அபிராமி அந்தாதி .. பாடல் 7 ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி
பச்சைப்புடவைக்காரி -448
அபிராமி அந்தாதி
பாடல் 7
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி (பாடல் 7)
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி -
தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.
தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் -
அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.
கமலாலயனும் -
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்
மதியுறு வேணி மகிழ்நனும் -
நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்
மாலும் - திருமாலும்
வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் -
என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே
சிந்துரானன சுந்தரியே -
சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே!
சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது.
அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய்.
மேலான பொருள்:
தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச் சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும்,
பாற் கடலில் பள்ளி கொண்ட திருமாலும்,
வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணிந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே!
தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலை யாமல்,
ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடையும்படி திரு வுள்ளம் கொண்டருள்வாயாக!
ததியுறு மத்திற் சுழலும்
அந்த காலத்தில் தயிர் மத்தை வைத்து அதிகாலையில் கடைய ஆரம்பிப்பார்கள் ..
அதில் வெண்ணெய் திரண்டு வரும் ..
பட்டர் ..அம்மா இந்த உலகம் ஒரு தயிர் கடையம் .. என் உயிர் தான் தயிர் .. அதை கடையும் மத்துதான் என் வினைப்பயன் .. அந்த வினைப்பயன் என் ஆத்மாவை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் மாறி மாறி கடைகிறது ..
அந்த தயிர் படும் வேதனையப்போல் என் ஆத்மா துடிக்கிறது ..
இதை கடைபவளும் நீதான் ஏன் கடைகிறாய் தெரியுமா?
முக்தி எனும் வெண்ணையாக நான் மாற ..
என்னை வெண்ணெய்யாக மாற்ற நீ படும் துன்பங்கள் எக்கச் சக்கம் .
உன் கருணையில் உருகி விடுகிறேன் தாயே !💐💐💐
என் ஆவி தலர்விலதோர்
என் ஆவி முக்தி அடையும் வரையில் கொஞ்சமும் தளர்வடையாமல் என்னை கடைகிறாய் ..
வலி அதிகம் தான் ஆனால் அதனால் விளையும் பலன்களோ மிக அதிகம் 🍇🍇🍇
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்
அவள் கடையாவிட்டால் மத்துக்கு வேலை இல்லை ..வெண்ணெயும் வராது ..அம்மா என் ஆத்மா பல பிறவிகள் எடுத்து களைத்து போய் விட்டது அதற்கு நிரந்தரமான , நிலையாய் இருக்கும் படி அருள் செய்ய மாட்டாயா ?
மூன்று பேர்கள் படைப்பு காத்தல் அழித்தல் தொழிலை ராஜ ராஜேஸ்வரியிடம் இருந்து பெற்றுக்கொண்ட பிரம்மா , விஷ்ணு & சிவன் இவர்களும் வந்து வணங்கி உன்னையும் உன் திருவடிகளையும் பூஜித்து வருகிறார்கள் ..
அம்பாளே எல்லா வேலைகளையும் செய்வதில்லை ..
நம்பிக்கைக்கு பாத்திரமான மூன்று மூர்த்திகள் ..
இதில் அவள் பதியும் அடக்கம் ..
அவன் மகிழ்நனன் ..
பெரியபொறுப்பு ----
மிகவும் நம்பிக்கையானவன் ..
கடையை மூடும் போது கல்லா பெட்டி கணக்குகளை சரிபார்த்து கடையை இழுத்து மூடி விட்டு வரவேண்டும்
இவ்வளவு பெரிய பொறுப்பை தன் பதியிடமே இருக்கட்டும் என்று ஆசைப்படுகிறாள் அம்பாள்
ஈசன் அவள் திருவடியை மனைவியின் திருவடியை தொழலாமா என்ற கேள்வி பிறப்பது நியாயம் ..
கணவன் மனைவி என்பது உறவு ..
உத்யோகத்தில் இல்லை ..அம்பாள் கொஞ்சம் இன்னும் உயர்வான இடத்தில் இருப்பதால் ஈசன் அவளை வணங்குகிறான் ..
இன்னொரு இடத்திலும் அவன் அன்னையை வணங்குகிறான் ..
அவன் அன்னையிடம் ஊடல் புரிந்து அதை முடித்துக்கொள்ளும் போது ...
இங்கே சிவசக்தி ஒன்றுதான் ... அவர்களுக்குள் எந்த பேதமையும் கிடையாது . 💐💐💐
கமலாலயனும் ..
கமலத்தில் வீற்றுருக்கும் பிரம்மாவும் ,
மதியுறு வேணி மகிழ்நனும்
மதியை முடியில் சூடிய அழகனான, ஆனந்தமாய் இருக்கும் சிவபெருமானும்
மாலும்
உன் சகோதரனான ஸ்ரீமன் நாராயணனும்
வெறும் மனிதரும் , தேவர்களும் , மாயா முனிவர்கள் மட்டுமே அம்பாளை வணங்க வருவதில்லை ..🙏🙏🙏
சிந்தூரான சுந்தரியே
சுந்தரி .. அவள் பேரழகி அபிராமி என்றாலும் அழகில் வேறு ஒருவரை உவமை சொல்ல முடியாதவள் என்று அர்த்தம் .. அவள் சிவந்த குங்கும மேனியள்.. நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ளும் போது அவள் மேனியை தோடுவதைப்போல் உணர்வு சிலிர்ப்பு நமக்கு வரவேண்டும் ..
குங்குமம் போல் சிவந்த அதி சுந்தரியே என் அபிராமியே என்று பாடலை முடிக்கிறார் பட்டர்
மத்துறு தயிர் என வந்து சென்று இடை
தத்துறும் உயிரோடு புலன்கள் தள்ளும்
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை
எத்தனை உலா? அவை எண்ணும் ஈட்டவோ?
மாணிக்க வாசகர்
தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே!
தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி
👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐
Comments
அது கல்யாண வீடு என்பதற்கு வாசலில் இருந்த இரண்டு வாழை மரங்களே சாட்சியாக நின்றிருந்தன. வேறு எந்த ஆர்ப்பரிப்பும் அங்கு இல்லை. ஆடம்பரமாக திருமணத்தை நடத்த அது ஒன்றும் பணக்காரரின் வீடும் அல்ல, ஏதோ ஒரு தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து பிழைக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவரின் வீடும் அல்ல.
அழகு இருந்தும், பணம் இல்லாததால் தன் மகளுக்கு திருமணம் நடைபெறுமா? என்ற கவலையில் தவித்து வந்தார் நீளோபாவின் மனைவி. ஆனால் ‘எல்லாம் இறைவனுக்குத் தெரியும். அவன் பார்த்துக் கொள்வான்’ என்று அவன்மேல் பாரத்தைப் போட்டு விட்டு, பகவானின் பதத்தை பணிவதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தார் நீளோபா.
இரக்க குணம் படைத்த பணக்காரர்கள் சிலர் கொடுத்த காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், இலை போன்றவை கொஞ்சம் இருந்தது. ஆனால் அவை திருமணத்திற்கு வருபவர்களுக்கு விருந்து வைக்க போதுமானதாக இருக்குமா? என்று நீளோபாவின் மனைவி கவலையில் ஆழ்ந்தாள்.
அப்போது வீட்டின் வாசலில் முதியவர் ஒருவர் வந்து நின்றார். வெளியே வந்த நீளோபாவிடம், ‘ஏன்பா! நீளோபா–ன்னா நீதானா. உன் மகளுக்கு கல்யாணமாமே?’ என்று கேட்டார் முதியவர்.
அதற்கு முதியவர், ‘எனக்கு ஏது ஊரு? எல்லா ஊரும் நம்ம ஊருதான். குருவாயூர், மதுரா, பிருந்தாவனம், கோகுலம், உடுப்பி.. இப்படி ஊர் ஊராய் போய் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கிறேன்’ என்று கூறிக் கொண்டே, தான் அணிந்திருந்த கந்தல் துணியில் போட்டிருந்த சிறு சிறு முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கினார். ‘ஐயா! எனக்கு இப்போது அபார பசி. என்னிடம் இருக்கும் இந்த அரிசி, பருப்பு, காய்கறி, புளி, மிளகாய் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் சாப்பாடு போட்டால் நல்லது’ என்றார் முதியவர்.
சமையல் பொருட்கள்
‘நீளோபா! நாளை தான் கல்யாணம். அதற்கடுத்த நாள் வரை இந்த பொருட்களை காப்பாற்ற முடியாது. உனக்கு பிச்சைக்காரனிடம் வாங்குவதற்கு அவமானமாக இருக்கிறது போலும். நானும் மானம் உள்ளவன்தான். எனக்கு உன் வீட்டு சாப்பாடு வேண்டாம்’ என்று கூறி அங்கிருந்து புறப்படத் தயாரானார்.
‘என்ன! அனைத்து வேலைகளையும் கல்யாண பொண்ணும், அம்மாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு ஆட்கள் வைத்துக் கொள்ளக் கூடாதா?’ என்று நீளோபாவிடம் கேட்டார் முதியவர்.
சமையல்காரனாக...
‘அப்படியானால் நாளைக்கு சமையல்?’ என்று முதியவர் கேட்க, ‘அதற்காகத்தானே நேரம் கழித்து முகூர்த்தம் பார்த்தது. சீக்கிரமே எழுந்து சமையலை முடிக்க வேண்டியதுதான். தாலி கட்டி முடிந்ததும் அப்பளம் தயார் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்’ என்றார் நீளோபா.
அப்போது போய் அடுப்படியில் நுழைந்தவர்தான், அனைத்து பணிகளையும் பார்க்கத் தொடங்கிவிட்டார். இரவு நேரங்கழித்து தூங்கி, வெகு அதிகாலையிலேயே எழுந்து சமையல் பணியை முடித்துவிட்டார். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சமையலை ‘ஆஹா, ஓகோ’ என புகழ்ந்து தள்ளிவிட்டனர். அந்த வர்ணிப்பைக் கேட்டு நாக்கில் எச்சில் ஊற சாப்பிட வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
விருந்தினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், சம்பந்தியும் நீளோபாவை பாராட்டித் தள்ளினர். திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சென்று விட்டனர். நீளோபா, தன்னை அனைவரும் பாராட்டியதற்கு காரணமான முதியவரைக் கண்டு அவருக்கு பட்டு வஸ்திரம் அணிவிப்பதற்காக மடப்பள்ளிக்கு சென்றார்.
அவரது எண்ணம் பொய்யில்லை என்பதை, மடப்பள்ளியில் சிலையாக நின்று கொண்டிருந்த பாண்டுரங்கனின் விக்கிரகம் மெய்ப்பித்தது.
🙇♂️ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து🙇♂️
*ஆனி ஊஞ்சல் உற்சவம்* இன்று .16.06.2021- 2 ம் நாள் இன்று
🍃🌷 *மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்*🍃🌷
🍃🌷 *Madhurai Sri Meenakshi Sundareswarar Temple*🌷🍃
Aani Oonjal(swing) sevai day 2 today 16.06.2021
⭐⭐⭐⭐⭐⭐ மூன்றங்கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான் தெளிந்தங்கு
ஊன் தங்கி நின்றுருக்கும் உத்தரகோச மங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ.- எம்பிரான் மணிவாசக பெருமான்- -
✨✨✨✨✨✨ 🌙சொக்கே🌟 நின் தாளே👣 துணை🙏🏻
அந்த ‘டாபிக்’கைத் தொட்டு விட்டதால் சுருக்கமாக முழுக்கவும் சொல்லி முடித்தும் விடுகிறேன்.
‘
‘
’
அவர் ஒருமைப்பாடு, ’இன்டக்ரேஷன்’ என்று சொன்னதற்கு இந்த ஏற்பாட்டில் ஹானி ஏற்படாததைப் புரிந்துகொண்டு நான் சொன்னதற்கு ஒப்புக்கொண்டு போனார்.
மொழி பெயர்ப்புப் பணியை ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களிடம் கொடுக்க வேண்டும்.
*பதிவு 1006*🥇🥇🥇🏆🏆🏆💐💐💐💐💐💐💐
*US 997*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
40 வது ஸ்தபகம்
சத்வாரிம்ஸ ஸ்தபக
தைவகீதம் ( பாதா குலகவ்ருத்தம்) 👌👌👌
🦚🦚🦚🥇🥇🥇
*டபபாரம் தைவம்*
உலக பாரத்தை தன் புஜங்களில் ஏற்றுக் கொண்டவளாய் இருக்கிறாள்
*பதத் ருதஸம்பத் ஸாரம் தைவம்*
சகல சம்பத்தையும் கொடுக்கக் கூடிய பாத கமலங்களை உடையவளாக இருக்கிறாள் . 👣👣
*லாலிதநிர்ஜர வீரம் தைவம்*
தேவர்களின் வீரர்களை சீராட்டும் தெய்வமும் அவளே
*ரக்ஷிதஸாத் விக தீரம் தைவம்*
சாத்வீகமான வீரர்களைக் காப்பாற்றும் தெய்வமாகவும் இருக்கிறாள் 🥇🥇
*பதிவு 423*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
97
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
யாவத் கடாக்ஷ ரஜநீ ஸமயாகமஸ்தே
காமாக்ஷி தாவத சிராந் நமதாம் நராணாம்
ஆவிர் பவத்யம்ருத தீதி தி பிம்பமம்ப
ஸம்வின்மயம் ஹ்ருதய பூர்வ கிரீந்த்ரச் ருங்கே 🙏🙏🙏
இவர்களுக்கு *ராவல்ஜி* என்ற பெயர் உண்டு.
எனவே, இங்கு பூஜைகள் கேரள முறைப்படி நடைபெறுகின்றது.
ஆதிசங்கரர் இந்து மதத்தினை பரப்ப முதன் முதலாக தெற்கே சிருங்கேரியிலும், வடக்கே பத்ரிநாதத்திலும் கிழக்கே பூரியிலும், மேற்கே துவாரகையிலும், சிருங்கேரி மடங்கள் நிறுவினர்.
எனவே பத்ரியில் உள்ள சிருங்கேரி மடம் முக்கியத்துவம் வாய்ந்தது. 👏👏👏
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
பிறகு யோசித்துப் பயன் ஒன்றுமில்லை.
சீதையை விட்டுவிடுவதே சிறந்த தவம்".
"அரசே! இறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
முன்னை நாள் முதல் இந்நாள் வரைக்கும் யான் செய்த குற்றங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்வாயாக!
இனி உன்னைக் காணும் பேறு எனக்கு இல்லை.
தலைவனே! உன்னிடம் விடை பெற்றுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமல் சென்றான்.🙏🙏🙏
*பாடல் 63* 🌸🌸🌸🙏🙏🙏
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
அவள் புகழை உணராதவர்களுக்கு, எழுதும் பதிவுகளை படிக்காதவர்களுக்கு அவள் உயர்வை சொல்லி ஒரு பிரயோசனமும் இல்லை என்று கோபமும் வருத்தமும் கலந்து பாடுகிறார் ..🌝🌝🌝
கூறும் பொருள்
குன்றில் கொட்டும் தறி குறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே👏👏👏
ஆதி சங்கரர் இந்து மதத்தை ஆறு சமயங்களாக பிரித்தார்
சூரியனை வணங்கும் *சௌரம்* ,
குமரனை வணங்கும் *கௌமாரம்* ,
சிவனை வணங்கும் *சைவம்* ,
விஷ்ணுவை வணங்கும் *வைஷ்ணவம்* ,
சக்தியை வணங்கும் *சாக்தம்* ,
கணபதியை வணங்கும் *காணபத்யம்*
இந்த ஆறு சமயங்களின் அதிபதிகளும் வந்து அடி பணியும் ஒரே தெய்வம் அன்னை அபிராமி ...
எனவே அவள் ஒருத்தியை வணங்கினால் போதுமே ...
இவர் உயர்ந்தவர் அவர் உயர்ந்தவர் என்று ஏன் பேதைமை பாராட்ட வேண்டும் ?
அவளை விட வேறு சமயங்கள் இருக்கிறது என்று சொல்பவர்கள் வீணர்கள் அறிவீலிகள் .. புல்லர்கள் 🥇🥇🥇
சென்று அடைய வேண்டிய இடத்திற்கு தேறிச் செல்லும் படி சில வழிகள் காட்டுபவள் அபிராமி அன்னை..
அதை நாம் கடைப்பிடித்தால் நற்கதி வெகு விரைவில் அடையலாம் ..
இப்பொழுது மேலிருந்து படியுங்கள் அதே அர்த்தம் வரும் 👏👏👏
சென்று அடைய வேண்டிய இடத்திற்கு தேறிச் செல்லும் படி சில வழிகள் காட்டுபவள் அபிராமி அன்னை..
அதை நாம் கடைப்பிடித்தால் நற்கதி வெகு விரைவில் அடையலாம் ..
இப்பொழுது மேலிருந்து படியுங்கள் அதே அர்த்தம் வரும் 👏👏👏
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-
பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-
எதனூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-
பல பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-
ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-
ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-
உபசாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-
நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-
இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?🥇🥇🥇
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-
பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-
என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.👏👏👏
இராமன் தாடகை மீதுவிட்ட அம்புகள் தாடகையின் நெஞ்சில் பாய்ந்து அப்புறம் கழன்று போயின.
*அவை, அற்பர்களுக்கு அறிஞர்கள் சொன்ன அறிவுரை போல ஆயின.*
சொல் ஒக்கும் கடிய வேகச்
சுடுசரம், கரிய செம்மல்,
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல்
விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தங்காது,
அப்புறம் கழன்று, கல்லாப்
*புல்லர்க்கு நல்லோர் சொன்ன*
*பொருள் எனப்போயிற்று அன்றே!* 👌👌👌
(கம்பன்-388)
நீல சுந்தரி கோமளி யாமளி
நாட கம்பயில் நாரணி பூரணி
நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
காம சுந்தரி யேதரு பாலக
நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச....
யாதொரு தெய்வம் கொண்டீர்
அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம்
வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப் படும் இறக்கும்
பிறக்கும் மேல்வினையும் செய்யும்
ஆதலான் இவை
இலாதான்
அறிந்துஅருள் செய்வன் அன்றே! (25)🥇🥇🥇
எந்தத் தெய்வத்தை வணங்கினும் மாதொருபாகனாகிய சிவனே வந்து அருள்செய்வான்.
பிறதெய்வங்கள் யாவும் உயிர்களே! ஆகையால் அவைகள் வினைகள் செய்யும்.இன்ப துன்பம் அனுபவிக்கும்.இறக்கும்.பிறக்கும்.ஆனால் எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானுக்கு இக்குறைபாடுகள் இல்லையாதலால், செய்த செயல்களுக்கு ஏற்ப பயனைக் கொடுக்கவல்லவன் ஆவனே ஆவான்.
*குன்றின் மேல் கொட்டுந் தறிபோல்* தலைதகர்ந்து சென்றிசையா வாகும் செவிக்கு’ (257)
பன்றிக்குக் கூழ் வார்க்கும் பாத்திரத்தில் மாங்கனிச் சாற்றினை ஊற்றுவதுபோல் பயனற்றது நன்றறியாதவனுக்கு அறம் உரைப்பது.
அப்படி உரைத்தால் பாறை நிலத்தில் முளைக்குச்சி அடிக்கும்போது அதன் தலைப்பகுதி உடைந்து போவதைப் போல் சொற்கள் வீணாகும். இது பொருள் ...
🌷🌷🙏🏻🙏🏻
ஹரியோ, ஹரணோ,
மூஷிகவாகனோ
முருகனோ
ஆதவனோ
மனம் செல்லும் வழி வேறாகினும்
அனைத்தும் அபிராமியை அடையும் வேராகும்
வேறு, வேறு வேர்களானாலும் உரிஞ்சுவது நீராகும் அதுவே மரத்தின் உயிராகும்
வேறு வேறு பாதையானாலும் உருஞ்சுவது அபிராமியின் அருளல்லவா
அதுவே நம் வாழ்வின் பொருள் அல்லவா
மும்மூர்த்திகளின் மூச்சவள்
ஐம்பூதங்களின் ஐக்கியம் அவள்
எட்டு திசைகளும் அவள்
அருவமாய் அகிலத்தை அணைக்கும்
அன்னை அபிராமி
என தினம் தினம்
மனம் மணக்க
குணம் தழைக்க
சினம் சிதைக்க
தலைகணம் மறக்க
உங்கள் படைப்புகள் கண்டு
அவையமது அபிராமியை நினைத்து குவியமாகி கூத்தாடுகிறது
சரண்யே த்ரயம்பிகே தேவி நாராயணி நமோஸ்துதே
🙏🙏🙏🙏🙏
அணிகலன்களின்
தொகுப்பு
மாலை
அபிராமி அந்தாதி
அற்புதம்🌷🌷🌷🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏
அவருக்குப் பதினாறு குழந்தைகள்!
திருவரங்கநாதன் கோயிலில் பிரசாதம்வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெற்றுக்கொள்ள முதல் ஆளாக வந்து நின்றுவிடுவார்.
தான் ஒருவனுக்கு மட்டுமின்றித் தன்குடும்பம் முழுமைக்கும் பிரசாதம் வேண்டுமெனக் கேட்பார்.
ஒருநாள் பிரசாதம் பெற்றுக்கொள்ளத் தன் பதினாறு மெலிந்த குழந்தைகளுடன் வரிசையில் வந்துநின்றுவிட்டார் அந்த வைணவர்.
கோயில் பணியாளர்கள் அந்த வைணவரை விரட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வைணவரை அழைத்து, “நீர் கோயிலில் ஏதாவது தொண்டு செய்துவிட்டுப் பிரசாதம் பெற்றுச் சென்றால் யாரும் உம்மைக் கேள்வி கேட்க மாட்டார்கள்.
ஆனால், நீர் பிரசாதம் பெறவேண்டும் என்பதற்காகவே இரவுபகலாக இங்கே கோயிலில் வந்து நின்றிருப்பதால் தானே இத்தகைய கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது?” என்று கேட்டார் ராமாநுஜர்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் தான் ஓரிரு வரிகள் தெரியும்.
இப்படிப்பட்ட நான் என் பதினாறு குழந்தைகளுக்கு உணவளிக்க வேறென்ன வழி?” என்று ராமாநுஜரிடம் கேட்டார்.
அந்த வைணவரும் தழுதழுத்த குரலில், “விச்வம், விஷ்ணுர், வஷட்காரோ....” என்று சொல்லத் தொடங்கினார்.
ஆனால் ‘பூதப்ருத்’ என்ற ஆறாவது திருநாமத்தைத் தாண்டி அவருக்குச் சொல்லத் தெரியவில்லை.
“அடியேனை மன்னிக்க வேண்டும்!” என்று ராமாநுஜர் திருவடிகளில் விழுந்தார். அந்த ஏழையின்மேல் கருணைகொண்ட ராமாநுஜர்,
“பூதப்ருத் என்ற ஆறாவது திருநாமத்தை அறிந்திருக்கிறீர் அல்லவா? அதுவே போதும்!
அடுத்தநாள்முதல் அரங்கனின் கோயிலில் அந்த ஏழை வைணவரைக் காணவில்லை.
அவர் எங்கு சென்றார் எனக் கோயில் பணியாளர்களிடம் ராமாநுஜர் விசாரித்த போது, “வேறு எங்காவது அன்னதானம் வழங்கியி ருப்பார்கள், அங்கு சென்றிருப்பார்!” என அலட்சியமாகக் கூறினார்கள்.
அரங்கனுக்குச் சமர்ப்பிக்கப்படும் பிரசாதத்தில் ஒரு பகுதி மட்டும் தினமும் காணாமல் போய்க்கொண்டே இருந்தது.
இத்தனைப் பணியாளர்கள் இருக்கையில் யாருக்கும் தெரியாமல் உணவைத் திருடிச் செல்லும் அந்த மாயத்திருடன் யாரென யாருக்கும் புரியவில்லை.
இச்செய்தி ராமாநுஜரின் செவிகளை எட்டியது. “எவ்வளவு நாட்களாக இது நடக்கிறது?” என வினவினார் ராமாநுஜர்.
“அந்த வைணவர் இப்போது எங்கிருக்கிறார் எனத் தேடிக் கண்டறியுங்கள்!” என உத்தரவிட்டார் ராமாநுஜர். கோயில் பணியாளர்களும் அவரைத் தேடத் தொடங்கினார்கள்.
ராமாநுஜரைக் கண்டதும் அந்த வைணவர் ஓடி வந்து அவர் திருவடிகளை வணங்கி, “ஸ்வாமி! அந்தப் பையன் தினமும் இருமுறை என்னைத் தேடிவந்துப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கிறான். நானும் ‘பூதப்ருதே நம:’ என தினமும் ஜபம் செய்து வருகிறேன்!” என்றார்.
“எந்தப் பையன்?” என்று வியப்புடன் கேட்டார் ராமாநுஜர்.
“அவன் பெயர் ‘அழகிய மணவாள ராமாநுஜ தாசன்’ என்று சொன்னான்!” என்றார் அந்த ஏழை.
“கோயிலுக்கு அருகில் இருந்து இறைவனுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்று இவ்வளவு தூரம் தள்ளி வந்து இந்த மரத்தடியில் தங்கினேன்.
‘அழகிய மணவாளன்’ எனப் பெயர்பெற்ற அரங்கன் தான் சிறுவன் வடிவில் சென்று பிரசாதம் வழங்கியுள்ளான் என உணர்ந்து கொண்ட ராமாநுஜர்,“நான் யாரையும் அனுப்பவில்லை.
‘பூதப்ருத்’ என்ற திருநாமத்துக்கு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பவன் என்று பொருள்.
‘
“பூதப்ருதே நம:” என்று விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் ஆறாவது திருநாமத்தை ஜபிக்கும் அடியார்களுக்கெல்லாம் அரங்கனே நல்ல உணவளித்து அவர்களைச் சத்துள்ளவர்களாக ஆக்கிடுவான்.
ரங்கா ! ஸ்ரீ ரங்கா !
சார், பெண்ணோ பிள்ளையோ பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட வயது வரை அப்பா அம்மா மேல் விழுந்து புரண்டு பாசத்தை பொழிவார்கள்.
அந்தப் பாசத்திற்கு பெற்றோர் அடிமையாகி அவர்களுக்காகவே தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வார்கள்.
பாசம், கட்டுப்படுதலில் பெற்றோர்களிடமிருந்து அவர்களுக்கு பாசத்தில் பாதியளவுக்கு மேலே விலகல் ஏற்படும்.
அதாவது அவர்களைப் பொருத்தவரை பெற்றோர் என்பவர் தங்களுக்கு கேட்டதை வாங்கிக் கொடுக்கும் இரண்டு ஜீவன்கள்..அவ்வளவுதான்.
இதை ஆரம்பத்திலேயே பெற்றோர் புரிந்து கொண்டால் அதிக எதிர்பார்ப்பு அதிக நம்பிக்கை போன்ற விஷயங்களால் பின்னாளில் மன உளைச்சலை சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
மிக மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்,பிள்ளைகள் வளர வளரத்தான் கணவனும் மனைவியும் தங்கள் இருவருக்கும் இடையிலான வாழ்க்கையை அதிகமாக நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
வாரிசுகளுக்கு ஒரு அளவுக்கு பிரித்துக் கொடுத்தாலும் தங்கள் கடைசி காலம்வரை சுயசார்பு பொருளாதார பலத்துடனும் சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும்.
வயதான காலத்திலும் பிள்ளைகளை எதிர்பார்க்காமல் தனக்கான நட்பு மற்றும் உறவினர்களுக்கு முடிந்தவரை உதவ முடியும்.
போரில் இந்திரசித்து இறந்ததை தூதுவர்கள் வந்து சொல்கிறார்கள். இராவணனால் நம்ப முடியவில்லை.
எமனாவது, இந்திரஜித்தின் உயிரை எடுப்பதாவது. அவனுக்கு ஏது அவ்வளவு தைரியம்.
இந்த இந்திரசித்து ஏதோ ஒரு உலகில் ஒளிந்து கொண்டு என்னோடு விளையாடுகிறான் என்று நினைக்கிறான்.
பாடல்
'கூற்றம் உன் எதிர் வந்து, உயிர் கொள்வது ஓர்
ஊற்றம்தான் உடைத்து அன்று; எனையும் ஒளித்து
ஏற்ற எவ் உலகு உற்றனை? எல்லை இல்
ஆற்றலாய்!' என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.
பொருள்
'கூற்றம் உன் எதிர் வந்து = எமன் உன் முன்னால் வந்து
உயிர் கொள்வது = உன் உயிரை எடுத்துக் கொள்ளும்
ஓர் ஊற்றம்தான் உடைத்து அன்று = ஒரு வலிமையையும் உள்ளது அன்று
எனையும் ஒளித்து = என்னிடம் இருந்து ஒளிந்து கொண்டு
ஏற்ற எவ் உலகு உற்றனை? = சிறந்த எந்த உலகுக்கு சென்றாய்
எல்லை இல் ஆற்றலாய்!' = எல்லை இல்லாத ஆற்றல் உள்ளவனே
என்று உரைக்கும் - அங்கு ஓர் தலை.= என்று சொல்லும் இராவணனின் ஒரு தலை
ஒரு அரசனின் பெருமையை சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லலாம்?
இலக்கியங்களை படிக்கும் போது, ஒரு விடயத்தை நாம் சொல்ல வேண்டி இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மால் அந்த விடயத்தை எவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். பின், இலக்கியத்தைப் படிக்க வேண்டும். அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தின் பெருமை புரியும்.
தசரதனின் பெருமையை சொல்ல வருகிறார் கம்பர்.
ஒரு பேரரசனின் பெருமை என்றால் என்னவாக இருக்கும். பெரிய யாகங்களை செய்வது. அச்வதமேத யாகம் போன்ற யாகங்கள் செய்வது என்றால் மற்ற அரசர்கள் அந்த அரசனை பேரரசன் என்று ஏற்றுக் கொண்டு கப்பம் கட்ட ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த யாகம் செய்யும் அரசன் கப்பம் கட்ட மறுக்கும் அரசர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை வெல்ல வேண்டும்.
நிறைய அரசர்கள் அதற்கு முயற்சி செய்வார்கள். எல்லோராலும் முடியாது.
எனவே, கம்பன் என்ன சொல்லி இருப்பான்? தசரதன் பல அச்வேமேத யாகங்கள் செய்தான் என்று சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் அவன் ரொம்ப சாதாரண ஒரு கவிஞனாகி இருப்பான்.
கம்பன் சொல்கிறான். "பெரிய பெரிய யாகங்கள் எல்லாம் செய்ய வேண்டும் பல அரசர்கள் முயல்வார்கள். அந்த யாகங்கள் எல்லாம் தசரதன் என்றோ செய்து முடித்து, அப்படி ஒன்று நடந்ததையே மறந்தும் விட்டான்" என்று. அவ்வளவு நாள் ஆகி விட்டதாம். "இதெல்லாம் நான் என்றோ செய்து முடித்து விட்டேன்...எப்ப என்று நினைவில் கூட இல்லை " என்று சொல்லும் அளவுக்கு தசரதன் இருந்தானாம். அவ்வளவு நாட்களுக்கு முன்னால் செய்திருந்தால், அதற்கு பின் எவ்வளவு காரியங்கள் செய்திருப்பான் என்பதை நம் கற்பனைக்கு விடுகிறான்.
அது மட்டும் அல்ல, தசரதன் நிறைய தான தர்மங்கள் செய்வான் என்று சொல்ல வந்த கம்பன் சொல்கிறான் "ஒவ்வொரு தரம் தானம் செய்யும் போதும் கையில் நீர் எடுத்து தாரை வார்த்துக் கொடுப்பான். அப்படி தசரதன் கையில் இருந்து வழியும் நீரால் நனையாத கைகளே இல்லை". அப்படி என்றால், அவனிடம் உதவி பெறாத நபர்களே இல்லை என்று அர்த்தம்.
மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்
கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;
மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்
செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.
ஆர்கலி = கடல்
சூழ் = சூழ்ந்த
முது பாரில் = முதிய உலகில்
முகந்து = நீரை முகந்து
தானக் = தானம் செய்யும்
கை ஆர் புனலால் = கையில் இருந்து வழியும் நீரால்
நனையாதன கையும் இல்லை; = நனையாத கை என்று ஒரு கையும் உலகில் இல்லை
மெய் ஆய = உண்மையான
வேதத் துறை = வேத வழியில் நடக்கும்
வேந்தருக்கு = அரசர்களுக்கு
ஏய்ந்த. யாரும் = பெருமை/பொருந்திய
யாரும் = அனைவரும்
செய்யாத. யாகம் = செய்யாத யாகங்கள்
இவன் = தசரதன்
செய்து மறந்த மாதோ. = செய்து பின் நீண்ட ஆள் ஆனதால் மறந்து போன யாகங்கள்.
என்ன ஒரு கற்பனை.
இராமாயணத்தில் என்னை மிகவும் பாதித்த இடம் இந்திர சித்தன் போரும் மரணமும்.
தந்தை மாற்றான் மனைவியை கவர்ந்து வந்து வைத்து இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கு இதில் உடன் பாடு இல்லை. இந்திரசித்து அது தவறு என்று இராவணனிடம் சொல்கிறான். இராவணன் கேட்டான் இல்லை.
பிள்ளை மேல் பாசம் இல்லையா? அல்லது சீதை மேல் கொண்ட காதல் அவ்வளவு ஆழமானதா?
போருக்கு புறப்படும் முன் இந்திரசித்து சொல்கிறான்
" ஐயனே, உன் மற்ற பிள்ளைகள் போரில் இறந்து போய் விட்டார்கக்ல் என்று நீ வருந்தாதே. இன்று என் போர்த் தொழிலைப் பார். இந்த குரங்கு கூட்டம் அத்தனையும் கொன்று அவற்றின் உடலை பிணங்களின் குப்பையாக செய்து விடுகிறேன். இராம இலக்குவர்களின் உயிரற்ற உடலை சீதையும், அந்த தேவர்களும் காணும் படி செய்கிறேன்" என்று
வணங்கி, ‘நீ, ஐய! “நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன
உணங்கலை; இன்று காண்டி, உலப்பு அறு குரங்கை நீக்கி,
பிணங்களின் குப்பை; மற்றை நரர் உயிர் பிரிந்த யாக்கை
கணங் குழைச் சீதைதானும், அமரரும் காண்பர்’ என்றான்.
‘நீ, ஐய! = ஐயா நீ
“நொய்தின் மாண்டனர் மக்கள்” என்ன = உன் பிள்ளைகள் இறந்து போய் விட்டார்கள் என்று
உணங்கலை; = வருந்தாதே
உலப்பு அறு = அளவற்ற
குரங்கை நீக்கி, = குரங்கு கூட்டத்தை ஒழித்து
பிணங்களின் குப்பை; = பிணக் குப்பையாக மாற்றி விடுகிறேன்
மற்றை நரர் = மனிதர்களான இராம இலக்குவர்களின்
உயிர் பிரிந்த யாக்கை = உயிரற்ற உடலை
கணங் குழைச் சீதைதானும் = காதணி கொண்ட சீதையும்
அமரரும் காண்பர்’ என்றான். = தேவர்களும் காண்பார்கள் என்றான்
Starting with the bishop move. Each one of them was beyond my imagination
I was always thinking that next move is check mate.
Sane abhijit: It just didn't happen.
Sane abhijit: Salute.
If you recollect, it was repeat of our afternoon game. In which I made mistake of pushing pawn in front of my king. I didn't repeat the mistake.
And you probably didn't see the knight sacrifice for two pawns. I think that was turning point.
Sane abhijit: But today my respect for you has grown manifold. I just couldnt see any of your moves.
Sane abhijit: One mistake and my piece sacrifice would have cost me the game
*பதிவு 8* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 11*
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்*
பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள்
இன்றைய நாளை உங்கள் எல்லோர்க்கும் இனிய நாளாக்கட்டும் .
இன்று என்ன கேள்விகள் ? 🦜🦜🦜
*நான்*
ஐயனே ... ஒரு பாடலில் தாங்கள் "பொருளே பொருள் தரும் போகமே பெரும் போகம் தரும் மருளே மருளில் வரும் தெளிரே!"
என்று பாடினீர்கள் .
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது ..
எப்படி அம்பாள் நமக்கு மயக்கத்தையும் ( மருள்) தந்து அதை தெளியவும் வைப்பவளாக இருக்கிறாள்.. 🤔🤔
இது உண்மை என்றால் முதலில் ஏன் அவள் நமக்கு மயக்கம் தர வேண்டும்?
பின்பு அதையே தெளிய வைக்க வேண்டும் ..??
பிணியும் அவளே பிணிக்கு மருந்தும் அவளே என்பதைப்போலவும் , குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவதைப்போலவும் இருக்கிறதே !!
நல்ல கேள்வி ... நீ லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறாய் அல்லவா??
அதில் பல எதிர்மறை நாமங்கள் வரும் ..
நித்ய திருப்தா , அநித்ய திருப்தா என்று எதிர்மறை நாமங்கள் ..
இதன் அர்த்தத்தை உன்னைப்போல் நுனிப்புல்லை மேய்பவன் புரிந்து கொள்ள முடியாது ..
இருட்டும் (
அஞ்சானமும் ) வெளிச்சமும் ( ஞானமும்) அவளே .. உள்ளும் அவளே வெளியும் அவளே ...
அவளே செல்வமாக பொருளாக, தனமாக இருக்கிறாள் ...
வெறும் செல்வம் மட்டும் உன்னிடம் இருந்தால் என்ன பிரயோசனம் ?
அதை அனுபவிக்கக் கூடிய பாக்கியம் வேண்டாமா ?
நீ இறக்கும் போது உன் bank balance 10 கோடியாய் இருந்தால் அதனால் உனக்கு என்ன பிரயோசனம் ?
இப்பொழுது இதைத்தான் *Die empty* ..என்று சொல்கிறீர்கள் ...
பிறருக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு தான தருமங்கள் செய்யுங்கள் ...
அபிராமியும் நீங்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு உங்களுக்கு வாழ்வில் வளம் தருவாள்
அவளை துதிப்பதால் தனம் பெருகுகிறது
அது மட்டும் அல்ல சேர்த்த செல்வதை அனுபவிக்கும் போகம் ( பாக்கியம் , அருகதை) தருகிறாள் ...
எல்லோருக்கும் அல்ல .. நல்ல வழியில் பொருள் சேர்ப்பவர்களுக்கு (
ill - earned will always be
ill - spent)
🙏🙏🙏
இவ்வளவு கிடைத்த பின் அவள் நம்மை புடம் போட்ட தங்கமா இவன் என்று சோதிக்கிறாள்
அதுதான் பண மோகம் இதைத்தான் *மருள்* என்று சொன்னேன் ..
இதிலிருந்து மீண்டு அவள் பாத கமலங்கள் தான் நிரந்தரம் அவை தான் வேண்டும், என்று உறுதியாக நினைக்கும் போது அந்த மருளில் தெளிவு கிடைக்க செய்கிறாள் ...
மருள் அவசியம் வேண்டும் ... நம் மனம் எவ்வளவு உறுதி என்பதை உணர ... இப்படி செய்து அவள் தன் உண்மையான பக்தர்களை முத்துக்கள் போல் தேர்ந்தெடுக்கிறாள் மாலையாக அவர்களை கோத்துக்கொண்டு வெண் முத்து மாலையாக அணிந்து கொள்கிறாள் ...
இப்போ சொல் ... குழப்பம் வருகிறதா ? 💐💐💐
குழந்தையை கிள்ளிவிட்டு என்றெல்லாம் ஒரு குழந்தை போல் கேள்வி கேட்டு விட்டேன் . என் அறியாமையை மன்னியுங்கள் 🥇
*பட்டர்* பரவாயில்லை என்னிடம் கேள்விகள் கேட்காமல் வேறு யாரிடம் கேட்கப்போகிறாய் ... நாளை பார்ப்போம் ...
வானம் பூர்ண நிலவை மேகங்களின் நடுவே வெளிக் கொண்டு வந்தது ..
பூரித்துப்போனேன் அந்த பூரி ஜகன்நாத்தின் திரு தங்கச்சியை நிலவாய் பார்த்தவுடன் 🌝🌝🌝
அதற்கு சரியான விளக்கம் கொடுத்து பதிலை அறிய வைத்த வார்த்தை சித்தர் என்கிற சக்தியின் அபிராமி பட்டருக்கு நன்றிகள் கோடி கோடி...
🙏🙏🙏🙏🙏🙏
*தினமலர்*🙏🙏🙏 (17.06.21)
தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி, தண்டாயுதபாணி திருக்கோயில் இருப்பது நமக்குத் தெரியும். கேரள மாநிலத்தில் 'கேரளாவின் பழனி' என்றழைக்கப்படும் திருத்தலம் ஒன்று இருப்பது தெரியுமா? அது... கண்ணூார் மாவட்டத்தில் பையனுாரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்.
🌻🌻🌺
தென்னிந்தியாவின் மூக்கியமான மூன்று மகா சுப்பிரமண்யா கோயில்களில் இதுவும் ஒன்று. 'பையனூர் பெருமாள்' என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. பிரதான தெய்வமான சுப்பிரமணியர், 6 அடி உயரத்தில் வலது கை வேல் ஏந்தியும், இடது கை தொடை மீது வைத்தும் அருள்பாலிக்கிறார். இரண்டு மாடி கருவறை. யானையின் பின்புற வடிவம் கொண்டிருக்கிறது. கணபதி, பூதத்தர், கன்யா பகவதி, சாஸ்தா, பரசுராமர் மற்றும் சேத்ரபாலன், வைராஜாதன் சிலை வடிவங்களும் இக்கோயிலில் உள்ளன.
🌻🌻🌻
இது, விஸ்வகர்மரால், பரசுராமரின் கட்டளைப்படி கட்டப்பட்ட கோயில் என்று நம்பப்படுகிறது. 2 முறை அழிவிற்குள்ளாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புனரமைக்கப்பட்டது. பொதுவாக திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குவது மரபு. ஆனால் இங்கு அந்த மரபு இல்லை. கோயிலின் முன்முற்றத்தில் உள்ள இலஞ்சி மரத்தில் பழம் பழுப்பதேயில்லை. இங்கு முக்கிய திருவிழாவாக ஆராதன மகோத்ஸவம் கொண்டாடப்படுகிறது.
🌷🌷🌷
செல்வம், தைரியம், ஆயுள் என்று பல நம்பிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதாக மோதிரம். காப்பு. தாயத்து அணியும் வழக்கம் தலைமுறைகளாக நம்மிடையே உண்டு. இதற்காக ராசிக்கல், நவரத்தினம், யானை வால் மூடி, புலி நகம் ஆகியவற்றை பயன்படுத்தி அணிகலன்கள் தயாரிக்கப்படுகின்றன.
பெண்கள்
வளையலாகவும்
இதை அணிபவர்களுக்கு செல்வமும், இறையருளும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பூஜை, ஹோமம், தர்ப்பணம் ஆகியவை செய்யும்போது இம்மோதிரம் அணிவது விசேஷமானது. இந்த பவித்ரத்தை ஒரு குடும்பத்தினர் மட்டுமே தலைமுறைகளாக தயாரிக் கின்றனர். இந்த மோதிரங்கள் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜை செய்த பிறகே வழங்கப்படும்.
🌸🌸
பையனூர் பவித்ரத்தின் வெளிப்புற மேற்பரப்பில் மூன்று கோடுகள் உள்ளன. அவை மனித உடலின் இடங்கலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்ற மூன்று நதிகளைக் (நாடிகள்) குறிக்கின்றன. இந்த மூன்று நதிகளின் கலவையானது மனிதர்களில் உள்ள உயிர் சக்தியை அல்லது 'குண்டலினி சக்தியை' எழுப்ப வல்லது. இந்தப் புனித மோதிரம் பிரம்மா,சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய மூன்று தெய்வங்களின் சக்தியை எழுப்பும் என்பது பையனூர் சனாதன தர்மத்தவரின் நம்பிக்கை.
🌸🌸
👇👇👇👇
*(திப்பு சுல்தான் படையெடுப்பின்போது, சுப்பிரமணிய சுவாமி கோயில் இடிக்கப்பட்டது. மீண்டும் கோயிலை புனரமைக்க மக்கள் முயற்சித்தனர். பூஜை செய்ய வயது முதிர்ந்த தந்திரிகள் எவரும் கிடைக்காமல், சிறுவனாக இருந்த தரணல்லூர் தந்திரி பூஜைக்கு அமர்த்தப்பட்டார்.
பூஜையின்போது விரலில் அணிந்திருக்கும் தர்ப்பைப் புல் மோதிரம் தரையில் விழுந்து விடக்கூடாது. எனவே தர்ப்பைப் புல் பயன்படுத்தி தங்க மோதிரம் அணிந்து கொள்வது என்று தரணல்லூார் தந்திரி தீர்மானித்தார். இதற்கான சூட்சுமத்தை சொவ்வட்டா வளப்பில் கேளப்பன் பெருந்தட்டான் என்பவருக்கு தெரிவித்து பவித்ரம் மோதிரம் செய்தார். இன்றும் பையனூரில் வசிக்கும் பெருந்தட்டான் குடும்பத்தினரே பவித்ரம் மோதிரம் செய்ய உரிமையுடையவர்கள்..)* நன்றி
சுப்ரமண்ய சர்மா.S
கும்பகோணம்
7598833990.