அபிராமி அந்தாதி : பாடல் 20 : உறைகின்ற நின் திருக்கோயில் !

 

                        பச்சைப்புடவைக்காரி -461

அபிராமி அந்தாதி 

பாடல் 20


      

உறைகின்ற நின் திருக்கோயில் 
நின் கேள்வர் ஒரு பக்கமோ

அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ 

அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ 

கஞ்சமோ 

எந்தன் நெஞ்சகமோ

மறைகின்ற வாரிதியோ 

பூரணாசல மங்கலையே

உறைகின்ற நின் திருக்கோயில் - அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது

நின் கேள்வர் ஒரு பக்கமோ - உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ - ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ - அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?

கஞ்சமோ - தாமரை மலரோ?

எந்தன் நெஞ்சகமோ - என்னுடைய நெஞ்சமோ?

மறைகின்ற வாரிதியோ - எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?

பூரணாசல மங்கலையே - எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!



எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிர்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே. 

நீ உறைகின்ற திருக்கோயிலாவது உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? 

ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? 

இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? 

தாமரை மலரோ? 

என்னுடைய நெஞ்சமோ? 

எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? 

நீ எங்கும் நிறைந்தவளானாலும் மேலே சொன்னவிடங்களில் நீ மகிழ்ந்து உறைகின்றாய் போலும்.

அபிராமிப் பட்டர், சிவனை உமையாளுக்கு,"கேள்வர்",அதாவது நண்பர் என்கிறார்,நடை முறை வாழ்விலும்

நற்கணவன் -மனைவிக்கு நண்பனே!, நம் நல்ல நண்பர் ,நாம் சொல்வதைக் கேட்பார்.

உமையின் சிவனாரும்- நற்கணவர்-நற்றோழர்,

ஒரு தோளும்,கொடுத்தவராயிற்றே!!!, அதனால், உமை கூறுவதைக் கேட்பதால், பட்டர் "கேள்வர்" என்கிறாரோ,,????

ஒரு நல்ல கணவன் தனது மனைவிக்கு ஒரு சிறந்த தோழனாகத் தான் இருப்பான். 

அதே போல ஒரு நல்ல மனைவி தன் கணவனுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்பாள் - அதனால் தானே காதலியை (மனைவியை) சகியே என்கிறார்கள் பாடலாசிரியர்கள்.




நிச்சயமாக.
அன்னையவள் மிக மகிழ்ந்து உறையும் சிறப்பான இடங்கள் இவையாவும். 

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. 

இறைவனின் இடபாகமும், நால்வேதங்களும் எவ்வளவு உயர்ந்தவை என நாம் அறிவோம். 

'கஞ்சகமோ' என்பதை ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையைக் (உச்சந்தலையில் இருக்கும் சகச்ராதார சக்கரம்) குறிப்பதாகக் கொள்ளலாம். 

"சகஸ்ரதள பத்மஸ்தா'- என்பது தேவியின் 1008 நாமங்களில் ஒன்று. பூரண சந்திரனின் 16 கலைகளின் உருவமாக பராசக்தி அறியப்படுகிறாள்.(வளர்பிறை சந்திரன் லலிதையின் ரூபம், தேய்பிறை காளியின் ரூபம் )


இவையனைத்திலும் மகிழ்ந்துறையும் தேவி என் நெஞ்சிலும் அவ்வாறே மகிழ்வுடன் கோயில் கொண்டாள் என்பது எத்தனை உயர்ந்த பக்திநிலை? அப்படி தேவி உறையத் தகுதி கொண்ட நெஞ்சம் எத்தனை பிறவிகளின் தவப்பயனோ?

ஏன் மீனாட்சி அம்மை மட்டும் அப்பனின் வலப்புறம் கோவில் கொள்கிறாள் என்று தெரியுமா?

பெரும்பாலும் வைணவத் தலங்களில், தாயார் வலப்பக்கமே எழுந்தருளி இருப்பார். 

"வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை" - வக்ஷஸ்தல வாசம் - நித்ய கல்யாணத் திருக்கோலம்.

பல படங்கள்/ஓவியங்களிலும் தாயார் பெருமாள், வலம் இடம் என்று தான் இருப்பார்கள்.

ஏன் நம் கல்யாணத்தில் கூட, மணப்பெண், நம் வலப்புறம் தானே அமர்கிறாள்?

பெருமாள் கல்யாண குண மங்களன் என்பதால் இப்படி.

ஆனால் ஈசனோ, யோகீஸ்வரன். போகத்திலும் யோகி. அதனால் சில தலங்களில் அம்பிகையை இடப்புறத்திலும் (யோக நிலை), மதுரை, நெல்லை போன்ற கல்யாணத் தலங்களில், வலப்புறத்திலும் (போக நிலை) கொண்டு சேவை சாதிக்கிறான்



அண்மையில் வந்த சக்தி விகடன் பார்த்தேன்; அதில் “சிவாலயங்களில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் ஏன்?” என்ற கட்டுரையில் கீழ்கண்ட விளக்கமும் உள்ளது.
"
திருக்கோயில்களில் அம்பிகை, சிவபெருமானுக்கு இணையாக இடப் பாகத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கோலம், அவள் தவம் புரிந்து ஈசனின் இடப் பாகம் பெற்று அவருடன் சேர்ந்து அன்பர்களுக்கு சகல நலன்களையும் அருளும் நிலையாகும். 

‘உபதேசக் கோலம்’ என்று போற்றப்படுகிறது (திருக்காளத்தி, திருப்பனந்தாள் போன்றவை உபதேசத் தலங்கள்). 

அம்பிகை உள் மண்டபத்தில் சிவபெருமானின் கருவறையை நோக்கியவாறு, தெற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். இந்த நிலை, அம்பிகை உயிர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் கோலம் ஆகும்.




இறைவனின் வலப் பக்கத்தில் (பெரும்பாலும் கிழக்கு நோக்கி) அம்பிகை வீற்றிருக்கும் கோலம், கல்யாணத் திருக்கோலம் ஆகும்! 

மதுரை (மீனாட்சி), நெல்லை (காந்திமதி) மற்றும் குற்றாலம் (குழல்வாய் மொழியாள்) ஆகிய தலங்களில் அம்பிகை கல்யாணத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளதால் இவை ‘கல்யாணத் தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

====👍👍👍👌 




20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?

திருஞான சம்பந்தர் திருச்சியில் உள்ள தாயமானவரின் மேல் பாடிய பாடல் 

நன்றுடையானைத் தீயதிலானை 

நரைவெள்ளே

றொன்றுடையானை

யுமையொருபாக முடையானைச்

சென்றடையாத திருவுடையானைச்

சிராப்பள்ளிக்

குன்றுடையானைக்

கூறவென்னுள்ளங் குளிரும்மே.

====


நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, 

தீயது ஒன்றேனும் இல்லாதவனை, 

மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, 

பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, 

அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, 

சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் 

போற்ற என் உள்ளம் குளிரும்.🙏🙏🙏

இந்த பாடல் மிகவும் அழகான பாடல் 


உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?* 

அம்மா நீ எங்கே உறைகிறாய் ? 

ஒருவேளை ஈசனின் இடது பாகத்தை வவ்விக் கொண்டாயே அங்கே உறைகிறாயா 

இல்லை -----🤔🤔🤔

அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ?

இதையே 2வது பாடலிலும் சொல்கிறார் 

துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் 

*சுருதிகளின்*

*பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும்* 

பனிமலர்பூங்

கணையும், 

கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், 

கையில்

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.👌👌👌



வேத ரூபிணி அம்பாள் என்று பார்த்தோம் அதாவது வேதங்களின் அடிப்பாகம் ஓம்காரம் .. பிரணவம் ... 

அதன் முடி உபநிஷதங்கள் .. 

அதன் வேராகவும் தண்டாகவும் இருப்பவள் அம்பாள் .. 

அதில் இருந்து வரும் ஒலி அவள் இசைக்கும் பண் ... 

அவள் கிளி போல் அதை பேசுகிறாள் ...🦜🦜🦜

இங்கே மீண்டும் அதே கேள்வியை பட்டர் கேட்க்கிறார் அம்மா ஒரு வேளை வேதங்களின் அடியில் உறைகிறாயோ இல்லை அவைகளின் முடியில் உறைகிறாயோ ? 🤔🤔🤔



அமுதம்

நிறைகின்ற வெண்திங்களோ?

சந்திரன் அமுத தாரைகளை பொழிகிறான் என்று நாம் பாவிக்கிறோம் .. மகான்கள் சாதிக்கிறார்கள் ... 

அம்மாவாசையில் ஏன் தர்ப்பணம் செய்கிறோம் ... தெரியுமா ? 

மற்ற நாட்களில் நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் சந்திரன் பொழியும் அமுதத்தை உணவாக உட்க்கொள்கின்றன .. 

அம்மாவாசையில் சந்திரன் வராததால் அவைகள் உணவின்றி திரிகின்றன .. 

அதனால் அன்று போனவர்களை நினைத்து தர்பணமோ அல்லது யாருக்காவது அன்னதானமோ செய்தால் அதனால் மகிழ்ந்து ஆத்மாக்கள் ஆசி கூறி செல்கின்றன .... 

இங்கே பட்டர் 

அம்மா நீயே அந்த அமுதைப்பொழியும் சந்திரனாக இருக்கிறாய் ... அங்கே தான் நீ உறைகிறாயோ 🤔🤔🤔 என்று கேட்க்கிறார்




 கஞ்சமோ?

கஞ்சம் என்றால் தாமரை ... யாரையாவது திட்ட வேண்டும் என்று நினைத்து இவன் or இவள் ஒரு கஞ்சம் என்று இனி சொல்லாதீர்கள் .. 

அவர்களை உங்களையும் அறியாமல் தாமரை போல மென்மையானவன் அல்லது மென்மையானவள்  என்று 

குறிப்பிடுகிறீ ர்கள் என்று அர்த்தம் ... 

நம்மையும் இனி யாராவது *கஞ்சம்* என்றால் கோபமே வரக்கூடாது .. 

அவன் உங்களை புகழ்கிறான் என்று அர்த்தம் .. 

அவள் வெண்தாமரையில் உறைகிறாளா ??

இல்லை 

செந்தாமரையில் உறைகிறாளா ??

இல்லை 

உச்சித் திலகம் இடும் இடமான சஹஸ்ரராரத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரையாய் இருக்கிறாளா ? 

அம்மா எங்கே தாயே நீ உறைகிறாய் ?? 🤔🤔🤔



 எந்தன் நெஞ்சமோ?

அம்மா ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையில் நீ மனோன்மணியாக உறைகிறாயோ 

இல்லை என் நெஞ்சத்தில் உறைகிறாயா ? 

👌👌👌

மறைகின்ற வாரிதியோ?* 

பாற்கடலில் உறைகிறாயா ? 

நீ தானே மகாவிஷ்ணு .. நீ தானே திருமால் .. உன் வடிவம் அவன் .. அவன் வடிவம் நீ 👍👍👍



பூரணாசல மங்கலையே.🍇🍇🍇🦚🦚🦚

அம்மா எங்கு தான் இருக்கிறாய் சொல் தாயே .... பூர்ண மங்களம் கொண்டவள் அன்னை .. 

திருஞான சம்பந்தரும் இதைத்தான் சொல்கிறார் இறைவனின் மங்களம் என்பது எல்லையே இல்லாதது என்று ...தீயதே இல்லாத மனம் இருந்தால் மட்டுமே மங்களம் கொண்டவர் என்று சொல்ல முடியும் ... 

இங்கே இந்த பாடலை முடிக்கும் போது மங்கலமாக முடிக்கிறார் அம்மா நீ எங்கும் நிறைந்தவள் .. இங்கு தான் உறைகிறாய் என்று உன்னை அடக்கி விட முடியாது ... நீ பூர்ணமானவள் மங்களமானவள்...

பூரணாசல மங்கலையே🍇🍇🍇🦚🦚🦚 என்று சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் . 

You are the complete whole - the full , flawless one . You are one who is ageless and are always the auspicious Sumangali . 

How many different abodes You choose !

Do You reside in the left half of Lord Shiva ?

OR 

In the Pranavam which is the root of all Vedas ?

Or in Upanishads which are the outcome of the Vedas ? 

Or is Your abode , the milk white beauty of the full moon ? 

Or is it the unsullied comeliness of the Lotus Flower ? 

Or the all encompassing milk ocean ?

Or , dare I say , Your favourite residence is the heart of Your devotees ?🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

உறைகின்ற நின் திருக்கோயில்

🥇🥇🥇

  👌👌👌👌👌👌💐💐💐💐💐💐👍👍👍👍










Comments

ravi said…
அருள்மிகு அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில், காசர்கோடு மாவட்டம், கேரளா

தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கவும், அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச் செழிப்பைப் பெறவும் உதவும் ஸ்தலமாக, கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் இருக்கும் அனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவில் அமைந்திருக்கிறது.

ravi said…
வில்வமங்களம் ஸ்வாமிகள் எனும் முனிவர், காட்டுக்குள்ளிருந்த தனது ஆசிரமத்தில் ஸ்ரீமஹா விஷ்ணு சிலையை நிறுவி, அதனைத் தினமும் மலர்களால் அலங்கரித்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்த போது, அவருடைய ஆசிரமத்தின் முன்பாக இருந்த நந்தவனத்தில், ஒரு அழகிய சிறுவன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.

ஆசிரமத்திலிருந்து வெளியில் வந்த அவர், அந்தச் சிறுவனிடம், ‘தம்பி நீ யார்? இந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாய்? வழி தவறி வந்து விட்டாயா?’ என்று அவனைப் பற்றி விசாரித்தார்.

ravi said…
அவன், ‘ஸ்வாமி! நான் ஒரு அனாதை. எனக்கென்று யாருமில்லை. எனவே ஒவ்வொரு இடமாகப் போய்க் கொண்டிருக்கிறேன்’ என்றான்.

இரக்கம் கொண்ட முனிவர் அவனிடம், ‘தம்பி, என்னுடன் இந்த ஆசிரமத்தில் தங்கிக் கொள்கிறாயா?’ என்று கேட்டார்.

சிறிது நேரம் யோசித்த சிறுவன், ‘ஸ்வாமி! நான் உங்கள் விருப்பப்படி இங்கேயேத் தங்கிக் கொள்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. நீங்கள் என்னைச் சிறிது கூடக் கடிந்து பேசக்கூடாது. அப்படிப் பேசினால், நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன்’ என்றான்.

முனிவரும் அவனுடைய நிபந்தனைக்குச் சம்மதித்தார். அதன் பிறகு, அந்தச் சிறுவன் முனிவருடன் ஆசிரமத்தில் தங்கிக் கொண்டான்.

ravi said…
அந்தச் சிறுவன், ஆசிரமத்தில் சிறு சிறு வேலைகளைச் செய்து வந்தான். முனிவரது ஸ்ரீமஹா விஷ்ணு வழிபாட்டுக்குத் தேவையான மலர்கள் மற்றும் இதரப் பொருட்களையும் கொண்டு வந்து கொடுப்பான். அவனுடைய சிறு சிறு வேலைகள் முனிவருக்குப் பிடித்துப் போனது. ஆனால், அவன் அவ்வப்போது விளையாட்டாகச் செய்யும் சிறிய தவறுகள், அவரை எரிச்சலடையச் செய்யும். இருப்பினும், அவனைக் கண்டித்தால், அவன் தன்னை விட்டுப் பிரிந்து போய் விடுவானே என்கிற அச்சத்தில் பேசாமலிருந்து விடுவார்.

ஒரு நாள், அந்தச் சிறுவன் ஸ்ரீமஹா விஷ்ணு வழிபாட்டுக்கு வைத்திருந்த பால் முழுவதையும் குடித்து விட்டான். அதனால் கோபமடைந்த முனிவர், அவனைச் சத்தம் போட்டார். உடனே அந்தச் சிறுவன், ‘ஸ்வாமி! நான் உங்களுடன் இருப்பதற்காகச் சொன்ன நிபந்தனையை மீறி விட்டீர்கள். இனி, நான் இங்கிருக்க மாட்டேன். இனிமேல் நீங்கள்தான் என்னைத் தேடி வர வேண்டும்’ என்று சொல்லியபடி அங்கிருந்து சென்று விட்டான்.

ravi said…
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவனைத் திட்டியதற்காக வருத்தப்பட்ட முனிவர், அந்தச் சிறுவனிடம் பேசி, அவனை மீண்டும் தன்னுடன் அழைத்து வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவனைத் தேடிச் சென்றார்.

அந்தச் சிறுவனைக் கண்டு பிடிக்க ஒவ்வொரு இடமாகத் தேடி அலைந்த அவர், அனந்தக் காடுகள் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது, அங்கிருந்த இலுப்பை மரம் ஒன்றில் அந்தச் சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சிறுவனை நோக்கிச் சென்றார்.

அங்கு அந்தச் சிறுவன் இல்லை. அந்த இடத்தில், விஷ்ணு படுக்கை நிலையில் (அனந்த சயனம்) இருப்பது அவருக்குத் தெரிந்தது. அதன் பிறகுதான், அவருக்குத் தன்னுடன் இருந்த சிறுவன் சாக்ஷாத் ஸ்ரீ மஹா விஷ்ணுவே என்பது புரிந்தது.
ஸ்ரீமஹா விஷ்ணுவை வணங்கிய முனிவர், தனக்குக் காட்சியளித்த அதே இடத்தில் கோவிலாக எழுந்தருள வேண்டும் என்று வேண்டினார். இறைவனும், அவருடைய வேண்டுதலுக்காக அங்கேயே கோவில் கொண்டார் என்கிறது ஸ்தல வரலாறு.

கோவில் அமைப்பு :

இந்தக் கோவில் அகலமான புல்வெளிகளுக்கு இடையில் அமைந்திருக்கும், செவ்வக வடிவிலான ஏரி ஒன்றின் நடுவில் அமைந்திருக் கிறது. கேரளாவில் ஏரிக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரே கோவில் இதுதான் என்கின்றனர். இக்கோவிலுக்குச் செல்ல ஏரியின் கரையிலிருந்து சிறிய பாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

கோவிலின் கருவறையில் அனந்தன் எனும் பாம்பின் மேல் ஸ்ரீமஹா விஷ்ணு அமர்ந்த நிலையில் இருக்கிறார். அவரை அனந்த பத்மநாபன் என்று அழைக்கின்றனர். அவரின் இருபுறமும் பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்பாக, ஹனுமன் மற்றும் கருடன் ஆகியோர் வணங்கிய நிலையில் இருக்கின்றனர். இக்கோவிலைத் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவில் என்றும் சொல்கின்றனர்.

இக்கோவில் வளாகத்தில் மஹா கணபதி, மகிஷாசுரமர்த்தினி, கோசலகிருஷ்ணர் சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலய வெளிப்புறச் சுவர்களில் புராணங்களை மையப்படுத்திய அழகிய ஓவியங்கள் கண்களைக் கவர்கின்றன.

சிறப்பு விழாக்கள் :

இக்கோவிலில் கேரள நாட்காட்டியின் துலாம் (ஐப்பசி) மாதத்தில் முதல் நாள், ‘நாவண்ணா’ எனும் விழாவும், கும்பம் (மாசி) மாதத்தில் 14-ம் நாள் ‘தபோத்ஸவம்’ எனும் விழாவும் சிறப்பு விழாக்களாக நடத்தப்படுகின்றன. பவுர்ணமி நாட்களிலும், கிருஷ்ண அஷ்டமி நாளிலும் சிறப்புப் பஜனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதுபோல், கேரளாவில் ராமாயண மாதமாகக் கருதப்படும் ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்து வேண்டுபவர்களுக்குத் தொலைந்த பொருட்கள், இழந்த பதவிகள் போன்றவைத் திரும்பக் கிடைக்கும் என்கின்றனர். இத்தல இறைவனை வழிபடுபவர்களுக்கு, அவர்களது அனைத்துக் குறைகளும் நீங்கிச் செல்வச்செழிப்பு ஏற்படும் என்பதும் பொதுவான நம்பிக்கையாகும்.

திருவனந்தபுரம் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு மூல காரணமான, முதன்மைக் கோவிலாக இக்கோவில் இருப்பதால், அக்கோவிலுக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் இக்கோவிலில் வழிபட்டுப் பெற முடியும் என்றும் சொல்கின்றனர்.

சிலைக்கு அபிஷேகம் இல்லை :

இந்தியாவில் உள்ள கோவில்களில் இருக்கும் பெரும்பாலான சிலைகள் கற்களாலோ, உலோகத்தாலோ செய்து நிறுவப்பட்டிருக்கிறது. கேரளக் கோவில்களில் மரங்களினால் கூட சிலைகள் செய்யப்பட்டிருக்கும். ஒரு சில கோவில்களில் மட்டுமே சிலைகள், மூலிகைகளைக் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்வார்கள். அனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோவிலின் மூலவர் சிலை, ‘கடுசர்க்கரா’ எனும் எட்டு விதமான (அஷ்டபந்தன) மூலிகைகள் கொண்டு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதனால்தான் இங்குள்ள மூலவர் சிலைக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை.

ravi said…
அமைவிடம் :

கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தில் கும்பாலா எனும் ஊரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனந்தபுரம். காசர்கோடுவிலிருந்து, மங்களூர் செல்லும் வழியில் கும்பாலா இருக் கிறது. இந்த நகரங்களிலிருந்து கும்பாலாவிற்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. கும்பாலா சென்று, பின்னர் அங்கிருந்து வாடகைக் கார் அல்லது ஆட்டோ மூலம் இத்தலத்திற்குச் செல்லலாம்.

கோவில் நடை திறக்கும் நேரம்

ஆலயம் தினமும் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும். தினமும் காலை 7.30 மணி, மதியம் 12.30 மணி மற்றும் இரவு 7.30 மணி என்று மூன்று வேளைகளில் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

இங்குள்ள சிலைகளுக்கு அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ravi said…
ஒரு உருவம் உலகம் உய்ய வந்தது வானில் இருந்தே

ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செய்ததே

மூன்று விரல்கள் நான்கு வேதம் சொல்ல

ஐந்தெழுத்தை ஆறு காலமும் ஓடும் ஆறுபோல் சொன்னதே

ஏழு மலை தாண்டி குறையின்றி இருக்கும் கோவிந்தனோ

எட்டு திக்கும் ஆடையாய் அணியும் திரு உடையானோ

ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் உறைபவளோ

வர்ணிக்க வார்த்தை அது பத்தாமல் ஒன்றின் அருகில் ஒன்றாய் நின்றேன்

பன்னிரு கரங்கள் என்னைத் தொட சிலிர்த்து எழுந்தேன் ..

நானும் நீ தேடும் சுவாமிநாதனே என்றது அந்த உருவம் ..

தண்டமாய் வாழ்ந்த வாழ்க்கையை ஒரு தண்டம் கரை சேர்க்கும் என்றே கனவிலும் நினைக்க வில்லை 🙏🙏🙏🌸🌸🌸
ravi said…
குறை இல்லா கோவிந்தா

உன்னிடம் ஏனோ குறையுடன் வருகிறேன் ..

நிறை என்று மனம் சொல்லவும் மறுக்கின்றது

மறை போற்றும் உன்னை ஏனோ மனமதில் திரை போட்டு வைத்துள்ளேன் ..

திரை போட்டத்தினாலே மனம் கறை கண்டு துடிக்கிறது ..

கரை சேர்க்க வேண்டுகிறேன் ..

வரை இன்றி அருளும் வரதா

தரையில் கால் பதியாமல் வானம் அதில் பறந்தேன் .. வாழ்க்கை நிரந்தரம் என்றே

அரை பைத்தியம் இல்லை நான் முழு பைத்தியம் ...

என்னை அறை கொடுத்து வளர்க்க வில்லை ...

பறை தரும் கோவிந்தா பாதம் பணிந்தேன் இனி ஒரு சமயம் வேண்டேன்

மனம் அதில் நீ படுக்க பஞ்சு மெத்தை ஒன்றை போட்டேன் ..

பள்ளி கொள்ள வாராயோ உன் மலர் கமலையுடனே 🙏🙏🙏🙏
TV Ganesh said…
உடுப்பி கிருஷ்ணா.

உடுப்பி வாழ் கிருஷ்ணா..
உடம்பிலே பீதாம்பரம் உடுப்பாய் கட்டியிருக்கும் கிருஷ்ணா..
உடும்பாய் உன் பாதம் பிடிக்கும் கபியாய் என்னை அறியாயோ கிருஷ்ணா..
உடுக்கையிழந்தவன் கை போல தவித்து பாய்ந்தோடி உன்னிடம் வந்தேன் கிருஷ்ணா..

நீ மத்தால் கடையும் சம்சார கர்மவினைப்பானையிலே..
நீயன்றி வேறு இல்லையென ஆவினைப்போல் கிடக்கின்றேன் கிருஷ்ணா..
நீக்கமற நிறைந்தாய் என்னுள்ளே கிருஷ்ணா..
நீயல்லால் வேறு கதியேது கிருஷ்ணா..

நீலவண்ண கிருஷ்ணா..
நீருண்ட மேகநிறத்தவனே கிருஷ்ணா..
நீறூற்றாய் கருணை மழை பொழிந்திடு கிருஷ்ணா..
கோபாலா ஆமருவியப்பா கிருஷ்ணா.

நெஞ்சமினிக்குதே உன்னைக்கண்ட நேரம்..
நினைத்தாலே தித்திக்குதே நாவில் உன் நாமம் சொன்ன நேரம்...
விரல் பிடித்து நீ கூட்டிச்சென்று தரிசனம் தந்த நேரம்.
நவகிரஹ ஆக்கரமிப்பை கோளாறுகளைத்தாண்டி உன் தரிசனம் கண்ட நேரம்..
நீளவில்லையே அந்த கருணை மழை நேரம்..
நீந்தி நிறைந்தும் கறைந்தும் போதவில்லையே நீ தந்த அந்த நேரம்.
மீண்டும் மீண்டும் தரிசன வரம் அருளிடவேண்டும் என் குழந்தாய் கிருஷ்ணா.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
👌👌👌
Kousalya said…
ஸ்ரீ கிருஷ்ணா, கேசாதி பாதமாய் உன் அழகை ரசித்து பார்த்தாலே போதுமே...மனம் தானாகவே லேசாகிவிடுமே...சரணம் அடைந்தேன் நின் பதங்களையே....ஸ்ரீ ஹரி🙏🙏🙏🌹🌹🌹
Hemalatha said…
அத்தனையும் கல்வெட்டுகள் 👌👌👏👏 கிறுக்களா...... 😳🙄
Sridhar Swaminathan said…
🙏🙏🙏🙏🙏அருமை.. அருமை.. எதோடு எப்படி கோர்த்திருக்கிறீர்கள். ஆனாலும் ஒரு தவறு. அதையும் தெரிந்தே செய்திருக்கிறீர்கள். கேள்வி கேட்பவரான நீங்கள் ஒன்றுமே தெரியாதவரா.. அந்த தவறைத்தான் சொல்கிறேன். 😀😀🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*ராதே_ கிருஷ்ணா*

*தர்மோ ரக்ஷதி ரக்ஷித*:

*#கிருஷ்ணரின்_வேறு_பெயர்கள்*

மகாபாரதத்தின் உத்தியோகப் பருவத்தில், குரு நாட்டின் மன்னர் திருதராட்டிரன் தனது தேரோட்டியான சஞ்சயனிடத்தில், கிருஷ்ணரின் வேறு பெயர்களையும்; அதன் பொருளையும் உரைக்குமாறு கேட்டார்.

ravi said…
அதற்கு சஞ்சயன் கீழ்கண்டவாறு கிருஷ்ணரின் வேறு பெயர்களை, அதற்கான விளக்கத்துடன் திருதராட்டிரரிடம் கூறினார்.

கேசவன் – அளவிடப்பட முடியாதவன், வாயால் விவரிக்கப்பட முடியாதவன்.

வாசுதேவன் – அனைத்து உயிர்களில் வசிப்பவன்.

விஷ்ணு – எங்கும் பரந்திருக்கும் இயல்பினன்.

மாதவன் – பெரும் தவம் செய்பவன்.

மதுசூதனன் – மது எனும் அசுரனை கொன்றதால் மதுசூதனன் என அழைக்கப்படுகிறான்.

ravi said…
புண்டரீகாட்சன் – “உயர்ந்ததும், நிரந்தரமானதுமான அவனது வசிப்பிடத்தை” குறிக்கும் “புண்டரீகம்” (இதயத்தாமரை) மற்றும் “அழிவற்றதைக்” குறிக்கும் “அட்சம்” ஆகியவற்றில் இருந்து அவன் புண்டரீகாட்சன் என அழைக்கப்படுகிறான்.

ஜனார்தனன் – தீயவர்களின் இதயங்களில் அச்சத்தை விளைவிப்பதால் ஜனார்த்தனன் என அழைக்கப்படுகிறான்.

சாத்வதன் – சாத்வ குணம் அவனை விட்டு எப்போதும் விலகாததாலும், அவனும் சாத்வ குணத்தை விட்டு விலகாமல் இருப்பதாலும் சாத்வதன் என அழைக்கப்படுகிறான்;

ravi said…
விருபாட்சணன் – “விருசபம்” என்பது “வேதங்களைக்” குறிக்கும், “இச்சணம்” என்பது “கண்ணைக்” குறிக்கும். இவையிரண்டும் இணைந்து, வேதங்களே அவனது கண்கள் என்றோ, வேதங்களே அவனைக் காண்பதற்கான கண்கள் என்றோ குறிக்கின்றன என்பதால், கிருஷ்ணணை விருஷபாட்சணன் என அழைக்கப்படுகிறான்,

ravi said…
அஜா – எந்த உயிரிலிருந்தும் சாதாரண வழியில் தனது பிறப்பை எடுக்காததால் அஜா என அழைக்கப்படுகிறான்.

தமோதரன் – தேவர்களைப் போலல்லாமல் அவனது பிரகாசமும், அவனது சுயமும், படைக்கப்படாததாக இருப்பதாலும், சுயக்கட்டுப்பாடும், பெரும் பிரகாசமும் கொண்டிருப்பதாலும் தாமோதரன் என அழைக்கப்படுகிறான்.

ravi said…
ரிசிகேசன் – “என்றும் மகிழ்ச்சி” என்பதற்கு “ஹ்ரிஷிகா” என்றும் “ஈசா” என்பதற்கு “ஆறு தெய்வீகப் பண்புகள்” என்றும் பொருள். இன்பம், மகிழ்ச்சி, தெய்வீகம் ஆகியவற்றைக் குறிப்பதால் அவன் ரிஷிகேசன் என அழைக்கப்படுகிறான்.

ravi said…
மகாபாகு – தனது இரு கரங்களால் பூமியையும், வானத்தையும் தாங்கிப் பிடிப்பதால் மஹாபாஹு என அழைக்கப்படுகிறான்.

அதாட்சன் – எப்போதும் கீழே வீழாதவன் என்பதாலும், எக்குறைவின்றியும் இருப்பதனாலும் அதாட்சன் என அழைக்கப்படுகிறான்.

நாராயணன் – மனிதர்கள் {நரர்கள்} அனைவருக்கும் புகலிடமாக இருப்பதால் (அயனமாக இருப்பதால்) நாராயணன் என அழைக்கப்படுகிறான்.

ravi said…
புருசோத்தமன் – ஆண் மக்களில் (புருசர்களில்) மேன்மையானவன் என்பதால் புருசோத்தமன் என அழைக்கப்படுகிறான்.

சர்வன் – அனைத்துப் பொருட்களின் அறிவையும் கொண்டிருப்பதால் சர்வன் என்று அழைக்கப்படுகிறான்.

சத்யன் – கிருஷ்ணன் எப்போதும் உண்மையில் இருக்கிறான், உண்மையும் எப்போதும் அவனில் இருப்பதால் சத்யன் என அழைக்கப்படுகிறான்.

விஷ்ணு – தனது ஆற்றலுக்கும், வெற்றிக்காகவும் விஷ்ணு என அறியப்படுகிறான்.

அனந்தன் – அழிவில்லாதவனாக இருப்பதால் அனந்தன் என்று அறியப்படுகிறான்.

கோவிந்தன் – அனைத்து வகைப் பேச்சுகளின் அறிவையும் கொண்டிருப்பதால் கோவிந்தன் என அறியப்படுகிறான்

ravi said…
கிருஷ்ணன் – ஏற்கனவே இருக்கிறது என்பதைக் குறிக்கும் “கிருஷி” மற்றும் “நித்திய அமைதி” என்பதைக் குறிக்கும் “ண” ஆகிய இரண்டு சொற்களுக்குள் தன்னை மறைமுகமாக ஐக்கியப்படுத்திக் கொள்வதால் அவன் கிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறான். ( “க்ருஷ்” என்றால் கீறுதல் என்று பொருள். “கருஷ்” என்றால் பூமி என்று பொருள், “ண” என்றால் சுகம் என்று பொருள். “கிருஷ்ண” என்றால் கலப்பையினால் பூமி கீறப்படுவதால் விளையும் நன்மையைக் குறிப்பதாகும்
ravi said…
*கர்மவினை நீங்க வழிபாடே சிறந்த வழி*

மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கிறான். அவை:- சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவையாகும்.

‘சஞ்சித கர்மம்’ என்பது, ஒரு கரு உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது தாய், தந்தை, முன்னோர்களிடம் இருந்தும், பல ஜென்மங்களில் ஆத்மா செய்த பாவ புண்ணியங்களும் இந்த பிறவியில் பற்றிக்கொள்ளும்.

ravi said…
பிராப்த கர்மம்’ என்பது, ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணிய பலன் மூலம் இந்த பிறவியில் கிடைக்க கூடிய நன்மை தீமையாகும். இதையே வேறு விதமாக சொன்னால் ‘பிராப்தம்’, ‘விதி’, ‘கொடுப்பினை’ என்று கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்.

‘ஆகாமிய கர்மம்’ மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்கச் செய்யும் செயல்கள் மூலம், இப்பிறவியில் வாழும் காலத்தில் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது.

ravi said…
இந்த மூன்று வகையான கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினை தாக்கத்தால் வருபவை.

ravi said…
ஆனால் பலருக்கும் ‘பரிகாரம் செய்து கர்மவினையை தீர்க்க முடியும்’ என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் சில குறிப்பிட்ட பூஜை, வழிபாடு, விரத, பரிகார தலங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் முறையாக செய்வதன் மூலம் சிலருக்கு உடனே பலன் கிடைக்கலாம். ஒரு சிலருக்கு பலன் கிடைப்பது காலதாமதமாகும். ஒரு பிரிவினருக்கு பலனே கிடைப்பதில்லை.

ravi said…
இப்படி பரிகாரம் பலிதமாகாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ‘ஏன் சிலருக்கு பரிகாரம் பலன் தருவதில்லை?’ என்று கேள்வி கேட்கும் முன்பு, நாம் அனைவரும் பரிகாரத்திற்கும் வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

ravi said…
பரிகாரம் என்பதில் ‘வாழை மரத்திற்கு தாலி கட்டுவது - வெட்டுவது’, ‘தோஷ நிவர்த்தி ஹோமம்’ போன்றவை அடங்கும்.

வழிபாடு என்பது, ‘தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான்’ என்பதை உணர்ந்து, அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும். இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வதும் ஆகும்.

ravi said…
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி என்னும் தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனடியாக பலன் கொடுக்கும். ஆறாம், எட்டாம், பன்னிரண்டாம் அதிபதிகளின் தசா புத்திகள், நீச்ச கிரக தசா புத்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலன் கொடுக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரலாம். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும் பரிகார பூஜைகள் தான் உரிய பலனைத் தரும்.

அத்துடன் ஜனன கால ஜாதகத்தில் கீழ்கண்ட அமைப்புகள் இருந்தாலும் பரிகாரங்கள் பலன் கொடுக்கும்.

ravi said…
குரு எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த பாவகத்தைப் பார்க்கிறாரோ, அந்த பாவக பலன்களை பரிகாரங்கள் மூலம் மாற்றி அமைக்க முடியும்.

சனியும், செவ்வாயும் இணைந்து எந்த பாவகத்தில் இருக்கிறார்களோ அல்லது எந்த பாவகத்தைப் பார்க்கிறார்களோ அந்த பாவக பலன்களை பரிகாரம் செய்து மாற்ற முடியாது. இந்த கிரகங்களுடன் குருவின் சம்பந்தம் இருந்தால் கடினமான பரிகாரம் ஓரளவு பலன் தரும்.

ஒன்பதுக்குரியவன் எந்த பாவகத்திற்கு அல்லது எந்த பாவக அதிபதிக்கு தொடர்பு பெறுகிறாரோ அந்த பாவ பலன்களை பரிகாரத்தால் அடையலாம்.

கோச்சாரத்தில் ஐந்து, ஒன்பதாம் அதிபதி வலுப்பெறும் போது செய்யும் பரிகாரமும் பலிதமாகும்.

குருவிற்கு செவ்வாய் சம்பந்தம் இருந்தால் பரிகாரத்தை விட வழிபாடே நிரந்தர தீர்வு தரும்.

ravi said…
ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு ஒரு முயற்சியாகவே, நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும் ‘என் மனதால் கூட யாருக்கும் எந்த கெடுதலும் செய்தது இல்லை’ என்றுதான் கூறுவார்கள். இதற்கு தான் செய்வது தவறு என்பதை உணராத அவர்களது அறியாமையும் ஒரு காரணம்.

ravi said…
தன் தவறை யாரும் பார்க்கவில்லை, சாட்சி இல்லை’ என்று தவறை மறைக்க முயற்சி செய்வது மற்றொரு காரணம். தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரமும், வழிபாடும் பலன் தராது.

சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை, மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் என்னும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு, காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் இறைவனிடம் சரணாகதி அடைந்து, அவனது அருட் கருணையால் கர்மவினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.

ravi said…
ஒருவன் ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்க தொடங்கும் போதே, கர்மா அதன் வேலையை ஆரம்பித்து விடுகிறது. மனிதன் முக்தி அடைவதற்கும், பிறவாப் பெருநிலை அடைவதற்கும் ‘சஞ்சித கர்மா’ முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து சரி செய்வது என்பது முடியாத காரியம். ‘சரணாகதி’ என்னும் இறை வழிபாடே, சஞ்சித கர்மாவிற்கு முற்றுப்புள்ளி வைக்க பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட அருட்கொடை.

ravi said…
ஜாதகத்தில் எத்தகைய அமைப்பு இருந்தாலும், வழிபாட்டால் சரி செய்ய முடியாத பிரச்சினைகளே கிடையாது. மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் மனதை நெறிப்படுத்த வேண்டும்.

ravi said…
மனிதர்களுக்கு பொருள் தேடும் விஷயத்தில் உதவுகின்ற கருவியாகவும், ஆபத்து நிறைந்த வாழ்க்கைக் கடலைத் தாண்டும் விஷயத்தில் கப்பலாகவும், எதிரிகளை வெற்றிபெற விரும்பும் சமயங்களில் நல்ல மதிநுட்பம் நிறைந்த மந்திரியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச் செய்து, நமது இலக்கை அடைய பேருதவி புரிவது தியானம், யோகா போன்றவையே. இது உலகமறிந்த, மிகப் பழமையான மன, உடல் பயிற்சியாகும்.

ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம் மற்றும் புத்தியை பிரபஞ்சத்திடம் சரணடைய செய்யும்போது, உன்னத சக்தியான இறைசக்தி வசப்பட்டு நிரந்தரமான சுப பலன்கள் அடைய முடியும். பரிகாரத்தை விட வழிபாடே நம்மை சிறப்பாக வழிநடத்தும்.

#mahavishnuinfo
ravi said…
Prasad Ranganathan:
*Right things* are not possible always.
*Possible things* are not right always
Be True to your Heart, you will never go wrong. Have a Happy Morning and a productive day Stay safe.

*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
*╔═════≪•❈•≫═════╗*
👃🏽👃🏽👃🏽👃🏽👃🏽👃🏽👃🏽
*╚═════≪•❈•≫═════╝*

👃🏽நீங்கள் சம்பாதிப்பது, நலமுடன் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தான். மன அழுத்தத்தினால் உங்களை நீங்களே அழிப்பதற்கு அல்ல.

👃🏽உறவுகளிடம் சண்டை போட சாதாரண விஷயங்களே போதுமானது. உறவுகளிடம் அனுசரணையாக நடக்க சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.

👃🏽மகன் தந்தையின் கண்ணீரைப் பார்க்கக் கூடாது. பெற்ற பிள்ளையின் அவப் பெயரை தாய் கேட்கக் கூடாது. சகோதரர், உடன் பிறப்புக்களிடம் அந்தஸ்து காட்டக் கூடாது. தம்பதிகளுக்கு இடையே சந்தேகம் இருக்கக் கூடாது.

👃🏽சில நேரங்களில் அமைதியாக இருந்து விடுங்கள். ஏனென்றால் உங்கள் மனமும் இதயமும் சொல்வதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

👃🏽நீங்கள் வாழும் வாழ்க்கை முறையோடு, நீங்கள் ஒத்துப் போய் விட்டால், அந்த வாழ்வே தெய்வீகமானதாகும்.

👃கொடுத்த வாக்கை, காப்பாற்றுவதன் மூலம் நமக்கும், பிறர்க்கும் அதன்மூலம் யாவர்க்கும் நன்மை ஏற்படுமாயின் அது நேர்மை சார்ந்த வாழ்க்கை முறையாகும்.

*╔═════≪•❈•≫═════╗*
👃🏽👃🏽👃🏽👃🏽👃🏽👃🏽👃🏽
*╚═════≪•❈•≫═════╝*
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏

சனிக்கிழமை. 31.07.2021.

*அருள்மிகு*
*எட்டுக்குடி முருகன்*
*திருக்கோவில்*

எட்டுக்குடி,
நாகப்பட்டினம் மாவட்டம்.

ravi said…
நாகப்பட்டினம் அருகிலுள்ள பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் தெய்வத்தன்மை வாய்ந்த சிற்பி ஒருவன் இருந்தான். *"சரவணபவ"* என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஓதிய வண்ணம் இருந்த இவன் அழகிய ஆறுமுகம் கொண்ட வேலவன் சிலையை செய்தான். அப்போது ஆட்சியில் இருந்த பரந்த சோழ மன்னன் அச்சிலையின் அழகைப்பார்த்து ஆனந்தம் கொண்டான்.
ravi said…
இது போல் இன்னொரு சிலையை செய்யக்கூடாது என்பதற்காக அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான். அவன் வருத்தத்துடன் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வந்தான். .
ravi said…
கைவிரல் இல்லாத நிலையிலும் கடுமையான முயற்சி எடுத்து மற்றோரு சிலையை செய்தான். அதை அவ்வூரை ஆண்ட குறுநில மன்னன் முத்தரசன் பார்த்தான். அந்த சிலையிலிருந்து ஒளி வீசியது. வேலை நிறைவு பெற்றதும், சிலைக்கு உயிர் வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்க ஆரம்பித்தது. மன்னன் அந்நேரத்தில் வர அதை "எட்டிப்பிடி" என உத்தரவிட்டான்.
ravi said…
காவலர்கள் மயிலை பிடித்தனர். அதன் கால்களை சிறிதளவு உடைத்தனர். அதன் பின் மயில் சிலையாகி அங்கேயே நின்று கொண்டது. எட்டிப்பிடி என்ற வார்த்தை காலப்போக்கில் "எட்டிக்குடி" என மாறி தற்ப்போது "எட்டுக்குடி" ஆனது. அதுவே ஊரின் பெயராகவும் நிலைத்து விட்டது. இதே சிற்ப்பி மற்றொரு சிலையையும் வடித்தார் அதை எண்கண் என்ற தலத்திலும் வைத்தான். சிற்பி முதலில் வடித்த சிலை சிக்கலிலும். அடுத்தசிலை எட்டுக்குடியிலும், வைக்கப்பட்டது. இந்த மூன்றுமே உருவத்தில் ஒரே தோற்றம் கொண்டவை.

ravi said…
பார்க்கும் மனநிலைக்கு ஏற்ப தன் உருவத்தை மாற்றிக்கொண்டு காட்சி தருபவர். எட்டுக்குடி சுப்பிரமணியசுவாமி, குழந்தையாக நினைத்து பார்த்தால் குழந்தை வடிவிலும், முதியவராக நினைத்து பார்த்தால் வயோதிக வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞர் வடிவிலும் இவர் காட்சி தருவார்
ravi said…
*ஒரு தேசத்தை ஆண்டுவந்த மன்னன்*

ஸ்ரீகிருஷ்ணரை தரிசிக்க கோயிலுக்கு செல்லும் போதெல்லாம்..*

*தினமும் பூச்சரம் வாங்கி சென்று சமர்ப்பிப்பது வழக்கம்..*

அன்று அவ்வாறு சென்று பூ வாங்கும் பொழுது அனைத்து பூக்களும் விற்கப்பட்டு...

கடைசியாக ஒரு முழம் அளவுக்கு மட்டுமே வைத்திருந்தாள்
பூ விற்கும் முதிய பெண்மணி ...

அதை காசு கொடுத்து அந்த மன்னன் வாங்க முற்படும் பொழுது ...

ravi said…
அந்த ஊரிலேயே பெரிய செல்வந்தன் குறுக்கிட்டான்...

தனக்குத்தான் அந்த பூ வேண்டும் என்று கேட்டான்...

மன்னர் கொடுப்பதைவிட அதிகமான மேற்படி காசு கொடுப்பதாக கூறி அந்த பூவை தனக்கே கொடுக்குமாறு கேட்டான்...

மன்னருக்கும் அந்த செல்வந்தருக்கும் போட்டி ஏற்பட்டது...

மாறிமாறி இவர்கள் விலையை அதிகரித்துக் கொண்டே செல்ல...

கடைசியில் மன்னன் தனது ராஜ்யத்தையே ஈடாக வைத்தான்...

வேறு வழியில்லாமல் அந்த செல்வந்தர் சென்றுவிட....

தன் ராஜ்யத்தை ஈடாக கொடுத்து அந்த பூவை வாங்கி சென்று உள்ளே கிருஷ்ணருக்கு சாற்றினான்....

நெஞ்சார சாற்றிவிட்டு உளமாற ஸ்ரீ கிருஷ்ணரை வணங்கி விட்டு....புறப்பட்டான்..

இப்பொழுது ராஜ்யம் அனைத்தையும் இழந்து விட்டதால் ...

அங்கு இருந்த ஒரு சத்திரம்.. சாவடியில் . இரவாகிவிட்டதால்.. உண்டுவிட்டு..படுத்து... உறங்க துவங்கினார்...

ravi said…
அப்பொழுது அவரது கனவில் வந்த ஸ்ரீகிருஷ்ணர்

"என் தலையில் நீ சூட்டிய அந்த பூவை உடனடியாக எடுத்து விடு ....என்னால் பாரம்தாங்க முடியவில்லையப்பா''.... என்று கூறினார்...

மன்னனுக்கோ ஆச்சரியம்...!!

ஈரேழு பதினான்கு லோகங்களையும்... அண்டசராசரங்களையும்... தாங்குகின்ற அந்த பாரளந்த பரந்தாமனுக்கு ...

இந்த பூ ஒரு கனமா? என்று ஆச்சரியத்துடன்
கேட்டான் ...

ravi said…
அதற்கு ..

ஸ்ரீகிருஷ்ணர் ...

ஓ... பக்தனே.. என்னால் எத்தனை லோகங்களையும் தாங்க முடியும் ...ஆனால் உன் பக்தியின் கனத்தைத்தான் என்னால் தாங்க முடியவில்லை என்றாராம்..!!!

இந்த பிரபஞ்சத்தின் கனத்தை விட ...பக்தியின் கனம் அதிகம்!!!!

கிருஷ்ணபக்தி.... கிருஷ்ணப்ரேமை... அத்தனை ஒசத்தி...

*ஓம் நமோ நாராயணா...

சர்வம்* *கிருஷ்ணார்ப்பணம்*

அடியேன்🙏🏻#கிருஷ்ணனின்_சேவகன் #ஸ்ரீராமஜெயம் 🐘
Idpl Ramesh said…
ஆஹா..தங்கள் குறை தீர்ப்பான் கோவிந்தன்..🙏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 465*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

*5. மந்தஸ்மித சதகம்*

புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்

*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே

சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
5/39 👍👍👍💐💐💐
ravi said…
க்ஷூண்ணம் கேனசி தேவ
தீரமானஸா குத்ராபி நா நாஜனை
🙂🙂🙂

கர்ம க்ரந்தி நியந்த்ரி தை ரசூக்கமம்
காமாக்ஷி ஸாமா ந்யத🙂🙂🙂

முக்தைர் த்ரஷ்டு மசக்யமேவ
மனஸா மூடஸ்ய மே மௌக்திகம் 🙂🙂🙂

மார்கம் தர்சயது ப்ரதீப இவ தே மந்தஸ்மித ஸ்ரீரியம் 🙂🙂🙂
ravi said…
அம்மா நீ சிவ ஞானப் பிரதாயினீ , தக்ஷிணா மூர்த்தி ரூபிணீ , ஸனகாதி ஸமாராத்யா உன் புன் சிரிப்பு ஞானம் அள்ளி அள்ளி தரக்கூடியதன்றோ 🙂
ravi said…
*[104/108] – அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில்*🌷🌷🌷
ravi said…
சுதாமர் கோயில் என அழைக்கின்றனர்.

இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. 60 அழகிய சிற்பங்களுடன் கூடிய தூண்கள் இம்மாடிகளைத் தாங்குகின்றன.

இங்குள்ள சிற்பங்களே சுற்றுலாப் பயணிகளைக் கவர்கின்றன.

கீழே சன்னிதானமும், மேல்மாடியில் கோபுரமும் உள்ளன. இதன் உயரம் மட்டும் 172 அடி. கோயிலின் நடுவில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது.

இந்தக் கோயிலைச் சுற்றி இன்னும் பல சிறிய கோயில்கள் உள்ளன.

ஒவ்வொரு மாடியில் நின்றும் துவாரகையின் இயற்கை அழகை ரசிக்கலாம்.

துளசிக்கு சன்னதி இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.🌸🌸🌸
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
கும்பகர்ணனது மூக்கையும், காதையும் சுக்ரீவன் கடித்துத் துண்டித்து விட்டதைக் கண்டதும் அங்கே ஒரே ஆரவாரம்.

"வானரம் ஆர்த்தன; மழையும் ஆர்த்தன
தானமும் ஆர்த்தன; தவமும் ஆர்த்தன
மீன் நால் வேலையும் வெற்பும் ஆர்த்தன
வானவரோடு நின்று அறமும் ஆர்த்ததே".

வானரக் கூட்டத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை.

நம் அரசன் சுக்ரீவன் அந்த அரக்கனுடைய காதையும் மூக்கையும் கடித்து எடுத்து விட்டான் என்று ஆரவாரம் செய்தன.

மேகமும் கூட மகிழ்ந்து ஆரவாரம் செய்து மழையைப் பொழிந்தது.

தானமும், தவமும் கூட இந்த காட்சியைக் கண்டு ஆர்ப்பரித்தன;

நான்கு கடல்களும் மலைகளும்கூட அரவாரம் செய்தன.

தேவர்களோடு நின்ற தர்மதேவனும் ஆர்ப்பரித்தான்.🙌🙌🙌
ravi said…
*கேள்வி பதில் நேரம்*

*பதிவு 47* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .

*கேள்வி 74*
ravi said…
பட்டரே வாருங்கள் ... அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்

*பட்டர்* ... ரவி இன்று என்ன கேள்வி ...?

நேற்று நாச்சியார் திருமொழி இன்று ??

*நான்* ...

ஐயனே இன்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள் ..

இதில் 22வது வாக்கியம்

*தெய்வத்தைப்* *பெற்றேனோ*
*தேவகியாரைப் போலே*

உண்மையில் இங்கே யசோதை என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் அவள் தானே கண்ணனை அணு அணுவாய் ரசித்தவள் .. தாங்கள் தான் எனக்கு விளக்க வேண்டும் ...💐💐💐
ravi said…
*பட்டர்*

நீ தேவகி வசுதேவர் தம்பதிகள் செய்த நல்வினையை பற்றி அறிய வில்லை ...

சாக்க்ஷாத் நாராயணனே இந்த தம்பதிகளுக்கு வேறு வேறு பிறவியில் மகனாக அவதரித்துள்ளார் ..

யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் .?..

யசோதைக்கு இப்படி சொல்லலாம் ...

ராம அவதாரத்தில் கௌசல்யாவாக ,

கிருஷ்ண அவதாரத்தில் யசோதையாக ,

கலி யுகத்தில் மலையப்பனின் வளர்ப்பு தாயாக ....

ஆனால் தம்பதிகளாக அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லை ...

ravi said…
முந்தைய ஒரு பிறவியில் வசுதேவர், சுதபஸ் என்ற பிரஜாபதியாகவும், தேவகி, ப்ருக்னி என்ற பெயரில் அவருக்கு துணைவியாய் வாழ்ந்தாள் .. பெருமாள் அவர்களுக்கு பிரசனி கர்ப்பன் என்ற திருநாமத்தில் பிறந்தார் ..

ஆனால் அவர்கள் பெருமாள் தான் தங்கள் குழந்தை என்று உணரவில்லை ...

அடுத்த பிறவியில் அதிதியாகவும் காஸ்யபராகவும் இருந்தவர்களுக்கு வாமனராய் .. உபேந்திரனாய் பிறந்தார் ...

மூன்றாவது பிறவியில் கிருஷ்ணனாக ...

இறையே வந்திருக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்த பெருமாள் தோன்றிய விதம் மிகவும் அருமையானது ...
ravi said…
*நான்* ஐயனே கொஞ்சம் அதை விவரிக்க முடியுமா ?

*பட்டர்* .. கண்டிப்பாக
ravi said…
குழந்தையின் கைகளில் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஆகியவை இருந்தன.

மஞ்சள் பட்டு உடுத்தி, ஆபரணங்களும் அணிந்திருந்தான் சின்னக்கண்ணன்.

பிறந்த குழந்தைக்கு நான்கு கைகள், ஆடை, ஆபரணம்.

ravi said…
இதெப்படி சாத்தியம்? தன் வயிற்றில் பிறந்த மகன் சாட்சாத் பரமாத்மாவே என வசுதேவர் மகிழ்ச்சியில் மூழ்கிப் போனார்.

தேவகி வைத்த கண் வாங்காமல் திருமாலை ரசித்து... உஹும்... தரிசித்துக் கொண்டிருந்தாள்.

கடவுளை பெற்ற அந்த திருவயிறு குளிர்ந்து போயிருந்தது ,

ravi said…
சின்ன சின்ன பீதாம்பரம் ,

குட்டி குட்டி கமலக் கண்கள் ..

வண்டுகள் போல் அலை பாய ,

ஒரு கையில் தீபாவளி பட்டாசை போல் விஷ்ணு சக்கரம்

இன்னொரு கையில் குட்டி வெண் சங்கு ...

இன்னொரு கையில் குட்டி கமலம்

இன்னோரு கையில் குழந்தை வைத்திருக்கும் லாலி பாப் போல கதை ...

ravi said…
சின்ன வயிற்றில் இருந்து கிளம்பும் குட்டி கொடி

அதில் மலர்ந்த குட்டி தாமரை

அதில் ஒரு சின்ன குழந்தை தன்னை பிரம்மா என்று சொல்லிக்கொண்டது ...

மார்பில் குட்டி பாவாடையும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும்

மொட்டு விரிந்த மதுரை குண்டு மல்லியும் கொண்ட வளைக்கை ...

பெய்யும் கனகம் போல் பெருமாட்டி ...

இத்தனையும் சேர மதுர இதழ்கள் ஐஸ்க்ரீம் குச்சியை சப்புவதைப்போல புல்லாங்குழலை சப்பிக்கொண்டே சிரித்தது .... 🙂🙂🙂
ravi said…
தேவகி வசு தேவர் செய்த புண்ணியம் பல கோடி ..

தேவகி அங்கே பார்த்தது தன் குழந்தையை மட்டும் அல்ல , தன் காரூண்யம் மிக்க மாட்டுப்பெண்ணை

அது மட்டும் அல்ல பிரம்மா எனும் பேரப்பிள்ளை...

பொதுவாக நாம் நம் குழந்தைகள் கல்யாணத்தை பார்க்க 20 -25 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

பிறகு பேர பேத்திகளை பார்க்க இன்னும் 5 வருடம் ...

ஒரே வினாடியில் 30 வயது அவள் வாழ்க்கையில் கண்ணன் தரிசனம் கொடுத்து சேமித்து விட்டான் ...

அதனால் தான் திருக்கோளூர் பெண் பிள்ளை

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே என்றாள் ...

*நான்* ஐயனே இப்படி ஒரு விளக்கம் தங்களால் மட்டுமே தர முடியும் .

நான் தேவகி வசுதேவரைப்போல உங்களை பெற கோடி புண்ணியங்கள் செய்துள்ளேன் ..

பட்டர் சிரித்துக்கொண்டே பறந்து சென்றார் ..🦅🦅🦅
ravi said…
பறந்து போன பட்டர் எதையோ மறந்து விட்டதை போல் திரும்ப வந்தார் ...

ரவி சொல்ல மறந்து போனேன்

குழந்தை நாராயணன் குட்டி சக்கரம் வைத்திருக்கிறான் என்று சொன்னது தப்பு ...

கையில் காத்தாடி போன்ற சக்கரம்...

ஊதல் போல் வெண் சங்கு ,

கிலுகிலப்பைப்போல கதை ...

அவன் கிளுகிளுப்பை எல்லோருக்கும் தருபவன் அல்லவா ... இப்படி வந்தான் ...

மீண்டும் பறந்து சென்றார் ... வாயடைத்து ப் போனேன் 🙌🙌🙌🦅🦅🦅
ravi said…
🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
S G S R Ramani said…
வரிக்கு வரி என்னே வர்ணனை...

அழகு...

🙏🙏🙏🙏🙏🙏
Kousalya said…
அபாரம் பட்டரே....*தம் அற்புதம் பாலகம், அம்புஜக்ஷணம்,.......* தரிசித்தேன் அந்த தயாளனை🙏🙏🙏🌹🌹🌹
ravi said…
ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதி
12 இடம் கொண்ட கீர்த்தி மழிசைக்கு இறைவன் இணை அடிப்போது
அடங்கும் இதயத்து இராமானுசன் அம் பொற் பாதம் என்றும்
கடம்கொண்டு இறைஞ்சும் திருமுனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்டு ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வதுவே ..

ravi said…
பொருள்- இந்த உலகம் முழுவதையும் தன் புகழால் நிரப்பியவர் திருமழிசை ஆழ்வார். அவருடைய தாமரைப்பாதங்களை தன் நெஞ்சில் பதித்து வைத்தவர் ஸ்ரீராமனுஜமுனி. தாங்கள் மனிதப்பிறவி எடுத்ததே அந்த அழகுக்கு அழகுசெய்யும் உடையவரின் திருப்பாதங்களை சேர்வதற்குத்தான் என்ற கொள்கையோடு வாழ்கின்ற ஞானிகள் உள்ளனர். உலக விஷயங்களில் ஆர்வம் காட்டாமல் உடையவரின் மீது ஈடுபாடு கொண்டஅப்படிப்பட்ட ஞானியர்களையே விரும்பி நான் அன்பு செய்வேன்.
ravi said…
குறி்ப்புரை- திருமழிசை ஆழ்வாருக்காக கச்சிவரதன் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு அவருடன் போய்விட்டான். ஆழ்வாரின் சீடன் கணிகண்ணன். அவன் மீது கோபம் கொண்ட அரசன் ஊரை விட்டுப் போ என்று அவனைத் துரத்தினான். தன் ஆசார்யரிடம் இதைத் தெரிவித்தான் கணிகண்ணன். அப்படியா நானும் வருகிறேன் என்று சொன்ன ஆழ்வார், பெருமாளிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என்று சொல்லி கோயிலுக்குச் சென்று அவரிடம் சொல்ல,
கணிகண்ணன் போகின்றான்
ravi said…
காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா- துணிவுடைய
செந்நாப்புலவன்யான் போகின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்
என்றுபாடினார்.
பெருமாளும் நீ போனபிறகு நான் இங்கே என்ன செய்யப்போகிறேன் ? ஆகவே நானும் வருகிறன் என்றார்.
சொன்னவர் உடனே தன் பாம்புப்“படுக்கையை சுருட்டிக் கொண்டு புறப்பட்டார். இதனால் அவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.
இந்த விஷயத்தை மனதில் கொண்டு குமரகுருபரரும்,
பைந்தமிழின் பின்சென்ற பச்சைப்பசுங்கொண்டலே என்று போற்றுகிறார்.
இப்படிப்பட்ட திருமழிசை ஆழ்வார் இந்த உலகத்தின் பரந்த இடத்தை தனது புகழால் நிரப்பினார் என்பதில் சந்தேகம் என்ன ? இந்த ஆழ்வாருடைய திருவடிகளை எப்போதும் நெஞ்சில் வைத்து பூசித்தவர் ராமானுஜர்.
அந்த ராமானுஜரை ஆசார்யராக , தெய்வமாகவே எண்ணி பூசிப்பதே தன் பிறவியின் குறி்க்கோள் என்று வாழ்ந்தவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் வடுகநம்பி. இவருக்கு அரங்கத்து மணவாளன் கூட முக்கியம்இல்லை. ஸ்ரீராமானுஜரே முக்கியம். இதற்கு ஒரு சான்று பார்க்கலாம்.
ஒருநாள் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வீதிஉலா வந்தார். ராமானுஜர் உட்பட அனைவரும் சென்று சேவித்தனர். ஆனால் வடுகநம்பி மட்டும் சமையல் அறையிலேயே இருந்தார். ஏன் என்று உடையவர் கேட்டார், அதற்கு நான் அங்கே வந்து விட்டால் என் பெருமாளுக்கு யார் பால் காய்ச்சுவார்கள். அது பொங்கி வழிந்து வீணாகிவிடுமே என்றார் அவர்.
இதைத்தான் திருமுனிவர்க்கு அன்றி காதல் செய்யாத்
திடம் கொண்டு ஞானியர்க்கே அடியேன் அன்பு செய்வேன் என்று அமுதனார் அழுத்தமாகக் கூறிஇருக்கிறார். பெருமாளே தேடிவந்து தரிசனம் தந்தும்கூட வடுகநம்பி தனது ஆசார்ய காரியம் முக்கியம் என்று இருந்தார். இப்படிப்பட்ட ஞானியர்களின் திருவடிகளையே நாம் சிந்திக்கவேண்டும்.31-7-21
அடியேன்
வேணுசீனிவாசன்
S G S Ramani said…
இப்பதிவினை படிக்கும் ஒவ்வொரு நாளும் அபிராமி அன்னையின் அருட் கடாக்ஷ்சம் நம் நெஞ்சிலே நிறைகின்றது.

அபிராமி அன்னையே துணை...

🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
திருக்கடையூர் அபிராமி *110*🥇🥇🥇🥇🥇🥇🥇

*பாடல் 100* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
குழையைத் தழுவிய கொன்றையந்தார்
கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும்

கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொரு கண்ணும்

நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே🌞
ravi said…
*குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி -*

காதில் அணிந்துள்ள குழைகளைத் தொடும் படியாகத் தொடுக்கப்பட்டிருக்கும் கொன்றை மாலையை அணிந்து அந்த மாலையால் மணம் கமழும் கொங்கைகளைக் கொண்டுள்ள அன்னையே...

என்ன சொல்ல வருகிறார் ??

இங்கே அபிராமியை ஆண்டாளாக பார்க்கிறார் ...

சூடி கொடுத்த சுடர் கொடி போல

ஆனால் கொஞ்சம் மாறுதல் ...

கொன்றை மலர்களை சூடியவன் ஈசன் ..

அவன் அணிந்த மாலையை தானும் அணிந்து கொள்கிறாள்

அது மட்டும் அல்ல அணிந்திருந்த அவனையும் ஆற தழுவிக்கொள்கிறாள் ...

அந்த ஆலிங்கனம் அவள் மேனி முழுவதும் கொன்றை மலரின் நறுமணத்தை வீசுகிறது ..

சிவசக்தி ஐக்கியம் ... 🙌🙌🙌
ravi said…
*கழையைப் பொருத திருநெடுந்தோளும் -*

மூங்கிலுடன் போட்டியிடும் அழகிய நீண்ட திருத்தோள்களும்

ஆமாம் ஆண்களின் தோள்களைத் தானே வரணிப்போம் ..இங்கே பட்டர் ஏன் அபிராமியின் தோள்களை மூங்கிளுடன் ஒப்பிட்டு நீண்ட திருதோள்கள் என்கிறார் ?

அன்னை அபிராமி அண்ட சராசரங்களை தாங்குபவள் ... அவள் தோள்கள் அதனால் நீண்டும் திடமாகவும் இருக்க வேண்டும் .. எல்லோருடைய கவலையும் தாங்க வேண்டும் எல்லோருக்கும் தோள் கொடுக்க வேண்டும் . வெறும் மென்மையாய் இருந்தால் மட்டும் போதாது மூங்கில் போல நீண்டு இருக்க வேண்டும் . கோடி கோடி யானைகள் தாங்கும் தோளாக இருக்க வேண்டும் ... அம்பாளின் தோள்கள் அப்படி வலுவானவை 🙌🙌🙌
ravi said…
*கருப்பு வில்லும் -* திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும்

*விழையப் பொரு திறல் வேரியம் பாணமும்* -

கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும்
ravi said…
*கருப்பு வில்லும் -* திருக்கையில் ஏந்திய கரும்பு வில்லும்

*விழையப் பொரு திறல் வேரியம் பாணமும்* -

கலவிப் போரில் விழைவைக் கூட்டும் மணம் வீசும் மலர்ப்பாணங்களும்
ravi said…
*வெண் நகையும் -* வெண்மையான முத்துப்பல் புன்சிரிப்பும்

*உழையைப் பொரு கண்ணும்* -

மானுடன் போட்டியிடும் அழகிய திருக்கண்களும்

*நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே* - உன் அருளால் என் நெஞ்சில் எப்போதும் அப்போதே உதித்த செங்கதிர் போல் விளங்குகின்றன🌞🌞🌞🌞🌞.
ravi said…
இன்னும் ஆழமாக போவோம் ...

100வது பாடல் .. புல் நுனி மேய்வதை போல் மேயாமல் கடலின் அடியில் சென்று முத்துக்களை எடுப்போம் 🙌🙌🙌
ravi said…

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் (தமிழ் விளக்கத்துடன்) -

பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர், பெருங்கருணை கொண்டு லலிதா சஹஸ்ர-நாமத்தை நமக்கெல்லாம் விளக்கியருளினார்.
ravi said…
அகஸ்திய முனிவருக்கும் ஹயக்ரீவருக்கும் நடைபெரும் உரையாக, சம்பாஷணையாக சஹஸ்ர நாமம் திருவாக்கிலிருந்து வெளிப்பட்டது.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பரமசிவன் மன்மதனை உயிர்பித்த போது, கூடவே பண்டாசுரன் என்ற அசுரனும் தோன்றினான். ஈடு இணையற்ற சக்தி கொண்டவனாக, மூவுலகையும் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்து கொடுங்கோல் புரிந்து வந்தான். தேவர்கள் கடுந்தவம் புரிந்து அவனை அழிக்க வல்ல சர்வசக்தியான ஆதிபராசக்தியை துதித்து வழிபட்டனர். யக்ஞத்திலிருந்து ஜகத்தை ஆளும் சக்தியானவள், பேரழகு பொருந்திய லலிதா தேவியாக அவதரித்தாள்.

ravi said…
ஆதியில், லலிதையின் ஆணைக்கு இணங்க, வாக்தேவிகளால் அன்னையைப் போற்றி ஓதிப்பட்ட திருநாமங்களே பின்னர் பிரம்மாண்ட புராணத்தில் வியாசருக்கு ஹயக்ரீவரால் உபதேசிக்கப் பட்டது.
ravi said…
முதல் 84 ஸ்லோகங்கள் லலிதா தேவியின் அங்க வர்ணனையாகவும் இக்கதையின் ஸ்லோக வடிவாகவும் திகழ்கிறது. சஹஸ்ர (ஆயிரம்) நாமங்களை கொண்ட லலிதாம்பிகையின் நாமங்கள், 'ரஹஸ்ய நாமங்கள்' என்றும் வழங்கப்படுகிறது
ravi said…
இந்த நாமாக்களின் அர்த்தம் உணர்ந்து தியானிக்க முற்பட்டால், பல கேள்விகளுக்கு விடையாக திகழலாம் என்ற எண்ணத்தால், இந்த நூலில், நாமங்களை தனித்தனி வார்த்தையாக பதம்-பிரித்து பொருள் குறிப்பிட்டு, பின்னர் ஒவ்வொரு நாமமும் வரி-விளக்கமாக கொடுக்க முற்பட்டுள்ளது.
ravi said…
தியான ஸ்லோகங்கள்

ஸ்லோகம்-1

அன்னையின் கருணையும் அழகும் நிறைந்த வடிவத்தை முதலில் தியானித்து அவள் பெருமையை உணரத் துவங்கினால், உணர்வு பூர்வமாக ஈடுபடலாம். நான்கு ஸ்லோகங்கள் த்யான ஸ்லோகமாக சொல்லப்படுகிறது. முதலாவது ஸ்லோகம் வாக்தேவிகளால் அருளப்பட்டது.
ravi said…

சிந்தூராருண விக்ரஹாம்; த்ரி நயனாம்;

மாணிக்ய மௌலிஸ்புரத்; தாரா நாயக சேகராம்;

ஸ்மிதமுகீம்; ஆபீன வக்ஷோருஹாம்;

பாணிப்யாம் அளிபூர்ண ரத்ன சஷகம்;

ரக்தோத்பலம் பிப்ரதீம்; சௌம்யாம்;

ரத்ன கடஸ்த ரக்த சரணாம்;

த்யாயேத் பராம் அம்பிகாம்||

*****

ravi said…
சிந்தூராருண விக்ரஹாம் = குங்குமத்தின் நிறத்தையொத்த உதிக்கும் சூரியனை போன்ற உருவம்

திரி நயனாம் = முக்கண்களை உடையவள்

மாணிக்ய மௌலி-ஸ்புரத் = மாணிக்கத்தை சிரசில் தரித்தவள்

தாரா நாயக சேகராம் = நட்சத்திரங்களின் நாயகனான சந்திரனை உச்சியில் தரித்தவள்

ஸ்மிதமுகீம் = புன்னகை சிந்தும் முகமுடையாள்

ஆபீன வக்ஷோருஹாம் = திண்மையான மார்பகத்தை உடையவள்

பாணிப்யாம் = கைகளில்

அளிபூர்ண-ரத்ன-சஷகம் = தேன்-நிரம்பிய ரத்தின கிண்ணத்தை ஏந்தியிருக்கிறாள்

ரக்தோத் பலம் பிப்ரதீம் = சிவந்த மலர்களை ஏந்தியிருக்கிறாள்

சௌம்யாம் = அழகு பொருந்தியவள்

ரத்ன கடஸ்த = ரத்னக் குடத்தில்

ரக்த சரணாம் = தன் சிவந்த பாதத்தை இருத்தியிருக்கிறாள்.

த்யாயேத் பராம் அம்பிகாம் = இப்படிப்பட்ட அம்பிகையை நான் வணங்குகிறேன்.

ravi said…
பொருள்: குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் சூரியனைப் போன்ற திருமேனி கொண்டவளும், முக்கண்ணுடையவளும், சிவந்த மாணிக்கத்தை சிரசிலும், நட்சத்திரத்தின் தலைவனான சந்திரனை உச்சியில் தரித்தவளும், மந்தஹாச புன்னகை சிந்துபவளும், திண்மையான மார்பகத்தை உடையவளும், கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தையும், சிவந்த மலர்களையும் கொண்டவளும், சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளும், சௌந்தர்யம் பொருந்தியவளுமான அம்பிகையை தியானிக்கிறேன்.

(மூன்றாவது கண் என்பது ஞானத்தை குறிக்கும்)

ravi said…
தியான ஸ்லோகம்-2

இரண்டாம் தியான ஸ்லோகம் தத்தாத்ரேயரால் அம்பிகையை துதித்து பாடப்பட்டது.

அருணாம்;

கருணா தரங்க்கிதாக்ஷிம்;

த்ருத பாசாங்குச புஷ்பபாண சாபாம்;

அணிமாதிபிராவ்ருதாம்;

மயூகை-ரஹமித்யேவ விபாவையே பவானீம்||

*****

அருணாம் = சூரிய அருணோதயம்

கருணா = கருணை கொண்டவள்

தரங்கி = அலை

அக்ஷி = கண்கள்

த்ருத = சுமந்து, தரித்து அல்லது கொண்டிருப்பவள்

பாச = பாசம் என்னும் சூக்ஷ்ம பிடிப்பு-ஜீவனை பந்தப்படுத்தியிருப்பது

அங்குசம்= ஜீவனை தன்னிடத்தில், தன்-வசத்தில், கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளம்

புஷ்ப பாண = மலர்களாலான அம்பு

(பாண) சாபாம் = கரும்பு வில்

அணிமாதி = அஷ்ட சித்திகளின் வடிவ தேவதைகள்

அணிமாதிபிராவ்ருதாம் = அஷ்டமாசித்தி தேவதைகளால் சூழப்பட்டவள்

மயூகை = ஒளிக்கதிர்

அஹம் = நான்

இத்யேவ = இப்படிப்பட்ட

விபாவயே = மஹத்துவத்தை உடைய

பவானீம் = தேவி பவானீ

ravi said…
பொருள்: சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளும், அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளும், பாசம், அங்குசத்தை தரித்தவளும், புஷ்பத்தாலான அம்புகளையும் கரும்பு வில்லையும் சுமந்தவளும், அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளும், ஒளிக்கதிரென மிளிர்பவளும், பெரும் மஹத்துவத்தையுடையவளுமான பவானியை நான் தியானிக்கிறேன்.

ravi said…
தியான ஸ்லோகம்-3

(பாடியவர் பற்றிய தகவல்கள் இல்லை)

த்யாயேத் பத்மாசனஸ்தாம்;

விகசித வதனாம்; பத்மபத்ராயதாக்ஷீம்;

ஹேமாபாம்; பீதவஸ்த்ராம்;

கரகலித-லசத் ஹேம பத்மாம்; வராங்கீம்;

சர்வாலங்கார யுக்தாம்; சததம் அபயதாம்;

பக்த நம்ராம்; பவானீம்;

ஸ்ரீவித்யாம்; ஷாந்தமூர்த்திம்;

சகல சுரனுதாம்;

சர்வ சம்பத் ப்ரதாத்ரீம்;

****

பத்மாசனஸ்தாம் = தாமரையில் வீற்றிருப்பவள்

விகசித வதனாம் = ஒளிரும் வதனம்

பத்ம பத்ராய = தாமரை இதழ்கள்

அக்ஷீ = கண்கள்

ஹேமாபாம் = பொன்னென ஜொலிப்பவள் (ஹேம= தங்கம்)

பீத வஸ்த்ராம் = பிரகாசிக்கும் ஆடை தரித்தவள்

கரகலித = கைகளில்

லசத் = மின்னும்

ஹேம பத்மாம் = தங்கத் தாமரை

வராங்கீம் = வரபூஷணி - வரங்களின் வடிவமாகவே இருப்பவள்.

சர்வ = சகலவித

அலங்கார யுக்தாம் = ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவள்.

சததம் = எப்பொழுதும்

அபயதாம் = பாதுபாப்பு அளிப்பவள்

பக்த நம்ராம் = பக்தர்களுக்கு இரங்கி செவிசாய்ப்பவள்

ஸ்ரீ வித்யாம் = வித்யையின் ரூபிணி. ஞானத்தின் இருப்பிடம்

ஷாந்த மூர்த்திம் = அமைதியின் ரூபம்

சுர-(அ)னுதாம் = சுரர்கள் எனப்படும் தேவர்களால் (தெய்வங்கள்) வணங்கப்படுபவள்

சர்வ = அனைத்து விதமான

சம்பத் ப்ரதாத்ரீம் = செழிப்பும் வளமையும் தந்தருள்பவள்

த்யாயேத் பவானீம் = பவானியை தியானிக்கிறேன்.

(ரூபத் தியானம்)

ravi said…
பத்மத்தில் வீற்றிருப்பவளும், ஒளிரும் திங்களென முகமுடையாளும், தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டவளும், பொன்னென ஜொலிப்பவளும், பிராகாசிக்கும் பட்டாடை தரித்தவளும், கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருப்பவளும், சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளுமான பவானியை தியானிக்கிறென்.

(பவானியின் குணங்கள்)

ravi said…
எப்பொழுதும் பக்தர்களுக்கு அபய கரம் நீட்டுபவளும், அவர்கள் கோரிக்கைகளுக்கு இரங்கி செவிசாய்ப்பவளுமான பவானியை தியானிக்கிறேன்.

(அன்னையின் அம்சங்கள்)

ஞானமாகியவளே, வரங்களையே வடிவமாக்கிக் கொண்டவளே, அமைதியின் ரூபமானவளே, சுரர்கள் எனப்படும் ஏனைய தேவதைகளால் வணங்கப்படுபவளே, செழிப்பும் செல்வமும் வழங்குபவளே அன்னை பவானியே உன்னை நான் தியானிக்கிறேன்.

ravi said…
குறிப்புகள்: சம்பத்து என்பது இவ்வுலக பொருள்-சார்ந்த விஷயங்கள் மட்டுமே அல்ல. செழிப்பு செல்வம், மன அமைதி, அறிவு, பண்பு, ஞானம், வைராக்கியம், பக்தி போன்ற கண்ணுக்கு புலப்படாத சூக்ஷ்ம செல்வத்தையும் குறிக்கும்.

பீத வஸ்த்ரம் போன்ற பட்டாடை தரிப்பதும், பொன்னென ஒளிர்வதும், தங்கத்தாமரையை ஏந்தியிருப்பதும் பகட்டைக் குறிப்பிடுபவை அல்ல. அழுக்குகள் அற்ற பூரண பரமாத்மா எப்படி ஒளிருமோ, அப்படி ஒளிர்கிறாள். ஜோதி வடிவமாக இருக்கும் பரமாத்மா என்பதால் மிளிர்கிறாள்.

ravi said…
தியான ஸ்லோகம் 4

இந்த ஸ்லோகம் ஆதிசங்கரர் அம்பாளை துதித்து இயற்றியது.

ஸகுங்கும விலேபனாம்; அளிகசும்பி கஸ்தூரிகாம்;

ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ச-சர சாப பாசாங்குசாம்;

அசேஷ ஜன மோஹினீம்;

அருணா மால்ய பூஷாம்பராம்;

ஜபா குசுமபாசுராம்;

ஜபவிதௌ ஸ்மரேத் அம்பிகாம்;

*****

ravi said…
விலேபனாம் = பூசியிருப்பவள்

அளிக சும்பி = நெற்றியில் முத்தமிட்டிருக்கும்

கஸ்தூரிகாம் = கஸ்தூரி திலகம்

மந்த ஹசிதேக்ஷணாம் = மிருதுவாக புன்னைத்திருக்கிறாள்

சர சாப = அம்பு, வில்

பாசம் = ஜீவனை பந்தப்படுத்தியிருக்கும் பிணைப்பு

அங்குசம் = ஜீவர்களை தன் கட்டுக்குள் வைத்திருப்பதற்கான அடையாளச் சின்னம்

அசேஷ = எல்லாமும், எல்லோரும், அனைத்தும்

ஜன மோஹினீம் = ஜனங்களால் மோஹிக்கப்படுபவள்

அருண மால்ய = செந்தூர மாலை

பூஷாம்பராம் = அணிசெய்யும் அலங்காரங்களை உடுத்தியிருக்கிறாள்

ஜபா குசும = செம்பருத்தி மலர்

பாசுராம் = மின்னுதல்

ஜப விதௌ = ஜபத்தின் பொழுது (அதன் விதிகளின் படி)

ஸ்மரேத் = ஸ்மரிக்கிறேன் / தியானிக்கிறேன்

ravi said…
குங்குமத்தை பூசியிருப்பவளும், நெற்றியில் கஸ்தூரி திலகம் கொஞ்சத் திகழ்பவளும், மென்மையான புன்னகை சிந்துபவளும், அம்பு-வில்-பாசாங்குசம் ஏந்தியவளும், எல்லா ஜீவனையும் தன்னிடத்தில் மோஹத்திருக்கச் செய்பவளும், சிகப்பு மாலை, செம்பருத்தி மலர் சூடி, அழகு அணிசெய்யும் அலங்காரத்துடன் ஜொலிப்பவளுமான அம்பிகையை ஜபத்தின் பொழுது தியானிக்கிறேன்.

ravi said…
லலிதா சஹஸ்ர நாம ஸ்தோத்திரம்

ஓம்

ஸ்ரீ மாதுரவதார:

(1 – 12)

ஸ்ரீ-மாதா;

ஸ்ரீமஹாராஜ்நீ;

ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி;

சிதக்னி-குண்ட சம்பூதா;

தேவகார்ய சமுத்யதா;

உத்யத்பானு சஹஸ்ராபா ;

சதுர்பாஹு சமன்விதா;

ராகஸ்வரூப பாஷாட்யா ;

க்ரோதாகாரங்க்குசோஜ்வலா;

மனோரூபேக்ஷு கோதண்டா;

பஞ்சதன்மாத்ர சாயகா;

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா;

ஸ்ரீ= பெயருக்கு முன் மரியாதை நிமித்தமாக சேர்க்கப்படுவது

மாதா = அன்னை.

1ஸ்ரீ மாதா=தாயாகியவள். உலக சேதன அசேதன தோற்றத்திற்கெல்லாம் ஆதாரமான அன்னை.

மஹா = பெரிய – அளப்பரிய

ராஜ்ஞீ = அரசி

ravi said…
2ஸ்ரீ மஹாராஜ்ஞீ=பிரபஞ்சம் என்னும் ராஜ்ஜியத்தை ஆளுபவள்.. தோற்றுவித்த அனைத்தையும் ஆளுபவள்.

ஸ்ரீமத் = மதிப்பிற்குகந்த

சிம்ஹ = சிம்மம்

ஆசன = இருக்கை - பீடம்

ஈஸ்வரி = இறைவி

ravi said…
3ஸ்ரீமத் சிம்ஹாசனேஷ்வரி=சிம்ம வாஹினி. சிம்மத்தை ஆசனமாக கொண்டு வீற்றிருக்கும் மஹாதேவி.

சித் = சித் என்ற சேதனம் (அறிவு-ஆன்மா)

அக்னிகுண்ட = அக்னிகுண்டம்

சம்பூதா = தோன்றுதல்

4சிதக்னி-குண்ட சம்பூதா= 'சித்' என்னும் அக்னி குண்டத்திலிருந்து வேளிப்பட்டவள். சுயம்புவாக தோன்றியவள். 'சித்' என்பது சேதன்மாகிய ஆன்மாவை குறிக்கும்.

தேவ = தேவர்கள்

கார்ய = செயல்

சமுத்யதா = வழங்குதல்-ஈடுபடுதல்

ravi said…
5தேவகார்ய சமுத்யதா=தேவர்களுக்கு உதவுபவள். தெய்வ செயல்களுக்கு உதவுபவள் என்றும் அர்த்தம் கொள்ளலாம். தர்மத்தின் அடிப்படையில் அமைந்த, நேர்மையான, நீதிக்குட்பட்ட காரியங்களுக்கு துணை நிற்பவள்.

உத்யத் பானு = உதய சூரியன்

சஹஸ்ர = ஆயிரம்

ஆபா = பிரகாசம்

6உத்யத்பானு சஹஸ்ராபா=ஆயிரம் உதய சூரியனின் பிரகாசத்துடன் பிரகாசிப்பவள்

சமன்விதா = இருப்பவள் / உடையவள்

பாஹு = கைகள்

சதுர் = நான்கு

ravi said…
7சதுர் பாஹு சமன்விதா=நான்கு கைகளை உடையவள்

ராக ஸ்வரூபா = ராகம் என்றால் ஆசைகள், அபிலாஷைகள்

பாஷாட்யா = பாசம் என்னும் கயிறு

8ராக ஸ்வரூப பாஷாட்யா=ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குபவள் *

ravi said…
ராகமாகிய ஆசைகளே பிறப்புக்குக் காரணம். அதனை கயிறாக கொண்டு பிரபஞ்சத்தை அவரவர் வினைப்படி தோற்றுவிக்கிறாள் என்பது புரிதல். மற்றொரு பார்வையில், கருணையின் காரணமாக, அன்னையானவள், ஆசைகளின் வேரை அறுத்து ‘வீடு-பேறு’ என்னும் முக்திக்கு வழி செய்பவள் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது.

க்ரோதாகார = ஆக்ரோஷம், கோபம் கோண்டு

அங்குச = அங்குசம் என்ற ஆயுதத்தை (அம்பு) க்ரோதத்தின் வெளிப்பாடாக சுமந்திருக்கிறாள்

உஜ்வலா = பிரகாசிப்பவள்

9க்ரோதாகார-அங்குசோஜ்வலா=க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள் *

சினத்தின் வெளிப்பாடு, ஜீவராசிகள் மீது அன்னை கொண்டுள்ள ஆளுமையின் அடையாளமாகவோ அல்லது அதர்மத்தை அழிக்க ஏற்றுள்ள உக்கிர ரூபமாகவும் பொருள் சொல்லப்படுகிறது.

மனோரூப = மனத்தின் வடிவாக

இக்ஷு

TV Ganesh said…
கண்ணனோ
கம்சனோ
அனைத்துமே
அவன்
அம்சம்

வம்சம் தழைப்பதும் அவனால்
துவம்சம் ஆவதும் அவனால்

பக்தைகளில் பாதுகையாய் கூட பாரம் காப்பான் பரந்தாமன்

உண்மையான பக்தி இருந்தால்

தேவகியே
யசோதையோ
கோதையோ
அவனுக்கு அன்னைதான்

எனச் சொன்ன
கவிக் கண்ணனுக்கு

நன்றி

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை