அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 9 - பதிவு 6
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 9
பதிவு 6
கேள்வி பதில் நேரம்
பதிவு 6🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்.
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர் .
கேள்வி 9
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்*
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள்
இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் .
இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜
*நான்*
ஐயனே ... ஒரு பாடலில் தாங்கள் "
பொருளே பொருள் தரும் போகமே பெரும் போகம் தரும் மருளே மருளில் வரும் தெளிரே!"
என்று பாடினீர்கள் .
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ..
எப்படி அம்பாள் நமக்கு மயக்கத்தையும் ( மருள்) தந்து அதை தெளியவும் வைப்பவளாக இருக்கிறாள்.. 🤔🤔
இது உண்மை என்றால் முதலில் ஏன் அவள் நமக்கு மயக்கம் தர வேண்டும்?
பின்பு அதையே தெளிய வைக்க வேண்டும் ..??
பிணியும் அவளே பிணிக்கு மருந்தும் அவளே என்பதைப்போலவும் , குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதைப்போலவும் இருக்கிறதே !!
பட்டர்
நல்ல கேள்வி ... நீ லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறாய் அல்லவா??
அதில் பல எதிர்மறை நாமங்கள் வரும் ..
நித்ய திருப்தா , அநித்ய திருப்தா என்று எதிர்மறை நாமங்கள் ..
இதன் அர்த்தத்தை உன்னைப்போல் நுனிப்புல்லை மேய்பவன் புரிந்து கொள்ள முடியாது ..
இருட்டும் ( அஞ்சானமும் ) வெளிச்சமும் ( ஞானமும்) அவளே .. உள்ளும் அவளே வெளியும் அவளே ...
அவளே செல்வமாக பொருளாக, தனமாக இருக்கிறாள் ...
வெறும் செல்வம் மட்டும் உன்னிடம் இருந்தால் என்ன பிரயோசனம் ?
அதை அனுபவிக்கக் கூடிய பாக்கியம் வேண்டாமா ?
நீ இறக்கும் போது உன் bank balance 10 கோடியாய் இருந்தால் அதனால் உனக்கு என்ன பிரயோசனம் ?
இப்பொழுது இதைத்தான் *Die empty* ..என்று சொல்கிறீர்கள் ...
பிறருக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தான தருமங்கள் செய்யுங்கள் ...
அபிராமியும் நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு உங்களுக்கு வாழ்வில் வளம் தருவாள்
அவளை துதிப்பதால் தனம் பெருகுகிறது
அது மட்டும் அல்ல சேர்த்த செல்வதை அனுபவிக்கும் போகம் ( பாக்கியம் , அருகதை) தருகிறாள் ...
எல்லோருக்கும் அல்ல .. நல்ல வழியில் பொருள் சேர்ப்பவர்களுக்கு (
ill - earned will always be ill - spent)
🙏🙏🙏
சரி பொருள் வந்து விட்டது அதை அனுபவிக்கும் போகமும் கிடைத்து விட்டது அபிராமியின் அருளால்...
இவ்வளவு கிடைத்த பின் அவள் நம்மை புடம் போட்ட தங்கமா இவன் என்று சோதிக்கிறாள்
அதுதான் பண மோகம் இதைத்தான் *மருள்* என்று சொன்னேன் ..
இதிலிருந்து மீண்டு அவள் பாத கமலங்கள் தான் நிரந்தரம் அவை தான் வேண்டும், என்று உறுதியாக நினைக்கும் போது அந்த மருளில் தெளிவு கிடைக்க செய்கிறாள் ...
மருள் அவசியம் வேண்டும் ... நம் மனம் எவ்வளவு உறுதி என்பதை உணர ...
இப்படி செய்து அவள் தன் உண்மையான பக்தர்களை முத்துக்கள் போல் தேர்ந்தெடுக்கிறாள்
மாலையாக அவர்களை கொத்துக்கொண்டு வெண் முத்து மாலையாக அணிந்து கொள்கிறாள் ...
இப்போ சொல் ... குழப்பம் வருகிறதா ? 💐💐💐
நான்: ஐயனே ... எப்படிப்பட்ட விளக்கம் ...!!!
குழந்தையை கிள்ளிவிட்டு என்றெல்லாம் ஒரு குழந்தை போல் கேள்வி கேட்டு விட்டேன் . என் அறியாமையை மன்னியுங்கள் 🥇
*பட்டர்* பரவாயில்லை என்னிடம் கேள்விகள் கேட்காமல் வேறு யாரிடம் கேட்கப்போகிறாய் ... நாளை பார்ப்போம் ...
வானம் பூர்ண நிலவை மேகங்களின் நடுவே வெளிக் கொண்டு வந்தது ..
பூரித்துப்போனேன் அந்த பூரி ஜகன்நாத்தின் திரு தங்கச்சியை நிலவாய் பார்த்தவுடன் 🌝🌝🌝
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Comments
(My experiences... Ravi ...Episode 169🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
'Do everything you have to do - but not with greed, not with ego, not with lust, not with envy.
Do it with humility, love, compassion, commitment'
Have a wonder-filled Wednesday.🌸🌸🌸
It was an advisory role but too difficult to prove we had adequate tax knowledge ...
I designed a mission rather a target for me that we should reduce business verticals going to highly paid consultants and advocates who render their stereotype opinions with irrelevant case laws and with too many disclaimers ...
But a legacy deeply routed in our taxation department put my mission into a pit . G.P Kowdekar himself was referring all cases that came to him on sales tax to one mr Metha an expert on works contracts and NP Durandar who was an ex excise man was referring all cases to One Mr Shaw .
Both got expert views and did some cosmetic surgery here and there and responded to business verticals as if the opinions were there ...
I strongly felt our views should be based on knowledge we gained and we should own it when our opinions go wrong ...
But this needs courage and conviction .. both were missing when I joined indirect taxation department .. consultants bills were pouring uncontrolled . 🙌🙌🙌
*பதிவு 75* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
அம்மா உன் முகம் பூர்ண சந்திரன் . என்றும் வளர்பிறை கொண்ட முகம் ... அந்த பூர்ண சந்திரனின் கருப்பு புள்ளி கூட உன் முகம் எனும் சந்திரனில் கஸ்தூரி திலகம் போல் இருக்கறதே .. என்ன அதிசயம் ...
கஸ்தூரி என்பது ஒரு வகை மான் .. இதில் இருந்து கிடைப்பது தான் இந்த திலகம் .. பூரி ஜகந்தநாத்திற்கு நேப்பால் இருந்து கொண்டு வரப்படுகிறது அதே போல் திருப்பதி வெங்கடா ஜலபதிக்கும் கஸ்தூரி உடம்பெங்கும் சாத்தப்படுகிறது .. இதில் இருந்து தெரியும் உண்மை அம்பாள் தான் ஆண் உருவில் இருக்கும் நாராயணன் .. ஹரி
இதை நன்கு உணர்ந்த பட்டர் ... தனது 35வது பாடலில் இப்படி பாடுகிறார்
தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே!!👌👌👌
திருப்பாற்கடலிற் 🏵️சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! 👍👍👍
*பதிவு 75* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 16
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ👏👏👏
கவியரசர்களுடைய சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதயசூரியன் போல் பிரகாசிப்பவளும் எதனால் அருணா எனப்பெயர் பெற்றவளும் ஆகிய உன்னை எந்த சில புண்ணியவான்கள் பூஜிக்கிறார்களோ அவர்கள் பிரம்மபத்னியான ஸரஸ்வதியின் செழிப்பு மிக்க சிருங்கார ரசத்தின் பிரவாஹம் போன்ற கம்பீரமான வாக்குகளால் ஸாதுக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார்கள்.🙏🙏🙏
பாசம், ஈட்டி, கரும்புவில், புஷ்பபாணங்கள், புஸ்தகம், ஸ்படிகமாலை ஆகியவற்றையும், அபயம், வரம் என்ற முத்திரைகளையும் எட்டுக்கைகளில் தரித்து மூன்று கண்களுடன் விளங்கிகிறாள்.
இவ்வடிவம் ஸத்வத்தில் ரஜோகுணப் பிரதானமான ஸரஸ்வதி ரூபம்.
ப்ராஹ்மி முதலான மாத்ருகா ரூபங்கள் எல்லாம் தேவியினுடையவே.👍👍👍
கால்கள் அன்னம் போல் நடை பயில
ஆகாய மேகங்கள் அணி வகுத்து என்னுடன் ஓடி வர
கிரிவலம் சென்றேன் ...
அண்ணாமலை போல் உயரம் குவிந்த என் துன்பங்கள் காலை பனி போல் கரைவதைக் கண்டேன் ..
நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்றால்
நேரில் ஏன் செல்ல வேண்டும் என்றே என் கோண புத்தி கேள்வி ஒன்றைக் கேட்டது
கேட்போர்க்கும் நினைப்போர்க்கும்
பிறர் வாழ வேண்டுவோர்க்கும்
வினை தீர்க்கும் ரமணர் அங்கே சிரித்தார் ....
நீ யார் என்றே அறிவாயோ ... ?
உன்னிடம் உள்ளது நிலை என்றே நினைத்தாயோ ... ?
நீரில் முளைக்கும் கொப்பளங்கள் நீண்ட நாள் வாழும் என்றே சொல்வாயோ ... ?
நீ இந்த உடம்பல்ல என்பதை உணர்வாயோ ... ?
ஒரு நொடி வாழ்வு இது
அரை நொடியில் முதுமை சூழும் நிலை
இது
கால் நொடியில் காலடி நினைக்காவிடில்
அரைக்கால் நொடியில் அழிந்து போகும் உடம்பு இது ...
காலடி சீறடி சென்னியில் வைக்க போராடி கிரி வலம் வந்தால் பாராட்டி புகழும் பார் இந்த பார் ...
சீராட்டி சிந்தையில் சுவாமி நாதனை பதித்தால்
தேரோடும் தெருவில் காரோட்டி செல்வாய் ... காலம் உள்ள வரையில் ...
நான் யார் என்று அறியும் முன்னே ரமணா நீ யார் என்றே புரிந்து கொண்டேன் ...
காஞ்சிக்கும் சிகரம் உண்டு ...
அங்கே நீயே தண்டம் கொண்டு வருகிறாய் ...
நடமாடும் நாங்கள் உனை கிரிவலம் செய்ய நீயே அருள் புரிவாய் என்றேன் ...
சிரித்த ரமணர்
*நான் இருக்கிறேன் க்ஷேமமாய் இருங்கோ* என்றே மடம் சென்று மறைந்தார் ..
என் குறை கொண்ட மடம் கண்டம் தனில் விடம் போல் மறைந்ததுவே ... 👍👍👍💐💐💐🏵️🏵️🏵️🙏🙌
சென்னையில் திருவையாறு ' துஷ்யந்த் ஸ்ரீதர் சங்கீத உபந்யாசம் கேட்டதும், என் மனதிற்குள் போராட்டம். இந்த காலகட்டத்தில் பார்த்தால், பாடகர்களோ, உபன்யாசம் சொல்வர்களோ, நடனம் ஆடுபவர்களோ, பார்த்தால் மிகவும் படித்து Gold medalist களாகவும், மற்றும் I.T. லைனில் வேலை பார்ப்பவர்களாகவும், வேலை பார்த்துக் கொண்டே பிரபலமாக இருப்பவர்கள், வேலையை உதறிவிட்டு முழுவதுமாக தன்னை அர்ப்பணித்து கொண்டவர்கள். அப்பப்பா.....நினைக்கவே வியப்பாக இருக்கிறது.
ஆழ்வார்களைப் பற்றி பாடினார். 12வது வந்த ஆண்டாள் இந்த மார்கழிமாதத்தில் நோன்பு இருந்து ரங்கனை வரித்தாள். அவள் 12 வது ஆழ்வாராக சேர்க்கப்பட்டார்.....
கடைசியில் மோகன ராகத்தில் அமைந்த ' ஏன் பள்ளிகொண்டீரய்யா ' பாடலுடன் கதையை முடித்துக் கொண்டார்.
( சரஸ்வதிதேவி கண்மூடி திறக்கும்நேரம் கொஞ்சம் கையில் அமர்ந்ததில் உதித்தது
குசோன்னதே குங்குமராகசோணே
புண்ட்ரேக்ஷு பாசாங்குச புஷ்பபாண
ஹஸ்தே
நமஸ்தே ஜகதேகமாத:
💐💐💐
நான்கு கைகள் உடையவளும்,
தலையில் சந்திரனின் கலை அணிந்தவளும்,
நிமிர்ந்த மார்பகங்களை உடையவளும்,
குங்குமச் சிவப்பு மேனியுடையவளும்,
கைகளில் செங்கரும்பு, பாசக்கயிறு, அங்குசம், புஷ்பமாகிய அம்பு ஏந்தியவளும்
உலகிற்கெல்லாம் ஒரே தாயானவளும்
ஆன பராசக்தியான ச்யாமளா தேவியே!
உனக்கு எனது நமஸ்காரங்கள்.💐💐💐
*நாயன்மார்கள் வரலாறு* 👌👌👌
*அதிபத்த நாயனார்*
அவதாரத் தலம் :திருநாகை
முக்தித் தலம் :திருநாகை
சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார்.
அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார்.
சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார்.
---2👌👌👌
இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார்.
மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார்.
இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.
இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள்.
---3👍👍👍
அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார்.
சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.🐠🐠🐡🐡🐟🐟🐬🐬🐳🐳🐋🐋🦈🦈🦭🦭
அரண்மனை வாயிலுக்கு வந்து, "கொண்டு வாருங்கள் தேரை" என்கிறான்.
தெய்வத் தன்மை வாய்ந்த தேர் ஒன்று அவன் அருகில் வந்து நிற்கிறது.
தேருக்கு அர்ச்சனை முதலான வழிபாடுகளை நடத்தியபின், மறையவர்களுக்குப் பெரும் பொருளைத் தானமாக வழங்குகிறான்.
தேரின் மீது ஏறி போருக்குப் புறப்பட்டான்.
இன்றைய போரின் முடிவைக் கண்டு அழகிய கூந்தலையுடைய ஜானகி வருந்த வேண்டும்;
இல்லையேல் மயன் மகளான மண்டோதரி வருந்த வேண்டும்.
இவ்விரண்டில் ஒன்று நிச்சயம் நடந்தே தீரும் என்று சொல்லிவிட்டுப் புறப்படுகிறான்.
வானரர்கள், இராமனிடம் சென்று இராவணன் போருக்குப் புறப்பட்டுவிட்ட செய்தியைச் சொல்லுகிறார்கள்.
*பதிவு 75*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥
நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்
க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।
உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ
மனோஜ்ஞே காமாக்ஷ்யா: சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥
அம்பாளுடைய நகத்தினுடைய முனையில இருந்து வெளிப்படும் அந்த காந்தி, வெள்ளை வெளேர்னு இருக்கு
*க்ருʼதஸ்னானம்* – கங்கை ஜலம் போல இருக்கு. அந்த அம்பாளோட சரணத்தோட நகக்காந்தி கங்கை ஜலம், கங்கை கரையில ஒரு இரத்தின மாளிகை கட்டிண்டு ஒருத்தன் வசிச்சான்னா என்ன ஸுகமா இருக்கும்?
மூக கவி சொல்றார். வீடுன்னா ஜலம் சௌரியமா இருக்கணும்.
ஸ்தலம் சௌரியமா இருக்கணும். கங்கை கரைக்கு மேல என்ன? நல்ல ஸ்தலம்.
என்ன ஜலம்? கிடைக்கும்னா *ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம்* – விமலமான, பரிசுத்தமான அம்பாளுடைய நகக்காந்தி என்கிற கங்கா ஜலதுல குளிச்சுண்டு, என்ன குடிக்கப் போறேன்னா? ஞானம்ருதம்.
அம்பாளோட சரணத்துலேருந்து எப்பவும் ஞானம் பெருகிண்டு இருக்கு.
அந்த ஜலத்தை குடிச்சுண்டு, அம்பாளோட சரணத்துல சலங்கை இருக்கு.
அந்த சலங்கை கிணி, கிணின்னு ஸப்தம் பண்றது. அது ஒளிமயமா ரத்னவிளக்கு மாதிரி இருக்கு.
அந்த மணி தீபத்தை ஏற்றி வெச்சுண்டு மனோக்ஞே-ரொம்ப அழகான காமாக்ஷி🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
பதிவு 92.. 12th Sep 2021🙏🙏🙏
ஸ்வயம்பூச் *ச’ம்பு* -ராதித்ய:
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
சிற்றின்பங்களிலுள்ள ஆசையை விட்டு, அந்த அரங்கனைக் கண்ட கண்களால் மற்றொன்றைக் காணாமல்
அவனுக்கே தொண்டு செய்து வருகிறார் உறங்காவில்லி!” என்று பதிலளித்தார் ராமாநுஜர்.
இவ்வாறு தன் அழகாலும் குணங்களாலும் அடியார்களுக்கு ஆனந்தம் தரும் எம்பெருமான் ‘ *சம்பு* :’ என்றழைக்கப்படுகிறான்.
அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 38-வது திருநாமம்.
“சம்பவே நமஹ:” என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் நீங்காத ஆனந்தம் வாழ்வில் கிட்டும். பரமேஸ்வரன் தான் ஹரி என்பதற்கு இந்த நாமம் இன்னமொறு எடுத்துக்காட்டு ..👍👍👍
குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது, சிதறு தேங்காய் உடைப்பது, எருக்கும் அருகும் அர்ச்சனை பண்ணுவது, மோதகம் நிவேதிப்பது இவையெல்லாம் பிள்ளையார் வழிபாட்டில் விசேஷமாயிருக்கிறாற்போலவே அவரைப் பலமுறை பிரதக்ஷிணம் பண்ணுவதும் ஒரு விசேஷமாகும்.
காணபத்யம் என்பதாக கணபதியையே முழுமுதற் கடவுளாக வழிபடுகிற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே காணபதர்கள். ஒரே வேதாந்த ஸமயத்தில் ஆறு பிரிவுகள். ஒரே நதியில் ஆறு துறைகள் மாதிரி. இதில் கணபதி உபாஸனையையே மோக்ஷ உபயமாகச் சொல்வது காணபத்யம். குமாரஸ்வாமி (முருகன்) உபாஸனையைச் சொல்வது கௌமாரம்.
(இன்று சங்கடஹரசதுர்த்தி)
kamalam anna
meykke anivadhu ven muththumaalai;
vida aravin
paikke anivadhu panmanik kovaiyum, pattum;
ettuth
thikke aniyum thiru udaiyaanidam serbavale! 37👍👍👍
She wears pearls on the most pristine whiteness ..The symbol of Her femininity which resembles the hood of the King Cobra is adorned with precious gems . 🐍🐍🐍
Thus beautified , She occupies the rightful one half of Lord Shiva , who is stark contrast wears absolutely nothing !!
He adorns just the vast emptiness of the eight directions as His garment ... 👍👍👍
To obtain all precious nine gems 👍👍👍
அப்பூதியடிகள் நாயனார்
அவதாரத் தலம் :திங்களூர்
முக்தித் தலம் :திங்களூர்👍👍👍
எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.
கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்!
நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.
உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.🙏🙏🙏
அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.🙏🙏👍
நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது,
ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.🐍🐍🐍
அப்பர்
மூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள்
அப்பர்மூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.
அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார்.
அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
மாதா மரகதச்யாமா மாதங்கீ மதசாலினீ
குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ
வனவாஸினீ
ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே
ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸூகப்ரியே
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ஆனந்தப் பெருக்கினால் மிளிர்பவளும்,
எப்பொழுதும் மங்கள வடிவானவளும்,
கதம்ப மரக்காட்டில் வஸிப்பவளும்
மதங்க முனிவரின் புத்ரியுமான பராசக்தியே !!!
உனது கருணைகூர்ந்த அனுக்ரஹத்தை பிரார்த்திக்கிறேன்.
நீலத்தாமரை புஷ்பத்தின் சோபையுடையவளே,
சங்கீதத்தில் பிரியமுடையவளே,
செல்லமாக வளர்க்கும் கிளிகளிடம் பாசமுள்ளவளே,
ஹே மாதங்கி!
எனது நியாயமான ஆசைகளை பூர்த்தி செய்து உனது மேன்மையை வெளிப்படுத்துவாயாக.
(கிளி எனும் சொல் உபாசகர் உட்பட எல்லா ஜீவராசிகளையும் குறிக்கும்).💐💐💐
காமாக்க்ஷியின் தாடங்கம் அசைந்தே சேஷாத்திரியாய் வந்ததே ...
கண்களில் தனி ஒளி கண்டதில்லை யாவரும் இதுவரை ...
நெஞ்சிலே கருணை மழை நனைந்ததில்லை யாவரும் இதுவரை
தொட்டதெல்லாம் தங்கம்
விட்டதெல்லாம் அமையர் மேல் வைத்த ஆசை ..
சொன்னதெல்லாம் நடக்க
சொக்கனும் வியந்தான் மண்ணில் தான் பிறந்த வித்தையை ...
பித்தன் என்று மீண்டும் பெயர் கொண்டான் ..
அத்தர் சித்தமெல்லாம் குழைக்கும் கோமள யாமளை சிரித்தாள் ..
சிந்திய முத்துக்கள் திருவண்ணாமலை எங்கும் தெறித்து ஜொலித்ததே
பித்தன் என்றார்கள் சிலர் சித்தர் என்றார்கள் பலர் ..
கர்த்தரை தொழுதோறும் கால் பாதங்களை தொட்டனர் ...
வித்தை பல செய்தான் அதில் விஷமங்கள் ஏதும் இல்லை ...
எல்லோரும் நலம் வாழ ரமணரை காட்டினான் நல் உலகிர்க்கே ...
தண்டம் செய்த அருளை தங்க கையால் அன்றே செய்தான் ...
என்ன பேறு பெற்றோம் ...
அழியா குலக்குன்றாய் , அருட் கடலாய் இமவான் தந்த கோமளமாய் இன்றும் சிரிக்கின்றான் திருவண்ணாமலையில்
காஞ்சியில் எதிரொலியாய் மடம் அதில் இன்றும் ஒலிக்கின்றதே
தங்க கை தண்டமாய் நடமாடும் தெய்வமாய்
தெய்வத்தின் குரலாய் ஜொலிப்பதை கண்டீரோ ..
பணிவீர் அவரை கண்டீர் அமராவதி ஆளுகைக்கே 🌷🌷🌷
எருமை சிறுவீடு
மேய்வான்
பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்
போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான்
வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்!
எழுந்திராய்
பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை
மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச்
சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.👍👍👍
அழகுச்சிலையே!
கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன.
எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள்.
அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள்.
ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம்.
கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும்,
கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும்,
தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.👍👍👍
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.🏵️🏵️🏵️🏵️
அன்புத்தோழியே!
கோழி கூவிவிட்டது.
பறவைகள் கீச்சிடுகின்றன.
சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.
நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன.
இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம்.
அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம்.
அவனது சிறப்புகளை பாடுகின்றோம்.
ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய்.
இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே!
இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே!
வாழ்க நீ!
பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா?
(அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்).
அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.🌷🌷🌷🌷🌷
பனிபடர்ந்த இருள் சூழ்ந்த மார்கழி காலையை சூரியன் எப்படி பிரகாசமாக்குகிறானோ, அதுபோல் ஆணவம், பொறாமை, அறியாமை ஆகிய இருள் சூழ்ந்த மனதை சிவபெருமான் ஒளி வெள்ளமாக்குகிறார் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
(My experiences... Ravi ...Episode 170🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
No one is without problems in their life. Successful people are the ones who learn to solve their problems.
Where focus goes energy flows, so decide well on what to focus upon.
There are two ways to be happy. Change the situation or change your mindset towards it
I was an amateur in excise area though I gained a bit while I was in KBL but that was not adequate ...
Secondly i might not be as good as him in my response to business verticals where he only earned excellent name besides GPK never intervened in his freedom or his work so he was projecting himself as a HOD ...
All these would collapse his dreams like a pack of cards ...
Under him one Mr Viswanathan was working ... He was not well groomed by NPD for obvious reasons ...
Under GPK one Mr Lotankar was working ... I could befriend only him..
Rest none liked my entry into taxation ...
Such an ambience was never new to me ...
Preparing myself to sail through 🙌🙌🙌
*பதிவு 76* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 17
*வாக்விலாஸம், சாஸ்திர ஞானம்*💐💐💐
வஶிந்யாத்யாபிஸ் த்வாம்
ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்
வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: 17🙌🙌🙌
வாக்கின் பிரவர்த்தகர்களும் சந்திரகாந்தக் கல்லைப் பிளந்தால் தோன்றுவது போன்ற காந்தியுடையவர்களும்
வசினீ முதலிய வாக்தேவதைகளுடன் கூடியிருப்பவளாக உன்னை எவன் சிந்திக்கிறானோ
அவன் மகான்களுடைய காவியங்களைப்போல் பிரகாசிப்பனாகவும்
ஸரஸ்வதி தேவியின் முக கமலத்தின் பரிமளம்போல் மதுரமானதுமான வாக்குகளால் காவியங்களுக்கு கர்த்தாவாக ஆகிறான்.🌷🌷🌷
🏵️🏵️🙌👍🌷
*பதிவு 76* started on 7th Oct 2021
*17* वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका - *வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --* 👍👍👍👌👌👌
இல்லை, அதை விட அழகான இது என்ன தெரியுமா??
லலிதாம்பிகையின் அழகிய கண் இமைகள், அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.💐💐💐
*ஸ்மர* = தியானித்தல் / கவனித்தல்
*மாங்கல்ய* = மங்களமான க்ருஹ = வீடு;
*தோரண* = தோரணம் வாசலை அலங்கரிக்கும் தோரணம்
*சில்லிகா* = புருவம்
எழில் முகத்தை அவதனித்தால், மன்மதன் மன்றத்திற்கு அணி செய்யும் தோரணமென புருவங்கள் திகழப்பெற்றவள்.
வர்ணிப்பிற்கு அப்பாற்பட்ட எழில் பெற்றிருப்பதாலும்,
உலகத்து உயிர்களுக்கெல்லாம் சுரக்கும் அமுதமென அன்பு பொங்குவதாலும்,
கருணை விழிகொண்டு நமையெல்லாம் அழைத்து வீடுபேறு அருளுவதாலும்,
மன்மதனின் மன்றம்(வீடு) என்று அவளது வதனம் உருவகப்படுத்தப் படுகிறது .
மன்மதனின் கோவிலே அவள் வதனமாக,
விழிகளே வாசலாக, புருவங்கள் அதன் தோரணமாக அலங்கரித்திருப்பதாக காட்டியருள்கிறது இந்நாமம்.🌷🌷🌷👍👍
கூனிக்குறுகி கூச்சத்திலே ..
கோணி தரமறுக்கும் கிழிந்த அங்கவஸ்திரத்திலே முடியிட்ட அவலை..
தாவி குசேலனின் மடியிலிருந்து பிடுங்கும் வாத்ஸல்யன்..
எத்தனை நாள் பொறுப்பான் வருமையிலே வாடும் பக்த நண்பனை காண.அவனுக்கு சௌபாக்ய மழை பொழிய..
குசேலன் மறுக்க கண்ணன் பிடிங்கி மன்னி தந்த அவலைத்தாரும் என ஒரு பிடி எடுத்து உண்டு அடுத்த பிடி எடுக்கையிலே..
கண்களால் நிறுத்துகின்றாள் தேவி ருக்மிணி..
ஒரு பிடி அவலுக்கே சகல சௌபாக்கியமும் தந்தேன்..
அடுத்த பிடியிலே உம்மையே தரலாகாதென மறுக்கின்றாள்..
ஏழ்மையிலே புத்ர சம்பத்தைத் தவிர வேறு எந்த சம்பத்திலும் சம்மந்தம் இல்லாது போனதால்..
கிடைத்த கண்ணன் தரிசனம் அது போதுமே சுதாமனுக்கு..
மார்கழி முதல் புதனிலே சுதாமனுக்கு கிடைத்த தரிசனம் போல் நமக்கும் கிடைக்கட்டும்.
சுதாமனும் அனைத்து உபசாரமும் செய்து சாமரம் போடும் ஸ்ரீ தேவி ருக்மிணியின் கடைக்கண் பார்வை நம்மீது படட்டும்.
அக்ஞானம் விலகி துர்விஷயங்களகன்று.. கண்ணன் நம்மை நம்மை ரக்ஷிக்கட்டும்.
மனமெனும் அவலை ஆவலோடு கண்ணனுக்கு சமர்ப்பிப்போம்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
இதேபோல (சங்கர) ஆசார்யாள், ராமாநுஜர் ஆகியவர்களுடைய நேர் சிஷ்யர்களும் தாங்களே மஹா பெரியவர்களாயிருந்தபோதிலும் தங்கள் தங்கள் ஆசாரியரிடத்தில் அஸாத்யமான பக்தி வைத்திருக்கிறார்கள். ஆசார்யாளின் சிஷ்யர்களில் ஒருவரான தோடகாசார்யார் அவரை ”நீங்களேதான் பரமேஸ்வரன்” (பவ ஏவ பவான்) , ”விருஷபத்வஜர் நீங்களே” (புங்கவ கேதன) என்று ஈஸ்வர ஸ்வரூபமாகவே தெரிந்து கொண்டு ஸ்துதித்திருக்கிறார்.
”எப்படியப்பா நீ கங்கையைத் தாண்டி வந்தே?” என்று ஆசாரியாள் வேடிக்கையாகக் கேட்டார்.
அதனால், தங்களை ஸ்மரித்தால் கடக்க முடியாத ஸம்ஸார ஸாகரமே ‘முழங்கால் மட்டும்’ ஜலமாகிவிடும்போது, தாங்களே வாயைத் திறந்து ஆக்ஞை பண்ணியிருக்கையில் நான் கங்கையைத் தாண்டினது என்ன பிரமாதம்?” என்றார்.
அப்புறம்தான் ஆசார்யாளே அவருக்குப் பத்மங்கள் புஷ்பித்ததைக் காட்டி, அவை இவருடைய பாதத்தை தரித்ததால் ”பத்மபாதர்” என்ற பெயரை இவருக்கு வைத்தார்.
ஈஸ்வரனாகவே ஒரு நிலையில் இருந்தாலும், இன்னொரு நிலையில் அவனுடைய பாதபத்மமாக நினைக்கப்படும் பகவத்பாதருக்குப் பொருத்தமாக இப்படி சிஷ்யரும் பத்மபாதராக அமைந்தார்.
அதற்கு சரியான விளக்கம் கொடுத்து பதிலை அறிய வைத்த வார்த்தை சித்தர் என்கிற சக்தியின் அபிராமி பட்டருக்கு நன்றிகள் கோடி கோடி...
🙏🙏🙏🙏🙏🙏