அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 70 பதிவு 59
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 70
பதிவு 59👌👌👌
கேள்வி பதில் நேரம்
பதிவு 59 🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்.
கேள்வி 71
நான்
மனதில் ஒரு பாட்டை அசை போட்டுக்கொண்டிருந்தேன் ... பழைய பாடல் தான் .. PBS பாடியது .. யார் கேட்கிறார்கள் புது பாடல்கள் இப்பொழுது .. பாடலும் புரிவதில்லை பாடுபவரையும் தொடர்ந்து காண முடிவதில்லை ...
ஆண் : பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் : கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்...
கண்ணதாசன் வாழ்கிறான் .... கதவு தட்டும் சத்தம் .. ஓடி சென்று பட்டரை வரவேற்றேன் ...
பட்டர்
என்னப்பா நான் வந்த உடன் நல்ல பாட்டை நிறுத்தி விட்டாய் .. இன்னும் கொஞ்சம் பாட விடு ... கேட்போம்
பெண் : பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண் : நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?.....
நான் ..
எங்கே முழுப்படத்தையும் போட்டு காண்பி என்பாரோ பட்டர் ...என்று பயந்து நிறுத்தி விட்டேன் பாட்டை ..
நான் ... பட்டரே இது எங்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு மாபெரும் கவி ...கண்ணதாசன் என்று பெயர் .. அவர் இயற்றியது ...
பட்டர் ஓ அப்படியா ... சரி .. கம்பரிடம் இருந்து இரவல் வாங்கிய கருத்துக்கள் இவை
நான் ... கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள் பட்டரே
பட்டர் ... உண்மையில் இந்த பாடல் கம்பரின் சொந்த கருத்தும் இல்லை திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல் ...
அதை கம்பர் தனதாக்கி பிறகு உன் கண்ணதாசன் அதை வைத்து சினிமா பாடல் எழுதினார் ...
கம்பர் நாலு வண்ணங்களாய் பாடிய திருமங்கை ஆழ்வாரின் பாடலை எட்டாக்கி பாடினார் ...
பட்டர் ... ரவி உண்மையில் பெருமை திருமங்கை ஆழ்வாருக்குத் தான் போக வேண்டும் ... உங்கள் கண்ணதாசனுக்கு அல்ல , கம்பருக்கு அல்ல ... Remix செய்தவர்கள் இவர்கள் ... இன்னும் விவரமாய் சொல்கிறேன் கேள்
திருமங்கையாழ்வார் ,
நம்மாழ்வாருடைய நான்கு பிரபந்தங்களாகிய,
திருவிருத்தம்,
பெரிய திருவந்தாதி,
திருவாசிரியம்,
திருவாய்மொழி
ஆகியவற்றிற்கு அங்கங்கள் போல,ஆறு திவ்ய பிரபந்தங்களை அருளிச்செய்துள்ளார்.
அவற்றில் ஒன்றுதான் இந்த *திருநெடுந்தாண்டகம்* …
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள்” பனுவல்” என்று கூறப்படுகின்றன.
இந்த ஆறு பிரபந்தங்களுள் சிகரமாக விளங்குவது
*திருநெடுந்தாண்டகம்* .
இவர் திருவரங்கத்தில் இருந்தபோது இதனை அருளியுள்ளார். “ *தாண்டகம்* ” என்பது மலை ஏறுவதற்கு உதவியாக இருக்கும்
ஒரு ஊன்றுகோல்.
மனித ஆன்மாவின் கடைத்தேற்றத்துக்கு கடவுள் ஒருவர் தான் ஊன்றுகோல் என்பதை, இப்பாசுரங்கள் விளக்குகின்றன .
திருநெடுந்தாண்டகம் முப்பது பாசுரங்கள் கொண்டது.
தாண்டகம் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது
“திருநெடுந்தாண்டகம்” என்றும் அழைக்கப் படுகிறது.
திருநெடுந்தாண்டகத்தில் முதல் 10 பாசுரங்கள், ஆழ்வார்
தாமான தன்மையிலும்,அடுத்த 10 பாசுரங்கள்,
ஒரு தாய் தன்னுடைய மகளைப் பற்றி சொல்வது போலவும். மூன்றாவது 10 பாசுரங்கள்தலைமகள் என்னும் நிலையில், திருமங்கையாழ்வார், தன்மையில் பாடிய
சிறப்புமிக்க பாசுரங்களாகும்.🙌🙌🙌
திருநெடுந்தாண்டகம் வேதக்கருத்துக்களை கொண்ட,
வேதத்திற்கு ஒப்பான பாசுரங்கள் ஆகும்.
இந்த திருநெடுந்தாண்டகத்தின் 21 வது பாசுரமான,
“மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,
எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே
இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்
கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும்
கண்ணிணையும் அரவிந்தம் அடியும்
அதே,
அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ.
அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.”👏👏👏
நான்கு வண்ணங்கள் ... இதை பார்த்த கம்பர் தன் ராமாயணத்தில் விசுவாமித்திரர் சொல்வது போல் இந்த பாடலை அமைத்தார்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி.
மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே!
உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’
ராமா உன் கரங்களின் வண்ணத்தை அன்று தாடகியை அழிக்கும் போது கண்டேன் ..
இன்று அகல்யாவை கால் பாதம் கொண்டு எழுப்பினாய் அந்த வண்ணம் இங்கு கண்டேன் ...
இதையே வேறு மாதிரி பார்க்கலாம்
விசுவாமித்திரர் கதருகிறார்...
"ராமா!! என்னுடைய முக்கியத்துவம் உனக்கு சீதையை மணம் முடிப்பதுடன் முடியப்போகிறது ..
இனி உன் ராம காதையில் எனக்கு வேலையே இல்லை ..
இப்பொழுது அகல்யாவை எழுப்பினாய் ...
உன்னை இதுவரை நான் ரசித்தது கால் வண்ணம் தான் ..
பாக்கி இருக்கும் முக்கால் வண்ணம் கண்டு ரசிக்கும் பேறு எனக்கில்லையே ....💐💐💐
நான்
பட்டரே என் இன்றைய கேள்வியையும் சொல்லி விடுகிறேன்
நீங்கள் ஏன் அம்பாளின் திருவடிக்கு அதிகமாக முக்கியத்துவம் தருகிறீர்கள் ...
காப்பாற்றுவது கரங்கள் அல்லவா ...
அபய கரங்கள் என்று தானே சொல்கிறோம்
அபய திருவடிகள் என்று சொல்வதில்லையே !!💐💐💐
பட்டர்
ரவி உன் கேள்விக்கு வருகிறேன் ...
ராமனின் கரங்கள் அழிக்கவே பயன் பட்டன ...
அம்பாளின் கரங்களும் சூலம் கொண்டு மகிடனை கொன்றன ...
ஆனால் ஒரு கல்லை அல்லது கல் மனம் கொண்டவர்களை காப்பாற்றி மறுவாழ்வு கொடுப்பது முகுந்தனின் திருவடிகளும் அன்னை அபிராமியின் பாதங்களுமே ....
மனிதனின் பாதங்களால் ஒரு பயனும் இல்லை ..
நாம் நடந்து போனால் அந்த இடங்களில் ஒரு புல் கூட முளைக்காது
ஆனால் அகல்யாவின் வாழ்க்கை மீண்டும் முளைத்ததே ,
மணி வாசகரின் வாழ்வு மலர்ந்ததே
மகிடன் முக்தி பெற்றானே ...
திருவடிகளின் பெருமையை இறைவன் கரங்கள் கூட வணங்கி தான் பெருமை பெற்றுக்கொள்ள வேண்டும் 👣👣👣
நான்
ஐயனே .. மின் ஆயிரம் ஒரே சமயம் தோன்றியதை போல் புரிய வைத்தீர்கள் ....
பட்டர்.. பால் வண்ணம் பருவம் கண்டு ....பாடலை இசைத்துக்கொண்டே பறந்தார்🎼🎼🎼 🦅🦅🦅
👌👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐
Comments
பெரியவா கடாக்ஷம் பரிபூர்ணம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
[18/04, 08:01] Raji/Jingle: Pl reserve a copy for me.
[18/04, 08:12] Jayaraman Ravilumar: Blog serves this purpose is it not ?
[18/04, 08:13] Raji/Jingle: No Athimber. Or atleast every 100 creations make it a pdf
[18/04, 08:23] Jayaraman Ravilumar: Sure . Will do . Thanks for your interest