பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை -3- 16 பழனி 2 --279
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் ஆறுபடை - 3
பழனி 2
(279) 👍👍👍💥💥💥
Happy 2021 👌👌💐💐💐
''எங்கே கூறு பார்க்கலாம்...'' என்றார் ஈஸ்வரன்.
ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து 'பத்தும் இரண்டும் எத்தனை?’ என்று கேட்டால், அந்தக் கூட்டல் கணக்கு ஆசிரியருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்குத் தெரியுமா என்று சோதித்துப் பார்க்கத்தான் அந்தக் கேள்வி. இப்போது, அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் முருகப்பெருமானிடம் அப்படி ஒரு கேள்வி கேட்டார்.
அசுரர்களை அழிக்க மட்டுமல்ல; தர்மத்தைக் காக்கவும் தோன்றியவர் முருகன். அநீதியை அழிக்கும் சக்தியை, பிறக்கும்போதே பெற்றவர் அவர். பின்னர், தர்மத்தைக் காக்கும் ஞானத்தைத் தன் தவத்தால் பெற்றார். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்க, தன்னையே ஆண்டியாக்கிக்கொண்ட தனிப்பெரும் தெய்வம் முருகப்பெருமான்!
தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.
இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.
சேலத்தில் உருவாகிறது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை! - மலேசியா போட்டியாக களமிறங்கிய தமிழகம்
ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.
அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.
இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.
விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.
தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.
இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.
அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.
இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.
இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.
அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.
போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.
கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.
பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு.
அம்மா எவ்வளவு விஷயங்கள் மடை திறந்த வெள்ளம் போல் சொல்கிறீர்கள் - ஒரு மா கனிக்காக முருகன் ஆண்டியாகவில்லை என்பது பலரும் அறியாத விஷயம் கடவுளை எங்கள் அறிவில் நிறுத்தி எடை போடுகிறோம் அதனால் எதுவுமே சரியாக வெளிச்சத்திற்கு வருவதில்லை ---
உண்மை ரவி கதைகளை கதைகளாக மட்டும் பார்க்காமல் அதன் தாத்ப்பரியங்களையும் புரிந்துகொள்ளவேண்டும் உங்களைப்போலவே நாங்களும் மேலே குடும்ப சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் உங்களுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம் ?
சொல்லிவிட்டு கட கடவென்று சிரித்தாள் சிங்கார பதுமை - புதிய வருடம் பொன்னாக மலர்ந்தது .
காளராத்ர்யாதி ஶக்த்யோக வ்ருதா-- லலிதாம்பிகையை எந் நேரமும் சக்திகள் சூழ்ந்த வண்ணமாக இருப்பார்கள். உதாரணமாக காளராத்ரி, கண்டிதா , காயத்ரி போன்றவர்கள். -
ஆம். ராகினியை சுற்றி காளராத்ரி போன்ற பன்னிரண்டு உதவியாளர்கள் அருகில் இருப்பார்கள். அவரவர் ஸ்ரீ சக்ரத்தில் ஒவ்வொரு தாமரை இதழுக்கும் அதிகாரி. காளராத்திரி ருத்ரனின் தமோ குணத்தில் உருவானவள்.
மூன்று கண்ணுடையவள். செந்நிற பிழம்பாக உதய சூர்யன் போல் சிவந்தவள். தலை பின்னல் கலைந்திருப்பவள். கருப்புநிற ஆடை உடுப்பவள். அவளது நான்கு கரங்களிலும் லிங்கம், புவனம் இரண்டிலும் மற்ற இரண்டில் தண்டம் வரம் கொண்டவள். .
அவளை ஜபம் செய்தால் எதிரிகள் அழிவர். துர்கை அம்சம் அவள். மரண காலத்தில் இறப்பவன் கனவில் வந்து அவன் மரணத்தை அறிவிப்பவள் என்று கூறுவதுண்டு. எழுவத்தியேழாவது வருஷம், ஏழாவது மாதம், ஏழாம் நாள் இரவு கனவில் தோன்றுபவள். அதன் பிறகு அந்த பக்தன் சாஸ்திரங்கள் விதிக்கும் விதிகள் சிலவற்றிலிருந்து விலக்கு பெறுகிறான்.
ஸ்னிக்தௌதனப்ரியா -
நெய் பிசைந்த சாதம் விரும்பி உண்பவள். ராகினிக்கு இந்த உணவு நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் என்று தெரியும்.
மஹாவீரேந்த்ர வரதா --
வீரர்களுக்கும் மகரிஷிகளுக்கும் வரம் தருபவள். சிவ சூத்ரம் ''மூன்று குணங்களையும் வெல்வதை வீரா என்றும் அப்படி முக்குணங்களை கட்டுப்பாட்டில் கொண்டவர்கள் விரேந்திரர்கள் என்றும் பெயரிடுகிறது. அவர்கள் துரியம் எனும் நாலாவது ஸ்தானத்துக்கு சென்று ஆனந்தம் துய்ப்ப வர்கள். ராகினி இப்படிப்பட்ட உயர்நிலை அடையும் வரம் தருபவள்.
ராகிண்யம்பா ஸ்வரூபிணீ -- லலிதைக்கு ராகினி மஹா வீரேந்திர வரதா என்ற பெயர்கள் உண்டு அல்லவா. ராகினி அம்பாள் ஸ்வரூபம் கொண்டவள் என்ற இந்த நாமமும் உண்டு என்கிறார் ஹயக்ரீவர்.
=======================
Comments
ஆச்சரியம்.. அருமை..
ஓம் சரவணபவ..
🙏🙏🙏🙏🙏🙏🙏
*31. 12. 2020 - THURSDAY*
*நாடும் நாமும் நலமாய் வாழ*
*நற் சிந்தனைகள்.*
*குருவே சரணம்.*
*வியாழன் காலை வணக்கம்.*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
*காலமும் , நேரமும் கூடி வரும் போது ...*
*எதிர்பார்த்ததும் நடக்கலாம் ...*
*எதிர்பாராததும் நடக்கலாம் ...*
*காலத்தின் கட்டாயம் எது நடக்குமோ அது நடந்தே தீரும் ...*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*காரணமின்றி அன்பு வைப்பது முதலாவது தவறு*...
*எல்லோரிடமும் உண்மையாக இருப்பது நாம் செய்யும் இரண்டாவது தவறு*...
*மற்றவர்கள் நம்மைப்போல் இருப்பார்கள் என நினைப்பது மூன்றாவது தவறு*...!
💐💐💐💐💐💐💐💐💐💐💐
*ஒருவரை கண்மூடித்தனமாக நம்பியதால் தான்*...
*பல பல இரவுகள் கண் மூட முடியாமல் போகிறது நம் வாழ்க்கை*...!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நம்ராணாம் ஸந்நிதத்தே ஸததமபி
புரஸ்தை ரனப்4யர்தி2தான
ப்யர்த்தா2ன் காமானஜஸ்ரம் விதரதி
பரமானந்த3 ஸாந்த்3ராம் க3திம் ச |
இத்த2ம் நிச்’சே’ஷலப்4யோ நிரவதி4கபல:
பாரிஜாதோ ஹரே! த்வம்
க்ஷுத்3ரம் தம் ச’க்ரவாடீ த்3ருமமபி4லஷதி
வ்யர்த்தமர்த்தி வ்ரஜோSயம் || ( 1- 8)
ஹரே கிருஷ்ணா !
नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान -
प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च।
इत्थं निश्शेषलभ्यो निरवधिकफल: पारिजातो हरे त्वं
क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्॥८॥
திரு டி. சீனிவாசாச்சாரியார் .
சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் டி.சீனிவாசாச்சாரியார் (வயது 95). தமிழ்மற்றும் சம்ஸ்கிருதம் இரண்டிலும்புலமை மிக்கவர். சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தின் அர்ச்சகராக பணிபுரிந்துள்ளார். ஆன்மிகம் தொடர்பாக 16 நூல்கள் எழுதியுள்ளார்.
நன்றி ராஜப்பா தஞ்சை
There was a sage by name Dadhyac, an exponent in Atharva Veda who taught madhu vidyā to Lord Indra.
Indra asked Dadhyac not to teach this madhu vidyā to anyone else after teaching him.
If Dadhyac taught this anyone else, his head would be chopped off by Indra.
Aaśvin deva-s somehow wanted to learn this madhu vidyā.
They told Dadhyac that they would first replace his head with a horse head and that he should teach them madhu vidyā with the horse head (detailed in Bṛhadāraṇayaka Upaniṣad II.v.16).
Once it is taught, Indra would chop of his head and that Dadhyac would lose only the horse head.
The horse head would then be replaced by his original head.
Everything happened according to their plan and Aaśvin-s were taught madhu vidyā by sage Dadhyac.
In the said Upaniṣad, V.v.16 ends with pra yadīmuvāca.
In this word kāmakalā bīja īṁ ईं (pronounced as eeṁ.) is secretively placed.
Kāmakalā is discussed in nāma 322 in this Sahasranāma.
This īṁ is considered as the most important aspect of Śrī Vidyā.
However, the riṣi who taught madhu vidyā is not the incarnation of Viṣṇu.
Hayagrīva, the incarnation of Lord Viṣṇu initiated Agastya into Śrī Vidyā worship through Lalitā Sahasranāma. 👏👏👏
Not seeking infinitesimal renumeration
I offer my altruistic service and ardent devotion to you
it's not Horses, Elephants or Wealth I seek
in return, for instead,
renunciate me
from my internal tenets
this is all I desire Sri Kalahastiswara🙏🙏🙏
ஊழி கால உற்சவம் .. பிரளயத்தின் பித்தலாட்டம் ...
எல்லா வருடங்களையும் அன்புடன் அனுப்பி வைப்போம் ...
ஏனோ நெஞ்சில் ஒரு வலி .. உன் பிரிவு எனக்கு வருத்தம் இல்லை ..
நாட்டை ஓட்டை ஆக்கி நாட்புறமும் ஆயுதம் தாங்கும் வாழ்க்கை இனி தேவை இல்லை ..
அனுப்பி வை நல்ல வருடம் அதை .. நாற்சந்திலும் உனை வைத்து கும்பிடுவோம் .. 🙏🙏🙏
பதிவு 89 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
*15 வது திருநாமம்*🏆🏆🏆
நிலாச் சாப்பாடு, நிலாவில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம்.
இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை.
சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது.
கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன்.
அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம்.
இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது.
தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது.
இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது.
வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது.
அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள்.
சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது.
‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது.
இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள்.
Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம்.
இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது.
சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.👏👏👏
யார் இந்த இஸ்மாயில் ?
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் இந்த மு.மு.இஸ்மாயில்.
“கம்பன் கண்ட சமரசம்” “கம்பன் கண்ட ராமன்” இன்னும் பல இலக்கிய நூல்களை இனிக்க இனிக்க எழுதியவர்.
அந்த கம்பனின் ரசிகரான நீதிபதி இஸ்மாயிலும், காஞ்சிப் பெரியவரும் ஒருமுறை சந்தித்து சந்தோஷமாக உரையாடினார்கள்.
இலக்கியம், கம்பராமாயணம் இன்னும் பல விஷயங்களைப் பற்றியும் இருவரும் விரிவாக விவாதித்தனர். குறிப்பாக நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற புத்தகத்தைப் பற்றி !
அதைக் குறிப்பிட்டு காஞ்சிப் பெரியவர், "ஒரு தலைமை நீதிபதியான நீங்கள் இராமனுக்கே நீதி வழங்கி விட்டீர்கள்" என்று ரொம்பவும் சந்தோஷப்பட்டாராம்.
இருவரும் விடை பெறும் நேரம். இப்போது மடத்திலிருந்தவர்களுக்கு மனதுக்குள் ஒரு பெருத்த சந்தேகம்.
இந்துக்கள் என்றால் விபூதி குங்குமம் கொடுப்பார். ஆனால் ஒரு இஸ்லாமியருக்கு இந்து மத பெரியவர் என்ன பிரசாதம் கொடுக்க முடியும் ?
அனைவரும் ஆவலோடு உற்று நோக்க,
காஞ்சிப் பெரியவர் ஒரு வெள்ளிப் பேழையில் இருந்த சந்தனத்தை எடுத்து இஸ்மாயிலிடம் கொடுத்து, “இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏
கோயில் காப்பானே!
கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே!
மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா!
நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.👍👍👍
கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!
ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.
மாயச்செயல்கள் செய்பவனும்,
கரிய நிறத்தவனுமான கண்ணன்
எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.
அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.
அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.
அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே.
மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.💪💪💪
ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது.
அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம்.
சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.🎉🎉🎉
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்🙏🙏🙏
எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது.
எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது.
அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது.
நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி,
தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.👍👍👍
நீர் ஆவியாகி மேலே சென்று மேகமாகி குளிர்ந்து மழையாகிறது என்ற அறிவியல் கருத்தை மாணிக்கவாசகர் 1200 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார்.
மேலும், இயற்கையை தெய்வமாக வடித்ததன் மூலம், அதற்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை தெளிவாகச் சொல்லிவிட்டார்.
இன்று இயற்கையை மதிக்காததன் விளைவை கண்கூடாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இனியேனும், இயற்கையை மதிப்போமா!🌸🌸🌸
செல்வம் எதுவும் சேர்த்ததில்லை ஆனாலும் திருமகள் எங்கும் செல்லாமல் உன் உடன் இருந்தாள் ..
சக்தி கொண்ட உடம்பும் அல்ல ஆனாலும் ஜகத்தை அளக்க வைத்தாள் .
வண்டுகள் குடியிருக்க உன் பவள இதழ்கள் இடம் தந்ததோ ...
கடல் ஆழம் உன் காரூண்யம் ஆனதோ ...
வானத்தின் பரப்பு உன் மந்தஸ்மிதம் ஆனதோ ...
ஒன்றும் அறியவில்லை என்றாய் ஹரியும் ஹரனுமாய் தெரிந்தாய் . 🙏🙏🙏
சரணாகதி என்றே சொல்லிவிட்டால் விதி ஓடும் பயந்த மான் போல் ...
ஆதி மூலமே என்றான் கஜேந்திரன் ..
தூணில் உள்ளான் தூயவன் என்றான் பிரகலாதன் ..
நமன் வரினும் நமசிவாய என்றான் மார்க்கண்டேயன் ..
கடலில் எரிந்தாலும் கவலைப்படேன் என்றான் நாவுக்கு அரசன் ...
விதி என்றும் ஒன்றும் இல்லை சரணாகதி என்று ஒன்று இருக்கும் முன் 🌺🌺🌺
While the Lord slowly marches towards the sanctum he stands under flower shandilers and is showered with flowers mixed with Camphor!
This event surely bring tears of happiness to the devotees and music lovers...!
🌱🌱🌱🌺🌸🙏🏻🌸🌺🌱🌱🌱
கண்கள் தந்தாய் இமையும் தந்தாய் பார்வை எங்கே என்றே கேட்டேன் ...
பார்வை தந்தாய் அதில் காமம் இல்லை ஞானம் இருந்தது
செவி இரண்டு கேட்டேன் ... உள்ளே ராம் ராம் என்ற ஒலி கேட்டேன் ...
பேசவதற்கு வாய் கேட்டேன் ..
செவ்வாய் மலர்ந்து நாவில் வந்து அமர்ந்தாய் ..
நானும் ஒரு கவி ஆனேன் இன்று 🙏🙏🙏
*மாயி* என்று சொன்னேன் .. மயக்கங்கள் மறைய வைத்தாய் ..
*நாயின்* கீழாய் இருக்கும் என்னை *தாயினும்* அதிக பரிவு கொண்டே தூக்கி விட்டாய் ..
*ஆயினும்* உனை மறந்து விடுகிறேன் .. *சாயினும்* ஒரு தெய்வம் உண்டோ ..
*காயி* இன்று பழம் வருதல் உண்டோ ? 🌕🌕🌕
God bless you all this year with good health, happiness, peace and prosperity in life 👆👆👆
Om sri mahaperiayava saranam
Kamakoti saranam
Satvo jana sukinobhanthu
🙏🙏🙏🙏🙇♂️🙇♂️💐💐💐🎉🎉🎊🎊🎄🎄🌷🎄
[சிவதீபன் - 30/12/20]
*"எட்டாந் திருநாள் இரவு அடியார்களும் பக்தர்களும் சிதம்பரத்து வாசிகளும் தேரடியில் குழுமி தர்ணாவில் ஈடுபட்டனர், தீக்ஷிதர்களும் அவர்களது இல்லத்தரசிகளும் வீதியில் வந்து அமர்ந்து உரிமை குரல் கொடுத்தார்கள்!!"*
*"ஏன் சுவாமி தேருக்கு வரவில்லை என்று நீதிமன்றம் கேட்கும் பொழுது அதிகாரிகள் பதில் கூறவேண்டிய லாவகமான சூழ்நிலையை தீக்ஷிதர்கள் ஏற்படுத்த முயன்றனர்!!"*
*"பாஸ் முறை இல்லை, சுவாமி தேருக்கு வந்தபிறகு மக்கள் அனைவரும் ஒன்றுகூடிதான் தேரிழுப்பார்கள் அதற்கு உத்திரவாதம் தரனும், அனைவரும் சாமி தரிசனம் செய்ய எந்தவித தடையும் போலீசோ நிர்வாகமோ செய்யவேகூடாது!! இதனை அதிகாரிகள் ஏற்றால் சுவாமி வருவார் இல்லை என்றால் நீங்கள் ஒத்து கொள்ளாத வரை சுவாமி வரப்போவதில்லை!! என்று விடாப்பிடியாகவும் ஒற்றுமையாகவும் தீக்ஷிதர்கள் நின்றனர் என்ற செய்தி வந்தது"*
*"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"* என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகாரிகளின் வல்லமையும் அவர்களை இயக்கும் வல்லமையும் இந்த *"நடராஜ பக்தி என்ற வல்லமைக்கு முன்பு செல்லாமல் போனது!! அனைவரும் தரிசிக்கலாம் என்று அதிகாரிகள் வேறுவழியின்றி ஒத்து கொண்டனர் அன்பர்கள் "ஹோ!!" என்று பேரரவம் செய்து ஆர்ப்பரித்தனர் தீக்ஷிதர்கள் பலர் கண்ணீர் பெருக்கி உணர்வு வயப் பட்டார்கள்!!"*
கண்ணீர் மழை பெருக்கெடுத்தது அந்த இன்பத்தை என்னால்தான் கடத்திவிட முடியுமா!? என்று தெரியவில்லை, சிலவற்றை உணர வார்த்தைகளும் தேவைஇல்லை
அவரது நாடகத்திற்கு தாங்கள் ஒரு கருவி என்று உணராத அதிகாரிகள் மெலிதாக இருள் கவிந்த முகத்துடன் வலம் வந்தனர், வெளியில் பேரிகாடுகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டிருந்தனர்
பிரகார வலம் வரும்போது சிதம்பரத்து ஆண்களும் பெண்களும், அம்மா தாயே!! சிவகாமீ ஜெகதம்பிகே!! என்று கண்ணீர் விட்டு கையுர்த்தி இறைஞ்சி அழுதனர் அன்னையும் அருட்பிரகாத்தை வாரி வழங்கியபடி வந்த மணாளனின் கரம் கோர்த்து ஆட்டம் போட்டாள்!!
எத்தனை திருவிழா வந்தாலும் இந்த திருவிழா அனுபவம் என்பது தனிரகம்தான், பெருமைகள் அனைத்தும் பக்தர்களுக்காக நின்ற தீக்ஷிதர்களையும் தீக்ஷிதர்களுக்காக நின்ற பக்தர்களையும் சேரும்!!
*"என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்!!"*
திருச்சிற்றம்பலம்
சிவதீபன்
📱9585756797
Started with a grand hope of breaking previous records . But the year forced us to fall on stars ...
The year 2020 taught us many unlearnt lessons for sure .
We shown solidarity to others who suffered in equal measure .
We proved adversities could be turned around as opportunities ...
A small but a great message to all of us for 2021 . 👇
Forget the kindness that you do, as soon as you have done it;
Forget the praise that falls on you, the moment you have won it.
Forget the slander that you hear, before you can repeat it;
Forget each slight, each spite, each sneer, wherever you may meet it.
Remember every kindness done, to you, whatever its measure;
Remember praise by others won, and pass it on with pleasure.
Remember every promise made, and keep it to the letter;
Remember those who lend you aid, and be a grateful debtor.
Wonderful new year 2021 full of hopes and not with a trace of nope . 🎉🎉🎉
Remember all the happiness that comes your way in living;
Forget each worry and distress, be hopeful and forgiving.
Remember good, remember truth, remember heaven's above you.
And you will find through age and youth, true joy and hearts to love you!👍👍👍🎉🎉🎉
*பதிவு 276*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
51/
3
ஸம்ருத்தா வாக்தாடீ பரிஹஸித மாத்வீ கவயதாம்
உபாதத்தே மாரப்ரதிபட ஜடாஜு ட முகுடீ
குடிரோல்லாஸின்யா ஸதமக தடின்யா ஐயபடீம்
*பதிவு 856*🥇🥇🥇
*US 848*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
34வது ஸ்தபகம்
*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍
இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
தனு புவி மயி ப்ரீத்யா வாsம்ப திரிலோகவிதாயிகே
பதயுகரதே வாத்ஸல்யாத் வா புராரி புரந்த்ரிகே
ஸ்வவிமலய ஸோகா நாஸக்தே க்ருபாவஸ தோs தவா
பருஷ மஜரே மௌநம் த்யக்த்வா ஸ்புடீகுரு மே கதிம் 🎉🎉🎉
*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
அப்போது இராமன் அனுமனை நோக்கி "மாருதி! நீ உன் கருத்தைக் கூறு" என்றான்.
"உறுபொருள் யாவரும் ஒன்றக் கூறினார்;
செறிபெருங் கேள்வியாய்! 'கருத்து என் செப்பு' என
நெறிதெரி மாருதி எனும் நேரிலா
அறிவனை நோக்கினான், அறிவின் மேலுளான்".
இராமனைப் பணிந்து மாருதி பேசலானான்.
"ஒன்றைப் பற்றி ஆராயுமிடத்து எளியவனாகவும், சாதாரணமானவனையும் கூட கருத்துக் கேட்பது, நும் போன்ற பெரியோர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும்.
அந்த வகையில் என் கருத்தைக் கேட்டதனால் கூறுகிறேன்.
ஆராய்ந்து பார்த்து ஆலோசனை கூறவல்ல உத்தமர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டார்கள்.
நான் என் கருத்தையும் கூறத்தான் வேண்டுமோ?"
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீமந்நாதமுனிகள், திருக்கச்சிநம்பிகள், இராமனுஜர், மணவாள மாமுனி
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையைத் தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
~ திருமங்கையாழ்வார்
*வது ஸ்லோகம் பொருளுரை*👏👏👏
ரக்ஷ£யை கிரிஸீம் G கோமலபத ந்யாஸ:புராப்யாஸித: !
நோசேத்திவ்யக்ருஹாந்தரேஷ§ ஸுமனஸ்தல்பேஷ§ வேத்யாதிஷ§
ப்ராய:ஸத்ஸு சிலாதலேஷ§ நடனம் சம்போ கிமர்த்த் தவ !!
அதில் நடனம் புரியவேண்டும் என்று கருதியும், என்னைக்காக்கவும் வேண்டித்தானே ஹேசம்போ!மலைப்பாறைகளில் மெதுவாக காலடிவைத்து முன்னமேயே பயிற்ச்சி எடுத்தீர்!👏👏👏
இல்லையெனில் திவ்யமன வீடுகளினுள்ளும், மலர் படுக்கைகளிலும், மேடைகளிலும் நடனமாட வசதி இருந்த பொழுது ஏன் பாறைகளில் இந்த நடனம்?
இராமாயணத்தில் எத்தனையோ பகுதிகள் இருக்கின்ற. இராமனின் வீரம், அவன் நடுவு நிலைமை, பெற்றோர் சொல்லுக்கு கீழ் படிதல், சகோதரத்துவம் என்று எவ்வளவோ இருக்கிறது.
இராமனுக்கும் சீதைக்கும் நடுவில் இருந்த அந்த அன்யோன்ய அன்பு, அவர்கள் நடத்திய இல்லறம், அவர்களின் காதல் காவிய ஓட்டத்தில் நாம் காணாமல் விட்டு விட வாய்ப்பு இருக்கிறது.
கதையின் ஓட்டத்தில், அதில் உள்ள சிக்கல்களில், இந்த அன்பு வெளிப்பாடு மறைந்து போகிறது.
நிஜ வாழ்விலும் அப்படித்தானே ?
அப்படிப் போகக் கூடாது.
படிக்க படிக்க, அவர்கள் இருவர் மேலும் நமக்கு ஒரு பாசம், ஒரு அன்யோன்யம் வந்து விடும். நம்ம வீடு பிள்ளைகள் மாதிரி, நம் மகன்,மருமகன், மகள், மருமகள் போல ஒரு பாசப் பிணிப்பு வரும்.
" என் சீதை எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. இந்த உயிரைச் சுமந்து கொண்டு திரிகிறேன். தண்ணீரே, உனக்கு அருள் இல்லையா ? கார் காலமே, என் உயிரை நீயும் கலக்குவது ஏன் "
என்று உருகுகிறான்.
ஊரே அறியேன்; உயிரோடு உழல்வேன்;
நீரே உடையாய், அருள் நின் இலையோ?
காரே! எனது ஆவி கலக்குதியோ?
மறைக்குநர் = மறைத்து வைத்து இருப்பவர்கள்
வாழ் = வாழுகின்ற
ஊரே அறியேன்; = ஊரை நான் அறியவில்லை
உயிரோடு உழல்வேன் =என் உயிரோடு இருந்து துன்பப் படுகிறேன்
நீரே உடையாய், = ஏய் கார்காலமே , நீ தண்ணீரை நிறைய வைத்து இருக்கிறாய்.
அருள் நின் இலையோ? = உன்னிடம் அருள் இல்லையா ?
காரே! = கார் காலமே
எனது ஆவி கலக்குதியோ? = என் ஆவியை கலங்க வைப்பாயோ?
ஒரு நிமிடம் இராமனின் இடத்தில் இருந்து யோசித்துப் பார்ப்போம் .
அவள் எங்கு இருக்கிறாள் என்று கூடத் தெரியவில்லை. எப்படி இருக்கும்?
அவளுடைய அழகிய உருவம் அவன் கண் முன் தோன்றுகிறது. கண் கலங்குகிறது.
தாடகை என்ற அரக்கியை கொன்றவன், ஏழு மரா மரங்களை ஒரே அம்பில் துளைத்தவன், வாலியின் மார்பில் ஊடுருவ கணை விடுத்தவன், மனைவியைக் காணாமல் தவிக்கிறான்.
அது தான் அன்பு. அது தான் காதல்.
மேலும் சிந்திப்போம்.
கார் காலம் முடிந்த பின் சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து போனான். அவனுக்கு, அதை நினைவு படுத்த இலக்குவனை இராமன் அனுப்புகிறான்.
கோபத்தோடு வருகிறான் இலக்குவன்.
அனுமன் ஒரு உபாயம் செய்து, இலக்குவன் முன் தாரையை அனுப்புகிறான்.
ஒரு ஆண் எவ்வளவு முரடனாக, வலிமையானவனாக இருந்தாலும், ஒரு பெண்ணின் முன் அவன் கோபம், வீரம், ஆத்திரம் எல்லாம் அடங்கி விடுகிறது. அதுதான் பெண்ணின் பெருமை.
ஆனால் அதை எல்லாம் இப்போது எதிர் பார்க்க முடியாது.
தவறில்லை.
பெண் வடிவில் பிறந்து விட்டதற்காக பெண்மை குணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
சில ஆண்கள், பெண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.
சில பெண்கள், ஆண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.
பின் ஏன் ஓரினச் சேர்க்கை என்பது வராது?
இங்கே இரண்டு பால் எங்கே இருக்கிறது ?
ஆண்கள் இருக்கிறார்கள். ஆண்களாக வேண்டும் முயற்சி செய்யும் பெண்கள் இருக்கிறார்கள்.
....
இலக்குவன் வெட்கப் படுகிறான். சங்கடப் படுகிறான். தலை கவிழ்ந்து நிற்கிறான். அவன் கால்கள் பலவீனமாகி விட்டன. கீழே விழுந்து விடமால் இருக்க கையில் உள்ள வில்லை தரையில் அழுத்தமாக ஊன்றி , அதைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். மாமியார் முன்னால் நிற்கும் மருமகனைப் போல வெட்கி நிற்கிறான். அப்போது தோழிகள் மத்தியில் இருந்து வெளிப்பட்டு தாரை சொல்கிறாள்
தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
நடுங்குவாள், இனைய சொன்னாள்.
வதனம் = முகத்தை
சாய்த்து, = மெல்ல சாய்ந்து
தனு = வில்
நெடுந் தரையின் ஊன்றி, = நீண்ட பூமியில் ஊன்றி
மாமியர் குழுவின் = மாமியார்கள் உள்ள குழுவின் முன்
வந்தான் = இலக்குவன் வந்தான். அந்தக் காலத்தில் மருமகன் முன் மாமியார்கள் வரமாட்டார்கள். இப்போதெல்லாம் மருமகன் கூட பைக்கில் மாமியார்கள் போகிறார்கள்.
மைந்தன் நிற்ப, = இலக்குவன் நிற்க
பூமியில் = பூமியில்
அணங்கு அனார்தம் = தேவதைகளைப் போல உள்ள பெண்கள்
பொது இடைப் புகுந்து = மத்தியில் இருந்து புறப்பட்டு
பொன்தோள் = பொன்னைப் போன்ற தோள்களை உடைய
தூமன = தூய்மையான மனதைக் கொண்ட
நெடுங்கண் தாரை, = நீண்ட கண்களைக் கொண்ட
நடுங்குவாள் = நடுக்கம் கொண்டவளாக
, இனைய சொன்னாள். = இவற்றைச் சொன்னாள்
தாரையைக் கண்டவுடன் , இலக்குவனின் கோபம் மறைந்து விட்டது. அது தான் பெண்ணின் மகத்துவம். அதாவது பெண்ணாக இருக்கும் பெண்களின் மகத்துவம்.