அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 10 பதிவு 7

          அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 10

பதிவு 7


கேள்வி பதில் நேரம்

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 10

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  காலை வணக்கம் ... உதிக்கின்ற  செங்கதிர் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும் 🌞

இன்று என்ன கேள்விகள் ? 




*நான்*   நீங்கள் 78 பாடல் பாடும்  வரை அம்பாள் வரவேயில்லை .. 

உங்கள் மன நிலை எப்படி இருந்தது ? 

நாங்களாக இருந்திருந்தால் அபிராமியை திட்டி தீர்த்திருப்போம் .. 

 🙏🙏🙏

*பட்டர்*  

அவளை அரைகுறையாய் நம்பவில்லை முழுவதுமாக நம்பினேன் .. 

அரைகுறையாக நம்பி இருந்தால்  அவளும் பிறைச் சந்திரனை மட்டுமே வானத்தில் காட்டி இருப்பாள் . 

முழுமையாக நம்பியதால் அவள் பூர்ண சந்திரனை வானத்தில் கொண்டு வந்தாள்யார் 

யாரையோ நம்புகிறீர்கள்  

என் அபிராமியை முழுவதுமாக நம்பி பாருங்கள் ... 

இதை நான் சொல்வதை விட நீங்களே அனுபவித்தால் மட்டுமே பரமானந்தம் காண முடியும் .. 

 🌷🌷🌷🌞🌞🌞




*நான்*   

உண்மை ... உங்கள் மாதிரி பக்தி எங்களுக்கு வருவது மிகக் கடினம் .. 

மண்ணளிக்கும்  செல்வத்தில் தான் மனம் போகிறது ... 

அமையும் அமையொரு தோளினர் மேல் வைத்த ஆசை தான் எங்களை எல்லாம் மாயை என்பதை அறிய வைக்க மறுக்கிறது... 

 *பட்டர்*  அந்தாதி தினமும் சொல்வதால் மாயை சீக்கிரம் விலகும் .. அவள் வந்து பாசத்தொடரை எல்லாம் வலி தெரியாமல் வந்து அரிப்பாள்... 




🔥🔥🔥*நான்* : 

பட்டரே ! உங்கள் அந்தாதி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் + சௌந்தர்ய லஹரியின் தமிழாக்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது 

 *பட்டர்* ... அப்படி சொல்ல முடியாது அவைகளை படைத்தவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள் .. 

ஹயக்ரீவர் , வாக் தேவிகள் , அகஸ்தியர் , அவர் மனைவி லோபா முத்திரை  ... 

சௌந்தர்ய லஹரீ முதல் 40 பாடல்கள் ஈசனே இயற்றியது மீதி ஆதிசங்கரர் ... 

நானோ நாய்த்தலையன் .. பேயன் ... 

ஆனால் என் அறிவுக்கும் புரியும் வண்ணம் அவள் என் சொற்களில் வந்து தன்னை பொறுத்திக்கொண்டாள் என்று சொல்வதுதான் சரி .. 

நான் .. பட்டரே உங்கள் தன்னடக்கம் புல்லரிக்கின்றது ... 

பட்டர் .. சிரித்துக்கொண்டே என் சிந்தைக்குள் கரைந்து போனார்
👏👏👏🦜🦜🦜🌷🌷🌷

Comments

ravi said…
அஸங்க்யேயாய நமஹ.....!!!

ராமாநுஜர் காலத்தில் திருவரங்கத்தில் பராங்குசன் என்றொரு வைணவர் வாழ்ந்து வந்தார். அவர் சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட
அனைத்து ஆசார அனுஷ்டானங்களையும் முறைப்படிப் பின்பற்றி வந்தார். ஆனால் தந்தைக்கு நேர் மாறாக அவருக்கு ஒரு தனயன்.
அவன் பெயர் புண்டரீகாட்சன். அவன் சூதாட்டம் போன்ற தீய பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வந்தான்.
ravi said…
ஒருநாள் பராங்குசன் புண்டரீகாட்சனிடம், “மகனே! நீ நெற்றியில் திலகம் அணிந்து கொள்வதில்லை. கோவிலுக்குச் செல்வதில்லை.
இறைவனின் நாமங்களைச் சொல்வதில்லை. ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதுவதில்லை.
இப்படி எந்த நல்ல பழக்கமும் இல்லாமல் நீ இருக்கிறாயே! அரங்கனே கதி என்றல்லவோ நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்?

சாஸ்திர சம்பிரதாயங்களை வழுவாது பின்பற்றியவர்களின் குலத்தில் பிறந்து விட்டு நீ இப்படிச் சூதாடுவது முறையா?” என்று கேட்டார்.

ஆனால் தந்தையின் பேச்சுக்களை மகன் பொருட்படுத்தவே இல்லை.
ravi said…
பராங்குசன் தனது நண்பரிடம் தன் மகனின் நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லி வருந்தினார். அப்போது அந்த நண்பர்,
“மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமாநுசன் வந்து தோன்றிய அப்பொழுதே நண்ணறு ஞானம் தலைக்கொண்டு நாராணற்கு ஆயினரே!
என்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீரா?” என்று கேட்டார்.
ravi said…
ஆம்! இது ராமாநுஜரைப் பற்றித் திருவரங்கத்து அமுதனார் இயற்றிய ராமாநுஜ நூற்றந்தாதி பாடலாயிற்றே!
இறைவனே பூமியில் வந்து அவதரித்து உபதேசித்த போதும் திருந்தாத மக்கள் எல்லாம், ராமாநுஜரின் உபதேசங்களைக் கேட்டுத்
திருந்தினார்கள் என்று கூறும் பாடல் அல்லவா இது?” என்றார் பராங்குசன்.
ravi said…
உங்கள் மகனையும் ராமாநுஜரிடம் அனுப்புங்கள்! அவரது உபதேசத்தைக் கேட்டால் அவன் மனம் திருந்தி விடுவான்!” என்றார் அந்த நண்பர்.
பராங்குசனும் தன் மகனை ராமாநுஜரின் காலட்சேப கோஷ்டிக்கு அனுப்பி வைத்தார்.
புண்டரீகாட்சனின் நடவடிக்கைகளைப் பற்றி ஏற்கனவே பராங்குசனிடம் இருந்து அறிந்து கொண்ட ராமாநுஜர்,
அவனுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறினார். “நாம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்கு வாழும் நம்மவர்கள்,
நமது ஆடை மற்றும் தோற்றத்தைக் கொண்டு, இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் கண்டு கொள்கிறார்கள் அல்லவா?

அதுபோலத் தான் இறைவனிடம் செல்லும் போது, நெற்றிக்குத் திலகம் அணிந்து, முறைப்படி வேஷ்டி உடுத்திச் சென்றால்,
இவன் நம்மைச் சேர்ந்தவன் என்று இறைவனும் நம்மை அடையாளம் கண்டுகொள்வான்! நமக்கு நிறைய அருள்புரிவான்!
ravi said…
ஆகையால் வெளி அடையாளங்கள் தேவை இல்லை என்று எண்ணாமல், நீ நெற்றிக்குத் திலகம் அணிய வேண்டும்!
முறைப்படி வேஷ்டி உடுத்த வேண்டும்!” என்றெல்லாம் அறிவுரை கூறி அவனைத் திருத்தினார் ராமாநுஜர்.
அன்று முதல் வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றிக்குத் திலகம் இட்டுக் கொண்டு தினமும் ராமாநுஜரின்
காலட்சேபத்துக்குச் சென்றான் புண்டரீகாட்சன்.

ravi said…
ஆனால் அவனது பழைய நண்பர்கள் திடீரென ஒருநாள் அவன் மனதை மாற்றி
அவனைச் சூதாட அழைத்துச் சென்றார்கள். காலட்சேபம் கூற வந்த ராமாநுஜர், புண்டரீகாட்சன் வரவில்லை என்பதை உணர்ந்தார்.
அவன் சூதாடச் சென்றிருந்ததை மற்ற சீடர்கள் மூலம் அறிந்து கொண்டார்.
ravi said…
அவன் சூதாடிக் கொண்டிருந்த இடத்துக்கே அவனைத் தேடிச் சென்றார் ராமாநுஜர்.
ராமாநுஜர் வருவதைக் கண்ட புண்டரீகாட்சன், “நான் உங்களை விட்டு விலகிவிட்டேன்! இனி என்னைத் தேடி வராதீர்கள்!” என்று கூறினான்.
ராமாநுஜரோ, “நீ என்னை விட்டிருக்கலாம்! ஆனால் நான் உன்னை விடுவதாக இல்லை! வா!
எண்ணில் அடங்காத அனைத்து உயிர்களும் இறைவனின் சொத்து. அச்சொத்துக்களை இறைவனாகிய உடையவனிடம்
சேர்க்க வேண்டியது என் கடமை. அதனால் இறைவனின் சொத்துக்களுள் ஒன்று கூட வீணாவதை நான் அனுமதிக்க மாட்டேன்!” என்று சொல்லி,
அவனைக் காலட்சேபத்துக்கு அழைத்து வந்தார்.
ravi said…
தொடர்ந்து ராமாநுஜரின் காலட்சேபங்களைக் கேட்டு,
புண்டரீகாட்சன் அரங்கனுக்கே அடியவனாகி இறுதியில் முக்தியும் பெற்றான்.
ravi said…
ராமாநுஜர் கூறியபடி, எண்ணில் அடங்காத அனைத்து உயிர்களையும் தனது சொத்தாகத் திருமால் கொண்டிருப்பதால்,
அவர் ‘அஸங்க்யேய:’ என்றழைக்கப்படுகிறார்.
‘ஸங்க்யா’ என்றால் எண்ணிக்கை என்று பொருள். ‘அஸங்க்யேய:’ என்றால் எண்ணில் அடங்காதது என்று பொருள்.
எண்ணில் அடங்காத சொத்துக்களை உடைய திருமால் ‘அஸங்க்யேய:’. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 248-வது திருநாமம்.
“அஸங்க்யேயாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் இழந்த சொத்துக்கள் அனைத்தும்
மீண்டும் கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
ravi said…
கோவிந்தனும் "கோ' வும்.....!!!

கிருஷ்ண பரமாத்மாவிற்கு மாடுகள் மீது ஏன் அவ்வளவு வாத்ஸல்யம்? மாடு மேய்க்க எதனால் ஆசைப்பட்டார்?

ravi said…
நம் அனைவரையும் வைகுண்டத்திலிருந்தபடியே மேய்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீமந்நாராயணன் , உலகையே ஆளும் சர்வேச்வரன் என்ற பெருமையைக் காட்டிலும் தன்னை மாடு மேய்க்கும் ராஜகோபாலனாக அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று விரும்பினாராம். எதற்காக ? அப்படி என்ன விசேஷத்தை பரமாத்மா பசுமாட்டிடம் கண்டார் ?
ravi said…
உலகையே மேய்க்கும் சக்தி படைத்த நாராயணனுக்கு மாட்டின் மேல் தனிப்பட்ட பிரியம் ஏன் உண்டாயிற்று!

நாராயணா! வாசுதேவாய! என்று அழைப்பதை விட கோவிந்தா என பக்தர்கள் அழைப்பதை விரும்பினாராம்.

உலகையே காத்து ரிக்ஷிக்கும் எம்பெருமானிடத்தில் உலகத்தார் நன்றியுணர்வு இல்லாதிருப்பதை பார்த்து, க்ருஷ்ணாவதாரத்திலே தன் தனிப்பட்ட விருப்பமாக மாடு மேய்க்கும் என்று அவதாரம் செய்ய வந்தார்.
ravi said…
மாட்டுக்கு ஒரு விசேஷ குணம் உண்டு. ஜீவனுக்கு' உடல் ' கொடுத்து,'புத்தி' கொடுத்து, திடமான 'மனம்' கொடுத்து , வாழ்வதற்கு 'பூமியும்' , ' ஆகாரம் ' கொடுத்து, பேராபத்துக்கள் வராமலிருக்க பஞ்ச பூத அதிதிகளையும் தன் ஆணையால் எல்லை தாண்டா விடாமல் செய்து மேய்க்கும் பரமாத்மா நாராயணனை ஆறு அறிவு இருந்தும் உலகத்தோரிடம் நன்றியுணர்வு இல்லை.
ravi said…
அதே சமயம், எஜமான் புல் மேய விட்டாலும், அம்மாடு, மாடு மேய்ப்பவனை ஒரு கண்ணால் நன்றியோடு பார்த்துக் கொண்டே புல் மேயும். தன் எஜமானன் தன்னை ரக்ஷித்து உணவு கொடுக்கிறான் என்ற நன்றி மட்டுமில்லாமல் , தன் பாலையே எஜமானன்க்கு திருப்பி தரும் . ஆனால் மனிதனோ, தான் மேய்ப்பதற்க்காக போட்ட தீனியை, தன் வாயில் அள்ளி போட்டுக் கொண்டு, மேய்ப்பவனை பார்க்காமல் இருக்கிறான். ' கோவிந்தா' எனச் சொல்லி வாயில் போட்டுக் கொண்டால் என்ன ?
ravi said…
மாடு தனக்கு தீனி வைப்பவன் வந்தாலே ஆர்வத்துடன் ' மா..' என்று நன்றி காட்டும்.

பசுமாடு கண்ணனை பார்த்து விட்டால், தனக்கு பிடித்தமான புல்லை மேய்வது மறந்து கண்ணனையே பார்த்துக் கொண்டே இருக்குமாம்.

பசு மாடு நன்றியுடன் இருப்பதில் ஆச்சர்யமில்லை....

அதன் கன்று குட்டி ஆசையோடு தன் தாயிடம் பால் குடிக்க ஓடும் போது, அங்கு கண்ணனை பார்த்து விட்டால், தாய் பசுவின் மடியில் வாய் வைத்து, சுரக்கும் பாலை குடிக்க கூட நினைவில்லாமல் கண்ணையே நன்றியுணர்வோடு பார்த்துக் கொண்டே இருக்குமாம் .

உலகத்தை நிர்வகிக்கும் பரவாசுதேவன் இந்த பசுக்களை மேய்க்க ஒரு தனி அவதாரமாக கோபாலனாக வந்தார். பசுக்களிடம் பரம வாஞ்சை அவனுக்கு.
ravi said…
*13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த சாபங்களால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.*

*சாபங்களும்.. நேரும் துயரங்களும்*

@mahavishnuinfo

13 வகையான சாபங்கள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அவை: 1. பெண் சாபம் 2. பிரேத சாபம் 3. பிரம்ம சாபம் 4. சர்ப்ப சாபம் 5. பித்ரு சாபம் 6. கோ சாபம் 7. பூமி சாபம் 8. கங்கா சாபம் 9. விருட்ச சாபம் 10. தேவ சாபம் 11. ரிஷி சாபம் 12. முனி சாபம் 13. குலதெய்வ சாபம்.
ravi said…
1. பெண் சாபம்:

பெண்களை ஏமாற்றுவதாலும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படக்கூடும். இந்த சாபத்தால் வம்சம் அழியும்.

2. பிரேத சாபம்:

இறந்த மனிதரின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவது, அவருடைய உடலை தாண்டுவது, இறுதி சடங்கு காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் நெருங்கிய உறவுகளை பார்க்க அனுமதி மறுப்பது பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3. பிரம்ம சாபம்:

தமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, அந்த வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்காமல் அந்த வித்தையை மறைப்பது பிரம்ம சாபத்துக்கு வழிவகுக்கும். இதனால் படிப்பு தடைபடும்.
ravi said…
4. சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். இதனால், கால-சர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமணம் தடைப்படும்.

5. பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி, தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை, தாத்தா-பாட்டி போன்றவர்களை உதாசீனப்படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.
ravi said…
6. கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் சுரப்பு நின்ற பசுவை இறைச்சிக்கு வெட்டக் கொடுப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ, வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7. பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், பிளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.
ravi said…
8. கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் படுத்துவதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் நேரும். இந்த சாபத்தால் சொந்த நிலத்தில் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9. விருட்ச சாபம்:

மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீட்டு மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
ravi said…
10. தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11. ரிஷி சாபம்:

கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
ravi said…
12. முனி சாபம்:

எல்லை தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13. குலதெய்வ சாபம்:

நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை வழிபடாமல் இருப்பதால் இந்த சாபம் நேரும். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்
ravi said…
கோதையின் பக்திப் பாதை

முக்கூர் ஸ்வாமின் கோதையின் பாதையை தழுவி எழுதப்பட்டது
நெல்லுக்குள் அரிசி இருக்கிறது. உள்ளிருக்கும் அரிசியானது மேலே உமியினாலும் தவிட்டாலும் மூடப் பட்டிருக்கிறது. இதில் மூன்று தத்துவம் இருப்பதை நாம் பார்க்கலாம். . அரிசி, உமி, தவிடு இவை மூன்றும் அரிசியை வியாபித்து இருக்கின்றன. தவிடு என்பது ஸூக்ஷமம், உமி ஸ்தூலம், அரிசியானது உள்ளே இருக்கிறது
ravi said…
ஜீவாத்மா இந்த சரீரத்துள் இருக்கிறது. கண்ணுக்குத் தெரிவதால், சரீரத்தை ற்கு ஸ்தூல சரீரம் என்று பெயர். ஆத்மா ஸ்தூல சரீரத்துள் சஞ்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிறது..

ஒருநாள் இந்த சரீரத்தை விட்டு ஆத்மா வெளியில் கிளம்மும். ஸூக்ஷ்ம சரீரத்தை பற்றிக் கொள்ளும். ஸூக்ஷ்ம சரீரம் கண்ணுக்கு புலப்படாது. ஸூக்ஷ்ம சரீரத்துள் அர்ச்சிராதி மார்கத்தில் மோக்ஷத்துக்கு போகும். சுக்ல கதி என்று பெயர். அப்படி ஸூக்ஷ்ம சரீரத்தை பற்றிக் கொண்டு போகும் ஜீவாத்மா சிறந்த ஞானவானாக விளங்குவான். எனவே ஸ்தூல சரீரம் உமி, ஸூக்த சரீரம் தவிடு, ஜீவாத்மா என்பது அரிசி .
ஆத்மாவிற்கு அன்னத்தை பகவானுக்கு சமர்பிக்கிறான் சரணாகதன். நெல் மாதிரி அவன் ப்ரகாசிக்கிறான். ஒவ்வொரு ஆத்மாவும் சரணாகதி பண்ணினால் நெல் மணியாக ஒளிரும் என்கிறாள் ஆண்டாள்.
ravi said…
நாம் ஆசார்ய உபதேசத்தால் பகவானுக்கு அன்னம் ஆகிறோம். அவன் அனுபவிக்கும்படியானவனாய் விசேஷ பதார்த்தமாக நாம் இருப்போம். வண்டுகள் புஷ்பத்துக்கு புஷ்பம் தாவுவது போல நாம் ஸத் விஷயங்களுக்கு தாவ வேண்டும். ஸாரதமான விஷயத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

ஹம்ஸம் பாலை எடுத்துக் கொண்டு ஜலத்தை விடுவதுபோல. நாம் ஸாரதமான விஷயத்தை பற்றிக் கொண்டு மற்றவற்றை விட வேண்டும்.

ஒருமுறை இல்லாமல் பல மஹான்களிடம் பலபடியாக கேட்ட வேண்டும்.
ravi said…
பாஷ்யக்காரர் ஐந்து ஆசார்யர்களை ஆச்ரயித்து பல அரிய விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். வண்டு மலருக்கு மலர் தாவி தேனை க்ரஹிப்பது போல் க்ரஹித்தார்.
ravi said…
ஸ்ரீ_தன்வந்திரி.

நல்லோரைக் காக்கும் பொருட்டு திருமால் எடுத்த 24 அவதாரங்களில் மிக முக்கியமான பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று போற்றுகிறோம்.

மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்கள் தசாவதாரஙகள்
ஆகும்.
ravi said…
இவற்றைத் தவிர, தத்தாத்ரேயர், வியாசர், கபிலர், தன்வந்திரி போன்ற வேறு பல அவதாரங்களையும் திருமால் எடுத்து மக்களுக்கு நல் உபதேசங்களைச் செய்துள்ளார்.

ஸ்ரீதன்வந்திரி அவதாரம் பற்றி ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ விஷ்ணுபுராணம் மற்றும்
பிரம்மாண்ட புராணத்தில் குறிப்புகள் உள்ளன.

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந்திரன் தனது செல்வங்களை இழந்தான்.

மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.
ravi said…
அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது.

அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார்.

தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன.

பாற்கடலிலிருந்து கடைசியில் திருமாலே தன்வந்திரியாக அம்ருதகலசத்தை ஏந்தி வெளிப்பட்டார்.

தேவேந்திரன் சாவா மருந்தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட்களையும் பெற்று தேவலோகம் சென்றான்.
ravi said…
திருமால் தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள திரயோதசி நாளாகும்.

இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக "தன்திரேயாஸ்' என்று வட மாநில மக்கள் அனுஷ்டிக்கின்றனர்.

திருமாலின் 24 அவதாரங்களில் 17-ஆவது அவதாரமாக தன்வந்திரி அவதாரம் விளங்குகிறது.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம்.
ravi said…
இறைவனே மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக் காட்டுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் அமிர்த கலசத்தை ஏந்தியவாறும் காட்டப்படுவது வழக்கம்.

அல்லது முன் இடக்கையில் அமிர்த கலசமும், வலக்கையில் அட்டைப் பூச்சியை ஏந்தியும் தன்வந்திரி காட்சி அளிப்பதும் உண்டு.
ravi said…
அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம்.

இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

முக்கியமான வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனிச் சந்நிதி இருப்பதைக் காணலாம்.

திருவரங்கம் ஆலய தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது.

தமிழ்நாட்டில் வேலூர் அருகேயுள்ள வாலாஜாபேட்டையில் தன்வந்திரிக்கு என்று தனி ஆலயமே அமைந்துள்ளது.

அனைத்து நோய்களுக்கும் நிவாரண அளிக்கும் ஹோமங்களும் இங்கு சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

கோவையில் தன்வந்திரி ஆலயம் உள்ளது.
ravi said…
ஆயுர்வேத மருத்துவ முறை மிகப் பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் கேரள மாநிலத்தில் தன்வந்திரி பகவானுக்கு பல ஆலயங்கள் உள்ளன.

ஆலப்புழை மாவட்டம், சேர்த்தலா வட்டத் திலுள்ள- மருதோர் வட்டம் ஸ்ரீ தன்வந்திரி ஆலயம் மிகப் பெரியதும் பிரபலமானதும் ஆகும்.

சேர்த்தலாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

600 ஆண்டுகளுக்கு முன்பாக வெள்ளூடு மூஸ் என்ற ஆயுர்வேத வைத்தியர் இப்பகுதியில் பிரபலமான அஷ்ட வைத்தியர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
ravi said…
நோயாளிகள் அவரிடம் வந்து ஒரு வட்டம் (ஒரு முறை) மருந்து அருந்தினாலே நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

அவரால் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி விக்கிரகமே இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.

இங்கே வட்டவடிவமான கருவறையில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தன்வந்திரி.

அவருக்கு எதிரே கருடன் சந்நிதியும், திருச்சுற்றில் பகவதி, கணபதி, சாஸ்தா, சிவன் சந்நிதிகளும் உள்ளன.

இங்குள்ள வெண்கலத்தால் செய்யப்பட்ட கொடிமரம் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்டது.

இந்த ஆலயத்தில் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பாக தினமும் மோர்க்குழம்பும் கீரைக் கூட்டும் நிவேதனம் செய்யப்படுகின்றன.

இதை பக்தர்கள் சாப்பிட்டால் தீராத வயிற்று வலி தீருமென்று நம்புகின்றனர்.
ravi said…
வல்லாரை இலை, மாந்தளிர், புளியாரை இலை, நல்ல மிளகு, மல்லி, சீரகம், சுக்கு, ஓமம் போன்ற மருந்துச் சரக்குகளைச் சேர்த்து தயிரில் கலக்கி மோர்க்குழம்பும்; உப்பு, புளி, மிளகு மற்றும் கொத்தமல்லி விதை சேர்த்து தயாரித்த கீரைக் கறியும் பிரசாதமாகத் தயாரிக்கப்படு கின்றன.

வைக்கம் மகாதேவருக்கும் இதுவே பிரசாதமாகும்.

ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப் படுகிறது.

தன்வந்திரி ஜெயந்தியன்று கோதுமை மாவும் வெல்லமும் சேர்த்து தயாரித்த அவலேகம் (அல்வா) முக்கிய நைவேத்தியமாகப் படைக்கப்படுவது வழக்கம்.

இதிலிருந்தே வீடுகளில் தீபாவளிக்கு அல்வா தயாரிக்கும் பழக்கம் வந்திருக்கலாம்.

தீபாவளி லேகியம் தயாரிக்கும் வழக்கமும் தன்வந்திரி வழிபாட்டில் இருந்தே தொடங்கிய தென்பர்.
ravi said…
வட மாநிலங்களில் தீபாவளி ஐந்து நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.

அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி நாளன்றே தீபாவளித் திருவிழா துவங்கிவிடுகிறது.

அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும், தன்திரயோதசி என்றும் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் 13 வெள்ளி அல்லது தங்கக் காசுகள் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது வடமாநில மக்களின் நம்பிக்கை.

இதே தன்திரேயாஸ் நாள் எமனுக் குரிய நாளாகவும் அனுஷ்டிக்கப்பட்டு, அன்றிரவு யமதீயா என்ற யமதீபம் ஏற்றப்படுகிறது.

ஹிமா என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது.
ravi said…
இதை அறிந்த அவன் மனைவி அந்த நாள் (தன்திரேயாஸ்) இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்குகளை ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து, கணவனுக்கு புராணக் கதைகளைக் கூறி தூங்காது பார்த்துக் கொண்டிருந்தாளாம்.

பாம்பு உருவில் வந்த எமன் தீப ஒளியில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கண்கள் கூசவே, காலை வரை காத்திருந்து விட்டுத் திரும்பினான் என்றும்; மன்னன் யமனிடமிருந்து காப்பாற்றப்பட்டான் என்றும் ஒரு கதை உள்ளது
ravi said…
தன்வந்திரி அவதார நாளன்று தன்னைச் சுற்றிலும் யம தீபங்கள் ஏற்றி, தன்னை தன் மனைவி காப்பாற்றியதற்கு தன்வந்திரி கடவுளே காரணமென்று மன்னன் நம்பினான்.

மக்கள் அனைவரும் தன்திரேயாஸ் நாளைக் கொண்டாட வேண்டுமென்றும்; அன்று இரவில் யம தீபம் ஏற்ற வேண்டுமென்று மன்னன் உத்தரவிட்டானாம்.

மகாராஷ்டிர மாநிலத்தில் தன்திரேயாஸ் அன்று கொத்தமல்லி விதை மற்றும் வெல்லத்தை இடித்து வீடுகளில் பிரசாதமாக இறைவனுக்குப் படைப்பது வழக்கம்.

தன்திரேயாஸ் நாளை அடுத்தநாள் சோடி தீபாவளி, மூன்றாவது நாள் (தீபாவளி) லட்சுமி பூஜை, அடுத்த நாள் கோவர்த்தன பூஜை, கடைசி நாளன்று சித்ரகுப்த பூஜை, கோதான் என்று ஐந்து நாள் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
ravi said…
திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும்.

நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது.

தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம்.

இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்.
ravi said…
ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய
த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'

#பொருள்:
ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்;
அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங் களைப் போக்குபவரும்;
எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்;
மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்;
அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான
ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.💐🙏🌹
ravi said…
எம்பெருமானின் வ்யாபகத்வம்

ஒருவனைப் பிடிக்க வேண்டி ஊரை வளைவாரைப்போல தம்மை விஷயீகரிப்பதற்காக எங்கும் வியாபித்து ஸர்வாந்தர்யாமியாயிருப்பவன் ஸ்ரீமந்நாராயணன்.
ravi said…
எங்கும் பரந்து குளிர்ந்திருந்துள்ள கடலில் நீர்த்திவலைகள்தோறும் வியாபித்திருப்பவன். பூமியிலும் ஆகாசத்திலும் அப்படியே. எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான்.

எங்கும் பரந்துள்ள ஒவ்வொரு பொருளிலும் சரீரத்தில் ஆத்மா உறையுமாபோலே மறைந்திருந்து எல்லாவற்றிலும் தனித்தனியே குறைவற வியாபித்திருக்கிறான் எம்பெருமான்.

வஸ்துக்களின் உட்புகுந்து அவைகளை ஒரு வஸ்துவாகவும் ஒரு பெயருடையதாகவும் ஆக்கினவன் இவனே.

இங்கு ஒரு ரஸமான விஷயம் தெறிந்துகொள்ளத்தக்கது.
ravi said…
எம்பெருமான் எங்கும் நீக்கமற வ்யாபித்து இருக்கிறான் என்று ப்ரஹ்லாதாழ்வான் சொன்னதை இரணியன் நம்பவில்லை. அதை சோதிக்கப்போய் அவன் மாண்டான் என்பது ஜகத் ப்ரஸித்தம்

வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இடமில்லாதபடி, அந்த இரணியன் தானே நாட்டிய தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினானென்பதும்,
ravi said…
வேறு யாரேனும் கையால் தட்ட அத் தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டினவளவில் திருமால் தோன்றினானென்பதும்,
ravi said…
அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று ப்ரஹ்லாதன் செய்த பிரதிஜ்ஞை தவறி ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் செய்த பிரதிஜ்ஞை நிலை நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினானென்பதும்,
ravi said…
அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை நிலையை மறுக்கக் கூடுமாகையாலே, அதற்கு இடம் அறும்படி கர்ப்பம், கரு முதிர்தல், ப்ரஸவித்தல் குழந்தாயாய் ஜனித்தல், பிறகு நாளடைவில் வளர்தல் என்பனவுமில்லாமல், இரணியனைவிட பருத்து வளர்ந்த வடிவையுடையவனாய், அப்பொழுதே தோன்றினனென்பதும்
ravi said…
அங்ஙனம் தோன்றியவிடத்தும் ஹிரண்யன் ஜயசீலனாகவும் நரஸிம்ஹன் பராஜிதனாகவும் நேர்ந்தால், ‘எங்குமுளன்’ என்ற உண்மை நிலைத்தாலும், பரத்வம் ஸித்தியாமற் போய்விடுமாதலால், அங்ஙனமாகாதபடி அக்கொடியவனைத் தவறாது அழித்தனனென்பதும்,

இவைபோன்ற பல விசேஷங்கள் நரஸிம்மாவதாரத்திலே அருமையாக நோக்கத்தக்க விஷயங்களாம்.

ஆகவே எம்பெருமானுடைய வ்யாபகத்வத்திலே ஸந்தேகம் உடையோர் இரணியன் கதையிலிருந்து பெருமான் எங்கும் வ்யாபித்துள்ளான் என்பதில் தெளிவு பெறவேண்டும்
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷post 39 👣👣
ravi said…
Pavalak kodiyil pazhuththa sevvaayum,

panimuruval
thavalath thiru nagaiyum

thunaiyaa, engal sangaranaith
thuvalap porudhu, thudiyidai saaykkum thunai mulaiyaal-

avalaip panimin kandeer, amaraavadhi aalugaikke. 38
ravi said…
Ye , who propitiate other gods to win wordly pleasures !

Realise that you can obtain the greatest of glories - the very throne of Indra !! The god of gods who rules the celestial city of Amravati , only through meditating upon the scintillating form of the Goddess Abhirami !!

Her beautiful form is the weapon She uses in Her siege upon lord Shiva's heart ...

Her slender red form with full crimson lips which enclose the most perfect set of pearly white teeth with a captivating smile playing upon them - are the instruments which she has to Her support ...

When She enfolds the Lord in an embrace , Her bosom heavy upon Her slim waist , She causes him to completely surrender to Her ...

Such is the infinite feminine power of our Goddess . If you propitiate Her , you will gain all wealth and glory 👍👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*Benefit of Chanting*

To have one's wishes granted in exactly the way one wants !!!👌👌👌
ravi said…
*யுத்த காண்டம்*

இராவணன் தேர் ஏறி வெறியோடு போருக்கு வரும் செய்தியை விபீஷணன் தெரிவிக்க, வானர சேனை பயத்தால் நடுங்குகிறது.

இராமபிரான் விரைந்து போர்க்கோலம் பூண்டான்.

சிவபெருமான் தேவர்களை அழைத்து, இந்த கொடிய போர் இன்று முடிவடைந்து விடும்.

வெற்றி பொருந்திய தேவலோகத் தேர் ஒன்றை இராமபிரானுக்கு அனுப்புக என்று கூறினார்.

இந்திரன் உடனே ஒரு தேரைத் தயார் செது மாதலி எனும் இந்திரனின் தேர்ப்பாகனிடம் கொடுத்து இராமனுக்குப் போர் செய்யப் பயன்படுபடி அனுப்பி வைக்கிறான்.👍👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 76*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
மூகபஞ்ச ஸதி பாதாரவிந்த சதகத்துல 48 ஆவது ஸ்லோகம் இருக்கு

नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥

நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்

க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।

உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ

மனோஜ்ஞே காமாக்ஷ்யா: சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥

அம்பாளுடைய நகத்தினுடைய முனையில இருந்து வெளிப்படும் அந்த காந்தி, வெள்ளை வெளேர்னு இருக்கு
ravi said…
*சரணமணிஹர்ம்யே* *விஹரதாம்.*

காமாக்ஷியினுடைய சரணம் என்கிற இரத்தின மாளிகையில்

*மாமா மன:* *விஹரதாம்* –

அங்கே என் மனம் வசிக்கட்டும்னு மூக கவி பிரார்த்தனை பண்றார்.

அந்த மாதிரி நம்முடைய மனசு அம்பாளுடைய சரணத்துல இருக்கணும்.

உடம்பு எங்க இருந்தா என்ன?

இங்க போய் இருந்தா நான் ரொம்ப happyயா இருப்பேன்னு நினைக்க வேண்டாம்.

இங்க போய் இருந்தா இந்த காலத்துல peace of mind ங்கிறா.

அந்த peace of mind ஐ தேடிப் போக வேண்டாம். எங்கேயும் அது உனக்கு கிடைக்கும்.

பக்தி பண்ணத் தெரிஞ்சா போறும்.

பகவான் கிட்ட மனசு வைக்கத் தெரிஞ்சா அவன் பரமயோகி – பெரிய யோகிங்கிறார்.🙌🙌🙌
ravi said…
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 93 . 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- *ராதித்ய* :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
பன்னிரண்டு ஆண்டுகால வனவாசத்தை முடித்த பாண்டவர்கள்,

அடுத்த ஒரு வருடம் மறைந்து வாழ்ந்து அஞ்ஞாத வாசத்தைப்
பூர்த்தி செய்வதற்காக மத்ஸ்ய தேசத்துக்குச் சென்றார்கள்.

அங்கே விராட மன்னனின் அரண்மனையில் *கங்கன்* என்ற சந்நியாசியாக தர்மராஜனும்,

*வல்லாளன்* என்ற சமையல் கலைஞனாக பீமசேனனும்,

விராட இளவரசிக்கு நாட்டியம் சொல்லித் தரும் *பிருகன்னளை* என்ற திருநங்கையாக அர்ஜுனனும்,

குதிரை பராமரிக்கும் *கிரந்திகனாக* நகுலனும்,

அரண்மனைப் பசுக்களைப் பராமரிக்கும் *தந்திரிபாலனாக* சகாதேவனும்,

அரசி சுதேஷ்ணைக்குச் சிகையலங்காரம் செய்யும்
பணிப்பெண் *சைரந்திரியாக* திரௌபதியும் வேடமிட்டுக் கொண்டு வாழ்ந்தார்கள்.🏵️🏵️🏵️
ravi said…
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
"பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!

"திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’-பெரியவாளின் கேள்வி-இது,

(!
ravi said…
‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்).

நன்றி-சக்தி விகடன்.

ravi said…
1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.

மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.

‘அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ?’

உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா.

ஒரே குரலில்,‘தெரியாது’ என்று பதில் வந்தது.

‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’

இரண்டு நிமிஷ நடை.

‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’

‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும்?..’

பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !

அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..

‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’

அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!

திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.

பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.

மார்கழி மாதம் வந்தது.

பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.

‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?

‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.

ravi said…
அப்புறம் கேட்பானேன்!

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!

ஓரிரு ஆண்டுகள் சென்றன.

ravi said…
ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள்.

‘ஞாபகம் இருக்கா? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’

இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 171🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Make the best of what’s in your power and take the rest as it happens.

Focus on what we must do and let the Universe do the rest for us.

Mark Twain said that there are two times in a man's life when he shouldn't speculate: When he can't afford it, and when he can.

While you can't control someone's negative behaviour, you can control how long you participate in it.
ravi said…
GPK who was in US thought he was indispensable .. he was under an impression that he would keep getting extension till L&T retired .

But a rude shock awaited him on his return ... Nor his return journey cost was borne by the company as expected by him ..Rather promised by YMD ...

He felt highly humiliated how could a lion be equated with a mouse and a mouse could replace him ...

Substitution of me in his place shattered all his dreams ... This was equally true for NPD ...

On his return he found the intra web site developed by him on indirect taxation was bearing my name as head ... He fired me for a week without any pause ..

He did not want to listen i was effectively taking charge from him
..

He continued for two months as a part of handing over . Finally he did not handover either knowledge or legacy or status of cases pending ...

It appeared to me as if it was a pitch dark , new moon day , pouring rain and i started searching a black cat in a bush .... 🌷🌷🌷
ravi said…
*வறுமை துணியிலே வாழ்க்கை அருளிலே*🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ravi said…
வாழும் போது அரண்மனை இல்லை .. ஆடம்பரங்கள் இல்லை

பாதங்கள் 👣👣

முள் கண்டன ..

கருங்கல் கண்டன

கண்ணாடி துகள்கள் கண்டன ...

வறுமை உடுத்தும் உடையில்

உல்லாசம் கொண்டன ...

கைகள் பிறர் முகம் கண்டு கால் வயிறு நிறைய பிட்சை கேட்டன ...

கண்கள் மட்டும் செல்வந்தனாய் கருணை மழை பெய்தன ... 👀

ஷீரடி செழித்தன ...

பாலும் தேனும் பாகும் கடலாய் ஓடின ..

களித்தவர்கள் எண்ணிலர் போற்றுபவர் சாயியையே !!

காஞ்சியும் கண்டன கார்மேகம் ஒன்றை ...

காமன் ஓடி ஒளிந்து கொண்டான் ..

காரூண்யம் காமாக்ஷி எனவே ஆட்சி செய்ததே !!!

வியந்தவர்கள் எண்ணிலர் ..

சாதித்தவர் கணக்கில் அடங்கிலர் ...

போற்றுபவர் நடமாடும் தெய்வத்தையே !!!👌👌👌💐💐💐💐💐💐💐💐
ravi said…
கல்வியில் சிறந்து விளங்கச் செய்யும் சியாமளா தண்டகம் ஸ்லோகம்* *பதிவு 4*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஜய ஜனனீ ஸூதா ஸமுத்ராந்த

ஹ்ருத்யன் மணித்வீப ஸம்ரூட

பில்வாடவீ மத்ய கல்பத்ருமாகல்ப

காதம்ப காந்தார வாஸப்ரியே,

க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே👣👣
ravi said…
அம்ருதம் எனும் கடலின் மத்தியில்,

மனதைக் கவரும் சிறப்புடைய தீவில் வில்வ
மரங்கள் சூழ்ந்த பிரதேசத்தில்

கற்பக
விருட்சங்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப மரக் காட்டில் வசிப்பவளே!

யானைத்தோல் போர்த்திய சிவனின் பத்தினியே,

அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரியமானவளே.👣👣🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*திருவெம்பாவை பாடல் 9*💐💐💐
ravi said…
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன்னடியார் தாள் பணிவோம்

அங்கு அவர்க்கே பாங்காவோம்

அன்னவரே எம் கணவர் ஆவார்

அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்
பணி செய்வோம்

இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.👏👏👏
ravi said…
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே!

இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம் என்று கணிக்கப்படும்

புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே!

உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம்.

அவர்களுக்கே தொண்டு செய்வோம்.

உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும்.

அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம்.

இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.🙌🙌🙌🙌
ravi said…
*திருப்பாவை பாடல் 9*🏵️🏵️🏵️
ravi said…
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே!

மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்!

அவளை எழுப்பீரோ?

உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.👏👏👏
ravi said…
பிரகாசமான நவரத்தினங் களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச்சூழ விளக்கெரிய, நறுமணதிரவியம் மணம் வீச,

அழகிய பஞ்சுமெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே!

உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே!

அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்!

அவள் பதிலே சொல்லவில்லையே!

அவள் ஊமையா? செவிடா?

சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா?

அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா?

உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*உட்பொருள்*🏵️🏵️🏵️
ravi said…
உலக மக்கள் மாடமாளிகை, பஞ்சு மெத்தை என சொகுசு வாழ்க்கையில் சிக்கி சோம்பலில் கட்டுண்டு கிடக்கின்றனர்.

இதில் இருந்து அவர்களை மீட்டு பகவானின் இருப்பிடமான வைகுண்டமே நிலையானது என்பதை அறிவுறுத்த வேண்டும்.

அந்த வைகுண்டத்தை அடைய பகவானின் திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
தனக்கு வரும் கணவன், சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்க வேண்டும்,

அழகாக இருக்க வேண்டும்,

வாகனம் வைத்திருக்க வேண்டும்

என்றெல்லாம் பிரார்த்திப்பர்வர்கள் பெருகி விட்ட காலம் இது!

இந்த செல்வம் நிலைத்திருக்குமா!

இந்த செல்வத்துக்கு சொந்தக்காரர்கள் ஒழுக்கசீலர்களாக இருப்பார்களா!

பக்திமான் ஒருவன் எனக்கு கணவனாக வேண்டும் என்று கேட்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலாவது இன்று இருக்கிறார்களா?

அன்றைய பெண்கள் தங்கள் கணவன் பக்திமானாக அமைய வேண்டுமென விரும்பினர்.

அதை இறைவனிடம் கேட்டனர். செல்வச்சீமான்களால் நிம்மதியைத் தர முடியாது.

பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்க்கை அமையலாம்.

ஆனால், அதில் இருக்கும் மனநிம்மதி யாருக்கு கிடைக்கும்? என்பது இந்தப் பாடலின் உட்கருத்து.👏👏👏👏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 77* started on 7th Oct 2021
ravi said…
இன்று 17வது திருநாமம் .. மிகவும் மெய்சிலிர்க்க வைக்கும் திருநாமம் 🏵️🏵️🏵️

*17* वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका - *வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --* 👍👍👍👌👌👌
ravi said…
மஹாகவி காளிதாசன் அன்னையை எப்படி புகழ்கிறான் பாருங்கள் .

இந்த கவித்தன்மையைதான் அவளை தினம் தொழும் பக்தர்களுக்கு குறைவில்லாமவ் அளிக்கிறாள் 🏵️🏵️🏵️🏵️
ravi said…
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ
வனவாஸினீ

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ
வனவாஸினீ

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
உலகின் தாயாகவும், மரகத மணியையொத்த நீல நிறமுடையவளும்,

ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும்,

எப்பொழுதும் மங்கள வடிவானவளும்,

கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும்

மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே !!!

உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன்.

நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே,

சங்கீதத்தில் பிரியமுடையவளே,

செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே,

ஹே மாதங்கி!

எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக.

(கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 77* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 17
ravi said…
ஸவித்ரீபிர் வாசாம் சஶிமணி ஶிலாபங்க ருசிபிர்
வஶிந்யாத்யாபிஸ் த்வாம்
ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்

வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: 17🙌🙌🙌
ravi said…
அன்னையே!,

நீ வசினி முதலிய எண்வகையான சக்திகளுடன் கூடியவள்.

அந்த சக்தி தேவிகள் நவரசஸங்கள் நிரம்பிய சொல் நயத்தை அளிப்பவர்கள்.

உடைந்த சந்திர காந்த கல்லின் உள் பகுதிபோல் வெண்மையான ஒளி நிறைந்தவர்கள்.

அவர்களையும், உன்னையும் உபாசிப்பவன்,

மிகுந்த மணமுள்ள தாமரை போன்ற முகமுடைய உன் முகம் போன்ற இனிமையான வார்த்தைகளமைத்து, மஹாகவிகளின் படைப்புக்களைப்போல் காவியங்கள் எழுத வல்லவனாவான்.🏵️🏵️
ravi said…
பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ?

சொன்னவர்; பட்டாபி/

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…
ravi said…
அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச்சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா. அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்
ravi said…
இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.
ravi said…
அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’
ravi said…
யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்.

சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.
ravi said…
என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.
ravi said…
அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!
ravi said…
பெரியவா சொன்னதை எல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்த்தேன். ஒரு தடவை கி.வா.ஜ. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது…

”தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…
ravi said…
ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”

எத்தனை சத்தியமான வார்த்தை!
ravi said…
பெரியவா ஸித்தி ஆயிட்டானு சொன்னேன் இல்லியா? பெரியவாளுக்கு 90-லிருந்தே உடம்பு படுத்திண்டு இருந்தது; க்ஷீணமாயிண்டு இருந்தது. ஒரு தடவை, ஸ்மரணையே தப்பிப் போச்சு. எல்லாரும் ரொம்பக் கவலைப்பட்டா.

ராஜீவ் காந்தி அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, ‘டோட்டல் பாடி ஸ்கேனர்’ கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா.
ravi said…
ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன்.
ravi said…
யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.
ravi said…
பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.

”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.
ravi said…
பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!”னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.
ravi said…
ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார்,

பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்

ஹர ஹர சங்கரா, ஜய ஜய சங்கரா,🙏🙏.
ravi said…
சங்கராம்ருதம் - 9

மஹா பெரியவாளின்
சன்னிதானத்தில் எதை விண்ணப்பித்துக் கொண்டாலும் அதற்கு பூர்ண அனுக்ரஹம் கிட்டிவிடுமென்பது திரு ஹரிஹரன் என்பவரின் அனுபவமாகிறது.
ravi said…
ஸ்ரீ பெரியவாளின் உத்தரவை அனுசரித்து இவரும் சில அன்பர்களும் சென்னையில் ஒரு அரசாங்க மருத்துவமனையில் பிரதி சனிக்கிழமைதோறும் நோயாளிகளுக்கு விபூதி குங்குமம் பிரசாதம் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். ஸ்ரீ பெரியவாளின் அருளே அன்பர்கள் மூலமாக பெறும் ஆனந்தத்தில் பிரசாதம் பெறும் நோயாளிகள் அடைந்த ஆனந்தத்தை சொல்லிமுடியாது.
ravi said…
இவர்கள் இந்த சிறு தொண்டினை மேற்கொண்டிருந்த சமயத்தில் அந்த அரசாங்க மருத்துவமனையில் பத்தாம் நம்பர் வார்டில் ஒரு சாமியாரின் படம் மாட்டப்பட்டிருந்தது. அது மிக பெரிய படமாக இருந்ததால் அந்த படத்தில் காட்சிதரும் பெரியவர் யார் என்று அறிய இவர்களுக்கு ஆவல் மேலிட்டது. அந்த படத்தின் விபரம் தெரிவதற்காக சில டாக்டர்களை இதைப்பற்றி கேட்டனர்.
ravi said…
அப்போது அது ஸ்ரீ பாம்பன் சுவாமி என்பவரின் திரு உருவப்படம் என்பதாக அறிந்தனர். 1923ம் வருடம் அவர் குதிரைவண்டி ஏறி அடிபட்டதாகவும் அறுவை சிகிச்சைக்காக இங்கே சேர்க்கப் பட்டதாகவும் தெரிய வந்தது. அறுவை சிகிச்சைக்காக ஒருநாள் குறிக்கப்பட்டதாம். அப்போது சுவாமிகளின் பக்தர்கள் சிலர் சண்முக கவசம் பாராயணம் செய்து கொண்டிருந்தார்களாம். முருக பெருமான் ஸ்ரீ பாம்பன் சுவாமிகளுக்கு தரிசனம் தந்து அருள் புரிந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சைக்கே அவசியம் இல்லாமல் போய்விட்டதாம்.
ravi said…
இந்த விபரங்களை கேட்டுக்கொண்ட அன்பர்கள் அடுத்த சனிக்கிழமை அந்த பத்தாம் நம்பர் வார்டுக்கு செல்லும்போது பாம்பன் சுவாமிகளின் படத்தைக் காண ஆவலுற்றனர். ஆனால் அந்த பெரிய படம் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது. இதைப் பற்றி கேட்டபோது யாரோ விஷமிகள் அதை எடுத்துவிட்டதாக கூறப்பட்டது.
ravi said…
அந்த படத்தை யாரோ எடுத்திருக்கிறார்கள். அதை மறுபடியும் அந்த இடத்திற்கே கொண்டுவர உங்களால் முடியுமானால் முயற்சி செய்யுங்கள்” என்று அங்கிருந்த டாக்டர்கள் சனிக்கிழமை தோறும் வரும் இவர்களிடம் முறையிட்டனர்.

ravi said…
இந்த சம்பவத்தை ஹரிஹரன் தனக்கு தெரிந்த சில அரசியல் நண்பர்களிடம் சொன்னார். அவர்களோ டாக்டர்களிடமிருந்து இதுபற்றி மனு எழுதி கொண்டு வந்தால் மேலிடத்தில் சொல்லி அதற்கான ஏற்பாடுகள் செய்வதாக கூறிவிட்டனர். அனால் டாக்டர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்கள் என்பதால் மத சம்பந்தமான பெரியவர் ஒருவரின் படத்தை மருத்துவமனையில் வைக்க அனுமதி கேட்பது சாத்யமாகவில்லை. அதனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
ravi said…
உடனே ஹரிஹரனுக்கு இதை ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட தோன்றியது. அப்போது கர்நாடகாவில் குல்பர்கா பக்கத்தில் கலக்கி என்ற சிறிய கிராமத்தில் ஸ்ரீ பெரியவா அருளிக் கொண்டிருக்க அங்கே ஹரிஹரன் சென்றார்.

ஒரு பழைய கோயிலில் சாட்சாத் ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவா தரிசனம் அருளிக் கொண்டிருக்க, ஸ்ரீ பெரியவாளிடம் ஹரிஹரன் முறையிட்டார். ஸ்ரீ பாம்பன் சுவாமிகளின் உருவப்படத்தை பற்றி விபரம் தெரிவித்து அது திரும்பவும் அங்கே வர ஸ்ரீ பெரியவா அருள் வேண்டுமென விண்ணப்பித்தார்.
ravi said…
ஆனால் ஸ்ரீ பெரியவா முதலில் இவர் முறையீட்டிற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. பகல் பொழுதில் மற்ற பக்தர்கள் தரிசனம் செய்து போனார்களேயன்றி ஹரிஹரன் காத்திருக்க அவரிடம் ஸ்ரீ பெரியவா ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை. அன்று அங்கேயே தங்கினார்.

அன்று நடு இரவில் ஸ்ரீ பெரியவா தன்னை அழைத்து உத்தரவாகிறதாக சொல்லவே இவர் போய் நின்றார். ஸ்ரீ பெரியவா இவரை நோக்கி “நீ அப்போ என்ன சொன்னே?” என்று இவர் அப்போது கேட்டதை நினைவு வைத்துக்கொண்டு கேட்பது போல வினவினார்.
ravi said…
ஹரிஹரன் திரும்பவும் மருத்துவமனையில் ஸ்ரீ பாம்பன் சுவாமிகளின் படம் திடீரென்று காணாமல் போனதையும், முருக பக்தர்களான சில டாக்டார்கள் இதற்கு வருத்தப்படுவதாகவும், ஸ்ரீ பெரியவாள்தான் திரும்பவும் சுவாமிகளின் படம் அங்கே வந்து சேர அருள வேண்டுமென்றும் முறையிட்டார்.

உடனே ஸ்ரீ பெரியவா “பாம்பன் சுவாமிகள் யார்?” என்று கேட்டார். ஹரிஹரனுக்கோ பதில் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. சர்வக்ஞரான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாளெனும் பரமேஸ்வரருக்கு தெரியாத விஷயம் ஒன்றுமுண்டோ? இருந்தாலும் அஞ்ஞானிகளான நம்மை சோதிப்பது வழக்கம்தானே என்று நினைத்துக்கொண்டார்.

சிறிது நேரம் மௌனம் காத்த ஸ்ரீ பெரியவா இவரிடம் “சரி! சரி! நீ போயிட்டு வா” என்று இவரை அனுப்பி வைத்தார்.

ஹரிஹரனுக்கு சற்று ஏமாற்றமாயிருந்தாலும், ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டு கேட்டாயிற்று அதனால் அது எப்படியும் கிடைத்தே தீருமென்ற உறுதிமட்டும் தளரவில்லை.
ravi said…
ஹரிஹரனுக்கு சற்று ஏமாற்றமாயிருந்தாலும், ஸ்ரீ பெரியவாளிடம் முறையிட்டு கேட்டாயிற்று அதனால் அது எப்படியும் கிடைத்தே தீருமென்ற உறுதிமட்டும் தளரவில்லை.

சென்னை திரும்பியதும், அவருடைய நண்பர்கள் மிக ஆச்சர்யமாக இவரைக் கேட்டனர்.

“நீ அந்த படத்தைப் பற்றி நம்ப பெரியவாகிட்டே ஏதாவது சொன்னாயா?” என்றனர்.

அதற்கு இவர் “ஆமாம்” என்றார்.

“எங்களுக்கு அப்பவே தெரிஞ்சுடுத்து. அந்த படம் மறுபடியும் அந்த வார்டுக்கே திரும்பி வந்துடுத்து. அது எப்படி வந்தது, யார் கொண்டு வந்து மாட்டினான்னு எல்லாம் யாருக்கும் தெரியாம அந்த அதிசயம் நடந்திருக்கு. இப்போ அந்த படத்துக்கு கீழே அதைப் பற்றிய எல்லா விபரமும் எழுதி வைச்சிருக்காங்க. பிரதி வெள்ளிக்கிழமையும் அதற்கு பூமாலை சார்த்தி தீபாராதனை காட்றாங்க”.
ravi said…
இப்படி நண்பர்கள் கூறியபோது ஹரிஹரனுக்கு ஒரு பேருண்மை விளங்கியது. “பாம்பன் சுவாமிகள் யார்?” என்று ஸ்ரீ பெரியவா அங்கு கேட்டபோதே, இங்கு சுவாமிகளின் படம் மாயமாக வந்ததோடு அந்த சுவாமிகள் யார் என்ற விபரமும் எழுதி வைக்கப்பட்டிருந்த பெரும் அதிசயம் நேர்ந்துள்ளது.

சர்வக்ஞரான ஸ்ரீ பெரியவாளின் மஹிமையினால் கிட்டாதது எதுவும் உண்டோ என்று ஹரிஹரனின் சிந்தனை முழுவதும் அந்த மகானை நினைத்து உருகலாயிற்று.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 78* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 17
ravi said…
ஸவித்ரீபிர் வாசாம் சஶிமணி ஶிலாபங்க ருசிபிர்
வஶிந்யாத்யாபிஸ் த்வாம்
ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:

ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்

வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: 17🙌🙌🙌
ரமணி said…
இது நமக்குள்ளும் எழுந்த கேள்வி..

அதற்கு சரியான விளக்கம் கொடுத்து பதிலை அறிய வைத்த வார்த்தை சித்தர் என்கிற சக்தியின் அபிராமி பட்டருக்கு நன்றிகள் கோடி கோடி...

🙏🙏🙏🙏🙏🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை