அபிராமி அந்தாதி - பாடல் 9 அம்மே வந்து என் முன் நிற்கவே !!

                           பச்சைப்புடவைக்காரி -450

அபிராமி அந்தாதி 

பாடல் 9


அம்மே வந்து என் முன் நிற்கவே (அபிராமி அந்தாதி பாடல் 9)



கருத்தன,எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின் பெருத்தன,


பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்


முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே




கருத்தன எந்தைதன் கண்ணன - கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கருத்திலும் கண்ணிலும் நின்று விளங்குவன.


வண்ணக் கனகவெற்பின் பெருத்தன - வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பன.


பால் அழும் பிள்ளைக்கு நல்கின - நீ உயிர்களுக்கு எல்லாம் தாய் என்பதைக் காட்டுவது போல் திருஞான சம்பந்தராம் அழும் பிள்ளைக்கு நல்கி நின்றன.


பேர் அருள்கூர் திருத்தன பாரமும் - இப்படிப் பெரும் கருணை கொண்ட உன் கனமான திருமுலைகளும்


ஆரமும் - அதில் பொருந்தி நிற்கும் மாலைகளும்


செங்கைச் சிலையும் அம்பும் - சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும்


முருத்தன மூரலும் - பூவின் மொட்டு அவிழ்வதைப் போல் இருக்கும் உன் அழகிய புன்னகையும் கொண்டு


நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே - தாயே நீ வந்து என் முன் நின்று காட்சி தரவேண்டும்.


அபிராமி அன்னையே. கருப்பு நிறம் கொண்டு என் தந்தையாம் சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பனவும், வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும்,


பால் வேண்டி அழுத திருஞான சம்பந்தருக்கு நல்கி நின்றனவும் ஆன உன் கருணையைப் போல் கனமான உன் திருமுலைகளுடனும் அதில் பொருந்தி இருக்கும் மாலைகளுடனும் உன் சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் அம்புடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும்.




9. அனைத்தும் வசமாக கருத்தன



இந்த பாடலை பெண்கள் பால் காச்சும் போது சொல்லி அந்த பாலை குழந்ததைகளுக்கு கொடுத்தால் அது ஞானப்பாலாக அமையும் என்பதில் வேறு கருத்து இருக்க முடியாது .


அவள் தனங்களைப் பற்றிய பாடல்

அவை இரண்டும் கருத்த நிறத்தில் இருப்பவை .. 👏👏👏

*எந்தை தன் கண்ணன்,*

என் தந்தை சிவனுக்கு அவை இரண்டு கண்களாக இருப்பவை ... மூன்று கண்கள் ஈசனுக்கு என்பவர்கள் மதுரை மீனாட்சியின் மூன்று தனங்களை ஒப்பிட்டுக்கொள்ளலாம் 👍👍👍




பால்அழும் பிள்ளைக்கு நல்கின,

பால் எனக்கேட்ட குழந்தைக்கு ஓடிப்போய் ஞானப்பாலை தந்தன

*பேரருள்கூர்* *திருத்தன*

அம்மா அவைகள் ஞானமும் முக்தியும் கொண்டவை அவைகள் எங்களை நல் வழிப்படுத்தவே திரண்டு இருக்கின்றன👌👌👌

*பாரமும் ஆரமும்* *செங்கைச் சிலையும்,* *அம்பும்* *முருத்தன**

அம்மா அந்த இரு தனங்கள் மீது ஆடி விளையாடும் முத்து மாலைகள் ,

உன் சிவந்த மேனியும் கையில் மலர் கனைகளும் கரும்பு வில்லும் என் முன்னே தோன்றுகின்றன ...


அம்மா அங்கே நீ புன் முறுவலுடன் எப்படி இருக்கிறாய் தெரியுமா ?

மயில்கள் தோகை விரித்து ஆடும் போது தோகைகளின் தண்டுகள் எப்படி வெள்ளை வெளேர் என்று இருக்குமோ அப்படி இருக்கின்றன ..

இப்படி ஒரு கண் கொள்ளா தரிசனம் என் முன்னே எப்பவும் தோன்றிட வேண்டும் தாயே 🙏🙏🙏



அம்மே வந்து என் முன் நிற்கவே
👍👍👍






Comments

T.V Ganesh said…
எண்ணை சேர்த்த தீபம் போல்

என்னையும் உங்கள் அபிராமி தீபத்தில் சேர்த்துக்
கொண்டீர்

உங்கள் படைப்பால்

வெண்மை மனம் கொண்டேன்

உண்மை பக்தி செய்தேன்

வெண்ணை போல் உருகினேன்

வெம்மை என்னை தாக்கும் போது

உந்தன், படைப்புகளில் பயணம் செய்து

செம்மையானேன்

உண்மையிது🙏🙏
Lakshmi balaraman said…
எங்களையும் உங்கள் பயணத்தில் - அபிராமி என்ற படகில் -
பயணிக்க அனுமதி கொடுங்கள். அன்னையின்
பாதம் என்ற இடத்தில் இறக்கி
விடுங்கள்.
S G S Ramani said…
ஜயதேவரின் பாடல் மூலம் விளக்கிய விதம் அருமை..

முப்புர நாயகியின் பாதங்களுக்கு சரணம்...

🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
தூங்கும் அஞ்சநேயரை தரிசித்து உள்ளீர்களா?
மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் லோனார் ஒரு இடம் உள்ளது மற்றும் இது விண்கல் கல்லால் ஆனது மற்றும் காந்த பண்புகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது ஒரு கால் தரையில் இருக்கும்போது, ​​மற்றொரு கால் சனிஸ்வர பகவானை வால் பிடித்துக் கொண்டிருக்கிறது
ravi said…
இவரை தரிசிப்பதால் , ஏழரை சனி , அஷ்டம சனி , அர்தாஷ்டமசனி போன்றவற்றால் பாதிப்பு குறையும் ஏனென்றால் இவரது வாலில் சனி பகவான் கட்டுண்டு இருப்பதால்.
ravi said…
திருக்கடையூர் அபிராமி *62*

*பாடல் 60* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
*கேள்வி பதில் நேரம்*

*பதிவு 3* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .

*கேள்வி 6*

*நான்* :

பட்டரே! காலை வணக்கம் ..

*பட்டர்* காலை வணக்கம் ...அலர் கதிர் ஞாயிறும் திங்களுமாய் அபிராமியை நினைப்பவர்கள் வாழ்க்கை அமையும் .. இன்று என்ன கேள்விகள் ?

*நான்* ஐயனே .. மன்மதனின் கரும்பும் கனை அம்புகளும் அன்னை அபிராமியின் கரங்களுக்கு எப்படி வந்தன .. ??

மன்மதன் அம்பாளிடன் போர் செய்யவில்லையே தன் ஆயுதங்களை அவள் பாதங்களில் சரணடைய ...

ஈசன் கரங்களில் தானே கரும்பு வில்லும் கனை அம்புகளும் இருக்க வேண்டும் .... ??

🙏🙏🙏
ravi said…
*பட்டர்*

அருமையான கேள்வி ... தீவிரவாதிகள் தோற்றுப்போனால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை முதலில் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் . உண்மையான இரண்டு தீவிர வாதிகள் இருக்கிறார்கள் . ஒன்று காமன் .. பிறவியை தருபவன் .. காமத்தீயை வளர்ப்பவன் . குண்டலியை மூலாதாரத்தில் இருந்து எழும்புவதை தன் மலர் கனைகளால் தடுப்பவன் ... இன்னொருவன் காலன் ... கருணை அற்றவன் ...

எமன் தன் பாசக்கயிறை அபிராமியின் பாதங்களில் சமர்பித்தான் ஈசனிடம் அல்ல ..

ஏன் தெரியுமா ... ??

அவன் உயிரோடு இருப்பதே அம்பாளின் கருணையால் அவனை உதைத்த பாதம் ஈசனின் இடது பாதம்

அது அம்பாளுடையது ...

எமன் சிறு காயங்களுடன் , சிராய்ப்புகளுடன் தப்பித்தான் ... 👌👌👌
ravi said…
ஆனால் மதன் அதிகம் கர்வம் கொண்டு ஈசனின் ஆசி பெறாமல் அவன் மேலே மலர்க்கனகளை எறிந்தான் ...

பஷ்பமானான்🔥🔥🔥 ...

அவன் வைத்திருந்த கரும்பு வில்லும் மலர்கனைகளும் ஈசன் கையிக்கு வந்தன .... 🍁🍁🍁
ravi said…
சரி அவைகள் எப்படி அபிராமியின் கரங்களுக்கு வந்தன.. இதுதானே உன் கேள்வி .. ??

அம்பாள் ஈசனுடன் ஒரு பெரிய போரைத் தொடுத்தாள் ...

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ... ??

இந்த போரில் வினோதமான ஆயுதங்கள் இருவரும் உபயோகித்தனர்

இதுவரை யாருமே போரில் இப்படிப்பட்ட ஆயதங்களை பிரயோகம் செய்ததில்லை ...

முப்பது முக்கோடி த் தேவர்கள், ரிஷிகள் கூடினர் ..

மாலும் அயனும் உறக்கத்தையும் படைப்பையும் விட்டு விட்டு அங்கே ஓடி வந்தனர் ...

குழந்தை பாலா , மணிகண்டன் , முருகன் , கணபதி இவர்கள் வேண்டிக்கொள்ளாத தெய்வங்கள் இல்லை போர் நிற்க வேண்டும் என்றே 💐💐💐
ravi said…
*அம்பாள் உபயோகித்த ஆயுதங்கள்*

1. பிச்சி மலர் சூடப் பெற்ற கரிய கூந்தல்

2. முல்லையின் வெள்ளை போல் முத்துப்பற்கள்.

3. இன்சொல்
திரிபுர சுந்தரி

4. சிந்துர மேனியவளாய்

5. பவளக் கொடியில் பழுத்த செவ்வாயில் தெளித்த பனிமுறுவல்

6. தவளத் திருநகைகள் அணிந்தவளாய் ...

7. மதுரை குண்டுமல்லி சூடியவளாய்

8. உதிக்கின்ற செங்கதிரை உச்சித் திலகமாய் அணிந்து கொண்டு

9. அன்னத்தை நாண வைக்கும் நடையுடன்

10 . களாப மயிலாய் தோகை விரித்து

11. காஞ்சி பட்டு உடுத்தி

12 . கரங்களில் நவரத்தினம் பதித்த வளையல்கள் அணிந்து

13 . கால்களில் கொலுசுகள் கொஞ்ச இடையில் தங்க ஒட்டியாணம் மின்ன

தன் கடை விழியால் ஒரு புன்னகையை ஈசன் மீது எய்தாள் ..

அடுத்த வினாடி ஈசன் படுத்த படுக்கையாகி விட்டான் .

ravi said…
போரில் தோற்று போனதால் ஈசனின் கரும்பு வில்லும் மலர் கனைகளும் அபிராமியின் கரங்களுக்கு வந்து சேர்ந்தன ..

*நான்* .. ஐயனே இப்படி ஒரு விளக்கம் தங்களால் மட்டுமே தர முடியும் . மிக்க நன்றி ..

பட்டர் பறந்து சென்றார் பசும் பொன் பைங்கிளியாய் 🦜🦜🦜
Savitha said…
Excellent🌷🌷🙏🏻🙏🏻
ravi said…
சக்தியின் அபிராமி பட்டர் வார்த்தை சித்தரின் கேள்வி பதில் பகுதி அருமை...புதுமை...

தொடரட்டும் நமது பட்டரின் கேள்வி பதில் பகுதி...

👌🏻👌🏻👌🏻👏👏👏👏
ravi said…
*உமா சஹஸ்ரம்*

*பதிவு 1002*🥇🥇🥇🏆🏆🏆💐💐💐💐💐💐💐

*US 993*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

40 வது ஸ்தபகம்

சத்வாரிம்ஸ ஸ்தபக

தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌

🦚🦚🦚🥇🥇🥇
ravi said…
993 🌷🌷🌷

*கருணேல் லோலித நேத்ரம் தைவம்*

கருணை பொழியும் கண்களை உடையவள்

*ஸ்ரீகாராப ஸ்ரோத்ரம் தைவம்*

ஸ்ரீ என்ற எழுத்தைப்போல் செவிகள் உடையவள்

*குஸூ மஸூ கோமல காத்ரம் தைவம்*

புஷ்பத்தைப் போன்ற மென்மையான மேனி கொண்டவள்

*கவி வாக் வைபவ பாத்ரம் தைவம்*

கவிகளின் சிறந்த வாக்காயாய் இருப்பவள் என் உமை 🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ மூகபஞ்சஸதீ*🌸🌸🌸

*பதிவு 419*🥇🥇🥇️️️💰💰💰

*(started from 25th Feb 2020 Tuesday)*

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கடாக்ஷ சதகம்

*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*

*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌

93
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ravi said…
93/4 💐💐💐

ஏஷா தவாக்ஷிஸூஷமா விஷமாயு தஸ்ய

நாரா சவர்ஷலஹரீ நகராஜகன்யே

(சங்கே) ஸ்பஷ்டம் கரோதி சததா ஹ்ருதி தைர்யமுத்ராம்

ஸ்ரீ காமகோடி யதஸௌ சிசிராம்சு மௌலே 👏👏👏
ravi said…
ஸ்ரீ காமகோடியே .. மலைமகளே ! உன் கண்ணோக்கின் அழகானது மன்மத அம்புகளின் வரிசையோ என சந்தேகம் வருகிறது . எனவேதான் அது ஈசனின் உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்
தைரியத்தை சிதைக்கின்றது 🌈🌈🌈
ravi said…
*[101/108] – அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்*👆👆👆
ravi said…
இங்குள்ள அலக்நந்தா நதியும், குபேரப்பட்டிணத்தில் உற்பத்தியாகி வருகிறது.

இது தேவப்ராயாக்கில் பாகிரதியுடன் கலந்து கங்கை என்ற பெயரை பெறுகின்றது.

இந்த தலத்தில் திருமந்திரம் அவதரித்தாக கூறப்படுகிறது.

இங்கே பெரியாழ்வார், திருமங்கை ஆய்வார் ஆகியோர் வந்து வழிபட்டுள்ளனர்.

இந்த தலத்தை நந்தவனம் என்றும் குறிப்பிடலாம்.🌷🌷🌷
ravi said…
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை

*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ravi said…
"நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

அது, தையலாளைக் கொண்டு போய் விட்டுவிட்டு இராமனின் சரணம் தாழ்ந்து, உன் தம்பி விபீஷணனை அன்பு செலுத்தி அழைத்துக் கொண்டு வந்து வாழ்வாயேல் நன்று.

அப்படி இல்லையென்றால், நீ பிழைக்க ஒரே ஒரு வழி இருக்கிறது.

அதைச் சொல்கிறேன் கேள்! படைகளைச் சிறிது சிறிதாக போருக்கு அனுப்பாமல், அனைத்துப் படைகளையும் ஒன்று திரட்டி, போருக்கு அனுப்புதலே நல்லது.

அதையாவது செய்து உயிர் வாழ முயற்சி செய்!" என்றான் கும்பகர்ணன்.👏👏👏
ravi said…
திருக்கடையூர் அபிராமி *61*

*பாடல் 59* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
இன்றைய பாடல் சரணாகதி தத்துவத்தையும் அபிராமியின் மேன்மையையும் , மென்மையையும் ஒரு சேர சொல்கின்றது .

கவித்துவம் அதிகமாக இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று 🥇🥇🥇
ravi said…
*தஞ்சம் பிறிது இல்லை (பாடல் 59)*

தஞ்சம் பிறிது இல்லை

ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன்

ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும்

இக்கு அலராகி நின்றாய்

அறியார் எனினும்

பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார்

பெற்ற பாலரையே🙏🙏🙏
ravi said…
சில பேர் அதைச் செய், இப்படிச் செய் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள்.

தங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க மாட்டார்கள்.

குலசேகர ஆழ்வார், ஒரு நாட்டின் அரசராக இருந்தவர்.

ஆன்மீக பக்குவம் வர, அரச போகங்களை துறந்து விட்டு ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.

ஒரு அரசனாக இருந்தவன், ஆன்மீகத்தில் வருவது என்பது கடினமான காரியம்.

அரசன் என்ற அந்தத் திமிர், ஆணவம், கோவம், ஆசை, வேகம் எல்லாம் இருக்கும். பக்திக்கு அது ஒன்றுமே ஆகாது.

எப்படியோ நிகழ்ந்த இரசவாதம்.

நமக்கு இன்பம் வந்த போது, எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைக்கிறோம்.

என் உழைப்பு, என் அறிவு, என் திறமை இந்த வேலை கிடைத்தது, இந்த பதவி கிடைத்தது, இந்த இலாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோம்.

துன்பம் வரும் போது ? கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்,

இந்தத் துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று, என்று இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

💐💐🌸
ravi said…
ஆழ்வார் பார்க்கிறார்.

உலகில் பல பேர், இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதாக , சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது அவருக்கு.

உலகில் உள்ளவர்களை பார்த்துச் சொல்கிறார்,

"நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும், மீண்டும் இங்கு தான் வர வேண்டும்" என்று.

மேலும், ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் கூட, துன்பம் வந்தால், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா,

இந்த ஆன்மா, பக்தி, இறைவன் என்பது எல்லாம் பொய் தானோ என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள்.

அவர்களுக்கும் அவர் சொல்கிறார் "தினம் வரும் போது நீங்கள் ஆண்டவனை விட்டு விலகிப் போனாலும், மீண்டும் இங்கே தான் வர வேண்டும்" என்று...
ravi said…
அதை ஒரு உதாரணத்தில் விளக்குகிறார்.

அது ஒரு பெரிய கப்பல். அந்தக் கப்பலின் கொடி மரத்தில் சில பறவைகள் அமர்ந்து இருக்கின்றன.

கப்பல் நங்கூரம் எடுத்து கடலில் செல்லத் தொடங்கி விட்டது.

கொஞ்ச தூரம் சென்ற பின், மாலுமிகள் கப்பலின் பாய் மரத்தை மாற்ற வேண்டி கொடி கம்பத்தைப் பார்க்கிறார்கள்.

அங்கே பறவைகள் அமர்ந்து இருக்கின்றன.

அவற்றை அவர்கள் விரட்டுகிறார்கள்.

அந்தப் பறவைகளும் சிறகடித்து பறந்து போய் விடுகின்றன.

போனால், எங்கு பார்த்தாலும் தண்ணீர்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தான்.

எங்கு போகும் அந்தப் பறவைகள். மீண்டும் அந்தப் கப்பலுக்கே திரும்பி வந்து விடுகின்றன.

அது போல, இறைவா, நீ என்னை எவ்வளவு தான் துன்பம் தந்து என்னை அடித்து விரட்டினாலும், எனக்கு போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் உன்னிடம்தான் வருவேன் என்கிறார்.💐💐💐
ravi said…
வெங்கண்தின் களிற்டர்த்தாய்
விற்றுவக் கோட்டம்மானே
எங்கு போ யுய்கேனுன்
இணையடியே யடையலல்லால்
எங்கும் போய்க் கரை காணா
தெறிகடல் வாய் மீண்டேயும்
வங்கத்தின் கூம்பேறும்
மாப்பறவை போன்றேனே
(692) பெருமாள் திருமொழி 5 - 5
ravi said…
*வெங்* = வெம்மையான

*கண்* = கண்களைக் கொண்ட

*தின்* = திடமான

*களிற்டர்த்தாய்* = களிற்றை + அடர்ந்தாய் = களிறு என்றால் யானை. அடர்தல் சண்டை போடுதல்.

குவாலயபீடம் என்ற யானையை கண்ணன் சண்டையிட்டு கொன்றான்

*விற்றுவக் கோட்டம்மானே* = வித்துவக்கோடு என்ற இடத்தில் உள்ள என் அம்மானே

*எங்கு போ யுய்கேனுன்* = எங்கு போய் பிழைப்பேன்

*இணையடியே* = உன்னுடைய இரண்டு திருவடிகளே

*யடையலல்லால்* = அடைக்கலம் அல்லாமல்

*எங்கும் போய்க்* = எங்கு போனாலும்

*கரை காணா* = கரையை காணாத

*தெறிகடல் வாய்* = அலைகள் தெறிக்கும் கடலின் நடுவே

*மீண்டேயும்* = மீண்டும் வரும்

*வங்கத்தின்* = கப்பலின்

*கூம்பேறும்* = கூம்பில் ஏறும். கொடி மரத்தில் ஏறும்

*மாப்பறவை போன்றேனே* = பெரிய பறவை போன்று இருந்தேனே

அவர் சொல்வது அவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான்.

பிறவி என்ற கடலில் விழுந்து விட்டோம். எங்கும் தண்ணீர். எங்கு போவது?

அவன் திருவடிகளே தெப்பம் என்று பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

துன்பம் வரும். அதற்காக தெப்பத்தை விட்டு விடக் கூடாது.

இந்தப் பாடல் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான *திரு வித்துவகோடு* என்ற தலத்தில் மங்களா சாசனம் செய்யப் பட்டது.

🙏🙏🙏
ravi said…
சரி பட்டரை விட்டு விட்டு வெகு தூரம் வந்துவிட்டோம் .. பாடலுக்குள் போவோம்
ravi said…
*தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று* -

உன் திருவடிகளைத் தவிர்த்து வேறு கதி இல்லை என்று அறிந்திருந்தும்... அம்மா நீ யே எல்லாம் என்று உணர்ந்திருக்கிறேன் ஆனால் ஒரு தவநெறியும் செய்ய மனமோ இணங்குவதில்லை


*உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் -*

உன் திருவடிகளைப் பற்றி உய்யும் தவநெறிக்கே நெஞ்சத்தைப் பயிற்றுவிக்க நான் நினைக்கவில்லை. எவ்வளவு பெரிய மடையன் நான் ... 🥇🥇🥇
ravi said…
*ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்* -

பெருமை மிக்க (நிகரில்லாத) நீண்ட வில்லாக கரும்பையும் ஐந்து அம்புகளாக மலர்களையும் கொண்டு நின்றவளே!🌸🌸🌸🌸🌸
ravi said…
*அறியார் எனினும் பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே* -

பஞ்சைப் போன்ற மெல்லிய பாதங்களை உடைய தாய்மார்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் அறியாமல தவறு செய்தாலும் அவர்களை தண்டிக்க மாட்டார்கள் (அடிக்க மாட்டார்கள்) அல்லவா? அது போல் நீயும் என்னை தண்டிக்காதே.

💐💐💐
ravi said…
இங்கே பஞ்சு அஞ்சு மெல்லடியார் என்கிறார் . தமிழ் புகுந்து விளையாடுகிறது ... அந்த காலங்களில் செம் பஞ்சுக் குழம்பு என்று சிவந்த திரவியத்தை பெண்கள் பாதங்களில் பஞ்சு கொண்டு தடவிக்கொள்வர் .. மருதாணி போட்டுக்கொள்வதை போல் ... பெண்களின் அடிகள் பஞ்சு என்ற ஒரு வார்த்தையை கேட்ட உடனே சிவந்து போய் விடுமாம் .. அப்படி மென்மையான பாதங்கள் கொண்டவர்கள் பெண்கள் ... இதை வீபீஷனன் ராமனிடம் சரண் புகும் போது சொல்கிறான்

*பஞ்சு எனச் சிவக்கும் மென்கால்* தேவியைப் பிரித்த பாவி
வஞ்சனுக்கு இளைய என்னை 'வருக' என்று அருள் செய்தானோ?

தஞ்சு எனக் கருதினானோ?

தாழ் சடைக் கடவுள் உண்ட
நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் நாயேன்".

பஞ்சினால் ஒத்தடம் தருகிறேன் என்று சீதைக்கு சொன்ன உடனேயே அவள் பாதங்கள் சிவந்து போய் விட்டதாம்

அப்படிப்பட்ட சீதாதேவியைத் தன்னிடமிருந்து பிரித்த பாவியான இராவணனின் தம்பி நான் என்பது தெரிந்தும் எனக்கும் கனிவோடு அருள் செய்தானா?

எனக்கு அடைக்கலம் தர சம்மதித்தானா?

என்னே நான் பெற்ற பேறு.

நஞ்சு விரும்பத்தகாததொன்றுதான் எனினும், சிவபெருமான் எடுத்து உண்ட நஞ்சு அவனை நீலகண்டனாக பெருமை பெறச் செய்தது போல நானும் பெருமை பெற்றேன்.

நாயேனுக்கும் அந்த நாயகன் கருணையை என்னவென்று சொல்வேன்.🙏🙏🙏
ravi said…
அம்மா உன்னை வணங்கா விட்டாலும் என்னை தண்டிக்காதே .. என்று மனம் உருகி பாடுகிறார் பட்டர்
ravi said…
திருக்கடையூர் அபிராமி *62*

*பாடல் 60* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
பாலினும் சொல் இனியாய்!

பனி மாமலர்ப்பாதம் வைக்க

மாலினும் ( மால் + இன்னும்)
தேவர் வணங்க

நின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும்

கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம்

ஒரு
நாலினும் சாலநன்றோ

அடியேன் முடைநாய்த்தலையே?🐶🐶🐶
ravi said…
*பாலினும் சொல் இனியாய்* -

பாலை விட இனிமையான பேச்சினை உடையவளே!

அது எப்படி ? எதற்காக பட்டர் தேனை சொல்லாமல் பாலை சொல்கிறார் ...

ஓரு குழந்தை பாலுக்காக அழுகிறது ...

அம்மா சமையல் அறையில் இருக்கிறாள் ..

இதோ வந்துட்டேன் பட்டு , குஞ்சலம் என் கண்ணு அழதே என்கிறாள் ..

அந்த சொல்லைக்கேட்டதும் பாலை விட சுவையான ஒன்றை சாப்பிட்ட சந்தோஷம் குழந்தைக்கு கிடைக்கிறது ..

பாலை விட அன்னையின் சொல் இனிமையான ஒன்று ... அபிராமியும் அப்படியே !!
ravi said…
திருவாய்மூர் ... நாவுக்கரசர் பிறந்த ஊர்

அன்னையின் பெயர் அருள்மிகு பாலினுநன்மொழியாள் உடனுறை வாய்மூர்நாதர்...
ravi said…
*பனி மாமலர்ப் பாதம் வைக்க* -

உன் குளிர்ந்த தாமரை போன்ற திருவடிகளை வைக்க..

அன்னையின் தாமரை பாதங்கள் தங்கள் சென்னியில் பதியாதா என்று யாரெல்லாம் ஏங்குகிறார்களா தெரியுமா ?

பட்டர் ஒரு பட்டியலையே போடுகிறார்

1. திருமால் ...

2. இன்னும் 30 முக்கோடி தேவர்கள்

3. பரமனின் ஜடாமுடி

4. நான்கு வேதங்கள் மெய்ப்பீடமாக ...

இப்படி இவ்வளவு உயர்ந்தவர்கள் போற்றும் பாதம் அபிராமியின் பாதங்கள் ..👍👍👌👌👌
ravi said…
*சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே* -

அம்மா எனக்கு என்ன தகுதி இருக்கு இவ்வளவு பேர்கள் உன் பாதம் தங்கள் சென்னியில் பதியாதா என்று ஏங்கும் போது போயிம் போயிம் நாற்ற மடிக்கும் இந்த என்னுடைய நாய் தலைதான் உனக்கு கிடைத்ததா ... 🙏🙏🙏
ravi said…
இங்கே சின்ன வருடல் ... ஈசனின் தலையில் அன்னையின் பாதங்கள் பதியுமா .. அது அழகா ? இப்படி பட்டர் பாடலாமா ?

கிருஷ்ணனின்பக்தர் ஜயதேவர் என்பவர் எட்டு வரிகள் கொண்ட கண்ணன் பற்றிய பாடல்கள் எழுதினார் ..

ஓர் இடத்தில் ராதையின் பாதங்களில் கண்ணன் தலை வைத்து உறங்கினான் என்று எழுதினார் ...

எழுதிய பிறகு உடன் பாடில்லை ...

எழுதிய வரிகளை அடித்து விட்டு உள்ளே சென்றார் ..

வந்து பார்க்கும் போது அடித்த வரிகள் திரும்பவும் உயிர் பெற்று எழுந்தன ...

திருத்தி எழுதின இடத்தில் கண்ணன் தன் புல்லாங்குழலை விட்டு விட்டு சென்றான் ...

ஜய தேவருக்கு அப்பொழுதுதான் புரிந்தது .. கண்ணனுக்கு ராதையின் பாதங்கள் பஞ்சு மெத்தை என்று உணர்ந்து கொண்டார் ...

பட்டரும் அவர்களுக்குள் எந்த பேதமையும் இல்லை என்பதை உணர்த்தவே இப்படி எழுதினார் ... 🌷🌷🌷
S G S Ramani said…
ஜயதேவரின் பாடல் மூலம் விளக்கிய விதம் அருமை..

முப்புர நாயகியின் பாதங்களுக்கு சரணம்...

🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
திருக்கடையூர் அபிராமி *60*

*பாடல் 58* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
மிகவும் அருமையான பாடல் .. அபிராமி தாமரையினால் வடிக்கப்பட்டவள் என்பதை பட்டர் படம் பிடித்துக் காட்டுகிறார் . தாமரை மலருக்கு என்றே ஒதுக்கப்பட்ட பாடல் இது .. தாமரை என்று ஒரு மலர் இல்லை என்று வைத்துக்கொள்வோம் எவ்வளவு விபரீதங்கள் உண்டாகும் தெரியுமா ?

இறைவனுக்கும் இறைவிக்கும் கண் , முகம் , கைகள் , பாதங்கள் என்று ஒன்றுமே இருக்காது .. வெறும் அரூபமாகத்தான் வணங்கிக்கொண்டிருப்போம் ... முதலில் மாலவனை தாமரைகளுக்கு ஒப்பாக யார் பாடுகிறார் என்று பார்ப்போம் .. வேறு யார் .. நம்
அன்னமய்யாதான்

பாடல் : அண்ணமாசார்யா

ஸ்ரீமன் நாராயண ஸ்ரீமன் நாராயண

ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீ பாதமே ஷரனு

கமலா சதி மூகக்கமல கமலஹித
கமலப்ரியா கமலெக்ஷனா

கமலா சனசாஹித, கருட கமன ஸ்ரீ
கமலலா நாபா நீ பதகமலமே ஷரனு || 1 ||

பரம யோகிஜன பாகதேய ஸ்ரீ
பரமபுருஷா பராத்பரா
பரமாத்மா பரமானுருப ஸ்ரீ
திருவேங்கதாகிரிதேவா ஷரனு || 2 ||

எல்லாமே கமலம் ... கண்கள் முதல் பாதங்கள் வரை ...🌷🌷🌷🌷
ravi said…
இப்பொழுது இன்னொருவர் வள்ளி அம்மையை கந்த புராணத்தில் தாமரையுடன் வர்ணிக்கிறார் .. யார் அவர் ? வேறு யார் நம் கச்சியப்பர் தான் ...

திருமுகம் கமலம், இணைவிழி கமலம்,
செய்யவாய் கமலம்,

நித்திலம் தாழ்
வருமுலை கமலம், மணிக்கரம் கமலம்,

மலர்ந்த பொன் உந்தியும் கமலம்,
பெருகிய அல்குல் மணித்தடம் கமலம்,

பிடி நடைத்தாள்களும் கமலம்,

உரு அவட்கு அவ்வாறு ஆதலின் அன்றே
உயர்ந்தது பூவினுட் கமலம்.🌷🌷🌷
ravi said…
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ... பட்டர் கோபிப்பார் அவர் பாடலை பார்ப்போம் . 🌷🌷🌷
ravi said…
அருணாம்புயத்தும்

என் சித்தாம்புயத்தும்

அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள்
தகை சேர்

நயனக்
கருணாம்புயமும்

வதனாம்புயமும்

கராம்புயமும்

சரணாம்புயமும்

அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே🌷🌷🌷
ravi said…
*அருணாம்புயத்தும்* -

அருணனாம் ... சிவந்த பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்...

நளினி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா .. உடல் எங்கும் தாமரைகள் கொண்டவள் என்று அர்த்தம் .. அம்புஜம் , அம்புயம் , கஞ்சம் எல்லாமே தாமரையை குறிக்கும் ... 🌷🌷🌷

அபிராமி மாலையில் வாடிப்போகும் தாமரை அல்ல சித்திரத்தில் வரையப்பட்ட தாமரை ...

கூம்பி போகும் அல்லது வாடிப்போகும் சாதாரண தாமரை அல்ல ... 🌷🌷🌷
ravi said…
*என் சித்தாம்புயத்தும்* -

என் மனமெனும் தாமரையிடத்தும்...

ஏ தாமரையே!!

பெருமை பீத்திக்கொள்ளாதே

உன்னிடத்தில் தான் என் அபிராமி இருக்கிறாள் என்று .. 🌷🌷🌷

என் இதய தாமரையில் அவளே அமர்ந்து அரசாட்சி செய்கிறாள் ...
ravi said…
*அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் -*

அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற தன பாரங்களை கொண்ட பெண்களில் சிறந்த அன்னை அவள் .. அபிராமி என் தையல் நாயகி ... 🌷🌷🌷
ravi said…
*தகை சேர் நயனக் கருண அம்புயமும் -*

பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும் அவளே .. அவள் கண்கள் மென்மை அதனால் அவள் கண்கள் சுரக்கும் கருணையும் மென்மை ... 🌷🌷🌷

*வதன அம்புயமும் -*

திருமுகம் என்னும் தாமரையும்... அவள் முகம் தாமரை .. தன் பதியை பார்க்கும் பொழுதும் , தன் குழந்தைகளான நம்மை பார்க்கும் போதும் அவள் முகம் அரும்புகிறது .. 🌷🌷🌷

*கர அம்புயமும்* -

திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்...

கரங்கள் மென்மை , மேன்மை , தாய்மை , அருமை , பெருமை , வறுமை நீங்கும் குளிமை.

*சரண அம்புயமும்* -

திருவடிகள் என்னும் தாமரைகளும்

அடடா ... அவள் பாதங்கள் என்றுமே புது மலர்த்தாள் ...

அல்லும் பகலும் தொழுவோர்க்கு அழியா அரசும் , செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்க செய்பவை ...

ravi said…
அவள் பாதங்கள் ஒருநாள் என்ன செய்தது தெரியுமா ?

அவள் பாதங்கள் எனும் கமலங்கள் என் தலையில் வலிய வந்து அமர்ந்து அருள் அற்ற அந்தகனை ஓட ஓட விரட்டியது ...

*அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே* -

அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்... அவள் இன்றி யாரிடமும் தஞ்சம் புக மாட்டேன் .. அவளே கஞ்சம்( தாமரை) எனும் போது வேறு எங்கு போய் நான் தேன் குடிக்க வேண்டும் ? 💐💐💐🌷🌷🌷
ravi said…
🌷🌷🌷🌷
அற்புதம் தாமரை பூவின் வர்ணனை
தாமரை பெயரை உச்சரித்தாலே
ஆனந்தம்
உச்சரித்து பாருங்கள் ஒரு உற்சாகம் பிறக்கும்
அதுவும் அம்பாளுடன் ஒப்பிட்டால் இன்னும் அருமை
அபிராமி தாயே🙏🏻🙏🏻🙏🏻🌷
ravi said…
சவிதா
Kousalya said…
Abhiramiyin kamala padangale Charanam Charanam Charanam 🌷 🌷 🙏🙏🌹🌹
S G S Ramani said…
என் மனமெனும் தாமரையில் அமர்ந்து இருக்கும் தாமரை மலர் போன்ற முப்புர நாயகிக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.

🙏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

மற்ற மதங்களில் எல்லோருக்கும் பொதுவாக வைத்த தர்மங்களை, அறநெறிகளை நம் மதத்திலும் எல்லோருக்கும் விதித்ததோடு அவரவர் தொழிலைப் பொறுத்து அதற்குத் தனியான விசேஷ தர்மங்களை வைத்து ஒன்றோடொன்று கலந்துவிடாமல் ஸமூஹத்தைப் பிரித்து வைத்ததுதான் நம் நாகரிகத்தின் சிரஞ்சீவித் தன்மைக்கு உயிர்நிலை.

ravi said…
நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வந்திருக்கிறது. ஏதோ ஆதாரம் இருந்துதான் இந்த மதம் இவ்வளவு நாள் பிழைத்திருக்கிறது. எந்த மதமும் இவ்வளவு தீர்க்காயுஸோடு இருந்ததாகத் தெரியவில்லை. நம்முடைய மதத்தை நான் நம்முடைய கோயிலைப் போல நினைத்திருக்கிறேன். நம்முடைய கோயில்கள் மற்றவர்களுடைய சர்ச் அல்லது மசூதியைப் போல சுத்தமாக இல்லை. மற்ற மதஸ்தர்களுடைய கோயில்களோ வெள்ளையடித்து சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
ravi said…
நம்முடைய கோபுரங்களில் முளைத்திருக்கும் மரங்களுக்குக் கணக்கேயில்லை. அவ்வளவையும் தாங்கிக் கொண்டு நமது கோயில்கள் நிற்கின்றன. ஆனால் மற்ற மதத்தார்களின் கோயில்களில் இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒரு முறை ரிப்பேர் செய்யா விட்டால் தாங்காது. நம் கோயில்கள் அப்படியில்லை. அவை கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன.
ravi said…
பல ஆயிரம் வருஷத்திற்கு முன்பாக நம்முடைய பெரியோர்கள் பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள். ஆகையால் தான் அவ்வப்போது ரிப்பேர் இல்லாமலே நம் கோயில்கள் நீடித்து நிற்கின்றன. நாம் கோயில்களில் பல ஆபாஸங்களைச் செய்கிறோம்; அபசாரங்கள் செய்கிறோம்; இவ்வளவுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டு நம்முடைய கோயில் நிற்கிறது. லோகத்திற்குள் மிகப் புராதனமான கோயில்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று எல்லோரும் சொல்கிறார்கள்.
ravi said…
சீமையில் இருந்து நம்முடைய கோயில்களைப் படம் பிடிப்பதற்காகவென்றே பல பேர் வருகிறார்கள். நம்முடைய அலக்ஷ்யத்தால் அழிவதற்குரிய காரணங்கள் பல இருந்தும் அவை இப்படி நெடுங்காலமாக அழியாமல் நிற்கின்றன. அவற்றை இடித்து விடலாமென்றாலோ அதுவும் சிரமமாக இருக்கிறது. கட்டுவதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டுமோ அதைவிட இடிப்பதற்கும் படவேண்டும்!

ravi said…
நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று (மற்ற மதங்களில் இல்லாத ஏதோ ஒன்று) இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதனால்தான் எவ்வளவோ வித்யாஸங்கள இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது.

ravi said…
அந்த ஏதோ ஒன்று வர்ணாச்ரம தர்மந்தான். மற்ற மதங்களில் எல்லாருக்கும் ஒரே தர்மம் இருக்கிறது. அதனால் தான் அவைகள் அதிகப் பெருமை அடைந்திருக்கின்றன என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவை ஒரு ஸமயம் ஒரே அடியாக ஏறி நிற்கும். ஒரு ஸமயம் இருந்த இடம் தெரியாமற் போனாலும் போய்விடும். ஒரு காலத்தில் புத்த மதம் இருந்த தேசத்தில் பிற்பாடு கிறிஸ்துவ மதமும், கிறிஸ்துவ மதம் இருந்த தேசத்தில் இஸ்லாமும், இஸ்லாம் இருந்த தேசத்தில் கிறிஸ்துவமுமாக இப்படிப் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பது சரித்திர பூர்வமான உண்மை. எகிப்து, கிரீஸ், சைனா முதலிய தேசங்களில் ரொம்பவும் பூர்வத்தில் இருந்து உயர்ந்த நாகரிகங்களை உண்டு பண்ணின மதங்கள் இப்போது இல்லவேயில்லை.
ravi said…
இத்தனை மாறுதல்களையும் பார்த்துக் கொண்டு, வெளியிலிருந்தும் உள்ளேயிருந்துமே எண்ணி முடியாத தாக்குதல்களை தாங்கிக் கொண்டு நம் ஹிந்து மதம் மட்டும் “சாக மாட்டேன்” என்று இருந்து வருகிறது.

ravi said…
ஒரு பனைமரம் இருந்தது. அதன்மேல் ஓர் ஓணான் கொடி கிடுகிடுடென்று படர்ந்தது. சில மாதத்திற்குள் பனை மரத்திற்கு மேல் வளர்ந்து விட்டது. அப்பொழுது அந்த ஓணாண்கொடி, “இந்தச் சில மாதமாக இந்த பனைமரம் ஓர் அங்குலம் கூட உயரவில்லையே! இது உபயோகம் இல்லாதது” என்று சொல்லி சிரித்தது. பனைமரம் சொல்லிற்று: “நான் பிறந்து பதினாயிரம் ஒணான்கொடியைப் பார்த்திருக்கிறேன். நீ பதினாயிரத்து ஓராவது கொடி. ஒவ்வொரு கொடியும் இப்படித்தான் கேட்டது. எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை” என்று! இந்த மாதிரிதான் நம் மதமும் பிற மதங்களும் இருக்கின்றன.

ravi said…
நம் மதத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி வேறு விதமான தர்மங்கள் இருந்தாலும் இந்த தர்மாநுஷ்டாங்களில் ஸமமான பலன்தான் உண்டாகிறது.
ravi said…
சற்று பெரிய பதிவுதான் படிக்கவும்.

*ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா?*
┈*

கோயில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள், கேள்விப்பட்டிருப்பீர்கள்.
ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன, அதில் என்னென்ன பூஜை செய்கிறார்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்காது.

இந்துக்கள் ஆகிய நாம் அனைவரும் இவை தெரிந்துகொள்ள வேண்டும்.!



ravi said…
அதைப் பற்றி ஒரு சிறு விளக்கம் இங்கே...👇

இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம். புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை.
அது எப்போது முழுமை பெறும்?...



ravi said…
ஆலயத்தில், *'கும்பாபிஷேகம்'* நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.

*கும்பம்* என்றால் *'நிறைத்தல்'* என்று பொருள்.
நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம் *இறை சக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம்.*



ravi said…
இதனை சைவர்கள்
*'மகா கும்பாபிஷேகம்'* என்றும்
வைணவர்கள் *'மகா சம்ப்ரோக்ஷணம்'* என்றும் அழைக்கிறார்கள்.

மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.



ravi said…
கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப் பெறுகின்றன.

பெரும்பாலும்,
*கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு* ஒருமுறை செய்யப்படுகிறது.

இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும் போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள் வரைதான் சக்தியோடு இருக்கும்.

மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.

*கும்பாபிஷேகத்தின் வகைகள்:-)*

ravi said…
ஆவர்த்தம் –
புதிதாக கட்டப்படும் ஆலயங்களில் செய்யப்படுவது.
இது மும்மூர்த்திகளுக்காகச்
செய்யபடுகின்றன

அனாவர்த்தம் –
வெகுநாட்கள் யாராலும் முறையாக பராமரிக்கப்படாமல், பூஜை, புனஷ்காரங்கள் நடைபெறாமல் இருக்கும் ஆலயங்களைப் புனரமைப்பு செய்து பின்னர் செய்யப்படுவது.

ravi said…
மேலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்த கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.

புனராவர்த்தம் –
கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியன பாதிப்படைந்திருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.

ravi said…
அந்தரிதம் –
ஆலயத்தினுள்ளே தகாத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் செய்யப்படும் பரிகாரம்.



*கும்பாபிஷேகத்தில்.........*

○ கும்பம் - கடவுளின் உடலையும்,

○ கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் - 72,000 நாடி, நரம்புகளையும்,

○ கும்பத்தில் ஊற்றப்படும் நீர் - ரத்தத்தையும்,

○ அதனுள் போடப்படும் தங்கம் - ஜீவனையும்,

○ மேல் வைக்கப்படும் தேங்காய் - தலையையும்,

○ பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள் மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன


*கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்கொள்ள வேண்டிய பூஜைகள் :-)*

ravi said…
அனுக்ஞை –
ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் –
இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை –
பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்தல்

கணபதி பூஜை –
கணபதியை வழிபடுதல் .

வருண பூஜை –
வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் –
பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம் ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி –
தேவர்களை வழிபடுதல்.

பிரவேச பலி –
திக்பாலர்களை வணங்குதல்.

மிருத்சங்கிரஹணம் –
ஆலயம் நிர்மாணம் செய்ய பூமாதேவியை கஷ்டப்படுத்தியதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம். மண் எடுத்து வழிபடுவது.

அங்குரார்ப்பணம் –
எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச் செய்தல்.

ravi said…
இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன் போன்றவர்களை வழிபடுதல்.
மேலும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் –
ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும் கையில் காப்புக் கட்டுதல்.

கும்ப அலங்காரம் –
கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் –
விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் –
கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

சூர்ய, சோம பூஜை –
யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை வழிபடுதல்.

மண்டப பூஜை –
யாகசாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி –
விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் –
இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்


விசேஷ சந்தி –
36 தத்துவத் தேவதைகளுக்குப் பூஜை செய்வது. உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி செய்வது.

பூத சுத்தி –
பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி –
36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.

அஷ்டபந்தனம் –
(மருந்து சாத்துதல்) எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல்.

பூர்ணாஹுதி –
யாகத்தைப் பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் –
யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.

மஹாபிஷேகம் –
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் –
இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்.


*
ravi said…
யாக குண்டத்தின் வகைகள்:-)*

ஏக குண்டம் –
ஒரு குண்டம் அமைப்பது

பஞ்சாக்னி –
ஐந்து குண்டம் அமைப்பது

நவாக்னி –
ஒன்பது குண்டம் அமைப்பது

உத்தம பக்ஷம் –
33 குண்டம் அமைப்பது


*யாக குண்டங்கள் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன. அவை :-)*

விநாயகர் - பஞ்சகோணம்

முருகர் - ஷட்கோணம்

சிவன் - விருத்தம்

அம்மன் - யோணி

பரிவாரம் - சதுரம்

*கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால்,*

முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள்,

48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன் அடையலாம்.

*ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக்

*நமது முன்னோர்கள் இந்து தர்மத்தையும், அதன் கலாச்சாரத்தையும் மிக சிறப்பாக வழி நடத்தி வந்துள்ளார்கள்...*
*அவை அனைத்தையும் பாதுகாப்பது இன்றைய இளைய தலைமுறையின் கடமையாகும்...!!!*

*ஓம் நமோ நாராயணாய*
ravi said…
திருக்கடையூர் அபிராமி *63*

*பாடல் 61* 🌸🌸🌸🙏🙏🙏

*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ravi said…
இன்றைய பாடல் பட்டரின் தன்னடக்கத்தின் உச்சம் ...

நேற்று பாடும்போது அம்மா நாற்றமடிக்கும் என் நாய் தலையின் மீது உன் பாதங்களைப்போய் பதித்தாயே ...

நான்கு வேதங்களும் தேவர்களும் மாலும் ஈசனும் தங்கள் சென்னியில் உன் பாதம் பதியாதா என்று ஏங்கிக்கொண்டிருக்க போயும் போயும் எதற்குமே அருகதை இல்லாத என்னை நாடி வந்தாயே இது உனக்கு அழகா என்று பாடினார் ..

இன்றும் அந்த பாடலை தொடர்கிறார் மிகவும் அடக்கத்துடன் 🙏🙏🙏
ravi said…
தாயை மீண்டும் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து போன பாடலில் பார்த்தார் ..

சாரே ஜஹாங் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா என்னும் போதும்,

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு என்னும் போதும்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்னும் போதும்,

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்னும் போதும்,

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமி தனில் யாங்கணுமே கண்டதில்லை என்னும் போதும் இதே போன்ற உணர்வுகள் தான் சொல்லப்பட்டிருக்கின்றன.🙏🙏🙏
ravi said…
பிரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் (பிரம்மனாலும் திருமாலாலும் தேவர்களாலும் அர்ச்சிக்கப்படும் லிங்கம்) என்று லிங்காஷ்டகத்தில் வரும் போதும் எனக்கு உடன்பாடு உண்டு.

ச சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌலிமணே (நான்முகன், அறுமுகன், ஐந்துமுகன் - சிவன், தேவர்களில் முதன்மையான இந்திரன் என்று
எல்லா தேவர்களின் திருமுடியிலும் இருக்கும் மணி போன்றவனே) என்று வெங்கடேச ஸ்தோத்திரத்தில் வரும் போதும் எனக்கு உடன்பாடு உண்டு.

இறைவன் ஒன்றே என்று உணருங்கள் .

ravi said…
ஒரு தெய்வத்தை உயர்த்தி இன்னொரு தெய்வத்தை கொஞ்சம் தாழ்த்தி சொன்னாலும் நமக்கு அதனால் கோபம் வராது ..

ஏன் என்றால் இன்னொரு தெய்வம் என்று ஒன்றுமே இல்லை ... ஒரே தெய்வம் பலப்பல நாமங்களில் அவ்வளவு தான் !!!👌👌👌
ravi said…
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்

நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்

என்ன பேறு பெற்றேன்

தாயே! மலைமகளே!! செங்கண்மால் திருத்தங்கச்சியே!!!💐💐💐
ravi said…
அம்மா ... நான் ஒன்றும் அறியாதவன் .. எதுவும் புரிந்துகொள்ளும் மனப்பக்குவமும் இல்லாதவன் .. பேதை பேய் குணம் கொண்டவன் .. நாய் போல மனதை வெளியே திரிய விடுபவன் ..

நீ யார் ... ஏழு புவிகளையும் 14 புவனங்களையும் முதல் மூவரையும் பெற்ற தாய் . ஸ்ரீ மாதா ... மகராஞ்சி சிம்மாசனேஸ்வரி ... சிதக்கனி ....

தாய் மட்டுமா?

இமயவானின் மகள் மகாராணி ...

பர்வத ராஜனின் புத்திரி...

மதங்க முனிவரின் ஸ்ரீமந்த புத்திரி ...

பாண்டியனின் மகள் .. காஞ்சன மாலை பெற்ற சியாமளா ....மீனாட்சி ...

நீ என்னையும் ஒரு உயிராக மதித்து அன்புடன் ஓடி வந்தாய் 🙏🙏🙏
ravi said…
நல்லவர்களை உன்னிடம் உயிரையே கொடுக்கும் அடியவர்களை முக்தி கொடுக்க தேர்ந்தெடுக்கும் போது எப்படி நினைவே இல்லாமல் என்னையும் தேர்ந்தெடுத்தாய் ..??

நான் ஒரு களை .. பிடுங்கி தூர எறிய வேண்டியவன் ...💐💐💐
ravi said…
அம்மா நீ தான் என் அபிராமி என்று உணரக்கூடிய பேரறிவையும் நீயே எனக்கு கொடுத்தாய் ...

அர்ச்சுனன் கண்ணன் இறைவன் என்பதை அவன் விஸ்வரூபம் எடுத்துக்காட்டும் வரை உணர்ந்து கொள்ளவே இல்லை ...

ஈசன் தான் தன்னை ஆட்க்கொள்ள குருவாக வந்திருக்கிறான் என்பதை வாத ஊரார் முதலில் அறிந்து கொள்ளவே இல்லை ..

ஆனால் உன்னை பார்த்தவுடன் நீ தான் நான் தேடிக்கொண்டிருக்கும் அபிராமி என்பதை க்ஷண நேரத்தில் உணர வைத்தாய் 🌷🌷🌷
ravi said…
அம்மா என்ன பேறு பெற்றேன் ... சிவந்த கண்களை உடைய , கருணையே உடையாக உடுத்திக்கொண்டு அருள் புரியும் திருமாலின் திருத் தங்கச்சியே

( உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவள் அபிராமி என்பதால் வெறும் தங்கை என்று சொல்லாமல் திருவையும் சேர்த்து சொல்கிறார் ... ) 💐💐💐
ravi said…
A nice post I felt like sharing

*Comparisons*

Shweta covered a distance of 10 km in one hour.

Akash covered the same distance in one and a half hours.

Which of the two is faster and healthier??

Of course our answer will be Shweta.

What if we say that Shweta covered this distance on a prepared track while Akash did it by walking on a sandy path???

Then our answer will be Akash.

But when we come to know that Shweta is 50 years old while Akash is 25 years old??

Then our answer will be Shweta again.

But we also come to know that Akash's weight is 140 kg while Shweta's weight is 65 kg.

Again our answer will be Akash

As we learn more about Akash and Shweta, our opinions and judgments about who is better will change.
The reality of life is also similar. We form opinions very superficially and hastily, due to which we are not able to do justice to ourselves and others.

Opportunities vary.
Life is different.
Resources differ.
Problems change.
Solutions are different.

Therefore the excellence of life is not in *comparing* with anyone but in testing oneself.

You are the best. Stay as you are and keep trying your best according to your circumstances.

Stay healthy, stay cool, stay satisfied, keep smiling, keep laughing, keep on serving society and the country.
ravi said…
*LITTLE TEA CUP*

There was a couple who took a trip to England to shop in a beautiful antique store to celebrate their 25th wedding anniversary.

They both liked antiques and pottery, and especially teacups.

Spotting an exceptional cup, they asked "May we see that? We've never seen a cup quite so beautiful.

"As the lady handed it to them, suddenly the teacup spoke, "You don't understand. I have not always been a teacup.

There was a time when I was just a lump of red clay.

My master took me and rolled me, pounded and patted me over and over and I yelled out,

"Don't do that. I don't like it! Let me alone," but he only smiled, and gently said, "Not yet."

Then WHAM! I was placed on a spinning wheel and suddenly I was made to suit himself and then he put me in the oven. I never felt such heat.

I yelled and knocked and pounded at the door. "Help! Get me out of here!" I could see him through the opening and I could read his lips as he shook his head from side to side, "Not yet."

When I thought I couldn't bear it another minute, the door opened.

He carefully took me out and put me on the shelf, and I began to cool.

Oh, that felt so good! "Ah, this is much better," I thought.

But, after I cooled he picked me up and he brushed and painted me all over.

The fumes were horrible. I thought I would gag. "Oh, please, stop it, stop, I cried."

He only shook his head and said, "Not yet." Then suddenly he puts me back into the oven.

Only it was not like the first one. This was twice as hot and I just knew I would suffocate.

I begged. I pleaded. I screamed. I cried. I was convinced I would never make it.

I was ready to give up. Just then the door opened and he took me out and again placed me on the shelf, where I cooled and waited and waited, wondering, "What's he going to do to me next?"

An hour later he handed me a mirror and said, "Look at yourself." And I did.

I said, "That's not me. That couldn't be me. It's beautiful. I'm beautiful!".🍵☕🫖
ravi said…
Quietly he spoke: "I want you to remember. I know it hurt to be rolled and pounded and patted, but had I just left you alone, you'd have dried up.

I know it made you dizzy to spin around on the wheel, but if I had stopped, you would have crumbled.

I know it hurt and it was hot and disagreeable in the oven, but if I hadn't put you there, you would have cracked.

I know the fumes were bad when I brushed and painted you all over, but if I hadn't done that, you never would have hardened.

You would not have had any color in your life. If I hadn't put you back in that second oven, you wouldn't have survived for long because the hardness would not have held.

Now you are a finished product.

Now you are what I had in mind when I first began with you."🍵☕🫖
ravi said…
So when life seems hard, and you are being pounded and patted and pushed almost beyond endurance; when your world seems to be spinning out of control;

when you feel like you are in a fiery furnace of trials;

when life seems to "Stink", try this.

Brew a cup of your favorite tea in your prettiest tea cup, sit down and think on this story and then, have a little talk with the Potter.

Love this story or not, you will not be able to have tea in a tea cup again without thinking of this.☕🫖🍵
ravi said…
நாவடக்கம்..🙂

முடி வெட்ட எவ்வளவு..? சவரம் பண்ண எவ்வளவு..? என்றார் பண்டிதர்..

அவரும் .. *முடிவெட்ட நாலணா.. சவரம் பண்ண ஒரணா சாமி !* என்று பணிவுடன் கூறினார்..

ravi said…
பண்டிதர் சிரித்தபடியே,
*அப்படின்னா..! என் தலையை சவரம் பண்ணு* என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார் பண்டிதர்..

வயதில் _*பெரியவர்*_ என்பதால், நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

ravi said…
வேலையை ஆரம்பித்தார் நாவிதர்..

_*நாவிதர் கோபப்படுவார்*_ என்று எதிர்பார்த்திருந்த
பண்டிதருக்கு.. சற்று ஏமாற்றந்தான்..

பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்..

*ஏன்டாப்பா.. உன் வேலையோ..! முடி வெட்டுறது.. உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே.. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம..* *உன்னை நாக்கோட சம்மந்தப்படுத்தி "நாவிதன்னு" சொல்றாங்க..?*

ravi said…
இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார் பண்டிதர்.. ஆனால், நாவிதர் முகத்திலோ புன்னகை..
*நல்ல சந்தேகங்க சாமி.. நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத்தட்டாம இருக்க, "நாவால" இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான்..! நாங்க நாவிதர்கள்..*
*எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா சாமி..?*

ravi said…
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது..

அடுத்த முயற்சியைத் துவங்கினார்.. *இதென்னப்பா, கத்தரிக்கோல்னு சொல்றீங்க.. கத்தரி மட்டுந்தானே இருக்கு.. கோல் எங்கே போச்சு..?*

ravi said…
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது நாவிதரிடமிருந்து..

*சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க..* என்று சொல்லி நிறுத்திக் கொண்டார் நாவிதர்..

இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம்.. அடுத்து கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்..

*
ravi said…
எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குறீயே..! ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு..?.!*

இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது..

அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம்..

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார்..

கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்..

ravi said…
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார்..

பண்டிதரின் "பிரியமான மீசையைத்" தொட்டுக் காட்டிக் கேட்டார்..
*சாமிக்கு இந்த மீசை வேணுங்களா..?*
பண்டிதர் உடனே, *ஆமாம்* என்றார்..

கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்து..
*மீசை வேணுமுன்னிங்களே சாமி..! இந்தாங்க..* என்றார்

ravi said…
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய் கையில்..

அதிர்ச்சியில் உறைந்து போனார் பண்டிதர்..

நாவிதரோ, அடுத்த நடவடிக்கையில் இறங்கினார்..

அவரது "அடர்த்தியான புருவத்தில்" கை வைத்தபடிக்கேட்டார்,
*சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா..?*

இப்போது பண்டிதர் சுதாரித்தார்..
_வேணும்னு சொன்னா..! வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான்_ என்ற பயத்தில், உடனே சொன்னார்..
*இந்தப் புருவம் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்..* என்றார் பண்டிதர்..

ravi said…
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்..

*சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல..? அதைக் குப்பைல போட்டுடுறேன்..*

*சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது..* என்றபடி கண்ணாடியை பண்டிதரின் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்..

ravi said…
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல்..

முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல்..

அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது..

ravi said…
கண்கள் கலங்க, குனிந்த தலை நிமிராமல், ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு.. விரக்தியில் தளர்ந்து போய் நடையைக் கட்டினார் பண்டிதர்..

*நம்முடைய அறிவும் - ஆற்றலும் - திறமையும் - அதிகாரமும் - அந்தஸ்தும் - பொருளும் - மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர.. மட்டம் தட்ட அல்ல..*

*இதை உணராதவர்கள் - இப்படித்தான் அவமானப்பட நேரும்..*
ravi said…
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🟫🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟫

*🟤நிறுத்தவும் முடியாமல் தொடரவும் முடியாமல் சில தேடல்கள்...*

*🟤விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் சில உறவுகள்...*

*🟤சொல்லவும் முடியாமல் கொல்லவும் முடியாமல் சில ஆசைகள்...*

*🟤மறக்கவும் முடியாமல் வெறுக்கவும் முடியாமல் சில நினைவுகள்...*

*🟤இது தான் வாழ்க்கை!!!*

🟫🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟤🟫
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*

*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*

*காலை வணக்கம்* 🙏
Sridhar swaminathan said…
பெரியவரைக் கண்ட மதன் போல நானும் மயங்கித்தான் போனேன்.. (கொசுவைக் கொல்ல பீரங்கி வேண்டாம்... அதே மையம் குறும்பு 😀).உங்கள் கவிதை நன்றாக இல்லாமல் இருக்குமா.. அருமை சார். 🙏🙏
ravi said…
*கேள்வி பதில் நேரம்*

*பதிவு 7* 🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .

*கேள்வி 10*

*நான்* :

பட்டரே! காலை வணக்கம் ..

*பட்டர்*

மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்!

பசும் பொற்கொடி இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் .

இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜

*நான்*

ஐயனே ... உங்களிடம் பதில் நிறைய இருக்கிறது . என்னிடம் கேள்விகள் பஞ்சமாக இருக்கிறது ...

பட்டர் : ( முதல் தடவையாக... சிரிக்கிறார் ) .. கேள்விகளையும் நானே கேட்டு பதில்களையும் நானே சொல்ல முடியாது .. நீ தான் கேட்க வேண்டும் .. இப்படி வைத்துக் கொள்வோம் .. நான் கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்...

திருவிளையாடல் தருமி மாதிரி கதறினேன்..

பட்டரே!! எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும் . பதில் சொல்லத் தெரியாது ..

சரி இன்று ஒரு கேள்வி கேட்கிறேன் 👌👌👌
ravi said…
*நான்*

உங்கள் பாடல்களை படிக்க படிக்க வேறு வேறு புதிய அர்த்தங்கள் பிறக்கின்றன ...

உதாரணம்.... ஒரு பாடலில்

*சிந்தையுள்ளே உன்னை பந்திப்பவர் என்றும் அழியா பரமானந்தர்*

என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ...

முதலில் அழியா பரமானந்தர் அம்பிகையின் பதியை குறிக்கும் என்று அர்த்தம் கொண்டேன் ..

அடுத்த நாள் படிக்கும் போது வேறு புதிய அர்த்தம் பிறந்தது ..

உன்னை மனதிற்குள் நினைப்பவர்களுக்கு என்றும் அழிவு இல்லை

அவர்கள் அடையும் பரமானந்தத்திற்கு அளவே இல்லை என்று புரிந்து கொண்டேன் ...

இப்படி சொல் வளமும் பொருள் வளமும் கொண்ட அந்தாதியை தந்த உங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவே ...

*பட்டர்* ... ஏதோ கேள்வி கேட்கப்போகிறாய் என்றல்லவா நினைத்தேன்
ravi said…
*நான்* ..

தாங்கள் பல பாடல்களில் முத்துக்களை உதாரணமாய் சொல்கிறீர்கள் ..

அபிராமி முத்து மாலை அணிந்தவளே ...!!!

என்று அன்னையை முத்து முத்தாய் பாராட்டுகிறீர்கள் ...

இதன் தாத்பரியத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா ?

*பட்டர்* .. நல்ல கேள்வி .. சில பொருள்கள் சிறப்பான தனிப்பட்டத் தன்மை பெருமை கொண்டவை

*தங்கம்* : இதை அணிபவர்கள் மென்மை யானவர்கள் ..

மென்மை குணம் கொண்டவர்கள் ..

ஒரு மதத்தில் ஆண்களுக்கு மென்மை இருக்கக் கூடாது ..

வீரம் தழைத்து இருக்க வேண்டும் என்று தங்கம் ஆண்கள் அணிவதை தடை செய்திருக்கிறார்கள்

*இரும்பு* -

இரும்பினால் நகைகள் செய்வதில்லை ...

சில தீய சக்திகளை தன்பால் இழுக்கும் சக்தி இரும்புக்கு உண்டு

*வெள்ளி* வெள்ளி பாதங்களை அலங்கரிக்க மேனியை அல்ல ...

வெள்ளி நல்ல பாதையில் அழைத்து செல்லும் தன்மை உடையது

*நவரத்தினங்கள்*

இவை உடலின் குண்டலினியின் தத்துவம் ..

எப்பொழுதாவது ஒரு தடவை போட்டுக்கொள்ளலாம் .. தினசரி வாழ்க்கைக்கு ஏற்றதல்ல

ravi said…
*முத்து* ... ஞானத்தை தருவது .. எவ்வளவோ வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவித்து விட்டு ஒரு திடப்பொருளாக உருவாகி வெளி வருகிறது ...

சரி உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன் .. அபிராமி அணிந்திருப்பது வெளியில் எல்லோரும் பார்க்கும், அணியும் சாதாரண முத்து மாலை இல்லை ..

வாழ்க்கையில் அவதிப்பட்டு *அம்பிகையே நீயே சரணம் உன்னை விட்டால் வேறு நாதி இல்லை*

என்று அவள் நினைவாகவே இருப்பவர்களுக்கு அழியா முக்தியும் , வீடும் தருகிறாள் அபிராமி ..

அப்படி முக்தி அடைந்த முக்தர்களை கோத்து முத்து மாலையாய் அணிந்துள்ளாள் அபிராமி ...

அவளை ஒரு முறை தரிசித்தாலேயே அவள் அணியும் முத்து மாலையில் நாமும் ஒரு முத்தராக இடம் பிடிக்கலாம் ..

*நான்* ஆஹா இப்படி ஒரு விளக்கமா ? பட்டரே புல்லரிக்கின்றது ..

*பட்டர்* ... ம்ம் தெரிகிறது

உன் உடம்பும் சிவந்து விட்டது ...

நாளை பார்ப்போம் ....

பறந்து சென்றார் பனி மால் இமயப் பிடி போல ...👌👌👌 🙏🙏🙏

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை