பச்சைப்புடவைக்காரி -447
அபிராமி அந்தாதி
பாடல் 6
சென்னியது உன் திருவடித்தாமரை (பாடல் 6)
சென்னியது உன்
திருவடித்தாமரை
சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்
சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி
முறை முறையே
பன்னியது
உந்தன் பரமாகமப் பத்ததியே!சென்னியது உன் திருவடித்தாமரை - எப்பொதும் என் தலையில் உள்ளது உன் தாமரை மலர்கள் போன்ற அழகிய திருவடிகள்.
சிந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் - என்றும்
என் நினைவினில் நிலைத்து நிற்பது உன் திருமந்திரம்.
சிந்துர வண்ணப் பெண்ணே! -
செந்தூரம் போன்ற நிறமுடைய அழகிய தேவியே!
முன்னிய நின் அடியாருடன் கூடி - நான் எப்போதும் கூடியிருப்பது உன் அடியார்களையே. என் எல்லா செயல்களையும் அவர்களை முன்னிட்டு செய்கிறேன்.
முறை முறையே பன்னியது -
தினந்தோறும் நான் முறையுடன் பாராயணம் செய்வது
உந்தன் பரமாகமப் பத்ததியே - உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே
செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன்.
உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது.
என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன.
நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே.
தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.
மேலான பொருள்:
சிந்தூரத்தின் செந்நிறத்தையொத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே!
பொலிவுமிக்க பொன்னான உன் திருவடிகள் என்னும் அழகிய தாமரை மலர்கள் என் சிரசின் மேல் இருக்க,
என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது.
உன்னையே வணங்கி நிற்கும் உன்
அடியவர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது,
உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையே யாகும்.🙏🙏🙏
*சென்னியது உன் பொன் திருவடித்தாமரை*
அம்மா உன் தாமரையைக்காட்டிலும் மென்மையான உன் பாதங்கள் என் சிரசின் மேல் பொருந்தியுள்ளது ...
இதை விட நான் என்ன பாக்கியம் செய்திருக்க முடியும் ..
சாதாரண பாதங்களா அவை ??,
மனிதரும் , தேவரும், மாயா முனிவர்களும் வணங்கும் பாதங்கள் என் சிரசினின் மேல் பதிவதென்றால் என்னை போல் பாக்கியவான் யார் இருக்க முடியும் ? 👌👌👌
கற்பூரம் காட்டும் போது நாம் நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி வணங்குகிறோம் அல்லவா அதன் தாத்பரியம் அன்னையின் பாத கமலங்கள் நம் சிரசின் மேல் பதிந்துள்ளதால் அவைகளுக்கு நம்மையும் அறியாமல் வணக்கம் போடுகிறோம் ...
அருணகிரி தன் கந்தர் அலங்காரத்தில் 40வது பாடலில் இப்படி பாடுகிறார்
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல்
பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்
மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்
*அவன்*
*கால் பட்டு அழிந்தது* *இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.**
......... பதவுரை .........
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின;
மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று.
பெருமை தங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின.
இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.👌👌👌
திரு நாவுக்கரசர்
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!
என்று பாடுகிறார் . அவள் பாதங்கள் அயன் எழுதிய தவறான வினைப்பயனை மாற்றி எழுதும் வல்லமை படைத்தவை 👣👣👣
*சிந்தையுள்ளே மன்னியது உன் திருநாமம்*
அம்மா உன் நாமங்கள் என் நெஞ்சில் நிலைத்து விட்டன ... பொருந்தி விட்டன ... உள்ளுக்குள்ளே என் மனம் உன் நாமத்தையே சொல்லும் வரம் கொடு ...🙏🙏🙏
சிந்தையுள்ளே மன்னியது உன் திருநாமம் அம்மா உன் நாமங்கள் என் நெஞ்சில் நிலைத்து விட்டன ... பொருந்தி விட்டன ... உள்ளுக்குள்ளே என் மனம் உன் நாமத்தையே சொல்லும் வரம் கொடு ...🙏🙏🙏
சிந்தூர வண்ணப்பெண்ணே
ஆஹா என்ன வர்ணனை ... அவள் குங்கமத்தில் குங்கமப் பூவை சேர்த்த குழம்பில் தன் மேனியை செதுக்கிக் கொண்டவள் .. அவள் சிந்தூரம் மணக்கும் வண்ணப்பெண் அவள் ... 👣👣👣
*6. மந்திர சித்தி பெற*
*முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே*
*பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.* 👣👣👣
அம்மா உன்னையே நினைக்கும் அடியார்களுடன் சேர்ந்து திரும்ப திரும்ப உன் நாமங்களை பாராயணம் செய்வதோடு இல்லாமல் உன்னைப்பற்றிய எல்லா நூல்களையும் பெருமைகள் கூறும் எல்லா புராணங்களையும் சேர்ந்து மீண்டும் படிக்கும் பாக்கியம் உன்னால் அல்லவோ எனக்கு கிடைத்தது .. எப்படி நன்றி சொல்வேன் தாயே !!👌👌👌
👍👍👍👍👌👌👌👌💐💐💐பன்னியது' மீண்டும் மீண்டும் படிப்பது என்ற பொருள் தரும். பல முறை (பன்முறை) படிப்பது 'பன்னுவது'.
'பனுவல்' என்று மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கதைக் குறிப்பிடுவார்கள். கேட்டிருப்பீர்கள்.
'பத்ததி' என்றால் 'வழிமுறை', 'தொடர்ச்சி', 'தொகுப்பு' என்ற பொருள்களைத் தரும்.
ஆண்டாளும் சொல்லியிருக்கிறார்.
அரங்கற்குப் பன்னும் திருப்பாவை - இங்கு பாடிடும் என்ற பொருளில் வருகிறது. அதாவது செய்யுளைப் படைக்கும் பொழுதே பாடிப் படைப்பது. இது பழந்தமிழ் வழக்கம். அதனால்தான் பாக்கள் வெண்பாவாகவும் அகவலாகவும் முதலில் இருந்தன. பிறகு கலி, வஞ்சி என்று நிறையவும் வந்தன.
செந்தூரம் எனச் சிவந்த திருமேனியைப் பெற்ற அபிராமி அன்னையே! உன் தாமரை போன்ற அழகிய திருவடிகளை நான் எப்போதும் என் தலையின் மேல் வைத்துள்ளேன்.
உன் திருமந்திரமே எப்போதும் என் நினைவில் நிலை நிற்பது. என் எல்லா செயல்களும் உன் அடியார்களை முன் வைத்தே அவர்களுக்காகவே நடக்கின்றன.
நான் எப்போதும் கூடியிருப்பதும் உன் அடியார்களையே. தினந்தோறும் நான் முறையுடன் படிப்பதும் உன்னுடைய மேலான ஆகம வழிமுறைகளையே.
சென்னியது உன் திருவடித்தாமரை
👍👍👍👍👍👌👌👌💐💐💐
Comments
ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது?
கோமாதாவை லக்ஷ்மி என்கிறது ஒரு பக்கம். அவளை லக்ஷ்மியின் வாஸ ஸ்தானமாகச் சொல்வது இன்னொரு பக்கம். லக்ஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து. ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு, மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம், யானையின் மஸ்தகம் (தலை), வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது. கோவிடத்தில் எதிரிடைகள் சேர்கிறதில் கோமய, கோமூத்ரங்களும் பவித்ரமாக இருப்பதாகப் பார்த்தோமல்லவா? அப்படியேதான் அதன் முக மண்டலமாக இல்லாமல் ப்ருஷ்டபாகமாக இருக்கப்பட்ட பின்புறமும் பரம பவித்ரமான லக்ஷ்மீவாஸமாக இருக்கிறது. அழகுக்காக கோவின் முகத்தில் சந்தன குங்குமங்கள் இட்டுக் கழுத்தில் மாலை போட்டாலும், கோபூஜை என்று பண்ணும்போது பின்புறத்தை அலங்கரித்து அங்கேயே அர்ச்சனாதிகள் செய்யவேண்டும்.
பவளக்கொடியில் பூக்கும் செவ்வாய் என இதழ் கொண்டு சிரித்தான் கொஞ்சம் ...
தூக்கும் தவளநிறப் புன் முறுவல் கண்டேன் திருக்கடையூரில் ...
என் இருள் அகன்றி பௌர்ணமியாய் திகழக் கண்டேன்
தூக்கும் மார்பில் மலர்க்கமலை மணம் வீசக்கண்டேன் ...
ரங்கனைக் கண்ட மனம் காவேரி போல் ஆனந்தமாய் ஓடக்கண்டேன் ...
தூக்கும் கரங்கள் கண்டேன் காஞ்சியில் ...
இதுவரை பார்த்தது பரமானந்தம் இல்லை என்றே உள் மனம் சொன்னது ...
வெயில் கண்ட வெண்ணெயைப் போல உருகிப்போனேன்
🙏🙏🙏
Why not to translate them into Tamil / Marathi etc and then chant? --- A beautiful explanation
Sri T Sadagopan Iyengar is a genius. Studied Physics at IIT and retired from IIT. Sharing a recent post of his--
Interesting response.
I am a firm believer that science and reality are not different.
I will do a little research whenever I get the chance to confirm it.
‘After wearing the sacrament, I sat on the darba and took one, two, three, four spoons of ghee’. etc.
And instead of Sanskrit he translated into Tamil and said that.
Shastri did not like this much. He told him ‘Don’t say that in Tamil. It can only be said in Sanskrit. '
‘Why? Doesn’t God understand other languages like Tamil? ’provokingly Laughed Puratchi.
I had to open my mouth as I was idle for so long like Vikraman who broke his silence till Vedalam provoked him.
‘What you are talking about is only audible for the person sitting opposite to you. On a radio or TV station, your speech can be heard thousands of kilometers away. How ?'
‘Electro Magnetic Waves’
‘So what it means?’ I asked
“Changing to Specific frequency. “he replied
Well .. there are some frequencies to listen to, some are annoying, some may even cause ear damage, some ragas have the ability to prove the healing properties of the disease. What’s so significant about these? ”
'what does it mean?'
‘The effects vary depending on what kind of sound waves we make. Is that right? '
Yes'
Say ‘Darbe Swasinaha’ with a mic in an oscilloscope. Then say ‘I sat on the bench’. Will Wave Form be the same for both? '
‘Will not be’
‘Sanskrit mantras are set up knowing what kind of vibrations in the atmosphere in a particular case will create a worthy mood and corresponding effect’
‘Well what do you say now?’
‘Is it not possible in Tamil?’
‘Yes, but not by its literal translation as it is. You have to form words which would mean and also produce the same waves as Sanskrit when you form another sentence '
‘So?’
‘Translating mantras is like the sun drawn on paper. No matter how beautiful and realistic it is, it does not get light or heat from the sun.
And that is THE truth.
♻♻♻♻♻♻♻♻♻♻♻
♻வாழ்க்கை என்றால் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். அதில் நல்லதை எடுத்துக்கொண்டு
கெட்டதை தூக்கி போட்டுவிட்டு போய்க்கொண்டே இருங்கள்.
♻உங்கள் கஷ்டத்திலும் அடுத்தவர் மனதைப் புண் படுத்தாமல், உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருங்கள். நிச்சயம் ஒரு நாள் உங்கள் வாழ்க்கை அழகாய் மாறும்.
♻சிறிய, சிறிய செயல்களில் தான் மிகப் பெரிய சந்தோஷங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது.
♻கஷ்டங்களைப் பாரமாக நினைத்து கலங்காதீர்கள். பிறந்தது முதல் இறப்பு வரை பலர் தாங்க முடியாத சுமையை தாங்கித் தான் வாழ்கிறார்கள் என்பதை மறக்காதீர்கள். சுமைகளை சுகமாக சுமப்போம்.
♻அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்ய முயன்றால் கவலை, படபடப்பு தான் மிஞ்சும். ஒவ்வொரு நாளாக ஒன்றின் பின் ஒன்றாக மெல்ல, மெல்ல படிப்படியாக தொடர்ந்து விடாமுயற்சியுடன் செய்தால் முன்னேற்றம் கிட்டும்.
♻♻♻♻♻♻♻♻♻♻♻
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
ஃபெமி ஓடெடோலா: நைஜிரியாவை சேர்ந்தவர். உலக பணக்கார வரிசையில் 1000 கிட்ட இருப்பவர்.
ஒரு தொலைபேசி நேர்காணலில் கோடீஸ்வரர் ஃபெமி ஓடெடோலாவை வானொலி தொகுப்பாளர் பேட்டி எடுத்த போது,
"உங்களை
வாழ்க்கையில் மகிழ்ச்சியான மனிதராக மாற்றியது என்ன?" என்ற கேள்விக்கு ..
ஃபெமி கூறினார்:
"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்து விட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."
1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.
2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.
3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.
4. நான்காவது கட்டம், என் நண்பர் ஒருவர் ஊனமுற்ற சில குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கச் சொன்ன நேரம். சுமார் 200 குழந்தைகள்.
நண்பரின் வேண்டு கோளின்படி, நான் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.
ஆனால் நண்பர் நான் அவருடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் தயாராகி அவருடன் சென்றேன்.
அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். இந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.
அவரகள் ஏதோ சுவர்க்கத்தை கண்டது போல் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தனர்.
எனக்குள் உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்.
நான் வெளியேற முடிவு செய்த போது குழந்தைகளில் ஒருவர் என் கால்களைப் பிடித்தார். நான் என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து என் கால்களை இறுக்கமாக பபிடித்துக் கொண்டது.
நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உங்களுக்கு வேறு ஏதாவது தேவையா?
இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகு முறையையும் முற்றிலுமாக மாற்றியது.
இந்த குழந்தை கூறியது :
"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை சொர்க்கத்தில் சந்திக்கும் போது, நன்றி சொல்ல உங்கள் முகம் சரியாக அடையாளம் காணப்பட்டு இருக்க வேண்டும்.
படித்ததில் பிடித்தது.
*பாடல் 65* 🌸🌸🌸🙏🙏🙏
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
திருமுருகன் அவதார பெருமையை சொல்லும் பாடல் ... *மாரன்* என்றால் மன்மதன் *...கு* மாரன் என்றால் ஞானம் கொண்டவன் ... காமத்தை விரட்டுபவன் ...
இதன் தாத்பரியங்களை இன்னும் அலசும் போது பார்க்கலாம் ...🥇🥇🥇
நடக்கும் எல்லா அக்கிரமங்களுக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடியும் ....
யார் தியானத்தை கலைப்பார்கள் யாருக்கு அவ்வளவு தையிரியம் இருக்கிறது ?
கலைப்பது மட்டும் வேலை இல்லை .. அங்கே ஆசையை ஈசன் மனதில் உருவாக்க வேண்டும் ....
யாருக்கு வல்லமை இருக்கிறது ?
முப்பது முக்கோடி தேவர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர் ..
பிரம்மன் சத்திய உலகத்தை பாயாக சுருட்டிக்கொண்டு ஆதார் , PAN ஒன்றையும் மாத்தாமல் யார்கிட்டேயும் சொல்லிக்கொள்ளமல் ஓடி ஒளிந்து கொண்டார் ...
அரங்கன் உரக்க குறட்டை விட்டுக்கொண்டு நன்றாக தூங்குவதைப்போல நடித்தான் ...
🥇🥇🥇🥇🥇
அன்னை கொடுத்த தையிரயத்தில் அம்பு விட்டான் ...
6 பொறிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து மன்மதனை துளைப் போட்டது ... எரிந்து போனானன் எலும்புகள் கூட இல்லாமல் ... 🔥🔥🔥🔥🔥🔥
பிள்ளையார் பிடிக்க குரங்காகி விட்டதே ...
சரி அண்ட சராசரங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போது தானே இந்த மன்மத தகனம் நடந்தது ...
எந்த ஈசனின் கண் காமத்தை எரித்ததோ அதே கண் எல்லோரும் பார்க்கும் படி ஞானத்தை உருவாக்கட்டும் ...
ஆசை , காமம் அழிந்து போனால் அங்கே பிறப்பது ஞானம் தானே !!
ஈசனின் மூன்றாவது கண் திறந்தது
அதில் கோபம் இல்லை ..
ஞானம் நிரம்பி வழிந்தது ...
காமம் இல்லை ...
கருணை கடலாய் பொங்கியது ...
ஆசை இல்லை ... ஆனந்தம் அணை இல்லாமல் வெள்ளம் போல் ஓடியது ...
பொறிகளில் ஆயிரம் கோடி மன்மதனை ஒன்று சேர்த்தால் வரும் அழகு தெளித்தது எங்கும் ...
துன்பம் , துயர் , ஏழ்மை , வறுமை ஏக்கம் , தாக்கம் எல்லாம் பஷ்மாய் போயின ... 👀🔥
விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு
தடக்கையும் செம்
முகனும்
முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின்
மகனும்
உண்டாயது அன்றோ வல்லி நீ செய்த வல்லபமே🥇🥇🥇🙏🙏🙏
பூமியில் வாழ்பவர்களும், வானுலகில் வாழ்பவர்களும், இடைப்பட்ட உலகங்களில் வாழ்பவர்களும் என எல்லோரும் கண்டு வியக்கும்படி.....🙏🙏🙏
கரும்பு வில்லை ஏந்திய மன்மதனின் உடலை எரித்த தவத்தில் சிறந்த சிவபெருமானுக்கு
🔥🔥🔥
*செம்முகனும்* - சிவந்த திருமுகமும்
*முந்நான்கு* - பன்னிரு கரங்களும்
*இருமூன்று* - ஆறுமுகங்களும்🙏🙏🙏
என்று பல விதங்களிலும் பெருமை கொண்ட தகப்பன் சுவாமியான திருமுருகன் மகனாக உண்டாக்கும் வல்லமை அமைந்தது...👏👏👏
அம்மையே உன்னுடைய வல்லமையால் தானே?!
அந்த மன்மதனை எல்லோரும் காணும் படி வென்றதைத் தான் எல்லோரும் வியக்கும் படி *தகனம்* செய்தார் என்று கூறுகிறார்.
அப்படி மன்மதனைத் தகனம் செய்த தவப்பெருமானே அந்த மன்மதனை விஞ்சும் அழகுடைய திருக்குமரனைப் பெற்றார் என்று வியக்கிறார்.
அப்படிப் பெறும் வல்லமையும் அம்மையே உன்னால் தான் ஏற்பட்டது என்று அன்னையைப் போற்றுகிறார்.
ஒரே கல்லில் மூன்று மாங்காய்.
அழகில் சிறந்தவன் திருமுருகன் என்று மகனைப் போற்றியாயிற்று;
யாராலும் வெல்ல இயலாத மன்மதனைத் தகனம் செய்தார் என்று அப்பனைப் போற்றியாயிற்று;
அந்த அப்பனுக்கும் சக்தி வந்தது அம்மையே உன்னால் தான் என்று அன்னையையும் போற்றியாயிற்று.🙏🙏🙏
அவன் உடல் மட்டுமே காணாமல் போனது.
அவன் உடலற்றவனாக அனங்கனாக் (அ+அங்கன்) வாழ்கிறான் என்பதை ' *காமன் அங்கம்'* தகனம் செய்யப்பட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
எல்லோரும் வானில் வாழ்பவர்களையும் மண்ணில் வாழ்பவர்களையும் மட்டும் சொல்லும் போது அபிராமி பட்டர் ககனத்தில் இருப்பவர்களையும் சொல்கிறாரே யாரவர்கள் என்றால் மண்ணில் பந்தத்தில் உழன்று மண்ணோடு நெருங்கியிருப்பவர்கள், வானில் எல்லா பந்தங்களும் விடுபட்டு முக்தி நிலை பெற்றவர்கள் என்று மண்ணவரையும் விண்ணவரையும் கூறிவிட்டு, பந்தங்களிலிருந்து விடுபட்ட பின்னரும் மக்களின் மேல் கருணை கொண்டு உலகத்தில் வாழும், ககன மார்க்கத்தில் உலாவும் சித்தர் பெருமான்களைச் சொல்கிறார் 'ககனம்' என்பதன் மூலம்.🙏🙏🙏
***
இப்பிடிப் பாராட்டுனா வெக்கம் வந்து வந்தவன் ஓடிப் போயிருவான்.
அப்படித்தான் நாம சாமிய "மன்மதனை எரித்தவனே" முப்புரம் தீய்த்தவனேன்னு சொல்றதெல்லாம்.
அவரு எல்லாத்துக்கும் மேல...அப்படீன்னு சொல்லீருக்காரு.
இருந்தாலும் நாம சொல்லாம விடுறதில்லை.
நம்மாழ்வாரும் 'நான் உன்னை தேவாதி தேவன்; உலக நாயகன் என்றெல்லாம் புகழ்கிறேனே. அதனால் உன் புகழ் மாசுபட்டு விடுமோ என்று அஞ்சுகிறேன்' என்று சொல்வார்.
அதனைத் தான் வாரியார் சுவாமிகளும் சொல்லியிருக்கிறார்.
மன்மதனை எரித்தவன், முப்புரம் எரித்தவன் என்பதெல்லாம் இறைவனின் பெருமைக்கு முன்னால் ஒன்றுமே இல்லை தான்;
அவை எல்லாம் ஈசனுக்குப் புழுவைத் தேய்ப்பதைப் போலும் எறும்பை ஏய்ப்பது போலவும் தான்.
வேறு வகையில் பார்க்கலாம்.
அவனுக்கு வேண்டுமானால் மன்மதனை வெல்வது சின்ன வேலையாக இருக்கலாம்.
நமக்கு? வானிலும், மண்ணிலும், ககனத்திலும் என்று எங்கெல்லாம் உயிர்த்திரள்கள் இருக்கின்றன என்று இந்தியத் தத்துவங்கள் சொல்கின்றனவோ அங்கெல்லாம் இருக்கும் உயிர்த்திரள்கள் மன்மதனை வெல்வது பெரும் காரியமாகத் தானே கொண்டிருக்கின்றன.
அவனை வென்றான் என்று ஈசனைப் போற்றுவது இவர்கள் பார்வையில் மலையைப் புரட்டிய செயல் தானே.
அந்த வகையில் அபிராமி பட்டர் பாடினார் என்று எடுத்துக் கொள்வோம்.🔥🔥🔥
அம்பாள் கட்டிக்கொண்டதால் அவன் பெயர் கந்தன் என்றாகியது 🥇🥇🥇
அற்புதமான பதிவு
கவி குமார் கற்பனை அருமை
🌷🌷🌷🌷🌷🙏🏻
வார்த்தை சித்தரின் இவ்விளக்கத்தை படித்த பின்தான் இப்பாடல் எனக்கு (ஒன்றுமே தெரியாதவன்) புரிந்தது என்றால் அது மிகை அல்ல...
ஆன்மீக பசியில் இருக்கும் எங்களுக்கு அபிராமி அந்தாதியை ரசமாக பிழிந்து கொடுக்கும் சக்தியின் அபிராமி பட்டரை பாராட்ட வார்த்தைகள் இல்லை...
மொத்தத்தில் பசியாறிய உணர்வு இப்பதிவை படித்தபின்..
🙏🙏🙏🙏🙏🙏
மயக்கம் கொள்ள தயக்கம் ஏனோ
இருட்டும் வெளிச்சமும் அவளானபோது இடிந்துரைப்பது ஏனோ
நீரும் நெருப்பும் அவளானபோது நீர்த்துப்போவது ஏனோ
பிறப்பும் இறப்பும் அவளானபோது
நம் சிறப்பு சொல்வது ஏனோ
எடுப்பது நாமாகினும்
கொடுப்பது அவளானதால்
தடுப்பது இயலுமோ
அண்டிய பொருளை அண்டியவருக்கு கொடுப்பதே அபிராமி சேவை
அதுவே நம் அற்புத வாழ்வின் தேவை
என அழகாய் அபிராமியின் ஆணையை சொன்னதற்கு நன்றி
தொழிற்சாலை கட்டடம் ஒன்றில் பல கோடி மதிப்புள்ள ஒரு இயந்திரம் செயல்படவில்லை. அதை சரி செய்ய பல வல்லுனர்களை அழைத்தார்கள். ஆனால் யாராலும் அந்த இயந்திரத்தை செயல்ப் பட வைக்க முடியவில்லை.
கடைசியாக வயதான ஒருவரை அழைத்தனர். அவர் சிறு வயதிலிருந்தே இயந்திரங்களை கையாழ்வதில் தேர்ச்சிப் பெற்றவர். மிகவும் அனுபவசாலி. அவர் வரும்போதே ஒரு பெரிய மூட்டை நிறைய கருவிகளை கொண்டு வந்தார். வந்தடைந்த அடுத்த கணமே வேலையை ஆரம்பித்தார். அந்த இயந்திரத்தை கவனமாக பரிசோதித்தார். அந்த நிறுவனத்தின் இரண்டு உரிமையாளர்களுமே இவரை ஆர்வமாக கவனித்துக் கொண்டிருந்தனர். இதை எப்படியாவது சரி செய்து விடுவார் என்று நம்பிக்கையோடு இருந்தனர். அந்த முதியவர் ஆழ்ந்த பரிசோதனைக்கு பிறகு, அவர் வைத்திருந்த மூட்டையிலிருந்து ஒரு சின்ன சுத்தியை எடுத்தார்.
*நீதி:-*
*முயற்சிகள் முக்கியம் தான். ஆனால் முயற்ச்சிகளை எங்கு செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வது அதை விட முக்கியம்!!*
*பதிவு 9* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 12*
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்*
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளம்
இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் .
இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜
*நான்*
ஐயனே ... தாங்கள் அம்பிகை உபாசகர் ...
அபிராமியைத் தவிர வேறு ஒருவரை வணங்காதவர் ...
ஆனால் 31வது பாடலில்
*அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.*
என்று பாடுகிறீர்கள் ..
அம்பாள் உபாசனை செய்பவர்களுக்கு பெண் ஆசை வரவே வாய்ப்பில்லையே பின் ஏன் அதுவும் தாங்கள் குறிப்பிட்டுள்ளது ஆச்சரியத்தை தருகிறது ... கொஞ்சம் விளக்க முடியுமா ? 👌👌👌
வணங்குபவர்களுக்கு பெண் ஆசை பொன்னாசை மண்ணாசை எதுவும் வராது ... ஆசைக்கடலில் அகப்படுபவர்களை தானே போய் கரை சேர்க்கிறாள் ...
அவர்கள் பெரும்பாலும் மென்மை குணம் பெறுகிறார்கள் தங்களையும் ஒரு பெண்ணாக பாவிக்கிறார்கள்..
சிலர் இதை துஷ்பிரயோகமும் செய்கிறார்கள் என்று ஒரு அர்த்தமற்ற கணிப்பு நிலவி வருகிறது ...
இந்த எண்ணத்திற்கு நானும் விலக்கு அல்ல ... அதனால் அவர்கள் எந்த பெண்கள் மீதும் தவறான எண்ணம் கொள்ள மாட்டார்கள்
மாறாக எல்லா பெண்களையும் பராசக்தியாக பாவிப்பார்கள் என்பதை ஆணித்தரமாய் சொல்லவே அப்படி அழகிய , நீண்ட தோள்களை உடைய மாந்தர்கள் என்று பாடினேன் ..
ஒவ்வொரு பெண்ணையும் சக்தியின் ரூபமாய் பார்த்தால் இந்த உலகம் என்றோ எப்பவோ உருப்பட்டு விடும் ..
மனைவியை கூட தெய்வமாய் பார்த்தார் உங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர் ..
நான் சொல்வது ...நீங்கள் அவ்வளவு தூரம் போக வேண்டாம்
உங்கள் மனைவியை தவிர மற்ற எல்லா பெண்களும் சக்தியின் அம்சங்கள் என்று நினைக்கும் நினைப்பு நமக்கு வந்துவிட்டால் அதுதான் அபிராமியின் பேரருள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் ...
*பட்டர்* அபிராமியின் அருள் உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் நாளை பார்ப்போம் 🙏🙏🙏
பதிகத்தை படித்துவிட்டு
உன் திறமையை பேசி உன்னை
புகழ்ந்து பேசுவதை.
என்ன ஒரு சந்தோஷம்.
போயி அபிராமிடம் சொல்ல
பறந்து போய் கொண்டிருக்கிறார்கள்.
🙏🙏🙏
தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன்.
பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?
துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன்.
மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.
அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.
இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.
மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.
குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.
கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று
பாராட்டினார் !!!
*படித்தேன் பகிர்ந்தேன்*
One afternoon, I went for a walk with a friend in the suburbs.
Suddenly, an old man in tattered clothes approached us with a bag of green vegetables in his hand.
The sales of those vegetables on that day were very poor, the leaves seemed dehydrated and yellowish and there were holes in them as if bitten by insects.
But my friend bought three bags without saying a word.
The old man also embarrassedly explained: "I grew these vegetables myself. It rained a while ago, and the vegetables were soaked. They look ugly. I'm sorry." After the old man left,
I asked my friend: "Will you really cook these when you go home?" He shook his head silently."Then why did you take the trouble of buying them?" I asked.
He replied, "Because it is impossible for anyone to buy those vegetables.
If I don't buy it, the old man will probably have no income for today."
I admired my friend's thoughtfulness and concern, so I caught up with the old man and bought some vegetables from him.
The old man had tears in his eyes. He said very softly, "I tried to sell them the whole day , but no one was ready to buy them.
I am so happy that you both were willing to buy from me.
My family will now have food for a week. Thank you so much."🥇🥇🥇
ஒரு நொடிப் பொழுதில் இந்திரசித்து பிரமாஸ்திரத்தை இலக்குவன் மேல் எய்து விட்டான்.
அருகில் இருந்த அனுமன் திகைத்தான். இது, யார் இப்படி செய்தது...வந்தவன் இந்திரனா, அவனை அந்த வெள்ளை யானையோடு சேர்த்து எடுத்து எறிந்து விடுகிறேன் பார் என்று வந்தான்...வந்த மாத்திரத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட ஆயிரம் கடுமையான அம்புகள் தைக்க நினைவும், செய்கையும் மறந்து போய் நிலத்தில் சோர்ந்து விழுந்து விட்டான்.
ஈது அமைந்தான்?
இனி என்? எற்றுவென் களிற்றினோடு
எடுத்து' என எழுந்தான்;
தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங்
கணை தைக்க,
நினைவும் செய்கையும் மறந்துபோய்,
நெடு நிலம் சேர்ந்தான்.
'இந்திரன் வந்தவன் என்கொல் = இந்திரனா வந்தது
ஈது அமைந்தான்? = இப்படிச் செய்தவன்
இனி என்? = இனி என்ன செய்வது
எற்றுவென் = தூக்கி எறிவேன்
களிற்றினோடு = யானையோடு
எடுத்து' = எடுத்து
என எழுந்தான்; = என்று எழுந்தான்
தனுவின் = வில்லின்
ஆயிரம் கோடி = ஆயிரம் கோடி
வெங் கடுங்கணை தைக்க, = வெம்மையான கொடிய அம்புகள் தைக்க
நினைவும் = நினைவும்
செய்கையும் = செய்கையும்
மறந்துபோய், = மறந்து போய்
நெடு நிலம் சேர்ந்தான். = நிலத்தில் வீழ்ந்தான்
அப்பேற்பட்ட அனுமனையும் அந்த பிரம்மாஸ்திரம் சாய்த்தது.
இலக்குவன் விழுந்து விட்டான்.
அனுமனும் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விட்டான்.
இனி போர் என்ன ஆகும் ?
பக்தர்: சுவாமிகளே!ஏன் சில மந்திரங்களை ஒருசில வகுப்பினர் மட்டுமே கற்கலாம் என்று சொல்லுகிறீர்கள்? ஏன் ஒருசில தகுதி அல்லது நிலையிலுள்ளவர்கள் மட்டுமே படிக்கலாம் என்று விதிமுறைகள் விதித்துள்ளனர்?
.
பக்தர்: அது எப்படி? மந்திரங்களும் சப்தங்களின் தொகுப்புதானே?
சுவாமிகள் பதில்: சப்தங்களின் தொகுப்பு எல்லாம் மந்திரம் ஆகிவிடாது.
தகுதிபெற்றவர் ஒருவர் உச்சரிக்கும்போதுதான் அவை மந்திரம் ஆகும்
பக்தர்: எனக்குப் புரியவில்லையே?
சுவாமிகள்: உங்கள் கேள்விக்கு ஒரு சம்பவம் மூலம் பதில் சொல்லுகிறேன்.
"ஏ சேவகா! மந்திரி கன்னத்தில் பளார் என்று இரண்டு அரை கொடு” என்றார். சேவகன் ஒரு நொடி கூட தாமதிக்காமல், மந்திரியின் கன்னத்தில் இரண்டு அரை விட்டான் "மன்னரே! இதுதான் வித்தியாசம்.நானும் ஒரே கட்டளையைத் தான் இட்டேன். நீரும் அதே கட்டளையைத் தான் இட்டீர். நீர் சொன்னவுடன் என் கன்னத்தில் இரண்டு அரை கிடைத்தது. நான் சொன்னபோது ஒன்றும் நடக்கவில்லை. சொல்லக்கூடாதவர் சொன்னதால் எனக்கு தண்டனை கிடைத்தது."இதுபோலத்தான் சில மந்திரங்களும்.
மந்திர விஷயங்களில் சாஸ்திரங்கள் சொல்லுவதைத்தான் நாம் பின்பற்றவேண்டும்
Super super boss
*பாடல் 66* 🌸🌸🌸🙏🙏🙏
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
இறைவனைப்பற்றி ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டுமென்றால்
அதில் குறைந்தது ஆறு அம்சங்கள் இருக்க வேண்டும் .
1. நமஸ்கரித்தல்
2. ஆசி கூறல் / வேண்டுதல்
3. சித்தார்ந்தத்தை எடுத்துக்கூறல்
4. பராக்கிரமத்தை எடுத்துக்கூறல்
5. பெருமைகளை எடுத்துச் சொல்லுதல்
6. பிராத்தனை செய்தல்
ஆனால் முதல் படியில் இருக்கும் என்னைப்போன்றோர் 6 அம்சத்தில் ஒன்றுமே தெரிந்துகொள்ளாதவர்கள் ...
எதோ எதோ உளரும் போது நடு நடுவே அம்பாளின் பெயரை சொல்பவர்கள் ...
இவர்களுக்காகவும் பட்டர் வேண்டிக்கொள்கிறார் ..
எவ்வளவு உயர்ந்த உள்ளம் அவருக்கு என்று பாருங்கள் ....
அம்மா அர்த்தம் இல்லாமல் நான் சொல்லும் எதிலும் தப்பித்தவறி உன் பெயர் வந்து விட்டால் அதை ஒரு ஸ்தோத்திரமாக எடுத்துக்கொண்டு எனக்கு ஆசி வழங்கு தாயே என்று கேட்க்கிறார் 🥇🥇🥇
மஹா பாரதம் எழுதிய வில்லிப்புத்தாரை கேட்டால் ... ஏதோ உளறினேன் ஆனால் நடு நடுவே என் கண்ணனின் திருநாமம் வந்ததே .. என்பார் ...
சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து, இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள்.
அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர்.
அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின் விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.
அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.
தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.
*பாடல்*
அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 👏👏👏
சிறியேன்
நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன்
பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்
வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும்
நின் திருநாமங்கள் தோத்திரமே👏👏👏🥇🥇🥇
பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை தாயே நான் .
ஆதி தம்பதியரான பார்வதி பரமேசுவரருடைய பெருமை வார்த்தைகளால் வடிப்பதற்கு அரிது
மகாகவி காளிதாஸன் இந்த திவ்ய தம்பதியைப் பற்றிப் பேசும்போது,
“சொல்லும் பொருளும் போல” இணைந்த தம்பதி என்கிறார்.
ஆதி சங்கரர் சிவானந்த லஹரியில் பார்வதி பரமேசுவரரின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
' *நிஜதப: பலாப்யாம்'* என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.
பார்வதியின் தவப் பயனாக பரமசிவனும், அதேபோல் பரமசிவனின் தவப் பயனாக தேவியும் சதிபதிகளாக அமைந்தனர், என்கிறார் ஆதிசங்கரர்
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ஒரு நாமா - ' *ஸ்வாதீன வல்லபா'* என்பது.
இதன் பொருள் கணவனைத் தன் வசத்தில் வைத்திருப்பவள் என்பதாகும்.
தேவீ எப்படி சிவபெருமானைத் தன் வசம் ஆக்கிக் கொண்டாள் என்பதை மஹாகவி காளிதாஸன் குமாரசம்பவ'த்தில் வெகு அழகாக வருணிக்கிறான்.🥇🥇🥇
- சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான். 🌹🌹🌸🌸🌸
பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே...
அம்பாளுக்கு இருக்கும் பெருமைகளில் மிகவும் உயர்ந்த பெருமை தன் பதியுடன் சேர்ந்து இருப்பதுதான் ...
ஆமாம் ... ஏன் மேரு மலையை பசும் பொன்னால் ஆனது என்கிறார் ..
மேரு மலை மிகவும் பெரியது உயர்ந்தது .. காடுகள் நிறைந்தது .. அதனால் பசுமையாக இருக்கிறது ..
பொன்னார் மேனியன் அல்லவோ அந்த மலையை வில்லாக வைத்துள்ளான்
அதனால் வெறும் பசுமையாக இருந்த மலை பொன்னாகி ஜொலிக்கிறது 👏👏👏🌸🌸🌸
தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயே ...
என் வார்த்தைகள் பேத்தலாக இருக்கலாம்
அர்த்தம் வராத சொற்களாக இருக்கலாம் ..
பிறருக்கு புரியாத வார்த்தைகளாக இருக்கலாம் .
தப்பும் தவறும் நிறைந்தவைகளாக இருக்கலாம்...
உண்மையான அர்த்தத்தை அனர்த்தம் செய்யும் சொற்களாக கூட இருக்கலாம்
ஆனால் சொல்லும் போது நடு நடுவே உன் திருநாமத்தையும் சேர்த்து சொல்கிறேன் அதனால் நான் சொல்வதை தோத்திரமாக நீ எடுத்துக்கொள்ள வேண்டும் தாயே !!!👌👌👌
ஊமையனை பெரும்பேச்சாளனாகச் செய்வாய் என்ற வடமொழி சுலோகம் தான் நினைவிற்கு வருகிறது
சொல் அவமாயினும் என்று சொல்லும் இந்தப் பாடலின் பயன் 'கவி பாடும் திறன் பெறலாம்'
அது அவளுக்குத் தெரியாதா, என்ன !!💐💐💐
======================
Tough Time Ahead
If 2020 was bad, 2021 has been worse. We have lost many of our friends, well-wishers, guides, philosophers, acquaintances and enemies to this dreadful virus. And they went without a decent funeral.
To those who have survived, recouping from the illness is a mountain to climb. Add to that the struggle to make ends meet for families who lost breadwinners & those who lost jobs. Challenging times lie ahead of us.
So far, what have I learnt from it all?
1. Whatever be your ideology, religion, political affiliation, it does not bother the virus. The same goes for your caste, wealth, education, beauty et al.
2. When push comes to shove, no one will be around to help; not even the political outfit you rabidly supported and made enemies out of friends.
3. Data that is being thrown at you cannot be trusted. Concentrate on the cash & cash equivalents you possess & your investments, and be grateful if you have a job to hold on to.
4. Be kind to all people irrespective of who they are; you do not know who will remain and who will go to touch the lotus feet of the almighty.
5. Realise that life is too short to keep grudges and carry pieces of baggage. Instead, reach out and speak to all your friends and relatives; perhaps it would be the last time you get a chance to interact.
6. Keep away from toxic social media. It enhances your stress and increases your anxieties.
7. If you are one of the many who have fallen in love with a politician, remember you need not get married to him. All politicians are out there for their aggrandisement. They use you as their base and step on you to climb & pick better fruit higher up the tree.
8. Take care of your parents and make your peace with them. Today they are weak and sad but remember they were agile, capable & at one point in time, had swept you into their capable arms.
9. Now is the right time to sit down and spend some quality time with your children. They, too, have been cooped indoors & mind you, out there, no one has assessed their mental health.
10. If you have some to spare, share whatever you can with the poor and the needy. No, not the professional poor & needy but the genuine ones.
Tonight, as you retire to bed, count your blessings.
Whisper a prayer for all those who have lost a business or a livelihood.
Take care, stay safe & may the force be with you.
சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து, இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள்.
அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர்.
அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின் விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.
அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.
தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.
*பாடல்*
அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 👏👏👏
லலிதா சஹச்ரம் இரண்டையும். இனைத்தது அருமை
தாங்கள். ஆன்மிகத்தில் முதல் படி என்றால்
நாங்கள். இன்னும் படி ஏறவில்லை
படியே கண்களுக்கு புலப்படவில்லை என்று சொல்ல வேண்டும்
🙏🏻🙏🏻தாயே சரணம்
சம்புவுக்கு ஏற்றம் தரும் சக்தியின் பெருமைகள்
சம்புவுக்கு ஏற்றம் தரும் சக்தியின் பெருமைகள்:-
சம்புவுக்கு ஏற்றம் தரும் சக்தியின் பெருமைகளைத் தான் அளவிட்டுச் சொல்ல முடியுமோ!
ஆதி தம்பதியரான பார்வதி பரமேசுவரருடைய பெருமை வார்த்தைகளால் வடிப்பதற்கு அரிது மகாகவி காளிதாஸன் இந்த திவ்ய தம்பதியைப் பற்றிப் பேசும்போது, “சொல்லும் பொருளும் போல” இணைந்த தம்பதி என்கிறார். ஆதி சங்கரர் சிவானந்த லஹரியில் பார்வதி பரமேசுவரரின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
'நிஜதப: பலாப்யாம்' என்று அவர்களைக் குறிப்பிடுகிறார். பார்வதியின் தவப் பயனாக பரமசிவனும், அதேபோல் பரமசிவனின் தவப் பயனாக தேவியும் சதிபதிகளாக அமைந்தனர், என்கிறார் ஆதிசங்கரர். பார்வதி தேவி எப்படியெல்லாம் சிவபெருமானுக்கு ஏற்றம் தருகிறாள் என்பதை இங்கு காண்போம்.
தேவியின் தாடங்க மகிமை
தாடங்கம் என்பது ஸ்த்ரீகள் அணிந்து கொள்ளும் மங்களாபரணம். அவர்களுடைய ஸௌமாங்கல்யத்தைப் பிரகடனம் செய்யும் அணிகலனாக அது அமைந்திருக்கிறது. பரதேவதையின் தாடங்கத்தின் மகிமையை ஆதிசங்கரர் தனது ஸௌந்தர்ய லஹரீ என்னும் அற்புதமான ஸ்தோத்திரத்தில் அழகாக வருணிக்கிறார் -
ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே ஸிச்வே விதிசதமத்வாத்யா திவிஷத:|
கராலம் யக்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந சம்போ: தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா||
(ஸௌந்தர்யலஹரி சுலோகம் 28)
ஒரு சமயம் தேவர்கள் அசுரர்களிடம் தோற்றுத் தங்கள் பதவி, சக்தியெல்லாம் இழந்து நின்றனர். விஷ்ணுவின் அறிவுரையின்படி அவர்கள் மேருமலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் வைத்துப் பாற்கடலைக் கடைந்து அமிருதத்தைப் பெற்றனர்.
*🎻வீணை🎻*
*வீணை என்று சொன்னதுமே எல்லோருக்கும் சரஸ்வதியின் நினைவுதான் வரும்.*
*ஆனால், 32 வகையான வீணைகளை 31 தெய்வங்கள் இசைப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இதோதெய்வங்களும் அவர்களுக்குரிய வீணையின் பெயர்களும்:*
2. விஷ்ணு - பிண்டகம்.
3. ருத்திரர் - சராசுரம்.
4. கௌரி - ருத்ரிகை.
5. காளி - காந்தாரி.
6. லட்சுமி - சாரங்கி.
7. சரஸ்வதி - கச்சபி எனும் களாவதி.
8. இந்திரன் - சித்திரம்
.
9. குபேரன் - அதிசித்திரம்
.
10. வருணன் - கின்னரி.
11. வாயு - திக்குச்சிகை.
யாழ்.
12. அக்கினி - கோழாவளி.
13. நமன் - அஸ்த கூர்மம்.
14. நிருதி - வராளி யாழ்.
15. ஆதிசேடன் - விபஞ்சகம்.
16. சந்திரன் - சரவீணை
.
17. சூரியன் - நாவீதம்.
18. வியாழன் - வல்லகி யாழ்
.
19. சுக்கிரன் - வாதினி.
20. நாரதர் - மகதி யாழ் ( பிருகதி )
.
21. தும்புரு களாவதி ( மகதி ).
22. விசுவாவசு - பிரகரதி.
23. புதன் - வித்யாவதி.
24. ரம்பை - ஏக வீணை.
25. திலோத்தமை - நாராயணி.
26. மேனகை - வணி.
27. ஊர்வசி - லகுவாக்ஷி
.
28. ஜயந்தன் - சதுகம்.
29. ஆஹா, ஊஹூ தேவர்கள் - நிர்மதி
.
30. சித்திரசேனன் - தர்மவதி ( கச்சளா ).
31. அனுமன் - அனுமதம்.
32. வது வகை வீணையை வாசிப்பவன், ராவணன் அவனது வீணையின் பெயர் - ராவணாசுரம்.
°°°°°°°°°°°°°°°°°°°°
14 வது சர்க்கம்
°°°°°°°°°°°°°°°°°°°
அசோக வனத்தில் தேடுதல் வேட்டை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வல்லமை படைத்த ஹனுமான் இது போன்ற சிந்தனைகளுக்குப் பிறகு, சீதையை மனதில் தியானித்து விட்டு, ராவணனின் அரண்மனை யின் முன்புறச் சுவர் மீது தாவிக் குதித்தார்.
எழில்மிகு சீதையை தேடி அவர் அந்த அசோக வனத்துக்குள் நுழைந்தபோது உறங்கிக் கொ ண்டிருந்த பல பறவைகள் விழித்துக் கொண்ட ன. மரங்களுக்கு மேலே பறந்த பறவைகளின் சிறகுகளிலிருந்து வந்த தென்றல் காற்றில் அசைந்த மரங்கள் பல வண்ணங்கள் கொண ட பூக்களை உதிர்த்தன.
..
புயலால் வீழ்த்தப்பட்டது போல் அழிக்கப்பட்டி ருந்த மரங்களை விட்டுப் பறவைகள் வெளியே றின. மரங்களின் அடிப்பாகம் மட்டும்தான் மிஞ்சி இருந்ததால் பறவைகளால் அங்கே வசிக்க முடியவில்லை.
தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் ஆகியவை பதிக்கப்பட்ட பல கட்டிடங்கள் சுற்றிலும் நிறை ந்திருந்ததை அவர் பார்த்தார். நீர் நிறைந்த பல குளங்களின் படிக்கட்டுகளில் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
தோட்டத்திலிருந்த மரங்களில் பூக்களும், பழங் களும் நிறைந்திருந்தன. அந்தத் தோட்டத்தில் பல அலங்காரப் பதாகைகள் இருந்தன. தங்கப் படிகள் கொண்ட பல மேடைகள் இருந்தன.
அங்கே பல நீரூற்றுகள் இருந்தன. அருகே தங்க நிற மரங்கள் நிறைந்த சமவெளிகளும் இருந்தன. மேரு மலை போன்ற தோற்றம் கொண்ட அந்த மரங்களின் ஒளி ஹனுமான் மேல் பட்டு அவரும் தங்க நிறம் கொண்டவரா கத் திகழ்ந்தார்.
"சோகமே உருவானவராகவும், ராமபிரானை மீண்டும் எப்போது சந்திப்போம் என்ற சிந்த னையோடும் இருக்கும் விதேஹ அரசரின் மகளை (சீதையை), ஒருவேளை நான் இங்கே காணலாம்.
"
"
"
"ராமருக்கு பிரியமானவரும், குற்றமற்றவரும், இளவயதினருமான ஜானகிக்குக் காட்டில் வாழும் உயிர்களிடம் அன்பு ஏற்பட்டிருக்கும்.
"தன் மாலைக் கடன்களைச் செய்வதற்காக அவர் சூரியன் மறையும் தருவாயில் தூய நீர் நிறைந்த இந்த நீர்நிலைக்கு வரக் கூடும்.
"
இவ்வாறு நினைத்த மகாத்மாவான ஹனுமா ன் சீதையைக் காண வேண்டும் என்ற துடிப்பு மிகுந்தவராக, ஒரு அடர்த்தியான புதருக்குள் மறைந்து நின்றபடி, பூக்கள் நிறைந்த அந்த அசோக வனத்தில் நிகழ்ந்த சம்பவங்களை கவனிக்க ஆரம்பித்தார்.
ஜெய் ஸ்ரீ ராம்.... ஜெய் ஆஞ்சநேயா...
ஸ்ரீ ராம.. ஜெய ராம.. ஜெயஜெய ராமா...
14 வது சர்க்கம் நிறைவடைந்தது...
15 வது சர்க்கம் நாளை தொடரும்...
19.06.2021... நேசமுடன் விஜயராகவன்..