பச்சைப்புடவைக்காரி பகையை வெல்லும் ஆறுபடை 3- 15 பழனி 1 278

                                          பச்சைப்புடவைக்காரி

என் எண்ணங்கள்

பகையை வெல்லும் ஆறுபடை - 3

பழனி 1

(278) 👍👍👍💥💥💥



அருள்மிகு தண்டாயுதபானி சுவாமி திருக்கோயில், பழனிபழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். 



ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். 




இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் “பழம் நீ ” (பழனி) என அழைக்கப்படுகிறது.

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் .

புராணங்களில் இப்படியான பெயர்க்காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லில் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.



முருகன் சிலையின் சிறப்பு

முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. 

இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.



போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்து வந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.




மாம்பழம் கிடைக்காமல் அவன் வந்து அமர்ந்த இடம் இது. முருகனை சமாதானப் படுத்த முயன்ற பார்வதி, முருகா நீயே ஞானப்பழம் உனக்கு எதற்கு பழம். பழத்தின் காரணமாக பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என அருளினார். பழம் நீ என்பதுதான் மருவி பழனி என்றாகிவிட்டது. மேலும் முருகன் கோபம் கொண்டு குன்றின் மீது அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என பார்வதி கூறினாள். இன்றும் தமிழகம் எங்கும் குன்றிருக்கும் இடமெல்லாம் முருகனை காணலாம்.



தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை 'ஸுப்ரமண்யன்’ என்றும் சொல்வோம். எத்தனை அர்த்தமுள்ள பெயர் இது என்பது உங்களுக்குத் தெரியுமா? 'பிரம்மண்யன்’ என்றால், பிரம்மத்தை உணர்ந்த பரம ஞானம் பெற்றவன் என்று பொருள். 'ஸு’ என்பது இதனை மேலும் சிறப்பிக்கும் அடைமொழி. 'அதி உன்னதமான’ என்பது இதன் பொருள்.

பிரம்மண்யத்தின் அதிஉயர்வான நிலையை அடைந்தவன் ஸுப்ரமண்யன். அவனுக்கு மேலான ஞானம், தேஜஸ் வேறு இல்லை என்பது பொருள். ஆகவேதான், முருகப்பெருமானை ஞானக்கடவுள் என்கிறோம். அப்பேர்ப்பட்ட ஞானவடிவமான முருகப்பெருமான், ஒருமுறை தேவலோக மாம்பழம் ஒன்றைப் பெறமுடியாத காரணத்தால் கோபம் கொண்டு ஆண்டியாகப் போய்விட்டதாக எல்லோரும் அறிந்த ஒரு புராணக்கதை மேலே சொன்னது . இந்த கதையை உண்மையில் நாம் இப்படிப்பார்க்கவேண்டும் .



இது, நாம் அறிந்த புராணம். இதில் தெரியாத கதையையும் தத்துவத்தையும் இப்போது அலசிப் பார்ப்போம்.

முருகன் ஞானக்கடவுள். உலகைச் சுற்றுவதற்குப் பதிலாக உமா- மகேஸ்வரனைச் சுற்றிவந்தாலே போதுமானது என்ற தத்துவம் அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? 

மேலும்... உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்த அம்மையப்பனையே சுற்றிவந்து கனியைப் பெற்றுக்கொண்ட அண்ணன் கணபதியிடம், ஞானமே வடிவான குமரன் கோபம் கொள்வானா? 

இப்படிப்பட்ட வரலாற்றை நம் குழந்தைகளுக்குச் சொன்னால், கடவுளிடமே கோபமும் தாபமும் இருந்தால் மனிதர்களிடம் இருக்காதா என்று எண்ண மாட்டார்களா? 



இந்தச் சம்பவத்தில் அடங்கியுள்ள தத்துவத்தைத் தெளிவாக சொல்கிறேன் ரவி !

நாரதர் தேவலோக மாங்கனியைச் சிவனாரிடம் கொடுத்து, அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக் குழந்தைகளான கணபதி, முருகப்பெருமான் இருவரிடம் இருந்தும் சட்டென்று பதில் வந்தது... 'தாங்கள் ஸர்வேஸ்வரன். இது தங்களுக்கே உரியது’ என்றார்கள் அவர்கள்.

ஆனால் ஈஸ்வரனோ, ''மூத்தவன் நீ. இந்தா, கனி உனக்கு!'' என்று கொடுத்தார்.

''இல்லை. இளையவன் அவன்; அவனுக்குக் கொடுங்கள்'' என்று முருகப் பெருமானைக் கைகாட்டினார் கணபதி. முருகனோ அண்ணனுக்கே அந்தப் பழம் சேர வேண்டும் என்று விரும்பினார்.



இப்படித்தான் பிரச்னை ஆரம்பித்தது. அப்போது ஒரு வேடிக்கையான நாடகம் நடத்த விரும்பினார், நாரதர். ''இது வெறும் பழமல்ல; ஞானப்பழம். தகுதி உடைவர்களுக்கே இது சேர வேண்டும்'' என்றார். ஈசன் சிந்தித்தார். 

''உங்களில் உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்தப் பழம். அப்புறம், போட்டியில் வென்றவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைக் கொடுக்கட்டும்'' என்று பிரச்னைக்கு மற்றொரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார்.

உலகைச் சுற்ற வேண்டும் என்றதும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம்வர மயிலேறிப் புறப்பட்டார் முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அருள்பாலிக்கும் சிவசக்தியைச் சுற்றி வந்தால் போதுமென நினைத்தார். அதனால் அம்மையப்பனை வலம் வந்து, கந்தன் வரும் முன்பே கனியைப் பெற்றார் கணபதி.



கந்தன் வந்தார். அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்குக் கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டார். 'உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும்’ என்ற உண்மை தனக்குத் தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அண்ணன் கணபதி பிரணவ வடிவம்; ஞானஸ்வரூபன். அவரிடமே இதற்குக் காரணம் கேட்டார் முருகப்பெருமான்.

அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது. தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்குக் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார் குமரன். அதன் தொடர்ச்சியாக, ப்ரம்மண்யனான தாம், ஸுப்ரமண்யனாக விரும்பினார். அதற்காக அவர் மேற்கொண்ட தவக்கோலமே பழநியாண்டி ரூபம்.



அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். 

சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தைக் காக்க எடுத்துக்கொண்ட பற்றற்ற திருக்கோலமே பழநி ஆண்டிக்கோலம்! 

'கனி கிடைக்கவில்லை’ என்ற கோபத்தில் ஆண்டியாகவில்லை கந்தன். உயர்ந்த ஞானம் தன்னுள்ளே உருவாகி, தன்னை வழிபடுவோர்க்கெல்லாம் அதனை வழங்குவதற்காக, விரும்பி ஏற்றுக்கொண்ட வடிவமே அந்தப் பரதேசி வடிவம்.




அம்மா அருமை இப்படிப்பட்ட கோணத்தில் இந்த புராண கதையை நாங்கள் கொஞ்சமும் யோசித்துக்கூட பார்த்ததில்லை ....

இன்னும் நிறைய விஷயங்கள் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் ஆச்சரியத்தைத் தரும் .. சிரித்துக்கொண்டே சிம்மநடை போட்டு வருடத்தின் இறுதி நாளில் எல்லோரையும் மனமார வாழ்த்திவிட்டு மீண்டும் வருவேன் என்றும் உங்களோடு பயணிப்பேன் என்ற நம்பிக்கையையும் தந்துவிட்டு மறைந்தாள் மாதங்கீ 




அகாந்தா  अकान्ता -  

ஸ்ரீ லலிதை  பாபங்களை அழிப்பவள். நல்ல கர்மாக்களை செய்ய வழிகாட்டுபவள்.  என்னைச்  சரணடை. உன் கர்மாக்களை பந்தமின்றி  முடித்து பலனை என்னிடம் விட்டு விட்டு என்னைச் சரணடை.  உன் பாபங்களை விலக்குவது எனது வேலையாகிவிடும். எதற்காக  கவலை உனக்கு ? என்கிறார் கிருஷ்ணன் கீதையில்  (XVIII.66.).    இதைத்தான் அம்பாள் செய்கிறாள்.

காந்தார்த  விக்ரஹா  कान्तार्ध-विग्रहा  -  

அம்பாள் அர்த்த நாரி . பாதி பரமசிவன். காந்தன் சிவன்.  புருஷன் ப்ரக்ரிதி சேர்க்கை.  சாந்தோக்ய உபநிஷத் (III.xii.6)    “புருஷனான  சிவன் பெருமை பெரியது. பிரபஞ்ச ஜீவன்கள்  அவனில் ஒரு கால் பாகம்.  மற்ற முக்கால் பாகம்  ஸ்வர்கத்தில் அம்ருதம் '' என்கிறது.  அம்ருதம் அம்பாள்.”




கார்ய காரண நிர்முக்தா  कार्य- कारण-निर्मुक्ता  -- 

அம்பாள் ஸ்ரீ லலிதை  காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவள் அதெல்லாம் நமக்குத்தான்.  எல்லாமே தானான  பரப்ரம்மத்துக்கு காரியமோ  காரணமோ எது?  ஏது?  ''அர்ஜுனா, இந்த மூவுலகிலும் எனக்கு செயல்புரிய என்று எதுவுமில்லை,  எதுவும் தேடவேண்டியதுமில்லை, ஏனென்றால் என்னிடம் இல்லாதது எதுவுமில்லை, இருந்தும் காரியங்கள் என் மூலம் நடந்துகொண்டு தான் இருக்கிறது.'' என்று கிருஷ்ணன் சொல்லவில்லையா?

காம கேளி  தரங்கிதா  काम-केलि-तरङ्गिता   

அம்பாளுக்கு சிவனைப் பார்த்துவிட்டால்  போதும். பரமானந்தம். சந்தோஷம். அன்பு  லலிதாம்பிகையின் ஒரு முக்கிய குணம் இல்லையா. 

காம கேளி  தரங்கிதா  काम-केलि-तरङ्गिता   

அம்பாளுக்கு சிவனைப் பார்த்துவிட்டால்  போதும். பரமானந்தம். சந்தோஷம். அன்பு  லலிதாம்பிகையின் ஒரு முக்கிய குணம் இல்லையா. 

=========================

Comments

ravi said…
*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

*நடராஜ பெருமான்*

நாட்டியம் அல்லது நடனம் பரமசிவபெருமானின் லீலைகளில் ஒன்றாகும். ப்ரம்மாவும் விஷ்ணுவும் கூட அவருடைய நடனத்தை பார்க்க செல்வதாக புராணங்கள் கூறுகின்றன. ஸம்ஸ்க்ருத மொழியில் வியாகரணம் சிவபெருமானின் நடனத்திலிருந்து பிறந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.
ravi said…
உண்மையாகவே अ (அ), इ(இ), उ(உ), ण्(ண்) முதல் लण्(லண்) வரையான 14 மாஹேஸ்வரஸுக்தங்களும் பாணினியின் வியாகரணத்துக்கு ஆதாரமாக இருக்கின்றன.

ravi said…
எல்லாவற்றுக்கும் ஆரம்பம் இவ்வாறு இருந்தது. ஸனகர் முதலிய முனிவர்களை ஆசீர்வதிக்க நடராஜ பெருமான் தன் நிருத்தயத்தின் முடிவில் தன் மத்தளத்தை 14 தடவை கொட்டினார். அந்த த்வனிகள் மாஹேஸ்வரஸுக்தங்கள் என்ற 14 ஸுத்ரங்களாக மாறின.

ravi said…
ஸ்ரீ அம்பாள் பெரும் உத்ஸாகத்துடன் சிவபெருமானின் நடனத்தை பார்ப்பதாக நம்புகிறார்கள். லலிதா த்ரிசதி அம்பாளை லாஸ்யதர்சனஸந்துஷ்டா என்று வர்ணிக்கிறது. லலிதா சஹஸ்ரநாமமோ லாஸ்யப்ரியா என்று அழைக்கிறது. மகிழ்ச்சியாக ஒன்று சேர்ந்த அந்த சிவமும் சக்தியும் உலகத்தை கடாக்ஷிக்கின்றன.

ravi said…
பெரிய யாத்திரை தலமான சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் இருப்பதை நாம் உணர்கிறோம். அந்த க்ஷேத்திரத்தில் ஜய்மினி மஹர்ஷி போன்ற முனிவர்கள் நடராஜப் பெருமானை பூஜித்து முக்தி அடைந்திருக்கிறார்கள். அப்பய்ய தீக்ஷிதருக்கு கூட அவருடைய அந்திம நேரத்தில் நடராஜ பெருமான் அருள் கடாக்ஷத்தார்.

ravi said…
எல்லோரும் நடராஜ பெருமானை ஆராதித்து தங்கள் வாழ்க்கையை ஸம்ருத்தி அடையச் செய்ய வேண்டும்👌👌👌👌
ravi said…
*சிவபெருமானுக்கு மார்கழி‌மாத திருவாதிரை நன்நாளில் களியமுது படையல் பற்றிய பதிவுகள் :*


ravi said…
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்.

ravi said…
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை.
ravi said…
மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

ravi said…
மறுநாள் காலையில் வழக்கம் போல் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார்.
ravi said…
கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

ravi said…
எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார்.
ravi said…
அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

ravi said…
சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
ravi said…
சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார்.
ravi said…
சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களியினை படைக்கின்றோம்.

ravi said…
மார்கழித் திருவாதிரை நன்னாள் நாளைய தினம் சிவாலயத்துக்குச் சென்று ஆடல்வல்லானைத் தரிசிப்போம். களியமுது படைத்து வீட்டில் பூஜிப்போம். உங்கள் வீட்டுக் களியைச் சாப்பிட வருவார் சிவனார். அம்பலத்தான் பெயர்சொல்லித் துதிப்போம்.

திருச்சிற்றம்பலம்.


நன்றி. 🙏
ravi said…
MahaPeriyava has advised many Sthothras to be chanted to different people.One of them is Narayaneeyam.

Sriman Narayaneeyam Dasakam 1 Shloka 7:

.
ravi said…
கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா ப3ஹுதர
ப4வகே2தாவஹா ஜீவபா4ஜா
மித்யேவம் பூர்வமாலோசித மஜித!
மயா நைவமத்3யாபி4ஜானே|
நோசேஜ்ஜீவா: கத2ம் வா மது4ரதரமித3ம்
த்வத்3வபுச்’ சித்3ரஸார்த்ரம்
நேத்ரை: ச்’ரோத்ரைச்’ச பீத்வா பரமரஸ
ஸுதாம்போ4தி4 பூரே ரமேரன் ||

கஷ்டா தே ஸ்ருஷ்டி சேஷ்டா ப3ஹுதர
ப4வகே2தாவஹா ஜீவபா4ஜா
மித்யேவம் பூர்வமாலோசித மஜித!
மயா நைவமத்3யாபி4ஜானே|
நோசேஜ்ஜீவா: கத2ம் வா மது4ரதரமித3ம்
த்வத்3வபுச்’ சித்3ரஸார்த்ரம்
நேத்ரை: ச்’ரோத்ரைச்’ச பீத்வா பரமரஸ
ஸுதாம்போ4தி4 பூரே ரமேரன் ||

ravi said…
மாயையினால் வெல்லப் படாதவரே! ஜீவர்களுக்குப் பலவகையான சம்சாரத் துன்பங்களைத் தருகின்ற தங்கள் சிருஷ்டி மிகவும் கொடியது என்று முன்பு எண்ணினேன். இப்போது அவ்வாறு நான் எண்ணவில்லை. நீங்கள் சிருஷ்டிக்காவிடில் மிகவும் மதுரம் ஆனதும், சிதானந்த ரசத்தால் உள்ளும் புறமும் நிறைந்ததும் ஆகிய தங்கள் திருமேனியைப் பக்தர்கள் தங்கள் கண்களாலும், காதுகளாலும் எங்கனம் பருகுவர்? பரமானந்தமாகிய அமிர்தக் கடலில் எங்ஙனம் விளையாடுவர்?

कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा-
मित्येवं पूर्वमालोचितमजित मया नैवमद्याभिजाने।
नोचेज्जीवा: कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं
नेत्रै: श्रोत्रैश्च पीत्वा परमरससुधाम्भोधिपूरे रमेरन्॥७॥

ravi said…
O Invincible Lord! Thy activity of creation is indeed a tragic sport, as it causes a lot of sufferings to the living beings. This is what I used to think, but now I do not think so. For if there were no creation, how could human beings enjoy the beauty and sweetness of Thy form which is so delightful to hear and ecstatic to behold, and thus revel in the ocean of Supreme-Bliss-Consciousness
ravi said…
Aarudra Darshan

Lord Shiva’s star is Aarudra, or Tiruvaadhirai and in the month of Margazhi it usually falls on the full moon day that follows vaikunta ekadashi. It is celebrated in all Shiva temples, most importantly, in Chidambaram.
Kanchi Mahaperiaval explains.
ravi said…
“Lord Shiva, in his manifestation as dancing Nataraja gives his darshan early in the morning on the day of confluence of the full moon and the star Aarudra that occurs only once in a year, ie in the month of Margazhi. Arudra in Sanskrit means wet, or dripping. This is the time of the year when nature itself puts on a cloak of cool dew. Full moon is also associated with cool soothing rays. On this auspicious day, it is the tradition to perform an abhisheka and worship Lord Shiva, with our hearts overflowing with compassion to other beings. What is also highlighted is the Nataraja form of Lord Shiva, in his ananda thandavam, or cosmic dance. It is only at His raised and slightly inclined foot – ‘குஞ்சித பாதம்’ – that we can seek our sanctuary.”
.
ravi said…
Margazhi is famous for various other Hindu religious festivals and events, such as Hanumath jayanthi and Ramana Maharishi jayanthi. It was the month in which Kurukshetra battle was fought and Paandavas regained their lost kingdom – indeed, when Geethopadesam to Arjuna by Lord Krishna took place.
This year, Aarudra darshan is on 30th Dec,2020.
ravi said…
May we follow Mahasamigal’s advice: ‘In this sacred Maargazhi month, everyone should get up at the ushah-kaala, long before dawn, perform pujas to Him and join in bhajans and turn their thoughts to God.’
Hara Hara Sankara, Jaya Jaya Sankara

Significance of Arudhra Darshan – Celebration of the Cosmic Dance of Lord Shiva.

ravi said…
Arudhra Darshan or Arudara Darshan is observed in the Tamil month of Margazhi (December – January). It is essentially a Shaivite festival and celebrates the cosmic dance of Lord Shiva, which is represented by the Nataraja form. Arudhra signifies the golden red flame and Shiva performs the dance in the form this red-flamed light. In 2020, Arudhara Darshan is on December 30.

ravi said…
The cosmic dance of Lord Shiva represents five activities – Creation, Protection, Destruction, Embodiment and Release. In essence, it represents the continuous cycle of creation and destruction. This cosmic dance takes place in every particle and is the source of all energy. Arudra Darshan celebrates this ecstatic dance of Lord Shiva.

ravi said…
It takes place on the full moon night (along with Arudara Birth Star) in the month of Margazhi and this is also the longest night in a year. The festival is mainly observed in the Tamil speaking world.

ravi said…
The most important Arudhra Darshan festival takes place at the Chidambaram Shiva Temple in Tamil Nadu. The cosmic dance of Lord Shiva is enacted on the day.

Most of the temples around the world with Lord Nataraja and Shiva as deity perform the Arudhra Darshan.

ravi said…
The Thiruvathirai Festival dedicated to Shiva and Parvati is observed on the day in Kerala.
Lord Nataraja Dancing Form of Shiva

ravi said…
Lord Nataraja is the dancing form of Lord Shiva who performs his divine dance to destroy a weary universe and make preparations for Lord Brahma to start the process of creation. The term ‘Nataraj’ means ‘King of Dancers’. It is a visual representation of Lord Brahma and the dance posture of Lord Siva.

ravi said…
Appearance of Nataraja

In almost all images Shiva is seen with four arms and flying locks dancing on the figure of a dwarf called ‘Apasmara’ symbolizing Siva’s victory over human ignorance. Siva’s right hand in the back holds the “Damaru”, that symbolizes sound originating creation and front right hand is in the “Abhaya Mudra” showering protection from evil and ignorance.

ravi said…
The left hand in the back carries Lord Agni which signifies destruction and the front left hand is held across his chest in the Gajahasta or elephant trunk pose, with wrist limp and fingers pointed downward toward the uplifted left foot signifies upliftment and liberation. The fiery ring surrounding Siva is the Prabhamandala representing the universe with all its illusion, suffering and pain. The outer edge is the fire and the inner edge is the water of the oceans.

ravi said…
Picture of Lord Nataraja, the Dancing Form of Shiva

A snake uncoiling from his fore arm, legs and hair which is braided and jeweled stands for egotism unveiling. The snake swirling around his waist is ‘Kundalini’ which is the divine force thought to reside everything. On his head is a skull, which shows his conquest over death. Goddess Ganga also sits on his tangled hair. The crescent moon in his matted hair keeps Kama, the God of Love, alive. His third eye is the symbol of his omniscience, insight and enlightenment. The face of Siva represents his neutrality thus being in balance. The whole idol sits on a lotus pedestal which shows the symbol of creative forces of the universe.

ravi said…
Nataraja Statues

The origin of Nataraja sculpture is in Tamil Nadu in Southern India. History reveals that it was developed in south India by century artists during the Chola period of 9th and 10th century. It is an iconographic representation of the rich and diverse cultural heritage of India and by 12th century AD, Nataraja became the supreme statement of Hindu art. The Natarajar Temple at Neyveli in Tamilnadu has the largest Panchaloha idol of Lord Nataraja.
Chidambaram

ravi said…
Chidambaram is called the centre of universe. Here the Nataraja sculpture is made in bronze and has a great relevance the cultural heritage of our country. Dance in its true form is performed here by great artistes to seek blessings from Nataraja to develop their potential in the art. The image of Lord Siva as a cosmic dancer is shown at Chidambaram Natarajar Temple, an unusual presence of the Lord from his other forms. A divine representation of a moving figure than the dancing figure can rarely be seen anywhere
ravi said…
🙏🌺🙏☘🙏🌹🙏🌸🙏💐🙏

*30. 12. 2020 - WEDNESDAY*

*நாடும் நாமும் நலமாய் வாழ*
*நற் சிந்தனைகள்.*

*இனிய புதன் காலை வணக்கம்.*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

*ஒவ்வொரு நாளும் தொடக்கத்தில் ஒரு எதிர்பார்ப்புடன் ஆரம்பித்து*...

*இறுதியில் ஒரு அனுபவத்துடன் முடிகிறது ...!*

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

*அனு தினமும் ஆசைகளை அடுக்காதே*...

*அடுக்கிய ஆசைகள் அதிகமானால் சரிந்து விழும் ஒரு நாள்*...!

🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️

*சாவின் விளிம்பு வரை சென்றவன் கும்பிடாத தெய்வங்களே இல்லை ...*

*கஷ்டத்தின் விளிம்பு வரை சென்றவன் திட்டாத தெய்வங்களே இல்லை ...*

*இது மனித நியதி..!*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ravi said…
ஆருத்ரா தரிசனமோ இன்று ...

ஆனந்த தாண்டவமோ இன்றும் ...

சந்தோஷம் கொண்டாட துந்துபிகள் கானம் இசைக்க

தேவர்கள் பூமாலை சொரிய

திருமாலும் பிரம்மனும் தாளம் போட

ஆதி சங்கரர் சிவானந்த லஹரி சொல்ல ..

தித்திக்கும் திருவாசகம் கரும்பென கடம்பமாய் பரந்திருக்க

காமாக்ஷி பேஷ் பேஷ் என்றே மெய் மறக்க

வீணையின் நாயகி காம்போதி ராகமதில் சிவபுராணம் சொல்ல

திருமகள் பாதை எங்கும் பொற்காசுகள் தெளித்து விட

ஆடுகின்றானோ தில்லையிலே ஆனந்த தாண்டவம் ...

சுவாமிநாதா நீயும் ஆடுகின்றாய்

ஆனந்தம் பொழிகின்றாய் ...

உவமை சொல்ல தில்லை கூத்தனாலும் இயலுமோ ?💐💐💐
ravi said…
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ravi said…
உள்ளே சுவாசிக்கும் காற்று சிவாயநம என்று சொல்லி போனது வெளி வந்த காற்று ரமணா என்றே சொல்லி வந்தது ...

ஏன் இந்த மாற்றம் என்றே கேட்டேன் ..

சிவனை நினைத்தாய் உள்ளம் வெண்மை ஆனது

வெளியே வந்த வெண்மை ரமணர் பெயர் கொண்டது ...

காற்று சொன்ன கீதை காலமெல்லாம் கண்ணனின் புல்லாங்குழல் கீதம் போல் காதுகளில் ஒலிக்கிறது ..

யார் செய்த புண்ணியமோ காணும் வெண்மை யாவும் ரமணராக சிரித்தது 😇😇😇
ravi said…
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ravi said…
*திருப்பாவை 15*👌👌👌
ravi said…
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!

சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்!

போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே
நானேதான் ஆயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ?

போந்தார் போந்து எண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை

மாயனைப் பாடலோர் எம்பாவாய்.👍👍👍
ravi said…
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே!

நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே?

என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.

அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்!

இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது.

இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.

அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை.

நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள்.

நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.

அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும்.

உனக்காக காத்திருக்க வேண்டும்.

அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.

அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள்.

ravi said…
என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே!

எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.

தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார்.

வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும்,

எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.🍁🍁🍁
ravi said…
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ravi said…
*திருவெம்பாவை பாடல் 15*👌👌👌
ravi said…
ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே

நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர

நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப

பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்

வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.🙏🙏🙏
ravi said…
அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே!

நம் தோழி எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள்.

அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள்.

மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும்.

அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும்.

அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள்.

சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள்.

அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம்.

பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.👍👍👍
ravi said…
மாணிக்கவாசகர் சிவலோகத்துக்கே சென்று விட்டதாகவும், தன்னை நந்தியாகப் பாவித்து, அங்கேயே தங்கியிருந்ததாக கற்பனை செய்து பாடியது இப்பாடல்.
ravi said…
அதிசயமோ உன் பிறவி ஆனந்தமோ நீ ஒரு துறவி

கடல் கொண்ட ஆழமோ உன் அருவி

வானம் கொண்ட உயரமோ தெய்வமாய் நீ மருவி

ஆசை கொண்ட மனம் ஒரு கருவி ...

குருவி போன்ற வாழ்க்கையில் கூத்தாடுகிறோம் நம சிவாய எனும் நாமம் அதை நழுவி 🙏🙏🙏
ravi said…
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ravi said…
தென்னாடுடையவனே சாயி !!

எந்நாட்டவர்க்கும் இறைவனே சாயி .. !!

எம் பிறப்பு அறுப்பாய் சாயி .. !!

இனி ஒரு பிறவா வாழ்வளிப்பாய் சாய் .. !!

எல்லா பிறப்பும் எடுத்திளைத்தேன் சாயி !!

இனி ஒரு தாயின் வயிறு வேண்டாம் சாயி ... !!

உன் அருளால் உனை வணங்கும் சக்தி தருவாய் சாயி ... !!

உண்மையே பேசம் நாவெனக்குத் தருவாய் சாயி ... !!💐💐💐
ravi said…
🌷🌷🌷🌷🌺🌺🌺🍁🍁🍁🌸🌸🌸
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 275*🥇🥇🥇️️️

*(started from 25th Feb Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

ஸ்துதி சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

50/
3
ravi said…
50 👍👍👍

புரஸ்தான்மே பூய ப்ரசமனபர ஸ்தாத்பவ ( ஸ்தான்மய) ருஜாம்

ப்ரசாரஸ்தே கம்பாதட
விஹ்ருதி ஸம்பாதினி த்ருசோ

இமாம் யாச்ஞாம் உரீகுரு ( ஸபதி) ஜனனீ தூரீ கூரு தம

பரீபாகம் மத்கம் ஸபதி புதலோகம் ச நய மாம் .
ravi said…
அம்மா உன் திருக்கண்கள் எங்கள் மேல் சஞ்சரிக்கட்டும் ... எங்கள் அஞ்ஞானம் இந்த திருவாதிரை நன்னாளில் அழிந்து போகட்டும் . 👍👍👍
ravi said…
*கம்பராமாயணம்* *603* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
ravi said…
பிறகு இராமபிரான் படைத்தலைவன் நீலனைப் பார்த்து "நீ உன் கருத்தைக் கூறு" என்றான்.

அதற்கு அந்த நீலன் சொல்லுகிறான்: "எல்லையற்ற நூல் கேள்வியுடைய இராமா!

பகைவர்களையும் துணையாகக் கொள்ள வகைகள் பல உண்டு, கூறுகிறேன்.

ஆனால் குரங்கின் சொல்தானே என்று அலட்சியமாக ஒதுக்கிவிடாமல் கேள்! என்று சொல்லிவிட்டு எத்தகையவர்களை அடைக்கலம் என்று வரும்போது ஏற்றுக் கொள்ளலாம், எவர்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதென்று ஒரு பட்டியலிட்டுவிட்டு, இந்த விபீஷணனுடைய வரவு எத்தகையது என்பதை நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வோம்" என்கிறான்.👍👍👍
ravi said…
*[95/108] – அருள்மிகு யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்*💐💐💐
ravi said…
சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோவில் ( திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும்.

மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார்.

இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் .

மூலவர்: யோக நரசிம்மர் (அக்காரக்கனி)

உற்சவர்: பக்தவத்சலம்

அம்மன்/தாயார்: அமிர்தவள்ளி

உற்சவர் தாயார்: சுதாவல்லி

தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்

பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர்: திருக்கடிகை, சோளசிம்மபுரம்

ஊர்: சோளிங்கர்
மாவட்டம்: வேலூர்

மாநிலம்: தமிழ்நாடு👍👍👍
ravi said…
*சிவானந்தலஹரி 79*
*வது ஸ்லோகம் பொருளுரை*👏👏👏
ravi said…
79.நித்யம் யோகிமன:ஸரோஜதல ஸஞ்சாரக்ஷமஸ்த்வத்க்ரம்:

சம்போ!தேந கதம் கடோரயமராட் வக்ஷ:கவாட க்ஷதி: !!

அத்யந்தம் ம்ருதுலம் த்வதங்க்ரியுகலம் ஹா மேமன:;சிந்தய-

த்யேதத்லோசனகோசரம் குரு விபோ ஹஸ்தேநஸம் வாஹயே !!
ravi said…
ஹேசம்போ!உமது காலடி எப்பொழுதும் யோகிகளின் மனமாகிய தாமரையிதழில் சஞ்சரிக்கும் பழக்கமுடையது.

அதனால், யமனின் முறடான மார்பில் உதைத்து காயப்படுத்த எங்கனம் இயலும்?

மிகவும் மெதுவானதாயிற்றே உமது திருவடி என்று என்மனம் கவலைப்படுகிறது. யமனை உதைத்த அந்த திருவடியை என் கண்ணுக்குத் தெரியும்படி செய்தருளும், என் கையால் வருடி விடுகிறேனே!.🌸🌸🌸
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 855*🥇🥇🥇

*US 847*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

34வது ஸ்தபகம்

*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍

இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்*

பதிவு 89 🏆🏆🏆🥇🥇🥇

*Started on 26th sep 2020*💐💐💐💐

*15 வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌A recap 👏👏👏
ravi said…
*15. அஷ்ட்மீ சந்த்ர விப்ராஜத் அலிகஸ்தல ஶோபிதா*

( अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता )

– 8ம் நாள் பிறைபோல (அரை நிலவு) அழகிய நெற்றியினை உடையவள்.

ஒவ்வொரு நாமத்துக்கும் ஒரு வெண்பா என்பது சிறிது ஆர்வக்கோளாறான முயற்சியோ என்று எண்ணத்தொடங்கிய நேரத்தில், மூலக்கருத்தைக்கூறி, தொடர்புடைய ஒன்றைச் சொன்னாலும் துவங்கிய செயலுக்கு பங்கமில்லை என்றும் தோன்றியது..

இந்த நாமம், அன்னையின் நெற்றி எட்டாம் நாள் பிறைச் சந்திரன்போல ( பாதி மதி) அழகாக இருக்கிறது என்று கூறுகிறது..

சிவனுடைய சடாமுடியிலும் இளமதிதானே இருக்கிறது (நீலகண்ட சிவன் பாடல் பாதிமதி என்று சொல்லும்). அன்னையின் நுதலே அண்ணலில் தலைமேலமர்ந்ததோ என்ற எண்ணம் தோன்றியது.. இவ்வெண்பாவில் இணைந்தது.👌👌👌

பாதிமதி போலும் பகரொளி மிக்கதாய்
சோதியள் நெற்றித் துலங்கிடும் – ஆதிசிவன்
அண்ணல் அணியும் அரைநிலவும் அஃதன்றி
எண்ணவே றுண்டோ இயம்பு!
ravi said…
தேவியின் முன் நெற்றி அர்த்த சந்திர ரூபத்தில் எட்டாம் நாள் பிறை போல்- அஷ்டமி தினத்து சந்திரனை

போல் காட்சியளிக்கிறது. எட்டாம் நாள் சந்திரினில் காணும் நெளிவுகள் ஒரு அழகே!.🌕🌕🌕
Savitha said…
அழகான நாமம்
🙏🏻🙏🏻🙏🏻🌹
Savitha said…

எல்லா அம்பாள் நாமமும்
அழகு தான்
......என்னை மிகவும் ஆட்கொண்ட நாமங்கள் அஷ்டமி சந்தர விப்ராஜ...
ஓட்டியானபீட நிலயா
ஜபாபுஷ்ப நிபாகிருத்தி
ravi said…
Jatatavigalajjala pravahapavitasthale
Galeavalambya lambitam bhujangatungamalikam
Damad damad damaddama ninadavadamarvayam
Chakara chandtandavam tanotu nah shivah shivam

ravi said…
With his neck consecrated by the flow of water that flows from his hair,
And on his neck a snake, which is hung like a garland,
And the Damaru drum that emits the sound “Damat Damat Damat Damat”,
Lord Shiva did the auspicious dance of Tandava. May he give prosperity to all of us.🙏
ravi said…
*LS introduction*👌👌👌 🎉🎉🎉
ravi said…
The pūrva bhāg begins with Agastya’s address to Hayagrīva.

Agastya was a great sage of ancient times, short in stature.

He is believed to be alive even today, according to the theory of immortality.

Agastya means the one who stabilized mountains. It is said that Vindhya hill was growing in size continuously and it was Agastya who arrested its growth.

It is also said that Agastya was born out of a pot.

He is one among the twelve best known Śrī Vidyā worshippers.

Hayagrīva has a horse face and one of the ten incarnations of Lord Viṣṇu.

Hayagrīva is known for his supreme knowledge and is one of the exponents of śāstra-s (commands or precepts). 🌷🌷🌷
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
S G S Ramani said…
அருமை..

திருச்செந்தூர் பற்றிய தொடர்பதிவு ஒரு பொக்கிஷம் என்று கூறினால் அது மிகையல்ல..

ஓம் சரவணபவ..

🙏🙏🙏🙏🙏🙏🙏
Savitha said…
ஆஹா இலை விபுதியின் சிறப்பு மிகவும் விரிவான விளக்கம்
ஆறுமுக பெரருமானுக்கு அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kousalya said…
Mikka nandrigal 🙏🙏🌷🌷
Moorthi said…
மிகவும் அருமையான கோவில்..... மனதிற்க்கு நிம்மதி தரும் தரிசனம் 🙏🙏
Hema latha said…
கடைசி வரிகள் சாட்டை அடிகளோ. நல்ல வேளை நான் படித்து விட்டேன்🙏
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 855*🥇🥇🥇

*US 847*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

34வது ஸ்தபகம்

*சது ஸ்திரிம்ஸ ஸ்தபக*
*ப்ரார்தனா ( ஹரிணீ வ்ருத்தம்)* 👍

இந்த ஸ்தபகத்தில் மனித குலத்திற்கு எல்லா மங்களமும் ஏற்படட்டும் என்று கவி பகவதியை பலவாறு வேண்டுகிறார் 🙏
ravi said…
847 🙏🙏🙏

ஜனனி ஜகதாம் ஸ்வல்பே காமேsபியயம் த்வயி லம்பதே

புரபி தபலே மத்யே காமேsப்யயம் த்வயி லம்பதே

பஹுலகருணே ஸ்ரேஷ்டே
காமேsப்யயம் த்வயி லம்பதே

பகவதி பரே வீதே காமேsப்யயம் த்வயி லம்பதே 👏👏👏
ravi said…
அம்மா நீ எப்பொழுதும் எனக்குத் துணையாக இருக்க வேண்டும் . நீ எனக்கு இனி வேண்டாம் என்று நான் சொன்னாலும் நீ எனக்கு வேண்டும் ... 🌸🌸🌸
ravi said…
திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி

சிவ பெருமான் நேரில் வந்து, மாணிக்க வாசகருக்கு உபதேசம் தருகிறேன் என்றார்.

மாணிக்க வாசகருக்கு ஆயிரம் வேலை. முதன் மந்திரி வேலையில் இருந்தார். எனவே, இறைவன் வந்ததையும், அருள் தர இருந்ததையும் தெரியாமல் கை நழுவ விட்டு விட்டார்.

பின் அதை நினைத்து நினைத்து புலம்பிய புலம்பலின் தொகுப்பு தான் திருவாசகம்.

உருகி உருகி பாடியிருக்கார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற அந்தாதியில் இருந்து ஒரு பாடல்


ravi said…
பாடல்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.
ravi said…
வளர்கின்ற = எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற

நின் கருணைக் கையில் = உன் கருணை நிறைந்த கைகளால்

வாங்கவும் = என்னை வாங்கி, அருள் தர நினைத்தாய். ஆனால் நானோ

நீங்கி = உன்னை விட்டு நீங்கி

இப்பால் = இந்த உலக வாழ்க்கையில்

மிளிர்கின்ற = கிடந்து வாழ்கின்ற

என்னை = என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெண் மதிக் கொழுந்து ஒன்று = பிறை நிலவு ஒன்று

ஒளிர்கின்ற = ஒளி வீசும்

நீள் முடி = நீண்ட சடை முடியை உடைய

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

தெளிகின்ற பொன்னும் = தெளிவான சிறந்த பொன் போலவும்

மின்னும் = மின்னல் போலவும்

அன்ன = போன்ற

தோற்றச் செழும் சுடரே. = தோன்றுகின்ற செழுமையான சுடரே

ravi said…
இதில் என்ன இருக்கிறது. மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்த நினைத்தான். அவர் மறுத்து விட்டார். அதனால் புலம்புகிறார். அதனால் நமக்கு என்ன?

இதை நாம் ஏன் உட்கார்ந்து படிக்க வேண்டும். இதில் நமக்கு என்ன பயன்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம். திருக்குறள், கம்ப இராமாயணம், ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், கீதை, மற்ற எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோம்.

படித்து விட்டு என்ன செய்கிறோம்?
ravi said…
செல் போனில் என்ன செய்தி வந்து இருக்கிறது, என்ன ஜோக் வந்து இருக்கிறது என்று பார்ப்போம் , இன்னைக்கு என்ன சமையல், அந்த fixed deposit போடணும், அந்த பில் கட்டணும், அலுவலக வேலை, என்று நம்ம வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

ravi said…
ஒரு புத்தகம் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும். படித்துத் தள்ள வேண்டியது. ஒரு சதவீதம் கூட அது நம்மை பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது.

மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்ய வந்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல் குதிரை வாங்கப் போய்விட்டார்.

ravi said…
இத்தனை புத்தகங்களும் அருள் தர வரிசையில் நின்று கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் எட்டி எட்டி பார்த்து விட்டு நாம் நம் குதிரைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

மணி வாசகரை இறைவன் விடவில்லை. துரத்தி துரத்தி வந்து அருள் செய்தார்.

ஆனால், அதற்கு முன்னால் சிறைத் தண்டனை, சுடு மணலில் நிற்க வைத்தல் என்று அத்தனை துன்பமும் பட்டார்.

தேவையா?

முதலிலேயே கேட்டிருந்தால் இத்தனை துன்பம் வந்திருக்குமா?

அது இருக்கட்டும், ஏதோ மெசேஜ் வந்த மாதிரி இருக்கே, என்னனு பார்ப்போம்.
ravi said…
கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன்

கடவுள் போல் ஆக வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?

மாட்டார்கள்.

ravi said…
ஏன் என்றால், கடவுள் போல் நம்மால் ஆக முடியாது. எதுக்கு வீணா நேரத்தை வீணாக்குவானானேன் என்று இருந்து விடுவார்கள்.

ravi said…
இராமன் கடவுள் என்று சொன்னால், "அப்படியா, அப்படி என்றால் இராமன் செய்தை எல்லாம் நம்மால் செய்ய முடியாது. கடவுள் எல்லாம் செய்வார். நம்மால் ஆகாது. நம்ம வேலையை பார்ப்போம்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

ravi said…
இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால், இராமனும் நம்மைப் போல ஒரு மானிடனாக இருக்க வேண்டும்.
ravi said…
அதற்காகவே இராமனில் பல மனித குணங்களை ஏற்றிக் காட்டுகிறார்கள். "பார்த்தாயா, அவனும் உன்னைப் போலத்தான்" என்று காட்டுவது, அவனை கீழே இறக்க அல்ல, நம்மை மேலே ஏற்ற. உன்னைப் போன்ற ஒருவன் அப்படி இருக்க முடியும் என்றால், நீயும் அப்படி இருக்கலாம் என்று நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்லவும் தான்.

ravi said…
அப்படி காட்டும் இடங்களில் இராமன், சீதையை பிரிந்து வாடுவதாக வரும் இடங்கள்.

தவிக்கிறான். ஒரு சாதாரண மானிடன் இப்படி துணையை பிரிந்து தவிப்பானோ, அப்படி தவிக்கிறான்.


வாலி வதம் முடிந்து விட்டது. சீதையைத் தேட வேண்டிய கார் காலம் வந்து விட்டது. சுக்ரீவன் வந்த பாடில்லை. கார்காலம் (மழைக் காலம்) பெரும் தவம் செய்த முனிவர்களையே வாட்டும் என்றால், இராமன் பாடு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்.
ravi said…
அளவு இல் கார் எனும் அப்பெரும்
பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்
தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்
அது வருத்தோ?
ravi said…
அளவு இல் = நீண்ட

கார் எனும் = கார் காலம் என்று சொல்லப் படும்

அப்பெரும் பருவம் = அந்த பெரிய பருவ நிலை

வந்து = வந்து

அணைந்தால் = சேர்ந்து கொண்டால்

தளர்வர் என்பது = தளர்ந்து போவார்கள் என்பது

தவம் புரிவோருக்கும் = தவம் புரியும் முனிவர்களுக்கும்

தகுமால்; = ஏற்படும் என்றால்

கிளவி = மொழி, சொல், குரல்

தேனினும் அமிழ்தினும் = தேனையும், அமுதத்தையும் விட

குழைத்தவள் = குழைத்து தந்ததைப் போல உள்ள

வளைத் தோள் = மூங்கில் போன்ற நீண்ட தோள்கள்

வளவி = தழுவி

உண்டவன் = இன்பம் அனுபவித்தவன்

வருந்தும் என்றால் = (அவளைப் பிரிந்து ) வருந்துகிறான் என்றால்

அது வருத்தோ? = அது என்ன சாதாரண வருத்தமா?
ravi said…
அது ஒரு புறம் இருக்கட்டும்.


"கார் எனும் பெரும் பருவம்" என்கிறார் கம்பர்.

சீதையை பிரிந்து இருப்பதால், ஒவ்வொரு நொடியும் நீண்டு இருப்பதைப் போல இராமனுக்குத் தெரிகிறது. அந்த கார் காலமே நீண்டு இருப்பதாகப் படுகிறது.


"வளைத் தோள் வளவி உண்டவன் வருந்தும்"

வளவி உண்டவன் என்றால் இன்பம் துய்த்தவன் என்று ஒரு பொருள்.

அவள் கைகளால் உணவு ஊட்ட உண்டவன் என்று பொருள்.

வருத்தம் இருக்காதா?
ravi said…
தேவாரம் - சுருதி சிர உரையினால்

திரு ஞான சம்பந்தர் பாடிய தேவாரம். சீர்காழி என்ற தலத்தில் பாடியது.

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.
ravi said…
படிக்க கொஞ்ச கடினம் தான். சீர் பிரித்தால் எளிதில் விளங்கும்.

சீர் பிரித்த பின்

சுரர் உலகு நரர்கள் பயில் தரணி தலம் முரண் அழிய அரண் மதில்
முப்புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடமாம்
வரம் அருள வரன் முறையில் நிறை கொள் வரு சுருதி சிர உரையினால்
பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே.
ravi said…
பொருள்


சுரர் = தேவர்கள். தேவர்கள் அல்லாதவர்கள் அ -சுரர்

உலகு = (வாழும்) உலகு. தேவ லோகம்

நரர்கள் = மனிதர்கள்

பயில் = வாழும்

தரணி தலம் = உலகம் முழுவதும்

முரண் = வலிமை

அழிய = அழிய

அரண் = கோட்டை

மதில் = சுவர்

முப்புரம் எரிய = மூன்று புரங்களும் எரிய

விரவு = விரைவாக

வகை = வழி செய்த

சர = அம்பு விட்ட

விசை கொள்= செய்யும்

கரம் உடைய = திருக்கரத்தை உடைய

பரமன் இடமாம் = பரமன் இடத்தில்

வரம் அருள = வரம் வேண்டி

வரன் முறையில் = வரை முறையில்

நிறை கொள் = நிறைந்த

வரு சுருதி = வேதங்கள்

சிர = அதன் உச்சியில், வேதத்தின் அந்தம், வேதாந்தம்

உரையினால் = உரையினால்

பிரமன் உயர் = உயர்ந்த பிரம்மன்

அரன் = சிவன்

ravi said…
எழில் கொள் = அழகிய

சரண இணை = சரணம் அடையும் இரண்டு திருப் பாதங்கள்

பரவ = போற்ற

வளர் பிரமபுரமே. = எப்போதும் வளரும் பிரம புரமே (சீர்காழியே )

பிரம்மன் துதித்தால் அது ப்ரம்ம புரம் என்றும் அழைக்கப்படும்.

சின்ன பாலகன். ஞான சம்பந்தர் பாடியது. நம்மால் வாசிக்கக் கூட முடியவில்லை.
ravi said…
கீழக்கரை முஸ்லீம் ஒருவர் பங்களா கட்டுவதற்கு வெளிநாடுகளில் இருந்து பலவகையான சலவைகற்களை இறக்குமதி செய்திருந்தார்.
ravi said…
அவர் கனவில் ருத்ர மூர்த்தியாக தோன்றிய சிவபெருமான் ஒரு குறிப்பிட்ட கல்லை உத்திரகோசமங்கை கோவிலுக்கு கொடுத்துவிடுமாறு உத்தரவிட அலரிஅடித்து எழுந்த பாய் விடிந்ததுமே அந்த கல்லை வண்டியில் ஏற்றிவந்து கோவிலுக்கு கொடுத்து விபரம் சொன்னார்.
ravi said…
அதே இரவில் கோவில் குருக்கள் கனவில் நடராஜப்பெருமான் உருவில் தோன்றிய பகவான் நாளை காலையில் நான் வருகிறேன் ஒழுங்குபடித்தி ஆராதிக்கவும் என்றுகூறி மறைந்தார்....
ravi said…
ஒன்றும் புரியாதிருந்த குருக்கள் இப்போது தெளிந்தார். வந்திருந்த பாரைக்கல் பச்சை மரகதம் என்பது அப்போது யாருக்கும் தெறியாது. அதில் நடராஜர் சிலை வடிக்க முடிவானது. அப்போதுதான் அது மரகதக்கல் என தெறிந்தது... மத்தள ஓசைக்கே உடையும் தன்மையுடைய மரகதத்தில் எப்படி சிலை வடிப்பது...?
ravi said…
சிற்பிகள் பின்வாங்கினர்.. ஆனாலும் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னால் பல காலம் முயன்று மரச்சுத்தியல் கொண்டு பிரத்தியோகமான உளியால் கடும் விரதமிருந்து இந்த சிற்பத்தை செதுக்கினார்களாம்....
ravi said…
ஒரு சிறிய மரகதக்கல்லே பல ஆயிரம் என்கிற நிலையில் ஒரு பெரிய சிலையே மரகதம் என்றால் நினைத்துப்பாருங்கள் இதன் மதிப்பு பல ஆயிரம் கோடி என்கிறார்கள்....
ravi said…
இதற்கு ஆயுதம் ஏந்திய பலத்த பாதுகாப்பு போட்டு கண்காணித்து வருகிறார்கள்... ஆருத்ரா தரிசண நாளில் பல லட்சம் பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள்... நமது உறவுகளுக்காக இந்த பச்சை மரகதத்திருமேனி நடராஜப் பெருமானை அனுப்பி வைத்திருக்கிறேன்... கண்டு இன்புறுகவும்... ஓம் நமச்சிவாய...🙏🙏🙏 👆

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை