அபிராமி அந்தாதி - பாடல் 46 - யானுன்னை வாழ்த்துவனே !

 

                    பச்சைப்புடவைக்காரி -488

அபிராமி அந்தாதி

பாடல் 46


மிகவும் அருமையான பாடல்.. இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை . எல்லா பாடல்களும் முத்துக்கள் தான் .. 

ஆதியும் அந்தமும் இல்லாத இறைவியை அந்தாதி எனும் அழகிய தமிழில் அடக்கி விட்டார் நம் அபிராமி பட்டர் . 

பாடலுக்குள் போவதற்கு முன் ஒரு சந்தேகம் வந்தது .. 

சரபோஜி மன்னர் என்ன இன்றைய திதி என்று சுப்பரமணியனிடம் கேட்கும் போது தன் நிலை மறந்திருந்த அவர் அன்னையின் வட்ட ஒளியையும் ஒலியையும் ஒன்று சேர்த்து இன்று பௌர்ணமி என்றார் ... 

அன்னையின் முகம் என்றுமே பௌர்ணமி தான் .. 

அப்படியிருக்க சரபோஜி மன்னர் வேறு எந்த நாளிலும் கேட்டிருந்தால் கூட பட்டர் இன்று பௌர்ணமி என்று தானே சொல்லியிருப்பார் ?

இருக்க முடியாது என்று பதில் ஒன்று சத்தமாக வந்தது .. திரும்பினேன் .. அபிராமி பட்டரே நின்றிருந்தார் ..



சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் 

ரவி .. அம்பாளை 16 திதி தேவதைகள் ஒருவர் பின் ஒருவர் தினமும் சென்னி குனிந்து பூஜை செய்கிறார்கள் .. 

நங்கநல்லூர் ராஜ ராஜேஸ்வரி கோயில் போயிருக்கிறாயா ? 

அங்கே அம்மனை அடைய 16 படிக்கட்டுகள் இருக்கின்றன .. 

ஒவ்வொரு படியும் ஒரு திதி தேவதையை குறிப்பிடும் .. அன்று சரபோஜி மன்னர் என்னை பார்க்க வரும் போது அபிராமியின் நினைவுகளில் இருந்தேன் .. 
அப்பொழுது பௌர்ணமி திதி வந்து அபிராமியை பூஜை செய்து கொண்டிருந்த நேரம் . 

அன்னையின் முகத்தில் வட்ட ஒளி .. 

அதை ரசித்தேன் .. அதனால் பௌர்ணமி திதி என்று சொன்னேன் ... 

சந்தேகம் பனி போல் மறைந்தது 🙏🙏🙏



46. நல்நடத்தையோடு வாழ

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் 

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; 

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் 

இடப்பாகம் கலந்துபொன்னே!

மறுக்கும் தகைமைகள் செய்யினும், 

யான் உன்னை வாழ்த்து வேனே!👏👏👏👣👣👣

வெறுக்கும் தகைமைகள் செய்யினும்

அம்மா நீ வெறுக்கக்கூடிய காரியங்களை பலர் செய்தாலும்

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் 

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே;
 
நீயோ கருணாரஸ ஸாகரம். அவர்கள் உன் அடியார்களாக இருப்பதால் தெரிந்தே தவறுகள் அவர்கள் இழைத்தாலும் நீ பொறுத்துக்கொண்டு அவர்களை வெறுக்காமல், கை விடாமல் இருப்பது உனக்கு ஒன்றும் புதிய செயல் அல்லவே ? 👌👌👌



வெறுக்கும் தகைமைகள் செய்யினும் 

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; 

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான்

எப்பொழுது அமுதம் தோன்றியதோ அன்று தான் நஞ்சும் தோன்றியது ... எப்பொழுது ஆசைகள் உதயமானதோ அன்று தான் பாவங்களும் தோன்ற ஆரம்பித்தன .

Birth of two extremes .

பட்டர் புது நஞ்சு என்கிறார் .. அமுதம் தோன்றிய அன்று எல்லோரும் வெறுக்கும் பயப்படும் ஆலகால விஷமும் தோன்றியது ...அதை எல்லோரையும் காப்பாற்ற வேண்டி ஈசன் அவசர அவசரமாக எடுத்து விழுங்கினார். அவரின் சிவந்த மேனியில் கண்டம் மட்டும் ஒரு குறை கண்டது ... 

என்ன சொல்ல வருகிறார் பட்டர் .. 

நஞ்சு கொடியது . பாவங்களின் மூட்டை .. அதையே எடுத்து உண்டவனை நீ வெறுக்காமல் மன்னித்து ஏற்றுக் கொண்டாய் .. 

நாங்கள் அந்த அளவிற்கு பாவங்கள் செய்யவில்லை . 

எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள உன்னால் ஏன் முடியாது ?  💐💐💐



வெறுக்கும் தகைமைகள் செய்யினும் 

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; 

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் 

இடப்பாகம் கலந்துபொன்னே!

அம்மா அப்படிப்பட்ட ஈசனை விடாமல் துரத்தி அவனுடைய இடப்பாகத்தை வவ்வி கொண்டாயே .. அவனிடம் கலந்த பிறகு நீயும் பொன்னாக ஜொலிக்கிறாய் 🙏🙏🙏




வெறுக்கும் தகைமைகள் செய்யினும் 

தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; 

புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் 

இடப்பாகம் கலந்துபொன்னே!

மறுக்கும் தகைமைகள் செய்யினும் 
யான் உன்னை வாழ்த்து வேனே!👏👏👏👣👣👣*

அம்மா நான் கேட்பதை நீ தராவிட்டாலும் .( பல சமயங்களில் நாம் கேட்பது கிடைப்பதில்லை 

ஆனால் அபிராமிக்கு தெரியும் எதைக்கொடுத்தால் இந்த குழந்தைக்கு நல்லது என்று .. 

பிறகு நாமே அதை உணரவும் வைப்பாள்) 

உன்னை நான் தொழாமல் இருக்கவே மாட்டேன் . 

நான் உன்னை நினைக்காத நாள் என்று ஒன்று வருமானால் அன்று என் கடைசி மூச்சு நின்றிருக்க வேண்டும் . 🙏🙏🙏



சுருக்கம்

ஆலகால விஷம் என்னும் கொடிய நஞ்சை விழுங்கிக் கழுத்திலேயே நிறுத்திக் கொண்டதால் கறுத்த திருக்கழுத் துடையவ ரான சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்துள்ள பொன் னிற மேனியளே! 

வெறுக்கத்தக்க செயல்களை அடியவர்கள் செய் தாலும், அறிவிற் சிறந்த பெரியவர்கள் அவற்றைப் பொறுத்துக் கொள்ளும் பழக்கம் தொன்று தொட்டே இருந்து வருவதுதானே? 

ஆகவே, நீ விரும்பாமல் விலக்கத்தக்க செயல்களை நான் அறியாமையால் செய் தாலும், நீ பொறுத்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் உன்னை நான் வாழ்த்தி வணங்கத் தவறேன்.👏👏👏👣👣👣👣👣👣👣👣👣👣👣👣


நல்லதொரு பாடல். இந்தப் பாடலைப் படிக்கையில் ஏன் புது நஞ்சை உண்டு என்று எழுதியிருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தேன். 

இப்படித் தோன்றியது. நஞ்சு என்பது கொல்வது. அதாவது நமக்குத் தீயது. நமக்குத் தீயவைகள் ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக வருகிறதல்லவா. அந்தப் புதிய நஞ்சுகளைத் தானுண்டு எப்பொழுதும் நமைக் காக்கத் தானுண்டு என்கிறாரே அந்தப் பெருந்தகை. 

ஆகையால் புது நஞ்சை உண்டு என்று சொல்வது பொருத்தமே என்று முடிவுக்கு வந்தேன்.

அம்மா, உன் கணவன் கொதிக்கக் கொதிக்க ஆலகால நஞ்சைத் தான் உண்டு தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கச் செய்தவன். 

அப்படிப்பட்டவனது இடப்பாகத்தில் நிற்கும் நீ என் தவறுகளுக்காக என்னை வெறுக்கலாகுமோ ?

அது உனக்கு அழகா ? அரிசினத்தால் ஈன்ற தாய் அடிப்பதுண்டு, ஆனால் தன் பிள்ளையை வெறுப்பதுண்டோ ?


    

👍யானுன்னை வாழ்த்துவனே

👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐

Comments

ravi said…
"பரமாசார்யாளிடம் வெண்ணெய் கேட்ட பாலகிருஷ்ணன்"

(பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக போய் விட்டிருந்தது .ஆச்சரியமா பார்த்தவா கிட்டே ஆசார்யா சொன்னார்;

"என்ன பார்க்கறேள் வெண்ணெயை வாங்கிண்டுபோன பால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான்போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிடுத்து!")

.
ravi said…
நன்றி-குமுதம் லைஃப்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

கும்பகோணம் மடத்துல ஒரு சமயம். நல்ல பனிக்காலம். விடியற்காலையில் எழுந்திருக்கறதுக்கே பலரும் சோம்பல்படுவாபனிகொட்டறதுல ரெண்டடி தூரத்துலஇருக்கறவாளோட முகம்கூட தெரியாது.ஒரு போர்வைக்கு நாலு போர்வை போர்த்திண்டாலும் உடம்பு நடுங்கும். ஆனா அத்தனை குளிர்லயும் மகாபெரியவா கார்த்தால நாலுமணிக்கெல்லாம் எழுந்து, கொஞ்சமும் சலிச்சுக்காம நீராடிட்டு நித்ய கர்மானுஷ்டானங்களையும்அனுஷ்டிக்க ஆரம்பிச்சுடுவார்.

ravi said…
வாட்டற பனியோட பிரதிபலிப்பா, மகா பெரியவாளோட உதடுகள்ல நிறைய வெடிப்பு வந்துடுத்து. உதட்டோட உள் பக்கம் எல்லாம் புண்ணாயிடுத்து.அந்த மாதிரியான நிலைமைல உதட்டை சரியா மூடக்கூட முடியாது. ரணமா இருந்ததால, சரியா பேசக்கூட முடியாம வேதனை இருந்தாலும் தன்னோட கஷ்டம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் எப்போதும்போல மடத்துல உள்ளவா, வேதம் சொல்ல வர்றவா,தரிசனம் பண்ண வர்றவாள்னு எல்லார்கிட்டேயும் பேசிக் கொண்டிருந்தார்.

ravi said…
பனிக்காலத்துல உதடு வெடிக்கும்போது அடிக்கடி வெண்ணெய் தடவிண்டே இருந்தால் சீக்கிரமா வெடிப்பு சரியாகிவிடும்.ஆனால், ஆசார சீலரான பெரியவா, கடைகள்ல விற்கிற வெண்ணெயை வாங்கித் தந்தால் தடவிக் கொள்ள மாட்டார்..

ravi said…
என்ன பண்ணுவது? மடத்துலய தயார் செய்யறதுன்னா அப்போ இருந்த நிதி நிலைமைல அது கொஞ்சம் செலவான விஷயம். அதோட வெண்ணெய் தயார் பண்றதுக்கு குறைஞ்சது ரெண்டு நாளாவது ஆகும். என்ன செய்யறதுன்னு மடத்துல இருந்தவா எல்லாரும் யோசிச்சுண்டு இருந்தா.

ravi said…
அந்த சமயத்துல வயசான பாட்டி ஒருத்தர், ஆசார்யாளை தரிசனம் செய்யறதுக்கு வந்தா.முந்தின நாள் பெரியவாளைதரிசனம் பண்ண வந்தப்போ அவரோட உதடு வெடிச்சிருக்கறதைப் பார்த்ததாகவும், அதனால் தானே மடியோட ஆசாரமாபசும்பால் வாங்கி,காய்ச்சி,உறை குத்தி,தயிராக்கிக் கடைஞ்சு ஆசாரத்துக்கு எந்தக் குறைபாடும் வராம வெண்ணெய் எடுத்துக் கொண்டுவந்திருக்கறதாகவும் மடத்து சிப்பந்திகள்கிட்டே சொன்ன அந்தப் பாட்டி,தான் கொண்டுவந்த வெண்ணெயை ஆசார்யா முன்னால வைச்சுட்டு நமஸ்காரம் பண்ணினா.

"
ravi said…
பெரியவா! ஒங்க ஒதடு பனியால ரொம்ப பாளம் பாளமா வெடிச்சிருக்கு. நான் ரொம்ப மடியா வெண்ணெய் கடைஞ்சு எடுத்துண்டு வந்திருக்கேன். நீங்க மறுக்காம இதை ஏத்துண்டு ஒதட்டுல தடவிக்கணும்!" அப்படின்னு ப்ரார்த்தனை செய்தாள்
.
ravi said…
அப்போ பெரியவாளை தரிசனம் பண்றதுக்கு வந்திருந்த ஒரு தம்பதியோட குழந்தை அம்மாவோட கையைப் பிடிச்சுண்டுஅத்தனை நேரம் சமர்த்தா நின்னுண்டு இருந்த குழந்தை, வெண்ணெயைப் பார்த்ததும், தாயாரோட கையை உதறிட்டுஓடிவந்து பெரியவா முன்னால நின்னு,'எனக்கும் வெண்ணெய் வேணும்'கற மாதிரி தன்னோட பிஞ்சுக்கையை நீட்டியது.

ravi said…
சாட்சாத் பாலகோபாலனே வந்து ஆசார்யாகிட்டே வெண்ணெய் வேணும்னு கேட்கற மாதிரி தோணித்து அங்கே இருந்தவாஎல்லாருக்கும்.இதுக்குள்ளே, அந்தக் குழந்தையோட பெற்றோர் அவசர அவசரமா அதைத் தூக்கிக்க வந்துட்டா. அதோடவெண்ணெய் கேட்டது தப்புங்கற மாதிரி உஸ்னு அதட்டவும் ஆரம்பிச்சா. கை அசைவுல அவாளை பேசாம இருக்கச் சொன்னார், மகாபெரியவா.

ravi said…
தன்னை தரிசிக்கவர்றவா கேட்காமலேயேஅவாளுக்குத் தேவையானதைத் தெரிஞ்சுண்டு குடுக்கக்கூடிய பெரியவா,ஆத்மார்த்தமான பக்தி உள்ளவாளுக்கு தன்னையே குடுத்துடக்கூடிய அந்த தெய்வம், குழந்தை அழற தோரணையிலேயே அதுக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சுண்டு குடுக்கற அம்மா மாதிரியான அந்த மஹா மஹா மாதா, தனக்கு முன்னால இருந்த அத்தனை வெண்ணெயையும் தூக்கி அந்தக் குழந்தைகிட்டே குடுத்துட்டார்.

ravi said…
இதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்களுக்கு கொஞ்சம் முகம் சுருங்கியது.'ரொம்ப நன்னா இருக்கு ஆசார்யா பண்ணினது. ஏதோ கொழந்தை கேட்டா ஒரு எலுமிச்சங்காய் சைஸுல உருட்டிக் குடுத்தா போறாதா? அப்படியே டப்பாவோடாயா தூக்கிக் குடுக்கணும்? இப்போ ஒதட்டுல தடவிக்க ஏது வெண்ணெய்?' அப்படின்னு மனசுக்குள்ளே சிலர் நினைச்சுண்டா. சிலர் மகாபெரியவா காதுல விழாதபடி முணுமுணுப்பா பேசிண்டா.

"
ravi said…
என்ன எல்லாரோட முகமும் தொங்கிப் போயிடுத்து? வெண்ணெயை மொத்தமா குடுத்துட்டேனேன்னா? கொழந்தை சாப்ட்டாலே போதும். என்னோட ஒதட்டுப் புண் சரியாயிடும்!" தானே குழந்தையாக சிரித்தார்-பெரியவா.

ravi said…
அன்னிக்கு சாயங்காலமே பெரியவாளோட உதட்டுல இருந்த எல்லா பாளம் பாளமான வெடிப்பும் இருந்த எடமே தெரியாம சுத்தமாக போய்விட்டிருந்தது.

ஆச்சரியமா பார்த்தவாகிட்டே ஆசார்யா சொன்னார்; "என்ன பார்க்கறேள்? வெண்ணெயை வாங்கிண்டு போனபால கிருஷ்ணன் அதை சாப்ட்டுட்டான் போல இருக்கு. அதான் எனக்கு சரியாயிடுத்து!"

ravi said…
சரீரம் வேறவேறயா இருந்தாலும் உள்ளே இருக்கிற ஆத்மா ஒண்ணுதான்கறது அத்வைதம். அந்தக் கொள்கையைப்பரப்பறதுக்காகவே ஆதிசங்கர மகான் ஏற்படுத்தின மடத்தை அலங்கரிக்க வந்த ஆசார்யா, இந்த லீலை மூலமா அதைநேரடியா உணர்த்தினதை நினைச்சு சிலிர்த்துப்போனார்கள் எல்லாரும்
TV Ganesh said…
வாத்ஸல்ய பெரும் கடல்.

கண்களிலே வாத்ஸல்யம்..
கட்டியிருக்கும் பீதாம்பரம் இடையிலே..
கரங்களிரண்டுமோ அபயம் தந்து பாதுகாக்கின்றது..
கட்டியணைக்கும் பிஞ்சுக் கரங்கள் தாயையும் சேயையும் தாய் போல் காக்கின்றது.

இன்று பிறந்தவன் லோக நாயகன்..
இன்று கண் மலர்ந்தவன் ஜகத்ரக்ஷகன்..
இவன் கண்ணிலே தெரியுதே துஷ்டரிமிருந்து பாதுகாக்கும் நேயம்...
இவனோ உலகளந்த சிறுகுழந்தை கரும் குட்டன்....
இவனின்றி யாருண்டு உலகிலே சரணடைய.

தாயும் சேயுமானாலும்..
கருப்புப் வெள்ளையுமானாலும்
முகத்திலே கரம் பதித்து காக்கும் கோபாலன்..
கன்றின் கண்களில் தான் என்ன ஜொலிப்பு..
நன்றியிலே மயங்குதே தாய்ப் பசுவின் கண்கள்..
கவிதை பேசுதே வண்ண ஓவியம்..
மனதிலே பதிக்கவேண்டிய இன்ப காவியம்.

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 495*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

*5. மந்தஸ்மித சதகம்*

புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்

*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே

சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
5/69👍👍👍👍💐💐💐
ravi said…
சைத்ய ப்ரக்ரமமாச் ரிதோsபி நமதாம் ஜாட்யப்ரதாம் தூநயன் 🙂🙂🙂

ராகவ்யஞ் ஜன பேசலோsபி கிரிஜே வைமல்யமுல்லாஸயன்🙂🙂🙂

( நைர்மல்யம் பரமம் கதோபி கிரிசம் ராகாகுலம் சராயன்🙂🙂🙂 )

லீலாலாப புரஸ்ஸரோsபி ஸததம் வாசம்யமான் ப்ரீநயன் 🙂🙂🙂

காமாக்ஷி ஸ்மிதரோ சிஷாம் தவ ஸமுல்லாஸ கதம் வர்ண் யதே 🙂🙂🙂
ravi said…
அம்மா நீ ஸ்வபாவ மதுரா ... மதுரமான ஸ்வபாமுடையவள் .
இனிமையாய் என்றும் இருப்பவள் . எல்லோராலும் விரும்பப்படுபவள் .. உன் புன்னகை அதனால் என்றும் இளமையாக இனிமையாக, இனிப்பாக இருக்கிறது
ravi said…
*[108/108] – அருள்மிகு பரமபதநாதன் – பெரியபிராட்டியார்*
ravi said…
திருப்பரமபதம் அல்லது வைகுண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும்.

8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும்.

வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும்.

இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர்.👏👏👏
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*
ravi said…
அதனைக் கேட்ட இராவணனது மகன் அதிகாயன்,

தன் உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தில் இராவணனிடம்,

"தந்தையே! உன் தம்பியைக் கொன்றவனது தம்பியை, நான் கொன்று வருவேன்.

நீ பெற்ற துயரத்தை, அவனையும் அடைய வைப்பேன். நான் அப்படிச் செய்யத் தவறினால், உன் மகன் எனச் சொல்லத்தக்கவன் அல்லேன்" என்று சூளுரைத்தான்.

"தந்தையே! சேனையை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னாலும், அன்றி தனியாகவே போருக்குப் போ என்று சொல்லிப் பணித்தாலும், உன் எண்ணப்படி செய்வேன், விடை தருக!" என்றான்.
ravi said…
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
ravi said…
*இறை இன்பம் (21) அபிராமி அம்மை பதிகம் (20)*🎼🎼🎼💐💐💐💐
ravi said…
கைப்போது கொண்டு

உன் பதப்போது தன்னில்

கணப் போதும் அர்ச்சிக்கிலேன்

கண் போதினாலுன்

முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்

முப்போதும் ஒருபோதும் என் மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்
முன் போதுவார் தமது பின் போத நினைகிலேன்

மோசமே போய் உழன்றேன்

மைப் போதகத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறியே

மாகோர காலன் வரும்போது

தமியேன்
மனம் கலங்கித் தியங்கும்

அப்போது வந்து உன் அருட்போது தந்தருள்

ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!💐💐💐
ravi said…
தனது வாழ் நாளின் இறுதி நேரத்தில், கடைசி நொடியில், அபிராமி அன்னை தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்,
அபிராமி பட்டர்.

தான் தன் வாழ் நாட்களை வீணே போக்கிவிட்ட போதிலும்,

அவள் தனக்கு உதவிட வேண்டும் என்று கேட்கிறார்..

அவர் தான் செய்ததாக செய்த தவறுகளை பட்டியல் இடுகிறார்.

அவற்றை மன்னித்து தன்னை, அவளுடன் ஐக்கியப் படுத்திக் கொள்ள பிரார்த்திக்கிறார்.🙏🙏🙏
ravi said…
நான் ஒரு நொடியும் உன் பாதங்களை நினைத்து உனக்கு அர்ச்சனை செய்தவன் அல்ல.

கண் இமைக்கும் நேரம் கூட உன் முகத்தினை கண்டு தரிசனம் செய்யவில்லை.

மூன்று கால பூஜைகளுக்கு உன் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் செல்லும்.

ஒரு போதாகிலும் நான் அவர்களை பின் தொடர நினைக்கவில்லை.🙏🙏🙏
ravi said…
வாழ்க்கையை மனம் போன போக்கில் வீணே கழித்துவிட்டேன்.

உலக இன்பங்களில் மதி இழந்து உழன்றேன்.

தவறை இப்போது உணர்கிறேன்,

என்ன பயன். காலம் கடந்து விட்டது.

என் உயிரைப் பறிக்க யமன் தன் கருநிற எருமையின் மீது இதோ வந்து விட்டான்.

மனம் கலங்கி வருந்தி நிற்கின்றேன்😰😰😰
ravi said…
எனக்கு இப்போது உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லை.

உடனே வா.

என்னை ஏற்றுக்கொள். உன்னுடன் இணைத்துக்கொள் தாயே”

இந்த வேண்டுதலை நமக்காக அவர் அன்னையிடம் வைத்து உள்ளார்.

நாமும் இப்போதாவது உண்மை நிலையை அறிந்து அவள் பாதம் பற்றுவோம்.👣👣💐💐💐🙏🙏🙏
ravi said…
🙂🙂🙂🙂🙂💐💐💐💐👏👏👏
ravi said…
844 ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ
யானும் நீ அது அன்றி எம்பிரானும் நீ இராமனே (94)

869 பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண மாய கேள்
என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து
உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே (119)

870 இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி இன்று வந்து
உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே
மயக்கினான் தன் மன்னு சோதி ஆதலால் என் ஆவி தான்
இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே (120)
ravi said…
பக்தர்களுக்காகக் காத்திருக்கும் இறைவன்

வைகுண்டத்தில் கிருஷ்ணனைப் பார்க்க பலரும் வந்து போய்க்கொண்டிருந்தனர். சலித்துப் போன கிருஷ்ணன், நாரதரிடம், எல்லோரும் என்னை வந்து பார்க்கிறார்களே, நான் போய் பார்க்கும் அளவுக்கு ஒரு பக்தன் பூமியில் இருக்கிறானா என்றார்.

ravi said…
இருக்கிறானே… புண்டலீகன் என்பவன் இருக்கிறான். அவனுடைய தாய், தந்தையைத் தன் கண்ணைப் போல் பராமரித்து வருபவன்” என்றார் நாரதர்.

ravi said…
உடனே புண்டலீகன் இருக்கும் எளிய குடிசையின் முன் தோன்றினான் பாண்டுரங்கன். குடிசைக்கு வெளியே மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. வெளியே நின்றபடி பாண்டுரங்கன் புண்டலீகா… புண்டலீகா…. என்று குரல் கொடுத்தான்.

ravi said…
யார் அது, யாராக இருந்தாலும் கொஞ்ச நேரம் காத்திருங்கள். என்னுடைய தாயும், தந்தையும் அசதியாக இருக்கிறார்கள். அவர்கள் தூங்கிய பிறகு வருகிறேன் என்று அவர்களின் காலை வலது கையால் பிடித்துவிட்டபடி, இடது கையால் ஒரு செங்கல்லை வெளியே எடுத்துப் போட்டான் புண்டலீகன்.

அந்தக் கல்லின்மீது கொஞ்சநேரம் நில்லுங்கள். என் பெற்றோர் உறங்கியவுடன் வருகிறேன் என்றான்.

ravi said…
அவ்வளவுதான் அந்த செங்கல்லின் மீது ஜம்மென்று இடுப்பில் கைவைத்தபடி பாண்டுரங்கன் நின்றுவிட்டான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த புண்டலீகன், “ஹே பாண்டுரங்கா.. நீயா” என்று புளங்காகிதம் அடைந்தான்…
ravi said…
இரு இரு உணர்ச்சிவசப்படாதே… நான் உன்னைக் கண்டதில் சந்தோசமாக இருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றான் பாண்டுரங்கன்.

“என்னுடைய பெற்றோர் அன்றாட சிரம பரிகாரங்களைச் செய்வதற்கு நதிக்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருக்கிறது. அந்த பீமா நதியின் பாதையை இந்த குடிசைக்கு அருகில் ஓட விட்டால் நன்றாக இருக்கும்” என்றான் புண்டலீகன்.
ravi said…
“நான் உனக்குக் கொடுக்க நினைத்த வரத்தை, உன்னுடைய பெற்றோருக்காகவே கேட்டுவிட்டாய். பரவாயில்லை. உனக்கு வேண்டியதைக் கேள்” என்றான் பாண்டுரங்கன்.

“என்னைப் போன்ற எளியவனை நாடி நீ வந்திருக்கிறாயே இதே போலே, படித்தவர், பாமரர் வித்தியாசம் இல்லாமல், எல்லோருக்கும் எனக்குக் கொடுத்தது போலவே காட்சி கொடுப்பாயா பாண்டுரங்கா?” என்றான் வெள்ளந்தியாக புண்டலீகன்.

நம் எல்லோரின் சார்பாகவும் புண்டலீகன் அன்று கேட்ட வரத்தை நிறைவேற்றுவதற்கே தன் இடுப்பில் கைவைத்தபடி இன்றைக்கும் பக்தர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான் பாண்டுரங்கன்.
ravi said…
சதாசர்வ காலமும் நாம சங்கீர்த்தனம் மட்டுமே நடந்து கொண்டு இருக்கும் ஒரு இடம், பண்டரீபுரக்ஷேத்திரம்தான். அங்கே அருள்பாலிக்கிற பாண்டுரங்கனின் அருளைப் பூரணமாகப் பெற்றவர் சந்த் துக்காராம்.
ravi said…
பண்டரீநாதனோட செல்லப்பிள்ளை நாமதேவர், எப்பவும் பாகவத அடியோர்களோட சத்சங்கத் தோடவேதான் இருக்கணும்னு ஆசைப்பட்டவர் அவர். பாண்டுரங்கனின் சன்னிதியில் முதல் படியில் படுத்துக்கொண்டே பகவானோடு ஐக்கியமாயிட்டார் அவர்.
ravi said…
அதுக்கு நாமதேவர் படி என்று பெயர். வைகுண்டம் போன நாமதேவருக்கு அந்த இடமே பிடிக்கலை, ஏன் என்றால், அங்கே ஹரி நாம சங்கீர்த்தனம், இல்லை,
ravi said…
அதனால் பாண்டுரங்கன்கிட்ட ஒரு வரம் கேட்கிறார்; அடுத்த ஜென்மத்தில் நான் உன் மீது சத கோடி அபங்கம் பாடணும், உன் மீது மட்டுமே விசுவாசம் கொண்டவனாகவே இருக்கணும் என்று பிரார்த்திக்க, அதன்படியே அடுத்த ஜென்மாவில் அவர் துக்காராமாகத் தோன்றினார்.

ravi said…
பண்டரீ க்ஷேத்திரத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் சொல்லுவது. பண்டரீக்கு நிகரான வேறு க்ஷேத்திரமே இல்லை; விட்டலனுக்குச் சமமான தெய்வம் வேறில்லை;
ravi said…
துக்காராமுக்குச் சமமான குருவும் கிடையாது என்று சொல்லுவார்கள். அந்த துக்காராம் 1655ம் ஆண்டு மஹாராஷ்ட்ராவில் தேஹூங் என்கிற கிராமத்தில் அவதாரம் பண்ணினார். 45 வருடங்கள் மட்டுமேதான் இவர் பூமியில் வாழ்ந்தார். தன்னோட 20,22 வயது வரைக்கும் சாமானிய மனிதராகத்தான் இருந்தார் துக்காராம்.
ravi said…
கல்யாணம் பண்ணிக்கொண்டு, குழந்தைகளுக்குத் தந்தையாகி, குடும்பத்தொழிலான மளிகை வியாபாரத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தார். ஊரில் ஏற்பட்ட கோரமான பஞ்சத்தில் அவரது மொத்த குடும்பத்தினர்களும் இறந்து விட, வாழ்க்கையில் அவருக்கு ஒரு விரக்தி ஏற்பட்டது.
ravi said…
தன் கிராமத்தில் உள்ள மலையின் உச்சியில் ஏறி அமர்ந்து கொண்டு அமைதியற்ற நிலையில், ஏகநாதரின் க்ரந்தங்களைப் படிக்கிறார். அப்போது அவரது மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி ஏற்படுகிறது. பகவானை எப்படியாவது பார்க்கணும் என்கிற ஆசையும் கூடவே வந்தது.

ravi said…
ஒரு நாள் இந்திராணி நதிக் கரையோரம் இவர் உட்கார்ந்து கொண்டு இருந்தபோது, பாபாஜி சைதன்யர் அங்கு வந்து, இவரது காதில், ராமக்ருஷ்ண ஹரி என்று உபதேசம் பண்ணினார். துக்காராமுக்கு ஒரே சந்தோஷம் நாம் சிறு வயது முதலே எந்த நாம ஜபத்தை விடாமல் ஜபித்து வருகிறோமோ, அதே நாமத்தை இவர் நமக்கு உபதேசித்து இருக்கிறாரே என்று சந்தோஷம்.
ravi said…
குருநாதர் மீது அவ்வளவு அபங்கங்களைப் பாடியிருக்கிறார் துக்காராம். துக்காராமுக்கு ஒரு மளிகை கடை இருந்தது அந்தக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு அவர் வியாபாரத்தைப் பார்த்தார் என்று கேட்டா அதுதான் இல்லை, அந்தத் தொழிலை விட்டுடுங்கோ என்று சொன்னால், அது எப்படி ஸ்வதர்மத்தை, குல தர்மத்தை விட்டுவிட முடியும் என சொல்லுவார். மாதத்தில் ரெண்டு அல்லது மூணு நாட்கள் போனாபோகுது என்று கடையைத் திறப்பார்.
ravi said…
ஜீஜாபாய்க்கு இவர் வியாபாரம் பண்ற சாமர்த்தியம் நன்றாகத் தெரியும். அதனால், நானும் உங்களோடு கடையில் உட்கார்ந்து வியாபாரம் பண்றேன் என்று அவர் சொன்னால், ஸ்த்ரீகள் கடைகளில் வந்து உட்காரக்கூடாது. நானே பார்த்துக்கிறேன் சொல்லி அவளை அனுப்பி விடுவார்.

ravi said…
கடையில் இருக்கும் மளிகை சாமான்களையே திரும்பத் திரும்ப பார்த்துவிட்டு, என்னப்பா பாண்டு ரங்கா, உன்னைப் பார்க்க வேண்டிய கண்களால் இந்த உப்பையும், மிளகாவையும் பார்க்க வைத்துவிட்டாயே புலம்புவார்.
ravi said…
ராம க்ருஷ்ண ஹரி நாம ஜபம் பண்ண ஆரம்பித்திவிடுவார். ஊர் முழுக்க துக்காராம் கடையத் திறந்து வைத்திருக்கிறார் செய்தி பரவ ஆரம்பித்ததும், அத்தனை நாள் வரைக்கும் நெத்திக்கு இட்டுக் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட, துக்காராம் கடையில் போயி மளிகை வாங்கிக்கனும் ஜோரா நெத்தியில் இட்டுக்கொண்டு வருவாங்க. நேரா கடைக்கு வந்து, ராம க்ருஷ்ண ஹரி, உப்பு என்ன விலை கேட்க, ஓ பாகவத னேன்னு சொல்லி, வந்தவர்களை கீழே விழுந்து வணங்கி உங்களுக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக் கோங்கோ சொல்லிவிடுவார் துக்காராம்.
ravi said…
அப்புறம் என்ன ஆகும் கடையில் இருக்கிற அத்தனை சாமான்களும் காலியாயிடும் துக்காராமுக்கு ஏக சந்தோஷமா போயிடும். ஜீஜாபாய் வருவாள், கடையில் இருந்த சாமான்கள் எல்லாம் காலியாகி இருக்கிறதைப் பார்த்து அவளும் சந்தோஷப்படுவாள்.
ravi said…
ஆனா, கல்லாப் பெட்டி காலியாயிருக்கும். அதைப் பார்த்ததுமே அவளோட ஒட்டுமொத்த சந்தோஷமும் காணாம போயிடும்.
ravi said…
பாகவதாகிட்ட நான் எப்படி காசு வாங்க முடியும் துக்காராம் அதுக்கு ஒரு விளக்கம் வேற கொடுப்பார். ஜீஜாபாய் ரொம்ப ஏதாவது கேட்டா, ஒரு பத்து நாட்கள் பண்டரீபுரத்துக்கு போயிடுவார். இந்தக் குடும்பத்தைப் பார்த்துக்க வேண்டியது பாண்டுரங்கனின் பொறுப்பு என்று பொறுப்பை ரொம்ப ஈஸியா பகவான் மீது போடுவார். அவரது நம்பிக்கை வீண் போகலை. அந்தப் பாண்டுரங்கன் அவரையும் சரி; அவரது குடும்பத்தினர்களையும் சரி, கைவிடவே இல்லை.
ravi said…
தொலை நோக்குப் பார்வை

அந்த பாவையில் இருப்பதோ அழியாத பாவை ..

மீன்கள் தடாகம் அமைத்த பாவை

விழிகள் மான்கள் மேயவரும் கோர்வை

பக்தி ஒரு போர்வை என்றே வாழ்ந்தேன் ...

அது சால்வை அல்ல அதுவே சோர்வை தீர்க்கும் ...வாழ்வை கொடுக்கும் மருந்து என்றே புரிய வைத்தாய் ...

வாழும் நாட்களை உன் பாதங்களில் போட்டு விட்டேன் .

நான் இறப்பினும் இனி இங்கு வந்து பிறவாமல் ஆட்கொள்ள உனை மேவினும் தெய்வம் உண்டோ ? 🍓🍓🙌🙌🌷🌷🦜🦜🦚🦚🥇🥇
ravi said…
*விட்டல விம்ஸதி 20*

*பதிவு 10* from 23rd Aug

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

விட்டல விட்டல பாண்டு ரங்க விட்டல .. ரங்கா ரங்கா ரங்க விட்டலா பாண்டு ரங்க பாண்டு ரங்க....

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
*10. செங்கலின் சிறப்பு* 💐💐💐
ravi said…
உத்கதா வினிஹிதா பதாம்புஜே

தாவகே ஜயதி தேவகீ ஸூத

இஷ்டகானி தததீ நதாத் மனாம்

புண்டரீக கர ஸங்க கோமளா 💐💐💐🙏🙏🙏
ravi said…
பாண்டுரங்கன் எழுந்தருளி இருக்கும் செங்கல் எப்படிப்பட்டது தெரியுமா??

எந்த வேண்டுதல்களையும் நம்மை பாண்டு ரங்கன் வரை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லையாம் ...

இது ஒரு குறை போல் தெரிகின்றது அல்லவா ?

குறை அல்ல நிறை ..

புண்டரீகன் எனும் பக்தனின் கரங்களால் செய்யப்பட்டது ..

மேலும் பாண்டுரங்கனின் திருவடிகளை என்றும் எப்பொழுதும் தன் சென்னியில் பதித்துள்ளது ..

அதை தொட்டு கும்பிடும் அனைவருக்கும் இஷ்டகா எனும் அந்த செங்கலே எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி விடுகிறது ..

பாண்டு ரங்கனிடம் எடுத்த செல்ல எந்த கோரிக்கையும் பாக்கி இருப்பதில்லை ...

Hi Ranga Hi vittalaa என்று மட்டும் சொல்லி விட்டு வந்தால் போதும் ...

🙌🙌🙌💐💐💐
ravi said…
இங்கே கவி என்ன சொல்ல வருகிறார் என்றால்

பகவான் திருவடி அந்த செங்கலுக்கு செய்த பெருமையை விட பக்தன் தன் கரங்கள் பட செய்ததால் அந்த செங்கலுக்கு சக்தி பல மடங்கு ஆனது

அதனால் பாண்டு ரங்கனுக்கு என்று எடுத்துச் செல்லும் கோரிக்கைகளை எல்லாம் ஒன்று விடாமல் தன்னை தொட்டு கும்பிட்டு செல்வோர்களுக்கு நிறைவேற்றி வைக்கின்றது ... 🙏🙏🙏👏👏👏
Savitha said…
ஆஹா அற்புதம் 🙏🏻🙏🏻
Shivaji said…
Arumai.🌹🌹👌
ravi said…
*படித்ததில் பிடித்தது…!!*

சந்தையில் ஒரு வியாபாரி கௌதாரி விற்பனை செய்து கொண்டிருந்தான். அவர் பெரிய வலையால் மூடப்பட்ட கூடையில் நிறைய கௌதாரி பறவைகள் வைத்திருந்தார்! பக்கத்தில் ஒரு சிறிய கூடையில் ஒரே ஒரு கௌதாரி இருந்தது!

ஒரு வாடிக்கையாளர் கேட்டார் கௌதாரி எவ்வளவு? "400 ரூபாய்..!"

ravi said…
வாடிக்கையாளர் சிறிய கூடைய பார்த்து ஏன் இந்த கௌதாரி தனி கூடையில் உள்ளது மற்றும் இதன் விலை என்ன என கேட்டார்.
வியாபாரி, "நான் அதை விற்க விரும்பவில்லை..." என்றார்.

ஆனால் வாடிக்கையாளர் வலியுறுத்த, இதற்கு ரூ.5000 என சொல்லுகிறார் வியாபாரி ..! வாடிக்கையாளர் ஆச்சரியத்துடன் கேட்டார்,
"ஏன் இவ்வளவு விலை அதிகமாக இருக்கு, இதற்கு என்ன விசேஷ தன்மை உள்ளது..?"

"
ravi said…
உண்மையில் இது என் செல்லப்பிராணி மற்றும் இது மற்ற கௌதாரிகளை சிக்க வைக்கும் வேலை செய்கிறது ..!"
"ஆம் இது கத்தும்போது, ​​மற்ற பிற கௌதாரிகள் இது இருக்கும் இடத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் கூடி வருகின்றன, பின்னர் நான் அனைத்தையும் எளிதில் வலையில் சிக்க, நான் அனைத்தையும் பிடித்து கூண்டில் அடைத்து விடுகிறேன்..!" என்றான் வியாபாரி.

ravi said…
அப்புறம் அது விரும்பும் உணவை இந்த கௌதாரிக்கு "டோஸாக" தருகிறேன், அது மகிழ்ச்சி அடைகிறது..!
அதனால்தான் அதிக விலை..!" என்றான்.

அந்த புத்திசாலி வாடிக்கையாளர் 5000 ரூபாயை கொடுத்து, சந்தை என்றும் பாராமல் கௌதாரியின் கழுத்தை முறுக்கினான்..!

ravi said…
ஒருவர் கேட்டார்,
ஏன் இப்படி செய்தாய் ..?
அதற்கு அந்த வாடிக்கையாளர்....
"தனது சொந்த சமுதாயத்தை, தனது சுய லாபத்திற்காக, தனது மக்களை ஏமாற்றி காட்டிக் கொடுக்கும் ஒரு துரோகிக்கு உலகத்தில் வாழ உரிமை இல்லை ..!" என்று கூறினார்.

நம்மைச் சுற்றி ரூ .5000 விலையுள்ள பல கௌதாரிகள் உள்ளன..! அவர்களிடம் ஜாக்கிரதையாக நாம் தான் இருக்க வேண்டும்.
ravi said…
*One sentence per chapter gist of Bhagavat Gita*



🕉


*BHAGWAD GITA*
_*in one sentence*_
_*per chapter...*_


*Chapter 1*

_Wrong thinking is the only problem in life_

*Chapter 2*

_Right knowledge is the ultimate solution to all our problems_

*Chapter 3*

_Selflessness is the only way to progress & prosperity_

*Chapter 4*

_Every act can be an act of prayer_

*Chapter 5*

_Renounce the ego of individuality & rejoice in the bliss of infinity_

*Chapter 6*

_Connect to the Higher consciousness daily_

*Chapter 7*

_Live what you learn_

*Chapter 8*

_Never give up on yourself_

*Chapter 9*

_Value your blessings_

*Chapter 10*

_See divinity all around_

*Chapter 11*

_Have enough surrender to see the Truth as it is_

*Chapter 12*

_Absorb your mind in the Higher_

*Chapter 13*

_Detach from Maya & attach to Divine_

*Chapter 14*

_Live a lifestyle that matches your vision_

*Chapter 15*

_Give priority to Divinity_

*Chapter 16*

_Being good is a reward in itself_

*Chapter 17*

_Choosing the right over the pleasant is a sign of power_

*Chapter 18*

_Let Go, Lets move to union with God_
BSC said…
Sir respect to an individual comes from within whether working or retired. I respect you both personally and professionally.
TV Ganesh said…
உபேந்திரன்

உபேந்திரன்..
வாமனனின் மறு பெயர்..
இந்திரனுக்கு சஹாயம் செய்பவர்..
ஒரு குடையின் கீழ் அனைத்துயிரையும் அரவணைக்கும் பரப்ரம்மம்..
அலங்காரப்ரியனது லீலா வினோதம்

பாதம் பணிந்திடும் கஜேந்திரன்.
பணிவோடு ஆடையில் பதிந்திருக்கும் கருடன்..
குதிரையும் நீரோடையிலே துள்ளும் மீனும் ஆவும்...
அனைத்தும் அவன் இடை ஆடையிலே.

கண்டதும் காதல் கொண்டவர் பலர்..
காணா திருப்பினும் மையலாகிப்போனவர் பலர்..
கண்ணனால் மனம் கொள்ளை போவர் பலர்...
கண்பெற்ற பயனை அடைகின்றோம் தினம் வரும் கண்ணனைக் கண்டு.

ஆறறிவு அற்ற ஜீவனும் அவன் பாதம் பணியும் போது..
அறறிவு கொண்ட நாம் கொடுத்தவனை நிமிடமும் மறக்கலாகுமோ,

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
ravi said…
*விஷ்ணு புராணம் பகுதி- 4*

*தேவ மனிதப் படைப்புகள*

@mahavishnuinfo

"ஓ குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், பிதுர்க்கள், அசுரர், மனிதர் முதலானவர்களையும் மிருகங்களையும், பறவைகளையும், மற்றுள்ள தாவரங்களையும் பூசரங்களையும் கேசரங்களையும் நீர்வாழும் உயிரினங்களையும் பிரம்மதேவர் எப்படிப் படைத்தார்? அவைகளுக்குக் குணங்களும் சுபாவங்களும் ரூபங்களும் யாவை? இந்த விஷயங்களையெல்லாம் விஸ்தாரமாக அடியேனுக்கு கூறியருள வேண்டும்!" என்று மைத்ரேயர் கேட்டார்.
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 495*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

*5. மந்தஸ்மித சதகம்*

புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்

*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே

சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
5/69👍👍👍👍💐💐💐
ravi said…
சைத்ய ப்ரக்ரமமாச் ரிதோsபி நமதாம் ஜாட்யப்ரதாம் தூநயன் 🙂🙂🙂

ராகவ்யஞ் ஜன பேசலோsபி கிரிஜே வைமல்யமுல்லாஸயன்🙂🙂🙂

( நைர்மல்யம் பரமம் கதோபி கிரிசம் ராகாகுலம் சராயன்🙂🙂🙂 )

லீலாலாப புரஸ்ஸரோsபி ஸததம் வாசம்யமான் ப்ரீநயன் 🙂🙂🙂

காமாக்ஷி ஸ்மிதரோ சிஷாம் தவ ஸமுல்லாஸ கதம் வர்ண் யதே 🙂🙂🙂
ravi said…
அம்மா நீ ஸ்வபாவ மதுரா ... மதுரமான ஸ்வபாமுடையவள் .
இனிமையாய் என்றும் இருப்பவள் . எல்லோராலும் விரும்பப்படுபவள் .. உன் புன்னகை அதனால் என்றும் இளமையாக இனிமையாக, இனிப்பாக இருக்கிறது
ravi said…
*[108/108] – அருள்மிகு பரமபதநாதன் – பெரியபிராட்டியார்*
ravi said…
திருப்பரமபதம் அல்லது வைகுண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும்.

8 ஆழ்வார்களால் 36 பாசுரங்களில் பாடல் பெற்ற தலமாகும்.

வைணவ அடியார்கட்கு, இறைவனன்றி தமக்குப் புகலிடம் யாதுமில்லை என்றெண்ணி அடியவர்கட்கு மோட்சத்தை நல்கும் இந்தப் பரமபதமே வைணவர்களின் கடைசி இலக்காகும்.

இதனை திருநாடு என ஆழ்வார் பாசுரங்களில் குறிக்கின்றனர்.👏👏👏
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*
ravi said…
அதனைக் கேட்ட இராவணனது மகன் அதிகாயன்,

தன் உள்ளத்தில் பொங்கி வந்த கோபத்தில் இராவணனிடம்,

"தந்தையே! உன் தம்பியைக் கொன்றவனது தம்பியை, நான் கொன்று வருவேன்.

நீ பெற்ற துயரத்தை, அவனையும் அடைய வைப்பேன். நான் அப்படிச் செய்யத் தவறினால், உன் மகன் எனச் சொல்லத்தக்கவன் அல்லேன்" என்று சூளுரைத்தான்.

"தந்தையே! சேனையை அழைத்துக் கொண்டு போ என்று சொன்னாலும், அன்றி தனியாகவே போருக்குப் போ என்று சொல்லிப் பணித்தாலும், உன் எண்ணப்படி செய்வேன், விடை தருக!" என்றான்.
ravi said…
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
ravi said…
*இறை இன்பம் (21) அபிராமி அம்மை பதிகம் (20)*🎼🎼🎼💐💐💐💐
ravi said…
கைப்போது கொண்டு

உன் பதப்போது தன்னில்

கணப் போதும் அர்ச்சிக்கிலேன்

கண் போதினாலுன்

முகப்போது தன்னையான்
கண்டு தரிசனை புரிகிலேன்

முப்போதும் ஒருபோதும் என் மனப் போதிலே
முன்னி உன் ஆலயத்தின்
முன் போதுவார் தமது பின் போத நினைகிலேன்

மோசமே போய் உழன்றேன்

மைப் போதகத்திற்கு நிகரெனப் போதெரு
மைக்கடா மீதேறியே

மாகோர காலன் வரும்போது

தமியேன்
மனம் கலங்கித் தியங்கும்

அப்போது வந்து உன் அருட்போது தந்தருள்

ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!💐💐💐
ravi said…
தனது வாழ் நாளின் இறுதி நேரத்தில், கடைசி நொடியில், அபிராமி அன்னை தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்,
அபிராமி பட்டர்.

தான் தன் வாழ் நாட்களை வீணே போக்கிவிட்ட போதிலும்,

அவள் தனக்கு உதவிட வேண்டும் என்று கேட்கிறார்..

அவர் தான் செய்ததாக செய்த தவறுகளை பட்டியல் இடுகிறார்.

அவற்றை மன்னித்து தன்னை, அவளுடன் ஐக்கியப் படுத்திக் கொள்ள பிரார்த்திக்கிறார்.🙏🙏🙏
ravi said…
நான் ஒரு நொடியும் உன் பாதங்களை நினைத்து உனக்கு அர்ச்சனை செய்தவன் அல்ல.

கண் இமைக்கும் நேரம் கூட உன் முகத்தினை கண்டு தரிசனம் செய்யவில்லை.

மூன்று கால பூஜைகளுக்கு உன் ஆலயத்திற்கு பக்தர்கள் கூட்டம் செல்லும்.

ஒரு போதாகிலும் நான் அவர்களை பின் தொடர நினைக்கவில்லை.🙏🙏🙏
ravi said…
வாழ்க்கையை மனம் போன போக்கில் வீணே கழித்துவிட்டேன்.

உலக இன்பங்களில் மதி இழந்து உழன்றேன்.

தவறை இப்போது உணர்கிறேன்,

என்ன பயன். காலம் கடந்து விட்டது.

என் உயிரைப் பறிக்க யமன் தன் கருநிற எருமையின் மீது இதோ வந்து விட்டான்.

மனம் கலங்கி வருந்தி நிற்கின்றேன்😰😰😰
ravi said…
எனக்கு இப்போது உன்னை அன்றி வேறு புகலிடம் இல்லை.

உடனே வா.

என்னை ஏற்றுக்கொள். உன்னுடன் இணைத்துக்கொள் தாயே”

இந்த வேண்டுதலை நமக்காக அவர் அன்னையிடம் வைத்து உள்ளார்.

நாமும் இப்போதாவது உண்மை நிலையை அறிந்து அவள் பாதம் பற்றுவோம்.👣👣💐💐💐🙏🙏🙏
ravi said…
🙂🙂🙂🙂🙂💐💐💐💐👏👏👏
ravi said…
*விட்டல விம்ஸதி 20*

*பதிவு 10* from 23rd Aug

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

விட்டல விட்டல பாண்டு ரங்க விட்டல .. ரங்கா ரங்கா ரங்க விட்டலா பாண்டு ரங்க பாண்டு ரங்க....

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
*10. செங்கலின் சிறப்பு* 💐💐💐
ravi said…
உத்கதா வினிஹிதா பதாம்புஜே

தாவகே ஜயதி தேவகீ ஸூத

இஷ்டகானி தததீ நதாத் மனாம்

புண்டரீக கர ஸங்க கோமளா 💐💐💐🙏🙏🙏
ravi said…
பாண்டுரங்கன் எழுந்தருளி இருக்கும் செங்கல் எப்படிப்பட்டது தெரியுமா??

எந்த வேண்டுதல்களையும் நம்மை பாண்டு ரங்கன் வரை எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லையாம் ...

இது ஒரு குறை போல் தெரிகின்றது அல்லவா ?

குறை அல்ல நிறை ..

புண்டரீகன் எனும் பக்தனின் கரங்களால் செய்யப்பட்டது ..

மேலும் பாண்டுரங்கனின் திருவடிகளை என்றும் எப்பொழுதும் தன் சென்னியில் பதித்துள்ளது ..

அதை தொட்டு கும்பிடும் அனைவருக்கும் இஷ்டகா எனும் அந்த செங்கலே எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி விடுகிறது ..

பாண்டு ரங்கனிடம் எடுத்த செல்ல எந்த கோரிக்கையும் பாக்கி இருப்பதில்லை ...

Hi Ranga Hi vittalaa என்று மட்டும் சொல்லி விட்டு வந்தால் போதும் ...

🙌🙌🙌💐💐💐
ravi said…
இங்கே கவி என்ன சொல்ல வருகிறார் என்றால்

பகவான் திருவடி அந்த செங்கலுக்கு செய்த பெருமையை விட பக்தன் தன் கரங்கள் பட செய்ததால் அந்த செங்கலுக்கு சக்தி பல மடங்கு ஆனது

அதனால் பாண்டு ரங்கனுக்கு என்று எடுத்துச் செல்லும் கோரிக்கைகளை எல்லாம் ஒன்று விடாமல் தன்னை தொட்டு கும்பிட்டு செல்வோர்களுக்கு நிறைவேற்றி வைக்கின்றது ... 🙏🙏🙏👏👏👏
ravi said…
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 496*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

*5. மந்தஸ்மித சதகம்*

புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்

*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே

சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ravi said…
5/70👍👍👍👍💐💐💐
ravi said…
*அழகு வெள்ளம்*

முழுமதி நிகர்த்த முகம் அருள் பொழிய 🌝

முப்புரமெரித்த சிவன் மனம் நெகிழ

தழுவிய இடையில் மேகலை குலுங்க

தாளாநகில் கனம் இடை மெலத்துவள

கழை வில்லுடனே கடிமலர் அம்பும் கயிலங்குச பாசமும் தரித்து

தொழுதிடும் அடியோர் முன் வந்தருளும் தேவி

என் முன் நீ வரவேண்டும் 🙏🙏🙏👣👣
ravi said…
ச்ரோணீ சஞ்சல மேகலா முகரிதம் லீலா கதம் மந்தரம் 🙂🙂🙂

ப்ரூவல்லீ சலனம் கடாக்ஷ வலனம் மந்தாக்ஷ வீக்ஷாசணம்🙂🙂🙂

யத் வைதக்த்யமுகேன மன்மதரிபும் ஸம்மோஹயந்த்யஞ்ஜஸா 🙂🙂🙂

ஸ்ரீகாமாக்ஷி தவ ஸ்மிதாய ஸததம் தஸ்மை நமஸ்குர்மஹே 🙂🙂🙂
ravi said…
அம்மா உன் இடை இடையறாது அசையும் ஓட்யாண ஒலியும் உன் அழகிய நடையும் மனோகரமான உன் புருவங்களின் அசைவும் நாணத்துடன் பார்க்கும் உன் கடைவிழியும் உன் முத்தான புன்னகைக்கு ஜதி சேர்க்கின்றனவே தாயே ....
ravi said…
*[108/108] – அருள்மிகு பரமபதநாதன் – பெரியபிராட்டியார்*
ravi said…
திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம்.

இராமானுஜர் இயற்றிய வேதாந்த சங்கிரஹம் என்னும் நூல் திருநாட்டைப் பற்றித் தெளிவாகவும்,

நேரில் பார்ப்பது போலவும் விளக்கிப் பேசுகிறது.

இராமானுஜர் இயற்றிய கத்யத்ரயத்தில் ஒன்றான வைகுண்டகத்யத்தில் பரமபத வர்ணனை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.

இராமானுஜரின் வரலாற்றைப் பேசும் “ தர்ப்பணம்” என்னும் நூலில் பரமபதம் விளக்கப்பட்டுள்ளது.👏👏👏🙏🙏🙏
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*
ravi said…
மகன் அதிகாயன் சொன்னதைக் கேட்டு இராவணன் பெருஞ்சேனையுடன், அவனை போருக்கு அனுப்பி வைத்தான்.

மேலும் சிறந்த வீரர்களான, கும்பன் எனும் கொடுந்தன்மையானும், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் மகனுடைய தேருக்கு முன்பாகவும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்புகிறான்.

ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறி அதிகாயன் போருக்குச் செல்கிறான்.

அவனோடு கோடி யானைப் படையும், அதே அளவு குதிரைப் படையும் சென்றன.

அதிகாயன் கவசத்தை அணிந்து கொண்டு, கையில் வில்லையும், உடை வாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
ravi said…
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
ravi said…
*இறை இன்பம் (22) அபிராமி அம்மை பதிகம் (21)*🎼🎼🎼💐💐💐💐
ravi said…
மிகையுந் துரத்த

வெம்பிணியுந் துரத்த

வெகுளி யானதுந் துரத்த

மிடியுந் துரத்த

நரை திரையும் துரத்த

மிகு
வேதனைகளுந் துரத்த

பகையுந் துரத்த

வஞ்சனையுந் துரத்த

பசியென் பதுந் துரத்த

பாவந் துரத்த

பதிமோகந் துரத்த

பல காரியமுந் துரத்த

நகையுந் துரத்த

ஊழ் வினையுந் துரத்த

நாளுந் துரத்த

வெகுவாய்
நாவரண்டு ஓடிக்

கால் தளர்ந்திடும் என்னை

நமனுந் துரத்துவானோ

அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!

ஆதி கடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!🙏🙏🙏💐💐💐
ravi said…
அகில உலகுக்கும் ஆதாரமாய் உள்ள அன்னையிடம் அபிராமி பட்டர் தான் ஓடி ஓடிக் களைத்து விட்டதாகவும், தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறார்.

தன்னை எப்போதும் எதாவது ஒன்று துரத்திக்கொண்டு இருப்ப
தாகவும்,

தன்னால் ஒரு நொடி கூட நிம்மதியாக ஒய்வு எடுக்க முடியவில்லை என்கிறார்🙏
ravi said…
எனவே தனக்கு ஒரு வழி சொல்லவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்.

அவ்வாறு துரத்துபவை யாவை?

ஆசை,
நோய்,
கோபம்,
வறுமை,
தலை முடி நரைத்தல்,
உடல் தோல் சுருங்குதல், மன உளைச்சல்,
வலி,
எதிரிகளின் தாக்குதல்கள், பொறாமை,
வஞ்சனை,
பசி,
பாவம்,
மண்ணாசை, தேவையற்ற செயல்கள், மான அவமானங்கள், ஊழ்வினை முதலானவை.

உலக வாழ்க்கையில் இவை நம்மை எப்போதும் சுற்றி வருகின்றன. 🙏
ravi said…
நாம் கவலைப் படுகிறோம்.

அவைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து வருதலால்,

நாம் அவற்றுடன் போராடிக் களைத்துப் போகிறோம்.

தொடர்ந்து ஓடுவதே நம் வாழ்க்கை என்று ஆகிவிடுகின்றது.

இந்த நிலைமையில் தன்னை யமனும் துரத்துவான் ஆயின், தன்னால் ஏதும் செய்ய இயலாது;

அன்னையால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியும் என்று கூறுகிறார்.💐🙏👏
ravi said…
“இறை தேடும்போதே இறைவனையும் தேடு”

என்ற முதுமொழிக்கு இணங்க

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சிறிது நேரமாவது இறைவனை நினைக்க வேண்டும்,

அவரது அருள் ஒன்றே நமக்கு நிம்மதியையும் மன அமைதியையும் தரும்.

இதுவே பட்டர் நமக்கு சொல்லும் அறிவுரை.🙏🙏🙏👏👏👏💐💐💐
ravi said…
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை