பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 21 -247

                                             பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 22

(247) 👍👍👍💥💥💥




ரவி  ராமன் மற்ற தெய்வங்களுக்கு சற்றே மாறுபட்டவர் என்றால் நீ நம்புவாயா ? இதை அனுமன் தான் உலகிற்கு எடுத்துக்காட்டினான் -- சொல்கிறேன் கேள் 

மற்ற எல்லாத் தெய்வங்களும் கரங்களினால் அபய முத்திரைகளை காண்பிக்கும் - பாதங்களினால் அசுரர்களை எட்டி உதைக்கும் -- ஈசன் தன் திருக்களினால் காலனை எட்டி உதைத்தான் - 

வாமனன் தன்  பாதத்தினால் அரக்க குணம் கொண்ட மகாபலி சக்கரவர்த்தியை பாதாள உலகிற்கு செல்லுமாறு அழுத்தினான் -- 

மகிஷாசுர மர்த்தினி மகிஷனை காலால் உதைத்தாள் - 

இப்படி கால்களை ஒரு உதைக்கும் கருவிகளாவே மற்றது தெய்வங்கள் உபயோகிக்க ராமன் மட்டும் சற்றே மாறுபட்டு நிற்கிறான் 




இங்கே அனுமன் ராமனை மாற்றிப்பாடுகிறான் -

- எப்படி -- ராமா அபயம் தரக்கூடிய உன் கரங்களில் நீ  அழிக்கும் வில்லை ஏந்தியிருக்கிறாய் -- 

எட்டி உதைக்கவேண்டிய கால்களினால்  கருணை மழை பொழிகிறாய் ( அகல்யை சாப விமோசனம் )  

ராமனைப்போலவே பரமேஸ்வரனும் தன் பாதங்களை மாணிக்க வாசகரின் சிரசில் வைத்து ஞானத்தை அருளினார் . 

ராமன் ஏகபத்தினி விரதனாக இருந்தாலும் அவன் கதை பல பெண்களால் பின்னப்பட்டு உள்ளது -- 

அம்மா புரியவில்லையே ..  

அம்மாவின் பார்வை என் தோட்டத்தில் இருந்த வாழை மரங்களிலில்  முக்கியமாக வாழ பட்டைகள் மீது லயித்தது - புரிந்துகொண்டேன் என்னைப்பற்றி என்ன நினைக்கிறாள் என்று ... 




பிறப்பால் ஒரு பெண் - கௌசல்யா 

வளர்ப்பால் மூன்று பெண் -  கௌசல்யா , சுமித்ரா , கைகேயி 

கெட்ட நினைப்பால்  ஒரு பெண் - கூனி 

துடிப்பால்  ஒரு பெண் - கைகேயி 

முதல் அம்புக்கு உணவாய் ஒரு பெண் - தாடகி 

திருவடி தாமரைக்கு ஒரு பெண் - அகல்யா 

மனத்தால் ஒரு பெண் - சீதை 

மான பங்கத்தால் ஒரு பெண் - சூர்ப்பனகை 

வாலி போனதால்  தாலி இழந்த ஒரு பெண் -- தாரை 

பழம் கொடுத்து முக்தி அடைந்த ஒரு பெண் - சபரி 

தசமுகனை முகம் இல்லாமல் செய்ததினால் வாழ்வு இழந்த பெண் - மண்டோதரி 

அரசாட்சியினால் ஒரு பெண் -  பூமாதேவி  ( ராமனின் ஆட்சி அயோத்தி மட்டும் இல்ல பாரதமே அவன் எல்லைக்குள் அடங்கி இருந்தது )

கண்ணனை விட  அதிகமாக பெண்களை சந்தித்தவன் ராமன் -- ஆனால் கடைசி வரை சீதை மட்டுமே அவன் உயிர்த்துணையாய் இருந்தாள் 

அம்மா இந்த கண்ணோட்டம் மிகவும் அருமை 

சரி வா அனுமனை பார்ப்போம் 



ஊர் தேடுதல்


பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. 

இராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில் பதிந்திருந்தாள். 

வழியில் காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தப்பித் தவறி நங்கையர் இளமையோடும் எழிலோடும் தென்பட்டால் தான் எழுதி வைத்த சித்திரம் கொண்டு அவர்களை விசித்திரமாய்ப் பார்த்து வந்தான்.




உறங்குகின்ற கும்பகர்ணன்

அநுமன் பார்வை கும்பகருணன் மாளிகைப் பக்கம் சென்றது. மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான்; அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான்; பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான்; 

தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான். ‘பேரரசன் ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது’ என்பதால் அவன் இராவணனாய் இருக்க முடியாது என்று தெளிந்தான்.



வீடணன் இருக்கை

அடுத்து அவன் இளவல் வீடணன் மாளிகையை அடைந்தான்; வனப்பும் அழகும் அந்த மாளிகை பெற்றிருந்தது; அங்கே அரக்க வடிவில் ஒரு அசோகனைக் கண்டான்; கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் காண முடிந்தது; 

நீதியும் அறமும் அவனிடம் இடம் வேண்டிக் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்தது; ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்தான். ‘இவன் தப்பிப் பிறந்தவன்’ என்ற முடிவுக்கு வந்தான்; 

கும்பகர்ணன் தம்பி வீடணனாகத் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தான்; அவன் மீது இவன் கண்ணோட்டம் சென்றது; ‘இவன் பயன்படத் தக்கவன், என்று மதிப்பீடு செய்து கொண்டான்.





இந்திரசித்தன் மாளிகை

அடுத்து, இந்திரசித்தின் அரண்மனையை அடைந்தான்; ‘இவன் இந்திரனைச் சிறையிட்டவன்’ என்பதை முன்பே கேட்டு அறிந்திருக்கிறான்; அரக்கர் குலத்தில் அழகு உடைய இளைஞன் இருந்தது அவனுக்கு வியப்பை ஊட்டியது; அவனை முருகனாய்ப் பார்த்தான். 

‘இவனோடு நீண்ட போர் நிகழ்ந்த வேண்டிவரும்’ என்று மதித்தான்; “இவன் ஒரு மாவீரனாய் இருக்க வேண்டும்” என்று கண்டான்; இவனைப் போன்ற வீரர் இருப்பதால்தான் இராவணன் வலிமை மிக்கவனாய் இருக்கிறான், என முடிவு செய்தான்.




மண்டோதரியைக் கண்டான்

வித்தியாதர மகளிர் உறையும் தெருக்களைக் கடந்தான், மண்டோதரி தங்கி இருந்த மண்டபத்தை அடைந்தான்; ‘சீதையிடம் இருக்கத் தக்க வனப்பும் எழிலும் அவளிடம் இருப்பதைக் கண்டு, அங்கு அவளைக் காண முடியும்’ என்று நம்பிக்கை கொண்டான்; 

அங்கே மண்டோதரி கண் அயர்ந்து உறங்கிக் கிடந்தாள்; மயன் மகளாகிய மண்டோதரியைச் ‘சனகன் மகள்’ என்று தவறாய் நினைத்தான்; ‘சுகபோக சுந்தரியாக மாறி விட்டாளோ?’ என்று மயங்கினான்; 

சோர்ந்த குழலும், கலைந்த துயிலும், அயர்ந்த முகமும், ஜீவனற்ற முகப் பொலிவும் அவள் மண்டோதரி என்பதை உணர்த்தின. ‘நலம் மிக்க நங்கை ஒருத்தி மனைவியாய் இருக்க, மற்றொருத்தியை இவன் நாடுகிறானே’ என்று வியந்தான்.



இராவணன் மாளிகை

அடுத்தது அவன் அடைந்தது இராவணன் மாளிகை; அரம்பையர் அவன் அடிகளை வருடிக் கொண்டிருந்தனர். உறக்கம் கலைந்த நிலையில் அவன் காணப்பட்டான். நெருப்பை மடியில் கட்டிக்கொண்டு, அவனால் எப்படி அமைதியாய் உறங்கமுடியும்? சீதையை நெஞ்சில் வைத்தவன், நெருப்பு வைத்த பஞ்சாய் எரிந்து அழிந்துகொண்டிருந்தான்.

அரக்கனைக் கண்ட அனுமன் பதைபதைத்தான்; அவன் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்து, பந்தாட விரும்பினான்; ‘அவனை வென்று சீதையை மீட்பதை விடக் கொன்று முடிப்பதேமேல்’ என்று நினைத்தான்; நின்று நிதானமாய் நினைத்துப் பார்த்தான்; ‘கண்டு வரச் சொல்லி அனுப்பப்பட்டவனே தவிரக் கொண்டு வரச் சொல்லப்பட்டேன் இல்லை’ என்பதை நினைந்தான். 

‘எல்லை மீறிய தொல்லைகளை விளைவிப்பது நல்லது அன்று’ என்ற முடிவுக்கு வந்தான்; “இராமன் வீரத்துக்கு விளைநிலம் வேண்டும்” என்பதற்காக அவனை விட்டு வைத்து எட்டிச் சென்றான்.




‘கட்டிய கட்டிடங்களில் சீதை கால்அடி வைக்க வில்லை; என்பதை அறிந்தான்; அவன் சுற்றாத இடமே இல்லை; எட்டிப்பாராத மாளிகை இல்லை; அவனுக்கே அலுப்பு ஏற்பட்டுவிட்டது; ‘சலிப்பதால் பயனில்லை’ என்று பயணத்தை மேலும் தொடர்ந்தான்.

கழுகின் வேந்தனாகிய தொழத் தக்க சம்பாதி என்பான் சொன்ன உறுதிமொழி அவனுக்கு நம்பிக்கை அளித்தது. ‘இலங்கையில்தான் அந்த ஏந்திழையாள் சிறைவைக்கப் பட்டிருக்கிறாள்’ என்று கூறியதில் தவறு இருக்காது, என்ற முடிவுக்கு வந்தான்.

பாய்ந்து ஒடும் அவன் கால்கள் மரங்களையும் மாட மாளிகைகளையும் தாவின. புள்ளினம் பறந்து திரிவதும் பூக்கள் நிறைந்ததும்ாகிய சோலை ஒன்று காணப்பட்டது. காக்கை திரியும் தோற்றம் கண்டு, அவன் சோகம் தீர்க்கும் அசோகவனத்தைக் கண்டான்.

அம்மா கம்பனும் உங்கள் அருள் இன்றி ஒரு கவி நயம் கொண்ட ராமாயணத்தை படைத்திருக்கவே முடியாது 

சிரித்தாள் அன்னை- சிதறி ஓடின முத்துக்கள் , மாணிக்கங்கள் --- அவள் அருள் இருக்கும் பொது மதி மயக்கும் இந்த கற்கள் வேண்டாமே என்றே என் மதி சொன்னது - மதி சூடியவள் இன்னும் அதிகமாக புன்னகைத்தே மதி கொண்டவனோடு திருவண்ணாமலை ஜோதி என கலந்தாள் 




ஸ்வஸ்தா  स्वस्था   ஸ்வஸ்தமாக இருப்பது  என்றால் இயற்கையாக எந்த உபாதையும் இல்லாமல் உள்ளமும்  உடலும் ஒன்றி சௌக்கியமாக இருப்பவள்.  எவ்வுயிரும்  தானேயாக   இருப்பவள்.  ஒரு தடவை சின்ன குழந்தை விநாயகன் ஒரு பூனையோடு விளையாடி அதன் உடலில் சில கீறல்கள் காயங்கள் உண்டானது.   சற்று நேரம்  கழித்து  அம்மா  பார்வதியிடம் சென்ற போது  அவள் முகத்தில் கை கால்களில் உடலில் கீறல்களும், ரத்த காயங்களும் கண்டு அதிர்ச்சி அடைந்தான். ''அம்மா யார் உனக்கு தீங்கு செய்தது. உன்னை காயப்படுத்தியது?  

'' வேறு யார் நீ  தான்?  அந்த பூனையை துன்புறுத்தினாய். அதன் உடலிலும்  நான் இருக்கிறேனே.  ஆகவே  எந்த உயிர்க்கு துன்பம் விளைந்தாலும் அது எனக்கு விளைந்தது ஆகும். நல்லதும்  அப்படியே'' என்றாள்  உமை.




ஸ்வபாவமதுரா   स्वभाव-मधुरा  -  இயற்கையாகவே  அம்பாள் ம்ருது பாஷிணி.  கவர்ச்சியாக  காந்தமாக  கிரஹிப்பவள்.  ஞானிகளுக்கு ஒளிவிளக்கானவள் .

தீரா धीरा  - சக்தி ஸ்வரூபம்.  இங்கு சக்தி   வெறும் புஜபலம் அல்ல. ஞான சக்தி. அவள் இச்சா  சக்தி, க்ரியா சக்தி ஞானசக்தி அல்லவா.  அதனால் தானே அவளை திரிசக்தி என்கிறோம்.

தீர ஸமர்சிதா  धीर-समर्चिता  பண்டிதர்கள், கற்றோர்,வித்துவான்கள்  போற்றுபவள்.  சகல ஞானமும் பெற வேண்டுவோர் வணங்கும்  அம்பாள்.

Comments

ravi said…
*புன்னகை ராமாயணம் 82/317*👌👌👌

*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐

*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,

*Started on 4tb Sep 2020 🥇🥇*

*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*

*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ravi said…
ஆனீதான் அனயா நயாத்வ விகதான் தான் யாது தானான் அஹோ
கோர அஸ்த்ர ஆயுத ஜாதரோஷ பருஷான் நானா விதான் பீகரான்
த்ருஷ்ட்வா ராகவ தே முகே யத் அபவத் மந்த ஸ்மிதம் மங்கலம்
தத் ஸத்யம் மம மங்கலாய மஹதே வித்யோததே அத்யாபி கிம்

आनीतान् अनया नयाध्व-विगतान् तान् यातुधानान् अहो
घोरास्त्रायुध-जातरोष-परुषान् नानाविधान् भीकरान्।
दृष्ट्वा राघव ते मुखे यदभवत् मन्दस्मितं मङ्गलं
तत्सत्यं मम मङ्गलाय महते विद्योततेऽद्यापि किम्॥

ராமரின் ஒரு புன்னகை எப்படியெல்லாம் காரணம் காட்டுகிறது. அருமை

வீரம், வெற்றி இவற்றால் விளைந்த புன்னகை. கலகத்தால் வந்த கரன், தூஷணன், த்ரிஸிரஸ் பார்த்து மங்கலகரமான புன்னகை.

ஒரே இடத்தில் குழுமியதால் ஒரே குதூகலம். வாக்கு நிறைவேற்றப் போகும் வடுவூர் புன்னகை.🙂🙂🙂
ravi said…
சூர்பனகையின் காது மூக்குகளை லக்ஷ்மணன் அறுத்துவிடுகிறான்

மிகவும் வலியினால் துடித்து கதறுகிறாள் சூர்ப்பனகை --

ஓடிப்போய் தனது உறவினர்களான கரன் , தூஷணன் , த்ரிசிரஸ் இவர்களுடன் 14000 பேர்கள் கொண்ட படையை ராமன் மீது போரிட ஏவுகிறாள்

அவர்கள் கோபத்துடன் ராமனிடம் போரிட வருகிறார்கள்

அவர்களைப்பார்த்து ராமன் சிந்தும் புன்னகை🙂🙂🙂
ravi said…
*ஆனீதான் அனயா நயாத்வ விகதான் தான் யாது*

*தானான் அஹோ*
*கோர அஸ்த்ர ஆயுத*

*ஜாதரோஷ பருஷான் நானா விதான் பீகரான்*


சூர்ப்பனையினால் வரவழைக்கப்பட்ட படை - இந்த படை

தருமத்தைப்பற்றி அறியாத கூட்டம்

சட்டத்திட்டங்கள் ஒன்றும் அறியாத அரக்கர் கூட்டம் -

கோரமான கூட்டம் கொடிய கூட்டம் எப்பொழுதும் சண்டை போடவே பிரியமாக இருக்கும் கூட்டம்

- கோபம் ,அதிகம் கொண்ட கூட்டம் மாயாஜாலங்கள் புரியும் கூட்டம் -

ஓவ்வொருவருடைய தோற்றமே பயத்தை உருவாக்கும் -

அப்படி எல்லா கொடூரங்களும் நிறைந்தவர்கள் 14000 பேர்கள்🥇🥇🥇
ravi said…
*த்ருஷ்ட்வா ராகவ தே முகே யத் அபவத் மந்த ஸ்மிதம் மங்கலம்*

இப்படிப்பட்ட கோரமான , கொடுரமான பயத்தை உருவாக்கும் 14000 பேர்கள் நிறைந்த கூட்டம் வரும் போது ராமன் கொஞ்சமும் நடுங்காமல் புன்னகை பூத்தான்😊

அரக்கரைகளை அழிப்பேன் என்று ராமன் வாக்கு கொடுத்தானே அந்த அரக்கர்கள் தான் இவர்கள்

- சூர்ப்பனகை ராமருக்கு உதவி தான் செய்துள்ளாள்

- ஓவ்வொருவராக நாம் தேடிப்போக வேண்டாம் - மொத்தமாக எல்லோரையும் சூர்பனகையே என்னிடம் அழைத்து வந்துவிட்டாள் என் வேலை சுலபமாக ஆகிவிட்டது என்று எண்ணி ஒரு மெல்லிய புன்னகை சிந்தினான் ராமன் 🙂🙂🙂
ravi said…
*தத் ஸத்யம் மம மங்கலாய மஹதே வித்யோததே அத்யாபி கிம்*💐💐💐

ராமா!!

ரிஷிகர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி அரக்கர்களை அழிக்க உன் வேலையை சுலபமாகி விட்ட சூர்பனைகைக்கு நன்றி சொல்லும் விதமாகவும் அரக்கரைகளை அழைக்க நேரம் வந்து விட்டது என்பதைக்காண்பிக்கவும் அழகான மங்கலமான புன்னகையை சிந்தினாயே

அதே புன்னகை எங்களுக்கு வடுவூரில் தந்து கொண்டிருக்கிறாயே

அந்த புன்னகை எங்களை காப்பாற்றட்டும் ராமா🙏🙏🙏
ravi said…
நடப்பதெல்லாம் உன் செயல் என்றேன் ... நாலு பேர் வைத்தனர் என் பெயர் பித்தன் என்றே

கடவுள் உண்டு தெய்வம் ஒன்று என்றேன் ... பையத்தியம் என்றே என்னை அழைத்தனர் ..

காசிக்கும் கங்கைக்கும் போகவேண்டாம் .. சாயி மனதில் குடி வையுங்கள் என்றேன் ... கற்கள் என் மண்டையை பதம் பார்த்தது கொஞ்சம் .

ஒன்றும் சொல்லாமல் அமர்ந்தேன் ... சாயின் நாமம் ஒலிக்க அங்கே நடந்து சென்றனர் அது இருக்கும் பல கோடி ... 🥇🥇🥇
ravi said…
ஹரியைத் தேடினேன் .. ஹரனைக்கண்டேன் .. அடி முடி தேடியே அகப்பட்டான் அந்த கள்வன் ...

ஹரனைத் தேடினேன் ஹரி வந்து சேர்ந்தான் .. கேசாதி பாசமென பாசுரம் பாடினேன் ...

யாரையும் தேடவில்லை அமர்ந்திருந்தேன் ஆமை போல் ஒரு கல்லில் ...

ஆசைகள் குறைந்தது ஆணவம் அழிந்தது

ஆனந்தம் அங்கே ஆதிசுந்தரமாய் தில்லை நடனம் புரிந்தது ...

எங்கும் தெரிந்தது பிருந்தாவனம் ... சுகந்தத்தில் சொக்கிப்போனேன் ..

ராயர் மடி மீது கண் மூடினேன் 🙏🙏🙏
ravi said…
நினைத்தால் முக்தி ... உனை நினைந்தால் முக்தி ..

மலை போல் உயர்ந்த கருணை .. மலைத்து நின்றேன் வரமோ கண்டேன் இன்று அந்த ஹரனை ..

அடி முடி கண்டேன் .. உன் அழகை காட்டினாயே அருணாசலா ..

உள்ளம் அண்ணாமலை தீபம் என சுடர் விடுகிறதே அருணாசலா 💥💥🔥🔥
ravi said…
அடி முடி காணா அற்புத பிறப்பே ... ஆதி அந்தம் இல்லா அருட் ஜோதியே ..

எங்கள் குறை தீர்க்க வந்த எம் *மானே* ...

பொன் *மான்* கிட்டினும் வேண்டேன் ..

பெம் *மான்* உன் அருள் கிடைக்கும் போது ..

பொன் *மான்* தொடா பொற் சிலையே

அனு *மான்* போல் வாழும் சங்கர சுவனனே

பணிந்தோம் உன் பாதங்கள் ..

அதிலே கண்டோம் பரம பதங்களை 🏆🏆🏆
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 63 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐


*6 வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌
ravi said…
*உத்யத்பானு-ஸஹஸ்ராபா* 🥇🥇🔥🔥💥💥💥
ravi said…
சிதக்கனி குண்டத்தில் இருந்து வெளி வந்த அம்பிகை கோடி சூரியர்களின் காந்தியைப்பெற்றவளாக இருக்கிறாள் ...

சூரியன் உதிக்கும் போது அவன் தேரோட்டி அருணன் வானத்தில் பரவுவதைப்போல் அன்னை வரும் முன் அவள் கருணை விண்ணெங்கும் பரவியது .

கதிரவன் தினம் உதித்து எல்லோருக்கும் நம்பிக்கை தரக்கூடியவன் ..

அதுபோல் அன்னை எல்லோருக்கும் நம்பிக்கை தரக்கூடிய வண்ணம் கோடி சூரியர்களுக்கும் மேலான ஒளியுடன் உதித்தாள் ..🥇🥇🥇
ravi said…
*Lalitha Trishati 291 - 300* 💐💐💐
ravi said…
*291. Hrīṁkāraśuktikāmuktāmaṇi ह्रींकारशुक्तिकामुक्तामणि*💐💐💐

She is compared to a pure pearl

*292. Hrīṁkārabodhitā ह्रींकारबोधिता*👌👌👌

She is made known or explained through hrīṁ (ह्रीं).

The nāma says that there is no difference between Her and hrīṁ and if one knows the significance of hrīṁ, it is equivalent to realizing Her.

*293. Hrīṁkāramayasauvarṇa-stambhavidrumaputrikā ह्रींकारमयसौवर्ण-स्तम्भविद्रुमपुत्रिका*💐💐💐 She is the self of the universe and she is also the self of a being 🏆🏆🏆

*294. Hrīṁkāravedopaniṣad ह्रींकारवेदोपनिषद्*👌👌👌

Hrīṁ itself is referred here as Veda. Thus, there is no difference between Her and Vedas.

🏆🏆🏆
ravi said…
294 nama continues 👏👏👏
ravi said…
Upaniṣad-s are the latter part of Vedas and deals with the Supreme knowledge.

Upaniṣad-s are also known as jñāna kāṇḍa that imparts Supreme knowledge and is capable of revealing the Brahman.

Chāndogya Upaniṣad (I.i.10) says “Knowledge and ignorance produce different results. Anything done with knowledge, with faith in teachers and in scriptures and according to the principles of the Upaniṣads is more fruitful.”🏆🏆🏆
ravi said…
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 178*
🌸🌸🌸🌸


ஸுவாஸின்யர்சனப்ரீதா, ஶோபனா, ஶுத்தமானஸா |
பிந்துதர்பண ஸந்துஷ்டா, பூர்வஜா, த்ரிபுராம்பிகா ‖ 178 ‖
🌸🌸🌸🌸


सुवासिन्यर्चनप्रीता, शोभना, शुद्ध मानसा |
बिन्दु तर्पण सन्तुष्टा, पूर्वजा, त्रिपुराम्बिका ‖ 178 ‖
🌸🌸🌸🌸


suvāsinyarchanaprītā, śobhanā, śuddha mānasā |
bindu tarpaṇa santuśhṭā, pūrvajā, tripurāmbikā ‖ 178 ‖
🌸🌸🌸🌸


*
ravi said…
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸

ஓம் ஸுவாஸின்யர்சனப்ரீதாயை நம; ஓம் ஆஶோபனாயை நம;
ஓம் ஶுத்தமானஸாயை நம;
ஓம் பிந்துதர்பண ஸந்துஷ்டாயை நம; ஓம் பூர்வஜாயை நம;
ஓம் த்ரிபுராம்பிகாயை நம;
🌸🌸🌸🌸

ravi said…
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*

🌸🌸🌸🌸 *971.ஸுவாஸின்யர்சனப்ரீதா* - தேவி பூஜையின் (முக்கியமான ஸுவாஸினிகளுடைய) அர்ச்சையினால் ப்ரீதியடைகிறவள்.
🌸🌸🌸🌸

*972.ஶோபனா* - பூர்ணமான ஸௌந்தா்யத்தையுடையவள் .
🌸🌸🌸🌸

*973.ஶுத்தமானஸா* - சுத்தமான மனதையுடையவள்.
🌸🌸🌸🌸

*974.பிந்துதர்பண ஸந்துஷ்டா* - ஶ்ரீ சக்ரத்தின் மத்தியிலிருக்கும் க்ரம்மாக செய்யப்படும் தர்பணத்தால் ஸந்தோஷமடைகிறவள்.
🌸🌸🌸🌸

*975.பூர்வஜா* - எல்லாவற்றிற்கும் முதலாக ஜனித்தவள்.
🌸🌸🌸🌸

*976.த்ரிபுராம்பிகா* - ஶ்ரீசக்ரத்தின் எட்டாவது அபிமானினியான த்ரிபுராம்பிகா என்ற தேவியின் ரூபமாயிருப்பவள்.
🌸🌸🌸🌸
S G S Ramani said…
இப்பதிவின் ஒவ்வொரு வரிகளிலும் வார்த்தை சித்தர் தமிழில் புது வர்ணஜாலம் காட்டி இருக்கும் அழகே அழகு..

மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் அழகிய பதிவு...

🙏🙏🙏🙏🙏🙏
Sujatha said…
💐💐AHA super
Shivaji said…
Arumai.. 🌹🌹🙏
K.Balasubramanian said…
Jambavan Tharai Hanuman interaction nicely explained.Mother Sita 's qualities well brought out.
K.Balasubramanian said…
Hanuman talent and commitment to reach srilanka brought out well. Best wishes.
K.Balasubramanian said…
Mini Ramayanam. Best efforts. Thanks.
ravi said…
சிவானந்தலஹரி 7, 8 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
சிவானந்த லஹரியில ஆறு ஸ்லோகங்கள் பார்த்திருக்கோம். இன்னிக்கு 7 ஆவது 8 வது ஸ்லோகங்களுடைய அர்த்தத்தை பார்ப்போம். 5ஆவது ஸ்லோகத்துல ‘ஏதோ ஒண்ணு இரண்டு வித்தைகளை கத்துண்டு, அதை வெச்சு ஒரு ராஜாவை திருப்தி பண்ணி பிழைப்பு நடத்தலாம்னு நினைக்கிறேயே?
ravi said…
நீ பகவானுடைய பஜனம் பண்ணினா, அவர் பசுபதி. அவருடைய கருணையினால நீ ரொம்ப க்ஷேமமா இருப்பே’ ன்னு சொன்னார். அடுத்தது இந்த புத்தியைக் கொண்டு தர்க்கம் பண்ணாதே
ravi said…
வ்ருʼதா² கண்ட²க்ஷோப⁴ம் வஹஸி தரஸா தர்கவசஸா

பதா³ம்போ⁴ஜம் சம்போ⁴ர்ப⁴ஜ பரமஸௌக்²யம் வ்ரஜ

ஸுதீ:⁴ – புத்தி இருக்கு உனக்கு. அதைக் கொண்டு தர்க்காம் பண்ணிண்டு இருக்காம பரமேஸ்வரனுடைய பாத தாமரைகளை வழிபடு. உனக்கு பரம சௌக்யம் ஏற்படும்னு சொன்னார். இந்த மாதிரி பண்றதுக்கு, மனசை பகவானிடத்தில் வெச்சு சிவபக்தி பண்றது, பஜனம் பண்றதுன்னா எப்படி பண்ணனும்கிறதை இந்த 7 ஆவது ஸ்லோகதுல விளக்கி சொல்றார். நம்முடைய மனஸ், புத்தி, கை, கால் எல்லா அவயங்களையும் பகவானுடைய காரியத்துலயே செலுத்த வேண்டும்னு சொல்றார்

ravi said…
मनस्ते पादाब्जे निवसतु वचः स्तोत्रफणितौ
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ ।
तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे
परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमतः ॥ ७ ॥

மனஸ்தே பாதா³ப்³ஜே நிவஸது வச: ஸ்தோத்ரப²ணிதௌ
கரௌ சாப்⁴யர்சாயாம் ச்ருதிரபி கதா²கர்ணனவிதௌ⁴ ।
தவ த்⁴யானே பு³த்³தி⁴ர்நயனயுக³லம் மூர்திவிப⁴வே
பரக்³ரந்தா²ன் கைர்வா பரமசிவ ஜானே பரமத: ॥ 7 ॥
ravi said…
என்னுடைய மனம் உன்னுடைய பாதத் தாமரைகளிலேயே வசிக்கட்டும். வச: – என்னுடைய வாக்கு ஸ்தோத்ர பணித: – உன்னுடைய ஸ்தோத்ரம் பண்றது என்று உன்னுடைய பேச்சையே பேசட்டும் கரௌ சாப்⁴யர்சாயாம் – என்னுடைய கைகள் உன்னுடைய பூஜையையே செய்யட்டும்
ravi said…
ச்ருதிரபி கதா²கர்ணனவிதௌ⁴ – என்னுடைய காதுகள் உன்னுடைய கதைகளையே கேட்கட்டும் தவ த்⁴யானே பு³த்³தி⁴: – என்னுடைய புத்தி உன்னுடைய த்யானத்திலேயே இருக்காட்டும் நயனயுக³லம் மூர்திவிப⁴வே –
ravi said…
என்னுடைய கண்கள் உன்னுடைய மூர்த்தியினுடைய அழகை பருகட்டும். நடராஜா மூர்த்தியை பார்த்துண்டு இருந்தா கண்கள் கிடைச்ச பயன் அதுதானே. இப்படி இருந்துட்டா பரக்³ரந்தா²ன் கைர்வா – அப்புறம் வேற கிரந்தங்களை, வேற புஸ்தகங்களை நான் ஏன் படிக்கணும்? பரமசிவ ஜானே பரமத: – வேற மதங்கள், வழிகள் இருக்குன்னு எனக்கு தெரியக் கூட வேண்டாமேன்னு சொல்றார்.

ravi said…
திருவாசகத்துல திருவெம்பாவையில “எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க” ன்னு பாடினார் மாணிக்கவாசகர். “இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல். எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்” அந்த மாதிரி இருந்தா சூரியன் கிழக்குல உதிச்சா என்ன? மேற்குல உதிச்சா என்ன? என் கைகள் உன்னுடைய காரியத்தையே பண்ணட்டும். என்னுடைய கண்கள் வேற எதையுமே பார்க்க வேண்டாம். உன்னுடைய மூர்த்தியையே பார்த்துண்டு இருந்தால் எனக்கு வேற ஒண்ணுமே வேண்டாம். இந்த ஒரு பாக்யத்தை எனக்கு கொடுன்னு கேட்டார்.
ravi said…
அந்த மாதிரி இங்க ஆச்சார்யாள் கேட்கறார். என்னுடைய எல்லா புலன்களும் மனசும் புத்தியும் உன்னுடைய காரியத்திலேயே இருக்கட்டும் என்கிறார்.
ravi said…
இந்த பஞ்ச புலன்களையோ, மனசயோ அடக்கறதுங்கிறது முடியாத காரியம். புத்தி இருக்கு. புத்தியை கொண்டு பல விஷயங்களை தெரிஞ்சுக்கறோம். மனசுக்கு பலவிதமான பூர்வ வாசனைகள் இருக்கு.
ravi said…
அதனால இந்த புலன்களை செலுத்தி உலகத்துல இன்பத்தை அனுபவிக்கணும் எங்கிறதுதான் அதனுடைய பழக்கமா இருக்கு. அந்த பழக்கத்துல இருந்து அதை மாத்தறதுங்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால மஹான்கள் என்ன சொல்றா? நீ அதுக்கு முயற்சி பண்ணாதே. நீ மனசை அடக்க முடியாது.
ravi said…
வேடிக்கையா ஒரு கதை கூட சொல்வா. ஒரு குரங்கு நான் தியானம் பண்ணப் போறேன்னு Meditation class க்குப் போயிட்டு வந்து தியானம் பண்ண உட்கார்ந்துதாம்.
ravi said…
தியானம் பண்ணி முடிச்சா பசிக்கும்னு சொல்வாளேன்னு சொல்லி கொஞ்சம் வாழைப்பழம் எடுத்துண்டு பக்கத்துல வெச்சுண்டுதாம். நான் தியானம் பண்ணி முடிச்ச உடனே ரொம்ப tired ஆ போயிட்டா என்ன பண்றதுன்னு வாழை பழத்தை கையில வெச்சுண்டுதாம்.
ravi said…
அப்புறம் எனக்கு மயக்கம் வந்தா என்ன பண்றது ன்னு வாய் கிட்ட வெச்சுண்டுதாம். வாழைப்பழத்தை சாப்பிட்டுதாம். இது நன்னாயிருக்கு. நமக்கு என்னதுக்கு தியானம்னு பழங்கள் எல்லாம் சாப்பிட்டு முடிச்சுதுன்னு ஒரு கதை. அப்படி இருக்கு நம்ம கதி.
ravi said…
ஒரு phone ஐ பக்கத்துல வெச்சுண்டு தியானம் பண்ணும் போது phone ஐ கையில எடுத்துட்டா முடிஞ்சு போச்சு. அதனால ஒரு ஸ்தோத்திரம் படிக்கணும். ஒரு 10 ஆவர்த்தி சஹஸ்ரநாமம் பண்ணனும்.
ravi said…
சிவானந்த லஹரி முழுக்க பிரதோஷ காலத்துல பாராயணம் பண்ணனும்னு இப்படி நியமமா வெச்சுண்டு, முடிச்சாதான் அடுத்த காரியம் அப்படீன்னா அந்த அரை மணி தானா தன்னுடைய வாக்கினாலும், மனசினாலும், புத்தியினாலும் அந்த பகவானோட காரியத்தை பண்ணனும்னு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தா, அது நடக்கும். அதுல இருந்து தான் அந்த ருசி ஏற்படறது.

மூக பஞ்சசதியை ஸ்வாமிகள் எனக்கு படிப்பார். மூக பஞ்சஸதியில ஸ்துதி சதகத்துல 21 ஆவது ஸ்லோகம்
ravi said…
सरसवचसां वीची नीचीभवन्मधुमाधुरी

भरितभुवना कीर्तिर्मूर्तिर्मनोभवजित्वरी ।

जननि मनसो योग्यं भोग्यं नृणां तव जायते

कथमिव विना काञ्चीभूषे कटाक्षतरङ्गितम् ॥ २१॥

ஸரஸவசஸாம் வீசீ நீசீப⁴வன்மது⁴மாது⁴ரீ

ப⁴ரிதபு⁴வனா கீர்திர்மூர்திர்மனோப⁴வஜித்வரீ ।

ஜனனி மனஸோ யோக்³யம் போ⁴க்³யம் ந்ருʼணாம் தவ ஜாயதே

கத²மிவ வினா காஞ்சீபூ⁴ஷே கடாக்ஷதரங்கி³தம் ॥ 21॥

ன்னு ஒரு ஸ்லோகம்
ravi said…
இதுல “அம்மா காமாக்ஷி, உன்னுடைய கடாக்ஷம் ஒருத்தனுக்கு கிடைச்சுதுன்னா அவனுக்கு இந்த உலகத்துல, அவன் மனசுல ஆசைப் படற எல்லா விதமான யோக்யமான போகங்கள் எல்லாம் கிடைக்கும்.
ravi said…
நல்ல வாக்கு வரும். தேனை பழிக்கக் கூடிய இனிமையான வாக்கு வரும். மன்மதனை பழிக்கக் கூடிய அவ்ளோ அழகான சரீரம் ஏற்படும்” ன்னு சொல்றார்.
ravi said…
நாங்க ரெண்டு பேரும் ஒரே புஸ்தகத்தை வெச்சுண்டு படிச்சிண்டு இருந்தோம். ஸ்வாமிகள் இந்த ஸ்லோகத்தை படிச்சிட்டு, அடுத்த பக்கம் திருப்பிட்டார். திருப்பிட்டு என்கிட்ட பேசிண்டு இருந்தார். வேற ஒரு அனுபவத்தை பகிர்ந்துண்டார். அவர் பேசும் போது நான் pageஐ திருப்பல. அவர் திருப்பிட்டார். அவர் அடுத்தது

ravi said…
ப்⁴ரமரிதஸரித்கூலோ நீலோத்பலப்ரப⁴யாऽऽப⁴யா” ன்னு ஆரம்பிச்சார். நான் அந்த page ஐ திருப்பாததுனால இந்த “ஸரஸ வசஸாம்” படிக்கணுமேன்னு கேட்டேன். அவர் என்ன பண்ணார் page ஐ பின்னாடி திருப்பி

ravi said…
ஸரஸவசஸாம் வீசீ நீசீப⁴வன்மது⁴மாது⁴ரீ

ப⁴ரிதபு⁴வனா கீர்திர்மூர்திர்மனோப⁴வஜித்வரீ ।

ஜனனி மனஸோ யோக்³யம் போ⁴க்³யம் ந்ருʼணாம் தவ ஜாயதே

கத²மிவ வினா காஞ்சீபூ⁴ஷே கடாக்ஷதரங்கி³தம் ॥ 21॥

ன்னு படிச்சார்
ravi said…
இரண்டாவது தடவை அவர் படிச்சபோது காதுல விழுந்ததுனால காதுக்கு memory இருக்கு. அதுனால “இதை நீங்க படிச்சுட்டேள்”னு சொன்னேன்.
ravi said…
“ஆமாம். நான் படிச்சிட்டேன்னு தெரியும். நீ கேட்டியேன்னு சொல்லி இன்னொரு வாட்டி படிச்சேன். எனக்கு diabetes இருக்கு. எனக்கு பாதம் ஹல்வா, திரட்டிப்பால் எல்லாம் சாப்பிட முடியாது.
ravi said…
இந்த ஸ்தோத்திரத்தை படிக்கறது தான் எனக்கு திரட்டுப்பால்” ன்னார். அப்படி இந்த ஸ்தோத்திரத்தை படிக்கறதே அவருக்கு பாதாம் ஹல்வாவா இருந்தது. அப்படி அந்த பகவானோட பஜனத்துலயே ருசி கண்டவா மஹான்கள்.
ravi said…
அவாளுக்கு இது மூலமா பகவான் பணத்தை கொடுத்து, இல்ல புகழைக் கொடுத்து அது மூலமா சந்தோஷம்ன்னு இல்லாம இந்த பகவத் பக்தி, அதுல especially இந்த ஸ்தோத்திர பாராயணத்துல ருசி ஏற்படறது ஒரு மனப் பழக்கம். அதை அவர் கிட்ட பார்த்தேன். அது வரணும்னு நான் வேண்டிக்கறேன்.
ravi said…
அவ்ளோ விரும்பி ஸ்வாமிகள் enthusiastic ஆ அந்த பாராயணங்களையும் பிரவச்சனங்களையும் பண்ணுவார். அது தான் பக்திக்கு வித்து. அவர் அதை பண்ணிப் பண்ணி பக்தியில பழுத்தப் பழமா இருந்தார். அதை பார்த்து பார்த்து நான் ரொம்ப ரசிச்சிண்டு இருந்தேன்.
ravi said…
அப்படி பகவானோட ஸ்தோத்திரம் பண்ணா என்னனா, எப்பவுமே நமக்கு பிரியமான ஒரு மனுஷாளோ, பிரியமான ஒரு விஷயமோ இருந்தா அதுல எல்லா detailsம் நாம தெரிஞ்சுக்கறோம்.
ravi said…
ஒரு புதுஸா friend கிடைச்சா அவாளை பிடிச்சிருந்துன்னா, அவாளைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்கறோம். நிச்ச்சயதார்ததுக்கும் கல்யாணத்துக்கும் நடுவுல எவ்வளோ பேசறா! ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க பாக்காறா!
ravi said…
சின்ன குழந்தைகள் எல்லாம் சினிமாவுலயும், cricketலேயும் எவ்ளோ details தெரிஞ்சுக்கறா. அந்த மாதிரி பகவானை பத்தி நாம தெரிஞ்சுக்கணும்னா அவருடைய ஸ்தோத்திரங்களை படிச்சாதான் அவரோட வைபவங்கள் தெரியும். அவரோட மஹிமை புரியும்.
ravi said…
அப்பதான் மனசுல அவர் வருவார். அதனாலதான் விடாம ஸ்தோத்திரம் படியுங்கோ. constancy முக்கியம் பஜனத்துலன்னு ஸ்வாமிகள் சொல்வார்.
ravi said…
தினமும் ஒரே இடத்துல உட்கார்ந்துண்டு ஒரே ஸ்தோத்திரத்தை படிக்கணும். நிறைய ஆவர்த்தி படிங்கோ. உரு ஏற திரு ஏறும்னு சொல்லிக் கொடுப்பார். எல்லா மகான்களும் இதை சொல்லி இருக்கா. தலையே நீ வணங்காய் , தலைமாலை தலைக்கணிந்து ன்னுஆரம்பிச்சு திருநாவுகரசர் தேவாரத்துல பாடியிருக்கார்.
ravi said…
அந்த மாதிரி பகவானுடைய பஜனம் பண்றது இந்த மனசை புத்தியை வேற வித்தைகள்லேயிருந்தும், தர்க்கத்துலேயிருந்தும் எடுத்து பகவான்கிட்ட வைக்கறதுக்கு முதல்படி.
ravi said…
அடுத்த ஸ்லோகத்துல

यथा बुद्धिः शुक्तौ रजतमिति काचाश्मनि मणि-
र्जले पैष्टे क्षीरं भवति मृगतृष्णासु सलिलम् ।
तथा देवभ्रान्त्या भजति भवदन्यं जडजनो
महादेवेशं त्वां मनसि च न मत्वा पशुपते ॥ ८ ॥

யதா² பு³த்³தி:⁴ சுக்தௌ ரஜதமிதி காசாஸ்மனி மணி:
ஜலே பைஷ்டே க்ஷீரம் ப⁴வதி ம்ருʼக³த்ருʼஷ்ணாஸு ஸலிலம் ।
ததா² தே³வப்⁴ராந்த்யா ப⁴ஜதி ப⁴வத³ன்யம் ஜட³ஜனோ
மஹாதே³வேசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே ॥ 8 ॥

ன்னு சொல்றார்.
ravi said…
இந்த ஸ்லோகத்துக்கு என்ன அர்த்தம்னா எப்படி புத்தியானது சுக்தௌ – சிப்பி மேல வெயில்பட்டுதுன்னா வெள்ளி மாதிரி டால் அடிக்கும்.
ravi said…
ஓ! இது வெள்ளியான்னு கையில பொறுக்குவா. அடச்சே இது சிப்பின்னு சொல்வா. அது மாதிரி ரஜதமிதி காசாஸ்மனி மணி:
ravi said…
இன்னொரு கல்லு இருக்கு. அந்த ரத்னம் மாதிரி இருக்கும். அதை பார்த்த உடனே ஆஹா ரத்னம்னு நினைப்பா. அது வந்து வெறும் கல்லுதான்.
ravi said…
கடையில போயி கேட்டா இதுக்கு ஒண்ணும் value இல்லேம்பான் ஜலே பைஷ்டே க்ஷீரம் ப⁴வதி – மாவுல ஜலத்தை கலந்து வச்சிருந்தா பால் மாதிரி இருக்கும். இது பாலான்னு நினைப்பா.அது மாதிரி ம்ருʼக³த்ருʼஷ்ணாஸு ஸலிலம் – ம்ருக த்ருஷ்ணாங்கிற வார்த்தைக்கு கானல் நீர்னு பாலை வனத்துல தண்ணி இருக்கிற மாதிரி தெரியும்.
ravi said…
கிட்ட போனா தண்ணி இருக்காது. ஒரு காட்சிதான் அது. அப்படி புத்தி வந்து தடுமாறர்து. அந்த மாதிரி ஜடஜன: – மூட ஜனங்கள் என்ன பண்றான்னா மஹாதே³வேசம் த்வாம் மனஸி ச ந மத்வா பசுபதே – எல்லாத்துக்கும் மேலான தெய்வம்.
ravi said…
ஹே பரமேஸ்வரா. நீ இருக்கே. தே³வப்⁴ராந்த்யா ப⁴ஜதி ப⁴வத³ன்யம் – உன்னை நினைக்காம வேற ஏதேதோ தெய்வங்களை பஜிக்கறா. வாரா வாரம் magazine வாங்கறா.
ravi said…
அதுல குபேரயந்த்ரம் ன்னா அதை பூஜையில வைக்கறா. சனிப் ப்ரீத்தி மந்த்ரம் நா அதை சொல்றா. “பரமேஸ்வரான்னு சொல்லி உன்னிடத்தில் மனஸை வைக்கத் தெரியலயேன்னு சொல்றார். ஒரு இடத்துல மனசை வைக்கணும். அது மாதிரி குருன்னாலும் ஒரு குரு. அந்த குரு காண்பிச்ச வழி. அவர் சொன்ன தெய்வம்னு மனசை ஒருமைப் படுத்தறது தான் பக்தியில அடுத்த step. பஜனம் பண்ணனும்.விடாமல் ஸ்தோத்திர பாராயணம் பண்ணனும். பகவானோட கதைகளை கேட்கணும். பகவானை தரிசனம் பன்னனும்கிறது first step. அடுத்த step ‘அந்நிய தெய்வத்தை நினைக்காம ஏகபக்தி பண்ணனும்.
ravi said…
वेधा: कथं हरि: कथं इति प्रश्ने वयं मूका: |

शिवमेकं जानीम: तस्मादन्यं न जानीम: ||

வேதா: கதம் ஹரி: கதம் இதி பிரச்னே வயம் மூகா: |

சிவமேகம் ஜானீம: தஸ்மாதன்யம் ந ஜானீம: ||

ன்னு நீலகண்ட தீக்ஷிதர் சொன்னார்.
ravi said…
வேதா:ன்னா பிரம்மா. ஹிரி:ன்னா விஷ்ணு. அவா எப்படின்னு கேட்டா ‘இதி பிரச்னே வயம் மூகா:’ – நாங்க ஊமைகள் ஆயிடுவோம். ஒண்ணும் பேசமாட்டோம்.
ravi said…
எங்களுக்கு அந்த discussion வேண்டாம்ங்கிறார். ‘சிவமேகம் ஜானீம: தஸ்மாதன்யம் ந ஜானீம:’ – எங்களுக்கு பரமேஸ்வரன் ஒருத்தரைத் தான் தெரியும். அந்த மாதிரி மஹா பெரியவாளைப் பத்தி கேட்கும்போது எங்களுக்கு அவரைத் தெரியும். பெரியவாளைப் பத்தி பேசறோம்னு சொல்லணும். இன்னொருத்தரைப் பத்தி அவா எப்படி?இவா எப்படி?ன்னா மௌனம். எனக்கு தெரியாது. எனக்கு பெரியவாளைதான் தெரியும். அவர் காண்பிச்ச வழி தான் எனக்கு எங்கறது தான் பக்தின்னு இந்த ஸ்லோகதுல ஏக பக்தியை சொல்றார் ஆசார்யாள்.
ravi said…
சிவ பெருமானைக் காட்டிலும் மேலான தெய்வம் இல்லை. நமக்கு கிடைச்ச நம்முடைய குரு காண்பிச்ச அந்த தெய்வத்தினிடத்தில் பக்தி பண்ணினா சுலபமா நம்ம மனசை அதுல லயிச்சு அது மூலமா அனுக்ரஹம் கிடைக்கும்னு சொல்றார்
ravi said…
இந்த 2 ச்லோகத்தையும் இன்னிக்கு பார்த்தோம். நாளைக்கு “கபீரே காஸாரே” ன்னு “பல இடங்கள்ல புஷ்பங்களை தேடாதே. உன் கிட்டேயே ஒரு புஷ்பம் இருக்கு அதை பகவானுக்கு சமர்ப்பணம் பண்ணு. அது என்னன்னா உன்னோட மனத் தாமரைதான்னு ஒரு ஸ்லோகம். ரமணர்க்கு ரொம்ப பிடிச்ச ஸ்லோகம். அதை நாளைக்குப் பார்ப்போம்.

நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கம் – பதினைந்தாவது ஸ்லோகம் – அவன் கடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாருமே
ravi said…
ஸுப்ரமண்ய புஜங்கத்துல இன்னிக்கு பதினைந்தாவது ஸ்லோகம். முருகப்பெ ருமானுடைய கடாக்ஷ வீக்ஷணத்தின் மஹிமையை பத்தி ஒரு ஸ்லோகம்.

विशालेषु कर्णान्तदीर्घेष्वजस्रं

दयास्यन्दिषु द्वादशस्वीक्षणेषु ।

मयीषत्कटाक्षः सकृत्पातितश्चे-

द्भवेत्ते दयाशील का नाम हानिः ॥ १५॥

விசாலேஷு கர்ணாந்த தீர்க்கேஷ்வஜஸ்ரம்

தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு |

மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்

பவேத்தே தயாசீல கா நாமஹானி ||

ன்னு ஒரு ஸ்லோகம். ‘
ravi said…
ஹே தயாஷீல’, ஹே தயவே வடிவான ஸுப்ரமண்ய மூர்த்தியே, ‘விசாலேஷு’ உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. அதெல்லாம் விசாலமான கண்கள்.
ravi said…
எவ்வளவு விசாலமாக இருக்குன்னா ‘கர்ணாந்த தீர்க்கேஷு’ காது வரைக்கும் நீண்டிருக்கு உன் கண்கள். அதுல ‘அஜஸ்ரம்’ எப்பொழுதும் ‘தயாஸ்யந்திஷு’ தயை நிரமபி வழிந்து கொண்டிருக்கிறது.
ravi said…
உன்னுடைய கடாக்ஷத்துலேருந்து கருணை பெருகி விழுந்துண்டே இருக்குங்கறார், ‘த்வாதசஸு வீக்ஷணேஷு’, உன்னுடைய பன்னிரண்டு கண்கள்லேர்ந்து, ஒரு கொஞ்சம் ‘ஈஷத் கடாக்ஷ:’ கொஞ்சம் உன் பார்வையை, கடைக்கண் பார்வையை ‘மயி’ என்னிடத்தில் ‘ஸக்ருத்’ ஒரே ஒரு தடவை, ‘பாதித:’ விழப் பண்ணினேனா, ஒரு தடவை கண்ணெடுத்து நீ என்னை பார்த்தாயேயானால், எனக்கு எல்லாமே கிடைச்சுடும்.
ravi said…
முருகா உனக்கு அதனால என்ன குறை வந்துடப் போறது? அப்படீன்னு சொல்றார். ‘பவேத்தே தயாசீல கா நாமஹானி’ உனக்கு இதுனால ஒரு ஹானியும் வராதே. அதனால கொஞ்சம் தயவு பண்ணு’ முருகா ன்னு கேட்கறார்.
ravi said…
முருகா, உனக்கு பன்னிரண்டு கண்கள் இருக்கு. எல்லா தெய்வங்களை விட அதிகமான கண்கள் உனக்குத் தான் இருக்கு. அதுவும் எல்லா கண்களும் விசாலமா காது வரை நீண்டு இருக்கு. அப்படி இருக்கும் போது, ஒரு கண்ணால, அது கூட முழு கண் இல்ல, கடைகண்ணால என்னை ஒரு பார்வை பார்த்தேயானால் நான் பிழைச்சு போயிடுவேன். உனக்கு அதனால ஒரு குறையும் இல்லையே அப்படீன்னு சொல்றார்.
ravi said…
பகவான் பூர்ண வடிவினர். அதனால ஒரு ஜீவனுக்கு அவர் அனுக்ரஹம் பண்ணதால ஒண்ணும் குறை ஏற்பட போறதில்லை . சௌந்தர்யலஹரில ‘த்ருசா த்ராகீயஸ்யா’ என்கிற ஸ்லோகத்துல கூட சங்கரர் ‘அம்மா, உன்னுடைய கடாக்ஷத்தை என் மேலே காட்டு.
ravi said…
எனக்கு யோக்கியதை இல்லை தான். ஆனா உனக்கு அதுல ஒண்ணும் நஷ்டம் இல்லையே! சந்திர கிரணம் காட்டுலேயும், மாளிகையிலேயும் ஒரே மாதிரி தானே விழறது. அது மாதிரி தகுதி இல்லாத என் மேலும் உன் கடாக்ஷம் பட்டுதுன்னா ஏதோ நான் பிழைச்சு போவேன். உனக்கு ஒண்ணும் இதுல நஷ்டம் இல்ல. அதுனால ‘தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாம்பி சிவே’ ரொம்ப தைன்யமா இருக்கக் கூடிய என் மேலேயும் கடாக்ஷம் பண்ணும்மா’ ன்னு கேட்ட மாதிரி,
ravi said…
இங்கேயும் அதே மாதிரி கேட்கறார். ‘உன்னுடைய பன்னிரண்டு கண்கள்ல ஏதாவது ஒரு கண்லேயிருந்து ஒரு கடைக்கண் பார்வையை நீ என் மேல விழப்பண்ணு’ ன்னு சொல்றார்.
ravi said…
தேதியூர் சாஸ்த்ரிகள் எவ்வளவு படிச்சவர் எங்கறதுக்கு இங்கே மஹாபாரதத்துலேர்ந்து ஒரு ஸ்லோகம் quote பண்ணியிருக்கார். பன்னிரண்டு கல்யாண குணங்கள் ப்ரம்ம நிஷ்டர்கள் கிட்ட இருக்கு.
ravi said…
அதையெல்லாம் பக்தர்களுக்கும் முருகனுடைய பன்னிரண்டு கண்கள் கொடுக்கும்ன்னு சொல்றார். மோக்ஷ சாதனமான ஆத்மஞானம், சத்யவசனம், மனோநிக்ரஹம், வேதாந்த விசாரம், பொறாமை இன்மை, அதர்மத்தில் லஜ்ஜை, சீதோஷணாதிகளை ஸஹிப்பது, குணமுள்ள இடத்தில தோஷாரோபணம் செய்யாமல் இருப்பது, யாகம், ஸத்பாத்ர தானம், இந்த்ரிய நிக்ரஹம், சத்கர்மாவில் தைரியம்,
ravi said…
இந்த பன்னிரண்டு விதமான ப்ரம்ம நிஷ்டர்களுடைய கல்யாண குணங்களை தன் பக்தரிடத்தில் முருகப்பெருமான் வர்ஷிப்பார், அப்படீன்னு சொல்லி இந்த பன்னிரண்டு கண்களால் பன்னிரண்டு அனுக்கிரஹம் பண்ணுவார்-ன்னு பொருத்தமா ஒரு ஸ்லோகத்தை எடுத்து சொல்லி இருக்கார்.
ravi said…
நேத்திக்கு முருகனுடைய மந்தஸ்மிதம்-ன உடனே காமாக்ஷியினுடைய மந்தஸ்மிதத்தைப் பத்தி மூகபஞ்சசதியில இருந்து பார்த்தோம். அதேமாதிரி மூக கவி காமாக்ஷி கடாக்ஷத்தைப் பத்தியும் நூறு ஸ்லோகம் பண்ணியிருக்கார்.
ravi said…
அதுல ஒண்ணு, ரெண்டு ஸ்லோகம் சொல்றேன். இதே மாதிரி என் மேல உன் கடாக்ஷத்தை விழப்பண்ணக் கூடாதான்னு கேட்கற மாதிரி ஒரு ஸ்லோகம் இருக்கு.

मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन

मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन ।

कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण

श्रेयस्करेण मधुपद्युतितस्करेण ॥

மாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன

மந்தாக்ஷிதேன ஸுஜனைரபரோக்ஷிதேன |

காமாக்ஷி கர்மதிமிரோத்கரபாஸ்கரேண

ச்ரேயஸ்கரேண மதுபத்யுதிதஸ்கரேண ||

ravi said…
ன்னு ஒரு ஸ்லோகம், ‘மாத:’, அம்மா ‘க்ஷணம் ஸ்நபய மாம் தவ வீக்ஷிதேன’, உன்னுடைய கடாக்ஷத்துனால என்னை ஒரு க்ஷணம், நனைப்பாயாக, ‘ஸுஜனைரபரோக்ஷிதேன’ உன்னுடைய கடாக்ஷம் புண்யசாலிகளால் தரிசிக்கப் பட்டது. ‘ மந்தாக்ஷிதேன’ மந்தமா சலிச்சிண்டு இருக்கு. ‘காமாக்ஷி கர்ம திமிரோத்கர பாஸ்கரேண’ என்னுடைய வினைகள் என்ற இருளைப் போக்கும் பாஸ்கரனாக, ஸூரியனாக உன்னுடைய கடாக்ஷம் இருக்கு. ‘ஸ்ரேயஸ் கரேண’ எல்லா க்ஷேமமும் கொடுக்கக்கூடியது. ‘
ravi said…
மதுபத்யுதி தஸ்கரேன’ மதுபஹன்னா வண்டு. அந்த வண்டினுடைய ஒளியை உன்னுடைய கண்கள் அபகரிக்கிறதுன்னு சொல்றார். அதாவது கண்கள் வண்டு மாதிரி இருக்குங்கறதை சொல்றார்.
ravi said…
இன்னொரு ஸ்லோகம் கடாக்ஷத்தை பத்தி மூககவி பண்ண ஸ்லோகத்துல எனக்கு இது ஒண்ணு பிடிச்ச ஸ்லோகம்.

संसारघर्मपरितापजुषां नराणां

कामाक्षि शीतलतराणि तवेक्षितानि ।

चन्द्रातपन्ति घनचन्दनकर्दमन्ति

मुक्तागुणन्ति हिमवारिनिषेचनन्ति ॥

ஸம்ஸாரகர்மபரிதாபஜுஷாம் நராணாம்

காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷிதானி |

சந்த்ராதபந்தி கனசந்தனகர்தமந்தி

முக்தாகுணந்தி ஹிமவாரிநிஷேசனந்தி ||

ravi said…
சம்சாரகர்மம்’, சம்சாரம், வாழ்க்கை தவிப்பு என்ற, கடுமையான வெயில், அந்த வெயில்ல வாடற ஜனங்களுக்கு, ‘நரானாம்’ ‘காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷதானி’ உன்னுடைய கடாக்ஷம் குளிர்ச்சின்னா,
ravi said…
குளிர்ச்சியுடைய superlative, ஷீதலதமம், ஷீதலதரம், ‘ஷீதலதரானீ தவேக்ஷிதானி’. எவ்வளோ குளிர்ச்சியா இருக்குன்னா ‘சந்திராதபந்தி’, சந்திரனைப் போல குளிர்ச்சியா இருக்கு. ‘கன சந்தன கர்தமந்தி’ சந்தனத்தை பூசிண்டா எப்படி குளிர்ச்சியா இருக்குமோ அதுமாதிரி இருக்கு. “
ravi said…
முக்தாகுணந்தி’ முத்து மாலையை போட்டுண்டா உடம்புக்கு குளிர்ச்சிம்பா, அது மாதிரி முத்து மாதிரி குளிர்ச்சியா இருக்கு. ‘ஹிமவாரி நிஷேசனந்தி’ பனிமழை மேல பொழிஞ்ச மாதிரி அவ்வளோ குளிர்ச்சியா இருக்குங்குறார். அது மாதிரி காமாக்ஷியினுடைய கடாக்ஷம் நம்ம மனசை குளிரப் பண்ணும். அந்த காமாக்ஷியினுடைய பிள்ளையான சுப்ரமண்ய ஸ்வாமியினுடைய கடாக்ஷமும் நமக்கு எல்லாவிதமான அனுக்ராஹமும் பண்ணும்.

வெற்றி வேல் முருகனுக்கு …ஹர ஹரோ ஹரா
ravi said…
"#பத்து_கை_ஆஞ்சிநேயர்"

நாம் இதுவரை இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான் தரிசித்திருப்போம். ஆனால், #பத்து_கைகள்,_மூன்று_கண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.
ravi said…
#தல_வரலாறு: இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,""இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் சிலர் உயிருடன் உள்ளனர்.
ravi said…
அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர். இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,''என்றார்.
ravi said…
உடனே ராமன், ""மகரிஷியே! அந்த அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.
ravi said…
அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும்படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது. இதற்கெல்லாம் சரியான நபராக ஒருவர் இருக்கிறார். அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமானஅனுமனைஅனுப்புகிறேன்,'' என்றார்.
#திருமால் அனுமனுக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தார். #பிரம்மா பிரம்ம கபாலத்தை கெடுத்தார். #ருத்ரன் மழு (கோடரி)தந்தார். #ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தார். #இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தார். #கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தார். இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார். #சிவன், தனது சிறப்புக்குரிய #நெற்றிக்கண்ணை வழங்கினார். இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து அயோத்தி திரும்பினார். திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில்தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது. நாளடைவில் அனந்தமங்கலம் ஆனது.
#அனுமனின்_சிறப்பு:

அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம். அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த கிரக பாதிப்பும் தோஷமும் இருக்காது. இவருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் நமது குறைகள் வெண்ணை உருகுவது போல் உருகி விடும்.
ravi said…
GOOD PEOPLE EXIST



5 days ago @ 6 am, while returning to Delhi from a nearby city, my car got stuck near a Village in a railway underpass with knee-deep water due to incessant rain the night before.


A tractor came by. I asked for his help to pull the car out. He immediately agreed, disengaged the trolley a little farther away and came back in his tractor to help.


Later started pulling the car out of water with a rope, finally the car was out and parked on the side in safe zone.


Naturally, I felt indebted to him and wanted to thank him with all my heart.


I went up to him and thanked him with folded hands and then took out some money and offered him for his time & efforts.


Although, no price could be put on his great help, great efforts and his time, but I felt it was the least I could do apart from thanking him.


But his response surprised me...!!


ravi said…
He refused to take money even after my insistence several times.


When I insisted more, being a humble villager, he said, "you can beat me with shoes BUT please don't insult me by offering money...it was my duty to help you".


I was speechless.


Such humility and selfless help.


GOD has still not stopped making such people !!

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை