அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 68 பதிவு 57

                       அபிராமி   பட்டரும்   அடியேனும் 

  கேள்வி பதில் 68

                                       பதிவு 57👌👌👌



இன்று ஸ்ரீ லலிதாம்பிகையின் நினைவில் மூழ்கி போனேன் .. அன்னையே உனக்கு ஊடலும் உண்டோ
?

ஊடலும் கூடலும் நம்மை காக்கவே

ஈசனவன் பாசமுடன்  அம்பிகையை அணைக்க

மாமுனிவன்  சாபத்தில் கதிரவன்  கதற

ஒசைகேட்டு கூத்தபிரான் சற்றே விலக

கோபம் கொண்ட கோமகளின்  முகமது சிவக்க

அது குறைக்க அண்ணலும்  முகமதை வருட

சினம் தனிந்து மனம் குளிர்ந்து சாபத்தை நீக்க

வையகத்தை வாழவைத்தாள் லலிதாம்பிகை




பட்டர் 

பேஷ் பேஷ் .. ஸ்ரீ லலிதாவை நினைப்போர்க்கு நினைப்பதெல்லாம் நடக்கும் 💐💐💐

இன்று ஒரு கேள்வியும் இல்லையா நான் போகட்டுமா ? 

 நான் ..

ஐயனே .. போவதாவது ... 

தாங்கள் அன்னையின் இடையை மின்கொடி என்று வர்ணீத்தீர்கள் ... கொஞ்சம் விளக்க முடியுமா ? 

பட்டர் ... கம்ப ராமாயணம் படித்தது உண்டா ? 

நல்ல நூல்களை நீ எங்கே படித்திருக்க போகிறாய் ...?? 

அன்னையின் அழகை என்னைவிட அதிகமாக வர்ணித்துள்ளான் கம்பன் அபிராமிக்கும் அப்படியே பொருந்தும் 

பார்ப்போமா ? 👌👌👌

விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். 

மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள்.

அந்த ஊர் மதில்கள்மீது கொடிகள் பறக்கின்றன. 

அவை ராமனை நோக்கிக் கை அசைத்து ‘வா, வா’ என்று அழைப்பதுபோல் தோன்றுகிறதாம்.

ராமன் ஏன் மிதிலைக்குள் வரவேண்டும்?

காரணம் இருக்கிறது.



 ‘
மை அறு மலரின் நீங்கி, யான் செய் மா தவத்தின் வந்து செய்யவள் இருந்தாள்’ 

என்று அந்தக் கொடிகள் சொல்வதாகக் கம்பர் வர்ணிக்கிறார்: 

குற்றமில்லாத தாமரை மலரை விட்டு நீங்கிய திருமகள், எங்கள் நகரம் செய்த தவத்தினால் இங்கே சீதையாக வந்து பிறந்திருக்கிறாள். 

ஆகவே, ராமா நீ இங்கே வா, அவளுடைய கைத்தலம் பற்றிக் கொள்!

சீதை அப்பேர்ப்பட்ட அழகியா?🤔

பின்னே? 

மதனற்கும் எழுத ஒண்ணாச் சீதை’ என்கிறார் கம்பர். 

அந்த மன்மதனால் கூடச் சீதையின் அழகை ஓவியமாகத் தீட்டமுடியாதாம்.

மன்மதன் யோசித்தான், மற்ற வண்ணங்களெல்லாம் சீதையைப் படமாக வரையை போதாது என்று, அமுதத்தை எடுத்தான், 

அதில் தூரிகையைத் தோய்த்தான், படம் வரைய நினைத்தான்.

ம்ஹூம், அப்பேர்ப்பட்ட அமுதத்தால் கூட அந்தப் பேரழகைப் பதிவு செய்ய முடியவில்லையாம். 

மன்மதன் திகைத்துப்போய் நிற்கிறான். 

ஆதரித்து அமுதில் கோல் தோய்த்து அவயம் அமைக்கும் தன்மை யாதெனத் திகைக்கும்!’



தங்கத்தின் பிரகாசம், 
பூவின் நறுமணம், 
வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, 
சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… 

இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. 

அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

சீதையைப் பார்த்த மனிதர்களெல்லாம் ‘அடடா, தேவர்களைப்போல நமக்கும் இமைக்காத விழி கிடைத்தால் இவளைப் பார்த்துக்கொண்டே இருக்கலாமே’ என்று ஏங்குகிறார்களாம். 

அந்தத் தேவர்களோ ‘நமக்கு இரண்டு கண்கள்தானே இருக்கிறது, 

சீதையைப் பார்க்க இவை போதாதே, இன்னும் ஏழெட்டுக் கண் கிடைத்தால் நன்றாக இருக்குமே’ என்று தவிக்கிறார்களாம். 

(’இமையா நாட்டம் பெற்றிலம் என்றார், இரு கண்ணால் அமையாது என்றார் வானத்தவர்’)



சொக்கிப்போனேன் .... பட்டரே இன்பத்தை தவணை முறையில் கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டேன் ...

பட்டர் .. மின்கொடிக்கு பிறகு வருகிறேன் நாளையும் தொடர்வோம் 

பறந்து சென்றார் .. பார்த்த விழிகள் பார்த்தபடி நின்றன ...🙌🙌🙌



  👍👍👍👍👍👍👍💐💐💐💐💐👍👍





Comments

ravi said…
ஒரு சின்ன recap

*இதுவரை பார்த்த சௌபாஈ* 🐒

ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |

1
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
2

ராமதூத அதுலித பலதாமா |

3
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா ||

4
மஹாவீர விக்ரம பஜரங்கீ |

5
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||
6
கம்சன வரண விராஜ ஸுவேஶா |

7
கானன கும்டல கும்சித கேஶா ||

8
ஹாதவஜ்ர ஔ த்வஜா விராஜை |

9
காம்தே மூம்ஜ ஜனேவூ ஸாஜை ||

10
ஶம்கர ஸுவன கேஸரீ னன்தன |

11

தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன ||

12

வித்யாவான குணீ அதி சாதுர |

13
ராம காஜ கரிவே கோ ஆதுர ||

14
ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |

15
ராமலகன ஸீதா மன பஸியா ||

16
ravi said…
சுருக்கம்

ஹனுமான் உனக்கு ஜயம் உண்டாகட்டும்
ஞானத்தின் கடலாய் இருப்பவனே

வானரங்களுக்கு எல்லாம் தலைவனாய் இருப்பவனே .. மிகச் சிறந்தவனே

ராமனின் மனம் கவர்ந்தவனே ..
சிறந்த சிவ பக்தி கொண்ட அஞ்சலையின் புத்திரனே வாயுவின் மகனே

வீர நடை போடுபவனே வஜ்ராமாய் மேனியும் காந்தியும் கொண்டவனே நல்ல குணங்கள் மட்டுமே உடையவனே

தங்கம் போன்று ஜொலிப்பவனே தாமரை போன்று மென்மை குணம் கொண்டவனே

காதுகளில் சூரிய குண்டலம் வளைந்த கேசம் கையில் வஜ்ரம் போன்ற கதை அதுனுடன் ஒரு கொடி

வலிமை மிகுந்த தோள்கள் ஜனேவூ எனும் பூணுல் அணிந்தவனே

சிவனின் அம்சமே கேஸரீ எனும் வானரத் தலைவனின் புத்திரனே

கல்வி ஞானம் இவற்றில் கரை கண்டவனே ராமன் காதை கேட்பதில் மிகுந்த ரசனை கொண்டவனே

உனக்கு எங்கள் புத்தாண்டு நமஸ்காரங்கள் .. எதிலும் வெற்றி காண்பவனே ஐயமும் நிறைந்த மனமும் ராமனிடம் பக்தியும் அதிகம் இந்த ஆண்டில் எங்கள் எல்லோருக்கும் அருள்வாய் 🐒🐒🐒
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 45*🐒🐒🐒
ravi said…
*Opening prayer*
योगेन चित्तस्य पदेन वाचां ।
मलं शरीरस्य च वैद्यकेन ॥
योऽपाकरोत्तमं प्रवरं मुनीनां ।
पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि ॥
Yogena Cittasya Padena Vaacaam |
Malam Shariirasya Ca Vaidyakena ||
Yo[a-A]paakaro[a-U]ttamam Pravaram Muniinaam |
Patan.jalim Praan.jalir-Aanato[a-A]smi ||

Meaning:
1: (I bow down to him who purifies the impurities) of the Mind (by removing the Chitta Vrittis) by Yoga, (who purifies the expression of) Speech by Pada (Grammar) ...
2: ... and (who purifies the) impurities of the Body through Vaidya (Medical Science), ...
3: ... He who is an expert in removing (the impurities of the Body, Mind and Speech), to that most excellent of Munis, ...
4: ... (Who is) Patanjali, I bow down with folded hands.
ravi said…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
எல்லோரும் எல்லாமும் பெற்று இனிதே வாழ இறையருளை இறைஞ்சுகின்றேன்.
🙏🌹🪔🙏🌹🪔🙏
ravi said…
🙏🌹🌷🪔🪔🌷🌹🙏
*ஒம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*

77 இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன்
காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே
முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்;
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;
பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்;
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.


78 நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான்
காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான்
காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன்
காண்;அவன் என் கண் உளானே.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏

-அப்பர் தேவாரம் - திரு காளத்தி
ravi said…
நிறை மாத கர்ப்பிணி அவள் ..

முதல் பிரசவம் ..

உடம்பெங்கும் வலி .. உள்ளமெல்லாம் உறுத்தல் ...

பிறக்கும் மழலை தலைமுறை காணுமோ ... ?

இல்லாமை சொல்லி இழிவுப்பட்டு கல்லாமை கற்ற கயவர்
தம்பால் எக்காலத்திலும் செல்லுமோ ..?

சங்கம் கண்டவன் பங்கம் இன்றி வாழ்வானோ ..?

இல்லை அங்கம் புழுதிபட நெய் பூசிய அறிவாளில் குருதி சேர்ப்பானோ ?

தாயவள் பத்து திங்கள் சுமந்தாள்

பசி பட்டினி துணை கொண்டவள் ..

வறுமை எனும் ஆடை தனில் வற்றி போன கண்ணீரை துடைத்தாள் ...

வசந்தம் வந்தது போல் குழந்தை வந்தது ..

குஞ்சித கேசங்கங்கள் குழி விழும் புன்னகை ..

நெற்றியோ அஷ்டமி சந்திரன் ..

கண்களிலே கோடி சூரியர்கள் ...

விண் தாரகைகள் விளையாடினர் மாலையாய் குழந்தையின் நெஞ்சிலே ...

பிறந்தாயோ கண்ணே ..

எஞ்சி இருந்த குருதியாய் பாலாய் தந்தாள் ..

பால் பழம் சுவை காணாதவள் ...

தமிழ் என்று பேர் தந்தாள் .

தரணி எங்கும் பரணி காண ...

மதுரம் சுரக்க
மரகதம் மின்ன தமிழ் வளர்ந்தாள்...

வீழ்வேன் என்றே நினைத்தாயோ .. மறைவேன் என்றே மனப்பால் குடித்தாயோ ...

தமிழ் பேசினாள்

ஜனனியாய் ..
ஜகன் மோகினியாய் ஜகத் காரணியாய் பரிபூரணியாய் ..

ஜகமும் அகமும் மாய் நின்றாள் ...

இன்றே பிறந்தாள் அல்ல என்றோ பிறந்தாள் குமரியாய் என்றும் இருப்பாள் ..

எல்லோரும் அவள் போல் வாழ அருள் செய்வாள் ...

காஞ்சி மகான் கண்ட காமாக்ஷியாய்

கருணை உள்ளம் கொண்ட தாயாய் இன்றும் என்றும் ...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 👍👍👍🥇🥇🥇🙏🙏🙏🌷💐🌸🌺🦚🦚👑👑💥
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 193* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*62 வது திருநாமம்* 🙏🙏🙏 *காமாக்ஷி* 👀
ravi said…
மீதி இரண்டு கைகளில் பாசமும் அங்குசமும் வைத்திருக்கிறாள்.

பாசமானது நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு.

அங்குசம், நாம் துவேஷத்தில் கோபிக்கிறபோது, நம்மைக் குத்தி அடக்குவதற்காக, (ஃபிஸிக்ஸில் பிரபஞ்ச இயக்கங்களின் அடிப்படைத் தத்துவங்களாகச் சொல்கிற கவர்ச்சி (attraction) , விலக்கல் (repulsion) என்பனதான்),
மநுஷ்ய வாழ்வில் முறையே ஆசையும் துவேஷமும் ஆகின்றன.

இவற்றை அடக்கி நம்மை ஸம்ஸாரத்திலிருந்து மீட்கவே, அம்பாள் காமாக்ஷியாகி பாசாங்குசங்களைத் தரித்திருக்கிறாள். ‘ *ராக ஸ்வரூப பாசாட்யா’, ‘க்ரோதாகாராங்குசோஜ்வலா’* என்பதாக லலிதா ஸகஸ்ரநாமத்தில், பாசத்தை ஆசையாகவும், (ராகம்) அங்குசத்தை துவேஷமாகவும் (க்ரோதம்) சொன்னபோது இவற்றை அவை அடக்கி அழிக்கின்றன என்று அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். 🙏🙏🙏
ravi said…
இப்படியாக, நாலு கைகளில் கரும்பு வில், புஷ்ப பாணம், பாசம், அங்குசம், இவற்றை தரித்துக்கொண்டு, நிறமே இல்லாத பிரம்மத்திலிருந்து செக்கச் செவேல் என்ற பரம கருணையின் நிறத்தோடு,

உதய சூரியன் மாதிரி,

மாதுளம்பூ மாதிரி,

குங்குமப்பூ மாதிரி,

செம்பருத்தி மாதிரி, எதுவும் இவள் மாதிரி என்று சொல்ல முடியாதபடி

காமேசுவரியான காமாக்ஷி அநுக்கிரக நிமித்தம் தோன்றியிருக்கிறாள்

இந்த இனிய தமிழ்
புத்தாண்டில் மதுரை மாநகரில் திருமணம் செய்துகொள்ளும் அந்த இனிய இளைய தம்பதிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு என வாழ்த்துவோம் 🥇
ravi said…
ஒரு முறை வேத வியாசர், தமது சீடர்களைப் பார்த்து,

“அஹல்யா த்ரௌபதீ ஸீதா தாரா மந்தோதரீ ததா
பஞ்சகன்யா ஸ்மரேத் நித்யம் மஹாபாதக நாசினீ”

என்ற சுலோகத்தைச் சொன்னார்
ravi said…
பஞ்ச கன்னிகைகள் எனப்படும் அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐந்து பெண்களையும் தினமும் காலையில் தியானித்தால், நமது அனைத்து பாபங்களும் தொலையும் என்பது இதன் பொருளாகும்.

“சீடர்களே! அகல்யா, திரௌபதி, சீதை, தாரை, மண்டோதரி ஆகிய இந்த ஐவருமே தாயின் கருவில் வசிக்காமல் பிறந்தவர்கள்.

ஓர் அழகிய பெண்ணை உருவாக்க விழைந்த பிரம்மதேவர், தமது கற்பனையை எல்லாம் திரட்டி, அகல்யாவை உருவாக்கினார்.
ravi said…
அர்ஜுனனை மணப்பதற்கேற்ற பெண்ணை வேண்டித் துருபத மன்னன் வேள்வி செய்தபோது, அந்த வேள்வித் தீயில் தோன்றினாள் திரௌபதி.

ஜனக மன்னன் தனது யாகசாலையை உழுத போது, கலப்பை நுனியில் சீதா தேவியைக் கண்டெடுத்தார்.

பாற்கடல் கடைந்த போது அதிலிருந்து தாரை தோன்றினாள்.
ravi said…
பார்வதியின் சாபத்தால் தவளையாய்ப் பிறந்த மதுரா என்னும் அப்சரஸ் பெண்ணுக்குப் பரமசிவன் சாப விமோசனம் தந்து, அவளை மண்டோதரி என்னும் அழகிய பெண்ணாக மாற்றினார்!” என்று கூறினார் வேத வியாசர்.

“இவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்புகள் உண்டா?” என்று கேட்டார்கள் சீடர்கள்.

அதற்கு வேத வியாசர், “இந்த ஐவருமே தங்கள் வாழ்வில் பேரிழப்புகளையும் பெருந்துயரங்களையும் சந்தித்த போதும், அவற்றை மனவுறுதியோடு தாண்டி வெற்றி கண்டவர்கள்.
ravi said…
தன் கணவர் கௌதமர் தந்த சாபத்தால் கல்லாக மாறிய போதும், பொறுமையோடும் மனவுறுதியோடும் இருந்த அகல்யாவை, ராமன் தன் திருவடிகளால் தீண்டி மீண்டும் தூய பெண்ணாய் ஆக்கினான்.

கௌரவர்களின் சபையில் பெரும் அவமானத்தைச் சந்தித்த திரௌபதி, மனவுறுதியுடன் துன்பங்களைப் பொறுத்திருந்து, பாரதப் போரின் மூலம் தன் சபதத்தை நிறைவேற்றினாள்.

பத்துமாத காலம் அசோக வனத்தில் அரக்கர்கள் புடைசூழச் சிறையிருந்த போதும், ராமன் வருவான் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்து வெற்றி கண்டாள் சீதை.

வாலியின் மனைவியான தாரை, தன் கணவனை இழந்து தவித்தபோதும், தன் மகனான அங்கதனின் நன்மைக்காகத் துயரத்தைப் பொறுத்துக் கொண்டு உயிர் தரித்திருந்தாள்.
ravi said…
ராவணனின் மனைவியான மண்டோதரி, தனது கணவன், மகன்கள், உறவினர்கள் அனைவரையும் போரில் இழந்த போதும் மனம் தளராதிருந்தாள்

எனவே இந்த ஐவரும் காலையில் தியானிக்கத் தக்கவர்கள்!” என்று கூறினார்.

அப்போது சீடர்கள், “சுவாமி! இந்த ஐவருள் மகாலட்சுமியின் அவதாரமான சீதைக்கு நிகராக மற்ற நால்வரையும் கூறுவது சரியா?

இந்திரனின் ஆசைக்கு இணங்கினாள் அகல்யா.

ஐந்து ஆண்களை மணந்தாள் திரௌபதி.

வாலியின் மரணத்துக்குப் பின் சுக்ரீவனை மணந்தாள் தாரை.

மண்டோதரி நல்லவள் தான் என்றாலும், அவள் பெரும் பாவியான ராவணனின் மனைவியாவாள்.
ravi said…
இந்த நால்வரும் எப்படி சீதைக்குச் சமமானவர்களாக ஆக முடியும்?” என்று வியாசரிடம் கேட்டார்கள்.

அதற்கு வியாசர், “அதற்குத் திருமாலின் திருவருளே காரணம்.

ராமனின் பாதுகையில் உள்ள மண் அகல்யாவின் மீது பட்ட மாத்திரத்தில், அவளுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷங்களும் நீங்கப் பெற்று அவள் தூய்மையாகி விட்டாள்.

திரௌபதி எப்போதும் கண்ணனையே தியானித்துக் கொண்டிருந்த படியால், அவள் எப்போதும் தூய்மையாகவே இருந்தாள்.
ravi said…
ராம தரிசனத்தால் தாரையும் மண்டோதரியும் தூய்மை பெற்றார்கள்.

இவ்வாறு திருமாலின் அருளால் தூய்மை பெற்ற அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி ஆகிய நால்வரும் மகாலட்சுமியின் அவதாரமாகிய சீதைக்கு நிகராகப் போற்றப்படுகிறார்கள்!” என்றார்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோரைச் சீதையின் ஸ்தானத்துக்கு நிகராய் உயர்த்தியது போல், சாதாரண மனிதர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே உயர்ந்த மனிதர்களாகத் திருமால் ஆக்குவதால் ‘சிஷ்டக்ருத்’ (உயர்ந்தவர்களை உருவாக்குபவர்) என்று அழைக்கப்படுகிறார்.

உயர்ந்த மனிதர்களை ‘சிஷ்ட:’ என்று சொல்வார்கள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள்.
ravi said…
சிஷ்டக்ருத்’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 251-வது திருநாமம்.

அகல்யா, திரௌபதி, தாரை, மண்டோதரி போன்றோருக்குத் தூய்மை அளித்ததைப் போல், தோஷமுள்ளவர்களைக் கூடத் தனது சம்பந்தத்தாலே தூய்மையானவர்களாகத் திருமால் ஆக்குவதால், அவர் ‘சுசி:’ என்றழைக்கப்படுகிறார்.

‘சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள்.

தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்
ravi said…
சுசி:’ என்றால் தூய்மை என்று பொருள்.

தானும் தூய்மையாக இருந்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தூய்மையாக்குவதால், திருமால் ‘சுசி:’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 252-வது திருநாமம்

“சிஷ்டக்ருதே நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையத் திருமால் அருள்புரிவார்.
“சுசயே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தூயவர்களாக ஆக்கி அருள்வார்.ஹேதவே நமஹ.....!!!
ravi said…
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த யஜ்ஞமூர்த்தி என்ற பண்டிதர், ராமாநுஜரின் பெருமைகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். எப்படியாவது வாதம் செய்து ராமாநுஜரை வீழ்த்த வேண்டும் என்று அவர் எண்ணினார். காசியிலுள்ள நூலகத்தில் இருந்து பற்பல புத்தகங்களை வண்டியில் கட்டி எடுத்துக் கொண்டு ராமாநுஜர் எழுந்தருளியிருந்த திருவரங்கத்துக்கு வந்தார்.
ravi said…
ராமாநுஜரைச் சந்தித்து, “நான் உங்களோடு வாதம் செய்ய விரும்புகிறேன். நான் தோற்றால் என் சித்தாந்தத்தை விட்டு விட்டு உங்கள் சித்தாந்தத்தைத் தழுவி, உங்களுக்குச் சீடராகி, உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ, “எனக்கு வாதம் செய்வதில் ஆர்வம் இல்லை. ஆனால் நீங்கள் ஆர்வத்தோடு வாதம் செய்ய அழைப்பதால் வாதத்துக்கு வருகிறேன்!” என்றார்.
“நீங்கள் தோற்றால் எனது சித்தாந்தத்துக்கு வந்து விடுவீர்களா?” என்று ராமாநுஜரிடம் கேட்டார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ, “நான் ஒருவன் தோற்றதால் என் சித்தாந்தம் பொய் என்று ஆகாது. எங்கள் குருமார்கள் சொன்னது என்றுமே சரியாகத் தான் இருக்கும். நான் தோற்றால் நான் அவற்றைச் சரியாகப் படிக்கவில்லை என்று பொருள். எனவே நான் தோல்வி
ravi said…
அடைந்தால், இனி சமய நூல்களைப் படிப்பதையும் போதிப்பதையும் நிறுத்திக் கொள்வதே பொருத்தமாக இருக்கும்!” என்று விடையளித்தார்.
வாதம் தொடங்கியது. மகாபாரதப் போர் போல் நடைபெற்ற அந்தக் கடுமையான வாதம் பதினேழு நாட்களுக்குச் சென்று கொண்டே இருந்தது. யார் வெல்வார் என்றே சொல்ல முடியாத அளவுக்கு யஜ்ஞமூர்த்தியும் ராமாநுஜரும் போட்டி போட்டுக் கொண்டு வாதிட்டனர். பதினேழாம் நாள் வாதம் முடியும் சமயத்தில், யஜ்ஞமூர்த்தி ராமாநுஜரிடம் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ராமாநுஜரால் உடனே பதிலளிக்க முடியவில்லை. “நாளை பார்க்கலாம்!” என்று சொல்லிவிட்டுச் சபையிலிருந்து வெளியேறினார்.
ravi said…
தான் வெற்றி பெற்று விட்டதாக எண்ணி, கர்வத்தோடு தனது இருப்பிடம் திரும்பினார் யஜ்ஞமூர்த்தி. ராமாநுஜரோ மனமுடைந்த நிலையில் தமது மடத்தை அடைந்தார்.
மறுநாள் காலை வாதம் நடைபெறும் சபைக்கு ராமாநுஜர் வந்தார். அவர் வரும் தோரணையைப் பார்த்தவாறே, யஜ்ஞமூர்த்தி நேராக ராமாநுஜரின் திருவடிகளில் போய் விழுந்தார். “சுவாமி! அடியேன் தோற்று விட்டேன்! நீங்கள் தான் வென்றீர்! உங்கள் முகத்தைப் பார்த்தவாறே எனது கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைத்து விட்டது! இனி நான் உங்கள் சீடன்! உங்கள் பெயரை என் பெயரோடு இணைத்துக் கொள்கிறேன்!” என்றார்.
ravi said…
அப்போது ராமாநுஜர், “உம்மை என் சீடராக ஏற்கிறேன். ஆனால் அதற்கு முன் ஒரு விஷயத்தை நீங்கள் அறிய வேண்டி உள்ளது. நேற்று மாலை மடத்துக்குச் சென்ற அடியேன், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன்.
ravi said…
என் கனவில் தோன்றிய வரதராஜர், “உமக்கு நல்ல சீடர் ஒருவர் கிடைக்கவே இந்த யஜ்ஞமூர்த்தியை அனுப்பி வைத்துள்ளேன். ஆளவந்தார் அருளிய சித்தி திரயம், நாதமுனிகளின் மாயாவாதக் கண்டனம் ஆகிய நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் நாளை வாதாடி அவரை வென்று வாரும்!” என்று கூறினார்.
ravi said…
அந்தப் பெருமாள் கொடுத்த தைரியத்தால் தான், நேற்று மனமுடைந்து போன அடியேன், இன்று கம்பீரமாகச் சபைக்கு வந்தேன். அந்தக் கோலத்தைப் பார்த்து நீங்களும் எனக்குச் சீடராகி விட்டீர். இந்த வெற்றிக்கு அடியேன் காரணம் அல்லன். காஞ்சி வரதராஜப் பெருமாளே காரணம். எனவே உங்கள் பெயரோடு என் பெயரைச் சேர்த்துக் கொள்வது உங்கள் விருப்பம். ஆனால் நிச்சயமாக வரதராஜப் பெருமாளின் திருநாமத்தைச் சேர்த்துக் கொள்க!” என்று
ravi said…
என்று கூறினார்.
தான் திருந்தி ராமாநுஜரின் சீடராக ஆனதற்கு வரதராஜனின் அருளே காரணம் என உணர்ந்த யஜ்ஞமூர்த்தி, அருளாளப் பெருமாள் என்ற வரதராஜப் பெருமாளின் திருப்பெயரையும்,
ravi said…
எம்பெருமானார் என்ற ராமாநுஜரின் திருப்பெயரையும் இணைத்து, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற பெயருடன் ராமாநுஜரின் சீடராக ஆனார்.
அடியார்கள் விரும்பும் பலன்களைப் பெறுவதற்கும், வாழ்வில் அவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கும் காரணமாக இருப்பவர் திருமால்.
ravi said…
ராமாநுஜர் வாதில் வென்றதற்கும் அவரே காரணம். ராமாநுஜரின் சீடராக ஆகும் பாக்கியம் யஜ்ஞமூர்த்திக்குக் கிடைத்ததற்கும் அவரே காரணம். அதனால் தான் திருமால் ‘ஹேது:’ என்று அழைக்கப்படுகிறார். ‘ஹேது:’ என்றால் பக்தர்கள் விரும்பும் பலன்களைப் பெறக் காரணமாக இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 368-வது திருநாமம்.“ஹேதவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் விரும்பும் அனைத்துப் பலன்களையும் குறைவறப் பெறுவதற்குத் திருமால் அருள்புரிவார்.
ravi said…
🌹🌺 *ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியான(பிரியமான) எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும்.... உன் கதி என்னவாகும்? என்று நினைத்து சிரித்த பசு - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
ravi said…
🌺🌹ஒரு நாள் மாடுகளை வெட்டும் இடத்தில் மாரி என்பவன் அந்த பசுவை வெட்டுவதற்கு வந்தவுடன் அந்தப் பசு அவனை பார்த்து சிரித்தது.*_

🌺அதற்கு, மாரி அந்தப் பசுவைப் பார்த்து - நான் உன்னை வெட்ட வந்துள்ளேன், அது தெரிந்தும் கூட நீ எதற்காக சிரிக்கின்றாய் ? என்று கேட்டான்.*_

🌺அப்பொழுது, அந்தப் பசு , நான் ஒருபோதும் மாமிசத்தை உண்டதில்லை. ஆனாலும் என் மரணம் உன்னால் மிகவும் கோரமாக இருக்கப் போகிறது.
ravi said…

🌺எந்தத் தப்பும் செய்யாமல், யாருக்கும் எத்தகைய ஆபத்தையும் விளைவிக்காத என்னை, நீ கொன்று, என் மாமிசத்தை சாப்பிடும் உன் மரணம் எவ்வளவு கோரமாக இருக்குமோ என்று நினைத்துத் தான் சிரித்தேன் என்று சொன்னது !_

🌺பால் கொடுத்து உங்களை வளர்த்தேன். உங்கள் பிள்ளைளுக்கு பால் கொடுக்கிறேன். ஆனால் நான் சாப்பிடுவது புல்லை மட்டுமே ! பாலிலிருந்து வெண்ணை எடுத்தீர்கள்.

🌺வெண்ணையிலிருந்து நெய்யை எடுத்தீர்கள் ! என்னுடைய சாணத்தினால் வறட்டி செய்து சமையலுக்கு உபயோகித்தீர்கள். அதே போல் என்னுடைய சாணத்தினால் எருவினை தயார் செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தீனீர்கள்
ravi said…

🌺அந்த பணத்தினால் இன்பமான் வாழ்க்கையை வாழ்கிறீர்கள். ஆனால் எனக்கு மட்டும் அழுகிப் போன காய்றிளையும் காய்ந்து போன புல்லையும் தந்தீர்கள்.

🌺என்னுடைய சாணத்தினால் கோபர் கேஸ் தயார் செய்து கொண்டு உங்கள் வீட்டை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தீர்கள். ஆனால் என்னை கசாப்புக் காரனாய் கொல்ல வந்திருக்கிறாய்

🌺என்னுடைய பாலிலிருந்து கிடைத்த சக்தியினால் தான் என்னை கொல்ல உன்னால் ஆயுதத்தை தூக்க முடிந்தது. அந்த ஆயுதத்தை தூக்கும் சக்தி உனக்கு கிடைத்தது என்னால் தான். என் மூலம் நிறைய சம்பாதித்து வீட்டை கட்டிக் கொண்டாய். ஆனால் என்னை மட்டும் ஒரு குடிசையில் வைத்தாய்.
ravi said…

🌺உன்னை பெற்ற தாயை விட மேலாக உனக்கு அண்டையாக இருந்தேன். ஸ்ரீக்ருஷ்ண பகவானிற்கு ப்ரீதியானவள் நான். எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கும் உன் கதி என்னவாகும்? உன் வருங்காலத்தை குறித்து நினைத்து சிரித்தேன் என்று அந்தக் கோமாதா சொன்னது !

🌺அதன் சிரிப்பின் அர்த்தம் உணர்ந்த மாரி கோமாதாவை கொல்லாது ஸ்ரீ கிருஷ்ணனை வணங்கி வேறு தொழில் செய்ய தொடங்கினான்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
சவிதா said…
Super
சீதையின் ஆழகான வர்னனை🙏🏻🙏🏻

ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 30* 🌷🌷🌷🌷🌷
ravi said…
*நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!*

என் மூக்குத் துளைகள் இரண்டையும் நல்வேல் காக்கட்டும்!

*பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!*

பேசும் எனது வாயைப் பெருவேல் காக்கட்டும்!

*முப்பத்திரு பல் முனைவேல் காக்க!*

எனது முப்பத்திரண்டு பற்களையும் முனைவேல் காக்கட்டும்!

*செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!*

சொற்களைச் செப்பும் எனது நாவைச் செவ்வேல் காக்கட்டும்!

*கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!*

எனது இரு கன்னக்கதுப்புகளையும் கதிர்வேல் காக்கட்டும்!

*என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!*

என் இளமையான கழுத்தை இனியவேல் காக்கட்டும்!
💐💐💐
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 193*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 26

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.

कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं

गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।

समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-

नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६

கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்

க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।

ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-

நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
திருவெம்பாவை கடைசி பாட்டுல,

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்

அப்படீன்னு ஏழு வரியோட முடிவுலயும் அந்த பாதங்களை போற்றி போற்றி அவர் சந்தோஷப்படறார்.

அவருக்கு குருந்த மரத்தடியில குருவாக வந்து பரமேஸ்வரன், அந்த பாதங்களை கொடுத்ததுலேருந்து, அவருக்கு உலக பந்தங்கள் எல்லாம் விட்டுப் போயிடுத்து.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 194* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ *க்றுஷ்ணோ* லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
முடியாது என்றால் மீதமுள்ளவர்களின் குடங்களையும் இவன் உடைத்துவிடுவான் என்றுணர்ந்து,
சரி என்று அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.

அன்று முழுவதும் அவர்களோடு கண்ணாமூச்சி விளையாடிய கண்ணன்,
அன்று மாலைதான் அவர்களை வீடு திரும்ப அனுமதித்தான்.

அடுத்த நாள் சந்திரமதி இரண்டு புதிய வெண்கலக் குடங்களை எடுத்துச் சென்றாள்.

இரண்டும் பார்ப்பதற்கு மண் குடங்களைப் போலவே இருக்கும்.
கண்ணன் மட்குடம் என்றெண்ணி உண்டைவில்லால் அடித்து ஏமாந்து போவான் என்று அவள் திட்டம் தீட்டியிருந்தாள்.👍👍
ravi said…
திருமாலை அறியாதார் திருமாலை அறியாதார்” என்று சிலேடையாகச் சொல்லுவதுண்டு. முதலில் சொல்லுவது திருமாலை என்னும் பிரபந்தம். இதை அறியாதவர்கள் திருமால் என்ற கடவுளையே அறியாதார் எனும் பொருள்படும் இந்த வாக்கியம்.

இந்தப் பிரபந்தம் அரங்கனின் நாம சங்கீர்த்தன மகிமையைச் சொல்லுவது. அரங்கனை மகிழ்விக்க எளிமையான வழி அவன் நாமத்தை சொல்லுவதுதான். இந்தக் கலி யுகத்தில் பகவானை அடையச் சிறந்த வழி நாம சங்கீர்த்தனம்தான்.

இதில் 45 பாடல்கள் உள்ளன. இதை இப்படிப் பிரிப்பார்கள்:

1-3 பெருமானை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

4-14: ஆழ்வார் நமக்கு உபதேசம் செய்கிறார்.

15-24: பகவான் நம்மைத் திருத்த எடுத்த முயற்சிகள் பற்றிச் சொல்கிறார்.

25-34: நிறையத் தீமைகள் உள்ள தன்னையே பெருமான் எப்படிக் காக்கிறான்.

35-37: பகவானிடமிருந்து ஆழ்வார் விலகிப் போகிறார்.

38: இதுதான் ரத்தினமான பாடல். த்வய மந்திரத்தைப் பற்றிச் சொல்லும் பாடல்.

39-44: பரம பக்தனின் பெருமைகள் சொல்லப் படுகின்றன.
ravi said…
45: பல ச்ருதிப் பாடல். அதாவது இந்தப் பாசுரங்களைச் சொல்லுவதால் என்ன பயன்கள் கிடைக்கும் என்று சொல்லும் பாடல்.

காவலிற் புலனை வைத்து, கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டு உழிதருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே* மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ! நின் நாமம் கற்ற* ஆவலிப் புடைமை கண்டாய், அரங்க மாநகருளானே! 1

கட் டுப்படாத புலன்களினால் அங்குமிங்கும் அலைந்து திரிந்தும் எமன் மற்றும் அவன் தூதர்களின் தலை மீது கால் வைத்து நடக்கிறோம். ஏன் தெரியுமா? பிரளய காலத்தில் உலகைக் காக்கும் பொருட்டு அதை உண்டு, பின் உமிழ்ந்த அரங்கனாதனின் நாமத்தை நாங்கள் சொல்லுவதினால்தான்.

பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே! என்னும் இச்சுவை தவிர, யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!** 2
ravi said…
I think you are confused and you are not able to reach a definite conclusion. It happens with everyone.

I think the below verse can give you some solace.

Shivaaya Vishnu Roopaaya Shiva Roopaaya Vishanave |
Shivasya Hrudayam Vishnur Vishnuscha Hrudayam Shivaha ||
Yatha Shivamayo Vishnuhu Yevam Vishnu Mayaha Shivaha |
Yathaantharam Na Paschyaami Thatha Me Swasthi Ra Yushi

ABOVE, MANTRA SLOKA’S MEANING AS:-
“Shivaya Vishnu Roopaya”:- “Vishnu’s Roopa/Beauty and his avatar is none other than shiva. In other words”:- As:- “SHIVA IS VISHNU”.
“Shiva Roopaya Vishnuve” :- “The one in Shiva Roopa is none other than vishnu. In other words:- As:- “VISHNU IS SHIVA”.
“Shivscha Hrudayagam Vishnu, vishnuscha hrudayagam shiva – vishnu” :- Resides in “Shiva’s Heart”, and “Shiva resides in Vishnu’s Heart”.
“Yatha Shiva Mayo Vishnuhu, Yevam Vishnu Mayah Shiv – Vishnu” :- “Will be found in the same place you find Shiva, and Shiva can be found in the same place Vishnu is. As is if you find one, you have found the other”.
“Yathantaranna pashyami, thathatme swasthirayushi” – As:- “WE ARE ONE AND THE SAME”.
ravi said…
🌺🌹 "Goddess! I have touched no mother except you in my mind in this life" Simple story to explain ...🌹🌺 --------------------------------------------------- --------
🌺🌺Sita's marriage ended well. The Sita was decorated and sent by the elders to Sri Rama's place. Ramaphron closed his eyes as if asleep.

🌺Sita sat at his feet. Then Rama lovingly said to Sita, "Goddess, I will put my feet up." But Sita Devi bowed her head.

ravi said…
🌺Seeing this, Ramaphron dragged his feet and said, "What goddess! Are we, the princess, hesitant to hold her feet? If not, then do not."

🌺"It's not like that, Swami!"

🌺Perhaps in it, when the Navaratna stones come and stand as a beautiful virgin as soon as their feet are touched. She's going to let me compete. That's why I'm scared. "

🌺Ramar immediately swore to Sita by swearing in the hands of the Goddess that "Goddess! I have touched no mother except you in my mind in this life".

🌺 When Kamban refers to the line of the song "Iru Mather" on the show, everyone thinks that he is saying, "You belong to me alone - I will not touch another Mather secondarily!"

🌺But in fact, Mahavishnu has three wives namely Sri Devi, Bhudevi and Neela Devi. When she incarnated as Ramaphrana in the world, Sri Devi was born as Sita and married him.

🌺But, Bhudevi and Neela Devi stayed in Vaikuntha. What this means is that Ramaphron said, "I will not even think of Bhudevi and Neeladevi, my goddesses in Vaikuntha, after Ramaphrana came to earth in this life."

🌺What is the thing we need to look out for in this. It's not a big deal to say that he does not think of other women who have not achieved him through marriage.

🌺But, who had attained himself as a wife, who belonged to him
Sri Rama's pride and specialty are all contained in his statement that he will not even touch the two goddesses with his mind.🌹🌺 --------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
🌹🌺 " *தேவி ! இந்த ஜன்மத்தில் உன்னைத் தவிர எந்த மாதரையும் மனதாலும் கூட தீண்டேன் " என்ற ஸ்ரீராமர்... விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹சீதை கல்யாணம் நல்ல படியாக முடிந்தது. சீதையை அலங்காரம் செய்து ஸ்ரீ ராமனின் இருப்பிடத்திற்கு பெரியவர்கள் அனுப்பி வைத்தனர். இராமபிரான் உறங்குவது போல கண்களை மூடிக் கொண்டு இருந்தார்.
ravi said…

🌺சீதை அவரது காலடியில் அமர்ந்தாள். அப்பொழுது ராமர் சீதையிடம் "தேவி, என் பாதங்களைப் பிடுத்துவிடேன் " என்று அன்புடன் கூறினார். ஆனால், சீதா தேவி தலையைக் குனிந்த படி இருந்தாள்.

🌺இதனைக் கண்ட ராமபிரான், " என்ன தேவி! அரச குமாரியான நாம் இவரது பாதங்களைப் பிடிப்பதா என்று தயங்குகிறாயா? அப்படி எனில் வேண்டாம்" என்று கூறி தனது கால்களை இழுத்துக் கொண்டார்.
ravi said…

🌺அதற்கு சீதை " அப்படியல்ல சுவாமி! ஒரு கதை கேள்விப்பட்டேன். தாங்கள் மிதிலை வரும் வழியில் ஒரு கல்லின் மீது தங்களது பாதம் பட, அழகான பெண் ஒருத்தி வந்து நின்று வணங்கினாளாம். இன்று, எனக்கு அலங்காரம் செய்யும் போது நவரத்தினக் கற்களை கொண்ட மோதிரத்தைப் பூட்டியுள்ளனர்.
ravi said…

🌺ஒருவேளை அதில் , தங்கள் பாதம் பட்டவுடன் நவரத்தினக் கற்கள் அழகிய கன்னியாக உருப்பெற்று வந்து நின்றுவிட்டால். அவள் எனக்குப் போட்டியாக இருந்து விடுவாளே. அதனால் தான் அஞ்சுகிறேன் " என சீதா பிராட்டி குறும்புடன் சொல்லிச் சிரித்தார்.
ravi said…
🌺ஒருவேளை அதில் , தங்கள் பாதம் பட்டவுடன் நவரத்தினக் கற்கள் அழகிய கன்னியாக உருப்பெற்று வந்து நின்றுவிட்டால். அவள் எனக்குப் போட்டியாக இருந்து விடுவாளே. அதனால் தான் அஞ்சுகிறேன் " என சீதா பிராட்டி குறும்புடன் சொல்லிச் சிரித்தார்.

🌺உடனே ராமர் சீதையிடம் " தேவி ! இந்த ஜன்மத்தில் உன்னைத் தவிர எந்த மாதரையும் மனதாலும் கூட தீண்டேன் " என்று தேவியின் கைகளில் சத்தியம் செய்து உறுதி மொழி கொடுத்தார்.
ravi said…

🌺கம்பன் இந்நிகழ்ச்சியில் " இரு மாதர்" என்று வரும் பாடல் வரிக்குப் பொருள் கூறும் போது," நீ ஒருத்தி தான் எனக்கு உரியவள் - வேறு மாதரை இரண்டாவதாக மனதாலும் தீண்ட மாட்டேன்! " என்று கூறுவதாகத் தான் எல்லோரும் கருதுகின்றனர்.

🌺ஆனால் உண்மையில், மகாவிஷ்ணுவுக்கு ஸ்ரீ தேவி, பூதேவி, நீளாதேவி என்று மூன்று மனைவிமார் உண்டு. பூவுலகில் இராமபிரானாக அவதரித்த போது , ஸ்ரீ தேவி சீதையாக ஜனனம் எடுத்து அவரை மணந்து கொண்டாள்.
ravi said…
🌺ஆனால், பூதேவியும் , நீளா தேவியும் வைகுண்டத்திலேயே தங்கிவிட்டார்கள் . "இராமபிரானாக இந்த ஜென்மத்தில் பூமிக்கு வந்து விட்ட பிறகு வைகுந்தத்தில் இருக்கும் எனக்குரிய தேவியரான பூதேவியையும் நீலாதேவியையும் கூட நான் மனதாலும் நினைக்க மாட்டேன்" என்று ராமபிரான் கூறியதாகத் தான் இதற்கு பொருள் கூற வேண்டும்.
ravi said…

🌺இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் யாதெனில். திருமணம் மூலம் தன்னை அடைந்திராத வேறு பெண்களைத் தான் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று கூறுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

🌺ஆனால், தன்னை மனைவியாக அடைந்திருந்த , தனக்கு உரிமையானவர்களான
இரு தேவியரையும் கூட தான் மனத்தாலும் , தீண்ட மாட்டேன் என்று கூறியதில் தான் ஸ்ரீ ராமரின் பெருமை, சிறப்பு எல்லாம் அடங்கியுள்ளது.🌹🌺
ravi said…
*🌹GOOD MORNING🌹*

*Life isn't about finding yourself. Life is about creating yourself.*

🌄🌅🌄🌅🌄🌅🌄🌅

*EGO is the only requirement to destroy any relationship, so be the bigger person skip the 'E' and let it 'GO'.*

🌄🌅🌄🌅🌄🌅🌄🌅

*Don't worry about those who talk behind your back, they're behind you for a reason.*
🌄🙏🌄🙏🌄🙏🌄🙏
ravi said…
கண்ணனும் நீயே காமேஸ்வரனும் நீயே கருணா மூர்த்தியாய் நீ இருக்க கவலைகள் பஞ்சாய் பறப்பதில் அதிசயம் என்ன ??
ravi said…
பாண்டவர் அஞ்சினர் பரமன் அருகில் இருந்தும் .. கீதை சொன்னவனும் அதை கேட்டவனுமே வழி தெரியாமல் திகைத்தனர்

கங்கை மைந்தன் மழை எனப் பொழிந்தான் அம்பை ..

சில பல அம்புகள் நெருப்பை கக்கின சில விஷத்தை கொட்டின சில மழைதனை பொழிந்தன...

பாண்டவர் அழித்தனர் பரமனுடன் என்றே அகம் மகிழ்ந்தான் துரியோதனன் ..

பீஷ்மர் விடுத்தார் கண்ணனிடம் ஒரு சவால் .. சவாலை சமாளிக்க முடியுமா கண்ணனால்??

போரில் உன் பங்கு என்ன கண்ணா வேறு தேரோட்டி தானோ .. ??

குதிரை ஓட்ட ஒரு கும்பன் போதுமே ... நான் உன் பக்தன் ... உனை ஆயுதம் எடுக்க வைப்பேன் இல்லை எனில் இன்றே உயிர் மாய்ப்பேன்..

கண்ணன் மீதே அம்பை எய்தான் .. முகம் எங்கும் காயங்கள் ...

வெளி வரும் குருதியும் அவன் கருமை தனை சுமந்தே வந்தது யமுனை போல்...

தாங்கவில்லை பார்த்திபனால் ... கண்ணா பொறுத்தது போதும் .. தாத்தாவிற்கு அறிவு மழுங்கி போனது அறமும் விலகி போனது ...

தேர் சக்கரம் கையில் எடுத்தான் கமலக்கண்ணன் .. பீஷ்மர் பக்கம் ஓடினான்

வா கிருஷ்ணா வா .. இது இது இதைத்தான் வேண்டினேன் ...

உன் கரங்கள் என் உயிர் கொய்யும் என்றால் வைகுண்டம் அதுவே அன்றோ ...

கண்ணன் கொல்லாமல் திரும்பி சென்றான் ... அர்ச்சுனன் கிண்டல் செய்தான் ..

கண்ணா நான் தான் பேடி என்று நினைத்தேன் தவறு அது நீ அன்றோ .. வளையல் தருகிறேன் மாட்டிக்கொள் என்றான் ..

சிரித்தான் கண்ணன் .. கீதை சொன்னேன் இவனுக்கு

இன்னும் பேதை போல் பிதற்றுகின்றான் ..

போதை இன்னும் தெரியவில்லை ..
காய்களை நகர்த்துபவன் நான் என்றே இன்னும் புரியவில்லை .

பீஷ்மர் என் பக்தன் என்றே யாவரும் கேட்க சொன்னான் .. ஆயுதம் எடுக்கா விடில் அணைந்திருக்கும் பீஷ்மர் எனும் பேரொளி ...

ஆயதம் எடுத்தேன் என் பக்தனை காக்க என் மீது விழுந்த அடிகள் பீஷ்மர் படைத்த மலர்கள் ...

நன்றி கண்களில் கொப்பளிக்க நின்றார் பீஷ்மர்.. நடந்தது ஏதும் அறியா அர்ச்சுனன் கீதையை உணராமல் போனான்

வல்லிக்கேணியில் இன்றும் வடுக்களோடு சிரிக்கிறான் .. பீஷ்மர் தந்த பசும் நெய்யை தன் மீசையில் தடவியே...

மீசை இல்லா மகானும் ஆசையில்லா துறவியும் ஆகி ஆன்மீகம் வீசை என்ன விலை என்போர்க்கு கீதையாய் பாடம் சொல்கிறானே ...

ஸ்வாகாதம் சங்கரா சரணாகதம் சங்கரா

🌸🌸🌸🙏🙏🙏👍👍
Jingle US said…
Read your அபிராமி       பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 67 பதிவு 56
- very deep thoughts athimber. Never knew your this deep knowledge for Thamizh. The way you are connecting all the thoughts and summarizing quoting thiruvalluvar. I will slowly go over all the posts and will message you.
Bhavani will linger with me for few more days.
ஆக்கலும் அளித்தல் காத்தல் அருள் நிறை இறைவன் ஷக்தி
அன்னவன் தோளில் நீயே அனைத்துமாய் விளங்கும் ஷத்தி
ravi said…
My response

At the outset my sincere thanks in taking interest at this young age in going through the divine posts the subject of less takers .

No compulsion to read but I feel it will act as a medicine to cure our stress and pressure in life .

Take your own time .. i dedicate this blog to sri lalitha whose beauty and grace cannot be explained in words ..

I wish HER full blessings to you and your family . Met your mother in Ramji 's uncle sadabishegam .

She is ever looking smile and contended despite the recent mishap that rocked your sister 's life . Her smile and free talk are really god 's gift .

Pls spread the blog so that benefits reach people across ..

Due to HER grace all my posts are my own so no worry on people commenting as cut n paste .

Good Readers 'population is becoming very thin hence I'm not getting a space to pen more . Ramajibhavan is flooded with posts so hardly anybody is able to view posts like this ..

Thank u once again . Happy to see u reading Tamil and appreciate the contents .

Pls keep sending your feedback / queries and areas to be addressed .

Wishing you all the best Jingle 🌸🌸💐💐💐
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 194* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*63 வது திருநாமம்*
ravi said…
*63 कामदायिनी -காமதாயிநீ --*
ravi said…
வேண்டியதை அருள்பவள் என்ற இந்த நாமம் அழகானது.

காம என்பது காமேஸ்வரனை குறிக்கும் சொல்.

*தாயினி* என்றால் அருள்பவள்.

சக்தி சிவனின் சக்தியையும் சேர்த்து நமக்கு அருள்பவள்.

அவளே சிவை தானே.

காமதாயினிக்கு காமேஸ்வரனையே உடையவள் என்றும் பொருள் உண்டு.🌸🌸🌸
ravi said…
இச்சைகளை பூர்த்தி செய்பவள்💐💐💐
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 194* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 45👍👍👍
ravi said…
லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்

த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்

விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: 46
ravi said…
கூரெயிற்றின் அகஇதழுங்

கொண்கர்விழி வரிவண்டும்

குழற்படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்

பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரல்

முகையவிழப்
பிறழுமுன் தருணமுக கமல மென்றால்

ஒறியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது
மற்றோர்-இயற்கை

செயற்கைமணம் போதுசெய்யும்
நீரியற்கை

மலர்க்கமல மிதற்குடைந்து பங்கமுறல்
நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே🌸🌸🌸
ravi said…
லாவண்யமான வெண்ணிலாவுடன் ப்ரகாசிக்கும் உனது நெற்றியானது கிரீடத்திலிருக்கும் அர்த்த சந்திரனைத் தவிர்த்து வேறான அர்த்த சந்திரன் போல தோன்றுகிறது.

ஏனென்றால் மேலும் கீழுமாக எதிரெதிர் திசையில் வளைவுகளையுடைய இரு நிலாக்களையும் வளைவுகள் பொருந்தும்படியாகச் சேர்த்து வைத்தால் அம்ருதம் நிறைந்த பூர்ண சந்திரன் போன்ற தோற்றமாம்.

இது தான் " *அஷ்டமீசந்த்ர பிப்ராஜத் அலிகஸ்தல சோபிதா"* என்னும் நாமம்.💐💐💐
Moorthi said…
Nice and elaborate meaningful message 👏👏👏 Much appreciated 👍
ravi said…
Good leaders don’t force people to follow them. They just invite them on a journey.

We don't always have to defend ourselves with words. Sometimes our silence tells people that, we have better thoughts and a better mind.

Always be ready for everything in life, Because life is too short And We don't have time to practice for everything before it happens.

You are a good person when circumstances suit your temper but you become an excellent person when you make your temper suitable to any circumstances.

Whenever you are in a condition to help someone, just do it and be glad because God is answering someone's prayers through you.

Don't make life too stressful..

Always find time to laugh. It may not add years to your life, But it will surely add more life to your years.
ravi said…
ACCURATE PREDICTION

Why Diwali comes only 21 days after Dussehra every year?

Have you ever thought about this?

If you don't believe me, look at the calendar.


Valmiki Rishi has written in Ramayana that it took 504 hours for Lord Shri Ram to walk his entire army from Sri Lanka to Ayodhya on foot.


Now if we divide 504 hours by 24 hours then the answer is 21 i.e. twenty one days !!!

I was also surprised. Thinking of what has been told, I searched on Google Map out of curiosity.

It shows that the walking distance from Sri Lanka to Ayodhya is 3145 kms and the time taken is 504 hours.

Isn't it surprising? At present, Google Maps is considered completely reliable.

But we Indians have been celebrating Dussehra and Deepawali since Tretayug, and have been celebrating it according to tradition. If you do not believe in this math of time, then you can search Google and see.

The sage Valmiki had composed the Ramayana even before the birth of Shri Ram. How accurate was his prediction and description of what would happen next


How great is our Sanatan Hindu culture.
Kousalya said…
மிகவும் அருமை.....கண்ணனோ காமேஷ்வரனோ... மொத்தத்தில் காருண்ய சாகரம்...அவனின் கருணா கடாக்ஷத்தில் கரை சேருவோம் பதம் பணிந்தே...🙏🙏
ravi said…
இன்று சுபமூகர்த்த நாள் 👍👍👍
ravi said…
*அனுமன் சாலீஸா .. ஒரு ஆழமான புரிதல் 46*🐒🐒🐒
ravi said…
ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா
விகட ரூபதரி லம்க ஜராவா (9)

பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே (10)
ravi said…
*ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹி திகாவா*

*விகட ரூபதரி லம்க ஜராவா (9)*
ravi said…
சூக்ஷ்ம என்றால் சிறிய

ஸியஹி என்றால் சீதை

சீதையை பார்க்க செல்லும் போது மிகச் சிறிய ரூபம் கொண்டார் .. அதே அனுமன் லங்கைதனை எரிக்க மிகப்பெரிய உருவம் கொண்டார்
ravi said…
*பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே*

*ராமசம்த்ர கே காஜ ஸம்வாரே (10)*
ravi said…
அசுரர்களை அழிக்கும் போது பெரிய உருவம் எடுத்தார் ... தன்னை தடுத்த மகோதரன் ... ராவணனின் பிள்ளைகளை மீண்டும் எழுந்து வராத படி மண்ணுக்குள் தள்ளினார் ..

இதையெல்லாம் ராம காரியத்திற்காக செய்யவேண்டிய சூழ்நிலை .

தன் வலிமையை பிறர் புகழ வேண்டும் என்று சற்றும் எண்ணாதவர் அனுமன் 💐💐🐒🐒
ravi said…
Loved this poem-
Poet not known:
Beautiful Message -
❤️❤️

Sometimes,
I feel I want to go back in time...

Not to change things, but to feel a couple of things twice..

Sometimes,
I wish I was a Baby for a while...

Not to be walked in the pram but to see my Mother's smile

Some times,
I wish I could go back to school...

Not to become a child but to spend more time with those friends, I never met after school..

Sometimes,
I wish I could be back in college...

Not to be a rebel but to really understand what I studied

Sometimes,
I wish I was a Fresher at my work...

Not to do less work but to recall the joy of the first pay cheque

Sometimes,
I wish I could marry again all over...

Not to change the partner but to 'feel' the ceremony better

Sometimes,
I wish my kids were younger....

Not because they grew fast but to play with them a bit more

Sometimes,
I feel I still had some more time to live...

Not to have a longer life but to know what I could give to others

Since the times that are gone can never come back,

let's enjoy the moments as we live them from now on,
to the fullest..

Let's Celebrate our Life - Every Moment, Every Day!!🎉🎊🎈💃🏿
ravi said…
பூலோக வைகுந்தம்

“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலைபார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.
ravi said…
அது சரி,உனக்கு பிடுங்கல்னு யாரும் இல்லை"“அதனாலே இல்லையா, கடைசி காலத்துலேயாவது அந்த ரங்கன் கால்லே விழுவோமே.“ எங்கும் சுத்தி ரங்கனச் சேர்” அப்பிடின்னு சொல்வாங்களே , அதனாலஸ்ரீரங்கத்திலே போய் செட்டில் ஆகலாம்னுஇருக்கேன்"மற்றொரு வீட்டில்,
“எங்க இப்பிடி பிடிவாதம்பிடிக்கிறீங்க? நமக்குத் தான் மேலூர் ரோட்லே வீடு இருக்கிறபோது அத வித்துட்டு சித்திரை வீதிலே போய் வீடு வாங்கனுன்னு சொல்றிங்க”
ravi said…
உனக்கு என்ன தெரியும், பெருமாள் எப்பப் பார்த்தாலும் மேலூர் ரோடுக்கு வருவாரா? சித்திரை வீதின்னாவாசல்லேயே பெருமாள் புறப்பாடு பாக்கலாமில்லியா?”

இன்றொரு வீட்டில், “நல்ல வேலை கோவிலுக்குள்ளேயே வீடு கட்டஇன்னும் அனுமதி தரல்ல, இல்லைன்னா அங்கதான் வீடு வாங்கன்னு சொல்லி என்னை ஹிம்சை பண்ணி இருப்பே, நல்ல பொண்ணு நீ" மனைவியைக் கடிந்து கொள்கிறான் கணவன்.
ravi said…
“அப்பா. உனக்கும்அம்மாவுக்கும் ஸ்ரீரங்கத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீடு பதிவு செய்துள்ளேன், சரிதானே", மகன் அமெரிக்காவில் இருந்து அப்பா, அம்மாவை கடைசி காலத்துக்கு மகிழ்ச்சியுடன் இருக்க, skypeஇல் கூறுகிறான். அவன் கவலை,“எங்கேயாவது அப்பா தன்னை அமெரிக்காவை விட்டு உடன்
புறப்பட்டு வந்து விடு என்றுசொல்லிவிடுவாரோ? “என்ன இதெல்லாம்? இதெல்லாம் தினந்தோறும் பல இடங்களில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி நடக்கும்உரையாடல்கள்தான்.எல்லோருக்கும் ஆசை,
ravi said…
தன்னுடைய வாழ்நாளில் கொஞ்ச நாட்களாவது ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கனாதனைத் தரிசிக்க வேண்டும் என்பது. ஸ்ரீரங்கத்து வீதிகளில், அது சித்திரை வீதியாகட்டும் அல்லது உத்தர வீதியாகட்டும் பல நாட்கள் பிரதக்ஷணம் வர வேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை. இங்கு ஆசார்யர்கள் செய்யும்உபன்யாசங்களில்கலந்துகொள்ளவேண்டும் என்பது எத்தனை பேருக்கு ஆசை!நமக்கு மட்டுமா அந்த ஆசை? எத்தனைஆழ்வார்களை ஈர்த்துள்ளது? எத்தனை ஆசார்யர்க்ளை ஈர்த்துள்ளது?
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.என்ன இல்லைஸ்ரீரங்கத்தில்ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம்.
ravi said…
வைகுந்தம் அடைவது மன்னவர் விதி'என்று ஆழ்வார் அருளியபடி எல்லோருக்கும் கடைசி ஆசை வைகுந்தம் அடையவேண்டும். வைகுந்தம் கிடைக்குமோ கிடைக்காதோ (ஏன் என்று நமக்கே தெரியும்),ஸ்ரீரங்கம் பூலோக வைகுந்தம். வைகுந்த அனுபவம் இங்கேயே கிடைக்கிறது என்றால் யாருக்குத் தான் ஆசை இருக்காது?
ravi said…
ஆதிசங்கரர் தன்னுடைய ரெங்கநாத அஷ்டகத்தில்
"”இதம் ஹி ரங்கம் த்யஜதா மிஹாங்கம்
புனர் ந சாங்கம் யதி சாங்கமேதி!
பாணெள ரதாங்கம் சரணேsம்பு காங்கம்
யானே விஹங்கம் ஸயநே புஜங்கம்!!”
என்று ஸ்ரீரங்கத்தில் வாழ ஆசைபடுகிறார் என்றால் பாருங்கள்.ஆசைப்பட்டது எல்லாத்தையும் கொடுக்கும் இடம் ஸ்ரீரங்கம்.இங்கு உடலை நீத்தவன் பிறப்பதில்லை என்கிறார்ஆதிசங்கரர்..
ravi said…
அப்படி என்னையா ஸ்ரீரங்கத்தில் இருக்கு? ன்னு நீங்க கேட்கிறது எனக்குத் தெரியுது.என்ன இல்லைஸ்ரீரங்கத்தில்!ஸ்ரீரங்கம் 108 திவ்வியஸ்தலங்களில் முதலாவது ஆகும்.
ravi said…
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த வைஷ்ணவ ஆலயங்களை திவ்விய ஸ்தலங்கள் என்பர். பதின்மர் பாடிய பெருமாள் அரங்கன்.ஆராதஅருளமுதம் பொதிந்த கோயில்அம்புயத்தோன் அயோத்தி மன்னற் களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுத கோயில்
துணையான வீடணற்குத் துணையாசேராத பயனல்லாஞ் சேர்க்குங் கோயில்
செழுமறையின் முதலெழுத்து சேர்ந்த கோயில்தீராதவினையனைத்தும்திர்க்கும்கோயில்திருவரங்க மெனத்திகழுங்கோயில் தானே!என்று தன்னுடைய அதிகார ஸங்க்ரஹம் என்ற நூலில் ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஸ்வாமி தேசிகன் குறிப்பிடுகிறார்.
.
ravi said…
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரம் மொத்தம் எட்டு.,அதாவது தானாகவே உண்டான ஷேத்ரங்கள் இவை.
தெற்கேவானமாமலை, தொண்டை நாட்டிலேஸ்ரீமுஷ்ணம், தமிழ் நாட்டின் எல்லையில் திருவேங்கடம், ஸ்ரீரங்கம், வடநாட்டில் பதரிகாசரமம், சாலக்ராமம், ராஜஸ்தானில் புஷ்கரம், நைமிசராண்யம், என்பவை தான் அவை.வானமாமலையில் எண்ணெய் விசேஷம். அங்கு திருமடப்பள்ளியில் வரமிளகாய் பயன்படுத்துவதில்லையாம்.பகவான் காடு ரூபமாக
உள்ளார் நைமிசாரண்யத்தில். தண்ணிர் ரூபத்தில் உள்ளார் புஷ்கரத்தில். ஸ்ரீமுஷ்ணத்தில் மூலஸ்தானத்தில் வராஹமுர்த்தி தனியே கோயில் கொண்டுள்ளார்.
ravi said…
இந்த ஸ்வயம்வ்யக்த ஷேத்ரங்களில், ஸ்ரீரங்கம் ஒன்றில் தான் பெருமாள் சயனக் கோலத்தில் உள்ளார். மற்ற இடங்களில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார். ஆக ஸ்ரீரங்கத்திற்கு விசேஷம் சயனக் கோலம்,.ஆழ்வார்கள் பனிரெண்டு பேரும் எங்கே பிறந்தார்கள் பாருங்கள்.பொய்கை ஆழ்வார் காஞ்சியிலும், ,பூதத்தாழ்வார் மயிலாபூரிலும் பூதத்தாழ்வார் திருக்கடல்மல்லை என்று ஆழ்வார்கள் எல்லோரும் வெவ்வேறு இடத்தில் பிறந்து இருந்தாலும் சேர்ந்த இடம்
ஸ்ரீரங்கம்.
ravi said…
எப்படிங்கிரிங்களா?
கணிதத்தில் சைபர் தெரியமா? அதுக்குத் தனியாளா என்ன மதிப்பு? ஒன்னும் கிடையாது.அதை எதாவது எண்ணுக்கு பின்னாலே போடுங்க, என்ன ஆறது பாருங்க, மதிப்பு கூடுதில்ல.
அந்தக் காலத்திலே கோள்களைப் பத்தி,
பாரதத்திலே எவ்வளவு ஆராய்ச்சி செய்து இருக்காங்க, ஆனா ஏதோ தாங்கத்தான் கண்டுபிடிச்சது போல சொல்லிக்கொண்டு இருக்காங்களே,
ravi said…
பழி ஓரிடம், பாபம் ஓரிடம்" பழமொழி போல ஆழ்வார்கள் வெவ்வேறு இடத்திலேபிறந்தாலும்“அடியவர்கள் வாழ, அரங்கநகர் வாழ" என்றுஅரங்கனைத்தான்வாழ்த்தினார்கள்.அப்படிப் பெருமை பெற்றது ஸ்ரீரங்கம்.
இது மட்டுமா?
“இவ்வளவு நேரம் ஆயிடுச்சு, சயனம் கொள்ளுகிற நேரத்திலே எங்க கிளம்பிட்டிங்க” என்று அடியவர் திருமாலிருஜ் சோலை பெருமாளைப் பார்த்துக் கேட்கிறார்.
“இரும் அடியவரே, நாளைக் காலை தரிசனம் கொடுப்போம், பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்கிறோம்" ,என்று சொல்லிவிட்டு கிளம்பினார் அழகார் மலை அழகன்.
அவர் மட்டுமா, திருவேங்கடத்தான்,
ravi said…
“எப்போது பொது சேவை முடியும்'
என்று அர்ச்சகரைப் பார்த்துக் கேட்கிறார்.
“ஏன் ஸ்வாமி" இது அர்ச்சகர்.“பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்” என்கிறார்,பெருமாள்.
ravi said…
விக்கித்து நிக்கிறார் அர்ச்சகர். இப்படி எல்லா திவ்விய தேசத்து பெருமாளும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்களாம். நான்சொல்லவில்லை ஐயா, நாச்சியார் தன் நாச்சியார் திருமொழியில், “தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளுமிடத்தடி கொட்ட கொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. என்று எல்லா திவ்விய தேசத்து
எம்பெருமான்களும் பள்ளி கொள்ள ஸ்ரீரங்கம் வருகிறார்கள் என்று பாசுரத்தில் கூறுகிறார்
எத்தனை மகிமை ரங்கநாதனுக்கு!!
அப்படிப்பட்ட ஸ்ரீரஙக்த்தை எங்கிருந்தாலும் மனதளவில் சேவிக்கலாம் .
ravi said…
🛕நோய் தீர்க்கும் தலங்கள்🛕

🌺நாகர்கோவில் அருகே உள்ள மண்டைக்காட்டில் பகவதி அம்மன் அருள்புரிகிறாள்.தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சரிசிமாவு,சர்க்கரை,வெல்லம் சேர்த்து மண்டையப்பம் எனும் பிரசாதத்தை செய்து இந்த அம்மனுக்குப் படைக்க தீரா தலை வலியும் நீங்கிவிடும்.
ravi said…
💐சிவகங்கை நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகி கண் சம்பந்தமான நோய்களைத் தீர்த்தருள்கிறாள்.

🌷கோவை பெருமாநல்லூரில் கோவில் கொண்டுள்ள கொண்டத்துக்காளியம்மன்,சருமத்தில் ஏற்படும் நோய்களை நீக்கியருள்கிறாள்.

🌹திருவிடைமருதூரில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்பிகை,குழந்தை பிறப்பில் உள்ள தடைகளை நீக்கி,குழந்தை வரம் தருகிறாள்.

🥀சென்னை- திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள எல்லம்மனுக்கு சர்க்கரைக் காப்பு செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ravi said…
🌻திருச்சி- பெரம்பலூர்,சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வமாக இருந்து காக்கிறாள்.உடலின் எந்த பாகத்தில் நோய் ஏற்பட்டாலும் இந்த அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டு,ஆலயத்திலேயே மாவிடித்து,மாவிளக்கேற்றி,ஆலய பிராகாரத்தில் படுத்து அந்தந்த உடல் பாகத்தில் மாவிளக்கை வைத்து வேண்டிக்கொள்ள அந்த நோய்கள் மாயமாய் மறைந்து விடும்.

🌸கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் உள்ளது.செய்வினை,பில்லி சூனியம் போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இத்தல தேவியை தரிசித்து நலம் பெறுகிறார்கள்.
ravi said…
🏵️ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ் கோடியில் நம்புநாயகி அம்மன் திருக்கோவில் கொண்டுள்ளாள்.இந்த ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள திருக்குள தீர்த்தங்கள் பல்வேறு நோய்களைப் போக்கும் தன்மை கொண்டவை.எனவே,சர்வரோக நிவாரண தீர்த்தங்கள் என அழைக்கப்படுகிறது.அம்பிகையே தீர்த்தங்கள் வடிவில் அருள்கிறாள்.

🌼சென்னை- மயிலாப்பூர் கச்சேரி சாலை பகுதியில் உள்ள முண்டகக் கண்ணியம்மன்,கண்நோய்களை நீக்குவதில் நிகரற்றவளாக விளங்குகிறாள்.

🪴திண்டுக்கல்- நத்தத்தில் உள்ள மாரியம்மன் உடல் ரீதியான எல்லா பிணிகளையும் தீர்த்தருள் புரிகிறாள்.அன்னையின் அருளால் பலன் பெற்றவர்கள் கரும்புத் தொட்டில் கட்டுதல்,தீச்சட்டி எடுத்தல் என நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
ravi said…

🍂நவ பாஷாணத்தால் ஆன அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை அம்மனை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறிச்சியில் தரிசிக்கலாம்.தீராத நோய்களையும் இந்த தாய் தீர்த்தருள்கிறாள்.

🌺நாமக்கல்- ராசிபுரத்தில் உள்ள நித்யசுமங்கலி மாரியம்மனுக்கு கண் மலர் வாங்கி சாத்தினால் கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.

💐விஜய ஜெய சாமுண்டீஸ்வரி எனும் பெயரில் தவக்கோல அம்பிகையை கல்பாக்கம்,புதுப்பட்டினத்தில் தரிசிக்கலாம்.இந்த அம்பிகை மன அமைதி தந்து காப்பவள்.

🌷கோயமுத்தூரில் அருளாட்சி புரிந்து வரும் கோனியம்மன் தீராத நோய்களை தீர்த்தருள்பவள் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
ravi said…
🥀தஞ்சாவூர், வல்லத்தில் ஏகெளரி அம்மன் அருள்கிறாள்.இந்த அம்பிகை தன் பக்தைகளின் கணவர்களை நோய்களில் இருந்து காப்பதில் வல்லவள்.அதனால் பயன் பெற்ற பக்தைகள் ஆலயத்திற்கு எருமைக்கன்றை தானமாக வழங்குகின்றனர்.மேலும் குழந்தைப் பேற்றில் தடை உள்ள பெண்கள் இந்த அம்பிகையின் சந்நதியில் தரப்படும் எலுமிச்சை சாற்றை அருந்த அன்னையின் அருளால் அவர்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறது.
ravi said…

🏵️சென்னை- மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலை சந்திப்பில் கோவில் கொண்டுள்ள கடும்பாடிச் சின்னம்மனிடம் உப்பு மிளகு வாங்கி செலுத்துவதாக பிரார்த்தனை செய்தால் சரும நோய்கள் நீங்குகின்றன.அம்மை நோய் நீங்க ஆலயத்தின் கருவறையில் வழங்கப்படும் சங்கு தீர்த்தம் அருமருந்தாய் அமைகிறது.

🌹திருக்கருகாவூரில் அருளும் கர்ப்பரட்சாம்பிகை கர்ப்பப்பை சம்பந்தமான பிணிகளை நீக்கியருள்கிறாள்.

🌻திருவண்ணாமலை சந்தவாசலில் கங்கையம்மன் அருள்புரிகிறாள்.இந்த அம்பிகைக்கு,அபிஷேகம் செய்த நீர் தீராத நோய்களை தீர்க்கிறது.

🌸தூத்துக்குடி வசவப்பபுரத்தில் அலங்காரச் செல்வி அம்மன் அருள்புரிகிறாள்.கனவுத் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அன்னையை தரிசித்து,அதிலிருந்து விடுபடுகின்றனர்.
ravi said…
🥀மூலஸ்தானத்தில் மாரி,காளி என இரு அம்பிகைகள் வீற்றருளும் தலம் நீலகிரி மாவட்டம்,உதகையில் உள்ள சந்தைக்கடை மாரியம்மன் கோவில். னகண் நோய்களையும் கொடிய நோய்களையும் இந்த இரட்டை அம்பிகைகள் தீர்க்கிறார்கள்.

🙏🛕ௐ சக்தி பராசக்தி🛕🙏
🙏🛕#சர்வம் #சக்திமயம்🛕🙏
ravi said…

*மனுஷ வாழ்க்கை*

ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.. டிக்கெட் பரிசோதகரின் காலில் ஏதோ இடறியது.. குனிந்து அதை எடுத்தார்..

அது ஒரு பழைய மணி பர்ஸ்.. ஓரமெல்லாம் ஜீரணம் ஆகி, மெருகு குலைந்திருந்தது..

பர்ஸைத் திறந்தார்.. சில கசங்கிய நோட்டுகளும், சில்லறைகளும் இருந்தன.. அத்துடன் ஸ்ரீகிருஷ்ணரின் படம் ஒன்றும் இருந்தது..

பர்ஸைத் தலைக்கு மேலே பிடித்துக் காட்டிய பரிசோதகர், "இது யாருடையது?" என்று குரலை உயர்த்திக் கேட்டார்..
ravi said…
ஒரு முதியவர், "அது என்னுடையது" என்றார்.. பர்ஸின் நிலையையும், முதியவரின் வயதையும் கண்டு ஜோடிப் பொருத்தம் பார்த்தே பர்ஸைத் தந்திருக்கலாம்..

ஆனாலும் பரிசோதகர், "உம்முடையது தான் என்பதற்கு என்ன ஆதாரம்? "எனக் கேட்டார்..

"அதில் கிருஷ்ணர் படம் இருக்கும்.."

"இதெல்லாம் ஒரு ஆதாரமா? யார் வேண்டுமானாலும் கிருஷ்ணர் படம் வைத்திருக்கலாமே...?"

"ஐயா" என்று செருமியவாறு முதியவர் ஏதோ கதை சொல்வது போல் சொல்ல ஆரம்பித்தார்.. வண்டி வேகமெடுத்ததால் காற்று பெட்டியினுள் பரவ, இறுக்கம் விலகியது.. அனைவரும் அவரது கதையைக் கேட்க ஆர்வமாகினர்..

முதியவர் கூறினார் :
ravi said…
நான் படித்துக் கொண்டிருந்த போது என் அப்பா எனக்கு இந்தப் பர்ஸைக் கொடுத்தார்.. அப்பா அவ்வப்போது தரும் சில்லரைகளை இதில் சேர்க்க ஆரம்பித்தேன்..

வீட்டில் தேடிப் பிடித்து என் அப்பாவும், அம்மாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பிடித்து அதில் வைத்தேன்..

நான் வாலிபனானேன்.. பள்ளித் தகவல்களுக்காக என்னைப் புகைப்படம் எடுத்தனர்..

ஆஹா! அரும்பு மீசையும், குறும்புச் சிரிப்புமாக இருந்த என்னை எனக்கே மிகவும் பிடித்தது.. அம்மா அப்பா படத்தை எடுத்து விட்டு என் படத்தை பர்ஸில் வைத்து, நொடிக்கு 100 தரம் பார்த்துக் கொண்டேன்
ravi said…
சில வருடங்களில் திருமணமாயிற்று.. இப்போது மனைவியின் முகத்தை அடிக்கடி பார்க்க விரும்பினேன்.. பர்ஸில் மாற்றம். என் படம் இருந்த இடத்தில் என் அன்பு மனைவி.. அலுவலக வேலையின் இடையில் பர்ஸைத் திறந்து புகைப்படத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது..

இதெல்லாம் சில காலம் தான்.. எங்கள் அன்பு மயமான வாழ்க்கையின் சாட்சியாக மகன் பிறந்தான்.. பர்ஸில் மறுபடியும் மாற்றம்!

மனைவியின் இடத்தை மகன் ஆக்கிரமித்துக் கொண்டான்... பலமுறை படத்தைப் பார்ப்பதும்,'என் மகன்' என்று மற்றவர்களுக்குக் காட்டுவதும்.. எனக்கு ஒரே பெருமை தான்..
ravi said…
வருடங்கள் ஓடின.. மனைவி காலமானாள்.. என் மகனுக்குத் தன் குடும்பத்தைக் கவனிக்கவே நேரம் போதவில்லை.. என்னை எப்படி கவனிப்பது?

என்னைத் தனிமை வாட்டியது.. கூட்டத்தில் தொலைந்து விட்ட குழந்தையாய்த் தவித்தேன் : தடுமாறினேன்.. அப்போது தான் இந்தப் படத்தை ஒரு கடையில் பார்த்தேன்.. அன்பே உருவான கிருஷ்ணரின் கண்கள் என் நெஞ்சை வருடின..

அவனது உதட்டின் முறுவல் என் உள்ளத்தில் நேசத்தையும், பாசத்தையும் நிறைத்தது..

சொன்னால் நம்புங்கள், புல்லாங்குழலிருந்து தன் கையை எடுத்து, என் கரம் பற்ற நீட்டினான் கிருஷ்ணன்..
ravi said…
என் கண்கள் அருவியாய் நீரைச் சொரிந்தன.. உடனே கிருஷ்ணனின் படத்தை வாங்கி பர்ஸில் வைத்து, நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்..

என் கவலையும் பறந்தது ; தனிமையும் மறைந்தது.. என்றென்றும் எவருக்கும் நிரந்தரமான துணையாக இருப்பவர் இறைவன் மட்டுமே..

முதியவர் நிறுத்தினார்..

ஆனால், வண்டியில் இருந்த ஒவ்வொருவர் நெஞ்சிலும் கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசிக்கத் தொடங்கினார்..

பரிசோதகர் நெகிழ்ச்சியுடன் பர்ஸை முதியவரிடம் கொடுத்தார்.

*இவ்வளவு தாங்க மனுஷ வாழ்க்கை.இதுக்குள்ள தாங்க இத்தனை போட்டியும், பொறாமையும்,மான அவமானங்களும்*
ravi said…
நீண்ட பதிவு ..

ஓவ்வொருவர் கண்ணிலும் இன்று கங்கை கொட்டுவது நிச்சயம் .🌨️🌨️🌨️

பொருமையாக skip பண்ணாமல் படிக்கவும் ..

மெய் சிலிர்ப்புக்கு நான் guarantee . 🌺🌺🌺
ravi said…
*மகா பெரியவா சரணம்*

பெரியவா பல பக்தர்களுக்கு அழகாக 'nickname' வைத்துக் கூப்பிடுவார். அப்படியொரு 'nickname' பெரியவாளால் சூட்டப்பட்ட பாக்யஶாலி... வைஷ்ணவ வெங்கட்ராமன்.

வைஷ்ணவர் என்றாலும், பெரியவாளும், பெருமாளும் ஒன்றே! என்ற அசைக்க முடியாத பக்தி! அவர் மட்டுமில்லை, அவருடைய பெற்றோர், குடும்பத்தினர் அத்தனை பேருக்குமே, பெரியவாதான் "ப்ரத்யக்ஷ பெருமாள்"
ravi said…
அவருக்கு ஒருமுறை காஶிக்கு யாத்ரை செல்லும் பாக்யம் கிடைத்தது. ஏதோ காரணங்களால், அவருடைய தாயாருக்கு அவருடன் காஶியாத்ரை செய்ய முடியவில்லை. காஶி யாத்ரையை ஶுபமாக முடித்துக் கொண்டு, பெரிய சொம்புகளில் கங்கையை க்ருஹத்துக்கு கொண்டு வந்து, அம்மாவிடம் குடுத்து நமஸ்கரித்தார்.

"பெரியவா அனுக்ரஹம்.... க்ஷேமமா போய்ட்டு வந்தியேப்பா! எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை...."

"சொல்லும்மா....."

"இந்த கங்கா ஜலத்தை பெரியவாகிட்ட சேத்துடு....! ஒரு பூர்ண அமாவாஸ்யை அன்னிக்கி, பெரியவா இந்த கங்கா ஜலத்தால, தனக்கு அபிஷேகம் பண்ணிண்டார்னா.... என் ஜன்மம் ஶாபல்யம் அடஞ்சுடும்...!."
ravi said…
பெரியவா மேல் உள்ள, மிகவும் ஆழ்ந்த அன்பினால், அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

தனக்காக கங்கா ஜலமும், தன் பக்தையும் காத்துக் கொண்டிருப்பது 'பெருமாளுக்கு' தெரியாதா என்ன?

ஸீக்ரமே, வெங்கட்ராமன், பெரியவாளை தர்ஶனம் செய்யும் பாக்யம் பெற்றார்.

அப்போது பெரியவா துங்கபத்ரை தவழ்ந்தோடும், ஹம்பியில் முகாம். அங்குள்ள ஒரு சின்ன ஶிவன் கோவிலில் தங்கியிருந்தார்.

அன்று அமாவாஸ்யை !
ravi said…
Divine Plan!

வெங்கட்ராமன், கங்கைச் சொம்பை பெரியவா முன் ஸமர்ப்பித்து விட்டு, நமஸ்காரம் செய்தார்.

"என்ன?... காஶி யாத்ரை நன்னா முடிஞ்சுதா?..."

"பெரியவா அனுக்ரஹம்......நல்லபடி ஆச்சு..."

"ராமேஶ்வரம் போய்ட்டு வந்துட்டியா?......"

"ஆச்சு பெரியவா....."

கங்கைச் சொம்பை தொட்டு, தன் பக்கம் லேஸாக நகர்த்திக் கொண்டார்.

ஹம்பியிலும் நல்ல கூட்டம்! அதிலும் படே படே ! ஆஸாமிகள் அன்று தர்ஶனத்துக்கு வந்திருந்தார்கள்.

அப்போது ஆந்த்ர முதலமைச்சராக இருந்த திரு. சென்னா ரெட்டி, அவருக்கு காவலாகவும், கூடவும், வந்திருந்த ஒரு பெருங்கூட்டம்!

அடுத்தது, Prince of Wales Charles, பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார். அவருடன் கிட்டத்தட்ட 200 பேர் வந்தார்கள்.
ravi said…
ஒரே கெடுபிடி!

பெரியவா முன்னால் ஏகப்பட்ட பழங்கள், புஷ்பமாலைகள், ஸால்வைகள், பரிஸுப் பொருட்கள் என்று குவிந்ததில், கங்கைச் சொம்பு தெரியவேயில்லை!

எல்லாம் முடியும்போது, கிட்டத்தட்ட மத்யானம் மூணு மணியாகிவிட்டது!

வெங்கட்ராமனின் கண்கள் எங்கேயோ இத்தனூண்டு தெரிந்த, கங்கைச் சொம்பையே பார்த்துக் கொண்டிருந்தன!

"அமாவாஸ்யை கார்த்தாலயே ஆய்டுத்தே! பெரியவா கங்கையால அபிஷேகம் பண்ணிப்பாளா? மாட்டாளா?"
ravi said…
வெங்கட்ராமன் எண்ணி முடிக்கவில்லை..! பெரியவா தண்டத்தை ஊன்றிக் கொண்டு எழுந்தார்!

பக்கத்திலிருந்த பாரிஷதரிடம், கண்ஜாடை காட்டவும், அவர், அங்கிருந்த கங்கைச் சொம்பை எடுத்துக் கொண்டு, பெரியவாளுடன் நடந்தார்.

"பெரியவா ஸ்நானம் பண்ணப் போறா...."

கூட்டத்தில் யாரோ, யாரிடமோ சொன்னார்கள்!

Divine Plan !

[பகவான் நம்முடன் direct-டாக பேசாமல், இப்படித்தான் யார் மூலமாகவோ பேசி, ஆனந்தத்தை வாரி தெளிப்பான்]

வெங்கட்ராமன், ஜிவ்-வென்று எழும்பி, ஆனந்தத்தின் உச்சியை உணர்ந்துவிட்டு, பெரியவாளுடன் கூடவே ஓடினார்!
ravi said…
ஆம்...! பெரியவா குள்ள உருவமாக இருந்தாலும், அவர், ஸாதாரண வேகத்தில் நடந்தாலும், நாமெல்லாம் அவருடன் தலை தெறிக்க ஓடினால்தான், அவருடைய 'நடக்கும் ஸ்பீடுக்கு" ஈடு குடுக்க முடியும்.! இது அவதார புருஷர்களுக்கு மட்டுமே உண்டான ஒரு தனித்தன்மை! ஶக்தி!

துங்கபத்ரை ஓடும் இடத்துக்கு வந்ததும், கீழே பல படிகள் இறங்கினால்தான், நதியில் குளிக்க முடியும். பெரியவா, 'விடுவிடு'வென்று படிகளில் இறங்கி, விதிவத்தாக நதியை வந்தனம் செய்துவிட்டு, உள்ளே இறங்கினார்.

அப்போது மணி, ஸரியாக மத்யானம் 3.22.

வெங்கட்ராமன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரெண்டு பாரிஷதர்கள் பேசிக் கொண்டனர்..... வெங்கட்ராமன் காதில் விழும்படியாக!
ravi said…
Divine Plan !

"பாத்தியா! இன்னிக்கி கரெக்டா 3.22க்குத்தான் அமாவாஸ்யை பொறக்கறது! பெரியவான்னா.... பெரியவாதான்! ராஜா, மந்த்ரி யார் வந்தாலும், அப்டியே விட்டுட்டு, ஶாஸ்த்ரத்தை விட்டுக்குடுக்காம, அமாவாஸ்யை பொறக்கற டயத்துக்கு, நதில ஸ்நானம் பண்ண வந்துட்டார் பாரேன்!......."

வெங்கட்ராமனின் ஒரு கண்ணில் துங்கபத்ரையும், மற்றொரு கண்ணில் கங்கையும் ஓடினார்கள்.

"பெருமாளே! இதுக்குத்தானா.....? இதுக்குத்தானா? எங்கம்மாவோட ஆத்மார்த்தமான ஆசையைப் பூர்த்தி பண்ணத்தானா?.....ஒன்னோட அனுக்ரஹத்தை தாள முடியலியே என் அப்பா......."
ravi said…
பெரியவாளுடன், வெங்கட்ராமனும் இடுப்பளவு ஜலத்தில் நின்று கொண்டு, பெரியவா திருமேனி தீண்டிய புனித ஜலத்தில் தன் ஶரீரத்தையும், பெரியவாளின் அன்பு எனும் கங்கையில் மூழ்கிய, தன் மனஸையும் ஆனந்தமாக முழுக்காட்டிக்கொண்டிருந்தார்.

இதோ..... சொம்பில் இருந்த கங்கா ஜலம், பெரியவாளின் தலைக்கு மேல் கவிழ்க்கப்பட்டது!

இத்தனை நாள் பிரிந்திருந்த தன் ப்ராணபதியான பரமேஶ்வரனின் ஶிரஸை மறுபடி எப்போடாப்பா.... அலங்கரிப்போம்? என்று தாபம் அடைந்தவளாக இருந்ததால், அந்தச் சொம்பிலிருந்து 'மளமள'வென்று கங்காதரனின் திருமுடியில் 'பூக்கள்' போல மலர்ந்து விழுந்தாள்.
ravi said…
அதோடு, விண்ணைப் பிளக்கும் "ஹர ஹர ஶங்கர; ஜய ஜய ஶங்கர" கோஷமும் சேர்ந்து, பகீரதன் தபஸ்ஸால் கீழே பூமிக்குப் பாய்ந்த கங்கை, மஹாதேவனின் திருமுடியில் அடைக்கலமாகி, பின் பூமியில் அழகாக விழுவது போல் இருந்தது.

"அம்மா! அம்மா! நீ பாக்யஸாலி!..... பெரியவா ஒன்னோட பக்தியை ஸ்வீகரிச்சிண்டுட்டார்!..."

மானஸீகமாக, அம்மாவையும் நமஸ்கரித்தார் வெங்கட்ராமன்.

சிலிர்க்கிறது !....
ravi said…
ஸ்நானம், அனுஷ்டானம் முடிந்து, பெரியவா 'கிடுகிடு' வென்று லாவகமாக படிகளில் ஏறி, மண்ணில் நடந்து ஶிவன் கோவிலை அடைந்தார்.

பின்னால் கொஞ்சம் தாமஸித்து வந்த வெங்கட்ராமனின் கண்களுக்கு மட்டும் தெரியும்படியாக ஒரு மஹா மஹா பாக்யத்தை விட்டுவிட்டுப் போயிருந்தார் பெரியவா!

என்ன அது?

பெரியவாளைப் பின்தொடர்ந்து அத்தனை பேர் போயிருந்தாலும், அந்த மண்ணில் பெரியவாளுடைய பாதங்கள் பதிந்த தடம், வேறு யாருடைய காலும் படாமல், 'பளிச்'சென்று பெரியவாளால் வெங்கட்ராமனுக்கு மட்டும் 'காட்டி அருளப்பட்டது'!
ravi said…
கையிலிருந்த ஒரு பட்டுத் துணியில், பெரியவா பாததூளியை "ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர" நாமத்துடன் பத்ரப்படுத்தி வைத்துக் கொண்டார்.

Divine Plan !

பாற்கடலை கடைந்து எடுத்த அம்ருதத்தை விட, கோடானுகோடி உத்க்ருஷ்டமானது, மஹாபுருஷர்களின் பாததூளி! பெரியவாளின் பாததூளி இருக்கும் க்ருஹத்தில் வேறு ஸாதனையே தேவையில்லை! வேறு வைத்யமே தேவையில்லை! வேறு தபஸே தேவையில்லை!

வெங்கட்ராமன் பத்ரப்படுத்தி, பூஜையில் வைத்திருந்த பெரியவாளின் பாததூளி, ஸரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது!
ravi said…
எதற்கு?

நாலு வர்ஷங்கள் கழித்து, பெரியவாளின் பரமபக்தனான குஜராத்தை சேர்ந்த குலபதி டாக்டர் S.பாலக்ருஷ்ண ஜோஷியை எமன் வாயிலிருந்து தட்டிப்பறிக்க!

குலபதி டாக்டர் S.பாலக்ருஷ்ண ஜோஷி என்ற பக்தர், ஹிந்துதர்ம ஶாஸ்த்ரம், கலாசாரம் பற்றிய உரைகளை, ஸம்ஸ்க்ருதத்தில் இருந்து , குஜராத்தி மொழியில் translate பண்ணும் ஒரு பெரிய பணியை, பெரியவா உத்தரவின்படி செய்து கொண்டிருந்தார். ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்தான், என்றாலும், அதற்காக தன் பணியை விடவில்லை.

ஆனால், இம்முறை வந்ததோ..... 'massive attack'!
ravi said…
ICU-வில் அட்மிட் செய்யப்பட்டிருந்தார்! ஒரே tube மயமாக இருந்தார்! பிறகு நாலைந்து நாட்கள் கழித்து, ஏகப்பட்ட பயமுறுத்தல் கண்டிஷன்களோடு அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு, அடுத்த ரெண்டு நாட்களில் அவருக்கு ரொம்ப மேஜர் ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்பதால், அவர் மறுபடியும் அட்மிட் ஆகவேண்டிய நாளையும் குறித்துக் குடுத்தார்கள்.

"இந்த ஆபரேஷன் கட்டாயம் பண்ணித்தான் ஆகணும்! பண்ணாவிட்டால், பிழைப்பது ஸந்தேஹம். பண்ணினாலும், ஸந்தேஹம்"

டாக்டர்கள் ஸந்தேஹமாக இழுத்தனர்.
ravi said…
ராமநாதபுரத்தில் இருந்த வெங்கட்ராமன், மெட்ராஸில் தன் நண்பரான பாலக்ருஷ்ண ஜோஷியை ஸந்தித்து உடல்நலம் விஜாரிக்க வந்தார்.

அவருடன் கூடவே.... பெரியவாளும் வந்தார்! .......

பாததூளி வடிவில்!

Divine Plan !

"வாப்பா! வெங்கட்ராம்!......."

ஜோஷி சிரித்தபடி வரவேற்றாலும், உள்ளூர அந்தச் சிரிப்பில் ஒரு கவலை இழையோடியது.

"கவலைப்படாதீங்கோ ஸார்! பெரியவா பாத்துப்பா....."
ravi said…
எனக்கு ஸாவைப் பத்தி பயமில்லப்பா..! ஆனா, பெரியவா எங்கிட்ட குடுத்த assignment-டை முடிக்காமயே போய்ச் சேந்துடுவேனோன்னு கவலையா இருக்கு...."

"கவலையே படாதீங்கோ ஸார்! பெரியவா குடுத்த வேலையை செஞ்சு முடிக்கத்தான் போறேள்! ஒங்களுக்காக ஒரு அருமையான ஔஷதம் கொண்டு வந்திருக்கேன்! பெரியவா அனுப்பியிருக்கா-ங்கறதுதான் ஸத்யம்!....... தேவரீர், கொஞ்சம் ஷர்ட் பட்டனை கழட்டுங்கோ சொல்றேன்"

பெரியவா.... என்ற மஹாமந்த்ரமே.. ஸர்வரோகநிவாரணி!
ravi said…
ஜோஷி, ஷர்ட் பட்டனை தளர்த்திக் கொண்டதும், வெங்கட்ராமன், ஹம்பியில் நான்கு வர்ஷத்துக்கு முன்னால், பட்டுத்துணியில் பத்ரப்படுத்தி வைத்த, காலாந்தகமூர்த்தியின் பாததூளியை கொஞ்சம் எடுத்து, ஜோஷியின் நெஞ்சு முழுக்க "ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர" என்று ஜபித்துக்கொண்டே தடவி விட்டார்.

ஜோஷியின் ஹ்ருதயம், அதுவரை கவலையால் கனத்திருந்தது! இப்போதோ.... பெரியவாளின் சரணதூளி ஸ்பர்ஶத்தால் கிடைத்த ஆனந்தத்தால் இறகைவிட லேஸாகிப் போனது!
ravi said…
வெங்கட்ராமன் ஸந்தோஷமாக அன்றே ஊருக்குத் திரும்பினார். ஜோஷி மறுநாள் காலை ஐந்து மணிக்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆவதற்காக சென்றார். அட்மிஷன் போடும் முன், ரெகுலராக எடுக்கும் டெஸ்டுகளை எடுத்தார்கள்.

ஒருமணிநேரம் அங்கே காத்திருந்திருந்தார், ரூம் allot பண்ணுவதற்காக!

டெஸ்ட் ரிபோர்ட்ஸ் வந்தது!

இவருடைய டாக்டர், Chief டாக்டர், மற்றவர்கள் எல்லாரும், அந்த ECG-யை, எல்லாப் பக்கமும் திருப்பிப் பார்த்தார்கள்.
ravi said…
என்ன Mr ஜோஷி? எங்களுக்கு எதுவும் புரியல....! ICU-ல நீங்க அட்மிட் ஆனப்போ, ரொம்ப ஸீரியஸ் கண்டிஷன்ல இருந்தீங்க..! வேற ஆயுர்வேதா, அது இதுன்னு எதாவுது இந்த ரெண்டு நாள்ள ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டீங்களா?........"

[ஆயுர்-ராவது? வேதா-வாவது? ஆயுஸைக் குடுக்க, அந்த வேதவேத்யனே வந்துவிட்டானே!]

"இல்லியே...... டாக்டர்"

"ரெண்டு நாள்ள... ஒங்க entire system-மே.. change ஆய்ருக்கே Mr ஜோஷி?.."

"இன்னும் மோஸமாயிடுத்தா டாக்டர்....?"
ravi said…
எல்லா டெஸ்ட் ரிப்போர்ட்டும் நார்மல்-ன்னு வந்திருக்கு...! இவ்வளவு பெரிய ஒரு massive attack வந்ததுக்கான evidence-ஸே இப்போ எடுத்த ரிப்போர்ட்ல இல்ல....! இது எப்படி possible-ன்னு எங்களுக்கு புரியல.....!."

ஜோஷியின் ஹ்ருதயமும், கண்களும் ஸந்தோஷத்தில் விரிந்தன!

"டாக்டர்.... எங்களுக்கு கண்கண்ட தெய்வம் காஞ்சி பெரியவாதான்! நேத்தி என்னோட friend, 'ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர'-ன்னு சொல்லிண்டே, பெரியவாளோட பாத தூளியை என்னோட நெஞ்சுல பூசிவிட்டான்! அவன் அப்டி பூசும்போதே, எனக்குள்ள ஏதோ ஊடுருவற மாதிரி feel பண்ணினேன்....! நிச்சியமா என்னோட மஹாப்ரபு என்னைக் காப்பாத்திட்டார்!..."

அழுதேவிட்டார் ஜோஷி!
ravi said…
காஞ்சிபுரம் இருந்த திசையை நோக்கி நமஸ்கரித்தார். பெரியவாளின் சரணதூளி ஊடுருவிய பின், எந்த அட்டாக் என்ன பண்ணமுடியும்?

பெரியவா குடுத்த பணியை திருத்தமாக முடித்தார். பல காலம் ஜீவித்திருந்தார்.

நம்முடையதும் ரொம்ப massive ஸம்ஸார attack-தான்! பெரியவாளின் சரணகமலத்தை ஸ்மரித்துக் கொண்டே இருப்போம்..... இனி பிறவியே இல்லாமல் ஐக்யமாவோம் !

இதெல்லாம் நடந்திருக்குமா? இதெல்லாம் ஸாத்தியமா? என்ற ஸந்தேஹம் பலபேருக்கு வரலாம்.
ravi said…
ஒரு குழந்தையானது, தன்னை பெற்றெடுத்தவர்களை எப்படி நம்பி, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுக்கிறதோ, அப்படி, நம்மை மீறிய அந்த மஹா ஶக்தியிடம் நம்பிக்கை வைத்துதான் பாருங்களேன்!

நம்பிக்கை வைப்பதில் நஷ்டம் எதுவும் இல்லையே!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.

ஜய ஜய சங்கர...
ஹர ஹர சங்கர..

காஞ்சி சங்கர ..
காமகோடி சங்கர...

ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்...

இன்றைய நாள் எல்லாம் வல்ல நம் குருவின் திருவருளால், இனிய நாளாக அன்பு பிரார்த்தனைகள்.
Savitha said…
அருமை
Emotional goose bumps
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
CYS said…
Arumai.. Unmai. Periyava Charanam 🌹🌹🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

லோகத்துக்கெல்லாம் பிரஸித்தமாக, வர ப்ரஸாதினியாக இருக்கப்பட்டவள் மீநாம்பிகை. காருண்யத்தோடு ஆதிபத்ய சக்தியும் சேர்ந்திருக்கிறவள் மீநாக்ஷி. ஆறு மாஸம் தன்னிடம் செங்கோல், ஆறு மாஸம் ஸுந்தரேச்வரரிடம் செங்கோல் என்றிப்படி லோக முழுவதற்கும் ராஜ்யபாரம் பண்ணுகிறவள்.
ravi said…
நித்தியப்படி பூஜை, நைவேத்யம் முதலியவற்றைப் பார்த்தாலோ, ஈஸ்வரனுக்கு அவள் ஸரி ஸமானம் மட்டுமில்லை, அவனைவிட ஒருபடி மேலே என்று தோன்றுகிறது. பூஜை, நைவேத்யம் எல்லாம் முதலில் அவளுக்குப் பண்ணிவிட்டு அப்புறம்தான் ஈச்வரனுக்குப் பண்ணுவது என்று மதுரையில் மட்டும் மாறுதலாக வழக்கம் இருக்கிறது.
ravi said…
பெரிய பெரிய கோபுரங்கள், பிராகாரங்களுடன் வெள்ளைக்காரர்களும் பார்த்துப் பிரமித்துக் கொண்டாடும்படியான ஆலயம் மீநாக்ஷிக்கே ஏற்பட்டிருக்கிறது. அங்கே இருக்கிற சிற்பச் செல்வங்களுக்குக் கணக்கு வழக்கில்லை.
ravi said…
மற்ற க்ஷேத்ரங்களில் ஈஸ்வரன் பேரிலேயே கோவிலைச் சொல்லி அதில் இன்ன அம்பாள் ஸந்நிதி இருக்கிறது என்பார்கள். ரொம்பவும் சக்தியோடு, ஜீவகளையோடு பாலாம்பாள், கல்பகாம்பாள், மங்களாம்பாள் முதலிய தேவீ மூர்த்தங்கள் இருக்கிற கோயில்களைக்கூட வைத்யநாத ஸ்வாமி கோவில் (அல்லது முத்துக் குமார ஸ்வாமி கோவில்) , கபாலீச்வரர் கோவில், கும்பேச்வர ஸ்வாமி கோவில் என்றுதான் சொல்கிறோம். ஆனால் மதுரையில் மட்டும் ஸுந்தரேச்வரர் கோவில் என்று சொல்வதில்லை. மீநாக்ஷியம்மன் கோவில் என்றுதான் சொல்கிறோம்.
ravi said…
அங்கேதான் ஸுந்தரேச்வரர் அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் பண்ணியிருக்கிறார். ஸுந்தரேச்வரரை ஸ்தோத்திரம் பண்ணி, விபூதி மஹிமையாலேயே ஞான ஸம்பந்தர் பாண்டிய ராஜாவின் வெப்பு நோயைத் தீர்த்து, அதுவரை ஜைனனாக இருந்த அவனை சைவனாக்கினார்.
ravi said…
இப்படி நம் தேசத்தில் மறுபடி வைதிக மதம் நன்றாக ஸ்தாபிதமாவதற்கே ஸுந்தரேச்வரர் தான் காரணமாயிருந்திருக்கிறார். ஆனாலும் அவர் பெருமையை எல்லாம் ஒன்றுமில்லை என்று பண்ணிக்கொண்டு அம்பாள் மீநாக்ஷியே அங்கே முக்யமாயிருக்கிறாள். மீநாக்ஷியம்மன் கோயில் என்றே சொல்கிறோம். இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள்.
ravi said…
இப்படிப் பல கவிவாணர்கள் அம்பாளைப் பாடியிருக்கிறார்கள். குமரகுருபரர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ என்று, ஸாக்ஷாத் ஜகன்மாதாவைக் குழந்தையாக வைத்து ஸ்தோத்திரித்திருக்கிறார். அதைக் கோவிலிலேயே அரங்கேற்றம் பண்ணினார்கள்.
ravi said…
அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த திருமலை நாயகரின் அக்ராஸனத்தில் அரங்கேற்றம் நடந்தது. குமரகுருபரர் பாட்டுகளைச் சொல்லிக் கொண்டு வரும்போதே திடீரென்று அங்கே அர்ச்சகருடைய பெண் குழந்தை வந்து, திருமலை நாயகரின் கழுத்தில் போட்டுக்கொண்டிருந்த முத்துமாலையைக் கழற்றிக் குமரகுருபரரின் கழுத்திலே போட்டுவிட்டதாம்.
ravi said…
‘இதென்னடா, இந்தப் பெண் இப்படிப் பண்ணுகிறது?’ என்று எல்லோரும் பிரமித்துப் போயிருக்கும்போது அந்தப் பெண் அப்படியே கர்ப்பக்ருஹத்துக்குள் போய் அந்தர்தானமாகி விட்டதாம்!
ravi said…
அப்போதுதான் எல்லோருக்கும் மீநாக்ஷியே இந்த ரூபத்தில் வந்து குமரகுருபரருக்கு பஹுமானம் பண்ணிவிட்டுப் போயிருக்கிறாள் என்று தெரிந்தது. இப்படிப் ஜீவனுக்குப் பூர்ணத்வம் என்ற மதுரத்தைத் தரும் மீநாக்ஷியின் மதுரகடாக்ஷம் விசேஷமாகப் பரவியிருப்பதால்தான் அவளுடைய க்ஷேத்ரத்துக்கே மதுரை என்று பெயர் இருக்கிறது. அம்பாளின் கடைக்கண் அமுது அலை அலையாகப் பரவியிருப்பதால் அது மதுரையாகிறது.
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

பரமேச்வரனையேதான் ஸங்கீதத்துக்கு மூலமாகச் சொல்லியிருக்கிறது. மௌன தக்ஷிணாமூர்த்தி மாதிரியே வீணாதர தக்ஷிணாமூர்த்தி என்று உண்டு;விக்ரஹங்களில் பார்த்திருக்கலாம். ‘நாததநும் அநிசம் சங்கரம்‘ என்று தியாகராஜ ஸ்வாமிகள் செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். ‘தநு’ என்றால் சரீரம். இதிலே ஈச்வரனின் ஸத்யோஜாதம் முதலான ஐந்து முகங்களிலிருந்தே ஸப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில் சொல்லியிருக்கிறார்
ravi said…
*1. ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது. வாஸுதேவாச்சார், (காரைக்குடி) ஸாம்பசிவய்யர், மஹாராஜபுரம், செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில் அவர்களுககும் புரியாமல் தானிருந்தது. அப்புறம் ஸங்கீத சாஸ்திரங்களைப் புரட்டிப் பார்த்ததில், ஷட்ஜமும் பஞ்சமும் (‘ஸ’வும் ‘ப’வும்) பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்து ஒவ்வொன்றாகத் தோன்றின என்றும் அர்த்தம் த்வனிக்கும் படிப் பிரமாணங்கள் அகப்பட்டன.
விக்ருதிகளான ரி, க, ம, த, நி-களில் ஒவ்வொரு ஸ்வரத்திலும் இரண்டு திநுஸு இருக்க ப்ரக்ருதியான ஸ, ப-வில் ஒவ்வொன்றேதான் இருக்கிறது.
ravi said…
ஷ்டஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பனவற்றின் முதல் எழுத்துக்களை வைத்தே ஸ-ரி-க-ம-ப-த-நி என்பது. ஏழு ஜந்துக்கள் இயற்கையாகப் போடும் சத்தத்தை வைத்தே இந்த ஏழு ஸ்வரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஷட்ஜம் என்பது மயிலின் நாதம். இந்த ‘ஸ’வுக்கு அடுத்த ‘ரி’யாக வருவது ரிஷபத்தின் கர்ஜனை. ‘க’ – ஆடு போடும் சத்தம். ‘ம’-க்ரௌஞ்ச பக்ஷியின் கூவல். ‘ப’-குயிலின் ஒலி. ‘த’ – குதிரைக் கனைப்பு. ‘நி’ -யானையின் பிளிறல்.
சீக்ஷா சாஸ்த்ரத்தில் மூச்சு எந்தெந்த அவயவங்களில் பட்டு வேத அக்ஷரங்கள் உண்டாக வேண்டுமென்று சொல்லியிருப்பது போலவே, ஸங்கீத சாஸ்த்ரங்களில் ஒவ்வொரு ஸ்வரமும் அடி வயிற்றிலிருந்து உச்சந்தலைவரை எப்படியெப்படி ச்வாஸ சலனத்தால் உண்டாக வேண்டுமென்று சொல்லியிருக்கிறது.
ravi said…
இப்படி ஆறு அவயவங்கள் ஸம்பந்தத்தில் பிறப்பதே ‘ஷட்-ஜம்’. நாபி, ஹ்ருதயம், கண்டம், ரஸனம் (நாக்கு) , நாஸி ஆகிய ஐந்திலே ஸப்த ஸ்வரத்தின் ஸுந்தர தேவதைகள் பிரகாசிப்பதாக தியாகையர் ‘சோபில்லு‘க்ருதியில் சொல்கிறார்.
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 31* 🌷🌷🌷🌷🌷
ravi said…
*மார்பை இரத்ன வடிவேல் காக்க!*

என் நடுமார்பை இரத்ன வடிவேல் காக்கட்டும்!

*_சேர் இளமுலை மார் திருவேல் காக்க!_*

இரண்டு பக்கங்களிலும் இணையாகச் சேர்ந்திருக்கும் பக்கமார்புகளை திருவேல் காக்கட்டும்!

*வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!*

எனது இரண்டு தோள்களும் வளமுடன் இருக்குபடி வடிவேல் காக்கட்டும்!

*பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!*

என் பிடரிகள் இரண்டையும் பெருவேல் காக்கட்டும்!

*அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!*

என் முதுகு அழகுடன் இருக்கும்படி அருள்வேல் காக்கட்டும்!
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 194*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 26

*பொருளுரை*
ravi said…
சிவானந்த லஹரில 25 ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 26வது ஸ்லோகம்.

कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं

गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।

समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-

नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६

கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்

க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।

ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-

நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
மூகபஞ்சசதியிலயும், இந்த பாதம் கிடைக்கறதுக்கு நாம என்ன பண்ணனும் அப்படீங்கிறது ஒரு process மாதிரி அழகான ஸ்லோகத்துல சொல்றார். பாதாரவிந்த சதகம் 86 வது ஸ்லோகத்துல,

गृहीत्वा याथार्थ्यं निगमवचसां देशिककृपा-

कटाक्षार्कज्योतिश्शमितममताबन्धतमसः ।

यतन्ते कामाक्षि प्रतिदिवसमन्तर्द्रढयितुं

त्वदीयं पादाब्जं सुकृतपरिपाकेन सुजनाः ॥ ८६

க்³ருʼஹீத்வா யாதா²ர்த்²யம் நிக³மவசஸாம் தே³ஶிகக்ருʼபா-

கடாக்ஷார்கஜ்யோதிஶ்ஶமிதமமதாப³ந்த⁴தமஸ: ।

யதந்தே காமாக்ஷி ப்ரதிதி³வஸமந்தர்த்³ரட⁴யிதும்

த்வதீ³யம் பாதா³ப்³ஜம் ஸுக்ருʼதபரிபாகேந ஸுஜநா: ॥ 86

அப்படீன்னு ஒரு ஸ்லோகம்.

‘ *ஸுஜநாஹா* ’ ன்னா ஆத்ம குணங்கள், சத்யம், கருணை, புலனடக்கம், சந்தோஷம், த்ருப்தி

இந்த மாதிரி குணங்கள் இருக்கிறவா ‘ *ஸுஜநாஹா* ’ – சாது ஜனங்கள்.
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 195* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ *க்றுஷ்ணோ* லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
அன்று எல்லாப் பெண்களும் யமுனைக்குச் செல்லும்போது, வழிமறித்த கண்ணன், “என்ன? தொடங்கலாமா?” என்றான்.

“எதைத் தொடங்குவது?” என்று கேட்டார்கள் பெண்கள்.

“நம் கண்ணாமூச்சி ஆட்டத்தைத் தான்!” என்றான் கண்ணன்.

“அதெல்லாம் முடியாது!” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அந்தப் பெண்கள் யமுனையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

சந்திரமதி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு குடங்களைத் தலைக்குமேல் சுமந்து செல்வதைப் பார்த்தான் கண்ணன்.

கண்ணனால் இந்தக் குடங்களை உடைக்கவே முடியாது என்ற உறுதியுடன் அவனை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே நடந்தாள் சந்திரமதி.🌺🌺🌺
ravi said…
CYS இப்படியும் பெரியவாளின் குரலை புரிந்து கொள்ளலாம்

*ஆஹோ புருஷா* என்ற ஒரு சொல் சௌந்தர்ய லஹரியில் 7வது ஸ்லோகத்தில் பார்த்தோம் ... *அகம் புருஷக* ... என்று எடுத்துக்கொள்ள வேண்டும்

*புருஷக* என்றால் புருஷர் இல்லை எண்ணங்கள் சிந்தனைகள் ...

ஈஸ்வரனின் சிந்தனைகளுக்கு ஒரு உருவம் தந்தால் அதுவே *அம்பிகை* ..

அவன் எண்ணங்களாக சிந்தனையாக இருக்கிறாள் ...

64 திருவிளையாடல்கள் புரிந்த ஈசனும் தனது சிந்தனை முழுவதையும் மதுரையிலேயே வைத்திருக்கிறார்

மாமனார் வீடு என்றால் சும்மாவா ? எண்ணங்கள் அங்கே தானே இருக்கும் ..

அதனால் ஈசனின் சிந்தனைகள் ஓங்கி நிற்க

மதுரையை அவன் சிந்தனை எண்ணங்கள் *மீனாக்ஷி* என்ற பெயரில் இன்னும் ஆண்டு கொண்டு வருகிறது ... 💐💐💐
மூர்த்தி said…
விளக்கம் 👌
CYS said…
Arumai. 🌹🙏
ravi said…
Hinduism: Why is Lord Shiva easier to please than Lord Vishnu?
ravi said…
நினைத்தலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம் நடமாடும் தெய்வம் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என்று காஞ்சி மஹா பெரியவர் தமிழ் புத்தாண்டு அன்று என்னென்ன செய்வார் என்பது உங்களுக்கு தெரியுமா?
ravi said…
அன்று காலையில், உலக மக்கள் நலமுடன் வாழவும், பரந்த மனம் பெறவும் வேண்டி ‘ஆத்ம பூஜை’ (தியானம்) செய்வார். புத்தாண்டிற்கு இரண்டு நாள் முன்னதாகவே காஞ்சி மடம் களை கட்ட ஆரம்பித்து விடும். மடத்தை சுத்தம் செய்து, தென்னங் குருத்து, வாழை, மா இலையால் தோரணம் கட்டச் சொல்வார் பெரியவர். புத்தாண்டுக்கு முதல்நாள் இரவில், பெரியவர் தினமும் பூஜிக்கும் திரிபுர சுந்தரி சந்திர மவுலீஸ்வரர் சந்நிதி- கனிகள், காய்கறி, மலர்களால் அலங்கரிக்கப்படும். இரண்டு பெரிய குத்து விளக்குகளை அங்கே வைப்பார்கள், பெரிய கண்ணாடி, சந்தனம், குங்குமம், வாசனை திரவியங்கள், பூஜை பொருட்கள் அங்கே வைக்கப்படும். ஒரு ரூபாய் நாணயங்கள் குவிக்கப்படும்.
பெரியவரைத் தரிசிக்க புத்தாண்டுக்கு முதல்நாளே பக்தர்கள் ஏராளமாக கூடியிருப்பார்கள்.
ravi said…
புத்தாண்டு அன்று காலையில் சந்திர மவுலீஸ்வரரைத் தரிசனம் செய்யும் பெரியவர் கண்ணாடியில் முகம் பார்ப்பார். பானகம், நீர் மோர், வடைப்பருப்பு நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு வழங்க உத்தரவிடுவார். சங்கீத வித்வான்கள் அன்றைய தினம் பாடுவார்கள். அதை ரசித்துக் கேட்பார். தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம், நாராயண ஸ்ம்ருதி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடக்கும். பாராயணம் முடிவதற்குள் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று திரும்புவார்.
ravi said…
பின், பெரியவர் முன்னிலையில் மடத்து வேதியர்களால் அந்த ஆண்டுக்குரிய பஞ்சாங்கம் வாசிக்கப்படும். பஞ்சாங்கம் கேட்பதின் பலன் பற்றி முன்கூட்டியே பக்தர்களுக்கு பெரியவர் விளக்கமளிப்பார். நட்சத்திரம், திதி, வாரம், யோகம் ஆகியவை பற்றி கேட்பதால் பாவ நிவர்த்தி, ஆயுள்விருத்தி, லட்சுமி கடாட்சம், செயல்பாடுகளில் வெற்றி, நோயற்ற வாழ்வு கிடைக்கும் என்பார்.
ravi said…
புத்தாண்டன்று பெற்றோர், குரு, தெய்வத்தை வணங்குமாறும், ‘லோகா சமஸ்தா சுகினோ பவந்து’ (உலகம் நன்றாக இருக்கட்டும்) என்றும் கூறி பக்தர்களுக்கு தனித்தனியாக ஆசி வழங்குவார். அப்போது காமாட்சி, ஆதிசங்கரர், ஸ்ரீபாலா படங்களையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வழங்குவார். அந்நாளில் அவர் சிறிது கூட ஓய்வின்றி, மாலை வரை பக்தர்களுக்கு ஆசியளிப்பார். பிக்ஷைக்கு கூட போக மாட்டார். இடையிடையே சிறிது பருப்பு, பானகம் மட்டும் அந்த இடத்தில் இருந்தே எடுத்துக் கொள்வார். பக்தர்களை அன்று நடக்கும் ‘சந்தர்ப்பனை’ யில் (அன்னதானம்) சாப்பிட்டுச் செல்லுமாறு கூறுவார்.
ravi said…
தரிசனத்திற்கு வரும் குழந்தைகள் மீது பெரியவருக்கு உயிர். அவர்களைப் பாடச்சொல்லி, தானும் சேர்ந்து பாடுவார். அந்த பாட்டிலுள்ள கருத்துக்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி தானும் குழந்தையாகவே மாறிவிடுவார். அவர்களுக்கு சிரவணன் தன் பெற்றோரை சுமந்து சென்றது (ராமாயண சம்பவம்) உள்ளிட்ட கதைகளை கூறி பெற்றோருக்கு பணிந்து நடக்க அறிவுரை சொல்வார்.

மஹா பெரியவர் இன்றும் அந்தர்யாமியாய் (மறைவாய்) இருந்து நமக்கு புத்தாண்டு ஆசிகளை அள்ளித்தருகிறார். அவரையும் நமது காஞ்சி ஆச்சார்யர்களையும் புத்தாண்டன்று மறக்காமல் வணங்குவோமா!
ravi said…
🌹🌺 *கைகேயியின் தாதி(வேலைக்காரி)யாகப் பணியாற்றி , இராமபிரானைக் கானகம் அனுப்பிய கூன் கிழவி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
----------------------------------------------------------
🌺🌹பிரகலாதனின் மகன் விரோசனன் அவன் மிகுந்த தர்மவான். திருமாலிடமும், சிவபெருமானிடமும் "எம் கையால் உனக்குச் சாவு நேராது" என்ற வரத்தை வாங்கியவன் தான் இந்த விரோசனன்.
ravi said…


🌺இந்திரனும், மற்ற தேவர்களும் , திருமாலிடமும், ஈசனிடமும் சென்று விரோச்சனனை ஒழிக்குமாறு வேண்டி நின்றார்கள். ஆனால், திருமாலும், ஈசனும் விரோச்சனனை தாங்கள் கொல்ல மாட்டோம் , என்று அவனுக்கு அளித்த வரத்தை நினைவு கூர்ந்தனர்.

🌺அதனால் தேவர்கள் வேறு ஒரு சதித் திட்டம் போட்டார்கள் அதன் படி , அந்தணர் வேடம் பூண்டு விரோச்சனனின் உயிரை (அவன் நடத்திய ஒரு யாகத்தின் முடிவில் வந்து) யாசகம் கேட்டனர். இதனால் விரோசனன் யோக சக்தியால் தன் பிராணனை விட்டான்
ravi said…
🌺(அவன் பிரகலாதனின் மகன் ஆயிற்றே, வேள்வியின் முடிவில் யாசகம் கேட்டு வந்த அந்தண ரூபம் கொண்ட தேவர்களுக்கு அவர்கள் கேட்ட தானத்தை அளிப்பது அவன் கடமை அல்லவா? அதனால் தான் தனது இன்னுயிரையே பொருட் படுத்தாமல் அவர்களுக்கு அளித்தான்) . ஆனால், இவ்விஷயத்தை

🌺அறிந்த விரோச்சனனின் மகள் மந்தாரை கடும் சினம் கொண்டு தேவர்களுடன் போர் தொடுக்கத் தயாரானாள். அச்சமுற்ற இந்திரன் திருமாலிடம் ஓட அவர், " உன் வஜ்ராயுதத்திற்க்கு வேண்டிய வலிமையை நான் தருகிறேன் , நீயே போர் செய், வெற்றி உனதே" என்று கூற. இந்திரன் போரில் மந்தாரையை தனது வஜ்ராயுதம் கொண்டு கடுமையாகத் தாக்கினான்.
ravi said…
🌺அதனால் , அவளது தலை திரும்பியது , முதுகம் வளைந்து கோணலானது. அழகு தேவதையாக இருந்த மந்தாரை விகார ரூபத்தை அடைந்தாள்.

🌺"இந்திரன் ஒரு கோழை, அவனுக்குத் திருமால் அளித்த ஆற்றலினால் தானே எனக்கு இந்த நிலை ஏற்பட்டது, எனவே மறுபிறவியில் நானே விஷ்ணுவுக்கு எதிராகச் செயல் பட்டு அவருக்குப் பெரும் தீங்கு விளைவிப்பேன்" என்று உறுதி பூண்டாள்
ravi said…
🌺பிறகு மனதில் விஷ்ணுவின் மீது கொண்ட வஞ்சத்துடன் தற்கொலை செய்து கொண்டாள். அந்த மந்தாரை தான் அடுத்த பிறவியில் கோசல நாட்டில் கூனியாகப் பிறந்து கைகேயியின் தாதி(வேலைக்காரி)யாகப் பணியாற்றி , இராமபிரானைக் கானகம் அனுப்பியதின் மூலம் தீங்கு செய்து, தான் முற்பிறவியில் செய்த சபதத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.🌹🌺
ravi said…
*Loud Voice Of Bells In Temple Is Heard By The People Not By GOD...*
*GOD Hears Only The Truth Behind The Silent Voice Which Comes From The Core Of heart.*
*Good morning* 😊
ravi said…
🌺🌹Kai Kaikeyi's nurse (maid) who worked as a yaga and sent Ramaphrana to the forest Koon old woman - simple story to explain🌹🌺
--------------------------------------------------- --------
🌺🌹Viroshan, the son of Prakalathan, is very pious. This Virosana is the one who received the gift of Tirumala and Lord Shiva saying "You will not die by my hand".

🌺Indra and other deities went to Tirumala and Isan and prayed to eradicate Virochana. But, Thirumal and Eesan recalled the gift given to him that they would not kill Virochana.
ravi said…
🌺So the gods hatched another conspiracy according to which the Anandas pretended to beg for the life of Poontu Virochanan (coming at the end of a sacrifice he performed). Thus Viroshan left his prana by the power of yoga

🌺 (If he is the son of Prakalathan, is it not his duty to give the gift they asked for to the blind-faced gods who came to ask for alms at the end of Velvi? That is why he gave it to them regardless of his still life). But, this thing

🌺Mandara, the daughter of the known Virochanan, was furious and prepared to start a war with the gods. Frightened, Indra ran to Tirumala and said, "I will give you the strength for your diamond weapon. Fight yourself, victory is yours." Indra attacked Mandara with his diamond weapon in battle.
ravi said…

🌺So, her head turned, her back bent and angled. She reached the form of Mandara, who was a beauty angel.

🌺 "Indra was a coward and I got this condition by the power given to him by Thirumala, so in rebirth I will act against Vishnu myself and do him great harm," she assured him.

🌺Then she committed suicide with deceit in her mind towards Vishnu. In the next birth, Mandara was born in Kosala and worked as Kaikeyi's nanny (maid).🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ravi said…
💐💐💐 *ஸ்ரீ* *லலிதாம்பிகையின் 1000 நாமங்கள்* 🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 195* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்: 51- 60*🏵️🏵️

*63 வது திருநாமம்*
ravi said…
*63 कामदायिनी -காமதாயிநீ --*
ravi said…
அழகே உருவானவள் இந்த அம்பிகை.

இவளே அரசிகளுக்கு எல்லாம் அரசி.

அன்பின் திருவுரு.

நளினத்தின் உறைவிடமான லலிதா.

மூவுலகங்களுக்கும் தலைவியான திரிபுரா.

தசமகாவித்யா தேவிகளுள் மூவுலகங்களிலும் இவளே பேரழகி என்று பொருள்படும் திரிபுரசுந்தரி எனப் போற்றப்படுகிறாள்.

பரஞ்ஜோதி முனிவர் தன் திருவிளையாடற் புராணத்தில் ஈசனை கற்பூர சுந்தரன், பூங்கடம்பவன சுந்தரன், மகுட சுந்தரன், சோமசுந்தரன் என பல்வேறாக போற்றியுள்ளார்.

சுந்தரனின் மனைவி சுந்தரிதானே?

அம்பிகையின் அழகைப் பற்றி விவரிக்கும் நாமங்கள்:

உத்யத்பானு ஸஹஸ்ராபா;

காமாக்ஷி;

காமதாயினி;

சாருரூபா,

மஹாலாவண்ய சேவதி,

கோமளாகாரா,

காந்திமதி,

சோபனா,

திவ்யவிக்ரஹா,

கோமளாங்கீ.

சோபனா என்றால் சௌந்தர்யமே வடிவெடுத்தவள் என்று பொருள்.

மங்களங்களோடு கூடிய அழகு இது.

மங்களமான அழகிற்கு மனதை உயர் நிலைக்கு எடுத்துச் செல்லும் சக்தி உண்டு.

சர்வ வர்ணோபஸோபிதா என்றால் எல்லாவிதமான நிறங்களையும் எடுத்து மிளிர்பவள் என்று பொருள்.

உலகில் எங்கெங்கு என்னென்ன நிறங்களைக் காண்கிறோமோ அதெல்லாம் அம்பிகையிடமிருந்து வந்ததுதான்.

அதை திருமூலர்,
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்தூரப்
பரிபுரை நாராயணீயாம் பல வண்ணத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
உருபலவாய் நிற்குமா மாது தானே! [திருமந்திரம்]

என்று பாடுகிறார்
ravi said…
இடையில் ஒட்டியாணம் அணிந்துள்ளாள்.

இரு செவிகளிலும் எழிலோங்கிப் பொலியும் தாடங்கங்களின் ஒளி கன்னத்தில் வீசுகிறது.

நிறைமதி முகத்தினள்.

மன்மதனின் வில் போன்ற புருவங்கள் கொண்டவள்.

சம்பக மலர் போல் நாசி.

கருணை மழை பொழியும் கண்கள்.

தேவி தன் நெற்றியில் கஸ்தூரி திலகம் அணிந்துள்ளாள்.

முத்துகளும் வைரங்களும் பதிக்கப்பெற்ற கீரிடம் .

அம்பிகைக்கு *சர்வாபரணபூஷிதா* என்று ஒரு திருநாமம் உண்டு.

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 195* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

சௌந்தர்ய லஹரி - 45👍👍👍
ravi said…
லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்

த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்

விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:

ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: 46
ravi said…
இன்று இந்த ஸ்லோகத்தை மீண்டும் பார்க்க படிக்க மிகவும் கொடுத்து வைத்திருக்கிறோம் .. இன்று சித்ரா பொர்ணமி ... முழு நிலவு .. இந்த ஸ்லோகமும் சந்திரனின் இரண்டு பாதிகளை திருப்பி போட்டு தைத்து அன்னையின் முகமாக்கி மகிழ்கிறது ...ம்
ravi said…
அன்னையின் உச்சிக் வகிட்டின் கேசங்களுக்கு கீழ் புருவம் வரையில் இருக்கும் நெற்றிப் பகுதி வளைந்து கன்னங்களை அடைவது பிறைச் சந்திரனைத் தலைகீழாக கவிழ்த்து வைத்தது போல் இருக்கிறதாம்.

பிறைச் சந்திரன் என்று சொல்லும் போது அர்த்த சந்திரன் என்கிறார்.

அஷ்டமீ தினமானது பக்ஷத்தின் நடுவில் இருக்கும் திதி.

அமாவாசையில் இருந்து தினமும் சந்திரனைப் பார்த்துக் கொண்டே வந்தால் அஷ்டமி தினத்தில் சரி பாதியாக வளர்ந்திருக்கும்.

அதனால் அர்த்த சந்திரன்.

இவ்வாறாக இரு அர்த்த சந்திரனை வளைவுகள் பொருந்தும்படி அமைத்தால் வருவது முழு நிலா.🌕🌕🌜🌛

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை