அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 11 பதிவு 8
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 11
பதிவு 8
கேள்வி பதில் நேரம்
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 10
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்*
மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்!
பசும் பொற்கொடி இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் .
இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜
*நான்*
ஐயனே ... உங்களிடம் பதில் நிறைய இருக்கிறது . என்னிடம் கேள்விகள் பஞ்சமாக இருக்கிறது ...
பட்டர் : ( முதல் தடவையாக... சிரிக்கிறார் )
கேள்விகளையும் நானே கேட்டு பதில்களையும் நானே சொல்ல முடியாது .. நீ தான் கேட்க வேண்டும் .. இப்படி வைத்துக் கொள்வோம் .. நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்...
திருவிளையாடல் தருமி மாதிரி கதறினேன்..
பட்டரே!! எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் . பதில் சொல்லத் தெரியாது ..
சரி இன்று ஒரு கேள்வி கேட்கிறேன் 👌👌👌
*நான்*
உங்கள் பாடல்களை படிக்க படிக்க வேறு வேறு புதிய அர்த்தங்கள் பிறக்கின்றன ...
உதாரணம்.... ஒரு பாடலில்
*சிந்தையுள்ளே உன்னை பந்திப்பவர் என்றும் அழியா பரமானந்தர்*
என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ...
முதலில் அழியா பரமானந்தர் அம்பிகையின் பதியை குறிக்கும் என்று அர்த்தம் கொண்டேன் ..
அடுத்த நாள் படிக்கும் போது வேறு புதிய அர்த்தம் பிறந்தது ..
உன்னை மனதிற்குள் நினைப்பவர்களுக்கு என்றும் அழிவு இல்லை
அவர்கள் அடையும் பரமானந்தத்திற்கு அளவே இல்லை என்று புரிந்து கொண்டேன் ...
இப்படி சொல் வளமும் பொருள் வளமும் கொண்ட அந்தாதியை தந்த உங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவே ...
பட்டர்* ... ஏதோ கேள்வி கேட்கப்போகிறாய் என்றல்லவா நினைத்தேன்
தாங்கள் பல பாடல்களில் முத்துக்களை உதாரணமாய் சொல்கிறீர்கள் ..
அபிராமி முத்து மாலை அணிந்தவளே ...!!!
என்று அன்னையை முத்து முத்தாய் பாராட்டுகிறீர்கள் ...
இதன் தாத்பரியத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா ?
*பட்டர்* .. நல்ல கேள்வி .. சில பொருள்கள் சிறப்பான தனிப்பட்டத் தன்மை பெருமை கொண்டவை
*தங்கம்* : இதை அணிபவர்கள் மென்மை யானவர்கள் ..
மென்மை குணம் கொண்டவர்கள் ..
ஒரு மதத்தில் ஆண்களுக்கு மென்மை இருக்கக் கூடாது ..
வீரம் தழைத்து இருக்க வேண்டும் என்று தங்கம் ஆண்கள் அணிவதை தடை செய்திருக்கிறார்கள்
*இரும்பு* -
இரும்பினால் நகைகள் செய்வதில்லை ...
சில தீய சக்திகளை தன்பால் இழுக்கும் சக்தி இரும்புக்கு உண்டு
*வெள்ளி* வெள்ளி பாதங்களை அலங்கரிக்க மேனியை அல்ல ...
வெள்ளி நல்ல பாதையில் அழைத்து செல்லும் தன்மை உடையது
*நவரத்தினங்கள்*
இவை உடலின் குண்டலினியின் தத்துவம்
எப்பொழுதாவது ஒரு தடவை போட்டுக்கொள்ளலாம் .. தினசரி வாழ்க்கைக்கு ஏற்றதல்ல
*முத்து* ... ஞானத்தை தருவது .. எவ்வளவோ வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்து விட்டு ஒரு திடப்பொருளாக உருவாகி வெளி வருகிறது ...
சரி உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன் ..
அபிராமி அணிந்திருப்பது வெளியில் எல்லோரும் பார்க்கும், அணியும் சாதாரண முத்து மாலை இல்லை ..
வாழ்க்கையில் அவதிப்பட்டு *அம்பிகையே நீயே சரணம் உன்னை விட்டால் வேறு நாதி இல்லை*
என்று அவள் நினைவாகவே இருப்பவர்களுக்கு அழியா முக்தியும் , வீடும் தருகிறாள் அபிராமி ..
அப்படி முக்தி அடைந்த முக்தர்களை கோத்து முத்து மாலையாய் அணிந்துள்ளாள் அபிராமி ...
அவளை ஒரு முறை தரிசித்தாலேயே அவள் அணியும் முத்து மாலையில் நாமும் ஒரு முத்தராக இடம் பிடிக்கலாம் ..
*நான்* ஆஹா இப்படி ஒரு விளக்கமா ? பட்டரே புல்லரிக்கின்றது ..
*பட்டர்* ... ம்ம் தெரிகிறது
உன் உடம்பும் சிவந்து விட்டது ...
நாளை பார்ப்போம் ....
பறந்து சென்றார் பனி மால் இமயப் பிடி போல ...👌👌👌 🙏🙏🙏
Comments
அத்தர் தனை வணங்கும் எவரும் சித்தர் ஆவதில் வியப்பென்ன ?
புத்தர் பெறாத கல்லடியா ? சாக்கியயர் தராத சொல்லடியா ?
காளி வந்து களி கண்டாள் கற்பனைக்கும் எட்டா ஒளி தந்தாள் ... தன்னுடன் தினம் பேசும் அருள் தந்தாள் .. தனித்து நிற்கையில் அவளே தாயுமானாள்
ராமன் வேறு கிருஷ்ணன் வேறு என் காளி வேறு என்றே இனம் பிரிக்காதவன் ... நரேந்திரனுக்கு நல்வழி சொன்னவன் .
வாழ்ந்தது வளர்ந்தது ஏழ்மை வறுமை .. காளி என்னுடன் வாழ்க்கையில் வேண்டுமோ இனி ஒரு பெருமை என்றான் ...
பெண்ணாக தனை வர்ணிதே பெண்மையின் மேன்மை கண்டான் .. ஆண்டாளாய் அன்று வந்தவன் காளியின் பரம ஹம்சமானான்
காஞ்சி வாழ் தெய்வம் போல காமாக்ஷி ஆனான் ...
மனைவியையும் தாயாய் நினைத்தே மலர் தூவி கவி பொழிந்தான் ...
மாணிக்கம் ஒன்று உண்டோ
உண்டு என்றால் அவனே என் மனம் வாழும் பெரியவா அன்றோ 🙌🙌🙌🙌🙌
ஸந்தேஹ க்ருல்லோசநே,
வாக்ஸூதா ஸேசனே
சாரு கோரோசனா பங்க கேளீலலாமாபிராமே
ஸூராமே ரமே👌👌👌
அம்ருதத்திற்கு நிகரான வாக்கு உடையவளே!
கோரோசனை சாந்தினால் இடப்பட்ட அலங்கார திலகத்தின் அழகுடன் கூடியவளே!
மனதிற்குகந்தவளே, ஐஸ்வர்யமே வடிவானவளே!👌👌👌
*பதிவு 79* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
*வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --*
அழகிய தடாகத்தில் கண்ணைப் பறிக்கும் வண்ண மீன்கள் துறுதுறுவென்று அசையுமே அது போன்ற அழகிய கயல் விழிகள் கொண்டவள் அம்பாள்.🐟🐟🐡🐡🐋🐋🐳🐳🐬🐬🐠🐠🐠
*பரீவாஹ* = நீர் நிலை, பாயும் நீர் நிலை
*லக்ஷ்மி பரீவாஹ* =
ஸ்ரீலக்ஷ்மிக்குரிய நீர் நிலை
*சலன்* = நகர்தல்
*மீனாப லோசன* = மீனையொத்த விழிகள் (உவமை)
ரூப அழகிற்க்காக மட்டுமின்றி, தன்னின்று தோன்றிய சிருஷ்டியை இமைவிலகாது கடைக் கண்ணால் காப்பாதால், விழிகள் அங்கும் இங்கும் அலைபாயும் மீன்களுக்கு உவமையாகிறது.👌👌👌👌👌👌👌👌👌👌
*பதிவு 79* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 17
திவம் ஸர்வா-முர்வீ-மருணிமனி மக்னாம் ஸ்மரதி ய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வன-ஹரிண சாலீன நயனா
ஸஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:🏵️🏵️🏵️🏵️🏵️
அவனுக்கு மானின் கண்கள் போன்ற மருண்ட கண்களையுடைய ஊர்வசி போன்ற தேவகன்னிகளும் வசியமாவார்களாம்.🙌🙌🙌🙌
திருப்பாவை பாசுரம் 10
ஓங்கி உலகளந்தவனை வாமனனை பாசுரத்திலே சொன்னவள்..
இங்கு ராமாவதாரத்திலே ராமனால் மாய்க்கப்பட்ட கும்பகர்ணனை நினைவுகூறுகிறாள்..
நித்திரையிலிருந்து எழாது உறங்கிக் கிடக்கும் பெண்ணை கும்பகர்ணனுக்கு உவமையாக சொல்கின்றாள்.
சாதுர்யமான சிறுமி கோதை.
போன ஜன்மத்திலே நாராயணனை துதித்து காரணத்தால் சொர்க்கத்தையே மாற்றமில்லாத தூக்கத்திலே அனுபவிக்கிறாள் போலும் என்கிறாள்.
வாசனை பொருந்திய திருத்துழாய்(துளஸி) மாலையை சனிக்கிழமையிலே சிரத்திலிருந்து போர்வையாய் அணிந்த நாராயணனை துதித்திடுவோம்..
பொற்சிலையாய் காணக்கிடைத்தான்
போற்றத்தக்க பறை தந்திடுவான் எழுந்திரு.
தூக்கத்தில் கும்கர்ணனுக்கு ஈடான பெண்ணே அவன் தூக்கத்தை வாங்கிவந்தாயோ..
பள்ளிக்கதவை திறந்திடுவாய்.
நீராடி நாராயணனை வேண்ட போகலாம் என ஒவ்வொருவராக அழைத்துச்செல்லும் சிறுமி கோதை வழி செல்வோம்.
ஆண்டவன் நாமம் வாழி
ஆண்டவனை ஆண்ட ஆண்டாள் நாமம் வாழியவே
🙏🌹🙏
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏
(My experiences... Ravi ...Episode 173🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
A friend is one who overlooks your broken fence and admires the flowers in your garden.
Act as if what you makes a difference. It does.
NH was a gem of a person and a thorough professional .
It is always better to work under professionals than under people who came up by ranks ..
In my opinion they would be not transparent and highly possessive ...
For mumbai based queries GPK was only responding and for Chennai and L&T C based queries were responded by PPM .
Even the issues were same both their views were totally , diagonally opposite . Confusion and irritation were mounting .
Decided not to start anything new till GPK retired
The day came it brought both happiness and miseries in equal share . PPM was gaining full control over us .
He decided when should I learn indirect taxation. Slowly i realised GPK was 100 times better than PPM .... 🏵️🏵️🏵️
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி!
நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.👏👏👏
தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும்,
மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே!
புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே!
நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.
அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே!
இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே!
அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா!
வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம்
உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.🍇🍇🍇
உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம்.
வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய்.
சிவந்த நெருப்பைப் போன்றவனே!
உடலெங்கும் திருநீறு அணிந்தவனே!
செல்வத்தின் அதிபதியே!
சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே!
ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது!
இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக
!🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*திருப்பாவை*
நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தோழியோ எழுந்து வந்தபாடில்லை!
நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்?
அவளை விட்டுவிட்டு, நீராடச் சென்றிருப்போம்.
ஆனால், பக்திநெறிக்கு இது அழகல்ல.
பிறரை விட்டுவிட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று.
எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும்,
அவன் புகழ் பேச வேண்டும்.
அப்போது தான் அவனருள் கிடைக்கும்.
இதனால் தான் கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.🙏🙏🙏🙏
*திருவெம்பாவை*
உலகத்தில் எல்லா உயிர்களையும் இறைவன் ஆட்கொள்ளத்தான் போகிறான்!
யானையும், சிலந்தியும், பறவைகளும் கூட அவனால் ஆட்கொள்ளப்பட்ட தகவல்களை நாம் படிக்கிறோம்.
ஆனால், மனிதனுக்கு மட்டுமே அவனைப் பாடும் வகையில் வாயைத் தந்திருக்கிறான்.
பேசத்திறனற்றிருந்தாலும் மனதுக்குள் படிக்கும் திறனைத் தந்திருக்கிறான்.
எனவே கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியைப் பயன்படுத்தி நீராடும் போதும், உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும் நமசிவாய என்று அவன் திருநாமம் சொல்லி பிறப்பற்ற நிலையடைய வேண்டும்
என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.🙌🙌
பொறுமை கடலிலும் பெரிது என காட்டும் பூரி ஜெகன்நாதர்....
கீழைக் கங்க குல அரசன் அனந்தவர்மன் சோதகங்க தேவனால் 11ஆம் நூற்றாண்டில் இவ்வாலயம் விரிவுபடுத்தி கட்டப்பட்டது.
ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின் சிலை புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்படுகிறது.
கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர் இக்கோயில் மூலவர்களாக உள்ளனர்.
மூலவர்களான ஜெகன்நாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்துள்ளது.
பூரி கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு தன்னை,பலராமரை, சுபத்திரை சிலைகளை செதுக்குமாறு பெருமாள் கூறினார்.
ஒரு நாள் ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது.
அரசன் அந்த, மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார்.
தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது.
அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார்.
அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை.
என்ன வயதான தச்சருக்கு ஏதாவது தவறு நடந்துவிட்டதோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான்.
உடனே தச்சர் கோபமடைந்தார். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு,
இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு நீ கடைபிடிக்காத பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார்.
அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகன்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளையே அரசர் பிரதிஷ்டை செய்தார்.
பூரி எனும் புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது,
விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது.
இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி , உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .
பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று இந்த நிர்மால்ய மகா பிரசாதத்தை விரும்பி வாங்குவார்கள்.
இந்த மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் பக்தர்களுக்கு மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கிறது.
ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள்.
மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்படுகிறது.
அதன் அடிப்படை நம்பிக்கை என்னவென்றால் மரணத்திற்குப் பிறகு இதை உட்கொண்டதால் ஆத்மா எமனுடைய தண்டனையிலிருந்து காப்பாற்றப்படும். இது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
திரேதாயுகத்தில் இராவணனை வென்ற பிறகு
ஸ்ரீ ராமரும்,ஸ்ரீ லக்ஷ்மணனும் மற்றவர்களும் அயோத்திக்குத் திரும்பினார்கள்.
அயோத்தியா வாசிகளும் அவர்களுடைய வீரதீர செயல்களை கேட்டு மகிழ்ச்சியில் இருந்தனர்...
லக்ஷ்மணனுடைய மனைவி ஊர்மிளா மிகவும் அமைதியாக அவர்கள் பேசுவது எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்....
அனைவரும் லக்ஷ்மணன் இந்திரஜித்தை கொன்றதையும், இந்திரஜித்தின் பலத்தையும், அவன் பெற்றிருந்த ஒரு வரத்தை பற்றியம் பேசி கொண்டிருந்தார்கள்.
அரண்மனையில் அன்று மாலையே இந்த செய்திக்குப் பின் உள்ள உண்மையை பற்றி அறிய ஒரு கூட்டம் கூடியது
ஸ்ரீ ராமர் லட்சுமணனை பார்த்து, லக்ஷ்மணா! நீ பதினான்கு வருடங்களாக உணவு உண்ணவில்லை என்றால் பஞ்சவடியில் நாம் தங்கியிருந்த போது நான் தந்த உணவு பொட்டலங்களை என்ன செய்தாய் என்று வினவினார் ?
இது உண்மையா என அறிய விரும்பிய ஸ்ரீ ராமர் ஸ்ரீ ஹனுமானை நீ இப்போது பஞ்சவடிக்கு சென்று ஷமி மரப்பொந்தில் வைக்கப்பட்டிருக்கும் உணவு பொட்டலங்களை எடுத்து வா என்றார் .
யுத்த பூமியில் இந்திரஜித்தின் அம்பால் மயக்கமடைந்த லஷ்மணனை காக்க சஞ்ஜீவினி மலையை ஒற்றை கையால் கொண்டு வந்த நான், அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வர வேண்டுமா என்று சிறிய தயக்கத்துடன் எடுத்து வர புறப்பட்டார்.
பஞ்சவடியை அடைந்த ஹனுமான் அந்த உணவு பொட்டலங்களை பார்த்தார் ...ஆனால் அதை அவரால் எடுக்க முடியவில்லை.
ஸ்ரீ ராமரிடம் இயலாமையை தெரிவித்தார்
ஹனுமானால் . அந்த உணவு பொட்டலங்களை தனது அஹங்காரத்தினால் சுமக்க முடியாமல் போனது என்று ஸ்ரீ ராமன் புரிந்துகொண்டார்.
நான் அந்த உணவு பொட்டலங்களை பஞ்சவடியில் இருந்து இங்கே கொண்டு வருகிறேன் என்றார் லெட்சுமணன்.
லக்ஷ்மணன் தனது தெய்வீக அம்பினால் அந்த உணவு பொட்டலங்களை கொண்டு வந்தார்
அவை எல்லாம் ஸ்ரீராமர் முன்பாக சமர்ப்பிக்கபட்டது.
அப்படி சரிபார்த்தபோது அதில் ஏழு பொட்டலங்கள் மட்டும் குறைவதாக கூறினார்.
ஸ்ரீ ராமர் லக்ஷ்மணனிடம் இருந்து ஏழு உணவுப் பொட்டலங்கள் குறைந்ததைப் பற்றி கேட்டார்.
லக்ஷ்மணன் மிகவும் பணிவாக அதன் காரணத்தை விளக்குகின்றேன் என்று கூறினா
இந்திரஜித் தலை துண்டிக்கப்பட்ட போது ஐந்தாவது முறையாக உணவு அளிக்கப் படவில்லை. . .
நீங்கள் ராவணனை சிரச்சேதம் செய்த போது ஆறாவது முறையாக உணவு அளிக்கப் படவில்லை. . .
புலஸ்தியர் ரிஷியின் மைந்தனான, இராவணன். பிராமணன் ஆவார்.
அப்போது ராவணனின் மரணத்திற்கு இலங்கையில் துக்கம் அனுஷ்டித்த போது அதில் கலந்து கொண்டு உணவு உண்ணாமலே நாம் இலங்கையை விட்டு கிளம்பினோம்
ஸ்ரீ இராமர் லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும் அர்ப்பணிப்பு உணர்வினாலும் தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார்.
பின்பு மிகவும் உன்னதமான தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து பேசினார்..
ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்..…. இந்த பதினான்கு வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார்.
அயோத்தியாவில் நமக்கு மூன்று சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு. இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம் ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார்.
ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள் .....எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை..... எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றாள்.
ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார்....
வரப்போகும் கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள் .
லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் விமலாதேவிக்கு நைவேத்தியம் செய்யப்படும். பிறகுதான் அது மகா பிரசாதமாக மாறுகிறது .
நீங்கள் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் போது நான் வங்கக் கடலில் ஒரு நீர்க்குமிழியாக வந்து தங்களது பொற்பாதங்களை தொட வேண்டும்...
இந்த வரங்களை ஊர்மிளாவிற்கு வழங்கிய ஶ்ரீராமர் கூறினார் ஊர்மிளா உன்னுடைய தன்னலமற்ற அன்பும் தியாகமும் ஈடு இணையற்றது.
*யுதிஷ்டிரஉவாச* :
கிமேகம் தைவதம் லோ கே கிம் வாப்யேகம் பராயாணம்:
சத்துவந்த; கம் கமர்ச்சந்த: ப்ராப்நியூர் மணவாஸ் ஸுபம்’’
''இந்த பூவுலகிற்கே ஒரே கடவுள் என்று எவரைச் சரணடையலாம்? '' என கேட்கிறான் யுதிஷ்டிரன்.
‘’கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத: |
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜந்ம ஸம்ஸார பந்த நாத்
‘’இந்த மனித குலமே எவரை போற்றி துதித்து, வழிபட்டு அமைதியும், வளமும் பெற்று உய்யமுடியும் ?’’
‘’கிம் ஜபந் முச்யதே ஜந்துர் ஜென்ம சம்சார பந்தனாத்:’’
‘’எந்த மந்திரங்களை உச்சரித்து ஒருவன் பிறவி - மரண துன்பத்திலிருந்து விடுபட முடியும்?’’
'' தாத்தா, நீங்கள் எல்லாம் தெரிந்தவர், நீங்களே சொல்லுங்கள்,நீங்கள் எதை உயர்ந்த தர்மம் என்று கருதுகிறீர்கள்? எந்த ஜெபத்தை, மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் உலக ஜீவ ராசிகள் சம்சார பந்தத்திலிருந்து விடுதலை பெறும்?'' - யுதிஷ்டிரன்.
‘’ஜகத்ப்ரபும் தேவதேவம் அநந்தம் புருஷோத்தமம் |
ஸ்துவந் நாம ஸஹஸ்ரேண புருஷ: ஸததோத்தித: ||
''இந்த பூவுலகில் எல்லோர் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தன்னையே தியாகம் செயது கொள்பவர் ஸ்ரீ மஹா விஷ்ணு ஒருவரே. ஆதி அந்தம் இல்லாத பிரபு''
‘’தமேவ சார்ச்சயந் நித்யம் பக்த்யா புருஷ மவ்யயம் |
த்யாயந் ஸ்துவந்நாமஸ்யம்ச யஜமாநஸ் தமேவச ||
அப்படிப் பட்ட மகா புருஷனை ஸ்தோத்ரம் பண்ணியும், வழிபட்டும் ஒருவன் முக்தி பெறலாம்
லோகாத்யக்ஷம் ஸ்துவந் நித்யம் ஸர்வதுக்காதிகோ பவேத் ||
தர்ம ஸ்வரூபனான மூவுலகும் காப்பவனான மஹாவிஷ்ணு ஆதியோ அந்தமோ இல்லாத மகேஸ்வரன். அவனது நாமத்தை நாமத்தை ஸ்மரிப்பவன் சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு துக்கங்களற்ற நிலை அடைகிறான்.
‘’ப்ரஹ்மண்யம் ஸர்வ தர்மஜ்ஞம் லோகாநாம் கீர்த்தி வர்த்தநம் |
லோகநாதம் மஹத்பூதம் ஸர்வபூத பவோத்பவம் ||
ஏஷ மே ஸர்வ தர்மாணாம் தர்மோ திகதமோமத: |
யத் பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்ச்சேந் நர:ஸதா||
பரமம் யோ மஹத்தேஜ: பரமம் யோ மஹத்தப: |
பரமம் யோ மஹத்ப்ரஹ்ம பரமம் ய: பராயணம் |
பக்தன் : கிருஷ்ணா, என்னவாயிற்று. சௌகரியம் இல்லாமல் இருப்பது போல் காண்கிறாய்
கிருஷ்ணா : ஆம். உன் மனதில் அமர்ந்து இருக்கிறேன். இடம் சௌகரியமாக இல்லை.
பக்தன் : ஏன் அவ்வாறு கூறுகிறாய்
கிருஷ்ணா : என்னவென்று சொல்வது. என்னை தவிர்த்து ஆயிரம் விஷயங்களை சேகரித்து வைத்து இருக்கிறாய். அவைகளையும் மீறி உட்கார வேண்டியதாக இருக்கிறதே
பக்தன் கண்களில் குளம்.
கிருஷ்ணா : என்னவாயிற்று. ஏன் அழுகிறாய்
லட்சுமி தேவி : அதெல்லாம் அனுமதிக்க மாட்டேன் ஸ்வாமி. என் பக்தன் சோதனைகள் அனுபவிப்பதா? அவன் மனதில் இருக்கும் அழுக்குகளை என் அன்பால் அழித்து விடுவேன். தங்களின் நாமத்தை அவ்வப்போது அவனை கூறும்படி செய்வேன். அவன் மனம் இன்னும் சுத்தமாகும். சோதனைகள் அனுபவித்தாலும் அதன் வலியை குறைப்பேன். அதே நேரத்தில் அவன் தவறை உணர வைத்து அவன் அழுக்குகளை நீக்கி தங்கள் பக்கம் அவனை திருப்புவேன்
கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும். அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும். காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர். மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது. இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.
அம்மல ரயற்கருளி முன்பரி முகமாய்
இசைகொள் வேதநூ லென்றிலை
பயந்தவனே எனக்கருள் புரியே
உயர்கொள் மாதவிப் போதொடுலாவிய
மாருதம் வீதியின் வாய்
திசையெல்லாம் கமழும் பொழில்சூழ்
திருவெள்ளறை நின்றானே!
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம்
உபாஸ்மஹே.
(தூய மெய்ஞ்ஞான வடிவமும், ஸ்படிகம் போன்று தூய வெண்நிறமும், அறிவுச் செல்வத்திற்கு உலகில் ஆதாரமாக விளங்கி வருபவருமான ஹயக்ரீவரை வணங்குகிறேன்.)
ஞான வடிவான ஹயக்ரீவரை வழிபட கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் செல்லலாம். இந்த தலம் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். அதே போன்று சென்னை-செங்கல்பட்டு பிரதான சாலை அருகே இருக்கும் செட்டிபுண்ணியம் எனும் இடத்தில் ஹயக்ரீவர் கோயில் உள்ளது. மைசூரில் இருக்கும் புராதன பரகால மடத்தில் லட்சுமி ஹயக்ரீவர் கோயில் உள்ளது. இம்மூர்த்தியை இராமானுஜர், சுவாமி தேசிகன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். வித்யா ஸ்வரூபனான ஹயக்ரீவரைக் குறித்து முப்பத்தியிரண்டு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை சுவாமி தேசிகன் எழுதியுள்ளார். இதைச் சொன்னால் நல்ல ஞானம் வரும். முடிந்தளவுக்கு சிறு வயதிலேயே ஹயக்ரீவ ஸ்தோத்திரத்தை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். மாணவ - மாணவிகள் தினமும் பக்தியுடன் ஹயக்ரீவரை வணங்கினால் அது நிச்சயம் நல்ல பயனைக் கொடுக்கும்.
@mahavishnuinfo
*பதிவு 78* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 17
வஶிந்யாத்யாபிஸ் த்வாம்
ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்
வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: 17🙌🙌🙌
அவர்களாவது, வசினீ, காமேஸ்வரீ, மோதினீ, விமலா, அருணா, ஜயினீ, ஸர்வேஸ்வரீ, கெளலினீ.
இந்த தேவதைகளே வாக்கைப் பிறப்பிக்கும் அன்னையர்.
ஆகவேதான் *ஸவித்ரீபி: வாசாம்* என ஆரம்பிக்கிறார்.
இவர்கள் எந்த வர்ணத்தவர் என்றால், சந்திர காந்த கல்லின் உள்புறம் போன்ற வெண்மை நிறைந்தவர்களாம்.
ஒரு இடத்தில் ' *சரத் ஜ்யோத்ஸ்நா சுத்தாம்'* என்பதாகவும்,
இன்னொரு இடத்தில் *அருணா* என்றும் கூறியவர் இப்போது *சரத் ஜ்யோத்ஸ்நா* போன்ற வாக்தேவதைகள் சூழ அருணாவாக வீற்றிருக்கிறாள் அன்னை என்கிறார்.
இந்த முறையில் அன்னையை உபாசிப்பவர்கள் சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் உடையவர்களாக விளங்குவார்கள் என்பதற்கு காளிதாஸனே உதாரணம்.👍👍👍🍇
*வாக்கின்* ;
*ஸவித்ரீபி* : - பிரவர்த்தகர்களும்;
*சசி-மணி-சிலா-பங்க-ருசிபி: -* சந்திரகாந்த கல்லை உடைத்தாற்போன்ற காந்தி உடைய ;
*வாக்தேவி* -வதன-கமலா-மோத-மதுரை: - சரஸ்வதி தேவியின் முககமலத்தின் பரிமளம் போன்ற மதுரமான ; *காவ்யானாம்* - காவியங்கள்;
கர்தா - உடையவன்; பவதி - ஆகிறான்; *மஹதாம்* - மகான்களுடைய ;
*பதிவு 78* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
1. அவள் நம் எல்லோருக்கும் *தாய்*
2. சாதாரண வறுமையில் சுழலும் தாய் அல்ல மஹாராணி பிரபஞ்சத்தை ஆள்பவள்
3. சிம்மங்கள் சூழ்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள்
4. சிதக்கனி எனும் குண்டத்தில் ஒளிமயமாய் தோன்றியவள்
5. அசுர குணத்தில் இருந்து தேவர்களாகிய நம்மை காக்க உதயமாகிறாள் 🙌🙌🙌
7.நான்கு கரங்களை கொண்டருள்பவள். அருள் தரும் அணைக்கும் கரங்கள் அடக்கவும் அடிக்கவும், அழிக்கவும் கூட செய்யும்.
8. அன்பினால் இணைப்பேன், பிணைப்பேன் என்று உணர்த்த ' இடது'' கையில் ஒரு ''பாசம்'' எனும் கயிறு வைத்திருப்பவள் .
9. தவறு செய்தால் தொலைத்து விடுவேன், என்று தீயவர்களை கண்டிக்க ஒரு வலது கையில் அங்குசம் கொண்டவள்
10. அவள் கையில் இருக்கும் கரும்பு வில் என்ன உணர்த்துகிறது? .
அவள் இனிய மனத்தை தான் குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா? அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு
👍👍👍🍇🍇🍇
12. பிரமாண்ட மண்டலங்களாக இருப்பவள்
13 செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, இப்படிப்பட்ட மலர்களை அணிந்து அவைகளுக்கு நறுமணம் கொடுப்பவள்
14.. ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணி மகுடம் தரித்திருக்
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.
15 ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.🙌🙌🙌
17 மன்மதன் வசிக்கும் இடம் லலிதாம்பிகையின் அழகிய கண் இமைகள், அவள் திருமுகத்துக்கே தனி அழகை தருபவை.🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
பதிவு 94 . 12th Sep 2021🙏🙏🙏
*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
தன் ஆசையை சுதேஷ்ணையிடம் தெரிவித்தான்.
“நீ இதுவரை இருந்த பணிப்பெண்களிடம் நடந்து கொண்டது போல
சைரந்திரியிடம் நடந்து கொள்ளாதே!
அவள் தனக்கு ஐந்து கந்தர்வர்களுடன் திருமணம் ஆகியிருப்பதாகச் சொல்கிறாள்.
யாரேனும் காமத்தோடு அவளை நெருங்கினால், அவர்களை அந்தக் கந்தர்வர்கள் கொன்று விடுவார்களாம்!” என்று எச்சரித்தாள்.🍇🍇🍇
*பதிவு 77*
*Oct 7th 2021*������������
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
*பதிவு 77*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
इमं परवरप्रदं प्रकृतिपेशलं पावनं
परापरचिदाकृतिप्रकटनप्रदीपायितम् ।
स्तवं पठति नित्यदा मनसि भावयन्नम्बिकां
जपैरलमलं मखैरधिकदेहसंशोषणैः ॥
இமம் பரவரப்ரத³ம் ப்ரக்ருʼதிபேசலம் பாவனம்
பராபரசிதா³க்ருʼதிப்ரகடனப்ரதீ³பாயிதம் ।
ஸ்தவம் பட²தி நித்யதா³ மனஸி பா⁴வயன் அம்பி³காம்
ஜபைரலம் அலம் மகை²ரதி⁴கதே³ஹஸம்ஷோஷணை: ॥
ன்னு ஒரு ஸ்லோகம்.
ரொம்ப தூய்மையானவை, பாவனம் – தூய்மைபடுத்தக் கூடியவை
*பராபரசிதா³க்ருʼதிப்ரகடனப்ரதீ³பாயிதம் –*
எது உண்மை?எது மாயை? என்பதை தெளிவிக்கக் கூடிய ஒரு தீபம் போன்ற ஒரு ஸ்தோத்ரம்.
இந்த ஸ்தோத்ரத்தை படிச்சா எது ஸத்?எது அஸத்? னு தெரிஞ்சுடும்🏵️🏵️🏵️
vinnavar yaavarum vandhu irainsip
penudharku enniya emberumaattiyai,
pedhai nensil
kaanudharku anniyal allaadha kanniyai,
kaanum-anbu
poonudharku enniya ennam anro, mun sey punniyame! 40🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
She is the Omnipotent one whom the Devas decided to worship when they wished to partake of nectar .👏👏👏
She is not comprehendible by the ignorant. They will not nurture the thought of praying to Her and surrendering with loving devotion at Her divine feet is a feat made possible only by the good fortune accumulated over several previous births 👏👏👏
For our prior "Punya"--- good deeds to bring fortune to us 🏵️🏵️🏵️
andhaganbaal
meelugaikku, un_dhan vizhiyin kadai undu;
mel ivarrin
moolugaikku, en kurai, nin kuraiye anru;-
muppurangal!
maalugaikku, ambu thoduththa villaan, pangil vaanudhale! 39👍👍👍
Even a casual glance of HER 's is enough to free from the clutches of eyeless , sightless death . 👣👣👣👣
Such being the case , is it not the devotee 's oversight and fault that he fails to propitiate Her continuously ? 🦚🦚🦚
Abhirami bhattar laments that it is his fault and not Hers that he has not redeemed himself by throwing his soul, his consciousness , his all at Her lotus feet . She - the compassionate Mother is ever willing to enfold the Bhakta and protect him as a child in Her arms 👍👍👍
To get the power to handle different machines and instruments 🏵️🏵️🏵️
இதனாலெல்லாம் என்ன பெரிய ப்ரயோஜனம் வந்துவிடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. ராமாயண அணில் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அத்தனாம் பெரிய ஸேது பந்தத்தில், ‘நாம் அல்ப ஜந்து, என்ன பெரிய ஸஹாயம் பண்ணமுடியும்?’ என்று அது நினைத்ததா? அது பண்ணின ஸேவை ராமருக்கு என்ன உபகாரம் பண்ணிற்றோ பண்ணவில்லையோ, அதற்கே பெரிய உபகாரம் பண்ணி விட்டது
பெரியவாள் சொன்ன பதில், கல்லூரி மாணவனுக்கு மட்டுமில்லை. நெஞ்சுக்குள் வேதனையுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த எத்தனையோ பக்தர்களுக்கும்தான்.
பிரம்ம காஞ்சி என்ற பெயரும், ஸோம கணபதியின் சிறப்பும், பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அணுக்கத் தொண்டர்களுக்குமே புதிதான செய்திகள்
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"பெரியவாளுக்கு, பெரிய காஞ்சிபுரத்தில் மடம் இருக்கு.சின்னக் காஞ்சிபுரம் ஆனைகட்டித் தெருவில் ஒரு மடம் இருக்கு.அதையெல்லாம் விட்டுட்டு, இந்த குக்கிராமத்தில் பெரியவா ஏன் தங்கியிருக்கணும்?" என்று கேட்டான்---கல்லூரி மாணவன்
பெரியவாள் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்கள்.
"இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கணும்னு ரொம்ப பேருக்கு ஆசை. ஆனா யாருக்கும் தைரியம் வரலை! நீ கேட்டுட்டே! சந்தோஷம்."
"
"விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்னக் காஞ்சிபுரத்தில் கொஞ்ச நாள் இருந்தாச்சு.'சிவ காஞ்சி'யில் சிறுது காலம் இருந்தாச்சு. தேனம்பாக்கம் சிவாஸ்தானம் என்பது,'பிரம்ம காஞ்சி' -பிரும்மா யாகம் செய்த இடம். இங்குள்ள சுவாம்க்கு, பிரும்ம புரீஸ்வரர் என்று பெயர். இங்க ஸோமகணபதி இருக்கார்."
சில நிமிடங்கள் இடைவேளை.
"ஸோமாஸ்கந்தர்-னு கேள்விப்பட்டிருக்கியோ?"
"சில கோயில்களிலே பார்த்திருக்கேன்."---மாணவன்.
"அதிலே என்ன விசேஷம்?"--பெரியவா
"பார்வதி - பரமேஸ்வரனுக்கு நடுவில், குழந்தையாக சுப்ரமணியர் இருப்பார்."--மாணவன்.
"அதே மாதிரி, இந்த ஊரில் பார்வதி - பரமேஸ்வராளுக்கு நடுவில் குழந்தை கணபதி இருக்கார். ஆதிசங்கரர் வந்து சிறிது காலம் இங்கே தங்கியிருந்ததாக கர்ண பரம்பரையாகச் செய்தி உண்டு. கோயில் பக்கத்திலேயே குளம் இருக்கு. ஜனநடமாட்டம் அதிகமா இல்லாததாலே ஏகாந்தமா இருக்கு. ரொம்ப நேரம் ஜபம் செய்ய முடியறது. அதனாலே இங்கே தங்கியிருக்கேன்."----பெரியவா.
பெரியவாள் சொன்ன பதில், கல்லூரி மாணவனுக்கு மட்டுமில்லை. நெஞ்சுக்குள் வேதனையுடன் முணுமுணுத்துக் கொண்டிருந்த எத்தனையோ பக்தர்களுக்கும்தான்.
பிரம்ம காஞ்சி என்ற பெயரும், ஸோம கணபதியின் சிறப்பும், பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்யும் அணுக்கத் தொண்டர்களுக்குமே புதிதான செய்திகள்.
(தேனம்பாக்கத்தில் பெரியவாள் தங்கியிருந்த கட்டடம் இன்னும் இருக்கிறது.தற்போது வேத பாடசாலையும் நடந்து வருகிறது.கஜபிருஷ்டா விமானத்துடன் விளங்கும் ப்ரும்ம புரீஸ்வரர் கோயில் நன்றாகப் பராமர்க்கப்பட்டு வருகிறது. தனியாக அம்பாள் சந்நிதி இல்லை.காஞ்சி காமாக்ஷிதான், அந்தப் பிரதேசம் முழுவதற்குமே பொதுவான சக்தி
உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார்
பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன்.
அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன்.
இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார்.🏵️🏵️🏵️
வாயுபுத்திரன் எனப்படும் அனுமனைக் கண்டால், காற்றில் கலக்கும் தூசுகள்போல துர்சக்திகள் பறந்து ஓடும்.
நாளும்🙏🙏🙏
கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு.
நாமத்துக்கு விலக்கு இல்லை.
நாம் ஆராதனை செய்யும் பகவான் நாமம், நம்மை ஆதரிக்கும்
நாம நிதி பெருக, நம் நிதியும் பெருகும்.
நாமம் தாய் குலத்தையும் தந்தை குலத்தையும் கரை சேர்க்கும்.
பவரோக அருமருந்து நாமம்.
நாம தர்மம் பயத்தை போக்கி மோஷத்தை தரும்.
காமதேனு, சிந்தாமணி, கல்பக விருட்சம் எதையும் கொடுக்கும், ஆனால் நாம-தர்மம், நல்லதையே தரும்.
சொல்பவரின், “ஜாதி, மதம், தரம், இடம், காலம்”, பேதமற்றது நாமம்.
நாமமே சரணாகதி, உலகுக்கு ஜீவன் வரும்போதும் போகும்போதும், நாமம் சொல்லலாம்.
நாமத்தால், புத்தி, மனம், தெளிவு பெற்று திருப்தி அடையும்.
நாமத்தால் தீர்க்க முடியாத பாவங்கள் இல்லை.
நாமத்தை எந்த அசுத்தமும் தீட்டும் பாதிக்காது.
நாமம் துன்பத்தை விலக்கும், நல்லதை தரும், அமைதி பிரேமை வளர்க்கும்
நாமத்தை, எண்ணுவதை விட, எண்ணுவது சிறப்பு.
நாமத்தால் அடைய நாமமே சாதனம்.
நாமம்,நிந்திப்பவனையும்-நாத்திககனையும் காப்பாற்றும்.
நாமத்தை பரபிரும்மாக நினைப்பவன், பரபிரும்மாகவே ஆகிவிடுவான்.
ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்! !
ராமநாமம் பற்றி நிற்போம்
💛 *நம் பயணம் குறுகியது*💛 *நமது நினைவில் வைக்கவும்*
ஒரு பெண் பேருந்தில் ஏறி ஒரு ஆணின் அருகில் அமர்ந்து, தன் கைகளால் அவனை அடித்தார்.
அந்த நபர் அமைதியாக இருந்தபோது, அந்தப் பெண் உங்களை தனது கைகளால் அடித்தபோது, ஏன் புகார் செய்யவில்லை என்று அருகிலிருந்த பெண்மணி கேட்டார்.
, 💛
"எனது பயணம் மிகக் குறுகியதாக இருப்பதால், முக்கியமற்ற ஒன்றைப் பற்றி வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குகிறேன்"🥰
நம் பயணம் மிகவும் குறுகியது.💛
யாராவது உங்களைக் காட்டிக்கொடுத்தார்களா, மிரட்டினார்களா, ஏமாற்றினார்களா அல்லது அவமானப்படுத்தினார்களா?
ஓய்வெடுங்கள் - மன அழுத்தத்திற்கு ஆளாகாதீர்கள்
நம் பயணம் மிகவும் குறுகியது.💛
காரணம் இல்லாமல் யாராவது உங்களை அவமானப்படுத்தினார்களா?
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும்.
நம் பயணம் மிகவும் குறுகியது.💛
அமைதியாய் இருக்கவும். புறக்கணிக்கவும். மன்னிக்கவும், உங்கள் மனதில் அவர்களை வைத்து, எந்த காரணமும் இல்லாமல் இன்னும் அவர்களை நேசிக்கவும்.
நம் பயணம் மிகவும் குறுகியது.💛
அதை நாம் நினைத்தால் தான் பிரச்சனை, நினைவில் கொள்ளுங்கள்
நாம் ஒன்றாக பயணம் செய்வது மிகவும் குறுகியதாக உள்ளது.💛
நம் பயணத்தின் நீளம் யாருக்கும் தெரியாது. நாளை என்பதை யாரும் பார்க்கமுடியாது. அது எப்போது நிறுத்தப்படும் என்று யாருக்கும் தெரியாது.
நாம் ஒன்றாகப் பயணம் செய்வது மிகக் குறைவு.💛
உங்கள் புன்னகையை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நீங்கள் விரும்பும் அளவிற்கு அழகாக இருக்க உங்கள் பாதையை தேர்ந்தெடுங்கள் 💛
உங்கள் பயணம் மிகவும் குறுகியது