பச்சைப்புடவைக்காரி - பகையை வெல்லும் ஆறுபடை - திருச்செந்தூர் 4- 2 - 276
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் ஆறுபடை - 2
திருச்செந்தூர் 4
(276) 👍👍👍💥💥💥
இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.
சண்முகருக்கு ஆண்டுக்கு 36 திருமுழுக்கு மட்டுமே நடைபெறுகிறது.
சித்திரை, ஐப்பசி, தை - 3
ஆடி, தை அமாவாசை - 2
ஆவணி, மாசித் திருவிழா - 10
ஐப்பசி, பங்குனி திருக்கல்யாணம் - 2
மாத விசாகம் - 12
ஆனி தை வருடாபிஷேகம் - 3
தீபாவளி, மகாசிவராத்திரி - 4
மொத்தம் 36
திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஆண்டு வருமானம் தற்போது சுமார் ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர் கோவிலில் தர்ம தரிசனம் எனப்படும் பொது தரிசனம், சிறப்பு தரிசனம் எனப்படும் ரூ.10, ரூ.20 கட்டண தரிசனம், வி.ஐ.பி.க்களுக்கான விரைவு தரிசனம் எனப்படும் ரூ.100, ரூ.250, ரூ.500 கட்டண தரிசனம் ஆகிய 3 வகை தரிசனங்கள் நடைமுறையில் உள்ளன.
திருச்செந்தூர் கோவிலுக்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
இத்தலத்தில் கோவில் வெளிப் பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்டுள்ளது. அதுபோல உள்பிரகாரங்களில் தல வரலாற்றை கூறும் வரை படங்களை அமைத்துள்ளனர்.
திருச்செந்தூரில் உச்சிக்கால பூஜை முடிந்ததும் மணி ஒலிக்கப்பட்ட பிறகே வீரபாண்டிய கட்டபொம்மன் சாப்பிடுவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 250 ஆண்டு பழமையான, அந்த 100 கிலோ எடை கொண்ட அந்த பிரமாண்ட மணி தற்போது ராஜகோபுரம் 9-ம் அறையில் பொருத்தப்பட்டுள்ளது.
சூரசம்ஹாரம் முடிந்ததும் முருகன் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். அதை உணர்த்தும் வகையில் இன்றும் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. முதல் 6 நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம் நடைபெறும். 7-ம் நாள் முருகன்-தெய்வானை திருமணம் நடைபெறும். அதன் பிறகு 5 நாட்கள் கல்யாண ஊஞ்சல் சேவை நடைபெறும்.
திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில் இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா? முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது.
பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவா? சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன.
சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தான். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார்.பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.
ஆவணி திருவிழாவின்போது முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.
திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.
மூலவருக்கு போற்றிமார், சண்முகருக்கு திரிசுதந்திரர், திருமாலுக்குத் வைணவர்கள், தனித்தனியே 3 இடங்களில் நைவேத்தியம் தயாரிக்கின்றனர்.
கோவில் திருப்பணி செய்த துறவிகளில் காசி சுவாமி கி.பி. 1882-ல் வசந்த மண்டபம் கட்டினார். மவுன சாமி 1895-ல் மண்டபத்தை கட்டி முடித்தார். வள்ளிநாயக சுவாமி - கிரிப்பிரகாரத்துக்கு தகரக் கொட்டகை அமைத்தார். ஆறுமுக சுவாமி - கோவிலுக்குள் கருங்கல் தூண்கள் அமை¢த்தார். தேசியமூர்த்தி சுவாமி - ராஜகோபுரத்தை கட்டினார்.
திருச்செந்தூர் கோவில் தங்க தேரில் அறுங்கோண வடிவில் அறுபடை வீட்டு முருகன் சிலைகள் உள்ளன.
சஷ்டித் தகடுகளில் எழுதப்பட்ட மந்திரம் ஓம் சரவணபவ என்பதாகும்.
திருச்செந்தூர் தலத்தில் பழங்காலத்தில் பல மணற் குன்றுகள் முருகனது சிறிய சந்நிதியைச் சூழ்ந்திருக்க வேண்டும். அவற்றுள் பெரிய மணற்குன்று ஒன்றைக் கந்த மாதன பர்வதம் என்ற பெயரால் குறித்திருக்க வேண்டும்.
நாளடைவில் மணற் குன்றுகள் தேய்ந்து தேய்ந்து பிராகாரங்கள் ஆகியிருக்க வேண்டும். வடக்குப் பக்கத்தில் மணற்குன்றே ஒரு மதிலாக அமைந்திருப்பதை இப்போதும் காணலாம். இம்மணற்குன்றின் தாழ்வரையில்தான் ரங்கநாதப் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.
கந்த சஷ்டி என்றால், கந்தவேளுக்குரிய ஆறாவது நாள் என்று பொருள்.
மாறாத உடல் அழகும் மாறாத உள்ளத்தழகும் என்றும் இளமை நிலையும் கொண்டருள்பவன் திருமுருகன்.
சிவப்பு, கருப்பு, மஞ்சள், நீலம், பச்சை ஐந்து நிறங்கள் கொண்ட வண்ண மயில் ஏறி வருபவன் திருமுருகன்.
யோகம், போகம், வேகம் என மூவகை வடிவங்களைக் கொண்டருள்பவன் திருமுருகன்.
திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. இச்சரிதத்தை எழுதுவோரும் படிப்போரும் கேட்போரும் நீங்காத செல்வங்களைப் பெற்று வாழ்ந்திருப்பர் என்று சூதம முனிவர் உரைத்தருளி உள்ளார்.
திருச்செந்தூரின் மகிமையை முனிவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
வசிஷ்டர்: இந்த பூமியில் போக மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும் அவை யாவும் சந்தேகமின்றி திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தவையே.
வாமதேவர்: பிரம்மஹத்தி செய்தவனும், வேதங்களை பழித்தவனும்கூட
திருச்செந்தூரில் ஒருநாள் வசித்தால் பரிசுத்தவானாகிறான்.
ஜாபாலி: இத்தல தீர்த்த மகிமைக்கு ஈடானது எதுவுமில்லை.
விசுவாமித்திரர்: நூறு அஸ்வமேத யாகங்களின் பலனை திருச்செந்தூர் வாசத்தால் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.
காச்யபர்: ஒருவன் பிரயாகையில் வாழ்நாள் முழுவதும் நீராடும் பலனை கார்த்திகை நட்சத்திரத்தன்று ஒருமுறை இந்த தலத்தில் நீராடினால் அடைந்துவிடுகிறான். மார்க்கண்டேயர்: ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.
மௌத்கல்யர்: பல நாட்கள் செய்துவரும் தவத்தை திருச்செந்தூர் தரிசனம் ஒன்றினாலேயே அடைந்துவிடலாம்.
குரு மகாதசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால் அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஸ்ரீஆதிசங்கரரின் சுப்ரமண்ய புஜங்கத்தையோ, குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவையோ ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும். பூத, பிரேத, பைசாச உபாதைகளும் நீங்கி நலம்பெறலாம்.
இவ்வாறு முனிவர்களாலும், ஆச்சார்யர்களாலும் போற்றப்பட்ட திருச்செந்தூர் தலத்தை வாழ்வில் ஒருமுறையாவது தரிசித்தால் முருகன் அருளையும், குரு பகவானின் அருளையும் பெற்று சகல துக்கங்களிலிருந்தும் விடுபடலாம்.
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் விபூதிப் பிரசாதம், தனித்துவமும் மகிமையும் வாய்ந்தது. இது தீராத நோய்களையும் தீர்க்கும் குணமுடையது. சூரசம்ஹாரம் முடிந்த உடன் தேவர்களே பன்னீர் மரங்களாக மாறி செந்தூரில் அருள்பாலிப்பதாக புராண கதைகள் சொல்கின்றன.
திருச்செந்தூரில் ரூ.250 கட்டண தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மற்றும் இலை விபூதி அடங்கிய பிரசாத பை வழங்குவதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அனுமதி அளித்து உள்ளார்.
திருச்செந்தூர் ஸ்பெஷல்: இலை விபூதிப் பிரசாதம்! இதைப்பற்றி இன்னும் விவரமாக நாளை சொல்லிறேன் ரவி
அம்மா திருப்பரங்குன்றம் தான் விவரமானது என்று நினைத்தேன் ஆனால் திருச்செந்தூர் அதையும் மிஞ்சி விட்டது உங்கள் சொல் வளத்தால் --- புன்னகையின் மீதமர்ந்து பூந்தோட்டம் பாட்டிசைக்க பொதிகை தென்றல் சாமரம் வீச அன்னை அழகாக நடந்து சென்றாள் .
ஸந்த்யதீத களாத்மிகா शन्त्यतीत-कलात्मिका - ஸந்த்யதீத என்றால் சாந்தியை அளிக்கும் நிலை. நவாவரண பூஜையில் வரும் வார்த்தை. ஜீவன் முக்தி அளிக்கும் நிலை. அவித்யா முழுதும் மறைந்த நிலை. அம்பாள் அந்த நிலையில் சதா இருப்பவள்.
கம்பீரா, गम्भीरा - எல்லாவற்றினுக்கும் உறைவிடமாக இருப்பவள். தெய்வீக சக்தியின் உறைவிடம். உன்னத சக்தி கொண்டவள்.
ககனாந்தஸ்தா गगनान्तस्था - ககனம் என்றால் ஆகாசம் . அம்பாள் எல்லையற்ற வெளியை கடந்தவள் . ஸ்வீதாஸ்வதார உபநிஷத் என்ன சொல்கிறது? (III.9) “அதே ஆத்மா தான் முழு பிரபஞ்சம்''. அதாவது ப்ரம்மம். அம்பாளுக்கு ''மஹா பிரளய சாக்ஷிணி '' என்று ஒரு அற்புதமான நாமம் உண்டு. .
கர்விதா, गर्विता - அவளிடம் காணப்படும் கர்வம் நம்மிடம் உள்ள வறட்டு கர்வம் இல்லை. சர்வமும் தன்னுள் அடங்கிய பெருமிதம் அது. கருணையால் பொங்கி வழிவது. '' நான்'' என்பதை கடந்தது. நம்மிடம் காணும் அகம்பாவம் அங்கே அவளிடம் இல்லை.
=============================
Comments
கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே ஸ்ரீ தத்தாத்ரேய ரூபம்.
படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
*ஸ்ரீகிருஷ்ண ஶர்மா வேலூர்*
मार्गशिर्ष शुक्ल पञ्चदश्यां मऌगशिरोयुतायां चूर्णितलवणस्य र्सुवर्णेन प्रत्यमेकं ब्राह्मणाय प्रतिपादयेत् ॥
மார்கஶிர்ஷ ஶுக்ல பஞ்சதஶ்யாம் ம்ருகஶிரோயுதாயம் சூர்ணிதலவணஸ்ய ஸுவர்ணேந ப்ரத்யமேகம் ப்ராஹ்மணாய ப்ரதிபாதயேத் ॥
*मार्गशीर्ष पूर्णिमायां रूपसौभाग्य सिद्यर्थं लवणदानं करिष्ये*
*மார்க்க சீர்ஷ பூர்ணிமாயாம் ரூபஸௌபாக்ய ஸித்தியர்த்தம் லவண தானம் கரிஷ்யே*
என்று உப்பை ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டு துளசி & தக்ஷிணை சேர்த்து
*रसानामग्रजं श्रेष्ठं लवणं बलवर्धनम् । तस्मादस्य प्रदानेन अतश्शान्तिप्रयच्छमे ।।*
*ரஸானா மக்ரஜம் ஶ்ரேஷ்டம் லவணம் பலவர்த்தனம் ।*
*தஸ்மாதஸ்ய ப்ரதானேன அத: சாந்திம் ப்ரயச்சமே ।।*
*मार्गशीर्ष पूर्णिमा महा पुण्यकाले मम*
*सहकुटुम्बस्य रूपसौभाग्य सिद्ध्यर्थं इदं लवणं सपात्रं सम्प्रददे नमम*
*மார்க்கசீர்ஷ பூர்ணிமா மஹாபுண்ய காலே மம ஸஹ குடும்பஸ்ய*
* ரூபஸௌபாக்ய ஸித்தியர்த்தம் இதம் லவணம் ஸபாத்ரம் ப்ராஹ்மணா துப்நமஹம் ஸம்ப்ரததே ந மம*
என்று சொல்லி கீழே வைத்து ப்ராஹ்மணருக்கு தானம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
மேலும் பலருக்கு இன்று கல் உப்பு வாங்கி தரலாம். இதனால் தானம் செய்பவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அழகான தோற்றம் ஸௌபாக்யங்களும் ஏற்படும்.
*புருஷார்த்த சிந்தாமணி*
"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்..", என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
அவன்தான்... அந்தக் குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்றுகொண்டிருந்தான்.
"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"
'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க இருக்காங்க.. திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'
'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'
"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking....அதை வருஷா வருஷம் renew வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!" என்றான் கிண்டலாக!
'
"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்.. சரி, சில கேள்விகள் கேட்கறேன் ..பதில் சொல்லு.."
"சொர்க்கத்துக்குப் போகணுமா? பரமனின் பதத்தை அடையணுமா? எது வேணும்?"
'குழப்பாதே கண்ணா!'
'அப்போ ரெண்டும் வேறயா?!'
"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"
'அப்படின்னா??'
"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற..
பண்ணின பாவத்துக்கெல்லாம் யமகிங்கரர்கள் எண்ணை சட்டில போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில,
'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."
"அது உங்களுக்குத்தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாடவிட்டு காட்டறீங்க.."
'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'
உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ...
ஆனா கஷ்டம் வந்தா மட்டும், 'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"
'
"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு சொல்றேன்..
இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்...
அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்...
நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக..
சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை..
வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்...
அதை ஞாபகப்படுத்ததான் இந்த விழாக்கள்...
கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்...
உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!
ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்..
பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??
சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு..
மற்றும் சிலர், 'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'
உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே...
இன்று உனக்குச் சொன்னேன்! நீ சிலருக்கு சொல்...
நீங்கள் என் குழந்தைகள்...
நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டுதான் இருப்பேன்...
உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்...
நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"
சொல்லிவிட்டுப் போய்விட்டான்..
" நம்பெருமாள் அபயகரத்தோடு புன்னகையுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்துக்கொண்டிருந்தார்!"
*இன்றைய சிந்தனை (27.12.2020)*
…………………………………………….................................
*‘’சிரித்து வாழ வேண்டும்."*
......................................................
உலக வாழ் உயிரனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்க முடியும். நோய்விட்டுப் போக மனம்விட்டு சிரியுங்கள் என்பார்கள். ஆம்
சிரிப்பு உலகை ஆளும் உன்னத சக்தி. மனதை மயக்கும் மந்திர சக்தி. அனைவரையும் கவரும் அற்புத சக்தி. ஒவ்வொருவரையும் நீண்ட நாள் வாழ வைக்கும் நிரந்தர சக்தி...
பூமியில் வாழும் எந்த உயிரினங்களுக்கும் கொடுக்காமல், மனிதனுக்கு மட்டுமே அமைந்த விலைமதிக்க முடியாத மிக உயர்ந்த வரம் சிரிப்பு...
.
சிரிப்பு நம்மிடம் இருக்கும் போது கோபம், பொறாமை, அச்சம், வெறுப்புணர்வு காணாமல் போய் விடுகிறது...
வாழ்க்கை என்பது ஒரு தராசு போன்றது. ஒவ்வொரு நாளும் தராசு நம்முன் துாக்கிப் பிடிக்கப்படுகிறது. ஒரு தட்டில் மகிழ்ச்சியை வைக்கிறோம்...
மறுதட்டில் கோபம், எரிச்சல், ஆத்திரம், சோம்பேறித்தனம் போன்றவைகள். நமோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களாவோ அடுக்கப்படுகிறது...
மகிழ்ச்சி தட்டை விட இந்த தட்டு கனம் அதிகமாகி கீழே இறங்கிவிடுவதால், அந்த நாள் மகிழ்ச்சியற்ற நாளாக கடந்து போய் விடுகிறது...
ஒவ்வொருவருடைய மகிழ்ச்சியை அவரவர் மனமே தீர்மானிக்கிறது. அந்த மனம் பக்குவப்பட, மனம் மிதமாக நமக்கு வழங்கப்பட்ட அருட்கொடை தான் சிரிப்பு...
என்னதான் பணம், பதவி, உறவுகள் என எல்லாம் இருந்தாலும், நாம் விலை கொடுத்து வாங்க முடியாத விஷயங்களில் ஒன்றுதான் மகிழ்ச்சி...
நாம் நினைத்தால் யாரை வேண்டுமானாலும், ஒரே மணித்துளிகளில் கோபப்பட வைத்துவிடலாம்...
ஆனால்!, அந்த நபரை சில விநாடிகளுக்குள் சிரிக்க வைக்க முடியாது. அதுதான் கோபத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ள பெரிய வேறுபாடு...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *இந்நிலை மாற, குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க, வீடுதோறும் புன்னகை என்ற மலரை நடுங்கள்...!*
🔴 *அதற்கு தண்ணீர் என்ற மலரை இதயங்களுக்குள் பாய்ச்சுங்கள்...!!*
⚫ *கவலை என்ற களைக் கொல்லியை வேரோடு பிடுங்கி, ஆனந்தம் என்ற மலரைத் தூவினால், இல்லம் மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கும்...!!!*
🌹🌹💐💐 🙏🏻 💐💐🌹🌹
பதிவு 89 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
*13 & 14 வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌A recap 👏👏👏
*குருவிந்தா*
*மணிஸ்ரேணி கனத்,கோடாரி மண்டிதா*💐💐💐
அன்பையும், பக்தியையும் அதிகப்படுத்துகிறது சிவப்பு வைரம் ( ரூபி)பதித்த கிரீடத்தை
அணிந்துள்ள தேவி லலிதாம்பிகையை உபாசிக்கின்றவர்களுக்கு சர்வ ஐசுவரிங்களும் சித்திக்கும் ஏனென்றால்
சிவப்பு வைரம் விஷ்ணுவிற்கு பிரியமானது.
விஷ்ணு ஶ்ரீநிவாஸன். அவனிடம் ஶ்ரீ – லஷ்மி வசிப்பதால் அவனை
சந்தோஷப் படுத்துபவர்களுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.🌷🌷🌷
ஸௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் சொல்லுவார்:
கதைர் மாணிக்யத்வம் க்கனமணிபி: ஸாத்த்யம் கடிதம்
கிரீடம் ஸ்திதி ஹைம ஹிமகிரிஸுஸ்த கீர்யதி ய:
ஸ நீடசொயாசேரண ஶபலம் சந்தரஶக
தனு: ஶௌனசீரம கீமிதி ந நிபத்தாதி திஷணாம்
தேவி மாதா லலிதாம்பிகையே, பன்னீரண்டு சூரியர்கள் ஒன்றுசேர்நது உருவான தங்கள் தங்க மகுடத்தை
எவ்வாறு விவரிக்க இயலும்?
அதிலுள்ள இரத்தின கற்களின் ஒளியினால் பிரகாசிக்கின்றன சந்திரனை இந்திர
தனுஷ் என்று கவிஞர்கள் வருணித்தால் அதில் என்ன ஆச்சரியம்?
துர்வாச முனிவரும் சக்தி மகிமையில் தேவியின் மகுடத்தை வருணிக்கிறார். 🎉🎉🎉
In the presence of Lalitāmbikā, the Supreme Goddess and affectionately called as ‘the Supreme Mother’ in whose praise and at whose command this Sahasranāma was composed was recited.
The names of these eight Vāc Devi-s are: Vaśinī, Kameśvarī (not to be confused with Kameśvarī, the wife of Śiva), Modhinī, Vimalā, Arunā, Jainī, Sarveśvarī and Koulinī.
These Vāc Devi-s reside in Śrī Cakra (please refer nāma 996) in the seventh āvaraṇa (āvaraṇa can be interpreted as rampart or roundabout), in the middle of which Lalitāmbikā resides.
Śrī Cakra has nine āvaraṇa-s and its worship is known as navāvaraṇa pūja.
Lalitāmbikā has conferred on these Vāc Devi-s the art of speech to be passed on to Her devotees.
Lalitāmbikā called these Vāc Devi-s personally and asked them to compose a verse, the recitation of which endows Her blessings.
The verse was recited by Vāc Devi-s in Her royal court in Her presence, where all gods and goddesses had already assembled.🌺🌺🌺👍👍👍
என் உள்ளம் எனும் சிறையில் உன்னை பூட்டி வைத்தேன் ...
சாவி போட்டு திறக்க யார் சொன்னார் ?
நெஞ்சமதில் கள்வர்கள் நுழையவில்லை நீ இருந்த போது ...
இன்று அவர்கள் ஆட்சி நடக்க யார் அனுமதித்தார் ?
என்ன குறை கண்டாய் என் உள்ளமதில் என்றும் குடி இருக்க ...
வாடகை கேட்கவில்லை ... வசதிகள் செய்து கொடுத்தேன் ...
வக்கனையாய் இருந்து விட்டு இன்று சொல்லாமல் எங்கு சென்றாய் சொல் என் ராயரே !!💐💐💐
பேச்சு வரவில்லை பேசத் தெரியவில்லை ..
வார்த்தைகள் வருவதில்லை வாழ்க்கை இது இனிக்க வில்லை ...
உன் நாமம் சொன்னபின் ஒரு கோடி வார்த்தைகள் பட்டாம் பூச்சிகள் போல் என் முன் பறப்பதென்ன சாயி ?
கால்கள் நடப்பதில்லை கரங்கள் குவிப்பதில்லை கண் கண்ட தெய்வம் நீ வந்து என்னை பார்க்கையில் சொர்க்கம் அருகில் இருக்கும் மாயமென்ன சாயி ??👌👌👌
நந்தி கிராமத்தில் நாடாண்ட பாதுகை .. ராமன் ஆசி தந்த பாதுகை ...
கோடி தேவர்கள் தொட்டு பார்க்க ஆசைப்பட்ட பாதுகை ... கோபுரங்கள் குனிந்து முத்தம் கொடுக்கும் பாதுகை ..
சுவாமி நாதன் பாதங்கள் பட்ட பாதுகை .. கங்கைக்கு புண்ணியம் தந்த பாதுகை ... 👣👣👣👣
என் காந்தி அது மங்க கண்டேன் ...
சாந்தி பிரிந்து செல்லக் கண்டேன் ..
வாழ்க்கை சாஸ்வதம் இல்லை என்று உணர்ந்து கொண்டேன் ...
நம்பிக்கை காற்றில் நூலாடக்கண்டேன் ...
நுனி நாக்கில் வாழ்வை முடித்துக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டேன் ..
கீதை சொன்ன வேதம் ஒன்று காற்றில் மயிலாக பறந்து வந்தது ..
தோகை விரித்து சொன்னது ..
துவண்டு போவது வாழ்க்கை அல்ல தூக்கி நிறுத்துவது தான் வாழ்க்கை ..
இழந்த பொருளை எண்ணி வாழாதே
இழக்கப்போகும் பொருளை கட்டி அணைக்காதே ...
எதுவும் சொந்தமில்லை ஆனால் நான் உன் சொந்தம் என்றே சொன்னது ...
ரமண கீதை அது காண்டீபம் மீண்டும் நிமிர்ந்து கையில் வந்து நின்றது ..
காணும் காட்சி எல்லாம் களிப்பாய் அமைந்தது ... 🎉🎉🎉
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!
எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.🌺🌺🌺
கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே!
உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.
ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.
காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,
தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான
கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!🌷🌷🌷
வாக்கு கொடுப்பது மிக எளிது.
அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும்.
வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள்.
நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும்,
சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.👏👏👏
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.🌺🌺🌺
அவர்களின் தங்கநகைகள் ஆட,
பெண்களின் கூந்தல் ஆட,
அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட,
குளிர்ந்த நீரில் ஆடுங்கள்.
அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள்.
வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள்.
ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள்.
அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள்.
முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள்.
பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.🎉🎉🎉🌷🌷🌷
குறிப்பாக குளியலின் போது இன்ப உணர்வுகளுக்கும்,
பிற கீழ்த் தரமான எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது.
இந்த சமயத்தில் நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களே நாவில் இருந்து வர வேண்டும்.
இந்த திருநாமங்களைச் சொல்லிவிட்டு, அன்றையப் பணிகளை திட்டமிட்டு செய்தால் நம்மை வெற்றி தேடி வரும் என்பது இப்பாடலின் உட்கருத்து.🌺🌺🌺👏👏👏
*Deivathin Kural volume 2 page 435*
All Brahmin must do any one activity to nurture Vedas. Everyday one need to perform Brahma yagnam. Here the meaning of Brahma is Vedham. One need to do tharpanam to the Rishi of his Vedic Saagai, which he has to study ( adhyayanam) at least you should recite a few mantras of the saagai. If that is also not possible at least should do Gayatri japam without fail.
Gayatri is the essence of vedha.Hence that gaytri is to be meditated for thousand times every day. In worst case at least 10 times it should be chanted.
Gayatri Mantra gives purity of mind .Gayatri devatha is sun .Sunday ,the day of the sun is an holiday for all.Therefore at least on that day all can get up early at 4 O'clock and do the chanting of Gayatri mantra for thousand times .This will give well-being for all.
*29. 12. 2020 - TUESDAY*
*நாடும் நாமும் நலமாய் வாழ*
*நற் சிந்தனைகள்.*
*இனிய செவ்வாய் காலை வணக்கம்.*
*ஓம் சரவணபவ*
🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
*உங்கள் உணர்வுகளை நீங்களே கட்டுப்படுத்தி ஆள கற்றுக் கொள்ளுங்கள் ...*
*இல்லையெனில் மற்றவர்கள் உங்களை கட்டுப்படுத்தி ஆளக்கூடும் ...!*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால்*...
*முன்னேற்றத்திற்கான வாயிற் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்*...!
🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️
*பக்குவம் என்பது பெரிய பெரிய விஷயங்களை பேசுவது அல்ல ...*
*சின்ன சின்ன விஷயங்களை கூட புரிந்து கொள்வது ...!*
*kn*
🙏🌺🙏☘🙏🌹🙏🌸🙏💐
ஸ்ரீ பகவான் மஹிமானு வர்ணனம்
தத்தே ப்ர்த்யக்3ர த4ராத4ர லலித
கலாயாவலி கேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜன
த்3ருசா’ம் பூர்ண புண்யாவதாரம் |
லக்ஷ்மி நிச்’ச’ங்கலீலா நிலயன மம்ருத
ஸ்யந்த3 ஸந்தோ3ஹ மந்த:
ஸிஞ்ச’த் ஸஞ்சிந்தகானாம் வபுருரனுகலயே
மாருதாகா3ரநாத2!
लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।
लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:
सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥
तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं
लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।
लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:
सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥
Thou are the abode where Goddess Laxmi delights without inhibition. Thou are the source of a torrential flow of nectarine Bliss, soaking the hearts of people who meditate. On that form of Thine I continuously meditate, O Lord of Guruvayur!
நைந்து அழி கனியால் நலன் இலை பதத்தில்
நாடி உட்கொள் நலம் அருணாசலா (அ)
அருணாசலா ... நன்றாக பழுத்து கனிந்த பழம் மரத்தில் தங்குவதில்லை... அந்த பழத்தை சாப்பிடவும் முடியாது .... இப்படி ஒரு நிலமை எனக்கும் வர வேண்டும் என்று நீ விரும்புகிறாயா அருணாசலா?
பழுத்து கனிந்து நான் கீழே விரும்பவில்லை ... அந்த தருணம் வருவதற்கு முன் நீ ஓடிவந்து எனக்கு அருள் செய்யக்கூடாதா .... எல்லோருக்கும் நான் உபயோகமாக இருக்கும் போது உன்னுடன் சேர்ந்து விட ஆசைப்படுகிறேன் ... எதற்கும் யாருக்கும் உபயோகமாக இல்லாமால் இருக்கும் நிலைக்கு என்னை தள்ளி விட்டு விடாதே ...
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எனக்கே நான் பாரமாக ஆகும் முன் என்னை ஆட்க்கொண்டு அருள் செய் அருணாசலா என்று நம் எல்லோருடைய ஆதங்கத்தையும் அழகாக அருணாசலத்திடம் சொல்கிறார் ரமணர்.
நொந்திடாது உந்தனைத் தந்து எனைக் கொண்டிலை
அந்தகன் நீ எனக்கு அருணாசலா (அ)
அருணாசலா ... இன்று உன்னை கண்டபடி திட்டப்போகிறேன் ... தயாராக இரு ...முன்னதாக சொல்லிவிட்டு திட்டுபவன் நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும் ....
நீ என்னை ஆட்க்கொள்ளுவாய் என்றே இந்த நாள் வரை காத்திருந்தேன் ...என் மனம் வருந்தாமல் என்றாவது நடந்து கொண்டிருக்கிறாயா?
உன் நெஞ்சில் கை வைத்து சொல் .... உன்னை எனக்குத் தா, எனக்கே தா என்று பல தடவை உன்னிடம் கேட்டேன் ...நான் வருந்தி கேட்டு தான் மிச்சம் ... கேட்க்காமல் கொடுப்பவன் நீ என்று எல்லோரும் சொல்கிறார்களே ...
வாடி வதங்கி போகும் என் உயிருக்கு நீ தான் எமன் ...இந்த நாள் வரை ஒரு எமனையா வணங்கி கொண்டிருந்தேன்.? நினைக்கவே வெட்கமாக இருக்கிறது அருணாசலா. நான் வருந்தாமல் உன்னையே எனக்குத் தந்து என்னை ஆட்க்கொள் அருணாசலா ... காலனை காலால் உதைத்தவன் நீ .... நீயே எனக்கு எமனாக வந்தால் நான் என்ன செய்வேன் அருணாசலா .... இரக்கம் காட்டு ...உன் அழகை காட்டு அருணாசலா ...
63 –
நோக்கியே கருதி மெய் தாக்கியே பக்குவம்
ஆக்கி நீ ஆண்டு அருள் அருணாசலா (அ)
அருணாசலா, நீ எப்படி என்னை ஆட்கொள்ள வேண்டும் தெரியுமா?
நீ ஆட்கொள்வது என்பது ஏனோ தானோ என்று இருக்க கூடாது
அதிலே ஒரு மென்மை இருக்க வேண்டும், நளினம் இருக்க வேண்டும்,
கற்புள்ள பெண்களுக்கு நாணம் வருவதைப்போல் இருக்க வேண்டும் ...
நீ முரடன் ... ஒரு பெண்மையின் நளினம் உனக்கு வருமா?
என்னை நெருங்கும் போது உனக்கு வேறு எவர் நினைவும் வரக்கூடாது ... என்னை மெதுவாகத் தொட வேண்டும் ...
நீ என்னை தொடும் போது என் மனதில் 1000 பட்டாம் பூச்சிகள் வட்டமடிக்க வேண்டும்.
...தென்றல் மெதுவாக தத்தி தத்தி தவழ்ந்து என்னிடம் வரவேண்டும் ... மழைத்துளிகள் பன்னீராக என் மீது தெளிக்க வேண்டும் ...
வானத்தில் மின்னும் நட்சத்திர கூட்டம் நான் தொடுக்கும் அக்ஷர மாலையாக என் மீது விழ வேண்டும்.
உன் கால் சலங்கைகள் அருணாசலா அருணாசலா என்று சப்தம் எழுப்ப வேண்டும் ...
உன் மானும் மழுவும் உன் ஆனந்த நடனத்தை எனக்கு காட்ட வேண்டும்.
நீ என்னை தொட்டவுடன் என் மேனி மெழுகு வர்த்தியாய் கரைய வேண்டும் ...
உன் கரங்கள் என்னை உன்னுடன் சேர்த்து அணைக்கும் தருணத்தில் நான் நீயாக மாறி இருக்க வேண்டும் அருணாசலா. இப்படி வந்து எனக்கு அருள் செய்து என்னை ஆண்டருள் அருணாசலா ....
பற்றி மால்விடம் தலையுற்று இறுமுனம் அருள்
பற்றிட அருள்புரி அருணாசலா (அ)
Before the poison of illusion rises to my head, make me cling to you Arunachala!
அருணாசலா, இந்த வாழ்வு, இந்த உலகம், இந்த உறவினர்கள், வீடு, கார், பங்களா இத்யாதி இத்யாதிகள் எல்லாமே வெறும் மாயை என்று எனக்கு தெரிந்து விட்டது ...
இருந்தும் இவைகளை உதறிவிட்டு உன்னிடம் ஓடி வர முடியாமல் ஏதோ என்னை தடுக்கிறது ... அது என் விதி பலனா, என் பூர்விக கர்மாவா? இந்த மாயைகள் எனக்குள் புகுந்துகொண்டு எனக்கேத் தெரியாமல் விஷம் போல் என் தலைக்கு எறிக்கொண்டிருக்கிறது ...
இந்த விஷம் எனக்குள் ஏறாமல் தடுப்பது உன் கடமை அல்லவா ....
உன்னைப்போல் கழுத்தில் நாக பாம்பினை சுற்றிக்கொண்டு உள்ளே போகும் விஷத்தை என்னால் முறி அடிக்க முடியாது ...என்னை விரைவில் வந்து ஏற்றுக்கொள் ....
பொய்யான வாழ்க்கை இதை மெய்யின நம்பி மெய்தனை சிதைத்துக்கொண்டேன்.
மெய் நீயல்லவோ இதை நெய் விளக்கு ஏற்றி சத்தியம் செய்திடுவேன் ...
மெய் பொய் ஆகும் நேரமதில் கை கொடுத்து காத்திடுவாய் மையிடும் குழலியாள் மனம் மெய்யன கொள்ளை கொண்டவனே ...
பார்த்தருள் மால் அறப் பார்த்தினை எனின் அருள்
பார் உனக்கு ஆர் சொல்வர் அருணாசலா (அ)
If you don't see me to destroy the ignorance of my mind who else is going to tell you to see me Arunachala?
அருணாசலா என்னை நீ பார்த்து அதனால் என் மன இருள் அழியும் என்று ஆசையாக இருக்கிறேன் ... நீயோ இன்னும் பாராமுகமாகவே இருக்கிறாய் ... உனக்கும் ஆறு முகம் ஈசான முகத்தையும் சேர்ந்து ஆனால் ஒரு முகம் கூட நான் இருக்கும் திக்கை பார்க்க மறுக்கிறதே ...
என்னை படைத்தவன் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு என்ன எனக்கு இதுவரை செய்துள்ளாய் அருணாசலா .... தாயாக உன்னை பார்க்கிறேன் ... தந்தையாக தெரிகின்றாய் ... காதலியாய் பார்க்கிறேன் நண்பனாகத் தெரிகின்றாய்... கணவனாக பார்க்கிறேன் .... மனைவியாய் சிரிக்கின்றாய் ...
கனவில் வரும் நீ ஏன் எதிரில் தெரிவதில்லை ... என் வாழ்க்கை ஒரு கற்பனையாகவே போய் விடுமோ .... யார் வந்து என்னிடம் போ என்று உனக்கு சொல்வார்கள் என்று காத்துக்கொண்டு இருக்கிறாய் அருணாசலா??
பித்துவிட்டு உனை நேர் பித்தன் ஆக்கினை அருள்
பித்தம் தெளி மருந்து அருணாசலா (அ)
Stop the madness, make me one crazy for you, oh medicines that cure all mental illness arunachala...
அருணாசலா சுந்தரர் நீ முதலில் எடுத்துக்கொடுத்த பித்தன் என்ற வார்த்தையை வைத்தே பித்தா பிறைசூடி என்று பாடினார் ... நீ பித்தன் என்று எல்லோருக்கும் தெரியும் ...உன் பக்தர்கள் மீது அதிக பித்தம் கொண்டவன் ... அவர்களுக்கு ஓடி வந்து அருள் செய்வதில் பித்தம் கொண்டவன். பித்தாகி போனவர்களின் பித்தம் தீர்ப்பவன் ....
பீதிஇல் உனைச் சார் பீதியில் எனைச்சேர்
பீதி உந்தனக்கு ஏன் அருணாசலா (அ)
You are fearless. I came to you without any fear. Why do u fear to join me arunachala?
அருணாசலா ...நீ பயமற்றவன்... பூத கணங்கள் உன் அடிமை ... காலனையே காலால் உதைத்து பின்பு மனம் இரங்கி உயிர் பிச்சை தந்தவன். பயம் உன்னிடம் பயப்படும் ... பாசம் உன்னை அண்டுவோரை கண்டு பயப்படும் .... பஞ்சாக்ஷ்ரம் ஓதுவோரை பயம் என் செயும் இடுகாடு என் செயும் எமனின் கடா என் செய்யும் ...கூத்தனின் நடனமதில் அபயம் வந்தே பயம் தனை திரிசூலத்தால் கொல்லாதோ?
உன்னிடம் நானும் பயம் இல்லாமல் வந்து சேர்ந்தேன் அருணாசலா ... எதற்கு பயம் வேண்டும் எனக்கு ...கருணையின் கடல் அல்லவா நீ ... கற்பக விக்க்ஷம் அல்லவோ நீ ... உன்னிடம் பயம் என்பது.
நெருப்புடன் நீர் விளையாடுவதைப்போல் ....
காற்றுடன் தூசிகள் உறவாடுவதைப்போல் ...மேகங்களுடன் நிலவு சொந்தம் கொண்டாடுவதைப்போல் ... எண்ணங்களுடன் எழுத்துக்கள் போட்டி வைத்துக்கொள்வதைப்போல் ... கவிஞனுடன் கவிதைகள் சண்டை போட்டுக்கொள்வதைப்போல், காதலியுடன் காதல் போருக்கு செல்வதைப்போல் ...
அருணாசலா. உனக்கும் பயமில்லை எனக்கும் உன்னிடம் பயமில்லை. பயமே தெரியாத நீ பயமறியாத என்னிடம் சேர ஏன் பயப்படுகிறாய் ..
.இப்படி நீயே பயந்தால் உணக்குத் துணையாக நானும் பயப்பட வேண்டி இருக்குமே ...இப்படி நாம் இருவரும் பயந்து கொண்டிருந்தால் நம்மை பார்ப்பவர்கள் பயந்து போய் விடுவார்களே என்ற பயம் உனக்கு கொஞ்சமும் இல்லையே என்று நினைக்கும் போது எனக்கு பயமாக இருக்கிறது அருணாசலா ...
புல்லறிவு ஏது உரை நல்லறிவு ஏது உரை
புல்லிடவே அருள் அருணாசலா (அ)
Tell me what is lowly knowledge and what is good knowledge. Then make me attain the good knowledge arunachala!
அருணாசலா! எல்லாம் எனக்கு கொடுத்துவிட்டாய் என்று பீத்தி க்கொள்ளாதே அருணாசலா ... இன்னும் எனக்கு கீழ்த்தரமான அறிவுக்கும் உயர்ந்த அறிவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இந்த சின்ன உதவி கூட பண்ணாமல் நீ கேட்டதை எல்லாம் தந்து விட்டேன் என்று உன் புன்னகையினால் சொல்லி காட்டுகிறாய் ....
இங்கே ரமணர் ஒரு பெரிய தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறார் .... அவர் உண்மையில் அருனாசலத்திடம் எதையுமே கேட்டு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னையே அருணாசலத்திடம் ஒப்படைத்தவர் அவர் ...அவர் வேறு அருணாசலம் வேறு இல்லை ... நமக்காக நம்மை உயர்வடைய இப்படி எல்லாம் கேட்க்கிறார் ரமணர். கீழ்த்தரமான அறிவு என்றால் என்ன? .... வெறும் கெட்ட எண்ணங்கள் மட்டும் அல்ல கீழ்த்தரமான அறிவு இல்லை ...
69 –
பூமணம் மா மனம் பூரண மனம் கொளப்
பூரண மனம் அருள் அருணாசலா (அ)
To make my mind that is attached to inherent tendencies have perfect tendencies bless me with perfect nature arunachala !!
அருணாசலா ... இன்னும் இந்த பூமியின் மீது அதன் வாசனையின் மீது எனக்கு பற்று இருக்கிறது .... இந்த பூமியின் நறுமணம் என்னை விட்டு போகாதே என்று கெஞ்சுகிறது. இப்படி நான் இந்த பற்றுதலை அறுக்க முடியும்? என் நாசி இனிமேல் இந்த வாசனையை நுகரக்கூடாது ... உன்னைப்பற்றிய எண்ணங்கள் கொண்ட நறுமணம் மட்டுமே என் நாசி நுகர் வேண்டும் அருணாசலா ....
அந்த நமசிவாய என்ற ஐந்தெழுத்து மலர் ஒன்றே போதும் ... அதிலே இருப்பது பச்சை கற்பூரம், தட்டிப்போட்ட ஏலக்காய், தட்டாமல் போட்ட கஸ்தூரி திலகம், காஷ்மீர் குங்குமப்பூ, அதன் நறுமணம் வாடாது, வதங்காது\, தேயாது, தொலையாது, தோயாது, துவக்காது .... இந்த ஐந்தெழுத்து எனக்குத் துணையாக வரும் போது என்னிடம் நறுமணத்திற்கு குறைவது அருணாசலா.
70 –
பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன்
பெருமை யார் அறிவர் அருணாசலா (அ)
As soon as I thought of You, you dragged me to you. Who can understand your greatness arunachala!
அருணாசலா, சும்மா உன் பெயரை எல்லோரும் சொல்கிறார்களே என்று நானும் கொஞ்சம் சொல்லிப் பார்த்தேன்.... உடனே என்னை உன் பக்கம் இழுத்துக்கொண்டு விட்டாயே அருணாசலா ...நான் எவ்வளவு பாவ ஆத்மா ... உன்னை ஒரு போதும் நினைத்ததில்லை, மனமார வணங்கியது இல்லை வாய் நிறைய அருணாசலா என்று கூப்பிட்டதில்லை .... ...
உன்னை கணக்கு கேட்பவர்கள் யாராவது இருந்தால் என் மீது பொழியும் அன்பிற்கு என்ன காரணம் சொல்லப்போகிறாய் நீ அருணாசலா? நம்பக்கூடியதாய் ஒரு காரணமும் உன்னிடம் இல்லையே ...எப்படி சமாளிக்கப்போகிறாய்??
உன் பெருமையை யாரால் புரிந்து கொள்ள முடியும் ...??
நீயே எல்லோருக்கும் அமுதமாக இருக்கிறாய் ...ஆனால் உன் உடம்பில் விஷம் கொண்ட நாகங்கள் ...விஷமும் அமுதமும் சமம். மண்டைஓடும் புலிதோலும் உன் உடம்பில் அதே சமயம் சொக்கும் சொக்கனாக, மீனாக்ஷி சுந்தரேஸ்வரனாக எல்லா சொர்ணங்களும் ஜொலிக்க வருகிறாய் ...
செல்வமும் ஒன்றும் இல்லாமையும் உனக்கு சமம் ....
ஒரு பக்கம் சூரியனையும் இன்னொமொறு பக்கம் சந்திரனையும் வைத்துக்கொண்டுள்ளாய் ... பகலும் இரவும் உனக்கு சமம் ...ஒரே இடத்தில் யோக நிலையில் இருக்கிறாய் ...அதே சமயம் பல திருவிளையாடல் கள் புரிகிறாய் ... மௌனமும் கலகலப்பும் உனக்கு சமம் ...
பேய்த்தனம் விட விடாப்பேயாப் பிடித்து எனைப்
பேயன் ஆக்கினை என் அருணாசலா (அ)
In order to destroy my madness you caught me like a demon made me mad arunachala
அருணாசலா என்னிடம் இருக்கும் குணங்கள் எல்லாம் பேய் குணங்கள். ஒன்றுமே சிறப்பான குணம் என்னிடம் இல்லை ... இந்த கெட்ட குணங்களை என்னிடம் இருந்து அழித்து விட நீ எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஒன்றா இரண்டா? அப்பப்பா சொல்லி மாளாது அருணாசலா.
இங்கே பேய் என்பதை பிசாசு பூதம் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது ... தீவிரமான ஆழமான என்று எடுத்துக்கொண்டு படிக்கவும். அருணாசலாவின் ஆழமான கருணையை ரசிக்கலாம்.
72 –
பைங்கொடியா நான் பற்றின்றி வாடாமல்
பற்றுக் கோடாய்க் கா அருணாசலா (அ)
I'm a young vine. Without making me dry and die because I hv no support, give me support and protect me Arunachala ...
அருணாசலா நான் நேற்று பூத்த செடி ...கொடியாக உன்னையே பற்றிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அருணாசலா ... எனக்கு என்று யார் இருக்கிறார்கள் அருணாசலா ...பிறந்தது முதல் நீ இருக்கும் இந்த திருவண்ணாமலை ஒன்று தான் என் வீடு ....' மாதாச பார்வதி தேவி பிதா தேவோ மகேச்வர என்றுதானே வாழ்கிறேன் ...
பொடியான் மயக்கி என் போதத்தைப் பறித்து உன்
போதத்தைக் காட்டினை அருணாசலா (அ)
You charmed me, you removed my knowledge and showed your knowledge arunachala
அருணாசலா, நீ மிகவும் சாமர்த்தியமானவன்... எல்லோரும் உன்னை ஒரு அப்பாவி (அப்பா என்று கூப்பிடும் பாவிகளுக்கு ஒடிப்போய் விழுந்து விழுந்து அருள் செய்பவன்) என்றே எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் ...
வணங்குபவர்களை உன் பக்கம் இழுத்துக்கொள்பவன் என்று ...என் விஷயத்தில் நீ என்ன செய்தாய் என்று ஊர் பட சொல்லி உன் உண்மை வேஷத்தை இந்த உலகிற்கு சொல்லப்போகிறேன் ...பிறகு பார் உன்னை யாருமே பித்தன், வெகுளி என்று சொல்ல மாட்டார்கள் அருணாசலா ... நான் பொறுத்தது போதும் ... உன் முகத்திரையை கிழிக்கும் நேரம் வந்து விட்டது
சரி அத்துடன் விட்டாயா ... என் தாய் ஞாபகம் எனக்கு வந்து விடக்கூடாது என்று என் தாயினும் மேலாக அன்பை, கருணையைக் காட்டினாய் அவ்வைக்கும், விசுவாமித்திரருக்கும் மேலான கருணை அது ... சரி அது போகட்டும் ... அப்படியே விட்டு விட்டாயா ... இல்லையே ...
சரி போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அருள் செய்து விட்டாய் என்று நினைக்கும் போது இன்று நினைத்தும் பார்க்க முடியாத ஒரு காரியம் செய்துள்ளாய் .... உன்னை எப்படி மன்னிப்பது அருணாசலா?
என்னை மீண்டும் பொடி போட்டு மயக்கினாய். மயக்கத்தில் இருந்த என்னை என் அனுமதி இல்லாமல் நான் இதுவரை சேர்த்து வைத்த என் புத்தியை பிடுங்கி வெளியே தூர எரிந்தாய் ...
கொஞ்சம் மயக்க நிலையில் இருக்கும் போது கவனித்தேன் ... அருணாசலா புத்தியே இல்லாமல் எப்படி இனி இருக்கப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது உடனே உன் ஞானத்தை, அறிவை எனக்குள் திணித்தாய் ....
என்னை நீயாக்கி விட்டாய் ... அதிகமாக உன்னை இனி நான் திட்ட முடியாது ... ஏனென்றால் என்னையே நான் திட்டிக்கொள்வதில் என்ன லாபம் அருணாசலா?
போக்கும் வரவும் இல் பொது வெளியினில் அருட்
போராட்டம்காட்டு அருணாசலா (அ)
When there is no traffic in open arena, show the combat of grace, arunachala
அருணாசலா ... என் வாழ்க்கை ஒரு வெட்டவெளி இல்லை ... வருவோரும் போவோரும் மிக அதிகம் ... யாரோ வருகிறார்கள் மனதில் ஒட்டாமல் மறைந்து போகிறார்கள் ...
எங்கிருந்தோ சிலர் வருகின்றனர் ...உயிர் போகும்வரை மனதில் இடம் பிடித்துக்கொள்கின்றனர் ....
உன்னால் மட்டுமே நெரிசல் சலசலப்பு இல்லாத மனதையும் வாழ்க்கையையும் எனக்குத் தர முடியும் ...
நந்திகேஸ்வரரின் மேளம், பிரம்மாவின் தாளம், அரங்கனின் புல்லாங்குழல் ஓசை, கலைவாணியின் வீணை எழுப்பும் நாதம், அன்னை உமையின் ஆனந்த நடனம், முருகனின் மயிலாட்டம், வேழமுகத்தோனின் வெண்கல குரல், மணிகண்டனின் புலியாட்டம், பால திரிபுரசுந்தரியின் நடனம் .... இப்படி நாதங்கள் எழுப்பும் போக்குவரத்து மட்டுமே என் உள்ளத்தில் தினமும் விடாமல் நடை பெற்றுக்கொண்டிருக்க அருள் புரிவாய் அருணாசலா ...
பௌதிகம் ஆம் உடல் பற்று அற்று நாளும் உன்
பவிசு கண்டுற அருள் அருணாசலா (அ)
Destroying the attachment to the chemical body, make me always live looking your beauty arunachala
மண்ணுக்குள் போகும் இந்த உடம்பிற்கு இருக்கும் திமிரை பார்த்தாயா அருணாசலா ... வெறும் கழற்றிப்போடும் ஒரு சட்டைக்கே இவ்வளவு அகம்பாவம் இருந்தால் உள்ளே இருக்கும் அழியாத ஆத்மாவுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும் அருணாசலா ....
ஆனால் எப்படி அதானால் கர்வமாக நடந்து கொள்வதில்லை தெரியுமா ...? அங்கே நீ இருக்கிறாய் ... காலனை காலால் நசுக்கியதைப்போல் உன் காலடியில் என் ஆத்மாவை வைத்துள்ளாய் ...
நீ இரண்டு வாய்ப்புக்கள் தருகிறாய் ...ஒன்று மண்ணுக்குள் போகும் இந்த அழியும் உடம்பை விரும்பி அதை பாதுக்காத்துக்கொள் அல்லது அழியாத ஆத்மாவை விரும்பி அதை பாதுக்காத்துக்கொள் ...
நான் ஆசைப்படும் பொருளை தராதே அருணாசலா ...அது நிரந்தரம் இல்லை ... என்னிடமும் பத்திரமாக இருக்கும் வாய்ப்பும் அதற்கில்லை ... நீ விரும்பும் பொருளை கொடு ...அதுதான் ஆசுவதமானது ...யாராலும் திருடிக்கொண்டு போக முடியாது ... என்னையும் உன்னையும் ஒரு சேர கட்டிப்போட்டு வைக்க கூடியது ... நீ யே நினைத்தாலும் அந்த இனிய பந்தத்தை இனி உடைக்க முடியாது அருணாசலா.
விவரித்த விதம் நேரில் சென்று திருச்செந்தூர் முருகனை தரிசித்த உணர்வை ஏற்படுத்தியது...
அருமை..
ஓம் சரவணபவ..
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
மிகவும் எளிதாக
அனைத்துது விவரங்களை சேகரித்து
பூமாலையாக தொகுத்து முருகனின் அருள் எல்லாருக்கும் கிடைக்க
பரார்த்தனை 🌹🌹
முருகா🙏🏻🙏🏻🙏🏻