அபிராமி அந்தாதி -A recap ..4 - நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்!

                                             அபிராமி அந்தாதி 

A recap ..4

நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்!



01  கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!

அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!

அபிராமியம்பிகா திவ்ய சரணார விந்தயோஹோ,
தீப மங்கள கர்ப்பூர நீராஞ்சனம் தரிசயாமி!

அருள்வாமி அபிராமி திருவடிச் சரணங்களிலே,
திவ்ய மங்கள கர்ப்பூரத் தீப தரிசனம் காண்மின்களே!




இதோ, கர்ப்பூர ஆரத்தியை ஒற்றிக் கொள்ளுங்கள்! அபிராமி அம்மன் திருவடிகளே சரணம் சரணம்!!




அபிராமி அந்தாதி முற்று பெறுகிறது ... தவறு தவறு .. முற்றுப்பள்ளி வைக்கவே முடியாது .. மீண்டும் உதயம் ... 

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் 
உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் .... மாதுளம்போது 
மலர் கமலை துதிக்கின்ற மின் கொடி .......

அனைவரையும் காப்பாற்றுவாள் .. அபிராமி அந்தாதியை எழுத வைத்த உங்கள் எல்லோருக்கும் அடியேனின் சாஷ்ட்டாங்க நமஸ்காரங்கள்




அபிராமி அந்தாதி ..

என் மனதை தொட்ட பதிகம் .. 

நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன் .
பட்டருக்கு வராத கஷ்டங்களா நமக்கு வரப்போகிறது ...?? 

முதலில் பெண் பித்து பிடித்தவன் என்ற பட்டம் .. 

சிறு சிறு துஷ்ட தேவதைகளை வணங்குபவன் .. black magic செய்பவன்.... என்ற பட்டம் ... 





திதி இன்று என்ன என்று சொல்லத்தெரியாதவன் என்ற பட்டம் ... 

எல்லாத்தையும் விட தன்னை சுற்றி கொழுந்து விட்டு எரியும் நெருப்பு ... 🔥🔥🔥

78 பாடல்கள் ... Nope ... அம்பாள் வருவதாய் தெரியவில்லை .. 

கொஞ்சமும் அவளை திட்ட வில்லை 

தன்னையே நொந்து கொள்ளவும் இல்லை ... 

நம்பிக்கை பூர்ண சரணாகதி ... 

அபிராமி காப்பாற்றுவாள் என்று அசைக்க முடியாத உறுதி ... 

இது தான் நமக்கும் வர வேண்டும் ... 




ஒரு சிறிய கஷ்டம் என்ற உடனே நம்மையே நொந்து கொள்கிறோம் .. 

அம்பாளை திட்டுகிறோம் .. 

ஏன் எனக்கு மட்டுமே கஷ்டம் தருகிறாய் என்று திட்டுகிறோம் .. 

எழும் குண்டலினி மீன்டும் மூலாதாரத்தில் கம்பிளி போர்த்திக்கொண்டு தூங்கி விடுகிறது .... 

எது வந்தாலும் வரட்டும் தினம் ஒரு பதிகமாவது படியுங்கள்...  

மனப்பாடமும் ஆகி விடும் .. பொருளும் புரிந்து விடும் ... 

வாழ்க்கை சொர்க்கமாவதை கண்டிப்பாக உணர்வீர்கள் 🥇🥇🥇




👍👍👍👍👍👌👌👌👌💐💐💐😊😊😊😊

Comments

சவிதா said…
ஆஹா கலையாத கல்வியும்.
அற்புதமான பதிவு
Savitha said…
With full dedication
Great
Moorthi said…
நீங்கள் சொன்னது 100/100
ஆமோதிக்கரோம் ஐயா🙏🏻
Kousalya said…
அற்புதம் அற்புதம் அற்புதம்....வேறு வார்த்தைகளில் சொல்ல முடியாது...🙏🙏🙏🌹🌹🌹
ravi said…
*யுத்த காண்டம்*

புஷ்கரத் தீவின் தலைவன் வன்னி என்பவன், "யார் அந்த மானுடர்?" என்கிறான். அவர்களுடைய வலிமை எத்தகையது? உடனே மாலியவான் எழுந்து, இராம லக்ஷ்மணர்களுடைய பெருமைகளையும், வானர வீரர்களின் வலிமையையும், விரித்துக் கூறி, சீதையை விட்டுவிடுதலே நல்லது என்று மறுபடியும் அறிவுரை நல்குகிறான்.

அதற்கு வன்னி, "சீதையை விடுவதென்றால் முன்னமே செய்திருக்க வேண்டும். இந்திரஜித் மாண்டுபோன பிறகு செய்வது தக்கதன்று" என்கிறான். இனி பகைவரை வெல்வது ஒன்றே வழி, எழுக! என்று சொல்லி அனைவரும் போருக்குப் புறப்பட்டனர்.👍👍
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 65*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு சிவானந்த லஹரியில 11ஆவது ஸ்லோகமும் 12ஆவது ஸ்லோகமும் பார்ப்போம்

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो

नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।

यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते

तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥

வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ

நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।

யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே

ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
ravi said…
ன்னு அழகான ஒரு ஸ்லோகம். வடுன்னா பிரம்மசாரின்னு அர்த்தம். கேஹின்னா க்ஹஸ்தன்னு அர்த்தம். யதின்னா ஸந்யாசின்னு அர்த்தம்.

ஜடின்னா ஜடை போட்டுண்ட வானப்ரஸ்தன். ததிரஹா –

இந்த நான்கு ஆஸ்ரமத்துல இருக்கிறவாளோ, அல்லது இதுக்கும் வெளியில அதி வர்ணாஸ்ரமியா இருக்கிறவாளோ, நரோ வா ய: கஸ்சித்³ ப⁴வது – ஒரு மனிதன் எந்த ஆஸ்ரமத்தில் வேணும்னாலும் இருக்கட்டும்.....🏵️🏵️🏵️
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 84.. 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*ஸ்வயம்பூச்‌* ச’ம்பு-ராதித்ய:

புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
அறைக்குள் வந்த அவரிடம், “குருதக்ஷிணை வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள்!

இந்தப் பலராமனும் கண்ணனும் அறுபத்து நான்கே நாட்களில்
அறுபத்து நான்கு கலைகளையும் கற்றிருக்கிறார்கள்.

எனவே இவர்கள் அசாத்தியமான செயல்களையும் சாதிக்கும் வல்லமை பொருந்தியவர்கள்.
எனவே இறந்து போன நம் குழந்தையை மீட்டுத் தருமாறு அவர்களிடம் கேளுங்கள்!” என்றாள்.
ravi said…
அதைக் கண்ணனால் செய்ய இயலுமோ இயலாதோ என்ற ஐயத்துடன் வெளியே வந்த சாந்தீபனி,
“கண்ணா! பன்னிரண்டு வருடங்களுக்கு முன், நான் என் குடும்பத்தோடு கடலில் குளிக்கச் சென்றிருந்தபோது,
என்னுடைய ஒரே மகன் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான்.

அவனை உன்னால் மீட்டுத்தர முடியுமா?” என்று கேட்டார்.
ravi said…
[12/12, 12:14 pm] Sridhar Swaminathan MT Thread: 👏👏அருமை.🙏🙏🙏
[12/12, 12:16 pm] Sridhar Swaminathan MT Thread: //உள்ளம் பீஷ்மர் படுக்கும் மஞ்சமானதென்ன//... பிரமாதம்..👏👏👏🙏🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

எந்தக் காரியத்தையும் முறையுடன் செய்ய வேண்டும். முறை தப்பி ஒரு காரியத்தைச் செய்தால் கஷ்டந்தான் உண்டாகும். ‘நியாயம்’ என்றாலும் முறை என்றே பொருள். சாலையில் செல்லும்போது இடது பக்கம் போகவேண்டும் என்றால், எல்லோரும் இடது பக்கமாகப் போவதுதான் முறையாகும். பெரியோர்கள் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு பொதுவான முறையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ravi said…
அவர்கள் போட்டிருக்கும் வழியில் செல்வதுதான் நல்லது.
பகவானிடம் போவதற்கு இரண்டு முறைகளை – நியாயங்களை – வகுத்துத் தந்திருக்கிறார்கள். ஒன்று குரங்குக்குட்டி முறை; மற்றொன்று பூனைக் குட்டி முறை. ஸம்ஸ்கிருதத்தில் பூனை என்பதற்கு மார்ஜாரம் என்றும், குரங்கு என்பதற்கு மர்க்கடம் என்றும் பெயர். கிசோரம் என்றால் குட்டி என்று அர்த்தம். ஆகவே ஸம்ஸ்கிருதத்தில் இவை மர்க்கட கிசோர நியாயம் என்றும், மார்ஜார கிசோர நியாயம் என்றும் வழங்குகின்றன.
பூனை குட்டி போட்டால், அக்குட்டியானது தானாக நடந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் போகும் சக்தி பெறும் வரையில் அதைத் தாய்ப் பூனையே தன் வாயினால் கவ்விக் கொண்டு தூக்கிச் செல்கிறது. இதே போலத்தான் புலியும். புலிக்குப் பூனை மாமா முறை ஆகவேண்டும் என்பார்கள்
ravi said…
புலிக்கு வேட்டையாடுதல், தாண்டுதல், பதுங்கிப் பாய்தல் ஆகிய எல்லாவற்றையும் பூனை சொல்லிக்கொடுத்ததாம். ஒன்றை மட்டும் சொல்லித் தரவில்லை. தானோ மிகவும் சிறியவன், எல்லாவற்றையும் சொல்லித் தந்தால் தனக்கே ஆபத்து வந்துவிடும் என எண்ணி, மரத்தில் ஏறுதல், சுவரில் ஏறுதல் முதலியவற்றைப் புலிக்குச் சொல்லித் தரவில்லையாம்! புலிக்கும் பூனைக்கும் தன் குழந்தைகளிடத்தில் வாத்ஸல்யம், பிரியம் அதிகம்.
ravi said…
பகவான் எல்லாக் குழந்தைகளுக்குமே தாயை மயக்கக்கூடிய சக்தியைத் தந்திருக்கிறார். அப்போதுதான் இக்குழந்தை வாழ வழி உண்டு என்பதாலேயே மாயாவியாகிய பகவான் அதற்கு ஏமாற்றும் வித்தையைச் சொல்லித் தந்திருக்கிறார். நம் கர்மாவை அனுபவிப்பதற்கு உடம்பு வேண்டும்;
ravi said…
அந்த உடம்பு வளர உணவு வேண்டும். இதற்காகவே, (நமக்கு இந்த உண்மை தெரியாவிட்டாலும்) நாம் நம் வயிற்றில் ஆகாரத்தைப் போடுகிறோம். உடல் வளர்கிறது. இதற்காக நாக்கு என்ற ஓர் உறுப்பு இருக்கிறது. நாக்கில் நமக்கு ருசி தெரிகிறது. ருசி இல்லையென்றால் நாம் சாப்பிடமாட்டோம்.
ravi said…
உடலுக்குள் உணவு செல்லாது. ஆகவேதான் நாக்கில் ருசியைக் கொடுத்து அதன் மூலம் உடலானது உணவைப் பெற்றுக் கர்மாவை அனுபவிக்கும்படி பகவான் செய்திருக்கிறார். இவ்வாறெல்லாம் நாம் கர்மாவை அனுபவிக்கப் பண்ணுவதற்காகவே பகவான் பல தந்திரங்கள் செய்திருக்கிறார். பகவான் குழந்தைகளுக்கு மயக்கும் சக்தியைக் கொடுத்து அதை நாம் பிரியத்துடன் வளர்க்க வைத்து, நம்மை ஏமாற்றுகிறார். ஆனாலும் பகவானின் ஏமாற்றுவித்தை சாதாரண மக்களிடம்தான் பலிக்கும். ஞானியை பகவான் ஏமாற்ற முடியாது.
ravi said…
ஞானி பகவானையே ஏமாற்றிவிடுவான். வைஷ்ணவர்களில் வடகலை, தென்கலை என்று இரண்டாகப் பிரித்திருப்பதே இந்த இரண்டு வித சரணாகதி வித்தியாஸத்தினால்தான். ஸ்ரீ வேதாந்ததேசிகனைப் பின்பற்றும் வடகலைக்காரர்கள் மர்க்கட கிசோர நியாயத்தை அநுஸரித்து நாம்தான் விடாமுயற்சியுடன் ஸ்வாமியை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஸ்ரீ பிள்ளை லோகாசாரியார் ஆகியவர்களைப் பின்பற்றும் தென்கலைக்காரர்கள், மார்ஜார கிசோர நியாயப்படி நாம் எந்த முயற்சியும் இல்லாமல் கிடந்துவிட்டால் போதும், ஸ்வாமியே நம்மை ஆட்கொண்டுவிடுவார் என்கிறார்கள். இப்போது வடகலை, தென்கலை என்றால் நாமம் போட்டுக் கொள்வதில் இருக்கிற வித்தியாஸத்தைத்தான் நினைத்துக் கொள்கிறோம். இங்கிலீஷ் ‘யு’ (U) மாதிரி நாமம் போட்டுக் கொண்டால் வடகலை; ‘ஒய்’ (Y) மாதிரி அடியிலே பாதம் வைத்துப் போட்டுக் கொண்டால் தென்கலை என்று புரிந்து கொள்கிறோம். வாஸ்தவத்தில் அவர்களுக்குள்ளே வித்தியாஸம் சரணாகதியில் இருவிதமான தத்வங்களை அநுசரிப்பவர்கள் என்பதே. வழியிலே இன்னார் இன்ன தத்வக்காரர் என்று தெரிவிப்பதற்கே வடகலைக்காரர் U மாதிரியும், தென்கலைக்காரர் அதற்குப் பாதம் வைத்து Y மாதிரியும் நாமம் போட்டுக் கொள்கிறார்கள். சரணாகதி என்பதைப் “பிரபத்தி” என்பார்கள்.
ravi said…
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
என்று பகவான் கீதையின் முடிவில் சொல்லியிருக்கிறதுதான் சரணாகதி சாஸ்திரத்துக்குத் தாரக மந்திரம் மாதிரி. ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி விபீஷண சரணாகதியின் போது, ‘ராமா, நான் உன்னுடையவன்; அபயம்!’ என்று எவன் வந்தாலும் அவனை ரக்ஷிப்பதே என் ஜன்ம விரதம்:
ஸக்ருதேவ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம் ஸர்வ பூதேப்யோ ததா(மி) ஏதத் வ்ரதம் மம ||
என்று சொன்னதையும் வைஷ்ணவர்கள் ரொம்பவும் சிறப்பித்துச் சொல்வார்கள். கீதை, ராமாயணம் இரண்டுமே சரணாகதி சாஸ்திரங்கள் என்பார்கள்.
ravi said…
*Three women , three different roles .....*

One gave birth to me And the One I gave birth to ... The other made my life meaningful ...

The 3rd one made me change the way I looked at things

She gave me the belief to trust blindly my instincts

She installed faith in me like never before Helping me to rise above petty things and soar

I hv come this far because she has always been with me

I can't imagine what life without She would be ..

Mother - daughter two roles are if Sanctum sanctorum then wife is the presiding deity there ..

Life is inanimate if any one role starts underplay .....
ravi said…
*அருள் முகமும் ஆறு முகமும்* 🙏🙏🙏
திருப்பெரும் குன்றம் சென்றேன் . தித்திக்கும் குமரன் திருமண கோலம் காண ...

தேனீக்கள் வரவேற்க தேன் கூடு தேன் என பன்னீர் தெளிக்க

பால் அது வைகை என ஓட அதில் பாகு வந்து கலக்க பஞ்சாமிருதமாய் இனித்தான் பாலன்

திருமுருக்காற்று படை தெருவெல்லாம் ஒலிக்க திருவேல் தாங்கி மறவேன் உனை என்றே சொன்னான் குமரன் ...

மறந்தால் உயிர் வாழ்வேன் என்றே நினைத்தாயோ முருகா என்றேன் ..

சிரித்தான் சிங்கார வேலன்... முத்துக்கள் மதுரை எங்கும் சிதறித் தெளித்தன ...

எடுக்கவோ கோக்கவோ என்றான் சுட்ட பழம் வேண்டுமா என்றே கேட்டவன்...

புரியவில்லை முருகா என்றேன் ..

உனை என் கரங்களில் எடுக்கவோ இல்லை காஞ்சி வாழ் கருணை கொண்டு கோக்கவோ .. என்றான்

அங்கேயும் நானே சுவாமிநாதன்

இங்கேயும் நானே தேவசேனை நாதன் ..

எங்கும் என்றும் எதிலும் நானே ...

எனை தேடவேண்டாம் தனியாக .. குருவை தினம் நினைத்தால்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் நானே வருவேன் அருள்வேன் குகனாய் என்றும்

என்றே சொல்லி மறைய அங்கே பெரியவா நின்று புன்னகை பூக்கக் கண்டேன்

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க

காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க

ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகம் என்
வழி வருக

வழி நெடுக ஒளி நிறைக எல்லோர் வாழ்விலும்

🙏🙏🙏🏵️🏵️🏵️
Kousalya said…
ஆஹா...இன்று காலை குஹனுடன் கலந்து காட்சி தரும் கலவையின் கருணாமூர்த்தி நின் பதம் பணிந்தேன் காத்தருள வேண்டும்🙏🙏🪔🪔🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 67* started on 7th Oct 2021
ravi said…
10 *मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -

11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -

12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்

13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -

14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -

15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --

17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --

18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --

19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --

20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -

தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
ravi said…
இன்று 12வது திருநாமம் மிகவும் சுந்தரமான திருநாமம் .. ஆவளே சுந்தரி அவள் நாமங்கள் சுந்தரம் என்று சொல்லவும் வேண்டுமோ ?
ravi said…
*நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா*
ravi said…
உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா?

செக்கச்செவேலென கிழக்கே, பெரிய உருண்டை யாக, இன்னொரு உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது.

அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.
ravi said…
*நிஜாருண* = நிரந்தரமான சிவப்பு

*ப்ரபா* = ஒளிர்வு / பிரகாசம் பூர =
முழுமையாக

*மஜ்ஜத்* = மூழ்குதல்

*ப்ரம்மாண்ட மண்டலா* = அண்டசராசரத்தின் மண்டலம்
ravi said…
*நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரமாண்ட மண்டலா =*

அண்டசராசரத்தின் மண்டலம் முழுவதையும் செந்நிற ஒளிர்வில் மூழ்கச் செய்திருப்பவள்

பிரபஞ்சத்தையே தன் ரூபமாக்கியவள்.

அதன் தோற்றம், இயக்கம் ஒடுக்கத்தியே அன்னை அம்பிகா, வில் அம்புகளாக தரித்து தன்னுடைய லீலைக்கு உட்படுத்தி விளையாடுகிறாள் என்பது புரிதல்
ravi said…
பட்டர் எப்படி வர்ணிக்கிறார் என்று நாளை பார்ப்போம் 🙏🙏🙏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 67* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
பரம குரு எவ்விதம் “ *சுபகோதய ஸ்துதி* யை எழுதினாரோ அதே சந்தஸ்ஸில் ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியை எழுதியுள்ளார்.

‘ *ஸ்ரீ வித்யை சமயாச்சாரம்* ’ என்று பிரதிஷ்டை செய்தவர் கௌட பகவத்பாதரே.
ravi said…
சௌந்தர்ய லஹரி எத்தனை சிறப்பான நூல் என்பதை இதற்கு வந்துள்ள உரைகளும் சர்ச்சைகளும் வேறு எந்த நூலுக்கும் இல்லை என்பதிலிருந்து அறியலாம்.

மாதவ வித்யாரண்யர் எழுதிய சங்கர விஜயத்திற்கு முன்பே எழுதப்பட்ட சங்கர விஜயங்கள் உள்ளன.

ஆனந்தகிரி எழுதிய சங்கர விஜயத்திலும் மார்க்கண்டேய சம்ஹிதையிலும் கூட சௌந்தர்ய லஹரியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 160🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
When someone tells you it can't be done then, think undoubtedly, it is more a reflection of their limitations, not yours.

Never trade respect for attention.

If you find yourself in a hole, stop digging.

As long as we have memories, yesterday remains and as long as we have hope, tomorrow awaits.

Begin each day with thankfulness. Life changes, when gratitude becomes your default setting.
ravi said…
*About Shirdi*

Name was not known to many 30 , 40 yrs back .. a small village with scattered people and cattle .. a dry place lacked total infrastructure . Road was ugly and potholes replaced the name Road ... Once rained water logged on the road would remind you for years that it rained in those places once .

Even if you go back 100 , 200 years it was just existing with a different name . You could hardly see a soul outside ... A famine struck place ..

A person calling himself baba appeared therefrom nowhere ...Mallic ek ... Was his usual uttering word .. He carried love and concern on his eyes ... Wearing torn cloth symbolising famine was not only in the village but also on him ....

People don't recognize when a good soul lives amongst us . We are used to celebrate one 's cemetery with milk and flowers after the person leaves us ... Very unfortunate trend ... Sai faced innumerable difficulties when HE was in human form .... 🙏🙏🙏
ravi said…
[13/12, 9:36 am] Metro Ad Vipul: அருமை மாதா .லலிதாம்பிகையே
[13/12, 9:39 am] Shivaji L&T C: Arumai. Sree Maathre Nama 🌹🙏🙏🙏
[13/12, 11:16 am] Metro Kowsalya: ஆஹா... இந்த அண்ட சராசரத்தையே தன்னில் மூழ்க அடிக்க வைப்பவள் தன் காருண்ய சாகரத்தால் நம்மை காப்பாற்று கின்றாள்....தாயே...🙏🙏🪔🪔🌹🪔🪔🙏🙏
ravi said…
🪔*திருச்சிற்றம்பலம்*🪔

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு அடியவர்க்கு எளியான் நம்
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் கசிந்து உணர்ந்து இருந்தேயும்
உள கறுத்து *உனை நினைந்து உளம் பெருங்களன் செய்த்தும் இலை நெஞ்சே*
பளகு அறுத்து உடையான் கழல் பணிந்திலை பரகதி புகுவானே.
🙏*திருச்சிற்றம்பலம்*🙏
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷post 30 👣👣
ravi said…
29 To get Ashta Siddhis - అణిమాతి అష్ట చిత్తికళైప్ పెఱ
చిత్తియుమ్, చిత్తి తరుమ్ తెయ్వముమ్ ఆకిత్ తికఴుమ్ పరా
చత్తియుమ్, చత్తి తఴైక్కుమ్ చివముమ్ తవమ్ ముయల్వార్
ముత్తియుమ్, ముత్తిక్కు విత్తుమ్, విత్తాకి ముళైత్తెఴున్త
పుత్తియుమ్, పుత్తియిన్ ఉళ్ళే పురక్కుమ్ పురత్తైయన్ఱే.
ravi said…
Siththiyum siththi tharum theyvam aagith thigazhum paraa
sakthiyum,

sakthi thazhaikkum sivamum,

thavam muyalvaar
muththiyum,

muththikku viththum,

viththu aagi mulaiththu ezhundha
puththiyum,

puththiyinulle purakkum puraththai anre. 29🏵️🏵️🏵️
ravi said…
The 8 - fold Shaktis , the ascendant diety who is Goddess Parashakti , Shiva - who is the enfolder of Shakti , the mukti which is attained by all who strive ceaselessly for it , the spiritual seed which sits in the abode of the mind , causing the soul to search for mukti ...🙏🙏🙏

All these are manifestations of Goddess Abhiraami . 🏵️🏵️🏵️

She is the root and reason of all spiritual beings ... Thereby She causes spiritual thrist as also quenches it by blessing us with deliverance . 👍👍👍

Thus our divine mother Abhiraami is the generous deliverer - provider of mukti in the now and the hereafter. 👣👣👣👣
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*யுத்த காண்டம்

ஒரு நாட்டுக்கு இன்றியமையாத படைகளை மூலப்படை (மூலபலம்), கூலிப்படை, நாட்டுப் படை, காட்டுப் படை, துணைப்படை, பகைப்படை என ஆறு வகையாகச் சொல்வர்.

இவற்றில் மூலப்படையே, தொன்மையானது என்பதால் சிறப்புடையது.

மூலப்படையினர் தாங்களே போர் புரியச் செல்வதாகக் கூறினார்கள்.

எனினும் இராவணன் தானே வானரப் படையை அழிப்பதாகவும், மூலப்படை இராமனையும் இலக்குவனையும் குறிவைத்துப் போரிட்டுக் கொல்லும்படியும் கேட்டுக் கொள்கிறான்.

படைகள் போருக்குப் புறப்பட்டன. நாலாபுறமும் சூழ்ந்து கொண்ட மூலப்படையைக் கண்டு வானரப்படை பயங்கொண்டு ஓடத்தொடங்கியது.

நீலன் போய் அவர்களைத் தேற்றி அழைத்து வருகிறான்.

பயந்து ஓடியதற்கு ஜாம்பவான் அவமானப்படுகிறான்.🏵️🏵️🏵️
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 66*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு சிவானந்த லஹரியில 11ஆவது ஸ்லோகமும் 12ஆவது ஸ்லோகமும் பார்ப்போம்

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो

नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।

यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते

तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥

வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ

நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।

யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே

ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
ravi said…
*கிம் தேன ப⁴வதி –* அதனால என்ன ஆகப் போறது?

‘ *பவ* ’ – பரமேஸ்வரா ‘ *பசுபதே* ’ – எல்லா ஜீவர்களுக்கும் தலைவனே ‘ *யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம்’ –*

ஒருவனுடைய மனத் தாமரையானது உன் வசத்தில் இருந்து விட்டால், உன்னை நம்பி ஒருவன் இருந்து விட்டானானால், ஹே சம்போ! பரம மங்களங்களை அளிப்பவனே.

*ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி* – நீயே அவனைச் சேர்ந்தவன் ஆயிடற.

உன்னையே அவனுக்கு கொடுத்துடற.

*ப⁴வபா⁴ரம் ச வஹஸி* – அவனுடைய பவ பாரத்தை நீ தாங்கி கொள்கிறாய் னு சொல்றார்.🏵️🏵️🏵️
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 85.. 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*ஸ்வயம்பூச்‌* ச’ம்பு-ராதித்ய:

புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
“உங்களுக்காக இதைக் கூடச் செய்யமாட்டேனா? உங்கள் மகனுடன் திரும்பி வருகிறேன்!” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான்.

கடல் அரசனிடம் அந்தச் சிறுவனைப் பற்றிக் கண்ணன் வினவியபோது, “பஞ்சஜனன் என்ற ஓர் அசுரன் கடலுக்குள் இருக்கிறான்.
அவன்தான் அந்தச் சிறுவனை விழுங்கியிருப்பான்!” என்று கைகாட்டினான் கடலரசன்.🏵️
ravi said…
உடனே பஞ்சஜனனோடு யுத்தம் செய்து அவனை வீழ்த்தினான் கண்ணன். பஞ்சஜனனின் எலும்புகளால் உருவானதுதான்
கண்ணன் கையில் ஏந்தியிருக்கும் ‘பாஞ்சஜன்யம்’ என்னும் சங்கு.

அவனது வயிற்றுக்குள் கண்ணன் தேடினான்.
ஆனால் சாந்தீபனியின் மகன் அவன் வயிற்றில் இல்லை.
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 10-20*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 68* started on 7th Oct 2021
ravi said…
10 *मनोरूपेक्षुकोदण्डा* - மநோரூபேக்ஷு கோதண்டா -

11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -

12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*

நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்

13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -

14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -

15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -

16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --

17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --

18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --

19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --

20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -

தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
ravi said…
*நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா*
ravi said…
பட்டர் நமக்கெல்லாம் சுலபமாக புரியும் படி இந்த பாடலை பாடுகிறார்.

இந்த பாடல் இந்த நாமத்தின் பின்னணி

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே

அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே??
ravi said…
*அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே* - வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே.

*அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற* -

எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.

*ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் -*

அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்

*களியாகி* - பெருமகிழ்ச்சி பெருகி

*அந்தக்கரணங்கள் விம்மி* - உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி

*கரை புரண்டு* - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு

*வெளியாய்விடில்* - வெளியேயும் பெருகி நிற்கின்றது.

*எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே -* உனது பேரறிவினை எப்படி மறப்பேன்
ravi said…
இவ்வளவு காந்தி கொண்டவள் நம் எதிரே தோன்றினால் நம் ஊனக் கண்ணால் பார்க்க முடியுமா?

கண்ணன் விஸ்வரூபம் விஜயனுக்கு காட்டும் முன் அதற்கு விஜயனை தயார் செய்தான் ... அதே போல் அன்னை நம் அறிவுக்கு ஏற்ற வகையில் தன்னை சுருக்கிக் கொண்டு நமக்கு காட்சி தருவாள் ... எவ்வளவு பெரிய அதிசயம் இது !!!💐💐💐
ravi said…
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 68* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ravi said…
ஆதி சங்கரர் யோக சக்தியால் இமயம் முதல் குமரி வரை பாரதத்தை மும்முறை வலம் வந்ததாகத் தெரிகிறது.

அவர் யோக சக்தியால் கைலாசம் சென்றார்.

சாட்சாத் பரமேஸ்வரன் அவருக்கு ஐந்து சிவலிங்கங்களை பரிசாக அளித்தார்.

அவை ஸ்படிக லிங்கங்கள்.

ஆதிசங்கரர் எங்கெங்கே அவற்றை ஸ்தாபித்தாரோ அவை அங்கங்கே தற்போதும் வழிபடப் படுகின்றன.🏵️🏵️
ravi said…
சிவன் ஐந்து சிவலிங்கங்களை அளித்த போது அம்பாள் கூட ஏதாவது தரவேண்டுமல்லவா?

ஏனென்றால், இருவரையும் சேர்த்தே பூஜித்து வருகிறாரல்லவா, ஆதிசங்கரர்?

அம்பாள் ஒரு நூலை பரிசாக அளித்தாளாம்.

அந்த நூலே சௌந்தர்ய லஹரி.

அம்பாள் தானாகவே அருளிய நூல் சௌந்தர்யலஹரி.🦚🦚
ravi said…
சூரன் அவன் விழுந்தான் மண்ணிலே ..

சொன்னான் முருகனிடம் ......

"வேலும் மயிலுமாய் வேலனை சுற்றிவந்தே பாவங்கள் பல செய்தும் காலனை கண்ணில் காட்டாமல் உன் பாதம் அடையவைத்தாய்..

அபிராமியின் மகன் என்பதாலோ?

இல்லை அரங்கன் மாமன் என்பதாலோ?

இல்லை ஆடரங்கம் புரிபவனின் பொன் மேனி கொண்டவன் என்பதாலோ?

அறியேன் முருகா !

சிரித்தான் முருகன் .. சிதறி தெறித்தன முத்துக்கள் ...

அழித்து பார்ப்பதில் ஆனந்தம் இல்லை

திருத்தி பார்ப்பதில் த்ருப்தி வராமல் இல்லை ..

உயரம் அடைந்த பின் குனிந்து பார்க்க வேண்டும் ..

எறிவந்தது இறை அருள் என்றே ...

கீதை ஒன்று பிறந்தது அங்கே போதை தரும் குமரன் பாதை ஒன்றை சொன்னான் ...

சூரன் கேட்டான் ... சுப்ரமணியா ... சொல் ஒரு வழி எல்லோருக்கும் ..

நான் இருக்கும் மனங்கள் இங்கு ஏராளம் ...

நீ அங்கு வர யுகமாகும் ...

விரைவில் மருந்து வேண்டும் ..

மண்ணில் உள்ளோர் விண்ணோர் போல் வாழ வேண்டும் ...

மீண்டும் புன்னகைத்தான் சிங்கார வேலன் ...

நான் வர நேரமாகும் என்றே நானிலத்தில் சூர சம்ஹாரம் செய்யவே சுவாமிநாதனாய் என் நிழலை வைத்தேன் ...

அவனோ என் நிழலையும் மிஞ்சிய நிஜமானான் ...

செந்தூரும் காஞ்சியும் அங்கே மயிலாய், சேவலாய், முருகா என்றே வேதம் ஓதின....

🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
ravi said…
*திருச்செந்தூரும் திருக்காஞ்சியும் கலவை ஆனால்* 🦚🦚
Sridhar Swaminathan said…
🙏🙏🙏🙏பிரமாதம்...🙏🙏🙏🙏🙏
ravi said…
🏵️🏵️💯% blessed day 👍👍
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 161🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
Great things happen to those who don’t stop believing, trying, learning and being grateful.

Those who want to be free from worldly pain must become free from worldly pleasure as well.

Don't do something permanently stupid because you are temporarily upset.

Seek respect, not attention. It lasts longer.
ravi said…
*Shirdi 2* 🏵️🏵️🏵️

Baba used to beg for his daily and HE faced innumerable strictures from all pockets ... HE accepted both brickbats and bouquets in equal measures but remained detached from these things ..

HE guided , helped needy whatever HE had .. Dogs , cats , cattle were always around HIM ...

I always wonder a place totally unknown , out of India Map , a village forsaken by all suddenly came to light and people in lakes thronging daily pouring money in hundi ...

So many in and around are able to comfortably earn their breads

and so many in His name running shops

and so many buses , cabs , trains even flights are feeling proud in touching His feet

and so many hotels exceeding their revenue targets

and people who return from dharshan feel they are in highly satisfied status and remain in the victory trajectory all times ?

Can a person borrowing , begging with torn clothes make all around so much rich and happy ? Is it possible just by any other human soul ?

*Next to impossible*👍👍👍 ....
ravi said…
இன்று திருவரங்கத்தில் வைகுந்த ஏகாதசி.மற்ற திவ்யதேசங்களில் ஜனவரி 13தேதி .
ravi said…
இதைப்போல் இன்று வைகுந்த ஏகாதசி வைபவம் நடைபெறும் மற்றுமொரு திருத்தலம் திருச்சேறை சாரநாதப் பெருமாள்.
ravi said…
காரணம் தை புனர்வஸு என்கிற புனர்பூசத்தன்று ரெங்கநாப்பெருமாளுக்கு திருத்தேர்.இந்த தை மாத உத்ஸவத்தை பூபதித்திருநாள் என்று அழைக்கபடுகிறது.சக்கரவரத்தி திருமகன் இராமபிரானால் நடத்தப்பட்ட உத்ஸவம்.
திருச்சேறையில் தை பூசத்தன்று திருத்தேர் வைபவம்.
ravi said…
இந்த ஆண்டு இருநட்சத்திரங்களும் தைமாத முதல் வாரத்தில் வருகின்றன.ஆகையால் வைகுந்த ஏகாதசி உத்ஸவம் கார்த்திகை மாதத்திலேயே நடைபெறுகின்றன.
ஸ்ரீ பெரும்பூதூரிலும் இன்றுதான் வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்.காரணம் தைமாத பெளர்ணமி முதல்வாரத்திலே வருவதால் குரு புஷ்யபெளர்ணமி உத்ஸவம் காரணமாக என கூறினார்கள்.
ravi said…
திருக்குடந்தை என்கிற கும்பகோணம் சார்ங்கபாணி ஸந்நிதியிலும்அகோபில திவ்யதேசத்திலும் மார்கழி 1 என்கிற முதல் தேதி தொடங்கி 21தேதி வரை அத்யயன உத்ஸவம் நடைபெறுகிறது.
நாச்சியார் கோவிலில் அத்யயன உத்ஸவம் தை மாதத்தில் நடைபெறுகிறது.
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்

கீதையிலே யோகிகளில் உச்சநிலைக்குப்போன 'பரமயோகி'எவன் என்று பகவான் ஒரு இடத்தில்

சொல்லியிருக்கிறார். மூக்கைப் பிடித்தவன், குகையிலே அடைத்துக் கொண்டு கிடப்பவன், மாஸக் கணக்காய் பட்டினி கிடப்பவன், 'ஸஹஸ்ராரம்
ravi said…
அது இது'என்று என்னவோ சொல்கிறார்களே அந்த இடத்துக்குக் குண்டலிநீ சக்தியைத் தூக்கிக் கொண்டு போனவன் ஆகியவர்களைப் 'பரம யோகி'என்று சொல்லவில்லை. வேறே என்ன லக்ஷணம் சொல்கிறார்?
ravi said…
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பச்யதி யோ (அ) ர்ஜுந*
ஸுகம் வா யதி வா து:கம் ஸ யோகீ பரமோ மத: **
''அர்ஜுனா!எவன் ஸுகமாயினும் துக்கமாயினும் எங்கேயும் தன்னையே உபமானமாகக் கொண்டு ஸமமாகப் பார்க்கிறானோ, அவனே பரம யோகி என்பது என் துணிபு''என்று சொல்கிறார்.
ravi said…
ஸுகம், துக்கம் இரண்டையும் ஸமமாகப் பார்க்க வேண்டும் என்று கீதையில் இருப்தாகச் சொன்னேன் அல்லவா? இதற்கு லோகத்தின் ஸுகம், துக்கம் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ளாமல் தன்னுடைய ஸவ்ய இன்பம், துன்பம் என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். லோகத்தின் ஸுக, துக்கங்களை ஸமமாகவே பார்த்து விட்டால் அப்புறம் அதற்குத் துக்கம் உண்டாகும்போது அதனிடத்தில் அருள் பாராட்டி ஸுகத்தை உண்டுபண்ணுவதற்கு இடமே இருக்காதல்லவா?
ravi said…
தன்னுடைய ஸுக துக்கங்களை ஒன்றாகக் கருதி, அதாவது தனக்கு துக்கம் ஏற்படுவதையும் கருதாமல் லோக க்ஷேமத்துக்காகக் காரியம் செய்ய வேண்டும்
ravi said…
தன்னுடைய ஸுக துக்கங்களை ஒன்றாகக் கருதி, அதாவது தனக்கு துக்கம் ஏற்படுவதையும் கருதாமல் லோக க்ஷேமத்துக்காகக் காரியம் செய்ய வேண்டும் என்றுதான் பகவான் சொல்லி, அப்படிக் கார்யம் பண்ணுவதை ''லோக ஸங்க்ரஹம்''என்கிறார். 'இந்த லோக ஸங்க்ரஹத்துக்காகவேதான், உலகம் மாயையே என்று நன்றாகக் கண்டுகொண்ட ஞானிகள்கூட, தங்களுக்கென்று ஒரு கர்மாவும் தேவைப்படாவிட்டாலும் கர்மாக்களைப் பண்ணிக் காட்ட வேண்டும் என்றும் விதித்திருக்கிறார்.
ravi said…
ஞான நிலையில் ஸுக, துக்கம் என்ற இரண்டையும் abstract ஆக [தனித் தத்வங்களாக]ப் பார்க்கிறபோது இரண்டும் ஒன்றாகத்தான் இருக்கும். ஸுகமும் பொய், துக்கமும் பொய் என்று தான் இருக்கும். ஆனாலும் அதிலேயே பிரேமையின் நிமித்தமாக லோக த்ருஷ்டி மாதிரி ஒன்றை ஈச்வரன் ஏற்படுத்துகிறபோது,
ravi said…
ஸுகம், துக்கம் இரண்டும் தனக்கு ஒட்டவில்லை என்று தெரிகிறபோதே, லோகத்தின் ஸுக துக்கங்களைப் பார்த்து அது நல்ல வழியில் ஸுகம் அடையும்போது அதில் ஒரு ஞானியும் ஸந்தோஷப்படுகிற மாதிரியும், அது துக்கம் அடையும்போது அதற்காக அவனும் கருணையில் உருகுகிற மாதிரியும் இருக்கும். இப்படி அது துக்கப்படுகிற போது அதைப் பரிஹரிப்பதற்காக அவன் தன்னையே தியாகம் பண்ணிக் கொள்ள முன் வருவான். 'தன்னை'என்று சொல்லும்போது நாம் அவனுடைய சரீரத்தை அர்ப்பணம் பண்ணுவதைச் சொல்கிறோம். ஆனால் அவனுக்கு இந்த சரீரம் நிஜத் 'தான்'இல்லை என்பது தெரியும்!
(இன்று கீதை தினம்)
ravi said…
ரொம்ப சின்னவரா இருக்கார். இவர்கிட்டே, எப்படி பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியே வந்துட்டோம்"

பெரியவா இளம் வயதில் இருக்கும்போது பிரச்சனையை சொல்ல வந்த ஒரு தம்பதி.

(தொலைவுல இருந்து பார்க்கறச்சே, பாலகனா தெரியற பரமாசார்யா முன்னால வந்து நின்னாதான், அவர் பாலகன் இல்லை, பரமேஸ்வரன்னு புரியும்).
ravi said…
மகாபெரியவா சன்யாசம் ஏத்துண்டு ஆசார்யாளா பீடம் ஏத்துண்டு பத்துப் பன்னிரண்டு வருஷத்துக்கு அப்புறம் நடந்த சம்பவம் இது. அப்போ ஆசார்யாளுக்கு சின்ன வயசு. அவரோட மகிமையெல்லாம் பலருக்கும் புரியாத காலகட்டம். மடத்துக்கு புதுசா வர்ற பக்தர்கள் பலர், ஆசார்யா இவ்வளவு சின்னவரா இருக்காரே இவர்கிட்டே நம்ம பிரச்னையைச் சொல்லலாமா? வேண்டாமா?ன்னு தயங்குவது உண்டு.

ravi said…
வேதம்,புராணங்கள்ல சந்தேகம் கேட்க வர்றவாளா இருந்தா, இவருக்கு அதெல்லாம் தெரிஞ்சிருக்குமா? கேட்கலாமான்னு தயங்கி நிற்பா. சிலர் இன்னும் ஒருபடி மேலேபோய் இவர்கிட்டே எதுக்கு நம்ம குறையைச் சொல்லணம்னு அப்படியே திரும்பிப் போயிடலாம்னு நினைக்கறதும் உண்டு. ஆனா யாரா இருந்தாலும் ஒரே ஒருதரம் மகாபெரியவா முன்னால வந்து நின்னுட்டான்னா, அவாளோட எல்லா சந்தேகமும் போயிடும். உதிக்கறப்போ சூரியன் பால சூரியனாதான் இருக்கும். அது உச்சியில ஏறினத்துக்கு அப்புறம்தான் அதோட உக்ரம் தெரியும்கற மாதிரி, தொலைவுல இருந்து பார்க்கறச்சே,பாலகனா தெரியற பரமாசார்யா முன்னால வந்து நின்னாதான், அவர் பாலகன் இல்லை, பரமேஸ்வரன்னே புரியும்.
ravi said…
அந்த மாதிரியான காலகட்டத்துல ஒருநாள், மகாபெரியவாளை தரிசனம் பண்ணறதுக்காக நிறைய பேர் மடத்துக்கு வந்திருந்தா.அவாள்ல, வெளியூர்லேர்ந்து காஞ்சிபுரத்துக்கு க்ஷேத்ராடனம் வந்த பக்தர் கூட்டம் ஒண்ணும் இருந்தது. காமாட்சியை தரிசனம் பண்ண வந்த அவாள்லாம். இங்கே ஆசார்யா இருக்கார்னு தெரிஞ்சதும் அவரை தரிசனம் செய்ய வந்திருந்தா!

ravi said…
வந்தவாள்ல பலர் ஆசார்யாளை தரிசனம் பண்ணறது இதுதான் முதல் தரம்.சிலர் ஏற்கனவே வந்தவா. ஏற்கனவே வந்திருந்தவா ஆசார்யாளோடபெருமையை வராதவாளுக்கு சொல்லிண்டு இருந்தா. அதையெல்லாம் கேட்டுண்டு,எல்லாரும் வரிசையாக வந்து மகா பெரியவாளை நமஸ்காரம் செஞ்சு அவர்கிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுண்டு இருந்தா
ravi said…
அப்போ அந்தக் கூட்டத்தோட வந்திருந்த ஒரு தம்பதி மட்டும் வரிசைலேர்ந்து பாதியிலயே திரும்பி வெளியில போய் நின்னுட்டா.

அவாகூட வந்தவா எல்லாரும் மகாபெரியவாளை தரிசனம் பண்ணி பிரசாதம் வாங்கிண்டு வெளியில வந்ததும்,'ஆசார்யாளை நீங்க ஏன் தரிசனம் பண்ண வரலை?'ன்னு பலரும் அவாகிட்டே கேட்டா.

"
ravi said…
இங்கே மடத்துல ஆசார்யா இருக்கார்னதும் அவர் கிட்டே எங்க பிரச்னை ஒண்ணைச் சொல்லி அதுக்குப் பரிகாரம் ஏதானும் இருக்கான்னு கேட்கலாம்னு நினைச்சுண்டுதான் வந்தோம். இங்கே வந்து பார்த்தா, அவர் ரொம்ப சின்னவரா இருக்கார் .இவர்கிட்டே,எப்படி எங்க பிரச்னையைச் சொல்றது? அதுக்கு ஆலோசனை எப்படிக் கேட்கறது? இதெல்லாம் சரிவராதுன்னு தோணித்து. அதான் வெளியில வந்துட்டோம்!" அவா சொல்லிண்டு இருந்த சமயத்துலயே ஆசார்யாளோட அணுக்கத் தொண்டர் அங்கே வந்தார்
ravi said…
இங்கே தீராத வயத்துவலியால தவிக்கற ஒரு மாமி வந்திருக்காளாமே,அவா யாரு? அவாளை ஆசார்யா அழைச்சுண்டு வரச் சொன்னார்" அப்படின்னார்.

அதைக் கேட்டதுதான் தாமதம்,அப்படியே பதறிப் போனா அந்த தம்பதி.

அந்த மாமி கொஞ்சம் தயக்கத்தோட 'எனக்குதான் வயத்துவலி.!' என்று வார்த்தைகளை முடிக்காமல் இழுக்க.அந்த தொண்டர் அவசரமா அவாளை கூட்டிண்டு போனார்.

மகாபெரியவா முன்னாலபோய் நின்னா, அந்தத் தம்பதி.இவர் எப்படி என்னோட வயத்துவலியைத் தெரிஞ்சுண்டார்ங்கற மாதிரியான ஆச்சரியம் அந்த மாமி முகத்துல பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.
ravi said…
என்ன அடிவயத்தைப் பிசையறாப்புல வலிக்கறதா? டாக்டர்களெல்லாம் அல்சர் ரொம்ப அதிகமாயிடுத்து, தீவிரமா சிகிச்சை பண்ணியாகணும்ணு சொல்றாளா?" அவாகிட்டே கேட்டுண்டே சாத்துக்குடி பழம் ஒண்ணை எடுத்து கையில வைச்சு உருட்டிண்டு இருந்தார் மகாபெரியவா.

"ஆமாம் நேரத்துக்கு சாப்பிடாததால வயத்துல அமிலம் அரிச்சு புண்ணாயிடுத்தாம் .குணப்படுத்தறது ரொம்ப கஷ்டம்னு சொல்றா டாக்டர்கள்.! அடிக்கடி தாங்க முடியாம வலிக்கிறது" சொன்ன அந்த மாமியோட கண்ணுல இருந்து வலி தாங்காம ஜலம் வழியத் தொடங்கித்து.

தான் கையில் வைச்சு உருட்டிண்டு இருந்த சாத்துக்குடியை சட்டுனு அந்த மாமியோட ஆத்துக்காரர்கிட்டே தூக்கிப் போட்டார் மகாபெரியவா."அதை உடனே உரிச்சுக் குடு..!" கட்டளை மாதிரி சொன்னார்.
ravi said…
ஏதோ ஒரு உத்வேகத்துல அவரும் அந்தப் பழத்தை உரிச்சு ஆத்துக்காரிக்குக் குடுத்தார். தாங்க முடியாத வயித்துவலியில தவிச்சுண்டு இருந்த அந்த மாமி, ஒவ்வொரு சுளையா வாங்கி ஏதோ குழந்தை சாப்பிடறாப்புல சாப்பிட்டு முடிச்சா. இத்தனையும் ஒரு சில நிமிடத்துல நடந்துடுத்து.

அதுக்கு அப்புறம் நடந்துதான் பேரதிசயம்! அதுவரைக்கும் வலியால துடிச்சுண்டு இருந்த அந்த மாமி, இதுவரைக்கும் வலிச்சதெல்லாம் கனவா? நனவா?ங்கற மாதிரி ரொம்பவே சந்தோஷமா பேச ஆரம்பிச்சுட்டா.
ravi said…
இதுவரைக்கும் என்னை வாட்டிண்டு இருந்த வலி போன இடம் தெரியலை. சாதாரணமா இந்த வலி வந்துட்டா ரெண்டு மூணு மணி நேரமாவது என்னை வாட்டி வதைச்சுடும். மருந்து எடுத்துண்டாலும் அது வேலை செய்யறவரைக்கும் சகிச்சுண்டு இருக்கணும். ஆனா இப்போ ரொம்பவே ஆச்சரியமா எனக்கு வலி போன இடம் தெரியலை. ஆசார்யா தந்த பழத்தோட முதல் சுளையைத் தின்னதுமே என்னோட வலி குறைய ஆரம்பிச்சுடுத்து. முழுசா தின்னு முடிச்சதும் எனக்கா வலிச்சுதுங்கறமாதிரி பூரணமா நிவர்த்தி ஆயிடுத்து!" வார்த்தைகள் நெகிழ, கண்ணு கசிய சொன்னார் அந்த மாமி. நின்னுண்ட இருந்த அவர் அகத்துக்காரர் மாமி சொல்லி முடிச்ச மறுகணம் அப்படியே சாஷ்டாங்கமா ஆசார்யா திருவடியிலே விழுந்தார்.
ravi said…
எங்களை மன்னிச்சுடுங்கோ! இவ்வளவு சின்னவரா இருக்கேளேன்னு நாங்க சந்தேகப்பட்டோம். ஆனா, நாங்க சொல்லாமலே என் ஆத்துக்காரியோட பிரச்னையைத் தெரிஞ்சுண்டு, அது போகறதுக்கு மருந்தாட்டம் ஒரு கனியைப் பிரசாதமாவும் தந்து எங்க கண்ணைத் திறந்துட்டேள்" தழுதழுப்பா சொன்னார்.

மௌனமா ஒரு புன்னகையை மட்டும் பதிலாக்கி அந்தப் பெண்மணிகிட்டே கொஞ்சம் குங்குமப் பிரசாதத்தைக் குடுத்து ஆசிர்வதிச்சார் மகாபெரியவா.

அந்தப் பெண்மணிக்கு தீராத வயத்துவலின்னு ஆசார்யாளுக்கு எப்படித் தெரிஞ்சுதுங்கறது அதிசயம்னா, அதைவிட பேரதிசயம் ஒரே ஒரு சாத்துக்குடியைத் தந்து அவாளோட வியாதியைப் போக்கினது. இதெல்லாம் சாட்சாத் அந்தப் பரமேஸ்எரியவரனோட அம்சமான மகாபெரியவாளோட லீலை இல்லாம வேறு என்ன?
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
மூலப்படையைப் பற்றியும் அதன் வலிமை பற்றியும் விபீஷணன் இராமனுக்கு எடுத்துச் சொல்லுகிறான்.

அந்த மூலப்படையுடன் போரைத் தொடங்கிய இராமபிரான் தான் ஒருவனாகவே நின்று, அந்த மூலப்படையை நிர்மூலமாக்கி அழிக்கிறான்.

மற்ற வீரர்கள் வானரப் படைக்குக் காவலாகப் போயின.

தேவர்களும், சிபெருமானும், பிரமனும் இந்த அதிசயப் போரைப் பார்க்கிறார்கள்.

இராமன் ஒருவனே பல்லாயிர இராமனாக பொருவது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

போர்க்களம் முழுவதும் ஒவ்வொரு அரக்க வீரனுடனும் இராமன் போரிடுவது போன்ற தோற்றம் எதிரிகளை தள்ளாட வைத்தது.

இராமனின் கைவில்லின் மணி ஒலிக்கும் போதெல்லாம் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வீழ்ந்தனர்.

அப்படி அந்த மூலபல சேனை அனைத்தையும் அவன் ஒருவனே அழித்த காட்சியை உலகமே கண்டு வியந்தது.🏹🏹🏹
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 67*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
இன்னிக்கு சிவானந்த லஹரியில 11ஆவது ஸ்லோகம்🙏

वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो

नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।

यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते

तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥

வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ

நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।

யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே

ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
ravi said…
முந்தின ஸ்லோகங்கள்ல

நரத்வம்,தேவத்வம் – மனுஷனா இருந்தா என்ன?

தெய்வமா இருந்தா என்ன?

ஸ்த்ரீயா இருந்தா என்ன?

புமானா இருந்தா என்ன?

அலியா இருந்தா என்ன?

கொசுவா இருந்தா என்ன?

என்ன ஜன்மாவா இருந்தா என்ன?

திருவானைக்காவல்ல ஒரு சிலந்தியும்,யானையும் நல்ல கதி அடையலையா?

அது மாதிரி பக்தி இருந்தா போறும்.

பகவான் காப்பாத்துவார்ங்கிற ஸ்லோகம் சொன்னார்.
ravi said…
அது ஒண்ணு ஒண்ணுத்துலேயும் ஒவ்வொரு விதமான பொறுப்புகள் இருக்கு.

முக்யமா கிரஹஸ்தாஸ்ரமத்துல மத்த மூணு ஆஸ்ரமத்துகாராளையும் காப்பாத்தணும்.

பிரம்மச்சாரியையும் வானப்ரஸ்தனையும், ஸந்யாசிகளையும் காப்பாத்தணும்கிற ஒரு பொறுப்பு இருக்கு.

அதுனால அதிகமா பொறுப்பு இருக்கிற ஒரு stage அது.

ஆனா ஒவ்வொருத்தருக்கும் அவா அவாளோட அனுஷ்டானங்கள் இருக்கும். பிரம்மச்சாரிக்கு அவ்ளோ அனுஷ்டானம் இருக்கு.

கிட்டத்தட்ட ஒரு தபஸ்வி மாதிரி இருந்துண்டு அவனும் ஒரு படிப்பை கவனிக்கணும்.

குரு சிஸ்ருஷை பண்ணனும். பிக்ஷாசரணம் பண்ணனும்.

அப்படி ஒவ்வொருத்தருக்கும் அவருடைய கடமைகள் இருக்கு.

அதை எப்படி பண்ணுவோம்ங்கிற அந்த பாரம், கிரஹஸ்தாஸ்ரமத்துல இருக்கும் போது கூட, நாம எப்படி இதையெல்லாம் தாங்கப் போறோம் என்கிற கவலை பகவத் பக்தனுக்கு கிடையாதுன்னு சொல்றார்.🏵️🏵️🏵️
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 86.. 12th Sep 2021🙏🙏🙏
ravi said…
*ஸ்வயம்பூச்‌* ச’ம்பு-ராதித்ய:

புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |

அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ravi said…
அடுத்து வருணனிடம் சென்ற கண்ணன் சாந்தீபனியின் மகனைக் குறித்து வினவ,
“அந்தச் சிறுவன் யமலோகத்தில் இருக்கிறான்!” என்றார்

வருண பகவான். யமலோகத்துக்குச் சென்றான் கண்ணபிரான்.

தன் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கண்ணன் சங்கநாதம் செய்தவுடன், யமன் கண்ணனின் திருவடிகளில் வந்து விழுந்தான்.

“என்னைத் தேடி நீங்கள் வரவேண்டுமா? அழைத்திருந்தால் நானே வந்திருப்பேனே!” என்றான்.
ravi said…
தன் குருவின் மகனைக் குறித்துக் கண்ணன் வினவ, “இங்கு தான் இருக்கிறான்!” என்று சொன்ன யமன்,
அவனைக் கண்ணனிடம் ஒப்படைத்தான்.

அந்தச் சிறுவனைச் சாந்தீபனியிடம் அழைத்து வந்து குருதக்ஷிணையாகச்
சமர்ப்பித்தான் கண்ணபிரான்.

இந்தச் சரித்திரத்தைத் திருமங்கையாழ்வார்,

“முந்துநூலும் முப்புரிநூலும் முன்னீந்த
அந்தணாளன் பிள்ளையை அஞ்ஞான்று அளித்தானூர்
பொந்தில்வாழும் பிள்ளைக்காகிப் புரையோடி
நந்துவாரும் பைம்புனல் வாவி நறையூரே.- என்று பாடியுள்ளார்.🙏🙏🙏
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*சுவாமி மலையும் சுவாமி நாதனும்*🌷🌷🌷
ravi said…
தந்தையும் தத்துவம் அறிந்தான் என்றால் எல்லாம் அவனே ... எங்கும் என்றும் அவனே ...

மனம் பஞ்சாகி சுவாமி மலை சென்றது ...

புலியில் வரும் சாமி அல்ல ...

சரணம் சரணம் என 18 படிக்கள் ஏற வைக்கும் சாமி அல்ல ...

தமிழின் ஆண்டுகள் தனை படியாக கொண்டவன் ..

பரமனுக்கு பாடம் சொன்னவன் ...

தருமனுக்கே தர்மம் சொன்ன கண்ணனைப்போல் ...

தத்துவங்கள் தனை மேனியாய் கொண்டவன் தமிழை தேனாக பொழிபவன் ... தாரணி எங்கும் கோயில் கொண்டவன் ... வீடுகள் பல ... வீடும் பேறும் அள்ளி அள்ளித்தருபவன்...

வினைகள் எல்லாம் களைபவன்... வேண்டும் வரம் தருபவன் ... வேழமுகத்தின் சோதரனன்... வேதங்களின் நாயகன் ..

புலிக்கு பிறப்பவன் பூனையாக போவானோ .. முகிழ் நகைக்கு பிறந்தவன் வல்லபம் தராமல் இருப்பானோ ...

கற்பூர ஒளிதனில் மகர ஜோதியாய் சிரித்தான் .. மதுரம் தேனாய் பாலாய் 60 படிக்கட்டுக்களிலும் ஓடியதே ...

ஓடிய பாலில் நாடிய தேனில் நீந்தி கரை சேர்ந்தேன் ...

தண்டம் சுமந்து சென்ற திருவடிகள் காஞ்சி மடம் தனில் என்னை மீண்டும் கரைய வைத்ததே 🍇🍇🍇🌻🌻🌼🌼🌸🌸🌺🌺

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை