அபிராமி அந்தாதி - பாடல் 8 சுந்தரி எந்தை துணைவி !!
பச்சைப்புடவைக்காரி -449
அபிராமி அந்தாதி - பதிவு 14
பாடல் 8
சுந்தரி எந்தை துணைவி
சுந்தரி எந்தை துணைவி
என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி
சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல் அந்தரி
நீலி அழியாத கன்னிகை
ஆரணத்தோன்கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
சுந்தரி - அழகில் சிறந்தவளே
எந்தை துணைவி -
என் தந்தையாகிய சிவபெருமானின் துணைவியே
என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி - என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
சிந்துர வண்ணத்தினாள் -
சிந்துரம் அணிந்ததால் சிவந்த மேனியைக் கொண்டவளே
மகிடன் தலைமேல் அந்தரி -
அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் நின்று அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே; துர்க்கையே
நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே!
நீலி - நீல நிற மேனியைக் கொண்டவளே
அழியாத கன்னிகை -
இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே
ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள் -
வேதநூலை கையில் தாங்கும் பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே
மலர்த்தாள் என் கருத்தனவே -
உன்னுடைய திருவடிகள் என்னும் மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன.
அழகில் சிறந்து என் தந்தையாம் சிவபெருமானின் துணைவியாய் நின்றவளே.
சிந்துரம் அணிந்ததால் சிவந்த திருமேனியைக் கொண்டவளே.
அகந்தையின் மொத்த உருவமான மகிஷாசுரனின் தலை மேல் அவனின் இறுதிக்காலமாய் அவனை அழித்து நின்றவளே.
நீல நிற மேனியைக் கொண்ட காளியே. இந்த உலகனைத்துக்கும் தாயானாலும் என்றும் வாழும் கன்னிகையாய் இருப்பவளே. பிரம்மதேவனின் திருமுகத்தை தரித்த கைத்தலத்தை உடையவளே.
உன்னுடைய திருவடி மலர்களே என்றும் என் நினைவில் நிற்கின்றன. என்னை தொடர்ந்து வந்து துன்பம் கொடுக்கும் பாசபந்தம் எனும் தொடரை கருணை கொண்டு அறுத்துவிடுவாய்.
மேலான பொருள்
என் தந்தையாம் ஈசனின் துணைவியான தேவியே!
பேரழகு மிக்க அன்னையே!
பாசமாம் தளைகளையெல்லாம் ஓடி வந்து அழிக்கும் சிந்தூர நிறம் கொண்டவள்,
மகிடன் என்னும் அசுரனின் சிரத்தின் மேல் நிற்கும் அந்தரி
நீல நிறங்கொண்டவள்,
என்றும் அழிவில்லாத இளங்கன்னி,
பிரமதேவனின் கபாலத் தைத் தாங்கும் திருக்கரத்தைக் கொண்டவள் ஆகிய அபிராமி அன்னையே!
தாமரை மலரைப் போன்ற உன் அழகிய திருவடிகள் என் உள்ளத்தில் என்றென்றும் பொருந்தி நிற்கின்றன.
சுந்தரி
அவள் சொக்கனின் பத்தினி .. *சொக்கி* , சுந்தரேஸ்வரரின் துணைவி ... *சுந்தரி* ..
சொல்ல ஒண்ணாத அழகு ..அரங்கனின் தங்கை ..அளவிட முடியாத பேரழகி ... அவளுக்கு நிகர் அவள் மட்டுமே
எந்தை துணைவி
என் துணைவி என்றும் எடுத்துக்கொள்ளலாம் என் தந்தையான ஈசனின் துணைவி என்றும் எடுத்துக்கொள்ளலாம் ..
என் துணைவி என்றால் எனக்கு துணையாய் எப்பவும் வருபவள் ..நான் அவளை கூப்பிட வேண்டாம் ..
எனக்கு ஒரு கஷ்டம் என்றால் பறந்தோடி வந்து என்னை காப்பாற்றுவாள் ..
என் விழுத்துணையே அவள் தான் என்று ஆகும் போது அவள் என் துணைவி என்றும் சொல்வது சரியே ..
என் பாசத்தொடரை எல்லாம் வந்தரி ..
அறிதல் வேறு அரிதல் வேறு ..அறிதல் என்பது ஆட்டை வெட்டு என்று சொல்வதைப்போல ..
அரிதல் என்பது நகத்தை வெட்டுவதைப்போல ..அபிராமி என்ன செய்கிறாள் தெரியுமா..?
நமக்கு வலியே தெரியாமல் நம்மிடம் வந்து நம் பாச பந்தங்கள் எனும் மாயையை அருப்பாள் ..
இனி பிறவியே இல்லாத முக்தி நிலையை அவள் தருவாள்
சிந்தூர வண்ணத்தினாள்
இரண்டாம் முறையாக அதே அழகிய வார்த்தையை பட்டர் உபயோகிக்கிறார் சிந்தூர வண்ணத்தினாள்.. குங்கம குழம்பில் குளித்து எழுந்தவள் ... குங்கமப்பூ நிறத்தினள்..
மகிடன் தலைமேல் அந்தரி
இரண்டாவது தடவையாக அந்தரி என்ற நாமம் வருகிறது . அந்தாதியில் அந்தரி என்ற நாமம் மூன்று இடங்களில் வரும் ..
அந்தரி 1
நம் அந்தரங்க விஷயங்களுக்கு அதிபதியாய் இருப்பவள் .. பகுத்தறிவாளர்கள் சொல்வது மனசாட்சி ..உண்மையில் நமக்கு நல்லதை எடுத்து சொல்பவள் அபிராமி தான்
அந்தரி 2
இந்த பாடலில் வரும் நாமம் .. மகிஷாசுரனுக்கு அந்தமாக வந்தவள்
அந்தரி 3
விஷ்ணு துர்க்கை வானத்தில் அதாவது அந்தரத்தில் நிற்பவள் .. கம்சனை அழிக்காமல் முக்தி காட்டி மறைந்தவள் ..
*நீலி ..அழியாத கன்னிகை*
அவள் நீல நிறமும் கொண்டவள் .. என்றும் அழியாத இளம் பெண் .. அந்தம் இல்லாதவள் ..
ஆரணத்தோன் சுந்தரி
ஆரணத்தோன் என்பது பிரம்மனைக்குறிக்கும் .. ஆணவம் மிகுந்து போனதால் சிவன் பிரம்மன் தலைகளில் ஒன்றைக்கிள்ள அதுவே பிரம்ம கபாலமாய் ஆனது அர்த்த நாரீஸ்வரர் என்பதால் அம்பிகையும் அதற்கு பொறுப்பு என்று பட்டர் சொல்கிறார் அவள் கையிலும் இந்த கபாலம் ஏந்திருக்கிறாள்
கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே 🍇🍇🍇
அவள் மலர் போன்ற திருவடிகள் என் கருத்தில் பொருந்த வேண்டும் என்று வேண்டுகிறார் ... சிரசிலும் அவள் பாதங்கள் சிந்தையிலும் அவள் திருவடிகள்
வேறு என்ன வேண்டும் நமக்கு ..இதை விட உயர்வான பரிசு யாருக்கு கிடைக்கும்
சுந்தரி எந்தை துணைவி
👣👣🙏🙏🙏
👍👍👍👍👍👌👌👌👌💐💐💐
Comments
விழுமியமுனிவர்விழுங்கும்
கோதிலின் கனியை நந்தனார் களிற்றைக்
குவலயத்தோர்தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னையாளுடை
யப்பனை
ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும்
மாடமாமயிலைத்
திருவல்லிக்கேணிக்கண்டேனே🙏🙏🙏
*பதிவு 4* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 7*
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்* காலை வணக்கம் ... உதிக்கின்ற செங்கதிர் போல் உங்கள் வாழ்வு சிறக்கட்டும் 🌞
இன்று என்ன கேள்விகள் ?
*நான்* நீங்கள் 78 பாடல் பாடும் வரை அம்பாள் வரவேயில்லை ..
உங்கள் மன நிலை எப்படி இருந்தது ?
நாங்களாக இருந்திருந்தால் அபிராமியை திட்டி தீர்த்திருப்போம் ..
🙏🙏🙏
அவளை அரைகுறையாய் நம்பவில்லை முழுவதுமாக நம்பினேன் ..
அரைகுறையாக நம்பி இருந்தால் அவளும் பிறைச் சந்திரனை மட்டுமே வானத்தில் காட்டி இருப்பாள் .
முழுமையாக நம்பியதால் அவள் பூர்ண சந்திரனை வானத்தில் கொண்டு வந்தாள் ..
யார் யாரையோ நம்புகிறீர்கள்
என் அபிராமியை முழுவதுமாக நம்பி பாருங்கள் ...
இதை நான் சொல்வதை விட நீங்களே அனுபவித்தால் மட்டுமே பரமானந்தம் காண முடியும் ..
🌷🌷🌷🌞🌞🌞
உண்மை ... உங்கள் மாதிரி பக்தி எங்களுக்கு வருவது மிகக் கடினம் ..
மண்ணளிக்கும் செல்வத்தில் தான் மனம் போகிறது ...
அமையும் அமையொரு தோளினர் மேல் வைத்த ஆசை தான் எங்களை எல்லாம் மாயை என்பதை அறிய வைக்க மறுக்கிறது...
*பட்டர்* அந்தாதி தினமும் சொல்வதால் மாயை சீக்கிரம் விலகும் .. அவள் வந்து பாசத்தொடரை எல்லாம் வலி தெரியாமல் வந்து அரிப்பாள்...
🔥🔥🔥
பட்டரே ! உங்கள் அந்தாதி ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் + சௌந்தர்ய லஹரியின் தமிழாக்கம் என்று சொன்னால் அது மிகை ஆகாது
*பட்டர்* ... அப்படி சொல்ல முடியாது அவைகளை படைத்தவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள் ..
ஹயக்ரீவர் , வாக் தேவிகள் , அகஸ்தியர் , அவர் மனைவி லோபா முத்திரை ...
சௌந்தர்ய லஹரீ முதல் 40 பாடல்கள் ஈசனே இயற்றியது மீதி ஆதிசங்கரர் ...
நானோ நாய்த்தலையன் .. பேயன் ...
ஆனால் என் அறிவுக்கும் புரியும் வண்ணம் அவள் என் சொற்களில் வந்து தன்னை பொறுத்திக்கொண்டாள் என்று சொல்வதுதான் சரி ..
நான் .. பட்டரே உங்கள் தன்னடக்கம் புல்லரிக்கின்றது ...
பட்டர் .. சிரித்துக்கொண்டே என் சிந்தைக்குள் கரைந்து போனார்
👏👏👏🦜🦜🦜🌷🌷🌷
*பாடல் 10*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்;
எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே!
அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே!
அழியா முத்தி ஆனந்தமே!🍇🍇🍇
எழுதாமல் கேட்கப்படுவது மட்டுமான வேதத்தில் பொருந் தக் கூடிய அரும் பொருளாயும்,
சிவபிரானின் திருவருள் வடிவ மாயும் விளங்கும் உமையன்னையே!
நான் நின்றவாறும், இருந்தவாறும் படுத்தவாறும், நடந்தவாறும், தியானம் செய்வதும் உன்னை த்தான்;
என்றென்றும் மறவாமல் வழிபடுவதும் உன்னு டைய திரு வடித் தாமரையையேதான்.👍👍👍
*நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;*
TMS பாடிய ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது ..
நிற்பதும் நடப்பதும் உன் செயலாலே நிகழ்வதும் நினைப்பதும் உன் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
*காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே*
அது போல் நம்மால் நிற்க முடிகிறது என்றால் அது அவள் செயல் ..நிற்கும் போதும் , அமர்ந்திருக்கும் போதும் , நடக்கும் போதும் அவளையே நினைக்கிறேன் என்கிறார் பட்டர் ...
அதாவது வேறு எதைப்பற்றியும் நினைக்க நேரமில்லை ...என்கிறார் பட்டர் ...
நமக்கு அவளைத்தவிர மற்றவைகளை நினைக்க நிறைய நேரம் இருக்கிறது ... 🙏
அம்மா தாமரை மலர்களால் ஆன உன் திருவடிகள் மற்றும் நான் தினம் வணங்குவது .. அவை என் தலை மேல் பதிந்து உள்ளது ... என் சிந்தையுள் கலந்து உள்ளது ...
*ஒன்றும் அரும் பொருளே!*
எழுதா மறை ... வேதம் எழுதப்படுவதில்லை... சொல்லி கேட்க வேண்டிய ஒன்று ...
அவளும் இப்படித்தான் என்று எழுத முடியாது
அவளை... அவள் கருணையை அருளை அனுபவிக்க வேண்டும் ...
நாம் வேதத்தை உணர்ந்துகொண்டால் அங்கே அவளும் அதனுடன் பொருந்தி அர்த்தமாக வந்திடுவாள் 🙏🙏🙏
*அன்றும் பிறந்தவளே!*
அவள் பக்தர்களுக்கு அருள் புரிவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை .. பகைவர்களுக்கும் அருள் செய்பவள் .. உதாரணம் கம்சன்
அவளுக்கு *உமை* என்ற நாமம் மிகவும் ப்ரீத்தி .
*இமயத்து அன்றும் பிறந்தவளே*
அவள் நமக்காக அவதாரங்கள் எடுத்துக்கொண்டு தான் இருக்கிறாள் ..
இமாவான் மகளாக
பாண்டிய ராஜன் மகளாக
மதங்கினி முனிவரின் மாதவச் செல்வியாக ...
பட்டர் அதனால் அன்றும் பிறந்தாய் இன்றும் பிறக்கிறாய் என்றும் பிறப்பாய் என்கிறார்
அவள் தரும் ஆனந்தம் அழியாத முக்தியை தரவல்லது அதற்கு ஈடு இணையே இல்லை 🙏🙏🙏
11வது பாடல்
*ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,*
இல்வாழ்க்கையில் இன்பம் பெற
*கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம்*
தியானத்தில் நிலைபெற, மனதில் உள்ள சஞ்சலங்கள் மறைந்திட
*பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்*
வைராக்கிய நிலை எய்த
அன்னபூர்ணே ஸதாபூர்ணே
சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்கிய ஸித்யர்த்தம்
பிக்ஷாம் தேஹிச பார்வதி !!!🥇🥇🥇
*வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;*
தலைமை பெற, உயர்ந்த நிலையை அடைய
*தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்*
பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
*பாடல் 11*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
ஆனந்தமாய்
என் அறிவாய்,
நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள்,
மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம்
தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம்
எம்பிரான் முடிக்கண்ணியதே.👍👍👍🥇🥇🥇
வானம் இறுதியாயுள்ள பஞ்சபூதங்களுக்கும் முடிவாக நிற்கும் தேவியின் திருவடித் தாமரை,
நான்கு வேதங்களுக்கும் எல்லையாய் நிற்பது,
வெண்ணிறச் சாம்பல் படர்ந்த மயானத்தைத் தாம் ஆடல் நிகழ்த்தும் இடமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்பட்ட மாலையாயும் திகழ் கிறது.🙏🙏🙏
அவளே அழியாத பேரானந்தம் ... மற்ற எந்த ஆனந்தத்திற்கும் முடிவு உண்டு ..
ஆனால் அவளே பரமானந்தமாய் இருக்கும் போது அவள் தரும் ஆனந்தத்திற்கு முடிவு எது எல்லை ஏது ? 👌👌👌
அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்
முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் –
அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் – 👍👍👍
அவள் பரமானந்தம் என்பதை நான் எப்படி உணர்ந்து கொள்ள முடியும் ?
கண்ணன் தன் விஸ்வரூப தரிசனத்தைக்காட்டும் முன் அர்ஜுனனுக்கு அதை பார்க்கக்கூடிய கண்களை தந்தானாம் ...
அதுபோல் அவள் பரமானந்தம் என்று உணரக்கூடிய அறிவாகவும் அவளே வருகிறாள் அவள் தரும் ஞானத்தால் அறிவாள் அவள் தான் பரமானந்தம் என்பதை உணரலாம் . 👏👏👏
ஒரு பாத்திரத்துக்குள் மிகுவும் சுவையான நெய் மணம் கமழும் சக்கரைப்பொங்கல் சுட சுட இருக்கிறது அந்த பாத்திரம் மூடி போட்டுள்ளது ... எப்படி சாப்பிடுவோம் ? மூடியைய் எடுத்து விட்டு அதை தட்டில் போட்டு சூடு ஆற சாப்பிடுவோம் அல்லவா ...
அது போல நம் உள்ளத்தில் அமுதமாய் இருக்கிறாள் ... அதை அஞ்ஞானம் எனும் மூடி போட்டு மூடி வைத்துள்ளோம் ..
அந்த மூடியை எடுத்து விட அவள் அருள் வேண்டும் ..
எடுத்துவிட்டால் வேண்டும் அளவிற்க்கு அமுதமும் ஆன அவளை பருகலாம். 🥇🥇🥇
பேரானந்தமான அமுதமும் ஆன அவள் வானமே எல்லை என்று உயர்ந்து நிற்கிறாள் ...
அந்த அளவிற்கு அவள் விஸ்வரூப தரிசனம் நம் எல்லோருக்கும் கிடைக்கிறது 👏👏👏
இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை அழைக்க வரும் போது அஞ்சேல் என்று குரல் ஒன்று வந்தது என்ன அதிசயமோ ...
முன் பிறவி செய்த புண்ணியது ஏது அறிகிலேன் ...
சொல்லும் பொருளும் என நடமாடும் தெய்வம் ஒன்று மதி வானவர் தம் செல்வமெல்லாம் , அழியா முத்தியுடன் வீடும் எனக்கே அளித்தது என்ன அருளோ ?
மணம் வீசும் பாதங்கள் வலிய வந்து என் சென்னி தனில் பதிந்தது நான் செய்த மா தவமோ ?
ஒன்றும் அறிந்திலேன் ... உள்ளம் மட்டும் ஹர ஹர சங்கர என்று முரசு கொட்டிக்கொண்டிருக்க மனம் உன் வசமானது என் பெற்றோர் செய்த பாக்கியமோ ?👌👌👌
என் செவியெல்லாம் இறைகானமாய் ஒலித்திருக்க
கண்களெல்லாம் உங்கள் படைப்பால்
ஒளிந்திருக்க
ஒளிந்திருந்த ஒப்பற்ற பக்தி என் மனமெல்லாம் வழிந்திருக்க
உங்கள் படைப்புகளை காண நான் விழித்திருக்க
உங்கள் மொழி காண வரும் வழி விழித்திருக்கிறேன்
(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)
ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது
முகத்தில் வேதனை. அது அவர் வளர்க்கும்
நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.
தாங்க இயலாத செல்வந்தருக்கு மனதில் ஒரே வழி தான் தோன்றியது. காஞ்சி மகானே கதி என்று இருக்கும் அந்த பக்தர், மனதில் நம்பிக்கையுடன் தன் செல்ல நாயுடன் காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தார்.
"
வேண்டாம். நானே அங்கே வர்ரேன்" என்று அந்த ஜீவகாருண்ய மகான், மெதுவாய் ஸ்ரீமடத்தின் வாசலில் கார் நிற்குமிடத்திற்கு வந்து நின்றார்.
"கார் கதவை திறந்து விடுங்கோ" என்று மகான் சொல்ல, கதவு திறக்கப்பட்டதும் நாய் எதற்கோ கட்டுப்பட்டது போல் மெதுவாக காரை விட்டு இறங்கி நின்றது.
"செருப்பு இருக்கா?" என்று பெரியவர் கேட்டுவிட்டு,
"
செல்வந்தருக்கும், அங்கே இருந்த அனைவருக்கும் இந்த மகிமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.
"திருடங்க வந்தா மந்திர சக்தியாலே நாயை கட்டிப் போட்டுடுவா. தோல் செருப்பாலே அதை போக்கிடலாம்" என்று சொல்லிவிட்டு ஸ்ரீமடத்தில் நுழைந்தார்.
இந்த ஒரு மாபெரும் தெய்வத்திடம் நாம் கொள்ளும் சரணாகதி, நமக்கெல்லாம் நல்கதி நல்கி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் அள்ளி வழங்குமென்பது சாத்யமல்லவா?.
*kn*
Hara Hara Shankara, Jeya Jeya Shankara.🙏🙏
சிவனடியார் என்றால் யார்?
இவ்விரண்டுமே ஒன்றுபோல தான் தெரியும்.
ஆனால் சிவபக்தனுக்கும் சிவனடியாருக்கும்
சில வேறுபாடுகள் உள்ளன.
என்பதை உணர்ந்ததுண்டா?
எதையும் செய்ய துனிந்தவன் அடியார்.
2)சிவனை வணங்குபவர் பக்தன்.
சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.
3)உடல் தூய்மையாக இருந்தால்
மட்டுமே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.
உடலை ஒரு பொருட்டாக கருதாமல்,
மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.
4)அர்ச்சனை செய்வதற்காக கோயில் செல்பவர் பக்தன்.
ஈசனை போற்றி பாடி ஆனந்தமடைய கோயில்
செல்பவர் அடியார்.
5)அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.
6)மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர்
ஈசன் என்று நினைப்பவர் பக்தன். ஈசனை அடைய
மனமும் மொழியும் தடையில்லை, ஆக
மறையும் முறையும்
எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.
7)கூட்டத்தோடு கூட்டமாக
இறைவனை காண்பவர் பக்தன். .
கூட்டம் போனபின்
ஈசன் அழகை தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.
8)ஈசனை அடைய சுத்தமாக இருக்கவேண்டும்
என நினைப்பவர் பக்தன். சுத்தத்தை பெரிதாக எண்ணாமல் சித்தத்தை
சிவன்பால் வைப்பவர் அடியார்.
9)வாழ்வில்
ஒரு பகுதியை வழிபாடுக்கு செலவு செய்பவர்பக்தன்.. வாழ்வையே வழிபாடாக கொண்டவர் அடியார்.
சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம். சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்.,,
திருச்சிற்றம்பலம் !
*திருச்சிற்றம்பலம்*
நான்செய்த புண்ணியம் என்னுரைப் பேன்பொது நண்ணியதோர்
வான்செய்த மெய்ப்பொருள் என்கையிற் பெற்றுமெய் வாழ்வடைந்தேன்
கோன்செய்த பற்பல கோடிஅண் டங்களும் கூறவற்றில்
தான்செய்த பிண்டப் பகுதியும் நான்செயத் தந்தனனே.
_- அனுபவ நிலை
கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்
கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்
எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே
இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்
மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்
மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது
பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்
பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.
- அனுபவமாலை
*திருச்சிற்றம்பலம்*
🟤🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟤
🟤கற்ற நல்ல விஷயத்தை வாழ்வில் பின்பற்றா விட்டால் கல்வி கற்றதால் பயனில்லாமல் போய் விடும்.
🟤நம்முடைய வாழ்க்கை மட்டும் தான் போராட்டமாக இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். பலரது வாழ்க்கையும் துயரங்கள் நிறைந்தது தான் என்பது உண்மை நிலை.
🟤பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் சந்தோசப் பட வேண்டும். அதை விட்டு விட்டு பிரச்னைக்கான காரணத்தை அறிய முற்பட்டால் நம் நிம்மதி பறி போய் விடும்.
🟤யாரையும் சொல்லாலும் செயலாலும் காயப் படுத்தாமல் இருப்பதே உயரிய வாழ்வுக்கு வழி.
🟤🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🌗🟤
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
தவள நிறக் முத்துக்களோ உன் புன்சிரிப்பு
கோடி மின்னல்கள் தோற்குமோ உன் கண் ஒளியினில்
காரரூணியமும் கண்ணோட்டமும்
சொல்லும் பொருளும் போல் ,
கர்ணனின் கவச குண்டலங்கள் போல் உன் உடன் பிறந்தவையோ ?
காமாக்ஷி ஈன்ற பிள்ளையோ காமேஸ்வரன் கண் திறந்த அக்னி குழம்போ
கற்பனைக்கும் எட்டா உன் கருணை கண்டே என் மனமும் விழியும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை ..
உள்ளத்தில் விளையும் கள்ளே , களியின் களிப்பே ..
உலகத்திற்கு ஜகத்குரு எனும் அரும் மருந்தே ...
*பதிவு 1004*🥇🥇🥇🏆🏆🏆💐💐💐💐💐💐💐
*US 995*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
*க்வசிதபி ரதி ஸதலலிதம் தைவம்*
கோடி ரதிகள் ஒன்று சேர்ந்தாலும் அவள் அழகுக்கு ஈடு செய்யமுடியாது
*க்வசிதபி ஸூதராம் சண்டம் தைவம்*
சண்டியாகவும் இருப்பாள் ..
*பக்தம நோநுக வேஷம் தைவம்*
பக்தர்கள் எல்லா தெய்வங்கள் மூலமும் காண்பது அவளையே
*யோகி மனோனுக விபவம் தைவம்*
எல்லோரும் போற்றும் தாய் அவள் ஒருவளே
*பதிவு 421*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
95
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
மந்தாகிநீ பயஸி தே குடிலம் சரிஷ்ணு
காமாக்ஷி கோபர பஸாத்வல மான மீன
ஸந்தே ஹமங்குரயதி க்ஷணமக்ஷிபாத 👏👏👏
எனவே தப்த குண்டத்தில் பக்தர்கள் நீராடுகிறார்கள்.
இந்த குண்டத்தில் வெந்நீர் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிசய மாற்றம் எப்படி நடக்கிறது என்பது இதுவரை யாராலும் அறியப்படவில்லை.
அக்னி பகவான் ஒரு முறை நெய் அதிகமாக உண்டமையினால் அஜீரணம் உற்றார்.
அதனை பொறுக்க முடியாத அக்னி பகவான் விஷ்ணுவை நோக்கி தவம் புரிந்தார்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
योजनानां सहस्रं तु शनैर्गच्छेत् पिपीलिका ।
आगच्छन् वैनतेयोपि पदमेकं न गच्छति ॥
யோஜநாநாம் ஸஹஸ்ரம் து ஶநைர்கச்சேத் பிபீலிகா ।
ஆகச்சந் வைநதேயோபி பதமேகம் ந கச்சதி ॥
நாம் எவ்வளவு வேகமாக இருக்கிறோம், என்ன திறமைகள் மற்றும் பலங்கள் நிறைந்ததாக இருக்கிறோம் என்பது முக்கியமல்ல, அவற்றைப் பயன்படுத்தாவிட்டால். ஒருபோது நமக்கு திறமையானது பயன்படாது,
எறும்பானது என்னதான் மெதுவாக பயணித்தாலும் தொடர்ந்து பயணித்தால் நீண்ட தூரம் கூட பயணிக்க முடியும் , சிறப்பாக பறக்கும் கழுகோ ஒரே இடத்தில் உட்கார்ந்து கணவுகண்டு கொண்டு இருந்தால் அப்படியே உட்கார்ந்து கொண்டு இருக்க வேண்டியது தான்.
*தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்* என்பது வள்ளுவர் வாக்கு.
*ஸுபாஷிதம்*
கர்ணன் போல் கொடுத்தவன்
கர்ணணுக்கு முன்னவன் கும்பகர்ணன்
இராவணனுக்கு இராமன் யாரென காட்டியவன்
நஞ்சுண்ட மனமது
அபிராமி நெஞ்சுண்டதால்
தஞ்சம் உண்டானது
பழி கொண்ட வழியெல்லாம் சூனிய சுழி கண்டு
மழித்து போன மகிழ்சியோடு
மனம் போன போக்கில்
குணமதை குழியிலிட்டு
சினமதை சிரசில் வைத்து
பணமதை பணபோதையாக்கி
தீவினைதனில் மேதையாகி
இகபர சுகமே பாதையாகி
பரிதவித்த எனக்கு
அபிராமி எனும் அமிர்தம் அருளிய ஆண் அபிராமியே நன்றி🙏🙏
*பாடல் 62* 🌸🌸🌸🙏🙏🙏
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
அதற்கு அபிராமி என்ன , எப்படி பரிசு கொடுத்தாள் என்பதை கவி நயத்தோடு சொல்லும் பாடல் . 🎼🎼🎼
தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன்
மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி
கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே👣👣🦜🦜
அது மட்டுமா? மன்மதனை வென்றதால் மன்மதன் வைத்திருந்த கரும்பு வில்லும் , மலர் கனைகளும் , கிளியும் ஈசனிடன் வந்து விட்டன .
இப்பொழுது ஈசன் தோற்று போனதால் அவை மூன்றும் காமாக்ஷியிடம் வந்து சரண் அடைந்தன ...
அதற்காக ஈசன் வென்ற மற்ற மகத்தான காரியங்களை கொண்டாடாமல் இருக்க முடியாதே ...
என்ன வெல்லாம் ஈசன் பராக்ரமங்கள் செய்தான் அம்பிகை பூரிப்பும் இருமார்ப்பும் அடைய ... பார்ப்போம்
🦜🦜🦜👏👏👏🎼🎼🎼
அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர்.
பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
இதற்கு புராணத்தில் சதயபுரி, பர கைலாசம், ஞானபூமி என்ற பல பெயர்கள் வழங்குகின்றன.
கல்வெட்டுகளில் வழுகூர் என்று காண்கிறது.
இங்குள்ள கோயில் பிரமாண்டமானது. முன் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமும் ஐந்து கண்களும் கொண்டது.
திருக்குளம் ஈசான தீர்த்தம் மிகவும் பெரியது.
சுவாமி, அம்மன் சந்நதிகள் தனித்தனியாக உள்ளன.
தல விருட்சங்கள் - தேவதாரு, வன்னிமரம்.
சுவாமியின் பெயர் *வீரட்டேசுவரர்* , *கிருத்திவாஸேசுவரர்* (யானையின் தோலைப் போர்த்தியவர்) என்றும் பெயருண்டு.
அம்பிகை - *பாலாங்குராம்பாள்* . இவருக்கு - *கிருபாவதி* என்றும் பெயர்.
கல்வெட்டுகளில் சுவாமியின் பெயர் வீரட்டானம் உடையார், வழுவூர் நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரானின் ஐந்து முகங்கள் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
பெருமானே தீர்த்தமாக விளங்குகிறார் என்பது ஐதீகம்.
அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது.
யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும் வண்ணம் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார் பெருமான்.
இது நவதாண்டவங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது.
சிதம்பரத்தில் “சிதம்பர ரகசியம்’ எனச் சொல்லப்படும் ரகசிய பிரதிஷ்டை அமைந்திருப்பது போல் இங்கும் கஜ சம்ஹார மூர்த்திக்குப் பின்னே ரகசிய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஜ சம்ஹார மூர்த்தியின் உள்ளங்காலை தரிசிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுகின்றார்கள்.
சகஸ்ர லிங்க மூர்த்தி இந்தக் கோயிலில் சிறப்பானது.
ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் உள்ளன.🙏🙏🙏
சிவபெருமான் அவனைக் கொன்று அவன் தோலை கிழித்துப் போர்த்திக் கொண்டார் என்பது புராண வரலாறு.
தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தி இல்லாமல் செருக்குடன் இருந்தனர்.
அவர்கள் கர்வத்தை அடக்க பெருமான் வசீகரிக்கும் தோற்றத்துடன் அவர்களின் முன்பாகச் சென்றார்.
முனிவர்கள் அவரைக் கொல்ல நினைத்து யாகம் செய்து பலபொருள்களை அவர்மீது ஏவினார்கள். அவற்றையெல்லாம் அழித்தும், ஏந்தியும் அவர்களின் செருக்கை அடக்கினார்.
அவர்கள் பெருமானை வேண்டவே, அவர்களுக்கு ஞானோபதேசம் செய்தார்.🙏🙏🙏
இந்த கதையை நாம் ஏற்கனவே அறிவோம் ... அகந்தை , ஆணவம் , ஆடம்பரம் என்ற மூன்று அரக்கர்களை தன் சிறிய கொவ்வை செவ்வாயினால் புன்னகைத்து அழித்தார் ஈசன் .. அம்பாள் கரும்பை வில்லாக வைத்துள்ளாள் ஈசனோ மேருவை வில்லாக வைத்துள்ளார் ...
*தானவர் முப்புரம் சாய்த்து -* திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி
*மத வெங்கண் கரி உரி போர்த்த* -
மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட
*செஞ்சேவகன்* - சிவந்தவனாம் சிவபெருமானின்
*மெய்யடையக்* - திருமேனியை அடைய
*கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி* -
அம்பாள் இப்படிப்பட்ட வீரனுக்கு என்ன பரிசு கொடுத்தாள் தெரியுமா ? ஆலிங்கனம் ... உடல் எங்கும் அவள் கொடுக்கும் அன்பு சின்னங்கள் ...
*கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே* -
சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்க வேண்டும் 🦜🦜🦜
இங்குதான் அன்னையின் ரூப லாவண்ய வர்ணனை ஆரம்பம்.
இதை செளந்தர்ய லஹரி 4ஆம் ஸ்லோகத்தில் விளக்கியிருக்கிறார் சங்கரர்.
அன்னையின் கையில் இருக்கும் நான்கு ஆயுதங்களை சொல்லும்போது பின்வருமாறு கூறுகிறது சஹஸ்ர நாமம்.
மனோரூபேக்ஷீ கோதண்டா
பஞ்சதன்மாத்ர ஸாயகா.🙏🙏🙏
*செஞ்சேவகன்* - சிவந்த, சேவை செய்பவன்; சிவந்த வீரன்;
இங்கே சேவை செய்பவன் என்பதை விட வீரன் என்ற பொருள் மிகவும் பொருந்தும் .
மேரு என்னும் வில்லைக் கொண்டு முப்புரம் எரித்து மதயானையின் தோலைப் போர்த்திய சிவந்த சேவகன் என்னும் போது வீரன் என்பது பொருந்தும் பொருள்.
அடுத்த வரிகளில் அம்மையின் திருமேனி அழகையும் காமன் அம்புகளையும் பேசியதால் அம்மைக்குச் சேவை செய்யும் செஞ்சேவகன் என்றாலும் சரியே.🌝🌝🌝
*பதிவு 5* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 8*
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்* சிந்தூர வண்ணப்பெண் , பசுங்கொடி , பரிமளை, யாமளை உங்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய அபிராமியை வேண்டுகிறேன்
இன்று என்ன கேள்விகள் ?
*நான்* உங்கள் 78 வது பாடலில் அப்படி என்ன விசேஷம் மற்ற பாடல்களில் இல்லாத தனித்தன்மை என்ன இருக்கிறது ? .. அம்பாள் உருகி ஓடி வர ...
*பட்டர்* பாடலை கூர்ந்து கவனித்தாயா?
இல்லை பிறர் படிப்பதை போல மேலாக படித்துவிட்டு சொல்கிறாயா ?
*நான்* .. நான் புரிந்து கொண்ட அளவில் சொல்கிறேன் . பிழையாக இருந்தால் மன்னிக்கவும் . உங்கள் பாடலை குறை சொல்லும் அருகதை எவர்க்கும் இங்கு இல்லை ..
நாங்களாக இருந்திருந்தால் அபிராமியை திட்டி தீர்த்திருப்போம் ..
🙏🙏🙏
விழிக்கே அருளுண்டு;
அபிராமவல்லிக்கு வேதம்சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு;
எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று எம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டினியே.??
இது தான் அந்த பாடல் அவள் விழிகள் அருள் ததும்பும் விழிகள் ..
அந்த தடாகத்தில் அவள் காவலாளிகள் மீன்களாய் அங்கும் இங்கும் சென்று காவல் காக்கின்றனர் ...
என்ன காவல் தெரியுமா ?
யார் தாயே காப்பாற்று என்று குரல் கொடுக்கிறார்களோ
அவர்களை பார்வையில் பிடித்து ராஜ ராஜேஸ்வரியாய் , சிம்மாசனேஸ்வரியாய் செந்தூரம் திலகம் இட்டு மறைகள் நாறும் பரிமளமாய் வீற்றிருக்கும் அபிராமியிடம் ஒப்படைத்து இவனுக்கு உன் கடாக்ஷம் வேண்டும் என்று சொல்கின்றனர் ... உடனே அவ்யாஜ கருணா மூர்த்தியாய் அவள் கருணை புரிகிறாள் ... அழியா அரசும் , செல்லும் தவ நெறியும் சிவலோகமும் தருகிறாள் ..
🙏🙏🙏
ஈசனின் அங்கத்தில் பாதியாகவும் வாழ்கிறாள் 🦜🦜🦜
இப்படி அருள் மழை அவள் என் மீது பொழியும் போது கீழே கொழுந்து விட்டு எரியும்.. நெருப்பு ,
சரபோஜி மன்னனின் அகங்கார பார்வை ,
கூடி இருக்கும் கூட்டத்தின் கேலி கிண்டல்கள் எதுவுமே என் கண்களில் பட வில்லை ..
இப்படி ப் பட்ட கயவர்களுடன் இனி எனக்கு என்ன உறவு வேண்டும் ?
அம்மா நீ தான் வேண்டும் ..
நீ பௌர்ணமியை இந்த கயவர்களுக்கு காட்ட வில்லை என்றால் என்னை கொண்டு போய் வானத்தில் நிலவாக்கு ..
இந்த மனித வாழ்க்கை வேண்டாம் என்று பாடினேன் ..
அவளால் இதற்கும் மேலே பொறுக்க முடியவில்லை ..
பூர்ண நிலவாய் இருண்ட வானில் அமுதை அளவின்றி பொழிபவளாய் வந்தாள் ... 🌕🌕🌕
Here is a very good explanation about Neivedyam to God.
Does God come and eat our offerings?
Many of us could not get proper explanation from our elders.
An attempt is made here.
A Guru-Shishya conversation:
The sishya who doesn't believe in God, asked his Guru thus:
"Does God accept our *'neivedhyam'* (offerings)?
If God eats the *'prasaadham'* then from where can we distribute it to others?
Does God really consume the 'prasaadham', Guruji?"
The Guru did not say anything.
Instead, asked the student to prepare for classes.
That day, the Guru was teaching his class about the 'upanishads'.
He taught them the *'mantr'* : *"poornamadham,* *poornamidham,*
*poornasya poornaadaaya..."*
and explained that :
*every thing came out from "Poorna" or Totality.*
( Ishavasya upanishad ).
Later,
Everyone was instructed to practice the mantra byheart.
So all the boys started practising.
After a while,
The Guru came back and asked that very student who had raised his doubt about Neivedyam to recite the mantra without seeing the book,
which he did.
Now the Guru gave a smile and asked this particular shishya who didn't believe in God :
'Did you really memorize everything as it is in the book?
The shishya said : "Yes Guruji, I've recited whatever is written as in the book.
The Guru asked: "If you have taken every word into your mind then how come the words are still there in the book?
He then explained:
The words in your mind are in the *SOOKSHMA STHITI* (unseen form).
The words in the book are there in the *STHOOLASTHITI* (seen).
*GOD* too is in the *'sooksma sthiti'.*
The offering made to Him is done in *'sthoola sthiti'.*
Thus,
God takes the food in *'sookshmam'*, in *sookshma stithi.*
Hence the food doesn't become any less in quantity.
While GOD takes it in the *"sookshma sthiti",*
We take it as *'prasadam'* in *'sthoola sthiti'.*
Hearing this the sishya felt guilty for his disbelief in God and surrendered himself to his *GURU.*
When Bhakti enters Hunger, the Hunger becomes a *Fast…*
When Bhakti enters Water, that Water becomes *Tirtham…*
When Bhakti enters Travel, the Travel becomes a *Pilgrimage…*
When Bhakti enters Music, the Music becomes *Kirtan…*
When Bhakti enters a House, the House becomes a *Temple…*
When Bhakti enters Actions, those Actions become *Services…*
When Bhakti enters in Work, the Work becomes *Karma…*
When Bhakti enters a person, that person becomes *Human…*
*பொன்னூசல் ஆடி அருளும் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஆரம்பம்* இன்று 15.06.2021 மாலை முதல்-
🍃🌷 *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலல்*🍃🌷
🍃🌷 *Madhurai Sri meenkshi Sundareswarar Temple*🌷🍃
Aani Oonjal(swing) sevai Started from today 15.06.2021
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாராயணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை
ஆரா அமுதின் அருள் தாளிணைப் பாடிப்
போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ- மணிவாசக பெருமான்.
✨✨✨✨✨✨✨✨✨ 🌙சொக்கே🌟 நின் தாளே👣 துணை🙏🏻
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*🔷பிரச்சனைகளை தூரத்தில் வைத்துப் பழகுங்கள்.*
*நிம்மதியை பக்கத்தில் வைத்துப் பாருங்கள்.*
*அற்புதமான வாழ்வில் அமைதி வரும் .*
*🔷"உங்களை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்..*
*விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்.*
*🔷நாம் எதிர் பார்த்து காத்திருந்தால் எதுவும் நடக்காது.*
*நாம் எதிர் பாராத நேரத்தில் அது நடக்கும்.*
*அது தான் இறைவனின் செயல்.*
*இறைவனையே நம்புங்கள்.*
*அவர் நீங்கள் எதிர் பாராத நேரத்தில் எதிர் பார்த்ததை விட மேலானவற்றையும் தந்து உங்களை மகிழ்விப்பார்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
*பதிவு 1005*🥇🥇🥇🏆🏆🏆💐💐💐💐💐💐💐
*US 996*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
அவளுடைய நாமங்களை நினைப்பவர்களுக்கு, சரிதம் கேட்பவர்களுக்கும் இனிமையானவள் .. தேன் போல் தித்திக்கக் கூடியவள் 🥇
*சரணே மதுரம் நமதாம் தைவம்* 8
அவளை சரண் அடைந்தவர்களுக்கு மிகவும் இனிமளியானவள் . தேன் போல் தித்திக்கக் கூடியவள்
*அதரே மதுரம் ஸ்ம்போர் தைவம்*
பதியான பரமேஸ்வரனின் உதடுகளில் தேனாக இருப்பவள்
*மம து ஸதந்யே மதுரம் தைவம்*
என் கண்களுக்கு அவள் பத்ம பாதம் தருபவளாக இருக்கிறாள் அங்கே தேன் அருவியாக கொட்டுகிறது . 👏👏👏
*பதிவு 422*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
96
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
சஞ்சத் ஸிதச் ரவண சாமர சாதுரீக
ஸ்தம்பே நிரந்தரம் அபாங்கமயே பவத்யா
பத்தச் சகாஸ்தி மகரத் வஜ மத்தஹஸ்தீ🥇🥇🥇
அதில் பக்தர்கள் ஸ்நானம் செய்வதால் அவர்களுடைய பாவமெல்லாம் கறைந்துவிடும் என்றும் அதே சமயம் அக்னி பகவானின் அஜீரணமும் நீங்கும் என்றும் கூறினார்.
அது முதல் அக்னி பகவான் பத்ரி நாராயணரின் திருவடியிலிருந்து நீர்த்தாரை தாரையாகப் பிரவேசித்து சப்த குண்டலத்திலிருந்து விழுந்து பின்னர் சிதள குண்டத்தை அடைகின்றது.
உடல் ஏற்கும் அளவிற்கு சூடாக உள்ள இந்த நீர் குண்டத்திற்கு அருகில் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ஜில் என்று அலக்நந்தா நதி பெருக்கெடுத்து ஓடுவது வியப்பாக உள்ளது.
உலகில் நடைபெறாத அதிசயங்களில் இதுவும் ஒன்றாகும்.🙏🙏🙏
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
போய் அவர்களோடு போரிட்டு வென்று திரும்பி வருவேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை.
ஊழ்வினை என் கழுத்தைப் பிடித்துத் தள்ளுகிறது.
ஆகையால், போரில் நான் இறப்பேன்.
அங்ஙனம் நான் இறப்பேனானால், சீதையை உன் நன்மை கருதி விட்டுவிடுதல் நன்று.
இன்னொன்றும் புரிந்து கொள்!
உன் மகன் இந்திரஜித்தும், இலக்குவன் கை வில்லினால் இறக்கப்போவது நிச்சயம்.
உன் படைகள் காற்றில் பட்ட சாம்பல் போல சிதறப்போவதும் நிச்சயம்.
பிறகு உனக்கு ஏற்படப் போகும் முடிவை அறிந்துகொண்டு, நன்மை பயப்பனவற்றைச் செய்ய முயற்சி செய்!" என்றான்.
"என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயருதல் உண்மை;
ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை;
அப்பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் நன்றரோ".🙏🙏🙏
*பதிவு 6* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 9*
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்*
சகல கலா வள்ளி , களாப மயில் , மகுடன் தலைமேல் பாதம் பதித்த அந்தரி உங்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய அபிராமியை வேண்டுகிறேன்
இன்று என்ன கேள்விகள் ?
*நான்*
தாங்கள் ஈன்று எடுப்பாள் ஒரு தாயும் இல்லை என்று சொன்னீர்கள் .
இதன் தாத்பபரியத்தை இன்னும் கொஞ்சம் அடியேனின் அறிவின் அளவிற்கு புரியும் படி விளக்கி சொல்ல முடியுமா ? 💐💐
சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய சொல் இது ... புரியவில்லை என்கிறாய் ...
இறைவனை உணர்வு பூரமாக வழிபட வேண்டும் ..
பாவம் ( bhavam) வேண்டும் ..
நம்மாழ்வார் கண்ணனுக்கு அமுதம் படைக்கும் போது தனது அங்கவஸ்த்திரத்தால் கண்ணன் சாப்பிட்டவுடன் துடைத்து விடுவார் ..
கண்ணன் உதடுகளில் இருந்து பால் வழிந்து கொண்டே இருக்குமாம் ...
இது தான் பாவம் ( bhavam) ..
இறைவன் உண்மையில் இருக்கிறான் என்ற நம்பிக்கை வேண்டும்.
பயத்தினால் , மூட நம்பிக்கையினால் அவனை வணங்குவது பக்தி அல்ல ..
கடவுள் வழிபாடு என்பது உன் ஆத்மாவிற்கு நீ போடும் தார் road ...
அது உனக்கு மட்டுமே சொந்தம் ..
பிறருக்காக பக்தியுடன் இருப்பதாக காட்டிக்கொள்வது ,
பயத்தில் விரதம் இருப்பது ,
இவ்வளவு ஸ்லோகங்கள் தினம் சொல்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வது இவைகள் பகல் வேஷங்கள் .
உணர்வு பூரமான பக்தி இல்லை ...🙏🙏🙏
சரி உன் கேள்விக்கு வருகிறேன் .
தாய்மை உணர்வு இல்லாத எந்த உயிரும் இறந்த உடலுக்கு சமம் .
மிருகங்கள் பறவைகள் செடி கொடிகள், மரங்கள் எல்லாவற்றிருக்கும் தாய்மை உணர்வு உண்டு
ஆனால் அவை நீடிப்பதில்லை பிறவி முடியும் வரை ..
முட்டையில் இருந்து குஞ்சு வரும் வரைதான் தாய்மை நீடிக்கும்
அதற்கு பிறகு சில காலங்கள் இருக்கலாம்
பிறகு அவைகள் யாரோ அவைகளின் தாய் தந்தையர் யாரோ ...
மனித பிறவியில் கொஞ்சம் கூடுதலான தாய்மை உணர்வு உண்டு ..
இந்த பிறவி முடியும் வரை தாயும் நம்மை நினைப்பாள் நாமும் அவளை நினைப்போம் ..
இந்த பிறவி முடிந்தவுடன் அவள் யாரோ நாம் யாரோ ..
அடுத்த பிறவியில் அவள் நம்மை தேடுவதில்லை நாமும் அதற்கு வருத்தப் படுவதில்லை ...
ஆனால் என் அபிராமி நாம் கர்ம வினையினால் எடுக்கும் ஓவ்வொரு பிறவிக்கும் அவளே தாயாக வந்து தாய்மை உணர்வை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்துகிறாள்..🥇🥇🥇
இதுதான் அவளுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம் ...
அந்த *கை* யை வணங்கினால்
நம்பிக் *கை* பிறக்கும் தும்பிக் *கை* உடையோன் அருளால் அம்பி *கை* வந்து நம் சென்னியில் பாது *கை* பொறுத்த
புன்ன *கை* நிறைந்த வாழ்க் *கை* மலரும்
*நான்*
அருமை பட்டரே ... அவள் பெருமை என் சிறுமையை அழித்தது ..
கருமை கொண்ட பூங்குழலாள் என் வறுமை கொண்ட மனமதை மேன்மையாக்கட்டும்
*பட்டர்* ... பார்ப்போம் நாளை அவள் அருள் இருந்தால் ...
பறந்தார் வானில் .... நான்மறையும் தானந்தமாய் கொண்ட அபிராமியிடம் ... 🥇🥇🥇
இனி எண்ணவதற்கு சமயங்கள் உண்டோ ?
ஈன்றடுப்போர் ஒரு தாயும் உண்டோ ?
மறவேன் உன் பாதங்கள்
மறந்து போனால் வாழ்விலேன் ஒரு நொடியும் ...
பிறவேன் இனி ஒரு முறை உன் பத்ம பாதங்கள் பற்றிய பின் ..
தேடேன் இனி ஒரு தாய் வயிற்றை ..
பணியேன் இனி ஒருவர் உன் பத்மபாதம்
பணிந்த பின்னே ..
உன் பெருமை தனை பேசாத கயவர்கள் கூட்டம் இனி சேரேன்.
ஆனந்தமே ! ஆரமுதே .. என் அறிவுக்கும் நீ அளவானது அதிசயமே !!💐💐💐
*பாடல் 62* 🌸🌸🌸🙏🙏🙏
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
அதற்கு அபிராமி என்ன , எப்படி பரிசு கொடுத்தாள் என்பதை கவி நயத்தோடு சொல்லும் பாடல் . 🎼🎼🎼
தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன்
மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி
கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே👣👣🦜🦜
அது மட்டுமா? மன்மதனை வென்றதால் மன்மதன் வைத்திருந்த கரும்பு வில்லும் , மலர் கனைகளும் , கிளியும் ஈசனிடன் வந்து விட்டன .
இப்பொழுது ஈசன் தோற்று போனதால் அவை மூன்றும் காமாக்ஷியிடம் வந்து சரண் அடைந்தன ...
அதற்காக ஈசன் வென்ற மற்ற மகத்தான காரியங்களை கொண்டாடாமல் இருக்க முடியாதே ...
என்ன வெல்லாம் ஈசன் பராக்ரமங்கள் செய்தான் அம்பிகை பூரிப்பும் இருமார்ப்பும் அடைய ... பார்ப்போம்
🦜🦜🦜👏👏👏🎼🎼🎼
அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்று, வழுவூர்.
பிரளய காலத்தில் உலகமெலாம் அழிந்தும், அவ்வூர் அழியாமல் வழுவியதால் வழுவூர் என்று பெயர் ஏற்பட்டது.
இதற்கு புராணத்தில் சதயபுரி, பர கைலாசம், ஞானபூமி என்ற பல பெயர்கள் வழங்குகின்றன.
கல்வெட்டுகளில் வழுகூர் என்று காண்கிறது.
இங்குள்ள கோயில் பிரமாண்டமானது. முன் ராஜகோபுரம் சுமார் 150 அடி உயரமும் ஐந்து கண்களும் கொண்டது.
திருக்குளம் ஈசான தீர்த்தம் மிகவும் பெரியது.
சுவாமி, அம்மன் சந்நதிகள் தனித்தனியாக உள்ளன.
தல விருட்சங்கள் - தேவதாரு, வன்னிமரம்.
சுவாமியின் பெயர் *வீரட்டேசுவரர்* , *கிருத்திவாஸேசுவரர்* (யானையின் தோலைப் போர்த்தியவர்) என்றும் பெயருண்டு.
அம்பிகை - *பாலாங்குராம்பாள்* . இவருக்கு - *கிருபாவதி* என்றும் பெயர்.
கல்வெட்டுகளில் சுவாமியின் பெயர் வீரட்டானம் உடையார், வழுவூர் நாயனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
பிரானின் ஐந்து முகங்கள் ஐந்து தீர்த்தங்களாக அமைந்துள்ளன.
பெருமானே தீர்த்தமாக விளங்குகிறார் என்பது ஐதீகம்.
அட்ட வீரட்டங்களில் யானையாக வந்த கஜாசுரனை அழித்த தலம் இது.
யானையை உரித்து, அதன் தோலைப் போர்த்தி, அதன் மத்தகத்தின் மீது நின்று இடது உள்ளங்கால் தெரியும் வண்ணம் ஊர்த்துவ தாண்டவம் ஆடுகிறார் பெருமான்.
இது நவதாண்டவங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது.
நடன சபைகளில் ஞானசபையாகப் போற்றப்பெற்றுள்ளது.
சிதம்பரத்தில் “சிதம்பர ரகசியம்’ எனச் சொல்லப்படும் ரகசிய பிரதிஷ்டை அமைந்திருப்பது போல் இங்கும் கஜ சம்ஹார மூர்த்திக்குப் பின்னே ரகசிய யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கஜ சம்ஹார மூர்த்தியின் உள்ளங்காலை தரிசிப்பது மிகவும் சிறப்பானது என்று கூறுகின்றார்கள்.
சகஸ்ர லிங்க மூர்த்தி இந்தக் கோயிலில் சிறப்பானது.
ஒரே லிங்கத்தில் ஆயிரம் சிறிய லிங்கங்கள் உள்ளன.🙏🙏🙏
சிவபெருமான் அவனைக் கொன்று அவன் தோலை கிழித்துப் போர்த்திக் கொண்டார் என்பது புராண வரலாறு.
தாருகாவனத்து முனிவர்கள் சிவபக்தி இல்லாமல் செருக்குடன் இருந்தனர்.
அவர்கள் கர்வத்தை அடக்க பெருமான் வசீகரிக்கும் தோற்றத்துடன் அவர்களின் முன்பாகச் சென்றார்.
முனிவர்கள் அவரைக் கொல்ல நினைத்து யாகம் செய்து பலபொருள்களை அவர்மீது ஏவினார்கள். அவற்றையெல்லாம் அழித்தும், ஏந்தியும் அவர்களின் செருக்கை அடக்கினார்.
அவர்கள் பெருமானை வேண்டவே, அவர்களுக்கு ஞானோபதேசம் செய்தார்.🙏🙏🙏
இந்த கதையை நாம் ஏற்கனவே அறிவோம் ... அகந்தை , ஆணவம் , ஆடம்பரம் என்ற மூன்று அரக்கர்களை தன் சிறிய கொவ்வை செவ்வாயினால் புன்னகைத்து அழித்தார் ஈசன் .. அம்பாள் கரும்பை வில்லாக வைத்துள்ளாள் ஈசனோ மேருவை வில்லாக வைத்துள்ளார் ...
*தானவர் முப்புரம் சாய்த்து -* திரிபுர அசுரர்களின் முப்புரங்களையும் சிரித்தெரி கொளுத்தி
*மத வெங்கண் கரி உரி போர்த்த* -
மதத்தால் சிவந்த கண்களைக் கொண்ட யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்ட
*செஞ்சேவகன்* - சிவந்தவனாம் சிவபெருமானின்
*மெய்யடையக்* - திருமேனியை அடைய
*கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி* -
அம்பாள் இப்படிப்பட்ட வீரனுக்கு என்ன பரிசு கொடுத்தாள் தெரியுமா ? ஆலிங்கனம் ... உடல் எங்கும் அவள் கொடுக்கும் அன்பு சின்னங்கள் ...
*கோகனகச் செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே* -
சிறந்த பொன்னைப் போல் சிவந்தத் திருக்கையில் இருக்கும் கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் எப்போதும் என் தியானத்தில் இருக்க வேண்டும் 🦜🦜🦜
இங்குதான் அன்னையின் ரூப லாவண்ய வர்ணனை ஆரம்பம்.
இதை செளந்தர்ய லஹரி 4ஆம் ஸ்லோகத்தில் விளக்கியிருக்கிறார் சங்கரர்.
அன்னையின் கையில் இருக்கும் நான்கு ஆயுதங்களை சொல்லும்போது பின்வருமாறு கூறுகிறது சஹஸ்ர நாமம்.
மனோரூபேக்ஷீ கோதண்டா
பஞ்சதன்மாத்ர ஸாயகா.🙏🙏🙏
*செஞ்சேவகன்* - சிவந்த, சேவை செய்பவன்; சிவந்த வீரன்;
இங்கே சேவை செய்பவன் என்பதை விட வீரன் என்ற பொருள் மிகவும் பொருந்தும் .
மேரு என்னும் வில்லைக் கொண்டு முப்புரம் எரித்து மதயானையின் தோலைப் போர்த்திய சிவந்த சேவகன் என்னும் போது வீரன் என்பது பொருந்தும் பொருள்.
அடுத்த வரிகளில் அம்மையின் திருமேனி அழகையும் காமன் அம்புகளையும் பேசியதால் அம்மைக்குச் சேவை செய்யும் செஞ்சேவகன் என்றாலும் சரியே.🌝🌝🌝
நேற்று ஒரு நெருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.பேச்சு பல திசைகளுக்குச் சென்று ஒரு கட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வந்து நின்றது.ஆற்றுத் தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது,மணல் திருட்டு,தண்ணீரை வீணாக்குவது என்று பேசிக் கொண்டிருந்த போது,மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தாமிரபரணி உருவாகும் இடம் பற்றியும் கூறிக் கொண்டிருந்தேன். அதைக் கேட்ட நண்பர்,
"இருக்கலாம்ங்க..ஏன் கேக்குறீங்க" என்றதும்,
"டாக்டர் மசாரு இமோடோ பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?" என்று கேட்டுவிட்டு சில யூடியூப் வீடியோ லிங்க்குகளை வாட்சப்பில் அனுப்பி வைத்தார்.
இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் தண்ணீர் தனக்குள் தேக்கி வைத்துக் கொண்டு அதை வெளிப்படுத்தியதை டாக்டர் மசாரு இமோடோ வின் ஆராய்ச்சிகளில் நிருபணமாகியுள்ளது.
பள்ளிவாசல்களில் ஓதிவிட்டு பின் தெளிப்பதுத் தண்ணீரால் தான்.
இந்து மதத்தில் தண்ணீர் இன்றி எந்த சடங்கும் இல்லை.யாகம் முடிந்து,ஹோமங்கள் முடிந்து தண்ணீரைத் தான் அனைத்து இடங்களிலும் தெளிப்பார்கள்.
பெரிய ஞானிகள், முனிவர்கள் தவம் செய்தது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் கரைகளில் தான்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்று நம் முன்னோர் சொல்லி வைத்ததும் இதனால் தான்.
இப்பேற்பட்ட சக்திகளைக் கொண்ட ஆற்றை அதன் தண்ணீரை எப்படியெல்லாம் கெடுத்து நாம் நாசமாக்குகின்றோம் என்பதை உங்களது முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன்.
இறுதியாக,உறுதியாக ஒன்று,
மனித உடலும் 75% தண்ணீரால் ஆனது. மனித மூளை 90% தண்ணீரால் ஆனது. தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. அது தனக்குத் தரப்படும் தகவல்களை வைத்தே தன் குணத்தை அமைத்துக் கொள்ளும் எனில் நமது உடலின் சக்தியை சற்று நினைத்துப் பாருங்கள்.
*நேர்மறையான, பாஸிட்டீவ்வான எண்ணங்களை தினமும் நினைத்துக் கொண்டே இருந்தால்,நம் உடலும் அதை நினைவில் வைத்துக் கொண்டு எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் நமக்கு சாதகமானதாக மாற்றித் தந்துவிடும்...*
*பகிர்வு*
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺மன அமைதியைப் பாதுகாக்க விரும்பினால், உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறர் விஷயங்களில் தலையிடாதீர்கள்.
🌺வாழ்வில் சில நேரம் தொடர் கஷ்டங்கள் வரலாம். அவற்றை நம்பிக்கையுடன் சந்தியுங்கள். அது தான் உங்கள் மகிழ்ச்சிக்கான வழி.
🌺கவலைக்கு நாம் இடம் கொடுத்தால், கவலை நம்மை கவலைக்கிடமாக்கி விடும்.
🌺நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். அது உங்களை மட்டும் அல்ல, உங்களை சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
திருச்சிற்றம்பலம்
*தாய்க்கும் தந்தைக்கும் நிகரும்நின் இருதாள்*
சார்ந்த மேலவர் தமைத்தொழு தேத்தா
நாய்க்கும் நாய் எனும் பாவியேன் பிழையை
நாடி நல்லருள் நல்கிடா திருந்தால்
ஏய்க்கும் மால்நிறக் காலன்வந் திடும் போதென் கொலாம் இந்த எண்ணம்என் மனத்தைத்
தீய்க்கு தென்செய்வேன் ஒற்றியம் சிவனே
தில்லை அம்பலம் திகழ்ஒளி விளக்கே.
வழிமொழி விண்ணப்பம்
மனைஅணைந்து மலர்அணைமேல் எனைஅணைந்த போது
மணவாளர் வடிவென்றும் எனதுவடி வென்றும்
தனைநினைந்து பிரித்தறிந்த தில்லையடி எனைத்தான்
சற்றுமறி யேன்எனில்யான் மற்றறிவ தென்னே
தினைஅளவா யினும்விகற்ப உணர்ச்சிஎன்ப திலையே
திருவாளர் கலந்தபடி செப்புவதெப் படியோ
உனைஅணைந்தால் இவ்வாறு நான்கேட்பேன் அப்போ
துன்னறிவும் என்னறிவும் ஓரறிவாம் காணே.
- அனுபவமாலை
திருச்சிற்றம்பலம்
🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹
அன்னையின் பாதங்களில் நிலவின் மணம் ...
ஈசன் சென்னி வைத்த சின்னங்கள் ...
மதன் வென்றான் ஈசனை ...
மதம் கொண்டான் மீண்டும்
காமாக்ஷி தாயே ! ...இனி நான் தோற்க ஒருவர் பிறக்க வேண்டும் என்றான்
கர்வம் அங்கே கங்கை என பாய்ந்து ஓடியது ...
சிரித்தாள் அந்தரி ... சென்று வா ஒரு முறை காஞ்சி மடத்திற்கு ..
என் சுவாமி நாதனை கொஞ்சம் மயக்கி பார் ...
சென்றான் மதன் ஈசனை வென்றவன் அதன் வாசனை கொண்டவன் ..
வெறும் மானிடனை வெல்வது கொசுவை கொல்ல பீரங்கி வேண்டாம் என்றே கன்னலையும் , மலர் கனைகளையும் மடத்தின் வாசலில் வைத்தே உள்ளே சென்றான் ...
அழகு பிரம்மம் அசையாமல் சந்தரமௌலீஸ்வரர் பூஜை செய்து வந்தது ...
பார்த்தான் திருமுகத்தை ... பரவசம் கொண்டான் ..
மயக்க வந்தவன் மயங்கிப் போனான்.. மீண்டும் தோல்வி ..
பஷ்மமாக வில்லை பெரியவா பாதங்களில் பரிமளமானான் அன்று முதல் 🌷🌷🌷
ஹரியோ, ஹரணோ,
மூஷிகவாகனோ
முருகனோ
ஆதவனோ
மனம் செல்லும் வழி வேறாகினும்
அனைத்தும் அபிராமியை அடையும் வேராகும்
வேறு, வேறு வேர்களானாலும் உரிஞ்சுவது நீராகும் அதுவே மரத்தின் உயிராகும்
வேறு வேறு பாதையானாலும் உருஞ்சுவது அபிராமியின் அருளல்லவா
அதுவே நம் வாழ்வின் பொருள் அல்லவா
மும்மூர்த்திகளின் மூச்சவள்
ஐம்பூதங்களின் ஐக்கியம் அவள்
எட்டு திசைகளும் அவள்
அருவமாய் அகிலத்தை அணைக்கும்
அன்னை அபிராமி
என தினம் தினம்
மனம் மணக்க
குணம் தழைக்க
சினம் சிதைக்க
தலைகணம் மறக்க
உங்கள் படைப்புகள் கண்டு
அவையமது அபிராமியை நினைத்து குவியமாகி கூத்தாடுகிறது
இந்த கோலம் சாதாரணம்.
*என்னதான் ஊரடங்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டாலும், நாம் ஒவ்வொருவரும், மற்றவரிடமிருந்து அன்னியப்படுத்தப் பட்டுவிட்டோம் என்பதே உண்மை..!*
*
*உறவுகளின் சுபநிகழ்வு கொண்டாட்டங்கள் இனி முன்போல் சாத்தியமா என்பதுவும் ஐயமே.!!*
*ஊரடங்கின் காரணமாக வீட்டிலேயே இருந்தவர்களின் பொருளாதார நிலையினைவிட, மன அழுத்தம் மிக பாரம்.*
*நெருங்கிய உறவுகளின் உயிர் இழப்புகள் தந்த அழுத்தம் நீங்குவதற்குள், அடுத்தடுத்து என ஆயிரம் அதிர்ச்சிகள் வரிசைகட்டி காத்திருக்கின்றன, எதிர்காலம் பற்றிய எண்ணத்தில்.*
*பள்ளிக்குச் செல்லாமலே தேர்ச்சியடையும் மாணவர்கள் முகத்தில், மகிழ்ச்சியினை தேடவேண்டித்தான் உள்ளது.*
*வீட்டிற்குள், வார்த்தைகள் குறைந்துபோய், அலைபேசிகள் ஆக்கிரமித்துக் கொண்டன. முகம் பார்த்து பேசுவதைக் கூட, முடிந்தவரை தவிர்த்துவிடுகிறோம் என்பது அவரவர் மனசாட்சிக்கு தெரியும். நான்கு சுவர்களுக்குள் நாற்பதுவித சிந்தனைகள்.*
*உண்பதும், உறங்குவதும் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிடாது. தினம் ஒரு போராட்டத்தினை, பிரச்சினைகளின் வடிவில் சந்தித்துக் கொண்டிருக்கும்போது, உடனிருந்த அந்த தெம்பும், உற்சாகமும், இன்று எது பிரச்சினை என்பதை யோசிப்பதிலேயே காணாமல் போய்விட்டன.*
*வீசும்போதுதான் காற்று அழகு.*
*கொட்டும்போதுதான் அருவி அழகு.*
*பயணமோ, பணியோ, தேவையோ என ஏதாவது ஒன்றின் பொருட்டு இயங்கிக் கொண்டிருக்கும் வரைதான், மனித வாழ்க்கை அழகு.*
*ஒரு பெருந்தொற்று நோயால் முடக்கப் பட்டிருக்கிறோம், நாளை எப்படியும் நகர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்.*
*முதல் அலையில் முடிந்தவரை சமாளித்தோம்.*
*இரண்டாம் அலையில், இன்னல்கள் மற்றும் இடர்ப்பாடுகளை சந்தித்துவிட்டோம்.*
*மூன்றாம் அலையில் முழுமையாக முடங்கிப்போகாமல் இருப்பது, நமது கையில்தான் உள்ளது.*
*நாம் படைக்கப்பட்டதன் காரணத்தினை, நமக்கான கடமைகளை, முழுமையாக முடிக்கவும்தான்.*
*அவரவர் மனம் அறியும்,*
*அழுத்தத்தினையும்,* *வெறுமையினையும்..!*
*வாய்விட்டு சிரித்தது கடைசியாய் எப்போது என்றொரு கேள்விக்கான பதிலை மட்டும் தேடமுயற்சிப்போம் ,அது போதும்..!*