Posts

Showing posts from July, 2021

அபிராமி அந்தாதி: பாடல் 21 : மங்கலை செங்கலசம் முலையாள்!!

Image
                                பச்சைப்புடவைக்காரி -462 அபிராமி அந்தாதி - பதிவு 37 பாடல் 21 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய மங்கலை!  செங்கலசம் முலையாள்!  மலையாள்!  வருணச் சங்கலை செங்கை! சகலகலாமயில்!🦚🦚🦚  தாவுகங்கை பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்!  உடையாள்! பிங்கலை!  நீலி!  செய்யாள்!  வெளியாள்!  பசும் பொற்கொடியே.🦜🦜🦜 *அருமையான இன்னொரு பாடல்*   * மங்கலை * ....  அன்னை மங்கலமானவள் ...  மெட்டி அணிந்த பாதங்கள் ,  தங்க கொலுசுகள் குழையும் கால்கள் ,  இடுப்பில் ஒட்டியாணம் ,  கைகளில் சங்குகள்  சத்தம் போடும் வளையல்கள் ,  கழுத்தில் மாணிக்கம் ஒளி வீசும் நவரத்தின மாலை  காதுகளில் வைரம் வரம் வாங்கி அழகுப் படுத்தும் காதுகள் ...  நாசியில் மாணிக்கம் அரசாளும் மூக்குத்தி  கண்களில் கஸ்தூரி மான் இட்ட கரும் மை  நெற்றியில் மூன்றாம் பிறை  விழிகளில் தினம் குதித்து விளையாடும் மீன்கள் ... இருண்ட கரு மேகங்கள் கருத்தரிக்கும் கூந்தல்  அதன் நடுவே பால சூரியனின் பாதயாத்திரை ...  செந்தூர திலகம் சீமந்த  வகுடில் ,  மதுரை குண்டு மல்லி கூந்தலில் தாழம்பூ கோடி மையில் வாசம் செய்யும் குங்குமம் .  தழைய தழைய ப

அபிராமி அந்தாதி : பாடல் 20 : உறைகின்ற நின் திருக்கோயில் !

Image
                                பச்சைப்புடவைக்காரி -461 அபிராமி அந்தாதி  பாடல் 20        உறைகின்ற நின் திருக்கோயில்  நின் கேள்வர் ஒரு பக்கமோ அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ  அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ  கஞ்சமோ  எந்தன் நெஞ்சகமோ மறைகின்ற வாரிதியோ  பூரணாசல மங்கலையே உறைகின்ற நின் திருக்கோயில்  - அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது நின் கேள்வர் ஒரு பக்கமோ  - உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ  - ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ  - அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? கஞ்சமோ  - தாமரை மலரோ? எந்தன் நெஞ்சகமோ  - என்னுடைய நெஞ்சமோ? மறைகின்ற வாரிதியோ  - எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? பூரணாசல மங்கலையே  - எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே! எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிர்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே.  நீ உறைகின்ற திருக்கோயிலாவது உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?  ஓத