அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 70 பதிவு 59

                        அபிராமி பட்டரும்  அடியேனும் 

  கேள்வி பதில் 70

                                          பதிவு 59👌👌👌


கேள்வி பதில் நேரம்

பதிவு 59 🥇🥇🥇

கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்

கேள்வி 71

நான் 

மனதில் ஒரு பாட்டை அசை  போட்டுக்கொண்டிருந்தேன் ... பழைய பாடல் தான் .. PBS பாடியது .. யார் கேட்கிறார்கள் புது பாடல்கள் இப்பொழுது .. பாடலும் புரிவதில்லை பாடுபவரையும் தொடர்ந்து காண முடிவதில்லை ...

ஆண் : பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண் : கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்... 

கண்ணதாசன் வாழ்கிறான் .... கதவு தட்டும் சத்தம் .. ஓடி சென்று பட்டரை வரவேற்றேன் ...


பட்டர் 

என்னப்பா நான் வந்த உடன் நல்ல பாட்டை நிறுத்தி விட்டாய் .. இன்னும் கொஞ்சம் பாட விடு ... கேட்போம்  

பெண் : பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

ஆண் : நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?.....

நான் .. 

எங்கே முழுப்படத்தையும் போட்டு காண்பி என்பாரோ பட்டர் ...என்று பயந்து நிறுத்தி விட்டேன் பாட்டை .. 

நான் ... பட்டரே இது எங்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் கவி ...கண்ணதாசன் என்று பெயர் .. அவர் இயற்றியது ... 

பட்டர்  ஓ அப்படியா ... சரி .. கம்பரிடம் இருந்து இரவல் வாங்கிய கருத்துக்கள் இவை 


நான் ... கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் பட்டரே 

பட்டர் ... உண்மையில் இந்த பாடல் கம்பரின் சொந்த கருத்தும் இல்லை திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் ... 

அதை கம்பர் தனதாக்கி பிறகு உன் கண்ணதாசன் அதை வைத்து சினிமா பாடல் எழுதினார் ...  

கம்பர் நாலு வண்ணங்களாய் பாடிய திருமங்கை ஆழ்வாரின் பாடலை எட்டாக்கி பாடினார் ... 

பட்டர் ... ரவி உண்மையில் பெருமை திருமங்கை ஆழ்வாருக்குத் தான் போக வேண்டும் ... உங்கள் கண்ணதாசனுக்கு அல்ல , கம்பருக்கு அல்ல ... Remix செய்தவர்கள் இவர்கள் ... இன்னும் விவரமாய் சொல்கிறேன் கேள் 


திருமங்கையாழ்வார் ,

நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களாகிய,

திருவிருத்தம்,

பெரிய திருவந்தாதி,

திருவாசிரியம்,

திருவாய்மொழி 

ஆகியவற்றிற்கு அங்கங்கள் போல,ஆறு திவ்ய பிரபந்தங்களை அருளிச்செய்துள்ளார்.

அவற்றில் ஒன்றுதான் இந்த *திருநெடுந்தாண்டகம்* …

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள்” பனுவல்” என்று கூறப்படுகின்றன. 

இந்த ஆறு பிரபந்தங்களுள் சிகரமாக விளங்குவது

 *திருநெடுந்தாண்டகம்* .

இவர் திருவரங்கத்தில் இருந்தபோது இதனை அருளியுள்ளார். “ *தாண்டகம்* ” என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும்

ஒரு ஊன்றுகோல். 

மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை, இப்பாசுரங்கள் விளக்குகின்றன

திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்கள் கொண்டது.

தாண்டகம் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது

திருநெடுந்தாண்டகம்” என்றும் அழைக்கப் படுகிறது.

திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்கள், ஆழ்வார்

தாமான தன்மையிலும்,அடுத்த 10 பாசுரங்கள்,

ஒரு தாய் தன்னுடைய மகளைப் பற்றி சொல்வது போலவும். மூன்றாவது 10 பாசுரங்கள்தலைமகள் என்னும் நிலையில், திருமங்கையாழ்வார், தன்மையில் பாடிய

சிறப்புமிக்க பாசுரங்களாகும்.🙌🙌🙌


திருநெடுந்தாண்டகம் வேதக்கருத்துக்களை கொண்ட,

வேதத்திற்கு ஒப்பான பாசுரங்கள் ஆகும்.

இந்த திருநெடுந்தாண்டகத்தின் 21 வது பாசுரமான,

“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ

மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,

எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே

இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்

கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்

கண்ணிணையும் அரவிந்தம் அடியும் 

அதே,

அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.

அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.”👏👏👏

நான்கு வண்ணங்கள் ... இதை பார்த்த கம்பர் தன் ராமாயணத்தில் விசுவாமித்திரர் சொல்வது போல் இந்த பாடலை அமைத்தார்

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;

இனி. இந்த உலகுக்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி. 

மற்று ஓர்

துயர் வண்ணம் உறுவது உண்டோ?

மை வண்ணத்து அரக்கி போரில்.

மழை வண்ணத்து அண்ணலே! 

உன்

கை வண்ணம் அங்குக் கண்டேன்;

கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

ராமா உன் கரங்களின் வண்ணத்தை அன்று தாடகியை  அழிக்கும் போது கண்டேன் .. 

இன்று அகல்யாவை கால் பாதம் கொண்டு எழுப்பினாய் அந்த வண்ணம் இங்கு கண்டேன் ...



 
இதையே வேறு மாதிரி பார்க்கலாம் 

விசுவாமித்திரர் கதருகிறார்... 

"ராமா!! என்னுடைய முக்கியத்துவம் உனக்கு சீதையை மணம் முடிப்பதுடன் முடியப்போகிறது .. 

இனி உன் ராம காதையில் எனக்கு வேலையே இல்லை ..  

இப்பொழுது அகல்யாவை எழுப்பினாய் ... 

உன்னை இதுவரை நான் ரசித்தது கால் வண்ணம் தான் .. 

பாக்கி இருக்கும் முக்கால் வண்ணம் கண்டு ரசிக்கும் பேறு எனக்கில்லையே ....💐💐💐


நான்

பட்டரே என் இன்றைய கேள்வியையும் சொல்லி விடுகிறேன் 

நீங்கள் ஏன் அம்பாளின் திருவடிக்கு அதிகமாக முக்கியத்துவம் தருகிறீர்கள் ... 

காப்பாற்றுவது கரங்கள் அல்லவா ... 

அபய கரங்கள் என்று தானே சொல்கிறோம் 

அபய திருவடிகள் என்று சொல்வதில்லையே  !!💐💐💐

பட்டர்

ரவி உன் கேள்விக்கு வருகிறேன் ... 

ராமனின் கரங்கள் அழிக்கவே பயன் பட்டன ... 

அம்பாளின் கரங்களும் சூலம் கொண்டு மகிடனை கொன்றன ... 

ஆனால் ஒரு கல்லை அல்லது கல் மனம் கொண்டவர்களை காப்பாற்றி மறுவாழ்வு கொடுப்பது முகுந்தனின் திருவடிகளும் அன்னை அபிராமியின் பாதங்களுமே .... 

மனிதனின் பாதங்களால் ஒரு பயனும் இல்லை .. 

நாம் நடந்து போனால் அந்த இடங்களில் ஒரு புல் கூட முளைக்காது 

ஆனால் அகல்யாவின் வாழ்க்கை மீண்டும் முளைத்ததே , 

மணி வாசகரின் வாழ்வு மலர்ந்ததே 

மகிடன் முக்தி பெற்றானே ... 

திருவடிகளின் பெருமையை இறைவன் கரங்கள் கூட வணங்கி தான் பெருமை பெற்றுக்கொள்ள வேண்டும் 👣👣👣


நான் 

ஐயனே .. மின் ஆயிரம் ஒரே சமயம் தோன்றியதை போல் புரிய வைத்தீர்கள் .... 

பட்டர்.. பால் வண்ணம் பருவம் கண்டு ....பாடலை இசைத்துக்கொண்டே பறந்தார்🎼🎼🎼 🦅🦅🦅



    👌👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐




Comments

Ramani said…
பொற்பாதங்களையும் அருட்கரங்களையும் விளக்கி , நாம் சரணடைய வேண்டியது தாயின் பொற்பாதங்களில்தான் என நமக்கு அறிவுரைத்த பதிவு..



பாடம்...



🙏🙏🙏🙏🙏


Kousalya said…
ஆஹா.. என்ன ஒர் அற்புதமான விளக்கம்... அன்னையின் / அண்ணலின் பொற் பாதங்களை பற்றினால் மட்டுமே வீடுபேறு கிட்டும் ...அருமை சித்தர் அவர்களே... சரணம் சரணம் சரணம்🙏🙏👌👌👍🌹🌹🌹
ravi said…
Who defeated Lord Shiva?
ravi said…
Well, no one in the entire universe can stand against Bhagwan Shiva even for a second until he wishes. Maha Rudra has never been defeated by anyone nor can there be anyone who can defeat him. Vedas declare him to be the only undefeatable warrior. Rudra is also known as the warrior who can smite down anyone.

नम॑ आनिर्ह॒तेभ्यो॒

Salutation to those from whom one cannot escape, i.e., the unconquerable

- Taittriya Samhita, 4th Khanda, 5th Praphataka, Anuvaka 9.

Or even the Rig Veda which calls Rudra unconquerable.

इ॒मा रु॒द्राय॑ स्थि॒रध॑न्वने॒ गिरः॑ क्षि॒प्रेष॑वे दे॒वाय॑ स्व॒धाव्ने॑ ।
अषा॑ळ्हाय॒ सह॑मानाय वे॒धसे॑ ति॒ग्मायु॑धाय भरता श‍ृ॒णोतु॑ नः ॥ ७.०४६.०१

To Rudra bring these songs, whose bow is firm and strong, the self-dependent God with swiftly-flying shafts, the Wise, the Conqueror whom none may overcome, armed with sharp-pointed weapons: may he hear our call.

- Rig Veda, Mandala 7, 46th Suktam, 1st Mantra.
ravi said…
Bhagwan Shiva can never be defeated by anyone. Only his devotees can defeat him with devotion. Other than that Maha Rudra is impossible to defeat. Only fools who have no knowledge of Sanatana Dharma can state he has been defeated.

Neither Shree Rama nor Shree Krishna defeated Mahadeva. Vedas are more authentic than the stories in Puranas. Shiva Ji wanted to lose to them else if Maha Rudra fought with full might there is no chance for them to even win.
ravi said…
Sri ramanujacharya never mentioned anything about lord shiva

but in his some writings he mentioned that sriman narayana is supereme

now both Shiva and Vishnu are purna form of parabrahma

so that's why they are same and both of them will be merge when they take form of sadashiva or virat vishnu

and that's we called harihara
ravi said…
Is Lord Shiva a Tamil king?
ravi said…
Yes he is a King but not only of Tamil Nadu, infact whole South and infact whole Universe and even above.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Thennadudaiya sivaney potri. Ennattavarkum Iraiva potri

Worship the Bhagwaan of South who is Shiva, Worship the Bhagwaan of my Country.

As per my knowledge this line comes in Thiruvaasagam by Shri Shaivacharya Mannikkavasagar ji, a strong Shiva bhakt.
ravi said…
The line actually points the Southern Tamil Nadu part where Great Pandian Kings use to rule and they were staunch Shiva Bhakts.

Now this line doesn't proclaim what today's dravidian fanatics proclaim by bringing up my Bhagwaan's position to a mere human who lived and died. We must not forget that these are the same people who are trying their level best to level up a human's position (Christ) to the position of Bhagwaan.

Just like a man from Kashi says, Worship my Kashi Vishwanath, just like a person from Somnath in Saurashtra says worship my Someshwara, just like a person from Ujjain will say worship my Ujjain naresh Mahakaaleshawara, same ways Shri Mannikkavasagar ji says for Bhagwaan Shiva as the king of Southern Tamil Nadu that is basically Pandia Nadu.
ravi said…
Its that simple and its explained not by me but by Shaiva Siddhantis themselves. And point to be noted this is said by Shri Mannikkavasagar Ji who is himself a Brahmin. I am not going into any one's so calling caste but just tried to answer the question in such a way that no doubt remains.
ravi said…
🌹🌺 *ஸ்ரீ கிருஷ்ணரை மகிழ்விப்பதாலும், அவருக்கு மிகவும் பிரியமான சிறு பையனின் அன்பை நினைவுபடுத்தும் - "கொன்ன பூ" - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் இருந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார், தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் பூஜை செய்ய ஏழை பூசாரியை நியமித்தார்.
ravi said…

🌺பூசாரி தினமும் தனது 3 வயது மகனுடன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
தந்தை கோவிலுக்குள்ளேயே தனது கடமைகளைச் செய்யும்போது, ​​மகன் கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

🌺மதியம் கோவில் வராந்தாவில் அப்பா தூங்குவதும், பையன் அருகில் விளையாடுவதும் வழக்கம். பாதி மூடிய கண்களுடன் தன் மகன் விளையாடுவதை ரசித்துக்கொண்டிருந்தான்.

🌺குட்டி கிருஷ்ணன் கோவிலுக்கு வெளியே வந்து சிறுவனுடன் விளையாடுவது வழக்கம், அதனால் சிறுவன் ரசித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
ravi said…

🌺சிறுவன் சிறுவர்களுடன் விளையாடுவது போல் விளையாடுவது, சிரித்து, கத்தி, ஓடுவது. இந்த நடைமுறை தினமும் பின்பற்றப்பட்டது.

🌺ஒருமுறை விஷூவின் முந்தைய நாளில், தந்தை கோவில் வளாகத்தை சுத்தம் செய்தார், கோவிலின் உட்புறத்தை சுத்தம் செய்தார். அவர் சோர்வடைந்து கோவிலுக்கு வெளியே வராண்டாவில் தூங்கினார்.

🌺தூரம் செல்லாமல் அருகில் விளையாடுமாறு மகனிடம் கூறினார். அன்று மதியம் சிறுவன் தன் தந்தையின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தான்.
ravi said…

🌺குட்டி கிருஷ்ணன் தங்க மணிகள் நிரம்பிய தன் இடுப்பு பெல்ட்டை பையனிடம் கொடுத்தான்.
சிறுவன் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தான், அவன் இடுப்பு பெல்ட்டைப் பிடித்துக்கொண்டு அதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

🌺அந்த நேரத்தில் ஜமீன்தார் கோவிலுக்கு வந்தார், அவர் சிறுவனின் கையில் கிருஷ்ணரின் தங்க பெல்ட் இருப்பதைக் கண்டார்.
அவர் உடனடியாக ஒரு எச்சரிக்கையை எழுப்பினார்,
ravi said…

🌺அனைத்து கிராம மக்களையும் அழைத்து தந்தையும் மகனும் கொள்ளையர்கள் என்று அறிவித்தார். சிறுவனின் கையிலிருந்த இடுப்பு பெல்ட்டைக் கைப்பற்றினார்.

🌺தாங்கள் எதையும் திருடவில்லை என்று தந்தை அழுது புலம்பினார். அப்போது குட்டி கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மிகவும் கோபமடைந்தார்.

🌺ஜமீன்தார்களின் கையிலிருந்த இடுப்புப் பட்டையைத் தூக்கி எறிந்தார், அது கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கொன்ன மரத்தில் போய் விழுந்தது, இடுப்புப் பட்டையின் தங்க மணிகள் மென்மையான மஞ்சள் பூக்களாக மாறியது.
ravi said…

🌺இந்த மலர்கள் இன்றும் கிருஷ்ணருக்கு விஷு கனியில் சமர்பிக்கப்படும் *கொன்ன பூ* என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது
ஸ்ரீ கிருஷ்ணரை மகிழ்விப்பதாலும், அவருக்கு மிகவும் பிரியமான சிறு பையனின் அன்பை நினைவுபடுத்துவதாலும் இது மிகவும் பிரியமான பூ **🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ravi said…
🌺🌹A simple story that explains how to please Sri Krishna and remind him of the love of the little boy he loved the most - "Konna Flower"🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹There was a small Sri Krishna temple in a small village in Kerala. The zamindar of the village appointed a poor priest to perform daily morning and evening worship at the temple.

🌺The priest used to come to the temple daily with his 3 year old son.
While the father was doing his duties inside the temple, the son was playing in the temple premises.
ravi said…

🌺It is customary for the father to sleep on the veranda of the temple in the afternoon and the boy to play nearby. With half-closed eyes he was enjoying his son playing.

🌺Kutty Krishnan used to come out of the temple and play with the boy so the boy was enjoying playing.

🌺 Playing like a boy playing with boys, laughing, screaming, running. This procedure was followed daily.

🌺Once on the eve of Vishu, the father cleaned the temple premises and cleaned the interior of the temple. He was tired and slept on the porch outside the temple.
ravi said…
🌺 Told the son to play nearby without going too far. That afternoon the boy was playing next to his father.

🌺Kutty Krishnan gave his waist belt full of gold beads to the boy.
The boy was so glad he got it, he was holding the waist belt and looking at it.

🌺At that time the Zamindar came to the temple and saw that the boy had Krishna's gold belt in his hand.
He immediately raised a warning,

🌺He called all the villagers and declared that father and son were robbers. He grabbed the waist belt from the boy's hand.
ravi said…
🌺Father cried that they did not steal anything. Kutty Krishnan was watching then. He was very angry.

🌺 He threw away the waistband in the hands of the landlords and it fell on a dead tree next to the temple and the gold beads on the waistband turned into soft yellow flowers.

🌺These flowers are still called * Konna Flower * which are offered to Lord Krishna on Vishu Kani because it is
This is the most beloved flower because it pleases Sri Krishna and reminds him of the love of the little boy he loved so much **🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
!"காஞ்சி மகா குருவின் கருணை"!!

பிராம்மணன் கடல் கடந்து போகக்கூடாது என்பது சாஸ்த்ரம். ஆனால், தற்போதைய
சூழ்நிலை தாய்நாட்டில் சொந்த மண்ணில் அவனை ஸ்வதர்மத்தில் பிழைக்க விடாமல்
பண்ணியதோடு பிறரோடும் அவன் சேர்ந்து முன்னேறி வரக்கூடாது என்ற
"நல்லெண்ணவாதிகளின்" சட்டத்தால் இன்று பல பிராம்மணர்கள் தூரதேசங்களில்
நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் அந்த தேசங்கள் மிகுந்த
பயனை அடைகின்றன.
ravi said…
இப்படித்தான் ஒரு பிராம்மணர் குடும்ப சூழ்நிலையால்
வெளிநாடு போய் சம்பாதிக்க வேண்டி இருந்தது. பெரியவாளுடைய அத்யந்த
பக்தராகையால், சாஸ்த்ரத்தை மீறுகிறோமே, பெரியவாளுக்கு ஒப்பாததை
செய்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவரை வாட்டி எடுத்தது.
ravi said…
ஒருமுறை இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது. இந்தியாவுக்கு வருகிறோம்
என்பதை விட, தன்னுடைய அன்பான பெரியவாளை தர்சனம் பண்ணப்போகிறோம் என்ற
எண்ணமே அவருக்கு அம்ருதமாக இருந்தது. சென்னை வந்து இறங்கியதும் நேராக
காஞ்சிபுரத்துக்கு விரைந்தார்.

ravi said…
அதேநாள் காலை பெரியவா சமையல் பண்ணும்
பாரிஷதர்களை கூப்பிட்டார்....
"இன்னிக்கி சமையல் என்னென்ன பண்ணப் போறேள்?..."
அவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது! பெரியவா இதுவரைக்கும் பொது சமையல்
என்று அத்தனை விஜாரித்ததில்லை. மெனுவை சொன்னார்கள்.
ravi said…
அதில் சிலவற்றை
மாற்றி வேறு ஏதோ பண்ணும்படி கூறினார். கொஞ்ச நேரத்தில் இந்த வெளிநாட்டு
இந்திய பக்தர் வந்து [ஓடிவந்து] பெரியவா திருவடியில் நமஸ்கரித்தார்.

ravi said…
"க்ஷேமமா இரு! மொதல்ல போயி சாப்டு...அப்றம் வா......" எல்லாருக்கும்
ஆச்சர்யம்! வந்த பக்தரை ஏன் முதலில் சாப்பிடச் சொல்கிறார்? அவர்
சாப்பிடப் போனதும் அருகிலிருந்த பாரிஷதர்களிடம் "ஏண்டா.....அவன் எனக்கு
எதாவுது குடுக்கனும்ன்னா....எதை குடுக்கச் சொல்லி கேக்கறது?" என்று
சந்தேஹம் வேறு கேட்டார்.
ravi said…
அசந்து போனார்கள்! "அதைக் குடு, இதைக் குடு"
என்று கேட்டறியாத பரப்ரம்மம் "எதைக் கேக்கலாம்?" என்று கேட்டால், என்ன
பதில் சொல்வது?
அதற்குள் அவர் சாப்பிட்டு விட்டு வந்ததும், சிரித்துக்கொண்டே "என்ன?
ஒன்னோட வ்ரதம் பூர்த்தியாச்சா?" என்றார்
ravi said…
பக்தரின் கண்களோ கரகரவென்று
கண்ணீரை பொழிந்தன. புரியாமல் பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தை பார்த்து
பெரியவா சொன்னார்....
"இவன், சீமைலேர்ந்து பொறப்பட்டதுலேர்ந்து பச்சை தண்ணி கூட
குடிக்கலை....என்னைப் பாக்காம எதுவும் சாப்டக் கூடாது..ங்கற ஸங்கல்பத்தோட
கெளம்பி வந்திருக்கான்.....என்ன நான் சொல்றது செரியா?.." அவருடைய
புன்னகையில் எல்லாரும் மெய்மறந்தனர்
ravi said…
இதோ! அடுத்த ப்ரேமாஸ்த்ரம்....."இந்தா.....இவனை அழைச்சிண்டு போயி,
எள்ளுப் புண்ணாக்கும், தையல் இலையும் எனக்காக வாங்கித் தரச்சொல்லி,
வாங்கி வெச்சுக்கோங்கோ!"......பக்தரின் கண்ணீர் நிற்கவேயில்லை. "அல்பமான
எங்கிட்டேர்ந்தா பெரியவா தனக்குன்னு கேட்டு வாங்கிக்கறார்!"
ravi said…
அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்ததும், சுற்றி இருந்தவர்களிடம் தன் அருள்
லீலையில் காரணத்தை சொன்னார்.....
"இவனுக்கு எம்மேல ரொம்...ப ப்ரியம். எனக்கு எதாவுது பண்ணனும்ன்னு ரொம்ப
ஆசையா இருக்கான்....ஆனா, சீமைக்குப் போனவாட்டேர்ந்து நான் எதுவும்
வாங்கிக்க சாஸ்த்ரம் எடம் குடுக்கலை.....அதுக்காக எம்மேல பக்தியா
இருக்கறவாளை விட்டுட முடியுமா? அதான் எள்ளுப் புண்ணாக்கும், தையல்
இலையும் வாங்கித் தரச்சொன்னேன்
ravi said…
எள்ளுப் புண்ணாக்கை நம்ம மடத்துப்
பசுமாட்டுக்கு போடுங்கோ! அது குடுக்கற பாலை நேக்குக் குடுங்கோ!

ஏன்னா...பசுமாட்டுக்கு எதைக் குடுத்தாலும், அதுல இருக்கற தோஷம் நிவர்த்தி
ஆய்டும்...பசுமாடு மூலம் எது வந்தாலும் அதுக்கு தோஷமே கெடையாதோன்னோ?

அதான். என்னோட பக்தாளோட மனஸை நோக அடிக்கப்டாது "
தர்மமும், காருண்யமும், பக்த வாத்ஸல்யமும் சேர்ந்த "கலவை"யில் உதித்த ஞானியை சரணடைவோம் !!

ஹர ஹர சங்கர.. ஜய ஜய சங்கர..
ravi said…
கடவுளின் குரல்: தொகுப்பு - கே. ராமசுவாமி
04 /08 /2021 குமுதம் இதழிலிருந்து....

"மனதின் குரல் கேட்டு உதவிய மகாபெரியவர்!"

மகாராஷ்ட்ராவில் மகாபெரியவர் திருத்தல யாத்திரை செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. வழியில் ராமதுர்க்க என்ற ஊரில் ஒரு நதியின் கரையில் முகாமிட்டிருந்தார்கள்.
ravi said…
ஒரு நாள் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்த மகான், அந்த நதியில் நீராடினார். பிறகு நதிக்கரையில் செய்ய வேண்டிய ஜபதபங்களைச் செய்துவிட்டு, முகாமுக்குத் திரும்பி அன்றைய அனுஷ்டானங்களைச் செய்யத் தொடங்கினார்.

சந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு, பக்தர்களுக்குத் தீர்த்தம் வழங்கத் தொடங்கிய மகான், திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவர்போல, தீர்த்தம் தருவதைக் கொஞ்ச நேரம் நிறுத்தினார்.
ravi said…
அவரது பாவனை எதையோ உற்றுக் கேட்பதுபோல தோன்றியது. சில விநாடிகளுக்குப் பின் தீர்த்தம் தரத் தொடங்கியவர், தன் அருகே இருந்த அணுக்கத் தொண்டர்களைக் கூப்பிட்டார். "உங்க ரெண்டு பேரோட மேல் துண்டுகளையும் துவைச்சுக் காயப்போட்டு வைச்சிருக்கேள் இல்லையா, உடனே போய் அதை எடுத்துண்டு வாங்கோ!"

ravi said…
மேல் துண்டுதான் போட்டுக் கொண்டிருக்கிறோமே, துவைத்துக் காயப்போட்டு வைத்திருப்பதை எதற்காக எடுத்துக் கொண்டு வரச் சொல்கிறார்? ஒரு வேளை இதில் ஏதாவது தீட்டுப் பட்டிருக்குமோ? மனசுக்குள் எழுந்த கேள்விகளோடு, வேகமாகச் சென்று துண்டுகளை எடுத்துக் கொண்டு வந்தார்கள், இருவரும்.

அடுத்து நடந்ததுதான் மகானின் திருவிளையாடல். கூட்டத்தில் அப்போதுதான் வந்து நின்ற உள்ளூர்ச் சிறுவன் ஒருவனை அழைத்தார், மகாபெரியவா. ஐந்து ஆறு வயது இருக்கும் அவனுக்கு.
ravi said…
அடுத்து நடந்ததுதான் மகானின் திருவிளையாடல். கூட்டத்தில் அப்போதுதான் வந்து நின்ற உள்ளூர்ச் சிறுவன் ஒருவனை அழைத்தார், மகாபெரியவா. ஐந்து ஆறு வயது இருக்கும் அவனுக்கு.

அவனை அருகே அழைத்த மகான், "இவன் கிட்டே அந்தத் துண்டுகளைக் குடுங்கோ!" என்று சொல்ல, அணுக்கத் தொண்டர்கள் கொடுத்த மேல் துண்டுகளை அதற்காகவே வந்தவன் போல் பெற்றுக் கொண்டான், அந்தச் சிறுவன்.
ravi said…
மென்மையாக அவனைப் பார்த்து புன்னகைத்தார், மகான். பிறகு அட்சர சுத்தமான கன்னடத்தில், "இந்தத் துணிகளை எடுத்துக் கொண்டு போ...ஆற்றின் மருகரையின் அருகே, தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு ஒரு பெண்மணி நின்று கொண்டிருக்கிறாள். அவளிடம் இவற்றைத் தூக்கிப் போடு!" சொன்னார்.

அவர் சொன்னதை புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலையை வேகமாக அசைத்துவிட்டு, புறப்பட்டான் அந்தச் சிறுவன்
ravi said…
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கோ, அணுக்கத் தொண்டர்களுக்கோ எதுவும் புரியவில்லை. "ஆற்றின் மறுகரையில் இருக்கும் பெண்மணி யார்? அவளிடம் இந்த வஸ்திரங்களை எதற்காகத் தரச் சொல்கிறார் மகான்? என்றெல்லாம் எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விகளுக்கு விடை, மறுநாள் காலை, பாமரப் பெண் ஒருத்தி பவ்யத்தோடு வந்து பரமாசார்யாரை தரிசித்தபோது கிடைத்தது.

மகான் முன் வந்து நின்ற அந்தப் பாமரப் பெண், "சுவாமி...உங்களுக்குக் கோடி புண்ணியம்ங்க!" மெய் நடுங்க, நாத் தழுதழுக்கச் சொல்ல, எல்லோரும் ஒருகணம் திடுக்கிட்டார்கள்.
ravi said…
எல்லோருக்கும் புண்ணியம் தருபவர்க்கே புண்ணியமா? அவள் சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க, ஒன்றுமே அறியாதவர்போல, அவளது பாமரத்தனத்தை ரசித்தார், பரமாசார்யா. அதோடு, மேற்கொண்டு எதுவும் சொல்ல வேண்டாம் என்பதுபோல், சைகை செய்துவிட்டு, கொய்யாக்கனி ஒன்றைத் தந்து அவளை ஆசிர்வதித்தார்.

ravi said…
பணிவோடு அதை பெற்றுக் கொண்டு புறப்பட்டவளை சிலர் விசாரித்தார்கள். "நேத்திக்கு ஆற்றுல குளிச்சுக்கிட்டு இருந்தப்போ, என் சேலை வெள்ளத்துல அடிச்சுக்கிட்டுப் போய்டுச்சு. கரையேற முடியாம தவிச்சப்போ, இங்கே கூட்டமா நிறையபேர் வர்றதை அந்தக் கரையில இருந்தே பார்த்தேன்.

"
ravi said…
இவங்க எல்லாம் யாரோ சாமியாரைப் பார்க்கப் போறாங்களே, அவரு என் மானத்தைக் காப்பாத்துவாரா? ன்னு மனசுக்குள்ளே நினைச்சேன். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு பையன் காவித்துணியைக் கொண்டுவந்து போட்டான். அதை உடுத்திக்கிட்டு கரை ஏறிட்டேன். அதான் நன்றி சொல்லலாம்னு நேர்ல வந்தேன்!"
ravi said…
வெகுளியாய் அவள் சொல்லச் சொல்ல, விஷயம் புரிந்தது எல்லோருக்கும். பாமரத்தனமான மனதுக்குள் வேண்டிக் கொண்ட பெண்ணின் மானத்தைக் காத்திட மகான் செய்த மகோன்னத லீலையை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார்கள். அவர்களின் கண்களில் இருந்து, தானாகவே நீர் பெருகி ஓடியது.

"ஹர ஹர சங்கர! ஜய ஜய சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!"

"மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!"
"ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
Shivaji said…
கருணை உள்ளம். பெரியவா திருவடிகள் சரணம்🌹🌹🙏
ravi said…
ஒரு சித்ரா பௌர்ணமி அன்று நடந்த நிகழ்ச்சி;மிராசுதாரை மிரள வைத்த மஹா பெரியவர்

[ (எஸ். ரமணி அண்ணா எழுதிய கட்டுரை.[இது பழைய போஸ்ட்தான். சித்ரா பௌர்ணமிக்கு ஸ்பெஷல்]
]
ravi said…
பல வருஷங்களுக்கு முன் ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மகாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விசேஷமாக நடை பெற்றது.
11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர் என்பவர். காலை எட்டு மணி அளவில் ஆரம்பித்த ருத்ராபிஷேகம், மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.
ravi said…
காஞ்சி மஹா ஸ்வாமிகளிடம் அபரிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர். 'எப்படியும் இந்த ருத்ரா அபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்து விட வேண்டும் என்று தீர்மானித்தார். ருத்ரா அபிஷேகப் பிரசாதத்தை பய பக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில் மதுரை-சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசுதார். விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயண ஸ்வாமி ஐயர்
ravi said…
அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதிகளை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காகப் பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார். நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்து விட்டு வந்து உட்காந்தார் மகா ஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை. உடனே மிராசுதார், " எல்லோரும் நகருங்கோ..நகருங்கோ. நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். அதை அவர் கிட்டே சமர்பிக்கணும்" என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.
ravi said…
ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும், பதற்றத்தையும் பார்த்த மடத்தை சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளை பார்த்ததும் மிராசுதாருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தொப்புகடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மஹா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! என்ன விஷயம் என்பது போல புருவங்களை உயர்த்தினார்.
ravi said…
உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டையைப் பிரித்துக் கொண்டே, 'பிரசாதம்...பிரசாதம் பெரியவா' என்று குழறினார். மீண்டும் பெரியவா, "என்ன பிரசாதம் ?" என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள் மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார். அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப் பழங்கள் சில இருந்தன.
ravi said…
மஹா ஸ்வாமிகள், "இதெல்லாம் எந்த க்ஷேத்ரப் பிரசாதம்னு?" என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக, "பெரியவா ! நேத்திக்கு திருவிடமருதூர்லே மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா அபிஷேகம் பண்ணி வெச்சேன். மஹாந்யாச ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்த பிரசாதம் தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கரதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்கிரகம் பண்ணனும் !" என்று சொல்லி முடித்தார்.
ravi said…
உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்து விட்டுக் கேட்டார். 'நாராயணசாமி! நீ பெரிய மிராசு தான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரையாவது கூட்டு சேர்த்துண்டு இந்த ருத்ரா அபிஷேகத்தை ஸ்வாமிக்குப் பண்ணினியோ ?"
ravi said…
இல்லே பெரியவா...நானே என் சொந்த செலவுலே பண்ணினேன்" என்று அந்த "நானே"வுக்கு சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரியவாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விடவில்லை. "லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரதுலே (திருவிடைமருதூர்) ருத்ரா ஆபிஷேகத்தைப் பண்ணினையாக்கும் ?" என்று கேட்டார். உடனே மிராசுதார் ஆதங்கத்துடன், "இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷமாகவே வயல்கள்ல சரியான வெளைச்சல் கிடையாது. சில வயல்கள் தரிசாகவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோசியரைப் போய்ப் பார்த்தேன். அவர் தான், 'சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாச ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளைச்சல் கொடுக்கும்'னார்! அதை நம்பித் தான் பண்ணினேன் பெரியவா என்று குழைந்தார்.
ravi said…
எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆச்சார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. "அப்படின்னா ஆத்மார்த்ததுக்காகவோ, லோக க்ஷேமத்துக்காகவோ நீ இதைப் பண்ணலைன்னு தெரியறது" என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி த்யானத்தில் ஆழ்ந்து விட்டார்.
ravi said…
பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆச்சார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி த்யானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடந்தார். "சரி..ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா ?"

"பதினொரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணி இருந்தேன் பெரியவா !" - இது மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள், வைதீகாள் எல்லாம் யார் யாரு ? எந்த ஊருநெல்லாம் தெரியுமோ ? நீ தானே எல்லாம் ஏற்பாடு பண்ணினே ?" என்று விடாப் பிடியாக விசாரித்தார்.
ravi said…
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, 'பெரியவா ஏன் இப்படி துருவி துருவி விசாரணை செய்கிறார் !" என வியப்பாக இருந்தது. இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார், தன இடுப்பில் சொருகி இருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.
ravi said…
வாசிக்கேறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக் குடி சந்தான் வாத்தியார், சுந்தா சாஸ்திரிகள், சுப்ரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக் குடி வெங்கிட்டு வாத்தியார்..அப்புறம்..." என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், "எல்லாம் நல்ல அயனான வேதா வித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணி இருக்கே. அது சரி..ஒன் லிஸ்டுல்லே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு..." என்று இயல்பாகக் கேட்டார்.
ravi said…
உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, 'இருக்கு பெரியவா..இருக்கு. அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார் !" என ஆச்சர்யத்தோடு பதில் அளித்தார்.

சூழ்ந்து நின்ற பக்தர்கள் எல்லாம், 'பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படித் துருவி துருவி விசாரிக்கிறார்' என்று வியப்பு தவிர ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.
ravi said…
ஸ்வாமிகள், "பேஷ்...பேஷ் ! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்கு சொல்லி இருந்தியா? ரொம்ப நல்ல காரியம். மஹா வேத வித்து ! இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்ப சிரமப்படும். ஜபத்தைப் புடிச்சு (மூச்சடக்கி) சொல்லறதுக்கு கஷ்டப்படுவார் " என்று கூறியது தான் தாமதம்....மிராசுதார் படபடவென்று உயர்ந்த குரலில், "ஆமாம் பெரியவா ! நீங்க சொல்லறது ரொம்ப சரி தான். அவர் சரியாகவே ருத்ரம் ஜபிக்கலை! சில நேரம் வாயே திறக்காம கண்ணா மூடிண்டு ஒக்காந்துண்டிருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனாலே ஜப 'ஸங்க்யை' யும் (எண்ணிக்கை) கொரயறது! நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார்.
ஏண்டா அவரை வரவழைச் சோம்'னு ஆயிடுத்து பெரியவா' என்று சொல்லி முடித்து தான் தாமதம்...பொங்கி விட்டார் ஸ்வாமிகள்
ravi said…
வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், "என்ன சொன்னே...என்ன சொன்னே நீ ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாம்ங்கற திமிரோ ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்கியதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும் ? அந்த வேத வித்தோட கால் தூசு பெறுவியா நீ ? அவரைப் பத்தி என்னமா நீ அப்படிச் சொல்லலாம் ? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறதை இப்போ நான் புரிஞ்சுண்டுட்டேன் ! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு ! நேத்திக்கு ஜப நேரத்துலே...கனபாடிகள் முடியாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்திலே நீ அவர் கிட்டே போய், கடுமையா 'ஏங்காணும், காசு வாங்கலே நீர் ! இப்படி ஜபம் பண்ணாம வாயடைச்சு ஒக்காண்திண்டிருக்கீரே'னு கத்தினது உண்டா, இல்லியா ?" என்று பொரிந்து தள்ளி விட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.
ravi said…
கை கால்கள் நடுங்க சாஷ்டாங்கமாக மஹா பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன், "தப்பு தான் பெரியவா ! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சன்னதியில் சொன்னது வாஸ்தவம் தான். என்னை மன்னிச்சுடனும் பெரியவா" என்று கெஞ்சினார்.
ravi said…
இரு..இரு..நீ அந்த ஒரு தப்பை மாத்திரமா பண்ணினே ? சொல்லறேன் கேளு. எல்லோருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ...ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்வளவு தட்சிணை கொடுத்தே ?" என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, "தலைக்கு பத்து ரூபா கொடுத்தேன் பெரியவா" என்றார் ஈனஸ்வரத்தில். "சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்து பத்து ரூவாயா கொடுத்தே ! நேக்கு எல்லாம் தெரியும்” என்று மடக்கினார்.
ravi said…
மிராசுதார் மெளனமாக நின்றார். ஆனால் ஆச்சார்யாள் விடவில்லை! "நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறதை நா சொல்றேன் கேட்டுக்கோ..நோக்கு சொல்ல வெக்கமா இருக்கு போல . வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்கு பத்து ரூபா சம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள் கிட்டே வந்த போது, 'இவர் தான் சரியாகவே ருத்ரம் சொல்லலியே...இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூபா கொடுக்கணும்?'னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூபாய் சம்பாவணை பண்ணினே. ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணினாரா பார்த்தியா ? நீ கொடுத்ததை வாங்கி அப்பிடியே தலைப்பில் முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரி தானே. சொல்லு" என்று உஷ்ணமானார் ஆச்சார்யாள்.
ravi said…
பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை.
"நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது ?' என அங்கே குழுமி இருந்த பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர். மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, "தப்பு தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தாலே அப்படி நடந்துட்டுண்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிசுண்டுங்கோ..."என்று முடிப்பதற்குள் பெரியவா, "இரு..இரு! இதோட முடிஞ்சுட்டா தான் பரவாயில்லையே...ஜப பிராமண்ணாளுக்கு எல்லாம் அங்க மகாதானத் தெரு ராமச்சந்திர ஐயர் க்ரஹதுலே தானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தே ?" என்று கேள்வி கேட்டார்
ravi said…
ஆமாம் பெரியவா!" - இது மிராசுதார்.

உடனே ஆச்சார்யாள், "சாப்பாடெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே, நெய் ஒழுக ஒழுக நெறைய முந்திரிப் பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே...சரியா ?" என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் !

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, "ஆமாம் பெரியவா ! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையாலே நானே பரிமாறினேன் !" என்று குழைந்தார்.

ஸ்வாமிகள் விடவில்லை. "சரி...அப்டி நீ சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோட பரிமாறினதா ஒன் மனசாட்சி சொல்றதா ?" என்று கேட்டார் கடுமையாக.
ravi said…
வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆச்சார்யாளே பேசினார். "நீ சொல்ல வேண்டாம்...நானே சொல்லறேன்! நீ சக்கரைப் பொங்கலை போடறச்சே, அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாளேல்லாம் கேட்டுக் கேடு வாங்கி சாப்பிட்டா! நீயும் நெறையப் போட்டே. ஆனா தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாய விட்டு, "சக்கரைப் பொங்கல் இன்னும் கொஞ்சம் போடுடாப்பா..ரொம்ப ருசியா இருக்கு"னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும் கூட நீ காதுலே வாங்கிண்டு அவருக்கு போடாமலேயே போனாயா இல்லியா ? எத்தனை தடவை வாய் விட்டுக் கேட்டார் ! போடலியே நீ ! பந்தி வஞ்சனை பண்ணிட்டியே...இது தர்மமா ? ஒரு மஹா சாதுவை இப்படி அவமானபடுத்திட்டியே..." - மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள் !
மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆச்சார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.
ravi said…
பதினைந்து நிமிஷங்கள் மௌனம். பிறகு, கண்களைத் திறந்து மௌனம் களைந்தார் ஆச்சார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆச்சார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

"மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுகண்ணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தொரு வயசாறது. தன்னோட பதினோராவது வயசுலேர்ந்து எத்தனையோ சிவ க்ஷேத்ரங்களிலே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணி இருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேற்பட்ட மஹான் அவர். அவர்ட்டே நீ நடந்துண்ட விதம் மஹா பாபமான கார்யம்...மஹா பாபமான கார்யம் !" - மேலே பேச முடியவில்லை பெரியவளால். கண் மூடி மௌனமாகி விட்டார். சற்றுப் பொறுத்து ஆச்சார்யாள் தொடர்ந்தார்.
ravi said…
நீ 'பந்தி பேதம்' பண்ணின காரியமிருக்கே. அது கனபாடிகள் மனசை ரொம்பவே பாதிச்சிடுத்து. அவர் என்ன கார்யம் செஞ்சார் தெரியுமா நோக்கு ? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். 'அஸ்மேத' (பெரிய பிரகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார். கை கூப்பி நின்னுண்டு என்ன பிராத்தித்தார் தெரியுமா ?" மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.
ravi said…
கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, 'அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒன்னோட பரம பக்தன். பால்யத்தில் இருந்து எத்தனையோ தடவை ஒன் சந்நிதியிலே மஹாந்யாச ஸ்ரீருத்ரம் ஜபிச்சுருக்கேன். நீ கேட்ருக்கே. நேக்கு இப்போ எண்பத்தி ஒரு வயசாறது. மனசிலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுதுப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்பிடறச்சே நடந்தது. நோக்குத் தெரியமா இருக்காது. அந்த சக்கரைப் பொங்கல் ரொம்ப ருசியா இருந்ததேன்னு 'இன்னும் கொஞ்சம் போடுங்கோ'னு வெக்கத்தை விட்டு அந்த மிராசுதார் கிட்டே பல தடவை கேட்டேன். அவர் காதுலே விழுந்தும் விழாத மாதிரி நகர்ந்து போயிட்டார். சக்கரப் பொங்கல்னா நேக்கு உசிர்ருன்னு நோக்குத் தான் தெரியுமே. சபலப் பட்டு கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப்பட்டேன்.
ravi said…
ஆனா, சாப்பிட்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்த அப்புறம் தான், 'இப்படி ஒரு ஜிஹ்வா சபலம்' (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமான்னு தோணித்து. அப்பா மகாலிங்கம்...இப்போ அதுக்காகத் தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்திலேர்ந்து ஒரு பிரதிஞ்ஞை பண்ணிக்கிறேன். எல்லோரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்தை விடுவா. காசிலேயும் நீ தான்...இங்கேயும் நீ தான். அதனாலே ஒனக்கு முன்னாலே, 'இனிமே இந்த சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கரப் பொங்கலையோ அல்லது வேற எந்த தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன் ! இது சத்தியம்டாப்பா மகாலிங்கம்'னு வைராக்கியப் பிரமாணம் பண்ணிண்டு, 'அப்பா ஜோதி மகாலிங்கம் ! நா ஒன்கிட்டே உத்தரவு வாங்கிக்கறேன்'னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார் ! இப்போ சொல்லு...நீ பண்ணின கார்யம் தர்மமா ? மகாலிங்க ஸ்வாமி ஒப்புத்துப்பாரா? "
ravi said…
பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி. "நேக்கு இன்னிக்கு பிஷை வேண்டாம் !" என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'நேற்றைய திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்லறாளே. இது எப்படி ?" என்று அனைவரும் வியந்தனர்
ravi said…
பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது. "பெரியவா ! நா பண்ணது மகா பாபம் ! அகம்பாவத்திலே அப்படி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவில் இப்படி நடந்துக்கவே மாட்டேன். 'மன்னிச்சுட்டேன்'னு சொல்லணும் பெரியவா !" என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

ஆச்சார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். "பிராத்திக்கிறேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்...என்னை மன்னிசுடுங்கோ !" என்று பிரசாதத் தட்டை நோக்கி கைகளைக் காண்பித்தார்.
ravi said…
உடனே ஆச்சார்யாள், "இருக்கட்டும்...இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே பிரசாத அநுக்ரகம் பண்ணுவார்" என்று சொல்லி முடிப்பதற்குள், "நகருங்கோ...நகருங்கோ" என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட்டது. எல்லோரும் விலகி வழி விட்டனர். தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்சகச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சை பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராக்ஷ மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளை தட்டில் வைத்து கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்து ஐந்து வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கு அருகே வந்து சேர்ந்தார். ப்ரசாதத் தட்டை ஆச்சார்யாளுக்கு முன்பு பவ்யமாக சமர்ப்பித்து விட்டு, "எம் பேரு மகாலிங்கம். திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்லே எங்க அக்காவை (சகோதரி) கொடுத்திருக்கு. ஆச்சார்யாளுக்கும் அந்தப் பிரசாதத்தை கொடுத்துட்டு, அவளையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அனுக்கிரகிக்கணும்" என்று நமஸ்கரிக்கப் போனவரை தடுத்து விட்டார் ஸ்வாமிகள்.
ravi said…
நீங்கள் எல்லாம் சிவ தீக்ஷை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்படாது" என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்று தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்து விட்டார் சிவாச்சாரியார். "பெரியவா ! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே !" என்று ஆச்சர்யத்துடன் கூறி விட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே போய் விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சாரியார்.
ravi said…
ஆச்சார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், "திரும்பத் திரும்ப பிராத்திக்கிறேன் பெரியவா. நா பண்ணினது ரொம்ப பாவ கார்யம் தான் ! இதுக்கு நீங்க தான் பிராயச்சித்தம் சொல்லணும்" என்று மன்றாடினார்.
விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார். "இதுக்கு பிராயசித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் தான் சொல்லணும்" என்றார் !

"இந்த பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்லுவாரா பெரியவா ?" என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.
ravi said…
உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், "’நோக்கு ப்ராப்தம்' இருந்தா நிச்சயம் சொல்லுவார்!" என்று கூறி விட்டு, விடு விடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை. சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராக புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார். ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்
ravi said…
அங்கே காவிரி ஆற்றுக்கு சென்று ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகில் உள்ள தேப்பெருமாநல்லுரை நோக்கி நடையைக் கட்டினார். எப்படியும் வேங்கடேச கனபாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் 'ப்ராயசித்த'த்தைப் பூர்த்தி செய்து, பாப விமோசனம் பெற்று விட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமா நடந்தார்.
ravi said…
தேப்பெருமாநல்லூர் அக்ரஹாரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்பட்ட ஒருவரிடம் கனபாடிகள் பெயரைச் சொல்லி, அவர் கிருஹம் எங்கே என விசாரித்தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிந்த ஒரு வீட்டை சுட்டிக் காட்டி, "துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா ? அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலம் ஆயிட்டார். 'அநாயசேந' மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்) போய்ப் பார்த்துட்டு வாங்கோ" என்று சொல்லிப் புறப்பட்டார்.
ravi said…
இதைக் கேட்டவுடன் பிரமித்துப் போய் விட்டார் நாராயண ஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போல் இருந்தது. நேற்று மடத்தில் ஆச்சார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போல் இருந்தது. "நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!"
ravi said…
ப்ராப்தம்' இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சுருக்கு' என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடிகள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன சொத்துகளை எல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களில் திருமடப்பள்ளி கைங்கர்யம் பண்ணி விட்டு, காசி க்ஷேத்ரத்திலே கால கதி அடைந்தார்.
Kousalya said…
எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்...பெரியவாளின் அருள் ஒன்றே வேண்டும் ...🙏🙏🙏சரணம் சரணம் சரணம் 🙇‍♀️🙇‍♀️🌹🌹
ravi said…
குருப்புகழ் கண்டே திருப்புகழ் பணிந்தோம்

அருட்புகழ் அறமென அருளிய பெருமானே

கலியுக தெய்வமாய் சத்குரு சதாசிவமாய் உன் பாதம் பணிந்தே எமனை வெல்வோம்
ravi said…
கண் இல்லா குருடன் அவன்

கண் இருந்தும் குருடி ஆனாள் அவன் துணைவி ..

நூறு பிள்ளைகள் பெற்றவள் ... தங்கவில்லை ஒன்றும் தரணியிலே

தர்மம் தனை எதிர்க்க ஆயிரம் வந்தாலும் முடிவில் வெல்வது தர்மம் அன்றோ ...

பாசம் அறுக்காதவள் .. எமனின் பாசத்தில் அல்லல் பட்டாள் ...

கணவனுக்கு நல்ல மந்திரியாய் தான் இல்லாமல் முந்திரியாய் பெற்ற பிள்ளைகளை காலனுக்கு தாரை வார்த்தாள் ...

கண்ணா பேர் சொல்ல கொல்லி வைக்க ஒரு குழந்தையும் இல்லை .. உன் சதி கொண்டு மதி வென்றாய் ... உனக்கும் ஒரு சாபம் இடுகிறேன் என்றாள்

சிரித்தான் கண்ணன் .. பரமனுக்கும் சாபம் பலிக்குமா ... கீதை தனை எவர்க்கெல்லாம் சொல்வது .. கேளோர் இல்லை ...காப்போர் இல்லை ... மறுப்போர் உண்டு அதனால்
மறுப்போர் உண்டு ...

தாயே கொடு சாபம் .. அடியேன் தன்னியமானேன் என்றான் கண்ணன் ...

என் குலம் நீங்க கண்டாய் .. என் கண்ணீர் குளமென பெருக கண்டாய் ... உன் குலமும் உன் கண் முன்னே அழியும் அதுவே உன் கண்களை என் கண் போல் குளமாக்கும் ..

மீண்டும் சிரித்தான் கண்ணன் ... யுகம் இது மாறவே உருவெடுத்தேன் .. நான் செய்யும் கடமை நீ செய்து விட்டாய் ...

காந்தாரிக்கு இன்னும் புரியவில்லை ... குருடி என்பதும் உண்மை அன்றோ

கண் திறந்து பார்க்க கருணை கடல் பொங்க நமக்கோ பெரியவா எனும் கண்ணன் இருக்கின்றான் ...
பாவம் காந்தாரிக்கோ கண்ணன் இருந்தும் அவள் கண்கள் திறக்க வில்லை கடைசி வரையும்
ravi said…
*கண்ணனும் காந்தாரியும்* 🌺🌺🌺
ravi said…
இந்த நாள் இனிய நாளாக அமைய வேண்டுகிறேன் 🌺🌺
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 48*🐒🐒🐒
ravi said…
லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே ||

ரகுபதி கீன்ஹீ பஹுத படாயீ |
தும மம ப்ரிய பரதஹி ஸம பாயீ ||
ravi said…
லாய ஸம்ஜீவன லகன ஜியாயே |
ஶ்ரீ ரகுவீர ஹரஷி உரலாயே ||

இப்படிப்பட்ட தெய்வீக மூலிகைகள் ஒன்று அல்ல இரண்டு அல்ல ஒரு மலையையே தூக்கிக் கொண்டு வந்து விட்டார் ...

இதுதான் வெட்டி விட்டு வாவென்றால் கட்டிக்கொண்டு வருவது ...

அனுமனைத் தவிர வேறு நல்ல உவமை ஏதும் இல்லை ...

லக்ஷ்மணன் உயிர்த்தெழுந்தான் ... அவன் மட்டுமே இறந்து போன அத்தனை வானரங்களும் ... 🐒🐒🐒
ravi said…
உயரே வைத்திருக்கும் தம்பி மீண்டும் உயிருடன் திரும்பி வந்தவுடன் ராமன் அனுமனுக்கு தந்த விலை மதிக்க முடியாத பரிசு எது தெரியுமா ?

அனுமன் கேட்டிருந்தால் அயோதியையே கொடுத்திருப்பார் ...

அனுமன் ஒன்றுமே கேட்காததினால் யாருக்குமே ஏன் சீதைக்கும் கிடைக்காத அழுத்தமான ஆலிங்கனம் அனுமனுக்கு கிடைத்தது ..

வேண்டத்தக்கது அறிவோன் வேண்டமுழுதும் தந்தான் 🐒🐒🐒
ravi said…
அனுமனுக்கு ராமனின் ஆலிங்கனம் பத்து தடவை கிடைத்தது ... நம்புவீர்களா ? சரி பார்ப்போம் ஒவ்வொன்றாய்

🐒 1மாறு வேடத்தில் அனுமன் , ராமன் லக்ஷ்மணன் யார் என்று பார்க்க பண்டிதராய் வந்த போது சொல்லின் செல்வன் இவன் என்று ராமர் புகழ்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டார் 🌺

🐒2

சுக்கிரவனுக்கு பட்டாபிஷேகம் செய்தவுடன் அனுமன் போல் ஒரு அமைச்சர் அவனுக்கு கிடைத்தாரே என்று அகம் மகிழ்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டார் 🌺

🐒 3

விபீஷணன் சரணாகதி செய்ய வந்தபோது எல்லோரும் அவன் அசுரன் அவன் உடம்பில் அசுர ரத்தம் ஓடுகிறது என்று ராமனை தடுத்த போது அனுமன் எதிரி என்றால் இவன் நம்பத்தக்கவன் என்று ராமரின் எண்ணத்தையே பிரதிபலித்து சொன்னதால் ஓடி போய் அனுமனை கட்டிக்கொண்டார்🌺
ravi said…
🐒 4
லக்ஷ்மணனை சஞ்சிவீ மூலிகை மூலம் காப்பாற்றி மற்ற வானரங்களையும் காப்பாற்றி காலனை காலால் உதைத்தவனை கட்டிக்கொள்ளமல் யாரால் இருக்க முடியும் ? 🌺

🐒 5

போரில் ராவணன் வீழ்ந்த போது எல்லோருக்கும் நன்றி சொல்லும் வகையில் முக்கியமாய் அனுமனுக்கு ஆலிங்கன பரிசு தந்தார்🌺

🐒 6

சிவபூஜை செய்ய
கைலாயம் சென்று அனுமன் லிங்கம் கொண்டு வர பெரு மகிழ்ச்சி கொண்டு இதுவும் யாராலும் செய்ய முடியாத காரியம் என்று சொல்லி கட்டிக்கொண்டார்
ravi said…
🐒 7

பரதனை காப்பாற்றும் பொருட்டு முன்பாகவே நந்திக்கிராமத்திற்கு அனுமனை ராமர் அனுப்பி வைக்க அவன் உயிரையும் காப்பாற்றிய அனுமனை ஓடிப்போய் கட்டிக்கொண்டார் ராமர்

🐒 8

ராமர் பட்டாபிஷேகம் அன்று எதுவுமே கேட்க்காத அனுமனுக்கு அவனுக்கு பிடித்த ஆலிங்கனத்தை பரிசாக கொடுத்தார்🌺

🐒 9

எல்லோரும் விடை பெற்று செல்ல அனுமன் ராமருக்கு சேவை செய்ய அயோத்தியில் தங்கி விட்டதை எண்ணி அகம் மகிழ்ந்து அவனை கட்டிக்கொண்டார் 🌺

🐒10

ராமர் தன் அவதாரம் முடிவுக்கு வந்தபோது அயோத்தி மக்கள் அனைவரையும் வைகுண்டம் அழைத்து செல்ல அனுமன் வரமாட்டேன் தேவை இல்லை இனி எனக்கொரு இன்னுமொரு வைகுண்டம் ராமா ... நீ பிறந்தது , வளர்ந்தது , இருந்தது , கிடந்தது , நின்றது நடந்தது அனைத்தும் இந்த மண்ணில்

அதன் வாசம் எனக்கு வைகுண்டம் கைலாயம் என்றான் ...

கண்களில் நீர் வழிய ராமன் வாழிய நீ எம்மான் இவ்வுலகம் உள்ளவரை என்று சொல்லிக் கட்டிக்கொண்டான் 🌺

🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
ravi said…
சரி அனுமன் ஓடிப்போய் ராமனை கட்டிக்கொண்டது உண்டா ?

உண்டு ... போரில் மாய வித்தைகளை புரிந்த ராவணனை அழிக்க ராமனும் லக்ஷ்மணனும் அனுமனின் தோளில் அமர்ந்தனர் ..

அதுவே அனுமன் தான் செய்த மிகப்பெரிய பாக்கியம் என்று நினைத்து மகிழ்ந்தான்

🐒2

ராமன் போரில் வெற்றி பெற்றவுடன் ஓடிச் சென்று ராமனின் அனுமதி இல்லாமல் கட்டிக்கொண்டான் சீதையிடம் சென்று நாசுக்காக ராம ஜயம் என்றான் ...🌺
ravi said…
சரி எவ்வளவு நேரம் இந்த ஆலிங்கனம் நடந்தது ?

ராமர் அனுமனை கட்டிக்கொண்டது

முதல் ஆலிங்கனம் 30 வினாடிகள்

இரண்டாவது ஆலிங்கனம் 35 வினாடிகள்

மூன்றாவது ஆலிங்கனம் 60 வினாடிகள்

நான்காவது ஆலிங்கனம் 180 வினாடிகள்

ஐந்தாவது ஆலிங்கனம் 120 வினாடிகள்

ஆறாவது ஆலிங்கனம் 300 வினாடிகள்

ஏழாவது ஆலிங்கனம்
180 வினாடிகள்

எட்டாவது ஆலிங்கனம் 240 விநாடிகள்

9வது ஆலிங்கனம் 240 வினாடிகள்

10வது ஆலிங்கனம் 300 வினாடிகள்

அனுமன் உடல் எங்கும் கங்கை சரயு யமுனா போல் ராமனின் ஸ்பரிசம் பிரவாகம் எடுத்து ஓடியது ...

ராம கீர்த்தனை நதிகள் போடும் சப்தம் போல் அவன் உதட்டில் ஓடி ராமன் எனும் சாகரத்தில் கலந்தது 👑👑👑🐒
Shivaji said…
அருமை. After reading this, I feel Rama must be longing even more to have as much as aalingana with Sankara suvana!.. Who is blessed Aanjeneya or Rama?.. Anyway, we are definitely blessed to read this wonderful padivu.🌹🌹🙏
HV Babu said…
அன்பரே
நான் வழி மொழிகிறேன்

We are blessed with
Aum 🙏🪔
HV Babu said…
Loud thinking continues


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.


அமிழ்தினும் ஆற்ற இனிதே *தம்* மக்கள்
*சிறுகை* அளாவிய கூழ்.
ravi said…
ஒருவரை ஒருவர் தழுவி கொள்ளதல் என்பது தூய தமிழில் ஆலிங்கனம் செய்வது என்று சொல்கிறோம் .. a dignified word .

*அ* ன்பு அதிகம் பெருகினால்
அங்கே *ஆ* னந்தம் உருவாகிறது ..

ஆனந்தம் உருவானால்
*இ* ன்பம் பெறுகிறது ...

அந்த இன்பம் தான் *ஈ* சன் ...

*உ* டலும் *ஊ* னும் மறந்து எங்கும் நிறைந்த ஜோதியை *ஏ* தும் அறியா ஜோதியை பார்த்து

*ஒ* வென்று கத்தி *ம்* என்று முடிக்கிறோம் .

*ஔ* வை சொன்னதும்
அ *ஃ* துவே ...
HV Babu said…
🙏🙇🙇‍♀️🙇‍♂️
HV Babu said…
Superb
Shivaji said…
Wow .
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 196* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*64 வது திருநாமம்*
ravi said…
*64 देवर्षिगणसङ्घातस्तूयमानात्मवैभवा -*

*தேவர்ஷி கண ஸங்காதஸ்தூயமாநாத்ம வைபவா |*💐💐💐👌👌👌
ravi said…
அம்பாள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்ததை குறிக்கும் நாமம் இது.

அம்பாளை தேவரிஷிகள் வசிஷ்டர், நாரதர் போன்றோர் வழிபடுகிறார்கள்.

இந்திராதி தேவர்கள் தொழுகிறார்கள்.

நிர்குண ப்ரம்மம் அம்பாள் என்பதால் சகல தேவர்களும் வணங்குகிறார்கள்.

அவர்களைக் காக்கவே அம்பாள் பண்டாசுரனை வென்றாள். கொன்றாள்.நின்றாள்🙏🙏🙏
ravi said…
6. பண்டாசுர வதம் (ஸ்ரீநகர வர்ணனை நிறைவு பெற்று பண்டாசுர வதம் தொடர்கிறது)
ravi said…
*தேவர்ஷி* = தேவ-ரிஷிகள் - இதரதேவதைகளும் ஞானிகளும் ரிஷிகளும்

*கண* = கணங்கள் - கணங்களின் பட்டாளங்கள்

*சங்காத* = தொடர்பு - கூட்டம் - கழகம்

*ஸ்தூயமாந* = போற்றுதல் புகழ்தல்

*ஆத்ம* = ஆத்மா

*வைபவா* = வலிமை - பெருமை🙏

தேவாதிதேவ கணங்களும் முனிவர்க்குழாமும் போற்றிபபுகழும் பெருமையும் உயர்வும் கொண்டவள்.👑👑👑
Savitha said…
அருமை🌷🌷🙏🏻
Sujatha said…
Wow...👌👌🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 196* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 47👍👍👍
ravi said…
கோதை நீண்முடி கொண்டொளிர் திங்கள்சேர்
பாதி

வாள்நுத லென்று படிந்ததோ

ஈது கூடி யிரண்டு நிறைந்ததோ

சீத பூரணத் திங்கள் சிறந்ததே🌕
ravi said…
கூர் எயிற்றின் அக இதழும் கொண்கர் விழி வரி வண்டும்

குழல் படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்

பேர் இயற்கை மணம் பொதிந்து புன் மூரல் முகை அவிழப்
பிறழும்

உன் தருண முக கமலம் என்றால்

ஓர் இயற்கை வாடும் இதழ் பொறி வண்டே படிவது
மற்றோர் இயற்கை செயற்கை மணம் போது செய்யும்

நீர் இயற்கை மலர்க் கமலம் மீதிற் குடைந்து பங்கம் உறல்
நீதி என்பது யார் அறியார் நிகரில் மாதே🙏
ravi said…
கனகதாரா ஸ்தோத்ரத்தில் தான் சொன்னதை இங்கே அப்படியே மாற்றிச் சொல்லிவிட்டார் ஆசார்யர்.

அங்கே மரகத மலர் போன்ற மாலவன் திருமார்பில் மொய்க்கும் மாணிக்க வண்டு திருமகள் என்று சொல்வார்.

இங்கே தாமரை மலர் போன்ற அம்மையின் திருமுகத்தின் அழகைப் பருகி மயங்கும் கருவண்டுகள் ஐயனின் திருநயனங்கள் என்கிறார். :-)💐💐💐
ravi said…
Woman Entrepreneur from India: Chetna Gala Sinha

Chetna Gala Sinha (born 1959) is an Indian social activist working to empower women in drought-prone areas of rural India by teaching entrepreneurial skills, access to land and means of production. Sinha and six other women chaired the 48th Annual Meeting of the World Economic Forum in Davos, Switzerland in January 2018. Sinha has been awarded the Nari Shakti Puraskar, India's highest civilian award for women.
ravi said…
In 1997, she set up the Mann Deshi Mahila Sahakari Bank – India's first bank for and by rural women. Mann Deshi Bank had 100,000 account holders and had loaned over US$50 million to support female micro-entrepreneurs in 2018. Mann Deshi Foundation runs Business Schools, a Community Radio and a Chambers of Commerce for rural women micro entrepreneurs. In 2018, it had supported nearly half a million women. Born in Mumbai, she earned her master's degree in Commerce and Economics at the University of Mumbai in 1982. Sinha grew up in Mumbai in the 1970s and 1980s in the heyday of political activism. While in college—she did her BCom and has a master's in economics from Mumbai University—she was drawn to Jayaprakash Narayan's brand of socialist politics. She suffered her first setback when the Reserve Bank of India rejected her application, in 1996, on the grounds that some of the promoting members were non-literate. Sinha came back to the village dejected, but the other villagers pushed her to organise literacy classes. In five months, Sinha went back to the bank with a fresh application and the women from the village.
ravi said…
She is the founder and chairperson of the Mann Deshi Mahila Sahkari Bank, a microfinance bank which lends to women in rural areas. She is also the founder and president of the Mann Deshi Foundation. Mann Deshi Mahila Sahkari Bank was the first bank in the country for and by rural women to get a cooperative license from Reserve Bank of India. In the two decades since the bank was set up (in 1997) with a working capital of ₹708,000 (USD 9300 at current exchange rates) raised from among its 1,335 members, it has reached over 310,000 women (84,000 among them borrowers), providing them with the financial backing and emotional impetus to become successful entrepreneurs. The drive remained relevant even after two decades, when Prime Minister Narendra Modi announced demonetisation in November 2016, leaving the local vendors in the lurch: Some sold their wares for whatever they could, way below the market prices, some others gave away their ₹500 notes for a lower value. Mann Deshi officials collected coins from the State Bank of India and went from door-to-door and in the weekly markets to exchange them for old ₹500 notes.
ravi said…
The Mann Deshi Foundation also runs financial literacy classes, where women are taught the ropes of savings, investing, insurances and loans through modules that comprise games like Monopoly. According to the Foundation, there has been an increase of ₹13,200 (~USD 175) in the average annual income of rural women after they’ve taken business development classes at the school.
ravi said…
Chetna Sinha and six other women chaired the 48th Annual Meeting of the World Economic Forum in Davos-Klosters, Switzerland, on 23–26 January 2018. The exclusive women's team included: Sharan Burrow, general-secretary, International Trade Union Confederation (ITUC), Belgium; Fabiola Gianotti, director-general, European Organisation for Nuclear Research (CERN), Geneva, Switzerland; Isabelle Kocher, CEO, ENGIE, France; Christine Lagarde, managing director, International Monetary Fund, Washington DC; Ginni Rometty, chairman, president and chief executive officer, IBM Corporation, US; and Erna Solberg, Prime Minister of Norway.
ravi said…
Today, the Mann Deshi Bank has 100,000 account holders, has loaned over $50 million and regularly creates new financial products to support the needs of female micro-entrepreneurs. Mann Deshi runs Business Schools, a Community Radio and a Chambers of Commerce for rural women micro entrepreneurs. To date, it has supported nearly half a million women.

Have a melodious Sunday.
ravi said…
RESPONSIBILITIES OF LIFE



A Saint was sitting on the bank of the river since a long time, watching the water flow by, someone asked, "What are you doing Sir?"


The Saint replied: I am waiting for the whole river to flow, then I will cross it.


That person said, ′′Holiness, you will never be able to cross the river like that, while waiting for the whole water to flow. That can't happen, the flow will never stop, the water will just keep on coming!"


The Saint said, "this is what I want to explain to you : you people always say ,that once the responsibilities of life are fulfilled, Once I finish this task, then I will have fun."


Just like the water of the river will never end, the responsibilities of life never end.


Have fun, roam around, meet everyone, share and care, give and serve.

Find a way to cross the water while it is flowing.
ravi said…
*🙏🌹பஞ்சநதன நடராஜர்*

ஆலிங்க நதனம், பஞ்சநதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று 5 வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் பஞ்சநதனம் என்ற பாறை தெய்வீக ஒளி வீசும் என்று சிற்பக்கலை வல்லுனர்களால் கூறப்பட்டுள்ளது. நவரத்தின மோதிரம் அதன் ஒளிகளால் எப்படி நம் கவனத்தை ஈர்க்கிறதோ அதைப்போலத்தான் இந்த பஞ்சநதன கற்களும் சிறப்பு பெறுகின்றன. அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும்.
ravi said…
அந்த கற்களுக்கு பஞ்சநதன பாறை என்று பெயர். அந்த வகை பாறையில் செய்தவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால் சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த நடராஜருக்கு உண்டு. காலையில் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கும்.
ravi said…
இந்த வகை கற்சிலை தற்போது எங்குமே கிடையாது. சுமார் ஒரு கிலோ வெட்டி வேரினை 48 துண்டுகளாக எடுத்துக் கொண்டு அவற்றை ஒரு மாலையாக கட்டி இந்த நடராஜருக்கு சாற்றி அர்ச்சித்து பின்னர் அந்த 48 துண்டுகளை நாளொன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் ஒரு கோப்பை நீரில் இரவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள சிறுநீரகம் மற்றும் சிறுநீரக கல் தொடர்பான அனைத்து நோய்களும் இந்த நடராஜர் மருந்தாக திகழ்கிறார்.
ravi said…
சூரிய பிரகாசத்தை தருகின்ற இந்த பஞ்சநதன பாறைகளால் நடராஜர் சிலை வடிவமைக்கப்பட்டு திருச்சி அருகில் ஊட்டத்தூரில் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவிலில் அருள்பாலிக்கிறார். நடராஜர் சிலைக்கு அருகில் இறைவி சிவகாம சுந்தரி முகத்தை சாய்த்து பஞ்சநதன நடராஜரை பார்ப்பதுபோல் காட்சியளிக்கிறார். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால் ஊற்றத்தூர் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் ஊட்டத்தூர் என பெயர் மருவி மாறியது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
ravi said…
உலகில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் பிரம்மா ஊட்டத்தூருக்கு கொண்டு வந்து பிரம்ம தீர்த்தத்தில் சேர்த்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றுள்ளார். ஆகையால் கோவிலின் நடுவில் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியே ஊரில் உள்ள மற்றொரு கோவிலான பெருமாள் கோவிலுக்கு பிரம்ம தீர்த்தம் எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. திருநாவுக்கரசர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார்.
ravi said…
காரணம் அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடலூர் என அழைக்கப்பட்டது. இந்த சிவாலயத்தில் ஒரு தடவை பிரதோஷ வழிபாடு செய்பவர்களுக்கு ஒரு கோடி புண்ணியம் கிடைப்பதாக அகஸ்தியர் பெருமான் தெரிவித்துள்ளார்
ravi said…
இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது. ராஜராஜசோழன் உடல் நலம் இல்லாமல் இருந்தபோது ஊட்டத்தூர் வந்து பிரம்ம தீர்த்தத்தை உடலில் தெளித்து இறைவனை வழிபட்டு குணம் அடைந்து ஆயுட்காலம் நீட்டிக்கப்பெற்றார் என்றும் கர்ண பரம்பரை செவிவழிச்செய்தி புராண வரலாறு உள்ளது. இந்த அபூர்வ நடராஜர் திருச்சியில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பாடலூரில் இருந்து புள்ளம்பாடி வழித்தடத்தில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது.
ravi said…
சற்றே சிந்திப்போம்....*

மதுரையில் மீனாட்சி கல்யாணம்...

லட்சோப லட்சம் பக்தர்கள் கூட்டம்...

கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்...

கோடானுகோடி பக்தர்கள் கூட்டம்..

பழனியில் பங்குனி உத்திரம் தேரோட்டம்...

பல்லாயிரக்கணக்கான மக்கள் காவடி ஏந்தி பக்தி பரவசத்தோடு செல்கிறார்கள்...

அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான

மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தாலும் பரவாயில்லை என உயிரைத் துச்சமாகக் கருதி தரிசிப்பதற்கு செல்கிறார்கள்..
ravi said…
சற்றே சிந்திப்போம்....*

மதுரையில் மீனாட்சி கல்யாணம்...

லட்சோப லட்சம் பக்தர்கள் கூட்டம்...

கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்...

கோடானுகோடி பக்தர்கள் கூட்டம்..

பழனியில் பங்குனி உத்திரம் தேரோட்டம்...

பல்லாயிரக்கணக்கான மக்கள் காவடி ஏந்தி பக்தி பரவசத்தோடு செல்கிறார்கள்...

அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான

மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தாலும் பரவாயில்லை என உயிரைத் துச்சமாகக் கருதி தரிசிப்பதற்கு செல்கிறார்கள்..
ravi said…
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்....

கைலாயமே திரண்டு வந்ததுபோல் ஒரு கூட்டம்...

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் ...

ஊரே திரண்டு அங்குதான் நிற்கிறது..

உடனே
ஆஹா....ஓஹோ..

*இது இது பெரியார் மண்ணல்ல....*

ஆன்மீக மண் என்று பூரிப்படைந்து...புளகாங்கிதமடைந்து நமக்குள் நாமே சந்தோஷப்பட்டுக் கொள்கிறோம்.

*_உண்மையில் அத்தனை பேரும் உணர்வுள்ள இந்துக்களாக இருந்திருந்தால் இந்நேரம்.....
ravi said…
ஹிந்து விரோத திமுக காஞ்சிபுரத்தில் கவிழ்ந்து இருக்க வேண்டுமே!

மதுரையில் மண்ணை கவ்வி இருக்கவேண்டுமே...

திருநெல்வேலியில் தெறித்து ஓடி இருக்கவேண்டுமே...

சிதம்பரத்தில் சின்னாபின்னமாகி இருக்கவேண்டுமே....

_ஆனால் அங்கெல்லாம் ஜெயித்தது ஹிந்து விரோத திராவிட கட்சிகள் தானே..._
ravi said…
மீனாட்சியை பார்த்து ...அடியே கள்ளி...உனக்கு எதற்கு வைர மூக்குத்தி என்று கேட்ட அண்ணாதுரையின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகள் தானே இதுவரை தமிழகத்தை சுரண்டி கொண்டு இருக்கிறது...

நெல்லிக்காய் மூட்டை போல திருவிழா என்றால் கூடுவதும்..... _அதன்பிறகு சிதறி ஓடுவதுமாகவே ஹிந்துக்கள் இன்னும் எத்தனை காலம் தான் இருக்கப் போகிறோம்...._

தீர்வு தான் என்ன...?

ஹிந்து கோவில்கள் அனைத்தும் ஹிந்துக்களின் வசம் வரவேண்டும்...

கோவில்களுக்கு வருகின்ற பக்தர்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக அந்த ஹிந்து கோவிலை நிர்வகிப்பவர்கள் இருக்கவேண்டும்...
ravi said…
ஒரு மசூதியில்... ஒரு சர்ச்சில் அவர்கள் சமூகத்தை சார்ந்த அத்தனை பேரின் பெயரும் வருகைப்பதிவேடும் இருக்கும் ...

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வரவில்லை என்றால் ஏன் அவர் வரவில்லை என்று மௌல்வி கேட்பார் ...

சர்ச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை வரவில்லை என்றால் ஏன் அவர் வரவில்லை என்று பாதிரி கேட்பார்...

அப்படி அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக அவர்களின் வழிபாட்டுத்தலங்கள் இருக்கும் பொழுது....

ஹிந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் ஏன் ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும் சக்தியாக..... *ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கும் சக்தியாக இருக்க கூடாது...*
ravi said…
ரமணி ... நெஞ்சை குத்தும் கேள்விகள் தான் .. வலிக்கத்தான் செய்கிறது ...

ஒரு சிறு விளக்கம் தர விரும்புகிறேன் ...

பண்டாசூரன் ... கேள்வி பட்டிருப்பீர்கள்...

காமன் எரிந்த சாம்பலில் உருவானவன் .

சிறந்த சிவபக்தன் ஆரம்பத்தில் ... கொஞ்சம் கொஞ்சமாக *தான்* எனும் அகந்தை விஷம் போல் அவனுக்குள் ஏற அசுரன் ஆகிறான் ...

ravi said…
அவன் ராஜ்யம் தொடர்கிறது ...

எங்கும் எதிலும் அராஜகம் ..

எல்லோரும், அமரத்தன்மையே அடையாத ரிஷிகளும் தேவர்களும் அவனைக் கண்டு நடுங்கினர் ....

ஆனால் இறுதியில் உலக மாதாவே வந்து அவனை சம்ஹாரம் செய்கிறாள் ...

இன்றும் நம் நிலைமை இதுபோலத்தான் ...

நம்மை சுற்றி அசுரர்கள் ,சுயநல வாதிகள் இறைவனை விற்பவர்கள் நிறைந்து நிற்கிறார்கள் ..

நாம் மதுரைக்கும் திருநெல்வேலி க்கும் காஞ்சிக்கும் சிதம்பரத்திற்கும் தேவர்கள் , ரிஷிகள் போல ஓடத்தான் வேண்டும் ...

ஒருநாள் சிலையை உடைத்துக்கொண்டு அவள் வெளி வருவாள் ...அவள் வரும் நாள் அதிக தூரம் இல்லை

அப்போது மெரினா கடற்கரையில் கடல் இருக்காது

இவர்களின் சமாதிகள் மட்டுமே இருக்கும் ...
🙏
Kousalya said…
Arpudham arpudham..ஆலிங்கனம் 10 முறை எவ்வளவு நேரம் நடந்தது என்று அருமையாக பதிவு செய்து உள்ளீர்கள்...மிகவும் அருமை...👌🙏🙏
Kousalya said…
அற்புதமான விளக்கம் 🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். சிலர் (சிவ) பஞ்சாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் (நாராயண) அஷ்டாக்ஷரீ எடுத்துக் கொள்கிறார்கள்.
ravi said…
இப்படியே (முருகனுக்கான) ஷடக்ஷரீ, ராம மந்த்ரம், க்ருஷ்ண மந்த்ரம், அம்பாள் மந்த்ரங்கள் என்று பல இருக்கின்றன. இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும், மநுஷ்ய ஜன்மா எடுத்த ஸகலருக்கும், வேத சிரஸான உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் ” தத்த : – தானம் பண்ணு; நல்ல கொடையாளியாக இரு”என்பதுதான்.
ravi said…
நம் இஷ்டம், இஷ்டமில்லை என்பதற்கெல்லாம் இடமில்லாமல், இது நமக்கு வேதம் போட்டிருக்கிற ஆஜ்ஞை!மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த ”தத்த” மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக் காட்ட வேண்டும்.
ravi said…
இந்த உபதேசம் வருகிற ப்ருஹதாரண்யக உபநிஷத் என்பது சுக்ல யஜுர் வேதத்தைச் சேர்ந்தது. நாலு வேதங்களுக்குள் இன்று தேசம் முழுக்க ரொம்பவும் அநுஷ்டானத்திலிருப்பது யஜுர்வேதம்தான். அதில் சுக்லம், க்ருஷ்ணம் என்று இரண்டு பிரிவு உண்டு. வட இந்தியா முழுவதிலும் பெரும்பாலும் அநுஷ்டானத்தில் இருப்பது சுக்ல யஜுஸ்;தென்னிந்தியாவில் ரொம்பவும் அநுஸரிக்கப்படுவது க்ருஷ்ணயஜுஸ். சுக்ல யஜுஸைச் சேர்ந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்திலிருந்து தானத்தைப் பற்றி சொன்னேன். இதேமாதிரி க்ருஷ்ண யஜுஸில் உள்ள தைத்திரீயோபநிஷத்திலும் (1.11.3) தானத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறது.
ravi said…
அது என்ன சொல்கிறது? ”சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது” என்கிறது. ஸ்ரீயை (அதாவது செல்வத்தை) க் கொடுக்கும்போதே மனஸை ஸ்ரீயாக (லக்ஷ்மீகரமாக, மங்களமாக, ஸந்தோஷமாக) வைத்துக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கிறது. முகத்தைச் சுளிக்காமல் கொடுக்க வேண்டும். ஸ்ரீயின் நிறைவுதான் ‘ச்ரேயஸ்’ என்பது. மனஸில் ஸ்ரீயுடன், மனமலர்ச்சியுடன், கொடுத்தால் இந்த தானத்தின் பலனாக ‘ச்ரேயஸ்’ கிடைக்கிறது. இன்னம் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும். ஹ்ரீயுடன் கொடு என்கிறது உபநிஷத். ‘ஹ்ரீ’ என்றால் வெட்கம், லஜ்ஜை என்று அர்த்தம்.
ravi said…
புருஷ ஸூக்தத்தில் பகவானுக்கு ஹரீ , ஸ்ரீ (லக்ஷ்மி) என்று இரண்டு பத்னிகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. இங்கேயும் லக்ஷ்மியை, அதாவது பொருளைத் தரும்போது, ”ஸ்ரீயோடு கொடு”, ”ஹ்ரீயோடு கொடு” என்று சொல்லியிருக்கிறது. வெட்கம் இரண்டு காரணத்துக்காக. ஒன்று, இன்னும் ஜாஸ்தி தரமுடியவில்லையே என்று; இரண்டாவது, தானம் பண்ணுவது வெளியிலேயே தெரியக்கூடாது என்ற கெனரவமான கூச்சம். வெளியில் தெரிந்தால் மற்றவர்களும் ‘தேஹி’ என்று பிடுங்குவார்களோ என்பதால் அல்ல. இவன் தர்மிஷ்டன் என்று நாலு பேருக்குத் தெரிந்து நம்மை ஸ்தோத்ரம் பண்ண ஆரம்பித்தால் நமக்கு அஹம்பாவம் வந்துவிடும். அது தானத்தின் பலனையெல்லாம் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்.
ravi said…
தானம் பண்ணிவிட்டு நாம் நம் பெயரைப் பேப்பரில் போட்டுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும், ‘எப்படியாவது நாலு பேருக்கு நாம் தானம் பண்ணினதை நைஸாகத் தெரியப்படுத்த வேண்டும்’ என்கிற எண்ணம் உள்ளூர இருந்தால் அதுவும் தோஷம்தான். அந்த நாலுபேர் நாம் தானம் பண்ணினதற்காக ஒரு பங்கு கொண்டாடினால், அதோடு, ”பண்ணின தானத்தை வெளியிலேயே தெரிவிக்காமல் எத்தனை உத்தமமான குணம்!” என்று பத்து பங்கு ஸ்தோத்திரம் பண்ணுவார்கள். மனஸுக்குள் நாம் இந்த ஸ்தோத்திரத்துக்கு ஆசைப்பட்டுவிட்டால், பேப்பரில் போட்டுக் கொள்வதைவிட இதுவே பெரிய தோஷமாகிவிடும். ஆனாலும் இப்படியெல்லாம் ஆசை, கீசை தலைதூக்கிக்கொண்டுதானே இருக்கிறது?
ravi said…
அது தலையைத் தூக்கவொட்டாமல் அழுத்தி வைக்க என்ன பண்ணலாம்? ஒன்று பண்ணலாம் என்று தோன்றுகிறது. அதாவது, ‘தானம் வாங்குகிறவன் நமக்கு அந்நியன் இல்லை; நம்மவனேதான்’ என்ற உணர்ச்சியை நன்றாக வளர்த்துக்கொண்டுவிட்டால் கொடுத்ததை வெளியில் சொல்லவே தோன்றாது. நம் குழந்தைக்கு அல்லது நெருங்கிய பந்துக்களுக்கு நாம் ஏதாவது செய்தால் அதை வெளியில் விளம்பரம் செய்து கொள்வோமா? அதே மாதிரிதான் எவரும் நமக்கு பந்துதான். ஸகல ஜந்துக்களும் ஒரே பார்வதி பரமேஸ்வராளின் குழந்தைகள்தான்
ravi said…
அதனால் நாம் ‘தானம் கொடுக்கிறோம்’ என்ற வார்த்தையைச் சொல்வதுகூடத் தப்புதான். ‘பகவான் நம்மைக் கொடுக்கும்படி வைத்தான். கொடுத்தோம்’ என்று அடங்கி, பவ்யமாகக் கொடுக்க வேண்டும். எங்கே இதிலும் ஓர் அஹங்காரம் வந்துவிடுமோ என்று பயந்து கொண்டு கொடுக்க வேண்டும். ” பியா தேயம் ” என்கிறது உபநிஷதம். ”பியா” என்றால், ‘பயந்துகொண்டு’ என்று அர்த்தம். ஸாதாரணமாக, வாங்குகிறவன்தான் பயந்து கொண்டு நிற்பான்;கொடுக்கிறவன் அதட்டிக்கொண்டு கொடுப்பான். வாஸ்தவத்தில் கொடுக்கிறவன்தான் பயப்பட வேண்டும் என்கிறது உபநிஷத். கடைசியாக, ‘ஞானத்தோடு’ கொடுக்க வேண்டும் என்று முடிக்கிறது. ‘ஸம்வித்துடன் என்று சொல்கிறது. ‘ஸம்வித்’ என்றால் ‘நிறைந்த ஞானம்’ கொடுக்கிறவன், வாங்கிக் கொள்கிறவன் இரண்டு பேர்வழிகளும் வாஸ்தவத்தில் ஒருவனேதான் என்ற அறிவுதான் அந்த ‘ஸம்வித்’.
TV Ganesh said…
*ஆலிங்கனம்*

இராமனுக்கு
இணையான
அவதாரமாய்
அவதரித்தவன்
அனுமன்

*அனு* மானிக்க
முடியாத
அனுக்கிரங்களை
*மனம்* மகிழ
அளிக்கின்றவன்
*அனுமன்*
TV Ganesh said…
லக்ஷ்மணனை
மட்டுமல்ல
இராமனையும்
காத்தவன்

காரணம்

லக்ஷ்மணன்
இல்லா இராமன்
வில் இல்லா
அம்பு

உடலால்
பத்து முறை
ஆலிங்கனம் செய்தான்

உள்ளத்தால்
பத்தாயிரம் முறை
ஆலிங்கனம்
செய்தான்
TV Ganesh said…
இராமனின்
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு
அடிக்கும்
அனுமன்
படியாய்
இருந்தான்

இராமனே கதி
எனப் பிடியாய்
இருந்தான்



இமயமலையை
இமைக்கும்
நேரத்தில்
எடுத்துவர விரைந்தான்

இமைக்க
மறந்த
இலக்குவனை
இயங்கச்
செய்ய
TV Ganesh said…

*விசல்ய கரணீயை* கண்டான்

பாய்ந்த
அம்பாகினும்
குத்திய
கத்தியாகினும்
இதன் சாறோ
சோறம் போகாமல்
வெளிக் கொணருமே

என்றெண்ணியவன்

இவ்வாறு

பாதி அன்பாகினும்
அறைகுறை புத்தியாகினும்
அது முழுமை பெற
ராம நாமம் எனும்
சாறைத் தவிர வேறுள்ளதோ
என எண்ணிக் கொண்டான்
TV Ganesh said…
*சந்தான காரணீயை* கண்டான்

பிளவுபட்ட தோலை இது சேர்த்துவிடுமே

அதுபோல

துன்பத்தால் பிளவுபட்ட
நம் வாழ்வை
ராம நாம சந்தம்
சேர்க்குமே
என எண்ணினான்
TV Ganesh said…
சாவரண கரணீயைக்*
கண்டான்

தழும்புதனை
தவிர்க்குமே

அதுபோல

வாழ்வில் தீயதால்
பட்ட தழும்புகளை
இராமனின்
ஸ்பரிசம் நீக்குமே
என எண்ணினான்
TV Ganesh said…
*சஞ்சீவ கரணீயைக்*
கண்டான்

எமலோகம்
சென்றாலும்
உயிர்பெற்று
உய்யமுடியுமே

அது போல

இராம நாமம்
எனும் நாதம்
சொன்னால்
உயிர் என்றுமே
உயிர்பித்திருக்குமே
என எண்ணிக் கொண்டு

இமயமலையை
இதய மாலை போல்
இதமாய் தூக்கி
வந்துவிட்டான்
TV Ganesh said…
இராமன்
இராமனாய்
இருக்க
அனுமன்
அனுதினமும்
உழைத்தான்

இராமனின்
சிவபூஜைக்கு
கைலாய சிவனை
தந்தான்

சங்கரசுவனாம்
அனுமன்

போரில்
வென்றதும்
இராமனை
அனுமன்
ஆலிங்கனம்
செய்தான்

இராமனுக்கு
கிடைத்த பெரும்
பேரு

இராமன்
இருக்குமிடமே
எனக்கு
வைகுண்டம்
என்றான்
அனுமன்
TV Ganesh said…
இராமனும் சரி
அனுமனும் சரி
அகத்தால்
ஒன்றானவர்கள்

உடலால்
வேறானவர்கள்

உண்மையான
நட்பிற்கு
வேரானவர்கள்🙏🏻🙏🏻🙏🏻
ravi said…
கணேஷ் இவ்வளவு நாள் சொன்னதின் சாரம் ஒரே கவிதையில் கொண்டு வந்து விட்டீர்கள்.. சூக்ஷ்ம ரூபமும் பீம ரூபமும் அனுமானுக்கு அடுத்து உங்கள் ஒருவரால் மட்டுமே எடுக்க முடியும் .. அஷ்டமா சித்திகளை நீங்களும் பெற்றுக்கிறீர்கள் என்று உங்கள் வர்ணனை நிரூபிக்கிறது ... 👍🥇
Kousalya said…
அஷ்ட சித்திகளை அற்புதமாய் சித்தரித்த பதிவு....அருமை.🙏🙏👌👌👏👏
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 33* 🌷🌷🌷🌷🌷
ravi said…
*வட்டக் குதத்தை வல்வேல் காக்க!*

வட்டவடிவான குதத்தை வல்வேல் காக்கட்டும்!

*பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!*

வலிமையான தொடைகள் இரண்டையும் பருவேல் காக்கட்டும்!

*கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!*

எனது கணைக்கால்களையும் முழந்தாள்களையும் கதிர்வேல் காக்கட்டும்!

*ஐவிரல் அடியிணை* *அருள்வேல் காக்க!*

ஐந்து விரல்களுடன் கூடிய என் பாதங்களை அருள்வேல் காக்கட்டும்!

*கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!*

இரண்டு கைகளையும் கருணைவேல் காக்கட்டும்!👌👌👌
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 196*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 26

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.

कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं

गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।

समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-

नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६

கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்

க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।

ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-

நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
‘ *தே³ஶிக க்ருʼபா கடாக்ஷார்க ஜ்யோதிஶ்ஶமித மமதா ப³ந்த⁴தமஸ:’…*

‘ *தே³ஶிக க்ருʼபா கடாக்ஷம்’* –

ஒரு குருவானவர், தான் இந்த தளைகள்லேருந்து விடுபட்டவராக, ஜீவன் முக்தராக விளங்கும்போது, அவரைப் போயி நாம நமஸ்காரம் பண்ணோம்னா, அவருடைய கடாக்ஷம் நம்ம மேல விழுந்தா,

அந்த ‘க்ருʼபா கடாக்ஷம்’ ங்கிற ‘அர்க ஜ்யோதி’ – சூரிய ஓளியினால், ‘ *ஶமித மமதா ப³ந்த⁴ தமஸ:’ –* உலகத்துல ஏன் காரியங்கள் பண்றோம்?

இவா நம்மளோட மனுஷா…

இவாளை காப்பாத்தணும்,

இது என்னுடைய பொருள்…

இதை சம்பாதிக்கணும், காப்பாத்தணும்.

அந்த ‘ *மமதா ப³ந்த⁴* *தமஸ* :’ –

இந்த அக்ஞான இருளை, ‘ *ஶமித* :’ – குரு க்ருபா கடாக்ஷம் என்ற சூரிய ஒளியினால் இதைப் போக்கிக் கொண்டு, அப்புறம் ‘ *யதந்தே காமாக்ஷி ப்ரதிதி³வஸம் அந்தர்த்³ரட⁴யிதும் த்வதீ³யம் பாதா³ப்³ஜம்’ –*

ஹே காமாக்ஷி! ஒவ்வொரு நாளும், *‘ப்ரதி தி³வஸம் அந்தர் த்³ரட⁴யிதும்*

’ -உன்னுடைய பாதத்தை மனசுல கெட்டியா பிடிச்சு வெச்சுகிறதுக்கு, இந்த மஹான்கள் ‘ *யதந்தே* ’ – முயற்சி பண்ணுகிறார்கள் அப்படீன்னு சொல்றார்.👣👣
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 197* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ *க்றுஷ்ணோ* லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
அவனது திருவடி பட்டதால் இரண்டுக்கும் முக்தியே கிடைத்து விட்டது.

“உன்னால் உடைக்க முடியாது என்று எண்ணி வெண்கலக் குடத்தை எடுத்து வந்தால்,
நீ அதன் பந்தத்தையே உடைத்து முக்தி அளித்து விட்டாயே.

உன்னை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால்
நாங்கள் தான் ஏமாந்து போவோம்!”

என்று சொன்ன அந்தப் பெண்கள் அன்றும் அவனோடு கண்ணாமூச்சி விளையாடினார்கள்.🥇🥇🥇
ravi said…
How handsome is God Rama?
ravi said…
Material words aren't enough to explain the beauty of bhagavan who is beyond the material senses. He in fact, attracts the mind of devi Ramaa, goddess of all beauty and opulence. The name Rama itself means “the very pleasant one and the beloved of Ramaa”.

I remember a phrase of Srimad Bhagavatam about Lord Ramachandra.

पद्मपद्भ्यां प्रियाया: पाणिस्पर्शाक्षमाभ्यां

His soft and delicate lotus feet which couldn't even bear the touch of hands of his beloved wife Sita, the queen of delicacy.
ravi said…
mahavishnuinfo என்ற விஷ்ணுவை பற்றி அனைத்தும் அறிந்து கொள்ளும் ஒரு தளம்

ஸ்ரீ மகாவிஷ்ணு பற்றிய அனைத்து ஆன்மீக தகவல்களை பெற ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம் என்ற மிகப்பெரிய பக்தர்கள் குழுமத்தில் இன்றே இணையுங்கள் ஸ்ரீ மகாவிஷ்ணு குழுவில் நீங்களும் இணைந்து விஷ்ணுவின் பேரருளைப் பெற வேண்டுகிறோம்
ravi said…
நமது குழுவில் தமிழ் ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளில் விஷ்ணுவை பற்றிய கோவில்கள் அதன் சிறப்புகள் 108 திவ்ய தேசங்களின் சிறப்புகள் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளக்கம்
சஹஸ்ர நாம விளக்கம்
ஆலய வழிபாட்டு முறைகள் ஆழ்வார்கள் வாழ்வில் நடந்த அற்புதங்கள் மற்றும் விஷ்ணுவை பற்றி அனைத்து ஆன்மீக தகவல்களை தினமும் பதிவு செய்யப்பட்டு வருகிறது இந்த மிகப் பெரிய பக்தர்கள் குழுமத்தின் அனைத்து சமூக வலைதளங்களின் லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
இதை உங்கள் குடும்பத்தினருக்கும் மற்றும் உங்கள் நண்பருக்கும் தெரியப்படுத்துங்கள் விஷ்ணுவின் அருளை அவர்களும் பெற உங்களின் ஒரு உதவியாய் இருக்கும்

Facebook Page link (Tamil) 👇
https://www.facebook.com/mahavishnuinfo

Facebook Page link (English) 👇
http://www.facebook.com/mahavishnuinfoEnglish

Facebook Page link (Hindi) 👇
http://www.facebook.com/mahavishnuinfoHindi

Telegram Tamil channel link 👇
https://t.me/mahavishnuinfo

Telegram English channel👇
https://t.me/mahavishnuinfoenglish

Blog ( website) 👇 https://www.srimahavishnuinfo.blogspot.com

YouTube 👇
https://youtube.com/c/SriMahavishnuinfo

INSTAGRAM 👇
https://www.instagram.com/mahavishnuinfo

TWITTER 👇
https://www.twitter.com/mahavishnuinfo

Whatsapp group 👇
https://wa.me/918220007473
( குழுவில் இணைய ADD ME TAMIL என்று மெசேஜ் அனுப்பவும்)

(ஆங்கிலத்தின் குழுவில் இணைய ADD ME ENGLISH என்று அனுப்பவும்)

(ஹிந்தி குழுவில் இணைய ADD ME HINDI என்று அனுப்பவும்)

E-mail srimahavishnuinfo@gmail.com

*ஸ்ரீமன் நாராயணன் திருவடிகளில் தஞ்சம் அடையுங்கள் இவ்வுலகிலும் அவ்வுலகிலும் திவ்யமான ஆனந்தப் பெருவாழ்வு*

உங்களுக்கு தெரிந்த விஷ்ணுவை பற்றிய தகவல்களை வீடியோ ஆடியோ மற்றும் எழுத்து வடிவில் மற்றவர்களுக்கு சொல்ல விரும்பினால் எங்களுடன் இணையுங்கள்
👇👇
https://wa.me/918220007473
ravi said…
89.யோ வா யத்யத்காமநாக்ருஷ்ட சித்த:
ஸ்துத்வோபாஸ்தே தேவி தே சக்ர வித்யாம்
கல்யாணாநாமாலய:காலயோகாத்
தம் தம் லோகம் ஜயதே தாம்ஸத் காமாந்
ஹே தேவி!
ravi said…
எந்தெந்த விருப்பங்களுடன் ஒருவன் உனது ஸ்ரீசக்ர வித்யையை ஸ்தோத்திரம் செய்து உபாஸிக்கிறானோ அவன் எல்லாவித நன்மைகளையும் பெற்று, காலப்போக்கில் அந்தந்த உலகங்களையும் அந்தந்த விருப்பங்களையும் பெறுகிறான்.
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 197* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*64 வது திருநாமம்*
ravi said…
*64 देवर्षिगणसङ्घातस्तूयमानात्मवैभवा -*

*தேவர்ஷி கண ஸங்காதஸ்தூயமாநாத்ம வைபவா |*💐💐💐👌👌👌
ravi said…
யாருக்குத் தான் அன்னையின் சௌந்தர்யத்தையும் கம்பீரத்தையும் பார்த்த பின்னும் கவிதைகள் பிறக்காது ?

ஸ்ரீ லலிதா சர்வா அலங்காரியாய் சௌ பாக்கிய தாயினியாய் சிம்மத்தின் மீது எழுந்து அருள்கின்றாள்..

பார்த்தவர்கள் பார்த்தபடி இருக்க

மெய்ப்புளம் அரும்பி ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து கரும்பிற் களித்து மொழி தடுமாறி முன் சொன்னதெல்லாம் தரும் பித்தர் ஆனது

அகிலாண்டமும் அவள் ஒளியாகி அவளின் ஒளிர் திருமேனியை உள்ளுதொரும் கதியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு வெளியாகி விடும் ...

பார்க்கும் இடம் எல்லாம் பாசாங்குசமும்

பனிச் சிறை வண்டு ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பு வில்லும்

நம் அல்லல் எல்லாம் தீர்க்கும் திருபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்

வார்க்கும் குங்கும முலையும்

முலை மேல் முத்து மாலையும்

பார்ப்பவரை, சொக்க வைக்கிறாள் மதுரை சொக்கி ... 🥇🥇🥇
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 197* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 47👍👍👍
ravi said…
6. *புருவங்களின் அழகு*

எல்லாக் காரியங்களிலும் ஜயம்👍
ravi said…
ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன பய பங்க வ்யஸநிநி

த்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்

தனுர் மன்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:

ப்ரகோஷ்ட்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரமுமே 47
ravi said…
உமாதேவியே !

உலகபயத்தைப் போக்குவதில் ஊக்கம் உள்ளவளே !

சற்று வளைந்த உன்னுடைய புருவங்கள் வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற கண்களால் நாண் பூட்டியதாகவும், இடதுகையால் பிடிக்கப் பட்டு முழங்கையாலும் விரல் முஷ்டியாலும் மறைக்கப் பட்டதால் மத்தியபாகம் தெரியாததாகவும் உள்ள மன்மதனுடைய வில் என்று எண்ணுகிறேன்.🏹
ravi said…
இந்தப் பாடலில் அம்பிகையின் புருவங்கள் மன்மதனுடைய வில்லுக்கு சமமாகக் கூறப்பட்டுள்ளது.

மன்மதனது வில்லில் ' *மெளர்வி மதுகரமயீ''* என்பதாக (இங்கே) அதாவது வண்டுகளே நாணாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாடலில் அந்த வண்டுகளாக அன்னையின் கண்விழியசைவினைச் சொல்கிறார்.

காதுவரை நீண்ட மீன் போன்ற கண்களில் (மீனாக்ஷி) கருவண்டு போன்ற கருவிழிகள் ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வருவது நாண் போன்ற தோற்றத்தை தருகிறதாம்.

அன்னையின் *நாஸதண்டம்* (மூக்கு) மன்மதனுடைய முழங்கைக்கும், அவனது முஷ்டி (மடங்கிய விரல்கள் உடைய கைப் பகுதி) அன்னையின் புருவங்களூக்கு மத்தியில் இருக்கும் பகுதிக்கும் சொல்லியிருக்கிறார்.🙏🙏🙏
ravi said…
பெரியவா சரணம்.

அன்றைய பொழுதின் கனவும் நனவும் கூடியதோர் அரும்பொழுதின் ஆத்மானுபூதியைச் சொல்லும் பகிர்வு இது.

நீண்ட பகிர்வு; ஆயினும் அன்று அடியேனுக்குக் கிட்டிய ஆனந்த உணர்வு அனைவருக்கும் கிட்டிட வேண்டியே இன்றும் பகிர்கின்றேன்.

சர்வம் ஸ்ரீ சந்த்ரசேகரம்.

ஆம். நனவிலே ஓர் கனவு; கனவிலே ஓர் அரிய வாய்ப்பு!

சங்கரம் போற்றி!
ravi said…
மனதிலே ஏனோ ஓர் இனம் புரியாத உணர்வு. அது சோகமா? ஏக்கமா? வேதனையா? என ஏதும் புரியாத நிலை. எது எப்படியிருந்தாலும் எம் ஐயனின் புகழினைப் பாடுதலிலே கிட்டும் சுகமே எமக்கு மருந்து. எமைக் காக்கும் உயிர்காப்பு என்பதுதானே சத்தியம்.

பொதுவாக கண்கள் சோர்ந்து உறக்கம் மூலையை வியாபித்துக் கொண்ட நிலையிலே, உறக்கத்திலே கனவு காண்போம். இன்றோ, மனம் உருகிக் களைத்துப் போன நிலையில், ஐயன் அமுதவுரைக் கோமகன், அவ்யாஜ கருணாளன் ஸ்ரீமஹாஸ்வாமியை ஆத்மார்த்தமாக எண்ணுகையில் விழித்த நிலையிலேயே கனவு வருகிறது.
ravi said…
அந்த நனவின் கனவு அன்று காலையில் விழித்தும் கூட படுக்கையை விட்டு எழாத நிலையில் உண்டாயிற்று.

ஆயிரமாய் சோகங்கள் நம்மை அழுத்தி வீழ்த்தினாலும் ஐயனின் ஸ்மரணை நம்மை அதனின்று காக்குமன்றோ!

ஆம்! அது ஒரு அற்புதமான பொழுது. காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலே, ஸ்ரீமடத்தினுள்ளே நுழைகின்றேன். கருங்கட் படிதாண்டி உள்ளே நுழைகையிலே சாம்பிராணி துளசி வாசனையோடு அன்னை மஹாதிரிபுரசுந்தரியோடு உறையும் ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் வரவேற்கின்றனர். சில நிமிடங்களுக்கு முன்னதாகத் தான் தீபஹாரத்தி நடைபெற்றிருக்க வேண்டும்… பசு நெய்யில் நனைந்த பஞ்சுத் திரி அக்கினியுடனாக ஏற்பட்ட புணர்வை அழகுற வாசனையிலே எமக்கு கட்டியம் கூறுவதை நாசி உணர்கின்ற வேளையிலே, எதிரில் வந்த பக்தர்கள் கூட்டத்தில் ஒரு மூத்த தம்பதி என் முன்னமாக நின்று, ஸ்ரீசரணர் அளித்த குங்குமப் பிரசாதத்தை நீட்டுகின்றனர்.
ravi said…
பயபக்தியோடு அவர்தம் உள்ளங்கையிலிருந்து ஒரு துளி குங்குமத்தை எடுத்து நெற்றியிலே இட்டுக் கொள்கையில், மனம் படபடக்க, ஒரு இனம்புரியாத அழுகை… கேவல்… சங்கரா…! என்றவாறு திலகம் அணிகின்றேன். அந்த பெரியவர், “சீக்கிரமா உள்ளே போப்பா… பெரியவா… பின்னாடி கோசாலை தாண்டி இடதுபுற வனத்துல ஆலமரத்தடிலே உக்காந்துண்டு பக்தாளுக்கு தர்சனம் தந்துண்டுருக்கா” என்றார். அவரை விட்டு விலகும் முன்பாக அவர் இதமாக எந்தன் தலையிலே கை வைத்து அழுத்திவிட்டு நகர்கின்றார். எனைத் தாண்டிச் செல்லும் அந்த தம்பதியரைக் கண்டு அதிசயித்ததோடு பீறிட்டு வரு அழுகையை அடக்க மனமின்றி, கண்களிலே கரைபுரளும் கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி நான் பெரியவா அமர்ந்திருக்கும் இடம் நோக்கி நகர்கின்றேன்
ravi said…
கோசாலை தாண்டுகையில் அங்கிருந்த மிக உயரமாகவும் பருமனாகவும் இருந்த பசு என்னைக் கண்டதும் உடம்பைச் சிலிர்த்துக் கொண்டு வாலால் தனது இடது தொடைப் பக்கம் தட்டிக் கொண்டதோடு, தன் நீளமான நாவினால் மூக்குப் பக்கமாக துடைத்து கொள்கையில், “ஏனப்பா… நேக்கு தர்றதுக்குன்னு ஏதுவுமே வாங்கிண்டு வரலையோ..?” என்பதாக உணரமுடிந்தது. அதற்கு என்னிடம் பதில் இல்லை; மாறாக குமுறும் அழுகையும், கண்ணீரும் மட்டுமே மீதம். மனதார கோமாதாவை பிரார்த்தித்துக் கொண்டு பெரியவா இருக்கும் அந்த ஆலமரம் எங்கே என தேட ஆரம்பிக்கின்றேன். வழி நெடுக குடிசைபோலே கட்டப்பட்டிருந்த காய்ந்த தென்னையோலைப் பின்னல்கள் இருபுறமும்… ஒரு ஆள் நுழைந்து போகுமளவே இடம் இருக்கிறது. வானத்தை நோக்குகையில் அந்த படலுக்கு அப்புறமாக உள்ள மரத்தின் கிளையொன்று அவ்வப்போது காற்றிலே ஆடுகையில் அதன் பச்சை பசேலென்ற கிளை கண்ணுக்குத் தெரிந்து மறைகின்றது. அவ்வழியே சில நிமிடங்கள் நடக்கின்றேன்.
ravi said…
எங்கோ… எவரோ ஒரு பெண்மணி பாடும் பாடல் கேட்கிறது. பாடல் வரிகள் புரியவில்லை; ஆனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் எந்தன் சோகக் காயத்திற்கு மயிலிறகால் தடவப்படும் நெய் கலந்த மருந்துக் கலவையாகவே தோன்றியது.
ravi said…
இதோ… ஓலைப் பின்னல் சுவர் முடிவடைகிறது. மிக அற்புதமாக பச்சை பசேலென்ற வனம். வலப்புறம் பார்த்தேன். சிறிது தொலைவிலே அழகாக நாற்புறங்களிலும் படிகள் கட்டப்பெற்று ஒவ்வொரு படியின் கீழ்புறமும், காவி – வெள்ளை பட்டைகள். இவ்வளவு தத்ரூபமான சதுரமும் இருக்குமா என்ன? அற்புதமான நீர் நிலை. அதனிலே ஆங்காங்கே தாமரை இலைக் கூட்டங்கள்… நடுவிலே நிறைய தாமரைப் புஷ்பங்கள் மலர்ந்திருப்பதைக் காணமுடிந்தது. ஓ… பெரியவா இங்கே தான் இன்னிக்கி ஸ்நானம் பண்ணிருக்கணும். அதான் இவாள்ளாம் இவ்ளோ சந்தோஷமாக மலர்ந்திருக்கான்னு தோணிச்சு.
ravi said…
இடதுபுறம் பார்க்கின்றேன்…. தொலைவிலே பக்தர்கள் கூட்டம். தூரத்திலிருந்து பார்க்கும்போதே அவர்களது நடவடிக்கைகளிலே உள்ள பயபக்தி நன்றாக உணரமுடிந்தது. நான் அவர்களை நோக்கி நகர்கின்றேன்.
ravi said…
சிறிது தூரம் கூட நகர்ந்திருக்க மாட்டேன்… ஸ்ஸ்ஸ்…ஆ….. என்றபடியாக இடதுகால் கட்டைவிரல் அடியிலே சொருகியிருந்த முள்ளை எடுக்க ப்ரயத்தணம்… அட, என்ன அதிசயம். முள்ளை வெளியே எடுத்து விட்டேன்.. ஆனால் ஒரு துளி கூட இரத்தம் காணலை.
ravi said…
பெரியவா இடமோனோ… குத்தற முள்ளுக்குக் கூட தெரிஞ்சுருக்கு… அந்த இடத்தை எவ்வகையிலும் அதன் தூய்மையை மாசுபடுத்திடப் படாதுன்னு… மனசு நெனைக்கையிலே பீரிட்டது அழுகை. ஹே, பெரியவா….! இன்னிக்காச்சும் உங்களை பார்த்துட முடியுமா….? ஏங்கிட்ட எதுவுமே இல்லே பெரியவா… மூங்கில் கூடையோ, அது முழுக்க வெற்றிலை, பாக்கு, புஷ்பம், வாழைப்பழம், தேங்காய்கள், பன்னீர், கல்கண்டு, காய்ந்த திராட்சை, பருப்பு வகைகள்… இப்படி எல்லாம் கொண்டு வரணும்னு ஆசைமட்டுமே இருக்கு பெரியவா… எங்கிட்ட எதுவுமே இப்போ இல்லே பெரியவா… எதுக்கும் பயன்படாத இந்த ஜடத்தை நீங்களே ஆட்கொண்டு அருளனும் பெரியவா…நு மனசு ஏங்கியபடி, நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். எதையோ துரத்திக் கொண்டு ஓடிவந்த அந்தக் குழந்தை என்னைப் பார்த்ததும் நின்று விட்டாள். அப்போது தான் கவனிக்கின்றேன்… என் வேஷ்டி நீண்ட நாட்கள் தோய்க்காமல் இருந்ததாலோ என்னவோ ஒரே அழுக்கு. என் மேலல்லாம் கூட கொஞ்சம் அழுக்கும் சேறும் உணரமுடிந்தாது. ஓ…! இப்படி ஒரு அவலட்சணத்தைப் பார்த்தால் யாருக்குத் தான் பயமோ, அருவருப்போ வராது… என நினைச்சுண்டு அந்த குழந்தையைப் பார்த்தேன். என்னைப் பார்த்து அழகாக சிரிக்கின்றாள். புருவங்களை உயர்த்தி கண்களை மலர்த்தி என்னைப் பார்த்துவிட்டு, வா என கையசைத்து அழைத்துவிட்டு திரும்பி ஓடுகிறாள். நானும் அவளை பின் தொடர்ந்து ஓடுகிறேன். அப்..ப…ப்பா… எவ்வளவு தூரம்.. மூச்சிறைக்க நிற்கின்றேன். அந்தக் குழந்தையைக் காணவில்லை. வெறும் வனம்… பச்சை பசேலென்ற வனத்தின் நடுவே நான் மட்டிலும் தனியாக நிற்பதைக் காண்கிறேன். நா வரண்ட நிலையில்… என்ன இது? கொஞ்ச தூரத்திலேயே பக்தாள்ளாம் நிண்ணுண்டுருந்தாளே… அந்தக் குழந்தை அவாகிட்டேருந்து தானே நா இருக்கற எடத்துக்கு வந்தா… அவ திரும்பி அவாளை நோக்கித் தானே ஓடினா… நானும் அவளைப் பின் தொடர்ந்தேன். ரொம்ப தூரம் ஓடி வந்தோமே… ஆனா இப்போ யாரையும் காணலை… நாம மட்டும் இந்த அடர்ந்த வனத்துக்குள்ளே…
ravi said…
எப்படி இது சாத்தியமாச்சு… நாக்கு வறண்டு கெடக்கு… தண்ணி கூட இல்லே… பெரியவா… ஒவ்வொரு தடவையும் உங்கள பாக்க ஓடோடி வந்து இது மாதிரியே எங்கேயோ போயிடறேனே… இன்னிக்கும்…. வாய்விட்டு அழக் கிளம்புகிறேன். அ..ம்…மா……. அழுதுகொண்டிருந்தவனுக்குப் பின்னே ஆளரவம்… யாரோ நடந்து வர்றமாதிரி இருக்க, குனிந்திருந்தவன் நிமிர்ந்து நின்று திரும்பினேன்.
ravi said…
ஆ….! அங்கே தீனதயாபரன்… செக்கச் செவேலென்ற மேனி… குள்ளமான உயர்ந்த மனிதம்…. ஒருகையில் தண்டம்… இன்னொரு கையில் குடுவையோடு ஏதோ ஒரு மரக்கிளைத் துண்டு…
ravi said…
அதிலே கொத்துக் கொத்தாக இலைகள்… அரசமா… புரசமா… தெரியலை. காஷாயத்தை முட்டிக்கு மேலாகக் கட்டிக்கொண்டிருக்கின்றார். அழகான அந்த முட்டிக்கால்கள்… அது என்ன… முட்டிக்கு மேலே… வலது காலில்… ஓ… குங்குமம் போலேயிருக்கு.
ravi said…
பூஜை பண்ணும்போது பட்டுருக்கும். கமகமன்னு சந்தனமும் விபூதியுமா மணம்… சில்லென்ற அந்த காற்று ஐயனின் சரீரத்தினின்று பெற்றதை எந்தன் நாசிக்கு தாரை வார்த்தது. கண்கள் சொருகிக் கொள்ளுமோ என தவித்தவனை, அவருடைய கனீரென்ற குரல் தப்பிக்க வைத்தது எனலாம். “என்னடா கோந்த்…தே…! இங்கேயே நிண்ணுட்டயா… அங்க வரலையா…? என்ன ஆஹாரம் பண்ணினே? சரி..சரி… அங்க பாரூ… அந்த கிணத்துத் தண்ணீலே ஸ்நானம் பண்ணிட்டு, அங்கயே வஸ்திரம் இருக்குப் பாரூ.. அத்த கட்டிண்டு வா!” சொல்லிவிட்டு அவர் திரும்பி விறுவிறுவென நடந்து மறைந்து விட்டார். நான் சில நொடிகளாச்சு… என்னை சுதாரிச்சுக்கவும்!
ravi said…
சட்டென பார்த்தால்… நான் அந்தக் கூட்டத்தின் விளிம்பில். வெள்ளவெளேர்னு வேஷ்டி. பஞ்சகச்சத்துலே பட்டைபட்டையா விபூதி இட்டுண்டு நிண்ணுண்டுருக்கேன். ஒரு மாமா நேரா என்னைப் பார்த்து, அடேய்… அம்பீ,,, இங்க வா… “. நானும் அவரிடம் போகின்றேன்.
ravi said…
இங்க உக்காந்துண்டு பாடுடா. பெரியவா உன் பாட்டை கேட்கணுமாம். தோ, பாரூ… இதுக்குள்ள தான் பெரியவா உத்தாச்சிண்டுருக்கா”. என் எதிரிலே ஒரு குடில் அறை. அதன் கதவு லேசாக திறந்திருக்கு.
ravi said…
இப்போது கண்களை மூடிண்டு பெரியவா உருவை த்யானிக்கின்றேன்… எந்தன் நாசியிலே சந்தனம் விபூதிப்பச்சிலை வாசம் உணர்கிறேன். மஞ்சள்குங்கும மணம் என்னை பூரிப்படைய வைக்கிறது. பாட ஆரம்பிக்கிறேன்.
ravi said…
பாடிண்டே இருக்கேன். இப்போ எங்கிட்ட சோகமில்லை… ஆனா கண்களிலே நீர் வழிவதை உணர்கிறேன். மிகப் பெரிய பாடல் அது. ரொம்ப நேரம் பாடறேன்… பாடி பாடலை முடிக்க மறுபடியும் பல்லவியை அனுபவித்துப் பாடி முடிக்கும் முன்பாய், எந்தன் மடியிலே ஏதோ கனமா விழுகிறது. கண்களைத் திறந்து பார்க்கின்றேன். மடியிலே ஓர் மாதுளம்பழம். அதோடு கூட கொஞ்சம் மல்லிகைப் பூக்கள், துளசி, அரளி, ஒரே ஒரு பன்னீர் ரோஜா. அங்கவஸ்திரத்தில் விழுந்திருந்த அவற்றை அப்படியே முடிச்சா எடுத்துண்டு என் முன்பாக உள்ள குடில் அறையை நோக்குகிறேன்
ravi said…
அங்கே, சாக்ஷாத் பரமேஸ்வர-பார்வதீ ஸ்வரூபமான வேதவேந்தன், ஸஹஸ்ராவதானி, சர்வக்ஞன், சாந்தஸ்வரூபமான ஸ்ரீமஹாபெரியவா அந்த கதவுப்படலைப் பிடிச்சுண்டு சிரிக்கறா… முன் வரிசை மேல் பல் வரிசையில் ஒரே ஒரு பல் மட்டும் நன்னா தெரியறது. ஓ… பெரியவாளுக்கு மத்த பல்லெல்லாம் விழுந்துடுத்தா என்ன…? அடேங்கப்பா… அந்த குங்குமச் சிவப்பான அழகு… கம்பீரம்… அடேங்கப்பா… அம்பாள் கம்பீரமா நின்னா இப்படித்தான் இருக்குமோ… அது என்ன? பெரியவா தலைல… அந்த குடிலின் மேற்கூரையா அல்லது ஜடாமுடியா? கங்கை இருக்கணுமே… சிலீரென முகத்தில் பட்ட தண்ணீர்த்துளிகளைத் துடைத்துக் கொண்டே அவரையே பார்க்கின்றேன்.. ஓ… இது மழைத்துளியா? இல்லே மரத்து இளைகளிலே இருக்கற நீர்த்துளியா… ஆ… ஒருவேளை நாம நெனச்சது பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்தா? ஜடா முடியிலே இருக்கும் கங்கை நீர் பட்டுருக்குமோ… பெரியவா சிரித்தபடியே என்னைப் பார்த்து தலையசைக்கராறா? இல்லே இதுவும் என் கற்பனையா? வலக்கையை உயர்த்தி ஆசி கூறுகிறார். உடனே நான் என் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன்… அவர் வேற யாரையாவது ஆசிர்வதிக்கறாரா?
ravi said…
‘பட்’டென்று யாரோ எந்தன் முதுகிலே அடிக்க, திரும்பிப் பார்த்தேன். அந்த பெரியவர்… என்னடா இது பித்துக்குளி? நம்ம பெரியவா உன்னைப் பார்த்து சிரிச்சு ஆசிர்வாதம் பண்றா.. நீ என்னடான்னா பராக்கு பாத்துண்டு நிக்கறே… டக்ணு நமஸ்காரம் பண்ணுடா அவர் நகர்றதுக்குள்ளே! என்றார்.
ravi said…
அடுத்த நொடி தடால்னு நான் கீழே விழுந்துட்டேன். “பரமேஸ்வரா… பராபரா… பரப்ரஹ்மா… சிவோஹம்.. ஹரோஹம்… பெரியவா சரணம்…” இன்னும் என்னன்னவோ சொல்லிக் கத்திண்டே இருக்கேன்…. திரீரென எழுந்தவன் நனவிலே கனவு கண்டு கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஆஹா…! பரம சந்தோஷம். ஒரு திருப்தி.. ஒரு ஆஸ்வாசம்… ஒரு அமைதி… அப்ப்ப்ப்பா….டான்னு இருக்கு இப்போ
ravi said…
அந்தப் பாட்….டு….! ஆம்! கொஞ்சம் கொஞ்சம் நினைவுல இருக்கு. முடிஞ்ச வரைக்கும் எழுத முயற்சிப்போம் என்ற எண்ணத்திலே ஆரம்பிக்கின்றேன். பெரியவா க்ருபையில் நினைவுக்கு வரணும். பெரியவா….

#ஸ்ரீகுருகானம்

மன்றாடி யுருவே நான் மன்றாடு கின்றேன்
வருவாயே ஸ்ரீசங்கரா – நன்மை
தருவாயே சசிசேகரா

கன்றாடு சிவனாரின் கனிவான பெயரோடு
அவதாரி நீயல்லவா – ஸ்வாமி
நாதன் உன் பெயரல்லவா

(மன்றாடி…)

கண்ணிலே மண்ணிலே விண்ணிலே என்எளிய
கவியிலுறு தெய்வம் உனையே – நாளும்
கலிவெல்ல யான் பாடுவேன்

பண்ணிலே அருணகிரி பரவியதைக் கேட்டினிய
பாசத்தைத் தந்த குமரன் போலே
பரன் எந்தன் பா ஏற்க வா

சுந்தரச் சங்கரா சுகமெனக் கருளவா
சோமனவதாரி நீயே – எங்கள்
குலம் காக்கும் தெய்வம் நீயே
ravi said…
(மன்றாடி…)

மந்திரப் புன்னகை மாசிலா குறுநகை
விழியோர பார்வை தனிலே – என்னில்
விடம் நீக்கி அருள் தருகவே

கச்சிமடம் மீதிலே பரவுகிற அடியவர்
வினை தீர்க்கும் வேத உருவில் எங்கள்
துயர் தீர்த்து அருளும் குருவே

நன்மையும் தீமையும் நானிலம் உணரவும்
நயமாக உரை தந்தவா – எந்தன்
நலம் பேண ஓடோடி வா

(மன்றாடி…)

நிறைய பாடின மாதிரி இருக்கு; ஆனால் இவ்ளோ தான் நியாபகத்துக்கு வந்தது. அதுலயே சில வார்த்தைகள் புரியலை…. ஆனா இப்போ நானாவே அந்தந்த இடத்துல எழுதிருக்கேன்.

ரொம்ப காலத்துக்கு அப்புறமா இப்படி ஒரு நிகழ்வு. இது கனவா? கற்பனையா? ஏக்கமா..? தெரியலை. ஆனா சுகம். சுகமோ சுகம்.
ravi said…
பெரியவான்னா அவர் எல்லோர்க்கும் சொந்தம். எல்லோர்க்கும் உரிமையுண்டு. மேலும் நாம ஒரு கோயிலுக்கு போனா அங்க கிடைச்ச பிரசாதத்தைக் கொண்டுவந்து வீட்டில் எல்லாருக்கும் கொடுப்போம் இல்லையா… அது போலே, இவ்வுலகிலே பெரியவான்னு த்யானம் பண்ற, பக்தி பண்ற எல்லாருமே ஒரே குடும்பம். பெரியவா குடும்பம். அது எந்தன் குடும்பம். எனவே இந்த ப்ரசாதத்தை உங்க எல்லார்க்கும் தந்துடற பாக்கியம் கிடைச்சாச்சு. நான் பக்தன் இல்லே. சத்தனும் இல்லே. ஆசை அதிகமுள்ள ஒரு பிடாரி. ஆனா, பூர்வ ஜன்ம புண்ணியத்தாலோ அல்லது மூதாதையர் செய்த புண்ணியமோ, இந்த சர்வேஸ்வரனை சரண் புகுந்து வாழ மனம் இசைந்து இப்பொழுது இனிக்க இனிக்க அவரை ஸ்மரிக்கறேன். கொண்டதைக் கொணர்ந்து உங்களிடமும் பகிர்ந்தளிக்கின்றேன். ஒவ்வொரு முறையும் ஸ்மரிக்கையிலே எந்தன் பிரார்த்தனையிலே தர்மம் இருக்கச் செய்யுங்கள் ஸ்வாமின்னு கதறறேன். பொதுவா பரமேஸ்வரனைத் தொழும் பக்தாளுக்கெல்லாம் ஈசன் அவ்ளோ சீக்கிரமா வரம் தந்துட மாட்டாராம். அம்பாளோட முயற்சியாலேயே அவரோட வரம் அவரோட பக்தாளுக்கு கெடைக்கறதாம். இவரோ அம்மையப்பர்.
1 – 200 of 205 Newer Newest

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை