Posts

Showing posts from August, 2021

அபிராமி அந்தாதி - பாடல் 46 - யானுன்னை வாழ்த்துவனே !

Image
                           பச்சைப்புடவைக்காரி -488 அபிராமி அந்தாதி பாடல் 46 மிகவும் அருமையான பாடல்.. இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை . எல்லா பாடல்களும் முத்துக்கள் தான் ..  ஆதியும் அந்தமும் இல்லாத இறைவியை அந்தாதி எனும் அழகிய தமிழில் அடக்கி விட்டார் நம் அபிராமி பட்டர் .  பாடலுக்குள் போவதற்கு முன் ஒரு சந்தேகம் வந்தது ..  சரபோஜி மன்னர் என்ன இன்றைய திதி என்று சுப்பரமணியனிடம் கேட்கும் போது தன் நிலை மறந்திருந்த அவர் அன்னையின் வட்ட ஒளியையும் ஒலியையும் ஒன்று சேர்த்து இன்று பௌர்ணமி என்றார் ...  அன்னையின் முகம் என்றுமே பௌர்ணமி தான் ..  அப்படியிருக்க சரபோஜி மன்னர் வேறு எந்த நாளிலும் கேட்டிருந்தால் கூட பட்டர் இன்று பௌர்ணமி என்று தானே சொல்லியிருப்பார் ? இருக்க முடியாது என்று பதில் ஒன்று சத்தமாக வந்தது .. திரும்பினேன் .. அபிராமி பட்டரே நின்றிருந்தார் .. சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்  ரவி .. அம்பாளை 16 திதி தேவதைகள் ஒருவர் பின் ஒருவர் தினமும் சென்னி குனிந்து பூஜை செய்கிறார்கள் ..  நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோயில் போயிருக்கிறாயா ?  அங்கே அம்மனை அடைய 16 படிக்கட்டுகள் இருக்கி

அபிராமி அந்தாதி - பாடல் 45 - பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே !

Image
                        பச்சைப்புடவைக்காரி- 487 அபிராமி அந்தாதி  பாடல் 45 அருமையான பாடல் ...  இப்படி இவர்கள்  இருந்தார்களே அவர்களையும் நீ பார்த்துக்கொண்டு அரவணைத்துக்கொண்டாயே ... அவர்களை பார்த்து நான் அதே போல் இருந்தால் அது நான் செய்த தவறாகுமா இல்லை தவப்பயனாகுமா ?   எது எப்படி ஆனாலும் நான் உன் பிள்ளை ..  முன்னம் தவறு செய்பவர்களைப் போல நானும் ஒருவேளை என்னையும் அறியாமல் நடந்து கொண்டால் என்னை வெறுக்காமல் ஏற்றுக்கொள் தாயே !! 💐💐💐 இங்கே அவர் சொல்ல வருவது அன்னையை வணங்காமல் அவள் பெருமையை உணராமல் அவள் பாதங்களை பற்றிக்கொள்ளாமல் தன் இச்சைபோல வாழ்ந்து ஞானிகளாக மாறியவர்களும் இருக்கிறார்களா தாயே என்று ஒரு கேள்வியை அபிராமியின் முன் வைக்கிறார் பட்டர் ..  அப்படி இருந்தால் அவர்களை மன்னித்து மதி வானவர்கள் தரும் செல்வத்தையும் அழியா புகழையும் வீடும் அவர்களுக்கு தந்தாயே ..  நானும் அப்படி இருந்தால் என்னை வெறுக்காமல் ஏற்றுக்கொள் என்கிறார் .. 45. உலகோர் பழியிலிருந்து விடுபட தொண்டு செய்யாது  நின் பாதம் தொழாது,  துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ? இலரோ?  அப்பரிசு அடியேன் கண்டு செய்தால்  அது கைதவமோ? அன்றிச்

அபிராமி அந்தாதி - பாடல் 44 -எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்-

Image
                           பச்சைப்புடவைக்காரி -486 அபிராமி அந்தாதி  பாடல் 44 44. பிரிவுணர்ச்சி அகல தவளே!  இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;  ஆகையினால் இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம் துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.🦚🦚🦚🙏🙏🙏 மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல் .  உங்களுக்கு பிடிக்கும் ஏதாவது ஒரு கடவுளை வணங்குங்கள் ...  இந்த தெய்வம் உசத்தி அந்த தெய்வம்  கருணை அதிகம் என்றே மாத்திக்கொண்டே இருக்க கூடாது .  இங்கே அபிராமி ஒருத்தியே போதும் அவள் மிகவும் உயர்ந்தவள் ..  மற்ற சமயங்களும் தெய்வங்களும் எனக்கு வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறார் பட்டர் .  கடைசியில் அபிராமியும் அவரை கை விடவில்லை 🥇🥇🥇 தவளே ! தவளே என்றால் தவம் செய்தவள் என்று அர்த்தம் ...  மாங்காடு,  மயிலை , காஞ்சி அன்னை கடும் தவம் செய்த சில இடங்கள் .  மாதவன்  என்பது ஆண் பால் ... மாதவள் என்பது பெண் பால் ... 🦚🦚🦚 தவளே!  இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் எங்கள் சங்கரனார் என்று மிகவும் உரிமையுடன் ஈசனை அழைக்கிறார் ..  அவன் இல்லத்து அரசி ...  மங்கலமானவள் ... தீர்க்க சும

அபிராமி அந்தாதி- பாடல் 43 (2) - இறைவர் செம்பாகத்து இருந்தவளே !-

Image
                           பச்சைப்புடவைக்காரி -485 அபிராமி அந்தாதி  பாடல் 43 (2) 43. தீமைகள் ஒழிய பரிபுரச் சீறடி!  பாசாங் குசை! பஞ்ச பாணி!  இன்சொல் திரிபுர சுந்தரி  சிந்துர மேனியள்  தீமைநெஞ்சில் பரிபுர வஞ்சரை  அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.🥇🥇🥇   பரிபுரச் சீறடி! பெண்கள் கால்களில் அந்த காலங்களில்  சூடிக்கொள்ளும் ஒரு அணிகலன் * பரிபூரம் * ...  கொலுசு , தண்டை , சிலம்பு போன்றவைகளையும் முன்பு  பெண்கள் அணிந்து கொண்டார்கள் ..  அழகான , சிறப்பான பாதங்களில் அபிராமி பரிபூரம் எனும் அணிகலனை அணிந்துள்ளாள் .  பரிபூரம் அணிவதினால் அவள் பரிபூர்ணனை என்றும் அழைக்கப் படுகிறாள் 🥇🥇🥇 பரிபுரச் சீறடி!  பாசாங் குசை! பஞ்ச பாணி! எமனும் காமனும் தீவிர வாதிகள் .. அம்பாளை சரணடைந்த பின் அவர்களின் ஆயுதங்களை அம்பாளிடம் ஓப்படைத்து விட்டனர் . இன்னொருவர் கொடுத்த மலர் செண்டை நம் கையில் வைத்திருப்பதைப்போல அவளும் அந்த ஆயதங்களை கையில் வைத்துள்ளாள்.. அவள் விலை கொடுத்து வாங்கியவை அல்ல இவைகள் ..  பாசம் , அங்குசம் , கரும்பு எனும் வில் , மலர்கனைகள் ..சூலம்   மன்மதன் இனி எனக்கு வாகனம் வே