அபிராமி அந்தாதி- பாடல் 43 (2) - இறைவர் செம்பாகத்து இருந்தவளே !-

 

                    பச்சைப்புடவைக்காரி -485

அபிராமி அந்தாதி 

பாடல் 43 (2)

43. தீமைகள் ஒழிய


பரிபுரச் சீறடி! 

பாசாங் குசை! பஞ்ச பாணி! 

இன்சொல்

திரிபுர சுந்தரி 

சிந்துர மேனியள் 

தீமைநெஞ்சில்

பரிபுர வஞ்சரை 

அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.🥇🥇🥇


 பரிபுரச் சீறடி!

பெண்கள் கால்களில் அந்த காலங்களில்  சூடிக்கொள்ளும் ஒரு அணிகலன் *பரிபூரம்* ... 

கொலுசு , தண்டை , சிலம்பு போன்றவைகளையும் முன்பு  பெண்கள் அணிந்து கொண்டார்கள் .. 

அழகான , சிறப்பான பாதங்களில் அபிராமி பரிபூரம் எனும் அணிகலனை அணிந்துள்ளாள் . 

பரிபூரம் அணிவதினால் அவள் பரிபூர்ணனை என்றும் அழைக்கப் படுகிறாள் 🥇🥇🥇


பரிபுரச் சீறடி! 

பாசாங் குசை! பஞ்ச பாணி!

எமனும் காமனும் தீவிர வாதிகள் .. அம்பாளை சரணடைந்த பின் அவர்களின் ஆயுதங்களை அம்பாளிடம் ஓப்படைத்து விட்டனர் . இன்னொருவர் கொடுத்த மலர் செண்டை நம் கையில் வைத்திருப்பதைப்போல அவளும் அந்த ஆயதங்களை கையில் வைத்துள்ளாள்.. அவள் விலை கொடுத்து வாங்கியவை அல்ல இவைகள் .. 

பாசம் , அங்குசம் , கரும்பு எனும் வில் , மலர்கனைகள் ..சூலம்  

மன்மதன் இனி எனக்கு வாகனம் வேண்டாம் என்று அம்பாளிடம் ஒப்படைத்த கிளி 🦜👏👏👏


பரிபுரச் சீறடி! 

பாசாங் குசை! பஞ்ச பாணி! 

இன்சொல் திரிபுர சுந்தரி

அவள் வாயிலிருந்து வரும் சொற்கள் பண் இசைக்கும் கருவிகளைப்போல இருக்கும் . சொற் பரிமள யாமல பசுங்கிளி அவள் .. கலை வாணியின் வீணை கச்சபியை மூடச் செய்தவள் .. *யாழினை பழிக்கும் அம்பிகை* என்றே ஒரு திருநாமம் உண்டு அவளுக்கு 🙌🙌🙌


பரிபுரச் சீறடி! 

பாசாங் குசை! பஞ்ச பாணி! 

இன்சொல்

திரிபுர சுந்தரி 

சிந்துர மேனியள்

அவள் சிவந்த நிறம் கொண்டவள் என்று முதல் பாடலில் பார்த்தோம் ..

கோடி செண்பக பூக்களை அரைத்து அதில்  அண்டா ஆயிரம் கொண்ட குங்கமப்பூவை குழைத்து 

சுகந்தம் , பரிமளம் கோடி கசக்கி பிழிந்து ஒரு குழம்பாக்கினால் வரும் சிவப்பு அவள் மேனி 🦚🦚🦚


பரிபுரச் சீறடி! 

பாசாங் குசை! பஞ்ச பாணி! 

இன்சொல்

திரிபுர சுந்தரி 

சிந்துர மேனியள் 

தீமைநெஞ்சில் பரிபுர வஞ்சரை

நீங்கள் தீமைகள் செய்யாதவர்களாக இருக்கலாம் 

ஆனால் மனதில் இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைக்க தொடங்கினாலேயே உங்களுக்கு அசுரத் தன்மை வந்து விடும் . 

எல்லா அசுரர்களும் தவம் கோடி செய்து கோடி தவங்கள் பெற்று அவைகளை சரியான வழியில் உபயோகப் படுத்தாமல் அழிந்து போனார்கள் ... 

அப்படிப்பட்ட கெட்ட எண்ணங்கள் நம் மனதில் தோன்றினால் அம்பாள் என்ன செய்வாள் தெரியுமா ? 👌👌👌


பரிபுரச் சீறடி! 

பாசாங் குசை! பஞ்ச பாணி! 

இன்சொல்

திரிபுர சுந்தரி 

சிந்துர மேனியள் 

தீமைநெஞ்சில்

பரிபுர வஞ்சரை 

அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை*

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.🥇🥇🥇

திரிபுரத்தை எரித்த தீ வண்ணனின் சிவந்த பாகத்தில் பாதியாய் இருப்பவள் அந்த கெட்ட எண்ணங்களை திரிபுர சுந்தரியாய் வந்து எரித்து விடுவாள் .. 

நம் மீது அவ்வளவு கருணை பாசம் ... 

இந்த குழந்தை ஒரு அசுரனாக ஆகி விடக்கூடாதே என்பதில் 🥇🥇🥇👏👏👏



சுருக்கம்

நெஞ்சில் தீய எண்ணங்களைக் கொண்டு தேவர்களு க்குத் தீமை செய்ய எண்ணித் திரிபுரத்தில் உள்ள அசுரர்களை அச்சுறுத்த எண்ணி, வளைத்த மேருமலையாகிய வில்லை யேந்திய திருக்கரத் தையும், நெருப்பைப் போன்று சிவந்த திரு மேனியையுங் கொண்ட ஈசனின் இடப்பாகத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அபிராமி 

சிலம்பை அணிந்த சிறிய திருவடிகளையும், பாசாங்குசத்தையும் உடையவள். 

ஐந்து மலர்ப்பாணங்களைக் கையில் ஏந்தியவள். 

இனிய வார்த்தைகளையுடைய திரிபுர சுந்தரி. 

சிந்தூரம் போலச் சிவந்த திரு மேனியையுடையவள்.🙌🙌🙌

இறைவர் செம்பாகத்து இருந்தவளே என்று இறந்த காலத்தில் கூறியது காலம் காலமாக அவள் இறைவரின் செம்பாகத்தில் இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக - 

மதுரையில் பிறந்த நாள் முதல் வாழ்ந்தவன் நான் என்று மதுரையில் தற்போதும் வாழ்கின்றவர் சொன்னால் அது அவர் என்றைக்கும் மதுரையில் வாழ்ந்தவர்; இப்போதும் வாழ்கின்றவர் என்ற பொருளை வழங்குவதைப் போல.

அருஞ்சொற்பொருள்:

பரிபுரம்: சிலம்பு
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு



செம்பாகம் என்பதற்கு சரிபாதி என்றொரு பொருளும் இலக்கியத்தில் பயின்று வரும். 

இடப்பக்கமோ வலப்பக்கமோ இரண்டுமே உடலின் பாகங்கள் தானே. அதில் ஏற்றத் தாழ்வு ஏன்? நம் ஊர் சாரணர்கள் இடது கையால் தானே கை குலுக்குவார்கள்? அதற்கு அவர்கள் சொன்ன விளக்கம் இதயம் இடப்பக்கத்தில் இருப்பதால் என்பது. :-)

அம்மை எந்தப் பக்கம் இருக்கிறாளோ அதுவே ஐயனின் செம்பாகம் என்றும் சொல்லலாம். :-)

எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும். 

வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? 

அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது. 

 👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐💐

எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.

இறைவர் செம்பாகத்து இருந்தவளே 

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

Comments

ravi said…
1940- Sreekanth.
அது காலம் 1911 ஜீன் 14.

இரண்டு நாளாக தொடர்ந்து அடைமழை.

பாண்டிசேரியில் குறுகிய சந்திலோர் வீடு... இரவு 7 மணி.

வாசல் ‎திண்ணையில் மாடத்தில் சின்னதாய் எரியும் அகல்விளக்கு. அடிக்கும் காற்றில்.., 'நான் அணைந்து விடட்டுமா..? வேண்டாமா..?' என போராடிக்கொண்டிருந்தது.

ravi said…
அதன் மங்கலான வெளிச்சம் ஒரு அடி தூரம் கூட தெரியாத நிலை.

*

வாசலிலே மழையில் நனைந்தபடி பஞ்சகட்ச வேட்டி கட்டி, மேல் துண்டு போர்த்தி கையில் ஒரு துணிப்பையுடன் வெடவெட வென்று குடுமி வைத்த உருவம். கழுத்தில் ருத்ராஷ்ஷம்.

"ஆத்துள யாராவது இருக்கேளா...?" மிகபலஹீன குரல்.

வாசல் ‎திண்ணையில் அமர்ந்திருந்த நீலகண்ட ஐயர், "யாரு வாசல்ல... சித்த முன்னால வாங்கோ... யாருன்னு இருட்டுல தெரியலையே...! மழைல நனையாதேள்! முதல்ல உள்ள வாங்கோ...'' என அழைக்க,

ravi said…
தயங்கி தயங்கி வந்தவர், ''நா...ன்.... என்...பேரு ரகுபதி ஐயர்....''

''அதெல்லாம் இருக்கட்டும்... முதல்ல திண்ணையில சாரல் படாம உட்காருங்கோ, நான் போய் தலை துவட்ட துணியெடுத்துண்டூ வரேன்'' என்று வேகமாக எழுந்த கிருஷ்ணயரை தடுத்து,

'
ravi said…
'அதெல்லாம் வேண்டாம். நான் செங்கோட்டையிலேர்ந்து வரேன்... என் பேர் ரகுபதி ஐயர். நான் வாஞ்சிநாதனனோட தோப்பனார்... அவனை பார்கனம். அவன் இந்த ஆத்துல தான் இருக்கானாம்.... ஆமாம்.. இது வரகூர் நீலகண்டன் ஆகம் தானே...'' என பெரியவர் தயக்கதோடு கேட்க,

ravi said…
திண்ணையிலே இருந்த நீலகண்ட ஐயர் அவசர அவசரமாக எழுந்து, ''வாங்க... வாங்க... உள்ள ஊஞ்சல்ல உட்காருங்க....'' என சொல்லிவிட்டு,

ரயில்வண்டி போல் நீளமாக இருந்த வீட்டில், ''அடே...ய்... வாஞ்ஞி... வாஞ்சி...'' என கத்தி கொண்டே ஓட்டமும் நடயுமாக வீட்டுள்ளே மித்தம் கடந்து ஓட....

*

சிறிது நேரத்தில்,

கஞ்சலான உடம்பு... மா நிறம்... பஞ்சகட்ச வேட்டி... உள்ளடங்கின கண்கள்... கத்தையா குடுமி முடிஞ்சு பின்னால தொங்க, காதுல சின்ன கடுக்கன், தூக்கின புருவம், சற்றே புடைத்த கூர் நாசி... கண்ணுல அபார ஞானத்தோட கோவம்...

ravi said…
அந்த வாஞ்ஞி என்கின்ற வாஞ்சி நாத ஐயர், M.A., வயது 32. காட்டிலாக்கா அதிகாரி... கல்யாணமாகி சரியா 1 வருடம் மூணு மாதம்.

மூணுமாசமாச்சு வீட்டை விட்டு வந்து....

*

நிலைபடி தாண்டி கூடத்துல வாஞ்சி வந்து நிக்க,

"ஓ.... நீயா. நீ எதுக்குப்பா இங்க வந்த...?'' என இடைநிறுதாமல் கேட்க....

அந்த தகப்பன் மெதுவாக எழுந்து, வாயில துண்டு பொத்திகிட்டு குலுங்கி குலுங்கி அழ...

''ஏன்பா? ஏன் அழற? அழாம விஷயத்தை சொல்லு..... அது தான் எல்லாத்துக்கும் தான் இந்த ஜனங்க அழுகை தான் தீர்வுன்னு நினைச்சின்டிருகேளே...
நீயும் ஏன் அழறே... அழாம சொல்லி தொலை....!''

''வா...ஞ்......ஞி...... குழந்தை செத்து போயிடுத்துடா... குழந்தை நம்மவிட்டு போயிடுத்து... ஆத்துக்கு வாடா... தகப்பனா நீ தான்டா கார்யம் பன்னனும்"

சொல்லிட்டு குலுங்கி குலுங்கி அழ,

ravi said…
முகத்தில் எந்த உணர்சியும் இல்லாம அப்பாவை வெறிச்சு பார்த்துவிட்டு, ஏதோ தீர்மானித்தவனாய் ஆழ்ந்த உஷ்ண பெருமூச்சுடன்,

"அ...ப்பா... ஈமசட்டங்கை நீயே செஞ்சுடு,

எனக்கு செய்ய வேண்டிய தேச கார்யம் பாக்கி நிறைய இருக்கு,
வா.வே.சு.ஐயர் கல்கத்தாலேர்ந்து வந்துருக்கார்.
கூடவே பெரியதேசபக்தாள் எல்லாம் வந்திருக்கா!
இன்னும் நிறைய பேர் வரபோறா!
அறிய காரியம் நடக்கபோகிறது!
தேசத்தை பிடிச்ச பீடை ஒழியபோறது!

நீயே எல்லாத்தையும் பார்த்துகோ...
அப்பப்போ வந்து தொந்தரவு பன்னாதே.
இந்தா... இந்த காசை வெச்சுக்கோ''

என அவர் பதிலுக்கு கூட எதிர்பார்காமல் கையில் சில நோட்டுகளை தினித்துவிட்டு, விருவிரு என மறுபடி வீட்டிகுள் விரைந்த செங்கோட்டை வீரவாஞ்சி....

ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

அந்தக் காட்டிலுள்ள ஒரு மலைக்குகையில் ஜாம்பவான் வாஸம் பண்ணிக் கொண்டிருந்தார். ராமாவதாரத்தின் போது ராவண யுத்தத்தில வானர ஸேனையோடுகூட ராமருக்கு ஸஹாயமாயிருந்த கரடித் தலைவரான அதே ஜாம்பவான்தான்.
ravi said…
கடைசியில் ராமர் ஸரயுவில் தம் சரீரத்தை விட்டு வைகுண்டத்துக்கு ஆரோஹணம் செய்தபோது, அத்தனை பேரையும் தம்மோடு பரமபதத்துக்கு அழைத்துக்கொண்ட போனாரென்றாலும் ஆஞ்ஜநேயர், ஜாம்பவான் ஆகிய இரண்டு பேரை மட்டும் விட்டுவிட்டுப் போய்விட்டார்.
ravi said…
ராம ஸ்மரணம் மாத்திரம் ஒருவனுக்கு ஸதாவும் இருந்து விட்டால் அவனுக்கு இந்த பாபமயமான, துக்கமயமான பூலோகமே பரமபதமாகத் தானிருக்கும் என்று ரூபித்துக் காட்டக்கூடிய யோக்யதை இவர்களுக்கு இருந்தது.
ravi said…
ஆகையால், ‘இந்த உண்மையை உலகத்துக்குக் காட்டுவதற்காக இவர்கள் இங்கேயே சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டிருக்கட்டும்’ என்று நினைத்தார். அதனால் அவர்களை பூலோகத்திலேயே இருக்கும்படியாக ஆக்ஞாபித்து விட்டுப் போய்விட்டார்.
ravi said…
இதே மாதிரி விபீஷணனையும் லங்கையில் சிரஞ்சீவியாக இருந்து கொண்டருக்கும்படிப் பண்ணிவிட்டார்.
ravi said…
மநுஷ்ய ஜாதியை ரொம்பவும் உயர்வாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் ராமசந்த்ரமூர்த்தி மநுஷ்ய ஜாதியைச் சேர்ந்த எவருக்கும் இப்படிச் சிரஞ்ஜீவித்வம் வஹிக்கும்படியான யோக்யதாம்சம் (யோகயதாம்சம் என்றால் வேறென்ன? ஸதா ஸர்வதா அவரையே ஸ்மரித்துக் கொண்டிருக்கும் த்ருட பக்திதான். அப்படிப்பட்ட யோக்யதாம்சம்) இருப்பதாக நினைக்கவில்லை.
ravi said…
அஸுர ஜன்மா, ஒருத்தன் குரங்கு ஒன்று, கரடி ஒன்று என்று மூன்று பேரைத்தான் தம் பக்திக்கு சாச்வதச் சின்னங்களாக விட்டுப் போயிருக்கிறார்.
அச்வத்தாமா பலிர் வ்யாஸோ ஹநூமாம்ச்ச விபீஷண: |
க்ருப பரசுராமச்ச ஸப்தைதே சிரஜீவிந: ||
என்று ஏழு சிரஞ்ஜீவிகள் இருப்பதாக ச்லோகம். அச்வத்தாமன், மஹாபலி, வ்யாஸர், ஹநுமார், விபீஷணன், க்ருபர், பரசுராமர் என்ற இந்த ஏழு பேரில் ஜாம்பவான் இல்லாவிட்டாலும் அவரும் சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டிருப்பவர்தான்.
ravi said…
எந்த ஃபீல்டிலுமே (துறையிலுமே) பழம் தின்று கொட்டை போட்டவர்களை “ஜாம்பவானாச்சே!” என்கிறோமல்லவா?
அகஸ்த்யர், என்றும் பதினாறாயிருக்கும் மார்க்கண்டேயர் ஆகியவர்களும் (மேலே சொன்ன ச்லோகத்தில் குறிப்பிடப்படாவிட்டாலும்)
ravi said…
சிரஞ்ஜீவிகள்தாம். த்ரேதா யுகத்து ராமர் காலத்திலிருந்து, த்வாபர முடிவில் இந்தக் கதை நடக்கும்போதும் இருந்த ஜாம்பவான் மணியைக் கவ்விக்கொண்டு வரும் சிங்கத்தைப் பார்த்தார்.
ravi said…
அவருக்கு அப்போது ஸுகுமாரன் என்று பெயர் கொண்ட ஒரு பிள்ளை குழந்தை இருந்தது. அத்தனை வயஸுக்கா ஒரு பிள்ளை என்றால் கரடி, அதிலும் சிரஞ்ஜீவி – அதைப் பற்றி எது, எப்படியென்று நமக்கென்ன தெரியும்? ஜ்வலித்துக் கொண்டிருக்கும் மணி தம் குழந்தைக்கு நல்ல விளையாட்டுப் பொருளாயிருக்கும் என்று நினைத்தார்.
ravi said…
உடனே மஹா பலசாலியான அவர் சிங்கத்தோடு சண்டை போட்டு அதைக் கொன்று விட்டார். மணியை எடுத்துக்கொண்டு போய்க் குழந்தையின் தொட்டிலுக்கு மேலே பொம்மையும் கிளிச்சட்டமும் கட்டித் தொங்கவிடுகிறது போல ஸ்யமந்தகத்தைக் கட்டி வைத்தார். (வாலி தன் பிள்ளை அங்கதனடைய தொட்டிலுக்கு மேலே ராவணனையே ‘பத்து தலைப் பூச்சி’ என்று சொல்லி கட்டி வைத்தானாம்!)
ravi said…
கண்ணைப் பறிக்கிற ஸ்யமந்தகத்தின் ஜொலிப்பும் கரடிக்குழ்தையானதால் அதற்கு கூசவில்லை. நம்மகத்துக் குழந்தைக்கு டார்ச்லைட் அடித்துக் காட்டினால் வேடிக்கையாயிருக்கிற மாதிரித்தான் கரடிக் குழந்தைக்கு மணி இருந்தது போலிருக்கிறது! ப்ரஸேனன் வேட்டையிலிருந்து திரும்பி வராததைப் பார்த்தவுடன் ஸத்ராஜித்துக்கு க்ருஷ்ணரிடம்தான் ஸந்தேஹம் உண்டாயிற்று.
ravi said…
ஸந்தேஹமென்று சொன்னால் போதாது. நன்றாக confirmed ஆகவே, ‘க்ருஷ்ணன்தான் காட்டிலே தம்பியை மடக்கிக் கொன்று போட்டிருக்கிறான்’ என்று தோன்றிவிட்டது. பாகவதத்தின்படி, க்ருஷ்ணன் ப்ரஸேனனோடு போகாவிட்டாலும் ஆளைவிட்டு அவனைக் கொன்றதாக நினைத்தான்.
ravi said…
‘ஏற்கனவே ஸ்யமந்தகத்தின் மேலே ஒரு கண் வைத்திருந்தான். ப்ரஸேனன் அதைப் போட்டுக் கொண்டு காட்டுக்கு போனது நல்ல வாய்ப்புக் கொடுத்துவிட்டது. வேட்டைக்குப் போனவன் திரும்பி வராவிட்டால் ஏதோ துஷ்ட மிருகம் அடித்துப் போட்டு விட்டது என்று ஊரார் நினைத்துக் கொள்வது ஸஹஜம்தானே? அப்படி இதையும் நினைத்துக் கொண்டு போகட்டுமென்று க்ருஷ்ணனேதான் ஆட்களை அனுப்பி அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டு, மணியைத் தன்னிடம் அவர்கள் சேர்ப்பிக்கும்படி ஏற்பாடு பண்ணியிருக்கிறான்’ என்று முடிவு செய்துவிட்டான்.
ravi said…
ஸாஷாத் பரமாத்மாவே நராகாரமாக அவதாரம் பண்ணினால் மநுஷ்யர்களுக்கு ஏற்படுகிற எல்லாக் கஷ்டங்களும் அவருக்கும் வருகின்றன! அபவாதம்கூட வருகிறது. மநுஷ்யர்களோடு மநுஷ்யனாகக் கஷ்டங்களுக்கு ஆளாகிற மாதிரி இருந்து கொண்டே அதன்மூலம் அவர்களுக்கு அநேக பாடங்களை போதிக்கவேண்டுமென்பதுதான் அவதார ரஹஸ்யம்.
ravi said…
க்ருஷ்ணன் ப்ரஸேனனைக் கொலை பண்ணியிருக்கிறான்; மணியைத் திருடிக்கொண்டு எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறான்” என்று நிரபராதியான பகவான் மேல் ஸத்ராஜித் இரண்டு க்ரிமினல் குற்றங்களைச் சுமத்தினான். எங்கே பார்த்தாலும் இந்த மித்யாபவாதவத்தை (பொய்யான நிந்தையை)ப் பரப்பினான்.
ravi said…
ஊர்வாய் பொல்லாதது. ஜனங்கள் மனஸ் சாஞ்சல்யம் (சஞ்சலத்தன்மை) வாய்ந்தது. ஒருநாள் ‘ஹாஹூ’ என்று தலைக்கு மேலே தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிற தலைவர்களை இன்னொரு நாள் சீந்தாமலே தூக்கி எறிவதை ப்ரக்ருதத்திலே (நடைமுறையில்) பார்க்கிறோமல்லவா?
ravi said…
என்றைக்குமே கொஞ்சம் இப்படித்தான் இருந்திருக்கிறது. எந்த க்ருஷ்ணனால்தான் கம்ஸாதிகளின் கொடுமையிலிருந்து தப்பி யதுகுலம் ஸகல ஸந்துஷ்டியும் ஐச்வர்யமும் அடைந்ததோ, எவனுடைய கருணைதான் எந்த ஆபத்திலும் அவர்களை ரக்ஷித்ததோ, அந்த க்ருஷ்ணனையே, அவனுடைய அந்த ஸொந்த ஜனங்களிலேயே பல பேர் இப்போது ஸத்ராஜித்தோடு சேர்ந்து கொண்டு அபாண்டமாகப் பேச ஆரம்பித்தார்கள். “
ravi said…
குழந்தை நாளிலேயே வெண்ணெய் திருடினவன்தானே? திருடும், கபடும் அவன் தேஹத்தோடு பிறந்தவை. இதுவும் பண்ணியிருப்பான், இன்னமும் பண்ணியிருப்பான்” என்று வாய்கூசாமல் நிந்தித்தார்கள்.
ravi said…
காளிங்கனிடமிருந்து காப்பாற்றியது, கோவர்தனத்தைத் தூக்கிப் பிடித்து ப்ரளய வர்ஷத்தைத் தடுத்தது எல்லாம் மறந்தே போய்விட்டது.
ravi said…
தான் மனஸாலும் நினைக்காத குற்றத்தைத் தன்மேல் தன்னைச் சேர்ந்தவர்களே சுமத்துகிறார்களே என்று பகவான் மனக்லேசம் அடைந்தார் – அதாவது அப்படி நடித்தார். மநுஷ்யனைப் போல மனக்லேசம் அடைந்ததற்குப் பொருத்தமாக, தமது ஐச்வர்யமான (ஈச்வரத் தன்மைக்குரிய) ஸர்வஜ்ஞத்தையும் விட்டமாதிரி நடித்தார். (எதையும் தன்னால் அறியும்) ஸர்வஜ்ஞத்வத்தைக் காட்டாமல் மநுஷ்யர்கள் மாதிரியே ‘இன்வெஸ்டிகேட்’ செய்து ப்ரஸேனன் எப்படிச் செத்துப் போனான் என்று எல்லாருக்கும் ‘ப்ரூவ்’ பண்ணிக் காட்டுவது என்று முடிவு செய்தார்.
(குரல் தொடரும்)
ravi said…
🕉🚩காரணீஸ்வர் கோவில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்படுகிறது.🕉🚩

🚩திருத்தலம்: சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில்

🚩அமைவிடம்:
சைதாப்பேட்டை

🚩மாவட்டம்:
சென்னை

🚩மூலவர்:
காரணீசுவரர்

🚩தாயார்:
சொர்ணாம்பிகை

🚩தீர்த்தம்:
கோபதிசரஸ் திருக்குளம்

🚩திருவிழாக்கள்:
பிரம்மோற்சவம், திருமஞ்சனம், கந்த சஷ்டி , ஆருத்ரா தரிசனம் , தெப்போற்சவம், சங்கடஹர சதுர்த்தி , பிரதோஷம் , 1008 சங்காபிஷேகம்
ravi said…

🚩தல வரலாறு

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும்.
ravi said…
காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனைக் காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.

ravi said…
இதனை அறிந்த தேவேந்திரன் இந்தப் பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது.

இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

ravi said…
இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.
ravi said…

🚩திருத்தலத்தின் அமைப்பு:

இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.

அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.

வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார்.

இக்கோவிலில் காமிகா ஆகமத்தின்படி நடைபெறுகின்றன. பிரம்மோற்சவ விழாவின் எட்டாம்நாள் திருஞான சம்மந்தர் ஞானப்பால் அருந்திய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இக்கோவிலின் திருக்குள நுழைவுவாயிலில் குழந்தையாக இருந்த ஞானசமந்தருக்கு அம்மை பாலுட்டிய காட்சி சிற்பாக உள்ளது.

சிவாய நம 🙏🏻
திருச்சிற்றம்பலம்
சர்வம் சிவமயமே
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 🙏🏻
உலகாளும் அம்மையப்பன் திருவருளுடன் அனைவருக்கும் இனிய சிவகாலை வணக்கங்கள் 🙏🏻
ஆலவாயர் அருட்பணி மன்ற தந்தையே வணக்கங்கள்🌷🙏🏻🌷
ravi said…
🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞🌞

*இன்று, கிருத்திகை விரதத்துடன் கூடிய இனிய ஞாயிறில் சிவபெருமான் அருளோடு இனிய காலை வணக்கம்.*

*இன்றைய தினம் சிவ வழிபாட்டுடன், முருகப்பெருமான் மற்றும் ஸூர்ய பகவான் வழிபாடும் செய்து மேன்மை அடைவாேம்.*

*🟠ஓம் ஆதித்யாய வித்மஹே! பாஸ்கராய தீமஹி!! தன்னோ மார்தண்டப்ரஸோதயாத்!!!🟠*

*🔯தினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?*

*🕉️1) திதி- திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.*

*🕉️2) வாரம்-வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.*
*🕉️3)நக்ஷத்திரம்-நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.*

*🕉️4)யோகம்-யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.*

*🕉️5)கரணம்-கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.*

💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன?

கோகுலாஷ்டமி,கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுகிறார்கள். இதில் இரண்டு விதமான விஷயங்களை முதலில் நாம் பார்த்துவிடலாம்.
ravi said…
கீதாசாரம்:
பகவான் கிருஷ்ணர் கூறுகிறார்:-
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைஎடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.
ravi said…
கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன? இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்பது குறித்து விளக்குகிறார் . கோகுலாஷ்டமி-கிருஷ்ண ஜெயந்தி : வித்தியாசம்
ஆவணி மாதம் வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி இரவு தங்கி இருந்தால் அது கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
ravi said…
இன்னொன்று அதே தேய்பிறை அஷ்டமியும் ரோகிணி நட்சத்திரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஆகும். சிவன் சம்பந்தமான வழிபாட்டை பிரதானமாக கொண்டவர்கள் கோகுலாஷ்டமி என்றும் - பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி என்றும் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்டாடுவார்கள்.
ravi said…

2 விதமான ஆகமங்கள்

இதிலும் பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு 2 ஆகமங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. ஒன்று வைகானச ஆகமம், இன்னொன்று பாஞ்சராத்ர ஆகமம். வைகானஸ ஆகமத்திற்கு அஷ்டமி பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமம் அஷ்டமியினுடைய மிச்சமும் ரோகினி நக்ஷத்ரத்தினுடைய மிச்சமும் - முக்கியமாக சூரிய உதயம் கழிந்து 2 நாழிகைகள் மேற்சொன்ன அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரமும் இருந்தால் அதை பாஞ்சராத்திர ஆகம கிருஷ்ண ஜெயந்தியாக எடுத்துக் கொள்வார்கள்.
ravi said…
ஸ்ரீவைஷ்ணவ ஜெயந்தி அதாவது வைஷ்ணவ கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லப்படுவதும் பாஞ்சராத்திர ஜெயந்தி தான்.
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடும் இடங்கள்
கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை பிருந்தாவனம், மதுரா, கோகுலம், துவாரகை, குருவாயூர், உடுப்பி, பூரி ஜெகன்நாத், பண்டரிபுரம் மற்றும் ஏனைய பெருமாள் ஆலயங்களில் மிகவும் விசேஷமாக விண்ணும் மண்ணும் வியக்கும் வண்ணம் கொண்டாடி வருகிறார்கள்.
கிருஷ்ணருடைய விளையாட்டுகள்
இந்த கிருஷ்ண ஜெயந்தியில் வழுக்குமரம் ஏறுவதையும் உறியடி திருநாளாக உறியடி அடிப்பதையும் மக்கள் கிருஷ்ணருடைய விளையாட்டாகக் கொண்டு விளையாடுகிறார்கள்.
ravi said…
இந்த கண்ணன் பிறந்தநாள் வீடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. அன்றைய தினம் வீட்டினை சுத்தமாக்கி மலர்களினால் அலங்கரித்து, கோலமிட்டு, கையில் வெண்ணெயுடன் தவழும் குழந்தை கண்ணனுடைய படத்தை வைத்து அலங்கரித்து, வாசல் முதல் சுவாமி வரை உள்ள இடம் வரை சிறுசிறு பாதங்கள் வரைவது வழக்கம்.
அரிசி மாவினால் பாதம் போடுவது வழக்கம்
.
ravi said…
அதற்கு காரணம் உண்டு. கோகுலத்தில் கண்ணன் தோழர்களுடன் கோபியர் வீடுகளில் வெண்ணை திருடும் போது அவசரத்தில் கீழே சிதறிய வெண்ணையில் கண்ணனின் மலர் பாதங்கள் வீடு முழுவதும் வெண்ணெய் ஆனது. அதனால் தான் அந்த காலத்தில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் மக்கள் வெண்ணெயினால் பாதங்கள் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அந்த காரணத்தினாலேயே பின்னாட்களில் அரிசி மாவினால் கோலம் அதாவது பாதம் போடுவதை வழக்கமாக்கி இருக்கிறார்கள்.
இன்று பஜனை பாடல்கள் பாடுவது மிகச்சிறப்பு
ஒவ்வொருவர் வீட்டிலும் கண்ணன் பிறந்ததாகவே தோன்றும் வண்ணம் தோற்றமளிக்கும் படி சிறப்பாக கொண்டாடப்படுவதை நாம் காணலாம். இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) அன்று கிருஷ்ணர் அஷ்டோத்திரம் - விஷ்ணுசஹஸ்ரநாமம் இதையெல்லாம் பாராயணம் செய்வது நன்மை தரும். பஜனை பாட்டு என்று வாத்தியங்களுடன் இன்னிசை பாடல்கள் பாடுவதும் மிகச்சிறப்பு. சிறு குழந்தைகளுக்கு பிரசாதம் கொடுப்பதும் வந்திருக்கக்கூடிய விருந்தினர்களுக்கு தாம்பூலம் கொடுப்பது மிக விசேஷமானதாகும்.
ravi said…
ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் சனியின் தோஷங்கள் அனைத்தும் நீக்கும் ஆலயம் – திருமணப்பேறு, குழந்தைப் பேறு அருளும் தலம் –
சனிபகவானை கால்களால்அழுத்திநிற்கும் ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர்!இன்று 28/8/2021 சனிக்கிழமை வணங்குவோம்


ravi said…
சனிபகவானை அனுமன் இரு கால்களால் அழுத்தி நிற்கும் அபூர்வகோலம் கொண்ட கோயில் – சனியின் தோஷங்கள் அனைத்தும் நீக்கும் ஆலயம் – திருமணப்பேறு, குழந்தைப் பேறு அருளும் தலம் – விஜயநகர மன்னர் காலக் கோயில் என சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில்.

ravi said…
புராண வரலாறு

இலங்கையை ஆட்சி செய்த இராவணன் தன் தவ வலிமையினால் அனைத்து கிரகங்களையும் வென்று, தனக்கு அடிமையாக்கி வைத்திருந்தான். சீதையைக் கடத்தி வந்து அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆஞ்சநேயர் இலங்கை சென்று இதனைக் கண்டறிந்து, இராமபிரானிடம் தெரிவித்தார். சீதையை மீட்க, இராமபிரான் இலங்கை மீது போர்த் தொடுத்தார். அப்போரில் லஷ்மணன் மூர்ச்சையாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.

.
ravi said…
இந்நிலையில், ஜாம்பவானின் ஆலோசனைப்படி, இமயமலையில் இருந்து சஞ்சீவி மூலிகையைக் கொண்டுவர ஆஞ்சநேயர் புறப்பட்டார். இதையறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், சனியின் உதவியால் இதனைத் தடுக்க அறிவுறுத்தினார். ஆனால், அதற்குள் ஆஞ்சநேயர் இமயமலை சென்று, சஞ்சீவி மலையைக் சுமந்து, இலங்கை திரும்பிக் கொண்டிருந்தார்.

ravi said…
அப்போது தன்னைப் பிடிக்க முயன்ற சனியைத் தன் காலில் கொண்டு வந்து தன் முழு பலத்தைத் தந்த ஆஞ்சநேயர், அவரை அழுத்தினார். வலி தாங்க முடியாத சனி, தன்னை விட்டு விடும்படியும், மன்னித்து விடும்படியும் வேண்டியதுடன், ஸ்ரீராமரின் துதியையும் பாடினார். இராமபிரானின் துதியைக் கேட்ட ஆஞ்சநேயர் சனியைத் தன் பிடியில் இருந்து விடுவித்தார்.
ravi said…
அதே சமயம் ராமநாமத்தைக் கூறி என்னை வழிபடும் எவரையும் துன்புறுத்தக்கூடாது என்ற உறுதி மொழியையும் வாங்கிக்கொண்டார், அனுமன். பின்னர் இலங்கை சென்று சேர்ந்தார். அதன்பின் சஞ்சீவி மலை மூலிகையால் லஷ்மணனன் நலம் பெற்றான் என்பது புராணம். இந்தக் கோலமே, இந்த ஆலயத்தின் மூலவராக விளங்குகின்றது. அனுமனின் பாதம் இத்தலத்திலும், அருகேயுள்ள ஆனைமலையிலும் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ravi said…
தொன்மைச் சிறப்பு

இவ்வூரில் உள்ள நாகநாத சுவாமி திருக்கோயில் சுவற்றில் உள்ள கி.பி. 1193ஆம் ஆண்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் 15ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டில் இன்றைய ஆம்பூர், பழங்காலத்தில் ஆமையூர் என அழைக்கப்பட்டதை அறிய முடிகிறது. ஆமையூரே இன்று ஆம்பூர் என வழங்கப்படுகிறது. இது தவிர, இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட மேலும் இரண்டு கல்வெட்டுகள், ஊரின் தொன்மையைக் காட்டுகின்றது. இதுதவிர, ஆஞ்சநேயர் ஆலய பின்புறம் நான்கு கால் மண்டபத்தில் அமைந்த விஜயநகர பேரரசின் கல்வெட்டு , இக்கோயிலின் பழைமையைப் பறை சாற்றுகிறது.

ravi said…
கி.பி. 1489இல் விஜயநகர பேரரசின் மண்டலேசுவரர், உத்திர சதாசிவராயர் என்பவர், ஆம்பூரில் வாழ்ந்த பலிஜா நாயுடுகளின் வேண்டுகோள்படி இந்த ஆஞ்சநேயர் ஆலயத்தை புனரமைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ravi said…
ஆலய அமைப்பு

ஆலயம் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் அமைப்பில் சுதை வடிவம்கொண்ட எளிய நுழைவாயில் நுழைந்ததும், ஆலய வளாகம் வருகிறது. தென்கிழக்கு மூலையில், தலமரமான நெல்லிமரம் பசுமையாக காணப்படுகிறது. எதிரே கருங்கல்லில் உருவான தீப தூண் பதினைந்து அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கிறது. இதன் அருகே சங்கு, சக்கரம் வடிவம், சுதையால் அழகுற செய்யப்பட்டுள்ளது. கருவறை, கோபுரம் ஐந்து கலசங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சிதருகின்றது.

ravi said…
ஆலயத்தின் பின்புறம், நான்கு கால் மண்டபத்தில் புடைப்புச் சிற்ப ஆஞ்சநேயர், அவரின் பின்புறம் விஜயநகர பேரரசின் கல்வெட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைக் கல்வெட்டு மண்டபம் என அழைக்கின்றனர்.
ravi said…
இனி பெரிய ஆஞ்சநேயரை தரிசிப்போம். நேரே கருவறையை நோக்கினால் மூலவர் தெரிவதில்லை. உற்சவர் அழகுற காட்சி தருகின்றார். வாயில் அருகில் சென்று இடதுபுறம் நோக்கினால், பதினோரு அடி உயரமுள்ள, கருங்கல்லில் வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பமாக பெயருக்கு ஏற்றபடி பெரிய ஆஞ்சநேயர், தெற்கு நோக்கி காட்சி தருகின்றார்.
ravi said…
இவரின் திருமுகம், கிழக்கு திசை நோக்கிய, கோலத்தில் காட்சி தருகிறது. இடது காலை முன் வைத்து சனியின் தலையினை அழுத்தியவாறும், வலது காலை சற்றே தூக்கி சனியின் வலது காலை அழுத்தியபடியும், பெரிய ஆஞ்சநேயர் காட்சி தருகின்றார். சனி பகவானின் முகம் பூமியை நோக்கியபடி உள்ளது.

ravi said…
ஆஞ்சநேயரின் வால் , தலைக்குமேல் உயர்ந்து நுனி வளைந்து, அதில் மணி கட்டிய கோலத்தில் அமைந்துள்ளது. அவரது வலது கரம் அபயம் அளிப்பதாக உள்ளது. இடது கரம் சௌகந்திகா மலரின் தண்டினைப் பிடித்துள்ளது. காதுகளில் குண்டலங்கள் அலங்கரிக்கின்றன. ஒளிவீசும் அவரின் கண்கள் காருண்யத்தை வழங்குகிறது. மார்பில் முப்புரிநூல் விளங்குகின்றது.

ravi said…
அனுமனின் காலில் உள்ள உருவம் அசுரனுடையது என்ற மற்றொரு கருத்தும் கூறப்படுகிறது. கம்பராமாயணத்திலும், இச்சம்பவம் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அனுமன் சனியை காலால் மிதித்த இடத்தின் ஐதீகம் இதுவே என்றும், இப்பகுதி மக்களும், இங்குவரும் பக்தர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளனர்.

ravi said…
நிர்வாகம்

இந்து சமய அறநிலையத் துறையால் இவ்வாலயம், நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

விழாக்கள்

ravi said…
புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமைகள், அனுமந்த ஜெயந்தியன்று வீதியுலா, தைப் பொங்கல், பௌர்ணமி தோறும் மாலையில் சத்தியநாராயணன் பூஜை, சித்திராப் பௌர்ணமி சிறப்பு வழிபாடு, ஸ்ரீராம நவமி முதலான வைணவ விழாக்கள் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஸ்ரீ சீதாராம பக்த சபையினர் விழாக்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.

ravi said…
தலச்சிறப்பு

சனிதோஷம் உள்ள எவரும் இத்தலம் வந்து பெரிய ஆஞ்சநேயரை வழிபட்டு சென்றால் , தொல்லைகள் நீங்கி சுகம் பெறுவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக அமைந்துள்ளது. அதேபோல, திருமணப்பேறு, குழந்தைப்பேறு கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார்.

ravi said…
தரிசன நேரம்

காலை 6.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 5.30 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலய தரிசனம் செய்யலாம்.

ravi said…
அமைவிடம்

வேலூர் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வேலூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ளது, ஆம்பூர் நகரம். ஆம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்தும் , ஆம்பூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும் சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும், ஏ.கஸ்பா பகுதியில், பெரிய ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆம்பூருக்கு ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. இவ்வூரில் பழைமையான நாகநாதசுவாமி ஆலயமும் அருகே அமைந்துள்ளது.

இவ்வாலயத்திற்கு ஆம்பூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிவாழ் மக்களும் வந்து தரிசித்துச் செல்கின்றனர்.ஞாயிற்றுக்கிழமைகளில் இராகுகால நேரத்தில் தீபமேற்றி வழிபட்டால் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையும் பரவலாகக் காணப்படுகிறது
ravi said…
பல திருக்கோயில்களில் இருக்கும் எம்பெருமான்கள் ஒவ்வொருவிதமாக தம் திருக்கரங்களை வைத்துக்கொண்டு இருப்பார்கள். இவற்றை ஹஸ்தம் என்று வழங்குவர். பலவகை ஹஸ்தங்களில் மிகவும் பரவலானவை சில-

1. அபய ஹஸ்தம்
2. வரத ஹஸ்தம்
3. ஆஹ்வான ஹஸ்தம்
ravi said…

1. அபய ஹஸ்தம்

பெருமாள் தன வலது திருக்கரத்தின் விரல்களை மேல் நோக்கி வைத்து இருப்பார். இதற்கு பொருள் "அஞ்சேல்! பயப்பட வேண்டாம். அபயம் தருகிறேன்" என்பதாகும். இது பல கோயில்களில் காணப்படும் ஹஸ்தம். திருவரங்கம் உற்சவர் நம்பெருமாள் அபய ஹஸ்தம் வைத்துள்ளார்.

ravi said…
2. வரத ஹஸ்தம்

பெருமாள் தன வலது திருக்கரத்தின் விரல்களை தன் திருவடியை காட்டி வைத்திருப்பார். இதன் பொருள், "தன் திருவடியை சரணம் என்று அடைந்தவருக்கு, சரணாகதி தருவேன்" என்பதாகும். திருப்பதி மூலவர், வேங்கடநாதன் வரத ஹஸ்தம் வைத்துள்ளார்.
ravi said…

3. ஆஹ்வான ஹஸ்தம்

பெருமாள் தன் வலது அல்லது இடது திருக்கரத்தின் ஆள்காட்டி விரலை சற்று மடக்கி நம்மை நோக்கி வைத்திருப்பார். இதன் பொருள், "அவர் நம்மை அருகில் வா நான் ரக்ஷ்கிறேன்" என்பதாகும்.
திருவல்லிக்கேணி தெள்ளியசிங்கர் உற்சவர் ப்ரஹலாத வரதன் ஆஹ்வான ஹஸ்தம் வைத்துள்ளார்.
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠

🟠நம்முடைய தகுதியை தீர்மானிப்பது
நமது செயலும் நல்லெண்ணங்களும், நடந்து கொள்ளும் விதமும் தான்.

🟠பகைவர்கள் நமக்கு வெளியில் இல்லை. பலவீனமான எண்ணங்களே நம் உண்மையான எதிரிகள்.

🟠உறவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் உங்கள் நிம்மதியைத் தேர்ந்தெடுப்பது அவர்கள் தான்.

🟠இந்தக் காலம் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பது ஏதெனில் எதையும் மிகவும் எளிதாக எண்ணி விடக் கூடாது என்பது தான்.

🟠எப்போது ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்கிறோமோ, அப்போது தான் அதனை பிறருக்குத் தெளிவுறச் சொல்லித் தர இயலும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
ravi said…
*1950-1988 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..!*

​💯% தனி படுக்கையில் அல்ல, அம்மா அப்பா கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்​

​💯% எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.​

​💯% கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.​

​💯% புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.​

​💯% சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.​

​💯% பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்த்ததில்லை.​

​💯% நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.​

​💯% தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணிர் குடிப்போம். ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.​

​💯% ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.​

​💯% அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதமும் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.​

​💯% காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.​

​💯% சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.​

​💯% உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.​

​💯% எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்​

​💯% எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுயவர்கள் அல்லர். அவர்கள் தேடியதும் கொடுத்ததும் அன்பை மட்டுமே; பொருட்களை அல்ல​

​💯% அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில் தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.​

​💯% உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார். டாக்டரை தேடி ஒடியதில்லை​

​💯% எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை. உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.​

​💯% எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவைகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்​

​💯% வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.​

​💯% எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.​

​💯% உறவுகள் அருகில் இருந்தது. உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை​

​💯% இந்த மாதிரி காலகட்டத்தில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் . . . *அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்.*

👌👌👌👍😆👍👌👌👌
ravi said…
🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺 🌺🌺

🍏 அரிய வேண்டிய சங்கல்பம் விஷேசம் 🍏
🌿 ஸ்வாமி பொதுவாக ஹோமம் அல்லது சுப காரியங்களை செய்யும் போது சொல்லும் சங்கல்பத்திற்க்கு அர்த்த விஷேசம் ஏதும் உள்ளதா? அதை இந்தியாவில் செய்தால் தான் பலன்என்று சாஸ்திரம் சொல்லியுள்ளதா? ஏன் பூமியில் எங்கு செய்தாலும் பலன்கிடையாதா?
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🌕

ravi said…
🍒 யுனிவர்சிட்டியில் ஒரு கல்வி பயில்கிறோம் அதை அந்த யுனிவர்சிட்டிக்கு உட்பட்ட எந்த கல்லூரியில் வேண்டுமானாலும். கற்க்கலாம் ஆனால் ( அது போல் உலகின் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் சந்தியாவந்தனம் திருவாராதனம் போன்றவைகளை செய்யலாம்) பெரிய பரிட்சை எழுதவேண்டுமானால் அந்த தேர்வு எழுத நமக்கு ஹால் டிக்கெட் வரும் [(நமக்கு பிறப்பால் இந்தியன் ( கல்வி கூடத்தின் பெயர்)அதுவும் தமிழன் (அந்த கல்வி கூடத்தில் உள்ள ஒர் அறை)என்று ஹால் டிக்கெட் பகவானால் கொடுக்கப் பட்டுள்ளது)] அந்த ஹால் டிக்கெட்டிலும் இந்த கல்விகூடத்தில் இந்தனாம் நம்பர் ஹாலில் இந்த நம்பர் (நாம் பிறந்த இடம் அல்லது ஊர்)உள்ள இடத்தில் எழுதனும் என இருக்கும் அப்படிதானே
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

ravi said…
🍒 அதை விட்டு நான் தான் இந்த யுனிவர்சிட்டில் உள்ள கல்விகூடத்தில் படிக்கிறேன் எனவே நான் அந்த யுனிவர்சிட்டியில் உள்ள எந்த கல்விகூடத்திலும் எந்த ஹாலிலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருந்தும் தேர்வு எழுதுகிறேன் என்று கூறி தேர்வை எழுதினால் அதை அந்த யூனிவர்சிட்டி தேர்வானையர் பெற்றுக்கொள்வாரா? இல்லை அந்த செய்கை அந்த பாடத்தில் உம்மை தேர்வாக செய்யுமா?

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

ravi said…
⭐அதே போல் தான் நம் வேதம் சொல்லுகிறது சங்கல்பம் என்ற முறையில்

🔥 எனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை இந்த இடத்தில் இன்ன காலத்தில் இன்ன முகூர்த்தத்தில் இன்ன நேரத்தில் இன்ன முறையில் இன்னாரான நான் செய்கிறேன் என்று (கர்மாபூமியான இந்தியாவில்)

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ravi said…
அதாவது

🌺 "சுபாப்யாம்

🌺 சுபேசோபனே முஹூர்த்தே

🌺 ஆத்ய ப்ரஹ்மண

🌺 :த்வீதிய பரார்த்தே

🌺 ஸ்வேத வராஹ கல்பே

🌺 வைவஸ்வத மன்வந்த்ரே

🌺 அஷ்டாசாவிகும்சதி தமே

🌺 கலி யுகே ப்ரதமே பாதே

🌺 ஜம்புத்வீபே

🌺 பாரத வருஷே

🌺 பரத கண்டே மேரோ:

🌺 தக்ஷ’ணே பார்ச்வே சகாப்தே

🌺 அஸ்மின் வர்த்தமானே

🌺 வ்யவகாரிகே

🌺 பிரபவாதீனாம் சஷ்டியா:

🌺 ஸம்வத்ஸராணாம் மத்யே ..... நாம

🌺 ஸம்வத்ஸரே (உத்தர/தக்ஷ்ஷிண)அயனே

🌺 (வஸந்த/ க்ரீஷ்ம/ வருஷ/ சரத்/ ஹேமந்த/ சிசிர்) ருதௌ ......

🌺 மாஸே (சுக்ல/ கிருஷ்ண) பக்ஷ ......

🌺 சுபதிதௌ வாஸர: (பானு/ இந்து/பௌம/ ஸெளம்ய / குரு/ ப்ருகு/ ஸ்திர) வாஸர யுக்தாயாம் .......

🌺 நக்ஷத்ர ஸம்யுக்தாயாம்

🌺 சுப நக்ஷத்ர

🌺 சுபயோக

🌺 சுபகரண

🌺 ஏவங்குண விசேஷெண வசிஷ்டாயாம் அஸ்யாம்"

என்று முடிந்து
⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲

ravi said…
🍒 யார் ஹோமத்தைச் (கர்மாவை) செய்கின்றார்களோ அவர்களின் பெயர் நக்ஷத்திரங்கள் சொல்லப்பட்டு அந்த கர்மாவினால் கிடைக்கும் பலன்களை வேண்டுவதாக முடியும்.

மேலே சொல்லப்பட்ட "சுபே சோபனே ...... அஸ்யாம்" வரையில் நிகழ்கால கணிதத்தைச் சொல்ல விழையும் ஸ்லோகம் ஆகும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ravi said…
🍊 பரம்பொருளின் காலம் = 2 கல்பம்
அதாவது

60 தத்பராக்கள் = 1 பரா
60 பராக்கள் = 1 லிப்தம்
60 லிப்தம் = 1 விநாழிகை
60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

ravi said…
🍒 த்விதீய பரார்த்தே - இரண்டாவது பரார்த்தம் - பிரம்மாவிலிருந்து தொடங்குகிறது கால கணக்கு

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

ravi said…
🍒 பிரம்மாவானவர் சிருஷ்டியைத் தொடங்கி பிறகு முடிப்பது வரை உள்ள காலக் கணக்கு மஹா கல்பம்

🍒 நாம் வாழும் காலத்தைத் தொடங்கிய பிரம்மாவிற்கு முன் பல பிரம்மாக்கள் தங்கள் படைத்தல் முடித்தல் காரியத்தை செய்து முடித்திருக்கிறார்கள்

🍒 மஹா கல்ப காலத்தில் ஒரு பிரம்ம காலம் என்பது நூறு பிரம்ம வருடங்கள்

🍒 அதில் பாதி (அர்த்தம்) ஐம்பது பிரம்ம வருடங்கள்
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊

🕊
ravi said…
ஒரு கல்பம் என்பது நானூற்று முப்பத்து இரண்டு கோடி மனுட வருடங்கள் (கணக்கதிகாரம்)

இதில் பாதி முடிந்து விட்டது
ravi said…

🍒 இப்பொழுது நடந்துகொண்டிருப்பது த்விதீய பரார்த்தம் - இரண்டாவது பரார்த்தம்.

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

🍒 ஸ்வேதவராஹ கல்பே - இரண்டாவது பரார்த்தத்தின் பிரம்மாவின் முதல் நாள் ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும்

🍒 வாயு புராணத்தின் கணக்குப்படி மொத்தம் 36 கல்பங்கள் உள்ளன

🍒 இந்த உலகத்தை விஷ்ணு வெள்ளைப் பன்றி உருவம் (ஸ்வேத வராஹம்) கொண்டு வெளிக்கொணர்ந்த காலவெள்ளத்தில் உட்பட்டது என்பதால் இது ஸ்வேத வராஹ கல்பம் எனப்பட்டது

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

ravi said…
🍒 வைவஸ்வத மன்வந்தரே - நடந்து கொண்டிருக்கும் ஸ்வேத வராஹ கல்பம் 14 மன்வந்திரங்களை உள்ளடக்கியது

🍒 ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது
ravi said…

🍒 14 மன்வந்திரங்களாவன :

1.ஸ்வாயம்புவ மன்வந்திரம்
2.ஸ்வரோசிஷ மன்வந்திரம்
3.உத்தம மன்வந்திரம்
4.தாமச மன்வந்திரம்
5.ரைவத மன்வந்திரம்
6.சாக்ஷ¤ஷ மன்வந்திரம்
7.வைவஸ்வத மன்வந்திரம்
8.சாவர்ணிக மன்வந்திரம்
9.தக்ஷ சாவர்ணிக மன்வந்திரம்
10.ப்ரமஹா சாவர்ணிக மன்வந்திரம், 11.தர்ம சாவர்ணிக மன்வந்திரம்
12.ருத்ர சாவர்ணிக மன்வந்திரம்
13.தேவ சாவர்ணிக மன்வந்திரம்
14.சந்திர சாவர்ணிக மன்வந்திரம்

ravi said…
நாம் இப்போது ஏழாவது மன்வந்திரமாகிய வைவஸ்வத மன்வந்திரத்தில் இருக்கின்றோம்.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

🍒 அஷ்டாவிம்சதி (28) தமே கலியுகே

🍒 71 சதுர்யுகங்கள் கொண்டது ஒரு மன்வந்திரம் என்று கண்டோம்

வைவஸ்வத மன்வந்திரத்தினுடைய 71 சதுர்யுகங்கள் கொண்ட பாதையில்

🍒 28வது்சதுர்யுகத்தில் நான்கு யுகங்களான

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் கலியுகம் என்பதில் வரும் கடைசி யுகமான கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது

ravi said…
இந்தக் கலியுகம் முடிந்து அடுத்த சதுர்யுகம் தொடங்கும்

அது 29 வது சதுர்யுகத்தின் கிருத யுகத்தில் தொடங்கும்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

🍒 இதுவரை வந்தது கால அளவைகள் அடுத்தது நாம் இருக்கும் இடத்தின் அளவைகள்

இவற்றைச் சற்றே சுருக்கமாகக் காண்போம்.

🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊
ravi said…

🍒 ஜம்பூத்வீபே - பரந்த பால்வெளியின் பல அண்டங்களில் ஒரு அண்டத்தின் சின்னஞ்சிறு பாகத்தின் ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்

🍒 த்வீபம் என்பது தீவு என்று அர்த்தம்

🍒 பரந்த பால்வெளிக் கடலில் உள்ள ஒவ்வொரு அண்டமும் ஒரு தீவு போலத்தான்

🍒 ஏழு தீவுகள் உள்ளன( பூமியில் ஏழு கண்டம் உள்ளது)
ravi said…

1. ஜம்பூ த்வீபம் (நாம் வசிப்பது மூன்றுபுரம் நீரால் சூழப்பட்டுள்ளது)
2. பிலக்ஷ த்வீபம்
3. சான்மலி த்வீபம்
4. குச த்வீபம்
5. க்ரௌஞ்ச த்வீபம்
6. சாக த்வீபம்
7. புஷ்கர த்வீபம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

🍒 பாரத வர்ஷே

🍒 த்வீபங்கள் எனும் தீவுகளுள் ஒன்றான ஜம்புத்வீபம் ஒன்பது வர்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளன

ravi said…
இதில் பாரத வர்ஷத்தில் தான் நாம் வசிக்கின்றோம்

1. பாரத வர்ஷம்
2.ஹேமகூட வர்ஷம்
3. நைஷத வர்ஷத்ம்
4.இளாவ்ருத வர்ஷம்
5. ரம்ய வர்ஷம்
6. ச்வேத வர்ஷம்
7. குரு வர்ஷம்
8. பத்ராச்வ வர்ஷம்
9.கந்தமாதன வர்ஷம்

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ravi said…

🍁 பரத கண்டே

பாரத வர்ஷம் ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது

1.பரதகண்டம்
2. கிம்புருகண்டம்
3. அரிவருடகண்டம்
4. இளாவிரதகண்டம்
5. இரமியகண்டம்
6. இரணியகண்டம்
7. குருகண்டம்
8. கேதுமாலகண்டம்
9.பத்திராசுவகண்டம்

இதில் நாம் பரத கண்டத்தில் வசிக்கின்றோம்.

🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅

ravi said…
🌕 மேரோர் தக்ஷிணே பார்ச்வே

🌕 பரத கண்டத்திலிருக்கும் மேரு எனும் மலையின் தெற்கு புறத்திலிருக்கின்றோம்

🌕 மேற்கண்ட பிரம்ம காலம் தொடங்கி பரத கண்டத்தின் தெற்கு புறத்திலிருக்கும்

🌕 கர்த்தாவானவர் 60 வருடங்கள் கொண்ட சுழற்சியில்

🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊
ravi said…

🍊 தற்காலம் ஹேமலம்ப / ஹேவிலம்பி எனும் பெயர் கொண்ட வருடத்தின் பனிரண்டு மாதங்கள் கொண்ட ஸம்வத்ஸரத்தில்

🍂 உத்தராயணம் அல்லது தக்ஷ்சிணாயனம் எனும் இரு அயன காலத்தில்

ravi said…
🍂 அதாவது உத்தராயண காலத்தில் ஆறு ருதுக்கள் கொண்டவற்றில் வஸந்த ருதுவில், சித்திரை மாத்த்தில் கிருஷ்ண பட்ச பஞ்சமி தினத்தில் பானு வாஸரத்தில் அதாவது ஞாயிறு கிழமை (இன்று) கேட்டை நக்ஷத்ரம் (16/4/2017) இணைந்த சுபமுஹூர்த்த சுப யோக தினத்தில் செய்யப்படும் செய்கையில் கர்த்தாவின் பெயர் நக்ஷத்திரம் சொல்லப்பட்டு அவர்களின் நல்வாழ்க்கைக்காக செய்யப்படுகின்றது என்பதே சங்கல்பம்

⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲⛲

ravi said…
🔥 "சுபே சோபனே .... கரிஷ்யே" என்பது வரை சொல்லப்படும் ஸ்லோகத்தின் அர்த்தமாகின்றது

🔥 இதே போல் வேறு தேசங்களில் உண்டா கிடையாது எனவே தான் இந்தியாவை கர்ம பூமி என்றும் இதில் கர்மங்களை ஹோமங்களை செய்வது தான் பலன் என்றும் சொல்லியுள்ளனர்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

ravi said…
⭐ என்னதான் இல்லத்தில் திருவாராதனம் செய்தாலும் நாம் இருக்கும் ஊரில் உள்ள திருக்கோவிலில் சென்று பகவான் அனுபவிப்பதை போல உள்ள ஆனந்தம் கிட்டுமா?

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

ஒரு தேர்வை நமக்கு விதிக்கப்பட்ட ( கர்மாதீரமாக) தேர்விடத்தில் வைத்து எழுதுவதே தேர்வாக வழி செய்யும் இல்லாவிடில் தேர்வு எழுதியிருப்போம் ஆனால் தேர்வாவோமா என்பது இப்போது புரிந்திருக்குமே

கூடுமானவரை நமது கலாச்சாரத்தை வளர்கிறோம் என கூறி தவறான இடத்தில் செய்யலாம் என முன்னுதாரணம் காட்டி தவறான பாதைக்கு பின் வரும் சந்ததிகளை இட்டு செல்லாமல் இருப்பதே நலம். 🌕

🙏 ௐ தத் சத் 🙏

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
ravi said…
Excellent information about Bhagwan Shri Krishna

1) Krishna was born *5252 years ago*
2) Date of *Birth* : *18 th July,3228 B.C*
3) Month : *Shravan*
4) Day : *Ashtami*
5) Nakshatra : *Rohini*
6) Day : *Wednesday*
7) Time : *00:00 A.M.*
Shri Krishna *lived 125 years, 08 months & 07 days.*
9) Date of *Death* : *18th February 3102BC.*
10) When Krishna was *89 years old* ; the mega war *(Kurukshetra war)* took place.
11) He died *36 years after the Kurukshetra* war.
12) Kurukshetra War was *started on Mrigashira Shukla Ekadashi, BC 3139. i.e "8th December 3139BC" and ended on "25th December, 3139BC".*
12) There was a *Solar eclipse between "3p.m to 5p.m on 21st December, 3139BC" ; cause of Jayadrath's death.*
13) Bhishma died on *2nd February,(First Ekadasi of the Uttarayana), in 3138 B.C.*

ravi said…
14) Krishna is worshipped as:
(a)Krishna *Kanhaiyya* : *Mathura*
(b) *Jagannath*:- In *Odisha*
(c) *Vithoba*:- In *Maharashtra*
(d) *Srinath*: In *Rajasthan*
(e) *Dwarakadheesh*: In *Gujarat*
(f) *Ranchhod*: In *Gujarat*
(g) *Krishna* : *Udupi in Karnataka*
h) *Guruvayurappan in Kerala*

ravi said…
15) *Bilological Father*: *Vasudeva*
16) *Biological Mother*: *Devaki*
17) *Adopted Father*:- *Nanda*
18) *Adopted Mother*: *Yashoda*
19 *Elder Brother*: *Balaram*
20) *Sister*: *Subhadra*
21) *Birth Place*: *Mathura*
22) *Wives*: *Rukmini, Satyabhama, Jambavati, Kalindi, Mitravinda, Nagnajiti, Bhadra, Lakshmana*
23) Krishna is reported to have *Killed only 4 people* in his life time.
(i) *Chanoora* ; the Wrestler
(ii) *Kansa* ; his maternal uncle
(iii) & (iv) *Shishupaala and Dantavakra* ; his cousins.
24) Life was not fair to him at all. His *mother* was from *Ugra clan*, and *Father* from *Yadava clan,* inter-racial marriage.
ravi said…
25) He was *born dark skinned.* He was not named at all throughout his life. The whole village of Gokul started calling him the black one ; *Kanha*. He was ridiculed and teased for being black, short and adopted too. His childhood was wrought with life threatening situations.
ravi said…
26) *'Drought' and "threat of wild wolves" made them shift from 'Gokul' to 'Vrindavan' at the age 9.*
27) He stayed in Vrindavan *till 10 years and 8 months*. He killed his own uncle at the age of 10 years and 8 months at Mathura.He then released his biological mother and father.
28) He *never returned to Vrindavan ever again.*
ravi said…
29) He had to *migrate to Dwaraka from Mathura due to threat of a Sindhu King ; Kala Yaavana.*
30) He *defeated 'Jarasandha' with the help of 'Vainatheya' Tribes on Gomantaka hill (now Goa).*
31) He *rebuilt Dwaraka*.
32) He then *left to Sandipani's Ashram in Ujjain* to start his schooling at age 16~18.
ravi said…
33) He had to *fight the pirates from Afrika and rescue his teachers son ; Punardatta*; who *was kidnapped near Prabhasa* ; a sea port in Gujarat.
34) After his education, he came to know about his cousins fate of Vanvas. He came to their rescue in ''Wax house'' and later his cousins got married to *Draupadi.* His role was immense in this saga.
ravi said…
35) Then, he helped his cousins establish Indraprastha and their Kingdom.

36) He *saved Draupadi from embarrassment.*

37) He *stood by his cousins during their exile.*
38) He stood by them and *made them win the Kurushetra war.*

39) He *saw his cherished city, Dwaraka washed away.*
40) He was *killed by a hunter (Jara by name)* in nearby forest.
41) He never did any miracles. His life was not a successful one. There was not a single moment when he was at peace throughout his life. At every turn, he had challenges and even more bigger challenges.
42) He *faced everything and everyone with a sense of responsibility and yet remained unattached.*

43) He is the *only person, who knew the past and future ; yet he lived at that present moment always.*

44) He and his life is truly *an example for every human being.*🌷🙏🏻

*Jai Shri Krishna*🙏
ravi said…
ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது

வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போகஇருக்கிறது.

இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள். இவர்கள்இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,
ravi said…
காலையில் நடைப்பெயர்ச்சிக்கு செல்பவர்கள்
வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்,
கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்,

தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்.
வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பிவணங்குபவர்கள்,

ravi said…
வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்.🙏

அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்.

திருவிழாக்கள்,விருந்தினர் உபாச்சாரம்,உணவு,தானியங்கள்,காய்கறிகள்,அக்கறை,யாத்திரை,பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே சனாதன தர்மத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள், wrong நம்பர் கூடவும் அரைமணி நேரம் பேசுபவர்கள் ,

ravi said…
ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்

எப்போதும் ஏகாதசி , அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள்இந்த மக்கள், கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், சமூக பயம் உள்ளவர்கள்,

பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள், பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப்பயன்படுத்துபவர்கள்

எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.


இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.மரியாதை கொடுங்கள் அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்இல்லையெனில் அவர்களுடன், ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் போய்விடும் ..

. அதாவது,மனநிறைவு,எளிமையான வாழ்க்கை,உத்வேகம் தரும் வாழ்க்கை,கலப்படம்மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை,மதத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து விடும்.

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்.🙏🌹

நம்முன்னோர்களே நமது அடையாளம்நமதுமுகவரிமற்றும்நமது பெருமை 🙏

சனாதன வாழ்வியில் சடங்குகள் மட்டுமே குற்றங்களை தடுக்க முடியும், அரசாங்கத்தால் முழுமையாக தடுக்க இயலாது.

#ஜெய்_ஸ்ரீ_ராம்.🙏🙏விமல் ஜெயின்🙏🙏You can follow @vimal045Y. (Source: https://threader.app/thread/1430227209373945858)
ravi said…
*நல்ல மனம் வாழ்க!*

புதிய புடவை... இதுவரை அதை ஒரே ஒருமுறை தான் கமலாபாய் கட்டிக் கொண்டிருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத்தான் கட்டிக் கொண்டு செல்லவேண்டும்.
ravi said…
சற்று விலைமதிப்புடையது.
துக்காராமின் மனைவி நல்ல சேலைகளையும் கட்டுவதுண்டு என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே!
அதிக அழுக்கில்லை என்றாலும், புடவையைத் தண்ணீரில் நனைத்துத் துவைத்தாள்.
ravi said…
புடவைக்கு நோகுமோ என்பதுபோல, துவைக்கும் கல்லில் லேசாக அடித்துத் துவைக்கும் தன் செயலை எண்ணி, அவளுக்கே சிரிப்பு வந்தது. புதுப்புடவை என்பதால் கைகளுக்கே புடவை மேல் பாசம் வந்துவிட்டதோ!
ravi said…
யாரோ ஒருவர்- துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் - அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லாவிட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலைமதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன!
சம்பாத்தியம்! அந்த வார்த்தையை எண்ணியதும் கமலாபாயின் உதட்டில் கசந்த புன்முறுவல் பிறந்தது.

ravi said…
உத்யோகம் புருஷ லட்சணமாமே? துக்காராம் எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை.
ravi said…
கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா! வயிறு என்று ஒன்று இருக்கிறதே!
தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள்தான் வாங்கிக் கொடுத்தாள்.
ravi said…
கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவேண்டாமா! பரண்மேல் ஏறி பஜனைப் பாடல்களைப் பாடினால் பறவைகள் ஆனந்தமாகத் தாளம் போட்டா கேட்கும்! அத்தனை சோளத்தையும் அவை கொத்திச் சென்றுவிட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

ravi said…
எப்போதும் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைதான்! அவளுக்கும் கிருஷ்ண பக்தி உண்டுதான். என்றாலும், இப்படியா! தெய்வம் என்றைக்குக் கண் திறக்கும்? இவள் வீட்டின் வறுமை என்று மறையும்?
துக்காராமிடம் இன்னொரு சிக்கல். உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை எந்த உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்வார்?

ஒரு பெருமூச்சுடன் புடவையைப் பிழிந்து கொல்லைப்புறக் கொடியில் உலர்த்தினாள் கமலாபாய். காற்றில் அரைமணியில் புடவை உலர்ந்துவிடும்.

ravi said…
துக்காராமைத் தேடியவாறு வாசலுக்கு வந்தாள்.
வழக்கம்போல் திண்ணையில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார் அவர். பலர் அந்த தேவகானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் குரலின் இனிமையும், பக்தியின் ஆழமும் கமலாபாயையும் ஒரு உருக்கு உருக்கத்தான் செய்தது.
ravi said…
சம்பாதிக்காவிட்டால் போகிறது... ஆனால், ஜாதி ஆசாரம் இல்லாமல் இருக்கிறாரே? கூடியிருந்த ரசிகர்களில் பலர் கீழ்ஜாதிக்காரர்கள் தான்.

என்ன இப்படிச் செய்கிறீர்களே என்றால், எல்லோரும் ஒரே மனித ஜாதிதான்! என்று நகைப்பார் அவர்.

பார்க்க லட்சணமான ஒரு பெண் சிறிது தள்ளி நின்று பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கிழிசல் புடவை சிரமப்பட்டு அவள் மானத்தை மறைத்துக் கொண்டிருந்தது.
ravi said…
""ஏன் அம்மா தள்ளி நிற்கிறாய்? இங்கே வந்து உட்காரேன்!'' என்று அன்போடு அவளை உபசரித்தார் துக்காராம். கமலாபாய் அந்தக் கிழிந்த புடவை கட்டியிருக்கும் கீழ்ஜாதிப் பெண்ணை நன்றாக சிம்மாசனம் போட்டு உட்கார வையுங்கள்! என்று எரிச்சலோடு நினைத்துக் கொண்டு கழுத்தை நொடித்தவாறு, "இதிலெல்லாம் எனக்கொன்றும் பங்கில்லை' என்பதுபோல விறுவிறுவென்று வீட்டுக்குள் சென்றாள்.

"

ravi said…
திண்ணைக் கச்சேரி தொடர்ந்தது. ""ஆகா! என்ன கானம்! எல்லோரும் உருகினார்கள். கீழ்ஜாதிப் பெண்ணும் உருகினாள். ஜாதி வேறுபாடெல்லாம் கண்ணனிடம் கிடையாது. எல்லோரும் கண்ணனைப் பக்தி செய்து வைகுண்டம் செல்ல வழிகாணுங்கள்!'' என்று அறிவுறுத்திவிட்டு அன்றைய பக்தியிசையை முடித்துக் கொண்டார் துக்காராம். ஒவ்வொருவராக விடைபெற்றார்கள். கீழ்ஜாதிப் பெண் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"
ravi said…
ஏன் அம்மா? நீ புறப்படவில்லையா?''
"எல்லோரும் போகட்டும் சாமி. நான் கடைசியில் போகிறேன். முதலிலேயே போனால் என் பின்னால் வருபவர்கள் என் கிழிந்த புடவையை விமர்சித்துக் கொண்டே வருவார்கள்''.
""உன்னிடம் வேறு புடவை இல்லையா அம்மா?''
""நிறையப் புடவை இருந்தது சாமி. ஆனால், யாரோ ஒரு பெண், மானத்தைக் காப்பாற்றப் புடவை தா என்று இக்கட்டான ஒரு சந்தர்ப்பத்தில் என் கணவரிடம் கேட்டாள். என் கணவரோ தர்மப்பிரபு. என் புடவைகள் எல்லாவற்றையும் வாரி வழங்கிவிட்டார்.
ravi said…
எனக்கு மிஞ்சியது இந்தக் கிழிசல் புடவைதான்! என் கணவர் சின்ன வயதில் விளையாட்டாகப் புடவை திருடுவாராம். பெண்கள் குளிக்கும் இடங்களில் புடவையைத் திருடி வைத்துக் கொண்டு, அவர்கள் கெஞ்சினால் தான் தருவாராம். அப்படிப் பெண்கள் மனத்தை நோகவைத்தார்
இல்லையா? அதனால் அவர் பெண்டாட்டிக்குக் கிழிசல் சேலைதான் என்று விதித்திருக்கிறது போலிருக்கிறது!''
துக்காராம் அவளது வீட்டுக் கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்டார். "
ravi said…
"ஒரு நிமிஷம் இரு!' என்றவர் கொல்லைப்புறம் சென்றார். கமலாபாய் உலர்த்தியிருந்த சேலையைக் கொடியிலிருந்து உருவினார். வாசலுக்கு வந்தார்.
""அம்மா! இனி இந்தச் சேலையைக் கட்டிக்கொள். இதில் கிழிசல் இருக்காது. பெண்கள் கிழிசல் சேலையை உடுத்தக் கூடாது''.
சேலையை அவள் கையில் கொடுத்தார். அவரையே கனிவுடன் பார்த்த அவள், ""நீங்கள் எனக்குப் புடவை கொடுத்தது பற்றி உங்கள் மனைவி கோபித்துக்கொள்ள மாட்டாரா?'' என்று கேட்டாள்.
*""அவள் கோபம் எத்தனை நேரம்? பிறகு சமாதானமாகி விடுவாள்.* அவளிடம் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறது. உனக்குத்தான் இது இன்னும் அவசியம்''.
துக்காராமின் பதிலைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே அவள் புடவையோடு விடைபெற்றாள்.
மாலைநேரம். கணவரோடு கோயிலுக்குப் புறப்பட்ட கமலாபாய் உலர்த்தியிருந்த புடவையை உடுத்திக் கொள்ளலாம் என்று கொல்லைப்புறம் போய்க் கொடியைப் பார்த்தாள். புடவையைக் காணோம்! கோபத்தோடுதுக்காராமிடம் வந்தாள்.
""புடவை எங்கே?''
""கிழிந்த புடவையோடு ஒருபெண் என் பாட்டைக் கேட்க வந்தாள். அவளிடம் அந்தப் புடவையைக் கொடுத்தேன் கமலா! உனக்குத்தான் கிழியாத இன்னொரு புடவை இருக்கிறதே?''
குழந்தைபோல் பேசும் துக்காராமைப் பார்த்து அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. "சோற்றுக்கே திண்டாட்டம். ஆனால், இவரோ வள்ளல்! ஒரு சோளக்கொல்லை காவல்கார வேலையைக் கூடச் செய்யத் தெரியாத மனிதர்!' கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட அவள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கணவரோடு புறப்பட்டாள்.
""அழாதே கமலா! நமக்குத் தேவையானவற்றைக் கண்ணன் கொடுப்பான்!''
கணவரிடம் ஏதொன்றும் பேசாமல் பெருமூச்சோடு கோயிலை நோக்கி நடந்தாள். கர்ப்பகிரகம் நோக்கிச் சென்றார்கள் இருவரும். "என் கணவரை ஏன் இப்படிப் படைத்தாய்?' என்ற கேள்வியுடன் கண்மூடிக் கண்ணீர் வழிய நின்றாள் கமலா.
இடுப்பில் கைவைத்து நின்றிருந்த பாண்டுரங்கனும் ருக்மிணியும் நகைத்துக் கொண்டார்கள். *கமலாபாய் கண்திறந்து ருக்மிணி சிலையைப் பார்த்தாள். அவளுக்கு அதிர்ச்சியில் தூக்கிவாரிப் போட்டது. ருக்மிணியின் சிலை கட்டிக் கொண்டிருந்தது அவள் கொடியில் உலர்த்தியிருந்த அதே புடவை தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு திரும்பத் திரும்பப் பார்த்தாள். சந்தேகமே இல்லை. அவள் புடவையே தான் அது!*
"அப்படியானால் கீழ்ஜாதிப் பெண்ணாக வந்தது என் தாயார் ருக்மிணியா? தேவி. என்னை மன்னித்துவிடு. என் கணவரது மகிமை தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். வறுமை என்னை அப்படியெல்லாம் பேசச் செய்துவிட்டது அம்மா! கீழ்ஜாதிப் பெண்கள் உள்பட எல்லாப் பெண்களுமே உன் வடிவம் என்று என் கணவர் சொல்லும் உண்மையை இன்று உணர்ந்து கொண்டேன்'.
கிருஷ்ணரையும் ருக்மிணி யையும் விழுந்து வணங்கிய அவள், ""வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்!'' என்று கணவரோடு பக்திக் கண்ணீர் வழிய வீடுநோக்கி நடந்தாள்.
வீட்டு வாசலில் ஒரு மாட்டுவண்டி நின்றிருந்தது. அதிலிருந்த இறங்கிய ஒருவர் அவர்களை நமஸ்கரித்தார். பிறகு கமலாபாயிடம் சொன்னார்:
""மறந்துவிட்டீர்களா அம்மா? நான்தான் என் சோளக்கொல்லையைக் காவல் காக்கிற வேலையை இவருக்குக் கொடுத்தேன். வேலையை இவர் சரியாகச் செய்யவில்லை என்று இவரை வேலையை விட்டு நீக்கினேன். ஆனால் என்ன ஆச்சரியம்! என் சோளக்கொல்லை முன் எப்போதும் இல்லாத அளவு பத்துமடங்கு விளைச்சல் கண்டிருக்கிறது. இவர் சாதாரண ஆள் இல்லை அம்மா! அதற்காக அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தனை தானியங்களையும் கொஞ்சம் தங்க நாணயங்களையும் காணிக்கையாக அளிக்க வந்தேன்!''
கமலாபாய் திகைத்துப் போனாள்.
""கமலா! நாம் கொடுத்த புடவையைக் கட்டிக்கொண்டாளே ருக்மிணி. அவளைக் கட்டிக்கொண்டவன் புடவைக்கு விலையாக என்னவெல்லாம் அனுப்பியிருக்கிறான் பார்த்தாயா?'' என்று துக்காராம் சிரித்தபோது கமலாபாயின் ஆனந்தமான சிரிப்பும் சேர்ந்துகொண்டது.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை