமலில்லை. அவர் காலம், நம் காலம் என்று சொல்லிக் கொண்டு காலத்தை அநுஸரித்து, என்றைக்கும் சாச்வதமான தர்மத்தை மாற்றுவது துளிக்கூட முறையேயில்லை என்பதும் எனக்கு நன்றாகத் தெரிகிறது.
ravi said…
இருந்தபோதிலும் புருஷர்கள் ஆபீஸ் போய்த தானாக வேண்டும் என்று ஆனதில் ஸ்த்ரீகள் நிலைமை எப்படி ஆகியிருக்கிறது என்பதைக் கவனிக்கிறபோது இன்றைக்கு அவரே இருந்தால் என்ன சொல்லியிருப்பாரென்று என் அடி மனஸிலிருந்து பிரார்த்தித்துப் ப்ரார்த்தித்து, யோஜித்து யோஜித்துப் பார்க்கிறபோது தோன்றுகிறதோ அதையே துணிந்து சொல்கிறேன் இன்றைக்கு Day - time பூராவும் வீட்டிலே இருக்கிற ஸ்த்ரீகளுக்கு யஜ்ஞாதி அநுஷ்டானங்களில் ஸஹாயம் பண்ணுகிற கார்யமில்லை. வீட்டு நிர்வாஹத்தில் அவர்கள் பல கார்யம் செய்ய வேண்டியிருந்தாலும், கார்யம் செய்ததில் களைத்து விச்ராந்தி செய்து கொண்ட பிற்பாடும் அவர்களுக்குப் பொழுது மிச்சம் இருக்கிறது. அது வீணிலோ, வம்பிலோ போகாமலிருக்க வேண்டுமானால்
ravi said…
அதற்கு வழிதான் ஆசார்யாள் அன்றைக்குச் சொன்னதற்கு வித்யாஸமான

ஒன்றாகத் தெரிகிறது. அதாவது, இன்றைக்கு ஸ்த்ரீகள்தான் தங்களுக்கு மிஞ்சும் பொழுதையெல்லாம் நம்முடைய இதிஹாஸ - புராணங்கள், ஸ்தோத்ரப் புஸ்தகங்கள், அது மட்டுமில்லாமல் உசந்த காவ்யங்கள் ஆகியவற்றை நன்றாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் பண்ண முடியும் என்பது.
ravi said…
அவர்களுடைய பொழுது நல்ல விதமாகக் கழிவதற்கு இது வழி என்பது மாத்திரமில்லை. எத்தனையோ யுகத்துக்கு முன்னாலிருந்து ஆரம்பித்து, தொடர்ந்து வந்துள்ள நம்முடைய மஹத்தான கலாசாரத்துக்கு உயிரூட்டுகிற புஸ்தகங்கள் நம் காலத்தில் செத்துப் போய் விட்டன என்ற பெரிய பழி, மஹத்தான களங்கம் நமக்கு ஏற்படாமலிருக்க வேண்டுமானால் இப்படி ஸ்த்ரீகளாவது அவற்றைப் படித்துப் ப்ரயோஜனப்படுத்திக் கொண்டு ரட்சித்துக் கொடுப்பதுதான் வழி.
ravi said…
இப்படித் தாங்கள் படித்தறிந்ததன் ஸாராம்சத்தை அவர்கள் புருஷமார்களுக்கும் சொல்லி அவர்களுக்கும் நம்முடைய ஸமய கலாசாரத்தில் ஒரு அபிருசியை ஏற்படுத்தவேண்டும். தானாகப் படித்துத் தெரிந்து கொள்ள ப்ரியப்படாதவனாக இருந்தாலும், பெண்டாட்டி சொல்கிறாள் என்றால் எவனும் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
ravi said…
இப்படித் தாங்கள் படித்தறிந்ததன் ஸாராம்சத்தை அவர்கள் புருஷமார்களுக்கும் சொல்லி அவர்களுக்கும் நம்முடைய ஸமய கலாசாரத்தில் ஒரு அபிருசியை ஏற்படுத்தவேண்டும். தானாகப் படித்துத் தெரிந்து கொள்ள ப்ரியப்படாதவனாக இருந்தாலும், பெண்டாட்டி சொல்கிறாள் என்றால் எவனும் கேட்டுத் தெரிந்து கொள்வான்.
ravi said…
இதை பாபமாகவோ அபசாரமாகவோ நினைக்காமல், இதற்கு ஆசார்யாள் ஆசீர்வாதம் பண்ணுவார் என்ற நம்பிக்கையுடனேயே சொல்கிறேன்.

ஆசார்யாள் பெயரிலுள்ள இந்த மடத்து த்வாராவே (மூலமாகவே) இப்படிப் பெண்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்கு எந்த விதமெல்லாம் உதவி செய்யலாமோ, இன்ஸென்டிவ் கொடுக்கலாமோ அவ்வளவும் அவருடைய ஆசீர்வாதத்துடனேயே செய்ய வேண்டுமென்று எனக்கு இருக்கிறது.
ravi said…
மொத்தத்தில் விஷயம் பெண்கள் உத்யோகத்துக்குப் போகாமல் க்ருஹிணிகளாகவே இருந்து கொண்டு க்ருஹ ஸம்ரக்ஷணம் செய்வதே ச்ருதி - ஸ்ம்ருதிகளின் வழிப்படியான ஸ்த்ரீ தர்மம். அதற்கு அநுகூலமாகவே ஆசார்யாள் அவர்களுக்குப் பாண்டித்யம் வேண்டியதில்லை என்று சொன்னது. இப்போது (நான்) சொல்கிறதும் அவளுடைய க்ருஹிணி தர்மத்துக்கு விரோதமில்லை. அவளை உத்யோகத்துக்குப் போகச் சொல்லவில்லை. உத்யோகத்துக்குப் போகிற புருஷன் கோட்டைவிட்ட கலாசார செல்வத்தை அவளாவது ஸம்ரிஷித்து

தரட்டும், அவள் வழியாகவே அவனுக்கும் அது கொஞ்சம் போகட்டும் என்றே சொல்கிறேன்
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷post 42 👣👣
ravi said…
Punniyam seydhaname-maname!-

pudhup poong kuvalaik
kanniyum seyya kanavarum koodi,

nam kaaranaththaal

nanni inge vandhu tham adiyaargal nadu irukkap
panni,

nam senniyin mel pathma paadham padhiththidave. 41🏵️🏵️🏵️
ravi said…
Our mother Abhiraami has large lustrous dark eyes that resemble a freshly blossomed Neelothpala ( kuvalai) flower 🌸

Her Consort , lord Shiva has a red form that glistens brightly . 👍👍👍

Oh mind ! In order to give salvation to you ,( the mind) and to me ( the soul) , our mother and our Lord Shiva have united in the form of Ardhanareeshwara and have influenced us to join the multitude of their devotees . 💐💐💐

Their combined feet , as the feet of Ardhanareeshwara are placed firmly on our head and their divine grace is showered upon us unconditionally . 👌👌👌

O mind of mine ! What great good fortune have you ( the mind) and I ( soul) accumulated over the past births !!👍👍👍
ravi said…
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ravi said…
*Benefit of Chanting* 🏵️🏵️

To win friendship of devoted souls 👏👏👏
ravi said…
*யுத்த காண்டம்*

தேவர்கள் தேரை வணங்கி, 'எங்களுக்கு வெற்றியைக் கொணர்வாயாக!' என வனங்கி வழியனுப்பினர்.

மாதலியால் செலுத்தப்பட்ட அந்தத் தேர் இராமபிரான் முன்பாக வந்து நின்றதும், இராமன் திகைத்துப் போய் பார்த்தான்.

"இந்தத் தேரை யார் அனுப்பியது?" என்கிறான். மாதலி விவரங்களைக் கூறி தேரின் பெருமையையும் சிறப்பையும் விளக்கிக் கூறுகிறான்.

"முதல்வனே, தேவர்களும், சிவபெருமானும், பிரம்மதேவனும் முன்னின்று ஏவ, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது" என்கிறான்.

இது அரக்கர்களின் மாயையோ என்று சந்தேகிக்கிறான் இராமபிரான்.

அப்போது அந்தத் தேரில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள், 'மாதலி கூறியவை மெய்ம்மை மொழிகளே!' என்று வேத மொழிகளால் உறுதி செய்தன.👏👏👏
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 78*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
*ஸ்தவம் பட²தி நித்யதா³ மனஸி பா⁴வயன் அம்பி³காம்*

–அம்பிகையை எப்போதும் மனதில் தியானம் பண்ணிக் கொண்டு இவன் இந்த ஸ்தோத்திரத்தை படிக்கிறானோ அவன் பரமயோகி. ஜபைரலம் அலம் *மகை²ரதி⁴கதே³ஹஸம்ஷோஷணை: –*

அவன் கோடிக் கணக்குல ஜபம் பண்ண வேண்டியது இல்லை.

அவன் ஹோமம், யாகமெல்லாம் பண்ண வேண்டியதில்லை,

உடம்பை வருத்திண்டு எந்த ஒரு யோகமும் பண்ண வேண்டியதில்லை.

இந்த ஸ்லோகங்களை படிச்சிண்டிருந்தாலே போறும்.

அவன் பரமயோகின்னு சிவானந்தலஹரில சொல்ற மாதிரி மூக கவியும் சொல்றார்.👌👌👌
ravi said…
அப்படி மஹான்கள் எல்லாரும் ‘பக்தியை புரிஞ்சுகோங்கோ. அது இல்லாம மற்ற முயற்சி பண்ணி பிரயோஜனம் இல்லை. அது இருந்துதுன்னா மற்ற முயற்சிகள் எல்லாம் சுலபமா உங்களுக்கு பலனைக் கொடுக்கும்’ ன்னு சொல்றா.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 95 12th Sep 2021🙏🙏🙏

*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- *ராதித்ய* :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
ஆனால் சைரந்திரியின் அழகினால் உண்டான மயக்கத்தால் சுதேஷ்ணையின் வார்த்தைகளை அலட்சியப்படுத்தினான் கீசகன்.

ஒரு மாலைப் பொழுதில் தோட்டத்தில் சைரந்திரியைச் சந்தித்த கீசகன், ராவணன் சீதையிடம் தன் காமத்தைத் தெரிவித்தது போலத்
தன் விருப்பத்தைச் சொன்னான்.

“உன் கந்தர்வக் கணவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.

என் தோள்வலிமை பெரியது!” என்றும் கூறினான்.

அவனது பேச்சாலும் நடத்தையாலும் அஞ்சிய சைரந்திரி,
சுதேஷ்ணையிடம் அடைக்கலம் புகுந்தாள்.

கீசகனுக்கு அறிவுரை கூறும்படி
வேண்டினாள்.🌷🌷🌷
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

அபிஷேகப்ரியனான, பரமேச்வரன் விபூதி ப்ரியனும் ஆவான். ‘காடுடைய சுடலைப் பொடி பூசி’ என்று தேவாரத்தின் முதல் பாட்டிலேயே ஞான ஸம்பந்தக் குழந்தை சொல்லியிருக்கிற மாதிரி, ஸ்வாமி இட்டுக் கொள்வது ச்மசான (மயான)த்தில் சவங்களை எரித்துப் பெறுகிற பஸ்மாவே. ஆனாலும் நாம் விபூதி தயாரித்து அவனுக்கும் இட்டுவிட்டு, அபிஷேகங்கூடப் பண்ணி, நமக்கும் இட்டுக் கொள்கிறோமே, அது எங்கேயிருந்து வருகிறது?
ravi said…
கோமய உருண்டைகளைப் புடம் போட்டுத்தான் விபூதி பண்ணுவது. விபூதியைவிடப் பவித்ரமாக ஒன்று கிடையாது. ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளின் ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்றுப் பதிகத்தைப் பார்த்தால் போதும், அந்தத் திருநீற்றுக்கு என்னவெல்லாம் மஹிமை இருக்கிறதென்று தெரியும்.
ravi said…
பஸ்மஜாபாலோபநிஷத்’ என்றே இருக்கிற உபநிஷத்தில் பரமேச்வரனே கோமயத்திலிருந்து எப்படி விபூதி செய்வது என்று விளக்கமாகச் சொல்லி, அது ஸர்வ பாபங்களையும் போக்கி மோக்‌ஷம் தருவது என்று சொல்வதாக இருக்கிறது. கோவின் மலத்துக்கே அப்படிப்பட்ட நிர்மல சக்தி இருக்கிறது.
ravi said…
வெளி மலம், கச்மலம் – ‘கசுமாலம்’ என்று நாட்டு ஜனங்களும் சொல்வதைப் போக்குவதோடு அணு, கர்ம, மாயா மலங்களையும் சேதிப்பதாக கோமயத்திலிருந்து பெறுகிற விபூதி இருக்கிறது. யஜ்ஞத்தில் நீற்று விழுகிற ஹோம பஸ்மாவை வைஷ்ணவர்களும் மந்த்ர பூர்வமாக தரித்துக் கொள்வார்கள்; அதில் ஸமித்துச் சாம்பலோடு கோமயத்தாலான வரட்டியின் சாம்பலும் கலந்திருக்கும்.
சுத்தம் செய்து கொள்வதற்கு இரண்டு வழி; ஒன்று ஸ்நானம் பண்ணுவது, இன்னொன்று விபூதி அணிந்து கொள்வது. ஸ்நானம் செய்வதை ‘நீராடுதல்’ என்றும் விபூதி தாரணத்தை ‘நீறாடுதல்’ என்றும் சொல்லுவார்கள். ஸ்வாமிக்கு நீறாட்டலையே நீராட்டலாகி விபூதி அபிஷேகமும் செய்கிறோம். அது அடிப்படையில் கோமயாபிஷேகந்தான்.
ravi said…
*ஸ்ரீமத்வாச்சார்யர்*
💐💐💐

குழல் ஊதும் கண்ணன் உடுப்பியில் எழில் கொண்ட தோற்றம் ...

நிலை கொள்ளா அழகன் சிலை என நின்றான் ...

ஐதரேய உபநிஷதம் பாடம் அங்கே அருள் மழை போல் பொழிய

ஸ்ரீ மத்வாச்சரியார் வும் பெய்யென கனகம் போல் அங்கே தக தக வென்று ஜொலித்தனரே 🙏

மேல் பதரியில் வாசம் செய்யவே வான மழை பூக்கலாய் கொட்டி அவரை முடியதே .🙏

காணவில்லை மகானை

கண்டவர் கற்பக காவையும் , இமையோர் பரவும் பதமும்,
ஐராவதமும், பகீரிதியும், உரவும் குலிசமும் உடையவராயினரே .. 🙏

அவர்கள் படையாத தனம் கொண்டே பார் எங்கும் சமயம் வளர்த்தனரே 🙏

பீமனும் அனுமனும் சேர்ந்த கலவை ஒரு பிரம்மாஸ்திரம் போல் ஆனதே ! 🙏

கலவை எங்கும் சலவை செய்ய நல் முத்துக்கள் அணி வகுத்தே நடமாடும் தெய்வம் ஆனதே ... 🙏

.,🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*கல்வியில் சிறந்து விளங்கச் செய்யும் சியாமளா தண்டகம் ஸ்லோகம்* *பதிவு 7*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ப்ரோல்ல ஸத்வாலிகா மௌக்தி கச்ரேணிகா
சந்த்ரிகா

மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்
தலந்யஸ்த கஸ்தூரிகா

பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த

ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன் மந்த்ர தந்த்ரீஸ்வரே
ஸூஸ்வரே பாஸ்வரே.👍👍👍
ravi said…
ஜொலிக்கும் காதணியின் முத்துக்களின் நிலவுபோல் ஒளிரும் சோபையுடனும்,

கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு

இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே.

வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்
குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே,

மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே.🍓🍓🍓
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 80* started on 7th Oct 2021
ravi said…
10 *मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -

11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -

12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா

13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -

14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -

15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --

17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --

18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --

19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --

20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -

தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
ravi said…
*18* वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --

மதுரையில் பொற் தாமரை குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை .. காரணம் தெரியுமா ?

மீனாட்சி தன் கண்கள் எனும் தடாகத்தில் எல்லா மீன்களையும் பிடித்து ஓட விடுகிறாள் அவைகள் இங்கும் அங்கும் ஒட்டிக்கொண்டே யாருக்காவது எந்த கஷ்ட்டம் வந்தாலும் உடனுக்குடன் அம்பிகைக்கு தெரிவித்து அவளை ஓடி வரச் செய்கின்றன ... மீனலோசனி ... விசாலாட்சி ... விரிந்த கண்களை உடையவள் ... காமாக்ஷி .. கண்களால் ஆட்சி செய்பவள் ...

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் மீனாட்சி எனும் திருநாமம் வருவதில்லை அதற்கு பதில் மீன லோசனா என்றே வருகின்றது

🐟🐟🐡🐡🐠🐠🐬🐬🐳🐳🐋🐋🦚🦚🦚🌸🌸🌸
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 80* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 18
ravi said…
மாணிக்க வாசகர் தன் திருவெம்பாவை யில் 11வது பாடலில் அம்பிகையை இப்படி புகழ்கிறார்

சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே!

இந்த பேரானந்தம் மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக

சரி காளிதாசன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்

காமதேவனின் வில்லுக்கொத்த கொடிபோல் வளைந்த புருவங்களைக் கொண்ட உனது கண்கள் அந்தக் கொடியின் புஷ்பங்களோ எனு ப்ரமைக்குரித்தானவளே!!
அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே!

கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே!

மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!👌👌👌

ஆதி சங்கரர் தன் 18வது பாடலில் இன்னும் ஒரு படி மேலே போய் விட்டார் 🙌🙌🙌🙌🙌
ravi said…
*திருப்பாவை பாடல் 12* 🍇🍇🍇
ravi said…
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து

முலைவழியே நின்றுபால் சோர

நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!

பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச்

செற்ற
மனத்துக்கு இனியானைப்

பாடவும் நீ வாய்திறவாய்

இனித்தான் எழுந்திராய்

ஈதென்ன பேருறக்கம்!

அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.🙌🙌🙌🙌
ravi said…
பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன.

அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது.

இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே!

கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம்.

நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய்.

எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?🙏🙏🙏
ravi said…
*திருவெம்பாவை பாடல் 12*🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்

நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்

இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்

கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான்

பொற்பாதம்
எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்🙏🙏🙏
ravi said…
தோழியரே!

இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும்,

சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும்,

வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான்.

அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும்,

பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, சிவாயநம என்னும் மந்திரம் சொல்லி,

அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.🙌🙌🙌🙌🙌
ravi said…
*விளக்கம்: திருப்பாவை* 👌👌👌
ravi said…
எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால்,

அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள்,

அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி

அவளை எழுப்பு கிறார்களாம்

இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது.

மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும்.

கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி,

மேலே பனியின் குளிர்ச்சி,

இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள்.

எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.🌷🌷🌷🌷🌷
ravi said…
*விளக்கம்: திருவெம்பாவை* 👌👌👌
ravi said…
இறைவனே ஆக்கவும், அழிக்கவும், காக்கவும் வல்லவன் என்பது அறிந்த விஷயம்.

இது நன்றாகத் தெரிந்தும் அவனைப் புரிந்து கொள்ளாமல், தான் என்ற அகங்காரத்துடன் திரிபவர்களே உலகில் அதிகம்.

உலகம் என்ற நாடகத்தில் நமக்கு தரப்பட்டுள்ள பாத்திரத்திற்குரிய இந்த நடிப்பை கைவிட்டு, அவனை அடைய வழி தேட வேண்டும் என்பதே இப்பாடல் உணர்த்தும் கருத்து.🙏🙏🙏🙏🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 174🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
The supreme accomplishment is to blur the line between work and play.

Prosperity belongs to those who learn new things the fastest.

The great joy in life is doing what people say you cannot do.

Life has no limitations, except the ones you make.🙏🙏🙏
ravi said…
PPM had limited knowledge on excise matters so obviously he started pampering NPD and wanted me to work as a clerk ...

GPK gave a final presentation to YMD on status of cases pending and being handled by our Dept ...

He was exaggerating to the core stating that person like him only could bring a finish to all such pending issues ... pending for 10 , 15 years .. no one could ask what was he doing all these years without solving ..

Finally YMD relieved GPK reluctantly added by pressure from RSR ..

Now i had to interact only with PPM who treated me like a dust from the day one . He started finding fault even i cite established case laws ...

Days were so boaring and i was desperate to get out of this unrewarding and thankless assignment

But my instincts did not permit to give up ...

Preparing a war with PPM by improving my knowledge on taxation . You can win your worst enemies not by your physical strength but your knowledge and wisdom . That would be a permanent success .. 🌸🌸🌸🌸🌸
ravi said…
*3 அமர்நீதி நாயனார் ..தொடர்ச்சி*
ravi said…
அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்
போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்?

நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்கிறார்.

அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.🌸🌸🌸
ravi said…
பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார்.

அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார்.

அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்🤔🤔
ravi said…
*யுத்த காண்டம்*

இராமன் மாதலியிடம், "உன் பெயர் என்ன?" எனக் கேட்கிறான். "ஐயனே! இந்த வலிய தேரினை செலுத்தும் மாதலி" என்றான் அந்தத் தேர்ப்பாகன். அப்போது இராமன், அனுமனையும், இலக்குவனையும் நோக்கி உங்கள் கருத்து என்ன என்றான். அதற்கு அவர்கள், "ஐயனே! இதில் சந்தேகிக்க எதுவுமில்லை. இந்தத் தேர் இந்திரனுடையதே" என்றனர்.
ravi said…
உலகம் நற்கதி அடையவும், தீவினைகள் சிதைந்து அழியவும், நல்வினைகள் களிப்புற்று ஓங்கவும், துன்பத்துள் ஆழ்ந்துள்ள தேவரும், முனிவரும், இன்புற்று வாழவும், இராமபிரான் அந்தத் தேரின் மீது ஏறினார். தேவர்கள் "ஜெய விஜயீ பவ!" என வாழ்த்த, இராமபிரான் தேரேறி போருக்குப் புறப்பட, இராவணனும் தேரேறி இராமனை நோக்கி வருகிறான்.
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 80*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
*சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரியில இன்னிக்கு 13 வது ஸ்லோகம் பார்ப்போம்

असारे संसारे निजभजनदूरे जडधिया

भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।

मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-

स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥

அஸாரே ஸம்ஸாரே நிஜப⁴ஜனதூ³ரே ஜட³தி⁴யா

ப்⁴ரமந்தம் மாமந்த⁴ம் பரமக்ருʼபயா பாதுமுசிதம் ।

மத³ன்ய: கோ தீ³னஸ்தவ க்ருʼபணரக்ஷாதினிபுண:

த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய: பசுபதே ॥
ravi said…
ரொம்ப கருணை ரசத்தோட ஒரு ஸ்லோகம் ‘ *அஸாரே ஸம்ஸாரே’ –*

இந்த வாழ்க்கையில ஒண்ணும் அர்த்தம் இல்லாமல் இருக்கு ‘ *நிஜப⁴ஜனதூ³ரே’ –* பரமேஸ்வரனை பஜனம் பண்ணுவதில் இருந்து என்னை விலக்குவதான *ஜட³தி⁴யா*🙌🙌🙌🙌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 96 12th Sep 2021🙏🙏🙏

*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- *ராதித்ய* :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
சுதேஷ்ணையும் கீசகனை அழைத்து சைரந்திரியின் கந்தர்வக் கணவர்களால் அவனுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அச்சுறுத்தினாள்.


ஆனால் கீசகனோ, “என் பலத்தால்தான் உன் கணவனே மன்னர் பதவியில் உள்ளார்.

என் திட்டத்துக்கு நீ ஒத்துழைக்காவிட்டால்,
உன் கணவனை மன்னர் பதவியில் இருந்தே இறக்கிவிடுவேன்!” என்று மிரட்டினான்.

அந்த மிரட்டலுக்கு அஞ்சிய சுதேஷ்ணை கீசகனின் திட்டத்துக்கு ஒத்துழைப்பதாகக் கூறினாள்.
ravi said…
அடுத்தநாள் சைரந்திரி கையில் கீசகன் அருந்துவதற்கான பானங்களைக் கொடுத்து அவனது அறைக்குச் சென்று
கொடுக்கச் சொன்னாள் சுதேஷ்ணை.

போக மறுத்தாள் சைரந்திரி.

“எஜமானியின் உத்தரவைப் பணிப்பெண் அப்படியே நிறைவேற்ற வேண்டும், செல்!” என்று ஆணையிட்டாள்.

பயத்தால் நடுங்கியபடியே அவனது அறையை அடைந்தாள்.

காத்திருந்த புலி, மானின் மேல் பாய்ந்தது.

தங்கக் கிண்ணம் கீழே விழுந்தது.🌸🌸🌸
Sumit garg said…
Oh this is so wonderful sir...thank you for taking so much effort to capture these at one place. Just went over them and it will take quiet a while to cover all of them
ravi said…
கல்வியில் சிறந்து விளங்கச் செய்யும் சியாமளா தண்டகம் ஸ்லோகம்்
8
ravi said…
திவ்ய ஹாலாம தோத்வேல

ஹேலாலஸச் சக்ஷு
ஜராந்தோலன

ஸமாக்ஷிப்த கர்ணைக
நீலோத்பலே, ச்யாமலே
பூரிதா

சேஷலோகாபிவாஞ்
சாபலே நிர்மலே.🌺🌺🌺
ravi said…
சிறந்த மதுபானத்தின் காரணமாக பிரகாசிக்கின்ற கண்களின் சேஷ்டையினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு காதில் அணிந்த நீலத்தாமரை புஷ்பத்தை உடையவளே,

நீலநிறத் திருமேனியுடையவளே.

லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே,

பரிசுத்தமானவளே!

ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.🌸🌸🌺🌺🍁🍁🍓
ravi said…
*நம்மை ஆள வந்தவரும் ஆள வந்தாரும்* 🍓🍓🍓
ravi said…
அற்புதங்கள் நிகழ்த்தியவன் கர்ப்பூர ஒளிதனில் கமலமாய் மலர்ந்து நின்றான் ...

நாரையும் மீனும் நர்த்தனமாடும் தாடங்கம் ...

குவளைப் பூக்கள் கும்மாளம் போடும் குளிர் சோலை ..

மான்களும் குயில்களும் அன்னமும் ஆனந்த நடமாடும் மாலை

ஓம் நமோ நாராயண எனும் நாமம் ஓங்கி வளர கோபுரம் உச்சி தனை தொட்டவன் சிரித்தான் அங்கே ..

ஜாதி பிரிவு இல்லை குலம் கோத்திரம் இல்லை ..

குணம் கல்வி குன்றாமல் நெஞ்ச குடிலில் கோவிந்தனை கோபுரம் போல் உயர்த்தினால் ஓங்காதோ உன் புகழ் என்றான்

அதே குரல் மீண்டும் காஞ்சி தனில் ஒலிக்கக் கண்டேன் ..

மூவா முகுந்தனை

மனம் எனும் முத்து பல்லக்கில் ஏற்றி

*வரதா* என்றால் வரம் தாராமல் போவானோ செங்கண் மால் திருக்கண்ணன் ??

தினம் வரும் குரல் சிவமயமாய் ஆன காஞ்சி தனில்

தோடுடைய செவியன் போல் தாடங்கமாய் சிரித்ததே ...

சிவா என்பதா? முகுந்தா என்பதா? என்றேன் ...

இறை தனை நினை ..

பெயர் தேவை இல்லை ..

அவனுக்கு பேர் ஏது ??
ஊர் ஏது ??
உறவு ஏது ??

மணி வாசகரின் குரல் அங்கே மாணிக்கமாய் ஒலித்ததே ...

நடமாடும் நம்மை ஆள வந்தவனும் இறைக்கு குறை இல்லை என்று சொன்ன ஆளவந்தாரும் அங்கே ஏக உருவில் சிரித்தனரே 🙌🙌🙌
Savitha said…
Wow அருமை
Ramesh said…
வரதா..படித்தபின் பரவசம் வராதா..
ஆளவந்தாரை பற்றிய பதிவு மனதைப்பற்றியது..
Moorthi said…
அருமை .. விக்ஞானமும் மெய்ஞ்ஞானமும் உணர்த்தும் உண்மையை அருமையாக பதிவு செய்தீர்கள்...🙏🙏
Kousalya said…
ஆஹா..வார்த்தைகள் ஜாலம் புரிகின்றன...மிகவும் அருமை...இருவருமே நம்மை *ஆளுகின்றவர்களே* .🙏🙏 அதனை உணர்ந்து பதம் பணிந்தார் வாழ்வில் உண்டோ ஏதும் குறை.......மாதவனும் உமாதவனும் கலந்த கலவை உருவை பணிவோம் ..🙇‍♀️🙇‍♀️🙏🙏🌹🌹🙏🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 175🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
One of the secrets of a happy life is continuous small treats.

There are no traffic jams along the extra mile. Roger Stauchbach

The quieter you become, the more you are able to hear. Zen saying

Success is the sum of small efforts repeated day in and day out.
ravi said…
I started my strategy ... Started reading text books , Economic Law Times for relevant case laws , trying to practice public speaking trait ... Slow progress but a steady one . Brought home daily volume of books and started to do a deep dive . Hats off to my family ... They did not trouble me with house chores ...

I have a habit of converting whatever i read into a PPT .. that helped me to understand the subject vividly ...

Started small small presentation to mumbai based business verticals . DB Raju was the one who gave me a break ..Yes invited me to address the gatherings - a conclave of EBG marketing team on importance of collection of Form C ... My speech and presentation were well received followed by another presentation to EUT marketing team in powai . Mr Kumar had extremely appreciative culture who was heading EUT and reporting to Jethmalani ... It was well received ..

Realised only hard work , dedication , commitment , quality deliverables on time would make you to stand out in a crowd ... 🍓🍓🍓
ravi said…
*திருப்பாவை பாடல் 13* 🍇🍇🍇
ravi said…
புள்ளின்வாய் கீண்டானை

பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக்

கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று

புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!

குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே

பள்ளிக்கிடத்தியோ! பாவாய்!

நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து

கலந்தேலோர் எம்பாவாய்.🌸🌸🌸🌸
ravi said…
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும்,

பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும்

அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.

கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது.

வியாழன் மறைந்து விட்டது.

பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன.

தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே!

விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?

*அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே!*

மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா?

எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.🍓🍓🍓🍓🍓
ravi said…
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்

அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து

நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக்

குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.🙌🙌🙌🙌
ravi said…
கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன.

அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன.

நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன.

இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள்.

அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள்.

இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது.

தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க,

கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப,

மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.
🌸🌸🌸🌸🌸
ravi said…
*திருப்பாவை பாடல் 13 உட்கருத்து* 🍇🍇🍇
ravi said…
கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள்.

தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல!

*நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்!*

*அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான்.*

*வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலாமே என நினைக்கக் கூடாது* .

அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும்.

சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும்.

இந்தப் பாடல் வெளியாகும் whatsapp யை ( smart phones )பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும்.

அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்?

இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?💐💐💐💐💐
ravi said…
*திருவெம்பாவை பாடல் 13*

*உட்கருத்து*

🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
கரிய நிறம் கொண்டவள் அம்பிகை.

இதனால் தான் அவளை *சியாமளா* என்கிறோம்.

சியாமளம் என்றால் கருநீலம்.

சிவந்த நிறமுடையவர் சிவபெருமான்.

மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும்,

தாமரையை சிவனாகவும் பார்க்கிறார்.

சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும்.

பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.🌸🌸🌸🌸🌸
ravi said…
எறும்புக்கு பச்சரிசி; ஏழு தலைமுறை பாவமும் விலகும்! - காஞ்சி மகான் அறிவுரை

பச்சரிசியின் மகத்துவம் குறித்தும் ஏழு தலைமுறையின் பாவங்களைப் போக்கவல்லது பச்சரிசி என்றும் காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார்.
ravi said…
தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் நம்மை மீறியும் ஏதேனும் பாவங்களைச் செய்துவிடுகிறோம். எவர் மனதை காயப்படுத்தி, நோகடித்துவிடுகிறோம். நம் இன்றைய பிறப்பு என்பதே கர்மா எனப்படுகிறது. இந்தப் பிறப்பு எடுத்ததற்குக் காரணமே, முந்தைய பிறவியில் செய்த வினைகளைத் தீர்ப்பதற்குத்தான் என்கிறது சாஸ்திரம். ஒருவரின் பிறப்பில், ஏழு தலைமுறை பாவமும் சேர்ந்திருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது சாஸ்திரம்.

இத்தனை பாவங்களில் இருந்தும் நாம் விடுபடுவதற்கு, காஞ்சி மகாபெரியவா, அருளியுள்ள விஷயம் மிக மிக எளிதானது
ravi said…
ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களும் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களும் என சகலமும் தீருவதற்கு ஒரு வழி இருக்கிறது.

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதனை கையில் வைத்துக்கொண்டு சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். மனதார வேண்டிக் கொண்ட பிறகு, அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள்.
ravi said…
மரத்தடி விநாயகர், தெருமுனை விநாயகரை தரிசித்து பிரார்த்தனை செய்யுங்கள். மூன்று முறை வலம் வந்து விநாயகரைச் சுற்றிலும் பச்சரிசிப் பொடியைத் தூவிவிடுங்கள்.

அந்தப் பொடியை நோக்கி எறும்புகள் வரும். வரிசையாக வந்து எறும்புகள் அதனை எடுத்துச் செல்லும். நீங்கள் போடுகிற பச்சரிசியை, பச்சரிசிப் பொடியை எறும்புகள் தூக்கிச் சென்றாலே உங்களுடைய பல பாவங்கள், நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும்.
ravi said…
அதுமட்டுமா? அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசிப் பொடியை, எறும்புகள் முழுவதுமாக சாப்பிட்டு தீர்த்துவிடாது. மழைக்காலத்திற்கு உணவு வேண்டுமே என்று தன் புற்றுக்குள் சேமித்துவைத்துக் கொள்ளும்.

ravi said…
அதெப்படி... பச்சரிசிப் பொடி கெடாமல் இருக்குமா? என்று கேள்வி எழலாம். எறும்பின் எச்சில் பட்டதுமே அரிசி மாவு கெடும் தன்மையை இழந்துவிடுகிறது. இந்த மாவு அல்லது பொடி இரண்டேகால் வருடங்கள் கெடாமல் இருக்கும். இப்படி எறும்புகள் எடுத்து வந்த பொடியை, புற்றுக்குள் இருக்கும் பொடியை, இரண்டே கால் வருடங்களாக இருக்கும் பொடியை முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ravi said…
இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை கிரக நிலை மாறும். அப்போது அரிசிப் பொடியின் குணமும் மாறிவிடும். இதனால்தான், எறும்புக்கு அடிக்கடி பச்சரிசி பொடி இடவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

*ஒரேயொரு எறும்பு நாம் இடுகிற ஒரேயொரு துளி பச்சரிசிப் பொடியைச் சாப்பிட்டால், அது நூறு அந்தணர்களுக்கு உணவிட்டதற்குச் சமம்*. மேலும் சனி பகவானின் தொல்லையில் இருந்தும் விடுபடலாம். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி முதலான சனிதோஷமும் பெரிய தாக்கத்தையோ கெடு பலனையோ உண்டாக்காது.

அதனால்தான், அரிசிமாவில் கோலமிடுவது வழக்கமாகவே இருக்கிறது. அந்த அரிசிமாவு எறும்புக்கும் பூச்சிகளுக்கும் உணவாகின்றன’’ என்று காஞ்சி மகான் அறிவுறுத்தியுள்ளார்.
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 81* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 19👍👍👍
ravi said…
முகம் பிந்தும் க்ருத்வா குசயுக-மதஸ் தஸ்ய தததோ

ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்

ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு

த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்🍓🍓🍓
ravi said…
பரமசிவனின் பட்டமஹிஷியே!,

ஸ்ரீ சக்ர மத்தியிலுள்ள பிந்துவில் காமகலா ரூபிணியான உனது முகத்தையும்,

அவயவங்களையும் தியானம் செய்து கொண்டு காம கலையாகிய ' *க்லீம்* ' என்னும் பீஜத்தை எவன் அவ்வயவங்களில் தியானம் செய்கிறானோ

அவன் தனது காம சக்திகளைவசப்படும்படி செய்கிறான்.

இவ்வாறு காமகலா பீஜத்தை உபாசிப்பவன் சூர்ய-சந்திரர்களைப் போன்ற ஸ்தனங்களைக் கொண்ட முவுலகிலும் சிறந்த மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான்.

இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்திரீ வசியம் நிச்சயம்.

ஏனென்றால் ஹரார்த்தம் என்பதில் 'ஹ' என்பது ஹம்ஸ: என்பதைக் குறிக்கிறது.

ஹம்ஸ: என்பது மூன்று பிந்துக்களைக் குறிக்கும் மன்மதகலையாக கொள்ளப்பட்டிருக்கிறது

இவ்வாறு காமகலா த்யானம் செய்பவர் தேவியின் ஸ்வருபமாகவே ஆகிவிடுகிறான்.

இவனுக்கு முக்தி நிச்சயம் என்கிறது அருணா மோதினீ.🙏🙏🙏
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 81* started on 7th Oct 2021
ravi said…
10 *मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -

11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -

12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா

13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -

14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -

15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --

17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --

18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --

19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --

20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -

தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
ravi said…
இன்று 19வது திருநாமம் 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*19* नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता - *நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --*

கொஞ்சம் இருங்கள், யோசிக்கிறார் ஹயக்ரீவர்.

ஆம். கிடைத்து விட்டது பொருத்தமான சரியான உதாரணம். லலிதாம்பிகையின் நாசி எது போல தெரியுமா இருக்குமாம்?,

சண்பக மலர் மொட்டவிழ்ந்து புதிதாக உலகை முதலில் பார்க்கும்போது எப்படி இருக்குமோ அப்படியாம். 💐💐💐
Ganesh TV said…
ப்ரேமபக்தியில் தாசரதியை பாட அழைத்தல்.

திருப்பாவை. பாசுரம் 12.

ஆயர்பாடியின் செழிப்பே நேரிலே காண்கின்றாள்..
ஆய்குலத்தவன் தங்கை வீட்டு வாசலில் அதிகமாக பாலை தானாக சொரியும் எறுமைகளால் சேறாகி காலின் கீழே பூமி குளிர்ந்திருக்க...
அழகிய மார்கழி விடியற்காலை மேலிருந்து பனியில் கொட்ட குளிர்ந்த காலையிலே..
அங்கிருக்கும் கட்டையைப் பிடித்து தொங்கிக்கொண்டு அழைக்க வந்திருக்கும் தோழியருடன்...
எந்தவித கஷ்டத்திலும் காகுஸ்தனைப்பாட அழைக்கின்றாள் கோதை..

கண்ணனை நினைத்தாலே பல படிகள் பால்கறக்குமாம் எருமைகள்..
கன்றுகள் குடித்தது போக தோழிகளின் துதி கேட்டு தானாக பால் சொரிந்து மண்ணை சேறாக்கும் கறவையினம் செழித்த சொந்தக்கார ஆயனது தங்கையே..
துயிலெழாய் என பொருமையுடன் அழைக்கும் சிறுமி கோதை ஆண்டாள்.

சீதா தேவியை சிறையெடுத்ததால் லங்காபதி ராவணனிடம் விளைந்த அளவிலான கோபத்திலே அவனை அழித்த ஸ்ரீ ராமனை துதிக்க அழைக்கின்றாள்..
முன்பே ஸ்ரீராமனாக வந்தவன் கிருஷ்ணனாக விளையாட வந்திருக்கின்றான் முன் ஜென்ம புண்ணிய பலத்தால்..
முன்பு தூக்கத்திற்கு கும்பகர்ணனை உவமானம் சொன்னவள் இங்கே அவன் அண்ணன் ராவணனை அழித்த மனதுக்கினிய காகுஸ்தனை பற்றி நினைவு கூறுகின்றாள்..
சரணாகதி அடைய சமயம் தந்தும் செருக்கிலே அழித்தவன் தசானன் ராவணன்.

பட்டாபிஷேக ஸ்ரீ ராமனாக தேவியை அணைத்திருக்க..
அனைவரும் வாத்ஸ்யத்துடன் கோதையின் ஆர்வத்தை நோக்க..
இலக்குவன் சாமரம் வீச..
கண்ணனாக அருள வந்திருக்கின்றான்.
பேசும் பாசுரப்படம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

ரமதி இதி ராமஹ.
சந்தோஷத்தை கொடுப்பதால் ராமன்.

கோதை நாமம் வாழி
கோவிந்தன் நாமம் வாழியவே.
🙏
ravi said…
பால் ஓடும் கோகுலம்

பழம் இனிக்கும் பாவையர்

சொல் இனிக்கும் குசேலர்கள் குன்றும் அடங்கும் கோவர்த்தனங்கள் ..

உரல் இனிக்கும் புன்னகை ...

மண் இனிக்கும் அறுசுவை ...

மாயவன் செய்யும் லீலைகள்

மதி மயங்குமோ

ஜதி போடுமோ

சதி ஒழிய சாதி இல்லா இறை எல்லோரும் ஒன்றே என நினைக்கும் கலை கண்ணா நாங்கள் என்று உன் கீதை இதை கேட்ப்போமோ ? 💐💐💐
ravi said…
*வாயில்லா ஜீவன்களின் தாயில்லா வார்த்தைகள்*
💧💧💧

1. *முட்டையில் குஞ்சின் கூக்குரல்* 🐣🐣🐣

வெளி உலகம் காண ஏங்கி நின்றேன் பெற்றவள் யார் என்றே அறிய ..

உற்றமும் சுற்றமும் காண கண் திறக்கும் வேளையிலே காணாமல் போனேன்..

உயிர் போகும் முன்பே குரல் ஒன்று வந்தது

இன்னொரு ஆம்லெட் வேண்டுமா என்றே ...


2. *அன்ன பூரணி ..*
🦙🦙🦙

தழையை அள்ளி போட்டான் எனக்கு மட்டும் ..

காசி அன்ன பூரணி போல் முழு வயிறும் நிறைய வைத்தான் ..

உண்டதில்லை உணவை இதுபோல் ..

மஞ்சள் தண்ணீர் கஞ்சம் இன்றி ஊற்றினான் மேனியில்

மஞ்சம் போல் மிருதுவானேன் ...

கடவுள் போல் எனக்கும் பூமாலை சாற்றி

திருவாரூர் தேர் போல் தெருவை பவனி வரச் செய்தான் ...

யாரோ பாவம் இந்த ஆடு ..

ஒன்றும் புரியாமல் ஆடுவதை பார் என்றனர் ..

நாளை பக்ரீத் ஆம் .. புரிந்தால் சொல்லுங்கள் நான் ஏன் பாவம் என்று

*3. பாலினும் சொல் இனியான்* 🐄🐄🐄

பால் தராத நாள் இல்லை ...

என் கன்றுக்கும் தந்ததில்லை இதுபோல் ...

மடிக்கும் வயதாகுமென்றே அறியவில்லை ..

என் மடியும் மடியாக எனை தொடாமல் போனதே ...

பால் சுரக்க வில்லை

அவன் கல்லாவில் பணமும் நிறையவில்லை ...

வேண்டாம் நீ இனி எனக்கு என்றான் ஒரு நாள் ..

நால்வர் வந்தே தூக்கினர் என்னை நாலு கூறாய் போடவே..

நிறைந்தது மனம் விடுதலை எண்ணி ..

அவன் கல்லா ஏனோ என்னை பார்த்து கண்ணீர் விட்டதே

*4. உனக்கே காத்திருப்பேன்*
🐕🐕🐕

வாழ்வது சில காலங்கள் உனக்காக காத்திருப்பது பல யுகங்கள் ..

வேண்டுவது ஒன்றும் இல்லை .

வேண்டதக்கது அறிவோய் நீ

வேண்டமுழுதும் தருவோய் நீ ...

மடிமீது விழி வைத்து உறங்கும் நேரமெல்லாம் உன் நினைவே ..

பேச தெரியவில்லை ..

லொள் லொள் என்பது தான் எனக்கு உன் மதுரை தந்த சங்கத் தமிழ் ...

எல்லாம் அதில் அடக்கம் ..

என்னில் நீயும் உன்னில் நானும் போல் ...

மண்ணில் அடங்கும் வாழ்க்கை இது

மறவாதே என்னை போல் பிறர் காட்டும் உறவை ...

நன்றி உள்ளவரை இவ்வுலகில் நாய்கள் நாங்கள் இன்னும் பிறந்திருப்போம்

💦💦💦

*5. ஒரு கோழியின் கண்ணீர் வரிகள்*
🐔🐔🐔

காலையில் கொக்கரக்கோ என்றேன்

மதியம் குக்கருக்குள் வெந்தேன் ...

💦💦💦
ravi said…
*மார்க்கசீர்ஷம்* என்ற வடமொழிச் சொல்லே தமிழில் மார்கழி ஆனது.

*மார்க்க* என்றால் வழி.

*சீர்ஷம்* என்றால் மேலான.

ஆக, மார்கழி என்றால் மேலான வழி எனப்பொருள்.

பக்தியே மேலான வழி.

அதிலும், இறைவனைச் சரணடைந்து விடுதல் மிக மிக உயர்ந்த வழி.

ஆண்டாள், பெருமாளைச் சரணடைந்து தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள்.

அதற்காக, முப்பது நாள் நோன்பிருந்தாள்.

தான் மட்டுமின்றி, மற்றவர்களும் இறைவனை அடைய வேண்டும் என்ற மேலான நோக்கில், தோழியரையும் நோன்பிருக்கும்படி வற்புறுத்தினாள்.

பக்தி மட்டுமின்றி பொது நலமும் மேலான வழி என்பதை இம்மாதம் நமக்கு எடுத்துரைக்கிறது.💐💐💐
TV Ganesh said…
ப்ரேமைபக்தி

திருப்பாவை பாசுரம் 13

இங்கு மறுபடி ஸ்ரீகிருஷ்ணனை விவரிக்கின்றாள் கோதை.
பெரிய ராக்ஷஸ புள்ளாகிவந்த பகாசுரனின் வாய்பிளந்து மாய்த்தவனுமான ஸ்ரீகிருஷ்ணனின் கீர்த்தியை பாட அழைக்கின்றாள்.
ஸ்ரீ ராமன் எவ்விதம் பத்து தலை ராவணனைக் கொன்றானோ அது போல்
அரக்க குணங்களை நம்மிடத்திருந்து கிள்ளி எறிந்திடுவான் ராமனென உரைக்கின்றாள்.
பாடநினைப்பது கிருஷ்ணா ராமனாக எனும் குழப்பம் கோதைக்கில்லை..
இருவரும் ஒருவரே என் கூறி நோம்பினை நூற்க அழைக்கின்றாள்.

அனைவரும் கிளம்பிவிட்டனர் நீராடி நோம்பு செய்ய வெள்ளி எழுந்த நிலையிலும் நீ எழவில்லையே என் குற்றம் சாட்டுகின்றான்.
பறவைகள் சிலிர்த்தெழுந்து பேச ஆரம்பித்த நாழியிலே உறங்காதே கமலவிழியாளே என புகழ்ந்தும் சொல்கின்றாள்.
நீராடி பூஜை செய்ய வா கள்ளம் தவிர்ந்து அனைவருடன் கலந்து கொள்ள எனச் சொல்லியழைக்கின்றாள்.
கிடைத்த நேரத்தை வீணாக்குவது கள்ளத்தனத்திற்கு ஒப்பாகுமே...
சிறுமி ஆண்டாள் அனைவரையும் சேர்த்து அழைத்துச்செல்லவே விரும்புகின்றாள்..
தனித்திருந்து நாராயணனை அடையும் எண்ணமே அவளுக்கில்லை.

ப்ரேமைக்கடலிலே ஆயர்சிருமியர்களே.. ஆதிசேஷனாக படுக்கையாகி விரிந்து..
கண்ணனைத் தாங்கிச் செல்லும் அழகிய திருக்கோலம்.
உடலெல்லாம் பத்து தலையாக ராவணனையும்..
பகாசுரனையும் அழித்துக்காத்த ஆண்டவனை குதிக்கப் சொல்லும் ஆசாரியனாக ஆண்டாள் அமர்ந்திருக்கின்றாள்..
ஆஹா இந்த நினைவே மனம் கொள்ளை கொள்ளுதே..
நாமும் கோபியருடன் ஆனந்த நாகத்திலே இருப்போம்.
ஆசாரிய ஓவியர் புகழ் பரவட்டும்

கோதை நாமம் வாழி
கோவிந்தன் நாமம் வாழியவே.
🙏🌹🙏

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
இராமனது தேர், தேவர்கள் கொடுத்தது என்று அறிந்து சினத்தால் வாய்மடித்துப் பற்களைக் கடிக்கிறான் இராவணன்.

தனது தேரை இராமனை நோக்கி விரைந்து செலுத்தும்படி உத்தரவிட்டான்.

இருவரும் எதிர் எதிரே போர் செய்யக் காத்திருக்க, மகோதரன் இலக்குவனுடன் போர் புரிய போய்விடுகிறான்.

இடையில் இராமனுடன் பொருதி, இராம பாணத்திற்கு இரையாகிவிடுகிரான் மகோதரன்.

இராவணனுக்குப் பல தீய நிமித்தங்கள் தோன்றுகின்றன. எனினும் உள்ளத்து உறுதி குலையாமல் போர் செய்கிறான்.🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 81*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
சிவானந்த லஹரியில இன்னிக்கு 13 வது ஸ்லோகம் பார்ப்போம்

असारे संसारे निजभजनदूरे जडधिया

भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।

मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-

स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥

அஸாரே ஸம்ஸாரே நிஜப⁴ஜனதூ³ரே ஜட³தி⁴யா

ப்⁴ரமந்தம் மாமந்த⁴ம் பரமக்ருʼபயா பாதுமுசிதம் ।

மத³ன்ய: கோ தீ³னஸ்தவ க்ருʼபணரக்ஷாதினிபுண:

த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய: பசுபதே ॥
ravi said…
*ப்⁴ரமந்தம்* – இந்த புத்தி கெட்டு ‘ *மாமந்தம்* ’ –

கண்ணும் தெரியலை எனக்கு.

வழியும் தெரியலை.

இந்த ஸம்ஸார சுழல்ல சுத்தி வந்துண்டு இருக்கேன் ‘

*பசுபதே* ’ – ஹே பரமேஸ்வரா

‘ *பரமக்ருʼபயா* *பாதுமுசிதம்* ’ –

என்னை காப்பாத்தறதுதான் உஸித்தம்.

என்னை நீ காப்பாத்த வேண்டியதுதான் நீ பண்ண வேண்டிய காரியம். ‘ *பரம க்ருபயா’* –

க்ருபையினால அதை நீ பண்ணு ‘ *மத³ன்ய: கோ தீ³ன:’ –*

என்னை விட தீனன் யார் இருக்கா??
‘ *க்ருʼபணரக்ஷாதினிபுண* ’

க்ருபணர்களை காப்பாற்றுவதில் *அதிநிபுண* : உனக்கு தான் அந்த சாமர்த்தியம் இருக்கு

‘ *ஸ்த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய* : பசுபதே’ உன்னை விட்டா எனக்கு இந்த மூவுலகத்துலேயும் அடைக்கலம் தருவதற்கு யார் இருக்கிறார்கள் னு கேட்கறார்.

ரொம்ப அழகான ஒரு ப்ரார்த்தனை.👌👌👌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 97 12th Sep 2021🙏🙏🙏

*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- *ராதித்ய* :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
சைரந்திரி தன் மானத்தைக் காத்துக் கொள்வதற்காக அறையை விட்டு வேகமாக ஓடினாள்.

தன் அழகு தனக்கு இப்படிப்பட்ட ஆபத்தை
விளைவித்துவிட்டதே எனத் தன் அழகைத் தானே பழித்தாள்.

காப்பார் யார் இனி என்று ஏங்கிய அவளுக்கு ராஜசூய யாகம் செய்தபோது
வியாசர் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தன:

“நல்லோரைக் காப்பதற்காகவும், தீயோரை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகந்தோறும் அவதரிக்கும்
எம்பெருமான் சூரிய மண்டலத்தின் நடுவில் பொன்னிறமான திருமேனியோடு எழுந்தருளியிருக்கிறான்!”

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை