பச்சைப்புடவைக்காரி -பகையை வெல்லும் ஆறுபடை - 2 திருச்செந்தூர் 3- 275
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் ஆறுபடை - 2
திருச்செந்தூர் 3
(275) 👍👍👍💥💥💥
முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி,சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகியவை உள்ளன.இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைப்பகுதியிலும், திருச்செந்தூர் கோயில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது.
அதுமட்டுமல்லாது திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள் இங்கு பார்ப்போம்.
படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்திரனை வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.
சூரபத்திரன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
பெயர் காரணம்
சூரபத்திரனை வெற்றிகொண்டதால் இங்கே கோயில் கொண்ட முருகப்பெருமான் 'செயந்திநாதர்' என்று விளிக்கப்பட்டதாகவும் அதுவே பின்னாளில் மருவி 'செந்தில்நாதர்' என்று மருவியதாம். அதுபோலவே இவ்வூரும் 'திருசெயந்திபுரம்' என்பதிலிருந்து திருச்செந்தூர் என்று மருவி வந்தது. சிலப்பதிகார குறிப்புகள் படி இக்கோயில் 2000 ஆண்டுகள் பழமை. இவ்விடம் முன்னர் 'திருச்சீரலைவாய்' என்றே அழைக்கப்பட்டது .
கோயில் அமைப்பு: முன்னுரையில் சொன்னது போலவே அறுபடை வீடுகளில் மலைமீது அமைந்திராத கோயில் இது மட்டுமே. திருச்செந்தூர் கோயிலின் ராஜகோபுரம் ஒன்பது அடுக்குகளை கொண்டு 150 அடி உயரமுடையதாகும்.
கோயில் அமைப்பு:
முருகனின் இடது கையில் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார். முருகனின் பின் புறம் இடது சுவரில் முருகன் பூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது. அதற்கு முதலில் பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது.
இரு முருகன் :
சூரனை வதைத்த முருகன் நான்கு கைகளுடன் சிவபூஜை செய்து ஜடாமுடியுடன் தவக்கோலத்தில் இருக்கின்றார். அவரின் தவத்தை கலைத்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கென்று தனி பிரகாரம் கிடையாது. மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார்.
திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் வீரவாகுதேவர் காவல் தெய்வமாக இருக்கிறார். இதனால் இத்தலத்துக்கு ‘வீரவாகு பட்டினம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.
மஞ்சள் நீராட்டு:
கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளில், தங்கள் ஊர் பெண் தெய்வானையை திருமணம் செய்ததற்காகவும், போர் முடிந்து முருகனின் உக்கிரத்தை குறைக்கும் விதமாகவும் முருகன் மீது பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி விளையாடுகின்றனர்.
திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சில முனிவர்கள் உலக நலனை காக்க ஒரு புத்திரன் வேண்டும் என கருதி, ஐப்பசி மாத அம்மாவசையன்று தொடங்கி, 6 நாட்கள் யாகம் நடத்திருக்கின்றனர்.
கோயில் காலை 5 மணிக்கு முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் 9 கால பூஜை நடைப்பெறுகிறது.
கங்கை பூசை:
தினமும் மதிய உச்சிகால பூஜை முடிந்த பின் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள தாளத்துடன் சென்று கடலில் கரைக்கப்படுகிறது. இதற்கு கங்கை பூஜை எனப்படுகிறது.
புத்தாடை : தீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். அதே போல இந்திரன் மகளான தெய்வானையை முருகன் மணமுடித்திருப்பதால், இந்திரன் புத்தாடை எடுத்துத்தருவதாக நம்பப்படுகிறது.
திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.
திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.
திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.
திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.
மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் எனும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர் கோவில் திருப்பணிக்காக மவுனசாமி, காசிநாத சுவாமி, ஆறுமுகசாமி மூவரும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தனர். அவர்களது சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
தமிழகத்தில் முதன் முதலில் நாகரீகம் தோன்றிய நகரங்களுள் திருச்செந்தூரும் ஒன்று.
முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
திருச்செந்தூர் கோவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைபெற்று இருப்பதாக வரலாற்று ஏடுகள் கூறுகின்றன.
இத்திருத்தலம் மன்னார் வளைகுடாக் கடலின் கரையோரத்தில், அலைகள் தழுவ அமைந்திருப்பதால், அலைவாய் என்று அழைக்கப்பட்டது. பின்னர், திரு என்றும் அடைமொழி சேர்க்கப்பட்டு, ‘திருச்சீரலைவாய்’ என்று அழைக்கப்படுகின்றது.
இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கிய பின்னர்தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.
இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
முருகப்பெருமானின் வெற்றி வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் திருச்செந்தூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கடற்கரை ஓரமாக உள்ள மாப்பாடு என்ற இடம் ஆகும். இப்பகுதி தற்போது, மணப்பாடு என்று அழைக்கப்படுகின்றது.
அலைவாய், திரச்சீரலைவாய், வெற்றி நகர், வியாழ சேத்திரம், அலைவாய்ச் சேறல், செந்தில், திரிபுவளமாதேவி சதுர்வேதி மங்கலம், சிந்துபுரம், ஜெயந்திபுரம், வீரவாகு பட்டினம், என்றெல்லாம் திருச்செந்தூர் முன்பு அழைக்கப்பட்டது.
முருகனின் அறுபடை வீடுகளில் இது 2-வது படை வீடு எனப்படுகிறது. ஆனால் இதுதான் முதல் படை வீடு என்ற குறிப்புகளும் உள்ளன
முருகனின் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பதுதான். திருச்செந்தூரில்தான் அந்த அவதார நோக்கம் பூர்த்தியானது. எனவே முருகனின் தலங்களில் திருச்செந்தூர் தலமே தெய்வீக சிறப்பும், தனித்துவமும் கொண்டதாகும்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகப்பெரிய கோவில் கொண்ட தலம் என்ற சிறப்பும் திருச்செந்தூர் கோவிலுக்கு உண்டு.
முருகன் சிவந்த நிறம் உடையவன். அவன் உறைந்துள்ள தலம் என்பதால்தான் இத்தலத்துக்கு செந்தில் என்ற பெயர் ஏற்பட்டது.
திருச்செந்தூர் ஊர் மத்தியில் சிவப்கொழுந்தீசுவரர் கோவில் உள்ளது. இதுதான் ஆதிமுருகன் கோவில் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். எனவே திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
அருணகிரி நாதர் தன் பாடல்களில் பல இடங்களில் திருச்செந்தூரை குறிப்பிட்டுள்ளார். அவர் திருச்செந்தூரை மகா புனிதம் தங்கும் செந்தில் என்று போற்றியுள்ளார்.
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும்.
திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.
குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.
முருகன், மால், ரங்கநாதப் பெருமாள் ஆகிய சைவ, வைணவ மூர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன.
செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.
வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு.
முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, «பரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.
உச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள்.
ஜன்ம ம்ருத்யு ஜராதப்த ஜன விஶ்ராம்தி தாயினீ | जन्म-मृत्यु-जरा-तप्त-जन-विश्रा न्ति-दायिनी .
இந்த உலகில் தோன்றி யவர்கள், தோன்றியவைகள், எல்லாமே பிறப்பு, வயோதிகம், முதுமை, இறப்பு என்ற வழியில் தான் தப்ப முடியாமல் செல்லவேண்டும். மீண்டும் அதே. அவர்களுக்கு ஆறுதல் தரும் ஒரே தெய்வம் அம்பாள் ஸ்ரீ லலிதை தான். தாயல்லவா?
முக்தி ஒன்றே இந்த பந்தத்திலிருந்து விடுபடும் மார்க்கம். ஸ்வர்கம் என்பது நிரந்தரவாசமல்ல . ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தான். அப்புறம் விடுதியை காலி செய்துவிட்டு கீழே இறங்கவேண்டும். முக்தி என்பது ஆத்மா இறைவனோடு ஒன்று சேர்வது. அதற்கு பிறப்பு இறப்பு இல்லை. அது தான் ப்ரம்மத்தோடு கலந்துவிட்டதே. அதற்கு தனியாக எந்த அடையாளமும் இல்லையே.
ஸர்வோபநிஷதுத்குஷ்டா, सर्वोपनिषदुद्गुष्टा
எல்லா உபநிஷதங்களும் போற்றுவது அம்பாளைத் தானே. அவள் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவள். சக்தி வாய்ந்தவள். அவள் சொல்லுக்கு மறுப்பு இல்லை. ஞானத்தை தருபவை உபநிஷதங்கள். அவற்றின் உருவம் அவள். ப்ரம்ம ஸ்வரூபம். அவளில்லையேல் சிவன் இல்லை. பக்தர்களை சிவனிடம் கொண்டு சேர்ப்பது சக்தி தான்.
ஏற்கனவே சொல்லி இருப்பதால் உங்களுக்கு தெரியுமல்லவா? உபநிஷதங்கள் வேதங்களின் சாரம். அந்தம். முடிவு.
ப்ரம்ம ஞானத்தை அடைய உதவுவது. உபநிஷதங்களுக்கு ஞான காண்டம் என்று பெயர் உண்டு. பிரம்மத்தை அறிய, தெரிய, உணரச் செய்வதால் இந்த பெயர். சாந்தோக்ய உபநிஷத் (I.i.10) “ ஞானமும், அறியாமையும் வெவ்வேறு முடிவை தருபவை. ஞானத்தை அறிவதன் மூலம், ஆச்சர்யன் மேல் பக்தி, நம்பிக்கை கொண்டு அதை உணர்பவன், தெளிபவன், வேதங்களை அறிபவன் பயன் அடைகிறான்'' என்கிறது.
ரிஷிகள் பலர் இப்படி எல்லாம் அற்புதமாக எழுதி வைத்து விட்டு போயிருக்கிறார்கள். அஞ்ஞானம் என்ன செய்யும் என்று சொல்லவோ எழுதவோ வேண்டாம். அனுபவிக்கிறோமே தெரியாதா? போதாதா?
Comments
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், நான்கு கைகளுடன் கூடிய பெருமாள், திவ்விய தரிசனம் அளிக்கும் திருக்கோயில் ஒன்று உள்ளது. முன்னொரு காலத்தில் தேவாஜி என்பவர் அந்தக் கோயிலில் மிகுந்த பக்தியுடன் பூஜை செய்து வந்தார். தினமும் இரவில் பூஜை முடிந்ததும் அன்று ஸ்வாமிக்குப் போட்ட பூமாலைகளில் ஒன்றை, தன் தலையில் வைத்துக் கொண்டு வீடு திரும்புவது அவரது வழக்கம்.
ஸ்வாமி விக்கிரகத்தில் அப்போது வேறு எந்த மாலையும் கிடையாது. எனவே, தலையிலிருந்த பூமாலையை எடுத்து உடனே கற்பூரத்தட்டில் வைத்தார் தேவாஜி.
அரசன் நம்பவில்லை. ‘‘நாளை காலை நான் வந்து, ஸ்வாமியின் முடி நரைத்துள்ளதா என்று பார்ப்பேன்!’’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அங்கிருந்து
வந்து சேர்ந்த தேவாஜி, ‘‘பகவானே, என்னைக் காப்பாற்றும்!’’ என்று இரவு முழுவதும் பிரார்த்தித்தார்.
அரசன் திருப்தியுடன் ஸ்ரீநாராயணன் மகிமையை வியந்து அரண்மனை திரும்பினான்.
‘‘ஸ்ரீமந் நாராயணா... இந்த ஏழையைக் காப்பாற்றவா நீங்கள் நரைமுடி சுமந்தீர்?’’ என்று நெகிழ்ந்து கேவிக் கேவி அழுதார் தேவாஜி.
*Deivathin kural volume 2 pg 438.*
Apart from all these need to put in your efforts to ensure non closure of the vedha patasalas which are struggling to run & help to add more students there.Only when we do liberal financial support to both the vedic teachers and students this will happen .
In an era where there are numerous professions that attract them monetarily, if some need to continue Vedic study and teach others later as their life time profession, we need to support such people financially in such a manner they do not regret for having chosen this profession. Even though luxury is not advisable, we need to provide support to them in such a manner other professions do not lure them.
*Deivathin kural volume 2 page 436*
Since it is difficult for office going Brahmins to learn Vedic learning completely. I said at least these things(Brahma yagyam, sahasra gaytri chanting at least on Sunday, learning purusha suktam, Sri suktam and rudram) they should do .Good things done are more creditable when it is accomplished despite hurdles .Same way with lot of devotion and faith, if they decide to learn Veda, which has been nurtured by thousands of generations, they will be able to complete it within few years if they start even now.
.
There are people who were not aware of anything about Vedha, all of sudden got inspired and practiced Vedic learning after that with ardour. Some of the office bearers in our Vedha rakshana trusts are all like that. Therefore, dedication and commitment is what is needed to accomplish this
பிறவி இல்லா வாழ்க்கை வாழ வேண்டும் ... என்றும் உன் நாமம் அதை சொல்ல வேண்டும் ...
இனி என்ன வேண்டும் ?
காண வேண்டும் சொர்க்கம் உன் காலடியில்
கிடக்க வேண்டும் படிக்கட்டாய் மந்திராலயத்தில் ...
இனி என்ன வேண்டும்... ?
ஓடும் துங்க பத்திராவில் துள்ளும் மீனாக நான் மாற வேண்டும் ... இனி என்ன வேண்டும் ..
ரீங்காரம் இட்டே உன் பிருந்தாவனமதில் தேன் உண்ண வேண்டும் ..
இனி என்ன வேண்டும் ...? 💐💐💐
நீலமேக ச்யாமளனோ நீ ...
இல்லை
நஞ்சுண்ட ஹரனோ நீ
இல்லை
நெஞ்சில் ஆடும் அம்பிகையோ நீ
நீ யாரென்று அறியும் முன்னே என் கண்கள் மலர்ந்து விடுமோ சாயி ...
கருணையின் பெயர் ஏதுவாய் இருந்தால் என்ன ...??
தாயின் அன்பில் மாற்றம் உண்டோ சாயி ..
பிள்ளை பேய் என்றாலும் சேயாக நினைப்பவன் அன்றோ நீ ...
பேசும் தெய்வமே! உன்னிடம் பேசும் மொழி ஒன்று சொல்வாயோ 💐💐💐
கலி தீர்ப்பான் ரமணன் என்றே கேள்விப்பட்டேன் ...
திருவாதிரை களி கொண்டுவந்தேன் ..
கற்பகமே மௌனம் கொஞ்சம் களைத்தே தத்து கிளி வார்த்தை பேசாயோ ...
பேசும் சித்திரமே பேரம் செய்யும் வாழ்க்கை இதில் சோகம் கொண்டு வாழ்கிறேன் ...
துள்ளி குதித்து என்னை அள்ளி அணைப்பாயோ ரமணா 🌷🌷🌷
முடி சூடிய மன்னனுக்கும் வருமோ உன் காந்தி ...
பாரிஜாத பூக்கள் இந்திரன் அனுமதி இல்லாமல் இறங்கி விட்டதோ காஞ்சி தனில்
கற்பக விருக்ஷம் காணாமல் போனதோ ஆயிரம் கண் கொண்டவனின் அந்தப்புரத்தில் ...
நந்தினியும் காணவில்லை உன் அருள் பாலை உண்ணவே இறங்கி வந்து விட்டதோ ..
உத்தமனே ஒன்றும் செய்யாமல் இந்திர லோகத்தை நீ இருக்குமிடம் எப்படி வரவழைத்தாய் ? 💐💐💐🌸🌸🌸🌷🌷🌷🌺🌺🌺
கிள்ளிக் களைந்தானைக்
கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்!
நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.😊😊😊
பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது.
கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது.
வியாழன் மறைந்து விட்டது.
பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன.
தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே!
விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்?
அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே!
மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா?
எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.🎉🎉🎉
தூக்கம் ஒரு திருட்டுத்தனம்.
பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல!
*நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்!*
அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான்.
வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலாமே என நினைக்கக் கூடாது.
அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும்.
சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும்.
இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும்.
அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்?
இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?🎉🎉🎉
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும்
புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல்
பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.👍👍👍
அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன.
நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன.
இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள்.
அவர்கள் நமசிவாய என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள்.
இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது.
தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென , மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.👍👍👍
இதனால் தான் அவளை *சியாமளா* என்கிறோம்.
சியாமளம் என்றால் கருநீலம்.
சிவந்த நிறமுடையவர் சிவபெருமான்.
மாணிக்கவாசகர் தன் தெய்வீகப் பார்வையால் கரிய குவளை மலர்களை அம்பிகையாகவும், தாமரையை சிவனாகவும் பார்க்கிறார்.
சாதாரண குளத்தில் உடல் அழுக்கு நீங்கும்.
பக்தி குளத்தில் மன அழுக்கு நீங்கும் என்பது அவரது இனிமையான கருத்து.💐💐💐
பதிவு 88 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
*13 & 14 வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌A recap 👏👏👏
உன்னை படைத்து உன்னுள்ளே ஒளிர்கிறாள் உலகத்தாய் வாலை.
அவளை பாரு என்கிறார் கருவூர் சித்தர்.
மனதை அங்கே- சிரஸில் நிறுத்தி மனக்கண்ணாலே உணர்ந்து இருந்தாலே தவம் செய்தாலே ஞானம்
பெறுதலுக்கு வழி.
ரிஷி துர்வாஸர் தனது *சக்தி மஹிமை*’ எனும் கிரந்தத்தில் கூறுவார்’
தேவியின் தலைமுடியின் நறுமணத்தை
நமது இதய சக்கரத்தில் இருத்தி , தியானம் செய்ய வேண்டும்’ என்று.
உலக மாதாவின் தலைமுடிக்கே அஞ்ஞானத்தை விரட்டியடிக்கக் கூடிய சக்தியிருக்குமெனில் அவளது முழு
உருவத்திற்கு எவ்வளவு சக்தியிருக்கும்?
அவளது தலைமுடியிலுள்ள நான்கு மலர்களின் வாசனை என்பது நமது அந்தக்கரணத்தைக்
குறிக்கிறது.
மனது, புத்தி, போதம்,அஹம் இவை நான்கும் சேர்ந்தது தான் அந்தக்கரணம் .
மாதாவின்
தலைமுடியோடு சேரும்பொழுது அந்தக்கரணம் அசுத்தம் செய்யப்படுகிறது.
அந்தக்கரணம்
சுத்தமானால்தான் ஞானம் – *ஆத்ம சாக்ஷாத்காரம்* பெறமுடியும்.👍👍👍
Hindu philosophy mainly revolves around the four Veda-s.
Since Veda-s are difficult to understand for a commoner, the crux of the Veda-s is provided in the form of Upaniṣad-s.
Upanishads make attempts to interpret the Brahman, the God.
Such interpretations are only by means of affirmations and negations as any attempt to interpret or describe the Brahman becomes an ineffectual exercise.
The Brahman that Upaniṣad-s talk about is formless divine energy beyond the comprehension of normal human brain.
The philosophy of self-realization revolves around these Upaniṣad-s.
Self-realization is the logical conclusion of spiritual quest.
It is the final step of understanding the Brahman.
In modern times, Self-realisation is also known as God realization and Kṛṣṇa consciousness.🌞🌞🌞
#தென் திசையை நோக்கி ஆடுவது ஏன்? "
அடுக்க வந்துவந் தாடுவான் ஆடலின் இளைப்பு
விடுக்க ஆரம்மென் கால்திரு முகத்திடை வீசி
மடுக்க வும்தமிழ் திருச்செவி மாந்தவும் அன்றோ "
திருச்சிற்றம்பலம்
निर्व्यापारोऽपि निष्कारणमज भजसे यत्क्रियामीक्षणाख्यां
तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पादिकाले।
तस्या: संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं
स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ वैकुण्ठ रूपं॥५॥
நிர்வ்யாபாரோSபி நிஷ்காரணமஜ! ப4ஜஸே
யத் க்ரியாமீக்ஷணாக்2யாம்
தேனைவோதைதி லீனா ப்ரக்ருதிரஸதி
கல்பாSபி கல்பாதி3காலே|
தஸ்யா: ஸம்சு’த்3த4மம்ச’ம் கமபி தமதி
ரோதா4யகம் ஸத்வரூபம்
ஸத்வம் த்4ருத்வா த3தா4ஸி ஸ்வமஹிம
விப4வாகுண்ட2! வைகுண்ட2! ரூபம் || ( 1- 5)
ஜனனம் அற்ற விஷ்ணுவே! நீர் உண்மையில் செயலற்றவராக இருந்த போதிலும் காரணமே இல்லாமல் மாயை ஏவுவது போன்ற செயல்களைச் செய்கின்றீர்கள். தங்களிடம் லயித்திருந்ததால் இல்லாததைப் போலத் தோன்றிய மாயை, சிருஷ்டியின் போது மீண்டும் வெளிப்படுகின்றது. உங்கள் யோக மகிமையால் தடையற்ற சிற் சக்தியுடைவர் நீர். மாயையை ஏவுகின்ற நீர் சுத்தமான சத்துவ குணத்தின் வடிவத்தை, மாயையின் ஓரம்சத்தை எடுத்துக் கொண்டு லீலா விக்ரஹமாகத் தரிக்கின்றீர். (1-5)
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்
ஓம் ரவிசுதாய வித்மஹே
மந்தக்ரஹாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
பங்கு பாதாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்
ஓம் சனீஸ்வராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்
ஓம் சதுர்புஜாய வித்மஹே
தண்டஹஸ்தாய தீமஹி
தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்🙏🙏🙏
*28. 12. 2020 - MONDAY*
*நாடும் நாமும் நலமாய் வாழ*
*நற் சிந்தனைகள்.*
*இனிய திங்கள் காலை வணக்கம்.*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
*உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும்*...
*மற்றவர்களிடம் அதை நிரூபிக்க வேண்டியதில்லை*..!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*பலசாலிகள் என்று யாரும் இல்லை ...*
*அடுத்தவரின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்பவர்களே ...*
*பலசாலிகளாகத் தெரிகிறார்கள் ...!*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
எல்லோரும் *நல்லவர்கள் என்று நினைப்பது* தவறு இல்லை ...
எல்லா நேரமும் *நல்லவர்களாகவே* இருப்பார்கள் என்று *நினைப்பது தான்* தவறு ...!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
4 கோடி பாடல்கள்
ஒருசமயம் சோழ மன்னனுக்கு வினோதமான ஒரு சிந்தனை தோன்றி, உடனே தன் அரண்மனைப்புலவர்கள் அனைவரையும் அழைத்து, நாளை காலைக்குள் நான்கு கோடி பாடல்கள் எழுதி வரவேண்டும் என ஆணையிட்டார்.
நான்கு பாடல்கள் எழுதவே நான்கு வாரமாகிவிடுகிறது. இதில் எங்கே நான்குகோடிப் பாடல்கள் எழுதுவது என்று புலவர்கள் எல்லாம் சிந்தைகலங்கி நின்றபோது,
புலவர்கள் அவையில் இந்த கோடிப்பாடல்களை வாசிக்க, மன்னன் வியந்து, இவற்றை நிச்சயம்_அவ்வையார்தான் இயற்றியிருக்க முடியும் எனப் புலவர்களைப் பார்க்க, புலவர்கள் அனைவரும் 'ஆமாம்.. அவ்வையார் இயற்றியதுதான்' எனக்கூற, மன்னன் மனமகிழ்ந்து அவ்வையை அழைத்து, பெரும் பரிசு அளித்து, பெரு மரியாதை செய்து போற்றினான் என்பது வரலாறு.
#அந்த_நான்குகோடி_பாடல்கள்:
1. மதியாதார்_முற்றம்_மதித்தொரு #கால்_சென்று_மிதியாமை_ *கோடி* பெறும்.
நல்ல பண்புகளைக் கைக்கொள்ளாமல் வாழ்பவர் வீட்டிற்கு செல்லாதிருப்பது, கோடி பொன்னுக்கு சமம். அல்லது மதிக்காதவர் வீட்டுக்கு செல்லாமல் இருப்பது எனவும் பொருள் கொள்ளலாம்.
2. உண்ணீர்_உண்ணீர்_என்று #உபசரியார்_தம்மனையில் #உண்ணாமை_*கோடி* பெறும்.
3. *கோடி* _கொடுத்தும்_குடிப்பிறந்தார் #தம்மோடு_கூடுதல்_*கோடி*_பெறும்.
கோடி பொன்னைக் கொடுத்தாவது, நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களிடம் சேர்ந்து வாழ்வது, கோடிப் பொன்னுக்கு ஒப்பாகும்.
4. *கோடானு_கோடி* கொடுப்பினும் #தன்னுடைய_நாக்_கோடாமை_*கோடி*_பெறும்.
கோடி பொன் கொடுப்பதாகச் சொன்னாலும், சொன்ன சொல் மாறாமல் வாழ்பவன் கோடி பொன்னுக்கு சமம்.
அவ்வையார் நீதிக்கதைகள் #எக்காலத்துக்கும் எல்லோருக்கும் பொருந்தும்.
*பதிவு 853*🥇🥇🥇
*US 845*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
34வது ஸ்தபகம்
*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍
இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
ப்ரதம மனகம் வாஞ்சா ம் யன்னம் ததா ரஸூ தாதி தேர்
பகவதி தத பாதத் வந்த்வே தவா விசலாம் ஸ்திதிம்
அதத் ஸூரஜகத் வார்த்தா ஞானம் ஸவித்ரி தத பரம்
முனி புவி பவே ஹேதும் ஞாதும் ம்ருகாக்ஷி புரத் விஷ 👍👍👍
*பதிவு 273*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
48/
3
வரீ வர்த்து ஸ்த்தேமா த்வயி
மம கிராம் தேவி மனஸோ
நரீ நர்த்து ப்ரௌடா வதன கமலே வாக்யலஹரீ
சரீ சர்த்து ப்ரஜ்ஞா ஜனனி ஜடிமா ந பரஜனே
ஸரீ ஸர்த்து ஸ்வைரம் ஜனனி மயி காமாக்ஷி கருணா 🎉🎉🎉
தியாகபிரம்மம் முத்துசுவாமி தீட்சிதர், பாரதியார் ஆகியோர் இத்தலம் குறித்து பாடியுள்ளனர்.
குறிப்பாக பாரதியார் பாடிய கண்ணன் பாடல்கள் அனைத்தும் இப்பெருமாளைப் பற்றியது எனக் குறிப்பிடுவர்.
அனுதினமும் பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டிருக்கிறார்.
சங்கீத மேதை தியாகராஜ சுவாமிகள், தத்துவ மேதை விவேகானந்தர், கணித மேதை ராமானுஜம், அரசியல் மேதை சத்தியமூர்த்தி ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டுள்ளனர்.
பிரகாரத்தில் கஜேந்திரவரதர், கருடர் மீது காட்சி தருகிறார்.
எனவே இவரை, “நித்திய கருடசேவை சாதிக்கும் பெருமாள்’ என்று அழைக்கின்றனர்.
திருக்கச்சிநம்பி, வேதாந்தச்சாரியார், ராமானுஜர், மணவாளமாமுனிகள், சக்கரத்தாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோர் பிரகாரத்தில் இருக்கின்றனர்.💐💐💐
*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
சுக்ரீவன் இப்படித் தன் கருத்தைக் கூறிய பிறகு, இராமபிரான் அளவற்ற ஞானமுடைய ஜாம்பவானிடம் உன் கருத்து என்ன என்றான்.
ஜாம்பவான் கூறுகிறான்:
"சிறந்த அறிஞர் என்பதற்காக ஒரு பகைவரை நம்முடன் சேர்த்துக் கொள்வது அழிவுக்கு ஏதுவாகும்.
அரக்கர்களுக்கு அறவழி என்பது நம்மிடமிருந்து மாறுபட்டதாகும்.
நாம் இராவணனோடு போரிடுங்கால், இவர்கள் நல்ல உபாயங்களைச் சொல்வார்கள் என்பது உண்மைதான்.
நமக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளுக்கும் காரணங்களை அறிந்து அவற்றை நிவர்த்திப்பார்கள்.
எல்லாம் சரிதான்,
ஆனால் அவர்கள் நமது பரம்பரை எதிரிகள் என்பதை மறந்துவிடக்கூடாது.
மேலும் சிற்றினத்தாராகிய இவர்களோடு நாம் சேரலாமா?'.🌷🌷🌷
*வது ஸ்லோகம் பொருளுரை*👏👏👏
மேலும், “க்ருஷ்ணர் கோவர்த்தனோத்தரணம் பண்ணினார் என்கிறோம்.
பூமிக்குக் கீழேயும் ஆழமாகக் கையைவிட்டு மலையை ஆட்டிப் பிடுங்கி வெளியே தூக்கி ‘உத்தரண’ மாகச் செய்திருக்கிறார்.
அத்புதமாக அனாயாசமாக செய்திருக்கிறார்.
அதர்மச் சேற்றில் அழுந்திப் போயிருக்கும் ஜகத்தை அவர்கள் அடியில் கை கொடுத்துப் பிடுங்கி வெளியே இழுத்துக்கொண்டு வருவதால்தான் *ஜகதோத்தாரணா!* என்று தாஸர் பாடுகிறார்.
வெளியே இழுத்ததை எறியத்தான் வேண்டுமென்றில்லை.
அதை நல்லபடியும் பண்ணலாம்.
அப்படித்தான் அவதாரப் புருஷர்கள் உலகத்தை அதர்மத்திலிருந்து இழுத்துக்கொண்டு வந்த பின் அதற்கு நல்லது பண்ணுவது.
அதர்மத்திலிருந்து விடுபடுத்துவதே நல்லதுதான்!
கோவர்த்தனகிரியை இழுத்தெடுத்த பின் பகவான் எறிந்துவிடாமல் குடையாக அல்லவா உபயோகப்படுத்தினார்?
அதற்குத்தானே அதைப் பிடுங்கியதே?” என்கிறார்.💐💐💐
சரணம்.
ராஐப்பா, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில உள்ள, திருக்கோவிலூரில், உள்ள பிரசித்த பெற்ற, பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் , மடபள்ளியில், ரொம்ப வருடங்களாக, பரிசாராக (சமையல் வேளை), பெருமாளுக்கு, நித்தியமும் , நைவேத்திய தளிகை பண்ணி கொண்டு இருந்தார்.
முதல் பையன் பெயர், வரதன், துறுதுறுவென்று, சுட்டிகையாக, அவ்வளவு அழகாக, ரொம்ப புத்திச்சாலியாக, இது என்ன, அது என்ன என்று , எப்போதும் எதையாவது கேட்டுன்டு இருப்பான்,
ரொம்ப சமத்து, எதுக்கும் பிடிவாதம் பண்ண மாட்டான். இது வேணும், அது வேணும் என்று அடம் பிடிக்காத, சமத்து குழந்தை.
குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா,அலை மீது அலையாக துயர் வந்து சேரும் போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா என்று காஞ்சி பெரியவாளை பற்றி, பாடலை மெய் மறந்து கேட்டு , தன் மனசில் குடியிருக்கும், பாரத்தை , இறக்கி கொள்ளுவார்.
மனம் முழுக்க காமு , ஜெயஸ்ரீ, சாமா எல்லாரும் முகங்களும் வந்து போயின.
என்று காரியஸ்தர் சொல்ல,திடிரென சலசலப்பு , அங்கு ஒரு சுமார் 24 அல்லது 25 வயது இளைஞர், நெற்றியில் திருமண் இட்டுன்டு, அதுக்கு கிழே விபூதி இட்டுன்டு, பஞ்சகச்சம் கட்டிய வெள்ளை வேட்டி, அங்கவஸ்திரம் கட்டின்டு, பளிச்சென்று, அழகாக இருந்தார்,
அங்கு சிறிது நேரம் மெளனமான சூழல் உருவாக.. மெதுவா, ராஜப்பா என்று , மெல்லியகுரலில் அழைத்து, இத்தனை நாள், எந்த மன உளைச்சலில் நீ தவிச்சின்டு இருந்தியோ, அதுக்கு , அம்பாள் காஞ்சி காமாட்சி அருளால், நோக்கு விடை கிடைக்க போகிறது, சித்த கண்ணை முடின்டு, காமாட்சி அம்மனை மனசில நினைச்சுக்கோ, பிறகு கண்ணை திற என்று சொல்ல,
படித்ததில் பிடித்தது.
Lord Krishna replied “They were both present in the court when a lady (Draupadi) was being disrobed and being elders they had the authority to stop it but they did not. This single crime is enough to destroy all righteousness of this world”
He was known for his charity. No one went empty handed from his doorstep. Why did you have him killed?”
Lord Krishna said “No doubt Karna was known for his charity. He never said ‘No’ to anyone who asked him for anything.
Understand that your one act of injustice can destroy your whole life of honesty.
This story is great example of Karma Theory in Path To Prosperity. So Lets create any Karma with Awareness what is righteous.
*Be Blessed Of Divine Light.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இராமாயணத்தில் பல கதா பாத்திரங்கள், கதை ஓட்டத்தில் முக்கியத்வம் பெறாமல் போய் விடுகின்றன.
நுணுகிப் பார்த்தால் அவை கிடைக்கலாம்.
கம்பன் ஒன்றை விடாமல் தன் காப்பியத்தில் சேர்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு கதா பாத்திரம் அதிகாயன் என்ற பாத்திரம். இராவணனின் இன்னொரு பிள்ளை. நமக்கு இந்திரஜித்தை நன்றாகத் தெரியும்.
அதிகாயன் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது.
.
கும்பகர்ணனை இழந்து வருந்தும் இராவணனைப் பார்த்து அதிகாயன் கூறுகிறான்.
"உன் தம்பியை கொன்று உன்னை வருந்த வைத்த அந்த இராமனை, அவன் தம்பியை கொன்று அதே போல் வருந்த வைக்கிறேன். அப்படி இல்லை என்றால், ஆடவரில் சிறந்த உனக்கு நான் ஒரு நல்ல பிள்ளையாவேனா ?"
என்று வஞ்சினம் கூறி போருக்கு புறப்படுகிறான்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஒர் வன்துயர் கண்டிலெனேல்
நம்பிக்கு ஒரு நன்மகனோ இனி நான்?
உயிர் ஈறு செய்தான் = உயிருக்கு இறுதி (முடிவு) செய்தான்
ஒருவன் = இராமன்
தம்பிக்கு = அவனுடைய தம்பிக்கு (இலக்குவனுக்கு)
உயிர் ஈறு சமைத்து = உயிருக்கு இறுதி செய்து
அவனைக் = அவனை
கம்பிப்பது = நடுங்கும்படி
ஒர் வன்துயர் கண்டிலெனேல் = ஒரு வலிமையான துயரை தரவில்லை என்றால்
நம்பிக்கு = ஆடவரில் சிறந்த உனக்கு
ஒரு நன்மகனோ இனி நான்? = ஒரு நல்ல மகனாக நான் இருப்பேனா?
அவனுக்காக தம்பி, மகன் என்று எல்லோரும் சண்டைக்குப் போகிறார்கள்.
அவன் செய்வது தவறு என்று தெரிந்தும், அந்தக் குடும்பத்தில் ஒரு ஒற்றுமை இருக்கிறது.
மாறாக, இராமன் குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு சற்று சங்கடம் வரும்.
மூத்தவள் மகனுக்கு மகுடம் என்றதும் பொறாத இளைய மனைவி.
கணவன் பேச்சை கேட்காத இளம் மனைவி.
பரதனை திட்டி தீர்க்கும் இலக்குவன்.
தயரதனையும், கைகேயியையும் திட்டும் இலக்குவன்.
நீ என் மனைவி இல்லை, பரதன் என் பிள்ளை இல்லை என்று வெறுத்துப் பேசும் தயரதன்.
இராமன் பரம் பொருள் என்பதால் இவற்றை நாம் கவனிப்பது இல்லை.
கசப்பான உண்மை இது.
நமக்கு ஏதாவது ஒரு துன்பம் வந்து விட்டால், நாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கண்டவர்கள் மேலேயும் எரிந்து விழுவோம்.
சீதையை பிரிந்து வாடுகிறான் இராமன்.
கார்காலம். கரிய மேகங்கள் எங்கும் மிதந்து திரிகின்றன. வெயில் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது. அங்கும் இங்கும் மழை பொழிகிறது. தூரத்தில் மின்னல் வெட்டி இடிச் சத்தம் கேட்கிறது.
இராமனுக்கு, அந்த மேகத்தின் மேல் கோபம் வருகிறது.
" கொடிய மேகமே. நீயும் அந்த அரக்கர்களை போலவே இருக்கிறாய். கறுப்பாக இருக்கிறாய். அவர்களின் கோர பற்களைப் போல நீயும் மின்னல் வெட்டுகிறாய். என் உயிரை கொண்டு செல்லும் வரை நீ ஓய மாட்டாய் போலிருக்கிறது"
என்று, மேகத்தின் மேல் சினம் கொள்கிறான்.
எப் பாலும், விசும்பின் இருண்டு எழுவாய்;
அப் பாதக வஞ்ச அரக்கரையே
ஒப்பாய்; உயிர் கொண்டு அலது ஓவலையோ?
ஆர் = ஆர்த்து எழுந்து
நெடு மின்னின் = நீண்ட மின்னல் என்னும்
எயிற்றை; = பல்லை
வெகுண்டு = கோபம் கொண்டு
எப் பாலும் = எல்லா பக்கமும்
விசும்பின் = மலையில்
இருண்டு எழுவாய்; = இருண்டு கரிய நிறத்தில் எழுவாய்
அப் = அந்த
பாதக = கொடுமையான
வஞ்ச = வஞ்ச மனம் கொண்ட
அரக்கரையே = அரக்கர்களை
ஒப்பாய்; = ஒப்பிடும் படியாக இருக்கிறாய்
மனைவி மேல் அவ்வளவு பாசம். அவள் பிரிவு அப்படி வாட்டுகிறது.
இங்கே, சீதையின் பிரிவு இராமனை தடுமாற வைக்கிறது. காரணம் இல்லமால் மேகத்தின் மேல் கோபம் கொள்கிறான்.
அன்பு என்றால் அப்படி இருக்க வேண்டும். அப்படி ஒரு ஆள் இல்லாவிட்டால் தவித்துப் போக வேண்டும்.
பரம்பொருள்தான். காதல் அவரையும் புரட்டிப் போடுகிறது என்றால், நாம் எல்லாம் எம்மாத்திரம்?